கம்பியில்லா வலைபின்னலில் மிகச்சரியாக இணைப்பை ஏற்படுத்துக

வீடுகளில்அல்லது அலுவலகங்களில் மைக்ரோ சாப்ட் விண்டோவானது எங்கெங்கே கம்பியில்லா வலைபின்னலின் சைகையானது குறைந்த அளவே  கிடைக்கின்றதென நமக்கு உடனடியாக  அதனை எச்சரிக்கை செய்தியாக கணினியின் திரையில் காண்பித்துவிடும்   அந்த எச்சரிக்கை செய்தியிலிருந்து போதுமான கம்பியில்லா வலைபின்னல் அவ்விடத்தில் இல்லையென அல்லது அதிவேக இணைப்பு அக்கம்பியில்லா வலைபின்னலில் ஏற்பட்டுள்ளது என அறிந்து கொள்ளலாம் அதனால் நம்மால் இணையம் அல்லது வளாக பிணையம் போன்றவைகளை மிகச்சரியாக நம்முடைய கணினியில் அல்லது மடிக்கணினியில் இணைக்கமுடியாது என அறிந்து கொள்ளலாம் அதனை தெடர்ந்து பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றி மிகச்சரியான கம்பியில்லா வலைபின்னல் இணைப்பை பெற்றிடுக.

வீட்டின் அல்லது அலுவலகத்தின் மையபகுதியில் கம்பியில்லா இணைப்பின் வழிசெலுத்தி(wireless router ) கம்பியில்லா இணைப்பின் அனுகும்புள்ளியினை (wireless access point) சரிசெய்து அமைத்திடுக

வழிசெலுத்தியை அறையின் சுவற்றை விட்டு தள்ளி வைத்திடுக  அவ்வாறே வழிசெலுத்தியை தரையில் வைக்கவேண்டாம் அதற்கு பதிலாக தரைக்குமேலே சிறிது உயரத்தில்  வைத்திடுக   வழிசெலுத்தியை உலோக பொருளிற்கு அருகில் வைத்திட வேண்டாம் சிறிது தூரத்தில் வைத்திடுக

7.1

 ஸ்டான்டர்டு ஆன்டெனாவிற்கு பதிலாக ஹைகெய்ன் ஆன்டெனாவை பயன்படுத்திடுக  ஸ்டான்டர்டு ஆன்டெனா சைகைகளை எல்லா திசைகளிலும் ஒளிபரப்பும் அதனால் சுவர்போன்றவைகளை தான்டி இந்த சைகள் செல்லமுடியாது  ஹைகெய்ன் ஆன்டெனாவானது குறிப்பிட்ட திசையில் மட்டும் ஒளிபரப்புவதால் சுவர்போன்ற தடைகளையும் எளிதாக தாண்டி செல்லும்

7.2

 மடிக்கணினி் அல்லது கணினியின் கம்பியில்லா வலைபின்னல் இசைவாக்கிக்கு (wireless network adapter) பதிலாக  யூஎஸ்பி நெட்வொர்க் அடாப்டரை பயன்படுத்தி கொள்க இது வெளிப்புற அன்டெனாவை பயன்படுத்தி கொள்கின்றது மடிக்கணினியில் இது முன்கூட்டியே கட்டமைக்கபட்டு வருவதால் தனியாக இதனை மேம்படுத்திட தேவையில்லை

கம்பியில்லா மறுவழிசெலுத்தியை சைகையின் தரத்தை விரிவுபடுத்துவதற்காக பயன்படுத்தி கொள்க

7.3

கம்பியில்லா வழிசெலுத்தியின் அலைவரிசையை அதனை கட்டமைப்பு செய்திடும்போது 2.4GHz அளவிற்குள் மட்டும் வருமாறு மாற்றி சைகையின் திறனை வலுவாக்கி கொள்க   உடன் கணினியானது இந்த வலுவான புதிய அலைவரிசை சைகையை தெரிந்து ஏற்று கொள்கின்றது

7.4

இசைவாக்கி(adapter) உற்பத்தியாளரின் இணையதளத்திற்கு சென்று அதனை மேம்படுத்தி கொள்க. இசைவாக்கியின் இயக்கியையும்(adapter driver) நம்முடைய கணினியின் இயக்கமுறைமைக்கு ஏற்றவாறு மேம்படுத்தி கொள்க

கம்பியில்லா வலைபின்னலின் பயன்படுத்தபடும் 802.11b சாதனங்களுக்கு பதிலாக  802.11g  ஆக மாற்றியமைத்துகொள்க

நம்முடைய வலைபூவிலும் இணைய தளங்களிலும் இடையிடையே படங்களையும் பொத்தான்களையும் இணைத்திட

நம்முடைய வலைபூவில் இணைய தளங்களில் நம்மால் உருவாக்கபடும் கட்டுரைகள் தொடர்களில் இடையிடையே படங்கள்  பொத்தான்கள் போன்றவற்றை இணைப்பதற்காக

6,1நம்மால் விலைகொடுத்து வாங்கி பயன்படுத்த கூடிய அளவிற்கு iStockPhoto என்ற தளம் பயன்படுகின்றது இதன்மூலம் நாம் விரும்பும் படங்களின் சரியான அளவு உருவம் வண்ணம் தோற்றம் அமைவிடம் போன்றவை  கிடைக்கின்றன அவைகளை நாம் விரும்பியவாறு பயன்படுத்தி இணைத்துகொள்க

6.1

6,2 கூகுளின் தேடுபொறி மிகிச்சரியான அளவு உருவம், வண்ணம் தோற்றம் ,அமைவிடம் போன்றவைகளடங்கிய  உருவப்படங்களை நமக்கு வழங்குகின்றதுஅவைகளை நாம் விரும்பியவாறு பயன்படுத்தி இணைத்துகொள்க

