Lua எனும் கணினிமொழியில் forஎனும் கண்ணியை(loop) செயல்படுத்திடும் வழிமுறையை நான்கே நிமிடங்களில் தெரிந்து கொள்க

நிரலாக்கத்தில், மறு செய்கை என்பது ஒரு முக்கியமான கருத்தமைவாகும், ஏனெனில் நிரலானது பெரும்பாலும் தரவுகளின் தொகுப்பை பல முறை வருடுதல் செய்ய வேண்டும், இதனால் ஒவ்வொரு உருப்படியையும் தனித்தனியாக செயலாக்க முடியும். கட்டுப்பாட்டு கட்டமைப்புகளானவை நிரல் இயங்கும் போது மாறும் வகையில் நிறுவப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் நிரலின் ஓட்டத்தை இயக்க நம்மை அனுமதிக்கிறது. வெவ்வேறு கணினிமொழிகள் வெவ்வேறு கட்டுப்பாடுகளை வழங்குகின்றன, மேலும் while , for , repeat until ஆகிய கண்ணிகள் உள்ளன . இந்த கட்டுரையில் அவ்வாறான கண்ணிகளில் for எனும் கண்ணியை மட்டும் காண்போம்.
for எனும் கண்ணி
ஒரு for எனும் கண்ணியானது அறியப்பட்ட அளவு பொருட்களை எடுத்து ஒவ்வொரு “பொருளும்(item)” செயலாக்கப்படுவதை உறுதி செய்கிறது. இங்கு “item” என்பது எண்ணாக இருக்கலாம். பல உள்ளீடுகள் அல்லது லுவாவின் தரவு வகைகளைக் கொண்ட அட்டவணையாகவும் இருக்கலாம். இதன் இலக்கணமும் தர்க்கமும் சற்று நெகிழ்வானவை, ஆனால் இலக்கணம் இந்த அளவுருக்களை அனுமதிக்கிறது, ஒவ்வொன்றும் அதனடிப்படையில் ஒரு கணக்கீட்டினை விவரிக்கிறது:
• கணக்கீட்டின் தொடக்க மதிப்பு
• கணக்கீட்டை நிறுத்தும் மதிப்பு
• கணக்கீட்டினை அதிகரிக்க விரும்பும் மதிப்பு
எடுத்துக்காட்டாக, நம்மிடம் மூன்று உருப்படிகள் உள்ளன ஒவ்வொன்றையும் லுவா செயல்படுத்த வேண்டும் எனக்கொள்க. இதற்கான கணக்கீடு 3 இல் தொடங்கி 1 வரை -1 ஆக குறைத்துகொண்டேவரவேண்டும். இது 3, 2, 1 என்ற எண்ணிக்கையை வழங்குகிறது அதற்கான குறிமுறைவரிகள் பின்வருமாறு.
mytable = { “zombie”, “Halloween”, “apocalypse” }
for count = 3, 1, -1 do
  print(count .. “: ” .. mytable[count])
end
இதில்மூன்று உருப்படிகளும் செயலாக்கப்படுவதை உறுதிசெய்திட இந்த நிரலாக்கத்தினை இயக்கிடுக:
$ lua ./for.lua
3: apocalypse
2: Halloween
1: zombie
இந்த குறிமுறைவரிகள் “தலைகீழ்(reverse) ” அட்டவணையை திறம்பட செயலாக்கிடுகின்றது, ஏனெனில் இது ஒரு தலைகீழ்கணக்கீடாகும். அதற்கு பதிலாக மேலே உயர்த்தியும் கணக்கிடலாம் அதற்கான குறிமுறைவரிகள் பின்வருமாறு:
for count = 1, 3, 1 do
  print(mytable[count])
end
இந்த எடுத்துக்காட்டானது அட்டவணையை மிகக் குறைந்த அடைவெண்ணிலிருந்து உயர்ந்தஅடைவெண் வரைசெயலாக்குகிறது:
$ lua ./for.lua
1: zombie
2: Halloween
3: apocalypse
உயர்த்துதல்கள்(Increments)
நாம் விரும்பினால் இந்த உயர்த்துதலையும் மாற்றலாம். எடுத்துக்காட்டாக, Halloween இன் ஆடம்பரமும் சூழ்நிலையும் இல்லாமல் ஒரு zombie apocalypseஐ நாம் விரும்பலாம் அதற்கான குறிமுறைவரிகள் பின்வருமாறு:
mytable = { “zombie”, “Halloween”, “apocalypse” }
for count = 1, 3, 2 do
  print(mytable[count])
end
இந்த நிரலாக்கத்தினை இயக்கிடுக:
$ lua ./for.lua
zombie
apocalypse
எடுத்துக்காட்டானது 1 , 3 ஆகியவற்றினை மட்டும் அச்சிடுகின்றது, ஏனெனில் முதல் எண்ணிக்கை 1 ஆக இருந்தது, பின்னர் அது 2 ஆல் அதிகரிக்கப்பட்டது (மொத்தம் 3).
கணக்கீடு(Counter)
சில நேரங்ங்களில், தரவை மீண்டும் மீண்டும் செயற்படுத்திட லுவா எத்தனை முறை செய்யவேண்டும் என நமக்குத் தெரியாது. இவ்வாறானசூழலில், கணக்கீட்டை வேறு சில செயல்முறைகளால் நிரப்பப்பட்ட மாறிக்கு மாற்றியைமைக்கலாம்.
