Rustdeskஎனும் தொலைநிலைகட்டுப்பாட்டு பயன்பாடு

Rustdesk என்பது கட்டணமற்ற கட்டற்ற கையடக்க , தொலைநிலை மேசைக்கணினி பயன்பாடாகும், இது Mac , Windows, Linux ,Android ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது
Team Viewer , AnyDesk போன்ற தொலைநிலை மேசைக்கணினி பயன்பாடு போன்று செயல்படும் திறனுடன் அவைகளுக்கு மாற்றான திறமூல பயன்பாடாக திகழ்கின்றது , சேவையகம் இல்லாவிட்டாலும் வாடிக்கையாளர்கள் திறமூலமாக உள்ளனர். . கணினி எனும் பெட்டிக்கு வெளியே இருந்து செயல்படுத்த கூடியது அதாவது இது செயல்படுவதற்காகவென தனியாக கட்டமைப்பு எதுவும் தேவை யில்லை மேலும் பாதுகாப்பைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல்நாம் செயல்படமுடியும், தரவின் முழுக் கட்டுப்பாடும் நம்மிடம் உள்ளது. நாம் public rendezvous/relay server, அல்லது சுய-புரவலர் அல்லது சொந்த சேவையாளரை கூட உருவாக்கிடலாம்.
முக்கிய வசதி வாய்ப்புகள்
பாதுகாப்பு: முடிவுகளுக்குஇடையே(end-to-end)மறையாக்கம் role அடிப்படையிலான அணுகல் கட்டுப்பாடு.
தனியுரிமை: தரவைச் சொந்தமாக்கிகொள்க. உள்கட்டமைப்பில் RustDeskself-hostedsolution ஐ எளிதாக அமைத்திடுக.
பணியகம்: அணுகல் பதிவைக் கண்காணித்திடுக, நவீன பயனாளர் இடைமுகப்பு(UI) இலிருந்து அனுமதிகளை நிர்வகித்திடுக.
இலகுரகமானது: விண்டோவிற்கு நிர்வாக உரிமைகள் அல்லது நிறுவுகைசெய்திட தேவையில்லை.
எளிமையானது: செயல்களை எளிமையாக வைத்திருக்கின்றது முடிந்தால் எளிதாக்க முயற்சிக்கின்றது.
மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் http://rustdesk.com/எனும் இணையதள முகவரிக்கு செல்க.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.