பைத்தான் மொழிபோன்று நடைபயின்று சி மொழிபோல இயங்கும் ஜூலியா எனும் கட்டற்ற மொழி ஒரு அறிமுகம்

தற்போது கணினி மொழிகள் தான் ஏராளமாக உள்ளன.அதுவும் கட்டற்ற கணினிமொழிகள் ஏராளமாக உள்ளனவே இந்நிலையில் புதிய ஜூலியா எனும் கட்டற்ற மொழி தேவையா என்ற வினா அனைவரின் உள்ளத்திலும் கண்டிப்பாக எழும் நிற்க ஒவ்வொரு கணினிமொழியும் ஒவ்வொரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டவையாகும் அதனால் குறிப்பிட்ட நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால் அதற்கு பொருத்தமான கணினி மொழி எதுவென கண்டுபிடித்து அதனை பயன்படுத்தி நமக்கான பயன்பாடுகளை உருவாக்கி பயன்படுத்தி கொள்வது நல்லது
அதனடிப்படையில் பார்ககும்போது இந்த ஜூலியா எனும் கட்டற்ற மொழியானது சி மொழி போன்று போதுமான இயந்திர குறிமுறைகளை உருவாக்குகின்றது அதே நேரத்தில் குறிமுறைவரிகளை உருவாக்குவதற்கு பைத்தான் மொழி போன்று பயன்படுத்துவதில் உற்ற நண்பனாக உதவுகின்றது அதனாலேயே இந்த ஜூலியா எனும் கட்டற்ற மொழியை பைத்தான் மொழிபோன்று நடைபயின்று சி மொழிபோல இயங்கும் என வியந்து போற்றப்படுகின்றது இது அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த பயன்பாடுகளை உருவாக்குவதில் எளிய தோழனாக விளங்குகின்றது இதனை பயன்படுத்தி கொள்வதற்காக http://julialang.org/downlaods/ எனும் தளத்திலிருந்து நம்முடைய கணினிக்கு பொருத்தமான பதிப்பை பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்து கொள்க
10
இது பல்வேறுவகையான மாறிகளின் கலவைகளின் செயலி தன்மையை வரையறுப்பதில் திறனுடையதாக உள்ளது இதையே multipleDispatch என அழைப்பார்கள் இதில் கவர்ச்சிகரமான குறிமுறை வரிகளின் வெளியீடுகளை படித்து செயல்படுத்தி சரிபார்த்து அச்சிட்டு வழங்கும் திறன் கொண்டது இதனை REPL(Read Evaluation Print Loop)என அழைப்பார்கள் இது மேக்ரோ போன்ற Lisp வசதி கொண்டது. திரும்ப திரும்ப செய்யப்படும் செயல்களை எளிதாக செய்யவல்லது. இதனை பயன்படுத்திடும்போது அல்லது செயல்படுத்திடும்போது இடையிடையே பைத்தான் ,சி , ஃபோர்ட்ரான் போன்ற மொழிகளின் செயலிகளை அழைத்து நாம் கூறிடும் பணியை முடிக்கும் திறன்மிக்கது இதில் ஒவ்வொரு செயலியையும் தனித்தனிக்கட்டுகளாக உடன் வைத்துகொண்டு தேவைப்படும்போது அவைகளை பெற்று செயற்படுத்தி கொள்ளும் வசதிகொண்டது மேலும் விவரங்களுக்கு http://julialang.org/learning/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க

