விண்டோவின் நேரடிவலைபூ எழுதி (windows-live-writer)

விண்டோவின் நேரடிவலைபூ எழுதி (windows-live-writer)எனும் வசதியானது பெரியபெரிய ஜாம்பாவன்க ளினுடைய  அழகிய வலைபூக்களை போன்று சாதாரணமானவர்கள் கூட தம்முடைய எண்ணத்தில் உருவாகிய கருத்துகளையும் ஆலோசனைகளையும் விண்டோவில் உருவாக்கி Blogger,Word press  போன்ற எந்தவொரு வலைபூவழங்குபவரின் இணையத்திற்குள் வலையேற்றமுடியும்

இதனை விண்டோ எக்ஸ்பி எனில் http://explore.live.com/windows-live-writer-xp விண்டோ விஸ்டா அல்லது 7 எனில் http://explore.live.com/windows-live-writer?os=winxp என்ற இணைய பக்கத்திற்கு சென்று   பதிவிறக்கம் செய்து கொள்க பின்னர் இந்த windows-live-writer என்ற கோப்பினை தெரிவுசெய்து செயற்படுத்தி கணினியில் நிறுவுகை செய்க. உடன் தோன்றிடும் உரையாடல் பெட்டியில் writer check-box என்ற தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்து Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சிறிது நேரம் காத்திருக்கவும்  பின்னர் தோன்றிடும் திரையில் Other blog service என்பதை தெரிவுசெய்து Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

பின்னர் தோன்றிடும் Add a blog account என்ற தலைப்புடன் உள்ள உரையாடல்பெட்டியில்  நம்முடைய வலைபூவழங்கநரின் முகவரி பயனாளரின் பெயர் கடவுச்சொற்கள் போன்றவற்றை உள்ளீடு செய்து Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக..

இந்த நிறுவுகை பணி முடியும் வரை காத்திருக்கவும் இந்த செயலின்போது நாம்குறிப்பிட்ட வலைபூவழங்குநரின்இணையதளத்திலிருந்து நம்முடைய வலைபூ தெடர்புடைய அனைத்து அமைவுகளும் கணினியில் பதிவிறக்கம் ஆகிவிடும்

இறுதியாக நம்முடைய வலைபூவிற்கு ஒரு பெயரிட்டு Finish.என்ற பொத்தானை சொடுக்குக. இதன்பின்னர் நம்முடைய கட்டுரைகள் படங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் தெரிவுசெய்து இழுத்துசென்று விடுதல் வாயிலாக வெளியீடு செய்யமுடியும்  இரண்டாவது வழியாக கருவிபட்டையிலுள்ள அதனதன் கருவி வாயிலாக நம்முடைய கட்டுரைகள் படங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் நம்முடைய வலைபூவில் கொண்டு சேர்க்கலாம்.

Windows Live Writer வாயிலாக முதன்முதலில் நம்முடைய வலைபூவில் வெளியிடும்போது நம்முடைய கணக்கின் பயனாளர் பெயர்  கடவுச்ற்கள் போன்றவற்றை உள்ளீடு செய்யுமாறு கோரும் அப்போது Remember my password என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொள்வது நல்லது

வலைபூவைபோன்றே நம்முடைய கட்டுரையை வெளியிடுமுன் preview  என்ற பொத்தானை அழுத்தி முன்காட்சியாக பார்வையிடும் வசதிகூட இதில் உள்ளது

View in browser after publishing.என்ற பெத்தானை அழுத்தி வெளியிட்டபின்னர் நம்முடைய வலைபூவை பார்வையிடலாம்

அவுட்லுக்கின் புதியவசதி

அவுட்லுக்கானது  கைவசமுள்ள நண்பர்களின் முகவரி பட்டியலிலுள்ள ஒவ்வோருவருக்கும் ஓட்டெடுப்பிற்கான வினாவை  அனுப்பி அவர்களிடமிருந்து பதிலை பெற்று அதனை ஒருஅட்டவணையாக உருவாக்கி கையாளும் திறன்வாய்ந்ததாகும்.அதுமட்டுமன்று ஒரு நிறுவனம் தம்முடைய ஊழியர்கள் அனைவருக்கும் அவர்களுடைய தேவைகள் விருப்பங்கள் போன்ற அனைத்தையும் இந்த  அவுட்லுக்கை கையாண்டு தம்முடைய ஊழியர்களின் தேவையை ஒருநிறுவனத்தாரால் நிறைவு செய்ய முடியும்

அவுட்லுக் 2007 ஐ  திறந்துகொண்டு மேலே உள்ள ஆஃபிஸ் பொத்தானை சொடுக்குக உடன்தோன்று பட்டியிலிலிருந்து New => Message => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பின்னர் விரியும் சாளரத்தில் Options  என்ற தாவியின் திரையை தோன்றச்செய்க  அத்திரையில் tracking என்ற குழுவின் கீழுள்ள Voting Buttons என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

உடன்  approve/reject, yes/no, yes/no/maybe, or  custom போன்ற  விடையுடன் கூடிய கீழிறங்கு பட்டியல் தோன்றும்  நாம் Are you coming to dinner? என்ற கேள்வியை நம்முடைய நண்பர்களுக்கு அனுப்பிட விழைவதால்  yes/no/maybe பொருத்தமானதாகும் அதனை தெரிவுசெய்து கொள்க

நம்முடைய நண்பர்களின் முகவரியைஅதனுடைய contact list என்ற பட்டியலிலிருந்து தெரிவுசெய்து கொண்டு Send என்ற பொத்தானை சொடுக்குக.

அவுட்லுக் 2003 ஐ  திறந்துகொண்டு மேலே கட்டளை பட்டையிலுள்ள new=> messgae=> options => voting and tracking  => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

உடன் விரியும் சாளரத்தில் voting என்ற பொத்தானை சொடுக்குக பின்னர்ரியும் approve/reject, yes/no, yes/no/maybe, or custom  ஆகிய வாய்ப்புகளில்  yes/no/maybe என்பதை தெரிவுசெய்க.

