லிபர் ஆஃபிஸ்-4 கால்க்-தொடர்-60-கால்க்கின் விரிதாளில் உள்ளதரவுகளை ஆய்வுசெய்தல்

லிபர் ஆஃபிஸ் கால்க்கின் வாய்ப்பாடுகளுடனும் செயலிகளுடனும் நாம் நன்கு பயற்சியடைந்துவிட்டால் அடுத்த படிமுறையாக விரிதாளில் உள்ள தரவுகளை எவ்வாறு பயனுள்ள திறனாய்வுகளை விரைவாகவும் தானியங்கியாகவும் செய்வது எனஅறிந்து கொள்வதாகும் இதற்காக கால்க்கில் பல்வேறுவகையான கருவிகள் கருவிகளின்பட்டை ,தரவுகளின் பட்டி ஆகிய இரண்டிலும் நாம் பயன்படுத்துவதற்கு ஏதுவாக உள்ளன. இவை புதியவர்களுக்கு அதிக பயனுள்ளவையாக இருக்கின்றன. ஆனாலும் இவைகள் பயன்படுத்த எளிமையாக உள்ளன அதாவது நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் விரிதாளின் கலண்களில் உள்ள தரவுகளுக்கு ஏற்ப கணக்கீடுகள் செய்திடுமாறு. கணக்கிடுவதற்கு வசதியாக கலண்களில் எண்களை வரிசையாக உள்ளீடு செய்திடலாம் இல்லையெனில் சுட்டியின் பொத்தானை சொடுக்குவதன் வாயிலாக அவைகளை தெரிவுசெய்து கொள்ளலாம்
தரவுகளை ஒருங்கிணைத்தல் தரவுகளானது ஒன்றிற்கு மேற்பட்ட வரிசைகளில் இருந்தால் அவைகளை கணக்கிடுவதற்காக ஒன்றிணைத்து கொள்வது மிக முக்கியமாகும் அதற்காக முதலில் லிபர் ஆஃபிஸ் கால்க்கில் தேவையான விரிதாளினை திரையில் தோன்றிடசெய்திடுக அதன்பின்னர் திரையின் மேலே கட்டளைப் பட்டையில் Data ==> Consolidate=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Consolidate எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் Source data range என்பதன்கீழ் Data => Define Range=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக ஏற்கனவே பெயரிடப்பட்டுள்ள பகுதியை தெரிவுசெய்துகொள்க இவ்வாறு ஏற்கனவே பெயரிடப்படவில்லை- யெனில் இதிலுள்ள கீழிறங்கு பட்டியலின் வாயிலாக தேவையான பகுதியை மட்டும் தெரிவுசெய்து கொண்டு Addஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக 60-1
60.1
மேலும் ஒன்றிற்கு மேற்பட்ட பகுதிகளை இவ்வாறே ஒவ்வொன்றாக தெரிவுசெய்துகொண்டு Addஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சேர்த்து கொள்க இவ்வாறு தெரிவு செய்த பகுதிகளின் ஒட்டுமொத்த விளைவு Copy results to என்பதில் உள்ள கீழிறங்கு பட்டியலின் வாயிலாக அறிந்து கொள்க குறிப்பாக இதில் உள்ள கீழிறங்கு பட்டியிலின் Sum,Average, Min, Max, Stdevஎன்பன போன்ற செயலிகளிலிருந்து தேவையான செயலியை மட்டும் தெரிவு செய்துகொண்டு அதனுடைய விடையை தெரிந்துகொள்க இந்நிலையில்More எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் இந்த உரையாடல் பெட்டி விரிவாக்கம் ஆகும் அதனை தொடர்ந்து இதே உரையாடல் பெட்டியின் Options என்பதன்கீழுள்ள Link to source dataஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க பின்னர் Consolidate byஎன்பதன் கீழுள்ள Row labels or Column labelsஆகிய இரண்டு வாய்ப்புகளில் தேவையானதை மட்டும் தெரிவுசெய்துகொண்டு OKஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
subtotalsஐஉருவாக்குதல்
இதனை நம்முடைய விரிதாளில் இருவழிகளில் உருவாக்கிடமுடியும் முதல் வழிமுறையாக திரையின் மேலே கட்டளைபட்டையில் Insert => Function=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Function எனும் செயலி பட்டையில்Function Wizard எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் Ctrl+F2ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் Function Wizard எனும் வழிகாட்டி உரையாடல் பெட்டித் திரையில் தோன்றிடும் அதில் உள்ள செயலிகளின் பட்டியலிலிருந்து SUBTOTALஎன்ற செயலியை மட்டும் தெரிவு செய்து கொண்டு இந்த உரையாடல் பெட்டியின் கீழ்பகுதியிலுள்ள Next=> என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அடுத்து தோன்றிடும் திரையின் Funtiion, Range ஆகிய இரு உள்ளீட்டு பகுதிகளிலும தேவையானவாறு உள்ளீடு செய்துகொண்டு Ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
