ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-58-படவில்லைகளின் காட்சி

  எந்தெந்த படவில்லைகள் எந்த வரிசைகிரமத்தில் படவில்லைகாட்சியாக திரையில் காண்பிக்கப் படவேண்டும் ,
 இந்த படவில்லைக்காட்சியானது தானாகவே இயங்கவேண்டுமா அல்லது  நாம் விரும்பியவாறு இயங்கவேண்டுமா? ,
 படவில்லைகாட்சியில் இருபடவில்லைகளுக்கு இடையேயான இடைவெளிநேரம் எவ்வளவு இருக்கவேண்டும்,
 படவில்லைகாட்சியில் படவில்லைகளின் அசைவூட்டம் எவ்வாறு அமைய வேண்டும்,
 படவில்லைகாட்சியின்போது சுட்டியின் பொத்தானை சொடுக்குவதால் என்ன நிகழ வேண்டும்
  என்பது போன்ற செயல்களை ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸில் உள்ள ஒரு சில கருவிகளை பயன்படுத்தி நம்மால் அமைத்து கொள்ளமுடியும். இவ்வாறான பெரும்பாலான செயல்கள் படவில்லைகளின் தொகுப்பு காட்சித் (slide sorter view) திரையில் செயல்படுத்தி கொள்ளமுடியும். அதற்காக மேலே கட்டளை பட்டியிலிருந்து View => Slide Sorter=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. 
  அல்லது ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸின் பணியிடத்தின்(workspace) மேல் பகுதியில்  உள்ள Slide Sorterஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 உடன்  Slide Sorter view என்ற காட்சி திரையின் பணியிடத்தில் அனைத்து படவில்லைகளும் காட்சியளிக்கும்
 படவில்லை காட்சியை திரையில் காண்பிப்பதற்கு முன் அதற்கான அடிப்படை அமைப்பை ஒவ்வொரு படவில்லைக்கும் உருவாக்கிடவேண்டும் அதற்காக முதலில் அவைகள் என்னென்னவென தெரிந்துகொள்வோம் மேலே கட்டளை பட்டியிலிருந்து Slide Show => Slide Show Settings=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.  உடன்  Slide Showஎன்ற (படம்-58-1)உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும்  அதில்

 படம்-58-1
  Rangeஎன்ற பகுதியில் உள்ள பின்வரும் வாய்ப்புகள் எந்தெந்த படவில்லைகள் எந்தவரிசையில் படவில்லைகாட்சியில் இருக்கவேண்டுமென  தொகுத்திட உதவுகின்றது
  1.All slidesஎன்ற வாய்ப்பு  மறைக்கபட்ட படவில்லையைத் தவிர மிகுதி அனைத்தையும்  வரிசையாக அடுக்கி தொகுத்து வைத்திட பயன்படுகின்றது
  2.From என்ற வாய்ப்பு நாம் தெரிவுசெய்திடும் படவில்லையிலிருந்து  மிகுதியை வரிசையாக அடுக்கி தொகுத்து வைத்திட பயன்படுகின்றது
  3.Custom Slide Showஎன்ற வாய்ப்பு நாம் விரும்பிய வகையில் படவில்லைகள் அனைத்தையும்  வரிசையாக அடுக்கி தொகுத்து வைத்திட பயன்படுகின்றது
   Typeஎன்ற பகுதியில் உள்ள பின்வரும் வாய்ப்புகள் படவில்லைகாட்சியின்போது படவில்லைகள் எவ்வாறு காட்சியளிக்கவேண்டும் என அமைத்திட உதவுகின்றது
  1.Defaultஎன்ற வாய்ப்பு படவில்லைகாட்சி முழுத்திரையிலும் தெரியுமாறும்  ஓப்பன் ஆஃபிஸின் கட்டுபாடு இல்லாமலேயே கடைசி படவில்லைவரை படவில்லை காட்சியை  காண்பித்து காட்சி முடிந்த பின்னரே வேளியேறுமாறும் அமைத்திட பயன்படுகின்றது
  2.Windowஎன்ற வாய்ப்பு  படவில்லைகாட்சியானது   ஓப்பன் ஆஃபிஸின் கட்டு பாட்டுடன்   கடைசி படவில்லைவரை   படவில்லைகாட்சியை காண்பித்து காட்சி முடிந்த பின்னரே வேளியேறுமாறும் அமைத்திட பயன்படுகின்றது.
  3.Autoஎன்ற வாய்ப்பு   படவில்லை காட்சி முடிந்தவுடன் கடைசி படவில்லையில் சிறிதுநேரம் காத்திருந்து மீண்டும் முதல் படவில்லையிலிருந்து கடைசி படவில்லைவரை படவில்லை காட்சியை  காண்பிக்குமாறு அமைத்திட பயன்படு கின்றது
  Optionsஎன்ற பகுதியில் பின்வரும் வாய்ப்புகள் உள்ளன
  1.Change slides manuallyபடவில்லை காட்சியில் படவில்லைகளுக்கு இடையில் காலஇடைவெளியானது  தானாகவே அமைக்கபட்டிருந்தாலும் அதனால் படவில்லையில் மாறுதலும்  தானாகவே ஏற்படுவதை தவிர்ப்பதற்கு இந்த வாய்ப்பு உதவுகின்றது
  2.Mouse pointer visible என்ற வாய்ப்பு  படவில்லைகாட்சியின்போது காட்சியின் விவரங்களை சுட்டி காண்பிப்பதற்காக மற்ற சாதனங்கள் இல்லாதபோது சுட்டியை திரையில் பிரதிபலிக்கசெய்கின்றது
  2.Mouse pointer as penஎன்ற வாய்ப்பு  படவில்லைகாட்சியின்போது அந்த காட்சியின் விவரங்களை சுட்டி காண்பிப்பதற்காக மற்ற சாதனங்கள் இல்லாதபோது சுட்டியை திரையில்  பேனா போன்ற உருவத்துடன் பிரதிபலிக்கசெய்கின்றது
  3.Navigator visibleஎன்ற வாய்ப்பு  படவில்லைகாட்சியின்போது வழிகாட்டியை திரையில்   பிரதிபலிக்கசெய்கின்றது
  4.Animations allowedஎன்ற வாய்ப்பு படவில்லையின் அனைத்து  சட்டகத்திலும் அசைவூட்டத்தை செயல்படுத்துகின்றது இதனை தெரிவுசெய்யவில்லையெனில் முதல்படவில்லையில் மட்டும் அசைவூட்டத்தை அனுமதிக்கும்
  5.Change slides by clicking on backgroundஎன்ற வாய்ப்பு படவில்லை காட்சியின்போதே அடுத்த படவில்லையின் பின்புலத்தை மாறுதல் செய்ய பயன்படுகின்றது
  6.Presentation always on top என்ற வாய்ப்பு மற்ற பயன்பாடுகளின் சாளரம் திரையில் மேல்பகுதியில் தோன்றுவதை தவிர்ப்பதற்காக பயன்படுகின்றது
   Multiple displays என்ற பகுதியின் வாய்ப்புகள்  ஒன்றுக்கு மேற்பட்ட திரையில் ஓரே சமயத்தில் படக்காட்சியை காண்பிக்குமாறு அமைத்திட பயன்படுகின்றது
 படவில்லையை படவில்லைக்காட்சியின்போது மறைத்திட
  ஒருசில படவில்லைகளை குறிப்பிட்ட படவில்லைக்காட்சியில் காண்பிக்க வேண்டாம் என விரும்பிடும்போது  முதலில் படவில்லைகளின் பலகத்தில்(slide pane )அல்லது  படவில்லைகளின் தொகுப்புத்திரையில்  தேவையான படவில்லையை தெரிவுசெய்து கொள்க  பின்னர் கருவிபட்டியிலுள்ள Hide Slideஎன்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக 
அல்லது சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் சூழ்நிலை பட்டியில் Hide Slideஎன்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக
  அல்லது மேலே கட்டளை பட்டியிலிருந்து Slide Show => Hide Slide=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. 
  உடன் குறிப்பிட்ட படவில்லையானது படவில்லைகாட்சியிலிருந்து மாறைக்கபட்டுவிடும்
மறைக்கபட்ட படவில்லையை மீண்டும் படவில்லைக்காட்சியில் காண்பித்திட
  மேலே கூறியவாறு மறைக்கபட்ட படவில்லையை மீண்டும் படவில்லைக்  காட்சியில் காண்பிக்க விரும்பிடும்போது  முதலில் படவில்லைகளின் பலகத்தில் அல்லது  படவில்லைகளின் தொகுப்புத்திரையில்  தேவையான படவில்லையை தெரிவு செய்து கொள்க  பின்னர் கருவிபட்டியிலுள்ள ShowSlideஎன்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக
   அல்லது சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் சூழ்நிலை பட்டியில் Show Slideஎன்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக
  அல்லது மேலே கட்டளை பட்டியிலிருந்து Slide Show => Show Slide=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. உடன் குறிப்பிட்ட படவில்லையானது படவில்லைகாட்சியில் சேர்க்கபட்டுவிடும்
வாடிக்கையாளர் விரும்பியவாறு படவில்லைகாட்சியை அமைத்திட
  நாம்விரும்பியவாறு படவில்லைகாட்சி திரையில் தோன்றுவதற்காக மேலே கட்டளை பட்டியிலிருந்து Slide Show => Custom Slide Show=> என்றவாறுகட்டளை களை செயற்படுத்துக.   உடன் தோன்றிடும் Custom Slide Show என்ற (படம்-58-2) உரையாடல் பெட்டியில்  newஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக 
 படம்-58-2
பின்னர் விரியும் define Custom Slide Show என்ற (படம்-58-3)உரையாடல் பெட்டியில்  படவில்லைக்காட்சிக்கான பெயரை name என்ற பகுதியில்தட்டச்சு செய்துகொண்டு Existing slides என்பதன் கீழுள்ள பட்டியலில் தேவையானவற்றை தெரிவுசெய்து >> என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்து படவில்லைகள் selected slides என்ற பகுதியில் சென்று சேர்ந்துவிடும்  selected slides என்ற பகுதியில்  தேவையற்ற படவில்லை ஏதேனுமிருந்தால் அதனை தெரிவுசெய்து கொண்டு << என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தேவையற்றது பழைய நிலைக்கே சென்றுவிடும் அனைத்தும் சரியாக இருக்கின்றது எனில் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