நாம் Are you coming to dinner? என்ற கேள்வியை நம்முடைய நண்பர்களுக்கு அனுப்பிட விழைவதால்  yes/no/maybe பொருத்தமானதாகும் அதனை தெரிவுசெய்து கொள்க.நம்முடைய நண்பர்களின் முகவரியைஅதனுடைய contact list என்ற பட்டியலிலிருந்து தெரிவுசெய்து கொண்டு Send என்ற பொத்தானை சொடுக்குக.

நாம் அனுப்பிய செய்தியை பெறும் ஒவ்வொருவருக்கும் அந்த செய்தியில் ஒரு தொடுப்பு தம்முடைய விருப்பத்தை தொரிவிக்கும்படி கோரி நிற்கும்

நாம் தயாராக அனுப்பியுள்ள வாய்ப்புகளுள் ஒன்றை பெறுபவர் தெரிவுசெய்யவேண்டும்

உடன் சாளரம் ஒன்று தோன்றி சாதாரண தம்முடைய விருப்ப வாக்கை மட்டும் தெரிவுசெய்து send the message now  என்பதை தெரிவுசெய்து அளிக்கலாம்  அல்லது Edit the response before sending என்பதை தெரிவுசெய்து தம்முடைய விரிவான பதிலை அளிக்கலாம்

இவ்வாறு கேள்வியை அனுப்பி பெறபட்ட பதில்களை அவுட்லாக்கானது அட்டவணையாக தயார்செய்து வைத்திருக்கும்  நாம் இதனுடைய கோப்பகத்திற்கு சென்றுநம்முடைய கேள்வியையும் அதற்கான பதிலயையும் குறும்படமாக உருவாக்கி வைத்துள்ளதை கண்டு தெரிவுசெய்து சொடுக்கி திரையில் விரியச்செய்து பார்த்து அறிந்துகொள்ளலாம்

நண்பர்கள் அனைவருக்கும் குறுஞ்செய்திகளை ஒரே சொடுக்கில் அனுப்பமுடியும்

செல்லிடத்துபேசி சேவை வழங்குபவர்கள் எங்கள் சேவையை பயன்படுத்துபவர்களுக்கு  தினமும் முன்னூறு குறுஞ்செய்திகளை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்பன போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை அள்ளி வீசுவதன் வாயிலாக வாடிக்கையாளர்களை தத்தமது நிறுவனசேவையை பயன்படுத்துமாறு வளைத்து பிடித்துவிடுகின்றனர் அதன்பின்னர் ஆங்கில புத்தாண்டு பொங்கல் போன்ற முக்கியமான விழாக்காலங்களில்  செல்லிடத்து பேசியை பயன்படுத்துபவர்கள்  அந்த குறிப்பிட்ட நாட்களில் அனுப்புபடும் குறுஞ்செய்திகள் இலவசமன்று கட்டணமுடையவைஎன நம்முடைய கணக்கிலிருந்து சந்தடியில்லாமல் தொகையை அபகரித்து கொள்கின்றனர்  இவ்வாறான நிலையில்   Jubin Mitra என்ற கருவியின் வாயிலாக நாம் நம்முடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இலவச குறுஞ்செய்திகளை நம்முடைய கணிணியின் மூலம் அனுப்பமுடியும்  இந்த கருவியை பயன்படுத்தி கொள்ள நம்முடைய கணினியில் ஜாவா இடைமுகப்பு நிறுவபட்டிருக்கவேண்டும் என்பது மட்டுமே நிபந்தனையாகும்  இந்த  Jubin Mitra என்ற  கருவியானது குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு Way2sms என்ற  இணைய தளத்தின் சேவையை பயன்படுத்தி கொள்கின்றது

இந்தியா முழுவதுமுள்ள அனைத்து செல்லிடத்து பேசிகளுக்கும் எண்ணிக்கை வரம்பற்ற குறுஞ்செய்திகளை இலவசமாக இதன்மூலம் அனுப்பமுடியும்

ஒருகுழுவில் உள்ள நண்பர்கள் அனைவருக்கும் குறுஞ்செய்திகளை ஒரே சொடுக்கில் அனுப்பமுடியும்

இதில்ஒவ்வொரு குறுஞ்செய்தியும் எத்தனை எழுத்திற்குள் இருந்திட வேண்டுமென்ற நிபந்தணை எதவுமில்லை

இது பயன்படுத்துவதற்கு மிக எளிதானது

இது முன்கூட்டியே கட்டமைக்கபட்ட ஏராளமான மாதிரி குறுஞ்செய்திகளை தேவையெனில் பயன்படுத்திகொள்வதற்கேதுவாக தன்னகத்தே கொண்டுள்ளது

நம்மால் அடிக்கடி பயன்படுத்திகொள்ளபடும் நண்பர்களின் முகவரிகளை பட்டியலாக பாதுகாத்திடும் வசதி இதில் உள்ளது

நாம் அனுப்பும் குறுஞ்செய்திகள் நம்முடைய செல்லிடத்துபேசியின் எண்ணுடன் கிடைக்கும் வசதி கொண்டது.

இந்த பயன்பாட்டினை  இதன் வலைதளத்திலிருந்து  பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவியபின் கணினியில் JRE (JAVA Runtime environment)என்ற பயன்பாடு நம்முடைய கணினியில் உள்ளதாவென சரிபார்த்திடுக இல்லையெனில் http://way2sms.codeplex.com/releases/view/33184#DownloadId=143560 என்ற வலைதளத்திலிருந்து இதனையும் பதிவிறக்கம் செய்துநம்முடைய  கணினியில் நிறுவிக்கொள்க பின்னர் இந்த பயன்பாட்டின் வாயிலாக  Way2sms.com என்ற இணையதளத்திற்குள் தேவையான பயனாளரின் பெயர் கடவுச்சொற்களை உள்ளீடு செய்து உள்நுழைவு செய்க  பின்னர் குறுஞ்செய்தி அனுப்பவேண்டியசெல்லிடத்து பேசிஎண் அனுப்பவேண்டிய செய்தி ஆகியவற்றை தட்டச்சு செய்து send என்ற பொத்தானை சொடுக்குக.

