இணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்

இணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்

ஒருசில இணையபக்கங்களில் பார்வையாளர்கள் அதன் உள்பகுதியில் நுழையும் முன் தங்களை பற்றிய விவரங்களை உள்ளீடு செய்து கூடவே பயனாளரின் பெயர் கடவுச்சொற்களுடன் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தும் அவ்வாறு செய்தால் மட்டுமே அதன் உள்ளடங்கங்களை காண்பதற்கு அனுமதிக்கும்படி இவைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு நம்முடைய சொந்த தகவல்களை நம்முடைய விருப்பம் இல்லாமலேயே நம்மிடம் பெறப்பட்ட இந்த விவரங்களை தங்களின் தவறான நோக்கத்திற்காக ஒருசிலர் பயன்படுத்த ஏதுவாகின்றது.  இதனை தவிர்க்க இவ்வாறு பதிவு செய்யாமலும் கடவுச்சொற்கள் எதுவும் உள்ளீடு செய்யாமலும் இந்த இணையபக்கங்களை பார்வையிட முடியுமா எனில் ஆம்  பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினால் மட்டும் முடியும்  ஒருசில இணையதளம்ங்களை பார்வையிடுவதற்காக அதன் முகப்பு பக்கத்தை பிரதிபலிக்க செய்ய முயற்சி செய்யும் போது உடன் நம்முடைய தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்யும்படியும் கடவுச்சொற்கள் உள்ளீடுசெய்து உள்நுழைவு செய்யும்படியும் அறிவுறுத்தும். ஆனால் பெரும்பாலான இணையதளம்ங்கள் கட்டண மில்லாத இலவசமாக கணக்கிடக்கூடியதாகத்தான்  இருக்கின்றன.  இருந்தாலும் இது போன்ற விவரங்கள் கோரும் நிலையில் Bug me not என்ற இணையதளமானது கடவுச்சொற்கள் இல்லாமல் குறிப்பிட்ட இணையதளத்தை பார்வையிட உதவி செய்கின்றது.  இதனை WWW.bugmenot.com   என்ற வளைதளத்திலிருருந்து.  முகவரியை நம்முடைய இணையஉலாவியின்  முகவரி பட்டையில் தட்டச்சுசெய்து உள்ளீட்டு  விசையை அழுத்துக அல்லது மேலே உள்ள  இதற்கான பட்டையில் தட்டச்சு செய்து உள்ளீட்டு  விசையை அழுத்துக.

உடன்  Bug me not இணையதளம் திரையில் தோன்ற ஆரம்பிக்கும் இதில் மேல் பகுதியில் உள்ள சிறிய வெள்ளை நிற பெட்டியில் நாம் பார்வையிடப் போகும் இணையதளத்தின்  முகவரியை Cut  paste பயன்படுத்தி அல்லது தடச்சுசெய்து கொண்டு சிவப்பு நிற Get Login என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடனடியாக ஒருசில நொடிகளில் Bug menot ஆனது தற்காலிகமான user name, password களின் பட்டியலை திரையில் பிரதிபலிக்கும் இவைகுறிப்பிட்ட சதவீதத்தில் வரிசை படுத்தப்பட்டிருக்கம்.  அதிக சதவீதத்தில் உள்ள User Name, Pass Word ஐ பயன்படுத்தி விருப்பப்படும் இணையதளங்களை திறக்க  பயன்படுத்தி கொள்ளலாம். உடன் நாம் விரும்பும் இணையதளம் திரையில் பிரதிபலிக்கும் .  இவ்வாறு பதிவு செய்வதற்கான இணையதளங்களின் முகவரிகளை மட்டும் உள்ளீடு செய்து தேவையான தனிப்பட்ட தகவல் உள்ளீடு செய்யாமல் விருப்பப்படும் இணையதளத்தினை இதன்மூலம்  பா£¢வையிட முடியும்.

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003-தொடர்-பகுதி-20-புதியவர்கள்கூட அக்சஸில் குறுமங்களை(Macros) உருவாக்கலாம்

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003-தொடர்-பகுதி-20-புதியவர்கள்கூட அக்சஸில் குறுமங்களை(Macros) உருவாக்கலாம் 

அறிந்துகொள்வோம் அக்சஸ்-2003 என்ற கடந்த இருபது தொடர்களில் தரவுகளை கணினியின் நினைவகத்தில் தேக்கிவைக்கும் அட்டவணையை எவ்வாறு(படம்-1) உருவாக்குவது?

படம்-1

 அந்த தரவுகளை ஒரு அட்டவணையில் உள்ளீடு செய்ய பயன்படும் படிவங்களை எவ்வாறு(படம்-2) உருவாக்குவது?

படம்-2

 அவ்வாறு உருவாக்கப்பட்ட ஒருஅட்டவணையில் உள்ளிருத்திவைக்கபட்ட தரவுகளை நாம்விரும்பியவாறு காண்பதற்கு உதவிடும் ஒரு வினாவை எவ்வாறு(படம்-3) உருவாக்குவது?

படம்-3

  பின்னர் அவ்வாறு  ஒருஅட்டவணையில் உள்ளிருத்திவைக்கபட்ட தரவுகளை பருநிலையில் பார்வையிட்டு அச்சிடபயன்படும் ஒரு அறிக்கையை எவ்வாறு(படம்-4) உருவாக்குவது? என அறிந்துகொண்டோம்

படம்-4

 மேலும் பயிற்சியற்ற புதியவர்கள்கூட இதிலுள்ள வழிகாட்டியினுடைய உதவியுடன் இவைகளை எவ்வாறு உருவாக்குவது? என தெரிந்துகொண்டோம் இதனை தொடர்ந்து அக்சஸில் குறுமங்களை எவ்வாறு உருவாக்குவது? என இந்த தொடரில் அறிந்துகொள்வோம்

ஒருநிறுவனத்தில் பணிபுரியும் நூற்றுக்குமேற்பட்ட ஊழியர்களின் விவரங்களை அக்சஸினுடைய அட்டவணையொன்றில் உள்ளீடு செய்து கணினியின் நினைவ கத்தில் தேக்கிவைத்திருப்பதாக கொள்வோம் மூன்று மாதத்திற்கொருமுறை விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு பஞ்சபடி உயர்வை இவ்வூழியர்களுக்கு அளித்திடும்போது  ஒவ்வொருவருக்கும் இந்த பஞ்சபடிஉயர்வு சென்றடைய வேண்டும் என்பதற்காக ஆவணங்களிலுள்ள ஒவ்வொருவருடைய தரவுகளுக்கும் சென்று திருத்தம் செய்வதுஎன்பது செய்தசெயலையே திரும்பதிரும்ப  செய்யும் இயந்திரத்தனமான ஒரு சலிப்படையசெய்யும் செயலாகும்

அதற்குபதிலாக இதனை செயற்படுத்திடுவதற்காக ஒரு சிறிய நிரல்தொடரை எழுதி தேக்கி வைத்துகொண்டு தேவைப்படும்போது மட்டும் ஒருசில விசைகளை அழுத்துவதன்  மூலம் இவ்வூழியர்களின் அனைவருடைய பஞ்சபடிஉயர்வுக்கான தரவுகளை மட்டும் மாறுதல்செய்தால் மிகபயனுள்ளதாக இருக்குமல்லவா இதனால் மனிதஉழைப்பும் காலவிரையமும் தவிர்க்கபடுகின்றது

இதற்காக பயன்படுவதுதான் குறுமங்கள் எனஅழைக்கபடும் மேக்ரோக்கள் ஆகும் இது திரும்பதிரும்ப செய்யபடும் செயல்களை ஒருசிலவிசைகளை அழுத்துவதன் மூலம் செயற்படுத்திகொள்ள பயன்படுகின்றது

ஆரம்பநிலை அக்சஸின் பயனாளர்கள்கூட இந்த குறுமங்களை மிக எளிதாக பயன்படுத்தி தம்முடைய தேவையை நிறைவுசெய்து கொள்ளமுடியும் இது படிவங்கள் அறிக்கைகள்ஆகியவற்றின் உடனிணைந்த நிகழ்வுகளின் உதவியால் தரவுகளை அனுகிட பயன்படுகின்றது இந்த குறுமங்கள் மிகவலுவானதாக இருந்தாலும் ஒருசிலவரண்முறைகளுக்குமேல் இதனை பயன்படுத்தி செயல்படுத்த முடியாது

அக்சஸில் உள்ள மேக்ரோவின் வகைகள்

அக்சஸில் செயல்படுத்தபடும் மேக்ரோவை 1.தானியங்கி திறவு குறுமம் , 2.தானியங்கி இயக்க குறுமம் என இரண்டுவகையாக பிரிக்கலாம்

1.தானியங்கி திறவு குறுமம் இந்த வகையில் ஒரு விசைப்பலகையிலுள்ள குறிப்பிட்ட விசையை அழுத்துவதன் மூலம் அதனுடன் இணைந்துள்ள செயல்களை செய்துமுடிக்கமுடியும் படம்-6-ல் உள்ளவாறு குறுமத்திற்கு பெயரிட்டு அதை செயல்படுத்துவதால் ஏற்படும் இறுதிவிளைவு என்னவாக இருக்கும் என ஒவ்வொரு நெடுவரிசையிலும் உள்ளீடுசெய்து செயல்படுத்திகொள்க

2.தானியங்கி இயக்க குறுமம்இந்தவகையில் ஒரு தரவுதளத்தை திறந்தவுடன் குறிப்பிட்ட கோப்பினை திறத்தல்,கட்டளைசட்டத்திலுள்ள பட்டியலை திறத்தல் என்பன போன்ற செயல்களை செயற்படுத்த முடியும் இவ்வாறான தானியங்கி செயல்களை விபிஏசெயல்முறை குறிமுறைகளை எழுதுவதன் மூலமும் செயற்படுத்திட முடியும்

