புதியவர்களுக்கு ஆண்ட்ராய்டு பயிற்சிகையேடு பகுதி-32-NotificationCompat.Builder setDefaults (int defaults)

பின்வரும் எடுத்துகாட்டில் ஆண்ட்ராய்டின் குறிப்பினை பயன்படுத்தி NotificationCompat.Builder எனும் இதனுடைய செயலிஒன்றினை காண்பிக்கின்றது இது ஆண்ட்ராய்டு 4.1இல் அறிமுகப்-படுத்தப்-பட்டுள்ளது

பின்வருவது src/com.example.notificationdemo/MainActivity.java. எனும் கோப்பின்மாறுதல்கள் செய்யப்பட்ட உள்ளடக்கமாகும் இந்தகோப்பில் ஒவ்வொரு அடிப்படைவாழ்க்கைசுழற்சி முறைகளையும் உள்ளடக்கியதாக ஆக்கிக்கொள்ளமுடியும்
package com.example.notificationdemo;
import android.os.Bundle;
import android.app.Activity;
import android.app.NotificationManager;
import android.app.PendingIntent;
import android.app.TaskStackBuilder;
import android.content.Context;
import android.content.Intent;
import android.support.v4.app.NotificationCompat;
import android.util.Log;
import android.view.View;
import android.widget.Button;
public class MainActivity extends Activity {
private NotificationManager mNotificationManager;
private int notificationID = 100;
private int numMessages = 0;
protected void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main);
Button startBtn = (Button) findViewById(R.id.start);
startBtn.setOnClickListener(new View.OnClickListener() {
public void onClick(View view) {
displayNotification();
}
});
Button cancelBtn = (Button) findViewById(R.id.cancel);
cancelBtn.setOnClickListener(new View.OnClickListener() {
public void onClick(View view) {
cancelNotification();
}
});
Button updateBtn = (Button) findViewById(R.id.update);
updateBtn.setOnClickListener(new View.OnClickListener() {
public void onClick(View view) {
updateNotification();
} });
}
protected void displayNotification() {
Log.i(“Start”, “notification”);
/* Invoking the default notification service */
NotificationCompat.Builder mBuilder =
new NotificationCompat.Builder(this);
mBuilder.setContentTitle(“New Message”);
mBuilder.setContentText(“You’ve received new message.”);
mBuilder.setTicker(“New Message Alert!”);
mBuilder.setSmallIcon(R.drawable.woman);
/* Increase notification number every time a new notification arrives */ mBuilder.setNumber(++numMessages);
/* Creates an explicit intent for an Activity in your app */
Intent resultIntent = new Intent(this, NotificationView.class);
TaskStackBuilder stackBuilder = TaskStackBuilder.create(this); stackBuilder.addParentStack(NotificationView.class);
/* Adds the Intent that starts the Activity to the top of the stack */ stackBuilder.addNextIntent(resultIntent);
PendingIntent resultPendingIntent =
stackBuilder.getPendingIntent(
0,
PendingIntent.FLAG_UPDATE_CURRENT
);
mBuilder.setContentIntent(resultPendingIntent);
mNotificationManager =
(NotificationManager) getSystemService(Context.NOTIFICATION_SERVICE);
/* notificationID allows you to update the notification later on. */ mNotificationManager.notify(notificationID, mBuilder.build());
}
protected void cancelNotification() {
Log.i(“Cancel”, “notification”);
mNotificationManager.cancel(notificationID);
}
protected void updateNotification() {
Log.i(“Update”, “notification”);
/* Invoking the default notification service */
NotificationCompat.Builder mBuilder =
new NotificationCompat.Builder(this);
mBuilder.setContentTitle(“Updated Message”);
mBuilder.setContentText(“You’ve got updated message.”);
mBuilder.setTicker(“Updated Message Alert!”);
mBuilder.setSmallIcon(R.drawable.woman);
/* Increase notification number every time a new notification arrives */ mBuilder.setNumber(++numMessages);
/* Creates an explicit intent for an Activity in your app */
Intent resultIntent = new Intent(this, NotificationView.class);
TaskStackBuilder stackBuilder =
TaskStackBuilder.create(this);
stackBuilder.addParentStack(NotificationView.class);
/* Adds the Intent that starts the Activity to the top of the stack */ stackBuilder.addNextIntent(resultIntent);
PendingIntent resultPendingIntent =
stackBuilder.getPendingIntent( ),
PendingIntent.FLAG_UPDATE_CURRENT );
mBuilder.setContentIntent(resultPendingIntent);
mNotificationManager =
(NotificationManager) getSystemService(Context.NOTIFICATION_SERVICE);
/* Update the existing notification using same notification ID */ mNotificationManager.notify(notificationID, mBuilder.build());
}
}

பின்வருவது src/com.example.notificationdemo/NotificationView.java எனும் கோப்பின் மாறுதல்கள் செய்யப்பட்ட உள்ளடக்கங்களாகும்
package com.example.notificationdemo;
import android.os.Bundle;
import android.app.Activity;
public class NotificationView extends Activity{
@Override
public void onCreate(Bundle savedInstanceState)
{
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.notification);
}
}

பின்வருவது res/layout/activity_main.xml எனும் கோப்பின் உள்ளடக்கமாகும்

பின்வருவது res/layout/notification.xml எனும் கோப்பின்உள்ளடக்கமாகும்

பின்வருவது res/values/strings.xml எனும் கோப்பின் புதிய இருமாறிலிகளை வரையறுப்பதற்கான உள்ளடக்கமாகும்

NotificationDemo
Settings
அனைவருக்கும்வணக்கம்!
Start Notification
Cancel Notification
Update Notification