6,3 Open Clip Art Library என்ற தளம்  விலையில்லாத நாம்விரும்பும் வகையில்  மிகிச்சரியான அளவு உருவம் ,வண்ணம் ,தோற்றம், அமைவிடம் போன்றவைகளடங்கிய  உருவப்படங்களை நமக்கு வழங்குகின்றதுஅவைகளை நாம் விரும்பியவாறு பயன்படுத்தி இணைத்துகொள்க

6.2

உடல்நலனை பேணுவதற்காந ஆலோசனைகூறும் செல்லிடத்து பேசியில் Android & iஎன்ற இயக்கமுறைமையின் பயன்பாடுகள்

நம்முடைய இயந்திரமயமான வாழ்க்கை சூழலில் எந்த அளவு உணவை நாம் எவ்வப்போது உண்ணவேண்டும் அதனால் நம்முடைய உடல்நலன் எவ்வாறு இருக்கும் என அறிந்து கொள்ளமுடியாத வாழ்க்கை ஓட்டத்தில் நாமெல்லோரும் தற்போது  வாழ்ந்து வருகின்றோம் இருப்பினும் செல்லிடத்து பேசியில் Android & iஎன்ற இயக்கமுறைமையில்  இயங்கிடும்  பின்வரும் பயன்பாடுகள் அதற்கான மிகச்சரியான ஆலோசனைகளை கூறி நமக்கு வழிகாட்டுகின்றன

1,MyFitnessPal இந்த பயன்பாடானது நாளொன்றிற்கு நமக்கு தேவைப்படும் கலோரியின்அளவை நம்முடைய வயது, உயரம் ,எடை, நாம் செய்யும் பணி, உடற்பயிற்சி, நாம் காலை மதியம் இரவு ஆகிய நேரங்களின் உண்ண விரும்பும் இந்திய உணவுவகைகள் போன்றவிவரங்களை நம்மிடம் கேட்டறிந்து  அதற்கு தக்கவாறு கணக்கிட்டு மிகச்சரியான உணவுவகைகளை  தினமும் நாம் எவ்வளவு உண்டால் போதும் என நமக்கு தக்க அறிவுரை கூறுகின்றது

8.1

2, Workout Trainer  இந்த பயன்பாடானது ஒவ்வொரு நாளும் நாம் எந்தெந்த உடற்பயிற்சிகளை எவ்வாறு செய்வது என ஒலிஒளி படங்களின் வாயிலாகவும் மாதிரி படங்களின் வாயிலாகும் நமக்கு வழிகாட்டுகின்றது

8.2

3,WebMD  இந்த பயன்பாடானது நம்முடைய உடல்நலனை பாதுகாத்திடும்  மற்றொன்றாகும்  என்னென்ன அறிகுறியிருந்தால்அதற்கு எவ்வாறு மருத்துவசிகிச்சை மேற்கொள்வது காலரா ஆஸ்துமா ,இதயவலி போன்றவைகளுக்கு எவ்வாறு முதலுதவி  செய்வது என்பனபோன்ற செய்தியை நமக்கு அறிவிக்கின்றது

4,MapMyFitness  இந்த பயன்பாடானதுகூகுள் வரைபடத்தின்மூலம்  எந்தெந்த பாதைகளில் வேகநடை, அதிவேக நடை போன்ற உடற்பயிற்சிகளை எவ்வளவு நேரத்திற்கு செய்தால் நம்முடைய உடல் எடை ,உயரம்,  வயதுபோன்றவைகளுக்கு ஏற்ப எவ்வளவு கலோரி உணவு செலவாகும் என அறிவிக்கின்றது

5,iTriage  இந்த பயன்பாடானது   நமக்கு பொதுவான மருத்துவத்திற்கான வழியைகாட்டுகின்றது  எந்தெந்த அறிகுறியிலிருந்து என்னென்ன வியாதி அதற்கு எந்தெந்த மருந்துகளை எவ்வளவு எந்தெந்த நேரத்தில் எடுத்துகொள்ளவேண்டும்  என்னென்ன மருத்துவ வழிமுறைகளை பின்பற்றிடவேண்டும் என அறிவுரை கூறுகின்றது மேலும் விபத்து ,நச்சு பொருட்களால் உடல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக  உதவிக்கு அழைக்கவேண்டிய மருத்துவமனையின் தொலைபேசி எண்களை தயாராக வழங்குகின்றது

8.3

ஸ்மார்ட் போன்களிலும் பல்லடுக்கு சிபியூ பயன்பாடு

மேஜைக்கணினி அல்லது தனியாள் கணினி,மடிக்கணினி ,சேவையாளர் கணினி ஆகியவற்றில் ஒரடுக்கிற்கு அடுத்தபடியாக பல்லடுக்கு சிபியூபயன்பாட்டிற்கு வந்துள்ளவாறு தற்போது ஸ்மார்ட் போன்களிலும் பல்லடுக்கு சிபியூ பயன்பாட்டிற்கு வந்துள்ளது

 ஆரம்பத்தில் ஸ்மார்ட் போனின் செயல் குறைவாக இருந்த போது ஒரடுக்கு சிபியூவே போதுமானதாக இருந்தது ஆனால் இன்று  வீடியோ படங்களை பார்த்தல்,இசையை கேட்டல்இணையத்தில் உலாவருதல், விளையாட்டுகளை விளையாடுதல் என ஒரேசமயத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பணிகளை செய்யும்போது கடிகாரவேகத்திற்கு மேல் மிகைவேகமாக செல்லவேண்டிய சூழலும் அவ்வாறே மிகைவேகத்திற்கு சென்றாலும் குறிப்பிட்ட பணிக்குமேல் அடுத்த பணியை செய்யவேண்டிய நிலையும் ஏற்படும்போது இந்த பல்லடுக்கு சிபியூ எளிதாக மிகவிரைவாக பிரச்சினைஎதுவுமின்றி செயல்படுத்துகின்றது