அனுபவம் பெற்றவர்கள் மட்டுமேஇந்த குறிமுறைகளை எழுதமுடியும் நம்மைபோன்ற அனுபவமற்ற புதியவர்களால் அவ்வாறு முடியாது என ஐயமும் பயமும் கொள்ளவேண்டாம்  நம்மைபோன்ற அனுபவமற்ற புதியவர்களால்கூட இந்த குறுமங்களை விபிஏவாக அக்சஸ்-2003-ல் உருமாற்றம் செய்யமுடியும் என்ற செய்தியை மனதில் இருத்தி அச்சத்தை தவிர்த்திடுக    

இந்நிலையில் அக்சஸில் எப்போது குறுமங்களை பயன்படுத்திகொள்வது எப்போது விபிஏவை பயன்படுத்துவது என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுவது இயல்பாகும்

படிவங்களை திறத்தல் ,மூடுதல்,கோப்பினை திறத்தல்,மூடுதல் என்பன போன்ற சிறுசிறு செயல்களுக்கு இந்த குறுமங்களை பயன்படுத்தலாம் இந்த செயல்கள் குறிப்பிட்ட வரண்முறைகளுக்கமேல் செல்லும்போது குறுமங்களை செயல்படுத்த முடியாது அந்நிலையில் விபிஏவை பயன்படுத்தலாம்

ஒரு கோப்பிலுள்ள ஆவணங்களை ஒவ்வொன்றாக மாறுதல் செய்வதற்கு குறுமங்களை பயன்படுத்தி கொள்க.அதேசெயலை ஒட்டுமொத்தமாக குறிப்பிட்ட செயலிமூலம் செயல்படுத்திட விபிஏவை பயன் படுத்திகொள்க.

மேலும் குறுமங்களை பயன்படுத்தும்போது ஏற்படும் பிழைகளை திருத்தம்செய்து மீண்டும் குறுமங்களை செயல்படுத்திடமுடியாது ஆனால் விபிஏவில் குறிமுறைகளை பயன்படுத்தும்போது ஏற்படும் பிழைகளை அவ்வப்போது உடனுக்குடன் சரிசெய்து செயல்படுத்திகொள்ளமுடியும்

அதுமட்டுமல்லாது குறுமங்களைவிட விபிஏவை மிக விரைவாக  செயல்படுத்திட முடியும்

புதியவர்கள் மேக்ரோவை உருவாக்கிடும் வழிமுறை

1.முதலில் தேவையான தரவுதளத்தினை திறந்து கொள்க

படம்-5

 2.உடன் தோன்றும் தரவுதள சாளரத்தின் (படம்-5) இடதுபுறமுள்ளபொருட்களில்(object) குறுமம் (macro)என்பதை தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளைபட்டையிலுள்ள புதியது(new) என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

3.பின்னர் தோன்றிடும் மேக்ரோ எனும் சாளரத்தில் முதல் செயல்கிடைவரிசையை தெரிவு செய்து சொடுக்கி அதில் Msg  என உள்ளீடுசெய்து தாவல்(Tab) விசையை அழுத்துக பிறகு தோன்றிடும் Msg என்ற செய்திபெட்டியை தெரிவுசெய்துகொள்க

4அதன் பின்னர் F6  என்ற செயலி விசையை அழுத்தியபின் open the table contacnts என தட்டச்சுசெய்து உள்ளீட்டுவிசையை அழுத்துக.

5. பின்னர் இரண்டாவது செயல்கிடைவரிசையை தெரிவு செய்து சொடுக்குக

6.அதன்பின்னர் மேலே கட்டளைசட்டத்திலுள்ள Window என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Window என்ற பட்டியில் Tile Horizontally என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்6-ல் உள்ளவாறு இரண்டு சாளரங்கள் ஒன்றன்கீழ்ஒன்றாக தோன்றும் அவற்றை தேவையான அளவிற்கு சரிசெய்து கொள்க

7. பின்னர் தரவுதள சாளரத்தின் இடதுபுறமுள்ள பொருட்களில் அட்டவணை என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

 படம்-6

8. பின்னர்பட்டியலாகவுள்ள அட்டவணைகளின் வரிசையில் tblcontactsஎன்ற அட்டவணையை தெரிவுசெய்து இடம்சுட்டியால் பிடித்து இழுத்துவந்து இரண்டாவது வரிசை மேக்ரோவில் விடுக.உடன் Action என்ற பகுதியில் OpenTableஎன்ற கட்டளை தானாகவே உருவாகிவிடும்

9. பிறகு மேலே கட்டளைசட்டத்திலுள்ள Window=>Cascade=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பின்னர் தரவுதள சாளரத்தை தேவையான அளவிற்கு சரிசெய்து கொள்க

படம்-7

10. அதன்பின்னர் படம்-7-ல் உள்ளவாறுsave as  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி நாம் உருவாக்கிய மேக்ரோவிற்கு ஒரு பெயரிட்டு சேமித்துகொள்க

 படம்-8

11.பின்னர் தரவுதளசாளரத்தின் இடதுபுறமுள்ள பொருட்களில்  படிவம்(form) என்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் வாடிக்கையாளர் tblcontacts என்ற அட்டவணையை தெரிவுசெய்துகொண்டு கருவிகளின்பெட்டியில் design என்ற கருவியை தெரிவுசெய்து சொடுக்குக

12 இந்த கருவிகளின்பெட்டி திரையில் இல்லையெனில் மேலே கட்டளைபட்டையில் உள்ள view => toolbar=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி திரையில் தோன்றிடுமாரு செய்துகொள்க

13.இதிலுள்ள controlwizard என்பது தெரிவுசெய்யபடவில்லை என்பதை உறுதிசெய்து கொள்க. பின்னர் இந்த கருவிகளின் பட்டையில் commandbutton என்ற கருவியை தெரிவுசெய்து சொடுக்குக உடன் +என்றவாறு குறியும் ஒருசதுரமும் இடம்சுட்டி இருக்கும் இடத்தில் பிரதிபலிக்கும்

14. பின்னர் இதனைகொண்டுtblcontactid என்ற உரைபெட்டிக்கு வலதுபுறம் அதே அளவிற்கு செவ்வக பொத்தான் ஒன்றை வரைந்து கொள்க.

15. அதன்பின்னர் இதற்கு Open tblcontacts என்ற பெயரை தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

16பிறகு இதன்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் தோன்றிடும் குறுக்குவழிபட்டியில் Propeties என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்-9-ல் உள்ளவாறு Propeties என்ற உரையாடல் பெட்டியொன்று தோன்றிடும்

17. அதில் other என்பதை தெரிவுசெய்து சொடுக்கி  cmd open tblcontact என்ற பெயராக இந்த பண்பியல்பிற்கு ஒரு பெயரினை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

18.பின்னர் இதேஉரையாடல் பெட்டியில் Event என்ற தாவியின் திரையை தோன்றசெய்து அதில் On Click என்ற செயலை தெரிவுசெய்துகொள்க

19. அதன் பின்னர் இதிலுள்ள கீழிறங்கு பட்டியலை தோன்றசெய்து அதில் Mac open tbl contact என்பதை தெரிவுசெய்து கொள்க

படம்-9

20. பின்னர் இந்த பண்பியல்பு உரையாடல் பெட்டியை மூடி இந்த படிவத்தை சேமித்துகொள்க

21 அதன்பின்னர் நாம் உருவாக்கிய Opentblcontact என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது

தரவுதளசாளரத்தின் இடதுபுறமுள்ள  பொருட்களில் Macro என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Macro என்ற திரையில் Macroopentbl என்பதை தெரிவு செய்து கொண்டு மேலே கட்டளைசட்டத்திலுள்ள run என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்கி இந்த படிவத்தை திறப்பதற்கான குறுமத்தை செயல்படுத்துக

படம்-10

22. உடன் படம்-11-ல் உள்ளவாறு Open tbl contactஎன்ற செய்திபெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-11

 ஒரு மேக்கரோவை எவ்வாறு விபிஏவாக உருமாற்றுவது மேலேகூறியவாறு ஒருமேக்ரோவை உருவாக்கியபின் அதனை எவ்வாறு ஒருவிபிஏவாக உருமாற்றம் செய்வது என இப்போது காண்போம்

படம்-12

1.படம்-12-ல் உள்ளவாறு தரவுதளசாளரத்தின் இடதுபுறமுள்ள பொருட்களில் Macro என்பதை தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளைபட்டையிலுள்ள tools=>Macro=> convert Macro  to Visual basic =>என்றவாரு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக

2. உடன் convert macro: macro open cont…என்ற சிறு உரையாடல் பெட்டியொன்று தோன்றிடும் அதிலுள்ள convert என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

3.உடன் படம்-13-ல் உள்ளவாறு convert macros to visual basic என்ற சிறுசெய்திபெட்டியுடன் விபிஏ சாளரம் ஒன்று நிரல் தொடருடன் திரையில் தோன்றிடும்

4.பின்னர் இதில் தோன்றிடும் பிழைகையாளும் பகுதியையும், குறுமங்களின் குறிப்புரைகளையும் ஏற்றுகொள்க உடன் நாம் முன்பு உருவாக்கிய மேக்ரோவானது விபிஏகுறிமுறையாக உருமாற்றம் செய்யபட்டு படம்-13-ல் உள்ளவாறுமாறிஇருக்கும்

