புதியவர்களுக்கு ஆண்ட்ராய்டு பயிற்சிகையேடு பகுதி-22 பயனாளர் இடைமுகப்பு கட்டுப்பாடுகள் -தொடர்ச்சி

இருநிலைமாற்றி பொத்தான் ஏதேனுமொரு பொத்தானை தேர்வுசெய்வது அல்லது தேர்வுசெய்யாதிருப்பது ஆகிய இருநிலைகளை பிரிதிபலிக்கசெய்வதே இருநிலை மாற்றி பொத்தானாகும் இது அடிப்படையில் ஒரு on/off பொத்தானாகவும் ஒரு விளக்கு சுட்டியாகவும் இருக்கின்றது
இருநிலை மாற்றி பொத்தானின் பண்புக்கூறுகள் பின்வருபவை இருநிலை மாற்றி பொத்தானின் கட்டுப்பாட்டிற்கான மிகமுக்கிய பண்புக்கூறுகளாகும் நாம் ஆண்ட்ராய்டு அலுவலக இணைய பக்கத்தில் இந்த பண்புக்கூறுகளின் முழுமையான பட்டியலை காண-முடியும் அதனை தொடர்ந்து இயக்க நேரத்தில் அவற்றை பயன்படுத்தி தொடர்புடைய வழிமுறைகளுடன் நாம் விரும்பியவாறு மாற்றியமைத்திடவும் முடியும்
android.widget.TextView என்பது மரபுவழியாக பெறப்பட்ட இனமாகும்
android.view.Viewஎன்பதும் மரபுவழியாக பெறப்பட்ட இனமாகும்
எடுத்துகாட்டு பின்வருவது கோட்டு புறவமைப்பையும் இருநிலைமாற்றியையும் பயன்படுத்தி நம்முடைய சொந்த ஆண்ட்ராய்டு பயன்பாட்டினை எவ்வாறு உருவாக்குவது என காண்பிப்பதற்கான எளிய படிமுறைகளாகும் இதன் வாயிலாக நம்மை இந்த எடுத்துகாட்டு கொண்டுசெல்லும்

பின்வருவது src/com.example.guidemo7/MainActivity.java.எனும் மாறுதல்கள் செய்யப்பட்ட முதன்மை கோப்புகளின் உள்ளடக்கமாகும் இந்த கோப்பு ஒவ்வொரு அடிப்படை வாழ்க்கை சுழற்சி வழிமுறைகளை உள்ளிணைந்ததாக ஆக்க முடியும்
package com.example.guidemo7;
import android.os.Bundle;
import android.app.Activity;
import android.view.Menu;
import android.view.View;
import android.view.View.OnClickListener;
import android.widget.Button;
import android.widget.Toast;
import android.widget.ToggleButton;
public class MainActivity extends Activity {
private ToggleButton toggleBtn1, toggleBtn2;
private Button btResult;
@Override
protected void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main);
addListenerOnToggleButton();
}
private void addListenerOnToggleButton() {
toggleBtn1 = (ToggleButton) findViewById (R.id.toggleButton1);
toggleBtn2 = (ToggleButton) findViewById (R.id.toggleButton2);
btResult = (Button) findViewById(R.id.button1);
btResult.setOnClickListener(new OnClickListener() {
@Override
public void onClick(View v) {
StringBuffer result = new StringBuffer();
result.append(“START Condition – “).append (toggleBtn1.getText());
\result.append(“\nSTOP Condition – “).append (toggleBtn2.getText());
Toast.makeText(MainActivity.this, result.toString(), Toast.LENGTH_SHORT).show();
}
});
} @Override
public boolean onCreateOptionsMenu(Menu menu) {
/* Inflate the menu; this adds items to the action bar
if it is present */
getMenuInflater().inflate(R.menu.main, menu);
return true;
}
}
பின்வருவதுres/layout/activity_main.xml எனும் கோப்பின் உள்ளடக்கமாகும்

இவைகளை புதியமாறிலிகளிலிருந்து வரையறுப்பதற்கு res/values/strings.xmlஎன்பதன் உள்ளடக்கமாகும்

GUIDemo7
Settings
Example showing ToggleButton
START
STOP
Click Me

பின்வருவது AndroidManifest.xmlஎன்பதன் இயல்புநிலை உள்ளடக்கமாகும்

சற்றுமுன் நம்மால் மாறுதல்கள் செய்யப்பட்டGUIDemo7எனும் பயன்பாட்டினை இயக்க முயற்சி செய்வோம்! சூழல் அமைவை செயற்படுத்திடும் போதே நாம் நம்முடைய AVDஐ உருவாக்கிவிட்டதாக கருதி(எடுத்து)கொள்க Eclipseஇலிருந்து இந்த பயன்பாட்டினை இயக்குவதற்கு நம்முடைய செயல்திட்டங்களின் கோப்புகளில் ஒன்றாக திறந்து கொள்க தொடர்ந்து கருவிப்பட்டையிலிருந்து Run எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் Eclipseஆனது இந்த பயன்பாட்டினை நம்முடைய AVD இல்நிறுவுகை செய்யத்துவங்கிடும் அதனைதொடர்ந்து நம்முடைய பயன்பாட்டிலும் கட்டமைவில்உள்ள அனைத்தும் மிகச்சரியாக இருக்கின்றது எனில் அது பின்வரும் முன்மாதிரி சாளரத்தினை திரையில் காண்பிக்கும்

