நமக்கு பொருத்தமான நம்பகமான அருகலை(WIFI) எதுவென ஆய்வுசெய்திடும் கருவிகள்.

நம்முடைய வீடு ,அலுவலகம், பொதுமக்கள் பயன்படுத்திடும் இடங்கள் ஆகியவற்றில் கிடைத்திடும் அருகலைகளில் நமக்கு பயன்படுகின்ற அதேசமயத்தில் மிகவேகமாக நம்பகமாக செயல்படும் அருகலை எதுவென தெரிவுசெய்வதற்கு பின்வரும் கருவிகள் நமக்காக உதவகாத்திக்கின்றன
1.WiFi Analyzerஎனும் அருகலை(WIFI) ஆய்வுகருவியானது heat maps என்பதை பயன்படுத்தி நம்முடைய வீடுகளில் அல்லது அலுவலகங்களில் மிகச்சரியான இடத்தில் வழிசெலுத்தியை அமைத்து மிகப்பொருத்தமான வலைபின்னல் இணைப்பு அலைவரிசையை அமைப்பதற்கு உதவுகின்றது இந்த கருவயின்மூலம்அருகலைசை கை யின் அளவு இணைப்பின் வேகம் ஆகியவற்றைஅறிந்து கொள்ளமுடியும் சரியற்ற அல்லது மோசமான வலைபின்னல் இடைமுகம் செய்வதையும் அறிந்து அதனை மேம்படுத்தி கொள்ளஇதுஉதவுகின்றது இது கட்டணமற்றது ஏராளமான வசதிவாய்ப்புகளை கொண்டது மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்வதற்கும் https://www.microsoft.com/en-us/p/wifi-analyzer/ எனும் இணைய முகவரிக்கு செல்க
2.NetSpot பொதுவாக அருகலை ஆய்வுகருவிகள் பயனாளரின் இடைமுகத்தினை கண்டுகொள்வதே இல்லை ஆனால் இது Discover ,Survey.ஆகிய இரு நிலைகளில் அவ்வாறான பயனாளர்களின் இடைமுகப்பை நமக்கு தெரிவிக்கின்றது Discover எனும்நிலையானது பயனாளருக்கும் வலைபின்னல் இணைப்பிற்குமிடையேயான தரவுகளின் பரிமாற்ற வேகத்தினை அறிந்துகொள்ளஉதவுகின்றது Surveyஎனும்நிலையானது heat maps என்பதை உருவாக்கி அருகிலுள்ள அருகலை வலைபின்னல் அதன் இடஅமைவு போன்ற விவரங்களை அறிந்து கொள்ள உதவுகின்றதுஇது இவ்விரண்டையும்இணைத்து நமக்கான மிகச்சிறந்த அருகலை வலைபின்னலின் அமைவிடம் அதனை மேம்படுத்திடுவதற்கான வழிஆகியவற்றை கண்டுபிடித்து மிகச்சரியாகபயன்படுத்தி கொள்ள உதவுகின்றது இது கட்டணமில்லாமலும் கட்டணத்துடனும் ஏராளமான வசதிவாய்ப்புகளை கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்வதற்கும் https://www.netspotapp.com/ எனும் இணைய முகவரிக்கு செல்க
3.Wifi Analyzer Tool சொந்த தனிப்பட்ட பயன்பாட்டிற்கு இது சிறந்த கருவியாக விளங்குகின்றது இது 2.4 GHz ,5 GHz ஆகியஇரு அலைவரிசைகளை ஆய்வுசெய்வதில் மிகச்சிறந்ததாக திகழ்கின்றது இது அருகலை சைகையின் வலு, IP தகவல், வலைபின்னலின் பாதுகாப்பு ஆகிய விவரங்களை வழங்குகின்றது dark or light theme, a beep toneபோன்ற சைகைகளின் வலுவானது வலைபின்னலின் இணைப்பு வேகம் மெதுவாக இருந்தாலும் விரைவாக இருந்தாலும் ஒரு time chart ஐ அனுக முடியும் இது கட்டணமில்லாமலும் கட்டணத்துடனும் ஏராளமான வசதிவாய்ப்புகளுடன் கிடைக்கின்றதுமேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்வதற்கும் https://www.microsoft.com/en-us/p/wifi-analyzer-tool/ எனும் இணைய முகவரிக்கு செல்க
4.inSSIDerமிகமேம்பட்ட வசதி வாய்ப்புகளை விரும்பும் மிகப்பெரியஅளவு வலைபின்னலுடன் கூடிய வியாபார நிறுவனங்களுக்கு இது பொருத்தமானதாகும் channel saturation ஐ கட்டுபடுத்திடும் திறனையும் இடைமுக வளங்களை அறிந்து கொள்ளவும்இது உதவுகின்றது நம்முடைய கணினிக்கு மிகச்சிறந்த அருகலைவலைபின்னல் இணைப்பு எது, எந்தஇடஅமைவுபொருத்தமாக இருக்கும் என அறிந்து கொள்ள உதவுகின்றது இது வீடுகளில் பயன்படுத்தி கொள்ள பொருத்தமற்றது இது கட்டணத்துடன் சிறந்த வசதிவாய்ப்புகளைவழங்குகின்றது மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்வதற்கும் https://www.metageek.com/products/inssider/ எனும் இணைய முகவரிக்கு செல்க
5.Wifi Commander முப்பரிமான வரைகலை அறிக்கையை இது வழங்குவதால் ஒன்றிற்குமேற்பட்ட அருகலை இணைப்புகளை வடிகட்டி நாம் விரும்பும் வகையில் வலைபின்னலை அமைத்து கொள்ள உதவுகின்றது அருகலை பயன்படுத்தி கொண்டிருக்கும்நிலையில் நேரடியாக ஆய்வுசெய்து அருகலை சைகைகளின் அளவை மேம்படுத்தி கொள்ளவும் குறைந்த பயன்பாட்டு அலைவரிசை எதுவென காணவும் உதவுகின்றது இது கட்டனத்துடன் பயன்படுத்த கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்வதற்கும் http://wificommander.com/ எனும் இணைய முகவரிக்கு செல்க

