நம்முடைய சொந்த களப்பெயரில் மின்னஞ்சலை அனுப்பிடவும் பெற்றிடவும் முடியும்

நம்முடைய சொந்த களப்பெயரில்  மின்னஞ்சலை அனுப்பிடவும் பெற்றிடவும் இன்று  தனிநபர்களும் வியாபார நிறுவனங்களும் விரும்புகின்றனர். இந்த சேவைக்காக ISPஐ வழங்கிடவும் தாமே உருவாக்கிடவும் முடியும்  அவ்வாறான வசதியை Sendmail என்பது வழங்குகின்றது

களப்பெயர்சேவையைDomain Name Service (DNS) கட்டமைவுசெய்தல்

Skdomain.comஎன்றவாறு ஒரு களப்பெயரை  தெரிவுசெய்து கொள்க பிறகு முதன்மைநில ,இரண்டாம் நிலை ஆகிய இரு களப்பெயர் சேவையாளர் கணினிகளை நிறுவிக்கொள்க (ஒன்று செயல்படாது நின்றுபோனாலும் மற்றொன்றை பயன்படுத்தி தொடர்ந்து 24 மணிநேரமும் களப்பெயர் செயல்படுவதற்காக) பின்னர் இந்த களப்பெயருக்கான MX ஆவணத்தை முதன்மை  களப்பெயர் சேவையாளர் கணினியெனில்

skdomain.com. IN MX 10 skmailserver.skdomain.com  என்றவாறும்

இரண்டாம் நிலை களப்பெயர் சேவையாளர் கணினியெனில்

skdomain.com. IN MX 10 skmailserver.skdomain.com.

skdomain.com. IN MX 20 othermailserver.otherdomain.com. என்றவாறும்  கட்டமைவு செய்து கொள்க

பிறகு  http://www.internic.net/regist.html என்ற தளத்தில் நம்முடைய களப்பெயரை பதிவுசெய்துகொள்க

 Sendmail ஐ அமைவு செய்தல்

முதலில் ftp://ftp.sendmail.org/pub/sendmail /  என்ற தளத்திலிருந்து இதனுடைய சமீபத்திய sendmail 8.10.0 என்றவாறான பதிப்பினை பதிவிறக்கம் செய்து கொள்க

பின்னர்  இதற்கான கோப்பு கட்டுகளிலிருந்து README என்ற கோப்பினை பிரித்தெடுத்து படித்தறிந்த  Build in  என இதற்கான இயக்ககத்தில் தட்டச்சுசெய்து  கட்டமைத்திடுக  இவ்வாறு கட்டமைத்திடும்போது  README என்ற கோப்பில் கூறிய ஆலோசனைகளையும் கட்டளைகளையும் பின்பற்றி  ஒரு மெய்நிகர் பயனாளர் அட்டவணையை(virtual user table) உருவாக்கிடுக அதன்பின்னர் மெய்நிகர் பயனாளர் அட்டவணையை (virtual user table) கட்டமைத்ததிடுக  ஏதேனுமொரு மின்னஞ்சல் நாம் குறிப்பிடும் முகவரிக்கு சென்றுசேராமல் பின்னடைவுசெய்தால் அதற்காக  generics table என்பதை உருவாக்கிடுக அதன்பின்னர் sendmail’s class ஒவ்வொன்றிற்கும் புதிய களப்பெயரை சேர்த்திடுக  இவ்வாறு கட்டமைவு செய்திடும்போது இறுதியாக

/etc/mail/sendmail.cf or class files such as /etc/mail/local-host-names.

என்றவாறு குறிப்பிட்டு மறுதொடக்கம் (Restart) அல்லது sendmailஇற்குள் உள்நுழைவு செய்வதற்காக SIGNUP sendmail என்பதை கட்டமைத்திடுக

மேலும் விவரம் அறிந்துகொள்ள http://www.sendmail.com/sm/open_source/support/contact/ , http://www.sendmail.com/sm/open_source/support/support_faq/ ஆகிய இணையதளங்களுக்கு செல்க

25.9.1

ஆஸ்ட்ரிஸ்க் எனும் திறமூல மென்பொருள் கருவி

ஆஸ்ட்ரிஸ்க் என்பது முதன்முதல் திறமூல தொலைபேசிஇயக்ககத்தை கையாளும் PBX மென்பொருட்களின் கட்டுகளாகும்  இது விண்டோ ,லினக்ஸ், மேக்ஸ் போன்ற எந்தவொரு இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன் வாய்ந்ததாகும்

