நம்முடைய முதல் PLAYBOOKஎனும்குறிமுறைவரிகளை எழுதுதல்

இங்கு PLAYBOOKஎன்றால் என்ன என்ற கேள்வி கண்டிப்பாக நம்முடைய மனதில் எழும் நிற்க இது அடிப்படையில் ஒற்றையான அல்லது குழுவான இலக்குகளை (Targets) இயங்கசெய்து விளையாடுவதற்கான கட்டளைவரிகளின் தொகுப்பாகும் கருவிகளை அல்லது வீட்டுஉபயோகபொருட்களை எவ்வாறு வரிசைகிரமமாகசெயல்படுத்தி ஒன்றினைத்து தொகுத்து நாம் எதிர்பார்த்திடும் ஒருமுழுமையான பொருளாக எவ்வாறுஉருவாக்குவது என்பதே இந்தPLAYBOOKஎன்பதாகும் இந்த PLAYBOOK இனை கட்டமைப்பது மிகஎளிதானது ஆனால் இதன் பயன்ஏராளமாகும் இதனை செயல்படுத்திபயன்படுவதற்காக NGINX எனும் இணைய சேவையாளரும் index.htmlஎனும் கோப்பும் தேவையாகும்
இந்தPLAYBOOKஇன் துவக்ககுறிமுறை வரியாக — என்றவாறு மூன்று புள்ளிகளை கொண்டிருக்கும் அடுத்து நம்முடைய குறிமுறைவரிகளின் பெயர் (Name)அதற்கடுத்ததாக அடையவேண்டிய இலக்கு (Hosts) அதற்கடுத்து ஆம் இல்லை எனும் கூற்றுவாக்கியமான Become ஆகியவையாகும்

– name: Install nginx
hosts: host.name.ip
become: true

அதற்கடுத்ததாக இந்த இலக்குகளை குறிப்பிடும் துனைக்குறிமுறைவரிகள் பின்வருமாறு இருக்கும்
tasks:
– name: Add epel-release repo
yum:
name: epel-release
state: present

– name: Install nginx
yum:
name: nginx
state: present
அதனை தொடர்ந்த இயல்புநிலைகோப்பினை உருவாக்குவதற்கானகுறிமுறைவரிகள் பின்வருமாறு
– name: Insert Index Page
template:
src: index.html
dest: /usr/share/nginx/html/index.html

இறுதியாக NGiNXஎனும் இணையசேவையாளரை துவக்குவதற்கான குறிமுறைவரிகள் பின்வருமாறு
– name: Start NGiNX
service:
name: nginx
state: started
இதனை முழுமையான தொகுத்து ஒரு நிரல்தொடர்குறிமுறைவரிகளாக செய்தபின் செயல்படுத்தி அதன்முடிவுஎன்னவென்று சரிபார்த்துகொள்க

வேலைதேடுபவரகளுக்கான கூகுளின் புதிய பயன்பாடு

இந்த கூகுளின் பயன்பாடானது அமெரிக்க ஐக்கிய நாட்டில் கடந்த ஆண்டே வெளியிட பட்டிருந்தாலும் இந்தியாவில் தற்போதுதான் அனுமதிக்கப்பட்டுள்ளது இது ஆண்ட்ராய்டு ,ஐஓஎஸ் ,ஆகியவைசெயல்படும் கைபேசிகளிலும் கூகுளின் தேடுதல் வாயிலாக கணினியிலும் நாம் பயன்படுத்தி கொள்வதற்காக தயாராகஇருக்கின்றது இது தற்போதுதான் கல்வியை முடித்து புதியதாகவேலைதேடுபவர்கள் முதல் அனுபவ-மிக்கவர்களும் இந்தியாவின் பல மாநிலஅரசுகள் முதல்தனியார் நிறுவனங்கள் வரை அனைத்து நிறுவனங்களின் பணிகளையும்தேடிபிடித்திடும் வசதியை வழங்குகின்றது இதில் jobs near me அல்லது jobs for freshers எனதேடிபிடித்திடலாம்அல்லது குறிப்பிட்டபணியை தேடிபிடித்திடலாம் இதில் job titles, location, full-time அல்லது part-time என்றவாறு தேடிபிடித்திடலாம் இவ்வாறு இந்த பயன்பாட்டில் தேடிபிடித்தபின்னர் அவற்றை job profile, title, location, date posted, company type ஆகியவற்றின் அடிப்படையில் வகைபடுத்திடலாம் தொடர்ந்து நாம் விரும்பியவகையை bookmark செய்திடலாம் அதைவிடகுறிப்பிட்ட பணிவாய்ப்பு அல்லது தொடர்புடைய பணிவாய்ப்பு ஏதேனும் வெளியிடப்படடால் அதுபற்றிய அறிவிப்பு நமக்கு மின்னஞ்சல் வாயிலாக கிடைக்கமாறுசெய்திட Alerts எனும் வாய்ப்பு பயன்படுகின்றது முன்புபோல நேரடியாக இந்த கூகுள் தளத்திலிருந்த விண்ணப்பம்செய்வதற்குபதிலாக குறிப்பிட்ட தளத்திற்கு நம்மை மடைமாற்றம்செய்து அங்குசென்று விண்ணப்பிக்குமாறுசெய்திடுகின்றது

