எந்த அச்சுபொறியை தெரிவு செய்வது என தவிப்பவர்களுக்கான ஆலோசனை

சிறிய அல்லது நடுத்தர வியாபார நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான ஒரு சிறந்த கருவியாக அச்சுப்பொறியானது விளங்குகின்றது. இந்த அச்சுபொறிகளில் புள்ளி அச்சுப்பொறி, மைஅச்சுப்பொறி,ஒளிஅச்சுப்பொறி போன்று எத்தனையோ வகையிள் உள்ளன மேலும் அவைகளுள் உள்வகையும் ஏராளமாக உள்ளன இவைகளில் இருந்து சிறிய அல்லது நடுத்தர வியாபார நிறுவனங்களுக்கு பொருத்தமான ஒரு சிறந்த அச்சுப்பொறியை எந்த வகை என தேர்வு செய்வது மிக்ச்சிரமான செயலாகின்றது. புள்ளி அச்சுப்பொறி, மைஅச்சுப்பொறி ஆகிய இரண்டைவிட ,ஒளிஅச்சுப்பொறியானது அச்சிடும் பக்கத்தின் தெளிவு தோற்றம் அச்சிடும் வேகம் ஆகிய தன்மையில் மிகச் சிறந்ததாக அமைகின்றது. ஆனால் மைஅச்சுபோறியை விட அதிக செலவு பிடிக்ககூடியதாக விளங்குகின்றது. ஆனால் பக்கமொன்றிற்கான செலவை கணக்கிட்டால் லேசர்அச்சுபொறி மிகமிக குறைவாக இருக்கின்றது. ஏனெனில் அச்சிடஉதவிடும் டோனரை கொண்டு அதிக ப்க்கங்களை லேசர் அச்சுபொறியில் மைஅச்சுபொறியைவிட விரைவாக அச்சிட்டு கொள்ளலாம் .

பொதுவாக அச்சுப்பொறியினுடனைய அச்சிடும் பக்கத்தின் தெளிவு திறனை(resolution)இஞ்ச் ஒன்றிற்கு எத்தனை புள்ளிகள்(dots per inch(dpi))உள்ளன என்பதை வைத்து கணக்கிடபடுகின்றது உரைகளின் பக்கமானது 600X600 dpi என்றும் படங்கள் அல்லது உருவபடங்கள் 1200 X 600dpi முதல் 5760 X 1440 dpiஎன்றவாறும் இதன் தெளிவு இருக்கும்.

அச்சிடும் வேகத்தினை நிமிடத்திற்கு எத்தனை பக்கங்கள் (pages perminut (PPM))அச்சிடுகின்றது என அளவிடுவார்கள். அச்சிடும் பக்கமானது கருவெள்ளையாகவா அல்லது வண்ணத்திலா படங்களுடனா என்பன போன்ற காரணிகள் அச்சிடும் வேகத்தை நிர்ணியக்கின்றது அச்சிடும் வேகமானது நிமிடத்திற்கு 4 முதல் 10 பக்கங்கள் வரை உள்ளன .

அதற்கடுததாக ஏ4 வகை தாளா, லீகல் அளவு தாளா உறை அளவு தாளா எந்தவகை தாட்களை கொண்டு அச்சிடவேண்டும் என்ற நம்முடைய விருப்பத்திற்கேற்ப தாட்களை உள்செலுத்தும் தட்டும் வெளியில் அச்சிட்டு வருவதை பெற்றிடும் தட்டின் வகையும் அமைகின்றன.

நான்காவதாக அச்சுப்பொறிக்கென தனியான நினைவக கொள்ளளவும் அச்சுபொறியின் திறனை நிர்ணயம் செய்கின்றது நாம் கணினிக்கு மட்டுமே நினைவக கொள்ளளவு திறன் உண்டு அச்சுப்பொறிக்கெல்லாம் அதுபோன்று நினைவகம் இல்லையென தவறாக எண்ணி வந்தோம் ஆயினும் அதிக நினைவக்கத்திறன் கொண்ட அச்சுபோறிகள் போரளவு பக்கங்களை அச்சிடுவதில் மிகச்சிறந்து பங்கு வகிக்கின்றன.

அச்சுப்பொறியை கணினியுடன் இணைப்பதற்கான கம்பியும் எந்தவகையை சேர்ந்தது என சரிபார்த்து கொள்க யூஎஸ்பி 2.00 வகையானது நேரடியாக தனியான கணினியுடன் தனியானதொரு அச்சுப்பொறியை இணைப்பதற்கு பயன்படுத்தபடுகின்றது வளாக பிணைய இணைப்பில் உள்ள எந்தவொரு கணினியிலிருந்தும அச்சிடுவதற்கு அதற்கேற்ற வளாக பிணைய கம்பியை அச்சப்பொறியுடன் இணைத்திடவேண்டும்

சுற்றுசூழலை பாதிக்காத விற்பனைக்கு பிந்தை சேவையை வழங்க்கூடிய பெரும்பாலானவர்களால் கொள்முதல் செய்யபடுகின்றன சந்தையில் மிகச்சிறந்ததாக விளங்ககூடிய வகையை நம்முடைய தேவைக்கும் நாம் செலவழிக்கபோகும் தொகைக்கும் ஏற்ற வகையை தெரிவுசெய்து கொள்க

Gip எனும் திறமூலமென்பொருள்

இணைய உலாவியில் நம்மால் தட்டச்சு செய்யப்படும் IP Address, Network mask (subnet mask) , prefix lengthஆகிய விவரங்களிலிருந்து கணினியின் நிருவாகிக்கு தேவையான IP prefix length, subnets, etcபோன்றவிவரங்களை அறிந்து கொள்ள உதவும் IP Address Calculator பணியை Gip எனும் திறமூலமென்பொருளானது செய்கின்றது

இதிலுள்ள IPV4 Address Analyzer என்ற தாவியின் திரையில் நாம் உள்ளீடு செய்திடும் விவரங்களுக்கு ஏற்ற நாம் படித்தறியும் விவரமாக output என்ற பகுதியிலும், இயந்திரமொழியாக Binary output என்ற பகுதியிலும் ,இணைய விவரமாக Hexadecimal என்ற பகுதியிலும் வெளியிடுகின்றது .

