libusbஎனும்பயனாளர் காலிநினைவக பயன்பாட்டு நிரல்களின் இயக்க நூலகம்

libusb என சுருக்கமாக அழைக்கபெறும் பயனாளர் காலிநினைவக பயன்பாட்டு நிரல்களின் இயக்க நூலகம் என்பது கணினியிலிருந்து யூ.எஸ்.பி சாதனங்களுடன் தொடர்புகொள்வதற்காக பயன் படுகின்றது. மேலும் இது யூ.எஸ்.பி சாதனங்களுக்கு பயன்பாடுகளை எளிதாக அணுகக்கூடிய குறுக்கு தள நூலகமாகவும் செயல்படுகின்றது இந்த libusb என்பது யூ.எஸ்.பி சாதனங்களுக்கு பொதுவான அணுகலை வழங்குகின்ற C எனும் கோப்புறையின் நூலகமாகும். யூ.எஸ்.பி வன்பொருளுடன் தொடர்பு கொள்கின்ற பயன்பாடுகளின் உருவாக்கத்தை எளிதாக்க மேம்படுத்துநர்களால் இது பயன்படுத்தப் படவுள்ளது.

மிகச் சிறியஅளவுடையது: ஒற்றை குறுக்கு-தளAPI ஐப் பயன்படுத்தி,  லினக்ஸ், மேக், விண்டோ போன்ற அனைத்து இயக்கமுறைமைகளில் உள்ள யூ.எஸ்.பி சாதனங்களுக்கான அணுகலை இது வழங்குகிறது.

பயனாளர் பயன்முறை: எந்தவொருசாதனத்துடனும் தொடர்பு கொள்ள பயன்பாட்டிற்கு சிறப்பு சலுகை  அல்லது உயர்வு தேவையில்லை.

இது யூ.எஸ்.பி நெறிமுறையின் அனைத்து பதிப்புகளும், 1.0 முதல் 3.1 வரை (சமீபத்தியவை) ஆதரிக்கின்றது.

நாம் விரும்பினால், இதனுடைய மூலகுறிமுறைவரிகளை நேரடியாக அணுகி நமக்க ஏற்றவாறு மாற்றியமைத்துகொள்ளலாம்.

பொதுவாக நூலகத்திற்கும் அதன் தலைப்பிற்கும் அணுகலைப் பெற்றவுடன், தயவுசெய்து libusb API    அல்லது libusb மாதிரிகளைச் சரிபார்த்துகொள்க

இது LGPLv2 எனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது

இதனை பற்றி மேலும் விவரம் அறிந்து கொள்ளவும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://libusb.info/ எனும் இணைதள முகவரிக்கு செல்க.

Shadowsocksஎனும் கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடு

இது விண்டோஇயக்கமுறைமைக்கான ஒரு கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடாகும், இது நம்முடைய இணைய போக்குவரத்தை பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட பாதுகாப்பான socks5 எனும் பெயருடைய பதிலி(proxy)ஆகும். இது இணையத்தை தனிப்பட்ட முறையிலும் பாதுகாப்பாக உலாவ நம்மை அனுமதிக்கிறது, மேலும் HTTP proxy ஆதரவு, கணினியின் பதிலி உள்ளமைவு, சேவையக தானியங்கி மாறுதல் சொருகி ஆதரவு போன்ற பல்வேறு பயனுள்ள வசதிகளை இது வழங்குகிறது.  இது நம்பமுடியாத மீவிரைவுவேகத்தில் செயல்படும் திறன்மிக்கது, ஏனெனில் இது ஒத்திசைவற்ற I / O , நிகழ்வு-உந்துதல் நிரலாக்கத்துடன் விரைவான விளிம்பு நுட்பங்களைப் பயன் படுத்தி கொள்கின்றது. தனிப்பயன் வழிமுறைகளை ஆதரிக்கும் நெகிழ்வான தொழில்-நிலை குறியாக்க வழிமுறையும் இதில் உள்ளது. இது விண்டோஇயக்கமுறைமையில் செயல்படுவதற்காக மைக்ரோசாஃப்ட் .நெட் கட்டமைப்பு 4.7.2 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பு தேவைப்படுகிறது, அத்துடன் மைக்ரோசாஃப்ட் விஷுவல் சி ++ 2015 மறுவிநியோகம் (x86) என்பது தேவையாகும். இது நெகிழ்வான குறியாக்க தொழில்-நிலை குறியாக்க வழிமுறையுடன் பாதுகாக்கப் பட்டுள்ளது. தனிப்பயன் வழிமுறைகளை ஆதரிக்கும்வகையில்இது நெகிழ்வானது. எந்தவொரு உயிரோட்டமான கம்பிவழி இணைப்புகளும் இல்லாமல்கைபேசி சாதனம் , கம்பியில்லா வலைபின்னல் ஆகியவற்றிற்கு உகந்ததாக உள்ளது, . விண்டோ, லினக்ஸ், மேக், ஆண்ட்ராய்டு, iOS OpenWRT. உள்ளிட்ட பெரும்பாலான இயக்க முறைமைகளில் செயல்படும் திறன்மிக்கது. பிழை இல்லாத குறிமுறைவரிகளுடன் நீண்டகால ஆதரவை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய சமூககுழு இதில் எழும் சந்தேகங்களை தீர்வுசெய்வதற்காக தயாராக உள்ளது.இது GPLv3 எனும் அனுமதியின் அடிப்படையில்   பொது மக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது

இதனை பற்றி மேலும் விவரம் அறிந்து கொள்ளவும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://shadowsocks.org/en/index.html எனும் இணைதள முகவரிக்கு செல்க.

