Rஎனும் கணினி மொழி

Rஎன்பது மிக மேம்பட்ட திறனுடைய கணினி மொழியாகும் இது எந்த ஒரு சூழலிலும் ஒருங்கிணைந்து செயல்படும் வல்லமைகொண்டதாகும் மிக முக்கியமாக புள்ளியியலுடன் வரைகலையும் சேர்ந்த ஆய்விற்கு மிகவும் பயனுள்ளதாக விளங்குகின்றது இது ஒரு எளிய அதேநேரத்தில் மிகசக்தி வாய்ந்த செயலாக்க கணினிமொழியாகும் இது புள்ளியியலின் தொகுதியான தரவுகளை வரைகலையின் வாயிலாக வெளியீடு செய்திடும் திறன்மிக்கதாகும்
>x x # print the value stored in x
இங்கு : எனும் முக்காற்புள்ளி 11 முதல் 20 வரையுள்ள தொடர்வரிசையாக xஎனும் பெயரில் எண்களை தேக்கிவைக்கின்றது
> z , – seq(from=111, to=30, by=3)
>z
இதனுடைய வெளியீடானது [1] 11 14 17 20 23 26 29 என்றவாறு தொடர்வரிசையாக இருக்கும்
> rnum rnum # print the value of rnum
இந்த கட்டளைவரிகளின் வாயிலாக rஎனும் கணினிமொழியில் 11 இற்கும் 15 இற்கும் இடையில் ஏதேனும் ஒரு எண்ணினை உருவாக்கு என்றவுடன் இதன் வெளியீடு [1] 14.75596 என்றவாறு இருக்கும்
> fib fib[1] fib[2] for(idx in 3:13) {
+ fib[idx] fib
எனும் வெக்டார் அணியினுடைய நிரல்தொடரின் வெளியீடு [output] 0 1 1 2 3 5 8 13 21 34 55 89 144என்றவாறு இருக்கும் இதில் தற்போதைய எண்ணானது அதற்கு முந்தைய எண்ணினை கூட்டி இதற்கு அடுத்த எண்ணாக தொடர்டச்சியாக 13 எண்களை வெளியிடுகின்றது
M d d # for displaying the value of d
இந்த கட்டளைவரித்தொடரானது ஏற்கனவே அட்டவணையாக உள்ள தரவுகளை கொண்டு Pieஎனும் வரைபடத்தை உருவாக்குகின்றது
> install.package(“plotrix”)
> library(plotrix)
>pie3D(d$v2, labels =paste(d$v1,lab,, sep = “ “ ) , main = “ Responses” , explode =0.2
இந்த கட்டளைவரித்தொடரானது இதே Pieஎனும் வரைபடத்தை முப்பரிமான வரைபடமாக காண்பிக்கின்றது
இவ்வாறான புள்ளியியல் பொருளாதாரம் தொடர்புடைய மிகச்சிக்கலான செயல்களுக்கு மிக எளிதான தீர்வாக அமைகின்ற இந்த R எனும் கணினி மொழி.யை பயன்படுத்தி கொள்க

ஆண்ட்ராய்டு பயன்படும் செல்லிடத்து பேசியில் தொடுதிரைக்கு பதிலாக வேறு வகையில் செயல்படுத்திடமுடியுமா

ஆம் முடியும் பொதுவாக இந்த ஆண்ட்ராய்டு இயக்கமுறைமைகளில் தொடுதிரை இல்லாமல் வேறுவகையில் செயல்படுத்திடுவதற்கான வசதியும் கட்டமைக்கப்பட்டே வெளியிடப்படுகின்றன ஆயினும் இந்த வசதியானது சாதனத்திற்கு ஏற்ப ஆண்ட்ராய்டு இயக்கமுறைமை பதிப்பிற்கு ஏற்ப சிறிதளவு மாறுபடும் இங்கு சாம்சங் கேலக்ஸி எனும் செல்லிடத்து பேசியில் எவ்வாறு செயல்படுத்துவது என குறிப்பிடப்பட்டுள்ளது கைபேசியில் அல்லது திறன்பேசியில் பற்சக்கரம் போன்ற Settings என்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பிறகு Accessibility. என்பதையும் அதற்கடுத்ததாக Dexterity என்பதையும் தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Assistant menu.எனும் தாவியின் திரைக்குசெல்க அதில் பல்வேறு பட்டியல்கள் இருக்கும் முதலில் இதனை திரையின் இடதுபுறம் அல்லது வலதுபுறம் எவ்விடத்தில் அமைய வேண்டும் என முடிவுசெய்து கொள்க தொடர்ந்து Edit எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் தேவையானவாறு மாறுதல்கள் செய்து கொண்டு Press and hold delay எனும் வாய்ப்பினை மாற்றி அமைத்துகொண்டு இந்த அமைவை சேமித்து கொள்க இதனை தொடர்ந்து செல்லிடத்து பேசியை கட்டளைபட்டியின் வாயிலாக இயக்கமுடியும்