முகநூலில் நேரடிகானொளிபடகாட்சியாக( Live video) வெளியிடமுடியும்

நம்முடைய மிகமுக்கிய கல்விச்சான்றிதழ் வாங்கிடும் நிகழ்வு, முக்கியமான பிறந்தநாள்,திருமணம் போன்றவைகளில் நேரடியாக கலந்து கொள்ள முடியாத உறவினர்கள் நண்பர்கள் முகநூலின் இந்த பயன்பாட்டின் வாயிலாக அந்த குறிப்பிட்ட நிகழ்வினை நேரடிகானொளி படகாட்சியின் வாயிலாக பார்த்து அறிந்து கொள்ளமுடியும் அதைவிட நிறுவனங்கள் தங்களுடைய புதிய உற்பத்தி பொருட்களை பற்றிய பயன்பாடுகளை பயனாளிகளுக்கு விளக்கமாக எடுத்து கூறுவதற்கு முகநூலின் இந்த வசதி பெரிதும் பயன்படுகின்றது இதனை செயற்படுத்திடுவதற்கென தனியாக படப்பிடிப்பு கருவியோ கணினியோ தேவையில்லை அதற்குபதிலாக முகநூல் பயன்பாடு நிறுவுகை செய்யப்பட்ட படப்பிடிப்பு வசதிகொண்ட கைபேசி மட்டும் போதுமானதாகும் இதற்காக முதலில் முகநூலின் செல்லிடத்து பேசி பதிப்பினை நம்முடைய சாதனத்தில் நிறுவுகை செய்யப்பட்டுள்ளதாவென சரிபார்த்து கொள்க இதற்காக இணைய உலாவி தேவையில்லை அதற்கு பதிலாக இது நம்முடைய கைபேசியிலுள்ள படப்பிடிப்பு வசதியையே பயன்படுத்தி கொள்கின்றது பின்னர் நம்முடைய முகநூலின் profile எனும் பக்கத்திற்குசெல்க அங்கு Status உடன் உள்ள ஒருசிறு பெட்டிக்கு செல்க அதில் உள்ளphotos, tags ஆகிய கூடுதல் வசதிகளை விரிவுபடுத்தி கொண்டு நம்முடைய நிலையை சேர்த்து கொண்டு இந்நிகழ்வு வெளியிடுவது தனிப்பட்டவர்களுக்கு மட்டும் எனில் privacy என்பதையும் அனைவருக்கும் எனில் public என்பதையும் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து கட்டமைவு செய்து கொள்க் நண்பர்கள் மட்டும் எனில் அவ்வாறே தெரிவுசெய்து கொள்க பின்னர் live video எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் ஒரு பெட்டியொன்று நம்மை இந்த செயலை ஆமோதிக்குமாறு கோரும் அதில் OK எனும்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
குறிப்பு அடுத்தமுறை இந்த Facebook live எனும் வசதியை செயற்படுத்திடும்போது இந்த பெட்டி தோன்றாதுஎன்றசெய்தியை மனதில்கொள்க
உடன் முகநூல் பயன்பாடானது நம்முடைய செல்லிடத்து பேசியிலுள்ள படப்பிடிப்பு வசதியான microphone என்பதை செயல்படுத்த துவங்கிவிடும் இந்த கானொளி காட்சியை பற்றிய வர்ணனை தேவையெனில் தட்டச்சு செய்துகொண்டு Go Live எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இறுதியாக இந்த பணிமுடிவுற்றதும் கீழே வலதுபுற மூலையிலுள்ள Finish எனும்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Ending Live video எனும் செய்தி திரையில் தோன்றி இந்த நேரடி கானொளி ஒளிபரப்பு முடிவுற்றதாக நமக்கு அறிவிப்பு செய்திடும்

மைக்ரோ சாப்ட்நிறுவனமானது அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கட்டற்ற மென்பொருள் போன்று .Net Core 1.0என்பதை தற்போது வெளியி்ட்டுள்ளது