லினக்ஸின் கோப்பமைவைபற்றி தெரிந்துகொள்வோம்

துவக்கத்தில் யுனிக்ஸ் எனும் இயக்க-முறைமையில் பயன்படுத்தப்பட்டுவந்த MINIX எனும் கோப்பமைவே அனைவராலும் பயன்படுத்தப்பட்டது ஆயினும் இது அப்போது இலவசமாகவோ திறமூலமென்பொருளாகவோ வழங்கப்படவில்லை அதற்குபதிலாக இது69 டாலர் விலையில் பயன்படுத்தஅனுமதிக்கப்பட்டுவந்தது இதில் கோப்பின் பெயர் அதிகபட்சம் 14எழுத்துகளும் தேக்கும்திறனாக 64எம்பிஅளவில் மட்டுமே இருந்துவந்தது
பின்னர் லினக்ஸ் இயக்கமுறைமை புழக்கத்திற்கு வந்தபோது இதன் கொடையாளர் டோர்வால்டு என்பவர் 255 எழுத்துகளை கையாளும் திறனுடனும் 2ஜிபி தேக்கும்திறனுடனும் ext எனும் கோப்பமைவை இந்த கோப்பினை உருவாக்குதல்,அனுகுதல், மாறுதல்செய்தல் போன்ற இன்றைய நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக உருவாக்கப்பட்டு பொதுமக்களின் புழக்கத்திற்கு விடபட்டது
இது பின்னர்ext 2 எனும் கோப்பமைவாக மேம்படுத்தப்பட்டு தற்போதும் நாம் பயன்படுத்திடும் யூஎஸ்பியில் பயன்படுத்திடும் வண்ணம் அறிமுகபடுத்தப்பட்டது இதனுடைய தேக்கும்திறன் டெர்ராபைட்டாக உயர்ந்தாலும்அவ்வப்போது அழிந்துபோதல், மின்சாரம் இல்லாது போனால் தரவுகள் இழந்துவிடுதல் ,தரவுகள் துண்டுதுண்டாக பிரிந்து சிதறிகிடத்தல் போன்ற சிரமங்கள் இந்த வகையில் இருந்துவருகின்றன
அதன்பிறகு FAT, FAT32, HFS போன்ற கோப்பமைவுகளுக்கு சமமான ext 3எனும் கோப்பமைவு லினக்ஸின் கெர்னல்2.4.5 இல் அறிமுகபட்டத்த பட்டது இது 32-bit ,அளவும்குறைந்தபட்சம் 2 TiB முதல் அதிகபட்சம் 16 TiB கோப்பளவை கையாளும் திறன் கொண்டதாக விளங்குகின்றது இது journal,ordered, writeback ஆகியமூன்று நிலைகளில் செயல்படுத்தபட்டுவருகின்றது
தற்போது நம்முடைய புழக்கத்தில் உள்ள ext 4எனும் கோப்பமைவுலினக்ஸின் கெர்னல்2.6.28 இல் அடுத்ததலைமுறை கோப்பமைவாக வெளியிடபட்டது மிகமேம்பட்டதிறனுடனும் தரவுகள் சிதறி கிடப்பதை தவிர்த்திடும் தன்மையும்கொண்டது தானாகவே ext 3எனும் கோப்பமைவ தன்மயமாக்குமதிறன்மிக்கது இது 48-bit அளவும்அதிகபட்சம் 50 TiB வரை ஒருசிலசமயங்களில் 100 TiB வரை தேக்கும்திறன்கொண்டதாக விளங்குகின்றது பொதுவாக ext 2 அல்லது ext 3 கோப்பமைவானது இணையத்தில் நேரடியாக சிதறிகிடந்திடும் தரவுகளை ஒருங்கிணைப்பு செய்திடாது ஆனால் ext 4சிதறி கிடந்திடும் தரவுகளை மிகஎளிதாக ஒருங்கிணைப்பு செய்திடும்
இந்த ext கோப்பமைவுபோன்றே XFSஎனும்கோப்பமைவும் 32பிட் அளவுகையாளும்திறனுடன் பயன்படுத்துபட்டுவந்தது ரெட்ஹெட் லினக்ஸ் இந்த XFS கோப்பமைவிலேயே இயல்பு-நிலையில் செயல்படுமாறு வெளியிடபட்டுவருகின்து இது 50 TiB தேக்கும் திறன்மிக்கதாக இருந்துவருகின்றது
அதற்கடுத்ததாக ZFS எனும் கோப்பமைவு 1 ட்ரில்லியன் கிகாபைட் தேக்கிடும்திறனுடன் அடுத்ததலைமுறை கோப்பமைவாக ext 4எனும் கோப்பமைவை போன்று வெளியிடப்-பட்டுள்ளது
Btrfsஎன சுருக்கமாக அழைக்கும் B-Tree எனும்கோப்பமைவில் வெளியிடபட்டுள்ளது ஒற்றையான வன்தட்டுகள் முதல் பல்லடுக்கு வன்தட்டுகள் வரை பயன்படுத்தி கொள்வதற்கேற்ப இது கட்டமைக்கப்பட்டுளளது