காத்திடுவோம் கடவுச்சொல்லை

பொதுவாக நாம் எந்து ஒரு இணையதளத்திற்குள் உள்நுழைவு செய்வதற்கும் கடவுச்சொற்களை பயன்படுத்துகின்றோம் இந்த கடவுச்சொல்லை (password ) மற்றவர்கள் key-logger என்ற பயன்பாட்டின் மூலமாக  எடுத்து தம்முடைய தீய நோக்கத்திற்கு பயன்படுத்தி கொள்கின்றார்கள் அதிலிருந்து எவ்வாறு நம்முடைய கடவுச்சொல்லை எடுத்திடாமல் தடுத்து காத்துக்கொள்வதென இப்போது பா்ர்ப்போம்

இந்த . key-logger என்பது நாம் ஒரு கணினியில் என்னென்னவெல்லாம் உள்ளீடு செய்கிறோமோ அவையனைத்தையும் மறைமுகமாக ( background ) பதிவு செய்யும் ஒரு வகையான மென் பொருளாகும் இதுமட்டுமல்லாமல் எந்த வொரு இணையதளத்திலும் அல்லது வோர்ட்,

எக்ஸ்செல் போன்ற பயன்பாடுளிலும் நாம் எந்தெந்த நேரத்தில் என்னென்ன தட்டசு செய்தோம் என்ற  விவரத்தை துல்லியமாக அறிக்கையாக  இது அளித்துவிடும்.

இன்று கணினிவழியில் இணைய தளங்களுக்கு செல்லும் செயல்கள் அனைத்தும் தொடர்புடைய இணைய தளத்திற்குள் நமக்கென்று ஒரு கணக்கு ஆரம்பிக்கு பட்டு அதற்குள் உள்நுழைவு செல்வதற்கு கடவுச்சொல் மூலமே அனுமதிக்கபடுகின்றது.   இதனை தவிர்ப்பதற்காக அனைத்து வங்கிகளின்   இணையதள கணக்கிற்குள் உள்நுழைவுசெய்வதற்கான கடவுச்சொல் உள்ளீடு செய்வதற்கு Virtual Keyboard ஒன்று தரப்பட்டு இ்ருக்கும் ஆனாலும் அதையும் கண்டுபிடிக்க mouse logger என்று ஒன்று உள்ளது மேலும்  ஜிமெயில் போன்ற மின்னஞ்சலின் கடவுச்சொல் தெரிந்தால் அதனையும் தம்முடைய இணைய குற்றசெயல்களில் ஈடுபடுத்துகின்றனர் Internet Cafe அல்லது வேறுஎதாவது தெரியாத இடத்தில்   உள்ள கணினியில் நாம் நம்முடைய மின்னஞ்சலை கையாளும்போது இந்த  key-logger தப்பிப்பதற்கு பின்வழிமுறைகளை கையாளுக
உதாரணமாக நம்முடைய கடவுச்சொல் kuppan sarkarai என்று வைத்துக்கொள்வோம் . முதலில் நம்முடைய கடவுச்சொல்லை இரண்டாக பிரித்து கொள்க  kuppan sarkarai பின்பு கடவுச்செற்கள் உள்ளீடு செய்ய வேண்டிய இடத்தில் இடம்சுட்டியை வைத்து சொடுக்கி முதலில் முதல் பாகத்தில் உள்ள கடைசி மூன்றெழுத்தினை pan  தட்டச்சு செய்த பின்பு விசைப்பலகையிலுள்ள  இடதுபுற அம்புக்குறியை அழுத்துவதன்முலம் நாம்உள்ளீடு செய்து கடவுச்செற்களுக்கு முன்பகுதியில் இடம்சுட்டியை கொண்டுவந்து நிறுத்தி மிகுதி  எழுத்தை kup தட்டச்சு செய்க இதே போன்று மற்ற  பாகஙத்தின் கடவுச்செற்களிலும் நம்முடைய விருப்பதிற்கு ஏற்றவாறு தட்டச்சு  செய்க இந்த கடவுச்சொற்களின் திருடர்களுக்கு  நம்முடைய கடவுச்சொல் ” pankup  karaisar “ என்று பதிவு ஆகிஇருக்கும் அவ்வளவுதான்  யாராலும் நம்முடைய  கடவுச்சொல்லை உபயோகிக்கமுடியாது  .
ஒரு கடவுச்சொல்லில் எத்தனை எழுத்துகள் உள்ளன, அவை என்னென்ன என்று
தெரிந்தால் போதும், அவற்றை உடைத்து விடலாம். பெரும்பாலோனோரால் எட்டு
எழுத்துகளுக்கு மேல் கடவுச்சொல்லை நினைவுக்கு வைத்துக் கொள்ள முடியாது.
வேண்டுமானால் 10 எண்களை (தொலைபேசி எண்) நினைவுக்கு வைத்துக் கொள்ளலாம்.
இங்க நாம்பார்த்த  “kuppan sarkarai ” என்ற கடவுச்சொல் “pankup  karaisar” என்று பதிவு செய்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இது அப்படியே வேலை செய்யவில்லை என்றால், இதை உடைக்க  வெவ்வேறு வழிகளில் முயல முடியும். எத்தனை எழுத்து, என்னென்ன எழுத்து
என்பதை அடிப்படையாக வைத்து கடவுச்சொற்கள் அகராதியில் இந்த எழுத்துகளைக் கொண்ட
ஒரு கடவுச்சொல்லைக் கண்டுபிடிப்பது மிக எளிது. உலகில் உள்ள தொலைபேசி எண்களின்
பட்டியல்களில் உள்ள பெயர்களையும், அடிக்கடி மக்கள் புழங்கும் கடவுச் சொற்களையும் கொண்ட ஒரு கடவுச்சொல் அகராதி திருடர்களிடம் தயராக இருக்கிறது. ஒரே
ஒரு hash lookup செய்தால் இதனை எளிதில் கண்டு பிடித்து விடலாம்.