ஒருவழியாக ரெட்ஹேட் மைக்ரோசாப்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒன்றினைந்து ஜூன் 26-29 இல் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர் அதனடிப்படையில் .Net Core 1.0, ASP.Net Core 1.0 ஆகிய புதிய வெளியீடுகளை வெளியிட்டுள்ளனர் இவை விண்டோ லினக்ஸ் ஓஎஸ்எக்ஸ் ஆகிய எந்தவொரு இயக்கமுறைமையிலும் பயன்பாடுகளை உருவாக்கமுடியும் என்ற வசதிகொண்டதாகவுள்ளன இதனடிப்படையில் முழுவதுமான சிக்கலான இணையத்தின் அடிப்படையான எந்தவொரு பயன்பாட்டினையும் எளிதாக உருவாக்கிடமுடியும் மேலும் இதற்கான சுருக்கப்பட்ட கோப்பகளை வழக்கமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவையாளர் பகுதிக்கு பதிலாக திறமூல மென்பொருட்களை பதிவிறக்கம் செய்திடும் இணைய பக்கமான GitHub என்ற தளத்திலிருந்து பதவிறக்கம் செய்து கொள்ளுமாறான வசதி ஏற்படுத்தபட்டுள்ளது
சரி் இதனால் பயன்பாடு உருவாக்குபவர்களுக்கு என்ன பயன்என கேள்வி அனைவரின் மனதிலும் எழும் நிற்க அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் மிகமுக்கியமாக விண்டோ இயக்கமுறைமை சூழலில் இயங்கும் திறன்கொண்ட திறமூல அல்லது கட்டற்ற பயன்பாடுகளை உருவாக்குபவர்கள் பயன்பாடுகளை உருவாக்கிய பின்னர் அவைகளை மற்ற அனைத்து தளங்களில் அதிக மாற்றம் செய்திடாமல் செயல்படுத்தி கொள்ளமுடியும்
ஆனால் இதுவரை கட்டற்ற திறமூல பயன்பாடுகளை உருவாக்குபவர்கள் தங்களுடைய பயன்பாடுகளை உருவாக்கியபின்னர் மைக்ரோசாப்டின் கருவிகளுடன் ஒத்தியங்குமாறு செய்வதற்காக மிகச்சிரமபட்டு அதற்கான கட்டளைவரிகளை கூடுதலாக இந்த பயன்பாடுகளில் சேர்த்து செயல்படுத்தி பார்க்கவேண்டிய கட்டாயசூழல் இருந்துவந்தது இனி அதைபோன்ற சூழல் எதுவுமில்லை என்பதே இந்த கூட்டறிக்கையின் அல்லது இந்த .Net Core 1.0என்ற வெளியீட்டின் பயனாகும் இதனால் அனைத்து தளங்களிலும் செயல்படும் ஏராளமான கட்டற்ற பயன்பாடுகள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது
பொதுவாக இதுவரை இருந்துவந்த இந்த மைக்ரோ சாப்ட்டின் இதயம் போன்ற IaaS தளத்துடன் ஒரு பயன்பாடு எவ்வாறு ஒத்தியங்கிடுமாறு செய்வது என்ற பெரிய தலைவலி பிடித்த பிரச்சினைக்கான தீர்வாக இது அமைந்துள்ளது
அதைவிட மைக்ரோசாப்ட்டின்  .NET Core உடன் ஒத்திழைவு செய்வதற்காகவென ஏராளமான கட்டளைவரிகளை உருவாக்குவதில் தங்களுடைய நேரம் முழுவதையும் செலவிட்டுவந்ததற்கு பதிலாக தங்களுடைய பயன்பாட்டினை எவ்வாறெல்லாம் மேலும் மெருகூட்டிடலாம்என்பதில் மட்டும் கவணம் செலுத்தினால் போதும் என்ற நிலை உருவாகிவிட்டது
மேலும் இதனை எவ்வாறுபயன்படுத்திகொள்வது என்ற விவரங்களுக்கு https://docs.microsoft.com/en-us/dotnet/ என்ற இணைய பக்கத்திற்கு சென்றுஅறிந்து பயன்படுத்தி பயன்பெறுக
8

அனைத்துவகை செல்லிடத்து பேசிகளிலும் PhoneGapஎனும் கட்டற்ற வரைச்சட்டத்தை பயன்படுத்தி பயன்பாடுகளை எளிதாக உருவாக்கலாம்