நிறுவனத்தின் வளங்களை நிருவகிப்பதற்கான கட்டற்ற மென்பொருட்கள்

வியாபார நிறுவனங்களின் சரக்கிருப்பைகையாளுதல், நிதிமேலாண்மை,கணக்குபதிவியல் உற்பத்தி பொருட்களுக்கான சரியான விலை நிர்ணயம் செய்தல்,பணியாளர்களின் சம்பள நடவடிக்கைகளை கையாளுதல் போன்ற ஒரு நிறுவனத்தின் பல்வேறு வளங்களை நிருவகிப்-பதற்காக நிதிவளங்களை திட்டமிடுதல் அமைவானது(Enterprise Resource Planning(ERP) system) மிகமுக்கியபங்கு வகிக்கின்றது அவ்வாறான அமைவினை கையாளுவதற்காக பெரிய பெரிய ஜாம்பவான்களான ஆரக்கிள், ஸேப், மைக்ரோசாப்ட் டைனமிக் போன்றவை உள்ளன ஆனால் அவ்வாறான ஜாம்பவான்களை பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனில் நாம் அதிகம்செலவிட வேண்டியிருக்கும் அதனால் இவைகளை பெரிய பெரிய நிறுவனங்களால் பயன்படுத்தி கொள்ளமுடியும் ஆனால் சின்னஞ்சிறிய நிறுவனங்களும் நடுத்தர நிறுவனங்களும் இந்த (ERP) ஐ கனவில்கூட காணமுடியாத உயரத்தில் உள்ளன இவ்வாறான நிலையில் கைகொடுக்க வருபவைதான் கட்டற்ற அல்லது திறமூல ERP பயன்பாடுகள் இவை இணைய பயன்பாடுகளாகவே நமக்கு உதவத்தயாராக உள்ளன. கட்டுபடியாககூடிய கட்டணமுதல் கட்டணமற்றவைவரை யுள்ள இவைகளுள் நம்முடைய தேவைகேற்ற மிகவும் பொருத்தமானதை நாம் பயன்படுத்திக் கொள்ளமுடியும்
1.Adempiereஎன்பதைசிறுநிறுவனங்கள் முதல் நடுத்தர நிறுவனங்களவரை பயன்படுத்தி கொள்ளமுடியும் இது SupplyChain Management (SCM )எனும் தொடர்சங்கிலிவழங்கல் Customer Relationship Management (CRM) எனும் வாடிக்கையாளர் தொடர்நிருவாகும் போன்றவைகளையும் தன்னகத்தே கொண்டதாகும் இது மூலப்பொருட்களின் கொள்முதல் முடிவுப்பொருட்களின் விற்பணை வரையிலும் சரக்கிருப்பை கையாளுதல்,கணக்குபதிவியல் நடவடிக்கை விற்பணை முனைமம்(Point of Sales),பணியாளர் நிருவாகம் பணியாளர்களின் சம்பளநிருவாகம் போன்ற அனைத்தையும் கையாளும் திறன்மிக்கது இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் கணினிமட்டுமல்லாது கைபேசி மடிக்கணினி ஆகியவற்றிலும் செயல்படும் திறன்கொண்டது மேலும் இது பலதளங்களிலும் ஜாவாவாவின்அடிப்படையில் செயல்படும் திறன்மிக்கது
2.Apache OFBiz என்பது நடுத்தர பெரியநிறுவனங்களுக்கு பொருத்தமானது விற்பணை, சரக்கிருப்பை கையாளுதல்,கணக்குபதிவியல் நடவடிக்கை விற்பணைமுனைமம், பணியாளர்நிருவாகம் பணியாளர்களின் சம்பளநிருவாகம், CRM போன்றவைமட்டுமல்லாது இணையவியாபாரத்திலும் நம்மை கொடிகட்டி பறக்கசெய்யஉதவுவதாகும் இது Apache 2.0எனும்அனுமதியின்அடிப்படையில் கிடைக்கின்றது