அதாவது இந்த பல்லடுக்கு சிபியூவின் ஒவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு பணியை தட்டுதடுமாற்றம் ஏதுமில்லாமல் பயனாளர் இதன் செயலை பற்றி கவலைப்படாமல் செயல்படுத்திட இந்த பல்லடுக்கு சிபியூ  உதவுகின்றது கணினியில் பயன்படுத்தபட்ட இந்த பல்லடுக்கு சிபியூ கட்டமைப்பு தற்போது ஸ்மார்ட் போன்களிலும் பயன்படுத்தவிருக்கின்றது என்பதே சமீபத்திய தகவலாகும்

அறிந்து கொள்வோம் அக்சஸ்-தொடர்-பகுதி- 50-செயல்பாட்டு வேகத்தை அதிகபடுத்துதல்

முதன்முதலில் மைக்ரோ சாப்ட்  நிறுவனம் 32 பிட் அளவுள்ள அக்சஸை அறிமுகபடுத்திய போது  புதிய திறன் வாய்ந்ததாகவும் பல்வேறு வசதிகளுடையதாகவும் இருந்தது,

ஆயினும் தற்போது இதில் மேலும்  பற்பல புதியவசதிகளையும் திறனையும்   வளர்த்துகொண்டே வருகிறது,

அதுமட்டுமல்லாது இதில் தானியங்கி செயல் மற்றும் இதர செயலிகளுக்கு விபிஏவை பயன்படுத்திகொள்கிறது,

இதன் வழிமுறைகளில் அல்லது செயலியை அழைக்கும்போது தொடர்புடைய முழு தொகுதிகளையும்(modules) தேக்கி வைக்கப்பட்ட செயலிகளை நினைவகத்தில் ஏற்றுகிறது,அதனால் அதிக அளவுநினைவக இடத்தை இது எடுத்து கொள்கிறது,அதனை ஈடுகட்டிடும் பொருட்டு இதற்கு பதிலாக தேவைப்பட்ட செயலியைமட்டும் அக்சஸ்ஆனது நினைவகத்தில் ஏற்ற அனுமதிக்கிறது,

இதன் பயன்பாடுகளின் குறிமுறைகள் எப்போதும் .mdf கோப்பாக மூலக்குறிமுறைகள் இல்லாமல் திரட்டுதல் (compile)  செய்யப்பட்டே  வழங்கப்படுகிறது, இதனால் நினைவகத்தில் இதற்கான இடம் குறைந்த அளவு  போதுமானதாகும்,

இவ்வாறு திரட்டுதல்(compile) செய்யப்பட்ட நிலையில் இதன் மென்பொருள் இருப்பதால் இதில் பின்வரும் கட்டுபாடுகள் இதில் உள்ளன,

தொகுதிகளின்(modules)  வடிவமைப்பு காட்சியில் மாறுதல் செய்தல், படிவங்களை, அறிக்கைகளை  உருவாக்குதல் போன்ற செயல்களை செய்யமுடியாது,

பொருள் சார்ந்த கோப்பிற்குள் மேற்கோளை சேர்த்தல் நீக்குதல் மாறுதல்செய்தல் ஆகியசெயல்களையும் செய்யமுடியாது,

விருப்ப உரையாடல் பெட்டியில் விபிஏ வின் செயல்திட்ட பெயரை மாற்றியமைக்க முடியாது,

படிவங்களை அறிக்கைகளை ஏற்றுமதி,இறக்குமதி செய்யமுடியாது,

இந்த.mdf கோப்புளை பின்வரும் படிமுறைகளை பின்பற்றி உருவாக்கமுடியும்

1     நடப்பில் திறந்திருக்கும் தரவுதள கோப்பினை மூடிவிடுக,இல்லையெனில் தரவுதளமானது தானாகவே அதனை மூடிவிடும்,பொதுவாக அக்சஸ்ஆனது  தனிப்பட்ட படிவத்தில் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கின்றது,

2     விபிஏ கட்டளை பட்டியில் உள்ள Toolsஎன்பதைதெரிவுசெய்து சொடுக்குக, உடன் விரியும் பட்டியில்  Data base utility என்பதையும் பின்னர் விரியும் சிறுபட்டியில்make MDE fileஎன்பதையும் தெரிவுசெய்து சொடுக்குக,

3     உடன் தோன்றிடும் to save as mde dialog box என்ற பெட்டியில் சேமிக்க விரும்பும் கோப்பின் பெயரை குறிப்பிட்டு make ,mde என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,

4     பிறகு இந்த கோப்பை சேமிக்க விரும்பும் கோப்பகத்தையும் மடிப்பகத்தையும் குறிப்பிடுக ஏற்கனவே உள்ள கோப்பினுடைய பெயரில் சேமிக்க முயற்சி செய்ய வேண்டாம்,

குறிமுறைகளின் வகைகள்

1     இவை நாம் எழுதுகின்ற உயர்நிலை குறிமுறை என்றும்

2     அக்சஸ் புரிந்துகொண்டு செயல்படுத்தம் இயந்திர மொழி குறிமுறை என இருவகைப்படும்,

ஒரு நல்ல தொகுப்பியானது(compiler) கணினியின் சிபியூ புரிந்து கொண்டு செயல் படுத்தும் வகையில் மொழிமாற்றம் செய்யும் திறனுள்ளதாக இருக்கவேண்டும்

அக்சஸ்ஆனது இந்த இரண்டுக்கும் இடைபட்ட நிலையில் தொகுக்கப்பட்ட குறியீடு அல்லது தொகுக்கப்பட்ட  நிலை என இருவகையில் வைத்து பராமரித்துவருகிறது,

இதனால் கோப்பகத்தில் அதிக அளவு நினைவக இடத்தை பிடித்துகொள்கிறது,

தொகுக்கப்பட்ட நிலையில் முழுபயன்பாடுகளையும் பராமரிக்க பின்வரும் வழிமுறை பயன்படுகிறது,