R எனும் கணினிமொழியின் செயலியை பைத்தானில் எவ்வாறு கொண்டுவருவது

தற்போதைய நவீனஉலகின் தரவுஅறிவியல், இயந்திரகற்றல் ஆகியவற்றில் பைத்தான் எனும் கணினிமொழி சிறந்ததா Rஎனும் கணினிமொழி சிறந்ததா எனும் போட்டிக்கான குத்துசண்டை மிகப்பிரபலமானதாகும் முன்னறிவிப்பு பகுப்பாய்வு ,இயந்தரகற்றல், தரவுஅறிவியல் ஆகிய செயல்களுக்கு இவ்விரண்டுமே ஏறத்தாழ பொருத்தமானவை-கள்தான் ஆயினும் அடிப்படையில் இவ்விரண்டும் குறிப்பிட்ட வகைகளில் வித்தியாச-மானவைகளாகும் அதாவது R எனும் கணினிமொழியானது விரைவான முன்மாதிரி தரவு பகுப்பாய்விற்கும் புள்ளியியல் பகுப்பாய்விற்கும் ஒரு சிறந்த கருவியாக விளங்குமாறு வடிவமைக்கப்பட்டதாகும் .அதற்குபதிலாக பைத்தான் எனும் கணினிமொழியானது சி++ அல்லது ஜாவா போன்ற விரைவான கற்றலிற்காவும் நெகிழ்வுதன்மையுடனான பொது-பயன்பாட்டிற்காகவும் நவீனகால பொருள்நோக்கு மொழியாகவும் பயன்படுமாறு உருவாக்கப் பட்டதாகும் மிகமுக்கியமாக புள்ளியியல் ,கணக்கீட்டுஉயிரியல், இயற்பியல் ,பொருளாதாரவியல் போன்ற துறைகளின் கணக்கீடுகளுக்கு Rஎனும் கணினிமொழி-யானது மிகச்சிறப்பாகபயன்படுகின்றது அதற்குபதிலாக இணைய மேம்படுத்துதலின் பின்புலமானதாகவும் ,அன்றாட பயன்பாட்டிற்கும், தானியங்கிதுறைக்கும் பகுப்பாய்விற்கும் பொது இயந்திரகற்றலின் வரைச்சட்டத்திற்கும் மிகமுக்கியமாக திறமூலகுழுவால் ஆதரிக்கபடுமாறும் பைத்தான் எனும் கணினிமொழியின் பயன்கள் நாளொரு வண்ணமும் பொழுதொருமேனியாகவும் நன்குவளர்ந்து வருகின்றது
அவ்வாறே mean/median/mode, normal distribution , Poisson distribution போன்ற அனைத்து புள்ளியியல் கணக்கீடுகளையும் எளிதாக கணக்கிட Rஎனும் கணினிமொழியானது மிகச்சிறந்த நன்பனாக விளங்குகின்றது
பைத்தான் எனும் கணினிமொழியானது தன்னுடைய குறிமுறைவரிகளின் திறனை கொண்டுஆய்வாளர்கள் பல்வேறு புள்ளியியல், நுண்ணறிவு, ஆக்கத்திறன் ஆகியவைகளை கொண்ட பகுப்பாய்வு வழிகளில் அந்த புள்ளிவிவரங்களைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. இவ்வாறான விவரங்களையும் விவாதங்களையும் தொடர்ந்து இவையிரண்டுமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மிகச்சிறப்பாக விளங்குவதால் இவ்விரண்டையும் ஒன்றிணைத்தால் மிகச்சிறந்த இயந்திரகற்றல் திறனை நாம் பெறமுடியுமல்லவா? அதற்கான மிக எளிய ஒன்றிரண்டு எடுத்துகாட்டுகள் பின்வருமாறு
எடுத்துகாட்டு.1
vectors in R.
from R_functions import *
lst=[20,12,16,32,27,65,44,45,22,18]