மேலும், இதில் சொற்களில் எழுத்துகளின் எண்ணிக்கை ஒரு முக்கியமன்று. தெளிவுக்காக இந்த மாதிரிக் குறிமுறைவரிகளில் varஎனும் மாறிப் பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக நிரலாளர்கள் i அல்லது c போன்ற சிறியஅளவிலான எழுத்தினைகூடப் பயன்படுத்திகொள்வார்கள் .
var = os.time()
if var%2 == 0 then
  mytable = { var }
else
  mytable = { “foo”, “bar”, “baz” }
end
for c = 1, #mytable, 1 do
  print(mytable[c])
end
இந்தக் குறிமுறைவரிகளானவை எப்போது துவங்கப்பட்டது என்பதன் நேர முத்திரையைக் கொண்ட ஒரு மாறியை உருவாக்குகிறது. நேர முத்திரை சமமாக இருந்தால் (2 ஆல் வகுக்கும் போது அது 0 எனும் மட்டினைக் கொண்டுள்ளது), பின்னர் நேர முத்திரை ஒரு அட்டவணையில் வைக்கப்படும். நேர முத்திரை ஒற்றைப்படையாக இருந்தால், அது ஒரு அட்டவணையில் மூன்று சரங்களை வைக்கிறது.
நம்முடைய for எனும் கண்ணி(loop) எத்தனை முறை இயங்க வேண்டும் என்பதை இப்போது நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. இது ஒரு முறை அல்லது மூன்று முறை, ஆனால் உறுதியாக செல்வதற்கான வழி இல்லை. தொடக்க எண்ணிக்கையை 1 ஆகவும், இறுதி எண்ணிக்கையை அட்டவணையின் நீளமாகவும் அமைப்பதே தீர்வாகும் (#mytable என்பது அட்டவணையின் நீளத்தைக் கண்டறிய உள்ளமைக்கப்பட்ட குறுக்குவழியாகும்).
இரண்டு முடிவுகளையும் காண, உரைநிரலை இயக்குவதற்கு சில முறை ஆகலாம், ஆனால் இறுதியில், பின்வருவதைப் போன்ற ஒன்றை முடித்திடமுடியும்:
$ lua ./dynamic.lua
1665447960
$ lua ./dynamic.lua
foo
bar
baz
pairs ,ipairs ஆகியவற்றுடனான ipairs for எனும் கண்ணி
இது ஒரு அட்டவணையில் மீண்டும் மீண்டும் செய்ய pairs அல்லது ipairs ஆகியசெயலிகளைப் பயன்படுத்திகொள்கிறது அதற்கான குறிமுறைவரிகள்:
mytable = { “zombie”, “Halloween”, “apocalypse” }
for i,v in ipairs(mytable) do
  print(i .. “: ” v)
end
pairs ,ipairs ஆகிய செயலிகளின் அட்டவணையை “unpack” செய்து, நாம் வழங்கும் மாறிகளில் மதிப்புகளை திணித்திடுகின்றது. இந்த எடுத்துக்காட்டில், குறியீட்டுக்கு i என்பதையும் மதிப்பிற்கு v ஐப் பயன்படுத்திகொள்கின்றது, ஆனால் மாறிகளின் பெயர்கள் முக்கியமில்லை.
$ lua ./for.lua
z1: zombie
2: Halloween
3: apocalypse
for எனும் கண்ணி
இந்தfor எனும் கண்ணியின் அமைப்பு லுவாவின் நிரலாக்கத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படுவதால் அட்டவணைகளிலும் pairs எனும் செயலி மிகவும் பொதுவானது. இந்த for எனும் கண்ணியின் கட்டமைப்பைப் புரிந்துகொள்வது அதைக் கட்டுப்படுத்தும் போது நம்மிடம் உள்ள வாய்ப்புகள், லுவாவில் தரவை எவ்வாறு செயலாக்குவது என்பது குறித்து நாம் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க முடியும் என்பதாகும்.

ஒலியின்கடல்(Ocenaudio) எனும் கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடு

ஒலியின்கடல்(Ocenaudio) எனும் கட்டற்ற கட்டணமற்ற குறுக்கு-தள பயன்பாடானது, பயன்படுத்த எளிதானது, செயல்பாட்டு ஒலி திருத்தியின். சிக்கல்கள் எதுவுமில்லாமல் ஒலி கோப்புகளை விரைவாக திருத்தம் செய்திடவேண்டிய பகுப்பாய்வு செய்ய வேண்டிய நபர்களுக்கு இது மிகச்சிறந்த பயன்பாடாகும். மேலும் மேம்பட்ட பயனர்களை மகிழ்விக்கும் சக்திவாய்ந்த வசதி வாய்ப்புங்களையும் இது(ocenaudio) கொண்டுள்ளது.
இந்த மென்பொருள் Ocen Framework எனும் வரைச்சட்டத்தினை அடிப்படையாகக் கொண்டது, இது பல தளங்களில் ஒலியை கையாளுதலிற்கான பகுப்பாய்வு செய்திடும் பயன்பாடுகளின் வளர்ச்சியை எளிமைப்படுத்தவும் தரப்படுத்தவும் உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த நூலகமாகும். இது ஒரு எளிதானதும், விரைவாக செயல்படக்கூடியதுமான சக்திவாய்ந்த ஒலிதிருத்திக்கான பயன்பாடாகும்
VST செருகுநிரல்களின் ஆதரவு : இது VST எனச்சுருக்கமாக அழைக்கப்பெறும் மெய்நிகர்படபிடிப்பக தொழில்நுட்ப(Virtual Studio Technology) செருகுநிரல்களை ஆதரிக்கிறது, அதன் பயனர்களுக்கு அதன் பல விளைவுகளுக்கு அணுகலை வழங்குகிறது. சொந்த விளைவுகளைப் போன்றே, VST விளைவுகளையயும் நிகழ்நேர முன்னோட்டத்தைப் பயன்படுத்தி உள்ளமைவுசெய்திடுவதற்கு உதவுகின்றது.