60-2
60.2
இரண்டாவது வழிமுறையாக முதலில் நம்முடைய தரவுகளுள்ள அனைத்து நெடுவரிசைகளும் பெயரிடபட்டுள்ளதாவென உறுதி செய்து கொள்க பின்னர் துனைக்கூடுதல் காணவிழையும் கலணை தெரிவு செய்து கொள்க. அதன்பின்னர் திரையின் மேலே கட்டளைப்பட்டையில் Data => Subtotals=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Subtotalsஎனும் உரையாடல் பெட்டியில் Group by என்பதன்கீழ் உள்ள பட்டியிலிருந்து துனைக்கூடுதல் காணவிரும்பும் தேவையான நெடுவரிசையை தெரிவுசெய்துகொள்க பின்னர் Calculate subtotals for என்பதன் கீழுள்ள பெட்டியில் துனைக்கூடுதல் காணவேண்டிய நெடுவரிசையின் பெயரை தெரிவுசெய்து கொள்க அதன்பின்னர் Use functionஎனும் பெட்டியின் Sum,Average, Min, Max, Stdevஎன்பன போன்ற செயலிகளிலிருந்து தேவையான செயலியை மட்டும் தெரிவுசெய்துகொள்க மேலும் 2nd Group 3rd Groupஆகிய தாவிகளின் திரையை விரியசெய்து மேலே கூறிய வழிமுறைகளின்படி ஒன்றிற்கு மேற்பட்ட நாம் விரும்பியவாறு துனைக்கூடுதல்களை கணக்கீடுசெய்வதற்காக தெரிவுசெய்து அமைத்து கொண்டு OKஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
உடன் நாம் தெரிவுசெய்த நெடுவரிசைகளுக்கு துனைக்கூடுதல்(subtotal) என்றும் ஒட்டுமொத்த கூடுதல்(Grand Total) என்றும்கணக்கிட்டு திரையில் கட்டமிடப்பட்ட சுற்றுகோடுகளுடன் விடையை காண்பிக்கும் இவ்வாறான சுற்றுகோடுகள் நமக்குத் தேவையில்லையெனில் திரையின்மேலே கட்டளை பட்டையில்Data => Group and Outline => Remove=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நீக்கம் செய்து கொள்க இவை மீண்டும் தேவையெனில்Data => Group and Outline => AutoOutline=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து மீண்டும் கொண்டுவருக
இதே Subtotals எனும் உரையாடல் பெட்டியின் Options எனும் தாவியின் திரையில் Groupsஎனும் பகுதியின் Page break between groups,Case sensitive, Pre-sort area according to groupsஆகிய வாய்ப்புகளில் தேவையான வாய்ப்பினை மட்டும் தெரிவுசெய்துகொள்க அவ்வாறே Sort எனும் பகுதியின் Ascending , Descending,Include formatsஆகிய வாய்ப்புகளில் தேவையான வாய்ப்பினை மட்டும் தெரிவு செய்து கொள்க

60-3
60.3
what-ifஎனும் காட்சிகருவியை பயன்படுத்துதல்
இதுஒரு திறன்மிகுந்த கருவியாகும் எதிர்காலத்தில் இவ்வாறு இருந்தால் அதன்முடிவு எவ்வாறு இருக்கும் என பல்வேறுசூழல்களையும் நிலைகளையும் முன்கூட்டியே அறிந்துகொள்ள இது உதவுகின்றது
இதனை உருவாக்கிடுவதற்காகமுதலில் குறைந்தது விரிதாளில் இரண்டு கலண்களை தெரிவுசெய்து கொள்க அல்லது Ctrlஎனும் விசையை அழுத்தி பிடித்துகொண்டு இரண்டிற்கு மேற்பட்ட கலண்களைகொண்ட பகுதிகளை ஒவ்வொன்றாக தெரிவுசெய்துகொண்டு திரையின்மேலே கட்டளை பட்டையில்Tools => Scenarios=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க உடன் Create Scenarioஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் இதில் Name of Scenerio என்பதில் நாம் தெரிவுசெய்த தரவுகளின் தலைப்பு பகுதியின் பெயர் இயல்பாக பிரதிபலிக்கும் தேவையெனில் பெயரினை மாற்றியமைத்து கொள்க Comment என்பதில் விரிதாளினை பார்வையிடுபவர்கள் தெரிந்து கொள்வதற்காக இதற்கான விளக்கத்தை உள்ளீடு செய்து கொள்க Setting என்பதன்கீழுள்ள Display border என்பன போன்ற வாய்ப்புகளில் தேவையான ஒன்றினை தெரிவு செய்து கொள்க பின்னர் Ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