என்றாவாறான Rஎனும் கணினிமொழியின் புள்ளியில் கணக்கீட்டினை fivenum எனும் செயலிவாயிலாக அடையமுடியும் அதனையே பைத்தானின் NumPy array கணக்கீட்டை எளிதாக செயல்படுத்திடமுடியும்
lst=[20,12,16,32,27,65,44,45,22,18]
fivenum(lst)
> array([12. , 18.5, 24.5, 41. , 65. ])
எடுத்துகாட்டு.2
ஒரு இயந்திரமானது சராசரியாக ஒருமணிநேரத்தில் 10 பொருட்களை உற்பத்தி செய்கின்றது அதனுடைய திட்டவிலக்கம் 2 இந்த இயந்திரத்தின் உற்பத்தியானது normal distribution. என்றால் ஒருமணிநேரத்திற்கு குறைந்தபட்சம் 7 உம் அதிகபட்சம் 12 எண்ணிக்கைக்கு மேலும் இல்லாமல் இருப்பதற்காகன நிகழ்தகவு யாது? எனும் புள்ளியியல் கணக்கீட்டினை எளிதாக pnorm எனும் செயலியை பைத்தானில் பயன்படுத்தி ஒருசில நொடிகளில் விடையை கணக்கிடலாம்
pnorm(12,10,2)-pnorm(7,10,2)
> 0.7745375447996848
அவ்வாறே lm எனும் சிறிய ஒற்றை கட்டளை வரியின் வாயிலாக புள்ளியியலின் மிகச்சிக்கலான கணக்கீடுகளை எளிதாக செயல்படுத்திஒரு சாதாரண வர்க்கமூலங்களின் பொருத்தப்பட்ட மாதிரியை எண்ணியல் தரவுத்தளத்திற்கு தேவையான அனைத்து புள்ளிவிவரங்களுடனும் பெறலாம் மேலும் இதுபோன்ற ஒருவரியிலான செயலியை பைத்தானில் பயன்படுத்திடும் விவரங்களை அறிந்து கொள்ள https://github.com/tirthajyoti/StatsUsingPython எனும் இணைய முகவரிக்கு செல்க