எப்போதும் ஒரு கடவுச்சொல்லில் எந்த விதப் பெயர்களும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
எண்களும் எழுத்துகளும் குறிகளும் கலந்துள்ள  மிகசிக்கலான எளிதில் நம்மால் நினைவுகூறத்தக்க கடவுச்சொற்களை பயன்படுத்துக

ஓப்பன் ஆஃபிஸ் கால்க்-36 -ஃபங்சன் பற்றி தெரிந்துகொள்வோம்

 ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில் முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட  ஒரு ஃபார்முலாவே ஃபங்சன் ஆகும்  நம்மால் பயன்படுத்துவதற்காக  ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில் தற்போது நடைமுறையில் 350 இற்கும் மேற்பட்ட ஃபங்சன்கள் உள்ளன. இவைகளில் பெரும்பாலானவை எண்களின் கணக்கீடுகளுக்காக பயன்படுகின்றன. மிகுதி இருப்பவை நாள் ,நேரம், உரை போன்றவைகளை கையாளுவதற்கு பயன்படுகின்றன.
 பொதுவாக இந்த ஃபங்சன்களின் பெயர்கள் சுருக்கு பெயராகவே இருக்கும் உதாரனமாக FVஎன்பது Future Value என்பதன் சுருக்கு பெயராகும்  முன்பெல்லாம் இந்த ஃபங்சன்கள் பெரிய எழுத்துகளிள் மட்டுமே எழுதப்பட்டு வந்தன ஆனால் தற்போது  பெரிய எழுத்து சின்னஎழுத்து ஆகியவை தனித்தனியாகவோ கலந்தோ  இருக்கின்றன. ஆயினும் இவை எப்படி இருந்தாலும் ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில் இந்த ஃபங்சன்கள் செயற்படுமாறு இவை கட்டமைக்க  பட்டுள்ளன. இந்த ஃபங்சன்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தருமதிப்புகள்(arguments) நேரடியாக உள்ளீடு செய்வது அல்லது மற்ற கலன்களில்(cells) இருந்து படிப்பதன்மூலம் கணக்கிடுவதற்காக பயன்படுத்தி கொள்ளப் படுகின்றன.
  பெரும்பாலன ஃபங்சன்கள் ஓப்பன் ஆஃபிஸ் கால்க் ,மைக்ரோ சாப்ட் எக்செல் ஆகிய இரண்டிலும் எந்தவொரு மாறுதலும் செய்யாமலேயே ஒன்றில் உருவாக்குவது மற்றொன்றில் நன்கு செயல்படும் தன்மையுடனேயே அமைந்துள்ளன. ஒரு ஃபங்சனுக்குள் தருமதிப்பிற்கு  பதிலாக மற்றொரு ஃபங்சனையே வலைபின்னல் (nested function )போன்று =SUM(2;PRODUCT(5;7)) என்றவாறு பயன்படுத்த முடியும்
 இந்த ஃபங்சனை உள்ளீடு செய்வதற்கு Function Wizard   என்பதே பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் வழியாகும். இதனை செயற்படுத்திட மேலே கட்டளை பட்டையிலிருந்து Insert => Function=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவது அல்லது Ctrl+F2 ஆகிய விசைகளை  சேர்த்து அழுத்துவது அல்லது கருவிபட்டையிலிருந்து இதற்கான  fx என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவது ஆகிய ஏதேனுமொரு வழியை பின்பற்றுக..
                                      படம்-36-1
 இவ்வாறு செயற்படுத்தியவுடன் Function wizard என்ற வித்தகரின் உரையாடல் பெட்டி யொன்று (படம்-36-1) திரையில் தோன்றும் அதில்category  என்பதன்கீழ்  பொதுவாக பயன்பாட்டின் வகைக் கேற்றவாறு ஃபங்சன்கள் கணிதம், புள்ளியியல், உரை ,நிதி ,தரவுதளம் என பல்வேறுவகையாக  பாகுபடுத்தி வகைபடுத்தபட்டுள்ளன இவற்றுள் நமக்கு தேவையானதை மட்டும் தேர்ந்து எடுப்பதற்கு இந்தcategory  என்பதை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் தொடர்பு டைய ஃபங்சன்களின் பெயர்கள் கீழிறங்கு பட்டியலாக தோன்றும் அவற்றுள் தேவையானவற்றை மட்டும் தெரிவுசெய்து சொடுக்கியவுடன் ஃபங்சனின் தருமதிப்பை உள்ளீடு செய்வதற்கான உரைபெட்டியொன்று திரையில் தோன்றும்.
 கலன்களிலிருந்து இதனை தெரிவுசெய்யவிருப்பதால் இதனுடைய வலதுபுறமிருக்கும் சுருங்கும் (shrink)பொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக உடன் Function wizard என்ற வித்தகரின் உரையாடல்  பெட்டியினுடைய தேவையற்ற சுற்றுபுறங்கள் மறைந்து இந்த உரைபெட்டி மட்டும் உள்ளீடு செய்வதற்காக(படம்-36-1) காட்சியளிக்கும் பின்னர் விரிதாளிலிருந்து இதில் உள்ளீடு செய்வதற்காக தேவையான கலன்களை தெரிவு செய்து கொண்டு மீண்டும் இதே சுருங்கும் பொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக உடன் Function wizard என்ற வித்தகரின் உரையாடல் பெட்டி முன்பிருந்தாவாறே திரையில் தோன்றும்
  இவ்வாறு தருமதிப்புகளை தெரிவுசெய்து உள்ளீடு செய்துவரும்போது இந்த ஃபங்சனின் விடை யானது  function result என்ற பகுதியில் தோன்றும் இவ்வாறே தேவையான தருமதிப்புகளை தெரிவு செய்து கொண்டு இந்த உரையாடல்பெட்டியிலுள்ள ok என்ற பொத்தானை சொடுக்குக.   
  இந்த ஃபங்சன் விசார்டு இல்லாது நேரடியாக ஃபார்முலாவை ஒரு கலனில் உள்ளீடு செய்வது போன்றும் தேவையான விவரங்களை உள்ளீடு செய்து சரியாக இருந்தால் உள்ளீட்டு விசையை அழுத்துக அல்லது மேலே கருவிபட்டையிலுள்ள Accept   என்ற (படம்-36-2)பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் இதற்கான விடை குறிப்பிட்ட  கலனில் தோன்றும்