தொடர்ந்து Scenario properties,Scenario cell valuesஆகிய இரண்டையும் நாம் ஏற்கனவே அமைவு செய்ததற்கு ஏற்ப மாற்றியமைத்திடலாம் Setting என்பதன்கீழ்Prevent changes என்ற வாய்ப்பு தெரிவுசெய்யப்பட்டிருந்தாலும் Tools => Protect Document => Sheet=> என்றவாறு கட்டளைகளைதெரிவுசெய்து சொடுக்குதல் செய்து பாதுகாத்திருந்தாலும் மாறுதல்கள் செய்திடமுடியாது இவ்வாறு scenariosஐ ஒருவிரிதாளில் சேர்த்தபின்னர் Navigator எனும் வழிகாட்டி உரையாடல் பெட்டியை தோன்றச்செய்து அதில் Scenarios எனும் உருவப் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நடப்பு தாளில் இதனை கொண்டு வருதல், தேவையற்றதாளில் நீக்கம் செய்தல் , பண்பியல்புகளை மாறுதல் செய்தல், திருத்தம் செய்தல் ஆகிய செயல்களை செய்திடமுடியும் இந்த scenariosஇல் எந்த கலணின்மதிப்பு எவ்வாறு மாறியதுஎன அறிந்துகொள்ள திரையில் மேலே கட்டளைப் பட்டையில் Tools => Detective =>Trace Dependents=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் அறிந்து கொள்க
60-4
60.4
what ifஎன்பதன் மற்ற கருவிகளை பயன்படுத்தி கொள்ளுதல்
இதற்காக Data => Multiple Operations=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் வாயிலாக தோன்றிடும் Multiple Operations எனும் உரையாடல் பெட்டித் திரையானது what ifஎனும் கேள்விகளுக்கான ஒரு திட்டமிடும் கருவியாக விளங்குகின்றது இது மாறிகள் இருக்கும் அதே கலணில் அல்லது அதில் கீழிறங்கு பட்டியலை தோன்ற செய்வதற்கு பதிலாக வாய்ப்பாட்டில் மாறிகளை பயன்படுத்தி அதன் மாற்று மதிப்புகளை தனியான தொகுதியாக தோன்றிடச்செய்கின்றது இந்த பல்லடுக்கு செயலிகளின் கருவிக்கு உண்மைமதிப்பு அதன்மீது செயல்படுத்தபடும் வாய்ப்பாடு ஆகிய இரண்டடுக்கு கலண்மட்டும் தேவையாகும் ஒன்றிற்கு மேற்பட்ட வாய்பாடுகளுடன் ஒன்று அல்லது இரண்டு மாறிகளை மட்டும் இந்த பல்லடுக்கு செயலிகளின் கருவிக்காக பயன்படுத்தி கொள்ளமுடியும் இந்த Multiple Operations எனும் பல்லடுக்கு செயலிகளின் கருவியை பயன்படுத்தி நெடுவரிசைகளில் அல்லது கிடைவரிசைகளில் ஒரு வாய்ப்பாட்டில் ஒற்றையான மாறியை கொண்டு கணக்கீடு செய்திடமுடியும்
உதாரணமாக ஒருநிறுவனத்தின் 500 முதல் 5000 வரை பல்வேறு அளவில் அதனுடைய உற்பத்தி பொருட்கள் இருந்தால் ஒவ்வொரு 500 பொருள் கூடுதலாக உற்பத்தி இருக்கும்போது எவ்வளவு இலாபம் அல்லது நட்டம் ஏற்படும் என அறிந்துகொள்வதற்காக Profit=Quantity * (Selling price – Direct costs) – Fixed costs. என்ற வாய்ப்பாட்டினை B5: =B4*(B1-B2)-B3 என்றவாறு கலண்களில் உள்ளீடு செய்து கொள்க. D2:E11 என்றவாறு D ,E ஆகிய நெடுவரிசைகளை தெரிவுசெய்துகொண்டு Data => Multiple Operations=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Multiple Operationsஎனும் உரையாடல் பெட்டியில் Formula fieldஎன்பதில் இடம்சுட்டியை கொண்டுசென்று வைத்து B5 என்றும் Column input cell fieldஎன்பதில் இடம்சுட்டியை கொண்டுசென்று வைத்து B4.எனும் என்றும் இருகலண்களை தெரிவுசெய்து கொண்டு (இங்குB4.என்பது அந்நிறுவனத்தின் உற்பத்தி பொருளின் அளவு உள்ள கலணாகும் ) OK.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் D நெடுவரிசையில் 500 முதல் 5000 வரை உற்பத்தி பொருட்களுக்கு ஏற்ப E நெடுவரிசையில் அதன் இலாபம் அல்லது நட்டஅளவு பிரதிபலிக்கும்
60-5
60.5