1
பின்வரும் திரையில் இரண்டுஇருநிலை பொத்தான்களையும் அதன் வாயிலாக மாறுதல் செய்த நிலையில் அதற்கான நிபந்தனைகளுடன் தோன்றியுள்ளது

2
பின்வரும் திரையில் இரண்டாவது இருநிலை பொத்தானை STARTஎன்பதற்கு மாறுதல் செய்தபின்னர் நிபந்தனையுடன் தோன்றியுள்ள தோற்றமாகும்

3

பயிற்சி XMLஇன் புறவமைப்பு கோப்பின் நிரல்தொடரினை உருவாக்கிடும் நேரத்திலும் இருநிலைமாறிகளின் பொத்தானின்பண்புக்கூறில் வித்தியாசமான காட்சியை காணவும் உணரவும் வித்தியாசமான பண்புக்கூறுகளுடன் மேலேகூறிய பயிற்சியை முயற்சித்திடுக என பரிந்துரை செய்யப்படுகின்றது அதனை திருத்தம் செய்திடுமாறும் எழுத்துருவின் வன்ணம் ,குழு ,உரையமைப்பு ஆகிய பல்வேறு வகையில் மாறுதல்கள் செய்து அதன் விளைவை சரிபார்த்திடுக ஒரே செயலிற்கு பல்வேறு தானியங்கியாக உரைகாட்சியை நிரப்பிடும் கட்டுப்பாடுகளுடன் மேலேகூறிய பயிற்சியை செய்து பார்த்திடமுடியும்

நாம் விரும்பாத இணையதளங்களை நம்முடைய இணையஉலாவியில் இதற்கென தனியான மென்பொருள்இல்லாமலேயே தடுப்பது எவ்வாறு?

இதற்காக நம்முடைய கணினியில் தனியான பயன்பாட்டு மென்பொருட்கள் எதையும் நிறுவுகை செய்திடாமலேயே பின்வரும் படிமுறைகளை பின்பற்றி தடுத்திடலாம்
படிமுறை1 முதலில் start=>Run=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக அல்லது கட்டளைவரிக்கான பகுதியில் notepad %windir%\system32\drivers\etc\hostsஎனும் கட்டளைவரியை நகலெடுத்து ஒட்டி உள்ளீட்டு விசையை அழுத்துக அல்லது C:\Windows\System32\Drivers\Etc என்ற வழிமுறையில் கோப்பகத்திற்கு சென்று அங்கு hosts என்ற கோப்பினை கண்டுபிடித்து அதனை நோட்பேடுவாயிலாக திறந்து கொள்க அல்லது விசைப்பலகையில் WinKey + R ஆகிய விசைகளை சேர்த்துஅழுத்துக
படிமுறை2 உடன் நோட்பேடின் வாயிலாக hosts எனும் கோப்பு திரையில் தோன்றிடும் அந்த கோப்பின் இறுதியில் 127.0.0.1 localhost என்றவாறு இருப்பதை காணலாம்
படிமுறை3 இந்த 127.0.0.1 localhostஎனும் கட்டளைவரிக்கு அடுத்து 127.0.0.1 localhost ,
127.0.0.2 http://www.youtube.comஎன்றவாறு நாம் தவிர்க்க விரும்பும் இணையபக்கங்களின் இணையமுகவரியை உள்ளீடு செய்திடுக
படிமுறை4 இவ்வாறு தவிர்க்கவிரும்பும் இணையபக்கங்களின் முகவரிகளை 127.0.0.x என்பதில் எண்களின் எண்ணிக்கையைமிகச்சரியாக 0.x என்பதில் மாற்றியமைத்து உறுதிபடுத்தி கொள்க
படிமுறை5 இவ்வாறு மாறுதல்கள் செய்யப்பட்ட இந்த localhost எனும் கோப்பினை சேமித்து நோட்பேடிலிருந்து வெளியேறுக
இதன்பின்னர் நம்முடைய கணினியின் இணையஉலாவியை செயல்படுத்தினால் நாம் தவிர்த்த இணைய பக்கங்கள் திரையில் எந்தவொரு பிழைச்செய்தியும் இணையுலாவியின் திரையில் தோன்றிடாமலேயே குறிப்பிட்ட இணையபக்கங்கள் தவிர்க்கப்பட்டுவிடுவதை காணலாம்

ஒன்றிற்குமேற்பட்ட பல்வேறு வடிவமைப்புகளின் கானொளி கோப்புகளை எவ்வாறு ஒரே கானொளி கோப்பாக இணைத்து உருவாக்குவது?

