பொருட்களுக்கான இணையமான Android Thingsஎன்பதை ராஸ்பெர்ரி பிஐ3 எனும் கணினியுடன் எவ்வாறு இணைப்பது

இதற்கான படிமுறை பின்வருமாறு
படிமுறை.1. முதலில் இதற்காகRaspberry Pi 3 ,2.8GB MicroSD Card ,3.Android Things Image ,4Win32DiskImager ஆகிய நான்கையும் சேகரித்து கொள்ளவேண்டுமென பட்டியலிடுக
படிமுறை.2. அடுத்து https://developer.android.com/things/index.htmlஎனும் இணையதளத்திற்கு செல்க அங்கு Get Developer Preview எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் “Raspberry Pi 3என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் Latest preview Image என்பதை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் தேவையான Android Thingsஇன் இமேஜ் கோப்பின் பெயரை தெரிவுசெய்து download எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குகு பின்னர் விரியும் திரையின் நிபந்தனைகளை ஏற்றுகொண்டபின்னர் பதிவிறக்கம் ஆகும்
படிமுறை.3. மேலே படிமுறை2இல் கூறியவாறு பதிவிறக்கம் செய்த கட்டப்பட்ட கோப்புகளிலிருந்து Android Thingsஇன்இமேஜ் கோப்பினை வெளியிலெடுத்திடுக அதனை தொடர்ந்து Win32DiskImager எனும் பயன்பாட்டினை செயல்படசெய்திடுக உடன்தோன்றிடும் திரையில் நம்முடையAndroid Thingsஇன் இமேஜ் கோப்பினை தெரிவுசெய்து கொள்க மேலும்MicroSD Card என்பதையும் தெரிவுசெய்து கொள்க பின்னர் Write எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் MicroSD அட்டையில் Android Thingsஇன் இமேஜ் கோப்பானது எழுதப்படும் இந்த பணிமுடிவடைந்ததும் MicroSD அட்டையை வெளியேற்றி எடுத்திடுக
படிமுறை.4. நம்முடைய Raspberry Pi 3 கணினியில் நாம் ஏற்கனவே Android Thingsஇன் இமேஜ் கோப்பினை எழுதிய MicroSD அட்டையை அதற்கான வாயிலில் உள்செலுத்தி பொருத்துக பின்னர் துவக்கஇயக்கம் நடைபெறுவதற்காக சிறிதுநேரம் காத்திருக்கவும் தொடர்ந்து Android Things ஆனது ராஸ்பெர்ரி பிஐ3 உடன் இணைந்து முதன்மை திரை தோன்றிடும் அவ்வளவுதான் நான்கே படிமுறையில் பொருட்களுக்கான இணையமான Android Thingsஎன்பதை ராஸ்பெர்ரி பிஐ3 எனும் கணினியுடன் இணைத்து திரையில் தோன்றிட செய்துவிட்டோம்

ஃபயர்பேஸ்-8-தொடர்- ஃபயர்பேஸின் பாதுகாப்பு

JSONபோன்ற பொருட்களை ஃபயர்பேஸ் பயன்பாட்டிற்குள்அமைவுசெய்து அவைகளின் பாதுகாப்பு விதிகளை கையாளுவதன்வாயிலாக ஃபயர்பேஸின் பாதுகாப்பானது உறுதி செய்யப்படுகின்றது இந்த பயன்பாட்டின் உள்பகுதியில் பக்கப்பட்டியை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர் விரியும் திரையில் RULESஎனும் தாவிப்பக்கத்திற்குள் சென்றால் இந்த JSON எனும் பாதுகாப்பு விதிகள் வீற்றிருப்பதை காணலாம் நாம் இந்த பகுதியில் ஓரிரு எடுத்துக் காட்டுகளின் வாயிலாக ஃபயர்பேஸில் தரவுகளானது எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது என காண்போம்
எழுதுதலும் படித்தலும்
பின்வரும் குறிமுறைவரிகளின் துனுக்குகளின் வாயிலாக ஃபயர்பேஸிற்குள் பாதுகாப்பிற்கான விதிகளானது /users/’$uid’/என்பதை பயன்படுத்திடும் அனுமதி பெற்றவர்கள் மட்டும் எழுதுவதற்கு ம் படிப்பதற்கும் அனுமதிக்கின்றது ஆயினும் இதிலுள்ள uidஎனும் அதே அனுமதியானது எந்தவொரு பார்வையாளர்களும் படிப்பதற்கு மட்டும் அனுமதிக்கின்றது என்பதை காணமுடியும் இதற்கான எடுத்துகாட்டுக் குறிமுறைவரிகள் பின்வருமாறு
{
“rules”: {
“users”: {
“$uid”: {
“.write”: “$uid === auth.uid”,
“.read”: true
}
}
}
}
ஏற்புகை செய்தல்
பின்வரும் எடுத்துகாட்டில் உள்ள குறிமுறைவரிகளின் துனுக்குகளைகொண்டு நாம் சரத்திற்கான தரவுகளை செயல்படுத்திடலாம்
{
“rules”: {
“foo”: {
“.validate”: “newData.isString()”
}
}
}
மேலே நாம் கண்டுவந்த இரு எடுத்துகாட்டுகளிலும் ஃபயர்பேஸினுடைய மேலோட்டமான பாதுகாப்பு விதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன . இந்த விதிகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதன் வாயிலாக மட்டுமே, அதை நம்முடைய ஃபயர் பேஸின் பயன்பாட்டின் உட்பகுதியில் நாமே இணைத்து கொள்ளமுடியும் என்ற மிகமுக்கியமான செய்தியை மனதில் கொண்டு செயல்படுக
பயன்படுத்துவது(Deploying)
இந்த பகுதியில், நம்முடைய பயன்பாட்டை ஃபயர் பேஸின் சேவையகத்தில் எவ்வாறு செயல்படுத்திடவேண்டும் என்பதை நாம் காண்போம்
இதனை துவங்குவதற்குமுன் ஒருசிலஎழுத்துகளை கொண்ட வரியை index.html எனும் டேக்கிற்குள் பின்வருமாறு சேர்த்திடுக