அவ்வாறே IPv4 Range to Prefix Converter எனும் தாவியின் திரையில் நாம் உள்ளீடு செய்திடும் விவரங்களுக்கு ஏற்ற prefix ,subnet mask ஆகிய விவரங்களை வழங்குகின்றது மேலும் இது IPV4 Subnet Calculator எனும் தாவியின் திரையில் இதர விவரங்களை கணக்கிட்டு வழங்குகின்றது.அதுமட்டுமின்றி இது மிகசிக்கலான இணைய முகவரி கணக்கீடுகளை மிகஎளிதாக கணக்கிட்டு நமக்கு வழங்குகின்றது

இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளhttp://code.google.com/p/gip/ என்ற இணைய பக்கத்திற்கு செல்க

 103.8.2

பங்கு சந்தையை கவணித்திட JStock எனும் திறமூல கருவி

JStock என்பது Windows, Linux, Mac OS X Solarisபோன்ற அனைத்து இயக்கமுறைமைகளிலும் 32-bit , 64-bit ஆகிய வகைகளிலும் செயல்படும் திறன் வாய்ந்த பங்குசந்தையில் முதலீடு செய்பவர்களுக்கான ஒரு திறமூல இயக்கநேர கருவியாகும் இது முதலீட்டாளர்கள் , அனைத்துவகை பயனாளர்கள்,வியாபாரிகள் பங்குசந்தை பற்றிய ஆர்வமுள்ளவர்கள் ஏன் பங்குசந்தைபற்றி பயிலும் கல்லூரி மாணவர்களுக்கும் தற்போதை பங்குசந்தையில் பங்குகளின் விலைநிலவரம் பற்றி அறிந்து கொள்ள உதவுகின்ற ஒரு பயன்பாட்டு கருவியாக விளங்குகின்றது மேலும் இது உலகஅளவில் Australia, China, Denmark, France, Hong Kong, India, Italy, Malaysia, Norway, Switzerland, United States and United Kingdomஆகிய நாடுகளில் உள்ள 26 க்கும் மேலான பங்கு சந்தைகளின் விலைநிலவரங்களை நேரடியாக பயனாளர்களுக்கு Stock Watchlist என்ற வாய்ப்பின் வாயிலாக வழங்குகின்றது நமக்கு இது SMS அல்லதுemail ஆகிய வசதியின் வாயிலாக அவ்வப்போது எச்சரிக்கை செய்தியை அனுப்பிக்கொண்டே இருக்கின்றது

இந்த பயன்பாட்டு கருவியில் Stock Watchlist, Stock Indicator Editor, Stock Indicator Scanner, Portfolio Management , Market Chit Chat ஆகிய ஐந்து தாவியின் திரையில் உள்ள வாய்ப்புகளின் வாயிலாக நாம் விரும்பிய செயல்களை செய்து கொள்ள உதவுகின்றது இந்த திறமூல பயன்பாட்டினை நம்முடைய கணினியில் நிறுவி செயல்படுத்தியவுடன் தானாகவே பங்குசந்தையுடனான சேவையாளர்களுடன் தேவையான இணைப்பை ஏற்படுத்திகொண்டு ஐந்தாயிரத்திற்கு அதிகமான நிறுவனங்களின் பங்குகளுடைய விலைநிலவரத்தை நம்முடைய கணினியின் திரையில் பட்டியலிடுகின்றது.நாம் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளை பற்றிய செய்தியை அறிந்துகொள்ள இதிலுள்ள Database =>Stock Database=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி அந்நிறுவனத்தின் விவரத்தை சேர்த்து கொள்ளவேண்டும் பங்கு சந்தை பற்றிய அவ்வப்போதைய பங்குகளின் விலை நிலவரத்தை அறிவிப்பு செய்திடும்NYSE, Nasdaq, AMEX, Pink Sheet, ஆகிய அறிவிப்பு விவரங்களை அல்லது நாம் வரையறுத்தவாறு (User Defined) பங்குகளின் விலை நிலவரங்களை கணினியின் திரையில் பிரதிபலித்திட செய்திட செய்கின்றது. மேலும் Stock Indicator Editor என்ற தாவியின் திரைக்கு சென்று குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கு விலைநிலவரத்தை அறிவிப்பு செய்திடுமாறு அமைத்திடலாம் அல்லது Nasdaq Composite எனும் வாய்ப்பை கருவிபட்டையில் அமைத்து பங்கு சந்தை விலை நிலவரங்களை வரைபடத்தின் வாயிலாகஅறிந்து கொள்ளலாம் இதிலுள்ள .Portfolio Management என்ற தாவியின் திரைக்கு சென்று பங்குகளை விற்பனை செய்வதற்கான வாய்ப்பினை அறிந்து கொள்ளலாம் Dividend என்ற பொத்தானை சொடுக்கி நம்முடைய பங்குகளுக்கு எவ்வளவு பங்கு ஈவுத்தொகை கிடைக்கும் என அறிந்து கொள்ளலாம் Cash என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி Cash Deposits and Withdrawals என்ற உரையாடல் பெட்டியை திரையில் தோன்றசெய்து பணத்தை இருப்பாக முதலீடு செய்திடவும் ,அந்த இருப்பிலிருந்து எடுத்திடவும் அமைக்கலாம்

பட்டியலில் உள்ளOptionsஎனும் வாய்ப்பை பயன்படுத்தி பங்குசந்தை தரகர்களின் Broker Fee, Stamp Duty , Clearing Fee ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம் , Wealth , Alert, GUI, Color, Network, Indicator, Chat and Update. ஆகிய இதர பங்கு சந்தை சார்ந்த விவரங்களையும் செயல்களையும் செய்து கொள்ளலாம் இந்த திறமூல மென்பொருள் நம்முடைய கணினியில் இயங்குவதற்கு JRE (Java Runtime Environment) என்பது முன்கூட்டியே நிறுவப்பட்டிருக்கவேண்டும் இந்த திறமூல மென்பொருள் பற்றி மேலும் விவரம் அறிந்துகொள்ளவும் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் http://jstock.sourceforge.net/download.htmlஎன்ற இணைய பக்கத்திற்கு செல்க.

 103.8.1

Diaஎன்ற திறமூல கருவி

மின்சுற்றுகள்(circuits),பிணைய வரைபடம்(network diagram), தொடர்வரைபடம்(flowchart) போன்றவைகளை Diaஎன்ற திறமூல கருவியை பயன்படுத்தி எளிதாக உருவாக்கிடமுடியும் மேலும் இது அவ்வாறானவைகளை உருவாக்குவதில் ஒரு சிறந்த மிகவலுவான திறன்மிகுந்த கருவியாக விளங்குகின்றது பொதுவாக பயிற்சியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வழக்கமான உரைகளடங்கிய எம்எஸ் பவர் பாய்ன்ட்,எம்எஸ் வேர்டு ஆகிய பயன்பாடுகளின் படக்காட்சிகளாக காண்பித்தால் பார்வையாளர்களின் கவனத்தை எளிதில் கவரமுடியாது அதற்கு பதிலாக அதே கருத்துகளை Diaஎன்ற திறமூல கருவியை கொண்டு தொடர்படக்காட்சிகளாக(flowcharts) உருவாக்கி காண்பிக்கும்போது பார்வையாளர்களை தொடர்ந்து காட்சிகளின் கவனத்தை நம்பக்கம் ஈர்த்து நாம் கூற விழையும் கருத்துகள் தெரிந்து அறிந்து கொள்ளுமாறு செய்கின்றது இதற்காக ஏராளமான முன்கூட்டியே தயார்நிலையில் உள்ள கருவிகளடங்கிய மிகச்சிறிய 19mb to 30mbஎன்ற அளவேயுள்ள கோப்புகட்டுகளாக இந்த திறமூல கருவி கையடக்கமாக நமக்கு கிடைக்கின்றது

குறிப்பிட்ட வரபடத்தின் பண்பியல்புகளை மாறுதல் செய்திட அதனை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் குறுக்குவழிபட்டியில் properties என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கியபிறகு விரியும்பண்பியல்பு பெட்டியில் தேவையான தாவியின் திரைக்கு சென்று தேவையான மாறுதல்கள் செய்திடலாம்.