 இது மார்க்ஸ் பென்ஸார் என்பவரால் 1999 இல் உருவாக்கபட்டு. தற்போது டிஜ்ஜியம் என்ற தொலைபேசிக்கான திறமூல மென்பொருளை வழங்கும் நிறுவனத்தின்மூலமாக வழங்கபட்டுவருகின்றது  

இதுசெலவேஇல்லாத  ஒரு தொலைபேசிக்கான பயன்பாடாக விளங்குகின்றது இதன் மூலம் குரல்மூலம் அழைப்பவர்களுக்கு பதிலிறுத்தல், குரல்மூலம் மின்னஞ்சல் அனுப்புதல் கூட்டங்களை நடத்துதல் ,வரும் அழைப்புகளை தானாகவே தேவையானவர்களுக்கு இணைப்பு வழங்குதல் என்பனபோன்ற கட்டணத்துடன் செயல்படும் PBXsமென்பொருட்களை போன்ற அனைத்து வசதிகளையும்  வழங்குகின்றது  

இதற்காக இது பொதுதொலைபசி வலைபின்னல் இணைப்பகத்தையோ(Public switched telephone network(PSTN)) அல்லது குரலொலிமூலம் இணைய ஒழுங்குமுறை வசதியையோ(Voice over Internet Protocol(VoIP)  பயன்படுத்தி கொள்கின்றது  

 இந்த பயன்பாடானது இதனுடைய மூலக்குறிமுறைகளுடன்  நமக்கு கிடைப்பதால் மேலும் தேவையெனில் வாடிக்கையாளர் விரும்பியவாறான வசதிகளை இதில் உருவாக்கி வடிவமைத்துகொள்ளமுடியும்  இதுGPL அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது   இதில் வழக்கமான PBXsமென்பொருட்களில் உள்ள அத்தனை வசதிகளும் வாய்ப்புகளும் கட்டமின்றி கிடைக்கின்றது  இதில் உள்ள   Follow me எனும் வசதி நாம் தொடர்பு கொள்பவர்கள் வேறு நபர்களுடன் பேசிக்கொண்டிருந்தால்  அவ்வுரையாடல் முடிந்தபின் தானாகவே நமக்கு இணைப்பு வழங்குகின்றது

 ஆண்ட்ராய்டில் செயல்படும்ஸ்மார்ட் போன் , ஐபோன், ப்ளாக்பெர்ரி போன்றவைகளுடன் முப்பரிமான வசதி வாய்ப்புகளுடனும் இணைப்பு ஏற்படுத்திட உதவுகின்றது. இது குரலொலியை உரையாக மாற்றும்  வசதியுடைய  Festival எனும் திறமூல மெனபொருளுடன் ஒத்திசைவுசெய்து இயங்குகின்றது. மேலும் இது தரவுதளங்களை கையாளும் வங்கியினுடைய  IVRS உடன் ஒத்தியங்குகின்றது இதனை பற்றி மேலும் அறிந்துகொள்ள www.asteriskguru.com/ என்ற இணையதளத்திறகு செல்க

25.8.1

ப்ளாக் எஞ்சின் .நெட் என்பது போன்ற வேறு திறமூல கருவிகள்

ப்ளாக் எஞ்சின் .நெட் என்பது மிகச்சுலபமான நிறுவதலும் வாடிக்கையாளர் விரும்பியவாறு மாற்றியமைக்கவும் அனுமதிக்கின்றது இதனை செயல்டுத்திட தரவுதளத்தினை கட்டமைவுசெய்தல் போன்ற எதுவுமில்லாமல்  அதற்கான கோப்பினை ஏஎஸ்பி.நெட்4. என்ற இணைய சேவையாளருக்கு மேலேற்றுதல் செய்தால் மட்டும் போதுமானது உடன் நாம் நம்முடைய வலைபூவை எழுத தயாராகிவிடும்  புதிய தற்போதைய நவநாகரீக வலைபூவிற்குரிய அஜாக்ஸ் கருத்துரை ,திரைகாட்சிகளை தேடிபிடித்தல் என்பனபோன்ற அனைத்து வசதிகளும் வாய்ப்புகளும் இந்த  ப்ளாக் எஞ்சின .நெட் என்பதில உள்ளன  இது ஒரு திறமூல இலவச வெளியீடாகும்  31 இற்குமேற்பட்ட மொழிகளை ஆதரிக்கின்றது.