WELCOME TO FIREBASE TUTORIALS APP

படிமுறை-1 ஃபயர்பேஸ் கருவிகளை நிறுவுகைசெய்தல்
முதல் படிமுறையில் பொதுவாக command promptஎனும் சாளரத்தில்தான் ஃபயர்பேஸ் கருவிகளை நிறுவுகை செய்திடுவார்கள் அதனுடைய கட்டளைவரி பின்வருமாறு
npm install -g firebase-tools
படிமுறை-2ஃபயர்பேஸ் பயன்பாட்டினை துவக்கநிலையில் வைத்தல்
இரண்டாவது படிமுறையாக command promptஎனும் சளரத்தில் ஃபயர்பேஸிற்குள் பின்வரும் கட்டளைவரியின் வாயிலாக உள்நுழைவுசெய்திடுக
firebase login
பின்னர் command promptஎனும் சாளரத்தில்நம்முடைய பயன்பாட்டின் முதன்மை கோப்பகத்தை திறந்து பின்வரும் கட்டளைவரியைசெயல்படுத்திடுக
firebase init
இந்த கட்டளையானது ஃபயர்பேஸ் பயன்பாட்டின் மதிப்பை துவக்கநிலைக்கு கொண்டு சேர்த்திடும்
குறிப்பு நாம் இயல்புநிலை கட்டமைப்பை பயன்படுத்திடுவதாக இருந்தால்public எனும் கோப்பகத்தை உருவாக்கி index.htmlஎன்பதை அதற்குள் இருக்குமாறு செய்திடுக அதுதான் நம்முடைய பயன்பட்டின் துவக்கப்புள்ளியாகும் என்ற செய்தியை மனதில் கொண்டு செயல்படுக தொடர்ந்து நம்முடைய பயன்பாட்டின் கோப்புகளை இதே கோப்பகத்திற்குள் நகலெடுத்து கொண்டுவந்து சேர்த்திட்டால் நம்முடைய பணிஎளிதாகிவிடும் என்ற செய்தியையும் மனதில் கொள்க
படிமுறை-3 ஃபயர்பேஸ்பயன்பாட்டினை பயன்படுத்திகொள்ளுதல்
இதுதான் நம்முடைய கடைசி படிமுறையாகும் அதனால் மிககவணமுடன் பின்வரும் கட்டளைவரியை command promptஎனும் சாளரத்தில் உள்ளீடுசெய்து செயல்படுத்திடுக
firebase deploy
இந்த கட்டளைவரியை செயல்படுத்தியவுடன் கணினியானது நம்முடைய ஃபயர்பேஸ் பயன்பாட்டின் இணைய முகவரிக்கு நம்மை அழைத்து செல்லும் அவ்வாறு அழைத்திடும் இணையமுகவரி https://tutorialsfirebase.firebaseapp.com என்பதாகும் இந்த இணைப்பை செயலபடுத்தினால் உடன் பின்வருமாறு திரைத்தோற்றம் அமையும்

இரண்டுஅல்லது அதற்கு மேற்பட்ட எக்செல் அட்டவணைகளை அல்லது கோப்புகளை power Query எனும் வசதி கொண்டு ஒன்றாக இணைத்திடுக

