இணைய பயன்பாடுகளுக்கான பவர் எனும் கட்டுகளின் மேலாளர்

இணையதளபக்கங்களானது வரைச்சட்டங்கள் நூலகங்கள் பயன்பாடுகள் போன்றவைகளால் உருவாக்கபடுவையாகும் இவைகளனைத்தையும் மிகச்சரியாக நிருவகித்து நிகழ்நிலைபடுத்தி செயல்படுவதுஎன்பது மிகசிரமமான பணியாகும் அவ்வாறான பணியை திறம்பட ஆற்றகைகொடுப்பதே இந்த Bower எனும் கட்டற்ற பயன்பாட்டு மென்பொருளாகும் இது bowerbird எனும் பறவையின் பெயரை கொண்டு இவ்வாறு அழைக்கப்படுகின்றது இது ஹெச்டிஎம்எல்,ஜிஎஸ்எஸ்,ஜாவாஸ்கிரிப்பட், எழுத்துருக்கள் அல்லது உருவப்படங்கள் ஆகியவற்றின் உள்ளடக்கங்களை எளிதாக நிருவகிக்கின்றது இதற்காகவென தனியாக குறிமுறையோஅல்லது சேர்த்தலோ இல்லாமல் இணைய பக்கங்களை நிருவகிப்பதற்கான அவைகளை சார்ந்த தேவையான மிகச்சரியான பதிப்புகளின் கட்டுகளை மட்டும் தேடிகண்டுபிடித்து பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்கின்றது இதனை பயன்படுத்தி கொள்வதற்காக இதனுடைய கட்டுகளின் சமீபத்திய கோப்பினை https://bower.io/docs/api#install/ எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து $ bower install எனும் கட்டளைவரிவாயிலாக நிறுவுகைசெய்து கொள்க bower.json எனும் கோப்பினையும் பதிவிறக்கம் செய்து $ npm install -g bowerஎனும் கட்டளைவரிவாயிலாக நிறுவுகைசெய்து கொள்க http://bower_components/jquery/dist/jquery.min.js எனும் கட்டளை வரிவாயிலாக jqueryஎன்பதை நேரடியாக இதனுடைய நிறுவுகை செய்யப்பட்ட கட்டுகளை பயன்படுத்தி கொள்க மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கு https://bower.io/docs/creating-packages/#bowerjson எனும் இணையபக்கத்திற்கு செல்க

புதியவர்களுக்கு ஆண்ட்ராய்டு-பயிற்சிகையேடுபகுதி-4 பயன்பாட்டு ஆக்கக்கூறுகள்

பொதுவாக இந்த பயன்பாட்டு ஆக்கக்கூறுகளே ஒரு ஆண்ட்ராய்டு பயன்பாட்டினை உருவாக்குவதற்கான அத்தியாவசிய கட்டைமவு தொகுதிகளாக உள்ளன.ஆயினும் AndroidManifest.xml எனும் வெளிப்படையான பயன்பாட்டு கோப்பினால் இந்த ஆக்கக்கூறுகள் தளர்வாக இணைந்திருப்பதின் மூலம் அவை ஒவ்வொன்றும் இந்த பயன்பாடுகளில் எவ்வாறு இடைமுகம் செய்யப்படுகின்றன என விவரிக்கின்றது அவைகளுள் ஒரு ஆண்ட்ராய்டு பயன்பாட்டிற்குள் பயன்படுத்த முடிந்த பின்வரும் மிகமுக்கிய நான்கு ஆக்கக்கூறுகள் உள்ளன
செயல்பாடுகள்:
இவை U Iஎனும் பயனாளர் இடைமுகத்தை(User Interface) பற்றி அறிவுரை கூறுவதுடன் திறன்பேசி திரையில் பயனாளர் இடைமுகத்தை கையாளுகின்றன
சேவைகள்:
இவை ஒரு பயன்பாட்டுடன் ஒருங்கிணைந்த பின்புல செயல்களை கையாளுகின்றன
ஒலிபரப்பு பெறுபவைகள்:
இவை ஆண்ட்ராய்டு இயக்குமுறைமை அதனுடைய பயன்பாடுகள் ஆகிவற்றிற்கிடையேயான தகவல் தொடர்பை கையாளுகின்றன
உள்ளடக்க வழங்குநர்கள்:
இவை தரவுகள் தரவுதள மேலாண்மை ஆகியவை தொடர்பான பிரச்சினைகளை கையாளுகின்றன