தகவல்தொழில்நுட்பத்துறையில் சுதந்திரமாக பணிபுரிவதற்காக உதவிடும் இணையதளங்கள்

வரைகலை வடிவமைப்பாளர்கள், உருவப்பட வடிவமைப்பாளர்கள், லோகோ வடிவமைப்பாளர்கள், இணைய வடிவமைப்பாளர்கள், போன்ற திறமையுடைவர்கள் தகவல்தொடர்பு நிறுவனத்தில் நேரடியாக பணியில் சேர்ந்து தகவல்தொடர்புநிறுவனங்களின் அலுவலகத்திற்குள் ளேயே எட்டுமணிநேரம் அமர்ந்து பணிபுரிய வேண்டும் என்ற நிலை தற்போது மலையேறிவிட்டது அதற்கு பதிலாக இந்த திறமையுடைவர்கள் தாம் இருந்த இடத்திலிருந்த வாறே தாம் விரும்பிய நேரத்தில் பணிபுரிந்து போதுமான வருமானம் ஈட்டக்கூடிய நிலைக்கு தற்போது வளர்ந்துவிட்டோம் அதுமட்டுமல்லாது SEO சேவைகள் ,உள்ளடக்கங்களை உருவாக்கும் சேவைகள் மொழிமாற்றும் சேவைகள் ஆகியவற்றின் வாயிலாகவும் இருந்த இடத்திலிருந்த வாறே விரும்பிய நேரத்தில் பணிபுரிந்து போதுமான வருமானம் ஈட்டமுடியும் இதற்காக உதவ காத்திருப்பவைகள்தான் பின்வரும் சுதந்திர இணையதளங்கள்
1. Upwork என்பது சுதந்திரமாக பணிபுரிபவர்களுக்கு மிகச்சிறந்தஉதவியாளராக விளங்குகின்றது நாம் விரும்பிய வகையான பணியை இதில் தெரிவுசெய்து கொள்ளலாம் இதற்காக கட்டணம் எதுவும் செலுத்ததேவையில்லை அனுபவம் இல்லாத புதியவர்கள்கூட அதற்கேற்ற பணியினை அடையமுடியும் மிகமேம்பட்ட பாதுகாப்பினை இதனுடைய உறுப்பினர்களுக்கு வழங்குகின்றது புதியபுதிய பணிகள் தினமும் இதில் பட்டியலிடப்பட்டு கொண்டே உள்ளது அதில் நமக்கு பொருத்தமானதை நாம் தெரிவுசெய்து கொண்டு போதுமான வருமானம்ஈட்டமுடியும் இதற்கான இணையமுகவரிhttps://www.upwork.com/ ஆகும்
2. Freelancer என்பது உலகின்மிகப்பெரிய பணிவாய்ப்பகம் ஆகும் இதில் கட்டணத்துடன் அல்லது கட்டணமில்லாததுஆகிய இருவகைகளில் பயன்படுத்தி கொள்ளமுடியும் சுதந்திரமாக பணிபுரிபவர்களுக்கான மிகநம்பகமான புகழ்பெற்ற தளமாகும் அனுபவமிக்க-வர்களுக்கு மிகச்சிறந்த தளமாக விளங்குகின்றது மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் https://www.freelancer.com/எனும் இணைய முகவரிக்கு செல்க
3. Fiverr என்பது சிறிது வித்தியாசமான மிகப்பெரிய சுதந்திரமான வேலைவாய்ப்பு தளமாகும் கானொளி காட்சிகள் ,அசைவூட்டுபடங்கள், ஆவணங்கள் எழுதுதல் மொழிமாற்றம் செய்தல் வரைகலை வடிவமைப்பு செய்தல்என்பனபோன்றவை மட்டு-மல்லாமல் இணையசந்தை, நிரலாளர்கள், விளம்பரங்கள் ஆகிய ஏராளமான வகைகளில் இணையத்தின் வாயிலாக பணிபுரிய வாய்ப்பினை வழங்க காத்திருக்கின்றது மிகச்சிறிய-பணிமுதல் மிகப்பெரியபணிவரை நாம் விரும்பியவகைகளை தெரிவுசெய்து பொருள் ஈட்டிடலாம் இதற்கான இணையமுகவரிhttps://www.fiverr.com/ஆகும்
4. Guru என்பது நிறுவனங்களுடனான வலைபின்னல் இணைப்பின் வாயிலாக சுதந்திர பணிவழங்குவதில் மிகபெரிய தாக விளங்குகின்றது இதில் கட்டணத்துடன் அல்லது கட்டணமில்லாமல் பதிவுசெய்து கொள்ளலாம் இதில் பொறியியல் துறைமட்டுமல்லாது கணினிவிளையாட்டுகளை உருவாக்குதல் நிரல்தொடர்எழுதுதல் போன்ற பல்வேறு சிறப்புவகை பணிகளை பெற்று பொருளீட்டமுடியும் இதில் தினமும் பல்வேறு வகையான பணிகள் பட்டியலிடப்படுகின்றன அவைகளுள் நமக்கு பொருத்தமானதை தெரிவுசெய்து கொள்ளலாம் மணிகணக்கில் நாள்கணக்கில் பணிகணக்கில் பொருளீட்டமுடியும் மேலும் விவரங்களுக்கு https://www.guru.com/என்ற இணைய முகவரிக்கு செல்க
5. College Recruiter என்பது சமீபத்தில் கல்லூரியிலிருந்து வெளியில் வரும்புதியவர்கள் அனைவருக்கும் தொழில்பழகுநர் பணி அல்லது பகுதிநேர பணிபுரிய விரும்புவோர் ஆகியோர்களுக்கும் இதுஉதவுகின்றது புதியதொழிலை தெரிவுசெய்யவிரும்பும் புதியவர்களுக்கு மிகச்சிறந்த தளமாக விளங்குகின்றது இதற்கான இணையமுகவரி https://www.collegerecruiter.com/ ஆகும்
6. People Per Hour என்பது இணைய வடிவமைப்புபணிகளுக்கு மிகமுககிய தளமாக விளங்குகின்றது இணைய வடிவமைப்பு செய்திடும் நிறுவனங்கள் இந்த தளத்தின் வாயிலாகவே தங்களுக்க தேவையான வல்லுனர்களை தெரிவுசெய்து கொள்கின்றன இதில் நாம் எவ்வளவு நேரம் பணிபுரிகின்றோமோ அதற்கேற்ப பொருள்ஈட்டிடமுடியும் இதில் வடிவமைப்பாளர் ,மேம்படுத்துனர் ,SEO வல்லுனர் சமூகபல்லூடக தொழில்வல்லுனர் ,உள்ளடக்கஎழுத்தாளர் இணையவடிமைப்பாளர் என்பனபோன்ற பல்வேறு பணிகளுக்கு நல்வாய்ப்பாக அமைகின்றது இதனை பயன்படுத்தி கொள்வதற்காக https://www.peopleperhour.com/ எனும் இணையமுகவரிக்கு செல்க
இவைமட்டுமல்லாது https://www.ifreelance.com/ , https://99designs.com/ , https://www.techgyd.com/10-tips-become-successful-seller-craigslist/ , https://www.designcrowd.com/ என்பன போன்ற இணையதளங்கள் சுதந்திரமாக பணிசெய்திட உதவகாத்திருக்கின்றன இவைகளை நம்முடைய விருப்பத்திற்கேற்றவகையில் பயன்படுத்தி பயன்பெறுக என பரிந்துரைக்கப்படுகின்றது