மேலும் line color, width, style, fill colorஎன்பனபோன்ற வாய்ப்புகளை இதனுடைய இடதுபுற வண்ணத்தட்டிலிருக்கும் கருவிகளிலிருந்து எடுத்து பயன்படுத்தி கொள்க இந்த பயன்பாடானது Windows, Mac OS X , Linuxஆகிய எந்தவகை இயக்கமுறைகளிலும் செயல்படும் திறன்வாய்ந்ததாகும் இதில் உருவாக்கபடும் கோப்புகள் .diaஎன்ற பின்னொட்டுடன் கூடிய கோப்பாக சேமித்திட செய்கின்றது அல்லது File => Export=>என்ற வாறு கட்டளைகளை செயற்படுத்தி BMP, JPG, TIFF, PNG,ஆகிய வடிவமைப்புகோப்புகளாக நாம் எளிதில் மற்ற பயன்பாடுகளை கொண்டு கையாளதக்க வகையில் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கின்றது

இதனை பற்றி மேலும் விவரம் அறிந்த கொள்ளவும் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் http://dia-installer.de/என்ற இணைய பக்கத்திற்கு செல்க

 103.7.1

view3dsceneஎனும் திறமூல கருவியின் மூலம் முப்பரிமான உருவபடங்களை உருவாக்கிடமுடியும்

முதலில் இருபரிமாணம் என்றும் அதன்பின் முப்பரிமாணம் என்றும் உருவபடங்களின் வளர்ச்சியானது மேம்பட்டுவந்தபின்னர் வரைகலையில் முக்கியதிருப்பமாக இது அமைந்தது அதனால் வரைகலை வடிவமைப்பு செலவு குறைந்தது மட்டுமல்லாது வரைகலை வல்லுனரின் கற்பனைத்திறனை எல்லையற்ற அளவிற்கு விரிவுபடுத்திவிட்டது தொடர்ந்து புதிய வீடுகளை வடிவமைப்பு செய்தல்,புதிய இயந்திரங்களையும் பேருந்து சிற்றுந்து போன்றவைகளையும் வடிவமைப்பு செய்வதிலும் மிக முக்கிய பங்காற்றுகின்றது. இந்த முப்பரிமான வரைகலைக்கென ஏராளமான பயன்பாடுகள் தற்போது சந்தையில் தயாராக இருந்தாலும் view3dsceneஎனும் திறமூல பயன்பாடு மிகசிறந்ததாக விளங்குகின்றது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்ட இந்த view3dsceneஎனும் திறமூல கருவியின் மூலம் முப்பரிமான உருவபடங்களை இடைமுகம் செய்து திருத்துதல்,காட்சியாக காணுதல் போன்ற செயல்களை செய்யலாம் இது VRML, X3D, Kanim, Collada, 3D Studio 3Ds, MD3, Wavefront OBJ, and Videoscape GEO.போன்ற வடிவமைப்பு கோப்புகளை ஆதரிக்கின்றது திரைகாட்சிகளை படமாக்கிடும்screenshotsதிறன்கொணடது இந்த பயன்பாட்டில் Open , Examine, Walk, Fly,Collisionsஆகிய பொத்தான்களை கொண்டு முப்பரிமான கோப்புகளை திரையில் கொண்டுவருதல்,சரிபார்த்தல் போன்ற செயல்களை செய்திடமுடியும் File, View, Navigation, Animation, Edit, Console , Displayஆகிய பட்டியல்களின் வாய்ப்புகளின் வாயிலாக காட்சியாக கண்டு நாம்விரும்பியவாறு முப்பரிமான கோப்பில் மாறுதல்கள் செய்து கொள்ளமுடியும் இந்த காட்சியின் தகவல்கள் திரையின் கீழே இடதுபுறமூலையில் பிரதிபலிக்கசெய்கின்றது இதனுடைய Navigationஎன்ற பட்டியிலுள்ள Jump to Viewpoint, Examine, Walk, Fly, None,ஆகிய வாய்ப்புகளை பயன்படுத்தி முப்பரிமான காட்சியை மேம்படுத்தி கொள்ளமுடியும் அதுமட்டுமல்லாது இதனுடைய Viewஎன்ற பட்டியிலுள்ள Fill Mode, Screen Effects, Lightning, Shaders, Textures, Blendingஆகிய வாய்ப்புகளை பயன்படுத்தி முப்பரிமான காட்சியை மேலும் மெருகூட்டி கொள்ளமுடியும்

இதனை http://castle-engine.sourceforge.net/view3dscene.phpஎன்ற இணைய பக்கத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

103.6.1

அக்சஸ்2007-28 வி பிஏவுடன் பொருள்நோக்குமொழியாக அக்சஸ்-2007

 

நவீன பயன்பாடுகள் அனைத்துமே எந்தவொருநிலையையும் சமாளிக்ககூடியதும் (robust)மீண்டும் மீண்டும் பயன்படுத்திகொள்ளுமாறான குறிமுறைகளை (reusable code)கொண்டதும் ஆக உள்ளன, இவ்வாறாக இல்லையெனில் ஒருபயன்பாட்டை பயனாளர் எவரும் பயன்படுத்திட மாட்டார்கள் என்ற தற்போதைய நிலையுள்ளது அதனடிப்படையில் மைக்ரோ சாப்ட் நிறுவனம் தம்முடைய அக்சஸ் பயன்பாட்டினையும் இவ்வாறே செயல்படுவதற்கு ஏதுவாக இயக்கநேர குறிமுறை நுலகத்தின் வழியாக இறக்குமதிசெய்வது அல்லது ஏற்றுமதி செய்து கொள்வது ஆகியசெயலின் மூலம் இதற்கான குறிமுறையை அனுகிடுமாறு அனுமதிக்கின்றது,

பொருள்நோக்கு நிரல்தொடர் (object oriented program) என்றால் என்னவென உங்களுக்கு எற்கனவே தெரிந்திருக்கும் என நம்புகின்றேன் இந்நிலையில் அக்சஸ் எவ்வாறு பொருள் நோக்கு பயன்பாடாக முடியும் என்ற ஐயம் அனைவரின் மனதிலும் எழும்,அக்சஸில் உள்ள படிவம் அறிக்கை ஆகியவையே பொருளாகும் இவற்றின் மூலமாகவே அக்சஸின் வெளியீடுகள் நமக்கு கிடைக்கின்றன அதனால் அக்சஸை பொருள்நோக்கு பயன்பாடு எனவும் கூறமுடியும் இந்த பொருட்களை விபிஏவை பயன்படுத்தி உருவாகுமாறு அதற்கான குறிமுறைகளைஉட்பொதிந்தால் பொருள் நோக்கு பயன்பாடாக அக்சஸ் மாறிவிடுகின்றது ஆனால் பொருள்நோக்கு பயன்பாட்டின் அடிப்படை பண்பயில்பான பொதிவுறையாக்கம் (encaptualation) எவ்வாறு அக்சஸில் செயல்படுத்தப்படுகின்றது என இப்போது காண்போம்,