3.Dolibarr என்பதைசிறுநிறுவனங்கள் முதல் நடுத்தர நிறுவனங்களவரை பயன்படுத்தி கொள்ளமுடியும் விற்பனைமுனைமம்,பொருட்களின் விலைபட்டியலை தேடிபிடித்தல் ஒப்பந்தகங்களை கையாளுதல் சரக்கிருப்பை கையாளுதுல் விற்பணை உத்திரவுகளை கையாளுதல் விற்பணை கொள்முதல் ஆவணங்களின் அடிப்படையிலான பணபட்டு-வாடாக்களை கையாளுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு உதவுகின்றது இதுGPLv3அல்லது அதற்கு பிந்தைய அனுமதியின் அடிப்படையில் கிடைக்கின்றது
4. ERPNext என்பது நடுத்தர பெரியநிறுவனங்களுக்கு பொருத்தமானது இது பயன்படுத்த எளியது ஆயினும் இது விற்பணை ,சரக்கிருப்பை கையாளுதல்,கணக்குபதிவியல் நடவடிக்கை விற்பணைமுனைமம், பணியாளர்நிருவாகம் பணியாளர்களின் சம்பளநிருவாகம், CRM போன்றவைகளை கையாளஉதவுகின்றது
5. Metasfresh என்பது இது தனியொருநபர்பயன்படுத்தி கொள்வதுமுதல் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்திகொள்வது வரை அவ்வாறே கட்டணமேஇல்லாமல்அல்லது கட்டணத்துடன் மேககணினி பதிப்பாக GPLv3எனும்அனுமதியின்அடிப்படையில் கிடைக்கின்றது
6. Odoo என்பது செயல்திட்டமேலாண்மைமுதல் பட்டியில் தயார்செய்தல் கணக்குபதிவியல் சரக்கிருப்பை கையாளுதல் ,உற்பத்தி மேலாண்மை, கொள்முதல் மேலாண்மை போன்ற அனைத்தும் ஒருங்கிணைந்த கட்டற்ற பயன்பாடாகும் இது ஒருஇணையத்தின் அடிப்படை-யிலான பயன்பாட்டுக்கருவியாக விளங்குகின்றது இது LGPLv3 எனும் அனுமதியின் அடிப்படையில் கிடைக்கின்றது
7.WebERP எனும் இணையத்தின் அடிப்படையிலான கட்டற்றபயன்பாடானது மொத்த விற்பணை சில்லறை விற்பணை உற்பத்தியாளர்களுக்கு உதவுவது இணைய வணிகம் விற்பணைமுனைமம்ஆகிய பல்வேறு பணிகளையும் கையாளும் திறன்கொண்டது இது விரைவான எந்தவொருதளத்திலும் செயல்படும் திறன்கொண்டது இதுGPLv2 எனும் அனுமதியின் அடிப்படையில் கிடைக்கின்றது
8. Opentaps எனும் கட்டற்றபயனபாடு பெரிய நிறுவனங்களுக்கானது கொள்முதல் ,உற்பத்தி, சரக்கிருப்பை கையாளுதல் நிதிமேலாண்மை போன்ற பல்வேறு நடவடி்ககைகளுக்கும் பயன்படுத்த தயாராக உள்ளது இதுGPLv3எனும்அனுமதியின்அடிப்படையில் கிடைக்கின்றது

Raspberry Piஐ பயன்படுத்தி Raspberryஇன் இயக்கமுறைமையில்Hello world எனும் முதன்முதல்நிரல்தொடரை வெவ்வோறுகணினிமொழிகளில் எவ்வாறு உருவாக்குவது