பின்வருவது AndroidManifest.xml எனும் கோப்பின் இயல்புநிலை உள்ளடக்கமாகும்

சற்றுமுன் நம்மால் மாறுதல்கள் செய்யப்பட்ட “NotificationDemo ” எனும் பயன்பாட்டினை இயக்க முயற்சி செய்வோம்! சூழல் அமைவை செயற்படுத்திடும் போதே நாம் நம்முடைய AVDஐ உருவாக்கிவிட்டதாக கருதி(எடுத்து)கொள்க எக்லிப்ஸிலிருந்து இந்த பயன்பாட்டினை இயக்குவதற்கு நம்முடைய செயல்திட்டங்களின் கோப்புகளில் ஒன்றாக திறந்து கொள்க தொடர்ந்து கருவிப் பட்டையிலிருந்து Run எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் எக்லிப்ஸானது இந்த பயன்பாட்டினை நம்முடைய AVD இல்நிறுவுகை செய்யத்துவங்கிடும் அதனைதொடர்ந்து நம்முடைய பயன்பாட்டிலும் கட்டமைவிலும் உள்ள அனைத்தும் மிகச்சரியாக இருக்கின்றது எனில் அது பின்வரும் முன்மாதிரி சாளரத்தினை திரையில் காண்பிக்கும்


2
தற்போது இதிலுள்ளStart Notification எனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன் New Message Alert! என்ற செய்தி திரையில் மேலே தோன்றுவதை காணலாம் சிறிது நேரம் கழித்து திரையில் மேலே வலது புறமூலையில் சிறிய உருவபொத்தான் ஒன்று தோன்றிடும்
தற்போது இந்த காட்சியை சிறிது விரிவாக்கம் செய்து காண்போம் அதற்காக சிறிய உருவப்-பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் ஒருசில நொடிகளில் நாள் தொடர்பான செய்தி திரையில் தோன்றிடும் அதனோடு இந்த நாள்காட்சியை பிடித்து இழுத்துசென்றுநிலைபட்டியில் விட்டிடாமல் அப்படியே சுட்டியால் பிடித்து கொணடிருந்தால் நிலைபட்டி விரிவாக்கம் செய்யப்பட்டு பின்வருமாறு திரைத்தோற்றம் மாறுவதை காணலாம்

3
இப்போது உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடமுயன்றிடுக உடன் புதிய செயலியானது நிறுவுகை செய்து அமைக்கப்பட்டு பின்வருமாறு திரைதோற்றம் அமைந்திடும்

4
அடுத்து Detail of notification என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த செயலி நம்மை முதன்மை திரைக்கு அழைத்து செல்லும் அங்கு Update Notification எனும் பொத்தனை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திட முயற்சிசெய்திடுக அது நடப்பிலுள்ள அறிவிப்பினை நிகழ்நிலை படுத்திடுகின்றது தொடர்ந்துமேம்படுத்தபட்ட நிலை 1 என கூட்டி காண்பிக்கின்றது ஆனால் நாம் புதிய சுட்டிஅறிவிப்புடன் இதனை அனுப்பிட முயன்றால் உடன் அதனை படுக்கை வசமாக தனியாக திரையில் பட்டியலிட்டு காண்பிப்பதை காணலாம்
பெரியஅளவு காட்சிக்கான அறிவிப்பு
உள்வருகை பெட்டியின் பெரிய அளவு காட்சியை பயன்படுத்துவதற்கு முந்தைய துணுக்குகளில் உருவாக்கப்பட்ட அறிவிப்பை எப்படி மாற்றுவது என்பதை பின்வரும் குறிமுறைவரிகள் நிரூபிக்கிறது. இந்த செயல்பாட்டைக் காண்பிப்பதற்கு displayNotification () எனும் வழிமுறையைப் புதுப்பித்திடுக :
protected void displayNotification() {
Log.i(“Start”, “notification”);
/* Invoking the default notification service */
NotificationCompat.Builder mBuilder =
new NotificationCompat.Builder(this);
mBuilder.setContentTitle(“New Message”);
mBuilder.setContentText(“You’ve received new message.”);
mBuilder.setTicker(“New Message Alert!”);
mBuilder.setSmallIcon(R.drawable.woman);
/* Increase notification number every time a new notification arrives */ mBuilder.setNumber(++numMessages);
/* Add Big View Specific Configuration */
NotificationCompat.InboxStyle inboxStyle =
new NotificationCompat.InboxStyle();
String[] events = new String[6];
events[0] = new String(“This is first line….”);
events[1] = new String(“This is second line…”);
events[2] = new String(“This is third line…”);
events[3] = new String(“This is 4th line…”);
events[4] = new String(“This is 5th line…”);
events[5] = new String(“This is 6th line…”);
// Sets a title for the Inbox style big view
inboxStyle.setBigContentTitle(“Big Title Details:”);
// Moves events into the big view
for (int i=0; i < events.length; i++) {
inboxStyle.addLine(events[i]);
}
mBuilder.setStyle(inboxStyle);
/* Creates an explicit intent for an Activity in your app */
Intent resultIntent =
new Intent(this, NotificationView.class);
TaskStackBuilder stackBuilder = TaskStackBuilder.create(this); stackBuilder.addParentStack(NotificationView.class);
/* Adds the Intent that starts the Activity to the top of the stack */ stackBuilder.addNextIntent(resultIntent);
PendingIntent resultPendingIntent =
stackBuilder.getPendingIntent(
0,
PendingIntent.FLAG_UPDATE_CURRENT
);
mBuilder.setContentIntent(resultPendingIntent);
mNotificationManager =
(NotificationManager) getSystemService(Context.NOTIFICATION_SERVICE);
/* notificationID allows you to update the notification later on. */ mNotificationManager.notify(notificationID, mBuilder.build());
}
தற்போது நாம் உருவாக்கிய நம்முடைய பயன்பாட்டினை இயக்கமுயற்சி செய்திடுக உடன் பின்வருமாறானவிரிவாக்கப்பட்ட காட்சி தோன்றிடும்

புதியவர்களுக்கு ஆண்ட்ராய்டு பயிற்சிகையேடு எனும் இந்த தொடரானது பகுதி-32உடன் முடிவடைகின்றது மேலும் விவரங்களுக்கு எனும் இணைய.முகரிக்கு சென்று அறிந்து பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது

லிபர் ஆஃபிஸ் தொடர்-பகுதி-5- லிபர்ஆஃபிஸ் பேஸில் படிவம் ஒன்றை உருவாக்குதல்

பொதுவாக தரவுதளம் எனில் தரவுகளை தேக்கிவைக்க உதவிடும் ஒரு அமைப்பாகும் இந்த தரவுதளத்திற்குள் தேக்கிவைக்க விரும்பும் தரவுகளை உள்ளீடு செய்ய உதவுவதே தரவுதள படிவமாகும் தரவுதளபடிவம் ஆனது ஒரு தரவுதளத்திற்குள் தரவுகளை உள்ளீடு செய்யவும் அவ்வாறு உள்ளீடு செய்த தரவுகளை மாறுதல்கள் செய்யவும் பயன்படுகின்றது ஒரு சாதாரண படிவம் ஆனது ஒரு அட்டவணையில் இருக்கும் புலங்களை உள்ளடக்கியதாகும் இதனோடு மேலும் கூடுதலான உரை ,வரைகலைஅமைவு ,தேர்வுசெய்பெட்டிகள், இதரஉறுப்புகள் உள்ளடக்கியதே ஒருகலவையான தரவுதள படிவமாகும்
ஒரு தரவுதளத்தின் இடதுபுறபலகத்தின் மூன்றாவதாக உள்ளதே தரவுதளபடிவத்தை கையாள உதவிடும் உருவபொத்தான்ஆகும் அந்த படிவஉருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் வலதுபுற பலகத்தில்1.Creating Form in Design View, 2.Use Wizard to Create Formஆகிய இருவாய்ப்புகள் தோன்றிடும். நாம்இப்போதுதான் முதன்முதலில் இந்த தரவுதளத்திற்குள் உள்நுழைவு செய்யும் புதியவர், எனில் இந்த இரண்டாவது வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
\
5.1
படிமுறை-1Select fields:உடன் விரியும் Select the fields of your form என்ற உரையாடல் பெட்டியில்Tables or queries என்பதன் கீழுள்ள கீழிறங்கு பட்டியிலிருந்து நாம் ஏற்கனவே அட்டவணையாக உருவாக்கியிருந்த Table:vacationsஎன்ற அட்டவணையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் available fields என்பதன் கீழ் நாம் தெரிவுசெய்த அட்டவணையிலுள்ள புலங்கள் பட்டியலாக விரியும் அதற்கு அருகில் வலதுபுறம் உள்ள >> என்ற இரட்டைக்குறியுள்ள பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் available fields என்பதன் கீழ் பட்டியலாக விரிந்த புலங்கள் அனைத்தும் Fields in the form என்ற பகுதிக்கு போய்ச்சேரும் பின்னர் இந்த உரையாடல் பெட்டியில் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .

படிமுறை-2Set up a subform.: நாம் ஏற்கனவே fuel, vacationsஆகிய இரு அட்டவணைகளுக்கிடையே உறவுகளை உருவாக்கியிருந்தால் அதனை பயன்படுத்தி கொள்ளலாம் இல்லையெனில் படிமுறை 4 ஐ பயன் படுத்தி இவ்விரு அட்டவணைகளுக்கிடையேயான உறவை உருவாக்குக.
இதன்பின் தோன்றிடும் Decide if you want to setup a sub formஎன்ற உரையாடல் பெட்டியில் Add Sub form என்ற தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்து கொள்க. பின்னர் இதன் கீழுள்ளsub form based on existing relationஎன்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் fuel என்ற உறவு புலபெயர் அருகிலுள்ள உரைபெட்டியில் தோன்றிடும் அதனை தெரிவுசெய்துகொண்டு இந்த உரையாடல் பெட்டியில் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .

5.2
படிமுறை-3Add subform fields: இந்த படிமுறையானது ஏறத்தாழ படிமுறை 1 ஐ போன்றதே ஆயினும் இந்த படிமுறையில் துனைபடிவத்திற்குள் அனைத்து புலங்களையும் கொண்டுவந்து சேர்க்கவிரும்பு வதில்லை அதனால் முதலில் available fields என்பதன் கீழ் நாம் தெரிவுசெய்த அட்டவணையிலுள்ள புலங்களுக்கு அருகில் வலதுபுறம் உள்ள >> என்ற இரட்டைக்குறியுள்ள பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் available fields என்பதன் கீழ் பட்டியலாக விரிந்த புலங்கள் அனைத்தும் Fields in the form என்ற பகுதிக்கு போய்ச்சேரும் பின்னர் Fields in the form என்பதன் கீழ் வந்து சேர்ந்த புலங்களில் FuelIDஎன்ற புலத்தை மட்டும் தெரிவுசெய்து கொண்டு அருகில் இடதுபுறம் உள்ள < என்ற ஒற்றைக்குறியுள்ள பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் available fields என்பதன் கீழ் நம்மால் தெரிவுசெய்து நீக்கம் செய்யபட்ட FuelIDஎன்ற புலம் தவிர மிகுதி புலங்கள் அப்படியே இருக்கும் பின்னர் இந்த உரையாடல் பெட்டியில் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படிமுறை-4Get joined fields: இந்த படிமுறையானது நாம் உருவாக்கிய அட்டவணைகளில் அல்லது வினாக்களில் அவைகளுக்கிடையே உறவை உருவாக்காமல் இருந்தால் அவைகளுக்கிடையே உறவை உருவாக்கிட உதவுகின்றது. Date என்ற புலத்தை இவ்விரு அட்டவணைகளுக்கிடையே உறவு புலமாக உருவாக்கிய இணைக்க விரும்புவதாக கொள்வோம்.