படம்-13

நடப்பு ஆவணத்தை அச்சிடுவதற்கான மேக்ரோஒன்றை எவ்வாறு உருவாக்குவது  1.முதலில் தரவுதளசாளரத்தின் இடதுபுறமுள்ள பொருட்களில் Macro என்பதை தெரிவு செய்து கொண்டு மேலே கட்டளை பட்டையிலுள்ள  New என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக

2.உடன் படம்-14-ல் விரியும் Macro என்ற திரையில் கீழிறங்கு பட்டியை விரியசெய்து அதில் Run command என்ற முதல்கிடைவரிசையை தெரிவு செய்து கொள்க இந்த கட்டளை சொல்லை மிகவிரைவாக தேடுவதற்கு r என்ற எழுத்தை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துவதன் மூலமும் தேடலாம்

3.பின்னர் F6என்ற விசையை அழுத்தி Actionargument என்ற பகுதியிலுள்ள Run Command என்ற செயலி உள்ள பகுதிக்கு செல்க அதிலுள்ள கீழிறங்கு கட்டளை கூற்றுகளின் பட்டியலை விரியச்செய்து அதில் Select Record என்ற கட்டளை கூற்றை தெரிவுசெய்துகொள்க

4. பின்னர் இரண்டாவது கிடைவரிசைக்கு வந்து அதிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரிய செய்துஅதில் P என்ற எழுத்தை உள்ளீடுசெய்க உடன் தோன்றிடும் திரையில் Print out என்பதை தெரிவுசெய்துகொள்க

5. .பின்னர் F6என்ற விசையை அழுத்தி Actionargument என்ற பகுதியிலுள்ள printoutaction என்ற செயலிஉள்ள பகுதிக்கு செல்க அங்கு என்ற printrangeargument கட்டளைகூற்றிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியசெய்துஅதில் SelectionAll என்பதில் ஒன்றை தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளைபட்டையிலுள்ள  file=>save as=.>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி இந்த மேக்ரோவிற்கு macprint recordஎன்றவாறுஒருபெயரிட்டு சேமித்துகொள்க

படம்-14

6. பின்னர் படம்-15-ல்உள்ளவாறு tblcontactsஎன்ற படிவத்தை படிவவடிவமைப்பு காட்சிதிரையில்திறந்துகொள்க அதில் opentblcontacts என்ற பொத்தானிற்கு கீழே மற்றொரு பொத்தானை உருவாக்குக  அதற்கு print recordஎன்று பெயரிடுக 7.இதனுடைய பண்பியல்பு உரையாடல்  பெட்டியை அனுகிடுவதற்கு விசை பலகையிலுள்ள  F4என்ற செயலிவிசையை அழுத்துக

8.பின்னர் தோன்றிடும் பண்பியல்பு சாளரத்தில் Other என்பதை தெரிவுசெய்து இந்த கட்டளைக்கு mac print out என்ற பெயரை உள்ளீடு செய்க

9.பின்னர் Event என்ற தாவியின் திரையை தோன்றசெய்து அதில் On click என்பதை தெரிவுசெய்து சொடுக்குக

10.உடன் விரியும் கீழிறங்கு பட்டியில் mac print recordஎன்பதை தெரிவுசெய்துகொள்க

படம்-15

11.பின்னர் இந்த பண்பியல்பு பெட்டியை மூடிஇந்த படிவத்தை சேமித்துகொள்க 12.மீண்டும் இந்த படிவத்தைதிறந்து Print என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் நாம் உருவாக்கிய மேக்ரோவானது இந்த படிவத்தை  அச்சிட்டுவிடும் .

கணினியினுடைய திரையின் மதிப்பாராய்தல்(calibration)

கணினியினுடைய திரையின் மதிப்பாராய்தல்(calibration)

நாம் கண்களால் காணும் படம் மிகத்துல்லியமாகவும் அழகாகவும்  அமைய வேண்டு மெனில்  நம்முடைய கணினித்திரையினை(Monitor) அவ்வப்போது மதிப்பாராய்தல்(calibration)  செய்திடவேண்டும் இதற்கான இலவசமென்பொருளை http://www.freedonloadscenter.com/Business/printer_Tools/WiziYG.html  என்ற வலை தளத்திலிருந்து பதிவிறக்கும்செய்து கொள்க,

இது மிக நன்றாக சுருக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கும் அதனால் இதனை அதற்கென ஒதுக்கப்பட்ட மடிப்பகத்தில் விரிவுபடுத்துக அதன் பின்னர் இதனை நிறுவுவதற்கான கோப்பை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக உடன் இதனை நிறுவுவதற்கான வழிகாட்டி பெட்டியொன்று திரையில்தோன்றி நமக்கு வழிகாட்டும் இறுதியாக இந்நிறுவுகை பணி முடிவு பெறுவதற்கான இறுதிதிரையில் finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

பொதுவாக CRT கணினியின்திரையில் Red,Green,Blue (RGB)ஆகிய மூன்று அடிப்படை வண்ணங்களே இருக்கின்றன,திரையில் தோன்றும் படங்களுக்கு ஏற்ப பல்வேறு வகைகளில் இந்த மூன்று அடிப்படை வண்ணங்களின் கலவையாகவே செயல்படுத்தப் படுகின்றன,இந்த கலவைகள் சரியாக செயல்படாதபோது கணினியின் திரையில் தோன்றும் படத்தின் துல்லியம் தெளிவற்று விளங்குகின்றது, அதனால் இதனை முதலில் மதிப்பாராய்தல்(calibration)செய்யவேண்டும்

இதற்காக start=>All program=>WiziWYG=>WiziWYGXP=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயல்படுத்துக, உடன் தோன்றும் step 1 of 7-என்ற திரையில் which of your Devices would you like to profile? என்பதற்கு Monitor என்பதை தெரிவு செய்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர்தோன்றும் step 2 of 7- என்ற திரையில்  visual ,no, colori meter என்ற வாய்ப்பை தெரிவுசெய்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

அதன் பின்னர்தோன்றும் step 3 of 7- ம கணினியின் திரையினுடைய Contrast மற்றும் Brightnss ஐ அதிகபட்ச அளவிற்கு வைத்து அமைத்திடுக பின்னர் இதே திரையின் வலதுபுறத்தில் உள்ள கருப்பு வண்ண சதுரத்தை அதன் நடுவில் உள்ள சாம்பல் வண்ண சதுரத்திற்குள்  அமையுமாறு சரிசெய்திடுக,

பின்னர் அவ்வாறே வெள்ளை வண்ண சதுரத்தைதேவையான அளவிற்கு மாற்றி அமைத்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

அதன்பின்னர் தோன்றும்step 4 of 7- என்ற திரையில்  கோடுகள் மறையவேண்டும் என்பதற்காக சிவப்பு (Red) வண்ணத்திலுள்ள நகர்த்தியை (slider) பிடித்து நகர்த்திஅவற்றின் மையத்தில் உள்ள சதுரம் மறையும் அளவிற்கு சரிசெய்து அமைத்துகொள்க,இவ்வாறே Green.Blue ஆகிய வண்ணத்தில் உள்ள சதுரத்தினை மேல்நோக்கு↑ அல்லது கீழ்நோக்கு↓ அம்புக்குறியை அழுத்தி சரியாக அமையுமாறு மாற்றியமைத்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

பின்னர்  தோன்றும் step 5 of 7- என்ற திரையில் கணினியினுடைய திரையின் வகையை generic RGB monitor  என்றவாறு அதற்கான பட்டியலிலிருந்து தெரிவுசெய்க இதன் x,y மதிப்பினை தெரிவுசெய்து அமைத்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

அதன்பின்னர்  தோன்றும் step 6 of 7- என்ற திரையில் while print என்ற பகுதியில்  D50-std for  Graphics arts என்பதை தெரிவுசெய்க,Gamma  பகுதியில் 2,20 std pc அல்லது TVஎன்பதை தெரிவுசெய்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

பின்னர் தோன்றும் step 7 of 7- என்ற திரையில் Name of the monitor profile என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,விவரக்குறிப்பிற்கு ஒருபெயரை டைப்செய்தபின்  check here if you want to this to be your default system profile என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொண்டு,create profileஎன்பதை தெரிவுசெய்க

அதன்பின்னர் இறுதியாக   finishஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

பிறகுStart=> Settings=>Control Panel =>Display என்றவாறு கட்டளையை தெரிவுசெய்து செயல்படுத்தியவுடன் display properties என்ற உரையாடல்பெட்டியொன்று திரையில் தோன்றும் அதில்  advanced என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் தோன்றும் திரையில்  Color Management என்ற தாவியினுடைய பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக , அதன்பின்னர்விரியும் திரையில்  தேவையான  color profileஐ தெரிவுசெய்து  applyஎன்ற பொத்தானையும்  இறுதியாக ok என்ற பொத்தானையும் தெரிவுசெய்துசொடுக்குக,

இவ்வாறு கணினியினுடைய திரையை அவ்வப்போது மதிப்பாராய்வு செய்து சரியான தெளிவான மிகத்துல்லியமான படம் கணினியினுடையதிரையில் தோன்றுமாறு செய்து கொள்க,

 

அறிந்து கொள்வோம் அக்சஸ் 2003-தொடர்-பகுதி-19- தரவுதள அனுகுபக்கங்களைஉருவாக்குதல்(DAP)(Data Access Page)

அறிந்து கொள்வோம் அக்சஸ் 2003-தொடர்-பகுதி-19- தரவுதள அனுகு பக்கங்களை உருவாக்குதல் (DAP)(Data Access Page)