விளைவுகளின் நிகழ்நேர முன்னோட்டம்: EQ,, gain ,filtering போன்ற விளைவுகளைப் பயன்படுத்துவது ஒலிதிருத்தியில் ஒரு முக்கிய பகுதியாகும். இருப்பினும், கட்டுப்பாடுகள் உள்ளமைவை மட்டும் சரிசெய்வதன் மூலம் விரும்பிய முடிவைப் பெறுவது மிகவும் தந்திரமானது; செயலாக்கப்பட்ட ஒலியை கேட்கவும். ஒலியின் விளைவுகளின் உள்ளமைவை எளிதாக்கிடவும், இது(ocenaudio)நிகழ்நேர முன்னோட்ட வசதியைக் கொண்டுள்ளது: கட்டுப்பாடுகளை சரிசெய்யும்போது செயலாக்கப்பட்ட சமிக்ஞையை கூட நாம் காதால் அவ்வொலியை கேட்கலாம்.
விளைவு உள்ளமைவு சாளரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒலிச்சைகையின் மீச்சிறு காட்சியும் உள்ளடங்கியதாகும். இதன்முதன்மை இடைமுகத்தில் நாம் செய்வது போன்றே இந்தமீச்சிறு(miniature) காட்சியிலும் செல்லலாம், நமக்கு விருப்பமான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அதன் விளைவை நிகழ்நேரத்தில் கேட்கலாம்.
குறுக்குதள ஆதரவு :இது(ocenaudio) விண்டோ, மேக் லினக்ஸ்ஆகிய அனைத்து முக்கிய இயக்க முறைமைகளுக்கும் கிடைக்கிறது: . சிறந்த செயல்திறன்கூடிய இயங்குதளத்துடன் தடையற்ற ஒருங்கிணைப்பை அடைவதற்காக, ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு பொதுவான மூலத்திலிருந்து சொந்த பயன்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. இதன்(ocenaudio)அனைத்து பதிப்புகளும் ஒரே மாதிரியான வசதிவாய்ப்புகளையும் அதே வரைகலை இடைமுகத்தையும் கொண்டிருக்கின்றன, எனவே நாம் ஒரு தளத்தில் கற்றுக் கொள்ளும் திறன்களை மற்றவற்றிலும் பயன்படுத்திகொள்ளலாம்.
இதனுடைய மேம்பாட்டிற்கு உதவ, Ocen Framework எனப்படும் ஒலிதிருத்தி, பகுப்பாய்வு கையாளுதலுக்கான சக்திவாய்ந்த கருவித்தொகுப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதுQt எனும்கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது, இது குறுக்குதள மேம்பாட்டிற்கான நன்கு அறியப்பட்ட நூலகமாகும்.
நுட்பமான பதிப்புகளுக்கான பல தேர்வு: சிக்கலான ஒலிக்கோப்புகளைத் திருத்துவதை விரைவுபடுத்த, இது பல தேர்வுகளை உள்ளடக்கியது. இந்த அற்புதமான கருவி மூலம், ஒரே நேரத்தில் ஒலிக்கோப்பின் வெவ்வேறு பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றைக் கேட்கலாம், திருத்தலாம் அல்லது ஏதேனுமொரு விளைவைப் பயன்படுத்திகொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, நேர்காணல் செய்பவர் பேசும் நேர்காணலின் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் இயல்பாக்க விரும்பினால், அவற்றைத் தேர்ந்தெடுத்து விளைவைப் பயன்படுத்திகொள்ளமுடியும்.
பெரிய கோப்புகளின் திறமையான திருத்தம்: இதன்(ocenaudio) மூலம், நாம் திருத்தக்கூடிய ஒலிக்கோப்புகளின் நீளம் அல்லது அளவு ஆகியவற்றிற்கு வரம்புஎதுவும் இல்லை. மேம்பட்ட நினைவக மேலாண்மை அமைப்பைப் பயன்படுத்தி, பயன்பாடு நம்முடைய கணினியின் நினைவகத்தை வீணாக்காமல் நம்முடைய கோப்புகளைத் திறந்து வைத்திருக்கும். பல மணிநேர நீளமான கோப்புகளில் கூட, நகலெடுப்பது, வெட்டுவது அல்லது ஒட்டுவது போன்ற பொதுவான திருத்திடு் செயல்கள் கிட்டத்தட்ட உடனடியாக நடக்கும்.
முழுமையாக இடம்பெற்றுள்ள அலைமாலை (spectrogram): நம்முடைய ஒலிகோப்புகளின் நம்பமுடியாத அலைவடிவக் காட்சியை வழங்குவதைத் தவிர, இதுசக்திவாய்ந்த முழுமையான அலைமாலை காட்சியைக் கொண்டுள்ளது. இந்த பார்வையில், நம்முடைய ஒலிச்சைகையின் நிறமாலை உள்ளடக்கத்தை அதிகபட்ச தெளிவுடன் பகுப்பாய்வு செய்யலாம்.
அலைமாலை அமைப்புகள் உண்மையான நேரத்தில்அதிர்வெண் பட்டைகளின் எண்ணிக்கை, சாளர வகை அளவு காட்சியின் இயக்கநேர வரம்பு போன்ற வசதிகளை மாற்றும் போது அக்காட்சிகள் உடனடியாக புதுப்பிக்கப்படுகின்றது.
மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்திடவும் https://www.ocenaudio.com எனும் இணையதளமுகவரிக்கு செல்க

Trilium Notes எனும் வித்தியாசமான குறிப்பேடு

இந்த குறிப்பேடானது மேசைக்கணினி பயன்பாடாக (லினக்ஸ் விண்டோ) அல்லது சேவையாளரில் (லினக்ஸ்) புரவலராக செய்யப்பட்ட இணையப் பயன்பாடாக வழங்கப்படுகிறது. Macஇயக்கமுறைமையில் மேசைக்கணினி பயன்பாடாக கிடைக்கிறது, ஆனால் அது இன்னும்ஆதரிக்கப்படவில்லை.
மேசைக்கணினியில் இதனைப் பயன்படுத்த விரும்பினால், சமீபத்திய வெளியீட்டிலிருந்து நம்முடைய இயங்குதளத்திற்கான இரும வெளியீட்டைப் பதிவிறக்கம்செய்து, தொகுப்பை அவிழ்த்து, இது இயங்கக்கூடியதாக இயக்கிடுக.