MPEG, DAT, MPG, mp4, AVI என்பன போன்றபல்வேறு வகையிலான கானொளி கோப்புகளை பின்வரும் எளியபடிமுறைகளை பின்பற்றி ஒன்றிணைத்து ஒரே கானொளி வடிவமைப்பு கோப்பாக உருவாக்குமுடியம்
படிமுறை1 நம் கைவசமுள்ள video1.mpg, video2.mpg ,video3.mpgஎன்றவாறான ஒன்றிற்குமேற்பட்ட கானொளி கோப்புகளை அதன் .mpgஎனும் பின்னொட்டினை மாற்றிடாமல் @video1.mpg® a, @video2.mpg ® b, @video3.mpg® c என்றவாறு பெயரை மாற்றியமைத்திடுக
படிமுறை2பின்னர் Start–>Run–>cmd –> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக அல்லது விசைப்பலகையில் WinKey + R ஆகிய விசைகளை சேர்த்துஅழுத்துக
படிமுறை3 உடன்விரியும் கட்டளைவரித்திரையில் “C: , D: , E: ”என்றவாறு நம்முடைய கானொளி கோப்பு இருக்கும் கோப்பக இருப்பிடத்தை தட்டச்சு செய்திடுக
படிமுறை4 அதன்பின்னர் ® Copy /b a + b + c videoname.mpgஎன்றவாறு கட்டளைவரிகளை தட்டச்சு செய்து உள்ளீட்டுவிசையைஅழுத்துகஅல்லது copy /b “C:\File.mp4” + “C:\File1.mp4” CombinedFile.mp4 என்றவாறு கட்டளைவரிகளை தட்டச்சு செய்து உள்ளீட்டுவிசையைஅழுத்துக
படிமுறை5 பின்னர் 1 files copied எனும் செய்தி திரையில் தோன்றிடும்வரை காத்திருந்து இறுதியாக exit என தட்டச்சு செய்து உள்ளீட்டுவிசையைஅழுத்தி இந்த கட்டளை வரித்திரையிலிருந்து வெளியேறுக

ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை கூகுள்ப்ளேஸ்டோர் இல்லாமல் அதற்குமாற்றான வழிகளில் நிறுவுகைசெய்திடமுடியுமா?

ஆம் பின்வரும் மாற்றுவழிகளில் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை நிறுவுகை செய்திட முடியும்
1. https://www.apkmirror.com/ எனும்முகவரியில் செயல்படும் APK Mirror எனும் இணைய பக்கத்தில் கூகுள்ப்ளேஸ்டோரில் உள்ள அனைத்து ஆண்ட்ராய்டு பயன்பாடுகளும் வீற்றிருப்பதை காணலாம்குறிப்பிட்ட பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பு நம்முடைய கைபேசியில் செயல்படாமல் பிழைச்செய்தி காட்டினாலும் குறிப்பிட்ட பயன்பாட்டின் இதற்குமுந்தைய பதிப்பினை அல்லது மிகச்சிறந்த பதிப்பினை பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்து பயன்பெறலாம்
2.https://en.aptoide.com எனும்முகவரியில் செயல்படும் Aptoide எனும் இணைய பக்கத்தில் கூகுள்ப்ளேஸ்டோரில் உள்ள பெரும்பாலான பயன்பாடுகள்ஏறத்தாழ 9,00,000 ஆண்ட்ராய்டு பயன்பாடுகளும் கிடைக்கின்றன இது ஒரு திறமூல இணைதளமாகும்
3.கூகுள்ப்ளேஸ்டோருக்கு மாற்றாக ஆண்ட்ராய்டு பயன்பாடுகளின் முதல் தேர்வாக https://www.amazon.com/get-appstore?tag=buildgamingco-20 எனும்முகவரியில் செயல்படும் Amazon Underground App for Androidஎனும் இணையபக்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது இந்த தளத்தில் கட்டணத்துடன் கூடிய பதிப்புகள் கட்டணமற்ற பதிப்புகள் ஆகிய இருவகையிலும் பயனாளர்களுக்கு உதவதயாராக இருக்கின்றன
4. https://www.getjar.com/ எனும்முகவரியில் செயல்படும் GetJarஎனும் இணையபக்கத்தில் கூகுள்ப்ளேஸ்டோரின் ஆண்ட்ராய்டு பயன்பாடுகள் மட்டுமல்லாதுஅனைத்து வகையான செல்பேசிகளின் பயன்பாடுகளும்நாம் பயன்படுத்ததயாராக இருக்கின்றன
5. https://f-droid.org/ எனும்முகவரியில் செயல்படும் F-Droidஎனும் இணையபக்கத்தில் ஆண்ட்ராய்டு பயன்பாடுகள் மட்டுமல்லாது அதனுடைய மூலக்குறிமுறைவரிகளுடன் சேர்த்தே கிடைப்பதால் நாம் விரும்பியவாறு புதிய பயன்பாடுகளை இவற்றிலிருந்து மேம்படுத்தி கொள்ள முடியும்
6. https://www.mobogenie.com/ எனும்முகவரியில் செயல்படும் Mobogenieஎனும் இணைய பக்கத்தில் கூகுள்ப்ளேஸ்டோருக்கு மாற்றாக ஆண்ட்ராய்டு பயன்பாடுகளின் சமீபத்திய பயன்பாடுகளை நம்முடைய செல்பேசியில் மட்டுமல்லாது நம்முடைய கணினியின் வாயிலாககூட பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்
7.http://www.blackmart.us/ எனும்முகவரியில் செயல்படும் Blackmart Alpha எனும் இணைய பக்கத்தில் கூகுள்ப்ளேஸ்டோருக்கு மாற்றாக ஆண்ட்ராய்டு பயன்பாடுகளின் சமீபத்திய பதிப்புகளை தனியாக நமக்கென பதிவுசெய்து கணக்கொன்றினை துவங்கிய பின்னர்தான் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளைபதிவிறக்கம்செய்திடமுடியும்என்ற எந்த வொரு கட்டுபாடுகளும் இல்லாமல் கட்டணமில்லாமல்பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும்