வெவ்வேறு எண்ணிக்கையிலான கிடை வரிசைகளையும் நெடுவரிசைகளையும் கொண்ட எக்செல்லின் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட அட்டவணைகளை Power Query எனும் வசதியின் துனையுடன் மிகஎளிதாக ஒரே அட்டவணையாக இணைத்து பயன்படுத்திக் கொள்ளமுடியும் இதற்காக நாம் மிககடுமையாக முயல்வதற்கான சிரமத்தை தவிர்த்து அதனை செயற்படுத்துவதற்காக வீணாகும் நேரத்தை சேமித்திடலாம் இந்நிலையில் ஒருசிலர் எக்செல்லின் நகலெடுத்துவந்து ஒட்டுவது (copy paste) எனும் வசதியின் வாயிலாக ஒரே அட்டவணையாக செய்துவிடலாமே என்று ஆலோசனை கூறுவார்கள் மேலும் VLOOKUP அல்லது INDEX / MATCH அல்லது VBA whiz ஆகிய பல்வேறு வசதிகளின் வாயிலாக இதனை எளிதாக செய்திடலாமேஎன்றும் நம்மை நக்கல்செய்வார்கள் ஆனால் இவையனைத்தும் மிகசிக்கலானதும் அதிக காலவிரையம் ஆககூடியதுமான வசதிகளாகும் ஆயினும் புதியதான Power Query எனும் எளிதான வசதியை பயன்படுத்தி நேரத்தினை மிச்சபடுத்திடலாமே
குறிப்பு:இந்த Power Query எனும் வசதி நாம் பயன்படுத்தி கொள்ள தயாராக இருக்கின்றது ஆயினும் எக்செல்2010 , எக்செல்2013ஆகிய இரண்டிலும் கூடுதல் இணைப்பாக செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும் எக்செல்2016இல் எளிதாக செயல்படுத்திடலாம்.
இங்குSales_Data எனும் முதலாவது அட்டவணை-(Tabel_1), Pdt_Id எனும் இரண்டாவது அட்டவணை-(Tabel_2), Region எனும் மூன்றாவது அட்டவணை-(Tabel_3)ஆகிய மூன்றையும் நாம் ஒன்றாக ஒரே அட்டவணையாக ஒருங்கிணைக்க-விருக்கின்றோம் எனக்கொள்வோம் ஒரு சமயத்தில் இரண்டு அட்டவணைகளை மட்டுமே இந்த Power Query எனும் வசதியின் வாயிலாக ஒருங்கிணைக்க முடியும் அதனால் முதலில் Tabel_1ஐயும் Tabel_2ஐயும் ஒன்றிணைத்தபின் அதனுடன் Tabel_3ஐ ஒன்றிணைத்து கொள்ளமுடியும்
படிமுறை-1 முதலில்Sales_Data எனும் அட்டவணையில் நம்முடைய தரவுகளிருக்கும் ஏதேனும் ஒரு செல்லினை தெரிவுசெய்து கொள்க

1
பின்னர்திரையின் மேலேData எனும் தாவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Data எனும் தாவிப்-பொத்தானின் திரையின் Get & Transform Data எனும் குழுவிலுள்ள From Table/Range எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக

2
உடன் Sales_Data -Query editor என்பது திரையில் விரியும் அதில் File எனும் பட்டியலின் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் File எனும் பட்டியலில் Close and Load To எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக

3
உடன் விரியும் Import Data எனும் உரையாடல் பெட்டியில் Only Create Connection எனும் தேர்வுசெய்பெட்டியை மட்டும் தெரிவுசெய்து கொண்டு OK.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இந்த படிமுறையில் Sales_Data எனும் பெயரிலானஅல்லது நாம் குறிப்பிடும் பெயரிலான அட்டவணையின் இணைப்புமட்டும் உருவாகும் இதே படிமுறையை Tabel_2 ,Tabel_3 ஆகிய அட்டவணைகளிலும் பின்பற்றி செயல்படுத்தி தயார்செய்து கொள்க இவ்வாறு நாம் செயல்படுத்தியபின்னர Sales_Data, Pdt_Id, Region ஆகியமூன்று பெயர்களினாலான அல்லது நாம் பெயரிட்டவாறான அட்டவணைகளின் இணைப்பு தயாராக இருப்பதை காணலாம்

4
படிமுறை-2 திரையின் மேலேData எனும் தாவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Data எனும் தாவிப்பொத்தானின் திரையின் Get & Transform Data எனும் குழுவிலுள்ள Get Data எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Get Data எனும் கீழிறங்கு பட்டியலில் Combine Queries எனும் வாய்ப்பினை தெரிவு-செய்து சொடுக்குக பின்னர் விரியும் Combine Queries எனும் துனைப்பட்டியில் Merge எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக

5
உடன் விரியும் Merge எனும் உரையாடல் பெட்டியில் Select tables and matching coloumns to create a merged table என்பதன்-கீழுள்ள கீழிறங்கு பட்டியல்களில் முதலாவது கீழிறங்கு பட்டியலில் Sales_Data,என்ற அட்டவணையை தெரிவுசெய்து கொள்க மேலும் இரண்டாவது கீழிறங்கு பட்டியலில் நாம் இணைத்திடவிரும்பும் இரண்டாவது பட்டியலான Pdt_Id என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த அட்டவணைகளானது இந்த உரையாடல் பெட்டியில் முன்காட்சியாக காண்பிக்கும் இவ்விரண்டிலும் அனைத்து நெடுவரிசை-களையும் தெரிவுசெய்து கொள்க இதன்பின்னர் இவைகளுக்கு கீழேயுள்ள Join Kind எனும் மூன்றாவது கீழிறங்கு பட்டியலில் Left Outer (all from first, matching from second) எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு OK.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இந்த படிமுறையை செயல்படுத்தி முடித்தவுடன் Query editor எனும்உரையாடல் பெட்டியானது திரையில் தோன்றி Sales_Data எனும் அட்டவணையின் நெடுவரிசை-களுடன் கூடுதலாகஇதில் இல்லாத Pdt_Id எனும்அட்டவணையின் நெடுவரிசையையும் சேர்த்து காண்பிக்கும்

6
படிமுறை-3 Query editor எனும்உரையாடல் பெட்டியில் Pdt_Id எனும் அட்டவணையின் கூடுதலான நெடுவரிசையின் மேல்பகுதியிலுள்ள இருபக்கதலைப்புள்ள அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த அட்டவணையின் அனைத்து நெடுவரிசைகளின் பெயர்களுடன் options box எனும் பெட்டி விரியும்இதில் Item எனும் நெடுவரிசையை தவிர மற்றநெடுவரிசைகளின் பெயர் தெரிவுசெய்திருப்பதை நீக்கம் செய்திடுக ஏனெனில் மற்ற பெயர்களுள்ள நெடுவரிசைகள் Sales_Data எனும் அட்டவணையில் இருப்பதால் அவைகளைவிட்டிடுக இரண்டு அட்டவணையையும் இணைப்பதற்கான அடிப்படையானPdt_Id எனும் அட்டவணையில் Item எனும் நெடுவரிசை என்பது மட்டும் போதுமானதாகும் மேலும் Use original column name as prefix என்ற வாய்ப்பினையும் தெரிவுசெய்திருப்பதை நீக்கம் செய்திடுக தொடர்ந்துOK.எனும் பொத்தானை தெரிவு-செய்து சொடுக்குகஉடன் Sales_Data எனும் அட்டவணையின் நெடுவரிசைகளுடன் கூடுதலாக இதில் இல்லாத Pdt_Id எனும்அட்டவணையின் நெடுவரிசையையும் சேர்த்து ஒருங்கிணைக்கப்பட்ட புதிய அட்டவணையொன்று உருவாகிவிடும்
படிமுறை4 திரையின் மேலே Fileஎனும் தாவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் Close and Load to எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்து Import Data எனும் உரையாடல் பெட்டியில் Only Create Connection எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டுOK.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் ஒருங்கிணைக்கப்பட்ட புதிய அட்டவணையொன்று சேமித்திட தயாராகிவிடும் அதற்கொரு பெயரிட்டு சேமித்து கொள்க
இதே படிமுறைகளை பின்பற்றி தற்போது உருவான அட்டவணையுடன் மூன்றாவது அட்டவணையை இணைத்து புதிய அட்டவணையை உருவாக்கி கொள்க
இந்த மூன்று அட்டவணைகளில் ஏதாவது திருத்தம்செய்தால் நாம் ஒன்றிணைத்து உருவாக்கிய மூன்றாவது அட்டவணையில் refreshஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக நிகழ்நிலை படுத்தி கொள்ளமுடியும்