செயல்பாடுகள்
ஒரு செயல்பாடு என்பது பயனர் இடைமுகத்துடனான ஒரு ஒற்றையான திரையை குறிப்பதாகும். உதாரணமாக, ஒரு மின்னஞ்சல் பயன்பாட்டு செயலில் புதிய மின்னஞ்சல்களை பட்டியலாக காண்பிப்பது ஒரு செயலாகும், மற்றொரு செயலென்பது பதியதொரு மின்னஞ்சலை உருவாக்குவதாகும், அதனை தொடர்ந்து இந்த மின்னஞ்சல்களை திறந்து படிப்பது பிறிதொருசெயலாகும். இவ்வாறு ஒரே பயன்பாடானது ஒன்றுக்கு மேற்பட்ட செயல்களில் உள்ளது என்றால், அவைகளுள் ஒரு செயலைமட்டும் குறிப்பிட்ட பயன்பாடு இயங்கத் துவங்கிடும் போது செயல்படவேண்டும்என குறிக்க வேண்டும். ஒரு செயலானது ஒரு துணை இன செயலின் இனமாக பின்வருமாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது:
public class MainActivity extends Activity {
}
சேவைகள்
ஒரு சேவை என்பது மிகநீண்ட இயங்கும் நடவடிக்கைகளை செயற்படுத்து-வதற்காக பின்னணியில் இயங்கிடும் ஒரு உள்ளடக்கமாகும் . உதாரணமாக, பயனாளர் பல்வேறு பயன்பாடுகளை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது, அல்லது ஒரு நடவடிக்கை மூலம் பயனாளர் தொடர்பு தடுப்பு எதுவுமில்லாமல் பிணையத்தில் தரவை பதிவிறக்கம் செய்திடும்போது பின்னணி இசையை செயல்படுத்தி கொண்டிருப்பதுஆகும் . ஒரு சேவையானது பின்வருமாறு சேவைஇனத்தின் ஒரு துணை இனமாக செயல்படுத்தப்படுகிறது:
public class MyService extends Service {
}
ஒலிபரப்பு பெறுதல்
ஒலிபரப்பு பெறுதல் என்பது சாதாரணமாக மற்ற பயன்பாடுகளிலிருந்து அல்லது கணினியிலிருந்து பெறப்படும் ஒலிபரப்பு செய்திகளுக்கு பதிலளிப்பதாகும். உதாரணமாக,
சில தரவுகள் சாதனங்களில் பதிவிறக்கம் செய்யப்படுவது அதனை தொடர்ந்து அவற்றை பயன்படுத்துவதற்கு தயாராக வைத்திருப்பது என அறிந்து கொள்ளப்படும். மற்ற பயன்பாடுகளை அனுமதிப்பதற்கு தேவையான செயல்களை ஒலிபரப்புசெயல் பயன்பாடுகளில் செயல்படுத்திட முடியும், எனவே இந்த ஒலிபரப்பு பெறும் செயலானது இந்த தொடர்பை இடைமறித்து அதற்கான நடவடிக்கை எடுக்க பயன்படுகின்றது.
ஒரு ஒலிபரப்பு பெறுதல் எனும் செயலானது பின்வருமாறு ஒரு ஒலிபரப்பு பெறுதல் எனும் இனத்தின் ஒரு துணை இனமாக செயல்படுத்தப்படுகிறது மேலும் ஒவ்வொரு செய்தியும் ஒரு பொருள் நோக்கத்துடன் ஒலிபரப்பப் படுகின்றது:
public class MyReceiver extends BroadcastReceiver {
}
உள்ளடக்க வழங்குநர்கள்
கோரிக்கையின் மீது மற்றவர்களுக்கு ஒரு பயன்பாட்டிலிருந்து ஒரு உள்ளடக்க வழங்குநர் உள்ளடக்க தரவுகளை வழங்குவார். இது போன்ற கோரிக்கைகள் Content Resolver எனும் இனத்தின் வழி முறைகளால் கையாளப்படுகின்றன. இந்த தரவுகளானது தரவுதளத்தில் அல்லது முற்றிலும் வேறு எங்காவது , கோப்பு முறைமையில் சேமிக்கப்பட்டிருக்கும். ஒரு உள்ளடக்க வழங்குநரானது பின்வருமாறு Content Provider எனும் இனத்தின் ஒரு துணை இனமாக செயல்-படுத்தப்படுகின்றது மேலும் பிற பயன்பாடுகளில் பரிவர்த்தனைகளை செயற்படுத்துவதற்கு முடியுமாறு ஒரு செந்தரAPI தொகுப்புகளாக செயல்-படுத்தப்பட வேண்டும்.
public class MyContentProvider extends ContentProvider {
}
இந்த பயன்பாட்டு ஆக்கக்கூறுகளை பற்றிய விளக்கங்களை நாம் தனித்தனி பகுதிகளில் விரிவாக இந்த குறிச்சொற்களின் மூலம் காண்போம்
கூடுதல் ஆக்கக்கூறுகள்
மேலே குறிப்பிட்டுள்ள செயல்கள் , அவைகளின் தருக்கங்கள், அவைகளுக்கு இடையேயான இணைப்பு ஆகியவைகளை கட்டமைப்பு செய்வதற்கு பயன்படுத்தப்-படும் கூடுதல் ஆக்கக்கூறுகளும் உள்ளன. இந்த கூடுதல்ஆக்கக்கூறுகள் பின்வருமாறு:

பிரிப்பான்கள்:
ஒரு செயலின் பயனாளர் இடைமுகத்திற்கான ஒரு பகுதி அல்லது செயலின் தன்மையை காண்பிப்பது
காட்சிகள்:
பயனாளர் இடைமுகத்தின் உறுப்புகளான பொத்தான்கள் பட்டியல்கள் போன்றவைஉள்ள திரையின் தோற்றம்
புறவமைப்புகள்:
காட்சியின் தோற்றத்தையும் காட்சி வடிவமைப்பையும் கட்டுப்படுத்திடும் வரிசையான காட்சியாகும்
உள்தள்ளல்:
செய்திகளை ஒன்றுக்கொன்று இணைப்பு செய்தல்
வளங்கள்:
வரையும்படங்கள்,மாறிலிகள்,சரங்கள்போன்ற வெளிப்புற உறுப்புகள்
வெளிப்படையான:
பயன்பாடுகளுக்கான கட்டமைவு கோப்பு

லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ்-5.2 தொடர்-7 படவில்லையில் படங்களை சேர்த்தலும் திருத்தம் செய்தலும்

நாம் கூறவிழையும் கருத்தினை பார்வையாளர்கள் புரிந்துகொள்வதற்காக பக்கம் பக்கமான உரையை வழங்குவதைவிட ஒரேயொரு உருவப்படமானது விரைவாகவும் எளிதாகவும் பார்வையாளர்களுக்கு ஏராளமான செய்திகளை விளங்கச்செய்திடும் அவ்வாறான உருவப்படங்களை எவ்வாறு ஒரு படவில்லையில் உள்ளிணைப்பு செய்வது என இப்போது காண்போம் இதற்காக முதலில் படவில்லையில் தேவையான இடத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு திரையின்மேலே கட்டளைப்பட்டையில் Insert => Image => From file=>என்றவாறு கட்டளைகளை சொடுக்குகஅல்லது காலியான படவில்லையெனில் Insert Imageஎன்ற உருவப்பொத்தானை சொடுக்குக