வெளிப்புற வன்பொருட்களை USB வாயில்களில் இணைத்திடும்போது திரையில் காண்பிக்காதபோது அதனை எவ்வாறு கொண்டுவருவது?

பொதுவாக நம்முடைய கணினியில் USB இயக்ககங்களை அல்லது வெளிப்புற இயக்ககங்களை கணினியின் USB வாயில் வழியாக இணைத்தவுடன் அதனை திரையில் காண்பிக்கும் ஒரு சில நேரங்களில் விண்டோ இயக்கமுறைமை செயல்படும் கணினியில் அவ்வாறான இணைப்பினை காண்பிக்கவில்லையெனில் அதனை எவ்வாறு சரிசெய்வது என இப்போது காண்போம் USB வாயில் வழியாக எந்தவொன்றையும் நம்முடைய கணினியில் இணைத்திடும்போதும் அதற்கான மின்சாரமானது அதே USB வாயில் வழியாகவே வழங்கப்படும் எனும் அடிப்படையை தெரிந்து கொள்க அவ்வாறான இணைப்பு சாதனத்திற்கு மின்சாரம் வருகின்றதாவென முதலில் சரிபார்த்து கொள்க
படிமுறை.1: விசைப்பலகையில் Windows Key + Xஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன்விரியும் பட்டியில் Disk Management என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Start எனும் பொத்தானின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Power User எனும்பட்டியில் Disk Management என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குகஅல்லது விசைப்பலகையில் Windows Key + Rஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன்விரியும் பட்டியில் Disk Management .msgஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் திரையில் நம்முடைய கணினியின் வன்தட்டுகளின் பல்வேறு இயக்ககங்களின் பெயர் அதன் கொள்ளளவு ஆகிய விவரங்களுடன் வெளிப்புற இயக்ககங்களை This PCஅல்லது Removable.எனும் பகுதியில் காண்பிக்கும்
படிமுறை.2: அவ்வாறு படிமுறை 1 இல் காண்பிக்கவில்லையெனில் மற்றொரு USB வாயில் வழியாக வெளிப்புற சாதனங்களை செருகி இணைத்திட்டு படிமுறை1 இன் செயல்முறையை பின்பற்றி சரிபார்த்திடுக
படிமுறை.3: அவ்வாறு மற்றொரு USB வாயில் வழியாக பரிசோதித்தும் காண்பிக்கவில்லையெனில் விசைப்பலகையில் Windows Key + Xஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன்விரியும் பட்டியில் Device Manager என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது அல்லது விசைப்பலகையில் Windows Key + Rஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன்விரியும் பட்டியில் Disk devmgmt.msc என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் திரையில் Disk drives என்பதை விரிவாக்கம் செய்தபின்னர் ஏதேனும் சாதனங்களின் எழுத்துகளின்பின்புறம் மஞ்சள் வண்ண ஆச்சரிய குறி இருக்கின்றதா வென சரிபார்த்திடவும் ஆம்எனில் அதனை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியல் Properties எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Properties எனும்திரையில் என்ன பிழை என காண்பிக்கும் running System Restore எனும் செயலைமுயற்சிசெய்து சரிசெய்திடுக அல்லது updated driver என்பதை நிறுவுகைசெய்து இயக்ககத்தை நிகழ்நிலை படுத்தி சரிசெய்திடுக தொடர்ந்து Roll Back Driver எனும் பொத்தானை சொடுக்குதல்செய்து சரிசெய்திடுக இறுதியாக Uninstall எனும் பொத்தானை சொடுக்குதல் செய்து சாதனத்தை வெளியிலெடுத்து கணினியின் செயலைமறுதுவக்கம்செய்திடுக
படிமுறை.4: மேலே கூறிய படிமுறைகளில் நம்முடைய இயக்ககம் Unallocatedஎன்றவாறு காண்பித்தால் அதனை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியல் New Simple Volume, எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் வழிகாட்டிதிரையில் new partition என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து புதியதாக உருவாக்கிகொள்க இந்த வெளிப்புற இயக்ககத்தின் பகுதியை காண்பிக்கின்றது ஆனால் அதற்கான எழுத்தினை மட்டும் காண்பிக்கவில்லையெனில் அதனை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியல் Change Drive Letter and Paths.எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குகபின்னர் விரியும் வழிகாட்டிதிரையில் Add எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Change எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் E ,F, G என்றவாறு இயக்ககங்களுக்கு பெயரிட்டு கொள்க
படிமுறை.5: இவ்வாறான படிமுறைகளிலும் அனுகமுடியுவில்லையெனில் அந்த சாதனத்தில் ஏதேனும் கோப்புகள் இருந்தால் அதனை பி்ற்காப்பு செய்து கொண்டு அதனை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியல் Formatஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் NTFS அல்லது பழைய FAT32 ஆகிய நாம் விரும்பிய வடிவமைப்புகளில் வடிவமைப்பு செய்யப்பட்டு நாம் அனுகுவதற்குக தயாராகிவிடும்