NODE’s Raspberry Pi என்பதை சிறிய பணிகளின் சேவையாளராகபயன்படுத்தி கொள்ளலாம்

நாம் இணையதளத்தை அணுகும்போதும் அல்லது இணைய அடிப்படையிலான சேவையை அணுகும்போதும்,ஏதேனுமொரு மிகப்பெரிய நிறுவனங்களின் தொழில்நுட்ப வலிமையையும் நல்லெண்ணத்தையும் நம்பியிருக்க வேண்டியுள்ளது.மேலும் இவ்வாறான இணையத்தை அணுகிடும் செயலானது நம்முடையISP ஆல் கட்டுப்-படுத்தப்படுகிறது, இந்த ISP ஆனது சிறிய எண்ணிக்கையிலான பல்வேறு பிரதான முனையங்கள் வாயிலாக நாம் இணையத்தை சென்றடைவதற்கான வழிகளை மாற்றியமைக்கின்றது. பொதுவாக இணையதளமானது எங்காவதுஉள்ளதொரு சேவையாளர் தொகுப்புகளால் வழி நடத்தப்படுகின்றது, ஆயினும் நம்முடைய தரவுகளானது உண்மையான வலைதளம் அல்லது சேவையால் பொருந்தக்கூடியதாக இருப்பினும் அவற்றைப் பயன்படுத்தலாம் என்பதை மையபடுத்துவதற்குபதிலாக பரவலாக்கப்பட்ட இணையதளங்கள் உறுதிசெய்கின்றது இதுவே மிகச்சரியானதும் உறுதியானதுமாகும் இந்த நோக்கத்திற்காக NODE’s Raspberry Pi Mini Server என்பதே மிகபொருத்தமானதாகும் எந்தவொன்றையும் NODE ஆல் வடிவமைப்பு செய்வதை போன்று ஒரு குறிப்பிட்ட சிறிய பணியையும் சிறப்பாக செய்திடும்பொருட்டு இந்த சிறிய சேவையாளரும் NODE ஆல் வடிவமைப்பு செய்யப்படுகின்றது ஆயினும் இந்த சிறியசேவையாளரும் வெளிப்புற கூண்டுமட்டுமே அதன்உள்ளக கட்டமைப்பு போதுமானதாகஒரு ராஸ்பெர்ரி பை யினால் கட்டமைப்பு செய்யப்பட்டு சேவையாளராக பயன்படுத்தப்படுகின்றது இவ்வாறான சிறு சேவையாளர்களின் போட்டியாளர்களான Asus Tinker Board , ODroid-C2ஆகியவைவிட இந்த ராஸ்பெர்ரி பை மிகத்திறன்வாய்ந்ததாக விளங்குகின்றது ஒரு முப்பரிமான அச்சுப்பொறியால் NODE இன் சிறு சேவையாளர் கூண்டினை உருவாக்கிடமுடியும் ஆயினும் இதனுள் கட்டமைக்கப்படும் ராஸ்பெர்ரி பையிற்கு மட்டும் ஒருசில மாறுதல்களும் சில கூடுதலான ஏற்பான்களும் தேவையாகும் ஏனெனில் HDMI , SD card போன்றவைகளின் வாயில்கள் பின்புறத்தில் அமைந்திருக்கின்றது. இதனை கட்டமைவு செய்திடுவதற்காக தேக்கும் திறன் 3டிபி விரிவாக்கத்திறனுடன் கூடிய ஒரு 2.5″ SATA மடிக்கணினியின் வன்தட்டும் ஒரு ஏற்பானும் போதுமானதாகும் நாம் இவைகளை கொண்டு NODE’s Raspberry Pi Mini Server எனும் சிறிய சேவையாளரை உருவாக்கி பயன்படுத்தி கொள்ளமுடியும்

ஸ்கைப்8 எனும் சமுதாய இணையதளசேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தற்போது வெளியிடப்பட்டுள்ளது

தற்போது சமுதாய இணையதளசேவைக்காகஸ்கைப்8 என்பது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டுள்ளது. இதுவரையில் ஸ்கைப்7 பதிப்பானது பயன்பாட்டில் இருந்துவருகின்றது இந்த பதிய பதிப்பில் இலவசமான HD கானொளி படம் ஒரே சமயத்தில் 24 நபர்கள் வரையிலான விவாதத்தில் பங்குகொள்ளுமாறான குழுவிவாதம் ,, குழுவிவாதத்தின் போதான @mentionsஎனும் தனிப்பட்ட பதில் செய்தி அனுப்பிடும் வசதி, குழுவிவாத தொடர்பு சாதனங்களின் காட்சி, ஒருமுறை 300 எம்பிஅளவுள்ள படங்களையும் கானொளி படங்களையும் பகிர்ந்து கொள்ளும் வசதி,ஸ்கைப்பின் பேச்சொலி அழைப்பின்போது end-to-end encrypted ஆன பாதுகாப்பு வசதி, உரைச்செய்தியுடன் மறைக்கப்பட்ட அறிவிப்புகள் மேககணினியின் அடிப்படையிலான கானொளி்அழைப்புடன் அதில் கலந்து கொண்டவர்கள் ஒவ்வொருவரை பற்றிய தகவல்களும் பதிவுசெய்து கொள்ளும் வசதி என்பன போன்ற ஏராளமான வசதி வாய்ப்புகள் புதிய ஸ்கைப்8 என்ற சமுதாய இணையதள சேவையில் உள்ளன இது ஐபேடுகளிலும் செயல்படும் திறன் கொண்டது என்ற கூடுதல் செய்தியையும் மனதில் கொள்க