இதன்பின்னர் C5: =B5/B4 என்றவாறு (உற்பத்தி பொருளின் ஒவ்வொன்றின் இலாபம் அல்லது நட்டஅளவு ) கூடுதலான வாய்ப்பாட்டினை உள்ளீடு செய்துகொண்டு D2:F11 என்றவாறு D ,E ,Fஆகிய நெடுவரிசைகளை தெரிவுசெய்துகொண்டு Data => Multiple Operations=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Multiple Operationsஎனும் உரையாடல் பெட்டியில் Formula fieldஎன்பதில் இடம்சுட்டியை கொண்டுசென்று வைத்து B5 என்றும் Column input cell fieldஎன்பதில் இடம்சுட்டியை கொண்டுசென்று வைத்து , C5என்றும் இருகலண்களை தெரிவுசெய்துகொண்டு OK.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் D நெடுவரிசையில் 500 முதல் 5000 வரை உற்பத்தி பொருட்களுக்கு ஏற்ப E நெடுவரிசையில் அதன் இலாபம் அல்லது நட்டஅளவுடன் F எனும் நெடுவரிசையில் உற்பத்தி பொருளின் ஒவ்வொன்றின் இலாபம் அல்லது நட்டஅளவும் சேர்த்து பிரதிபலிக்கும்
அட்டவணையில் உள்ள நெடுவரிசைகளாகவும் கிடைவரிசைகளாகவும் உள்ள தரவுகளை கணக்கிடுவதற்காக இந்த பல்லடுக்கு செயலிகளின் கருவியை பயன்படுத்தி கொள்ளமுடியும்
மேலும் இந்த Multiple Operationsஎனும் பல்லடுக்கு செயலிகளின் கருவியை பயன்படுத்தி வெவ்வேறு அளவு உற்பத்தி பொருள் மட்டுமல்லாது வெவ்வேறு விற்பணை விலையில் இலாபம் அல்லது நட்டம் எவ்வளவு இருக்கும் என கணக்கிட்டு காணமுடியும் D1 D11வரை வெவ்வேறு அளவு உற்பத்தி பொருட்களின் அளவு 500 முதல் 5000 வரை உள்ளன E1 E11 வரை 10 முதல் 110 வரை வெவ்வேறு விற்பணை விலை உள்ளன D1:H11 என்றவாறு D ,E ,F,Hஆகிய நெடுவரிசைகளை தெரிவுசெய்துகொண்டு Data => Multiple Operations=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Multiple Operationsஎனும் உரையாடல் பெட்டியில் Formula fieldஎன்பதில் இடம்சுட்டியை கொண்டுசென்று வைத்து B5, Row input cell fieldஎன்பதில் இடம்சுட்டியை கொண்டுசென்று வைத்து B1 Column input cell fieldஎன்பதில் இடம்சுட்டியை கொண்டுசென்று வைத்து B4தெரிவுசெய்துகொண்டு OK.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் D நெடுவரிசையில் 500 முதல் 5000 வரை உற்பத்தி பொருட்களுக்கு ஏற்ப E நெடுவரிசையில் அதன் இலாபம் அல்லது நட்டஅளவுடன் F எனும் நெடுவரிசையில் உற்பத்தி பொருளின் ஒவ்வொன்றின் இலாபம் அல்லது நட்டஅளவும் Hநெடுவரிசையில் வெவ்வேறு விற்பணை விலையில் இலாபம் அல்லது நட்டம் சேர்த்து பிரதிபலிக்கும்
இவ்வாறே Goal Seekஎனும் கருவியை கொண்டுஎதிர்காலத்தில் நிதிநிலை எவ்வாறு இருக்கும் என ஒரு மாறிலையை மட்டும் கணக்கில் எடுத்துகொண்டு கணக்கிட்டு அறிவதற்கு பயன்படுத்திகொள்ளலாம் இதற்காக Tools => Goal Seek=> என்றவாறு செயற்படுத்தியவுடன் Goal Seekஎனும் உரையாடல் பெட்டி தோன்றிடும் அதில் Formula fieldஎன்பதில் இடம்சுட்டியை கொண்டுசென்று வைத்து நாம் கணக்கிட விரும்பும் வாய்ப்பாடு இருக்கும் கலணையும் Target value என்பதில் எவ்வளவு நம்முடைய குறிக்கோள் மதிப்பு என்றும் variable cell என்பதில் மாறியின் மதிப்பிருக்கும் கலணையும் தெரிவுசெய்து கொண்டு OKஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் எதிர்பார்த்திடும் மதிப்பு குறிப்பிட்ட கலணில் தோன்றிடும்
60-6
60.6
ஒன்றிற்கு மேற்பட்ட மாறிகளை கொண்டு எதிர்பார்க்கும் மதிப்பு எவ்வாறு இருக்கும் என காண்பதற்காக Tools => Solver=> என்றவாறு செயற்படுத்தியவுடன் Solver எனும் உரையாடல் பெட்டி தோன்றிடும் அதில் Target cell என்பதில் எதிர்பார்க்கும் மதிப்பு கொண்டுவரவேண்டிய கலணையும் By changing cellsமாறியமைந்துள்ள கலணையும் Cell reference, Operator , Value fields ஆகியவற்றில் தேவையானவாறு தெரிவுசெய்து கொண்டு Solv எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் கணக்கீடு செய்திடும் தொடர்ந்து Keep Result எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்த மதிப்பை கலணில் சேமித்து கொள்க