5.3
அதனால் உடன் தோன்றிடும் Select the joins between your forms என்ற உரையாடல் பெட்டியில் இடதுபுறம் first joined subform field என்பதன்கீழுள்ள கீழிறங்கு பட்டியலிருந்து date என்ற புலத்தின் பெயரை தெரிவுசெய்துகொள்க இந்த புலமானது fuel அட்டவணைக்கு அடிப்படை திறவுகோள் (primary key)அன்று அதனால் இதனை அயலர்திறவுகோள்(foreign key)என்பர். பின்னர் வலதுபுறம் first joined main form field என்பதன்கீழுள்ள கீழிறங்கு பட்டியலிருந்த date என்ற புலத்தின் பெயரை தெரிவுசெய்துகொள்க இங்கு இந்த புலமானது vacations என்ற அட்டவணைக்கு அடிப்படை திறவுகோள் (primary key)ஆகும் இதற்குமேலும் வேறுபுலத்தை இவ்வாறு உறவுபுலமாக உருவாக்கிட விரும்பினால் Second joined sub form field என்பதன் கீழ் முன்பு கூறியவாறு செயல்படுத்துக பின்னர்இந்த உரையாடல் பெட்டியில் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படிமுறை-5Arrange controls: இந்த படிமுறையில் ஒரு படிவத்தின் கட்டுபாடுகளை உருவாக்கும் வழிமுறையை தெரிந்து கொள்ளவிருக்கின்றோம் ஒரு கட்டுபாடு என்பது label ,field ஆகிய இரண்டு பகுதிகளை உள்ளடக்கியதாகும் திரையில் உள்ள முதன்மை படிவத்தில் (Arrangement of the main form ) Columnar – Labels on top என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் அந்தந்த புலங்களின் பெயர் அதனதன் மேல்பகுதியில் பிரதிபலிக்கும் துனைபடிவத்தில் (Arrangement of the subform) As Data Sheetஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரிதாளினை போன்று புலங்களின் பெயரானது நெடுவரிசைகளின் தலைப்பாகவும் அதற்கு கீழ்காலியான புலங்களும் தோன்றிடும் பின்னர்இந்த உரையாடல் பெட்டியில் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படிமுறை-6Set data entry : ஏதேனும் புலத்தில் தரவை உள்ளீடு செய்யத்தேவையில்லை எனும் போதுமட்டும் தேவையான புலத்தின் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொள்க அனைத்து புலங்களிலும் தரவுகளை உள்ளீடு செய்ய வேண்டுமெனில் இயல்புநிலையில் இருப்பதை ஏற்று இந்த உரையாடல் பெட்டியில் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படிமுறை-7Apply styles : இந்த படிமுறையில் ஒவ்வொரு புலத்திற்குமான வண்ணம் புலத்தின் ஒரஅமைப்பு ஆகியவற்றை நாம்விரும்பியவாறு தெரிவுசெய்துகொண்டு பின்னர்இந்த உரையாடல் பெட்டியில் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படிமுறை-8Set name.: இறுதியாக இந்த படிவத்திற்கு ஒரு பெயரிட்டு இங்கு Fuel என்ற பெயரை இட்டு Modify the form என்பதன் வானொலி பொத்தானை தெரிவுசெய்துகொண்டு பின்னர்இந்த உரையாடல் பெட்டியில் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
உடன் படிவமானது மாறுதல் செய்வதற்கு தயாராக Edit mode என்ற நிலையில் திரையில் தோன்றிடும்.

ஜாவாமணி என்பது வங்கிகள்,நிதிநிறுவனங்கள் ஆகியவற்றின் அத்தியாவசிய வசதியாக விளங்குகின்றது

உள்ளது
பணம் என்பது பொதுவான கருத்தமைவாகஅல்லது கருவியாக இவ்வுலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் பொருட்களையும் சேவைகளையும் பெறுவதற்காக பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது ஆயினும் ஜாவாவின் அடிப்படையில் உருவாக்கபடும் பயன்பாடுகளில் தனியாக பணத்திற்கும் பணநடவடிக்கை-களுக்கான கணக்கீடுகளுக்கும் ஆதரவாக செயல்படுமாறான வசதி இதுவரையில் கொண்டுவரப்படவில்லை அதனால் java-htil.Currency என்பது ஐஎஸ்ஓ-4217 எனும் நிதிசெந்தரத்தில் ஜாவா1.4 இல் USD அல்லது INR எனும் மூன்றெழுத்துகள் வாயிலாக பணத்தினை குறித்திடுவதற்காக அறிமுகப்படுத்த பட்டிருந்தது அதனை தொடர்ந்து ஜாவா7 இல் மேலும் மேம்படுத்தபட்டு வந்தது ஆயினும் ஜாவாவில் பணநடவடிக்கை தொடர்பான கணக்கீடுகளுக்கு சொந்தமான செந்தரகணக்கீடுகள் எதுவும் கொண்டுவரப்படாமல் ஜோடா எனும்மூன்றாவது நபரின் துனையுடன் அல்லது வாடிக்கையாளர் விரும்பிய துனைக்குறிமுறைவரிகளுடன் செயல்படுத்தப்பட்டுவருகின்றது அதனால் இவ்வாறான குறையை நிவர்த்தி செய்திடும் நோக்கில் தற்போது ஜாவாமணி என்பது வங்கி நடவடிக்கைகளிலும் நிதி நடவடிக்கைகளிலும் காப்பீடு நடவடிக்கைகளிலும் உதவிடுவதற்காக உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு விடப்பட்டுள்ளது இது மின்வணிகம் ,வங்கிநடவடிக்ககைகள் ,நிதி நிருவாகம் ,முதலீட்டு நிருவாகம், காப்பீட்டுநிருவாகம், ஓய்வூதிய நிருவாகம் ஆகியயனைத்தும் கைபேசியில் செயல்படும் வண்ணம் இது Core,Conversion,Format,Extensionsஆகிய பல்வேறு பகுதியாக செயல்படுமாறு பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது இதனுடைய வசதி வாய்ப்புகள் பின்வருமாறு
இது அனைத்து பயன்பாடுகளுடன் பொருத்தமான நிதி அல்லது பணநடவடிக்கைகளுடன் ஒத்தியங்குகின்றது மேலும் ஐஎஸ்ஓஇல்லாத பணத்துடன் நடப்பு பணத்தினை ஆதரிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது
அதுமட்டுமல்லாது இது பணம் தொடர்பான சிக்கலான கணக்கீடுகளையும் கணக்கீட்டு விதிகளையும் ஆதரிக்கின்றது
மிகமுக்கியமாக நாடுகளுக்கு இடையேயான பணபரிமாற்ற(Foreign Exchange) நடவடிக்கைகளின் அடிப்படையை ஆதரிக்கின்றது
அதைவிட இதுபல்லடுக்கு பணமதிப்புகளை தேக்கிவைத்திட அல்லது சேமித்திட அனுமதிக்கின்றது .இது பேரளவு பணபரிமாற்ற செயல்களைசெய்யவல்லது
இந்த ஜாவாமணிஎன்பது ஜாவா 9 இல் உள்ளிணைந்ததாக பின்னோக்கிய ஒத்தியங்கிடுமாறு அப்பாச்சி2.0 அனுமதியின் அடிப்படையில்வெளியிடபட்டுள்ளது இதுTCK(Technology Compatability Kit),RI (Reference Implementation)ஆகிய இரு மாடூல்களாக தனியாக செயல்படுமாறும் ஜாவா8 எஸ்இஉடனும் கிடைக்கின்றது