1,விபிஏ சாளரத்தின் கட்டளை பட்டையில் உள்ள debug என்ற கட்டளையை    தெரிவுசெய்து (படம் -1)சொடுக்குக,

2,உடன் விரியும் பட்டியில்compileஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக,

3,உடன் கோப்பானது திரட்டுதல் செய்யப்பட்டு mdfஎன்ற பெயரில் சேமிக்கப்படும்

படம் -1

1     அக்சஸின் இந்த தொகுக்கப்பட்ட நிலையில் உள்ள கோப்புகளில் படிவங்களையும் அறிக்கைகளையும் மாறுதல் செய்தல்

2     புதிய படிவங்களையும் அறிக்கைகளையும் சேர்த்தல்அல்லது நீக்குதல்

3     பெயர்மாற்றம் செய்தல் மேற்கோளை மாற்றுதல் போன்ற செயல்களினால் தொகுக்கபட்ட நிலையிலிருந்து பழையநிலைக்கு மாறிவிடும்,

4     இயக்கநேரத்தில் விபிஏ குறிமுறைமூலம் வழிகாட்டியின் துணையுடன் செயல்படுத்துதல்

திரட்டுதல் அல்லது திரட்டுதல் இல்லாத நிலையில் பயன்பாட்டை வழங்குதல்

புதிய பயன்பாட்டை மூலக்குறிமுறை இல்லாமல் வழங்கினால் உடன் வாடிக்கையாளர்களிடமிருந்து மென்பொருள் மிகவும் மெதுவாக இயங்குவதாக தகவல் வந்து கொண்டே இருக்கும்

இவ்வாறான திரட்டுதல் இல்லாத நிலையில் வழங்குவதாக இருந்தால் முதலில்

1     புதிய தரவுதளத்தை உருவாக்குக,

2     பயன்பாட்டின் பொருளை இதில் இறக்குமதி செய்க,

3     பின்னர அதனை சுருக்கி கட்டுக,

மாற்ற முடியாத நூலக மேற்கோள்களை உடன் இணைத்தல்

விபிஏ சாளரத்தில் கட்டளை பட்டையில் உள்ள tools என்பதை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் விரியும் பட்டியில் reference என்பதைதெரிவுசெய்து சொடுக்குக, உடன்  தோன்றும் (படம்2) reference project என்ற உரையாடல் பெட்டியில் microsoft office 11.0 office library என்பதை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக,

 படம் – 2

 வெளிப்புற தரவுதளத்தை அனுகி அதன் வழிமுறையை அழைப்பதற்கான மேற்கோள் படிமுறை பின்வருமாறு

1.நூலக தரவுதளம் மற்றும் அதனுடைய தொகுதிகளை(modules) உருவாக்குக,

2.நாம் பயன்படுத்த விரும்பும் வெளிப்புற தரவுதளத்தை திறந்கொள்க,

3.வடிவமைப்பு காட்சியில் ஏதேனுமொரு தொகுதியை(module) திறந்தகொள்க,

4.விபிஏ சாளரத்தில் கட்டளை பட்டையில் உள்ள tools என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,

5.உடன் விரியும் பட்டியில் reference என்பதைதெரிவுசெய்து சொடுக்குக

6.பதிவு செய்ய விரும்பும் OLE சேவையாளரை தெரிவுசெய்துகொள்க,

வழங்கப்படும் பயன்பாடுகளில்  நூலக மேற்கோளைஉருவாக்குதல்

அழைக்கப்படும் தரவுதளமும் ,நூலக தரவுதளமும் ஒரே பாதையில் இருந்தால் மட்டுமே இடைமுகம் செய்யமுடியும் இதனை கைகளால் உருவாக்கலாம் அல்லது விபிஏ குறிமுறையை பயன்படுத்தி உருவாக்கலாம்

இதற்கான விபிஏ குறிமுறை பின்வருமாறு

பட்டி – 50-1

public function CreateReference(szFileName As String) As

Boolean

On Error GoTo CreateRefernceerror

Dim ref As Refernce

Set ref = Refernces.AddFromFile(szFileName)

CreateReference = True

Exit Function

CreateRefernceerror:

MsgBox Err & ” : ” & Err.Description

CreateRefernce = False

Exit Function

End Function

இவ்வாறு உருவாக்கிய அக்சஸ் பயன்பாட்டின் மென்பொருளின் வேகத்தை அதிகபடுத்தலாம்

இதில் obsoluteமற்றும் perceivedஆகிய இருவகைகளில் மென்பொருளின் வேகம் உள்ளது

obsolute வேகம் என்பது பயன்பாட்டின் உண்மையான செயல் வேகம் ஆகும்

perceivedவேகம் என்பது இறுதி பயனாளரின் பயன்பாட்டு வேகமாகும், இது மிக மெதுவாகவே இருக்கும்,

பயன்பாட்டு மென்பொருள் மிக வேகமாக செயல்படவேண்டுமெனில் பின்வரும் ஆலோசனையை பின்பற்றுக,

1     மென்பொருளை எப்போதும் தொகுப்பு நிலையிலேயே பராமரிக்கவும் அதனால் குறைந்த நினைவகமே போதும்

2     எப்போதும் நல்ல தொகுதிகளையே(modules) உருவாக்குக,

3     இதனை தரவுதளத்திற்கு மட்டும் (open exclusive)என (படம் 3)பயன்படுத்துக,

  படம் -3

4     தரவுதளத்தினை சுருக்கி பயன்படுத்துக

5     மிக முக்கியமாக உங்கள் கணினியின் வேகத்தை அதிகப்படுத்துக,

கணினியின் வேகத்தை அதிகப்படுத்துவதற்காக

1     மிக அதிக திறனுள்ள ரேமை (RAM)பயன்படுத்துக,

2     கண்ணில் கண்ட வால்பேப்பர் மற்றும் சிக்கலான பிட்மேப்கள் போன்றவைகளை கணினி திரையில் பயன்படுத்தவேண்டாம்