இதனை சேவையாளரில் நிறுவுகைசெய்திட விரும்பினால் அதற்கான, அறிவுரையை பின்பற்றிடுக.
தற்போது சமீபத்திய Chrome , Firefox ஆகியஇணைய உலாவிகள் மட்டுமே ஆதரிக்கின்றது .
இது பெரிய அளவில் தனிப்பட்ட அறிவை வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்ற ஒரு படிநிலை குறிப்பு எடுக்கும் பயன்பாடு ஆகும்
இதில் குறிப்புகளை தன்னிச்சையாக பெரிய மரம்போன்று அமைக்கலாம். ஒற்றை குறிப்பை மரத்தில் பல இடங்களில் வைக்கலாம்
மீப்பெரும் WYSIWYG குறிப்பு திருத்தி உட்பட எ.கா. அட்டவணைகள், படங்கள் மார்க் டவுன் தானியங்கி வடிவத்துடன் கணிதகணக்கீடு ஆகியவற்றினை கொண்டது
இலக்கண சிறப்புவசதிகள் உட்பட மூலக் குறிமுறைவரிகளைக் கொண்டு குறிப்புகளைத் திருத்துவதற்கான ஆதரவு கொண்டது
குறிப்புகளுக்கு இடையே விரைவான எளிதான வழிசெலுத்தல், முழுமையான உரைத் தேடல் குறிப்பு புரவலர் >> தடையற்ற குறிப்பு பதிப்பு >> குறிப்பு பண்புக்கூறுகள் குறிப்பு அமைப்பு, வினவல்கள், மேம்பட்ட உரைநிரல்கள் >> சுய-புரவலாக செய்யப்பட்ட சேவையகத்துடன் ஒத்திசைவு ஆகிய வசதிகளை கொண்டது.
• ஒவ்வொரு குறிப்பிற்கும் பரல்தன்மையுடன் கூடிய வலுவான குறிப்பு குறியாக்கம் >> குறிப்புகள் அவற்றின் உறவுகளைக் காட்சிப்படுத்துவதற்கான தொடர்பு வரைபடங்கள் இணைப்பு வரைபடங்கள் >> உரைநிரல்கள் ஆகிய வசதிகளை கொண்டது
• 100 000 இற்கு மேற்பட்ட குறிப்பேடுகளுக்கு மேல் இதனை பயன்படுத்திகொண்டாலும் இதன் செயல்திறன் நன்றாக உள்ளது
• திறன்பேசிகள் கைகணினிக ஆகியவற்றிற்கு உகந்த முகப்புபக்கத்தைத் செயற்படுத்தி பயன்பெறுமுடியும்
• Evernote , Markdown ஆகியவற்றில் பதிவிறக்கம் & பதிவேற்றம் செய்திடும் வசதிகொண்டது
• இணைய உள்ளடக்கத்தை எளிதாகச் சேமிப்பதற்கான Web Clipper கொண்டுள்ளது
Cloud Sync வெவ்வேறு சாதனங்கள் , மேகக்கணியில் தரவை (குறிப்பேடுகள், ஆவணங்கள், புத்தகபக்கஅடையாளங்கள் போன்றவை) ஒத்திசைக்கலாம்.
1. End-to-End Encryption இது ஆனது பயன்பாட்டின் முழுமைக்கும் அல்லது குறிப்பிட்ட பகுதிகளுக்கும் E2E மறையாக்கததினைக் கொண்டுள்ளது.
2. Dark Mode குறைந்த ஒளி நிலைகளில் வசதியாகப் பயன்படுத்த இருண்ட பயன்முறையை ஆதரிக்கிறது.
3. இதனுடைய வலைநறுக்கி மூலம் இணையத்திலிருந்து எந்தப் பக்கத்தையும் உள்ளடக்கத்தையும் ஒரே சொடுக்குதலில் சேமிக்கலாம்.
4. எந்தவொரு TrackingTrilium குறிப்புகளும் நம்மை கண்காணிக்காது அல்லது நம்முடைய தனிப்பட்ட தரவைப் பயன்படுத்தாது.
இது ஒருகட்டற்ற கட்டணமற்ற சுயபுரவலாரான பயன்பாடாகும்
இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக (AGPL-3.0)எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்பெற்றுள்ளது .மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://github.com/zadam/trilium எனும் இணையதளமுகவரிக்கு செல்க

ImageMagick எனும் வரைகலைத்(படத்) திருத்தி ஒரு அறிமுகம்

ImageMagick என்பது ஊடாடாத முனைய அடிப்படையிலான வரைகலைத்(படத்) திருத்தியாகும். உரை-மட்டுமான(text-only) முனைமம் போன்ற குறைவான வரைகலைச் சூழலில் வரைகலை படத்தினைத் திருத்த முயற்சிப்பது எதிர்மறை யானதாகத் தோன்றலாம், ஆனால் இது மிகவும் பொதுவானசெயலாகும். எடுத்துக்காட்டாக, இணையப் பயன்பாட்டிற்கு சுயவிவரப் படமாகப் பயன்படுத்த ஒரு உருவப்படத்தைப் பதிவேற்றம்செய்திடும்போது, பயன்பாட்டின் சேவையாளரில் உள்ள உரையானது நம்முடைய உருவப்படத்தை இந்த ImageMagick அல்லது அதன் நூலகங்களைப் பயன்படுத்தி செயலாக்குகிறது. ஊடாடாத திருத்தியின் நன்மை என்னவென்றால், ஒரு மாதிரி படத்திற்குள் என்ன செய்ய வேண்டும் என்பதை நாமே உருவாக்கலாம், பின்னர் ஒரு பொத்தானை அழுத்தினால் அந்த விளைவுகளை நூற்றுக்கணக்கான பிற படங்களுக்குப் பயன்படுத்திகொள்ளலாம். ImageMagick ஆனது பொதுவாக மற்ற எந்தவொரு வரைகலை திருத்தியைப் போன்றே திறன்மிக்கது, நாம் சாய்வாக இருக்கும் சொல்லின் எழுத்துகளை சுழற்ற விரும்புவதாக கொள்க. இதில் நாம் விரும்பிய விளைவுகளை அடைவதற்கு அவற்றை எவ்வாறு இணைத்து செயல்படுத்திடுவது என இதனுடைய பல செயலிகளை வெளிக்கொணர சிறிதுநேரம் எடுக்கும் வரை காத்திருந்திடுக..