60-7
60.7

செல்லிடத்து பேசியின் அனைத்து தளங்களிலும் செயல்படும் பயன்பாடுகளை உருவாக்கிட உதவும் கருவிகள்

இன்று உலகில் ஸ்மார்ட் ஃபோன்களும் ,டேப்ளெட்களும் நாளுக்கு நாள் அவைகளை பயன்படுத்திடும்எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவதால் செல்லிடத்து பேசிக்கான பயன்பாட்டினை உருவாக்கிடும் தொழில்நுட்ப வல்லுனர்கள், மேம்படுத்துநர்கள், நிறுவனங்கள் பயன்படுத்துபவர்கள் ஆகிய அனைவருடைய பணியானது மிககவர்ச்சிகரமாக முதன்மை இடத்தை வகிக்கின்றது இந்த ஸ்மார்ட் ஃபோன்களில் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் ஆகிய இரு இயக்க-முறைமைகளும் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன. பொதுவாக இன்று நிறுவனங்களின் நோக்கம் அனைத்தும் மிகத்திறனுடைய எளிதாக கையாளும் வண்ணம் இருக்கும் செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளை உருவாக்குவதில் மட்டுமே உள்ளது அதனால் தற்போதைய செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளானது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் வல்லமை கொண்டதாக இருக்கவேண்டும் என்பதே மிக அடிப்படை நிபந்தனையாகும் ஆயினும் இதற்காக ஏராளமான அளவில் கருவிகள் யார்வேண்டுமானாலும் பயன்படுத்தி தமக்குத்தேவையான பயன்பாடுகளை உருவாக்கி கொள்ளுமாறு தயாராக இருக்கின்றன அவைகளுள் Sencha Touch, Appcelerator Titanium,Qt,XamarinSDKஆகிய வற்றை பற்றிய மேலோட்டமான பார்வை இந்த கட்டுரையில் வழங்கப்படுகின்றன
1 Sencha Touch என்பது கட்டற்ற செல்லிடத்து பேசியின் அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்ட செல்லிடத்து பேசி பயன்பாடுகளை உருவாக்க உதவும் ஜாவாஸ்கிரிப்ட் எனும் கணினிமொழியால் உருவாக்கப்பட்ட தொரு கருவியாகும் இது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், ப்ளாக்பெர்ரி,கிண்டில்,விண்டோபோன்,டிஜ்ஜான் ஆகிய அனைத்து செல்லிடத்து பேசிகளின் இயக்குமுறைமைகளில் செயல்படும் திறன்கொண்டதாகும். செ்ல்லிடத்து பேசியின் வரைகலை பயனாளர் இடைமுகவசதியுடன் இணையதள பக்கத்தில் பயன்பாடுகளை உருவாக்குவதற்காகவே இந்த கருவி அமைந்துள்ளது. மிகவிரைவாக கட்டமை உருவாக்கிடவும் குறிப்பிட்ட செல்லிடத்து பேசியின் இயக்குமுறைமையில் செயல்படுவதற்காகவே உருவாக்கபட்ட பயன்பாடாக அதன் கட்டமைவு இருந்திடுமாறும் உருவாக்கிடும் வசதியை அளிக்கின்றதுமேலும் விவரங்களுக்கு https://www.sencha.com/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க
2 Appcelerator Titanium என்பது ஒருஒற்றையான ஜாவாஸ்கிரிப்ட் அடிப்படையில் உருவாக்கிடும் பயன்பாடானது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், ப்ளாக்பெர்ரி, கிண்டில், விண்டோ-போன், ஆகிய எந்தவொரு இயக்கமுறைமைகளிலும் செயல்படும் வல்லமை கொண்ட பயன்பாடுகளை உருவாக்கிடுவதற்கான வரைச்சசட்டமாக விளங்குகின்றது எந்தவொரு செல்லிடத்து பேசி சாதனத்திலும் அதனுடைய எந்தவொரு செல்லிடத்து பேசிகளின் இயக்குமுறைமைகளில் செயல்படும் திறன்கொண்டதாகும் பயன்பாட்டினை ஆய்வு செய்வது பின்புலமாக செயல்படும் சேவை போன்ற பல்வேறு வசதிகளை இது பயனாளர்களுக்கு வழங்குகின்றதுமேலும் விவரங்களுக்கு https://www.appcelerator.com/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க