 

25.7.1

இதில் வெப்2.0 இனுடைய   social bookmarks, OpenSearcht, XFN tags, AJAX, FOAF, SIOC, APML, Gravatars, , Google sitemap என்பனபோன்ற   அனைத்து வசதிகளும் வாய்ப்புகளும்  உள்ளன நம்முடைய வலைபூவை தொடர்பவர்கள் யார்யார் நாம் யார்யாருடை வலைபூவை தொடருகின்றோம் என கண்டுபிடித்திடும் வசதியும் இதில் கிடைக்கின்றது இது வலைபூவிற்கான country flags, live preview, Gravatars, coComments என்பன போன்ற கருத்துகளை வெளியிடுவதற்கான வசதிகளை வழங்குகின்றது

25.7.2

ஏதேனுமொரு தலைப்பு பற்றிய வலைபூவை அல்லது இடுகையை தேடிடும் வசதிகூட இதில் உள்ளது. இது வழக்கமான வலைபூ பக்கத்துடன் நிலையான வலைபூ பக்கத்தையும் உருவாக்கிட அனுமதிக்கின்றது   ஒன்றுக்குமேற்பட்ட ஆசிரியர்கள் சேர்ந்து ஒரே வலைபூவை உருவாக்கிடும் வசதியை இது வழங்குகின்றது இதுஅருமையான கண்ணைகவரும் திரைகாட்சிகளை ஏராளமான அளவில் தன்னகத்தே கொண்டுள்ளது

25.7.3

இது  XHTML 1.0 என்பதன் அடிப்படையில் உருவாக்கபட்டுள்ளது  இதனை பற்றி மேலும் அறிந்தகொள்வதற்கு http://www.dotnetblogengine.net/page/Feature-table.aspx , http://blogengine.codeplex.com/documentation ஆகிய இணையதளங்களுக்கு செல்க

ஆண்ட்ராய்டு சாதனங்களை வேகமாக செயல்படுமாறு செய்திட

 

6-1 பயன்படுத்தபடாத பயன்பாடுகளை முடக்கம்செய்திடுக அல்லது நீக்கம் செய்திடுக நம்முடைய சாதனத்தில் குறிப்பிட்டஅளவுமட்டுமே நினைவகமும் காலி நினைவகமும் உள்ளன  அதில் ஏராளமான பயன்பாடுகளை கொணடுவந்த திணித்தால் அதிகசுமையேற்பட்டு செயல்படும் வேகம் மெதுவாகின்றது அதனால் தேவையற்ற பயன்பாடுகளை நிரந்தரமாக  அறவே நீக்கம் செய்திடுக பிற்காலத்தில் தேவைப்படுபவைகளை Dropbox ,Google Drive போன்ற   சேவையாளர்பகுதிக்கு மாற்றிவைத்துகொள்க.

25.6.1

25.6.1

6-2 ஆண்ட்ராய்டு சாதனங்கள் செயல்படும்போது பயன்படுத்தி கொள்ளும் தற்காலிக நினைவகத்தினை App Cache Cleaner , Clean Master என்பன போன்ற இலவச பயன்பாடுகளை உபயோகபடுத்தி அவ்வப்போது காலிசெய்து சுத்தபடுத்தி கொள்க

6-3 ஆண்ட்ராய்டு சாதனத்தின் திரையில் தோற்றத்தை மாற்றியமைப்பதற்காக widgets , live wallpapers என்பன போன்றவைகளை ஒருசிலர் ஏராளமான அளவில் பயன்படுத்தி கொண்டிருப்பார்கள்  இவைகளை குறைந்த எண்ணிக்கையில் மட்டும் கட்டுபடுத்திபயன்படுத்தி கொள்க.