பொதுவாக நாம் அறிந்திராத வாட்ஸ்அப்பின் வசதிவாய்ப்புகள்

தற்போது மிகவும் பிரபலமான இந்த வாட்ஸ்அப் எனும் தயார்நிலை செய்தியாளரை ஏறத்தாழ 1.5 பில்லியன் மக்கள் உலகமுழுவதும் பயன்படுத்தி வருகின்றனர் அதிலும் 250 மில்லியன் மக்கள் இந்தியாவில் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பல்வேறு புதிய வசதி வாய்ப்புகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அவ்வப்போது வெளியிடப்பட்டுகொண்டேயிருந்தாலும் நம்மில் பெரும்பாலானோர் பின்வரும் வசதிவாய்ப்புகள் பற்றிய விவரஙகளை தெரியாததால் பயன்படுத்தாமலேயே இருந்துவருகின்றன. கடந்த பிப்பரவரி 2018 முதல் நம்முடைய நண்பர்களுக்கு தேவையான தொகையை இந்த வாட்ஸ்அப்பின் வாயிலாக அனுப்பிவைத்திடும் வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது இந்த வசதியை பயன்படுத்தி கொள்வதற்காக WhatsApp > Settings > Payments > Send Payment > Send to UPI ID என்றவாறு கட்டளைகளை செயல்படுத்தி பயன்பெறுக
அடுத்ததாக குழுவிவாதத்தின் போது நாம் வாட்ஸ்அப்பில் சேமித்து வைத்திராத புதிய எண்களுடனும் குழுவிவாதத்தில் கலந்துகொள்ள செய்வதற்காக Click to Chat எனும் வாய்ப்பினை பயன்படுத்தி கொள்கமேலும் செய்திகளையும் இவ்வாறு சேமித்து வைத்திராத எண்களுக்கு அனுப்பி வைத்திடலாம்
மூன்றாவதாக வழக்கமான எமோஜி ஸ்டிக்கருடன் நாம் அனுப்பிடும் உருவப்படங்களிலும் கானொளி படங்களிலும் நடப்பு நேரத்தினையும் இடத்தினையும் ஸ்டிக்கராக சேர்த்து அனுப்பிடலாம் இதற்காக பயனாளர் ஒருவர் தேவையான உருவப்படம் அல்லது கானொளி படத்தினை தெரிவுசெய்தபின்னர் எமோஜி ஸ்டிக்கரை மட்டும் தெரிவுசெய்தால் போதுமானதாகும்
நான்காவதாக நாம் ஏதேனும் ஒரு உருவப்படத்தினை தவறுதலாக ஒருவருக்கு அனுப்பிவிட்டதாக தெரியவரும்போது “Delete for Me” , “Delete for Everyone” எனும் வாய்ப்புகளில் உள்ள Delete எனும் வாய்ப்பினை பயன்படுத்தி நீக்கம்செய்து கொள்க
ஐந்தாவதாக இந்தியாவில் பெரும்பாலும் நாமனைவரும் இந்த வாட்ஸ்அப்பானது ஆங்கிலத்தில் மட்டுமே பயன்படுத்தி கொள்ளமுடியும் தமிழ் போன்ற மொழிகளில் பயன்படுத்திகொள்ளமுடியாதுஎன அறியாமல் உள்ளனர் Settings > Chats > App Language > Select a language என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர் தோன்றிடும் திரையில் தமிழ் போன்ற பத்திற்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் நாம் விரும்பும் இந்திய மொழியை தெரிவுசெய்தபின்னர் பயன்படுத்தி கொள்ளலாம்

இன்னமும் எக்செல் விரிதாளினை பயன்படுத்துகின்றோமா அதற்குமாற்றான QuickBooks என்ற பயன்பாட்டிற்கு மாறலாமே