3 Qtஎன்பது மிகமுக்கியமான அனைத்து செல்லிடத்து பேசிகளின் இயக்கமுறை தளங்களிலும் செயல்படும் செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளின் குறிமுறைவரிகளில் அதிகமாக மாறுதல் செய்திடாமலேயே செயல்படுத்திடும் வல்லமைகொண்ட வரைச்சட்டமாகும் இது சி++ இன் செயல்முறைகளை தம்முடைய பயன்பாட்டிற்கு பயன்படுத்திகொள்கின்றது இது மைக்ரோசாப்ட் விசுவல் ஸ்டுடியோவை ஆதிரிக்கின்றதுமேலும் விவரங்களுக்கு https://www.qt.io/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க
4 XamarinSDK என்பது செல்லிடத்து பேசிகளின் அனைத்து தளங்களிலும் செயல்படும் சக்தி வாய்ந்த செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளை உருவாக்கிடஉதவும் ஒரு கட்டற்ற கருவியாகும் இதனை மைக்ரோசாப்ட், ஐபிஎம்,ஃபேர்ஸ்குயர் போன்ற தகவல்தொழில் ஜாம்பவான் நிறுவனங்கள் தங்களின் செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளை உருவாக்குவதற்காக பயன்படுத்தி கொள்கின்றன. இது ஆப்ஜெக்ட்டிவ் சி, சிஷார்ப் ஆகிய கணினி மொழிகளை ஆதரிக்கின்றது இது மிகமுக்கியமான ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோ-போன் ஆகிய இயக்கமுறைமைகளில் செயல்படும் பயன்பாடுகளை உருவாக்கிடும் வல்லைமைகொண்டது இதில் உருவாக்கபடும் செல்லிடத்து பேசியின் குறிமுறைவரிகளை மற்ற செல்லுடத்து பேசி இயக்கமுறைமையில் 90 சதவிகிதம் அப்படியே பயன்படுத்தி பயன்பாடுகளை உருவாக்கிடமுடியும் மேலும் விவரங்களுக்கு https://www.xamarin.com/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க

Mapmeஎனும் கருவியை பயன்படுத்தி கதை கட்டுரை ஆகிவற்றில் உருவப்படம் ,வரைபடம் ,கானொளி காட்சி ஆகியவற்றை இணைத்துகொள்க

நாம் இணையத்தில் நம்முடைய கதை கட்டுரை ஆகிவற்றை உரையாக வழங்குவதைவிட அதனோடு உருவப்படம் ,வரைபடம் ,கானொளி காட்சி ஆகியவற்றுடன் இணைத்து வழங்கும்போது அதிக பார்வையாளர்கள் வந்து பார்வையிடவிரும்புவார்கள் மேலும் நாம் கூறவிழையும் இறுதி செய்தியானது பார்வையாளர்களால் எளிதாக புரிந்து கொள்ளவும் அறிந்துகொள்ளவும் முடியும் இவ்வாறு கதை கட்டுரை ஆகியவற்றுடன் உருவப்படம் ,வரைபடம் ,கானொளி காட்சி ஆகிவற்றை எளிதாகவும் விரைவாகவும் இணைத்து பார்வையாளர்களுக்கு உதவவருவதுதான் Mapmeஎனும் கட்டற்ற பயன்பாடாகும் இதனை பயன்படுத்தி கொள்வதற்கு https://mapme.com/எனும் இணைய பக்கத்திற்கு செல்க முதலில் அதன் முகப்பு பக்கத்தில் Facebook, LinkedIn அல்லது மின்னஞ்சல் முகவரியுடன் நமக்கென தனியாக கணக்கு ஒன்றினை துவங்குக பின்னர் Create New எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் map editor எனும் திரையின் வலதுபுறம் கீழ்பகுதியில் மூன்று படிமுறைகொண்ட மேல்மீட்பு பட்டியொன்று தோன்றிடும் அது கூறும் வழிமுறையை பின்பற்றி நமமுடைய வரைபடத்தை உருவாக்கிடுக தொடர்ந்து திரையின் மேல்பகுதியில் உள்ள customization எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர் விரியும் திரையில் நாம்விரும்பியவாறு தேவையான இடத்தில் தேவையானவாறு உரை உருவப்படம் கானொளிபடம் text, images, video ஆகியவற்றை அமைத்து கொள்க இறுதியாக Preview எனும் பொத்தானை அழுத்தி செல்லிடத்து பேசி அல்லது கணினியின் திரையில் எவ்வாறு இருக்கும் என பார்வையிடுக தேவையெனில் மீண்டும் முந்தைய திரைக்கு சென்று சரிசெய்து அமைத்து கொள்க அதன்பின்னர் saveஎனும் பொத்தானை அழுத்தி சேமித்து கொள்க அல்லது Shareஎனும் பொத்தானை அழுத்தி இதனை நம்முடைய மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்க

உருவப்படங்களை tiff எனும் வடிவமைப்பில் உருமாற்றி சேமித்துஎளிதாக மின்னஞ்சலில் இணைத்து அனுப்பிடவும்பதிவேற்றம் செய்திடவும் செய்க

