ஆழ்கற்றல்(Deep Learning)குறித்து ஒரு விரைவான பார்வை

ஆழ்கற்றல்(Deep Learning) என்பது இயந்திர கற்றல்(Machine Learning) என்பதன்ஒரு துணைக்குழுவாகும், ஆழ்கற்றல் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து வருகிறது, ஆனால் 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து மிகவிரைவாக உருவாகத் தொடங்கியது. உருவாக்கும் AI, ChatGPT ஆகியவை அதன் மீது மீண்டும் கவனம் செலுத்தியுள்ளன. ஆழ்கற்றல் என்றால் என்ன, அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து இப்போது காண்போம்.
தரவு மேலாண்மை என்பது ஒவ்வொரு நிறுவனமும் எதிர்கொள்கின்ற மிகக்கடினமான ,அதிக செலவுபிடிக்கக்கூடிய பணிகளில் ஒன்றாகும். நிறுவனங்கள் ஒரு தலைமை தரவு அதிகாரியை (CDO) நியமிப்பது, தரவை நிர்வகிப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது – அதன் தீர்வு, வகைப்பாடு, பகுப்பாய்வு, பாதுகாப்பு, இணக்கத் தேவைகள் போன்றவைகளாகும். இங்குதான் ஆழ்கற்றல் (DL) சரியான உத்திகளுடனும் கருவிகளுடனும் பணிபுரிகின்ற மிகச்சரியான தரவு நிருவாகியாக திகழ்கிறது..
DL சிறிது காலமாக இருந்து வந்தாலும், ChatGPT இன் சமீபத்திய பிரபலம் அதை மீண்டும் AI உலகில் ஒரு பரபரப்பான செய்தியாக கொண்டு வருகிறது. இது மனித மூளையானது எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது, எவ்வாறு செயல் படுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது.
DL பெரிய அளவிலான தரவுகளிலிருந்து கற்றுக்கொள்ள செயற்கை நரம்பியல் வலைபின்னல்களைப் பயன்படுத்திகொள்கிறது. அதனால்இது deep’ என்ற பெயரைப் பெறுகிறது, ஏனெனில் இது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நரம்புகளின் பல அடுக்குகளை செயலாக்க ,தரவைக் கற்றுக்கொள்ள உதவுகிறது. DLஇன்தருக்கபடிமுறைகள் படங்கள், ஒலி ,உரை ஆகியவற்றில் சிக்கலான வடிவங்களைக் கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவை. ஆழ்கற்றல், தரவுகளில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பை வடிவங்களைக் கற்றுக்கொள்வதற்கு அதிக அளவில் பெயரிடப்படாத தரவைப் பயன்படுத்தி கொள்கிறது. இது ஒரு மேற்பார்வை செய்யப்படாத கற்றல் தொகுதி ஆகும், இந்த கற்றலைத் தொடங்க முத்திரையிடப்பபட்ட தரவு தேவையில்லை.
ஆழ்கற்றல் 1940 களில் இருந்து உள்ளது. இருப்பினும், இது 1980 களில் நரம்பியல் வலைபின்னல்களைப் பயிற்றுவிப்பதற்கான ஒரு நுட்பமான back propagation, வளர்ச்சியுடன் பிரபலமடைந்தது. 2000களில், வெளியேற்றுதல் ,திருத்தப்பட்ட கோட்டுஅலகுகள்(rectified linear units (ReLU)) தொடர்பான மேம்பட்ட நுட்பங்களின் பரிணாமம் முக்கிய சவால்களை எதிர்கொள்ள உதவியது. 2012 ஆம் ஆண்டில், AlexNet, உருவப்பட அங்கீகாரத்தில் கவனம் செலுத்திய ஒரு வழக்கமான நரம்பியல்போன்ற வலைபின்னல், விருதுகளை வென்றது ,இயற்கை மொழி செயலாக்கம் (NLP), பேச்சு அங்கீகாரம், தன்னாட்சி வாகனங்களில் முக்கிய பயன்பாடுகளுக்காக மீண்டும் பிரபலமடைந்து வருகின்றது.
ஆழ்கற்றலின்பொதுவான பயன்பாடுகள்பின்வருமாறு பட்டியலிடப் பட்டுள்ளன.
உருவப்பட அங்கீகாரம்: நோய்களைக் கண்டறிவதற்காக DLதருக்கபடி முறைகளை மேம்படுத்தும் உருவப்படங்களின் வகைப்பாடு சுகாதார நிறுவனங்கள் முழுவதும் செய்யப்படுகிறது.
இயற்கை மொழி செயலாக்கம் (NLP): NLP, DL தருக்கபடிமுறைகளுடன் ஒருங்கிணைக்கப்படும் போது, அரட்டைதளங்கள்(chatbots), இயந்திர மொழிபெயர்ப்பு , குரல் உதவியாளர்கள் போன்ற பயன்பாட்டு நிகழ்வுகளைஉருவாக்குகிறது.
பேச்சு அறிதல்: DL தருக்கபடிமுறைகள் பேச்சுக்கு-உரை மொழிமாற்றமும் குரல் உதவியாளர்கள் போன்ற பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு பேச்சு மொழியை மொழிமாற்றமும் செய்ய உதவுகின்றன.
மோசடி கண்டறிதல்: ஆழ்கற்றல் வழிமுறைகள் வங்கி , நிதியில் மோசடியான பரிமாற்றங்களை கண்காணிக்க உதவுகின்றன.
தன்னியக்க வாகனங்கள்: DLதருக்கபடிமுறைகள் குறிப்ப்டடபகுதிகளுக்குச் வாகனங்கள் தன்னியக்கமாக செல்ல உதவுகின்றன, இந்த மகிழுந்துகள் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது நிகழ்நேர முடிவுகளை உடனுக்குடன் எடுக்க உதவுகிறது.
ஆழ்கற்றலில் உள்ள ‘deep’ என்பது நரம்பியல் வலைபின்னல்களில் உள்ள அடுக்குகளின் ஆழத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதால், மூன்று அடுக்குகளுக்கு மேல் உள்ள ஒரு நரம்பியல் வலையமைப்பு ஆழ்கற்றல் வழிமுறையாகக் கருதப்படுகிறது. படம் 1 இல் காட்டப்பட்டுள்ளபடி, பெரும்பாலான ஆழ்கற்றல் வலைபின்னல்கள் முன்செலுத்திடும் (feed-forward) மாதிரிகளாகும். ஆனால் அவை மீண்டும் பிரச்சாரம் செய்ய பயிற்சி பெறலாம். பிந்தையது பிழைகள் பற்றிய கருத்தை வழங்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இதனால் தருக்கபாபடிமுறைகள்ம்சரியான முறையில் சரிசெய்யப்படும்.
ஆழ்கற்றல் – நரம்பியல் வலைபின்னல்
ஆழ்கற்றலின் நரம்பியல் வலைபின்னலின் துல்லியத்தை சரிபார்க்க பல்வேறு ஆய்வுகளும் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன. குறைந்தது மூன்று மறைக்கப்பட்ட அடுக்குகளைக் கொண்ட வலைபின்னல் தரவு வகைப்படுத்தலில் 98 சதவீதத்திற்கும் அதிகமான துல்லியத்தை உருவாக்கியுள்ளது. பின்புலப் பரப்பு முறையின் முறையான தத்தெடுப்புடன் இந்த எண்ணிக்கை உயர்கிறது. இது மிகவும் அருமையாக செயல்படுகிறது, இம்மாதிரிகளுக்குத் துவங்குவதற்கு எந்தவொரு முன்தயாரிப்பு அல்லது முன்நிபந்தனைகளும் தேவையில்லை.
ஆழ்கற்றல் என்பது இயந்திரக் கற்றலின் துணைக்குழுவாகக் கருதப்பட்டாலும், ஒவ்வொரு தருக்கபடிமுறையும் எவ்வாறு கற்றுக்கொள்கிறது, ஒவ்வொரு வகை தருக்கபடிமுறையும் எவ்வளவு தரவைப் பயன்படுத்துகிறது என்பதில் அதன் சொந்த தனித்தன்மைகளைக் கொண்டுள்ளது. எந்த முன்நிபந்தனைகளும் இல்லாமல் பெரிய கட்டமைக்கப்படாத தரவுத் தொகுப்புகளை அதன்உட்பகுதியில் மனித தலையீட்டை நீக்குவதை DL தானியங்கிபடுத்துகிறது என்பது தொழில்துறை பயன்பாடுகளுக்கு மிகவும் அளவிடக்கூடிய, விரிவாக்கக்கூடிய நடைமுறை தீர்வாக அமைகிறது.
ஆழ்கற்றல் குறைந்த பராமரிப்புப் பயன்பாடாகத் தோன்றலாம், ஆனால் அதிக அளவிலான தரவைச் செயலாக்குவதற்குத் தேவைப்படும் உயர் கணினியின் சக்தி, மறைந்திருக்கும் அடுக்குகளின் கருப்புப் பெட்டித் தன்மை ஆகியவை பலருக்கு அதை ஏற்றுக்கொள்வதில் குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்துகின்றன. மேலும், அது உருவாக்கும் தரவின் வகைப்பாடு, பொருள் அதற்கு அளிக்கப்பட்டதன் பிரதிபலிப்பாகும். வகைப்பாடுகளைப் புரிந்து கொள்வதற்குத் திறமையான தரவு அறிவியலாளர்கள் தேவை, அதே போன்று தெளிவானவைகளைக் கண்டறிய மாதிரியைச் செம்மைப்படுத்தவும் ஒத்தியக்கம் செய்க.
DLதருக்கபடிமுறைகள் சரியானவை அல்ல, இன்னும் பல ஆய்வுகளும் தெளிவுபடுத்தப்பட வேண்டியவைகளாகும், AI இன் மற்ற துறைகளைப் போலவே, அதன் நுட்பம் பல தொழில்துறை பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு சக்திவாய்ந்ததாகவும் சிறந்ததாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மனித தலையீடு இல்லாமல் கற்றுக் கொள்ளும் திறன், உருவப்படம், கானொளி, உரையின் பெரிய தரவுத் தொகுப்பு களை முத்திரையிடுவது, ஆழ்கற்றலை பெரிய நிறுவனங்களுக்கான விளை யாட்டை மாற்றும் உத்தியாக மாற்றுகிறது, பொதுவாக, 80 சதவீதத்திற்கும் அதிக மான தரவு கட்டமைக்கப்படவில்லை. இயந்திரக் கற்றலை இலக்காகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதில் இந்த முத்திரையிடுவது ஒரு முக்கியமான படிமுறையாகும்.