தரவுதள அனுகுபக்கங்களைஉருவாக்குதல்(DAP)(Data Access Page) என்ற வசதி முதன்முதலில் அக்சஸ் 2000 பதிப்பில் அறிமுகபடுத்தபட்டது இது ஒருசிறப்பு வகை வலைபக்கமாகவும் நேரடியாக நம்முடைய தரவுதளத்துடன் தொடர்புடையதாகவும்  விளங்குகின்றது.இதன்மூலம் உருவாக்கபடும் தரவுகள் அக்சஸில் x.mdb என்றும் SQL ல் x.adp என்றும் சேமிக்கபடும் மேலும் இது ஒரு தரவுதளத்தின் விவரங்களை DAP பக்கங்களாக பிரதிபலிக்கசெய்யும் சில சமயங்களில் மாறுதல்செய்வது போன்ற பணிகளை செய்தும் இதனை பாதுகாக்க முடியும். பயனாளர் ஒருவர் தரவுதளத்தின் ஒட்டுமொத்த விவரங்களை இதன் மூலம் காண்பிக்குமாறு செய்யமுடியும்

ஒற்றையான அட்டவணயிலிருந்து ஒரு DAP பக்கத்தை உருவாக்குதல்

படம்-1

1. முதலில் படம்-1-ல் உள்ளவாறு தரவுதள சாளரத்தில் இடதுபுறம் உள்ள பொருட்களில் (object) பக்கம்  (page) என்பதை தெரிவுசெய்க பின்னர் சாளரத்தின் மேல்பகுதியில் உள்ள கருவிகளின் பட்டையில் புதியது(new) என்பதை தெரிவு செய்துகொண்டு வலதுபுறம் இரண்டாவதாக உள்ள create data access page by using wizard என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-2

2. உடன் படம்-2-ல் உள்ளவாறு New Data Access Page என்ற உரையாடல் பெட்டி யொன்று திரையில் தோன்றிடும் பின்னர் அதன் வலதுபுறம் உள்ள வாய்ப்புகளில் Auto Page Column என்ற நான்காவது வாய்ப்பை தெரிவுசெய்து கொண்டு Table/query என்பதன் கீழிறங்கு பட்டியை விரியச்செய்து அதில் table:tblcontacts என்ற நாம் விரும்பும் அட்டவணையை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-3

3. அதன்பின்னர் படம்-3-ல்உள்ளவாறு  தோன்றிடும் திரையில் available fields என்பதில் தேவையான புலங்களை ஒவ்வொன்றாக தெரிவுசெய்து >என்ற ஒற்றைகுறியை அல்லது அனைத்து புலங்களையும் எனில் >>என்றவாறு இரட்டைகுறிகளையும் தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்து சொடுக்கிய புலங்கள் selected fields என்ற பகுதியில் சென்று சேர்ந்திருக்கும் அதன்பின்னர் next என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக

படம்-4

4. உடன் படம்-4-ல்உள்ளவாறு  Do you want to add any grouping levels?எனநாம் தெரிவு செய்திருந்த புலங்களில் ஒன்றை குழுத்தலைப்பாக தெரிவுசெய்யுமாறுகோரிநிற்கும் அதில் chr contact type என்றவாறு அல்லது ஏதனுமொன்றை தெரிவுசெய்து >என்ற ஒற்றைக்குறியை தெரிவுசெய்துசொடுக்குக அதன்பின்னர் next என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக

படம்-5

5. பின்னர் படம்-5-ல்உள்ளவாறு தெரிவுசெய்திருந்த புலங்களை எவ்வாறு நாம் வரிசைபடுத்திட விரும்புகிறோம் What Sort order do you want for  your records? என கோரி நிற்கும் அதில் Chr First name, chr last name ஆகிய புலங்களை தெரிவுசெய்துகொண்டு > என்றவாறு Ascending ஏறுவரிசை என்பதை தெரிவுசெய்துகொள்க அதன்பின்னர் next என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக

படம்-6

6 அதன்பின்னர் படம்-6-ல்உள்ளவாறு தோன்றிடும் திரையில் tbl contact skஎன்ற தலைப்பு பெயராக உள்ளீடு செய்க பின்னர் இறுதியாக finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 படம்-7

7 உடன் படம்-7-ல்உள்ளவாறு tbl contact skஎன்ற தலைப்பில் ஒரு DAP பக்கத்தை திரையில் பக்க வழிகாட்டி(Page wizard) பிரதிபலிக்கசெய்வார் அதில் chr contact type என்பதற்கு இடப்புறம் உள்ள + என்ற குறியை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் படம்-8-ல் உள்ளவாறு DAP பக்கம் ஒன்று திரையில் தோன்றிடும்

படம்-8

இந்த DAP பக்கமானது தற்காலிக நினைவகத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் நிரந்தர நினைவகத்தில் சேமிக்கும் முன்பு இயல்புநிலையின் (default) பண்பை நாம் விரும்பியவாறு மாறுதல் செய்தபின்னர் சேமித்தால் நாம் விரும்பிய பண்புகளுடன் ஒரு DAP பக்கம் திரையில் பிரதிபலிக்கும்

1.இந்த DAP பக்கத்தில் உள்ள காட்சி (view)என்ற பொத்தானை   தெரிவுசெய்து சொடுக்குக அல்லது கட்டளை கருவிகளின் சட்டத்தில்உள்ள காட்சி(view) என்ற குறும்படத்தை தெரிவு  செய்து சொடுக்குக. உடன் விரியும் பட்டியில் Data Base Object என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக.பின்னர் விரியும் பொருட்களில் Page என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.அதன் பின்னர் இதன் வலப்புறம் உள்ள வடிவமைப்பு காட்சி(Design view) என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-9

2.உடன் படம்-9-ல்உள்ளவாறு விரியும் வடிவமைப்பு பக்கத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக. பின்னர் தோன்றிடும் குறுக்கு பட்டியில் குழுநிலை பண்பியல்பு(Group level Properties) என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக

3. உடன் படம்10-ல்உள்ளவாறு தோன்றிடும் குழுநிலைப்பண்பியல்பு(Group level Properties) என்ற உரையாடல் பெட்டியின் இயல்புநிலையின் விரிவாக்கம் (expanded by default) என்பதில் உள்ள true என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக

படம்10

4 பின்னர் மாறுதல் செய்யபட்ட இந்தDAP பக்கத்தை ctrlsஆகிய விசைகளை சேர்த்து அழுத்துவதன் மூலம் அல்லது வேறுஏதேனுமொரு வழியில் சேமித்திடுக அவ்வாறு சேமித்திடும்போது இதற்கொரு பெயரை உள்ளீடு செய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

ஒற்றையான DAP பக்கத்தை வடிவமைப்பு காட்சிமூலம் உருவாக்குதல்Single page created through design view) 

1.தரவுதள சாளரத்தின் இடதுபுறம் உள்ள பொருட்களில் பக்கம் page என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் மேலே கட்டளைகளின் கருவிபட்டையில்  design என்ற கருவியை தெரிவு செய்து சொடுக்குக அதன்பின்னர் இதே திரையின் வலபுறம் உள்ள created at a access page by design view என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக

படம்11

2.உடன் படம்11-ல்உள்ளவாறு திரையில் பக்க வடிவமைப்பு காட்சியும் வலதுபுறம் புலப்பட்டியும் (Field list)  தோன்றிடும்  பின்னர் Click here and type title text என்ற தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை சொடுக்குக  பின்னர் தோன்றிடும் திரையில் product info என உள்ளீடு செய்க. அதன் பின்னர் கீழ்பகுதியிலுள்ள Drag field in the field list and drop the page  என்பதில்  இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை சொடுக்குக உடன் அது கட்டற்ற பகுதி (unbound section) என்று சுட்டிகாட்டும் செய்தியொன்றை திரையில் பிரதிபலிக்கும் இதன் வலதுபுற ஒரத்தில் அட்டவணையின் மடிப்பகம் (table folder)காட்சியளிக்கும்  அதில் நாம் விரும்பும் tbl contact என்ற அட்டவணையை தெரிவுசெய்துகொள்க.உடன் அந்த அட்டவணை யிலுள்ள புலங்கள் அனைத்தும் திரை.யில்  விரிவாக்கம் (expand) செய்யபட்டு காட்சியளிக்கும் .அவைகளை ஒவ்வொன்றாக தெரிவுசெய்து இடம்சுட்டியால் பிடித்து இழுத்து வந்து கீழ்பகுதி.ல் விடுக உடன் படம்11-ல் உள்ளவாறு layout wizardஎன்ற வழிகாட்டி உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதிலுள்ள பட்டியில் columner என்ற கட்டளையை தெரிவு செய்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி நாம்உருவாக்கிய பக்கத்திற்கு ஒரு பெயரிட்டு  சேமித்திடுக

வினாவை பயன்படுத்தி குழுவானதரவுபக்கத்தை பக்கவழிகாட்டிமூலம் உருவாக்குதல்(Using query to create a group data page with page wizard)

1.முதலில் தரவுதளசாளரத்தில் இடதுபுறமுள்ள பொருட்களில் Page என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் வலதுபுறமுள்ள create data access page by using wizardஎன்ற வாய்ப்பை  தெரிவுசெய்து சொடுக்குக.