உருவப்பட கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்பிடும்போது அல்லது பதிவேற்றம் செய்திடும்போது அவ்வாறு இணைக்கமுடியவில்லை அல்லது பிழையாகவிட்டது என்ற செய்தியை கணினியானது திரையில் காண்பிக்கும் இந்நிலையில்நாமும் பதட்டத்துடன் என்னசெய்வது என தெரியாமல் தவித்துகொண்டிருப்போம் அஞ்சற்க முதலில் அவ்வாறான உருவப்படத்தை கையாளும் பெயின்ட் எனும் பயன்பாட்டில் நாம் இணைத்து அனுப்பவிரும்பும் அல்லது பதிவேற்றம் செய்திடவிரும்பும் உருவப்படத்தை திறந்து கொள்க பின்னர் Open=> Save as =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Save as எனும் பட்டியில் jpg, .png, .gif, tiff ,or .bmp ஆகிய வாய்ப்புகள் உள்ளன அவற்றுள் tiff எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு Save எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக பின்னர் விரியும் Save எனும் சாளரத்தில் இதற்கு வேறொரு பெயரிட்டு சேமித்து கொள்க இதன்பின்னர் இந்த tiff எனும் பின்னொட்டுடன் கூடிய உருவப்படம் எளிதாக மின்னஞ்சலில் இணைத்து அனுப்பிடவும்பதிவேற்றம் செய்திடவும் முடியும் வாருங்கள் உங்களுடைய உருவப்படங்களை இன்றே tiff எனும் வடிவமைப்பில் சேமித்து உங்களுடைய தேவையை நிறைவேற்றிகொள்ளுங்கள்
7

விண்டோ 7 இல் ரேம் நினைவக அளவை காணுதல்

இந்த ரேம் என்பது கணினியின் நிகழ்நிலை அல்லது செயல் நினைவகமாகும் நம்முடைய கணினியில் நாம் பயன்படுத்துகின்ற பயன்பாடுகளை விரைவாக செயல்படுத்திடுவதற்காக வன்தட்டிலிருந்து அதற்கான தரவுகளை இந்த நினைவகமானது தன்னிடம் கொண்டுவந்து நாம் பயன்படுத்திடுவதற்காக தயாராக வைத்திருக்கின்றது பல்லூடகத்தை நம்முடைய கணினியில் செயல்படுத்திட முயன்றால் தற்காலிக நினைவகத்தில் அதற்கேற்ப அதிக அளவு கோப்புகளை மேலேற்றி வைத்திடுகின்றது உதாரணமாக நம்முடைய கணினியில் 2ஜிபி ரேம் நினைவகம் இருப்பதாக கொள்வோம் அதில் கணினியின் அமைவு கோப்புகள் 100எம்பி நினைவகத்தையும் கணினியின் தொடக்க இயக்கத்திற்கான கோப்புகள் 200 எம்பி நினைவகத்தையும் எடுத்து கொண்டது போக மிகுதி 1700 எம்பி நினைவகமே நாம் செயல்படுத்திடும் கோப்புகளுக்காக உள்ளன இணைய உலாவருதலுக்கும் மின்னஞ்சலை பார்வையிடவும் இசையை கேட்டிடவும் 4 ஜிபி ரேம் நினைவகம் தேவையாகும் ஆனால் நம்மிடம் மிகுதியிருப்பது 1.7 ரேம் மட்டுமேயாகும் அதனால் தான் நம்முடைய கணினி இணைய உலாவருதல் மின்னஞ்சலை பார்வையிடவும் இசையை கேட்டிடவும் செய்திடும்போது மிகமெதுவாகின்றது அதைவிடமுப்பரிமான விளையாட்டு எனில் 8 ஜிபி ரேம் தேவையாகும் நம்முடைய கணினியின் குறைந்தபட்சம் தேவையான ரேம் எவ்வளவு என பின்வருமாறு அறிந்து கொள்க Start=>Control Panel=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Control Panel எனும் சாளரத்திரையின் மேல்பகுதியில் உள்ள System and Security எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் System and Security எனும் சாளரத்திரையில் System எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இறுதியாக தோன்றிடும் System எனும் சாளரத்திரையில் System என்ற தலைப்பின் கீழ் நீலவண்ணத்தலைப்பில் நம்முடைய கணினியின் ரேம் நினைவகத்தின் அளவு Installed Memory (RAM): 2.5gp என்றவாறு தோன்றிடும்

லிபர் கேட் (LibreCAD) எனும் கட்டற்ற கட்டணமற்றஇருபரிமான கணினி உதவியுடனான வடிவமைப்பு பயன்பாடு ஒரு அறிமுகம்