6-4 அசைவூட்டு படங்களை முடக்கிகொள்க .ஆண்ட்ராய்டு சாதணத்தின் படங்கள் அசைவூட்டுதலை எவ்வாறு முடக்குவது என தெரிந்துகொள்ளாமல்  நம்மில் பலர் உள்ளனர் அதற்காக முதலில்Settingsஎன்பதை திறந்துகொள்க, அதில் Developer என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொள்க பின்னர் விரியும் திரையில்  Drawing என்ற வாய்ப்பினை தேடிபிடித்து  தெரிவுசெய்துகொள்க. அதன்பின்னர் Window animation scale, Transition animation scale, Animator duration scale போன்ற வாய்ப்புகளை  தெரிவுசெய்திருந்தால் நீக்கம் செய்திடுக

25.6.2

25.6.2

6-5 ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயன்படுத்திடும் பயன்பாடுகளை அவ்வபோது நிகழ்நிலை படுத்தி புதுப்பித்து கொள்க

6-6 பயன்பாட்டின் மூலக்குறிமுறையுடன் இணைப்பையும் செல்லிடத்திற்கு ஏற்ப தகவமைவையும் செய்து செயல்படுமாறு செய்துகொள்க

 

அக்சஸ்-2007- 25 நகல் உருவாக்குதல் (Replication) தொடர்ச்சி

ஒரு Replica set ஐ உருவாக்குதல்

1.நடப்பில் உள்ள தரவுதளத்தின் கோப்பினை Design Master  ஆக உருமாற்றம் செய்க.

2.பின்னர் இந்த Design Master  இலிருந்து பல்வேறு Replica set நகல்குழுவாக நகல்எடுத்துகொள்க.

3. Replica set  இற்குள் பயனாளர்கள் செயல்படுவதற்கு அனுமதிப்பதற்கான அட்டவணையை தேவையானால் மாறுதல்கள் செய்து கொள்க.

4. பயனாளர்கள் தாம் பயன்படுத்திடும் Replica set கோப்புகளில் தாம் ஏற்படுத்திய மாறுதல்களை அவ்வப்போது குறிப்பிட்ட காலஇடைவெளியில் ஒத்திசைவுசெய்வதன் மூலம் புத்தாக்கம்  செய்து கொள்க.

5.கட்டமைப்பின் மாறுதல்கள் எனில் Design Master  இல் மட்டும் செயற்படுத்துக.

6.ஏதெனும் பிரச்சினை அல்லது பிழைஏதும் ஏற்பட்டால் அவ்வப்போது சரிசெய்து கொள்க.

7. DoCmd object இன்  DoMem item வழிமுறையில் அக்சஸில் மறைக்கப்பட்ட கட்டளை பட்டியை திறக்கவேண்டும் இல்லையெனில் அதற்குபதிலாக DAO வை பயன்படுத்தி கொள்க.

8.இயல்புநிலையில் பயனாளர்கள் இந்த Replica set குழுவை பயன்படுத்துவதற்கு Administrator இன் அனுமதிபெற்றபின்னரே செயற்படுமாறு அமைப்பதே நல்லது.

Design Master  ஒவ்வொன்றும் ஏராளமானஅளவில் object களை கொண்டு Replica set இற்குள் இவற்றை பரிமாறிக்கொள்கின்றன. ஒருசிலமட்டுமே உள்ளுர் object  ஆக செயல் படுகின்றன அவற்றை எல்லாஇடத்திலும் பயன்படுத்தவதற்கான முழுதளாவியாக (Global)மாற்றியமைத்திட குறிப்பிட்ட   object  இன்மீது இடச்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை  தெரிவுசய்து சொடுக்குக. உடன் விரியும் குறுக்குப் பட்யியலில் உள்ள Properties என்பதை  தெரிவுசெய்து சொடுக்குக. உடன்தோன்றிடும் பண்பியல்பு உரையாடல் பெட்டியின் கீழ்பகுதியில் உள்ள Replicable என்பது தெரிவு செய்யபட்டுள்ளதாவென உறுதி படுத்திகொள்க.பின்னர்  ok என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக (படம்-25-6)இப்போது இந்த பொருளானது முழுதளாவியாக (Global) உருமாறிவிடும்.

25.6

படம் -25-6

Replicabw செயற்படும்போது ஏற்படும் பிரச்சினைகள்

1.வடிவமைப்பு பிழை(Design error): கட்டமைப்பில் வடிவமைப்பு பிழை ஏற்படுவது மிகஅரிதான செயலாகும் ஏனெனில் இந்த கட்டமைப்பை Design Master இல் மட்டும் செயற்படுத்தமுடியம் மற்ற replica set  குழுஉறுப்பினர்களில் செயற்படுத்திடமுடியாது

Mysysshema prop என்ற அட்டவணையில் வடிவமைப்பு பிழை பிரிதிபலிக்கும்.இந்த அட்டவனையை பார்த்து பிரச்சினையை சரிசெய்வதற்காக பொருளின்பெயரை மாற்றியமைத்திடுக.