                                   படம்-36-2

 இந்த ஃபங்சனில் பயன்படுத்தபட்ட ஃபாரமுலா திரையில் தோன்றிட Tools => options=> open office.org calc => view => display என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.
 இந்த ஃபங்சன்களில் தவறான தருமதிப்பையோ அல்லது தவறான கணித குறியீட்டையோ பயன்படுத்திடும்போது இதனுடைய விடை தவறாகவும் பிழைசுட்டும் செய்தியும்  திரையில் தோன்றிடும். இவ்வாறான நிலையில் இந்த பிழை ஏன்ஏற்பட்டது என அறிந்து அதனை சரிசெய்வதில் நமக்கு அதிக சிரமம் ஏற்படும் அதனை தவிர்ப்பதற்காக ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில் error messages, color coding, Detective ஆகிய மூன்று கருவிகள் நமக்கு உதவிபுரிகின்றன.
 பிழைச்செய்திகள் error messages  இவ்வகையில்  error 501 முதல்  error 527 வரையில் பிழைசெய்திகள் திரையில் தோன்றிடும்   பொதுவாக ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில் சுட்டி காட்டபடும் பிழைச்செய்திகள் பின்வருமாறு,
1.error 502  இது ஒரு ஃபங்சனில் மேற்கோள் காட்டப்படும் நெடுவரிசை கலன்கள், கிடைவரிசை கலன்கள் ,விரிதாள் ஆகிய ஏதோவொன்று விடுபட்டுவிட்டது என்ற செய்தியை கூறுகின்றது
2.error 503 இது ஒரு ஃபங்சனில் வகுக்கும் எண்  பூஜ்ஜியமாக இருக்கும்போது ஏற்படும்  இதனை தவிர்த்திட =IF(C3>0, B3/C3, “0”)என்றவாறு ஃபங்சனை அமைத்து கொள்வது நல்லது.
3.error 509 இது ஒரு ஃபங்சனில் கணக்கீட்டிற்கான = போன்ற கணித குறியீடு விடுபட்டுவிட்டது என்ற செய்தியை கூறுகின்றது
4.error 510 இது ஒரு ஃபங்சனில் தருமதிப்பு விடுபட்டுவிட்டது என்ற செய்தியை கூறுகின்றது
5..error 519VALUE இது ஒரு ஃபங்சனிற்கள் அளித்துள்ள தருமதிப்பு ஏற்புடைய வகையாக இல்லை என்ற செய்தியை கூறுகின்றது
6.error 525 REFஇது ஒரு ஃபங்சனில் மேற்கோள் காட்டப்படும் நெடுவரிசை கலன்கள், கிடைவரிசை கலன்கள், விரிதாள் ஆகியஏதோவொன்று விடுபட்டுவிட்டது என்ற செய்தியை கூறுகின்றது
7.error 525NAME? இது ஒரு ஃபங்சனில் மேற்கோள் காட்டப்படும் தரவுகள் ஏற்புடையதாக இல்லை என்ற செய்தியை கூறுகின்றது
 வண்ணங்களில்பிரதிபலிக்கசெய்வது (color coding) இது ஒரு ஃபங்சனின் பிழையை  பற்றி ஆய்வுசெய்திடும்போது  குறிப்பிட்ட ஃபார்முலாவில் உள்ளீடிற்காக பயன்படுத்தி கொள்ளப்பட்ட கலன்கள் red, magenta, green, dark blue,brown, purple, yellow ஆகிய  எட்டு வண்ணங்களில் பிரதி பலிக்கும்படி உடனடியாக அடையாளம் காண்பதற்கு வசதியாக திரையில் காண்பிக்கின்றது
துப்பறிதல்  (Detective)  இந்த கருவி ஒரு ஃபார்முலாவில் பயன்படுத்தபட்ட  அதாவது முந்தைய (precedents) கலன்கள் எவையெவை ஃபார்முலாவை சார்ந்த (dependents)அதாவது பிந்தைய கலன்கள் எவையெவை என கண்டுபிடிப்பதற்கு பயன்படுகின்றது  அதற்காக ஒரு ஃபங்சன் இருக்கும் கலன்மீது இடம்சுட்டியை வைத்துகொண்டு  மேலே கட்டளைபட்டியிலுள்ள Tools => Detective => Trace Precedents => அல்லதுTrace   dependents=>(படம்-36-3) என்றவாறு கட்டளைகளை செயற்படுத்து வது அல்லதுShift+F7  ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துவது ஆகியவற்றின் மூலம் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் உடன்  மெல்லிய தொருகோடு அதன் முனைபகுதியில் ஒருவட்டத்துடன் தோன்றுவதை  இந்த ஃபார்முலாவிற்கு முந்தையது(precedents) என்றும்   அம்புக்குறியுடன் முடிவடையும் வேறு கோட்டினை(படம்-36-3) இந்த  ஃபார்முலாவை சார்ந்தது(Dependents) என்றும் அறிந்து கொள்க.
  மேலும்  இந்த கருவியின் வாயிலாகTools => Detective => Trace Error=> என்றவாறு கட்டளை செயற்படுத்துவதன் மூலம் பிழையை கண்டுபிடித்தல், ஏற்புடையது அல்லாத தரவுகளை குறியீடுசெய்தல், ஃபார்முலாவிற்கு முந்தைய அல்லது பிந்தையதை நீக்கம்செய்தல் ஆகிய செயல்களை செயற்படுத்தலாம்.