OpenPEARL -எனும் நிரலாக்க மொழியும் இயக்கநேர அமைப்பும்

PEARL என்பது ஒரு உயர் மட்ட நடைமுறைபயன்பாட்டிலுள்ள நிரலாக்க மொழியாகும், இது தொழில்நுட்ப செயல்முறைகளை கட்டுப்படுத்தும் போது பல்வேறுபணி சிக்கல்களைத் தீர்வுசெய்வதற்காக ஒரு வெளிப்படையான , வசதியான மொழியைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் குறிப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது. PEARL என்பது  நிகழ்வு நேர தானியிங்கி அனுபவ செயல்முறை(“(P) rocess  (E) xperiment (A) utomation (R)  ealtime (L) anguage” )ஆகிய சொற்களின் சுருக்கமான பெயராகும். நிகழ்வுநேர சிக்கல்களுக்கு நிரலாக்க மொழியைக் கற்றுக்கொள்வது சுலபமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு 1975 ஆம் ஆண்டில் ஹன்னோவரில் உள்ள லீப்னிஸ் பல்கலைக்கழகத்தின் ஐஆர்டி எனும் நிறுவனத்தால் இது  வடிவமைக்கப்பட்டது. . இது பாஸ்கல் போன்ற பிற நடைமுறை கணினி மொழிகளிலிருந்து அறியப்பட்ட நிலையான தரவு வகைகளையும் கட்டமைப்புகளையும் வழங்குகிறது. . கூடுதலாக, இது(PEARL) நிகழ்நேர, பல்வேறு பணிகளை நிர்வகிப்பதற்கான சிறப்பு கணினிமொழி கட்டுமானங்களைக் கொண்டு வருகின்றது. மேலும்,  தகவல்களுக்கு http://www.pearl90.de/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க.

ActionApps எனும் கட்டற்ற கட்டணமற்ற இணையபயன்பாடு

 ActionAppsஎன்பது இணையதளங்களுக்கான எளிதான , தானியங்கி வெளியீட்டு  பகிர்வாகும். இது  GPL எனும் பொது அனுமதியின் கீழ் வெளியிடபட்டுள்ள இலாப நோக்கற்ற ஒரு கூட்டு இணைய வெளியீட்டு கருவியாகும், இது செயல்படுத்திட   எளிதானது: விரைவாக செயல்படக்கூடியது நம்மால்ஒரு படிவத்தை நிரப்ப முடிந்தால், உடன் இணையத்தில் தொழில்முறை தோற்றமுள்ள பொருட்களை  நாம் ஒருசில நிமிடங்களில் வெளியிடலாம். -: செய்தி, நிகழ்வுகள், எச்சரிக்கைசெயல்கள், உறுப்பினர் பட்டியல்கள் போன்று பல்வேறு வகையான உள்ளடக்கங்கள் ஆகியவற்றை தானியங்கி ஆக்குவதன் வாயிலாக இது நெகிழ்வானது.  இதனுடைய தனித்துவமான உள்ளடக்க ஒன்றிணைத்திடும் வசதிகளானவை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நேரத்தைச் சேமிக்கவும் பார்வையாளர்களை அதிகரிக்கவும் ஒன்றிணைந்து செயல்படவும் உதவுகின்றன.  இது இணைய பயன்பாடுகளுக்கான ஒரு கட்டற்ற மேம்பாட்டு தளமாகும். இதனுடைய APC ActionApps இன் விரைவான முன்னோட்டம் கணினி பற்றிய அடிப்படை தகவல்களை வழங்குகிறது. இது நம்முடைய  தேவைகளுக்கான மிகச் சரியான அமைப்பாக இருந்தால் இதனை கற்று பயன்படுத்தி கொள்ளதயாராக இருந்திடுக. இதனை பற்றிய மேலும் விவரங்களை அறிந்துகொள்ளவும் பயன்படுத்தி கொள்ளவும் http: // http: //actionapps.org/ எனும் இணையதள முகவரிக்கு செல்க .

Alternate ConsumptionCalc எனும் கட்டற்ற கட்டணமற்ற இணைய பயன்பாடு

 

இது மின்சார அளவீடுகள் அல்லது மின்சார நுகர்வு மதிப்புகளை காண உதவிடும் ஒரு எளிய பயன்பாடாகும். பொதுவாக அதற்கான தரவுகள் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து பெறப்படுகிறது. இதில் ஒரேயொரு ஒற்றை கோப்பில் 8 மதிப்புகள் வரை இணைத்து பயன்படுத்திகொள்ளலாம். இதன் வாயிலாக கோப்புகளை CSV வடிவத்திற்கு பதிவேற்றம் செய்யலாம், இது மற்ற பயன்பாடுகளில் (எக்செல், லிபர் ஆஃபிஸ்கால்க் / ஓபன் ஆஃபீஸ் கால்க் போன்றவை) மேலும் திருத்தம் செய்துகொள்ள அனுமதிக்கின்றது. . இந்த பயன்பாட்டுடன் பல்வேறு மாதக் கோப்புகளையும் ஒன்றாக இணைக்கலாம். இது  Android- பதிப்போடு இணக்கமானது. இது ஒரு  திறமூலபயன்பாடகும் (விஷுவல் ஸ்டுடியோ 2017 / சி #). இதற்கு .NET- கட்டமைப்பு 2.0 தேவைப்படுகிறது (ஏற்கனவே விண்டோ விஸ்டாவிலிருந்து செயல்பாட்டு அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது). இந்த தளம் முக்கியமாக விண்டோஇயங்குதளங்களுக்கான கட்டணமற்ற அல்லது கட்டற்றஎன பல்வேறு மாற்று கருவி-பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இந்த பயன்பாடுகளைப் பயன்படுத்துவதற்கு முன் பின்வரும் குறிப்புகளைப் படித்திடுக: – இந்த பயன்பாடுகளை நாம் விரும்பும் போதெல்லாம் நகலெடுத்து நாம் விரும்பும் எவருக்கும் கொடுக்க அனுமதிக்கப்படுகின்றது. ஆனால் இந்த பயன்பாடுகளில் எதையும் விற்கவோ வாடகைக்கு விடவோ நமக்கு அனுமதி இல்லை. – அவற்றை மாற்றுவதற்கு முன்பு நமக்கு முக்கியமான கோப்புகளின் காப்புப்பிரதிகளை எப்போதும் உருவாக்கிகொள்க. – கணினி கோப்புகளைப் பற்றி நமக்கு உறுதியாக தெரியாவிட்டால் அவற்றை மாற்ற வேண்டாம். இந்த பயன்பாடுகள் எதுவும் எந்தவொரு விளம்பரத்தையும் நம்முடைய சாதனங்தகளில் நிறுவுகை செய்யாது, நம்முடைய இணைய உலாவி அமைப்புகளை மாற்றியமைக்காது, தொலைபேசியை வீட்டிற்கு தானாகவே மாற்றும் அல்லது நம்முடைய தனிப்பட்ட தரவுகளுக்குள் (தொலைபேசி-புத்தகம், முகவரி-புத்தகம், உரையாடல்கள்) இருக்கும். பழைய பயன்பாட்டின் பதிப்பைப் புதுப்பிப்பதில் ஏதேனும் ஒரு நிறுவுகை பணி தோல்வியுற்றால், தயவுசெய்து இதனுடைய பழைய பதிப்பை முதலில் நிறுவுகைசெய்து நீக்கம் செய்தபின்னர் புதிய பதிப்பை மீண்டும் நிறுவுகை செய்திடுக என பரிந்துரைக்கப்படுகின்றது. – இது குக்கீகளைப் பயன்படுத்துகிறது.இதனை பற்றி மேலும் விரங்களை அறிந்துகொள்ளவும் பயன்படுத்தி கொள்ளவும் http://www.alternate-tools.com/ எனும் இணையதள முகவரிக்கு செல்க.