படம்-58-3
பின்னர் Custom Slide Show என்ற (படம்-58-2)உரையாடல் பெட்டியில்  edit,delete,copy ஆகிய பொத்தான்களை பயன்படுத்தி  படவில்லை கோப்பில் தேவையான மாறுதல் செய்துகொள்க   பிறகு இதே உரையாடல் பெட்டியின் கீழ்பகுதியிலுள்ள Use Custom Slide Showஎன்ற தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்து கொண்டு   பட்டியலிலுள்ள படவில்லையில் படவில்லைக்காட்சிக்கான தொடக்க படவில்லையை மட்டும் தெரிவு செய்து கொண்டு startஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம்விரும்பிய படவில்லையிலிருந்து படவில்லைக்காட்சியானது திரையில் காண்பிக்க தொடங்கும்  இந்த படவில்லைக்காட்சி முடிவடைந்த பின்னர் Closeஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி நாம் செய்த மாறுதல்களை சேமித்து கொள்க

அறிந்து கொள்வோம் அக்சஸ் -2003-தொடர்- பகுதி- 31 விபிஏவின் பிழைகளை தவிர்த்தல்

அக்சஸில் விபிஏவின் குறிமுறைகளை எழுதும்போது தவிர்க்க கூடிய பிழைகள் (avoidable errors ) தவிர்க்க முடியாத பிழைகள் (unavoidable errors ) என இரண்டு வகையான பிழைகள் ஏற்படுகின்றன. புதியவர்களுக்கு முதல் வகையான பிழை  அதிகம் ஏற்படும். பல வருடம் அனுபவம் பெற்றவர்கள் இந்த வகையான பிழையை தவிர்த்துவிடுவர். இந்த முதல் வகை பிழை மேலும் மூன்று வகையாக பிரிக்கலாம்.

1.     மொழிமாற்ற நேரபிழை (Compile time error ): மூலக்குறிமுறையை கணினிக்கு புரியும் வகையில் மொழிமாற்றம் செய்யும் நேரத்தில் ஏற்படும் பிழை.

2.     இயக்க நேர பிழை (Run time error ):நிரல்தொடரில் பொருத்தமில்லாத அமைவால் நாம் எதிர்ப்பார்க்கும் விளைவு ஏதும் ஏற்படாமல் செயல் பாதியில் நின்றுவிடும்.

3.     தருக்க பிழைகள் (Logical error ):: இந்த வகையான பிழை மொழி மாற்றியோ கணினியோ இதனை கண்டுபிடித்து சொல்லாது,அதனால் நாமும் நிரல்தொடர்  சரியாகத்தானே இருக்கிறது என இருமாந்து இயக்கிடுவோம். ஆனால் பிழையான விடைதான் கிடைக்கும்.

இரண்டாவது வகையான தவிர்க்க முடியாத பிழை என்பது நமக்கு தெரிந்த அளவு அனைத்தையும் செய்திருப்பதாக எண்ணுவோம். ஆனால் பிழை ஏற்படும்.

1.     பயனாளர்ஒருவர் அக்சஸின் ஒரு ஆவனத்தின் (record) தொடக்க திறவு கோலை (primary key ) உருவாக்காமல் சேமிக்க முயல்வது.

2.     சேர்க்கை பட்டியில் பட்டியலில் இல்லாத மதிப்பை உள்ளீடு செய்ய முயல்வது

3.     அக்சஸில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது திடீரென மின்சாரம் நின்றுபோவது

4.     வன்தட்டின் நினைவகம் முழுவதும் நிரம்பி விடுவது.

5.     இணைய இணைப்பு எதிர்பாராமல் தொடர்பற்று போவது.

6.     தவறான குறுவட்டுகளை அதற்கான வாயில் செருகுவது

போன்ற பிழைகள் தவிர்க்க முடியாதவையாகும். இதனை இருவகையாக பிரிக்கலாம்.

1.     முடிவான பிழை (Fatal error ) அல்லது(Terminal error): Ram  நினைவகத்தில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள் தானாகவே அழிந்து போவது இந்த வகையாகும். இதனை அக்சஸ்-ஆல் கையாளமுடியாது. இதனை சரி செய்ய முடியாமல். பயன்பாட்டை அப்படியே இடையில் நிறுத்திவிடுகிறது.

2.     முடிவற்ற பிழை (Non fatal error ): இந்த வகையான பிழைஏற்படும் போது பிழை செய்தி ஏதும் திரையில் பிரதிபலிக்காது ஆனால் நடைபெற்றுகொண்டிருக்கும் செயல் முடிவுக்கு வராமல் தொக்கி நிற்கும்.

private sub cmd save_click( )

docmd.run command accmd saved record

end sub

இதனை இயக்குவதற்காக புதிய ஆவணம் ஒன்றை உருவாக்கி தொடக்க திறவுகோல் (primary key)  இல்லாமலேயே சேமிக்க முயலும்போது இயக்க நேர செய்தி மட்டும்(படம்-1) பிரதிபலிக்க செய்து ஆவனத்தை சேமிக்காமல் விட்டுவிடுகின்றது.

படம்-31 -1

பிழைக்கான பொறிவைத்தல்(Error Trapping)

வீடுகளில் எலித்தொல்லை அதிகமாகிவிட்டால் அதை பிடிப்பதற்காக தனியாக ஒரு எலிப்பொறி வைத்து பிடித்துவிடுவோம். அவ்வாறே அக்சஸில் விபிஏ குறிமுறை எழுதும்போது ஏற்படும் பிழைகளை சுட்டிகாட்டி இயக்கத்தை நிறுத்துவதை பிழைக்கு பொறிவைத்தல் என அழைப்பர். இது நிரல்தொடரில்முடிவான பிழைகள் ஏதும் வரும்போது இயக்கத்தை நிறுத்தி பிழை செய்தியை சுட்டுவதற்காக பயன்படுகிறது. இதற்கான நிரல்தொடர் பின்வருமாறு.

நிரல்தொடர்- 31-1

Private Sub cmdSave_click()

On Error GoTo err_cmdSave_Click

DoCmd.RunCommand CmdSaveRecord

Exit_cmdSve_Click:

Exit Sub

err_cmdSave_Click:

MsgBox “You must enter a unique Customer Id before saveing” & “the record.”

DoCmd.GoToControl “CustomerID”

Resume Exit_cmdSave_Click

End Sub

பிழைகளை கையாள்வது (Error handling)

சரி இவ்வாறு பிழைகளை பொறி வைத்து கண்டுபிடித்து விட்டோம். இதனை சரிசெய்வதற்காக எவ்வாறு கையாளுவது. அக்சஸில்

1.     தரவுதளஇயந்திரம் மேலாண்மை செய்யும்போது தரவுகளை கையாளும் செயலை நிறைவேற்றாமல் பாதியிலியே நிறுத்திவிடுவது.

2.     மேக்ரோக்களை இயக்கும்போது அக்சஸில் இடைமுகத்தில் ஏற்படும் பிழைகள்.

3.     விபிஏ குறிமுறைகள் இயக்கும்போது ஏற்படும் இயக்க நேர பிழைகள்

ஆகிய மூன்று பகுதியில் பிழை ஏற்படுகிறது. அக்சஸில் படிவங்கள். அறிக்கைகள், விபிஏ குறிமுறைகள் ஆகியவைகளின் ஒவ்வொரு செயலி, மற்றும் செயல்முறை ஆகியவற்றில் ஏற்படும் பிழைகளை கையாள ஏராளமான எளிய வகையான வழிமுறைகள் பலஉள்ளன. அவைகளில் பொதுவான துணை செயல்முறை பின் வருமாறு

நிரல்தொடர்- 31-2

Function SampleCode()

‘Dim Stataments here

On Error GoTo ErrorHandler

‘insert functional code here

Exit Function

ErrorHandler:

‘error handler code here

MsgBox Err.Description

‘either enter a resume statement here or

‘nothing and let the function end

End Function

இந்த செயற்கூற்றுகள் நிரல்தொடரில் பிழை ஏதேனும் ஏற்படும்போது அதனை கண்டுபிடித்து இயக்கத்தின் ஆரம்ப நிலைக்குகொண்டுசெல்கிறது. அல்லது இயக்கத்தை பாதியில் நிறுத்தி வெளியில் வந்துவிடுகிறது. அப்போது பிழைச்செய்தியை திரையில் பிரதிபலிக்க செய்கிறது. ,மேலும் இது தொடர்ந்து இயக்கம் நடைபெறுகிறதா எனசரி பார்க்கிறது. பிழை ஏதும் தெரிந்தால்அதற்கான செய்தியை பிரதிபலிக்க செய்து இயக்கத்தை நிறுத்தி விடுகிறது.

பிழைகளை சேகரித்தல் (Error collection )

பின்வரும் குறிமுறை ADO  இணைப்பில் ஏற்படும் பிழைகளை கையாளு கின்றது.

ஏதேனும் பிழை ஏற்பட்டால் Lable error  இயங்க ஆரம்பித்து இது விபிஏவால் ஏற்படும்  பிழையா அல்லது ADO வால் ஏற்படும் பிழையா என சரிபார்த்து அதற்கேற்றவாறு தகவல்களை சேகரித்து பிழைசுட்டும் செய்தியை திரையில் காண்பிக்கிறது.

நிரல்தொடர்-31-3

Dimm cnn As New ADDODB.Connetion

Dim errX As ADDODB.Error

Dim strMessage As String

On Error GoTo ErrorHandler

GoTo Done

ErrorHandler:

If cnn.Errors.Count > 0 Then

If Err.Number = cnn.Errors.Item(0).Number Then

For Each errX In cnn.Errors

strMessage = strMessage & Err.Description & vbCrLf

Next

MsgBox strMessage.”ADO Error Handler”

End If

Else

MsgBox Err.Description..”VBA Error Handler”

End If

End Function

வாடிக்கையாளர் பிழைச்செய்தி Custom error message  அக்சஸை கையாளும்போது இயல்பு நிலையில் ஏற்படுவதற்காக பின்வரும் பிழைச்செய்திகளை நம்முடைய பயன்பாட்டில் உபயோகப்படுத்தி கொள்ளலாம்,

நிரல்தொடர்-31-4

Index or primary key can’t contain a null value.