கைபேசியில் இணைய இணைப்பில்லாத நேரத்திலும் யூட்யூப் எனும் தளத்தின் கானொளி காட்சிகளை கண்டுகளிக்கலாம்

தற்போது ஏறத்தாழ ஒவ்வொரு நிமிடத்திலும் 300 மணிநேரம் காணக்கூடிய கானொளி காட்சி படங்கள்இந்த யூட்யூப் எனும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவருகின்றன. மேலும் 80 சதவிகிதம் பயனாளர்கள் இந்த கானொளி காட்சி படங்களைதங்களுடைய கைபேசிவாயிலாகவேகாண்கின்றனர் ஆயினும் அவ்வாறான பேரளவு கானொளி காட்சி படங்களை இணைய இணைப்புடன் இருந்தால்மட்டுமே நம்முடைய கைபேசிவாயிலாக காணமுடியும்என்பதற்குபதிலாகமிக குறைவான இணையஇணப்பு அல்லது இணைய இணைப்பே இல்லாத போதும் கானொளி காட்சி படங்களை நம்முடைய கைபேசியில் காண்பதற்கான வசதியை நாம் ஏற்படுத்தி கொள்ளமுடியும் மேலும் ஒருசிலநாடுகளில் மட்டுமே இவ்வாறான வசதி அனுமதிப்-படுகின்றது அதுமட்டுமல்லாது ஒருசில நாடுகளில் குறைந்தபட்சம் 25 நாட்களுக்கு ஒருமுறை இந்த இணையதள பக்கத்தினை அனுகினால் மட்டுமே இணைய இணைப்பே இல்லாத போதும் காண்பதற்கான வசதி அனுமதிக்கப்-படுகின்றது இதில் யூட்யூப்ரெட் எனும் பயனாளிகள் மாதம் ஒன்றிற்கு 10 டாலர் கட்டணத்துடன் பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும் என்ற நிலை இருந்துவந்தது தற்போது இறுதியாக01.02.2018 முதல் யூட்யூப்கோ எனும் புதிய செயல்திட்டம் பொதுமக்களும் தாம் விரும்பிய வாறு கானொளி காட்சி படங்களை தங்களுடைய கைபேசியில் பதிவிறக்கம் செய்து காட்சியாக காணுவதற்கு பயன்படுத்தி கொள்ளுமாறு ஏறத்தாழ130 நாடுகளில் மட்டும் 8.5 எம்பி அளவிற்கு அனுமதிக்கபட்டுள்ளது இந்த வசதியை பயன்படுத்தி கொள்வதற்காக முதலில் YouTube Go எனும் பயன்பாட்டினை PlayStore அல்லது App Store இணைய-தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொண்டபின் இதனைதெரிவுசெய்து Next எனும் பொத்தானை சொடுககுதல் செய்து நிறுவுகை செய்திட துவங்கிடுக தொடர்ந்து தோன்றிடும் திரையில் நம்முடைய கைபேசி எண்ணை உள்ளீடு செய்திடுக உடன் நம்முடைய கைபேசிக்கு வந்துசேரும் சரிபார்த்திடும் குறியீட்டினை உள்ளீடு செய்திடுக பின்னர் Next எனும் பொத்தானை சொடுக்குதல் செய்து நம்முடைய கூகுளின் கணக்கினை நிகழ்நிலை படுத்தி கொள்க அதன்பின்னர் மீண்டும் Next எனும் பொத்தானை சொடுக்குதல் செய்து இந்த பயன்பாட்டினை பயன்படுத்திட துவங்கிடுக பின்னர் யூட்யூப் தளத்தில் நாம் விரும்பும் கானொளி காட்சி படங்களை தேடிபிடித்து தெரிவுசெய்து திரையில் தோன்றிட செய்தபின் காட்சியின் தெளிவுதிறனானது Basic, Standard, High quality ஆகிய மூன்றில் பொதுவாக மூன்றாவது வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு நாம்தெரிவுசெய்த கானொளி காட்சி படத்தில் Download எனும்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாவென சரிபார்த்து இருந்தால் அந்த Download எனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன் குறிப்பிட்ட கானொளி காட்சி படமானதுஇதே பயன்பாட்டின் Download எனும் கோப்பகத்தில்பதிவிறக்கம் ஆகிவிடும் அதனை இணைய இணைப்பில்லாதுபோதும் இயக்கி பார்த்து கொள்ளலாம்

முகநூலின் நம்முடைய கணக்கின்தரவுகளைஎவ்வாறு நீக்கம்செய்துகொள்வது அல்லது பாதுகாப்பாக வைத்து கொள்வது