2.ஓத்திசைவில் பிரச்சினை எழுந்தால்  jet engine  ஆனது முதலில் ஆவணத்தின் பதிப்பு எண்களை சரிபார்க்கினறது பிரச்சினை எழும்போது s_Generation fieldஎன்பதில் உள்ள  பதிப்பு எண்ணை ஒப்பிட்டு சரிபார்க்கின்றது  அதிக அளவு மாறுதல்கள் மற்றும் சமீபத்திய மாறுதல்களை மட்டும் கணக்கில் கொண்டு ஒத்திசைவு செய்து கொள்கின்றது. இரண்டு பதிப்புஎண்கள் ஒரேமாதிரியாக இருந்தால் ReplicaID எண்ணை தெரிவுசெய்து கொள்கின்றது.இவ்வாறான சமயத்தில் Conflict table (side bar) ஒன்றைஉருவாக்கி கொள்கின்றது.இந்த அட்டவணையின் மூலம் ஒத்திசைவில் பிரச்சினை ஏற்படும்போது ஒப்பிட்டுபார்த்து ஏதெனும் ஒன்றை தெரிவுசெய்துகொண்டு மற்றொன்றை நீக்கம் செய்துவிடுகின்றது அதற்காக பின்வரும் நிரல்தொடர் பயன்படுகின்றது.

நிரல்தொடர் -25-1

  Sub Resolve (dp as Database)

Dim tdfTest As DAO.TableDef

Dim rsConflict As DAO.Recordset

‘The For Each….Next loop looks at each

‘Conflict Table property for each tablein the

‘replica. If the Conflict.Table isnot a null

‘string run through the records in the conflict

‘table and perform some action on them:

For Each tdfTest In db.TableDefs

If (tdfTest.ConflictTable <> **) Then

‘Conflict occurred:

Set rsConflict = –

Db.OpenRecordset(tdfTest.ConflictTable)

‘Process each record:

rsConflict.Movefirst

Do while Not rsConflict.EOF

‘<<<

‘Perform conflict resolution in this loop.

‘Perhaps display or report each record.

‘or email a message to the replica’s owner.

‘>>>

rsConflict.Delete

‘Remove confliction record when finished:

rsConflict.MoveNext.

Loop

rsConflict.Close

End if

‘Move to  next table in rplica:

Next tdfTest

End sub

 

Replica set குழுவிற்குள் உள்ள உறுப்பினர்களுக்குள் ஒத்திசைவு செய்து கொள்வதற்காக பல்வேறுவகையான எண்ணற்ற ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. அவ்வாறெ அதேகுழுவிற்குள் உறுப்பின்ர்களுக்குள் ஒன்றுக்கொன்று எந்தநெரத்திலும் ஒத்திசைவு செய்துகொள்ளும்படியான ஏற்பாடுகளும் செய்யபட்டுள்ளன.இந்த ஒத்திசைவு செயல்கள் குறிப்பிட்ட வரிசைகிரமமாக செயற்படுத்தப்பட்டு  ஒழுங்குமுறையில் தரவுதளத்தில் புத்தாக்கம் செய்யப்படுகின்றது இவ்வாறான வரிசைகிரமமான ஒத்திசைவுசெய்வதையே Topology என அழைக்கப்படுகின்றது

பொருட்களை அடையாளம் காண்பதற்காக Replica set குழுவிற்கு முழுதளாவியாக (Global)  ஒத்த IDயை ஒரு அட்டவணைக்கு  ஜெட் எனும் இயந்திரம் (jet Engine) உருவாக்கி பயன்படுத்தி கொள்கின்றது. இந்த Design Master  இன் IDகூட சமயத்தில் பயன்படுத்திகொள்ளப்படுகின்றது.