1.1
உடன் விரியும் Insert Imageஎனும் உரையாடல் பெட்டியில் உள்ளிணைக்க விரும்பும் கோப்பு இருக்கும் கோப்பகத்தை தேடிபிடித்து தெரிவுசெய்து கொள்க பின்னர் இதே உரையாடல் பெட்டியின் கீழ்பகுதியிலிருக்கும் Previewஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்தபின் வலதுபுற பலகத்தில் நாம் தெரிவுசெய்த உருவப்படத்தினை பெரியஅளவில் தோன்றிடசெய்து திருப்தியுற்றால் Open என்ற பொத்தானை சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த உருவப்படமானது படவில்லையில் உள்ளிணைக்கப்-பட்டு தோன்றிடும் இந்தOpen எனும் பொத்தானை சொடுக்குவதறகு முன் insert as link எனும் வாய்ப்பினை தெரிவுசெய்திருந்தால் படவில்லையில் உருவப்படமானது உள்பொதியபடாமல் இணைப்பாக மட்டும் தோன்றிடும்
இவ்வாறான உருவப்படத்தினை வருடுதல்செய்தும் உள்ளிணைத்திடலாம் அதற்காக நம்முடைய கணினியில் உருவப்படங்களை வருடுவதற்கு உதவிடும் scannerஎனும் மென்பொருளை நிறுவுகை செய்திருப்பதையும் அது செயலில் இருப்பதையும் உறுதி படுத்தி கொள்க பின்னர் திரையின்மேலே கட்டளைப்பட்டையில் Insert => Image => Scan => Select Source=>என்றவாறு கட்டளைகளை சொடுக்குக நாம் ஏற்கனவே வருடியை பயன்படுத்தி கொண்டிருந்தால் திரையின்மேலே கட்டளைபட்டையில் Insert => Image => Scan => Request=>என்றவாறு கட்டளைகளை சொடுக்குக அதனை தொடர்ந்து விரியும் Insert scannerம் உரையாடல் பெட்டியில் நாம் ஒன்றிற்கு மேற்பட்ட வருடிகளை பயன்படுத்தி கொண்டிருந்தால் Select Sourceஅல்லது Deviceஎனும் கீழிறங்கு பட்டியலில் தேவையான வருடியை மட்டும் தெரிவுசெய்து கொண்டு Create Preview அல்லது Previewஎனும் பொத்தானை சொடுக்குக அதன்பின்னர் தோன்றிடும் உருவப்படத்தினை தேவையானவாறு ஒரங்களை வெட்டி சரிசெய்துகொண்டு Scan எனும் பொத்தானை சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த உருவப்படம் வருடப்பட்டு படவில்லையில் உள்பொதியபடும்
நாம் ஏற்கனவே சேகரித்து வைத்துள்ள தொகுப்பான உருவப்படங்களிலிருந்து தேவையானதை மட்டும் படவில்லையில் உள்ளிணைத்திடலாம் இதற்காக திரையின்மேலே கட்டளைப் பட்டையில் Tools => Gallery=>என்றவாறு கட்டளைகளை சொடுக்குக அல்லது திரையின் மேலே வரையும் கருவிகளின் பட்டையில் Galleryஎன்ற உருவக்கருவிப்பொத்தானை சொடுக்குக உடன் தயாராக இருக்கும் உருவப்படங்களை திரையில் சிறியவிரலளவிற்கு பிரதிபலிக்கசெய்திடும் அவற்றுள் தேவையானதை மட்டும் தேடி தெரிவுசெய்து சுட்டியால் பிடித்து அப்படியே இழுத்துவந்த படவில்லையில் தேவையான இடத்தில் வைத்து சுட்டியின் பிடியை விட்டிடுக

1.2
பொதுவாக இந்த உருவப்படங்களின் தொகுப்பானது இம்பிரஸுடன் இயல்புநிலையில் மேல்பகுதியில் கட்டப்பட்டே இருக்கும் அதனால் இடையிலுள்ள Hide/Showஎனும் பொத்தானை சொடுக்குதல் செய்து தேவையானபோது இதனை திரையில் காட்சியளிக்கும்படியும் தேவையில்லாதபோது மறையும்படியும் செய்திடமுடியும் இந்தGallery எனும் உருவப்படங்களின் தொகுப்பானது Arrows, Backgrounds, Bullets என்பன போன்ற themesஆல் குழுவாக தொகுக்கப்பட்டதாகும் இதனுடைய இடதுபுற பலகம் தற்போது பயன்படுத்த தயார்நிலையில் உள்ளவைகளின்தொகுப்பாகும் இவைகள் பார்க்கவும் படிக்கவும் மட்டுமே செய்யமுடியும் இவைகளை சேர்க்கவோ நீக்கவோ முடியாது இவைகளை வாடிக்கையாளர் விரும்பியவாறு படவில்லையில் சேர்ப்பதற்கும் நீக்குவதற்கும் தேவையான themeகளில் இடம்சுட்டியை வைத்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தனை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Propertiesஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் விரியும் Propertiesஎனும் உரையாடல் பெட்டியில் தேவையானவாறு கட்டமைத்து கொள்க
நாம் விரும்பிய themeகளை இந்த தொகுப்பில் சேர்த்திடலாம் இதற்காக Gallery எனும் உருவப்படங்களின் தொகுப்பினை திரையில் தோன்றிட செய்திடுக பின்னர் New Themeஎனும் பொத்தானை சொடுக்குக உடன் Properties of New Themeஎனும் உரையாடல் பெட்டி திரையில் விரியும் அதில்General எனும் தாவிப்பொத்தானின் திரைக்கு சென்று உரைபெட்டியில் புதிய பெயரை உள்ளீடு செய்து கொண்டு Files எனும் தாவிப்பொத்தானின் திரைக்கு செல்க அங்கு Find Files எனும் பொத்தானை சொடுக்குக