3     உபயோக படுத்தாத பயன்பாடுகளை அவ்வப்போது மூடிவிடுக

4     விண்டாவின் ஸ்வாப் கோப்பிற்குத்தேவையான நினைவகம் போதுமான அளவிற்கு உள்ளதாவென சரிபார்க்கவும்

5     அவ்வப்போது வன்தட்டின் கோப்பகத்தினை அவ்வப்போது ஹார்டு சுத்தம்செய்து சுருக்கி கட்டுதல்செய்து காலிநினைவக இடத்தை அதிகபடுத்துக

ஓப்பன்ஆஃபிஸ்ட்ரா-74-நிறுவனகட்டமைப்பின்படம்மற்றும்தொடர்நிலைவரைபடம்வரைதல்

1 நிறுவனகட்டமைப்பின்படம்வரைதல்(Drawing an organization chart)

ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவில்  நிறுவனகட்டமைப்பின் படம் வரைவதற்காகவென  தனியாக கட்டளை பட்டை இல்லை யென்றாலும்  இதிலுள்ள கனச்செவ்வகம் இணைப்பான்கள்(connectors) ஆகிவற்றை கொண்டு மிக எளிதாக நம்மால்  ஒரு நிறுவனகட்டமைப்பின் படத்தை வரையமுடியும் பின்னர் வண்ணத்தின் பிரதிபலிப்பு அளவைகொண்டு இந்நிறுவனகட்டமைப்பின் படிநிலையை மேலிருந்து கீழாக காண்பிக்கமுடியும் (படம்-74-5)  இந்த வண்ணபிரதிபலிப்பானது உரைக்கான வண்ணமும் பின்புலவண்ணமும்  எதிர்வினையாக  ஒன்றுக்கொன்று பிரதிபலிப்பின் தன்மையை பாதிக்காதவாறும் இதிலுள்ள எழுத்துகளை நம்மால் எளிதாக படித்தறியக் கூடியவாறும்  தெரிவுசெய்து கொள்வது நல்லது என பரிந்துரைக்க படுகின்றது

இந்த நிறுவனகட்டமைப்பின் படம் வரைவதற்கு முன்பு முதலில் ஒருபடம் வரைவதற்கான அமைவு பக்கம் (setup page)அல்லது வரைவு பக்கத்தை  பலஅடுக்கு நிறுவனகட்டமைப்பு ,பொறுப்பு வழிகள் ,அதனதன்  பெட்டிகள் ஆகியவற்றை படம் வரைவதற்காக பயன்படுத்தி கொள்வதற்கான வரியை ஒடித்தலை(line snap) (படம்-74-1) கொண்டு தயார்செய்துகொள்ள வேண்டும்

படம்-74-1

ஒட்டுமொத்த படத்தின் அளவானது அதன் உள்ளே வரையப்படும் பெட்டிகளின் எண்ணிக்கை, அவைகளின் அளவு ஆகியவற்றிற்கு ஏற்ப அமைத்து கொள்க. உள்ளமையும் பெட்டிகளின் மிகச்சரியான அளவு அவைகளின் அமைவிடம் ஆகியவற்றை நாம் பின்னர் தீர்மாணித்து கொள்வோம். இந்நிறுவனகட்டமைப்பு படத்தின் படிநிலையின் ஒருநிலையில் ஒரு பெட்டியை மட்டும் வரைவது எளிதான செயலாகும் பின்னர் அதேநிலையில் ஒன்றிற்கு மேற்பட்ட பெட்டியை நகலெடுத்து ஒட்டுதல்    தேவையான இடத்தில் நகர்த்தி அமைத்தல் போன்ற செயல்களை கொண்டு நம்மால் மேலும் கூடுதலான பெட்டிகளை எளிதாக வரைந்து கொள்ளமுடியும்

 படம்-74-2

 அவ்வாறு கூடுதலான பெட்டிகளை வரைவதற்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெட்டிகளை தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளைபட்டையிலுள்ள Edit=>Duplicate=>என்றவாறு கட்டளைகளை செயல்படுத்துக உடன் தோன்றிடும் Duplicate என்ற (படம்-74-2) உரையாடல் பெட்டியிலுள்ள Number of copies என்பதன் எண்ணிக்கையை கொண்டு எத்தனை பெட்டிகள் அமைக்கவேண்டும் என்றும், X ,y அச்சுகளின் அளவுகள் அதன் இடஅமைவுகளையும்  நீளஅகல அளவு அப்பெட்டிகளின் அளவையும் தீர்மாணிக்கின்றன அவைகளை நாம்விரும்பியவாறு அமைத்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கினால் படம்-74-3-ல் உள்ளவாறு அமையும்

படம்-74-3

பிறகு மேலே கட்டளை பட்டையிலுள்ளoptionsஎன்ற  உரைபெட்டி வரைவதற்கான கருவியை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குவதன் வாயிலாக அல்லது விசைப்பலகையின் செயலி விசைகளில் உள்ள F2  என்ற செயலி விசையை அழுத்துவதன்மூலம் இந்த பெட்டிகளில் உரைபெட்டியை உருவாகுமாறுசெய்து அந்நிலைப்பெட்டிகளின் பெயர்களை தட்டச்சு செய்துகொள்க   பின்னர் நாம் தட்டச்சு செய்த உரையின் அளவிற்கேற்ப பெட்டியின் அளவை சரிசெய்துகொள்க அல்லது பெட்டியின் அளவிற்கேற்ப சுட்டியின் துனையுடன் அவ்வுரையை சரிசெய்து கொண்டு இவ்வெழுத்துகளுக்கான சரியான வண்ணத்தையும் சரிசெய்து அமைத்து கொள்க இந்த உரைபெட்டிக்கு பதிலாக இயக்கநேரஉரைச்சட்டங்கள்(dynamic text frames) (படம்-74-4)தானாகவே வரியானதுமடங்கி அமைதல் ,சுற்றெல்லை, பின்புலவண்ணம் ஆகியவற்றை கொண்டு உரையை தட்டச்சு செய்து அமைத்துகொள்வதற்காக பயன்படுத்தி கொள்க.