பொருள்சார்ந்த செயல்வரைவுகளின் தரவுகளையும் செயல்கூறுகளையும் ஒரு பொருளிற்குள் தனித்தனியாக பிரித்து வைக்கின்றது, அதனடிப்படையில் செயல்முறையில் வேறெங்கும் சிக்கல் ஏற்படாதவாறு மாற்றமைவுசெய்ய அனுமதிக்கின்றது, இதனையே பொதிவுறையாக்கம் என அழைக்கின்றோம்,

அக்சஸின் படிவம் ஒன்றிற்குள் ஒரு உரைபெட்டியினை கொண்டுவந்து வைத்தவுடன் இந்த உரைபெட்டிக்கு என்று தனியான புதிய பண்புகள்,வழிமுறைகள்,நிகழ்வுகள் ஆகியவை எற்படுத்தப்பட்டு இந்த உரைபெட்டி மட்டும் தனித்து இயங்கிடுமாறு  உருவாகி விடுகின்றது, இவ்வாறு இந்த உரைபெட்டியை உருவாக்குவது கண்ணிற்கு தெரிந்த பொதிவுறையாக்கமாகும்

Err object என்பதை பயன்படுத்தி ஒருகட்டளைத்தொடரில் எந்த இடத்தில் எவ்வாறான பிழைஏற்பட்டது என கண்டுபிடிக்க முடியும் பின்னர் இந்த பிழையை சரிசெய்து சரியாக செயல்படுமாறு மாற்றி யமைக்கமுடியும், அதன்பின்னர் clear வழிமுறையில் Errobject ஐ மறுஅமைவு செய்து மீண்டும் அடுத்தபிழை ஏதேனும் ஏற்பட்டுள்ளதாவென காண்பதற்கு ஏதுவாக தயார் செய்யமுடியும்,இந்த Err objectஐ கண்ணால் காணமுடியாது ஆனால் இதன் பயனை மட்டும் உணரமுடியும் அதனால் இதனை ஒரு கண்ணிற்க்கு புலப்படாத பொதிவுறையாக்கம் செய்யப்பட்ட பொருளாக கருதப்படுகின்றது, அடுத்ததாக

Product inventory object என்பதை எடுத்து கொள்வோம்,இதற்குள் இதில் உள்ள ஒருபொருளின் பெயர்,பொருள் ஒவ்வொன்றின் விலை,கையிருப்பு அளவின் எண்ணிக்கை, மொத்தவிலை என்பன போன்ற பல்வேறுவகையான தனித்தனி பண்பியல்புகள் தனித்தனியாக பராமரிக்கப்படுகின்றன,

ஒருபெயர்பட்டி அல்லது  உரைபெட்டியின் கட்டுப்பாடு  ஒருசாதாரண பொருளாகும், இதன் அடிப்படைத்தன்மையும் பண்பியல்புகளும் மிகசிக்கலான பொருளிற்குள் இருப்பது போன்றதேயாகும் பின்வரும்( நிரல்தொடர்-28-1) விபிஏ குறிமுறை யானது எவ்வாறு ஒரு பொருளானது அக்சஸ் பயன்பாட்டில் உபயோகபடுத்திடமுடியும் எனகூறுகின்றது,

நிரல்தொடர்-28-1

Dim objectName As ObjectClass

Set objectName = New ObjecClass

‘Setting a property of the object:

objectName.SomProperty = SomValue

‘Invoking a method of the object:

objectName.SomeMethod

இதில் பொருளின் பெயரே ஒரு ObjectName ஆகும்,இதனை Dim என்ற கூற்றின் வாயிலாக அறிவிப்பு செய்யப்படுகின்றது,

ஒருஇனக்கூற்றின் (class module)குறிமுறையில் பொருள்ஒன்று வரையறுக்கப் படுகின்றது, அதன் அடிப்படையில் அக்சஸ் பயன்பாட்டிற்குள் ஒரு இனக்கூற்றினை சேர்க்கமுடியும், பின்னர் அதற்கான  பண்பியல்புகள் வழிமுறையும் குறிமுறையையும் இதனுடன் இணைக்க முடியும் அதன்பின்னர் இனக்கூறின் பொருளை வரையறுப்பதற்காக பயன்படுத்தமுடியும், இங்கு இனக்கூறின்பெயரே பொருள் இனத்தின்பெயராகும்,

பொதுவாக ஒருசிறப்புவகை குறிமுறைத் தகவமைவையே ஒருஇனக்கூறு என அழைப்பர், அக்சஸானது ஒருபொருளை வரையறுப்பதற்காக இதனை ஆதரிக்கின்றது, மேலும் புதிய சான்றளிக்கப்பட்ட பொருள் தகவமைவு குறிமுறையிலிருந்து உருவாக்கிட அனுமதிக்கின்றது

ஒருஇனக்கூறில் உள்ள பொதுசுட்டியுடன் இனைந்து செயல்முறைகள் ,பண்பியல்புகள், வழிமுறைகள் ,நிகழ்வுகள் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றது, இனக்கூறுக்குள் மட்டும் அறிவிப்புசெய்து பயன்படுத்திகொள்ளும்படியும் இந்த தனிச்சுட்டியின் உதவியுடன் வெளிப்புறத்துடன்  தொடர்புகொண்டு பயன்படுத்த முடியாதவாறும் அமைக்கப்பட்டுள்ளது,

இதனடிப்படையில் நாம் ஒருproduct class module ஐ உருவாக்கிடமுடியும் பின்னர் ProductName, UniPrice,Qty,Total Value,Discount.NetValueஆகிய பண்பியல்புகளை இதனுடன் சேர்க்கமுடியும், இதனுடன் மெலும் தேவையெனில் இதனை எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தி கொள்ளப் போகின்றோமோ அதற்கேற்றவாறு இதனுடைய பண்பியல்புகளை சேர்த்து கொள்ளமுடியும், இதற்காக தனியானதொரு விபிஏ குறிமுறை மூலமாகவே உருவாக்கிடமுடியும் என்பதை மனதில் கொள்க,

Customer contact,employee details,product details ஆகியவை பொதுவாக எல்லாஇடங்களிலும் நடப்பிலிருக்கும் இனக்கூறு(class module)ஆகும்,

இந்த இனக்கூறின் குறிமுறையிலிருந்து நம்முடைய பொருளைபற்றிய அறிவுமற்றும் நடைமுறையில் உள்ள பொருளின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் அக்சஸினுடைய விபிஏ குறிமுறையாக உருமாற்றம் செய்து அதனையே அக்சஸின் பொருளினுடைய பண்பியல்புகள் ,வழிமுறைகள் ஆகியவைகளாக உருமாற்றம் செய்யமுடியும்,

பின்வரும் அட்டவணை28-1 ஒருபொருள் இனக்கூறின் பண்பியல்புகள் ,வழிமுறைகள் ஆகியவைகளை கொண்டுள்ளன,

அட்டவனை-28-1

28.0

இதில் தேவையானால் மேலும் பண்பியல்புகள் ,வழிமுறைகள் ஆகியவைகளை சேர்த்து மிகத்திறனுடன் இதனை பயன்படுத்திகொள்ளமுடியும்,