பழைய MS-DOS பதிப்பானது தற்போது open-DOSஎனும் கட்டற்றபதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது

தற்போது MS-DOS 1.25 ,2.0 ஆகியவை GitHub இனை ஏற்றுகொண்டு GNU GPL. எனும் அனுமதியுடன் ஒத்தியங்குவதற்கேற்ப MIT/Expat எனும் அனுமதியின்அடிப்படையில் கட்டற்றதாக வெளியிட்டுள்ளனர் ஏற்கனவே FreeDOS என்பது MS-DOS என்பதில் செயல்படும் அனைத்து பயன்பாடுகள் வியாபார பயன்பாடுகள் விளையாட்டு பயன்பாடுகள் ஆகிய அனைத்தும் செயல்படும் வண்ணம் அனுமதிக்கப்பட்டது அதைவிட MS-DOS 1.1 , 2.0 ஆகியவை மார்ச்சு 25, 2014,இல் கட்டற்ற மென்பொருளாக வெளியிடப் பட்டதே என பொதுவாக நம்மில் ஒருசிலர் சந்தேகம் எழுப்புவார்கள் நிற்க அப்போது குறிமுறைவரிகளை கண்ணால் மட்டும் பார்த்து கொள்கஆனால் அதனைபயன்படுத்தாதே (look but do not touch) என்ற அனுமதியின்அடிப்படையில் கட்டற்றதாக வெளியிட்டிருந்தார்கள் அவ்வாறே FreeDOS என்பதும் குறிமுறைவரிகளில் திருத்தம் எதுவும் செய்திடாமல் கட்டணமில்லாமல் பயன்படுத்தி கொள்க என அனுமதித்திருந்தனர் ஆனால் தற்போதுதான் MS-DOS 1.25 , 2.0 ஆகிய பதிப்புகள் மற்ற கட்டற்றவை போன்று பயன்படுத்துதல், நகலெடுத்தல் திருத்தம்செய்தல், ஒன்றிணைத்தல், வெளியிடுதல் வழங்குதல் துனை அனுமதி விற்பணை செய்தல் ஆகியபல்வேறு செயல்களை வரையறைஎதுவுமில்லாமல் உரிமையுடன்( without limitation the rights to use, copy, modify, merge, publish, distribute, sublicense, and/or sell copies of the Software) நம்விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தி கொள்ள அனுமதித்துள்ளனர் என்பதுதான்முக்கிய செய்தியாகும்

இருந்தாலும் பரவாயில்லை தற்போது MS-DOS இனை கட்டற்ற மென்பொருளாக வெளியிட்டுள்ளது மிக்க மகிழ்ச்சியான செயல்தானே