                                படம்-36-3
 இந்த ஃபங்சன்களின் விடை முழுஎண்களாக அல்லது தொகை எனில் பைசாவுடன் வருமாறு
செய்வதற்கு round என்ற ஃபங்சன் பயன்படுகின்றது உதாரணமாக இதனை கலன்எண்A3 ல் =ROUND((SUM(A1;A2)) என்றவாறு பயன்படுத்தலாம்இதன் ROUNDUP or ROUNDDOWN என்பன போன்ற வகைகளில் நமக்கு தேவையான வகையை மட்டும் பயன்படுத்தி கொள்க. பொதுவாக ரூபாவை குறிப்பிடும் தொகைகளில் இயல்புநிலையில் பைசாவுடன் வருவதற்கு Tools > Options >Open Office.org Calc > Calculate > Decimal Places என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி அமைத்து கொள்வது நல்லது
  SUMIF, COUNTIF, MATCH, SEARCH, LOOKUP, HLOOKUP, VLOOKUP,DCOUNT, DCOUNTA, DSUM, DPRODUCT, DMAX, DMIN, DAVERAGE,DSTDEV, DSTDEVP, DVAR, DVARP, DGET.என்பனபோன்ற ஃபங்சன்களில் வழக்கமான வெளிப்பாடை (expression) ஓப்பன்ஆஃபிஸ் கால்க்  அனுமதிக்கின்றது இதற்காக Tools >Options > OpenOffice.org Calc > Calculateஎன்றவாறுகட்டளைகளை செற்படுத்துக
                                   படம்-36-4
  உடன் (படம்-36-4) உள்ளவாறு OpenOffice.org Calc -Calculateஎன்ற உரையாடல் பெட்டியொன்று தோன்றும் அதில்Enable regular expressions in formulas என்ற தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்து okஎன்ற பொத்தானை சொடுக்குக. உதாரணமாக =COUNTIF(A1:A6;”r.d”)என்ற ஃபார்முலாவானது A1:A6ஆகிய கலன்களில் red ,ROD ஆகிய எழுத்துகள் உள்ளவைகளை மட்டும் கணக்கிட்டு காண்பிக்கும்
 ஒரு பயனாளர் தாம் விரும்பியவாறான மேம்பட்ட ஃபங்சன்களையும் Basic IDE ,separate add-ins or extensions ஆகியவற்றை பயன்படுத்தி user-defined functions or add-ins  என்றவாறு உருவாக்கமுடியும்

ஓப்பன் ஆஃபிஸ் கால்க்-35 ஃபார்முலாவை பயன்படுத்துதல்

  ஒப்பன் ஆஃபிஸ் கால்க் பணித்தாளின் கலன்களில் உள்ள தரவுகளைகொண்டு அவைளுக்கிடையே தொடர்புபடுத்தி அவற்றின் விளைவை காண உதவுவதுதான் ஃபார்முலாவாகும். இந்த ஃபார்முலாவானது பொதுவாக =  ,+ , – ஆகிய குறிகளுடன் மட்டுமே தொடங்கி உள்ளீடு செய்யப்படும் என்பதை மனதில் கொள்க.