எந்தவொரு கணினிமொழியையும் பயிலுவதற்கு முயலும் புதியவர்களின் அல்லது துவக்க நிலையாளர்களின் முதன்முதல்நிரல்தொடரானது Hello world என்பதாகவே இருக்கும் இங்கு Raspberry Piஐ பயன்படுத்தி Raspberryஇன் இயக்கமுறைமையில் வேறு எந்தவொரு மென்பொருளையும் நிறுவுகை செய்திடாமலேயே இந்த Hello world எனும் நம்முடைய முதன் முதல் நிரல்தொடரை ஒவ்வொரு கணினிமொழியிலும் எவ்வாறு எழுதுவதுஎன இப்போது காண்போம்
1. Scratchஎன்பது ஒருவரைகலைதொகுப்பின்அடிப்படையிலான நிரல்தொடர்சூழல் கணினி மொழியாகும் இது கணினிமொழியின் அடிப்படைஇலக்கணங்களை ஆழ்ந்து கற்காத தட்டச்சுசெய்யத்தெரியாத சிறுவர்கள் கூட மிகஎளியதாகநிரல்தொடரை எழுதுவதற்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்தகணினிமொழியாகும் முதலில் இந்த Raspberry Pi திரையிலுள்ள முதன்மை பட்டியிலில் Scratch 2என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் துனைப்பட்டியலில் Looksஎன்பதைதெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் திரையின்say Hello!என்ற தொகுப்பினை பிடித்து இழுத்துவந்து வலதுபுறமுள்ள காலிபணியகத்தில் விட்டிடுக அதன்பின்னர் உரையைHello world.என்றவாறு மாற்றி-யமைத்திடுக பின்னர் இந்த தொகுப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அதனுடைய நிரல்தொடரைசெயல்படச்செய்திடுக உடன் நம்முடைய முதன்முதல் நிரல்தொடரின் விளைவு பின்வருமாறு திரையில் தோன்றிடும்


2.Python என்பது மிகவும் திறன்மிகுந்ததொழில்முறையாளர்கள் மட்டுமல்லாது புதியவர்களும் விளையாட்டாக கற்றுகொள்ளமுடிந்த ஒருசிறந்த கணினிமொழியாகும் எளிய ஆங்கில சொற்களை கொண்டு பாமரனும் கணினிமொழியை விரைவாக கற்கவேண்டும்என்பதேஇந்த கணினிமொழி உருவாக்கியதன் அடிப்படைநோக்கமாகும் முதலில் இந்த Raspberry Pi திரையிலுள்ள முதன்மை பட்டியிலில் Thonny Python IDEஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் திரையில்print(“Hello world”)என்ற கட்டளைவரியை உள்ளீடுசெய்திடுக அதன்பின்னர் hello3.py.எனும் கோப்பாக இந்த நிரல்தொடரை சேமித்திடுக பின்னர் Runஎனும்பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்முடைய முதன்முதல் நிரல்தொடரின் விளைவு பின்வருமாறு திரையில் தோன்றிடும்


3.RubySonic Pi என்பதுமற்றொரு மிகவும் திறன்மிகுந்த கணினிமொழியாகும் இது புதியவர்களின் நல்ல தோழனாக நண்பனாக விளங்குகின்றது முதலில் இந்த Raspberry Pi திரையிலுள்ள முதன்மை பட்டியிலில் Sonic Piஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் திரையில்puts”Hello world” என்ற கட்டளைவரியை உள்ளீடுசெய்திடுக அதன்பின்னர் Runஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்முடைய முதன்முதல் நிரல்தொடரின் விளைவு பின்வருமாறு திரையில் தோன்றிடும்

அதற்குபதிலாகமுதலில் இந்த Raspberry Pi திரையிலுள்ள முதன்மை பட்டியிலில் Text Editor என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் திரையில்print(“Hello world”)என்ற கட்டளை வரியை உள்ளீடுசெய்திடுக அதன்பின்னர்hello.rb.எனும் கோப்பாக இந்த நிரல்-தொடரை முதன்மை கோப்பகத்தில் சேமித்திடுக பின்னர் முதன்மை பட்டியிலில் Terminal என்பதை தெரிவு செய்து சொடுக்குக அதன்பின்னர்விரியும் ruby hello.rbஎனும் கட்டளை வரியை உள்ளீடு செய்து செயல்படுத்திடுக உடன் நம்முடைய முதன்முதல் நிரல்தொடரின் விளைவு பின்வருமாறு திரையில் தோன்றிடும்