 படம்-74-4

பின்  மேலே கருவிபட்டையிலுள்ள இணைப்பான்கள்(connectors)என்ற கருவியை கொண்டு இந்த பெட்டிகளை இணைத்து ஒருமுழுமையான நிறுவனகட்டமைப்பின் படத்தினை(படம்-74-5) அமைத்துகொள்க

 படம்-74-5

தொடர்நிலைவரைபடம்வரைதல்(Drawing a flow diagram)

இந்த தொடர்நிலைவரைபடம் வரைவதற்காக மேலே  முக்கிய கருவிபட்டையிலுள்ள இதற்கான flowchart என்ற உருவகருவியை தெரிவசெய்து  சொடுக்கியவுடன்  இந்த பணிக்காக மட்டுமென தனியான கருவிபட்டை யொன்று திரையில் தோன்றிவிடும்  பின் இதிலுள்ள தேவையான குறியீடுள்ள கருவிகளை தெரிவுசெய்து சொடுக்கி ஒரு நிறுவனகட்டமைப்பின் படம் வரைவதை போன்றே  இதனை நம்மால் சுலபமாக  வரைந்து கொள்ளமுடியும்

 படம்-74-6

 பின் மாறுதல் செய்யவிரும்பும் குறிப்பிட்ட பெட்டியில் இடம்சுட்டியை வைத்துகொண்டு மேலே கட்டளைபட்டையிலுள்ள  modify=>alignment=> centered=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக சரிசெய்து அமைத்து கொள்க

அதன்பின் அவைகளில் உரை ,அவைகளுக்கான  வண்ணம் ஆகியவற்றை உள்ளீடு செய்து கொள்க அவ்வாறே இணைப்பான்களுக்கு கூட உரை ,அவைகளுக்கான  வண்ணம் ஆகியவற்றை உள்ளீடு செய்து கொள்ளமுடியும்

இந்த தொடர்நிலைவரைபடத்தில் பெட்டிகளை இணைப்பதற்காக இணைப்பு புள்ளி(Glue points) மற்றும் இணைப்பான்கள் (connectors) ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளமுடியும்

இதில்  இணைப்பான்கள்(connectors)என்பது  கோடு அல்லது அம்புக்குறி கொண்டு இருபெட்டிகளை இணைப்பதாகும்   கருவிபட்டையிலுள்ள இதற்கான உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் connectors என்ற கருவிபட்டை திரையில் தோன்றிடும் அதிலுள்ள தேவையான உருவகருவியை தெரிவுசெய்து சொடுக்கி இருபெட்டிகளுக்கிடையே தேவையான இணைப்புகளை உருவாக்கிகொள்க

அவ்வாறே இணைப்பு புள்ளி(Glue points)க்கான உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன்  இணைப்பு புள்ளி (Glue points)என்ற கருவிபட்டை திரையில் தோன்றிடும் அதிலுள்ள தேவையான உருவகருவியை  தெரிவுசெய்து சொடுக்கி இருபெட்டிகளுக்கிடையே தேவையான  இணைப்புகளை உருவாக்கிகொள்க தேவையெனில் மேலே கட்டளை பட்டையிலுள்ள  Edit => Glue Points=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக அவ்விணைப்பை  சரிசெய்து அமைத்து கொள்க

இணைப்பான்களில்(connectors) எழுத்துகளை உள்ளீடுசெய்வதற்காக அவ்விணைப்பான்களை  இடம்சுட்டியால் தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக உடன் அவ்விணைப்பானிற்குள் இடம்சுட்டி சென்றுபிரதிபலிக்கும் அதனுடன் கூடவே உரைவடிவமைப்பு கருவிபட்டையானது(text formatting tool bar)  திரையில் பிரதிபலிக்கும்

தேவையான உரையை உள்ளீடுசெய்துபின் அவ்வுரையை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக  அல்லது இணைப்பானை தெரிவுசெய்து சொடுக்கியபின் மேலே கட்டளைபட்டையிலுள்ள Format => Text=>என்றவாறுகட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Text என்ற உரையாடல் பெட்டியொன்று(படம்-74-7) திரையில் தோன்றிடும்

 படம்-74-7

அதில் உரையை தேவையானவாறு மாறுதல்  செய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

இந்த இணைப்புக்கோடானது வளைவாகவோ அல்லது சாய்வாகவோ இருந்தால்  அதற்குள் உரையை எவ்வாறு மிகச்சரியாக அமரச்செய்வது என இப்போது காண்போம்

 படம்-74-8

இதற்காக முதலில் மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools => Customize=>என்றவாறுகட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Customize என்ற உரையாடல் பெட்டியொன்று(படம்-74-8) திரையில் தோன்றிடும் அதன் Tool bar என்ற தாவியின் திரையில்   Tool bar என்பதற்கருகில் இருக்கும்  கீழிறங்கு பட்டியில் இருந்து Drawing என்பதை தெரிவுசெய்துகொண்டு Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும்   Add commands என்ற (படம்-74-8)உரையாடல் பெட்டியின் இடதுபுற பட்டியலிலிருந்து  Format  என்பதையும் பின்னர் வலதுபுற பட்டியலில் Font work என்பதையும் தெரிவுசெய்து கொண்டு   Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக   அதன்பின்னர்closeஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக

இந்தCustomize என்ற உரையாடல் பெட்டியில்  Toolbar உள்ளடக்கத்தின் கீழ் உள்ள பட்டியலிலிருந்து Fontwork என்ற உருவபொத்தானை பிடித்து இழுத்துசென்று தேவையான இடத்தில் விட்டிடுக அதன்பின் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பிறகு  இணைப்பானில் உள்ளீடுசெய்த உரையை தெரிவுசெய்துகொண்டுFontwork என்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்  Font work என்ற (படம்-74-9)உரையாடல் பெட்டியிலுள்ள  Rotateஎன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இணைப்பு கோட்டின் சாய்விற்கு ஏற்ப எழுத்துகளை சுழற்றி சரிசெய்து அமைத்து கொள்க

 படம்-74-9

ட்விட்டரை பயனுள்ளதாக பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள்

நாம் விரும்பியவாறு பின்புல படங்களையும் இதனுடைய முழுஅளவான 160 எழுத்துகளையும் பயன்படுத்தி கொள்க

TwitPic ,Qwitter, ManageflitterSocialOomph, Twitter GraderTwitter Fan Wiki Apps என்பன போன்ற ட்விட்டரில் செயல்படக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட மற்ற நிறுவனங்களின் நேரடி  கருவிகளை பயன்படுத்தி கொள்க

ட்விட்டரின் தேடுபொறிகருவியை நாம் விரும்பியதை தேடிபெறுவதற்கு முழுமையாக பயன்படுத்தி கொள்க

எப்போதும் ஆயிரகணக்கானவர்களை பின்தொடரவேண்டாம் Retweetபோன்று  முக்கியமான நிகழ்வுகளில் கலந்துகொள்ளுதல் போன்றவைகளில் மட்டும் பின்தொடருதல் செய்க

கணினி போன்ற தகவலுக்காக # hastags போன்ற சிறப்பு குறியீடுகள்அல்லது சொற்களை சேர்த்து மற்றவர்கள் ஈடுபாட்டுடன் கலந்துகொள்ளுமாறும் கவரக்கூடிய  வகையிலும் எந்தவொரு ட்விட்டரின் செய்தியையும் உருவாக்கிடுக

@reply, Direct Message (DM), Follower, Hashtag, Retweet (RT), Trending TopicsTweet. என்பன போன்ற ட்விட்டருக்கேயுரிய லிங்கோ மற்றும் தொடர்களை அவ்வப்போது நம்முடைய ட்விட்டரின் செய்தியில் பயன்படுத்தி கொள்க

பின்வரும் @GuyKawasaki @Scobleizer ,@jeffbullas,@briansolis,@tonyrobbins ,@kevinrose  ,@timoreilly , @donttrythis , @zappos ,@brainpicker தலைமை ட்விட்டர் மற்றும் சமூகவலைபின்னல் ஆனது ஒரு சிறந்த ட்விட்டரின் செய்தியை எவ்வாறு உருவாக்கி வழங்குவது என நமக்கு வழிகாட்டியாக விளங்குகின்றன  அவைகளை பின்பற்றிடுக

ட்விட்டரில் உள்ள Lists என்ற கருவி நம்மை பின்தொடர்பவர்கள் யார்யார் என வகைவாரியாக பட்டியலிட்டு அறிந்து கொள்ள உதவுகின்றது அதனை அவ்வப்போது பயன்படுத்தி அறிந்து கொள்க

Apple iPhones, Blackberry phones, Android phones, Windows phone 7 phonesபோன்ற செல்லிடத்து பேசி ஸ்மார்ட் போன்களில் ட்விட்டரை பயன்படுத்தி கொள்க

தவறுதலாக திரைமுழுவதமாக இருக்கும் திரைக்காட்சியை எவ்வாறு பழையநிலைக்கு மாற்றியமைப்பது

கணினியில் ஏதேனுமொரு பயன்பாட்டினை உபயோகபடுத்தி நம்முடைய பணியை தீவிரமாக செய்துவரும்பேது  சிலநேரங்களில் தவறுதலாக ஏதேனுமொரு பொத்தானை அழுத்திவிடுவதால் நாம் பயன்படுத்திவரும் பயன்பாடானது திரைமுழுவதும் மறைத்துகொள்ளுமாறு மிகபெரிய அளவாக மாறிவிடும் உடன் பழைய நிலைக்கு இத்திரையினுடைய முழுஅளவுகாட்சியை எவ்வாறு மாற்றியமைப்பது என தெரியாமல் திக்குமுக்காடி தவித்திடுவோம் இதிலிருந்து எவ்வாறு மீள்வது என இப்போது தெரிந்து கொள்வோம் முதலில்Start=> Control Panel=> Appearance and Personalization=> Display=>என்றவாறு கட்டளைகளையும் பொத்தானையும் அழுத்தி படத்திலுள்ளவாறு Display என்ற திரையை தோன்றசெய்க

அதில்Smaller 100%(default) என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்துகொண்டுapply என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் திரைக்காட்சியானது வழக்கமான நிலைக்கு சென்று அமைந்துவிடும்

மாற்றுவழியாக அதே  Display என்ற திரையின் இடதுபுறமுள்ள  Set Custom Text Size (DPI) என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்கியபின்  தோன்றிடும் customs DPI settings என்ற சிறு உரையாடல் பெட்டியின் Scale to this percentage of normal size என்பதில் உள்ள கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில் தேவையான அளவை தெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

மூன்றாவது வழியாக Start=> Control Panel=>Ease of Access=>Ease of Access Center=>  என்றவாறு கட்டளைகளையும் பொத்தானையும் அழுத்தி படத்திலுள்ளவாறு Ease of Access Center என்ற திரையை தோன்றசெய்க

 

அதில்start Magnifier என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் Magnifier என்ற சிறுஉரையாடல் பெட்டியில் options  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Magnifier  options  என்ற உரையாடல் பெட்டியின் கீழ்புறம் உள்ளControl whether Magnifier starts when I log on என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் விரியும் திரையில் Make things on the screen larger என்பதன் கீழுள்ளTurn on Magnifier என்ற தேர்வுசெய் பெட்டி தெரிவுசெய்யபட்டிருந்தால் அதனை நீக்கம் செய்துவிட்டு Apply மற்றும்ok ஆகிய பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்கியபின் கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்து மறுதொடக்கம் செய்திடுக.