தனிப்பட்ட தகவல்களைபாதுகாப்பாக வழங்கிடும் சிறந்த மின்னஞ்சல் சேவைகள்

கூகுள்நிறுவனத்தின் ஜிமெயில் எனும் மின்னஞ்சலில் பரிமாறிகொள்ளபடும் மின்னஞ்சல்களின் உள்ளடக்கங்களை தனிநபர்களின் தகவல்களை அரசாங்கம் விரும்பினால் அறிந்து கொள்ளமுடியும் என்ற பாதுகாப்பற்ற அவல நிலைதான் தற்போதுஉள்ளது யாகூ அவுட்லுக் போன்ற வைகளின் மின்னஞ்சல் சேவையும் அவ்வாறே உள்ளன ஆயினும் நம்பிக்கை நட்சத்திரங்களாக பின்வரும் மின்னஞ்சல் சேவைகள்எந்தவொருமூன்றாவது நபரும் அவ்வாறு எளிதாக மின்னஞ்சல்களின் உள்ளடக்கங்களை சம்பந்தபட்டநபர்களின் அனுமதியில்லாமல் அறிந்து கொள்ள அல்லது தெரிந்து கொள்ளமுடியாது
1. Runboxஎனும் மின்னஞ்சல் சேவையானது PGP (Pretty Good Privacy)எனும் அடிப்படையில் நாம் அனுப்பும்மின்னஞ்சலானது பாதுகாப்பாக பூட்டப்பட்டு encryption key எனும் திறவுகோள் இல்லாமல் குறிப்பிட்ட மின்னஞ்சலை திறந்து பார்வையிட முடியாது இந்த சேவையை பெறுவதற்கு வருட சந்தா 20 டாலர் பிட்காயினாக செலுத்தினால் போதும் நம்முடைய மின்னஞ்சலில் விளம்பரங்கள் எதுவும் உடன்வந்து சேராது
2 Mailfence எனும் மின்னஞ்சல் சேவையானது OpenPGP (Pretty Good Privacy)எனும் அடிப்படையில் நாம் அனுப்பும்மின்னஞ்சலானது பாதுகாப்பாக பூட்டப்பட்டு end-to-endencryption key எனும் திறவுகோள் இல்லாமல் குறிப்பிட்ட மின்னஞ்சலை திறந்து பார்வையிட முடியாது.இதற்கான இணையதளமுகவரி https://mailfence.com/en/ ஆகும் ஆயினும் இதனுடைய மின்னஞ்சல் சேவையை பெறுவற்காக இந்த தளத்திற்குள் உள்நுழைவு செய்தவுடன் Secure and private email service என்று கோரும் வாய்ப்பில் Yesஎன தெரிவுசெய்தால் இந்த தளத்தின் மின்னஞ்சல் சேவையையும் No எனத்தெரிவுசெய்தால் வழக்கமான ஜிமெயில் சேவைபக்கத்திற்கு நம்மைதிருப்பிவிடு்ம்
3 ProtonMail இந்த மின்னஞ்சல் மட்டுமே NSA ஆல் அனுகமுடியாததாகும் இதனை வழக்கமான ஐபிமுகவரியை கொண்டுஅனுகமுடியாது பாதுகாப்பாக பூட்டப்பட்டு end-to-end encryption key எனும் திறவுகோள் இல்லாமல் குறிப்பிட்ட மின்னஞ்சலை திறந்து பார்வையிட முடியாதுஇது கட்டணமற்றதாகும் இதற்கான இணையதளமுகவரி https://protonmail.com/ ஆகும்
4 Tutanota. இந்த மின்னஞ்சல் சேவையானது கட்டற்ற கட்டணமற்றதாகும் இது
நாம் அனுப்பும்மின்னஞ்சலானது பாதுகாப்பாக பூட்டப்பட்டு end-to-end encryption key எனும் திறவுகோள் இல்லாமல் குறிப்பிட்ட மின்னஞ்சலை திறந்து பார்வையிட முடியாது செல்பேசிகளில் செயல்படும் ஆண்ட்ராய்டு ,ஐஓஎஸ் பயன்பாடுகளில் இந்த மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்இதற்கான இணையதளமுகவரி https://tutanota.com/ ஆகும்