மேலும் ImageMagick இல் ஆவணங்களைத் தேடிய பிறகு, நமக்கு தேவையான தீர்வுக்கான ImageMagickஇன் சொல் deskew என்பதைக் காணலாம். நம்முடைய சொற்களை வேறொருவரின் சொற்களுடன் சீரமைப்பது நமக்கு ஏற்கனவே தெரியாத செயலை செயற்படுத்திடுவதற்கான ஒரு சவாலாகும், எனவே நாம்ImageMagick ஐ அணுகும்போது (அல்லது வேறுஎதையும்), நாம் தீர்மானித்த சொல்லானது ஒரு பிரச்சனை அல்லது தீர்வு ஒரே மாதிரியாக இருக்காது என்பதை நினைவில் கொள்க. வேறொருவர் பயன்படுத்திய சொல். ImageMagick ஐப் பயன்படுத்தி வளைவான உரையுடன் படத்தை deskew ஆக செய்வதற்கான கட்டளைவரி பின்வருமாறு:
$ convert page_0052.webp -deskew 25% fix_0052.webp  -deskew 
இந்த வாய்ப்பு நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வளைவின் நுழைவாயிலைக் குறிக்கிறது. எழுத்துக்களாகத் தோன்றும் பொருட்களின் மிகஅதிகஉயரங்களையும் மிககுறைந்த உயரங்களையும் கண்டுபிடிப்பதன் மூலம் ஒரு வளைவான எழுத்துக் களின் தொகுப்பு தீர்மானிக்கப்படுகிறது. வருடுதல் எவ்வளவு வளைந்துள்ளது என்பதைப் பொறுத்து, நமக்கு 25% க்கும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தேவைப்படலாம். 80% வரை சென்றாலும், இதுவரை 25%க்குக் குறைவான எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. மிகபொருத்தமாக சரி செய்யப்பட்டுவிட்டது! ஆவணத்தின் மீதமுள்ள பக்கங்களுக்கு இதைப் பயன்படுத்துவதன் மூலம், ஏற்கனவே நேராக இருக்கும் பக்கங்களுக்கு எதுவும் செய்யாமல், வளைந்த எழுத்துக்களி்ன் பக்கங்கள் மட்டும் சரி செய்யப்பட்டன. வேறு சொற்களில் கூறுவதெனில், சரிசெய்தல் தேவைப்படாத பக்கங்களில் இந்த கட்டளையை இயக்குவது பாதுகாப்பானது,
ImageMagick மூலம் படத்தை செதுக்குதல்
வளைவைச் சரிசெய்த பிறகு, தற்செயலாக சொற்களை வெட்டுவதைத் தடுக்க எப்படியும் ஒவ்வொரு பக்கத்தையும் தேவையானதை விட அதிகமாக வருடுதல் செய்ததால், திருத்தப்பட்ட பக்கங்களை செதுக்குவது அர்த்தமுள்ளதாக முடிவு செய்திடலாம். விளிம்புகளைச் சுற்றி சிறிது இடத்தை வைத்திருப்பது நல்லது, ஆனால் நம்மிடம் ஏற்கனவே இருந்த அளவுக்கு இல்லாத இணையதளபக்கத்தில் உள்ள படங்களுக்கு ImageMagick இன் செதுக்குதல் செயலியைஅடிக்கடி பயன்படுத்தி கொள்ளலாம், எனவே இந்த வாய்ப்பு நன்கு தெரிந்திருந்ததால் நல்லது. இருப்பினும், ஒவ்வொரு பக்கத்தையும் எவ்வாறு செதுக்குவது என்பதை நாம் தீர்மானிக்க வேண்டியிருக்கும். முதலில்,படத்தின் அளவு தேவைப்படும் அதற்கான கட்டளைவரிகள் பின்வருமாறு :
$ identify fixed_0052.webp
WEBP 1128×2593 1128×2593+0+0 8-bit sRGB 114732B 0.020u 0:00.021
படத்தின் அளவை அறிந்து, எத்தனை பிக்சல்களை இழக்க முடியும் என்பது பற்றி சில மதிப்பீடுகளைச் செய்ய முடியும். சில சோதனை ஓட்டங்களுக்குப் பிறகு, இதைக் கொண்டு வரமுடியும் அதற்கான கட்டளைவரி பின்வருமாறு:
convert fix_0052.webp -gravity Center -crop 950×2450+0+0 crop_0052.webp
இது சரியான பொருத்தமாக தெரியவில்லை, ஆனால்சிறு புத்தகத்தில் உள்ள மற்ற படங்களுக்கு இதைப் பயன்படுத்திடும்போது இது முக்கியமானதாகும். பக்கங்களின் உள்ளடக்கமானது அங்கொன்றும் இங்கொன்றுமாக வருடியில் இடமாற்றம் ஆகியவற்றில் வேறுபடுகின்றன, எனவே ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறிய ஓய்வெடுத்திடும் அறையை வழங்குவது நல்லது. ImageMagick இன் சிறப்பு என்னவென்றால், நம்முடைய படத்தைச் சரிசெய்வதற்கான சூத்திரத்தை கண்டறிந்ததும், அதே திருத்தம் தேவைப்படும் மிகுதியுள்ள அனைத்துப் படங்களுக்கும் அந்தத் திருத்தத்தைப் பயன்படுத்திகொள்ளலாம். ImageMagick என்பது கட்டற்ற கட்டணமற்ற மென்பொருளாகும், இது இயக்குவதற்கு தயாராக இருக்கும் பைனரி விநியோகம் அல்லது மூலக் குறிமுறைவரிகள் திறந்த தனியுரிமை பயன்பாடுகளில் பயன்படுத்திகொள்ளலாம், நகலெடுத்திடலாம், மாற்றங்கள் செய்திடலாம் மறுவிநியோகம் செய்திடலாம். இது Apache 2.0 உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது. ImageMagick செயல்திறனை அதிகரிக்க பல கணக்கீட்டு அளவுகளைப் பயன்படுத்திகொள்கிறது அதாவது மெகா-, கிகா- அல்லது டெரா-பிக்சல் பட அளவுகளில் படிக்க, செயலாக்க அல்லது எழுத முடியும். தற்போதைய வெளியீடு ImageMagick 7.1.0-51 ஆகும். இது Linux, Windows, Mac Os X, iOS Android OS போன்ற பல இயக்கமுறைமைகளில் இயங்குகின்ற திறன்மிக்கது
மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://imagemagick.org/script/download.php எனும் இதனுடைய இணையதளபக்கத்திற்கு செல்க

எக்செல்லில் கடைசியாக செய்த செயலை மீண்டும் செய்வதற்கான (குறுக்கு வழிவிசைகள்)

எனது வேலையை விரைவுபடுத்த எக்செல் இல் குறுக்குவழிவிசைகளைப் பயன்படுத்துவதில் நான் ஒரு பெரிய ரசிகன்.எக்செல்லில் நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற பல்வேறு குறுக்குவழிவிசைகள் இருந்தாலும், கடைசியாகச் செய்த செயலை மீண்டும் செய்யும் திறன் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
அதாவது எக்செல்லில்ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியிருக்கும் போது இதுமிகவும் பயனுள்ளதாக இருக்கும் (கலணின்/கிடைவரிசைக்கு வடிவமைப்பைப் பயன்படுத்துதல் அல்லது கிடைவரிசைகள்/நெடுவரிசைகளைத் தேர்ந்தெடுத்து நீக்குதல் போன்றவை).
இந்த குறுகிய பயிற்சியில், நாம் செய்த கடைசி செயலை மீண்டும்மீண்டும் செய்யக்கூடிய இரண்டு வழிமுறைகளைக் காண்போம்.
எளியதாக விசைப்பலகையில் குறுக்குவழிவிசைகளைப் பயன்படுத்துவது அல்லது கருவிப்பட்டியில் விரைவான அணுகுதலிற்கான ஒரு உருவப்பொத்தானைச் சேர்ப்பது ஆகிய இரண்டும்எளிதான வழிகளாகும், அதில் எக்செல்லில் நாம் செய்த கடைசி செயலை ஒரே சொடுக்குதலில் மீண்டும் மீண்டும்செய்கின்றது.
விசைப்பலகை குறுக்குவழிவிசைகளைப் பயன்படுத்தி கடைசியாக செய்த செயலை மீண்டும் மீண்டும்செய்தல்
நாம் பல்வேறு வகையான செயல்களை மீண்டும்மீண்டும் செய்ய முடியும் என்றாலும், எக்செல்லில் ஒரு கலணில் வண்ணத்தை நிரப்பி, அதை பலமுறை மீண்டும் செய்ய வேண்டிய ஒரு எடுத்துக்காட்டாககொள்வோம்.
எக்செல்லில்ஒரு தரவுத் தொகுப்பு என்னிடம் உள்ளது, அதில் சில பொருட்களின் பெயர்கள் நெடுவரிசைAஇல் உள்ளன அவற்றின் விற்பனை மதிப்புகள் நெடுவரிசை B இல் உள்ளன, மேலும் இந்தத் தரவில் உள்ள சில பெயர்களைமட்டும் கைமுறையாக முன்னிலைப்படுத்த விரும்புகிறேன்:
இதைச் செய்வதற்கான படிமுறைகள்பின்வருமாறு:
முன்னிலைப்படுத்த விரும்பும் கலணைத் தேர்ந்தெடுத்திடுக
முகப்பு (Home) எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
உடன்விரியும் திரையில் fill color எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் அதில்குறிப்பிட்ட கலணை முன்னிலைப்படுத்த விரும்பும் வண்ணத்தைத் தேர்ந்தெடுத்திடுக
உடன் குறிப்பிட்ட கலணை நாம் தேர்ந்தெடுக்கப்பட்டவண்ணத்தால் முன்னிலைப்படுத்தும்:
இப்போது இந்தத் தரவுத் தொகுப்பில் உள்ள மற்ற இரண்டு கலண்களையும் முன்னிலைப்படுத்த விரும்பினால், மேலே உள்ள படிமுறாகளை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியதில்லை.
நாம் கடைசியாக செய்த செயலை நினைவில் கொண்டுள்ளது அதனால் அதேசெயலை நாம் அந்த படிமுறையில் மீண்டும் செய்யலாம்.
இதற்காகக விசைப்பலகையில் இரு குறுக்குவழிவிசைகளை உள்ளன
F4 எனும்விசையைப் பயன்படுத்துதல்
வழக்கமாகச் செய்கின்ற செயலை ஒரு முறை செயற்படுத்திடுக எடுத்துக்காட்டில், ஒரு கலணை ஒருவண்ணத்தை கொண்டு முன்னிலைப்படுத்தினோம்
அதே செயலை மீண்டும் செய்ய விரும்பும் கலணைத் தேர்ந்தெடுத்திடுக
விசைப்பலகையில் F4 விசையை அழுத்திடுக உடன் எக்செல்லானது நாம் கடைசியாக செய்த செயலை மீண்டும் செய்திடுகின்றது இதனை எத்தனை முறைவேண்டுமானாலும் செயற்படுத்திடலாம

எடுத்துக்காட்டாக, A4,A5, A6 A7, A8 A9 ஆகிய கலண்களை நாம் கடைசியாக தெரிவுசெய்த வண்ணத்தினால் முன்னிலைப்படுத்த விரும்பினால், இந்த கலண்களை ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து, இந்த கலண்களுக்கு ஒரே வண்ணத்தை திரும்ப திரும்ப நிரப்பிடுவதற்கு F4 விசையை அழுத்திடுக.