Duplicate value in index, primary key or relationship.changes were unsuccessful.

The text you enter must match an entry in the list.

விபிஏவின் பிழை ஒரு செயல்முறையை இயக்கும்போது விபிஏ பிழை ஏற்பட்டஉடன் இயக்கத்தை நிறுத்திவிட்டு பிழை செய்தியைமட்டும் பிரதிபலிக்க செய்கிறது. பின்வரும்நிரல்தொடர் கட்டளை பொத்தானின் பிழை சுட்டுவதற்கானது.

நிரல்தொடர்-31-5

Private Sub cmdClose_Click()

On Error GoTo Err_cmdClose_Click

DoCmd.Close

Exit_cmdClose_Click:

Exit Sub

Err_cmdClose_Click:

MsgBox Err.Description

Resume Exit_cmdClose_Click

End Sub

நன்றி :தமிழ் கம்யூட்டர் மாதமிருமுறை இதழ்

எந்த கணினியை வாங்குவது எனத்தயங்கும் புதியவர்களுக்காக

பிரபலமான நிறுவனத்தின் (Branded )கணினியா அல்லது  தொகுப்பு (Assembled) கணினியா எதை வாங்குவது என பலருக்கு குழப்பமாக இருக்கும். தொகுப்பு கணினி மிகக்குறைந்த விலையில் கிடைக்கும்போது பிரபலமான நிறுவனத்தின் கணினியை ஏன் வாங்க வேண்டும் என்ற கேள்வியும் எழும். இவ்வாறான சூழ்நிலையில் பின்வரும் கருத்துகளை கவணத்தில் கொள்க,

நிறுவனத்தின் Brand கணினிகளால் என்னென்ன நன்மைகள்கிடைக்கும்?

1.            கணினியில் அனுமதி பெற்ற இயக்க முறைமை( Operating system)கள் நிறுவப்பட்டு கிடைக்கும். இதற்கென தனியாக செலவிடத்தேவையில்லை.

2.            சந்தைக்கு  வருமுன் அனைத்து உள்ளுறுப்புகளும் இயக்க முறைமைகளும் முழுவதும் பரிசோதித்து பார்த்த பின்னரே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன.

3.            விற்பனைக்கு பிந்தைய சேவைகள் தடங்களில்லாமல் வழங்கப்படுகின்றன.

4.            நச்சுநிரலை எதிர்த்து தடுக்க கூடிய எதிர்நச்சுநிரல் மென்பொருள் (antivirus software) பாதுகாப்பு வளையங்கள்(Firewall) மற்ற ஏதேனும் இழப்பு ஏற்படும்போது மீட்கும் வசதியுடைய நிரல்தொட ர்ஆகியவற்றுடன் கிடைக்கின்றன.

இதன் தீமைகள் :

1.            தொகுப்பு கணினியை விட விலை மிகஅதிகமாக உள்ளன.

2.            இதனுடைய உள்ளுறுப்புகளை குறிப்பிட்ட முகவர்கள் மூலமாக மட்டுமே மேம்படுத்த வேண்டும். தனிப்பட்ட முறையில் இவ்வாறு செயற்படுத்தபட்டு விட்டால் உத்தரவாதம் ஏதும் கிடைக்காது.

3.            வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப உள்ளுறுப்புகளை குறிப்பிட்ட வரன்முறைக்குள் மட்டும் மாற்றி கொள்ள இயலும்.

தொகுப்பு கணினியில் (assemble computer)என்னென்ன நன்மைகள் உள்ளன?

1.            ஒவ்வொரு உள்ளுறுப்பும் வாடிக்கையாளர் விரும்பும் நிறுவனத்தின் உற்பத்தி பொருளாக தெரிவு செய்து சிறந்த கணினியாக உருவாக்க முடியும்.

2.            நிறுவனத்தின் கணினியை விட மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது.

3.            ஒவ்வொரு உள்ளுறுப்புகளும் தனித்தனியாக மேம்படுத்தி கொள்ள முடியும்.

தொகுப்பு கணினியின்(assemble computer) தீமைகள்

1.            விற்பனைக்கு பிந்தைய சேவை கிடைக்காது.

2.            கணினி இயங்குவதற்கு தேவையான இயக்க முறைமை (மென்பொருள்) தனியாக செலவிட்டு வாங்கிதான் நிறுவி இயக்க வேண்டியுள்ளது.

3.            ஒவ்வொரு உள்ளுறுப்பையும் தலைச்சிறந்ததாக தேடித்தேடி சேகரித்து ஒருங்கிணைத்து உருவாக்கும் தொகுப்பு கணினியின் உள்ளுறுப்புகளின் இயக்கத்தில் இவை ஒன்றுக்கொன்று முரண்பட வாய்ப்புள்ளது.

 

இரண்டிற்கும் உள்ள நன்மை தீமைகளை பற்றி தெரிந்து கொண்டோம். இப்போது ஒவ்வொரு உறுப்பாக எதனை வாங்குவது என காண்போம்.

1. கணித்திரை ( Monitor ) :             மேல் நாடுகளில் கணித்திரையின் முக்கிய பாகமான CRT tubesகள் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு பயன்படுத்தி முடிந்தவுடன் புதியதாக மாற்றி பொருத்திவிடுவார்கள்.கயலான் கடைகளில் போடப்பட்ட  பழைய படக்குழாய்  (CRT Tube)களை நம்மை (இந்தியா)போன்ற ஏமாளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிடுவார்கள். அழகிய வெளிப்புறத் தோற்றத்துடன் இந்த பழைய  படக்குழாய்  (CRT Tube)களை வைத்து புதிய கணினித்திரையென குறைந்த விலைக்கு  நம்முடைய தலையில் கட்டி விற்பனை செய்திடுவார்கள். இவைகள் அதிக கதிர்வீச்சு தன்மையும் உடலுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தும். அதனால் பிரபல நிறுவனத்தின் கணினி திரையை மட்டும் கேட்டு வாங்குவது நல்லது. அதனுடன் Energy Star  மற்றும்  MPRIT  ஆகிய சான்றிதழ்களை சேர்த்து பெறுவது நம்முடைய குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையை காக்கும் வழியாகும். படக்குழாயின் பின்புறம் உள்ள முகவரி தகட்டில் இந்த சான்றுகள் உள்ளதாவென சரிபாருங்கள்.தற்போது எல்சிடி கணினிதிரை கிடைப்பதால் அதனையே கொள்முதல் செய்திடுமாறு பரிந்துரைக்கபடுகின்றது

2. இயக்க முறைமைகள் (Operating System) : கணினியில் இருப்பது அனுமதி பெற்ற மென்பொருள்தான் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், அவ்வாறில்லையெனில் கணினி இயக்கம் தடைபட்டு மீட்கப்படும்போது தரவுகளை மீட்டாக்கம் செய்வது மிகவும் கடினமாகிவிடும். விண்டோ இயக்க முறைமை யெனில்  <http://www.microsoft.com/genius/&gt; என்ற இணையதளத்தை தொடர்பு கொண்டு நாம் பயன்படுத்தும்  மென்பொருள் அனுமதி பெறப்பட்டது என உறுதி செய்து கொள்ளுங்கள்.

3. நிலை வட்டு இயக்கி  (Hand disk drive) :பயன்படுத்தப்பட்ட / பழுதுப்பட்ட நிலை வட்டு இயக்ககத்தில்(Hand disk drive)¢ உள்ள தரவுகளை அனைத்தும் அழித்து நீக்கி புதியது போன்று வடிவமைத்து (format)  குறைந்த விலைக்கு தருவதாக நம்மிடம் விலை பேசுவார்கள். எச்சரிக்கையாக இருங்கள். உற்பத்தி நிறுவனங்கள் இவ்வாறு பயன்படுத்தப்பட்ட  / பழுதுப்பட்டதை சரி செய்து வெளியிடும் போது  repaired or republished  என்ற சான்றுடன் இருக்கிறதாவென சரிபார்த்து கொள்க.

4. மின் விநியோகம் (power supply): மின்விநியோக அமைபபே ஒரு கணினியின் உயிர் நாடியாகும்.அதனால் தரமற்ற மின்விநியோக அமைப்பை கொள்முதல் செய்ய வேண்டாம். மிக கவனமாக, சிறந்த தரமான , ERLT/EQDL ஆகிய சான்றளிக்கப்பட்டவைகளா என சரிபார்த்துதெரிவு செய்திடுக..

5. நினைவகம் (Memory) :பெயர் தெரியாத நிறுவனத்தின் நினைவகத்தை (Chips) பயன்படுத்தினால் அடிக்கடி கணினி தொங்கலாக நிற்பதற்கும,தரவுகள் இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பிரபல நிறுவனமான  Kingstone, Transcard, Corasin, Samsung  போன்றவைகளின்  chipகள் தான் இது என சரிபார்த்து கொள்க.

6. விசைப்பலகை (Keyboard): பொறியியல் விசைப்பலகை (mechanical key board) மறறும் ஜவ்வு விசைப்பலகை(membarance key board) என இரண்டு வகையில் கிடைக்கின்றன. முதலாவாது ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான விசையுடைய அதிக வாழ்நாள் உடையது ஆனால் விலை அதிகமானது. இரண்டாவது வகை மிகவும் விலைமலிவானது. பிளாஸ்டிக் உறைகளுக்கு இடையே உலோகத்தகடை வைத்து இயக்கப்படுகிறது. குறைந்த வாழ்நாள் உடையது. விசைப்பலகைகளில் ஒவ்வொன்றும் தனித்தனி விசையாக அமைக்கப்பட்டுள்ளதா என சரிபார்த்து கொள்க.

7. விற்பனைக்கு பிந்தைய சேவை  (After sales services): விற்பனைக்கு பிந்தைய சேவையாக மூன்று அல்லது நான்காண்டுகளுக்கு குறைந்த கட்டணத்தில் கணினியின் ஆண்டு பராமரிப்பு பணி செய்வதாக வாக்களிப்பார்கள். ஆனால் இவர்கள் நல்ல கல்வியறிவு பெற்ற  திறமை வாய்ந்த தொழில்நுட்ப பொறியாளர்களை வைத்திருக்க மாட்டார்கள். அதனால்  திறமையற்ற அனுபவமற்ற பொறியாளர்கள் பராமரிப்பு பணியின்போது  நம்முடைய தரமான CPU, HDD, Monitor  போன்றவைகளை எடுத்து கொண்டு தரமற்ற உறுப்புகளை மாற்றியமைத்திட வாய்ப்புள்ளது. அதனால் நம்பகமான நல்ல நிறுவனத்தில் மட்டும்  ஆண்டு பராமரிப்பு பணியினை(Annual Maintenance Contract)யை கொடுத்திடுக.