பொதுவாக கணினியின் கட்டமைப்பும் செல்லிடத்து பேசியின் கட்டமைப்பும் ஏறத்தாழ ஒன்று போல்இருந்தாலும் ஒரு செல்லிடத்து பேசியில் உருவாக்கிய பயன்பாடானது வேறொரு செல்லிடத்து பேசிசூழலில் செயல்படாது ஏனெனில் செல்லிடத்து பேசி ஒவ்வொன்றும் தனித்தனி கட்டமைப்புகளாக வெளியிடப்படுகின்றன.அதனால் பெரும்பாலான செல்லிடத்து பேசிகளில் பயன்படும் இயக்கமுறைமைகளுக்கு ஏற்ப பயன்பாடுகளை உருவாக்குவது என்பது மிகசிரமமான செயலாக அனைவருக்கும் இருந்துவருகின்றது இந்த சிரமத்தை தவிர்க்கவே PhoneGapஎனும் கட்டற்ற வரைச்சட்டமானது நமக்கு தீர்வு செய்வதற்காக உதவிக்குவருகின்றது
7
இது ஒரு இலவச கட்டற்ற HTML,CSS,JavaScriptபோன்ற இணைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளை உருவாக்கிடஉதவும் உற்ற நண்பனாக விளங்குகின்றது ஒருசாதாராண மனிதனும் தனக்கு தெரிந்த தற்போதைய இணைய தொழில் நுட்பத்தைமட்டுமே கொண்டு இந்த PhoneGapஎனும் கட்டற்ற வரைச்சட்டத்தை பயன்படுத்தி தன்னுடைய செல்லிடத்து பேசியில் தான் விரும்பும் பயன்பாடுகளை உருவாக்கி செயல்படுத்தி கொள்ளமுடியும் இது செல்லிடத்து பேசிகளில் பயன்படும் Ios, Android, Symbian, WebOS,WP7, Bada, BlackBerry போன்ற அனைத்து இயக்கமுறைமைகளையும் ஆதரிக்கின்றது இந்த PhoneGapஎனும் கட்டற்ற வரைச்சட்டத்தை பயன்படுத்துவதற்காகவென நமக்கு தனியான தொழில்நுட்ப அறிவு அல்லது அனுபவம் எதுவும் தேவையில்லை நாம் விரும்பும் பயன்பாட்டின் அடிப்படையான தரவு உள்ளடக்கத்தை உள்ளீடு செய்து கொண்டால் போதுமானதாகும் உடன் தேவையான தரவு உள்ளடக்கங்களை இந்த PhoneGapஆனது செல்லிடத்து பேசி பயன்பாடாக உருமாற்றிவிடுகின்றது இதனை பயன்படுத்தி கொள்வதற்குமுன் Node.Js என்பதை நிறுவுகை செய்துகொள்க மேலும் இதனை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளவும் இதனை பதிவிறக்கம் செய்திடவும http://phonegap.com/getstarted/ எனும் தளத்திற்கு செல்க பின்னர் இதனைபதிவிறக்கம் செய்து npm install -g phonegapஎனும் கட்டளை வரிவாயிலாக phonegapஐ நிறுவுகை செய்துபயன்படுத்திகொள்க