PicViewஎனும் கட்டற்ற பயன்பாடு

படக்காட்சி (PicView) என்பது Windows 10 அல்லது 11ஆகிய இயக்க முறைமைக்கான விரைவான திறமையான படக் காட்சியாளராகும், இது ஒரு தெளிவான சுருக்கமான பயனர் இடைமுகத்துடன் வருகிறது, தேவையில்லாத போது இந்த வசதியை மறைத்திடலாம்.
இது WEBP, GIF, SVG, PNG, JXL, HEIC, PSD போன்ற பல்வேறு படங்களின் கோப்பு வகைகளை ஆதரிக்கிறது.
கூடுதலாக, PicView ஆனது EXIF தரவு காட்சி, பட சுருக்கம், தொகுதி மறுஅளவாக்கம், காப்பகங்கள்/படக்காட்சி புத்தகங்களில் படங்களைப் பார்ப்பது, பட மாறுதல்கள், காட்சியகங்கள் ,என்பன போன்ற பல்வேறு வசதிகளையும் உள்ளடக்கியது.
இதுசுத்தமான, கட்டணமற்ற, விரைவாக செயல்படுகின்ற பயன்பாடாகும்இதில். அதிக UI இல்லை. எரிச்சலூட்டுகின்ற மேல்மீட்புபட்டிகள் இல்லை. இதுசிறிய , நிறுவுகைசெய்யக்கூடிய பதிப்புகளுடன் கிடைக்கிறது.
முக்கியவசதிவாய்ப்புகள்:
மங்காபடக்கதையை/சிரிப்புபடக்கதையை மனதில் கொண்டு உருளும் செயலி கட்டமைக்கப் பட்டுள்ளது. படத் தெளிவுத்திறனுக்கு ஏற்றவாறு சாளரத்தின் மாறும் அளவை மாற்றுகிறது, படங்களில் உலாவரும்போது EXIFதரவை விரைவாகக் காணவும், இடைமுகத்தை மறைக்கவும் முடியும், படத்தைக் காட்ட, Otimize Image எனும் பொத்தானைப் பயன்படுத்தி படங்களை இழப்பின்றி சுருக்கவும் கோப்பின் பெயர், தெளிவுத்திறன், படத்தின் அளவு ,இதரவசதி ஆகியவற்றைக் காண்பிக்கிறது. தலைப்புப் பட்டியில் உள்ள விகிதம் உள்ளுணர்வு அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தி படக் கோப்புறையில் எளிதாக உலாவரலாம் அடிப்படைத் திருத்தம்: சுழற்றுதல், புரட்டுதல், வெட்டிஎறிதல், கோப்பு வகையை மாற்றுதல், கோப்புகள், கோப்புறைகள், இணையமுகவரிகள்(URL) , காப்பகங்கள் ஆகியவற்றிற்கான துனுக்குகளின் பிடிப்பாளர் ஆதரவிலிருந்து இழுத்து விடுதல்/ஒட்டுதல் வாய்ப்புடன் முழுத் திரை அல்லது கிடைமட்ட/சாளரம் கொண்ட தொகுப்பு கோப்பு வரலாறு கொண்டுள்ளது, எனவே இதில் நாம் நம்முடைய பணியை விட்ட இடத்திலிருந்து எளிதாக தொடரலாம்
தனிப்பயனாக்கக்கூடிய இடைமுகம் (இருண்ட அல்லது வெள்ளை தீம் இடையே தேர்வு செய்க, 12 வகைகளான அனுகுதல் வண்ணங்களுக்கு இடையே தேர்வு செய்க.)
ZIP, RAR, 7z, 7Zip, Iso, Cab, Wim, Tar, BZip2, RAR போன்ற காப்பகங்களில் உள்ள படங்களைப் பார்வையிடுக (நிறுவப்படுவதற்கு 7-Zip அல்லது WinRAR தேவை)
cbr, cb7, cbt, cbz, cb போன்ற படக்கதைக் புத்தகக் காப்பகங்களில் உள்ள படங்களைப் பார்வையிடுக
எதிர்மறை வண்ணங்கள், பழைய திரைப்பட விளைவுகள், பென்சில் ஸ்கெட்ச் போன்றவை உட்பட 27 வெவ்வேறு நிழல் விளைவுகள் (பட வடிப்பான்கள்).
படத்தை வால்பேப்பராக அமைக்கவும் (பட விளைவும் பயன்படுத்தப்படும்)
கோப்புகளை வரிசைப்படுத்துதல்: பெயர், கோப்பு அளவு, உருவாக்கப்பட்ட தேதி, கடைசியாக அணுகப்பட்டது, சமீபத்திய திருத்தம், கோப்பு நீட்டிப்பு, சீரற்றதாக
பின்வருமாறான பெரிய கோப்பு ஆதரவினை கொண்டது
.jpg .jpeg .jpe .png .bmp .tif .tiff .gif .ico .jfif .webp .jxl .jp2
.psd .psb .xcf .svg .svgz .heic, .heif .tga .dds .b64
.3fr .arw .cr2 .cr3 .crw .dcr .dng .erf .kdc .mdc .mef .mos .mrw .nef .nrw .orf .pef .raf .raw .rw2 .srf .x3f
.pgm .hdr .cut .exr .dib .emf .wmf .wpg .pcx .xbm .xpm .wbmp
இது ஒரு கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடாகும்.மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://picview.org/ எனும் இணையதள முகவரிக்கு செல்க.