மேலே கூறிய ஒரு சில கருத்துகளை கணினி வாங்கும்போது  கவனத்தில் கொண்டு பண இழப்பை தவிர்த்திடுக.

அறிந்து கொள்வோம் அக்சஸ-2003-தொடர்-பகுதி-30 Ado என சுருக்கமாக அழைக்கபடும் Record set object

தரவு தளங்களில் உள்ள தரவுகளை கையாளுவதற்கும் எளிதில் அணுகுவதற்கும் பயன்படுகின்ற Active Data Object என்பதையே சுருக்கமாக Ado என அழைப்பார்கள். இது தரவு தளத்தில் தேக்கப்பட்டுள்ள தரவுகளை நிகழ்நிலைப்படுத்துவதற்காக பயன்படுகிறது. இவர்    எந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் தரவுகளையும் எளிதில் அணுகி கையாளத்தக்க திறமை உடையஒரு பல்துறை விற்பன்னர் ஆவார். தரவு தளத்தில் வினா எழுப்புதல், நிகழ்நிலைப்படுத்துதல், தரவு வகைகளை மாற்றுதல், கட்டுதல், மூடுதல், ஏற்புடையதாக்குதல், நடவடிக்கைகளை நிர்வாகித்தல் போன்ற பல்வேறு செயல்களை இந்த Ado நிரல் தொடர் மூலம் மிகச்சுலபமாக செய்ய முடிகிறது. இதற்கு முந்தைய பதிப்பான Data access Object  என்பதை சுருக்கமாக DAO என்றழைக்கபடுவது தரவுகளை அணுகுவதற்காக அக்சஸில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த Ado வானது DAO வைவிட திறன்வாய்ந்ததாக இருக்கும்படி செய்யப்பட்டுள்ளது.

இந்த Ado வின்செயலிகளையும் செயல்முறைகளையும் பயன்படுத்தும் முன்பு இதனுடைய மாறிகளை DIM என்ற கூற்றின் மூலம் அறிவிப்பு செய்யப்பட வேண்டும். பின்னர் நிரல் தொடரை எழுதும்போது மாறிகளுக்கு அடுத்ததாக bang(!) அல்லது dot(.) என்ற பிரிப்பானைக் கொண்டு மற்ற object க்குபெயரிட வேண்டும்.

விபிஏ மூலம் தரவுகளை கையாளுவதற்காக Record set  என்ற கருத்தமைவில் பணிபுரிய வேண்டும். பொதுவாக கோப்புகளில் உள்ள வினாவிலிருந்து ஆவனங்களின் தொகுதியை மீளப்பெறும் செயலை ADO -record set object  என அழைப்பார்கள் .தரவுகளின் மதிப்புகள் record set ன் பண்பியல்பு மதிப்பு அமைப்பாக மட்டுமே தயார் நிலையில் இருக்கும். அதனால் முதலில் record set ஐ உருவாக்க வேண்டும். இது ADO வில் நான்கு வகையாக உள்ளன. இவை வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு காரணங்களுக்காக பயன்படுகின்றன.

Dynamic cursor :  இந்த வகை record set ஆனது மிகவும் நெகிழ்வு தன்மையுடையது. இயக்க நேர இடம்சுட்டி record set ஐ பயன்படுத்தி மாறுதலை காட்சியாக காணுதல், சேர்த்தல், நீக்குதல் ஆகிய செயல்களை மற்ற பயனாளர்கள் செய்வதை நாம் காண முடியும். ஆவணங்களை எந்த திசைகளில் வேண்டுமானாலும் நகர்த்தலாம். தரவு இனம் ஆதரிக்கும்வரை bookmark ஐயும் இதற்காக பயன்படுத்தி கொள்ளலாம்.

2.Keyset cursor : இதுவும் இயக்கநேர record set போன்றதுதான் எனினும் மற்ற பயனாளர்கள் செய்யும் சேர்த்தல், நீக்குதல் போன்றவைகளை இதில்காண முடியாது. ஆனால் இதன் மூலம்நீக்கப்பட்ட ஆவணங்களை கூட தொடர்ந்து காட்சியாக காண முடியும்.

3.Static cursor : : இதுஅட்டவணை, வினா, SQL  கூற்று ஆகியவற்றின் நகலாக இருக்கின்றது. தரவுகளை மீளப்பெறவும், அறிக்கைகளை உருவாக்கவும் இதனை பயன்படுத்தி கொள்ள முடியும். இது ஆவனங்களின் நகல் ஆகும். முந்தைய இரண்டைவிட மிக வேகமாக செயல்படக்கூடயது ஆகும். ஆனால்தரவு மூலங்களில் மாற்றுதல், சேர்த்தல், நீக்குதல் ஆகியவற்றை இதன் மூலம்காண முடியாது.

4.Forward only cursor :  இது Keyset cursor  போன்றதே. ஆனால்  முன்பக்கம் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் நகரக்கூடியது. Keyset cursor ஐ விட திறன் வாய்ந்தது. ADO ஆல் திருப்பக்கூடிய இயல்பு நிலை record set object ஆக செயல்படுகிறது. இந்தrecord set ல் மிக முக்கிய பண்பியல்பு BOF மற்றும் EOF  ஆகும். இதில்Beginning of File (BOF)  என்ற கூற்றில் நடப்பு ஆவனத்தின் ஆரம்பத்தை தாண்டி முன்பக்கம்செல்ல வேண்டு மானால் இதனை True என அமைத்திட வேண்டும். அவ்வாறே End of the file (EOF) என்ற கூற்றில் நடப்பு ஆவனத்தின் முடிவை தாண்டி செல்ல இதனை True  ஆக அமைத்திட வேண்டும். Record set ல் கைவசம்  ஆவணம் ஏதும்இல்லையெனில் இரண்டையும் True   என அமைத்திட வேண்டும். பொதுவாக அக்சஸில் தரவுகளை அணுகி கையாளுதற்காக படிவத்தை(Form)  பயன்படுத்துவார்கள். ஆனால் நேரடியாக படிவத்தின் மூலமாக இல்லாமல் Record set  உடன் தரவுகளை கையாளும் பணி மிக வேகமாக செயல்பட கூடியது ஆகும். இந்த Record set  ஆனது படிக்க மட்டுமல்லாது, சேர்க்க, மாறுதல் செய்ய, நீக்க போன்ற பல பணிகளை செய்ய பயன்படுகிறது. Add  என்பதை பயன்படுத்தி ஒரு record set object  ஐ மூன்று வழிகளில் திறக்க முடியும்.

1) Connection Executed ( ) method

2) Command Executed ( )method

3) Connection and command ‘s Record set.open( )

நிரல் தொடர் – 30(1)

Private Sub product_afterupdate()

Dim cn As ADODB.Connection

Dim rs As ADODB.Recordset

Dim sQuote As String, dpp As Double

Dim sFld As String, sCrit As String

sCrit = Me.product ‘assign selected  value to variable

sQuote = ChrINR(34)

Select Case Me.Rupees ‘Find the right field for lookup

Case 1 To 10

sFld = “[1-10]”

Case 11 To 50

sFld = “[11-50]”

Case Is > 50

sFld = “[50+]”

Case Else

MsgBox (“please reenter pounds”)

End Select

Set cn = CurrentProject.Connection

Set rs = New ADODB.Recordset

With rs

.Source = ” SELECT Looknuts.product,” & “Looknuts.” & sFld & “FROM Looknuts ” & “where Looknuts.product = ” & sQuote & sCrit & sQuote & “;”

.ActiveConnection = cn

.CursorType adOpenKeyset

.LockType = adLockOptimistic

.Open

End With

dpp = rs.Fields(1)

Me.priceperRupei = dppp

rs.Close

cn.Close

Set rs = Nothing

Set cn = Nothing

End Sub

இதில் rs.close, rs=nothing  ஆகிய கூற்றின் மூலம் record setஐ மூடுகிறது. பின்னர்படிவம் மூடும் நிகழ்வு இந்த செயலின்போது நினைவகத்தின் அளவை காலியாக வைத்து கொள்கிறது. ஏனெனில் இதில் படிவrecord set  ஆனது Ado record set க்கு அமைத்திடுகிறது. Record setம்Connectionம் மூடியபிறகு மாறுதல் செய்யப்பட்டவை படிவத்தில் மறுபடியும் பிரதிபலிக்க செய்ய தேவையில்லை.

5.Changing a record : Record set  உடன் நடப்பு ஆவனத்தில் மட்டுமே பணிபுரிய முடியும். ஒரு ஆவனத்தை மாறுதல் செய்யுமுன் அதன் நகலை நினைவகத்தின் copy buffer  பகுதியில் நகர்த்தி சென்று வைத்து கொள்ளும். இவ்வாறு மாறுதல் செய்வதற்கு add new  என்ற செய்முறை பயன்படுகிறது. உடன் ஆவனம் தானாகவே copy buffer என்ற பகுதிக்கு நகர்த்தப்படுகிறது. copy buffer  என்ற பகுதியில் மாறுதல் செய்தபிறகு சேமித்திட update என்ற வழிமுறையை அமைத்து பயன்படுத்திட வேண்டும். சேமிக்காமல் விட்டிட cancel update  என்ற வழிமுறையை அழைத்திட வேண்டும். அடுத்த ஆவனத்திற்கு மாறுவதற்கு bookmark   என்ற பண்பியல்பை அமைத்து இந்த record set னை மூடிவிட்டு add new  என்ற வழிமுறை மூலம் அடுத்த ஆவணத்திற்கு(record ) மாற வேண்டும். இவ்வாறு மாறும்போது சேமிக்காது சென்றால் இந்த ADO ஆனது தானாகவே update  என்ற வழிமுறையை பயன்படுத்தி சேமித்து கொள்கிறது.