Lima VVA எனும் சாலைகளின் வடிவமைப்பிற்கான பயன்பாடு

Lima VVA  என்பது சாலைகளின் வடிவமைப்பிற்கும் தரைத்தளவேலை கணக்கீடு களுக்குமான இலகுரக விண்டோ பயன்பாடு ஆகும். இது சிறியதும்  நடுத்தரமானதுமான செயல்திட்டங்களுக்கு  பொருத்தமானது, அவ்வாறான செயல்திட்டங்களில் பயன்படுத்த எளிதானது, மிக முக்கியமாக இதை பயன்படுத்தி கொள்வதற்காகவென அதிகமாக செலவிடத்தேவையில்லை மேலும் இதனைை கொண்டு அவ்வாறான செயல் திட்டங்களுக்கான முடிவுகளை மிகவிரைவாக எடுக்கமுடியும். இது பயனாளரை தாம் உருவாக்கவிருக்கும் சாலையை ஊடாடும் வகையில் வடிவமைக்க அனுமதிக்கிறது, அதே நேரத்தில் ஒவ்வொரு மாற்றத்துடனும் வடிவியல் , தரைத்தளப்பணியின் அளவுகள் ஆகியவை தானாகவே புதுப்பிக்கப்படும் தன்மையுடன் விளங்குகின்றது. இந்த பயன்பாட்டின் வாயிலாக கட்டுமான அளவுருக்களைக் கையாளுவதன் மூலம், பள்ளங்கள், கட்டுமாணங்கள், பள்ளத்தினை நிரப்புதல், கட்டிடத் தளங்கள் போன்ற பிற சாலைவடிவமைப்பு தொடர்புடைய தரைத்தளப்பணிகளை எளிதாக க் கணக்கிடலாம் – சுருக்கமாக,கூறுவதெனில் இது குறுக்கு வெட்டு முறைக்கு ஏற்ற எதையும். பயன்பாட்டின் வடிவமைப்பிற்கான உயர் தரமான வரைபடங்கள், அறிக்கைகள்  கட்டுமானத் தரவுகள் ஆகியவற்றை இது உருவாக்குகிறது. இந்த முடிவுகளை அலுவலகபயன்பாடுகள்,CAD ,GIS  ஆகிய பயன்பாட்டு மென்பொருள், கணக்கெடுப்பு உபகரணங்கள் , தானியங்கு இயந்திரக் கட்டுப்பாட்டுக்கான அமைப்புகள் போன்ற பிற அமைப்புகளுக்கு பதிவேற்றம் செய்யலாம். குறிப்பாக, தண்ணீர் செல்வதற்கான குழாய்களுக்கான வரைபடங்களை வரைவதற்கான அடிப்படை செயல்பாடுகள், அத்துடன் குறுக்கு வெட்டுதோற்றத்தின் கைமுறையாக நுழைவதற்கான பண்டைய செயல்பாடுகள் தரவுகள், ஆகிய அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. தண்ணீர் செல்லும் குழாய்களின் வலை பின்னல்களைத் திட்டமிடுவதற்கு தனியான GIS கருவிகளைப் பயன்படுத்தவும், ஒழுங்குபடுத்தப்பட்ட தரநிலைகளின்படி துணைத் தகவல், உள்ளடக்கம் ஆகியவற்றுடன் கூடிய வரைபடங்களைத் தயாரிக்க பொது CAD கருவிகளைப் பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது. சமீபத்தில் இதனுடைய பதிப்பு 5 வெளியிடப் பட்டுள்ளது. இப்போது பீட்டா நிலையில் உள்ளது, இயல்புநிலை யில் இப்போது SourceForgeஇல் இதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிப்பு 5 ஆனது ஆங்கில மொழிக்கான ஆதரவினை அளிக்கின்றது, மேலும் பல்வேறு மொழிகளுக்கான ஆதரவு அளிக்குமாறு திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு பல்வேறு மொழிகளின் ஆதரவுக்கு அப்பால்,  மென்பொருளின் நவீனமயமாக்கலை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது சர்வதேச சந்தைக்கு மிகவும் பரவலாக பொருந்தும் சாலை வடிவமைப்பு தரைத்தளப்பணிகளின் துறையில் மலிவுவிலை கருவிகளுக்கான குறிப்பிட்ட தேவை வளர்ந்து வருகின்றது. செயல்பாட்டில், பயனாளர் கிடைமட்ட சீரமைப்பு, செங்குத்து சீரமைப்பு  சாலை வார்ப்புருவைத் திருத்துவதால், வடிவியல் தரைதளப்பணிக் கணக்கீட்டிற்காக, முழுமையான தானியங்கி  தேவைக்கேற்ப குறுக்குவெட்டுகளை உருவாக்குவதே பதிப்பு 5 இன் முக்கிய நோக்கமாகும். கிடைமட்ட சீரமைப்பின் ஊடாடும் வடிவமைப்பிற்கான செயல்பாடுகளை செங்குத்து சீரமைப்பின் ஊடாடும் வடிவமைப்பிற்கான தற்போதைய பயனாளர் நட்பு  சக்திவாய்ந்த செயல்பாடுகளின் அதே நிலைக்கு மேம்படுத்துவதை இது உட்படுத்துகிறது – . இது மிகவும் சக்திவாய்ந்த தரைத்தள நிலப்பரப்பு மாதிரியை செயல்படுத்துவதற்கும், தேவைக்கேற்ப குறுக்கு வெட்டு தலைமுறையை ஆதரிக்கும் திறன் கொண்டது, மேலும் ஊடாடும் தன்மையை ஆதரிக்கும் அளவிற்கு மிகவிரைவாக செயல்படுமாறும் உள்ளது  இது GPLv3 எனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது இதனை பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் பயன்படுத்தி கொள்ளவும்  https://sourceforge.net/p/lima-vva/wiki/Home/எனும் இணையதள முகவரிக்கு செல்க .