தற்போது கேம்பிரிட்ஜ் அனாலிட்டாகபற்றிய செய்தி பரவியபின்னர் நம்மில் மில்லியின் கணக்கானநபர்கள் தங்களுடைய முகநூல் கணக்கினையே நீக்கி விடுவதற்கு அதிகஅளவில் முயல்கின்றனர் மேலும் பலர் தம்முடைய முகநூல் கணக்கில் உள்ள தம்முடைய தரவுகள் பாதுகாப்பானதாக இருக்குமா அல்லது இது போன்றஆபத்து மேலும்ஏற்படுமா என பதைபதைப்புடன் தம்முடைய வாழ்க்கையை நடத்தி கொண்டுள்ள நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் இவ்வாறான நிலையில் நம்முடைய முகநூல் கணக்கினையே நீக்கம் செய்வது நல்லதா அவ்வாறு நீக்கம்செய்து விடுவதால் தம்முடைய உறவினர்கள் நண்பர்களுடைய தொடர்பு இல்லாத நிலை ஏற்பட்டுவிடுமல்லவா அதனால் பாதுகாப்பு ஏற்பாடு செய்வதா என குழப்பமான இரண்டும் கெட்டான் நிலையில் தத்தளித்து கொண்டுள்ளனர். இவ்வாறான நிலையில் முகநூல் கணக்கிலுள்ள தரவுகளின் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்வதற்காக முதலில் நம்முடைய முகநூல் கணக்குடன் மூன்றாவது நபரின் பயன்பாடுகளின் இணைப்பு இருந்தால் அதனை நீக்கம் செய்திடுக அதற்காக Settings எனும் பக்கத்திற்கு செல்கஅங்குஇடதுபுறம் உள்ள Apps என்பதை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் விரியும் திரையில்தேவையற்ற பயன்பாடுகளை தெரிவுசெய்து நீக்கம் செய்து கொள்கஅல்லது அதற்கு பதிலாக Apps, Website and Plugins > Edit.என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி அவ்வாறான பயன்பாடுகள் முழுவதையும் நீககம்செய்து கொள்க
அடுத்ததாக விளையாட்டுகள் அல்லது வினாடி வினா நிகழ்ச்சிகள் போன்றவைகளில் நம்மில் பலர் கலந்து கொள்வார்கள் இவை நம்மையறியாமலேயே நம்முடைய அனைத்து விவரங்களையும் தரவுகளையும் அபகரித்து கொள்கின்றன இதனை தவிர்ப்பதற்காக Settings எனும் பக்கத்திற்கு செல்கஅங்குஇடதுபுறம் உள்ள Apps என்பதை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் விரியும் திரையில் Apps Others Use என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் எந்தெந்த விவரங்களை மட்டும் தானாக எடுத்து கொள்ளலாம்என தெரிவுசெய்து கொள்க
மூன்றாவாதாக நம்முடைய முகநூல் கணக்கினை செயலிழந்ததாக செய்து கொள்வது இவ்வாறு செய்தாலும் நம்முடைய நண்பர்கள் உறவினர்களுடன் குழுவிவதாம் மட்டும் செய்து கொள்ளுமாறு செய்து கொள்ளலாம் அதன்பின்னர் தேவையெனில் மீண்டும் நம்முடைய கணக்கினை செயலில் இருக்குமாறுசெய்து கொள்ளலாம் இற்காக Settings எனும் பக்கத்திற்கு செல்கஅங்கு Manage Account என்ற வாய்ப்பினையும் பின்னர் Edit. எனும் வாயப்பினையும் தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் திரையில் Deactivate your account எனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக
இவ்வாறெல்லாம்வேண்டாம் நேரடியாக என்னுடைய முகநூல் கணக்கினை நீக்கம்செய்திடுக எனில் https://www.facebook.com/help/delete_account எனும் முகவரிக்கு சென்று நம்முடைய கணக்கினை நீக்கம்செய்திடும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்முடைய கணக்கினை நீக்கம்செய்திடாமல் முகநூல் நிருவாகமானது தப்பித்தவறி நாம் மனம்மாறி பழையபடி செயல்பட விரும்பு கின்றோம் எனகவணிப்பதற்காக 90 நாட்கள் காலதாமதபடுத்திடும் அதுவரையில் நம்முடைய நண்பர்களுடனும் உறவினர்களுடனும் குழுவிவாதம் மட்டும் செய்து கொள்ளலாம்.

பிட்காயின் கேஷ் அறிமுகம்

பிட்காயின் எனும் மின்னனு பணம் தற்போது மிகவும் பிரபலமானதாக விளங்குவது அனைவரும் அறிந்ததே ஆயினும் இந்த வசதியில் நம்மிடம் கட்டாயபடுத்தி நம்முடைய வளங்களை முற்கரண்டியால் சுரண்டுவதுபோன்று அபகரித்து கொள்ளும் ஆபத்துகள் ஏற்படுவதால் இதனை கையாளுவதற்கே நம்மை யோசிக்க வைக்கின்றது கவலைப்படாதீர்கள் அவ்வாறான ஆபத்து கள் அல்லது குறைபாடுகள் எதுவும் இல்லாத பிட்காயின்கேஷ் என்பது 01.08.2017 முதல் நமக்கு கைகொடுக்க வந்துள்ளது
நாம்ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வங்கிகளின் வாயிலாக அல்லது பேபால் எனும் பயன்பாட்டின் வாயிலாக பணம் அனுப்ப விழைந்தால் இவ்வாறு பணம் அனுப்புகின்ற நடவடிக்கைக்கான கட்டணம், வங்கிகளுக்கான சேவைக்-கட்டணம் ,ஒருநாட்டின் பணம் மற்றொரு நாட்டின் பணமாக மாறுவதற்கான பணபரிமாற்ற(foreign Exchange) கட்டணம் ஆகியவை கூடுதலாக ஏறத்தாழ 2சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை செலவழிக்க-வேண்டியுள்ளது அதற்கு பதிலாக இந்த பிட்காயின் எனும் மின்னனு பணத்தினை கையாளுவதன்வாயிலாக இவ்வாறான செலவு எதுவில்லாமல் இந்த உலகில் எந்தவிடத்திலிருந்தும் வேறு எந்தஇடத்தில் இருப்பவர்களுடனும் நம்முடைய பணத்தினை நாம் பரிமாறிகொள்வதற்காக உதவுகின்றது அதனை தொடர்ந்து அவ்வாறான நிலையில் பிட்காயினைவிட பாதுகாப்பானதாக தற்போது பிட்காயின்கேஷ் என்பது அறிமுகபடுத்தப்பட்டுள்ளது இது blockchainஎனும் மின்னனு பேரேட்டின் வாயிலாக கையாளபடுகின்றது
நாம் இந்த Bitcoin Cash என்பதை சுருக்கமாக BCH ஐ மற்ற மின்னனு பணத்தினை போன்றே பின்வரும் மூன்று அடிப்படைபடிமுறைகளின் வாயிலாக பெறமுடியும்
முதல் படிமுறையாக கேஷ்வாலெட் எனும் Trezor, Ledger போன்ற மின்னனு பணப்பையை பெறுக மேலும் வேறு நிறுவனங்களின் மின்னனு பணப்பைகளை பற்றிய விவரங்களுக்கு https://www.bitcoincash.org/ எனும் அதிகார பூர்வ இணையதளத்திற்கு சென்றறிந்து சரியானதை தெரிவுசெய்து பெற்றிடுக
இரண்டாவது படிமுறையாக இந்த பிட்காயின் கேஷ் என்பது புதிய அறிமுகமாக இருப்பதால் Coinbase , Coinfloor போன்ற மின்னனு பரிமாற்றத்தை பெற்றிடுக மேலும் வேறு நிறுவனங்களின் மின்னனு பணபரிமாற்றம் பற்றிய விவரங்களுக்கு https://www.maketecheasier.com/best-bitcoin-exchanges/ எனும் அதிகார பூர்வ இணையதளத்திற்கு சென்றறிந்து சரியானதை தெரிவுசெய்து பெற்றிடுக
மூன்றாவது படிமுறையாக முதலில் பணப்பையை பெற்றபின்னர் இரண்டாவதாக மின்னனு பரிமாற்ற வசதியின் வாயிலாக இந்த பிட்காயின் கேஷ் பெற்றபின்நம்முடைய கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என அறிந்து கொள்ள https://blockdozer.com/insight/ என்ற இணைய பக்கத்திற்கு செல்க அங்கு நம்முடைய பிட்காயின் கேஸ் கிடைக்கபெற்றதை உறுதிபடுத்திடும் மூன்றுசெய்திகள் வந்துள்ளவற்றை கண்டு உறுதி படுத்தி கொள்க
இதன் பின்னர் இந்த BCH எனும்பிட்காயின் கேஷிலிருந்து மேலே கூறிய அதே படிமுறையை பின்பற்றி BTCஎனும் பிட்காயினிற்கு மாற்றி கொள்க அல்லது அதனைவிற்பணைசெய்து மாற்றி கொள்க