1.3
உடன் விரியும் Select Path எனும் உரையாடல் பெட்டியில் தேவையான உருவப்பட கோப்பினை தேடிபிடித்து தெரிவுசெய்து கொண்டு OK எனும் பொத்தானை சொடுக்குக பிறகு Propertiesஎனும் உரையாடல் பெட்டியில் தேவையான உருவப்பட கோப்பினை தெரிவுசெய்து கொண்டு Add எனும் பொத்தானை சொடுக்குக அனைத்து உருவப்பட கோப்பகளையும் சேர்த்திடவிரும்பினால் Add Allஎனும் பொத்தானை சொடுக்குக உடன் கோப்புகளின் பெயர் மறைந்து உருவப்படங்கள் மட்டும் திரையில் தோன்றிடும் அதனை தொடர்ந்து OK எனும் பொத்தானை சொடுக்குக
இவ்வாறு சேர்த்தவைகளில் தேவையில்லை என்பதை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Delete எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த நீக்குதல் செய்திடும் செயலை உறுதிபடுத்திடுவதற்கான செய்திபெட்டியொன்று திரையில் தோன்றிடும் ஆமெனில் இதிலுள்ள Yes.எனும் பொத்தானை சொடுக்குக இதே சூழ்நிலைபட்டியில்Update எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நிகழ்நிலை படுத்திகொள்க
படவில்லையில் கொண்டுவந்து சேர்த்த உருவப்படத்தினை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் அதனை சுற்றி தோன்றிடும் கைப்பிடியை பிடித்து வேறு இடத்திற்கு இழுத்து சென்றுவிடலாம அல்லது படத்தின் அளவை தேவையானவாறு சரிசெய்து அமைத்து கொள்ளலாம் மேலும் திரையின் மேலே Line and Fillingஎனும் கருவிகளின் பட்டையில் Rotateஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து இந்த படத்தினை தேவையானவாறு சுழற்றி அமைத்திடலாம்
அதுமட்டுமல்லாது திரையின்மேலே கட்டளைப்பட்டையில் View => Tool bars => Picture=> என்றவாறு கட்டளைகளை சொடுக்குதல்செய்தபின் தோன்றிடும் Pictureஎனும் கருவிகளின் பட்டையிலுள்ள கருவிகளை கொண்டு இந்த உருவப்படத்தை தேவையானவாறு வடிவமைத்து கொள்ளலாம் மிகமுக்கியமாக Filterஎனும் உருவப்-பொத்தானை சொடுக்குதல் செய்தவுடன்விரியும் Invert,Sharpen,Pop Artபோன்ற பல்வேறு வசதி வாய்ப்புகளை பயன்படுத்தி உருவப்படங்களை வடிவமைப்பு செய்து மெருகூட்டிடலாம் இதனை கொண்டு உருவப்படத்தில் இவ்வாறு செய்த வடிவமைப்பு நமக்கு பிடித்தமாக இல்லையெனில் செந்தரகருவிகளின் பட்டையில் உள்ள Undoஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது திரையின்மேலே கட்டளைப் பட்டையில் Edit =>Undo: Bitmap Graphic Filter=>என்றவாறு கட்டளைகளை சொடுக்கு அல்லது Ctrl+Z.ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக
அதைவிட Pictureஎனும் கருவிகளின் பட்டையிலுள்ளகருவிகளில்Graphics mode எனும் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்துஅவைகளிலுள்ள Default, Grayscale, Black/White, Watermarkஆகிய வாய்ப்புகளில் ஒன்றினை தெரிவுசெய்து வரைகலைநிலையை அமைத்துகொள்க
அதுமட்டுமல்லாது இதே Pictureஎனும் கருவிகளின் பட்டையிலுள்ள Colorஎனும் உருவக்கருவிப்பொத்தானை சொடுக்குதல் செய்து Colorஎனும் கருவி பட்டை.யை விரியச் செய்திடுக அதில் red, green, blueஆகியவற்றில் ஒரு வண்ணத்தையும் brightness, contrast, gammaஆகிய அமைவில் ஒன்றையும்தெரிவுசெய்து அமைத்து கொள்க
மேலும் திரையின்மேலே கட்டளைப்பட்டையில் Format => Area=>என்றவாறு கட்டளைகளை சொடுக்குதல்பின் தோன்றிடும் Areaஎனும் உரையாடல் பெட்டியின் Colors எனும் தாவிப்-பொத்தானின் திரையில் Name,Color((RGB)அல்லது(CMYK)) ஆகியவற்றில் தேவையானதை தெரிவுசெய்து அமைத்து கொள்க