மறுபெயரிடுவதற்கான Renameஎனும் நீட்டிப்பு கருவி

Rename என்பது கோப்புகளை மறுபெயரிடுவதற்கான ஒரு கருவியாகும். இதன்வாயிலாக  கோப்புகளின்  ஆங்கில எழுத்துகளாலான பெயரின்எழுத்துகளை சிறியஎழுத்துகளாக  அல்லது பெரியஎழுத்துகளாக  ஒரே தொகுப்பாக மாற்றம் செய்யலாம் அல்லது அவற்றின் உரிமையை மாற்றலாம். இது சி எனும் கணினிமொழியில் எழுதப்பட்ட ஒரு சிறிய  விரைவாக செயல்படும் ஒரு கருவியாகும், எனவே shell scriptsஇல் எழுதப்பட்ட பெரும்பாலான மறுபெயரிடும் கருவிகளை விட இது விரைவானது. கோப்பு பெயர்களில் எழுத்துகளின் சரவடிவங்களைத் தேடுவதற்கும் மாற்றுவதற்கும் நீட்டிக்கப்பட்ட வழக்கமான வெளியீட்டால் மறுபெயரிடப்படுகிறது இதனுடைய  முக்கிய வசதி வாய்ப்புகள் பின்வருமாறு:  கோப்பின் பெயரில் எழுத்துகளின் சரங்களைஎளிதாக மாற்றிடலாம்.  வழக்கமான வெளியீட்டின் மூலம் கோப்பின் பெயரில் எழுத்துகளின் சரங்களைத் தேடிடவும் மாற்றிடவும் முடியும். ஆங்கில எழுத்துகளாலான கோப்பின் பெயரின்எழுத்துகளை சிறியஎழுத்துகளாக  அல்லது பெரியஎழுத்துகளாகமாற்றிடலாம்  .  இது தொகுப்பு பயன்முறையின் அடிப்படையில் மறுபெயரிடுதலை ஆதரிக்கின்றது.  கோப்பகங்கள், துணை அடைவுகளை மீண்டும் மீண்டும் செயலாக்கம் செய்கின்றது.  ஒரு கோப்பிலிருந்து கோப்பு பெயர் பட்டியலைப் படிக்க ஆதரவு அளிக்கின்றது.  இதன்வாயிலாக கோப்புகளின் உரிமையை மாற்றமுடியும்.  இது பாதுகாப்பான பயன்முறையை கொண்டது: இதனை பயன்படுத்த துவங்குவதற்கு முன் நன்கு பரிசோதித்து சரிபார்த்து கொள்க. இதனை ஈடுபாட்டுடன் பயன்படுத்தி கொண்டிருக்கும்போது, Sourceforge,இல்  உள்ள தொடர்புடைய தகவல்களைப் பார்வையிடலாம் அல்லது செயல்திட்டத்தின் அஞ்சல் பட்டியலை அணுகலாம்.   இது GPLv3 எனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது இதனை பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் பயன்படுத்தி கொள்ளவும்  http://rename.sourceforge.net/எனும் இணையதள முகவரிக்கு செல்க .