4. JavaScriptஎன்பது இணைய உலாவிகளையும் இணைய பயன்பாடுகளையும் உருவாக்குவதில் முதன்மைஇடத்தை வகிக்கின்றது இந்த Raspberry Pi திரையிலுள்ள முதன்மை பட்டியிலில் Chromium Web Browserஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் திரையின் காலியான பகுதியில் இடம்சுட்டியைவைத்து சுட்டியின்வலதுபுற பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Inspectஎன்ற வாய்ப்பைதெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் திரையில்Consoleஎனும் தாவிபொத்தானின் திரையை தோன்றச் செய்திடுக அதில்console.log(“Hello world”)என்ற குறிமுறைவரிகளை உள்ளீடு செய்து கொண்டுவிசைப்பலகையில்Enterஎனும் உள்ளீட்டு விசையைஅழுத்துக உடன் நம்முடைய முதன்முதல் நிரல்தொடரின் விளைவு பின்வருமாறு திரையில் தோன்றிடும்

5.Bash(Bourne Again Shell) என்பது இயல்புநிலையில் யூனிக்ஸ்செல்லின் பெரும்பாலான லினக்ஸ் வழங்குநர்களின் கட்டளைவரிகணினிமொழியாகும் இதனுடைய கட்டளை வரிகளை நேரடியாக ஒரு சாளரமுனைமத்தில் உள்ளீடுசெய்திடலாம்அல்லது கோப்பாக சேமித்து செயல்படுத்திடலாம் முதலில் இந்த Raspberry Pi திரையிலுள்ள முதன்மை பட்டியிலில் Text Editor என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் திரையில் echo”Hello world”என்ற கட்டளைவரியை உள்ளீடுசெய்திடுக அதன் பின்னர்hello.sh.எனும் கோப்பாக இந்த நிரல்தொடரை முதன்மை கோப்பகத்தில் சேமித்திடுக இந்த Raspberry Pi திரையிலுள்ள முதன்மை பட்டியிலில் Terminalஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் திரையின் சாளரமுனைமத்தில் bashhello.shஎன்ற கட்டளைவரியை உள்ளீடு செய்து கொண்டுஉள்ளீட்டு விசையைஅழுத்துக உடன் நம்முடைய முதன்முதல் நிரல்தொடரின் விளைவு பின்வருமாறு திரையில் தோன்றிடும்


6 Javaisஎன்பது மிகவும் பிரபலமான இணைய பயன்பாடுகளுக்கான கணினி மொழியாகும் முதலில் இந்த Raspberry Pi திரையிலுள்ள முதன்மை பட்டியிலில் Text Editorஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் திரையில்
publicclassHello{
publicstaticvoidmain(String[]args){
System.out.println(“Hello world”);
}
}
என்றவாறு குறிமுறைவரிகளை தவறில்லாமல் உள்ளீடுசெய்திடுக அதன்பின்னர்Hello.javaஎனும் கோப்பாக இந்த குறிமுறைவரிகளை முதன்மை கோப்பகத்தில் சேமித்திடுக பின்னர் இந்த Raspberry Pi திரையிலுள்ள முதன்மை பட்டியிலில் Terminalஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர்விரியும் திரையின் சாளரமுனைமத்தில்
javac Hello.java
java Hello
என்றவாறு கட்டளைவரிகளை உள்ளீடுசெய்துகொண்டுஉள்ளீட்டு விசையைஅழுத்துக உடன் நம்முடைய முதன்முதல் நிரல்தொடரின் விளைவு பின்வருமாறு திரையில் தோன்றிடும்

7. Cஎன்பது மிகவும்அடிப்படையான கணினிமொழியை பற்றி அறியதுடிக்கும் புதியவர்களுக்கான அல்லது துவக்கநிலையாளர்களுக்கான கணினிமொழியாகும் நவீனமாக நாம் பயன்படுத்தி கொண்டுவரும் நம்முடைய அனைத்து கணினிமொழிகளும் இந்த சி மொழியின் வாயிலாகவே உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டவையாகும் முதலில் இந்த Raspberry Pi திரையிலுள்ள முதன்மை பட்டியிலில் Text Editorஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் திரையில்
#include
int main() {
printf(“Hello world\n”);
}
என்றவாறு குறிமுறைவரிகளை தவறில்லாமல் உள்ளீடுசெய்திடுக அதன்பின்னர்hello.cஎனும் கோப்பாக இந்த குறிமுறைவரிகளை முதன்மை கோப்பகத்தில் சேமித்திடுக பின்னர்இந்த Raspberry Pi திரையிலுள்ள முதன்மை பட்டியிலில் Terminalஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர்விரியும் திரையின் சாளரமுனைமத்தில்
gcc-ohello hello.c
./hello
என்றவாறு கட்டளைவரிகளை உள்ளீடுசெய்துகொண்டுஉள்ளீட்டு விசையைஅழுத்துக உடன் நம்முடைய முதன்முதல் நிரல்தொடரின் விளைவு பின்வருமாறு திரையில் தோன்றிடும்