ஜெட் எனும் இயந்திரம் (jet Engine)ஆனது Replicable வடிவமைப்பிற்கு ஏராளமான அட்டவணைகளை தரவுதளத்திற்கு உருமாற்றம் செய்கின்றது அதேபோன்று  உருமாற்றும் பண்பின் System object வாய்ப்பினை காண்பதற்காக Tools =>option =>என்றவாறு  கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்க .உடன் தோன்றிடும்  பட்டியலில்  அட்டவணையின்விவரம் (படம்-25-7)பிரதிபலிக்கும்.இவை பலமுறை ஒத்திசைவுசெய்துகொண்டேபோவதால் பெரியதாக வளர்ந்துவிடுகின்றன அதனால் அவ்வப்போது மிகப்பழையவற்றை மட்டும் நீக்கம்செய்துநினைவக இடம் போதுமான அளவிற்கு இருக்குமாறு பராமரித்துகொள்க.இந்த அட்டவணையின் உறுப்புகள் பின்வருமாறு

25.7

படம் -25-7

MSysRep Info :இது Design masterஐ சுட்டிகாட்டுவதால்  GUIDபோன்ற பல்வேறு முடிவான நகல்குழு இதில் தேக்கிவைக்கப்பட்டுள்ளன.

MSysReplicas: இது ஒவ்வொரு நகல் குழுஇருக்குமிடத்தின் பாதைபற்றிய தகவல்களை கொண்டிருக்கும்.

MSysTable Guid:  ஒவ்வொரு உண்மைநகல் கோப்பு பற்றிய தகவல்களை ஒரு Guid இற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும்.

MSys Schema Prob: இது வடிவமைப்பு ஒத்திசைவு பிழையை தேக்கிவைத்துள்ளது.

MSysError: இது ஒத்திசைவுபிழையைமட்டும் தேக்கிவைத்துள்ளது.

MSys Exchange Log: இது ஒத்திசைவின் அனைத்துதகவல்களையும் கொண்டுள்ளது.

MSys Side Table:ஒத்திசைவில் சிக்கல் ஏற்படும்போதுமட்டும் இந்த டேபிள் உருவாகின்றது.

MSys SchChange :இது replicaவின் உள்ளுர் அட்டவணையும் அதில் ஏற்படும் மாறுதல்களையும் கொண்டுள்ளது

MSysTrouble Shoot:ஒத்திசைவின்போது நீக்கம்செய்யபட்டவை பற்றிய தகவல்களை கொண்டிருக்கும்ம் தேவையானால் அதனை தேடிப்பிடித்து மீட்டெடுத்து கொள்ளலாம்

MSysTransAddress: இது replicaகுழுவின் ஒத்திசைவுசெய்யபட்ட அனைத்துதகவல்களையும்  அனைத்து உறுப்பினர்களின் முகவரி விவரங்களையும் கொண்டிருக்கின்றது.

MSysShedule: இது ஒத்திசைவுசெய்வதற்கான வரிசைகிரமத்தை உருவாக்கு வதற்கான அட்டவனையாகும்

MSys GenHistory: இது தலைமுறைதகவல்களை  தேக்கிவைத்துள்ளது கோப்புகளின் முந்தைய பதிப்பு , தற்பொதைய பதிப்பு போன்ற தகவல்களை இதன் மூலம் அறிந்து Replica வின செயல் தொடர்நது நடைபெறுவதற்கு இதனை பயன்படுத்திகொள்ளலாம்

MSysothersHistory: மற்ற நகல் குழுவினை பற்றிய தலைமுறை தகவல்களை அறிந்துகொள்வதற்கு இதுபயன்படுகின்றது.

மேலும் அதிகப்படியான அட்டவணைகளை உருவாக்குவதற்க ஏதுவாக கணிப்பொறியின் நினைவகம் இருக்கின்றதாவென சரிபார்த்துகொள்க.

New field  ஒவ்வொரு Replicable அட்டவணையிலும் ஒவ்வொரு நகலும் Gen_Notes.Gen_Photo s_GUID ஆகிய மூன்று புதிய புலங்களை சேர்ப்பதற்காக ஜெட் எனும் இயந்திரத்தில் (jet Engine) உள்ள Replica Id க்கு சமமான புலம் இருக்கின்றதாவென சரிபார்க்கின்றது. இல்லையென்றால் s_GUID என்ற புதிய புலத்தினை உருவாக்கி Replicable to Auto number ஆக உருவாக்கி கொள்கின்றது.இதுவே மாறுதல்களை மீண்டும் தேடிப்பிடித்து கொண்டுவருவதற்கு பயன்படுகின்றது.