குறிப்பு: விசைப்பலகையில் செயலிவிசை (fn) இயக்கப்பட்டிருந்தால், அந்த செயலி விசையை அழுத்திப் பிடிக்க வேண்டும், பின்னர் கடைசி செயலை மீண்டும் செய்ய F4 விசையை அழுத்திடுக.
Ctrl + Y ஆகியவிசைகளை சேர்த்திடுஅழுத்துதல்
நாம் எக்செல்லில் கடைசி செய்தசெயலை மீண்டும் செய்ய பயன்படுத்தக்கூடிய மற்றொரு விசைப்பலகையின் குறுக்குவழி
Ctrl + Y (விண்டோஸில்)
இந்த குறுக்குவழிவிசைகளைப் பயன்படுத்த, எக்செல்லில் நாம் செய்த கடைசி செயலை மீண்டும் செய்ய விரும்பும் கலண்கள் அல்லது கலண்களின் வரம்பை தேர்ந்தெடுத்திடுக, பின்னர் விசைப்பலகையில் Ctrl எனும் விசையை அழுத்திப் பிடித்துக்கொண்டு Y எனும் விசையை அழுத்திடுக.
Quick Access எனும் கருவிப்பட்டியிலின்Repeatஎனும் உருவப்பொத்தானை பயன்படுத்துதல்
விசைப்பலகையின் புதிய புதிய குறுக்குவழிகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இல்லாவிட்டால், எக்செல்லில் கடைசியாக நாம் செய்த செயலை மீண்டும் மீண்டும் செய்வதற்கான மற்றொரு வழிமுறையை இதுவாகும்
(QAT) என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற விரைவுஅணுகல் கருவிப்பட்டியின் (Quick Access Toolbar (QAT)) உதவியுடன் எக்செல்லில் நாம் கடைசியாக செய்த செயலை மீண்டும் செயற்படுத்திடு வதற்காக Repeat எனும் கட்டளையைச் சேர்க்கலாம், இதன் மூலம் நாம் ஒரு பொத்தானைமட்டும் சொடுக்குதல் செய்வதன் மூலம் அதை அணுகி நம்முடையசெயலை மீண்டும் செயற்படுத்திடலாம் (மேலும் QAT எப்போதும் திரையில்தெரியும் என்பதால் நாம் சேர்த்த Repeat எனும் கட்டளையும் எப்போதும் திரையல் காட்சியாக தெரியும்).
விரைவு அணுகல் கருவிப்பட்டியில் Repeat எனும் கட்டளையைச் சேர்ப்பதற்கான படிமுறைகள் பின்வருமாறு:
இதற்காக முதலில் QAT என்பதில் உள்ள ‘Customize Quick Access Toolbar’ எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
பின்னர் விரியும் திரையில் Customizeஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக.
தொடர்ந்து Customize எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
பின்னர் எக்செலின் Options எனும் உரையாடல் பெட்டியில், ‘Choose commands from’ எனும் கீழிறங்கு பட்டியை சொடுக்குக.
உடன்விரியும் கட்டளைகளினகீழிறங்கு பட்டியிலிருந்து choose என்பதை சொடுக்குக
All Commandஎனும் வாய்ப்பினை தேர்ந்தெடுத்திடுக.
commands பட்டியலில் இடம்சுட்டியை கீழே உருட்டி, சென்று Repeat எனும் கட்டளையை தேர்ந்தெடுத்திடுக
Add எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
மேலே கூறிய படிமுறைகளில் விரைவு அணுகல் கருவிப்பட்டியில் மீண்டும் கட்டளையைச் சேர்க்கும், மேலும் இந்த ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் கடைசி செயலை மீண்டும் செய்யலாம்.
விரைவு அணுகல் கருவிப்பட்டியில் Repeat எனும் உருவப்பொத்தானாக சேர்க்கப்பட்டது
குறிப்பு: எக்செல் நாம் கடைசியாக செய்த ஒரேயொரு செயலை மட்டுமே மீண்டும் மீண்டும் செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்க. நாம் கடைசி யாக செய்த இரண்டு அல்லது மூன்று செயல்களை மீண்டும் செய்வதற்காக இந்த வழிமுறையைப் பயன்படுத்த முடியாது.
Microsoft Excelக்கான இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ள வழிமுறைகள் MS Word அல்லது MS Powerpoint அல்லது MS Project போன்ற பிற Microsoftஇன் பயன்பாடுகளிலும் செயல்படும் என்ற செய்தியை மனதில் கொள்க.
ஏனெனில் இந்தப் பயன்பாடுகள் அனைத்திலும் விரைவு அணுகல் கருவிப்பட்டியைக் கொண்டுள்ளன, எனவே இந்தப் பயன்பாடுகளிலும் QAT இல் Repeat எனும் உருவப்பொத்தானை சேர்க்கலாம்.
பொதுவாக ஒன்றிற்குமேற்பட்ட செயல்களை மீண்டும் செய்ய விரும்பினால், ஒரு மேக்ரோவை பதிவு செய்வது அல்லது VBA குறிமுறைகளஐ எழுதுவது சிறந்த வழியாகும், பின்னர் ஒவ்வொரு முறையும் மீண்டும் செய்ய விரும்பும் VBA குறிமுறைவரிகளை இயக்கிபயன்பெறுக.