2. உடன் படம்-12-ல் உள்ளவாறு பக்கவழிகாட்டி உரையாடல் பெட்டி(Page wizard box) யொன்று திரையில் தோன்றிடும் அதில் உள்ளகீழிறங்கு பட்டியிலிருந்து qry sales info for buyers என்பதை தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் அதில் query table என்பதை தெரிவுசெய்துசொடுக்குக

3. உடன் தோன்றிடும் திரையின் Selected field list box என்ற பகுதியிலுள்ள புலங்களை ஒவ்வொன்றாக தெரிவுசெய்து என்ற >ஒற்றைக்குறியை அல்லது அனைத்து புலங்களையுமெனில் >>என்றவாறு இரட்டைகுறிகளையும் தெரிவுசெய்து சொடுக்கியவுடன் அனைத்து புலங்களும் available fieldஎன்ற பகுதியில் போய்சேர்ந்திருக்கும்  பின்னர் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-12

5.உடன் படம்-12-ல் உள்ளவாறு  தோன்றிடும் உரையாடல் பெட்டியில் IDScontact.ID என்பதை முதல்குழுவாக தெரிவுசெய்து >என்ற ஒற்றைக்குறியை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் மீண்டும் Ids invoice number என்பதை தெரிவுசெய்து கொண்டு > என்ற ஒற்றைக்குறியை மீண்டும் தெரிவுசெய்து சொடுக்குக

6.பின்னர் படம் -5-ல் உள்ளவாறான நடைமுறையை பின்பற்றிnext என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-13

7உடன் இயல்புநிலைபெயராக qry sales info for buyers என்பதை பிரதிபலிக்கும் இறுதியாக இதனை ஏற்று finish என்ற பொத்தானை சொடுக்குக உடன் படம்-14-ல் உள்ளவாறு DAP பக்கம் ஒன்று திரையில் தோன்றிடும் .

படம்-14

இரட்டைகுழுநிலை தரவுபக்கம்போன்று மூன்று அட்டவணைகளை வழிகாட்டிமூலம் உருவாக்குதல் (Creating a two level group data page in the wizard using three tables)

1.முதலில் தரவுதளசாளரத்தில் இடதுபுறமுள்ள பொருட்களில் Page என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் வலதுபுறமுள்ளcreate data access page by using wizard என்ற வாய்ப்பை  தெரிவுசெய்து சொடுக்குக.

2. உடன் படம்-15-ல் உள்ளவாறு தோன்றிடும் பக்க வழிகாட்டி என்ற உரையாடல் பெட்டியில் Table/query என்பதன் கீழிறங்கு பட்டியில் Tbl contact என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

3 அதன்பின்னர் >என்ற ஒற்றைக்குறியை பயன்படுத்தி ஒவ்வொரு புலமாகவும் அல்லது >>ஆகிய இரட்டைகுறிகளை பயன்படுத்தி அனைத்துபுலங்களையும் புலப்பட்டியிலிருந்து நகர்த்துக.

4.மீண்டும் Table என்பதன் கீழிறங்கு பட்டியலிருந்து tbl sales என்ற அட்டவணையை தெரிவுசெய்க

5. படிமுறை 3-ல் கூறியவாறு தெரிவுசெய்து இந்த அட்டவணையிலிருக்கும் புலங்களையும் நகர்த்துக

6. மீண்டும் Table என்பதன் கீழிறங்கு பட்டியலிருந்து tbl sales என்ற அட்டவணையை தெரிவுசெய்க.

7. படம்-3-ல் உள்ளவாறு வழிமுறைகளை பின்பற்றி தெரிவுசெய்த அட்டவணையில் இருந்து புலங்களை நகர்த்துக

8. பின்னர் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் தோன்றிடும் சாளரத்தில் IDS contact.ID என்ற அட்டவணையிலுள்ள புலங்களில் ஒவ்வொன்றாக தெரிவுசெய்து >என்ற ஒற்றைகுறிபொத்தானையும் அவ்வாறே IDS invoice number  என்பதை தெரிவு செய்து >என்ற ஒற்றைக்குறி பொத்தானையும் தெரிவுசய்து சொடுக்குக

9 இறுதியாக Finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் DAP பக்கமானது மூன்று குழுநிலைகளில் உருவாகி விடும் .இதனை பக்க வடிவமைப்பு காட்சி திரைமூலம் திறந்து  பார்த்து கொள்க..

10குழுபகுதியை IDS contact.ID ன் புலத்துடன் சேர்த்து தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் இந்த அட்டவணைகளிலுள்ள அனைத்து புலங்களையும் உள்ளிணைத்து சேர்ப்பதற்கு ஏற்றவாறு பெரியதாக்குக.

11.இதன் உட்பகுதியை தெரிவுசெய்தபின் ctrl+xஆகிய விசைககளை சேர்த்து அழுத்துவதன்மூலம் அல்லது Edit=>cut =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் மூலம் இதிலுள்ள புலங்களை வெட்டிகொள்க.

12.பின்னர் குழுபகுதியில் இடம்சுட்டியைவைத்து ctrl+vஆகிய விசைககளை சேர்த்து அழுத்துவதன்மூலம் அல்லது Edit=>paste=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் மூலம் வெட்டி கொண்டு வந்த புலங்களைஇங்கு ஒட்டிகொள்க

13 பின்னர் மேலும் விடுபட்ட புலங்கள் ஏதேனுமிருந்தால் உட்குழுபகுதியின் மேல்பகுதியில் கொண்டுவந்து சேர்த்திடுக. அதன்பின்னர் தலைப்பு பகுதியை தெரிவுசெய்து தலைப்பு மட்டும் என்பதில் இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

14. பின்னர் தோன்றிடும் பட்டியில் caption என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் தோன்றிடும் caption என்ற பகுதியில் விடுபட்ட புலங்களின் முகப்புபெயரின் உரைபெட்டியை நகரத்திஅதனை திறந்துகொள்க. இறுதியாக உரைபெட்டி தலைப்பு உட்குழு பகுதி ஆகியவை ஒன்றுக்குள் ஒன்றாக அமையுமாறு சரிசெய்து உறுதிபடுத்திகொள்க

15. காட்சி என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி DAP பக்கத்தை திரையில் பிரதிபலிக்கசெய்க உடன் படம்-15-ல் உள்ளவாறு திரைத்தோற்றம் அமையும்

படம்-15

குழுவான DAP பக்கத்தை வழிகாட்டி உதவியில்லாமல் உருவாக்குதல்

1. தரவுதளசாளரத்தின் இடதுபுறமுள்ள பொருட்களில் Page என்பதை தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளைகருவிகளின் பட்டையிலுள்ள New என்ற கருவியை தெரிவுசெய்து சொடுக்குக

2.உடன் படம்-16-ல்உள்ளவாறு தோன்றும் New Data Access Page என்ற உரையாடல் பெட்டியின் வலதுபுறமுள்ள வாய்ப்புகளில் Design view என்ற வாய்ப்பை தெரிவுசெய்துகொண்டு கீழ்பகுதியிலுள்ள கீழிறங்கு பட்டியிலிருந்து tbl contacts என்ற அட்டவணையையும் தெரிவுசெய்துகொண்டு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-16

3.உடன் படம்-17-ல்உள்ளவாறு தோன்றும் சாளரத்தில் புலப்பட்டியானது வலதுபுறம் இல்லையெனில்அதனை தெரிவுசெய்து சொடுக்கி திறந்துகொள்க.உடன் புலப்பட்டியானது விரிவாக்கம் செய்யபட்டு நீண்டதாக பிரதிபலிக்கும்.

4. IDSContact.ID என்ற அட்டவணையை தெரிவுசெய்துசொடுக்கியபின் அதிலுள்ள புலங்களை ஒவ்வொன்றாக இடம்சுட்டியால் பிடித்து இழுத்துவந்து புதியஇடத்தில் விடுக.உடன் layout wizardஎன்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும்  5.அதில் இயல்புநிலை மதிப்பாக columnerஎன்பதை தெரிவுசெய்துகொண்டு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

.6. முன்புகூறியவாறு இழுத்துகொண்டுவிட்ட புலங்களின்பெயரையும் உரைபெட்டியையும் மிகச்சரியாக பொருத்தமாகஅமைத்திடுக

7.பின்னர் மீண்டும் பட்டிபெட்டியில்(list box) உள்ள புலங்களில்  மேலும் தேவையானவற்றை மட்டும் தெரிவுசெய்து இழுத்துவந்து விடுக. இவ்வாறு விடும்போது புதியபகுதி (new section )ஒன்று உருவாக்கபட்டிருக்கும்

8. உடன் layout wizardஎன்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும்.அதில் Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்-18-ல் உள்ளவாறு relationship wizardஎன்ற உரையாடல் பெட்டியொன்று தோன்றிடும்  அதில் புதியபகுதிக்கும் (new section ) முன்பு உருவாக்கிய பழையபகுதிக்கும் உள்ள தொடர்பை மாற்றம் செய்யவேண்டுமாஎன கோரிநிற்கும் அதில் Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 படம்-17

8.பின்னர் இதன் தலைப்புபகுதியில்உள்ள click here and Type Title name என்பதை தெரிவுசெய்து நீக்கம்செய்துவிடுக. அதன்பின்னர சாம்பல்நிறதலைப்புபகுதியில் இடம்சுட்டியை வைத்து மூன்றுமுறை Delete என்ற விசையை அழுத்தி அந்த பகுதியையும் நீக்கம்செய்துவிடுக.

9. பின்னர் tbl. contact என்ற பகுதிக்கு சென்று அதிலுள்ள புலங்களை சரிசெய்து அமைத்திடுக.

10.அதன்பின்னர் மேலே கட்டளைபட்டையிலுள்ள காட்சி(view) என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக11. மீண்டும் வடிவமைப்பு காட்சிதிரைக்கு திரும்புக. அதில் tbl contact என்ற குழுவின் கீழ்பகுதியில் tbl sales என்பதை உள்ளிணைத்துவிடுக.