விளம்பரமில்லாத YouTube இற்கு மாற்றான PeerTube எனும் பயன்பாடு

PeerTube என்பது YouTube, Dailymotion அல்லது Vimeo போன்ற தரவையும் கவனத்தையும் மையப்படுத்துகின்ற பிற தளங்களுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட ஒரு கட்டணமற்ற, பரவலாக்கப்பட்ட , ஒருங்கிணைந்த கானொளிகாட்சிதளமாகும். ஆனால் இது(PeerTube) புரவலராக செய்கின்ற ஒரு நிறுவனத்தில் மட்டும் அதன் சேவையாளர்களின் அலைவரிசை, கானொளி காட்சி ஆகிய சேமிப்பகத்திற்கு போதுமான பணம் செலுத்த தேவையில்லை ActivityPub ஐ செயல்படுத்துவது பற்றி பேசுவதன் மூலம். இதில் WebTorrent வழியாக இணைய உலாவியில் P2P (BitTorrent) காரணமாக கானொளிகாட்சியின் சுமை குறைக்கப்பட்டுள்ளது.
கானொளிகாட்சி தொடரோட்டம் நம்முடைய கானொளிகாட்சிகளை பதிவேற்றினால் போதும், அவை எங்கும் தொடரோட்டம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்க. ஒரு விளக்கம், சில குறிச்சொற்களைச் சேர்க்கவும், கானொளிகாட்சியின் நிகழ்வு மட்டுமன்று, முழு கானொளிகாட்சி fediverseஆலும் கண்டறிய முடியும். நமக்குப் பிடித்த இணையதளத்தில் அதற்கான இயக்கியையும் உட்பொதிக்கலாம்!
கானொளிகாட்சி படைப்பாளர்களுடன் தொடர்பில் இருந்திடுக: PeerTube அல்லது வேறு எந்த இடத்திலிருந்தும் நமக்குப் பிடித்தஅலைவரிசைகளைப் பின்தொடர்ந்திடுக. ஒரு கானொளிகாட்சியை அதன் படைப்பாளரைப் பின்தொடர பார்த்த நிகழ்வில் கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை, அதையெல்லாம் Fediverse (Mastodon, Pleroma…) மூலமாகவோ அல்லது RSS மூலமாகவோ செய்துகொள்ளலாம்.
முகப்புபக்க அழைப்பதற்கான இடைமுகம்: அது ஒரு பயனராக இருந்தாலும் அல்லது ஒரு நிகழ்வு நிர்வாகியாக இருந்தாலும், அனுபவம் எப்படி இருக்கும் என்பதை நாமே தீர்மானிக்கலாம். குறிப்பிட்ட நிறங்கள் பிடிக்கவில்லையா? அவற்றை மாற்றுவது எளிது. ஒரு நிகழ்வின் கானொளிகாட்சிகளை பட்டியலிட விரும்பவில்லை, ஆனால் பயனர்கள் அவற்றில் குழுசேர அனுமதிக்க வேண்டுமா? வழக்கமான இணைய வாடிக்கையாளர் பிடிக்கவில்லையா? இவை அனைத்தும் மாற்றியமைத்துகொள்ளலாம், மேலும் பல. UX dark pattern இல்லை, தரவை தன்வயப்படுத்துதலும் இதில்இல்லை, கானொளிகாட்சியின் பரிந்துரை bullshit கூடஇதில்இல்லை.
ஒருவருக்கொருவர் உதவும் சமூககுழுக்கள்: WebTorrentஐப் பயன்படுத்தும் பார்வையாளர்கள் தங்களுக்குள் சுமைகளைப் பகிர்ந்து கொள்வதற்கு கூடுதலாக, ஒருவருக்கொருவர் கானொளிகாட்சிகளைத் தேக்கி வைப்பதன் மூலம் நிகழ்வுகள் ஒருவருக்கொருவர் உதவுகின்றனர். இந்த வழியில் சிறிய நிகழ்வுகள் கூட பரந்த பார்வையாளர்களுக்கு உள்ளடக்கத்தைக் காண்பிப் பதற்கான ஒரு வழியைக் கொண்டுள்ளன, ஏனெனில் அவை நண்பர்களின் நிகழ்வுகளால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் தங்களுடைய பார்வையாளர்களிடமிருந்து எளிய முறையில் உதவியைப் பெறலாம்: அவர்களின் நன்கொடை கணக்குகள் அல்லது உண்மையில் வேறு எதையும் இணைக்கும் செய்தியைக் காட்டும் ஆதரவு பொத்தானை இது கொண்டுள்ளது.
PeerTubeஇன் முக்கியவசதிவாய்ப்புகள்
பரவலாக்கப்பட்ட:PeerTube ஆனது, எந்த ஒரு நிறுவனத்தையும் கட்டுப்படுத்தாமல், பரவலாக்கப்பட்ட உள்கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது.
விளம்பரம் இல்லாதது:PeerTubeல் வெளிப்புற விளம்பரங்கள் எதுவும் இல்லை.
ActivityPub க்கான ஆதரவு:PeerTube ஆதரவு ActivityPub, ஒரு திறந்த பரவலாக்கப் பட்ட சமூக வலைப்பின்னல் நெறிமுறையை கொண்டுள்ளது.
தனியுரிமையில் கவனம்:PeerTube தனியுரிமை நட்பு மாற்றாக கருதப்படுகிறது.
Dark Mode: இது குறைந்த வெளிச்சத்தில் வசதியான பயன்பாட்டிற்காக Dark Modeஐ ஆதரிக்கிறது.

இது ஒரு கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடாகும்.மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://joinpeertube.org எனும் இணையதள முகவரிக்கு செல்க.

AutoClicker எனும் சொடுக்குதல்களுக்கான கட்டற்ற கட்டணற்றபயன்பாடு

இது இயக்கநேரஇடம்சுட்டியின் இருப்பிடத்திலோ அல்லது குறிப்பிட்ட இடத்திலோ தானியங்கிசொடுக்குதல் செய்கின்ற இரண்டு வழிமுறைகளைக் கொண்ட முழு அளவிலான தானியங்கிசொடுக்குதலாகும். இதில்சொடுக்குதல் செய்தவற்றின் அதிகபட்ச அளவுகளையும் அமைக்கலாம் (அல்லது எல்லையற்றதாக விட்டுவிடலாம்).
இதற்காக (hotkeys) பின்னணியில் செயல்படுகின்றன.
v1.0.0.2 எனும்பதிப்பில் புதியதாக என்னென்ன வசதி உள்ளது:

  1. இப்போது நம்முடைய (hotkeys)ஐ மாற்றலாம்!
  2. இதனைபற்றியவிரங்களின் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன
  3. சில சிறிய வாய்ப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது
    v1.0.0.1 :
  4. அமைப்புகள் இப்போது நம்முடைய கடைசி அமர்விலிருந்து சேமிக்கப்பட்டுள்ளன, எனவே அவற்றை ஒரு முறை மட்டுமே உள்ளிட வேண்டும். (கடைசி நிலையான இடமும் அடங்கும்)
  5. இருமுறை சொடுக்குதலும் மும்முறைசொடுக்குதலும் சேர்க்கப்பட்டுள்ளது
  6. வலது சொடுக்குதலும் மையத்தின் சொடுக்குதலும் சேர்க்கப்பட்டது
    முக்கியவதி வாய்ப்புகள்: இடம்சுட்டியைப் பின்தொடர வேண்டுமா அல்லது ஒரு நிலையான இடத்தில் சொடுக்குதல் செய்ய வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்க
    சொடுக்குதல் செய்வதற்கான காலஅளவை அமைத்திடுக (அல்லது வரம்பற்றது)
    எந்த சுட்டியின் பொத்தானைசொடுக்குதல்செய்ய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்திடுக
    ஒருமுறைசொடுக்குதல், இருமுறைசொடுக்குதல் அல்லது மும்முறை சொடுக்குதல் ஆகியவற்றிற்கிடையே ஏதாவதொன்றைதேர்வு செய்க.(hotkeys)ஐ மாற்றிடுக
    வசதியானது – பயன்பாடுசெயலில் இருக்கும்போது (hotkeys) பின்னணியில் செயலில் இருக்கின்றன
    அமைப்புகள் சேமிக்கப்பட்டுள்ளன (கடைசி நிலையான இடம் உட்பட)
    இது ஒரு கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடாகும்
    சுத்தமான பயனர் இடைமுகத்தினை கொண்டுள்ளது
    இது குறைந்த CPUஐ பயன்படுத்து கொள்கின்றது
    கையடக்கமானது
    விளம்பரங்கள் அல்லது தீம்பொருள்எதுவும் இதில்இல்லை
    நச்சுநிரல் தொந்திரவுஇல்லாதது (நச்சுநிரலில்லாத தானியங்கி சொடுக்குதல்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாதது)
    இந்த பயன்பாட்டினை நாம் பயன்படுத்தி கொள்வதற்காகவென எவ்வாறு துவங்குவது (தானியங்கி சொடுக்கதலை எவ்வாறு பயன்படுத்துவது)?
  7. முதலில் சொடுக்குதல்களுக்கு இடையே கால இடைவெளியை அமைத்திடுக.
  8. பின்னர் நாம் சொடுக்குதல் செய்ய விரும்பும் சுட்டியின் பொத்தானையும் சொடுக்குதல் செய்யும் வகைகளையும் தேர்ந்தெடுத்திடுக.
  9. தொடர்ந்து மீண்டும்மீண்டும் செய்திடும் நிலையையும் சொடுக்குகளின் எண்ணிக்கையை அமைத்திடுக.
  10. பிறகு நாம் சொடுக்குதல் செய்ய விரும்பும் இடத்தைத் தேர்ந்தெடுத்திடுக.
  11. இறுதியாக சொடுக்குதல் செயலைத் துவங்க அதற்கான தொடக்க பொத்தானை சொடுக்குதல் செய்க அல்லது (hotkeys)ஐ(இயல்புநிலை F6) ஐப் பயன்படுத்திடுக.

சுட்டியின் செயல்களின் குழுவை தானியக்கமாக்க விரும்பினால், பின்வருமாறான இணையதள முகவரிகளிலிருந்து பதிவிறக்கம்செய்து முயற்சித்திடுக https://www.opautoclicker.com/ https://sourceforge.net/projects/orphamielautoclicker/files/AutoClickers.exe/download