28.2

படம்-28-1

அக்சஸ்2003 ஆக இருந்தால் ஒருதரவுதளத்தில் insert=>class module=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குவதன் மூலம் ஒருபதிப்பு சாளரத்தை திறந்து ஒருபுதிய இனக்கூறை திறக்கமுடியும்

ஆனால் அக்சஸ்-2007 இல் create தாவிபட்டியின் othersஎன்ற குழுவின்கீழ்உள்ள macroஎன்ற அம்புக்குறியள்ள பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,உடன் விரியும் பட்டியலிலிருந்த class module என்பதை தெரிவுசெய்வதன் மூலம் இதனை செயலிற்கு கொண்டுவர முடியும், இதில் குறிமுறையை உருவாக்கிய பின்னர் மேல்பகுதியில் உள்ள save என்ற உருவபொத்தானை அழுத்தி இதற்கு ஒருபெயரிட்டு (படம்-28-1)சேமிக்கமுடியும்,

இதில் இனத்தின் பெயர் நாம் புரிந்துகொள்ளும் வண்ணம் மிகசுருக்கமானதாக இருக்கவேண்டும், ஒவ்வொரு பண்பியல்பையும் ஒருபொதுமாறியாக அறிவிப்பதுதான் ஒருஇனத்திற்கான பண்பியல்புகளை செயல்படுத்திடும் சுலபமான வழியாகும் , ஒரு இனக்கூறிற்குள் ஒருபுதிய பண்பியல்பை அந்த இனத்திற்கான பொதுமாறியாக சேர்க்கமுடியும்,

28.2

படம்-28-2

ஒருஇனத்திலிருந்து உருவாக்கப்பட்ட இனக்கூறின் ஒவ்வொரு பொதுமாறியையும் அந்தபொருளின் பண்பியல்பாக பாவிக்கின்றது(படம்-28-2),ஏனெனில் நாம் ஒருஇனக்கூறினை பொதுமாறியாக அறிவிப்பு செய்துள்ளோம்,அதனால் இதற்காக மேலும் பணியுரியாமல் அக்சஸானது இந்த மாறியை இனப்பொருளின் பண்பியல்பாக கருதிகொள்கின்றது,

இவை மற்ற பொருள்வழிமுறைபோன்று இனத்திலிருந்து பொருளாக உருவாக்கிடும் செயலை ஆதரிப்பதை வரையறுக்கின்றது, இவைஒவ்வொன்றிலும் ஒருபொருள் இனக்கூறில் பொது செயல்முறை தவிர வேறொன்றும் இல்லை,பின்வரும் குறிமுறை sell method ஆகும்,

நிரல்தொடர்-28-2

Public SubSell(UnitSold As Integer)

Me.UnitInStock = Me.UnitsInStock -UnitsSold

End sub

இயல்புநிலையில் இனத்திலுள்ள அனைத்து செயல்முறைகள் பொதுசெயல்முறைகளாகவே இருக்கின்றன, பொதுதிறவுசொல் செயல்முறையின் நிலையை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமைகின்றது,,இதில் எந்தவொருமதிப்பையும் திருப்பி அனுப்பபடவில்லை,

நிரல்தொடர்-28-3

Public Sub Discount(Percent As Integer)

If Percent < 1 Or Percent > 99 Then    Exit Sub

End If

Me.UnitPrice = Me.UnitPrice – ((Percent / 100) * Me.UnitPrice)

End Sub

இந்த டிஸ்க்கவுன்ட் வழிமுறை செயல்வழிமுறை போன்றதே இதில் 1சதவிகிதத்திற்கும் கீழ் அல்லது 99 சதவிகிதத்திற்கும் மேல் எனில் இந்த வழிமுறையின் செயல் முடிவுக்கு வந்து விடுகின்றது, மதிப்பு இரண்டிற்கும் இடையில் இருந்தால் கழிவுத்தொகை எவ்வளவு என கணக்கிட்டு கழிக்கின்றது,

நிரல்தொடர்-28-4

Private Sub Form_Load()

Set Product = New ClsProduct1

Set rs = CurrentDb.OpenRecordset(“tblProducts”)

If rs.RecordCount > 0 Then

Call SetObjectProperties

Call FillForm

End If

End Sub

இதில் கட்டற்ற Frmproductஆனது Frms load செயல்முறையிலிருந்து ஏராளமான பண்பியல்பை உருவாக்கி இதற்காக ஒதுக்கீடு செய்கின்றது, மேலும் இதிலிருந்து ரெக்கார்டுசெட்டை உருவாக்கு கின்றது என்றும் பண்பியல்புகளை எவ்வாறு உருவாக்கி ஒதுக்கீடுசெய்கின்றது என்றும் தெரிந்து கொள்ளலாம்

ஒரு குறிமுறையின் செயலானது எழுத்துகளை கடந்து செல்லும் நிலையில் எண்மதிப்பு தேவைப்படும்போது அல்லது பண்பியல்பின் மதிப்பு பூஜ்ஜியத்தைவிட குறைவாக இருக்கும்போது பண்பியல்பு பிழைஏற்படுகின்றது, பின்வரும் வழிமுறை பிழையின்றி பண்பியல்கள் செயல்படவும் இயக்கநேர பிழைகளை தவிர்க்கவும் பயன்படுகின்றன,

1,இயல்புநிலைபண்பியல்பின் மதிப்பை அமைத்தல் ,பொருத்தமற்ற தரவுகளை கடக்கும்போது இயல்புநிலை பண்பியல்பின் மதிŠபு ஏற்படும்படி அமைக்க வேண்டும்¢,

2,தனிப்பட்ட செயல்முறையை உபயோகபடுத்துதல் தரவுவகைகளை ஏற்புடைத்தாக்கிட(validity) இனக்கூறின் தனிப்பட்ட செயல்முறையை பயன்படுத்திகொள்க

3,பிழையை தேடிப்பிடித்தல் இனக்கூறின் எந்தவொரு இடத்திலும் குறிப்பாக இனப்பண்பியல்புகள் அல்லது வழிமுறைகளில் பிழையை தேடிப்பிடித்தலை உபயோகபடுத்திகொள்க

பொதுவாக பொதிவுரையாக்கும் செயலுடன் இருப்பதே  பொருள்நோக்கு நிரலின் அடிப்படைத் தன்மையாகும் என்பதை மனதில்கொள்க,

ஒரு இனக்கூறிற்கான குறிமுறைகளை உருவாக்கிடும்போது Intelligence ஆனது இனத்தின் பொருட்பெயரை உருவாக்கமுயலும் நிலையில் தொடர்புடைய பெயர்களுடன் கீழிறங்கு பட்டியலாக விரிவடைகின்றது அவற்றில் ஒன்றை நாம் தெரிவுசெய்து கொள்ளலாம் ,அவ்வாறே Auto List members என்ற கீழிறங்கு பட்டியலும் (படம்-28-3)ஒருபொருளின் பண்பியல்புகள் அல்லது வழிமுறைகளின் முதலெழுத்தை உள்ளீடுசெய்ய ஆரம்பிக்கும்போது தொடர்புடைய சொற்களின் பட்டியலை திரையில் பிரிதிபலிக்கசெய்கின்றது,