கோப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான DC++ எனும் பயன்பாடு

DC++ என்பது நேரடி இணைப்பு /மேம்பட்ட நேரடி இணைப்பின் (Direct Connect / Advanced Direct Connect )வாயிலாக கோப்புகளை பகிர்ந்துகொள்கின்ற வலை பின்னலிற்கான திறமூல விண்டோ இயக்கமுறைமையின் ஒருவாடிக்கையாளர் ஆகும். DC++ வலைபின்னல் என்பது ஒரு பரவலாக்கப்பட்ட வலைபின்னல் ஆகும், இது பயனாளர்கள் அந்த மையத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களுடன் கோப்புகளை எளிதாக பகிர்ந்து கொள்வதற்காக இணையும் தனிப்பட்ட சேவையகங்களால் (மையங்கள்(hubs)) உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு மையமும் DC++வலைபின்னலின் சக பயனாளரால் தனித்தனியாக இயக்கப்படுகிறது, மேலும் மையத்தில் உள்ள உள்ளடக்கத்திற்கு சில கருப்பொருள்கள் இருக்கலாம். இந்த மையத்தின் உரிமையாளர்கள் தங்களுக்கு ஏற்றவாறு தங்கள் மையத்தை ஒழுங்கு படுத்துவதற்கான விதிகளை அமைக்கின்றனர்.
DC++ ஆனது கோப்புகளை பகிர்ந்துகொள்கின்ற சுதந்திரத்தை அறிவிக்கிறது!
இது நேரடி இணைப்பு கட்டுப்பாடுகள் அல்லது வரம்புகள் எதுவும்இல்லாமல் இணையத்தில் கோப்புகளைப் பகிர்ந்துகொள்ள நம்மை அனுமதிக்கிறது. முற்றிலும் விளம்பரங்கள் எதுவும் இல்லாத, பயன்படுத்த எளிதான ஒரு நல்ல இடைமுகத்தைக் கொண்டுள்ளது. Firewall , வழிசெலுத்தி ஆகியவற்றிற்கான ஆதரவு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது ஒன்றிற்கு மேற்பட்ட மையங்களின் இணைப்புகள், தானியங்கி-இணைப்புகள் பதிவிறக்கங்களை மீண்டும் துவங்குதல் போன்ற செயல்பாடுகளை இதில் பயன்படுத்துவது எளிதானதாகவும் வசதியானதாகவும் உள்ளது.
2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் DC++ ஆனது Sourceforge இல் மாதந்திர செயல்திட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிய பயனர்கள் பலரும் இதில் இணைவதால் ஒவ்வொரு நாளும் ஐம்பது மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களுடன்தற்போது இந்த பயன்பாடு வளர்ந்து இருப்பதை காணலாம்.
முக்கிய வசதி வாய்ப்புகள்
தேவையில்லாத விளம்பரங்கள், உளவாளி(spyware) அல்லது தொகுக்கப்பட்ட மென்பொருள் எதுவும் இதில்இல்லை
இது ஒரு திறமூல மென்பொருளாகும்,GNU GPLஎனும் உரிமத்தின்கீழ்கட்டணம் எதுவுமில்லாமல் இதனுடைய மூலக்குறிமுறைவரிகள் கிடைக்கின்றது
ஒரே நேரத்தில் பல மையங்களில் இணைகிறது
(ADC & NMDC)என்பன போன்ற பல நெறிமுறை ஆதரவு கொண்டது
புத்தக குறியீடு போன்ற விருப்பமான மையங்கள் பயனர்களின் பட்டியல்கொண்டுள்ளது
நம்முடைய நிறுவன செயல் திட்டத்தின்படி பெரிய கோப்புகள் போன்ற பல கோப்புகளைப் பகிர்ந்துகொள்ளமுடியும்
இதில் Tiger Tree Hashes (TTH) என்பது கோப்பு ஒருமைப்பாட்டிற்குப் பயன்படுத்தி கொள்ளப்படுகிறது
கோப்பு வகை, அளவு, பெயர் அல்லது hash மூலம் இணைக்கப்பட்ட அனைத்து (அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட) மையங்களிலும் தேடிடலாம்
பதிவிறக்கங்களின் மறுதொடக்கம், TTH மூலம் மாற்று ஆதாரங்களுக்கான வாய்ப்பின் தானியங்கி தேடல் வசதிகொண்டது
அரட்டை, தனிப்பட்ட செய்திகள், பதிவிறக்கங்கள் ,பதிவேற்றங்களுக்கான பதிவு வாய்ப்புகள் ஆகிய உள்ளமைவு வசதிகொண்டது
UpnP,NAT-PMP ஆகிய வழிசெலுத்திகளின் தன்னியக்க உள்ளமைவுடன் தானியங்கி இணைப்பு அமைப்பு கொண்டது
குறிப்பிட்ட உள்ளடக்கத்துடன் இணைப்பதற்கான MAGNET இணைப்பிற்கான ஆதரவு கொண்டது
தானியங்கி , கைமுறை பதிவிறக்க முன்னுரிமைகள் கொண்டுள்ளது
உலாவுதல் ,வரிசைப்படுத்த பயனர்களின் கோப்புப் பட்டியல்களைச் சேமித்தல் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது
GUI ஆனது சமூககுழுக்கள் வழங்கும் Gettext .po ஆகிய மொழிக் கோப்புகளைப் பயன்படுத்தி பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது
தனித்தனியாக பிரிக்கப்பட்ட பதிவிறக்க வசதி கொண்டுள்ளது
NAT-Traversal ஆதரவு , TLS இன் மறையாக்கம் ட் செய்யப்பட்ட பாதுகாப்பான மைய வாடிக்கையாளர் தொடர்பு , கோப்பு பரிமாற்றங்கள்
அலைவரிசையை கட்டுப்படுத்தும் திறன்கள், செருகுநிரல் ஆதரவு, நேரடி மறைகுறியாக்கப்பட்ட தனிப்பட்ட செய்திகள் கொண்டது
இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ,(GPLv3)எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்பெற்றுள்ளது .மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் ,https://dcplusplus.sourceforge.io/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க