SimpleX எனும் கட்டற்ற அரட்டை பயன்பாடு

SimpleX Chat என்பதுபயனர்களின் சுட்டிகள் இல்லாத முதன்முதலான செய்தியாளர் பயன்பாடாகும்.இவ்வாறான அரட்டைகளுக்கான Signal, Matrix, Session, Briar, Jami, Cwtch போன்ற பிற பயன்பாடுகளில் பயனர்களுக்கான சுட்டிகள் இருந்தால் மட்டுமே அவற்றினைபயன்படுத்தமுடியும்.இந்த SimpleX இல் இதை பயன்படுத்தி கொள்வதற்காகவென தனியாக பயனர்களுக்கான சுட்டிகள் தேவையில்லை, மேலும்சீரற்ற எண்கள் கூட இல்லை. ஆயினும் இது நம்முடைய தனியுரிமையை தீவிரமாக மேம்படுத்துகிறது.தனிப்பட்ட இணைப்பை மட்டுமே எடுத்துக் கொள்கின்றது
ஒருமுறைமட்டுமான QR-குறியீடு, தனிப்பட்ட அல்லது கானொளி காட்சி இணைப்பு மூலம் நம்முடைய நண்பர்களுடன் இணைந்து அரட்டை அடிக்கலாம்க் இணைப்பின் அழைப்பைப் பகிர்வதன் மூலமும் இணைக்கலாம்.
SimpleX – ஆனது இப்போது இரட்டை ratchet E2E குறியாக்கத்துடனான மிகவும் தனிப்பட்ட, பாதுகாப்பான அரட்டை , பயன்பாடுகளின் தளமாகும் – !
கட்டற்ற மரபொழுங்குடன் அரட்டை சேவையகங்களைப் பயன்படுத்து வதற்கான கட்டணமற்ற எளிய மென்பொருளாகும் தொடர்புகள் அரட்டையின் முழுமையான தனியுரிமை, பாதுகாப்பு உரிமையை வழங்கும் அரட்டை வாடிக்கையாளர்களைப் பயன்படுத்துவதற்கு எளிமையான மென்பொருள் மூலம் நம்முடையன் யார்வேண்டுமானாலும் பேசலாம் அரட்டைத் தரவை யார் யாரெல்லாம் பேசலாம் என்பதற்கான முழுக் கட்டுப்பாட்டையும் நமக்கு வழங்குகின்றது.
நம்முடைய செய்திகளையும் யாருடன் எப்போது பேசுகின்றோம் எனும் மீப்பெரும்தரவைவையும் பாதுகாக்கிறது – .
1-2 வாரங்களுக்கு முன் புதிய வசதிகளுடன் iOSக்கான TestFlight முன்னோட்டம் – 10,000 பயனர்களுக்கு மட்டுமே தற்போது கிடைக்கின்றது!
Linux, MacOS, Windows ஆகிய கணினிகளின்முனைமத்தில் ல் (பணியக) பயன்பாடு/ CLI ஆகக் கிடைக்கிறது.
விரைவாக துவங்குதல்

நம்முடைய முதல்அரட்டை சுயவிவரத்தை உருவாக்கிடுதல்

https://simplex.chat இல் உள்ள இணைப்புகள் வழியாக SimpleX Chat ஐப் பதிவிறக்கிய பிறகு:
இந்த பயன்பாட்டை செயல்படுத்திடுக.
காட்சிப் பெயரையும் முழுப் பெயரையும் உள்ளிடுவதன் மூலம் புதிய சுயவிவரத்தை உருவாக்கிடுக(விரும்பினால்).
“Create” எனும்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இந்த சுயவிவரம் நாம் பயன்படுத்திடுகின்ற நம்முடைய சாதனத்தில் மட்டுமேஉள்ளது, இது வேறு எங்கும் சேமிக்கப்படுவதில்லை
அறிவிப்பு பயன்முறையைத் தேர்ந்தெடுத்தல்
அரட்டைக்காந சுயவிவரத்தை உருவாக்கிய பிறகு, அறிவிப்பு பயன்முறையைத் தேர்வு செய்யும்படி (choose notifications mode) இந்த பயன்பாடு கோரும்.
அதிலுள்ள விளக்கத்தைப் படித்து விவரங்களைஅறிந்து கொள்க, iOS இல் இது வசதிக்கும் தனியுரிமைக்கும் இடையிலான பரிமாற்றமாகும், உடனடி அறிவிப்புகள் அதிக மீப்பெரும் தரவை (meta-data) சேவையாளர்களுடன் பகிர்வது , Android இல் இது அறிவிப்பு தாமதங்கள் , மின்கலணின் ஆயுள் ஆகியவற்றுக்கு இடையேயான பரிமாற்றமாகும்.
Android , iOS இல் செயல்படுகின்ற அறிவிப்புகளுக்கு இடையிலான வேறுபாடுகளைப் பற்றி மேலும் படித்துஅறிந்துகொள்ளலாம்.
மேம்படுத்துநர்களுடன் இணைத்தல்
நாம் இந்த பயன்பாட்டைப் பயன்படுத்தத் தொடங்கும் போது, ஏதேனும் கேள்விகளைக் கேட்க அல்லது பயன்பாட்டைபரிசோதிக்க “”chat with the developers” எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக – இந்நிலையில் ஏதேனும் பரிசோதனை செய்து பார்ப்பதற்கான செய்திகளை அனுப்ப தயங்க வேண்டாம்.
முதல் இணைப்பைச் செய்தவுடன் இந்த பொத்தான் மறைந்துவிடும். பின்னர் மேம்படுத்துநர்களுடன் இணைப்புஏற்படுத்திட:
பயன்பாட்டு அமைப்புகளைத் (app settings) திறத்தல்.
“Send questions and ideas”. எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
சில பயனர் குழுக்களில் சேருதல்
இதனுடைய GitHubஇன் இணைய பக்கத்தில் பல பயனர் குழுக்களில் இணைவதற்கான இணைப்புகள் உள்ளன – அதில் ஏதேனும் கேள்விகளைக் கேட்கவும் ஆலோனைகளைப் பற்றி விவாதிக்கவும் அவர்களுடன் சேர்ந்திடுக.
இணையதேடல் மூலம் வேறு சில பயனர் நிர்வகிக்கும் குழுக்களையும் காணலாம்.
இணைப்பு மூலம் குழுவில் சேருதல்:
SimpleX பயனர் குழுவிற்கான இணைப்பைப் பெற்றிடுக, அதை ஏற்கனவே உள்ள SimpleX உரையாடல்களில் இருந்து பெறலாம் அல்லது இணையத்தில் அதைக் கண்டறிவதன் மூலம் பெறலாம்.
திரையின் கீழ் வலது புறத்தில் உள்ள ஒரு பொத்தானை சொடுக்குக
“Connect via link / QR code” எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
நண்பர்களுடன் இணைத்தல்
புதிய அரட்டை பொத்தானைசொடுக்குவதன் மூலம் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு முறைமட்டுமான இணைப்பை உருவாக்கிடுக (Android: கீழே வலதுபுற மூலையில் மிதக்கும் பென்சில் வடிபொத்தானாகும், iOS: மேல் வலது மூலையில் பென்சில் வடிவபொத்தான்)
Create one-time invitation link எனும் பொத்தானை சொடுக்குக.
ஒவ்வொரு இணைப்பையும் வேறொரு நண்பருடன் பகிர்ந்திடுகஅல்லது QR குறியீட்டை வருடுதல் செய்திடுக.
எடுத்துக்காட்டாக, மறைநிலைப் பயன்முறையைப் பயன்படுத்தினால், யார் யார் என்பதை அவர்கள் எப்போது இணைக்கிறார்கள் என்பதை அறிய, ஒவ்வொரு இணைப்பிற்கும் நம்முடைய விருப்பமாக வேறு மாற்றுப் பெயரை ஒதுக்கலாம்.
இணைப்பு அல்லது QR குறியீட்டைப் பயன்படுத்த, நண்பர்களிடம் new chatஎனும் பொத்தானை சொடுக்குக, பின்னர்”Connect via link / QR code”. என்பதை சொடுக்குக.
அவர்கள் QR குறியீட்டை வருடுதல் செய்யலாம் அல்லது இணைப்பை ஒட்டலாம். அவர்கள் உலாவியில் இணைப்பைத் திறந்தால், பக்கத்தில் உள்ள “Open in mobile app” எனும் பொத்தானை சொடுக்குதல் செய்ய வேண்டும்.
இது எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காட்டும் கானொளிகாட்சியை இணையதளத்தில் பார்வையிட்டு தெரி்ந்துகொள்க.
நீண்ட கால தொடர்பு முகவரியையும் உருவாக்கலாம்.
பெரும்பாலான பயன்பாட்டு அமைப்புகள் எல்லா சுயவிவரங்களுக்கும் பகிரப்படுகின்றன, ஆனால் சில அமைப்புகள் அரட்டை சுயவிவரத்திற்கு மட்டுமேயானதாகும்.
பல உரையாடல் செயல்கள் நீண்ட நேரம் அழுத்துதல் அல்லது வருடுதல் மூலம் கிடைக்கின்றன – அவற்றை முயற்சித்திடுக!
இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டணமில்லாமல் கட்டற்றதாக (AGPL-3.0) எனும் உரிமத்தின்கீழ் கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://simplex.chat/ எனும் இணையதள முகவரிக்கு செல்க.