28.3

படம்-28-3

இந்நிலையில் ஒரு பண்பியல்பின்பெயரின் இடையில் எங்காவது இடம்சுட்டியைவைத்து shift + F2 ஆகியவிசைகளை சேர்த்து அழுத்தியவுடன் இதனுடையபின்புலத்தில் விபிஏ குறிமுறைஇருந்தால்  தொடர்புடைய இனக்கூறின் சாளரம் திறந்துகொள்கின்றது,  பின்புலத்தில் விபிஏ குறிமுறை இல்லையெனில் ஒன்றும் நடைபெறாது பிழைசெய்திமட்டும் திரையில் பிரிதிபலிக்கும்

ஒரு அக்சஸ்பயன்பாட்டினை கட்டுண்டுதும் கட்டற்றதும் அல்லது இரண்டும் கலந்த  பொருள்நோக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கிடமுடியும் என்பதை மனதில் கொள்ளுங்கள்

முக்கியமாக கட்டற்ற கட்டுப்பாட்டை உருவாக்குதில் பொருள்நோக்கு வழிமுறை பெரிதும் பயன்படுகின்றது,

அக்சஸில் பொருள்நோக்கு வழிமுறையின் பயன்படுத்தவேண்டிய விதிமுறைகள்

1,பயனாளரின் இடைமுகத்தின்போது ஒருஇனக்கூறிலிருந்து செய்திபெட்டியொன்று திரையில் தோன்றச்செய்யவேண்டும்,இந்த விதிமுறை அக்சஸிற்கு முக்கியத்துவம் அற்றதாக இருந்தாலும் இதனை செயல்படுத்துவது பின்னாளில் வரும்பிரச்சினையை சமாளிக்கஏதுவாகஇருக்கும்,

2,இனக்கூறை நிகழ்நிலைஅல்லது மேம்படுத்திடும்போது இனக்கூறுகளின் இடைமுகத்தை பாதுகாத்திடுக, நடப்பிலிருக்கும் தரவுவகைகளின் பன்பியல்புகளை மாற்றியமைத்து புதியபண்பியல்பு வழிமுறை நிகழ்வுகள் ஆகியவற்றை சேர்த்திடுவதற்கு இந்த விதிமுறையை பின்பற்றிட வேண்டும்

ஒரு இனக்கூறில் மூன்றுவகையான பண்பியல்பு செயல்முறைகள் உள்ளன அவை

1,PropertyLetசெயல்முறை:இதுபுதியமதிப்பை பண்பியல்பிற்கு ஒதுக்கீடுசெய்கின்றது, இதற்கான குறிமுறைபின்வருமாறு இருக்கும்,

நிரல்தொடர்-28-5

Public Property Let LastName(Value As String)

m_LastName = Left$(Value, 20)

End Property

2,PropertySetசெயல்முறை:இதுபொருளின் பண்பியல்பின்மதிப்பை ஒதுக்கீடுசெய்கின்றது, இதற்கான குறிமுறைபின்வருமாறு இருக்கும்,

நிரல்தொடர்-28-6

Public Property Set Products(Value As ADO.Recordset)

If Not Value Is Nothing Then

Set m_Products = Value

End If

End Property

3,PropertyGetசெயல்முறை:இதுஒருவிபிஏவின் செயலிபோன்று பண்பியல்பின் மதிப்பை மீளப்பெறுகின்றது, இதற்கான குறிமுறைபின்வருமாறு இருக்கும்,

நிரல்தொடர்-28-7

Public Property Get LastName() As String

LastName = m_LastName

End Property

தானியங்கி மேல்நிலைநீர்தேக்கதொட்டியின் மின்மோட்டார் இயக்கி

நம்முடைய வீடுகளில்  மேல்நிலைநீர்தேக்கதொட்டி அமைத்திருப்போம் அதில் தண்ணீர்காலியாகிவிட்டால் மின்மோட்டாரை இயக்கி நீரை தொட்டியில் நிரப்பவும் தொட்டியில் நீர் நிரம்பிவிட்டால் மின்மோட்டாரின் இயக்கத்தை நிறுத்தம் செய்யவும் ஆன செயலானது மிகச்சிரமமானதாக இருந்துவருகின்றது இதனை தானியங்கியாக செய்தால் என்ன என்பவர்கள் பின்வரும்  மின்சுற்றுவரைபடம் இதற்கான செயல்களை செய்யவல்லது என்ற செய்தியை தெரிந்து கொள்க இதற்காக   step-down transformer, a 24V AC double-changeover relay, two floats , two micro switches, pusக
h-to-on switch ,மின்சுற்றிற்கான கைவசம் தயார்நிலையில் உள்ள கம்பி ஆகியவைமட்டும் போதுமானவயாகும் இவைமட்டுமல்லாது தொட்டி நிரம்பிவிட்டது அல்லது காலியாகிவிட்டது என காண்பிக்கும் float1 ,float2 எனும் மிதவைகளும் அதனோடு தொடர்பு ஏற்படுத்திடும் S1 , S2ஆகியபொத்தான்களும் இவைகளை இணைப்பதற்கான மூன்று கம்பிகளை கொண்ட மின்சுற்று ஆகியவை மட்டுமேயாகும்.

 

 

 

நீர்மட்டம் அடிப்பகுதிவரை குறைந்துமிதவை-1 வரை செல்லும்போது இந்த மிதவை-1 ஆனது சிறுமின்குமிழ்-1(S1) என்பதை செயற்படுத்திடும் உடன் RL1எனும் மின்சுற்றில் மின்னோட்டம் முழுமை பெறும். அதனால் contact-1 இல் மின்னோட்டம் ஏற்பட்டு மின்மோட்டார் இயங்கத்துவங்கி தொட்டிக்கு  தேவையான தண்ணீர் கொட்டத்துவங்கும் இதேநேரத்தில்  contact-2 மின்சுற்று மூடபட்டிருக்கும் இதனால் 24V AC  மின்னோட்டத்தின் வாயிலாக S2 எனும் மின்குமிழ் மூடப்பட்டிருக்கும்.

தொட்டியில் தண்ணீரின் அளவு உயர்ந்து நிரம்பி மிதவை-2 வரை சென்றிடும்போது இது சிறுமின்குமிழ்-2(S2)என்பதை  செயற்படுத்திடும் உடன் RL1எனும் மின்சுற்றில் மின்னோட்டம் குறைய பெறும்.  அதனால் contact-2 இல் மின்னோட்டம் ஏற்பட்டு S2 எனும் மின்குமிழ்  வாயிலாக இயங்குகின்ற மின்மோட்டாரின் செயல் நிறுத்தம் செய்யபடும். மீண்டும் தொட்டியின் அடிப்பகுதிக்கு தண்ணீரின் அளவு சென்றிடும்போது முன்புபோலவே மறுபடியும்  மின்மோட்டார் இயங்கி தொட்டியில் தண்னீர் கொட்டிடும் .இவ்வாறு இந்த சுற்றுமுறை செயல் தானாகவே செயல்படுமாறு இதில் செய்யப்பட்டுள்ளது கூடுதலாக மொத்த மின்சுற்றிற்கும் மின்மோட்டார் இயங்குவதற்கும் தேவையான மின்சாரம் தடைபெறும்போது மஇந்மோட்டாரின் இயக்கம் நின்றுவிடும் மீண்டும் மின்விநியோகம் கிடைத்திடும்போது தனியாக எனும் மின்குமிழை அழுத்தி இந்த இயக்கம் தானியங்கியாக செயல்படுமாறு மறுதுவக்கம்செய்திடவேண்டும்