8. C++என்பது மற்றொரு மிகவும்அடிப்படையான கணினிமொழியை பற்றி அறியமுயலும் புதியவர்களுக்கா அல்லது துவக்கநிலையாளர்களுக்கான கணினிமொழியாகும் இது சி எனும் கணினிமொழியின் இளைய சகோதரமொழியாகும் இதுமிகமேம்பட்ட அனைத்து கணினிமொழிகளின் வசதிவாய்ப்புகளையும் தன்னகத்தே கொண்டதாகும் நாம் பயன்-படுத்திடும் அனைத்து விளையாட்டு பயன்பாடுகளும் இந்த சி++மொழியிலேயே உருவாக்கப்-பட்டவையாகும் முதலில்இந்த Raspberry Pi திரையிலுள்ள முதன்மை பட்டியிலில் Text Editor என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் திரையில்
#include
using namespace std;
int main() {
cout << "Hello world\n";
}
என்றவாறு குறிமுறைவரிகளை தவறில்லாமலஉள்ளீடுசெய்திடுக அதன்பின்னர்hello.cppஎனும் கோப்பாக இந்த குறிமுறைவரிகளை முதன்மை கோப்பகத்தில் சேமித்திடுக இந்த Raspberry Pi திரையிலுள்ள முதன்மை பட்டியிலில் Terminalஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் திரையின் சாளரமுனைமத்தில்
g++-ohellopp hello.cpp
./hellocpp
என்றவாறு கட்டளைவரிகளை உள்ளீடுசெய்துகொண்டுஉள்ளீட்டு விசையைஅழுத்துக உடன் நம்முடைய முதன்முதல் நிரல்தொடரின் விளைவு பின்வருமாறு திரையில் தோன்றிடும்

9.Perlஎன்பதுமிகசமீபத்திய மிகவும் பிரபலமானகணினிமொழியாகும் இந்த Raspberry Pi திரையிலுள்ள முதன்மை பட்டியிலில் Text Editorஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் திரையில் print”Hello world\n” என்றவாறு கட்டளைவயை உள்ளீடுசெய்திடுக அதன்பின்னர்hello.plஎனும் கோப்பாக இந்த நிரல்தொடரை முதன்மை கோப்பகத்தில் சேமித்திடுக பின்னர்இந்த Raspberry Pi திரையிலுள்ள முதன்மை பட்டியிலில் Terminalஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர்விரியும் திரையின் சாளரமுனைமத்தில் perlhello.pl என்றவாறு கட்டளைவரியை உள்ளீடுசெய்துகொண்டுஉள்ளீட்டு விசையைஅழுத்துக உடன் நம்முடைய முதன்முதல் நிரல்தொடரின் விளைவு பின்வருமாறு திரையில் தோன்றிடும்

மேககணினிசேவையை பெறுபவர்கள் தவிர்க்கவேண்டிய தவறுகள்

சொந்தமான கணினிவளங்கள் இல்லாமல் தங்களுக்குதேவையான கணினியின் பணிகளை செய்துமுடிப்பதற்காக இந்த மேககணினி சேவையாளர்கள் மிகமுக்கிய பங்குவகிக்கின்றன அதிலும்ஒவ்வொருசேவைக்கும் வெவ்வேறுமேககணினி சேவையாளரை பயன்படுத்தி கொள்ளும்போது தேவைப்பட்டால் கூடுதலாக சுறுசுறுப்பான உயர்ந்த ஆற்றலுடன் கூடிய மேககணியின் சேவையை பெறுவதற்காக தவிர்க்கவேண்டியதவறுகள் பின்வருமாறு
1.முதலாவதாக SaaS , IaaSபோன்ற பயன்பாடுகளை வழங்கிடும் போட்டியாளர்களின் சேவையானது நம்முடைய தேவையை நிறைவுசெய்வதாக உள்ளதாவென சரிபார்த்து பெற்றிடுக அதாவது முழுமையான சேவையை ஒருசேவையாளரே வழங்கதயாராக இருக்கும்போது ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு சேவையாளர்என குழப்பவேண்டாம்
2. அடுத்ததாக Load balancing ,Health monitoring, Latency,Code deployment,Securityபோன்றவைகளை முதலில் வடிவமைத்துகொண்டு அதற்கேற்ற மேககணினிசேவையைபெற்றிடுக
3.மூன்றாவதாக மேககணினியின் சேவையை பெறுவதற்கானongoing management cost, maintenance costஆகிய செலவினங்களை கவணத்தில் கொள்க
4.நான்காவதாக தற்போதுஉள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் அல்லது அரண்கள் அப்படியே பல்லடுக்கு மேககணினிசேவையிலும் தொடர்கின்றதா என்பதை உறுதிபடுத்தி கொள்க
5.ஐந்தாவதாக மேககணினிசேவையாளர் வேறு ஒருங்கிணைந்த மேககணினிசேவையாளர் வேறுஎன்ற அடிப்படையை புரிந்து கொண்டு அதற்கேற்ப நம்முடைய தேவைக்கேற்ற மிகவும் பொருத்தமான மேககணினிசேவையாளரை பயன்படுத்தி கொள்க