Chikitsa எனும் கட்டற்ற கட்டணமற்ற இணையபயன்பாடு

இது மருத்துவமனைகளின் நோயாளிகளைக் கண்காணிக்க உதவிடும் ஒரு நோயாளிகளின் மேலாண்மை அமைப்பு ஆகும் . இது மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற பல்வேறு நோயாளிகளின் தொடர்பு விவரங்களை பராமரிக்க உதவுகின்றது. அவ்வாறான நோயாளிகள் ஒவ்வொருவரும் எப்போது மருத்து மனைக்கு வந்து குறிப்பிட்ட மருத்தவரை நேரில் சந்திக்கமுடியம் என அனுமதிவழங்கிடும் பட்டியலை பராமரிக்கின்றது. நோயாளிகளின் கட்டண த்திற்கான ஒப்புகை தாளை அச்சிட உதவுகின்றது. மருந்துகள் இதர பொருட்கள் போன்றவைகளின் கையிருப்பினை  மேலாண்மை செய்ய உதவுகின்றது. தனிப்பயனாக்கக்கூடிய வாய்ப்புகளுடன் முழுமையான வலைத்தளமாக பராமரித்திட உதவுகின்றது. நோயாளிகள் மருத்துவர்களின் சந்திப்புகளை பதிவு செய்யவும்  அவர்களின் பதிவுசெய்யப்ட்ட ஆவணங்களைப் பார்வையிடவும் அனுமதிக்கின்றது,. இது செயல்படுவதற்காக PHP 5.1.6 தேவையாகும்  இது எப்போதும் கட்டணமில்லாமல் கிடைக்கின்றது. இது ஒருகட்டற்றது என்றால் வெளிப்படையானதாகும். இதனை கட்டணமில்லாமல்  பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் அவ்வப்போது கட்டணமில்லாமல் மேம்படுத்தி புதுப்பித்து கொள்ளமுடியும். இதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென மாதாந்திர கட்டணம் எதுவும் செலுத்திடத் தேவையில்லை. இந்த பயன்பாட்டினை பற்றி புரிந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தவும் எளிதானது. உள்ளுணர்வுகூடிய பயனாளரின்  அனுபவத்தை வழங்குகின்றது. மிக விரிவான வசதி வாய்ப்புகளை கொண்டுள்ளது அதனோடு, இதுபயன்படுத்த எளிதானது. இதனுடைய வசதிகளை மேம்படுத்த பரந்த அளவிலான நீட்டிப்புகளிலிருந்து தேவையான வாய்ப்புகளை தேர்வுசெய்து கொள்க.வணிக ஆதரவு  தனிப்பயனாக்குதலுக்கான தீர்வு அகியவற்றையும் இது வழங்குகின்றது. இதில் பயனாளர்களின் வளர்ந்து வரும் சமூக குழுஒன்று உள்ளது, அது நமக்கு தேவையான ஆதரவை கட்டணமில்லாமல் வழங்க தயாராக இருக்கின்றது  இதனை பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் பயன்படுத்தி கொள்ளவும்  https://chikitsa.net/ எனும் இணையதள முகவரிக்கு செல்க .

பல்லூடக தளம் (MediaPortal) எனும் கட்டற்ற பயன்பாடு

பல்லூடக தளம் (MediaPortal)எனும் பயன்பாடானது நம்முடைய  கணினியை முழுமையான ஊடக தீர்வாக மாற்றுகிறது. அடிப்படை வன்பொருளில் உள்ள Itruns என்பது, நம்முடைய தொலைகாட்சி பெட்டியுடன் நேரடியாக இணைகிறது மேலும் நம்முடைய தொலைகாட்சி தொடர், திரைப்படங்கள், புகைப்படங்கள், இசைதொகுப்புகள் ஆகியவற்றை மிகவும் ஆற்றல்மிக்க வகையில் காட்சியாக காண்பிக்கின்றது .நாம் பயன்படுத்திடும் அறையிலுள்ள,  பெரிய திரை LCD அல்லது Plasma TV அல்லது  projector  இல் இதன்வாயிலாக  நேரடியாக தொலைகாட்சி நிகழ்ச்சிகளை காணவும்,காட்சிகளை  பதிவு செய்து பின்னர் காணவும்முடியும் -இது ஒரு TiVo போன்றது, ஆனால் மேலும், கட்டணமில்லாமல்!  கானொளிகாட்சிகள், திரைப்படங்கள், குறுவட்டுகள் நெகிழ்வட்டுகள் நீலக்கதிர் குறுவட்டுகள் ஆகியவற்றை  இயக்கி மகிழலாம், இசை , வானொலி நிகழ்ச்சிகளை  கேட்டு மகிழலாம்,  படங்கள், நம்முடைய வீட்டில் நாமே உருவாக்கும் கானொளி காட்சிகளை கூட கண்டு அனுபவிக்கலாம் அல்லது படவில்லை காட்சியாக  உருவாக்கலாம் . நம்முடைய வலைபின்னலுடன் இணைக்கப்பட்ட எந்தவொரு HTPC / PC க்கும் பல்லூடக தாரையோட்டம் செய்து  வானொலி தொலைகாட்சிகளை நம்முடைய  படுக்கையில் இருந்தவாறே  காணலாம் கேட்கலாம் நம்முடைய HTPC ஐ தொலைதூரத்திலிருந்தும் கட்டுப்படுத்தலாம்  வானிலைஅறிக்கை, செய்தி ,மேலும் பலவற்றைச் சரிபார்க்கலாம் அல்லது  இணையத்திலிருந்து அல்லது கைபேசி சாதனத்திலிருந்து இந்த பல்லூடக வாயிலை  அணுகலாம் இவை அடிப்படை வசதிகள் மட்டுமேயாகும்! கிடைக்கக்கூடிய நூற்றுக்கணக்கான செருகுநிரல்கள்  நீட்டிப்புகளைப் பயன்படுத்து வதன் மூலம், நம்முடைய HTPC ஐ கண்காணிப்பது போன்ற எதையும்  செய்யலாம்; விளையாட்டுகளை மதிப்பிடுவது அல்லது உள்ளூர் திரைப்பட நிகழ்ச்சி நேரங்களைக் காணலாம்; இணைய தொலைகாட்சி, யூடியூப் கானொளிகாட்சிகள் அல்லது இணைய வானொலியை தாரையொட்டம் அல்லது பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்; இதில் ஒரு முன் வரையறுக்கப்பட்ட செயல்பட்டியில் இருந்து இசையைத் தொடங்கலாம். இது ஊடகக் கட்டுப்பாட்டில் ஒரு புரட்சிகரமான செயலாகும், இது நம்முடைய ஊடகத்தை நாம் விரும்பும் விதத்தில் பார்க்கவோ, கேட்கவோ, படிக்கவோ அல்லது விளையாடவோ அனுமதிக்கிறது, வேறு சிக்கலான வழிஎதுவுமில்லாமல், அல்லது கடினமான வழிசெலுத்தல் அமைப்புகளைக் கற்றுக்கொள்ளாமல். இதனுடைய  பக்கங்களைப் பார்க்கலாம்,இதனுடைய தொகுப்பினை பார்வையிடலாம் அல்லது அனைத்து செருகு நிரல்களையும் சரிபார்த்து நாமே செயல்படுத்தி காட்சியை காணலாம். இது அனைத்து மேம்பட்ட ஊடக மைய செயல்பாடுகளையும் ஆதரிக்கிறது, மேலும் அனைத்து விண்டோ பயனர்களும் அணுகக்கூடியது.  இது GPLv2 எனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது இதனை பற்றி மேலும் விவரம் அறிந்து கொள்ளவும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://www.team-mediaportal.com/எனும் இணைதள முகவரிக்கு செல்க

வருமான வரிஇணையபக்கத்தில் பதிவிறக்கக்கூடிய ஜாவா அடிப்படையிலான மென்பொருள் பயன்பாட்டை எவ்வாறு பயன்படுத்துவது?