நம்முடைய முகநூல் கணக்கினை அபகரிப்போர்களிடமிருந்து பாதுகாத்திடுக

தற்போது உலகம்முழுவதும் முகநூல்(face book) எனும் சமூகவலைதளமானது மிகவும் பிரபலமான வலைதளங்களில் ஒன்றாக விளங்குகின்றது. முகநூலை பயன்படுத்தி சமூக செயல்களில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் பெருக்கல் விகிதங்களில் அதிவேகமாக அதிகரித்து வருகிறன்து அதனை தொடர்ந்து ஒருசில நேரங்களில் பல இணைய ஆபத்துகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் நம்முடைய முகநூல் கணக்கை பாதுகாத்துகொள்வது மிகமுக்கியமானதாகும் . இவ்வாறான ஆபத்துகளை நாம் கவனிக்கத் தவறினால், அபகரிப்போர் யாராவதொருவர் நம்முடைய முகநூல் கணக்கினை அபகரிப்பு செய்வதற்கு இது எளிதான வழியாகும். எனவே, பயனுள்ள தந்திரங்களின் வாயிலாக தீங்கிழைக்கும் தாக்குதலிலிருந்து நம்முடைய முகநூல் கணக்கைப் பாதுகாக்க ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து , ஒரு சிறந்த செயலாக நிரூபிக்க முடியும்.எனினும், நம்முடைய முகநூல் கணக்கை முற்றிலும் பாதுகாக்கப்படுவதற்கு எப்போதும் கூடுதல் கவணத்தை கைகொள்ள வேண்டும். நிச்சயமாக, நம்முடைய முகநூல் கணக்கைப் பாதுகாப்பதற்காக பயன்பாட்டிற்குப் பிறகு கையொப்பமிடுதல் போன்றசில எளிய வழிகள்உள்ளன, அவை.
1. வலுவான கடவுச்சொற்கள் எட்டுஎழுத்துகளுக்குமேல் நீண்ட வலுவான கடவுச்சொற்களை கட்டமைத்து கொள்வது நல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை மாற்றி யமைத்து கொள்க அதற்காக settings => general=> password => generate a strong password =>என்றவாறு கட்டளைகளை செயல்படுத்தி அவ்வப்போது அல்லது குறிப்பிட்ட காலஇடைவெளியில்புதிய கடவுச்சொற்களை உருவாக்கி மாற்றியமைத்துகொள்க
2. கைபேசி எண்ணை சேர்த்தல் இதன்வாயிலாக நம்முடைய கணக்கின் பாதுகாப்புத்தண்மையை வலுபடுத்தி கொள்க எவ்வாறெனில் நம்முடைய கணக்கில் கடவுச்சொற்களை மாற்றியமைத்திடும்போது OTP எனும் ஒருமுறைமட்டுமான கடவுச்சொற்களை பெறுவதன் வாயிலாக வேறுயாரும் நம்முடைய முகநூல் கணக்கின் கடவுச்சொற்களை மாற்றியமைத்திடமுடியாதவாறு செய்திடலாம் இதற்காக Settings => mobile => add a phone number =>என்றவாறு கட்டளை செயல்படுத்தி கைபேசி எண்ணை சேர்த்திடுக
3. பாதுகாப்பாகஇணையஉலாவருதல் இந்த வாய்ப்பின் வாயிலாக நாம் உலாவரும்போது வெளிப்புற பயன்பாடுகள் நம்முடைய முகநூல் கணக்கில் இணை ந்து செயல்படும்போது கட்டுபடுத்தி பாதுகாக்கின்றது இதற்காகSettings => Security => Recognized devices => check all the devices => confirm your identity & remove not related activity => save=> என்றவாறு கட்டளைகளை செயல்படுத்தி கட்டமைத்து கொள்க
4. முகநூல்கணக்கின் உள்நுழைவு அனுமதியை மாற்றியமைத்தல் அனுமதியில்லாத சாதனங்களின் வாயிலாக நம்முடைய முகநூல் கணக்கில் ஒவ்வொருமுறை உள்நுழைவுசெய்திடும்போதும் பாதுகாப்பு குறியீடுகளை (pin) உள்ளீடு செய்திடுமாறு கோரும் இதன்வாயிலாக நம்முடைய முகநூல் கணக்கினை பாதுகாத்திடலாம் இதற்காக Settings => Security => login approval=> edit link => checkout box to activate login approval => save=> என்றவாறுகட்டளைகளை செயற்படுத்திடுக
5.முந்தைய பயன்படுத்திய தகவலை நீக்கம்செய்தல் ஏதேனும் ஒரு சாதனத்தின் வாயிலாக நம்முடைய முகநூல் கணக்கினை பயன்படுத்தி வெளியேறிபின்னர் வேறுநபர் இதன் வாயிலாக நம்முடைய முகநூல் கணக்கினை அபகரித்திட ஏதுவாகிவிடும் அதனால் நம்முடைய முகநூல் கணக்கினை பயன்படுத்தி வெளியேறிடும்போது உலாவந்த தகல்களை நீக்கம்செய்து பாதுகாத்திடுக இதற்காகAccount settings => security => look for “ active section” => edit => end activity=>என்றவாறு கட்டளைகளை செயல்படுத்தி நீக்கம் செய்திடுக
6. குப்பையான இணைப்புகளை தவிர்த்திடுக நம்முடைய முகநூல்கணக்கிற்கு வரும் குப்பையான இணைப்புகளை தொடர்ந்து சென்றால் தீங்கிழைக்கும் தாக்குதல் இணைப்பிற்கு நம்மை மடைமாற்றம் செய்து அழைத்து சென்றுவிடும் அதனால் எச்சரிக்கையாக அவ்வாறான இணைப்பினை அறவே தவிர்த்திடுக மேலும் நம்முடைய பயனாளர் பெயர் கடவுச்சொற்களை இவைகளை தொடரும்போது வழங்கிடவேண்டாம்
7. நம்முடைய தணிப்பட்ட அமைவை நிகழ்நிலைபடுத்திடுக சமீபத்திய பாதுகாப்பு ஏற்பாடுகளை கொண்டு அவ்வப்போது நம்முடைய முகநூல் கணக்கின் தனிப்பட்ட அமைவைமேம்படுத்தி கொள்க இதற்காக Settings => security => Login alerts => select the mode of notifications=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக

தொழிலாளர்கள் தங்களுடைய EPF தொகையை நேரடியாக இணையத்தின் வாயிலாக எளிதாக பெறமுடியும்

இதற்கு முன் தொழிலாளர்கள் தம்முடைய வருங்காலவைப்புநிதி(EPF) கணக்கில் உள்ள தொகையை நேரடியாக இணையத்தின் வாயிலாக பெறுவதற்கு குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் தொடர்ந்து தம்முடைய EPFகணக்கில் தொகை செலுத்தியிருக்கவேண்டும் என்பதை உறுதிசெய்து கொள்க அதற்குபதிலாக ஐந்தாண்டுகளுக்கு முன்பே தம்முடைய EPFகணக்கிலிருந்து தொகையை பெற்றால் வருமான வரி செலுத்தவேண்டி வரும் என்ற தகலை மனதில் கொண்டு தொடருக
தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதியில் தங்களுடைய கணக்கிலுள்ள தொகைகளை நேரடியாக இணையத்தின் வாயிலாக பெறுவதற்கான வசதிகளை உருவாக்கியுள்ளது இதற்குமுன் இவ்வாறு EPF தொகையை திரும்ப பெறுவது என்பது மிகசிரமமானதும் அதிக காலவிரையமானுதுமான செயலாக இருந்துவந்ததை மாற்றி தொழிலாளர்கள் எளிதாக விரைவாக தம்முடைய EPF கணக்கில் உள்ள தொகையைதிரும்பபெறுமாறு செய்யப்பட்டுள்ளது அதற்கான படிமுறை பின்வருமாறு
முதலில் http://www.epfindia.gov.in/site_en/Downloads.php?id=sm8_index#Claim%20Form// எனும் முகவரியுள்ள வருங்கால வைப்புநிதியின் இணையதளமுகப்பு பக்கத்திற்கு செல்க அதில்நமக்கான ஒருங்கிணைந்த எண் (UAN) கடவுச்சொற்கள் captcha எனும் உருவப்படத்தின் எழுத்துகள் ஆகியவற்றை மிகச்சரியாக உள்ளீடு செய்து கொண்டு உள்ளீட்டு விசையை அழுத்துக தொடர்ந்து விரியும் திரையில் Manage எனும் தாவிபொத்தானை சொடுக்குதல் செய்து Manage எனும் தாவியின் திரைக்கு செல்க அதில் KYC என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர் விரியும் KYC எனும் திரையில் நம்முடைய ஆதார்எண்(Aadhaar), வருமானவரிஎண் (PAN) ,வங்கி கணக்குஎண்விவரங்கள்(bank details) ஆகியவை மிகச்சரியாக உள்ளனவாவென ஒருமுறைசரிபார்த்து கொள்க சரியாக இருக்கின்றன எனில் Online Services எனும் தாவிபொத்தானை சொடுக்குதல் செய்து Online Services எனும் தாவியின் திரைக்கு செல்க அதிலுள்ள கீழிறங்கு பட்டியிலிருந்துt Claim என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Claimஎனும் திரையில் உறுப்பினரின் பெயர் விவரங்களையும் KYC விவரங்களையும் இதர சேவை விவரங்களையும் காண்பிக்கும் தொடர்ந்து ‘Proceed For Online Claim’என்பதை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்து I Want To Apply For என்பதன்கீழுள்ள Full EPF Settlement அல்லது EPF Part Withdrawal (loan/advance) அல்லது Pension Withdrawal ஆகிய வாய்ப்புகளில் தேவையான வாய்ப்பினை மட்டும் தெரிவுசெய்து கொண்டு அதனை தொடர்ந்து தொடர்புடைய படிவங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை சேர்த்து சமர்ப்ப்பித்தால் போதும்

Previous Older Entries