ஒரு கணசதுரஅடி கடல்நீரில் வாழும் உயிர்கள்

நாம் வாழும் இந்த நிலத்தின்மீது ஒரு சதுர அடி பகுதியில் என்ன இருக்கும் என வினவினால் அனைவரும் உடனடியாக ஒரு சதுர அடி மண் தான் இருக்கும் என்றும் கடலில் ஒரு கண சதுர அடி உப்புத்தண்ணீர்தான் இருக்கும் என்றும் பதில் கூறிவிடுவார்கள் .கடல்நீரெனில் ஒரு கண சதுர் அடி கடல்நீரில் இது ஒரு தவறான விடையாகும் எனெனில் ஒரு கணசதுர அடி அளவு உள்ளகடல்நீரில் ஆயிரகணக்கானஉயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன என Biocubes Life in One Cubic Foot எனும் இணைய தளம் நமக்கு புதிய தகவல்களை வழங்குகின்றது இதனுடைய முகவரி http://ocean.si.edu/ocean-news/biocubes-life-one-cubic-foot ஆகும் இந்த தளத்திற்குள் உள்நுழைவுசெய்தவுடன் இரண்டுநிமிட கானொளி காட்சி படத்தின் வாயிலாக மிகஆச்சரியப்படும் பல்வேறு தகவல்கள் நமக்கு வழங்கப் படுகின்றன இதனுடைய வலதுபுற பகுதியில் கடலின் ஒரு biocube ஆனது எவ்வாறு இருக்கும் என காட்சியாக காண்பிக்கின்றது இந்த ஒரு கணசதுர அடி காட்சியானது mussel beds, rivers, trees, fields, coral reefs,ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்ள சிறந்த கருவியாக அமைகின்றது நாம் National Geographic எனும் அறிவியல் செய்திகளை காட்சியாக தொலைகாட்சியில் கண்ணால் கண்டிருப்போம் அதனுடைய தொடர்ச்சியாக இந்த இணைய தளம் அமைந்துள்ளது
6