நிரல் தொடர் – 30(2)

Option Compare Database

Public Sub EditRecordset()

Dim rst As New ADODB.Recordset

Dim cnn As New ADODB.Connection

Set cnn = CurrentProject.Connection

rst.Index = “PrimaryKey”

rst.Open “customers”, cnn, adOpenStatic, adLockOptimistic, adCmdTableDirect

rst.Seek ‘BOTTOM’,adSeekFirstEQ

If rst.EOF Then

MsgBox “There is no customer with this CustomerID”

Exit Sub

Else

MsgBox “The contact name is” & rst!ContactName

rst!ContactName = “Skvasanthan”

rst.Update

MsgBox “The cntact name is ” & rst!ContactName

End If

End Sub

இந்த செயல்முறையில் கட்டளைவரியானது வாடிக்கையாளர் அட்டவணையில் ஒருstatic cursor ஐ திறக்க செய்கிறது. நடப்பு சுட்டி(index1)  ஆனது தொடக்க விசையாக (primary key)  அமைக்கப்பட்டுள்ளது. Bottom dollar moved  என்ற ஆவனத்தின் இடத்தை காண்பதற்கு seek என்ற வழிமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு ஒரு ஆவனம் இல்லையெனில் செயல்முறை ஆவனம் இல்லை என்ற  செய்தியை திரையில் பிரதிபலித்து தன்னுடைய செயலை நிறுத்தி விடுகிறது. அதன்பிறகு செயல்முறையை contact new என  மாறுதல் செய்கிறது. update  என்ற வழிமுறையை பயன்படுத்தி மாறுதல் ஏதேனும் இருந்தால் அட்டவணையில் தேக்கி வைக்கிறது.

6.Adding a record : புதிய ஆவனத்தை சேர்க்கவும், மாறுதல் செய்ததை பாதுகாக்கவும் கீழ்காணும் மூன்று படிமுறை செயல் செய்யப்பட வேண்டும்.

1)Copy buffer  பகுதியில் புதிய ஆவனத்தை உருவாக்க வேண்டும். Add new  என்ற வழிமுறையை பயன்படுத்தி இயல்பு மதிப்பு ஏதேனும் இருந்தால் அமைத்திட வேண்டும். அக்சஸ் ஆனது அட்டவணையை வடிவமைப்பு காட்சியில் நாம் குறிப்பிடும் மதிப்பை இயல்பு மதிப்பாக அமைத்து கொள்கிறது.(இங்கு இயல்பு மதிப்பு Null  ஆக இருக்க கூடாது )

2)     புதிய தரவுகளை உள்ளீடு செய்க.

3)     Copy buffer  பகுதியில் செய்த மாறுதல்களை update  என்ற வழிமுறையை பயன்படுத்தி record set ல் ஆவனத்தை சேமித்திடுக அல்லது cancel update  என்ற வழிமுறையை பயன்படுத்திcopy buffer  என்ற பகுதியில் சேமிக்காமல் விட்டிடுக. add new  வழிமுறை மூலம் record set ல் புதிய ஆவனத்தை அனுமதித்த உடன் அது நடப்பு ஆவனமாக மாறிவிடுகிறது. தரவுகளைஉள்ளீடு செய்து முடித்த பிறகு update  என்ற  வழிமுறையை அழைத்தாலும் இந்த புதிய ஆவனம் நடப்பு ஆவனமாக இருக்கின்றது. புதிய ஆவனம் record set ன் இறுதி பகுதியில் சேர்த்துவிடுகிறது.

நிரல்தொடர் – 30(3)

Public Sub AddRecordset()

Dim rst As New ADODB.Recordset

Dim cnn As New ADODB.Connection

Set cnn = CurrentProject.Connection

rst.Index = “PrimaryKey”

rst.Open “customers”, cnn, adOpenStatic, adLockOptimistic, adCmdTableDirect

rst.AddNew

rst!CustomerID = “SKV”

rst!CompanyName = “Vasanthan and co.”

rst!Country = “India”

rst.Update

MsgBox “The company name is ” & rst!CompanyName

rst.MoveNext

If Not rst.EOF Then

MsgBox “The next company name is ” & rst!CompanyName

Else

MsgBox “Thers are no more records.”

rst.Move -2

MsgBox “The previous company name is ” & rst!CompanyName

End If

End Sub

இதில் செயல்முறை add new  என்ற வழிமுறையாக புதிய ஆவனத்தை copy buffer  என்ற பகுதியில் உருவாக்குகிறது. பின்னர் customer ID, company name, country field  போன்றவைகளை அமைத்து update என்ற வழி முறையை அழைத்து அட்டவனைக்குள் ஆவனத்தை சேமித்து வைக்கிறது. இந்த செயல்முறை புதிய ஆவனத்தின் company name  பிரதிபலிக்க செய்து நடப்பு சுட்டியை ஒரு ஆவனம் முன்னோக்கி நகர்த்துகிறது. ஏனெனில் புதிய ஆவனம் record set ன் இறுதிபகுதியில் சேர்க்கின்றது. முன்னோக்கி நகருவது record set ன் எல்லைக்கப்பால் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் அதனால் EOF  மதிப்பை இந்த செயல்முறை சரிபார்க்கின்றது. EOF மதிப்பு தவறாக (False) இருத்தால் அடுத்த ஆவனத்தின் company name யை பிரதிபலிக்க செய்கிறது. உண்மையாக(True )  இருந்தால் நாம் புதியதாக சேர்த்த நடப்பு ஆவனத்தை பிரதிபலிக்க செய்கிறது.

7.     Deleting record : நடப்பு ஆவனத்தை நீக்குவதுதான் ஒரே படிமுறை செயலாகும். Delete  வழிமுறையை பயன்படுத்தி நடப்பு ஆவனத்தை நீக்க முடியும். தற்காலிக Buffer  ல் நாம் செய்த மாறுதலை ஏதும் வைத்திருக்க தேவையில்லை. இந்த நீக்குதல்பணி உடனடியாக செயல்பட கூடியது மீளப்பெற முடியாது. இந்த செயல் நடப்பு ஆவனத்தில் மட்டும் செயல்பட கூடியது.

நிரல் தொடர் – 30(4)

Public Sub DeleteRecordset()

Dim rst As New ADODB.Recordset

Dim cnn As New ADODB.Connection

Set cnn = CurrentProject.Connection

rst.Open “customers”, cnn, adOpenStatic, adLockOptimistic

rst.Find ” CompanyName = ‘Aardvark Inc.'”

MsgBox “The company name of the record to be deleted is ” & rst!CompanyName

rst.Delete

rst.Move first

MsgBox “The company name of the first record is” & rst!CompanyName

End Sub

இந்த நிரல் தொடரில்ஒரு static cursor  வாடிக்கையாளர் அட்டவணையை திறக்கிறது.பின்னர் Final  வழிமுறையில் சுட்டியை நடப்பு ஆவனத்திற்கு நகர்த்துகிறது. பிறகு Delete  வழிமுறையை ஆவனத்தை நீக்க பயன்படுத்துகின்றது

நன்றி :தமிழ் கம்யூட்டர் மாதமிருமுறை இதழ்

பழைய கணினியை பயனுள்ளதாக மாற்றுதல்

நாளுக்கு நாள் புதுப்புது வடிவுகளில், திறன்களில், புத்தம்புதிய தொழில்  நுட்பத்தில் கணினி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளிவந்த வண்ணம் உள்ளன,நாமும் சளைக்காமல் வாங்கிக் குவித்து கொண்டே….யிருக்கின்டே இருக்கின்றோம்,இதனால் நம்முடைய வீடும் அலுவலகமும் கணினிகளின் குவியலாக மாறிவருகின்றன,அதனால் கைவசம் உள்ள பழைய கணினிகளை கயலான் கடைகளில் கொடுத்தால் காசுபணம் கிடைக்குமா அல்லது குப்பையில் போடலாமா என யோசித்து கொண்டிருக்கும்போது அடடா புதியதாக 32 பிட் செயலியின் வேகத் திறனில்  இந்த கணினி வந்தபோது எவ்வளவு அரும்பாடு பட்டு அதிக பணச்செலவில் வாங்கியதை இப்படி வீணாக்குவதா என்ற ஒரு எண்ணம் வந்தது. சரி என்னதான் செய்வது என்று யோசித்து பார்த்ததில் கீழ்காணும் பயனுள்ள ஒருசில வழிகளில் இந்த பழைய தனியாள் கணினிகளை உபயோகித்து கொள்ளலாமே என தெரிய வந்தது.

1.     இசை/ஒளிப்பட இயக்கியாக : பழைய தனியாள் கணினியை மிகச்சிறந்த ஒளி ஒலி இயக்கியாக பயன்படுத்தி கொள்ள முடியும். இதற்காக ஒலி அட்டை (Sound card ) விண்டோ 98, winamp  அல்லது அதற்கு இணையான ஒத்தியங்கும் (compatible)மென்பொருள் (இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன) ஒலி பெருக்கி (speaker), MP3 அல்லது video கோப்புகள் ஆகியவை மட்டுமே தேவையாகும், winamp  அல்லது VLC  இயக்கியின் தற்போதைய பதிப்பை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பழைய தனியாள் கணினியில் நிறுவி கொள்க. பின்னர் MP3 அல்லது video ஆகிய வற்றின் கோப்புகளை பழைய கணினியில் நகலெடுத்து கொண்டு இயக்கி  மிக அற்புதமான ஒளி ஒலிகளை கணினியில் பார்த்து, கேட்டு மகிழ்வதற்காக பயன்படுத்தி கொள்க.

2.     தொலைக்காட்சியாக : சிறந்த ஒளி ஒலிகளை பார்த்து கேட்டு மகிழலாம் என்றவுடன் உங்களுக்கு தொலைகாட்சி பெட்டிதான் என்று கண்டிப்பாக ஞாபகம் வரும் ,அதனால் தொலைகாட்சி பெட்டியை வாங்குவதற்கு பதிலாக  பழைய தனியாள் கணினியை தொலைக்காட்சி பெட்டியாக பயன்படுத்தி கொள்ள முடியும்என்ற செய்தியை நினைவில் வைத்து கொள்க . இதற்காக கணினியில் கூடுதலான ஒரு TV tuner card  ஒன்றை மட்டும் வாங்கி பொருத்தி கொண்டால் போதும் (இதனுடைய புதிய அட்டைகள் ரூ.1300 விலையிலும், ஒருமுறை பயன்படுத்தியது எனில் ரூ.500 விலையிலும் கிடைக்கின்றன) இதன்மூலம் விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து மகிழலாம்,அல்லது நிகழ்ச்சிகளை கோப்பாக பதிவுசெய்து பின்னர் தேவையானபோது பார்த்து மகிழலாம். இந்த நிகழ்ச்சிகளை DVD, VCD, VCR ஆகியவைகளில் பதிவு செய்து பின்னர் வேறு இடங்களுக்கு எடுத்து சென்றும் பயன்படுத்தலாம்.