ஐஃபோன் எமோஜியை ஆண்ட்ராய்டு கைபேசியில் காட்சியாக கொண்டுவருவ-தெவ்வாறு?

பொதுவாக நாமெல்லோரும் இந்த எமோஜி எனும் உருவப்படங்களை இவையில்லாமல் குறுஞ்செய்திகளை கையாளுவதேயில்லை என்றஅளவிற்கு பயன்படுத்தி வருகின்றோம்
இதனுடைய புன்முறுவல் தோற்றமேஅனைவரையும் கவருகின்றது ஆயினும் ஒருசாதனத்தில் காணும் இதன் தோற்றம் மற்றொரு சாதனத்தில் அதிலும் ஆண்ட்ராய்டு சாதனத்தில் அவ்வாறே அமைவதில்லை அதனால் ஐஃபோன் எமோஜியை ஆண்ட்ராய்டு கைபேசியிலும் அதே தோற்றத்தில் அமையுமாறு இரண்டுவழிமுறைகளில் கொண்டுவரமுடியும் முதல் வழிமுறையாக இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்வது இதற்காக முதலில் நம்முடைய சாதனத்தில் settings எனும்பட்டியலைவிரியச்செய்திடுக பின்னர் அதிலுள்ள Securityஎனும் துனைபட்டியை விரியசெய்திடுக அதிலுள்ள Unknown Sources என்ற வாய்பினை தேடிபிடித்து தெரிவுசெய்து செயல்படுமாறு செய்து கொள்க பிறகுஇது GooglePlay Store என்ற தளத்தில் கிடைக்காது அதனால் https://www.ebay.com/sch/i.html?_nkw=installஎன்றதளத்திலிருந்து இதனைபதிவிறக்கம்செய்திடுக உடன்இந்த பயன்பாடு பாதுகாப்பானதன்று அல்லது நம்பகமானதன்று என்ற எச்சரிக்கைசெய்தி யொன்று திரையில் தோன்றி நம்மை எச்சரிக்கை செய்திடும்அதனை தவிர்த்து பதிவிறக்கம் செய்திடுக பின்னர் Settings ->Display-> Font என்றவாறு கட்டளைகளைதெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்திடுக உடன் விரியும் திரையில் Emoji font 3 என்ற எழுத்துருவின் பாவணையை மாற்றியமைத்திடுக அதன்பின்னர் GooglePlay Store என்ற தளத்திலிருந்து Gboardஎன்பதை பதிவிறக்கம்செய்து கொள்கஇறுதியாக Settingsapp> Language and Input என்றவாறு கட்டளைகளைதெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் விரியும் திரையில் Gboardஎன்பதை நம்முடைய இயல்புநிலை-விசைப்பலகையாக அமைத்துகொள்க
இரண்டாவது வழிமுறையில் நம்முடைய சாதனத்தில் settings எனும்பட்டியலை விரியச் செய்திடுக பின்னர் அதிலுள்ள Securityஎனும் துனைப்பட்டியை விரியசெய்திடுக அதிலுள்ள Unknown Sources என்ற வாய்பினை தேடிபிடித்து தெரிவுசெய்து செயல்படுமாறு செய்து கொள்க அதன்பின்னர் https://apkpure.com/free-iphone-ios-emoji-for-keyboard-emoticons/com.ikeyboard.emoji.iosemoji/ என்ற தளத்திலிருந்து Emoji Keyboardஎன்பதைபதிவிறக்கம்செய்திடுக உடன்இந்த பயன்பாடு பாதுகாப்பானதன்று அல்லது நம்பகமானதன்று என்ற எச்சரிக்கைசெய்தி யொன்று திரையில் தோன்றி நம்மை எச்சரிக்கை செய்திடும்அதனை தவிர்த்து பதிவிறக்கம் செய்திடுக பின்னர் GooglePlay Store என்ற தளத்திலிருந்து Kika Keyboardஎன்பதை பதிவிறக்கம்செய்து கொள்க messagingapp > keyboard என்றவாறு கட்டளைகளைதெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்திடுக உடன் விரியும் திரையில் Emoji உருவபொத்தானை தெரிவுசெய்து கொள்க இதன் பின்னர் இந்த உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக நம்முடைய ஆண்ட்ராய்டு கைபேசியில் ஐஃபோன் எமோஜியை பயன்படுத்தி கொள்ளமுடியும்

Movavi எனும் திரைபதிவு பயன்பாட்டினை கொண்டு விரைவாக Webinars எனும் இணைய வழிகானொளி கல்வி ஒளிஒலி பரப்பினை பதிவிசெய்து கொள்க