5 Posteo.de இந்த மின்னஞ்சல் சேவையில் நாம் அனுப்பும்மின்னஞ்சலானது பாதுகாப்பாக பூட்டப்பட்டு end-to-end encryption key எனும் திறவுகோள் இல்லாமல் குறிப்பிட்ட மின்னஞ்சலை திறந்து பார்வையிட முடியாது POP3 ,IMAP ஆகியவற்றை ஆதரிக்ககூடியது இது மாதக்கட்டணமாக ஒருடாலரில் இதன்சேவைகிடைக்கின்றது இதனுடைய சேவையை பெறுவதற்காக நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் எதையும் நம்மிடம் கோராது இதற்கான இணையதளமுகவரி https://posteo.de/ ஆகும்
6Kolab Now எனும் மின்னஞ்சல் சேவையானது கட்டற்ற திறமூல பயன்பாட்டு சேவையாகும் இது 4.99 டாலர் கட்டணத்துடன் கிடைக்கின்றது இது சிறிய நடுத்தர நிறுவனங்கள் தனிநபர்களுக்கு போதுமான வகையில் இதனுடைய சேவை அமைந்துள்ளது இது ஒருங்கிணைந்த குறிப்பெடுத்திடும் பயன்பாடு போன்ற பல்வேறு துனைசேவைகளையும் வழங்குகின்றது இதனுடைய இணைய முகவரி https://kolabnow.com/ ஆகும்
7 Countermail இந்த மின்னஞ்சல் சேவையானது OpenPGP (Pretty Good Privacy)எனும் அடிப்படையில் நாம் அனுப்பும்மின்னஞ்சலானது பாதுகாப்பாக பூட்டப்பட்டு end-to-endencryption key எனும் திறவுகோள் இல்லாமல் குறிப்பிட்ட மின்னஞ்சலை திறந்து பார்வையிட முடியாது. இது USB வாயிலின்வழியாக USB திறவுகோளின் மூலம் மட்டுமே இதனை அனுகமுடியும் என்றகூடுதல் பாதுகாப்பு கொண்டதாகும் இது IMAP ஆதரிக்ககூடியது இது லினக்ஸ், விண்டோ, மேக் ஆகிய அனைத்து இயக்க முறைகளின் சூழலிலும் செயல்படும் திறன்மிக்கதுஇதனுடைய இணைய முகவரி https://countermail.com/ ஆகும்

MS-DOSஇற்கு இணையாக FreeDOSஇன் சேவையை பயன்படுத்தி கொள்க

இந்த FreeDOSஆனது Windows XP, Windows MEபோன்ற பலஇயக்கமுறைமைகளை ஒரே கணினியில் செயல்படுத்திடும் திறன்கொண்டது இது கோப்புகளில் ZIP, InfoZip, ZIP/UNZIPஆகிய செயல்களை கையாளும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது இதுXCDROM and SHSUCDX ஆகியவற்றை ஆதரிக்ககூடியது ஒரேசமயத்தில் ஒன்றிற்குமேற்பட்ட உரைபதிப்பான் பயன்பாடுகளைEDIT , SETEDIT திரையில் தோன்றிட செய்து பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கின்றது FAT32எனும் கோப்பு கட்டமைப்பை ஆதரிக்ககூடியது FDAVஎனும் எதிர் நச்சுநிரல் கொண்டது FDNPKGஎனும் கட்டுகளின் மேலாளர் சேவையின் துனையுடன் வலைபின்னல் சேவைகளை கையாளுகின்றது GRAPHICSஎன்பதன் துனையுடன் ESC/P, HP PCL and PostScript ஆகிய அச்சுபொறியை கையாளும்திறன்கொண்டது
HTMLHELPஎனும் உதவிகாட்சியை திரையில் கொண்டுவரும் திறன்மிக்கது JEMM386 (XMS, EMS)எனும் நினைவக மேலாளரை கொண்டது mp3, ogg, wmv போன்ற பல்லூடகங்களைMPXPLAY என்பதன் துனையுடன் கையாளக்கூடியது LISTபோன்று PGஎனும் உரைகாட்சியை வழங்ககூடியது

ஒரு SIEM ஐ எவ்வாறு ஒப்பீடுசெய்து அல்லது மதிப்பிடுவது?