S_Generation: ஒவ்வொரு குழுவிற்கும் இந்த புதிய புலத்தினைஉருவாக்கி கொள்கின்றது. ஒத்திசைவு இல்லை எனில் 0 என இதன் மதிப்பிருக்கும் ஒத்திசைவு செய்துகொண்டால் 1 என மாறிவிடும் இதனடிப்படையில் குறிப்பிட்ட ஆவனமானது ஒத்திசைவு செய்யபட்டுள்ளதா இல்லையாவென அறிந்துகொள்ளலாம்.

S_Lineage  இதுவே ஆவனத்தினை சுட்டும் பெயராகும்  இதனைக்கொண்டு குறிப்பிட்ட ஆவனங்களின் பதிப்பினை அறிந்துகொள்ளலாம்  Auto number   எனும் புலமானது புதிய ஆவனத்தினை கோரும்போது படிப்படியாக புதியஎண்ணைஉருவாக்கி சேர்த்து கொண்டே போகின்றது.அதனால் ஒத்திசைவு செய்திடும்போதும் புத்தாக்கம் செய்திடும்போதும்  பிரச்சினை எழுகின்றது .இதனை தவிர்ப்பதற்காக  Random Auto number   என்றவாறு replicaவை  உருமாற்றம் செய்திடும்போது உருவாக்கிகொள்கின்றது இது  தரவுதளத்திற்குஒரு முதன்மை திறவுகோளாக செயல்படுகின்றது.

Design Master  கட்டமைப்பபை மாறுதல்செய்தல்

இதனுடைய கட்டமைப்பை மாறுதல் செய்வதால் தரவுகளின் ஒத்திசைவில் பிரச்சினை ஏற்படுகின்றது. அதனால் அனுமதிபெற்றவர்கள் மட்டுமே இதனை அனுகமுடியும் என அமைத்துகொள்வது நல்லது.Replicaவில் காப்புநகல் செய்வதை தவிர்த்திடுக. மேலும் அதிகஅளவிற்கு புத்தாக்கம் செய்வதையும் தவிர்த்திடுக.

iRedMail என்ற திறமூல கருவியை பயன்படுத்தி நாமே மின்னஞ்சல் சேவையாளரை உருவாக்கி கொள்ளமுடியும்

ஓப்பன் சுசி , உபுண்டு , போன்ற அனைத்து லினக்ஸ் இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்வாய்ந்த  ஸ்பேம் ,வைரஸ்ஆகியவற்றின் தாக்குதலில்லாத மின்னஞ்சல் சேவையாளரை iRedMail என்ற திறமூல கருவியை பயன்படுத்தி  உருவாக்கி கொள்ளமுடியும் இதற்காக இதனுடைய சமீபத்திய பதிப்பை  http://www.iredmail.org/ என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்க  பின்னர் இதனை  இயக்குக உடன் தோனறிடும் தொடக்கதிரையில் yes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் இதனை நம்முடைய கணினியில்நிறுவிடும் செயல் நடைபெறதுவங்கும் .  உடன் Virtual Domain  என்பதையும்பின்புல மின்னஞ்சல் சேமிப்பகத்தை  MYSQL அல்லது LDAP என்பது போன்றை தெரிவுசெய்து கொண்டு continue என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் வடிவமைப்பு செயல் நடைபெறும் send mail என்ற வாய்ப்பை யும் தொடர்ச்சியான திரையில் yes/no போன்ற பொத்தான்களையும்  தெரிவுசெய்து சொடுக்கி  நிறுவி அமைவு செய்திடும் பணியை முடிவிற்கு கொண்டு வருக. இறுதி திரையில் இணைய அஞ்சல் நிருவாகியின் பலக்ததிற்கான இணைப்பாக  https://www.yourservername/mail/  ,https://yourservername/iredadmin/ என்றவாறு இருப்பதை உறுதிபடுத்தி கொள்க  postmaster@yourdomainnameஎன்பதில் பெயரையும் கடவுச்சொற்களையும் பெற்று கொண்ட  பின் கணினியை மறுதொடக்கம் செய்திடுக  பிறகு Roundcubemail  என்பதை https://www.yourservername/mail/  என்ற இணைய பக்கத்தினை அனுகிடுக மின்னஞ்சல் நிருவாகியாக    ,https://yourservername/iredadmin/ என்ற இணைய பக்கத்தினை அனுகிடுக இவ்வாறு இந்த இணைய பக்கங்களை அனுகிடுவதற்கு  postmaster@yourdomainnameஎன்பதன் மூலம் பெற்ற பயனாளரின் பெயரையும் கடவுச்சொற்களையும் பெயன்படுத்தி கொள்க Addஎன்ற தாவியின்  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி  ஒரு பயனாளரை User உருவாக்கி கொண்டு  நம்முடைய மின்னஞ்சல் சேவையாளரின் திரைக்கு உள்நுழைவு செய்து பரிசோதனை மின்னஞ்சலை    postmaster பயனாளிக்கு அனுப்பிடு க   உடன் இந்த மின்னஞ்சல் நமக்கு வந்த சேர்ந்தால் நம்முடைய மின்னஞ்சல் சேவைாளர் வெற்றிகரமாக நிறுவபட்டுள்ளது என அறிந்து கொள்க . 100.5.1