QuickBooks எனும் பயன்பாடானது எக்செல் விரிதாளிற்கு மாற்றாக அதைவிட பல்வேறு வசதிகளையும் வாய்ப்புகளையும் தன்னகத்தே கொண்டது
இதனை நாம் எங்கிருந்தும் நம்முடைய கணினிமட்டுமல்லாது , மடிக்கணினி,கைபேசி திறன்பேசி ஆகியவற்றின் வாயிலாகவும் அனுகி பயன்படுத்தி கொள்ளலாம்
மேலும் இதனை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அனுகமுடியும் அதாவது கணக்கு உதவியாளர் உள்ளீடு செய்ததை கணக்காளர் சரிபார்த்திடவும் அவருக்குமேல் கணக்கு மேலாளர் சரிபார்த்து ஒப்புதல் வழங்கிடும் வசதிகொண்டது வாடிக்கையாளர் விரும்பியவாறான பல்வேறு கணக்கு அறிக்கைகளை உருவாக்கி கொள்ளலாம் ஒருசில நிமிடங்களிலேயே விற்பணை பட்டியை வாடிக்கையாளர் விரும்பியவாறு உருவாக்கி கொள்ளலாம் இணையவழி வங்கி கணக்குகளை கையாளும் வசதியும் இதில் கூடுதலாக உள்ளது சிறிய நிறுவனங்கள் கூட மேககணினி வசதியை எந்த நேரத்திலும் எந்தவிடத்திலிருந்தும் இந்த QuickBooks எனும் பயன்பாட்டின் வாயிலாக பெற்று பயன்பெறலாம் விற்பணைக்கான தொகையை கடனட்டை வாயிலாக பெறுவது குறிப்பிட்ட விற்பணையை தேடிபிடிப்பது அதற்கான ஜிஎஸ்டி பற்றிய விவரங்களை தேடிபிடித்து அறிந்துகொள்வது ஆகிய வசதிகளை கொண்டுள்ளது வங்கி கணக்குகள் கடனட்டைகள் போன்றவைகளை தேடிபிடித்து நம்முடைய மொத்த வருமானம் எவ்வளவு மொத்தசெலவு எவ்வளவு என அறிந்து கொள்ளமுடியும் அவ்வாறே குறிப்பிட்ட விற்பணை அல்லது கொள்முதல் பட்டியலின் பணப்பட்டுவடாவின் தற்போதைய நிலை என்னவென எளிதாக அறிந்து கொள்ளலாம் இலாப நட்ட கணக்கு இருப்புநிலை கணக்கு ரொக்கஓட்ட அறிக்கை நிதிஓட்ட அறிக்கை போன்ற பல்வேறு வியாபார அறிவிக்கைகளை எளிதாக உருவாக்கி பெறமுடியும் நம்முடைய வங்கிகணக்குடன் எப்போதுவேண்டுமானாலும் இணைப்பு ஏற்படுத்தி கொண்டு வரவு செலவினங்களை எளிதாக மேற்கொள்ளலாம் நமக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால் உடன் அதற்கான கேள்வியை எழுப்பினால் உடனடியாக அதற்கான தீர்வு வழங்கப்பட்டு நம்முடைய வியாபார நடவடிக்கைகள் தடங்களில்லாமல் நடைபெற உதவுகின்றது தற்போது இந்த QuickBooks எனும் பயன்பாட்டினை ஏறத்தாழ மூன்று மில்லியன் பயனாளர்கள் பயன்படுத்தி கொள்கின்றனர்
இதனை பயன்படுத்தி கொள்வதற்காக இதனுடைய https://quickbooks.intuit.com/in/sandbox/ எனும் இணையமுகவரிக்கு செல்க அங்கு நம்முடைய நிறுவனத்தின் பெயரை முதலில் தோன்றிடும் திரையில் உள்ளீடு செய்து கொள்க அடுத்து தோன்றிடும் இரண்டாவது திரையில் அனைத்து வாய்ப்புகளையும் தெரிவுசெய்து கொண்டு Finish என்ற பொத்தானை அழுத்தினால் நம்முடைய நிறுவனத்தின் பெயருடன்கூடிய முகப்பு பக்கத்திற்கு நம்மை அழைத்து செல்லும் அதில் Settings, Sales & Banking ஆகிய மூன்று தாவிப்பொத்தான்கள் உள்ளன அவைகளை சரியாக கட்டமைத்திடவேண்டும் அதற்காக யூட்யூப் கானொளி காட்சி நமக்கு உதவத்தயாராக உள்ளன அதனை கண்டு Settings, Sales , Banking, Reports ஆகிய தாவிப்பக்கங்களை சரியாக கட்டமைத்து கொண்டு பயன்படுத்தி கொள்க

பழைய3.5-inch அளவுள்ளfloppy disks என்பது மறைந்து போன தொழில் நுட்பமா

பொதுவாக புதிய தொழில்நுட்பம் அல்லது புதிய பொருளை கண்டு பிடித்தால் பழைய பொருட்கள் அதற்கான இணைப்பு கம்பிகள்,இணப்பான்கள்,ஏற்பான்கள்போன்றவைகளை தூக்கி குப்பையில் வீசி எறிந்துவிடும் மனப்பான்மையில் நாமெல்லோரும் தற்போது இருந்துவருகின்றோம் அவ்வாறே கணினியிலும் சிடி ,டிவிடி ,யூஎஸ்பி ஸ்டிக் ஆகியவை புழக்கத்திற்கு வந்தவுடன் பழைய ஃப்ளாப்பி டிஸ்க்கை மறந்தேவிட்டோம் ஆயினும் இந்த ஃப்ளாப்பி டிஸ்க் தொழில் நுட்பம் மறைந்து போனதா அல்லது இறந்து போனதாவென்றால் இல்லையென்ற பதிலே முதலில் வரும். ஏனெனில் இப்போதும் தற்போதைய கட்டமைவுடைய கணினியில் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் அதிலும் தற்போதைய ராஸ்பெர்ரிய பையை பயன்படுத்திடும்-போது இந்த ஃப்ளாப்பி டிஸ்க் தொழில்நுட்பம் பேருதவியாக இருக்கும் அதைவிட புதிய ஆர்டினோவிற்கு இந்த ஃப்ளாப்பி டிஸ்க் தொழில்நுட்பம் கண்டிப்பாக தேவையாகும் மேலும் புதிய நவநாகரிக தொழில்நுட்பமான SD Card இல் தரவுகளை படித்தறிய இந்தஃப்ளாப்பி டிஸ்க் தொழில்நுட்பம் மிகமுக்கியமான பங்கு வகிக்கின்றது
அதனால் இந்த பழைய ஃப்ளாப்பி டிஸ்க் தொழில்நுட்பத்தை தூக்கி எறியாமல் தற்போதைய புதிய நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது

தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக JBoss Web Server 5 எனும் பயன்பாடு Tomcat 9 என்பதுடன் சேர்ந்து கிடைக்கின்றது

ரெட்ஹெட் எனும் நிறுவனம் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்வதற்கு வசதியாக ZIP அல்லது RPM வடிவமைப்பில் கட்டற்ற தொழில்நுட்பத்துடன் நிறுவனங்களின் அனைத்து தேவைகளுக்கும் ஒரேதீர்வான புதிய JBoss Web Server 5 எனும் இணைய பயன்பாட்டினை மிகமேம்பட்டபொறியானTomcat 9 என்பதுடன் சேர்த்து தற்போது வெளியிட்டுள்ளது இது HTTP/2 ஐஆதரிக்கின்றது மேலும் Servlet 4.0 எனும் விவர வரையறை கொண்டது அதுமட்டுமல்லாது JSSE எனும் இணைபபானுடன் சேர்ந்த TLS என்பதற்காக OpenSSL ஐ கொண்டது மிகமுக்கியமாக இயல்புநிலையிலான HTTP/1.1 என்பதற்காக NIO எனும் இணைப்பானை கொண்டது.அதைவிட இதனுடைய TLS ஆனது மெய்நிகர் SNI ஐ ஆதரிக்கின்றது இது உள்பொதிந்த வழங்கல்களை ஆதரிக்கின்றது இதில் tomcat-vault எனும் நிறுவுகை செயல் மேம்படுத்தப்பட்டுள்ளது இதில் பல்லடுக்கு பண்புகளுடன் கூடிய கோப்புகளை கட்டமைக்கமுடியும் இந்த JBoss Web Serverஇல் log4jis என்பதுடன் சேர்த்துஉள்நுழைவு செய்திடமுடியும்

மீச்சிறு(Quantum )கணினியை பயன்படுத்துவதற்கான ஊடகமாக Ytterbium என்பது வரவிருக்கின்றது

குவாண்டம்தகவல்தொடர்பும்(Quantum Communication) மறைக்குறியீடாக்கலும் தான் வருங்காலத்தில் மிகவும் பாதுகாப்பான தகவல்தொடர்புகளாகஇருக்கபோகின்றன. உலகமுழுவதுமான குவாண்டம்வலைபின்னல் கட்டமைவில் குவாண்டம் ஒலிசைகைகளை வெகுதூரத்திற்கு ஒலிபரப்புவதில்தான் பிரச்சினையாக உள்ளது அதற்காக தற்போதைய நிலையில் குவாண்டம்தகவல்தொடர்புானது கண்ணாடி இழைவாயிலாக பலநூறு கிலோமீட்டர் தூரத்திற்கு பாதுகாப்பான தொலைதூர தகவல்தொடர்பிற்காக பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது இதன்வாயிலான தொலைதூரதகவல்தொடர்பில் தகவல்களை இடைமறித்தலோ நகலெடுத்தலோ முடியாது ஆயினும் தற்போதைய நிலையில் மீச்சிறுகணினிவழி தகவல்தொடர்புானது அருகலை(WiFI) போன்று கம்பிவழியில்லா வலைபின்னலாக பயன்படுத்தி கொள்ளமுடியாத நிலையில் உள்ளது இந்த மீச்சிறு கணினிவழிதகவல் தொடர்பிற்கு அடிப்படையாக விளங்கும் போட்டான்(Photon) ஆனது ஒரு நொடி நேரத்தில் 3,00,000 கிலோமீட்டர்தூரம் வரை பயனம் செய்யக்கூடிய திறன்பெற்றது ஆனால் அதனை கொண்டுசெல்வதற்கான ஊடகம்தான் தற்போது மிகச்சரியானதாக அமையவில்லை ஆயினும் இறுதியாக தற்போது அறிவியலார்கள் மிகச்சிறந்ததான Ytterbium எனும் பொருளை குவாண்டம் சைகையை தேக்கி வைத்திடவும் திரும்பு திரும்ப ஒலிபரப்புவதற்காகவும் கண்டுபிடித்துள்ளனர் இந்த Ytterbium இன் அடிப்படையில் முதல்குவாண்டம் சைகைகளைஒலிபரப்பு செய்திடும் மற்றொன்று அதனை பெற்று அந்த குவாண்டம் சைகைகளைஒலிபரப்பு செய்திடும் என்றவாறு தொடர்சங்கிலி போன்று குவாண்டம் நினைவகத்தை உருவாக்கி குவாண்டம் வலைபின்னலின் ஆங்காங்குவைத்து கட்டமைவு செய்திட்டால் மிகச்சிறந்த குவாண்டம் வலைபின்னலை உலகமுழுவதிற்குமாக அமைத்திடமுடியும்

Previous Older Entries