எம்எஸ்வேர்டு எனும் பயன்பாட்டில் தானியங்கியாக உள்ளடக்க அட்டவணையை உருவாக்கிடலாம்

எம்எஸ்வேர்டில் நீண்ட ஆவணங்கள் அறிக்கைகள் போன்றவைகளை உருவாக்கிடும்போது அவைகளை குறுந்தலைப்புகளுடன் உருவாக்கியிருப்போம் அதனை தொடர்ந்து இந்த வேர்டின் ஆவணத்தில் குறிப்பிட்ட தலைப்பு தொடர்பான விவரங்கள் எந்த பக்கத்தில் உள்ளது என தேடிகண்டுபிடிப்பது என்பது மிகப்பெரிய தலைவலி பிடித்த பணியாகி விடுகின்றது இவ்வாறான நிலையில் நம்முடைய ஆவணத்தினை பார்வையிடுபவர்கள் எளிதாக குறிப்பிட்ட தலைப்பு தொடர்பான விவரங்கள் உள்ள பகுதியை மட்டும் அனுகிடவும் அதனுடைய வரிசை எண் என்ன என அறிந்து கொள்வதற்கும் ஆவணத்தின் முகப்பில் ஒரு அட்டவணையாக உருவாக்கி கொண்டால் வசதியாக இருக்கும் இதனை எளிதாக எம்எஸ் வேர்டில் உருவாக்கிகொள்ளமுடியும் இதற்காக முதலில் தேவையான பகுதி எண் அதனுடைய தலைப்பு ஆகியவற்றை தெரிவுசெய்து கொண்ட பின்னர் Styles என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Heading 1, 2, 3, அல்லது 4.ஆகிய தலைப்புகளின் வாய்ப்புகளில் ஒன்றினை தெரிவுசெய்து கொள்க அதனை தொடர்ந்து இந்த உள்ளடக்கங்களின் அட்டவணை அமைய வெண்டிய காலியான இடத்தினை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் References எனும் தாவியின் திரைக்கு செல்க அங்கு Table of Contents எனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் அட்டவணையின் வகையை தெரிவுசெய்து கொள்க அதனை தொடர்ந்து tables online அல்லது create a custom one ஆகியவாய்ப்பகளில் ஒன்றினை தெரிவுசெய்து கொள்க அட என்னஆச்சரியம் அழகான இந்த ஆவணத்தின் உள்ளடக்க அட்டவணையானது நாம் தெரிவுசெய்த இடத்தில் வந்த அமர்ந்து கொண்டது அதனோடு இந்த உள்ளடக்க அட்டவணையில் குறிப்பிட்ட தலைப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் உடன் குறிப்பிட்ட தலைப்புடைய பகுதிக்கு நம்மை அழைத்து செல்லும் வசதியையும் தானாகவே உருவாக்கிகொண்டுள்ளது இந்த ஆவணத்தில் இடையிடையே பக்கங்களை உள்ளிணத்தாலும் அதனால் குறிப்பிட்ட தலைப்பின் இடஅமைவு மாறும் அந்த மாறுதல்களும் தானாகவே இந்த உள்ளடக்க அட்டவணையிலும் உடனுக்குடன் மாறிக்கொள்கின்றது

பெண்களும் அறிவியலறிஞர்களாக வளர உதவிடும் Lady Scienceஎனும் இணையதளம்

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என முற்காலத்தில் பெண்களை வீடுகளிலேயே முடக்கி போட்டார்கள் தற்போது அவர்களும் கல்வி கற்று ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் வளர்ந்து வெற்றிபெற்று வருகின்றார் அதனை தொடர்ந்து தற்போது பெண்கள் சிறந்த அறிவியலறிஞர்களாக வளருவதற்காக என http://www.ladyscience.com/ எனும் தளம் உதவதயாராக இருக்கின்றது அறிவியல் தொழில்நுட்பம் மருத்துவம் ஆகிய துறைகளில் தங்களுடைய அறிவை வளர்த்து விரிவாக்கி கொள்வதற்காக இந்த தளத்தில் உள்ளInternet Sources, Labor, Medicine, Science, Space History, Popular Culture & Literary Criticism, Feminist Scholarship,ஆகிய பல்வேறு பகுதிகள் உதவுகின்றன மேலும் புதிய கண்டுபிடிப்புகள் புதிய செய்திகள் போன்றவைகளை Blog, Pitch, Reading List, Recommendations, Anthology, The Team, Contact ஆகிய இதனுடைய பல்வேறு வகையான துனை இணைய பக்கங்களின் வாயிலாக தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளமுடியும் மேலும் இதில் ஒவ்வொரு மாதமும் வெளியிடபடும் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்வுகள் ஆகிய செய்திகளை அறிந்து கொள்ளமுடியும் அதைவிட இந்த தளத்தின் துவக்கத்திலிருந்து இதுவரையிலான முழுமையான செய்திகளை Anthology எனும் பகுதியிலுள்ள மின்னூல்களின் வாயிலாக அறிந்து கொள்ளமுடியும்
4

கணிதத்தை கற்றுக்கொடுப்பதற்கு தயாராக உள்ள Mathigon இணைய பக்கத்தை பயன்படுத்தி கொள்க