ஆண்ட்ராய்டு சாதணத்தில் செயல்படும் மூன்று இயந்திரமொழிமாற்றிகள்

 

தற்போது நாமனைவரும் செல்லிடத்து பேசியை நம்முடன் எப்போதும் வைத்துகொண்டுள்ளோம் இவை பெரும்பாலும் ஆண்ட்ராய்டு சாதணமாகவே உள்ளன இந்த ஆண்ட்ராய்டு சாதமங்கள் பேசுவற்காக மட்டுமன்று நம்முடைய மேஜைக் கணினியை போன்ற பல்வேறு கணினியின் செயல்களையும் செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும் இவைகளில்  செயல்படும் பயன்பாடுகளை கட்டளைவரிகளில் உருவாக்கி உடனுக்குடன் அதனை  இயந்திரமொழியாக மொழிமாற்றியமைத்திட பின்வரும் மூன்று கருவிகளும் மிகமுக்கியமாக விளங்குகின்றன

1 C4droid இது சி சி++சூழலில் நம்முடைய சொந்த பயன்பாடுகளை உருவாக்கி  இயந்திரமொழியாக மாற்றியமைத்து செயல்படுத்தி பார்த்திட பயன்படுகின்றது . செல்லுமிடத்திலெல்லாம் கல்விக்காகவும் கட்டளைவரிகளை உருவாக்கிடவும் இது பயன்படுகின்றது

100.4.1

Frink இது ஜாவா மெய்நிகர் கணினியில் செயல்படும் வண்ணம் அமைக்கபட்டுள்ளது  இது ஆண்ட்ராய்டு சாதணங்கல் மட்டுமல்லாது நம்முடைய கணினியிலும் செயல்படும் திறன்கொண்டது  கணக்கீடு செய்வதற்கு மிகசிறந்த கருவியாக அமைகின்றது  பேச்சொலியை உரையாக மாற்றியமைத்திடவும்  உரையை வேறுமொழிக்கு மொவிமாற்றம் செய்திடவும் பயன்படுகின்றது இதில் மிகச்சுலபமாக கட்டளைவரிகளை உருவாக்கி   இயந்திரமொழியாக மொழிமாற்றியமைத்திட பயன்படுகின்றது

100.4.2

JoyToy  இது இருப்பதிலேயே மிக எளிமையான மொழிமாற்றியாகும் இதனுடைய  திரையின் கீழ்பகுதியிலுள்ளEvalஎன்ற பொத்தான் நாம் எழுதிய கட்டளைவரிகளை இயக்கி பார்த்திடவும்   Load சேமித்த கட்டளைவரி கோப்புகளை பட்டியலிடவும் Save  எழுதிய கட்டளைவரிகளை சேமித்திடவும் Clear திரையினை சுத்தம் செய்து அடுத்த செயலிற்கு சென்றிடவும்  பயன்படுகின்றன.  ஒரு மூலக்குறிமுறை திரையும்  செயல்படுத்தி பார்ப்பதற்கான திரையும் கீழே செயல்டுபடுத்துவதற்கான பொத்தான்களையும் ஒருங்கே கொண்டது  இவைகளை பயன்படுத்தி ஆண்ட்ராய்டு சாதனங்களின் பயன்பாடுகளை உருவாக்கி பயன்படுத்தி கொள்க

 

Previous Older Entries