104.2.1

சிறு வியாபார நிறுவனங்களுக்கு உதவிடும் திறமூல மென்பொருட்கள்

 

கணினியின் துனை இல்லாது சின்னஞ்சிறிய  வியாபார நிறுவனங்களைகூட நடத்தமுடியாது என அங்கிங்கெனாதபடி எல்லா இடத்திலும் எல்லாசெயலிலும் கணினியின் பயன் நீக்கமற நிறைந்துள்ள இன்றை நிலையில் சிறுவியாபார நிறுவனங்களால் அதிக அளவிற்கு பணம் செலவழித்து அனுமதி பெற்ற மென்பொருட்களை பயன்படுத்திடவேண்டும் என்றால் மிகச்சிரமமான செயலாகிவிடுகின்றது இந்நிலையில் திறமூல மென்பொருட்கள்  இவ்வாறான சிறுவியாபார நிறுவனங்களுக்காக கைகொடுக்கின்றன  அவ்வாறான சிறு வியாபார நிறுவனங்களுக்கு உதவிடும் திறமூல மென்பொருட்கள் பின்வருமாறு

102.1.1

1.1       லிபர் ஆஃபிஸ் அலுவலக பயன்பாட்டிற்காக ஆண்டு ஒன்றிற்கு நபர் ஒருவர் $220/- டாலர் அல்லது ஆஃபிஸ் 365  எனில் ஆண்டு ஒன்றிற்கு $150/- டாலர் என ஆண்டு சந்தா செலுத்தினால் மட்டுமே எம்எஸ் ஆஃபிஸின் வேர்டு, எக்செல் , பவர்பாயின்ட் ஆகியவற்றினை   பயன்படுத்தி கொள்ள நமக்கு அனுமதி வழங்கபடுகின்றது  அதற்கு பதிலாக அதே வடிவமைப்பு, வசதிகளையுடைய  லிபர் ஆஃபிஸை (http://www.libreoffice.org/     )கட்டணம் எதுவுமின்றி சிறுவியாபார நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளமுடியும்

102.1.2

1.2         தண்டர்பேர்டு தற்போது நாமனைவரும் கடிதபோக்குவரத்திற்காக மின்னஞ்சலையே பெரும்பாலும்  பயன்படுத்தி வருகின்றோம் இதற்காக  எம்எஸ் அவுட்லுக் என்ற மின்னஞ்சல் சேவையாளரை ஆண்டு ஒன்றிற்கு $95/-  என ஆண்டு சந்தா செலுத்தி பயன்படுத்தி வருகின்றோம் இதற்கு பதிலாக செலவேஇல்லாமல் இணையவிவாதம், நச்சு மின்னஞ்சலின் தாக்குதலிருந்து பாதுகாத்தல் , தேவையற்ற மின்னஞ்சல்களை வடிகட்டுதல், தேவையானவைகளை வடிகட்டிதனிமடிப்பகத்தில் சேமித்து வைத்தல் என்பன போன்ற  ஏராளமான வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ள மொஸில்லா நிறுவனத்தின் தண்டர்பேர்டு (http://www.mozilla.org/en-US/thunderbird/  )என்ற திறமூல பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்ளமுடியும்.

102.1.3

1.3     டர்போ கேஷ் கணக்குபதிவியலிற்காக பெரிய நிறுவனம் எனில் ஆண்டு கட்டணம் செலுத்தி டேலி போன்ற பயன்பாடுகளை பயன்படுத்தி கொள்ள வேண்டியநிலை தற்போது உள்ளது சிறுவியாபாரநிறுவனங்கள் இதற்கு மாற்றாக இதே வசதிகளை டர்போ கேஷ் (http://turbocash.net/  ) என்ற  திறமூல பயன்பாட்டு மென்பொருளை  பயன்படுத்தி கொள்ளமுடியும்

102.1.4

1.4      ஓப்பன் புராஜ்  கிடைத்தற்கரிதான மனிதவளம் ,பணம் ,இயற்கை வளங்கள் என்பனபோன்ற அனைத்து வளங்களையும் மிகச்சரியாக பயன்படுத்தி தேவையான Ganttchart , PERT chartஎன்பனபோன்ற வரைபடங்களின் வாயிலாக செயல் திட்டங்களை  தீட்டிட உதவிடும் எம்எஸ் புராஜெக்ட்டிற்கு மாற்றாக திறமூல மென்பொருளாக இந்த     ஓப்பன் புராஜ்  (http://www.serena.com/index.php/en/products/openproj/ )என்பது விளங்கு  கின்றது

 102.1.5

 

1.5 Sugar CRM வாடிக்கையாளர்களுடன் அதிக அளவிற்கு தொடர்புகொள்ள வேண்டிய விற்பனை, விற்பனைக்கு பிந்தைய சேவை போன்ற செயல்களை  ஆண்டு ஒன்றிற்கு $95/- டாலர் என ஆண்டு சந்தா செலுத்தி customer relationships  management(CRM)என்பதை பயன்படுத்தி வருகின்றோம் அதற்கு  மாற்றாக திறமூல மென்பொருளாக Sugar CRM (http://www.sugarcrm.com/community ) என்பதை கட்டணமெதுவுமில்லாமல் நாம் பயன்படுத்தி கொள்ளமுடியும்

102.1.6

7-Zip தற்போது நாமனைவரும் வின்ஸிப் என்பதுபோன்ற பயன்பாடுகளை ஆண்டு ஒன்றிற்கு  $30/- டாலர் என ஆண்டு சந்தா செலுத்தி பெரிய பெரிய கோப்புகளை  நெருக்கி சுருக்கி கட்டுவைத்து தேவைப்படும் கோப்புகளை பின்னர் விரித்து பயன்படுத்திடும் செயல்களுக்காக பயன்படுத்தி வருகின்றோம் அதற்கு மாற்றாக 7-Zip (http://www.7-zip.org/  ) என்ற  திறமூல மென்பொருளை பயன்படுத்தி கொள்ளமுடியும்.