பாதுகாப்பு தகவல்கள்நிகழ்வுகள் நிருவகித்தல் ( security Information and Event Management) என்பதையே சுருக்கமாக SIEM என அழைப்பர் ஒரு நிறுவனத்தின் இணையதள பக்கங்களை மில்லியன் கணக்கான நபர்கள் ஒரேசமயத்தில் உள்நுழைவுசெய்து தங்களுக்கு தேவையான தவல்களையும் சேவைகளையும் பெற்று செல்வர் அதுமட்டுமல்லாது பல்வேறு பயன்பாடுகள் பல்வேறு கோப்புகள் ஆகியவை பல்வேறு ஊழியர்களால் உள்நுழைவு செய்து கையாளுவார்கள் அவ்வாறு உள்நுழைவு செய்வோர் அனைவரின் நடவடிக்கைகளையும் கவணித்து கையாளுவது என்பது மிகவும் சிரமமான செயலாகும் அவ்வாறானசெயலை தானியங்கியாக செயல்படுத்திடஉதவுவதே இந்த SIEM எனும் அமைவாகும் இந்த SIEM எனும் அமைவானது ஒன்றிற்குமேற்பட்ட சேவையாளர் கணினி, மெய்நிகர் சேவையாளர் கணினி ஆகியவற்றின் மூலம் database, data archival போன்ற பல்வேறு வகை சேவையாளர்களாக cloud-based services அல்லது உள்ளூர் கணினி என்பதன் அடிப்படையில்செயல்படுகின்றது SIEM சேவையாளரானது முகவருடன் (agent)அல்லது முகவரற்ற (agentless )ஆகிய இருவழிமுறைகளில் செயல்படச்செய்கின்றது பொதுவாக இவையிரண்டும் கலந்தாகவே இருக்கும் இந்த கருவிகள் எளிதாக நிறுவனத்தின் மற்ற பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக அமைந்துள்ளது ஏதேனும் புதிய நிகழ்வு ஏற்பட்டால் உடன் எச்சரிக்கை செய்தியை அனுப்பிடும் தன்மை கொண்டது தாக்குதலை முன்கூட்டியே கண்டுபிடித்து அதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை கொண்டது சமீபத்ததியை புதிய தாக்குதல்களை கணிக்கும் திறனுடன் அவைகளை தவிர்ப்பதற்கான சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அமைந்துள்ளது