12 புலப்பட்டிக்கு சென்ற அதிலுள்ள அட்டவணைகலில் தேவையானவற்றை மட்டும் தெரிவுசெய்க உடன் அதிலுள்ள புலங்கள் பட்டியலாக காட்சியளிக்கும் tbl sales என்ற அட்டவணையிலுள்ள புலங்களை முன்பு கூறியவாறு இடம்சுட்டியால் தெரிவுசெய்து பிடித்து இழுத்துவந்து புதியபகுதியின் இடப்புறம் கடைசியாக விடுக.உடன் இந்த பகுதி எவ்வாறு காட்சியளிக்கவேண்டுமென கோரிநிற்கும் அதில் கிடைவரிசை என்பதை தெரிவுசெய்க பின்னர் தோன்றிடும் குறுக்குவழிபட்டியில் group level property என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் group level property என்ற உரையாடல் பெட்டயில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குக . பின்னர் விரியும் குழுநிலை பண்பியல்பு பெட்டியின் expand by default என்பதில் உள்ள True என்ற வாய்ப்பை தெரிவுசெய்துகொண்டு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 படம்-18

 இயல்புநிலை ஒற்றை படிவகாட்சியிலிருந்து ஒற்றையான DAP படிவ பக்கத்தை உருவாக்குதல் (Create a DAP form from the default view of single form).

1. படம் -19-ல்  உள்ளவாறு தரவுதளசாளரத்தின் வலதுபுறமுள்ள பொருட்களில் படிவும் Form என்பதை தெரிவுசெய்துகொண்டு வலதுபுறமுள்ள கோப்புகளின் பெயர்களில் Frm contacts all என்பதையும் தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளை கருவிகளின் பட்டையிலுள்ள Open என்ற கருவியை தெரிவுசெய்து சொடுக்கி இந்த படிவத்தை திறந்துகொள்க

 படம்-19

2.பின்னர் தோன்றிடும் திரையில் மேலேகட்டளைபட்டையிலுள்ள File Save as என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

3. அதன்பின்னர் படம்-20-ல் உல்ளவாறு தோன்றிடும் Save as  என்ற உரையாடல் பெட்டியின் Save Form ”Frm contact sal l” To: என்பதன் கீழ் இயல்புநிலை பெயராக Frm contact all  என்பது பிரதிபலிக்கும்  அதனைஏற்றுகொண்டு As என்ற பகுதி யின் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில் Data access page என்பதை தெரிவுசெய்து கொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக .

படம்-20

இப்போது இந்த படிவத்தின் புலங்களை DAP என்றபக்கமாக மாற்றம் செய்யமுடியவில்லை என்ற எச்சரிக்கை செய்தியை திரையில் காண்பிக்கும் அதனை தவிர்த்து இந்த கோப்பினை வடிவமைப்பு காட்சி திரைமூலம் சரிசெய்து சேமித்துகொள்க

இணைய இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை பயன்படுத்திட

ஒவ்வொரு நாளும் புது புது வசதிகளை ஜிமெயிலில் அறிமுக படுத்துவதால் நம்மில் பெரும்பாலானோர் இந்த ஜிமெயிலை பயன்படுத்துகிறோம்.  நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என்றும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும் என்றும் விரும்பும்  நேரம் பார்த்து நம்முடைய கணினியில் இணைய இணைப்பு துண்டிக்க பட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது பயனித்து கொண்டிருப்போம் நம்முடைய மடிக்கணினியிலும் இணைய இணைப்பு இருக்காது ஆயினும் உடனடியாக  மின்னஞ்சலை கையாளவேண்டும் என எண்ணிடுவோம்  அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்வதற்காக இணைய இணைப்பில்லாத போதும் மின்னஞ்சலை கையாளுவதற்கான கூகுள் ஒரு அருமையான வசதியை வைத்துள்ளது.
இதற்காக நம்முடைய கணினியில்  கூகுள் குரோம் உலாவியை  பயன்படுத்திடுக.  அடுத்து https://chrome.google.com/webstore/detail/ejidjjhkpiempkbhmpbfngldlkglhimk என்ற தளத்திற்கு சென்று  Offline Google Mail என்ற நீட்சியை அந்த  உலாவியில் நிறுவுகை செய்திடுக.

1.

உடன் உலாவியில் ஒரு புதிய தாவி(tab) உருவாகும் அல்லது  முயற்சிசெய்து புதிய தாவி (New tab) ஒன்றை உருவாக்கிடுக.

பின்னர் தற்பொழுது நாம் இணைத்த Offline Google Mail என்ற குறும்படத்தை தெரிவு செய்து சொடுக்குக.

உடன்தோன்றிடும் திரையில் Allow Offline Mail என்ற வாய்ப்பை தேர்வு செய்திடுக.

2.

 இதே திரையின் கீழ் பகுதியில் நம்முடைய மின்னஞ்சலின் பெயரை சுட்டிகாட்டிடும் அதனை தேர்வு செய்து கொண்டு Continue என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

உடன் நம்முடைய மின்னஞ்சல் பெட்டியானது திரையில் தோன்றி நமக்கு இதுவரையிலும்   வந்த அனைத்து மின்னஞ்சல்களையும் பட்டியலாக  காட்டும்.

3

இதில் வழக்கமாக மின்னஞ்சல்களை கையாளுவதுபோன்று அனைத்து பணிகளையும் செயல்படுத்தலாம் மேலும் இதிலுள்ள Menu என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கினால் பின்வரும் படத்திலுள்ளவாறு இணைய இணைப்பில்லாதபோது கூட  மேலும் ஏராளமான பணிகளை ஆற்றுவதற்கான வசதியை வழங்குகின்றது.

4

இவ்வாறு எண்ணற்ற வசதிகளையும்  இணைய இணைப்பு இல்லாமேலேயே நம்முடைய ஜிமெயில் கணக்கை நம்முடைய கணினியை பயன்படுத்தி செயல்படுத்திடமுடியும்.

மைக்ரோசாப்டின் விண்டோ 8 சோதனை பதிப்பு செயல்படுத்திடுவதற்காக

கணினி உலகில் மிகுந்த வரவேற்பை பெற்ற விண்டோ 7 இயக்கமுறைமையை அடுத்து தற்போது மிகமுக்கிய செய்தியாக விவாதிக்கபட்டு வரும் விண்டோ8என்ற இயக்க முறைமையை சோதனை பதிப்பாக Developer Preview 64 பிட் ,32பிட் ஆகிய இருவகை கணினிகளிலும் ஒத்தியங்ககூடிய வகையில் மைக்ரோ சாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது   இதிலும் விண்டோ7 போன்று ஏராளமான வசதிகள் உள்ளன. ஆயினும் இது சோதனை பதிப்பு என்பதால் இதில் பல்வேறு பிரச்சினைகள் வரவாய்ப்புள்ளது.

இந்த விண்டோ8 ஐ இயங்குவதற்கு தேவையான கணினியின் அமைவுகள் பின்வருமாறு

1. 1 ஜிகாஹெர்ட்ஸ் திறன்கொண்ட செயலி

2. 64 பிட் கணினியெனில் 2ஜிபி ரேம்   ,32பிட்கணினியெனில் 1 ஜிபி ரேம்

3. 64 பிட் கணினியெனில் 32 ஜிபி கொள்ளவு நினைவக வன்தட்டு,32பிட்கணினியெனில் 16 ஜிபி கொள்ளவு நினைவக வன்தட்டும்

4.டைரக்ட்எக்ஸ்9 வரைகலை சாதனமும் அதனுடைய இயக்கியும்

5.தொடுதிரை வசதிகொண்ட கணினியின் திரை

இந்த விண்டோ8 ஐ பின்வரும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும் http://wdp.dlws.microsoft.com/WDPDL/9B8DFDFF736C5B1DBF956B89D8A9D4FD925DACD2/WindowsDeveloperPreview-64bit-English-Developer.iso

மேற்கண்ட இணைய முகவரியில் இந்த இயக்கமுறைமையின்.iso வகை கோப்பினை பதிவிறக்கம் செய்து அதனை  dvd யில் பதிவுசெய்தபிறகு நிறுவுகை செய்ய வேண்டும்.

அதற்காக விண்டோ 7 இயக்கமுறைமையை உபயோகித்து கொண்டிருந்தால் சுலபமாக Windows disk image burner  என்ற வசதியை பயன்படுத்தி இதனுடைய .iso வகை கோப்பினை மிகஎளிதாக dvd யில் பதிவுசெய்யலாம்.

விஸ்டா அல்லது எக்ஸ்பி இயக்கமுறைமையாக இருந்தால் dvd யில் பதிவு செய்வதற்கான ஏராளமான மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன அவைகளுள் விருப்பமானதை மட்டும் பயன்படுத்திகொள்க.

இதன்பின்னர் dvd யிலிருந்து விண்டோ 8 ஐ வழக்கம் போன்று நிறுவுகை செய்துகொள்க.