 உதாரணமாக ஒப்பன் ஆஃபிஸ் கால்க்கில் 15,46ஆகிய இரு எண்களை கூட்டி விடைகாண விழைவதாக கொள்வோம் இதனை ஒருபணித்தாளின் ஏதேனுமொரு கலனில் =15+46என்று (படம்-1) நேரடியாக உள்ளீடு செய்தும்  அல்லது அதற்குபதிலாக இந்த மதிப்பை இதே பணித்தாளின் b3 ,b4 ஆகிய இருகலன்களில் தனித்தனியாக உள்ளீடு செய்து  b5 –ல் =b3+b4 என்றவாறு(படம்-1) ஃபார்முலாவை உள்ளீடு செய்தும் இவைகளுக்கான கூடுதல் 61 என காணமுடியும்.
                                            படம்-1
  இந்த ஃபார்முலாவில்   + , , * , / என்பன போன்ற கணக்கிடுவதற்கான கணித இயக்கிகள்(Arithmatic operators) , >,<  , >=, <= என்பன போன்ற சரியா தவறா என ஒப்பிட ஒப்பீட்டு இயக்கிகள்(Comparative operators)  & போன்ற உரைகளை இணைப்பதற்கு உதவிடும் உரை இயக்கிகள்(Text operators )  ஆகியவை பயன்படுகின்றன.
இந்த இயக்கிகள் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு உருவாக்கும்போது A2:B4 ! B3:D6 என்றவாறு இடையில் ஒரு ஆச்சரிய குறியுடன் எழுதப்படுகின்றன. கலன் எண்B5ல் =B3+B4என்றவாறு ஒரு ஃபார்முலா இருப்பதாக கொள்வோம் இதனை நகலெடுத்து கலன் எண்C5ல் ஒட்டும்போது இந்த நெடுவரிசைக்கு ஏற்றவாறு ஃபார்முலாவும் =B3+B4 என்பதற்கு பதிலாக =C3+C4என்றவாறு ஓப்பன் ஆஃபிஸ் கால்க் ஆனது  தானாகவே மாற்றியமைத்து கொள்கின்றது
 கலன் எண்D1ல் வட்டி சதவிகிதம் இருப்பதாக கொள்வோம் E2என்ற கலனில் வட்டி கணக்கீடு =D2*D1.என்று ஃபார்முலாவை அமைத்து E3என்ற கலனிற்கு நகலெடுத்து ஒட்டும்போது ஃபார்முலாவிலும் கலன்களின் எண்கள்=D3*D2 தகவமைத்துகொள்வதால் தவறான விடை கிடைக்கும்
 அதற்கு பதிலாக சதவிகிதத்தை காட்டிடும் கலன்எண்ணிற்கு மட்டும் $D$1என்றவாறு குறியீட்டை அமைத்த பின்னர் ஃபார்முலாவை E3என்ற கலனிற்கு நகலெடுத்து  =D2*$D$1என்றவாறு ஒட்டினால் சரியான விடை கிடைக்கும் இதனை  மாறிலி மேற்பார்வை (Absolute referencing)எனக்குறிப்பிடுவர்  இதில் இவ்வாறான டாலர் குறியீட்டிற்கு பின்னர் இருக்கும் எழுத்து அல்லது எண் நகலெடுத்து  ஒட்டிடும்போது மாறாமல் நிலையாக இருக்கும்.
 ஒருநீண்ட ஃபார்முலாவில் இயக்கிகள், குறியீடுகள் போன்றவைகள் அதிகஅளவில் பயன்படுத்திடும்போது எந்தவொரு ஃபார்முலாவின் கணக்கீடும்  இடது புறத்திலிருந்து தான் வலதுபுறத்திற்கு கணக்கிடு செய்யும் முன்னுரிமை அமையும்.அவ்வாறே முதலில் பெருக்கல் வகுத்தல் குறியீடும் அதன்பின்னர் கூட்டல் கழித்தல் குறியீடும் கணக்கீடு செய்யும் முன்னுரிமை அமையும்.
 தரவுகளை கிடைவரிசையில் அல்லது நெடுவரிசையில் உள்ளீடுசெய்து ஃபார்முலா அமைத்திடும்போது முதலில் அவைகளுக்கு பெயரிட்டு அதன்பின்னர் இந்த பெயர்களை ஃபார்முலாவில் பயன்படுத்திகொள்வது மிகஎளியவழியாகும்.
 இந்த வசதி பணித்தாட்களுக்கும் பயன்படுத்திகொள்ளமுடியும் உதாரணமாக.ஒரு நிறுவனத்தில் ஒன்றுக்குமேற்பட்ட  கிளைகளின் வருமானத்தை கணக்கிடும்போது ஒவ்வொரு கிளைக்கும் ஒவ்வொரு பணித்தாளும் அவைகளின் ஒட்டுமொத்தம் கணக்கிட தனியானதொரு பணித்தாளும் பயன்படுத்தி அறிக்கை தயார்செய்வதாக கொள்வோம்
 பணித்தாள்-1 –ல் தேவையானவாறு ஃபார்முலாவையும் இதர விவரங் களையும்  கட்டமைத்துகொண்டு பணித்தாள் தாவிபகுதியில்(worksheet tab) இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் Rename என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் Branch1என்றவாறு ஒரு பெயரை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை தட்டுக  இவ்வாறே பணித்தாள்-2 இற்கு Branch2என்றும் பணித்தாள்-3 இற்குBranch3 என்றும் பணித்தாள்-4 இற்கு Combinedஎன்றும் பெயரிட்டுகொள்க பிறகு பணித்தாள்-1 –ல் உள்ள பார்முலாவையும் இதர விவரங் களையும் நகலெடுத்து மற்ற பணித்தாட்களில் ஒட்டிகொள்க
  பணித்தாள்-4 இன் விவரம் கிளை விவரங்களின் ஒட்டுமொத்தம்(Combined) என்பதால் இதனுடைய கலன் எண்K7ல்  இடம் சுட்டியை வைத்து   வழக்கமான ஃபார்முலாவை உள்ளீடு செய்வதற்கான = என்ற குறியை தட்டச்சுசெய்து Branch1தாவியை தெரிவுசெய்து சொடுக்கி அந்த தாளின் கலன்எண் K7 ஐ தெரிவுசெய்து சொடுக்குக அவ்வாறே Branch2 , Branch3 ஆகியவற்றின்  தாவிகளையும் தெரிவுசெய்து சொடுக்கி அந்தந்த தாளின் கலன்எண் K7 ஐயும் தெரிவுசெய்து சொடுக்குக.
 இப்போது இந்த Combined பணித்தாளின்   கலன்எண் K7 ல்கிளைகளின் ஒட்டுமொத்த விவரமாக இருக்கும்  இதன்பின்னர் கலன்எண் K7 இன் ஃபார்முலாவை நகலெடுத்து கொண்டு இதே பணித்தாளின் கலன்களின் எண்களான K7..N17 ஆகியவற்றை தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளை பட்டையிலுள்ள Edit =>Paste Special=> என்றவாறு(படம்-2) கட்டளைகளை சொடுக்கி செயற்படுத்துக
                                     படம்-2
உடன் தோன்றிடும் Paste Specialஎன்ற(படம்-2) உரையாடல் பெட்டியில் Paste All,Formats ஆகிய தேர்வுசெய்பெட்டிகள் தெரிவுசெய்யப்பட்டிருப்பதை நீக்கம்செய்து okஎன்ற பொத்தானை சொடுக்குக உடன் (படம்-3)-ல் உளி்ளவாறு  எச்சரிக்கை செய்தி பெட்டி யொன்று திரையில் தோன்றிடும்
                                    படம்-3
 அதில் Yes என்ற பொத்தானை சொடுக்குக  உடன் கலன்எண் K7 இன் ஃபார்முலா வானது   K7..N17ஆகிய கலன்களுக்கு நகலெடுத்து ஒட்டப்பட்டுவிடும்இப்போது பணித்தாளின் தோற்றம் படம்-4-ல் உள்ளவாறு இருக்கும்
                                   படம்-4
 பொதுவாக பலரும் நீண்ட சிக்கலான ஃபார்முலாவில் நிலையான மதிப்பை நேரடியாக C1 –ல் =0.75*B1என்றவாறு  பயன்படுத்துவார்கள்.இதற்கு பதிலாக இந்த நிலையான மாறிலி மதிப்பை தனியாக ஒரு கலன் A1-ல் உள்ளீடுசெய்துC1-ல்  =A1*B1 என்றவாறு ஃபார்முலாவை அமைத்து கொள்வது எளிதானதும் நல்லதும் ஆகும்ஏனெனில் பின்னாட்களில் இந்த நிலையான மதிப்பை மாற்றிட குறிப்பிட்ட கலனிற்கு மட்டும் சென்று மதிப்பை மாற்றியமைத்திட்டால் இதனை பயன்படுத்தி ஃபார்முலாஅமைத்திட்ட அனைத்து இடங்களிலும் மதிப்பு தானாக மாற்றியமைத்துகொள்ளும்
  ஒரு பணித்தாளில் பல்வேறு ஃபார்முலாவைகொண்டு மேம்படுத்திகொண்டே போகும்போது அவைகளுக்கான விளக்குறிப்பையும் அந்தந்த கலன்களில் பதிந்துவைத்துகொள்வது  பின்னாட்களில் பயனுள்ளதாக இருக்கும்.