 வரி செலுத்துவோருக்கு எம்எஸ் ஆஃபிஸின் எக்செல் பதிப்புகள் 2010 அல்லது அதற்குப் பிறகு இல்லையெனில் வருமானவரி துறையின் வாயிலில்இருந்து பதிவிறக்கம் செய்வதற்கு ஜாவா அடிப்படையிலான மென்பொருள் பயன்பாட்டை எவ்வாறு பயன்படுத்திகொள்வது என்பது பற்றிய விவரத்தினை இந்த கட்டுரையில் காணலாம் ,

குறிப்பு: தற்போது இந்த வாயிலிலிருந்து  வரி செலுத்துவோர் எம்எஸ் எக்செல் பதிப்புகள் 2010 அல்லது அதற்குப் பிறகான பயன்பாடு இல்லையெனில் இதனை பயன்படுத்தி கொள்ளமுடியாது என்ற நிலை  உள்ளது.

வருமான வரித் துறை,   வருமானவரி அறிக்கை / சட்டரீதியான படிவங்களை சமர்ப்பிப்பதற்கான வரி செலுத்துவோரின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சியில், இறுதி-பயனாளர் மட்டத்தில் பல்வேறு மாறுபட்ட தொழில்நுட்ப தளங்களுக்கு ஏற்றவாறு இணையத்தில் நேரடியாகவும் இணைய இணைப்பில்லாமலும் செயல்படும் பயன்பாடுகளை (ஜாவா , எக்செல் பயன்பாடுகள்) வழங்கியுள்ளது. இவ்விரண்டு வகைபயன்பாடுகளும் குறிப்பிட்ட தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், அவற்றின் செயல்பாடுகள் அவ்வப்போது செய்யப்படும் மேம்பாடுகள் திருத்தங்கள் ஆகியவற்றைப் பொறுத்ததாகும் . மைக்ரோசாப்ட் வழங்கிய ஜாவா (ஆரக்கிளைஆதரிக்கிறது) , எம்எஸ்-ஆஃபிஸ் ஆகியவை அடிக்கடி புதுப்பிக்கப்பட்டு காலப்போக்கில் புதிய பதிப்புகள் வெளியிப்பட்டு வருகின்றன. வரி செலுத்துவோரால்  ITRபடிவத்தில் நிரப்பப்பட்ட வருமான விவரங்களின் அடிப்படையில் துல்லியமான வரி கணக்கீட்டைக் கொண்ட மிகச்சரியான XMLs களைப் பெறுவதற்காக பயன்பாடுகளில் ஏராளமான சரிபார்ப்பு விதிகள் இணைக்கப்பட்டுள்ளன. எக்செல் பயன்பாட்டில், சரிபார்ப்புகளைச் செய்யும் மேக்ரோக்கள் மைக்ரோசாஃப்ட் எக்செல் 2007உம் அதற்கு முந்தைய பதிப்புகளையும் இனி ஆதரிக்கப்படாத சூழல் உள்ளது. ஆயினும் எம்எஸ் ஆஃபிஸ் 2010 ஐ விட மற்ற பதிப்புகளில் பின்வரும் அணுகல் சிக்கல்கள்  உள்ளன:

1. வரிசைகளின் செயல்பாட்டைச் சேர்ப்பது குறைவு,2. மேக்ரோவினை பொருந்தக்கூடிய பிரச்சினை,3. பாதுகாப்பு காரணங்கள்,4. சரிபார்ப்பு விதிகளின் தோல்வி

இப்பயன்பாடுகளைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச தேவை மின் சமர்ப்பிப்பு( e-Filing) இணைய வாயிலில் (https://www.incometaxindiaefiling.gov.in) எனும் திணைக்களத்தால் வெளியிடப்படுகிறது. மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 இற்கான  ஆதரவினை அக்டோபர் 10, 2017 அன்று இந்நிறுவனம்முடித்துகொண்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது, அதாவது மைக்ரோசாப்ட் நிறுவனமானது இனி தொழில்நுட்ப ஆதரவு , பாதுகாப்பு புதுப்பிப்புகளை வழங்காது. மைக்ரோசாஃப்ட் எக்செல் 2007 உம் அதற்குமுந்தைய பதிப்புகளையும் பயன்படுத்துகின்ற வரி செலுத்துவோர், திணைக்களத்தின் வருமானவரி படிவம்  ITR எக்செல் பயன்பாட்டைப் பயன்படுத்தி வருமான வரி விவர அறிக்கையைத் தயாரிப்பதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதனால் ஜாவா பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ள பின்வரும் படிமுறைகளை பின்பற்ற XMLஐ உருவாக்கி பதிவேற்றம் செய்திடுக என பரிந்துரைக்கப்படுகின்றது:

படி முறை1: முதலில் ஜாவாஇயக்கநேர சூழலை கணினியில் பதிவிறக்கம்செய்திடுக. அதற்காக அனைத்து இயக்க முறைமைகளுக்கும் ஜாவா பதிவிறக்கங்களை https://java.com/en/download/ எனும் இணையமுகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்க.