திறமூல செயற்கை நுண்ணறிவுடன் உருவப்படங்களைத் திருத்திடுக

Upscayl என்பது ஒரு கட்டற்ற கட்டணமற்ற நிரலாக்கமாகும், இது குறைந்த தெளிவுத்திறன் கொண்ட படங்களை மேம்படுத்த திறமூல செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திகொள்கிறது.
ஆரம்பகால எண்ணிம படபிடபிடிப்பு கருவிகள் பெயர்வுத்திறன் , இணையத்தில் படங்களை விரைவாகப் பிடிக்க , எளிதாகப் பகிரும் திறனை வழங்கின. ஆனால் அவை சிறந்த திரைப்படப் புகைப்படக்கலையின் தரத்தினையும் சிக்கலான தன்மையையும் கொண்டிருக்கவில்லை. நிச்சயமாக எண்ணிம படபிடிப்புகருவிகள் பின்னர் நிறைய மேம்பட்டுள்ளன. ஆனால் என்னிடம் பல ஆண்டுகளாக எண்ணி புகைப்படங்கள் உள்ளன, அவை நவீன சாதனங்களில் மிகமெதுவாககொஞ்சம் கொஞ்சமாகதிரையில்தோன்றிடும்.
சமீப காலம் வரை, எண்ணிம படங்களை மேம்படுத்துவதற்கான எனது go-to கருவி GIMP ஆகும். சில வருடங்களுக்கு முன்பு, 1940களின் நடுப்பகுதியில் எடுக்கப்பட்ட உருவப்படத்தை மேம்படுத்திடுவதற்காக GIMP ஐப் பயன்படுத்த முயற்சித்தேன். அது செயலபட்டது, ஆனால் புகைப்படத்தில் நான் விரும்பிய விவரமும், தெளிவு இல்லை.
இவவாறான சூழலில் குறைந்த தெளிவுத்திறன் கொண்ட படங்களை மேம்படுத்த திறமூல செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திகொள்கின்ற கட்டணமற்றகட்டற்ற மூல நிரலான Upscayl பற்றி நான் அறிந்து கொண்டதிலிருந்து இது மாறிவிட்டது.
இது (Upscayl) Linux, Windows,ம் macOS ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் நன்கு செயல்படுகிறது.
நம்முடைய கணினி RPM அல்லது DEB தொகுப்புகளைப் பயன்படுத்தினாலும் லினக்ஸில் நிறுவுவது எளிது, மேலும் அதன் இணையதளத்தில் உலகளாவிய Linux AppImage கூட உள்ளது.
MacOS , Windows ஆகியவற்றிற்கு, இந்த செயல்திட்டத்தின் இணையதளத்தில் இருந்து நிறுவிகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Upscayl உடன் தொடங்குதல்
இதனை நிறுவுகைசெய்யப்பட்டதும், உருவப்படங்களை மேம்படுத்திடும் பணியைத் துவங்கலாம். இது வரைகலைபயனாளர்இடைமுக(GUI) மென்பொருளாகும் இது பயன்படுத்த மிகவும் எளிதானது. இம்மென் பொருளானது நம்முடைய பழைய படங்களை அசல் படங்களை விட மிக அதிகமான படத் தெளிவுத்திறன்களுடன் நேற்று எடுக்கப்பட்டது போன்று தோற்றமளித்திடுமாறு இது செய்கிறது. கூடுதலாக, முழு கோப்புறைகளையும் படங்களின் புகைப்பட தொகுப்புகளையும் அளவிடலாம் அவற்றை ஒரே நேரத்தில் மேம்படுத்திடலாம்.
இந்த மென்பொருளைஇயக்கத் துவக்கியபின்னர், Select Image எனும் பொத்தானைசொடுக்குக. அதன்பின்னர் நாம் மேம்படுத்திட விரும்பும் படங்களின் படம் அல்லது கோப்புறையைக் கண்டறிந்திடுக.
அவ்வாறான படம் பதிவேற்றசெய்யப்பட்டதும், நாம் மேம்படுத்திட முயற்சிக்க விரும்பும் மேம்படுத்துதல் வகையைத் தேர்ந்தெடுத்திடுக இயல்புநிலையில் Real-ESRGAN, என்பது நம்முடைய பணியைதுவங்குவதற்கு இது ஒரு நல்ல இடமாகும். digital art எனும் தேர்வுசெய்பெட்டி உட்பட, நாம்தேர்வு செய்வதற்காக தயாராக பின்வருமாறு ஆறு வாய்ப்புகள் உள்ளன.
Real-ESRGAN உடன் பொதுவான புகைப்படம்
Remacri உடன் பொதுவான புகைப்படம்
ultramix balancedஉடன் கூடிய பொதுவான புகைப்படம்
ultrasharpப் கொண்ட பொதுவான புகைப்படம்
digital art
Sharpen Image
அடுத்து, நம்முடைய மேம்படுத்தப்பட்டப் படங்களைச் சேமிக்க விரும்பும் வெளியீட்டு கோப்பகத்தைத் தேர்ந்தெடுத்திடுக.
இறுதியாக, Upscayl எனும் பொத்தானை சொடுககுதல் செய்வதன் மூலம் மேம்படுத்துதல் செயல்முறையைத் துவங்கிடுக. மாற்றத்தின் வேகம் GPU , மாற்றம் செய்யும் பட வெளியீட்டுத் தேர்வைப் பொறுத்ததுஆகும்.

இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டணமில்லாமல் கட்டற்றதாக AGPL-3.0 எனும் உரிமத்தின்கீழ் கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும்https://www.upscayl.org/ எனும் இணையதள முகவரிக்கு செல்க.

BI இன் முழு அடுக்கு இயங்குதளமாக மாற்றிடுவதற்கானLightdash

Lightdash என்பது உடனடியாக dbt எனும் செயல்திட்டப்பணியை BI இன் முழு அடுக்கு இயங்குதளமாக மாற்றுகிறது.இதன் ஆய்வாளர்கள் அளவீடுகளையும் எழுதுகிறார்கள் இது(Lightdash) முழு வணிகத்திற்கும் சுய சேவையை செயல்படுத்துகிறது. இதில்(Lightdash) உள்ள நம்முடைய புலங்கள் நம்முடைய dbt எனும் செயல்திட்டத்தில் வரையறுக்கப்பட்டு, வணிக தருக்கங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்திருப்பதை மிக எளிதாக்குகிறது. இதில் (Lightdash) நம்முடைய மாற்றங்களை பரிசோதிக்க, முன்னோட்டமாக பார்வையிட சேமிக்க, நமக்குப் பிடித்த மேசைக்கணினி பதிப்பாளருடன் Lightdash ஆனது CLIஐப் பயன்படுத்திகொள்க. ஒரு சில சொடுக்குதல்களில், நம்முடைய (Lightdash) செயல் திட்டத்தில் நாம் சேர்த்த தரவிலிருந்து அழகான விளக்கப் படங்களை உருவாக்கலாம். இதில் (Lightdash) எல்லாவற்றையும் குறிமுறை வரிகளாக நிருவகிக்கப்படுகின்றது, உற்பத்தித்திறன் , நிர்வாகத்தை நம்முடைய BI கருவியில் கொண்டு வருகின்றது. முக்கிய அளவீடுகளை குழுவுடன் பகிர்ந்து கொள்ள விளக்கப்படங்களையபம் & முகப்புபடங்களையும் உருவாக்கிடுக. சேர்க்கப்பட்ட சூழலானது எல்லா வேறுபாடுகளையும் ஏற்படுத்துகிறது! நிபுணர்களுக்கான SQL & மற்றவர்களுக்கு உள்ளுணர்வு UI – Lightdash உடன், அனைவரும் ஆய்வாளர்கள்! செயல்திட்ட அடிப்படையிலான பாத்திரங்கள் ,அனுமதிகள் மூலம், கூட்டுப்பணியாற்ற குழுவை எளிதாக அழைக்கலாம்.
முக்கியவசதிவாய்ப்புகள்
இதில்நம்முடைய dbt எனும் செயல்திட்டத்தில் அனைத்து வணிக தர்க்கங்களையும் வைத்திருக்கலாம்
முன்னெப்போதையும் விட விரைவாக BI ஐ உருவாக்கிடலாம்
அழகான வரைபடங்களை எளிதாக உருவாக்கிடலாம்
விளக்கப்படங்களையும் & முகப்புத்திரைகஶையும் உருவாக்கிடலாம்
Lightdash ஆனது உடனடியாக dbt எனும் செயல் திட்டப்பணியை முழு அடுக்கு BI இயங்குதளமாக மாற்றுகிறது
விரைவாக நகருகின்ற BI அணிகளுக்கானது
முன் வரையறுக்கப்பட்ட அளவீடுகளைப் பயன்படுத்தி பயனர்கள் சுயமாகச் சேவை செய்யத் தெரிந்த இடைமுகமாக திகழ்கின்றது
dbt எனும் செயல்திட்டத்துடன் yaml இல் பரிமாணங்களையும் அளவீடுகளையும் அறிவித்திடலாம்
dbt எனும் மாதிரிகளிலிருந்து தானாக பரிமாணங்களை உருவாக்குகிறது
பயனர்களுக்காக அனைத்து dbt விளக்கங்களும் ஒத்திசைக்கப்பட்டுள்ளன
அட்டவணை கணக்கீடுகள் செயல்படும்போது, நம்முடைய தரவை தேடி எடுப்பதை எளிதாக்குகிறது
எந்தவொரு மாதிரியின் மேல்நிலையின் கீழ்நிலையின் சார்புகளைக் காண Lineage அனுமதிக்கிறது
அளவீடுகளுக்கான எளிய தரவு காட்சிப்படுத்தல்களை கொண்டுள்ளது
குழுவுடன் நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்ள விளக்கப்படங்களைச் சேமித்து முகப்புத்திரை உருவாக்கிடலாம்
பணியை URL ஆகப் பகிர்ந்திடலாம் அல்லது வேறு எந்தக் கருவியிலும் பயன்படுத்த முடிவுகளை பதிவேற்றம் செய்திடலாம்
இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டணமில்லாமல் கட்டற்றதாக MIT எனும் உரிமத்தின்கீழ் கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://github.com/lightdash/lightdash எனும் இணையதள முகவரிக்கு செல்க.