தட்டச்சு செய்த உரையை கையெழுத்து உரையாக மாற்றிடலாம்

ஆரம்பகாலத்தில் எழுத்தாணிகளாலும் பின்னர் பேனாவாலும் உரையை எழுதி வந்தோம் பின்னர் தட்டச்சுப்பொறியின் கண்டுபிடிப்பால் எழுத்துகளை தட்டச்சு செய்துவந்தோம் அதன்பின்னர் கணினி வந்தபின்னர் கணினியில் நேரடியாக தட்டச்சு செய்து சேமித்து பலமுறை அச்சிட்டு கொள்கின்றோம் அல்லதுஒருமுறை தட்டச்சு எழுத்துகளையே மீண்டும் நகலெடுத்து ஒட்டி வருகின்றோம் தற்போது அனைவரின் அடிமனதிலும் முன்புபோல் கைகளால் எழுதிய உரையாக இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கபார்வை அனைவருக்கும் உண்டு அதிலும் இவ்வாறான கையெழுத்தாலான உரையெனில் பார்வையாளர்களுக்கு ஒரு கவர்ச்சி ஏற்பட்டு அதனை ஆழ்ந்து படிக்கவிரும்புவார்கள் இதற்காக கைகொடுக்க வருவதுதான் திரும்ப நிகழும் நரம்பு வலைபின்னல் (Recurrent Neural Networks) இதனை சுருக்கமாக RNN என அழைக்கலாம் இதனை பயன்படுத்தி தட்டச்சிடப்பட்ட எழுத்துகளைகொண்ட உரையை கைகளால் எழுதிய எழுத்துகளை போன்ற உரையாக உருமாற்றம் செய்து பயன்படுத்திக்கொள்ளமுடியும்
இதனை செயல்படுத்துவதற்கேற்ற சூழலை உருவாக்கிடமுதலில் பைத்தான் 3 (http://python.org/) என்பது நம்முடைய கணினியில் நிறுவுகை செய்யபபட்டுள்ளதாவென சரிபார்த்து கொள்க இதனை தொடர்ந்து மெய்நிகர் பைத்தான் சூழலை நம்முடைய கணினியில் virtualenv -p python3 env என்ற கட்டளைவரியின் வாயிலாக நிறுவுகை செய்து கொள்க அதன்பின்னர் source env/bin/activate என்ற கட்டளைவரியின் வாயிலாக இந்த மெய்நிகர் பைத்தான் சூழலை நம்முடைய கணினியில் செயலிற்கு கொண்டுவருக. அதனை தொடர்ந்து நம்முடைய கணினியில் தேவையான நூலகங்களை pip install request pillow எனும் கட்டளைவரின் வாயிலாக நிறுவுகை செய்து கொள்க
தற்போது முதலில்விண்டோ இயக்கமுறைமையெனில் https://github.com/theStage21 /handwritten/ archives/master.zip/ என்ற தளத்தில் இருந்து master.zip எனும் சுருக்கப்பட்ட கோப்பினை பதிவிறக்கம் செய்து கொள்க லினக்ஸ் இயக்கமுறைமைஎனில் unzip handwritten.zip எனும் கட்டளைவரின் வாயிலாக பிரித்துதனியான கோப்பகமாக உருவாக்கி கொள்க இதனுடைய கோப்பகத்திற்கு cd handwrittenஎனும் கட்டளைவரியின் வாயிலாக செல்க அங்கு vim sample.txt அல்லது gedit sample.txt அல்லது notepad sample.txt எனும் கட்டளை வரிவாயிலாக காலியான உரைகோப்பு ஒன்றினை உருவாக்கி கொண்டு அதில் 100 எழுத்துகளுக்கு மிகாமல் நம்முடைய உரையை நகலெடுத்து ஒட்டிகொள்க அல்லது தட்டச்சு செய்து கொள்க.
அதன்பின்னர் python get_hand.py sample.txt எனும் கட்டளைவரியின் வாயிலாக உரையை கையெழுத்தாக உருமாற்றம் செய்திடுக பிறகு python make_page.pyஎனும் கட்டளை வரியை உள்ளீடு செய்து PNG உருவப்பட வடிவமைப்பில் நம்முடைய உரையானது கையெழுத்தாக திரையில் பிரதிபலிப்பதை காணலாம் மேலும் விவரங்களுக்கு https://github.com/theStage21 /handwritten/எனும் இணைய பக்கத்திற்கு செல்க
6