1.4
கூடுதலாக Pictureஎனும் கருவிகளின் பட்டையிலுள்ளகருவிகளில்Transparency எனும் கருவிப்பொத்தானை சொடுக்குதல் செய்து தேவையானவாறு அமைத்து கொள்க அவ்வாறே Areaஎனும் உரையாடல் பெட்டியின் Transparencyஎனும் தாவிப்பொத்தானின் திரையில் No transparency, transparency,Gradientஆகியவற்றில் தேவையானதை மட்டும் தெரிவு செய்து அமைத்து கொள்க
அதேபோன்று Pictureஎனும் கருவிகளின் பட்டையிலுள்ளகருவிகளில்Shadow எனும் கருவிப்பொத்தானை சொடுக்குதல் செய்து தேவையானவாறு அமைத்து கொள்க அவ்வாறே Areaஎனும் உரையாடல் பெட்டியின் Shadowஎனும் தாவிப்-பொத்தானின் திரையில் Position, Distance, Color, transparency ஆகியவற்றில் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து அமைத்து கொள்க படவில்லையின் உருவப்படத்தில் தேவை-யற்றவைகளை வெட்டி சுருக்கி யமைத்திடுவதற்காக சரிசெய்திடவிரும்பும் உருவப்படத்தை தெரிவுசெய்து கொள்க இதே Pictureஎனும் கருவிகளின் பட்டையிலுள்ள கருவிகளில்Crop எனும் கருவிப்பொத்தானை சொடுக்குக உடன் அந்த உருவப்படத்தின் உள்பகுதியில் ஓரமாக தொகுப்பான Cropஎனும் குறியீடுகள் தோன்றிடும் அவைகளை பிடித்து இழுத்து செல்வதன் வாயிலாக படத்தினை சுருக்கி அமைத்தபின்னர் சுட்டியை உருவப்படத்திற்கு வெளிய வைத்து சொடுக்குக

1.5
இதற்கு பதிலாக இதே செயலை உரையாடல் பெட்டியின் வாயிலாககூட செயல்படுத்திடமுடியும் இதற்காக தேவையான உருவப்படத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Crop Pictureஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது திரையின்மேலே கட்டளைப்பட்டையில் Format =>Crop Image=>என்றவாறு கட்டளைகளை சொடுக்குக உடன்விரியும் Crop எனும் உரையாடல் பெட்டியிலுள்ள Left,Scale போன்ற வாய்ப்புகளை கொண்டு சுருக்குவதற்காக தேவையானவாறு சரிசெய்து கொண்டு OKஎனும் பொத்தானை சொடுக்குக இந்நிலையில்மனம் மாறி படத்தில் பழையஅளவே போதுமென எண்ணினால் Original Sizeஎனும் பொத்தானை சொடுக்குக

1.6
இந்த உருவப்படத்தை கொண்டு உருவரைபடத்தை உருவாக்கலாம் இதற்காக படவில்லையிலுள்ளதேவையான உருவப்படத்தை தெரிவுசெய்து கொண்டு திரையின்மேலே கட்டளைப்பட்டையில் Edit => Image Map=>என்றவாறு கட்டளைகளை சொடுக்குக உடன்விரியும் Image Map எனும் உரையாடல் பெட்டியிலுள்ள கருவிகளை பயன்படுத்தி Address,Frameபோன்ற புலங்களின் துனையுடன் இந்த உருவப்படத்தின் hot spotஐ வரையறுத்து கொண்டு Applyஎனும் உருவப்பொத்தானை சொடுக்குதல்செய்து இந்த அமைவை செயல்படுத்திடுக