3.     பல் ஊடக பணியகம் : பிணையத்திற்கான அட்டையை (network card)  கணினியில் பொருத்தி அமைத்திடுக.  பின்னர் அருகிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் இருக்கும் கணினிகளை வளாகப்பிணையம் (LAN)  அடிப்படையில் இணைத்து இணைய இணைப்பில் உங்கள் கணினியை இணைத்து mp3, video  போன்றவை களின் கோப்புகளை இணையத்தில்இருந்து பதிவிறக்கம்செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்க. ஒளி, ஒலி நாடாக்களிருந்து படங்கள், இசைகளை  music match juke  என்ற மென்பொருள் மூலம் உருமாற்றம் செய்து  கணினியை மத்திய பணியகம் போன்று பயன்படுத்துக.

4.     இணையத்தின் வழி செலுத்தியாக (internet router)  பயன்படுத்திட : அகல்கற்றை இணைய இணைப்பு (broad band internet ) அல்லது கம்பி வழி இணைய இணைப்பு பெற்றிருந்தால் கணினியை வழிச்செலுத்தி router  அல்லது பதிலி(proxy )யாக மாற்றி பயன்படுத்த முடியும். இணையத்தில் உலாவுதல்(web surfing)  பதிவிறக்கம் செய்தல் (downloading) , மின்னஞ்சலை கையாளுதல் (e-mail handling) , உரையாடுதல் (chatting)  போன்ற பல இணைய வழி பணிகளின் மத்திய நுழைவு வாயிலாக இந்த பழைய தனியாள் கணினியை மற்றவர்களின் கணினிகளுக்காக பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இணைய பணியகமாகவும் இதனை பயன்படுத்தி கொள்ள முடியும். இவ்வாறான இணைய பணியகத்திற்காக (Server)  புதியதாக கணினி எதையும் வாங்காமல் கையில் இருக்கும் பழைய கணினியை உபயோகப்படுத்தி கொள்ள முடியும். இதற்காக கூடுதல் வாளாக பிணைய அட்டை(LAN card)யும் அதற்கான மென்பொருட்களுமான wingate, win proxy, analog proxy  போன்றவைகள் மட்டுமே தேவையாகும், இவைகளை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது லினக்ஸ் பகிர்ந்தளிப்பானும் அடிப்படை IP  வழிச் செலுத்தியும்  ஆகியவற்றிற்கான இலவசமென்பொருளை நிறுவி இணையத்தின் வழிசெலுத்தி router அல்லது பதிலிproxy யாகபயன்படுத்தி கொள்ளமுடியும்.

5.     தகவல் பணியகமாக (data server) : பிணைய வழியில் அனைத்து கணினிகளையும் பழைய கணினியுடன் இணைத்து, தேவையான அனைத்து தரவுகளையும் சேகரித்து வைத்து கொண்டு தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தி கொள்ளும் பணியகமாக மாற்றி கொள்ள முடியும். இந்த வகையில் சிறிய நிறுவனங்களின் கணக்கு பதிவியில் மென்பொருட்களான TallyERP, Ex  போன்றவைகளின் மத்திய தரவு பணியகம் போன்று பராமரித்து மற்ற கணினிகளின் மூலம் அணுகி தேவையான தரவுகளை கையாளுமாறு பயன்படுத்தி கொள்ள முடியும். அன்றாடம் பணிபுரியும்போது உருவாகும் கோப்புகளை அவ்வப்போது காப்பு நகலகமாக (backup) பாதுகாத்து கொள்ளலாம். இதற்காக backup) மென்பொருளை நிறுவி கொண்டு தானாகவே குறிப்பிட்ட நேர இடைவெளியில் காப்பு நகல் செய்து கொள்ளும்படி அமைத்திட முடியும்.

6.     சொற்செயலி(Word Processor ) : புதிய கணினியில்  பயனுள்ள வேறு ஏதேனும்  பணிகளை செய்து வரும்நேரத்தில் மிக நீண்ட கடிதம் அல்லது கட்டுரை போன்றவைகளை அன்றாடம் தயார் செய்யும் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், வழக்குறைஞர்கள் போன்றவர்கள்   இவைகளை உள்ளீடு செய்வதற்கு பழைய கணினியை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக ஓப்பன் ஆஃபிஸ் போன்ற இலவச மென் பொருளை பயன்படுத்தி கொள்ளலாம்.

7.     இணைய உலாவியாக பயன்படுத்துதல்(web browser) : ஓப்ரா அல்லதுஃபயர் ஃபாக்ஸ் போன்ற மென் பொருட்களை பதிவிறக்கம் செய்து பழைய தனியாள் கணினியில்  நிறுவிக்கொண்டு இணையத்தில் உலாவுதல்(browsing) , உரையாடுதல் (chatting)  போன்ற செயல்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இலவச பதிவிறக்க மேலாளரை (free download manager)  பயன்படுத்தி இசைகள், மென்பொருட்கள்ஆகியவைகளை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய பயன்படுத்தி கொள்ளலாம். Antivirus  தடுப்பானை பயன்படுத்தி இவ்வாறு பதிவிறக்கம் செய்யும் கோப்புகளை வடிகட்டி கொள்ளலாம். நேரடி வங்கி பணிகள் (online banking)  நேரடி பொருள் கொள்முதல் (online shopping)  போன்ற செயல்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு  பழைய தனியாள் கணினியை இணைய இணைப்பிற்கு பயன்படுத்தும்போது நம்முடைய தனிப்பட்ட அல்லது நிறுவனத்தின் முக்கிய தகவல்களை நமக்கு தெரியாமல் திருடி செல்ல முடியாது என்பதை கவணத்தில் கொள்க.

8.     கணக்கு பதவியில் மேலாளராக (Accounts manager ): பெரும்பாலான அலுவலகங்களில் பயன்படுத்தும் கணக்கு பதிவிய லுக்கான மென்பொருட்கள் புதியதாக வரும் இயக்க முறைமை யுடன் (operating system) ஒத்தியங்க மறுத்துவிடுகிறது. இதனை தவிர்ப்பதற்காக கணக்கு பதிவியலுக்கான மென்பொருளை மேம்படுத்த வேண்டுமெனில் செலவு மிக்கதும் அதிக நேரத்தை எடுத்து கொள்ளும் செயலாக ஆகின்றது. DOS,  ஆரம்பநிலை விண்டோபதிப்பு ஆகியவற்றில் இயங்கிய கணக்கு பதிவியலுக்கான மென்பொருள் இப்போது வருகின்ற புதிய மேம்பட்ட இயக்கமுறைமைக்கு தகுந்தவாறு இவை ஒத்தியங்க மறுக்கும் நிலையில் இவ்வாறு புதிய இயக்கமுறைமையுடன் எதற்காக போராடுவது என்ற நிலையை தவிர்த்து கணக்கு பதிவியல் செயல்களுக்கு மட்டும் பழைய தனியாள் கணினியையே பயன்படுத்தி கொள்ள முடியும்.

9.     அச்சிடும் மேலாளர் (printer manager) : அதிக அளவு அச்சிடும் பணிக்காக ஏராளமான அச்சுப்பொறிகளை பயன்படுத்தும்போது அன்றாட மற்ற பணிகள் எதுவும் பாதிக்காமல் இருப்பதற்காக பழைய கணினியுடன் அனைத்து அச்சுப்பொறிகளையும் இணைத்து அச்சுப்பணிக்கு மட்டும் தனிபணியகம் போன்று பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக window 98/xp  அல்லது லினக்ஸ் இயக்கமுறைமை இருந்தால் போதும். மேலும் parallel port இணைப்பில் செயல்படும் அச்சுப்பொறிகள் புதிய இயக்க முறைமையில் ஒத்தியங்காமல் தகராறு செய்வதைஇதன்மூலம் தவிர்க்கலாம்.

10.    தகவல் மையம் (knowledge center): Adobe acrobat reader, Encanta Encyclopedia  போன்ற மென்பொருட்களை பழைய கணினியில் நிறுவிக்கொண்டு இணையத்தில் செய்திகள்,இணையபக்கங்கள், மின்செய்தி தாட்கள், மின் ஆவணங்கள் ஆகியவற்றை படித்தறிவதற்காக பயன்படுத்தி கொள்ளலாம். ஏன் நம்முடைய பிள்ளைகளை Encyclopedia  மூலம் தகவல் சேகரிக்கும் செயலுக்கு பயன்படுத்துமாறும் செய்ய முடியும். மேலும் ஆய்வு மாணவர்களுக்கு தகவல்களை, செய்திகளை தேக்கி வைத்து கொள்ளும் களமாகவும் பயன்படுத்தி கொள்ள முடியும்.

11.    மென்பொருட்களின் பரிசோதனை மையம்(Software test bed ): மென்பொருள் வடிவமைப்பாளர், ஆலோசகர்போன்றவர்கள் உருவாக்கும் புதிய மென்பொருட்களை நடைமுறைப்படுத்தும் முன்பு  வெவ்வேறான அமைவுகளில் இவைகள் எவ்வாறு இயங்குகின்றன.என்றும் அதன் இறுதி விளைவு எவ்வாறு இருக்கும் எனவும் பரிசோதித்து பார்க்கின்ற களமாக நம்முடைய பழைய கணினியை பயன்படுத்தி கொள்ள முடியும். இதன் மூலம் மென்பொருட்களை நடைமுறைப் படுத்தும்போது என்ன ஆகுமோ என்ற பயமில்லாமல் நிம்மதியாக இந்த செயலுக்கு உபயோகப்படுத்தி கொள்ள முடியும்.