அறிந்துகொள்கGwyddion எனும் தகவமைவு நிரலை

Gwyddion என்பது SPM ((scanning probe microscopy)) இன் தரவு காட்சிப் படுத்தலுக்கும் பகுப்பாய்வுக்குமான ஒரு தகவமைவு நிரலாகும். முதன்மையாக இது ஆய்வு நுண்ணோக்கி நுட்பங்களை (AFM, MFM, STM, SNOM/NSOM) வருடுதல் செய்வதன் மூலம் பெறப்பட்ட உயரப் புலங்களின் பகுப்பாய்விற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது மேலும் இது ஏராளமான SPM தரவு வடிவங்களை ஆதரிக்கிறது. இருப்பினும், இதனை பொது உயர புலத்திற்கும் (greyscale) பட செயலாக்கத் திற்கும் பயன்படுத்திகொள்ளலாம், எடுத்துக்காட்டாக உருவப்பட spectrophotometry இலிருந்து profilometryஇன் தரவு அல்லது தடிமனான வரைபடங்களின் பகுப்பாய்வினை கருத்தில் கொள்க.
Gwyddion ஆனது அனைத்து செந்தர புள்ளியியல் குணாதிசயங்கள், நிலைப் படுத்துதல் , தரவு திருத்தம், வடிகட்டி அல்லது grainஐ உருவாக்குகின்ற செயலிகள் உட்பட, அதிக எண்ணிக்கையிலான தரவு செயலாக்க செயலிகளை வழங்குகிறது. மேம்படுத்துநர்கள் செயலில் உள்ள SPM பயனர்கள் என்பதால், நிரலில் குறிப்பிட்ட, அசாதாரணமான, ஒற்றைப்படையான, சோதனை தரவு செயலாக்க முறைகள் உள்ளன – மேலும் அவை நமக்கு பயனுள்ளதாக இருக்கின்றன.Gwyddion என்பது GNU எனும் உரிமத்தின் கீழான கட்டற்ற கட்டணமற்ற மென்பொருள் ஆகும். மூன்றாம் தரப்பு தொகுப்புகள் உரைநிரல்களால் எளிதாக நீட்டிக்கக்கூடிய இருபரிமான(2D) தரவு செயலாக்கத்திற்கும் பகுப்பாய்வுக்குமான தகவமைவு நிரலை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இது கட்டற்ற கட்டணமற்ற மென்பொருளாக உள்ளது, அதனால் இது மேம்படுத்துநர்களுக்கும் பயனர்களுக்கும் மூலக் குறிமுறைவரிகளையும் வழங்குகிறது, இது அதன் தரவு செயலாக்க வழிமுறைகளின் சரிபார்ப்பினையும் மேலும் நிரல் மேம்பாடுகளையும் எளிதாக்குகிறது.Gwyddion பொதுவான கட்டமைப்புகளில் GNU/Linux, Microsoft Windows Mac OS X ஆகிய அனைத்து இயங்குதளங்களிலும் செயல்படுகின்ற திறன்மிக்கது. இதனுடைய அனைத்து அமைப்புகளையும் மென்பொருட்களின் மேம்படுத்துதலிற்கு பயன்படுத்திகொள்ளலாம். இது ஒரு நவீன வரைகலை பயனர் இடைமுகத்தை பரவலாக கொண்டு செல்லக்கூடிய Gtk+ கருவித்தொகுப்பை அடிப்படையாகக் கொண்டது, இதனால் ஆதரிக்கப் படுகி்ன்ற அனைத்து அமைப்புகளிலும் இதுஒரேசீராக செயல்படக்கூடியது.
முக்கியவசதிவாய்ப்புகள்: 130 க்கும் மேற்பட்ட SPM கோப்பு வடிவங்களுக்கான ஆதரவு., அனைத்து செந்தர செயலிகள்: நிலைப்படுத்துதல், வடிவியல் மாற்றங்கள், புள்ளியியல் தன்மை, grain கண்டறிதல், FFT வடிகட்டுதல், தன்னிச்சையாக வடிவ முகமூடிகளின் கீழ் தரவை செயலாக்குதல்., அளவுத்திருத்தம், அளவியல் ஆதரவு., ஒற்றை புள்ளி நிறமாலை, தொகுதி தரவு ஆதரவு (கோப்பு வடிவங்களின் துணைக்குழுவிற்கு), செயற்கை மேற்பரப்புகளின் உருவாக்கம் , அளவீட்டு உருவகப்படுத்துதல். பைதான் 2 உரைநிரலின்.
அனைத்து சூத்திரங்கள், செயல்முறைகள் , வழிமுறைகள் பொதுவானவை திறமூலமானவை. பயனர் வழிகாட்டியின் எல்லைக்கு அப்பாற்பட்ட சிறந்த கணக்கீட்டு விவரங்களைப் படிக்க அல்லது ஒப்பிட விரும்பும் எவரும் இதனுடைய உண்மையான செயலாக்கத்தைப் படித்தறிந்துகொள்ளலாம்.
அனைத்து கணக்கீடுகளும் இரட்டை துல்லியத்தில் செய்யப்படுகின்றன, மேலும் Gwyddion சொந்ததரவுவடிவமைப்பு(.gwy) தரவை இரட்டை துல்லியத்திலும் சேமிக்கிறது. சாதாரண சூழ்நிலைகளில், வரையறுக்கப்பட்ட துல்லியம் அல்லது மதிப்புகளின் வரம்பு காரணமாக எந்த தகவலும் இழக்கப்படாது. Gwyddion தரவு வடிவம் தன்னிச்சையான எண்ணிக்கையிலான படங்கள், வரைபடங்கள், நிறமாலை அல்லது தொகுதி தரவு ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்.
Gwyddion மிகவும் பொதுவான தொட்டுணரக்கூடிய அலகு அமைப்பைப் பயன்படுத்துகிறது, தொட்டுணரக்கூடிய அளவு தரவுகளின் வகைகளில் (, பக்கவாட்டு பரிமாணங்கள்) உள்ளமைக்கப்பட்ட வரம்புகள் எதுவும் இல்லை. சரிவுகளின் அலகுகள், பகுதிகள், தொகுதிகள் , பிற பெறப்பட்ட அளவுகள் சரியாக கணக்கிடப்படுகின்றன. இதில்SI அலகு அமைப்பு முடிந்தவரை பயன்படுத்தப்படுகிறது.
கருவிகளையும், பிற உரையாடல்களையும் அவற்றின் அளவுருக்களை நினைவில் கொள்கின்றன, ஒரு அமர்விற்குள் கருவி அழைப்புகளுக்கு இடையில் மட்டுமல்ல, அமர்வுகள் முழுவதும். Gwyddion சொந்தகோப்பு வடிவம் (.gwy) அனைத்து தரவு குறிப்பிட்ட அமைப்புகளைச் சேமிப்பதை ஆதரிக்கிறது: தவறான வண்ணத் தட்டு, முகமூடிகள், விளக்கக்காட்சிகள், தேர்வுகள், தொடர்புடைய முப்பரிமான(3D) காட்சி அளவுருக்கள், அந்தத் தரவோடு தொடர்புடைய வரைபடங்கள், அவற்றின் அமைப்புகள் போன்றவை.
பெரும்பாலான Gwyddion நூலக செயலிகளில் பைதான் இடைமுகமான pygwy இல் கிடைக்கின்றன. பைத்தானில் எழுதப்பட்ட கோப்பு , செயலாக்க தொகுதிகள் மூலம் Gwyddion நீட்டித்துக்கொள்ளலாம்.
Gwyddion ஆனது GNOME, XFce அல்லது KDE போன்ற கட்டணமற்ற மேசைக்கணினி சூழல்களுடன் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, எ.கா. பட்டியல்கள், கோப்பு வகை ஒருங்கிணைப்புகளும் தானியங்கு SPM கோப்பு சிறுபடம்.,மேசைக்கணனி சூழல்களுடன் சில ஒருங்கிணைப்பு உள்ளது, இருப்பினும் அத்தகைய அளவில் இல்லை.
பல செயலிகள் OpenMP இணையாக்கத்தை ஆதரிக்கின்றன,பல்புரி செயலாக்கத்தைப் பயன்படுத்தலாம். இது நிரலில் இயல்புநிலையாகும், மேலும் Gwyddion நூலகங்களைப் பயன்படுத்தும் போது இயக்கலாம்.
Gwyddion சுமார் 140 நுண்ணோக்கி , பட வடிவங்களை, அதாவது படிப்பதற்காக ஆதரிக்கிறது. பல வடிவங்களையும் எழுதலாம். ஆதரிக்கப்படும் கோப்பு வடிவங்களின் சமீபத்திய முழுமையான பட்டியல் பயனர் வழிகாட்டியில் உள்ளது.
முடிந்தவரை பல AFM, STM, …, profilometer, பொது உயரம்-புலம் வடிவங்களை ஆதரிக்கின்றது. இது நம்முடைய சொந்த வடிவத்தை ஆதரிக்கப்பட வேண்டுமெனில், கோப்பு வடிவ சூழ்நிலை விளக்கத்தைப் படித்தறிந்து அதன்படி செயல்படுக.
தரவு செயலாக்க திறன்கள் ஏற்றப்பட்ட தொகுதிகள் திறன்களைப் பொறுத்தது. தொகுப்பில் ஏற்கனவே சில தொகுதிகள் உள்ளன. இருப்பினும், மூன்றாம் தரப்பினரிடமிருந்தும் புதிய தரவு செயலாக்க தொகுதிகளை நிறுவுகை செய்வதன் மூலம் Gwyddion நிறுவுகையில் கூடுதல் தரவு செயலாக்க திறன்களை சேர்க்க முடியும்.
இதேபோல், நம்முடைய சொந்த தொகுதிகளை எழுதலாம், அவற்றை நம்முடைய Gwyddion நிறுவுகையில் பரிசோதித்து பின்னர் மற்ற Gwyddion பயனர்களுக்கு அனுப்பலாம்.
Gwyddion ஐ எவ்வாறு மேம்படுத்துவது என்பதை வேறு வழியைக் குறிக்கின்ற செருகுநிரல்களுக்கும் இதே கூற்றுகள் செல்லுபடியாகும். செருகுநிரல்களை எழுதுவது சற்று எளிதாக இருக்கின்றது (எடுத்துக்காட்டாக, எந்த நிரலாக்க மொழியையும் பயன்படுத்தலாம்). இருப்பினும், செருகுநிரல்களை எழுதும் போது ஏற்கனவே உள்ள Gwyddion தரவு செயலாக்க செயலிகளையும் widgetsஉம் பயன்படுத்த முடியாது.
libgwymodule ஆவணத்தின் ஒரு பகுதியாக தொகுதி , செருகுநிரல் எழுதுதல் பற்றிய ஆவணங்கள் உள்ளன, C/C++, Perl, Python, Ruby, Pascal ஆகிய கணினிமொழிகளில் உள்ள மாதிரி செருகுநிரல்கள் Gwyddion மூலக் குறிமுறைவரிகளுடன் நேரடியாக விநியோகிக்கப்படுகின்றன, மேலும் ஒரு தனித்தனிமாதிரியாகவும் உள்ளது. தொகுதியாகவும் கிடைக்கிறது.
உலாவியின் தொகுதி இணைய பதிப்பு இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது: இயக்கநேரபதிப்பு, விளக்கத்துடன் கூடிய மேலமீட்புபட்டிகள் (நவீன WWW உலாவி தேவை) , ஒரு சாதாரண விரிவாக்கப்பட்ட அட்டவணை யாகவும் கிடைக்கின்றது
இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டணமில்லாமல் கட்டற்றதாக (GPLv2) எனும் உரிமத்தின்கீழ் கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் http://gwyddion.net/ எனும் இணையதள முகவரிக்கு செல்க.