படிமுறை 2: தொடர்ந்து வருமானவரித் துறையின் https://www.incometaxindiaefiling.gov.in எனும் இணையமுகவரியுடன் கூடிய   ‘e-Filing‘ எனும் இணைய வாயிலிற்குள் உள்நுழைவுசெய்திடுக

படி முறை3: பின்னர் உள்நுழைவு பொத்தானின் கீழே அமைந்துள்ள ‘Downloads‘ எனும் பகுதிக்கு செல்க அங்கு ‘‘Income Tax Return Preparation Software’‘ என்பதை தெரிவுசெய்து சொடுக்குக

படி முறை4: உடன்விரியும் திரையில் வருமானவரிபடிவம் சமர்ப்பிக்க வேண்டிய நிதியாண்டில்நாம் பெற்ற வருமான வகைகளைப் பொறுத்து ITR  படிவத்தின் வகையைத் தேர்ந்தெடுத்திடுக .மேலும் ‘Java Utility’ என்றபயன்பாட்டின் நெடுவரிசையின் கீழ் கிடைக்கும்’ Downloads ‘என்பதன் இணைப்பைக் தெரிவுசெய்து சொடுக்குக

 படிமுறை5: அதன்பின்னர் பதிவிறக்கம் ஆகின்ற சுருக்கப்பட்ட Zip வடிவிலான கோப்பை  கணினியில் தேவையான பகுதியில் சேமித்திடுக பின்னர்பதிவிறக்கம் செய்யப்பட்ட Zipவடிவ கோப்பை பிரித்தெடுத்திடுக தொடர்ந்து அவ்வாறு பிரித்தெடுக்கப்பட்டப் கோப்பைத் திரையில் தோன்றசெய்திடுக

 படி முறை6: பின்னர்JAVA jar எனும் கோப்பை செயற்படுத்தி திரையில் தோன்றச் செய்திடுக

படிமுறை 7: தொடர்ந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ‘‘Pre-filled XML‘ எனும் கோப்பை அதனோடு இணைத்திடுக. இந்த ‘‘Pre-filled XML‘எனும் கோப்பினை  பதிவிறக்கம் செய்ய வில்லை எனில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிமுறைகளைப் பின்பற்றி அதனை பதிவிறக்கம் செய்து கொள்க

 படிமுறை 1: இதற்காக முதலில் வருமானவரித் துறையின் https://www.incometaxindiaefiling.gov.in எனும் இணைய முகவரியுடன் கூடிய   ‘e-Filing‘ எனும் இணையவாயிலிற்குள் உள்நுழைவுசெய்திடுக

 படிமுறை 2: தொடர்ந்து அவ்விணைய பக்கத்தின் மேலே இடது பக்கத்தில் அமைந்துள்ள ‘My Account’ எனும் பட்டியலிற்குச் செல்க  அங்கு உள்ள ‘Download Pre-filled XML’  என்பதைதெரிவுசெய்து சொடுக்குக

படிமுறை 3: உடன்விரியும் கீழிறங்கு பட்டியலில் இருந்து‘Assessment Year’, ‘ITR Form Name’  ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்திடுக 

படிமுறை 4: தொடர்ந்து Continue’‘ எனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக அதனை தொடர்ந்து விரியும் திரையில்  details எனும் விவரங்களின் வகையைத் தேர்வுசெய்க ‘Confirm’ என்பதைதெரிவுசெய்து சொடுக்குக பின்னர்  ‘‘Download XML’‘என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

 படிமுறை 8: அதன்பின்னர் தொடர்புடைய விவரங்களை விரிவுபடுத்த பதிவிறக்கம் செய்யப்பட்ட ‘Pre-filled XML‘ கோப்பை பதிவிறக்கம் செய்க.

படிமுறை 9: பின்னர் திரையில் தோன்றிடும் அனைத்து கட்டாய புலங்களிலுக்கும் தேவையான விவரங்களை மிகச்சரியாக உள்ளிடுக, தொடர்ந்து அனைத்து தாட்களையும் சரிபார்த்திடுக  மேலும் செலுத்த்தவேண்டி வரியைக் கணக்கிடுக

படி முறை10: அதனைதொடர்ந்து’Generate XML‘ என்பதைதெரிவுசெய்து சொடுக்குக.

 படிமுறை 11: பின்னர் நம்முடைய மேசைக்கணினியில்  இந்த XML  கோப்பைச் சேமித்திடுவதற்காக ‘Save XML‘ எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

படி முறை12: மேலே கூறியவாறு உருவாக்கப்பட்ட XMLவடிவகோப்பினைச் சேமித்த பிறகு, XML கோப்பை e-Filing இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடுவதற்காக, கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிமுறைகளைப் பின்பற்றிடுக.

படி முறை1: முதலில் வருமானவரித் துறையின் https://www.incometaxindiaefiling.gov.in எனும் இணைய முகவரியுடன் கூடிய   ‘e-Filing‘ எனும் இணைய வாயிலிற்குள் உள்நுழைவு செய்திடுக

படிமுறை 2: தொடர்ந்து அவ்விணைய பக்கத்தின் மேலே இடது பக்கத்தில் அமைந்துள்ள ‘e-File‘ எனும் பட்டியலிற்குச் செல்க அதில் ‘‘Income Tax Return’ என்பதை தெரிவு செய்து சொடுக்குக

படிமுறை 3: பின்னர்விரியும் கீழிறங்கு பட்டியலில் இருந்து ‘Assessment Year’, ‘ITR Form Name’ ஆகியவற்றை  சரியாக தேர்ந்தெடுத்திடுக

படிமுறை 4: அதன்பின்னர்விரியும் கீழிறங்கு பட்டியலில் இருந்து ‘Submission Mode’ என்பதை ‘Upload XML’ எனத் தேர்ந்தெடுத்திடுக

படி முறை5: பிறகு நாம் தயார்செய்த வருமான வரிபடிவத்தை சரிபார்க்க பின்வரும் வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்வுசெய்க: மின்னனு கையொப்ப சான்றிதழ் (DSC). இந்நிலையில் DSC ஐ பதிவு செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிமுறைகளைப் பின்பற்றிடுக.