PDF ஆவணத்தில் கூட மின் கையெழுத்தை இணைத்திடமுடியும்

தாட்களே இல்லாத அலுவலகபணி என்ற மின்னணு வசதிக்கு தற்போது நாமனைவரும் மாறிவருகின்றோம் இந்நிலையில் எந்தவொரு அவணத்தை உருவாக்கிடும்போதும் அதை உருவாக்குபவர் அதனை ஆமோதித்து அங்கீகரிப்பவர் ஆகியோரின் கையொப்பத்துடன் இருந்தால் மட்டுமே அதனை ஒரு நம்பத்தகுந்த ஆதாரமாக ஏற்றுகொள்வோம் அவ்வாறே மின்னாளுமையில் உருவாக்கபடுகின்ற ஆவணங்களிலும் உத்தரவுகளிலும் இதனை   அங்கீகரிப்பவரின் கையொப்பத்துடன் இருந்தால் ஏற்கதகுந்த ஆதாரமாக கொள்ளமுடியும்  எந்தவொரு கணினியிலும் குறிப்பிட்ட எழுத்துரு இல்லாததால் அவ்வாவணத்தை கையாளமுடியவில்லை என்ற குறையை நிவர்த்திக்க உதவிடும் PDF ஆவணத்தில் கூட மின் கையெழு்த்தை இணைத்திடமுடியும் இதற்காக மின்கையெழுத்தை இணைக்கவிரும்பும்PDFஆவணத்தை  தெரிவுசெய்து கையொப்பம்  பெறவிரும்புபவரின் மின்னஞ்சல்ம முகவரியுடன் https://esign.adobe.com/ என்ற தளத்திற்கு மேலேற்றிடுக

முதலில் நம்முடைய கையொப்பம் வேண்டுமெனில் I sign first என்பதைதெரிவுசெய்து கையொப்பத்தை இணைத்திடுக.அல்லது இறுதியாக எனில் I sign last என்பதை தெரிவுசெய்துகொள்க


உடன் மற்றவர்கள் கையொப்பமிடுவதற்கும் ஏற்று அங்கீகரிப்பதற்கும் நாம் உள்ளீடுசெய்து அவரவர்களுடைய மின்னஞ்சல் முகவரிகளுக்கு இந்த தளம் அறிவிப்பு ஒன்றை அனுப்பிவைக்கும் அதனைதொடர்ந்து சம்பந்தபட்டவர்களனைவரும் இதனை ஏற்று அங்கீகாரம் செய்து தத்தமது மின்கையெழுத்தை அதில் சேர்த்திடவேண்டும்


இவ்வாறு அனைவருடைய மின்கையொப்பமும் இந்த பிடிஎஃப் ஆவணத்தில் பெறப்பட்டவுடன் இந்த பிடிஎஃப் ஆவணம் செயலுக்கு வந்துவிடும் தேவையெனில் இதனை பதிவிறக்கம்செய்து பயன்படுத்திகொள்ளமுடியும் இந்த வலைதளத்தில் இந்த பிடிஎஃப் ஆவணத்தை ஆறுமதங்கள்வரை பாதுகாத்து வைத்திருப்பார்கள்

வழக்கமாக ஒருஉத்தரவு அல்லது ஆவணத்தின் கடைசி பக்கத்தில் மட்டுமே அவ்வுத்திரவை அல்லது ஆவணத்தை உருவாக்கியவரும் ஆமோதித்து அங்கீகரித்தவரும் கையொப்பம் இட்டிருப்பார்கள் அந்நிலையில் இதனுடைய இடையிலுள்ள பக்கங்களை ஒரிசில விஷமிகள் எப்படி வேண்டுமானாலும் மாற்றியமைத்துகொள்ள வாய்ப்புள்ளது ஆனால் அடோப் மின்கையொப்ப வசதியில் அவ்வாறு செய்யமுடியாது ஒருஉத்தரவு அல்லது ஆவணத்தில் அனைவரும் கையொப்பமிட்டு செயலுக்கு வந்தவுடன் இதில் ஒரு blue ribbon போன்ற தோற்றம் ஒவ்வொரு பக்கத்திலும் உருவாகிவிடும் யாரேனும் இடையிலுள்ள பக்கங்களில் மாறுதல் செய்தால் ஆவ்வாவணத்தில் இந்த தோற்றம் மறைந்துவிடும் அதனால் ஒரு மின்கையொப்பமிடபட்ட ஆவணமானது இந்த அடையாளத்தினை அடிப்படையாக கொண்டு அக்குறிப்பிட்ட மின்கையொப்பமி்ட்ட ஆவணம் ஏற்கதகுந்ததா நம்பத்தகுந்ததா வென முடிவுசெய்துகொள்ளமுடியும்

Previous Older Entries