 இந்த இயக்கமுறைமையை பற்றி மேலும் அறிந்துகொள்ள http://msdn.microsoft.com/en-us/windows/apps/br229516 என்ற வலைதளத்திற்கு செல்க

எச்சரிக்கை:  சட்டபூர்வமான விண்டோஇயக்கமுறைமையை  பயன்படுத்தினால் மட்டுமே இதனை உபயோக்கவும். இது ஒரு சோதனை பதிப்பாகத்தான்(Developer Preview) வெளி யிட்டுள்ளது. அதனால் பொது பயன்பாட்டிற்கு வந்தபின்னர் உபயோகிப்பது நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது

நெருங்கமைப்பான் எனும் கருவி(defraggler)

அடிப்படையில், Defraggler என்பது வன்தட்டில் இரைந்து கிடக்கும் கோப்புகளில் நாம்விரும்புவதை மட்டும் ஒரேஇடத்தில் கொண்டுவந்து சேர்த்து ஒருங்கமைத்திட உதவிடுகின்ற இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகபடுத்தபடும் ஒரு பயன்பாட்டு மென்பொருளாகும்  இவ்வாறு வன்தட்டு முழுவதும் இரைந்து கிடக்கும் கோப்புகளை ஒருங்கமைத்திட  எடுத்து கொள்ளும்  காலஅவகாசத்தை இது தவிர்க்கின்றது இந்த செயலாக்கத்தை வேகமாகநம்முடைய மனநிறைவுகொள்ளுமாறு செய்கின்றது மேலும் அவ்வப்போது,  முழு வன்தட்டையும் ஒருங்கமைத்திட  விரும்பினாலும் அவ்வாறே செயற்படுத்திடவும் இதில் முடியும்.
இது மிகவும் கச்சிதமானகவும் எளிதில் கையாளதக்கதாகவும் உள்ளது என்பதே இதன்முக்கியசிறப்பும்சமாகும் . இது   கச்சிதமான கட்டமைப்பில் வடிவமைக்கப் பட்டதால் ஒரு ஒற்றையான EXE கோப்பு பயன்பாடாக இது விளங்குகின்றது. எனவே, இதனை ஒரு ஃபிளாஷ் டிரைவ் அல்லது பிற கையடக்க சாதனத்தில்  நகலெடுத்து  தேவைப்படும்போது மீண்டும் நிறுவுகை செய்யாமலேயே, இதனை பயன்படுத்த முடியும். இதனுடைய EXE கோப்பு 1 MB அளவே உள்ளதால் . இதைவிடவும்  மிகவும் சிறிய பயன்பாடுகள் எதுவுமே இல்லை என உறுதியாக கூறலாம்
. இந்த Defraggler  மற்ற பயன்பாடுகளை போன்றே பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிகொண்டு இயக்குக உடன் தோன்றிடும் திரையில்  ஒருங்கமைத்திட விரும்பும் கோப்பு அல்லது மடிப்பகத்தை தெரிவு செய்து சொடுக்குக உடன் ஒருங்கமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக நமக்கு அறிவிக்கும் அதனுடன் வன்தட்டில் மிகுதி ஒருங்கமைக்க வேண்டியவைகளை பட்டியலிட்டிடும்அவைகளை தெரிவுசெய்தால்அவை எங்குள்ளது என சுட்டிகாட்டிடும் தேவையானால் அவைகளை ஒருங்கமைத்துகொள்ளலாம்

மேலும், இதனைபற்றிய சில கூடுதல் தகவல்கள், இந்த Defraggler ஆனது விண்டோஸ் 2000, 2003 , எக்ஸ்பி, விஸ்டா, 7 ஆகிய இயக்கமுறைமைகளில் செயல்படுகிறது இது 64 பிட் கணினியையும் ஆதரிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதனை CCleaner என்ற பயன் பாட்டினை உருவாக்கிய  அதே Piriform என்ற நிறுவனமே வெளியிட்டுள்ளது Defraggler 100 சதவீதம் இலவசமாக  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

இணையத்தையும் செல்லிடத்து பேசியையும் கவனத்துடன் பயன்படுத்துக

தற்போது இணையமும் செல்லிடத்து பேசியும்  இல்லாமல் ஒரு சராசரி நபரால் ஒரு நாள் கூட வாழ முடியாத காரியமாகி விட்டது. ஆனால், அவற்றை  சரியாக பயன்படுத்தப்படா விட்டால்  நமக்கு  ஏரளமான இணைய அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பெரும்பாலான சைபர் குற்றங்கள் விழிப்புணர்வு இல்லாததாலேயே  ஏற்படுகின்றன. முக்கியமாக பள்ளி மாணவர்களே இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.அதனால் செல்லிடத்து பேசிகள், கணினிகள் மற்றும் இணைய தொடர்பான பாதிப்புகள் ஆகியவை இணையத்தில் ஏற்படுவது குறித்து பொது மக்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அரசாங்கம் பள்ளிகளில் செல்லிடத்து பேசிகளை தடை செய்திருந்தாலும்  பள்ளி குழந்தைகள் மத்தியில் சைபர் குற்றங்களின் விகிதம் குறையாது . ஏனென்றால்,இவைகளை  மாணவர்கள்  பள்ளிக்கு வெளியே பயன்படுத்திடும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.
முக்கியமாக மாணவர்கள் பள்ளி நேரம் கழித்து இவைகளை பயன்படுத்த முடியும்  அதனால் பள்ளிகளில் செல்லிடத்து பேசிகளை  தடைசெய்வதால் எந்த மாற்றங்களையும் கொண்டுவர முடியாது.
தற்போது, பெற்றோர்கள் தம்முடைய குழந்தைகளுக்கு மிகவும் சிறிய வயதில் இருந்தே  செல்லிடத்துபேசியையும் இணைய வசதியையும் பயன்படுத்திடும் வாய்ப்பை வழங்குகின்றனர். இவ்வாறான செயல் வண்டியை ஓட்ட தெரியாத நபருக்கு ஒரு வாகனத்தை கொடுத்து பயன்படுத்திகொள்ளும்படி கூறுவதற்கு சமமானசெயலாகும்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்த இவர்களை அனுமதிக்கப்படவேண்டும், ஆனால் அது நல்ல கவனத்துடன் ஆனதாக இருக்க வேண்டும்.  இக்குழந்தைகளுக்கு சரியான  வழிமுறைகளை கற்றுக்கொடுக்க வேண்டும். மேலும், அவ்வாறான இணைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது  அதனுடைய நேர்மறை மற்றும் எதிர்மறை பக்கங்களை  அறிந்திருப்பது மட்டுமல்லாமல் அனைத்து தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் முக்கிய பகுதிகளையும் தெரிந்திருக்க வேண்டும்.

செல்லிடத்துபேசிகள் மற்றும் இணையதள பயன்பாட்டில் : செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பின்வருமாறு
செல்லிடத்துபேசியும் அதனுடைய  சிம் மும் தனிப்பட்ட நபர் ஒருவரின் சொந்த சொத்தாகும். அதனால் அதன் உரிமையாளரே அதன்மூலம் ஏற்படும் எந்த தவற்றுக்கும்  பொறுப்பாவார்.
செல்லிடத்துபேசிமூலம்  அனுமதி இல்லாமல்  புகைப்படங்கள் எதுவும் எடுக்க வேண்டாம். ஏனெனில் அதுஒரு  தண்டனைக்குஉரிய குற்றமாகும்
அநாமதேய எண்களுக்கு தவறவிட்ட அழைப்புகளை அனுப்ப வேண்டாம். ஏனெனில் அதனைபெறுபவர்  அது பற்றி புகார் செய்யவாய்ப்பு உள்ளது.
நமக்கு வரும் செய்திகளை மற்றவர்களுக்கு கவனமாக பரிந்துரைத்து அனுப்பிடுக ;ஏனெனில்  அந்தசெய்திகளில் தீவிரவாதிகளின் செய்திகள் ஏதேனும் மறைத்து வைக்க பட்டிருக்கலாம்.
செல்லிடத்து பேசிகளில் ஆபாச புகைப்படங்களை வைத்திருப்பது  சட்டவிரோத செயலாகும்.
எப்போதும் ப்ளூடூத்தை செயலற்றை நிலையில் வைத்திருக்கவும் .
அந்நியர்களிடம் உங்களுடைய செல்லிடத்துபேசியை கொடுக்க வேண்டாம்.
செல்லிடத்து பேசியில் பற்று அட்டை தகவல்களை சேமித்து வைக்க வேண்டாம்.
செல்லிடத்து பேசியில் சேமித்து வைத்திருக்கும் அனைத்து  தனிப்பட்ட தகவல்களையும்  இந்த செல்லிடத்து பேசியை விற்பனை செய்வதற்கு முன் நீக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்யவும்.
தற்போது நாம் வாங்கி கைவசம் வைத்திருக்கும் கைப்பேசியானது  திருடபட்ட பொருளன்று  என்பதை உறுதிபடுத்தவும்.

எந்த பரிசையும் இணையத்தின் மூலம் பெற வேண்டாம்.

அறிமுகமற்றவர்களிடமும் அல்லது தெரியாத வலைத் தளங்களிலும் நமது சொந்த தனிப்பட்ட தகவல்களை கொடுக்க வேண்டாம்.
எளிதான கடவுச்சொற்களை உருவாக்க வேண்டாம், அக்கடவுச்சொற்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே யிருக்கவும் அதனை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.
பயன்படுத்தாத சமயத்தில் கணினி அல்லது மடிக்கணினியை அநாதையாக  விட்டுசெல்லவேண்டாம்.
தத்தமது சுயவிவரத்தையும் புகைப்படங்களையும்  இணையத்திலும் நம்பிக்கையில்லாதவர்களிடம் வழங்கவேண்டாம்.

ஃபேஸ்புக் போன்ற தளங்களில் அந்நியர்களை சேர்க்க வேண்டாம்.