படிமுறை 1:முதலில் வருமானவரித் துறையின் https://www.incometaxindiaefiling.gov.in எனும் இணையமுகவரியுடன் கூடிய   ‘e-Filing‘ எனும் இணைய வாயிலிற்குள் உள்நுழைவுசெய்திடுக 

படி முறை2:தொடர்ந்து அவ்விணைய பக்கத்தின் மேலே வலதுபுறத்தில் அமைந்துள்ள ‘Profile Setting‘ எனும் பட்டியலிற்குச் சென்று ‘Register Digital Signature Certificate‘ என்பதை தெரிவுசெய்து சொடுக்குக   மேலும் DSCஎனும் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்திடு வதற்காக ‘Click here to download the DSC Utility’‘என்பதை தெரிவுசெய்து சொடுக்குக

படிமுறை 3: பின்னர் பதிவிறக்கம் செய்யப்பட்ட DSC பயன்பாட்டை பிரித்தெடுத்திடுக. தொடர்ந்து நன்கு செயல்படுத்தகூடிய Jar கோப்பைத் திறந்திடுக .DSC பயன்பாட்டின் வழிமுறைகளை கவணமாகப் படித்திடுக.

படிமுறை 4: அதன்பின்னர்DSC மேலாண்மை பயன்பாட்டில், ‘Register/Reset Password using DSC’ எனும் தாவியின் திரைக்கு செல்க  அதிலுள்ள  ‘Enter e-Filing User ID*’, ‘Enter PAN of the DSC*‘ஆகியவற்றிற்கு  தேவையான சரியான விவரங்களை உள்ளிடுகமேலும்Digital Signature Certificate’ (DSC) என்பதில் மிகச்சரியான சான்றிதழ் வகையை தேர்ந்தெடுத்திடுக

படிமுறை 5: பிறகு DSCக்கு .pfx எனும் கோப்பைப் பயன்படுத்திகொள்ள:

1. முதலில் DSC இக்கு .pfx கோப்பின் வகையைத் தேர்ந்தெடுத்திதிடுக

 2. பின்னர் திறவுகோளுடன் சேமிப்பு கோப்பை (.pfx கோப்பு) உலாவியில் இணைத்திடுக

3. தொடர்ந்துநம்முடைய தனிப்பட்ட விசைக்கான கடவுச்சொல்லை உள்ளிடுக

4. அதனை தொடர்ந்து’Generate Signature file‘ என்பதை தெரிவுசெய்து சொடுக்குக

 யூ.எஸ்.பி நுழைவுஅட்டைப் பயன்படுத்தி DSC:உருவாக்குதல்

 1.முதலில்  DSC  (.pfx கோப்பு அல்லது USB Token)  யூ.எஸ்.பி டோக்கன் வகையைத் தேர்ந்தெடுத்திடுக

2. பின்னர்USB Token  சான்றிதழைத் தேர்ந்தெடுத்திடுக.மேலும் ‘Generate Signature File’என்பதைதெரிவுசெய்து சொடுக்குக

ஆதார் OTP :– முன் சரிபார்க்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்களைப் பயன்படுத்தி EVC.

– முன் சரிபார்க்கப்பட்ட டிமாட் கணக்கு விவரங்களைப் பயன்படுத்தி EVC

 . – ஏற்கனவே உள்ள கணக்கு மூலம் EVC உருவாக்கப்பட்டுவிடும்  EVC வாய்ப்பு அல்லது வங்கி ஏடிஎம் உருவாக்கிடுக. அத்தகைய EVC யின் செல்லுபடியாகும் நேரத்திலிருந்து 72 மணிநேரம் ஆகும் – இந்த வருமான வரி படிவத்தை நாம் சரிபார்க்க விரும்பவில்லையெனில், கையொப்பமிடப்பட்ட ITR-V சாதாரண அல்லது விரைவு தபால் மூலம் “மையப்படுத்தப்பட்ட செயலாக்க மையம், வருமான வரித் துறை, பெங்களூரு -560500 என்ற முகவரிக்கு விரைவு தபால் வாயிலாக அனுப்பிடலாம்அதற்காக‘Continue’ எனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக

 படிமுறை 6:அதனை தொடர்ந்து’Attach the ITR XML file*‘ என்ற வாய்ப்பில் XML கோப்பை இணைத்திடுக.

 படிமுறை 7: இந்நிலையில் பின்வரும் குறிப்பினை மனதில்கொள்க

குறிப்பு:  EVC  அல்லது ஆதார் OTP வாய்ப்பு தேர்ந்தெடுக்கப்பட்டால்,  ITRஐ மின் சரிபார்ப்பு செய்வதற்காக வரி செலுத்துவோர் OTP யை உள்ளிடுவதற்கான வாய்ப்பினைப் பெறுவார். அல்லது DSC யை இணைத்து, ITR-ஐ சரிபார்க்க DSC வாய்ப்பு தேர்ந்தெடுக்கப்பட்டால்.  தொடர்ந்து நம்முடைய வருமானவரி படிவத்தினை சமர்ப்பித்திடமுடியும்

அவ்வாறு வெற்றிகரமாக சமர்ப்பித்த பிறகு, வருமானதுறையான ITD ஆனது நம்முடைய ITRஐ செயல்படுத்தி, மின்னஞ்சல் உறுதிப்படுத்தலை அனுப்பிவைத்திடும்

படிமுறை 13: பதிவேற்றிய படிவங்களைக் காண மேலே கூறிய படி முறை1இன்:வருமானவரித் துறையின் https://www.incometaxindiaefiling.gov.in எனும் இணைய முகவரியுடன் கூடிய   ‘e-Filing‘ எனும் இணையவாயிலிற்குள்உள்நுழைவுசெய்திடுக 

படிமுறை 2: அவ்விணைய பக்கத்தின் மேலே இடது பக்கத்தில் அமைந்துள்ள ‘My Account‘ எனும் பட்டியலிற்கு சென்று ‘View e-Filed Returns / Forms’  என்பதை தெரிவுசெய்து சொடுக்குக

படி முறை3: பின்னர்விரியும் கீழிறங்கு பட்டியலில் இருந்து தேவையான வாய்ப்பினைத் தேர்ந்தெடுத்திடுக அதன்பின்னர்’Submit” என்பதைதெரிவுசெய்து சொடுக்குக 

Previous Older Entries