பயன்பாட்டுமென்பொருட்களை வெளியிடுமுன் அதற்கான தகவல்களை ஆவணங்களாக வெளியிடுக

பல்வேறு கட்டற்ற பயன்பாடுகளையும் கட்டற்ற கருவிகளையும் உருவாக்குபவர்கள் இந்த பயன்பாடுகளையும் கருவிகளையும் நன்றாக செயல்படுத்தி பயன்பெறவேண்டும் என கடுமையாக முயற்சிசெய்து அரும்பாடுபடுவார்கள் ஆனால் அவைகளை பயனாளர்கள் அல்லது பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்தி பயன்பெறுவது எனும் ஆவணங்களை உருவாக்குவதில் மட்டும் கோட்டை விட்டுவார்கள் பொதுவாக அவைகளைபற்றிய ஆவணங்களை பயனாளிகளுக்கு அவைகளை வெளியிடுவதற்குமுன் கொண்டுசேர்த்தால் மட்டுமே பலரும் இவைகளை பயன்படுத்திட முன்வருவார்கள் அதனால் இவைகளை பற்றிய விவரங்களை நன்கு அறிந்து பயன்படுத்திடாமல் விழலுக்கு இறைத்த நீரைபோன்ற பயனில்லாமல் இவைகள் ஏராளமான அளவில் முடங்கி கிடக்கின்றன. இவ்வாறானவர்களுக்கு உதவ தயாராக இருப்பதே Read the Docs, Read the Docs codeஆகிய இரு திறமூலதளங்களாகும் இவைகள் நம்முடைய கட்டற்ற மென்பொருள் பற்றிய ஆவணங்களை தானாக உருவாக்காது அதற்குபதிலாக நம்முடைய குறிமுறைவரிகளை தானாக கையாளவும் ஏன் நம்முடைய பயன்பாடுகளை பயன்படுத்தபடவில்லை அதை எவ்வாறு தீர்வுசெய்வது அதற்கான ஆவணங்களை எவ்வாறு உருவாக்குவது என்பன போன்ற தகவல்களை நமக்கு கூறி வழிகாட்டிடுகின்றது. மேலும் நம்முடைய ஆவணத்தை கட்டமைக்கப்பட்ட உரையாக இல்லாமல் ஏன்உள்ளது அதனை சரிசெய்வதற்காக வழிகாட்டுவதுடன் அதற்காக இதிலுள்ள Sphinxஎனும் வசதியை பயன்படுத்தி கொள்க என அறிவுறுத்தப்படுகின்றது பின்னர் இந்த ஆவணங்களை HTML , PDF ஆகியவடிவமைப்புகளில் வழங்கிடவும் வழிகாட்டுகின்றது மேலும் நம்முடைய கட்டற்ற பயன்பாடுகளையும் கட்டற்ற கருவிகளையும் பற்றி விவரங்களை அளிக்கும் ஆவணங்களை எங்கே எப்போது வெளியிட்டால் அனைவரையும் சென்றடையும் அதனைதொடர்ந்து நம்முடைய பயன்பாடுகளை அனைவரும் பயன்படுத்திட துவங்கிடுவார்கள் என்றும் இந்த இணையதளம் நமக்கு தகுந்த ஆலோசனை கூறுகின்றது
5

Dr Geoஎனும் கட்டற்ற பயன்பாட்டினை நம்முடைய வரைகலை உபகரணபெட்டியாக பயன்படுத்தி கொள்க

பள்ளியிலும் கல்லூரியிலும் பயிலும் மாணவர்கள் தமக்கென தனியாகவரைகலை உபகரணபெட்டியாக என்றஒன்றை வைத்துக்கொள்ளாமல் Dr Geoஎனும் கட்டற்ற பயன்பாட்டினை http://www.drgeo.eu/ எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க இந்த தளத்திலிருந்து சுருக்கப்பட்ட கோப்பகளை பதிவிறக்கம் செய்தபின்னர் இவைகளை வெளியி-லெடுக்கும்போது தானாகவே தனியானதொரு கோப்பகத்தில் இவைவீற்றிருக்கும் அதனை அப்படியே விண்டோ லினக்ஸ் மேக் ஆகிய எந்தவொரு இயக்க-முறைமையிலும் செ.யல்படுத்தி பயன்பெறலாம் இதனை செயல்படுத்தியவுடன் தோன்றிடும் திரையின் மேல் பகுதியில் வழக்கமான File,  Edit,  Points,  Lines,  Transformations, Numerics & Text, Scripts, Macro Construction,  Animate ஆகிய கட்டளைகள் உள்ளடக்கங்களாக உள்ள கட்டளை பட்டி உள்ளது அதற்கடுத்ததாக Open a blank sketch, Open a sketch, Keep a sketch permanently, Undo,Redo, Show/hide grid, Snap to grid, Toggle object selection, Select and move an object, Erase, Edit object style , Edit an item’s property ஆகிய கருவிகளை கொண்ட கருவிகளின் பட்டி இருக்கின்றது அதற்கும் கீழே பல்வேறு திரைகளை கொண்ட தாவிப்பொத்தான்கள் உள்ளன அவைகளுக்கம் கீழ்பகுதியில் இடதுபுறம் குறுகிய ஒருபலகமும் வலதுபுறம் அகலமான ஒருபலகமும் சேர்ந்து இரு பலகங்கள் உள்ளன இவைகளை பயன்படுத்தி நாம் வழக்கமாக வரையும் வட்டம் சதுரம், செவ்வகம், சாய்சதுரம் முக்கோணம், நாற்கரம் அறுகோணம், ,பலகோணம் போன்ற வரைபடங்களை வரைந்து தேவையெனில் PNG எனும் வடிவமைப்பில் சேமித்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியும்

Previous Older Entries