12.    மின்னஞ்சல் பணியகம் : Mail gate, mail daemon  அல்லது  ability main serverபோன்ற மென்பொருட்களை பழைய கணினியில் நிறுவிக்கொண்டு வளாக பிணையத்தின் மூலம் (LAN) மற்ற கணினிகளை இணைத்து மின்னஞ்சல்களை அனுப்பி வைக்கவும் பெறவுமான  பணியகம் போன்று பயன்படுத்தி கொள்ள முடியும். இதன் மூலம் நேரடியாக இணையத்தில் சென்று மின்னஞ்சல்கள் பெறுவது அனுப்புவது ஆகிய செயல்களின் நெருக்கடிகளை தவிர்த்து கொள்ள முடிகிறது. scanning   செய்தல்,, spyware ஐ  கட்டுப்படுத்துதல் என்பன போன்றபல முன்னெச்சரிக்கை செயல்களை பழைய தனியாள் கணினியில் செயல்படுத்தி அதன்பிறகு மற்ற கணினியில் கோப்புகளை எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.

13.    இணைய இணைப்பு கட்டுப்பாட்டகம்: நம்முடைய பிள்ளைகள் இணையத்தில் தவறான வழிகளில் உலாவுதலை கட்டுப்படுத்த பழைய கணினியின் வழியாக அனைத்து வகையான வடிகட்டுதலையும், கட்டுப்பாடுகளையும் பயன்படுத்தி இணையத்தில் பாதுகாப்பாக பயமின்றி உலாவும்படி செய்ய முடியும்.

14.    CD/DVD யில் நகலெடுக்கும் பணியகமாக : ஒரே மாதிரியான கோப்புகள் மென்பொருட்களை ஆயிரக்கணக்கான CD/DVD களில் நகலெடுக்கும் பணிக்காக CD/DVD Writer பணியகமாக உங்கள் பழைய கணினியை மாற்றியமைத்து கொள்ளலாம். இதற்காக CD/DVD Writerஐ  மட்டும் வாங்கி கணினியில் பொருத்தி கொண்டால் போதும்.

15.    தொலைநகல் இயந்திரமாக பயன்படுத்த : நம்முடைய அலுவலகத்தில் தொலை நகல் இயந்திரம் பழுதுபட்டுவிட்டநிலையில் புதியதாக அதனை கொள்முதல் செய்ய வேண்டாம். நம்முடைய பழைய கணினியையே தொலைநகல் இயந்திரமாக பயன்படுத்தி கொள்ள முடியும். அதற்காக Fax/voice/modem ஆகியவற்றுடன் ஒத்தியங்கும் மென்பொருட்களை bitware of super voice  பயன்படுத்தி தொலைபேசி இணைப்பை கணினியுடன் மோடத்தின் மூலம்  ஏற்படுத்தி கொண்டு கணினியை எப்போதும்போல் வைத்து கொண்டால் போதும்.தொலை நகல் இயந்திரம் போன்று இந்த பழைய தனியாள் கணினியே மிகச்சிறப்பாக பணிபுரியும்.

16.    கண்காணிப்பு பாதுகாப்பு சாதனமாக : கடைகளில் அல்லது நம்முடைய  நிறுவனத்தில்  விலை மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக அவ்வப்போது கண்காணித்து கொண்டே இருக்க வேண்டிய  நிலைஏற்படும் இதற்கான அட்டைகளை பழைய கணினியில் யுஎஸ்பி பொருத்துவாய் மூலம்  பொருத்தி ஆங்காங்கு கண்காணிப்பு கேமராக்களை அமைத்து இதனுடன் இணைத்து இந்த அமைப்பை பயன்படுத்தி நம்முடைய விலை மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக இருந்திடுவதற்காக கண்காணிக்கலாம். இதற்காக capturing video spy  என்ற மென்பொருள் பயன்படுகிறது.

17.    பயிற்சி மையம் (Traning center)  இளைய தலைமுறை மாணவர்கள் கணினியை ஒருங்கிணைத்தல் (assembly)  பிரச்சனையை சரிசெய்தல் (trouble shooting)  போன்ற செயல்களுக்கான பயிற்சியகமாக பழைய கணினியை உபயோகப்படுத்தி கொள்ள முடியும்.

இதுவரை எவ்வாறு பழைய கணினியை பயனுள்ளதாக செய்ய முடியும் என எனக்கு தெரிந்த ஒரு சில கருத்துக்களை மட்டும் கூறியுள்ளேன். மேலும்  பயனுள்ள பல பணிகளுக்கும் பயன்படுத்தி கொள்ள முடியும் என நம்புகிறேன். நீங்களும் பழைய கணினியை குப்பையில்தூக்கி எறியாமல் பயனுள்ள வகையில் உபயோகப்படுத்தி கொள்ளுங்கள்.

நமக்குத்தெரியாத கூகுளின் வசதிகள்

பின்வருபவை பெரும்பாலானவர்களுக்கும் தெரியாத கூகுளில்உள்ள மிகமுக்கிய  வசதிகளாகும்

1.Definitions என்ற வசதிமூலம் நமக்கு தெரியாத நம்மால் புரிந்து கொள்ளமுடியாத எந்தவொரு சொல்லிற்குமான அர்த்தத்தை அல்லது  வரையரையை அறிந்துகொள்ளமுடியும்

2.Local search என்ற வசதியிலுள்ள http://local.google.com/என்றஇணைய பக்கத்தின் மூலம் ஒருகுறிப்பிட்ட இடம் எங்குஉள்ளது எந்த வழியே சென்றால் உடனடியாக அவ்விடத்திற்கு சென்றுசேரமுடியும் அவ்விடத்தின் முகவரி யாது என்பன போன்ற  விவரங்களை நாம் அறியாத நமக்குஅறிமுகம் இல்லாத இடத்திற்கு செல்லும் போது இதன்மூலம் நாம் அறிந்து கொள்ளமுடியும்

3.Phone number  lookup என்ற வசதிமூலம் ஒரு தொலைபேசிஎண்ணையும் அதனுடைய பகுதி குறியீட்டெண்ணையும் குறிப்பிட்டால் அந்த தொலைபேசி எண்ணிற்கான முழு முகவரியையும் அறிந்து கொள்ளலாம்

4.Find weather and movies என்ற வசதிமூலம் weather அல்லது  movies  என்பதை தட்டச்சு செய்து குறிப்பிட்ட இடத்தின் தபால்குறியீட்டு எண்ணை உள்ளீடுசெய்தால் உடன் அவ்விடத்தின் நடப்பு வானிலையையும் வரும் நான்கு நாட்களின் வானிலையையும் அல்லது அங்கு திரையிடபட்ட படத்தின் பெயரையும் அறிந்து கொள்ளலாம்

5.Track airline flight and packages  என்ற வசதிமூலம் விமானத்தின் பெயரையும் அதனுடைய குறியீட்டு எண்ணையும் உள்ளீடு செய்தால் குறிப்பிட்ட இடத்திற்கு அந்த விமானம் எப்போது வந்துசேரும்  என்பனபோன்ற விவரங்களை அறிந்துகொள்ளமுடியும்

 6.Translate என்ற வசதியிலுள்ள http://www.google.com/language_toolsஎன்ற கருவியின் மூலம் குறிப்பிட்ட உரையை அல்லது ஒரு முழுஇணையபக்கத்திலுள்ள தகவல்களை அது எந்த மொழியிலிருந்தாலும் நாம் விரும்பும் எந்தவொருமொழிக்கும் மொழிமாற்றம் செய்து அறிந்து கொள்ளமுடியும்

7.link என்ற வசதிமூலம் நம்முடைய இணையபக்கத்துடன் அல்லது வலைபூவுடன் எந்த உரல்களெல்லாம் இணைப்பில் உள்ளன என தெரிந்து கொள்ளலாம்  உதாரணமாக link:http://www.vikupficwa.wordpress.com   என்று உள்ளீடு செய்தால் இந்த வலைபூவுடன் இணைக்க பட்ட இணையபக்கங்களின முழுவிவரம் திரையில் தோன்றிடும்

8.Find PDF என்ற வசதிமூலம் “dell xps” filetype:pdf என்றவாறு கோப்பின் வகையாக  தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்தினால்  இணையத்தில் தேடிடும்போது கிடைத்திடுபவைகளில் பிடிஎஃப் கோப்பை மட்டும் திரையில் பிரதிபலிக்கசெய்யும்

9.Calculator என்ற வசதிமூலம் இதே உலாவியை கணக்கீடு செய்வதற்கு பயன்படுத்தி கொள்ளமுடியும்

டேலி ஈஆர்ப்பி 9 -ல் உற்பத்தியாளர்களிடமிருந்து நம்முடைய உற்பத்திக்கு உதவிடும் பொருட்களை கொள்முதல் செய்திடும்போது ஏற்படும் சென்வாட் வரவை பயன்படுத்திகொள்ளுதல்

நிறுவனமொன்று பொருளை உற்பத்தி செய்து விற்பனை செய்திடும்போது  கலால் (உற்பத்தி ) வரியை  அந்த பொருளை வாங்குபவரிடமிருந்து வசூலித்து அரசுக்கு அந்நிறுவனத்தினர் செலுத்துகின்றனர் அந்த பொருளை வாங்குபவர் இதனை தன்னுடைய உற்பத்திக்கான மூலப்பொருளாகவோ,இடுபொருளாகவோ, துனைப்பொருளாகவோ  பயன்படுத்தி  தன்னுடைய உற்பத்தி பொருளை விற்பனைசெய்யும்போது கலால் (உற்பத்தி )வரியை  தம்முடைய முடிவு பொருளை வாங்குபவரிடமிருந்து வசூலித்து அரசுக்கு செலுத்துகின்றார் இந்நடவடிக்கையில் மூலப்பொருளை ,இடுபொருள் அல்லது துனைப்பொருளை ,மூலதனப்பொருளை வாங்கும்போது செலுத்திய கலால் வரியை  உற்பத்தியான முடிவுபொருளை விற்பனை செய்யும்போது வசூலிக்கும் கலால்வரி வரவாக கழித்து  மிகுதிவரியைமட்டும் அரசுக்கு செலுத்துவதை சென்வாட் வரவு துய்த்துகொள்ளுதல் என அழைப்பார்கள் இதற்கான கணக்குபதிவியல் நடவடிக்கையை டேலி ஈஆர்ப்பி 9 -ல் எவ்வாறு பதிவுசெய்வது என இப்போது காண்போம்