தனிப்பட்ட பதிவுகளை ஆன்லைன் மூலம் வெளியிடுவதை தவிர்க்கவும்.
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் கணக்கு தேவைப்படாது போது அதனை செயல்படாது வைத்திருப்பதா அல்லது முழுவதுமாக நீக்கம்செய்துவிடுவதா

ஒருசில நேரங்களில் நமக்கு ஃபேஸ்புக் கணக்கு தேவைப்படாது அப்போது அதனை செயல்படாது வைத்திருப்பது நல்லதா அல்லது முழுவதுமாக நீக்கம்செய்துவிடுவது நல்லதா என குழப்பம் ஏற்படும்

இந்த ஃபேஸ்புக் கணக்கு நமக்கு தேவைப்படாதபோது செயல்படாமல் வைத்திட்டால் நம்முடைய நண்பர்கள் நம்மைபறறிய விவரங்களையும் நம்முடைய உருவபடங்களையும் தெரிந்துகொள்ள முடியாது. புதியவர்கள் நம்மைபற்றிய விவரத்தை தேடி அறிந்து கொள்ளவே முடியாது

ஆனால் ஃபேஸ்புக்  தளமானது இந்த விவரங்களை தன்னுடைய நினைவகத்தில் சேமித்து வைத்திருக்கும் இது ஒருதற்காலிகமான ஏற்பாடாகும் தேவைபடும்போது மீண்டும் செயல் படுமாறு செய்து  நம்மை பற்றிய விவரங்களில் பழையநிலையை பராமரிக்கமுடியும்

இவ்வாறு செய்வதற்காக இந்த தளத்தின் மேலே கட்டளைபட்டியில் Account=> Account Settings=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.

உடன் தோன்றும் திரையின் இடதுபுறத்தில்  உள்ள Security என்ற தாவிபொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.

பின்னர் விரியும் Security என்ற தாவியின் திரையில் Deactivate my account என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

அவ்வாறு செயற்படுத்தியவுடன் தோன்றிடும் திரையில் நம்முடைய கணக்கினை செயல்படாது வைத்திருப்பதற்கான காரணங்களை பட்டியலாக காண்பிக்கும் அவற்றுள் ஒன்றை தெரிவுசெய்து Confirm என்ற பொத்தானை சொடுக்கி நம்முடைய ஃபேஸ்புக் கணக்கின் கடவுச்சொற்களை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

உடன் நம்முடைய கணக்கு செயல்படாததாக மாறிவிடும் மீண்டும் செயல்படுத்திட இந்த தளத்தில் நம்முடைய  மின்னஞ்சல்முகவரியையும் கடவுச்சொற்களையும் உள்ளீடுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

ஆனால் நம்முடைய ஃபேஸ்புக் கணக்கை நீக்கம்செய்தால் நம்மைபற்றிய விவரமுழுவதும் நிரந்தரமாக நீக்கம்செய்துவிடும்  நமக்கு ஃபேஸ்புக் கணக்கே தேவையில்லை எனும் போது மட்டும் நீக்கம் செய்வதற்கு என தனியான தொரு  delete என்ற பொத்தான் எதுவும் இந்த தளத்தில் இல்லை ஆயினும் பின்வரும் இணைய முகவரியை இதற்காக பயன்படுத்தி கொள்ளலாம் https://www.facebook.com/help/contact.php?show_form=delete_account  அல்லது “delete my account என்ற கட்டளையை செயற்படுத்துவதன்மூலம் இந்த தளத்திற்கு செல்லமுடியும்  நீக்கம் செய்வதற்கான  இணைப்பு முகவரியை சொடுக்கியவுடன் இந்த தளமானது this action is permanent and that you cannot reactivate.என்ற ஒரு எச்சரிக்கை செய்தியை நமக்கு தெரிவிக்கும்  தொடர்ந்து கண்டிப்பாக நீக்கம் செய்யவிரும்பினால் Submit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் தோன்றிடும் திரையில் நம்முடைய கடவுச்சொல்லையும் கேப்ஷா எழுத்துகளையும் உள்ளீடுசெய்து  Okay. என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

உடன் நம்முடைய கணக்கை நீக்கம் செய்யாமல் பராமரித்திட மீண்டும் ஒரு வாய்ப்பாக மேலும் 14 நாட்களுக்கு மட்டில் நம்கணக்கு பற்றிய விவரங்களை நீக்கம் செய்திடாமல் பராமரிப்பதாகவும் தேவையெனில் இந்த காலக்கெடுவிற்குள் நம்முடைய கணக்கை மீட்டு கொள்ளலாம் என்றும் எச்சரிக்கும்

அவ்வாறு அளிக்கபட்ட 14நாட்கள் கொடுமுடிந்தவுடன் பின்வருமாறு செய்தி உறுதி செய்து கொள்வதற்காக தோன்றிடும்

அதில் Confirm Deletion என்ற பொத்தானை சொடுக்கினால் முழுவதுமாக நம்முடைய ஃபேஸ் தளத்தின் கணக்கு  நீக்கம் செய்யபட்டுவிடும் அல்லது  மனம்மாறி Cancel Deletion என்ற பொத்தானை சொடுக்கினால் நம்டைய கணக்கு நீக்கம் செய்யாமல் பராமரிக்கபடும்

 

செல்லிடத்து பேசியிலும் நம்முடைய வலைபூவை காணும்படி செய்யலாம்

புதியதாக வலைபூ ஒன்றை உருவாக்கி அதை பல்வேறு வழிகளில் மேம்படுத்தி கணினி மட்டுமல்லாது செல்லிடத்து பேசியிலும் பார்த்து மகிழும்படி செய்யமுடியும் இவ்வாறு செல்லிடத்து பேசியில் நம்முடைய வலைபூவை காண்பதற்கான வழிமுறை பின்வருமாறு

முதலில்  நம்முடைய வலைபூவை திறந்து கொள்க பின்னர் அந்த திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள dashboard=> அமைப்புகள் (settings) => மின்னஞ்சல் மொபைல் (email& mobile)=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும் திரையில்  mobile template  என்ற தலைப்பின் கீழ் show mobile template என்பதற்கருகே உள்ள 1.Yes. Show mobile template on mobile devices, 2.No. Show desktop template on mobile devices. ஆகிய இரு வாய்ப்புகளில்  No. Show desktop template on mobile devices. என்ற வாய்ப்பை மட்டும் தெரிவு செய்து கொண்டு  அமைப்புகளை சேமி (save settings) என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

இவ்வாறு மாற்றுவதால் நம்முடைய வலைபூவானது கணினியில் திறந்து பார்ப்பதை போன்று செல்லிடத்து பேசியிலும் திறந்து பார்க்கமுடியும்.

 கருத்துரைபெட்டியின் (comment box) மேல்மீட்பு சாளரம் (popup window)

நம்முடைய வலைபூவின் பதிவுகளுக்கு வாசகர்களின் கருத்துகளை கூறுவதற்காக அதற்கான கருத்துரைபெட்டியை (comment box)  பதிவுக்கு கீழே வைத்திருப்போம்  இதனால்  செல்லிடத்து பேசியிலிருந்து  கருத்துரைகள் உள்ளீடுசெய்வது சற்று சிரமமான செயலாகும்.

எவ்வாறெனில் பதிவை திறப்பதற்கு ஒரு முறையும்  அப்புறம் கருத்துரைபெட்டியை சொடுக்கினால்  இரண்டாவது முறையும்  அதன்பிறகு நம்முடைய கருத்துகளை தட்டச்சு செய்து  apply என்ற பொத்தானை சொடுக்குவதால் மூன்றாவதொரு முறையும் . மறுபடியும் apply என்ற பொத்தானை சொடுக்கியபின்னர்  நான்காவதுமுறையும் பதிவேற்றம் ஆகியபின் பதிவிற்கு கீழே வாசகர்களினுடைய கருத்துகள் திரையில் காண்பிக்கும்.

ஆக, செல்லிடத்து பேசியிலிருந்து  ஒரு வலைபூ பதிவிற்கு கருத்துகளை உள்ளீடு செய்வதற்கு ஏறத்தாழ நான்கு முறை அந்த பதிவு முழுமைக்கும் பதிவேற்றமாகிறது. இதனால் நம்முடைய பதிவிற்கு செல்பேசியில் காண்பவர்களிடமிருந்து  கருத்துரைகள் வருவது குறைய வாய்ப்பு ஏற்படுகின்றது. செல்லிடத்து பேசி வைத்திருப்பவர்களும் எளிதாக நம்முடைய வலைபூவை பார்வையிட்டு தங்களின் கருத்துரைகளை உள்ளீடு செய்வதற்கு ஏதுவாக அதனை popup window ஆக வைத்திடுவது மிகநன்று அதற்காக

Dash board=>  அமைப்புகள் (settings) =>  கருத்துரைகள் (comments)  => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும்  திரையில் கருத்துரைபடிவஇடம்(comment form placement)  என்பதற்கருகில் உள்ள வாய்ப்புகளில் மேல்தோன்றும் சாளரம் (popup window ) என்ற வாய்யப்பை தெரிவுசெய்து அமைப்புகளை சேமி (save settings) என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

இதனால் கணினிமூலம் கருத்துரை உள்ளீடு செய்பவர்களுக்கும் எளிது. பதிவு அப்படியே இருக்கும். கருத்துரை பெட்டி புதியசாளரமாக  திறக்கபட்டு செயல்படுத்தபடும்

வலைபூவின் மாதிரிபடிமம் (template) செல்லிடத்து பேசிக்கு ஏற்புடையதாகஉள்ளதா?

ஒருசில வலைபூக்கள் செல்லிடத்து பேசியில் திறக்கமுடியும் , ஆனால் அதில் தமிழ் எழுத்துக்கள் தெரியாது. இதனால் அந்த வலைபூவை செல்லிடத்து பேசியில் படிக்க இயலாது. எனவே இவ்வாறான நிலையில். புதிய மாதிரி படிமத்தை (template) நம்முடைய வலைபூக்களுக்கு தெரிவுசெய்யும் போது செல்லிடத்து பேசிமூலம் அனுகுபவர்களுக்கும் பிரச்சனை இல்லாத சரியான மாதிரி படிமத்தை (template) கவனமாக தேர்ந்தெடுத்திடுக.

Previous Older Entries