102.1.7

1.7 Scribus நாம் உற்பத்தி செய்திடும் பொருட்களை சந்தை படுத்துதலிற்காகவும் விளம்பரத்திற்காகவும் சிறுவிளம்பர குறிப்புதாட்கள் உருவாக்குவதற்காகவும்  ஆண்டு ஒன்றிற்கு  $95/- டாலர் என ஆண்டு சந்தா செலுத்தி எம்எஸ் பப்ளிஷர் என்பதை பயன்படுத்தி கொள்கின்றோம் அதற்கு மாற்றாக திறமூல மென்பொருளான Scribus (http://www.scribus.net/canvas/Scribus  )என்பதை பயன்படுத்தி கொள்ளமுடியும்

102.1.8

1.8     Simple Invoices வியாபார நிறுவனங்கள் தாம் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்திட ஒவ்வொரு பொருளின் விற்பனையின் போதும் அதற்கான தனித்தனி விலைபட்டி தயார்செய்திட வேண்டும் அதனை  டேலி ஈஆர்ப்பி போன்ற பயன்பாடுகளை ஆண்டு ஒன்றிற்கு சந்தாதொகை செலுத்தி பயன் படுத்துவதற்கு மாற்றாக திறமூல மென்பொருளான Simple Invoices (http://www.simpleinvoices.org/ )என்பதை கட்டணமெதுவுமில்லாமல் பயன்படுத்தி கொள்ளமுடியும்

102.1.9

1.9   Dia பொறியியல் வரைபடவரைவாளர்கள்  எம்எஸ் விஸியோ என்ற பயன்பாட்டினை ஆண்டு ஒன்றிற்கு  $250/- டாலர் என ஆண்டு சந்தா செலுத்தி பயன்படுத்திடுவதற்கு  பதிலாக   Dia(http://live.gnome.org/Dia )என்ற திறமூல மென்பொருளை பயன்படுத்தி கொள்ளமுடியும்

பெரிய அளவு கோப்புகளை நண்பர்களுக்கு எவ்வாறுஅனுப்பி வைப்பது?

சுமார் 25 எம்பி வரையுள்ள ஒலிஒளிபடங்கள் ,உருவபடங்கள், ஆவணங்கள் போன்றவைகளின் கோப்புகளை யாகூ மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்புவதில் எந்த இடர்பாடும் ஏற்படாது ஆனால் அதற்கு மேல்அளவுள்ள ஒலிஒளிபடங்கள் ,உருவபடங்கள் ஆவணங்கள் போன்றவைகளின் கோப்புகள் எனில் யாகூ மின்னஞ்சலில் இணைத்து அனுப்பிட இயலாது இந்நிலையில்   நமக்கு Flickr , Dropbox  ஆகியஇணைய பக்கங்களில் கணக்கு இருந்தால் இவைகளின் வாயிலாக பெரிய அளவு கோப்புகளைகூட நாம் விரும்பும் நபருக்கு மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பி வைத்திடமுடியும்   அதற்காக யாகூவில் புதிய மின்னஞ்சலை  உருவாக்கிடும்போது   attachment என்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் விரியும் சிறுபட்டியில்  நமக்கு எந்த இணைய பக்கத்தில் கணக்கு வைத்துள்ளோமோ அதற்கேற்றவாறு  Share from Flickr , Share from Dropbox ஆகிய இரண்டில் ஒன்றை தெரிவுசெய்து கொள்க

102.2.1

இந்த இணைய பக்கங்களில் கணக்கு ஆரம்பிக்கவே இல்லையென்றாலும் பரவாயில்லை  யாகூவில் புதிய மின்னஞ்சலை  உருவாக்கிடும்போது  attachment என்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் விரியும் சிறுபட்டியில் Attach from my computer என்ற  வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக

102.2.2

பின்னர் விரியும் உரையாடல் பெட்டியில்  தேவையான கோப்பினை தெரிவுசெய்து கொண்டு Open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  பிறகு Dropbox ஐ பயன்படுத்தி கோப்பினை இணைக்கபோகின்றோமா என்பதற்கு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

102.2.3

பின்னர் நமக்கு Dropbox  இணைய பக்கத்தில் கணக்கு இருந்தால் உடன் விரியும் Sign Up  Dropbox  என்ற படிவத்தில் புதிய கடவுச்சொற்களை உள்ளீடு செய்தபின், I agree to Dropbox terms என்ற ஒப்புதல் வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு Sign Up என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

102.2.4

இந்நிலையில் நமக்கு Dropbox என்ற இணைய பக்கத்தில் கணக்கு இல்லையெனில்  Sign In  என்ற இணைப்பு  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் விரியும் திரையில் Link Account என்ற இணைப்பு  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக   உடன் நம்முடைய மிகப்பெரிய கோப்பானது மின்னஞ்சலுடன் இணைத்திடும் பணி நடைபெறும்

இந்த பணி முடிவடைந்ததும் வழக்கமாக மின்னஞ்சல் அனுப்புவதை போன்று கோப்பினை அதனுடன் இணைத்து அனுப்பி வைத்திடுக மின்னஞ்சலை பெறுபவர் இந்த பெரிய கோப்பினை Dropbox  இணைய பக்கத்தினுடைய இணைப்பின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும்

சமூக வலைதளங்களில் காண நேரிடும் முக்கியமான கருத்துகளைஐபோனில் சேகரித்து சேமித்து வைப்பது எவ்வாறு?

முகநூல்(facebook),சமூக முனுமுனுப்பு(twitter) ஆகிய சமூக வலைதளங்களில்  நம்முடைய ஐபோன் வாயிலாக உலாவரும்போது ஒருசில முக்கியமான கருத்துகளை காண நேரிடும் அந்நிலையில் அவைகளை உடனடியாக நம்முடைய ஐபோனில் சேகரித்து  சேமித்து வைத்து பின்னர் பயன்படுத்தி கொள்ள விழைவோம்  இந்நிலையில் இதுபோன்ற சமூகவலைதளங்களில் உள்ள நாம் காணும் உரைகளை எவ்வாறு வெட்டி ஒட்டி சேமிப்பது என இப்போது காண்போம்.

முதலில் வெட்டி ஒட்டி சேமித்து வைத்திட விரும்பும் உரை,படம் ஆகியவற்றில் குறிப்பிட்ட பகுதிமட்டுமா அல்லது முழுவதையுமா ஆகிய இருவாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து கொண்டு Select, Select all ,  Paste என்ற மேல்மீட்பு குமிழ் தோன்றிடும் வரை காத்திருக்கவும்

பிறகு நாம் தெரிவுசெய்து பகுதியை கூடுதலாகவோ அல்லது குறைத்தோ மாற்றியமைத்திட மேல்மீட்பு குழிழை தேவையானவாறு நகர்த்தி  சரிசெய்து கொள்க

அதன்பின்னர் அதேபகுதியை அழுத்துக உடன்  நாம் தெரிவுசெய்த பகுதியானது  தெரிவுசெய்யபட்டு Cut, Copy,  Paste என்ற மேல்மீட்பு குமிழ் தோன்றிடும்

பின்னர் தேவையான பயன்பாடு இருக்கும் பகுதிக்குஅல்லது பக்கத்திற்கு சென்று அந்த பகுதியை சாதாரணமாக செய்வதை போன்று அந்த பகுதி மேல்மீட்பு பட்டியால் மேம்படுத்தி காட்டும்வரை அழுத்தி பின்விட்டிடுக

இப்போது   Paste என்ற மேல்மீட்பு குமிழ் தோன்றிடும் அதனை தெரிவுசெய்து அழுத்துக

உடன் நாம் வெட்டி நகலெடுத்து வந்த உரை அல்லது படமானது நாம் விரும்பிடும் இடத்தில் ஒட்டப்பட்டுவிடும்

இது தேவையில்லை என விரும்பினால்  நம்முடைய ஐபோனை சிறிது நகர்த்திடுமாறு அசைத்திடுக பிறகு undo Paste என்ற மேல்மீட்பு குமிழை தெரிவுசெய்து அழுத்துக

102.3.1

Previous Older Entries