புதிய ஜாவா 9 எனும் கணினிமொழி ஒரு அறிமுகம்

ஜாவா எனும் கணினிமொழியின் 8 எனும் பதிப்பு வெளியாகி மிக நீண்ட கால இடைவெளிக்கு பிறகு மிகப்பெரிய அளவு மாற்றங்களுடன் ஜாவா 9 எனும் பதிப்பு தற்போது வெளியிடப்-பட்டுள்ளது இதில் பல்வேறு வசதி வாய்ப்புகள் பயனாளர்களுக்கு உதவுவதற்காக தயாராக உள்ளன
ஏன் அனைத்து இனங்களும் PublicஎனAPI இற்குள் ஜாவா எனும் கணினி மொழியில் அறிவிப்பு செய்யப்படவில்லை .?
ஒரு பொதிக்குள்(Packages) அதே இனத்தினை இரண்டுJAR களில் அறிவிப்பு செய்யமுடியுமா?
ஆகியஇரு கேள்விகளுக்கு இந்த புதிய ஜாவா பதிப்பு 9 இல் modulesஎனும் கருத்தமைவின் வாயிலாக தீர்வுகாணப்பட்டுள்ளது
இதனுடைய வசதிவாய்ப்புகள் பின்வருமாறு
இதில் moduleஎன்பது பொதியைவிடமேம்பட்ட தொகுப்பாகும் என்ற செய்தியை கருத்தில் கொள்க இந்த moduleஐ உருவாக்கmoduleinfor.java எனும் ஜாவா கோப்பு தேவையாகும்
module my-module {
exports com.example.java9.classes_to_be_exposed_as_apis;
require java.base;
}
எனும் வரிகள் மாதிரி ஜாவா பொதியாகும் இயக்கநேர ஜாவாவை கொண்டு ஒரு ஜாவா தொகுப்பின் JAR ஐஉருவாக்கியபின்னர் JDKஇல் Jlinkஎனும் கருவியை பயன்படுத்தி பின்வரும் குறிமுறைவரிகளாக இயக்கநேரத்தில் பயன்படுத்திகொள்ளலாம்
Jlink —module-path – add-modules
–limit-modules – output
மேலும் பைத்தான் ,பிஹெச்பி போன்ற இதர கணினிமொழிகளை போன்று Read-Eval-Print-Loopஎனும் இடைமுகவசதியை Jshellஎன்பதன்வாயிலாக கிடைக்கசெய்கின்றது அதாவது கட்டளைவரிகளில் பின்வருமாறு Jshellஎன தட்டச்சுசெய்துகொண்டு தொடர்ந்து ஜாவாகுறிமுறைவரிகளை தட்டச்சு செய்து இந்த இடைமுகவசதியை பெறமுடியும்
c:\Program Files\java\jdk-9\bin>jshell
[ Welcom to Jshell — version 9 -ea
[ for an introduction type: /help intro
jshell> int x = 10
x==>10
jshell> System.output.println(“value of x is : “ +x);
value of x is: 10
மிகப்பழைய HttpURLஎனும் இணைப்பிற்கு பதிலாக புதியHttpClientஎன்பது அறிமுகப்படுத்த பட்டுள்ளது
@Deprecated annotation என்பது மேம்படுத்தப்பட்டுள்ளது அதுமட்டுமல்லாது JavaDocs ஆனது HTML5 ஆதரிக்குமாறு மேம்படுத்தபட்டுள்ளது மேலும் dropWhile, TakeWhile, ofNullableஆகிய புதியவழிமுறைகள் சேர்க்கபட்டுள்ளன இதில் Collection எனும் வரைச்சட்டம் நிகழ்நிலை-படுத்தப்ட்டுள்ளன இவைகள் மட்டுமல்லாது மேலும்பல்வேறு150 இற்குமேற்பட்ட வசதிகள் அறிமுகபடுத்தப்பட்டுள்ளன அவைகளை பற்றி முழுவதும் அறிந்த பயன் பெறுவதற்கு http:s//docs.oracle.com/javase/9/whatsnew/toc.htm/ எனும் இணையதளபக்கத்திற்க செல்க என பரிந்துரைக்கப்படுகின்றது

விண்டோ பயன்பாடுகளை லினக்ஸில் இயங்க உதவும் Wineஎனும் கருவி

என்னதான் பல்வேறு வகையில் தனியுடமை இயக்கமுறைமைக்கு பதிலாக லினக்ஸ் எனும் கட்டற்ற இயக்கமுறைமைக்கு மாறுங்கள் என விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துமனம் மாறி லினக்ஸ் இயக்கமுறைமையை பயன்படுத்த தயாராக இருந்தாலும் பழக்கப்பட்ட விண்டோ பயன்பாடுகளை விடமுடியாது அதனையே லினக்ஸிலும் பயன்படுத்துவேன் என அடம்பிடிப்பவர்கள் பலர் உள்ளனர் அவ்வாறானவர்களுக்கு Wineஎனும் கருவியானது லினக்ஸ் எனும் இயக்கமுறைமையின்மீது விண்டோ பயன்பாடுகளை செயல்படுத்தி பயன்பெறுவதற்கு உதவுகின்றது இதனை பின்வரும் படிமுறைகளை பின்பற்றி செயற்படுத்தி பயன்பெறுக.
படிமுறை1 Ctrl- Alt- T எனும் முனைமத்தை திறந்து கொண்டு அதில் sudo add-apt-repository ppa:ubuntu-wine/ppa எனும் கட்டளைவரியை செயல்படுத்திடுக
படிமுறை2 sudo apt-get update && sudo apt-get install wine1.7எனும் கட்டளைவரிவாயிலாக wineஎன்பதை நம்முடைய லினக்ஸ் இயக்கமுறைமை செயல்படும் கணினியில் நிறுவுகை செய்திடுக
படிமுறை3பின்னர் இதனை கட்டமைவு செய்திடுவதற்காக winecfgஎன்ற கட்டளைவரியினை செயல்படுத்திடுக அதன்பின்னர்Libraries எனும் தாவிபொத்தானின் திரையில் Riched20 என்பதை தெரிவுசெய்து சேர்த்துகொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக தற்போது இந்த Wineஎனும் கருவியானது வெற்றிகரமாக நிறுவுகை செய்யப்பட்டு கட்டமைவு செய்யப்பட்டுவிடும்
படிமுறை4 பிறகு விண்டோ அலுவலக பயன்பாடு இயங்குவதற்கேற்ற 32பிட் சூழலை லினக்ஸில் கொண்டுவருவதற்கு exportWINEPREFIX=$HOME/wine32 என்ற கட்டளைவரியை செயல்படுத்திடுக அல்லது 64 பிட் சூழலை லினக்ஸில் கொண்டுவருவதற்கு exportWINEPREFIX=$HOME/wine64 என்ற கட்டளைவரியை செயல்படுத்திடுக
படிமுறை5 பின்னர் 32பிட் சூழல் எனில்export WINEARCH=wine32எனும் கட்டளைவரிவாயிலாக இயலுமை செய்திடுக அல்லது 64பிட் சூழல்எனில்export WINEARCH=wine64எனும் கட்டளைவரிவாயிலாக இயலுமை செய்திடுக
படிமுறை6 Microsoft Office setup என்பதை திறந்து கொண்டு அதிலுலுள்ள Setup.exe எனும் கோப்பின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் open with wine என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
படிமுறை7 உடன் நிறுவுகை திரை தோன்றிடும் அதில் Install Nowஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படிமுறை8 மைக்ரோசாப்ட் நிறுவன அலுவலக பயன்பாடு நிறுவுகைசெய்திடும் பணிதுவங்கி முடிவுபெறும் பிறகு கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்து மறுபடியும் செயல்டசெய்திடுக இதன்பின்னர் லினக்ஸ் இயக்கமுறை செயல்படும் கணினியில் விண்டோ அலுவலக பயன்பாடுகளை பயன்படுத்தி கொள்ளலாம்