தற்போது கல்விகூடங்களுக்கும் ஆய்வகங்களுக்கும் நேரடியாக செல்லாமல் நாம் இருந்த இடத்திலிருந்தவாறே நாம் விரும்பிய கல்வி தொடர்பான தகவல்களனைத்தையும் இணையத்தின் வாயிலான இணைய கானொளி காட்சி ஒளிபரப்புதல்(Webminar) வாயிலாக அறிந்து கொள்ள முடியும் அதிலும் அவ்வாறு ஒளிபரப்பு செய்திடும் நேரத்தில் நாம் வேறு ஏதேனும் முக்கியமான பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தாலும் அதனை பதிவுசெய்து ஓய்வாக இருக்கும் போது செயல்படுத்தி பார்த்தறிந்தும் கொள்ளும் வசதியும் தற்போதுஉள்ளது அதற்காக உதவவருவதுதான் Movavi எனும் திரைப்பதிவு கருவியாகும்
இந்த Movavi எனும் திரைப்பதிவு கருவியினை முதலில்நம்முடையகணினியில் பதிவிறக்கம் செய்து கொண்டு இதனை நிறுவுகைசெய்து செயல்படச்செய்திட பின்னர் திரையில் பதிவுசெய்யவிரும்பும் அளவினையும் பகுதியினையும் தெரிவுசெய்து கொண்டு பதிவு செய்வதற்கானபல்வேறு அளவுகளையும் தெரிவுசெய்து கொண்டு Start Recordingஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்துபதிவுசெய்திட துவங்கிடுக இந்த கருவியானது இவ்வாறு பதிவுசெய்வதோடுமட்டுமல்லாமல்அவ்வாறு பதிவுசெய்த கானொளி காட்சிகளில் தேவையற்றதை வெட்டி நீக்கம்செய்து கொள்ளலாம் அல்லது திருத்தம் செய்து கொள்ளலாம் அல்லது தேவையானகாட்சிகளை கூடுதலாக சேர்த்து கொள்ளலாம்மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்ளவும்https://www.movavi.com/ என்ற இணையமுகவரிக்கு செல்க

Iubendaஎனும்நிறுமம், இணைய குக்கீ, தரவுபாதுகாப்பு சட்டம்

தற்போது கேம்பிரிட்ஜ் அனாலிட்டாகபற்றிய செய்தி பரவியபின்னர் நம்மில் பலர் இணையத்தில் நம்மை பற்றிய தரவுகளைகொண்டு நம்மை தொந்திரவுசெய்திடாமல் பாதுகாப்பாக நம்முடைய இணையஉலாவருவதெவ்வாறு என பதறி பரிதவித்து திகைத்து நிற்கின்றோம் அஞ்சற்க அனுபவமற்றவர்கள் இணையத்தில் உலாவரும்போது இணைய உலாவியானது வாடிக்கையாளர் இணையத்தில்எந்தெந்த இணையபக்கங்களில் உலாவருகின்றனர்எந்தவகையான இணையதளத்தினை தேடுகின்றார் அவருடைய விருப்பம் என்ன என்பன போன்ற பல்வேறு தகவல்களை கொண்ட சிறு கோப்பினையே Internet Cookies என அழைப்பர் அதனை தொடர்ந்து அமோசான் போன்ற வியாபார தளஙகளானது இவைகளிலிருந்த தங்களுடைய பொருளை விற்பனைசெய்வதற்கான தகவல்களை tracking cookies என்றவசதிவாயிலாக எடுத்து கொண்டு அவர்விரும்பும் பொருளின் விளம்பரங்களை அவர்இணையத்தில் உலாவரும் போதெல்லாம் திரையில் தோன்றிடசெய்கின்றனர் இதனால் தனிப்பட்ட நபரின் சுதந்திரம் பாதிக்கப்படுவதோடுமட்டுமல்லாமல் பலநாடுகளில்ஆட்சி கவிழவும் புதிய ஆட்சி அமைக்கவும் இந்த வசதி காரணியாக இருப்பதால் இதனை கட்டுக்குள் கொண்டவருவதற்காக ஐரோப்பியஒன்றியம் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்கமைவு General Data Protection Regulation (GDPR)என்ற சட்டத்தை செயல்படுத்தி வருகின்றது இந்த சட்டத்தினை நூற்றிற்குமேற்பட்ட நாடுகள் நடைமுறைபடுத்திவருகின்றன இணையத்தில் இந்த சட்டத்தின்படி குக்கீகள் மட்டுமல்லாமல்வேறு பாதிப்புகள் இருந்தாலும் அதனை சரிசெய்து கட்டுக்குள்கொண்டுவந்த தனிநபர் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டு தனிநபர் ஒருவர் மிகவும் பாதுகாப்பாக இணைய உலாவருவதற்கு உதவவருவதுதான் https://www.iubenda.com/en எனும் முகவரியில்செயல்படும் iubenda எனும் நிறுமம் ஆகும் இந்த iubenda எனும்நிறுவனமானது உலகின் பல்வேறு நாடுகளின் இணையஉலாவியின் குக்கீகளின் சட்டசிக்கல்களைகளைந்து கட்டுபாடுகளைசெயல்படுத்தி ஏறத்தாழ 20000இற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இணையத்தினை பாதுகாப்பாகபயன்படுத்தி கொள்ள உதவுகின்றது

படங்களையும் கானொளி காட்சிகளையும் நம்முடைய கைபேசியில் Instagram சேமிப்பதை எவ்வாறு முடக்கம்செய்வது

முதலில் நம்முடைய Instagram கணக்கிற்குள் உள்நுழைவுசெய்திடுக அங்கு கீழே வலதுபுறத்தில் உள்ள profile என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் நம்முடை ய profile திரையில் வலதுபுறம் மேலே உள்ள முப்புள்ளிகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் profile settings என்றதிரைவிரியும் அதில் Save Original Photos”&“Save Videos after posting ஆகிய இருவாய்ப்புகளை தேடிபிடித்திடுக அவ்விரண்டுகளிலும் உள்ளTurnoff என்ற பொத்தானை தெரிவசெய்து சொடுக்குதல்செய்திடுக பின்னர் profile ஐ சேமித்து வெளியேறுக இதன்பிறகு நம்முடைய கைபேசியில் Instagram ஐ பயன்படுத்தினாலும் தானாக படங்களையும் கானொளி காட்சிகளையும் நம்முடைய கைபேசியில் சேமித்திடாது

Previous Older Entries