இதற்காக 1.கொள்முதல் நடவடிக்கையை பதிவுசெய்திடும்போதும் 2. கொள்முதல் செய்தபின் தனியாக பற்றுசீட்டினை பதிவுசெய்திடும்போதும் சென்வாட் வரவை துய்த்துகொள்ளமுடியும்

1பற்றுசீட்டிற்காக வவுச்சர் இனத்தை உருவாக்குதல்  முதலில்  Gateway of Tally => Accounts Info=> Voucher Types => Alter=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக. பின்னர் தோன்றிடும் திரையில் Voucher Types என்ற பட்டியி லிருந்து Debit Note என்பதை  தெரிவுசெய்து சொடுக்குக  பிறகு விரியும்  Debit Note Voucher என்ற திரையில்  Name of Class என்ற புலத்திற்கு செல்க அதில் CENVAT Availing  என தட்டச்சு செய்திடுக

படம்-1

  அதன்பின்னர் விரியும் Voucher Type Class என்ற திரையில் உள்ள Use Class for Excise/CENVAT Adjustments என்ற வாய்ப்பை Yes. என அமைத்து உள்ளீட்டு விசையை அழுத்தி Voucher Type Class ,Voucher Type Alteration ஆகிய திரைகளை சேமித்து கொள்க

படம்-2

  கொள்முதல் வவுச்சரை பதிவுசெய்தல்  இதற்காக முதலில் Gateway of Tally =>  Accounting Vouchers => F9: Purchase=>  என்றவாறு கட்டளைகளை செயற் படுத்திடுக. உடன் படத்திலுள்ளவாறு  கொள்முதல் வவுச்சர் பதிவுசெய்யபடும்

படம்-3

 பற்றுசீட்டை பதிவுசெய்தல்  பின்னர்F11: Features (Accounting Features)  என்ற திரையில் உள்ள Use Debit/Credit Notes , Use Invoice mode for Debit Notes ஆகிய வாய்ப்புகளை  Yes. என அமைத்து உள்ளீட்டு விசையை அழுத்துக.

படம்-4

  அதன்பின்னர் மீண்டும்  Gateway of Tally  => Accounting Vouchers => Ctrl + F9: Debit Note  =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக. உடன்  விரியும் Change Voucher Type என்ற திரையின் Class என்ற புலத்தில்  தோன்றிடும் Voucher Class List என்ற பட்டியலில் இருந்து  CENVAT Availing ன்பதை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-5

 பிறகு விரியும் திரையின் Date என்ற புலத்தில் 14-6-2008 என்று உள்ளீடு செய்க  அவ்வாறே Excise Unit என்ற புலத்தில் ABC Company என்பதையும்

 Nature of Purchase என்ற புலத்தில் Manufacturer  என்பதையும்  Debit என்ற புலத்தில் Basic Excise Duty (CENVAT)   என்பதையும் தெரிவுசெய்து சொடுக்குக.

  அதன்பின்னர் Excise Duty Allocation என்ற திரையில்  Type of Ref என்ற புலத்தில் New Ref  என்பதை தெரிவுசெய்திடுக. Name என்ற புலத்தில் புதிய மேற்கோள் பெயரான கொள்முதல் வவுச்சரின் பெயரை  உள்ளீடு செய்திடுக .Party Name என்ற புலத்தில் Lanco Manufacturer  என்பதை பேரேட்டு கணக்கின் பெயர்களிலிருந்து தெரிவுசெய்திடுக . Name of Item என்ற புலத்தில் Water Container – 20 Ltrs.  என்பதை தெரிவுசெய்து சொடுக்குக .Quantity என்ற புலத்தில் 1000எனஉள்ளீடு செய்திடுக. Assessable Value என்ற புலத்தில் Rs. 1,00,000 என உற்பத்தியாளரின் விற்பனை மதிப்பை உள்ளீடு செய்திடுக.

Rate என்ற புலத்தில் 16 % என்ற மதிப்பு இயல்புநிலையில்  தெரிவு செய்ய பட்டிருக்கும்  பேரேடு உருவாக்கிடும்போது இந்த மதிப்பு உள்ளீடு செய்யா திருந்தால் இப்போது இதனை உள்ளீடு செய்து   கொள்க.

 உடன் இந்த நடவடிக்கையை தெடர்ந்து டேலி ஈஆர்ப்பி 9 ஆனது கலால் வரியை இந்த விற்பனை விலையில் 16% ஆக கணக்கிட்டு Amount என்ற புலத்தில் காண்பிக்கும்  Debit என்ற புலத்தில் Education Cess (CENVAT)  என்பதை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர்  In Excise Duty Allocation என்ற திரையில்  Type of Ref என்ற புலத்தில் New Ref  என்பதையும். Name என்ற புலத்தில் புதிய மேற்கோள் பெயரான கொள்முதல் வவுச்சரின் பெயரை  உள்ளீடு செய்திடுக . Party Name என்ற புலத்தில் Lanco Manufacturer  என்பதை பேரேட்டு கணக்கின் பெயர்களிலிருந்த தெரிவுசெய்திடுக.  Name of Item என்ற புலத்தில் Water Container – 20 Ltrs.  என்பதை தெரிவுசெய்து சொடுக்குக . Quantity என்ற புலத்தில் 1000எனஉள்ளீடு செய்திடுக. Assessable Value என்ற புலத்தில் Rs. 16,000 என உற்பத்தியாளரின் விற்பனை மதிப்பை உள்ளீடு செய்திடுக.. Rate என்ற புலத்தில் 2% என்ற மதிப்பு இயல்புநிலையில்  தெரிவுசெய்யபட்டிருக்கும்  பேரேடு உருவாக்கிடும்போது இந்த மதிப்பு உள்ளீடுசெய்யாதிருந்தால் இப்போது இதனை உள்ளீடு செய்து கொள்க.

உடன் இந்த நடவடிக்கையை தெடர்ந்து டேலி ஈஆர்ப்பி 9 ஆனது கல்வி வரியை இந்த கலால் வரியில் 2%ஆக கணக்கிட்டு Amount என்ற புலத்தில் காண்பிக்கும்   Debit என்ற புலத்தில் Secondary Education Cess (CENVAT)  என்பதை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-6

   பின்னர்  In Excise Duty Allocation என்ற திரையில்  Type of Ref என்ற புலத்தில் New Ref  என்பதையும்  Name என்ற புலத்தில் புதிய மேற்கோள் பெயரான கொள்முதல் வவுச்சரின் பெயரை  உள்ளீடு செய்திடுக  Party Name என்ற புலத்தில் Lanco Manufacturer  என்பதை பேரேட்டு கணக்கின் பெயர்களிலிருந்த தெரிவுசெய்திடுக  Name of Item என்ற புலத்தில் Water Container – 20 Ltrs.  என்பதை தெரிவுசெய்து சொடுக்குக  Quantity என்ற புலத்தில் 1000எனஉள்ளீடு செய்திடுக Assessable Value என்ற புலத்தில் Rs. 16,000 என உற்பத்தியாளரின் விற்பனை மதிப்பை உள்ளீடு செய்திடுக.  Rate என்ற புலத்தில் 1% என்ற மதிப்பு இயல்புநிலையில்  தெரிவுசெய்யபட்டிருக்கும்  பேரேடு உருவாக்கிடும்போது இந்த மதிப்பு உள்ளீடுசெய்யாதிருந்தால் இப்போது இதனை உள்ளீடு செய்து கொள்க.

உடன் இந்த நடவடிக்கையை தெடர்ந்து டேலி ஈஆர்ப்பி 9 ஆனது உயர்கல்வி வரியை இந்த கலால் வரியில் 1% கணக்கிட்டு Amount என்ற புலத்தில் காண்பிக்கும்  Credit என்ற புலத்தில் Purchase of Raw Materials    என்பதை தெரிவுசெய்து சொடுக்குக

பிறகு Inventory Allocation என்ற திரையில்   Name of Item என்ற புலத்தில் Water Container – 20 Ltrs என்பதை  தெரிவு செய்திடுக.  Amount  என்ற நெடுவரிசையில் Rs. 16,480. என்று மொத்ததொகையை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக.

   பிறகு தோன்றிடும் Excise Duty Allocation என்ற திரையில்   விற்பனை விலைக்காக Type of Ref என்ற புலத்தில் Agst Ref  என்பதை தெரிவுசெய்க  Name என்ற புலத்தில் LM/0056  நாள் 12-6-2008  காத்திருக்கும் வரிக்கான பட்டியலின் பட்டியலில் இருந்து தெரிவுசெய்திடுக  Amount  என்ற புலத்தில்Rs. 16,000. என்று இயல்புநிலையில் பிரதிபலிக்கும்

படம்-7

   கல்விவரிக்காக Type of Ref என்ற புலத்தில் Agst Ref  என்பதை தெரிவுசெய்க Name என்ற புலத்தில் LM/0056  நாள் 12-6-2008  காத்திருக்கும் வரிக்கான பட்டியலின் பட்டியலிலிருந்து தெரிவுசெய்திடுக  Amount  என்ற புலத்தில்Rs. 320 என்று  சென்வாட் வரவு கல்விவரிக்காக உள்ளீடு செய்க

 உயர்கல்விவரிக்காக Type of Ref என்ற புலத்தில் Agst Ref  என்பதை தெரிவுசெய்க Name என்ற புலத்தில் LM/0056  நாள் 12-6-2008  காத்திருக்கும் வரிக்கான பட்டியலின் பட்டியலிலிருந்து தெரிவுசெய்திடுக  Amount  என்ற புலத்தில்Rs. 160. என்று  சென்வாட் வரவு உயர் கல்விவரிக்காக உள்ளீடு செய்க

  பின்னர் Excise Duty Allocation என்ற திரையில்  Narration என்ற புலத்தில் இந்த நடவடிக்கைக்கான விவரங்களை  தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தி இந்த மாறுதல்களை சேமித்திடுக

படம்-8

 CENVAT Credit Availed என்ற அறிக்கையை பார்வையிட Gateway of Tally > Display > Statutory Reports > Excise Reports > Manufacturer > CENVAT Credit Availed என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியபின் தோன்றிடும திரையில் சரியாக உள்ளதாவென சரிபார்த்து கொள்க.

Previous Older Entries