இந்த இணையதளமானது கட்டணமில்லாமல் மின்னூல்கள் ,கானொளிப்படங்கள் ,விளையாட்டுகள், குழுவிவாதங்கள் ஆகிய பல்வேறு வழிகளில் விரும்பும் மாணவர்களுக்கு எளிதாக கணிதத்தை 6-9, 10-12, Collage ஆகிய பல்வேறு நிலைகளில் வழங்குகின்றது https://mathigon.org/ எனும் முகவரியில் உள்ள இந்த இணைய பக்கத்தின் வசதியை பயன்படுத்தி கொள்வதற்காக நம்முடைய முகநூல் ,மின்னஞ்சல் ஆகிய கணக்கின் வாயிலாக பதிவுசெய்து உள்நுழைவு செய்க இந்த தளத்தில் உள்நுழைவு செய்தவுடன் முதலில் Personalisation எனும் பகுதிக்கு சென்று நம்மை பற்றிய அடிப்படை விவரங்களை உள்ளீடு செய்து கொள்க அதன்பின்னர் Expolarationஎனும் பகுதிக்கு சென்று கணினிதத்தின் அடிப்படைகளை நம்முடைய நினைவில் கொள்வதற்கான கணக்குகளுக்கு விடை கண்டுபிடித்தல் காரணங்களை கண்டுபிடித்தல் ஆகியவற்றிற்கான பல்வேறு பயிற்சிகளை பயன்படுத்தி கொள்க மேலும் Storytelling எனும் பகுதிக்கு சென்று வினாடி வினா ,புதிர்கள் , வரலாற்று புதிர் போட்டிகள் புதிர்கதைகள் ஆகியவற்றின் வாயிலாக நம்முடைய கணிதத்திறனை மேலும் வளர்த்து கொள்க இந்த தளமானது வழக்கமான arithmetic algebra ஆகியவற்றுடன் graph theory, cryptography அல்லது fractals.ஆகிய பகுதியையும் சேர்த்து இதில் இணைபவர்களுக்குஎளிதாக கணினிதத்தை ஐயம்திரிபற கற்றிட சிறந்த தளமாக விளங்குகின்றது
2

உருவப்படங்களில் தேவையான உரைகளை Snapseed எனும் கட்டற்ற பயன்பாட்டின் வாயிலாக சேர்க்கலாம்

வண்ணவண்ணமான உருவப்படங்களுடன் அதனை பற்றிய விவரங்களை கூறுவதற்கான உரைகளையும் சேர்த்து வழங்கினால் இது குறிப்பிட்ட நிகழ்விற்கான படம் என பார்வையாளர்கள் நாம் கூறவிழையும் செய்தியை எளிதாக அறிந்து கொள்வார்கள் இதற்காக முதலில் Snapseed எனும் கட்டற்ற பயன்பாட்டின் வாயிலாக தேவையான உருவப்படத்தை கணினியின் திரையில் திருத்தம் செய்திடும் நிலையில் திறந்து கொள்க பின்னர் உருவப்படத்தில் திருத்தம் செய்வதற்காக உதவும் கருவிகளில் பென்சில் போன்ற உருவப்பொத்தானாக உள்ள கருவியை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படத்தில் திருத்தம் செய்வதற்கான பட்டியானது விரியும் அதில் brand-new எனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக இந்நிலையில் உருவப்படத்தின் கீழ்பகுதியில் உரையை அமைத்திடுவதற்காக தேவையான இடத்தினை தெரிவு செய்து கொள்க அதன் பின்னர் விரியும் திரையில் பல்வேறு வகையான உரைகளின் பாவணைகளில் தேவையான பாவணையை மட்டும் தேடிபிடித்து தெரிவுசெய்து கொள்க பின்னர் அந்த படத்தினை விவரிக்கும் தேவையான உரைகளை தட்டச்சு செய்துஉள்ளீடு செய்து கொண்டு OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் palette எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்க பிறகு விரியும் திரையில் தேவையான வண்ணத்தை தெரிவுசெய்து கொள்க பின்னர் Opacity எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து இந்த உரையானது நம்முடைய உருவப்படத்தை மறைக்காதவாறும் அதன் அளவையும் சரிசெய்து அமைத்து கொள்க இறுதியாக Save எனும் உருவப் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நாம் செய்த மாறுதல்களுடன் சேமித்து கொள்க
2

Previous Older Entries