 

பரிந்துரைக்கபடும் மின்னஞ்சலில் கோடில்லாமல் செய்வதெவ்வாறு

நமக்கு கிடைக்கப்பெற்ற மின்னஞ்சல் செய்தியை மற்றவர்களுக்கு  பரிந்தரைத்து அனுப்பிடும்போது (forward) அதன் இடதுபுறம் நீலவண்ண நெடுக்கைகோடு ஒன்று உருவாகிவிடும் அதனால் பெறுபவர்களுக்கு எரிச்சலை தருகின்றஇதனை எவ்வாறு தவிர்ப்பது  என்பதே நம்முன் உள்ள மிகப்பெரிய கேள்விக்குறியாகும் ஆயினும் இதற்காக புதிய பயன்பாடு எதுவும் தேவையில்லை பின்வரும் இரு வழிகளில் இதனை  எளிதாக தவிர்க்கலாம்

3,1. எம்எஸ் அவுட்லுக் பயன்படுத்துபவர்களுக்கு

எம்எஸ் அவுட்லுக்கில் அவ்வாறான forward மின்னஞ்சலை திறந்து கொள்க பின்னர் அம்மின்னஞ்சலுடைய உள்ளடக்க செய்தியை மட்டும் தெரிவுசெய்து Ctrl+C என்றவாறு விசைகளை அழுத்தி நகலெடுத்துகொள்க

பின்னர் புதிய காலியான மின்னஞ்சலை திறந்துகொண்டுஅதில் ஏற்கனவே நகலெடுத்த உள்ளடக்கசெய்தியை Ctrl+V என்றவாறு விசைகளை அழுத்தி ஒட்டிகொண்டு  தேவையற்ற கோடுகள், உருவங்களை நீக்கம் செய்தபின் வழக்கமாக மின்னஞ்சலை அனுப்புவதை போன்று அதன் இடதுபுறம் நீலவண்ண கோடு இல்லாமல் இந்த செய்தியை மற்றவர்களுக்கு அனுப்பி (forward) வைத்திடுக

3,2விண்டோலிவ்மெயில் பயன்படுத்துபவர்களுக்கு

முதலில் நமக்கு கிடைத்து மற்றவர்களுக்கு அனுப்பிவைத்திட விரும்பும் மின்னஞ்சலை திறந்து அதில் forward என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி Send E-mail என்ற மின்னஞ்சல் பதிப்புத் திரையை தோன்றசெய்திடுக  பின்னர் அதன் இடதுபுறமுள்ள நீக்கம் செய்யவிரும்பும் நீலவண்ண நெடுக்கைகோட்டின்மீது இடம்சுட்டியை வைத்து கொண்டு மேலே கட்டளைபட்டையிலுள்ள Message என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி Message என்ற பட்டியை தோன்றசெய்க  அதில் Clearformatting என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்  மின்னஞ்சலில் இருந்த நீலவண்ண நெடுக்கைகோடு அறவே நீக்கபட்டுவிடும்

அதன்பின் உள்ளடக்க செய்தியை மட்டும் தெரிவுசெய்து  C trl+C என்றவாறு விசைகளை அழுத்தி நகலெடுத்துகொள்க பின்னர் இந்த காலியான மின்னஞ்சலில் நகலெடுத்த உள்ளடக்கசெய்தியை Ctrl+V என்றவாறு விசைகளை அழுத்தி ஒட்டிகொண்டுவழக்கமாக மின்னஞ்சலை அனுப்புவதை போன்று Send  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி அதன் இடதுபுறம் நீலவண்ண கோடு இல்லாமல் இந்த செய்தியை மற்றவர்களுக்கு அனுப்பி (forward) வைத்திடுக

பழைய மடிக்கணினியினுடைய வன்தட்டு இயக்ககத்தை (hard drive) நம்முடைய தனியாள் கணினியின் வன்தட்டு இயக்ககமாக (hard drive)பயன்படுத்தி கொள்ளமுடியும்

ஒரு பழைய மடிக்கணினியினுடைய வன்தட்டு இயக்ககத்தை (hard drive) நம்முடைய தனியாள் கணினியின் வன்தட்டு இயக்ககமாக (hard drive)பயன்படுத்தி கொள்ளமுடியும் ஏனெனில் இவை இரண்டிலும் இணைப்பு வாயில்கள், மின்விநியோக இணைப்பு ,இயக்க வகையான IDE அல்லது SATA ஆகியவை ஒரேமாதிரியாகத்தான் உள்ளன

ஆனால் இந்த பழைய மடிக்கணினியினுடைய வன்தட்டு இயக்ககத்தை (hard drive) நம்முடைய தனியாள் கணினியின் வன்தட்டு இயக்ககமாக (hard drive) பயன்படுத்துவதற்காக கணினிக்குள் வைத்து பொருத்தும் போது  குறைந்த விலையே யுள்ள Rosewill RCW-616 Laptop 2.5″ to Desktop 3.5″ IDE Hard Drive Adapter Converter  என்றவகை  ஏற்பானை (adopter) மட்டும் கூடுதலாக வாங்கி பொருத்தவேண்டும்

அதைவிட அதே பழைய மடிக்கணினியினுடைய வன்தட்டு இயக்ககத்தை (hard drive) கணினியில் வெளிப்புறத்திலிருந்து பயன்படுத்திகொள்ளும் யூஎஸ்பி ட்ரைவாக பயன்படுத்தி கொள்வது சாளச்சிறந்தது என்றும் ,எந்தவித சிரமமும் ,செலவும் இல்லாத செயலாகும்  என பரிந்துரைக்கபடுகின்றது

Previous Older Entries