1.7

ஆய்வாளர்களுக்கு உதவிடதயாராக இருக்கம் PhilPapers எனும் இணையதளம்

இது தன்னார்வகுழுக்களின் ஒருமுழுமையானஆய்வுகளின் தொகுப்பும் நூல்விவர பட்டியலும் கொண்டதாகும் இந்த தளத்திற்கு வந்தவுடன் இது எவ்வாறு செயல்படுகின்றது அதில் நம்முடைய பங்களிப்பு என்னவாக இருக்கும் நாம் இந்த தளத்திலிருந்து என்னென்ன பெறமுடியும் என நம்மை வரவேற்கும் செய்தி தொகுப்பிலுள்ள விவரங்களை கண்டிப்பாக படித்தறிந்து கொள்க என பரிந்துரைக்கப்-படுகின்றது அதன்பின்னர் நூல்விவரதொகுதியின் அட்டவணைக்கு இடம் சுட்டியை நகர்த்தி சென்று அதனுடைய பல்வேறு தலைப்புகளுடனான உள்ளடக்கங்களை பார்வையிடுக இதில் 1000 இற்கும் அதிகமான ஆய்வு பத்திரிகைகள், ஆய்வுநூல் விவர தொகுப்புகள் நாம் தெரிவுசெய்து பயன்படுத்திகொள்வதற்கு தயாராக இருக்கின்றன இந்த தளத்தினை பயன்படுத்தி கொள்வதற்கென தனியாக பயனாளர்-கணக்கெதுவும் துவங்கதேவையில்லை இந்த தளத்தில் New items எனும் பட்டியலை தெரிவுசெய்தவுடன் விரியும் திரையில் இதனுடயை சமீபத்தியவரவுகளை அறிந்து கொள்க இந்த தளத்தின் journal archive எனும் பட்டியலை தெரிவுசெய்தவுடன் விரியும் திரையில் இதிலுள்ள பழைய ஆய்வு பத்திரிகைகள், ஆய்வுநூல் விவரதொகுப்புகளை அறிந்து கொள்க மேலும் இந்த தளத்தின் Browse by area எனும் பட்டியலை தெரிவுசெய்தவுடன் விரியும் திரையில் இந்த தளத்தினுடைய மிகமுக்கிய ஐந்து பகுதிகளின் தொகுப்பினை நமக்கு காண்பிக்கின்றது இதனுடைய advanced search page என்பதன் வாயிலாக மிகமேம்பட்ட தேடுதல்களை செய்திடமுடியும் இதனுடைய Categorization Project எனும் பக்கம் வகைவாரியான செயல்திட்டங்களையும் discussion forums எனும் பக்கம் விவாத அரங்கமாகவும் விளங்குகின்றன வாருங்கள் இன்றே இதனுடைய https://philpapers.org/ எனும் தளத்திற்கு

whatthefont எனும் இணைய கருவியை பயன் படுத்தி கொள்க


இணையத்தில் உலாவரும்போது குறிப்பிட்ட தளத்தின் எழுத்துகள் பார்வையாளர்களை கவரும் வண்ணம் மிக அழகாக இருக்கின்றதே என நம்மில் பலர் அந்த தளத்தின் என்ன வகையான எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என அறிந்த கொள்வதற்காக மிகஆவலாக இருப்போம் அவ்வாறானவர்களுக்கு உதவகாத்திருப்பதே whatthefont எனும் இணைய கருவியாகும் இதனை பயன்படுத்தி கொள்வதற்கு நமக்கு பிடித்தமான கூகுள்குரோம் என்றவாறான இணைய உலாவியை திரையில் தோன்றிடசெய்திடுக உதாரணமாக கூகுளின் பெயரையே தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன் விரியும் பட்டியிலின் வாயிலாக இந்த பெயரை பதவிறக்கம்செய்து நம்முடைய கணினியில் சேமித்துகொள்க அதன்பின்னர் விண்டோவின் துவக்கபொத்தானை சொடுக்குதல் செய்தபின் விரியும் பட்டியில் snipping tool எனதட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக இந்த எழுத்துகளை விண்டோவின் snipping எனும் கருவியை கொண்டு வெட்டி எடுத்துகொண்டு இதில் New என்பதை அழுத்தி தோன்றிடும் திரையில் நாம் வெட்டிகொண்டுவந்த எழுத்துகளை விட்டிடுக இதனை இடம்சுட்டியால் தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை அழுத்துக உடன்விரியும் சூழ்நிலை பட்டியல் Save as எனும் வாய்ப்பினை வாயிலாக உருவப்படமாக சேமித்துகொள்க இதன்பின்னர் http://www.myfonts.com/whatthefont எனும் தளத்தில் எழுத்துகள் கொண்ட இந்த உருவப்பட கோப்பினை பதிவேற்றம் செய்து சமர்ப்பித்திடுக உடன் இந்த உருவப்பட கோப்பில் உள்ள எழுத்துரு எந்தவகையானது என திரையில் அதன் பெயரை காண்பிக்கும்