மீப்பெரும்செயலாக்கம் (metaverse) தற்போதைய நிலை என்ன இனி என்னவாக ஆகப்போகிறது

மீப்பெரும்செயலாக்கம் (metaverse) என்பது ஒரு மெய்நிகர் உலகமாகும், இது முன் எப்போதும் இல்லாத இணைய அனுபவத்தை நமக்கு வழங்குவதாக உறுதியளிக்கிறது. மீப்பெரும்செயலாக்கத்தை (metaverse) முதலில் ஏற்றுக்கொண்ட தொழில்களில் தற்போது எந்தெந்த தொழில்கள் நிலைத்து உள்ளன, அதற்கான எதிர்காலம் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
மீப்பெரும்செயலாக்கம் (metaverse) ஆனது இன்று நன்கு அறியப்பட்ட ஒன்றாக அமைந்துள்ளது. இருப்பினும், இது குறித்து பல தவறான கருத்துக்களும் உள்ளன. இதில் பின்வருவன அடங்கும்: இது விளையாட்டிற்கு மட்டுமே பயன்படு கின்றது, வங்கித் துறை மீப்பெரும்செயலாக்கத்தை (metaverse) விரைவாக ஏற்றுக்கொள்கிறது, இது பல பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டது, அதன் உள்கட்டமைப்புக்கு பெரிய முதலீடுகள் தேவை ( அணியக்கூடியவை, GPU அடிப்படையிலான அமைப்புகள்) போன்ற பல.
மீப்பெரும்செயலாக்கம்(metaverse) என்பது எண்ணிம nirvana ஆகும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர், ஏனெனில் இது பயனர்களை எண்ணிம உலகில் மூழ்கடித்து, குறிப்பிட்ட அந்த தளத்துடன் தொடர்புகொள்வதற்காக பயனர்கள் செய்கின்ற எந்தவொரு செயலையும் மெய்நிகர் அனுபவத்தை அளிக்க செய்கிறது.
CIO , CTOஆகியவர்களுக்காக, இணைக்கப்பட்ட எண்ணிம உலகில் மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்திற்காக இம்மீப்பெரும்செயலாக்கம் (metaverse) ஆனது புதிய வணிக மாதிரிகளுக்கும் தீர்வுகளுக்குமான புதிய வழிகளைத் திறக்கிறது.
2026 ஆம் ஆண்டளவில் உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ 25 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு மணிநேரத்தை மீப்பெரும்செயலாக்கத்தில் (metaverse) செலவிடுவார்கள் என்று கார்ட்னர் ‘ப்ரெடிக்ட்ஸ் 2022’ அறிக்கை கூறுகிறது. மீப்பெரும்செயலாக்கம் (metaverse) என்பது ஒரு புரட்சிகர தொழில் நுட்பமாகும் வங்கிகள், காப்பீடுநிறுவனங்களி (புதிய காப்பீட்டுமுன்மொழிவுகளை சந்தைப்படுத்துவதற்கான எண்ணிம avatarஆக, கோரிக்கைகளுக்கான ஆலோசனை கூறுவராக) போன்ற பல செயல்களை உள்ளடக்கியது.
மீப்பெரும்செயலாக்கத்தை (metaverse) உருவாக்கும் தொழில்நுட்பங்கள் மீப்பெரும்செயலாக்கம் (metaverse) என்பது ஒரு புதிய தொழில்நுட்பம் அன்று – இது பல்வேறு தொழில்நுட்பங்களின் கலவையாகும். அவற்றில் சில முக்கியமானவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பெரியதாக்கப்பட்டஉண்மைநிலை (AR): head mounted display ,HoloLens. போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி நடைமுறை வாழ்க்கை அனுபவத்தை வழங்க எண்ணிமஉலகத்தையும், நடைமுறை உலகத்தையும் இணைத்து மெய்நிகர் அதிவேக பயனர் அனுபவத்தை இது வழங்குகிறது.
மெய்நிகர் உண்மைநிலை(VR): இது பயனர்களுக்கு மெய்நிகர் உலக அனுபவத்தை அளிக்கிறது (எண்ணிம விளையாட்டு போன்றது) அங்கு அவர்கள் மெய்நிகர் உலகின் ஒரு பகுதியாக உணர்கிறார்கள்.
சங்கிலிதொகுப்பு: இது மீப்பெரும்செயலாக்கத்தின் (metaverse)மூலம் தொடர்பு கொள்ளும் பயனர்களின் மெய்நிகர் வலைபின்னலை உருவாக்க உதவுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு மாணவர் அவர்/அவள் வகுப்பறையில் இருப்பதைப் போல ஒரு இணைய வகுப்பில் கலந்து கொள்ளலாம், பிற வகுப்பு தோழர்களுடன் (இணையத்தின் மெய்நிகர் தளங்களில் கலந்துகொள்பவர்களும்) தொடர்பு கொள்ளலாம். இது இணைக்கப்பட்ட 3D வலைபின்னலின் மூலம் மெய்நிகர் வகுப்பறையின் உண்மையான நடைமுறை வாழ்க்கை அனுபவத்தை வழங்குகிறது.
NFT, கிரிப்டோநாணயம்: நாணயப் பரிமாற்றங்கள் அங்கீகரிக்கப்பட்ட அணுகலின் பாதுகாப்பான வழிமுறையை வழங்க, மீப்பெரும்தரவகம் (metaverse) ஆனது NFT, கிரிப்டோநாணயம் ஆகியவற்றினை பயன்படுத்திகொள்கிறது. இணையத்தின் வாயிலான சில்லறைவிற்பணைஅங்காடியின் வாடிக்கையாளராக இருந்தால், அந்த சில்லறைவிற்பணை அங்காடிக்குள் நேரடியாக நடந்துசென்று, AR/VR சாதனங்கள் மூலம் அங்கு விற்பணை செய்யப்படுகின்ற பொருட்களைத் தொட்டு உணரவும், கிரிப்டோநாணய/NFT மெய்நிகர்நாணயங்கள் மூலம் அவற்றிற்கு பணம் செலுத்தவும் மீப்பெரும்செயலாக்கத்தைப் (metaverse) பயன்படுத்திகொள்ளலாம்.
மிக முக்கியமாக, மேககணினி சேவைகளின் முக்கியத்துவத்தை நாம் மறந்துவிடக் கூடாது, ஏனெனில் அவை உள்கட்டமைப்பு, தானியங்கி-அளவிடுதல், நம்பகத்தன்மை ,மீப்பெரும்செயலாக்கத்திலிருந்து (metaverse) உயர் செயல்திறன் தீர்வுகள் கூட கிடைக்கக்கூடும்.
வங்கித் துறையில் மீப்பெரும்செயலாக்கம்(metaverse)
ஏற்கனவே கூறியது போன்று, மீப்பெரும்செயலாக்க(metaverse) தொழில்நுட்பம் என்பது பெரியதாக்கப்பட்டஉண்மைநிலை (AR), மெய்நிகர் உண்மைநிலை(VR), கலந்த உண்மைநிலை (XR), விரிவாக்கப்பட்ட உண்மைநிலை(XR), செயற்கை நுண்ணறிவு, மேககணினி, 5ஜி ,பொருட்களுக்கானஇணையம் போன்ற பல்வேறு தற்போதுள்ள தொழில்நுட்பங்களின் கலந்த கலவையாகும். . இறுதிப் பயனர்கள் வங்கிச் சேவைகளுடன் தொடர்பு கொள்ளும் விதத்தை மாற்றுவதற்கான வலுவான ஆற்றலை மீப்பெரும்செயலாக்கமானது (metaverse) கொண்டுள்ளது; இதன்மூலம் வங்கிகள் இப்போது நடைமுறையிலுள்ளவாறு புதிய சேவைகளை வழங்குவதோடு புதிய சந்தைகளையும் உருவாக்கமுடியும்.
மீப்பெரும்செயலாக்கத்தில்(metaverse), வங்கிகள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் விதத்தை மாற்றலாம். வாடிக்கையாளர்களுக்கு மெய்நிகர் avatars ஐ வழங்குவதன் மூலம் அவர்களுக்கு மீப்பெரும்-தொடுதிரை சேவைகளை வழங்க முடியும். மேலும், ATMs, வங்கி கிளைகள் ஆகியவை மெய்நிகர் உலகில் நுழைந்து சிறந்த வாடிக்கையாளர் இணைப்புகளை வழங்க முடியும். வங்கிகள் எண்ணிம கொடுப்பனவுகள், NFTகள், கிரிப்டோநாணயங்கள்,இரட்டை எண்ணிமங்களை மீப்பெரும்செயலாக்கத்தில்(metaverse) செயல்படுத்தலாம்.