குறிப்புஇந்த Wineஎனும் கருவியை கொண்டு லினக்ஸ் செயல்படும் கணினியில் .exe என்ற பின்னொட்டுடன் முடியும் அனைத்து விண்டோ பயன்பாடுகளையும் எளிதாக செயல்படுத்தி பயன்பெறமுடியும்

மெய்நிகர் கணினியை(Virtual Computer) பயன்படுத்தி விண்டடோஇயக்கமுறைமையில் லினக்ஸை செயல்படுத்தமுடியும்

தற்போது லினக்ஸ் விண்டோ ஆகிய இரண்டு இயக்கமுறைமைகளும் நம்மில் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்பட்டுவருகின்றது என்ற செய்தி அனைவரும் அறிந்ததே அதிலும் இரண்டு இயக்கமுறைமைகளையும் ஒரே கணினியில் செயல்படுமாறு செய்வதற்கு பெரும்பாலானவர்கள் விரும்புவார்கள் இவ்வாறானவர்களுக்கு கைகொடுக்க வருவதுதான் மெய்நிகர் கணினிசூழலாகும் இதற்காக நம்முடைய கணினியை இயங்கசெய்திடுக உடன் F2 ,Del அல்லது Enter என்றவாறு விசைகளை அழுத்தி BIOS அமைவு திரைக்கு செல்க பிறகு CPU Configuration=>System Configuration=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தவுடன் விரியும் திரையில் Advanced அல்லதுSecurity எனும் தாவிப்பொத்தானின் திரையை தோன்றிடசெய்க அதில் Virtualization Technology அல்லது Intel Virtualization Technology என்பதை இயலுமை செய்திடுக பிறகு https://virtualbox.org/wiki/downloads அல்லது https://download.virtualbox.org/vitrualbox/5.1.28/VirtualBox-5.1.28.28-11-117968-Win.exe/ என்ற முகவரியில் virtualbox பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவுகை செய்திடுக பிறகு இந்த virtualbox எனும் பயன்பாட்டினை செயல்படுத்திடுகஉடன்விரியும் virtualbox எனும் திரையில் NEWஎனும் பொத்தானையும் பின்னர் பொருத்தமான இயக்கமுறைமைகளின் வகையையும் தெரிவுசெய்து சொடுக்குக மேலும் இதற்கு போதுமான RAMஉம் virtual hard Diskஉம் தெரிவுசெய்துகொண்டுcreate virtual hard disk nowஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் இந்த மெய்நிகர் வன்தட்டு நினைவகத்தின் வகையினை Fixed size அல்லது Dynamic sizeஆகியஇரண்டில் ஒன்றினையும் நினைவக அளவையும் தெரிவுசெய்து கொள்க இதன்பின்னர் நம்முடைய மெய்நிகர் கணினியை செயல்படுத்திடுக இதன்பின்னர் தோன்றிடும் மெய்நிகர் கணினியின் திரையில் வழக்கமாக இயக்கமுறைமையைநிறுவுகை செய்வதை போன்று கைவசமுள்ள லினக்ஸ் இயக்கமுறைமையை நிறுவுகை செய்து கொள்க அதன்பிறகு இந்த மெய்நிகர் கணினியை Save the machine , Send the ‘Shutdown’Signal , Power off the machine ஆகிய மூன்று வழிமுறைகளில் ஒன்றின்வாயிலாக இந்த மெய்நிகர்கணினியின் இயக்கத்தை நிறுத்தம்செய்திடுக

Previous Older Entries