பாதுகாப்பு பயன்பாடுகளில் மிகமுக்கியமாக கவணிக்கபட வேண்டியவைகள்

மிகச்சிறந்த பாதுகாப்பு பயன்பாடு எது என நாம் தேடிபிடித்து தெரிவுசெய்வதற்குமுன்பு நாம் தெரிவுசெய்திட விழையும்பாதுகாப்பு பயன்பாடானது அவ்வப்போது குறிப்பிட்ட காலஇடைவெளியில் தானாகவே நிகழ்நிலை படுத்திகொள்ளும்(Automatic updates) வசதி உள்ளதா என சரிபர்த்திடுக அதற்கடுத்ததாக பதிய பயன்பாடுகளையோ அல்லது புதிய கோப்புகளையோ திறந்து பயன்படுத்தி கொள்வதற்குமுன் அவைகளினால் நம்முடைய கணினிக்கோ அல்லது நம்முடைய கணினியிலுள்ள இதர பயன்பாடுகளுக்கோ பாதிப்பு எதுவும் உருவாகிடுமா என நேரடியாக வருடி சரிபார்த்திடும் (Real-time reactive scanning) எனும் வசதிகொண்டுள்ளதா வென சரிபார்த்திடுக நாம் கணினியை இயக்கி செயல்படுத்ததுவங்கியவுடன் எந்த பயன்பாட்டினை நாம் பயன்படுத்தி-கொண்டிருந்தாலும் பின்புலத்தில் நச்சுநிரல்களிலிருந்து நம்முடைய கணினியை பாதுகாத்திடும் Malware removal எனும் கருவி செயல்படும் திறன்மிக்கதாக உள்ளதாவென சரிபார்த்து கொள்க இந்த மூன்றும் சரியாக இருந்தால் மட்டும் குறிப்பிட்ட பாதுகாப்பு பயன்பாட்டினை தெரிவுசெய்து கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது

சிறந்த இணைய பக்கங்களை உருவாக்கிடுவதற்கு உதவிடும் கருவிகள்

பார்வையாளர்களை எளிதாக கவரும் வண்ணம் எளியதாகவும் சிறப்பாக வடிவமைக்கபட்டும் தெளிவான முகவரியுடனும் மிகத்திறனுடனும் இணைய பக்கங்கள் இருக்கவேண்டும் அதற்காக பின்வரும் கருவிகள் பயன்படுகின்றன
1 unbounce எனும் கருவி இது செல்லிடத்து பேசியில் கூட நமக்கு தேவையான இணைய பக்கங்களின் மாதிரி படிமத்தை இழுத்துவந்துவிடும் தொழில்நுட்பத்துடன் இணையபக்கத்தை வடிவமைக்கவும் A/B எனும் பரிசோதனை திறனை முன்கூட்டியே கட்டமைக்கப்பட்டதுமான கருவியாகும் இது பயன்படுத்தி கொள்வதற்கு தயார்நிலையிலுள்ள click-through, coming soon, lead generation pages போன்ற மாதிரி பலகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது
2 LeadPagesஎன்பது இணையத்தில் முழுமையான landing pages என்பதை உருவாக்கிட உதவிடும் கருவியாகும் இணைய பக்கங்களின் உள்ளடக்கங்களை மேம்படுத்தி கொள்வதற்காக LeadBox எனும் மேல்மீட்பு பட்டிவசதி கொண்டது பல்வேறு நோக்கங்களுக்காகவும் பல்வேறு பரிசோதனைகளை செய்தும் நாம் பயன்படுத்துவதற்காக ஏராளமான வகையில் நாம் தெரிவுசெய்வதற்கு தயாராக landing pagesமாதிரி பலகங்களை இது தன்னகத்தே கொண்டுள்ளது இது A/B எனும் பரிசோதனை அல்லது 1-click signup இணைப்பு கொண்டதாகும்
3 Instapage என்பது இணைய பக்கத்தை உருவாக்குவதற்கு பயனாளரின் உற்றநண்பனாக உதவிடும் மிகச்சிறந்த கருவியாகும் இது செல்லிடத்து பேசியில் கூட நமக்கு தேவையானதை இழுத்துவந்துவிடும் தொழில்நுட்பத்துடன் இணையபக்கத்தை வடிவமைக்க உதவிடும் கருவியாகும் போட்டியாளர்களின் அனைத்து வசதி வாய்ப்புகளையும் இது வழங்கதயாராக இருக்கின்றது இவையனைத்தையும் இவைகளின் மாதிரி பரிசோதனைகளை இலவசமாக செய்து திருப்தியுற்றால் கட்டணத்துடன் இவைகளை பயன்படுத்தி கொள்பவைகளாக உள்ளன

Previous Older Entries