கல்விகற்பதிலும் மேம்படுத்துதலிலும் மீப்பெரும்செயலாக்கம்(metaverse)
மீப்பெரும்செயலாக்கமானது(metaverse) பின்வரும் வழிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கல்விகற்பதிலும் மேம்படுத்துதலிலும் புரட்சியை ஏற்படுத்தக்கூடும்:
தற்போது பல்வேறுபயனர்கள் யதார்த்தத்தில் மூழ்கியிருப்பதால் (MUVIR), பாரம்பரிய கற்றல் மேலாண்மை அமைப்புகளுடன் ஒப்பிடும்போது கற்றல் மிகவும் அர்த்தமுள்ளதாகவும் ஊடாடக்கூடியதாகவும் மாறக்கூடும்.
மீப்பெரும்செயலாக்கமானது(metaverse) ஒரு உருவகப்படுத்துதலுக்கான அனுபவத்தை வழங்குகிறது; மெய்நிகர் உலகில் பயிற்சியளிப்பவர்கள் மாணவர்களுடன் பழகி தொழில்நுட்பத்தின் மென்மையான திறனுடைய பயிற்சிகளை வழங்கலாம். இதன்மூலம் AR , VR ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்பனை மூலம் கற்றலை மேம்படுத்தி செயல்படுத்திட முடியும்.இதுஒரு முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட இலக்குகள், அளவீடுகள் ,திட்டங்களை உருவாக்க விரைவான ஒத்துழைப்புகளை செயல்படுத்துகிறது; தனிப்பட்ட தேவைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இது செயலில் கல்விகற்றலை மேம்படுத்துகிறது.]
சில்லறை வர்த்தகத்தில் மீப்பெரும்செயலாக்கம்(metaverse)
மீப்பெரும்செயலாக்கமானது(metaverse) விரைவில் சில்லறை வணிகம் போன்ற துறைகளில் முத்திரை பதிக்கவிருக்கின்றது.
இந்திய சில்லறை வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் தனது முதல் மீப்பெரும் செயலாக்கத்தின்(metaverse)அடிப்படையிலான சில்லறை விற்பணையக அனுபவத்தை வருகின்ற தீபாவளியில் (அக்டோபர்/நவம்பர் 2023) அதன் அடுத்த பதிப்பான ‘Big billion day sale’.ஆக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. Flipkart அதன் Ethereum தீர்வைப் பயன்படுத்தி metaverse நிறுவனமான Meta , Cryptocurrency ஆகிய இயங்குதள வழங்குநரான Polygon உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த தீர்வுகளுக்கு Flipverse என்று பெயரிடப்பட்டுள்ளது , இது பற்றி ஏற்கனவே மிக உற்சாகத்துடன் அதுசெயல்படுவதற்காக தயார்நிலையில் உள்ளது. இதன்வாயிலாக வாடிக்கையாளர்கள் தங்கள் கைபேசியில் இருபரிமான(2டி) இயங்கு தளங்களில் இருந்து மீப்பெரும்செயலாக்கத்தில்(metaverse) அதிவேக முப்பரிமான(3டி) அனுபவத்திற்கு மாறுவதை அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
eDAO என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற(eCommerce Decentralized Autonomous Organisation) எனும் புதிய சேவை வடிவமைப்பைப் பயன்படுத்தி, பாதுகாப்பான கிரிப்டோ நாணய பரிமாற்றங்களுக்காக Ethereum Layer-2 கட்டமைப்புடன் web 3.0 தொழில்நுட்பத்தில் Flipverse உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Ethereum Layer-2 போன்ற பாதுகாப்பான , அளவிடக்கூடிய தளத்தில் கிரிப்டோ நாணய பரிமாற்றங்களுக்கு eDAO அனுமதிசீட்டு நாணயத்தினைப் பயன்படுத்தி கொள்கிறது. மெய்நிகர் கச்சேரிகள் போன்ற மெய்நிகர் அனுபவ தளங்களுக்கு பல்லூடகத்திற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் eDAO பயன்படுத்தப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Flipverse ஆனது கைபேசிகள் மூலமாகவும் இணையஉலாவி மூலமாகவும் அணுக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இறுதிப் பயனர்களுக்கு மெய்நிகர் இணைய சில்லறைவிற்பணைஅங்காடி அனுபவத்தை உருவாக்குவது மட்டுமின்றி, தளங்களில் தங்களை உணரவும், தொட்டுணரவும் , மூழ்கவும் முடியும், ஆனால் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்திற்காக பொருட்களின் உற்பத்தி வெளியீடுகள், பிராண்ட் செயல்படுத்துதல் விளையாட்டுகளையும்/ போட்டிகளையும் நடத்த முடியும்.
இந்த ‘மீப்பெரும்செயலாக்கமானது(metaverse) ஒரு சேவையகத்தின்’ துவக்கமாக கூட இருக்கலாம், இதில் பாலிகான் போன்ற துவக்கநிலைநிறுவனங்கள் சிறந்த சந்தை அணுகல் , வாடிக்கையாளர் அனுபவத்திற்காக மீப்பெரும் செயலாக்கத்தின் (metaverse) அடிப்படையிலான தீர்வு மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை, கருத்துகளை கதைகளங்களை கூட வழங்கலாம். இதற்கு AWS, Azure , GCP போன்ற வலுவான, அளவிடக்கூடிய மேககணினி இயங்குதளங்கள் தேவைப்படும், மேலும் எதிர்காலத்தில் இந்த தளங்களில் சில மீப்பெரும் செயலாக்கம்த்தின்(metaverse)சொந்த சேவைகளையும் எதிர்பார்க்கலாம்.
மீப்பெரும்தரவகத்தின்(metaverse)எதிர்கால போக்குகள்
உலகெங்கிலும் உள்ள Roblox,Sandbox,Decentraland, Otherside,போன்ற பலவற்றிற்கான பாரிய பயனர் தளத்தை காட்சியாக காண்பதன் மூலம் மீப்பெரும் தரவகத்தின்(metaverse) தற்போதைய நிலையை தெளிவாகக் காட்சிப்படுத்த முடியும்.
எதிர்காலத்தில், மீப்பெரும்தரவகத்தை(metaverse) பொறுத்தவரை பின்வருவனவற்றை எதிர்பார்க்கலாம்.
வணிகநிறுவனங்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் மீப்பெரும்தரவக(metaverse) தொழில்நுட்பத்தைப் பின்பற்றி, தங்கள் வாடிக்கையாளர்களுடன் சிறப்பாக கலந்து செயல்படுவதற்கு இது ஒரு வலுவான வாய்ப்பாகக் கருதலாம். சில பெரிய பிராண்டுகள் ஏற்கனவே மீப்பெரும்தரவக(metaverse) தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான metaverse – Nike: Nikeland; Gucci: Gucci Garden ஆகியவற்றினை பயன்படுத்தி வருகின்றன .
சிறந்த தொழில்நுட்ப ஜாம்பவான்கள் ஒவ்வொரு தொட்டுணரக்கூடிய சொத்தையும் மீப்பெரும்தரவகத்தில்(metaverse)மெய்நிகர் உறுப்பாகச் சேர்க்கக்கூடும். சிலர்(Facebook: Metaquest2; Nvidia: Omniverse). ஏற்கனவே அவ்வாறு செய்துள்ளனர்
இறுதி வாடிக்கையாளர்கள் மெய்நிகர் உலகை முயற்சிக்கவும், உண்மைநிலையை காணவும், விளையாட்டுகளை விளையாடவும் மெய்நிகர் விடுமுறை அனுபவங்களை அனுபவிக்கவும், ஆடம்பர பிராண்டுகள் மீப்பெரும்தரவகத்தில்(metaverse)AR தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தக்கூடும்