கொள்கலன் (Container)கணினி ,மெய்நிகர்(Virtual)கணினி எவ்வாறுவேறுபட்டது

மெய்யான கணினியிலுள்ள அனைத்து உறுப்புகளும் செயல்களும் இந்த மெய்நிகர்-கணினியிலும் உள்ளனஎன்பதே ஒரு சாதாரணமனிதனின் புரிதலாகும்
1பயனாளர்கள் இருந்தவிடத்திலிருந்தவாறு பயன்பாடுகளை நிறுவுகை செய்திடாமலேயே செயல்படுத்தி பயன்பெறுவது Application virtualisationஆகும்
2 பயனாளர் விரும்பும் இயக்கமுறைமையை நிறுவுகை செய்து வழக்கமாக பயன்படுத்துவதை போன்று இருந்தவிடத்திலிருந்தவாறு பயன்படுத்தி கொள்வது Desktop virtualisation ஆகும்
3பல்வேறு சாதனங்களின் வாயிலாக இருந்தவிடத்திலிருந்தவாறு தாம் விரும்பும் மெய்நிகர்கணியின் உள்நுழைவு-செய்து பயன்பெறுவது servirtualisationஆகும்
4 தரவுகளை சேமிப்பதற்காகமட்டும் பயன்படுத்துவது Storage virtualisationஆகும்
5.ஒரு செயலிக்குள் மெய்நிகரான பல்வேறுசெயலிகளை செயல்படுத்தி மேககணினிசேவையை பெறுவது Hardwarevirtualisationஆகும்
என்றவாறு மெய்நிகர்கணினிகள் பல்வேறுவகைகளில் புழக்கத்தில் உள்ளன ஒரு சேவையாளர் கணினியில் hypervisorஎனும்மென்பொருளானது இவ்வாறான தொரு மெய்நிகர் கணினியின் சேவையை உருவாக்குகின்றது இதுவே இந்த மெய்நிகர்கணினியின் பொறுப்பாளராக விளங்குகின்றது
1 நேரடியாகஒவ்வொரு மெய்நிகர்கணினிக்குமான இயக்கமுறைமையை தனித்தனியாக செயல்படுத்திபயன்படுவது
2பொதுவான இயக்கமுறைமையின்மீது பயனாளர்களின் இயக்கமுறைமை செயல்படுசெய்திடுவது
ஆகிய இரண்டுவகைகளாக இதனுடைய சேவைவெவ்வேறாக உள்ளன
அதற்குமாற்றாக கொள்கலன்(container)கணினி என்பது ஒரு சேவையாளர்கணினியில் பொதுவான ஒரு இயக்கமுறைமைசெயல்படுத்தி அதன்மீது Docker Engine எனும் கொள்கலன் கணினியின் மென்பொருளை செயல்படசெய்து அந்த தளத்தின்மீது பல்வேறு பயனாளர்களின் பயன்பாடுகளை தனித்தனியாக தங்களுடைய இயக்கமுறைமையை நிறுவுகைசெய்து செயல்படச்செய்யாமலேயே கணினியின் சேவையை பெறுவதாகும் மெய்நிகர்கணினிசேவைஎன்பது சேவையாளர்கணினியில் hypervisorஎனும்மெய்நிகர் கணினிக்கான மென்பொருள் செயல்படுத்தப்பட்டு அதன்மீது பயனாளர்கள் தம்முடைய வெவ்வேறு இயக்கமுறைமைகளை செயல்படுத்தி தங்களுடைய பயன்பாடுகளை இயக்கி பயன்பெறுவதாகும் அதனால் தனியாக தத்தமது இயக்கமுறைமைகளை நிறுவுகைசெய்து செயல்படுத்தாமல் நேரடியாக பயனாளர்கள் தங்களுடைய பயன்பாடுகளை செயல்படுத்தி பயன்பெறும் கொள்கலன் (container)கணினியே சிறந்ததாகும்

Previous Older Entries