7 LibreCADலிபர் கேட் என்பது ஒரு கட்டற்ற கட்டணமற்ற விண்டோ ,மேக்ஸ்,லினக்ஸ் ஆகிய பல்வேறு இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்க இருபரிமான கணினி உதவியுடனான வடிவமைப்பு பயன்பாடாகும் இது 20 இற்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கன்றது இது ஜீப்பிஎல்வி2 எனும் பொது அனுமதியின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது இது DXF , DWG ஆகிய வடிவமைப்பு கோப்புகளை படித்தல் எழுதுதல் ஆதரிக்கின்றது அதுமட்டுமல்லாத SVG, JPG, PNG, PDF ஆகிய வடிவமைப்பு கோப்புகளாக பதிவேற்றம் செய்திடவும் ஆதரிக்கின்றது இதில் உரையோட்டமானது வலதுபுறத்தில் இருந்து இடதுபுறமாக சென்றிடுமாறு உரையை உள்ளீடு செய்வதற்கு அனுமதிக்கின்றது இது layers, blocks, splines, polylines, ellipse , tangent line & circle , transformation , snapping system ஆகிய பல்வேறு கருவிகளை பயனாளர்கள் பயன்படுத்தி கொள்வதற்காக வைத்துள்ளது இது இருபரிமாணத்தில் மிக விரைவாக செயல்படும் திறனுடன் குறைந்த நினைவகத்தே கொண்டுள்ளதால் இதனை நிறுவுகை செய்திட 30எம்பி நினைவகமே போதுமானதாகும்
இந்த லிபர் கேட் ஆனது முதன்முதல் QCad என்றபெயரில் இருந்தது பின்னர் படிப்படியாக வளர்ந்து 2DCAD எனும் பயன்பாடாகவும் அதன் பின்னர் தற்போது LibreCADஎனும் பெயரிலும் கிடைக்கின்றது இதனை பற்றிய முழுமையான செய்முறையை கானொளி காட்சியாக அறிந்து கொள்வதற்காக http://www.youtube.com/results?search_query=librecad எனும் இணைய பக்கத்திற்கு செல்க அங்கு இதனைபற்றி நன்கு அறிந்து கொண்டபின்னர் இந்த இருபரிமான வரைகலை பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்வதற்காக முதலில் https://sourceforge.net/ projects/librecad/files எனும் இணைய பக்கத்திலிருந்து இதனுடைய சமீபத்திய பதிப்பினை பதிவிறக்கம் செய்து கொள்க பி்ன்னர் இதனுடைய கோப்பினை செயற்படுத்தியவுடன் தேன்றிடும் திரையில் கூறும் அறிவுரைகளை பின்பற்றி அதற்கு ஏற்ப நம்முடைய கணினியில் நிறுவுகை செய்துகொள்க மேலும் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் அதனை தீர்வுசெய்து கொள்வதற்காக http://librecad.org/cms/home/get-help/forum.html எனும் இணைய பக்கத்திற்கு செல்க

கல்லூரி மாணவர்கள் கணிதத்தை பயிலஉதவும் SageMath எனும் கட்டற்ற மென்பொருள்

6
கணிதத்தை கற்பதற்காக Magma,Maple,Mathematica,Matlap ஆகிய தனியுடைமை பயன்பாட்டு மென்பொருட்களுக்கு மாற்றாக கட்டற்ற கட்டணமற்ற கணிதத்திற்கான பயன்பாட்டு மென்பொருளாக SageMath என்பது விளங்குகின்றது இது பைத்தான், சைத்தான் ஆகிய கணினி மொழிகளால் உருவாக்கபட்டதாகும் இது 90 இக்கும் அதிகமான கட்டற்ற கணித பயன்பாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் திறன்மிக்கதாக விளங்குகின்றது இது ஒரு இணைய அடிப்படையிலான வரைகலை இடைமுகத்தையும் பயனாளர் ஒருவர் இணையத்தின் வாயிலாக அல்லது கட்டளைவரிவாயிலாக இடைமுகம் செய்திடும் திறன் கொண்டதாகவும் விளங்குகின்றது இந்த SageMath ஆனது இயற்கணிதம், தொடர்-இயற்கணிதம், வரைபடம்,எண்கணிதம் ,வகைநுன்கணிதம், தொகைநுண்கணிதம் போன்ற அடிப்படை கணிதப் பகுதிகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது பொதுவாக கணிதத்தில் இளங்களை பயிலும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தங்களுக்குத்-தேவையான நூல்களை http://www.sagemath.org/library-publications.html#books/ என்ற இணைய-முகவரியில் பார்வையிட்டு சரியானதுதான் என உறுதிபடுத்தி கொண்டு தமக்குத் தேவையானதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இந்த பயன்பாடு நம்முடைய கணினியில் செயல்படுவதற்காக make,m4,Perl,ranlib,C/C++compiler ஆகியவை அடிப்படையாக தேவையாகும் இந்த பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்வதற்காக http://www.sagemath.org/download-source.html/ என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்க
இந்த தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள அதிகநேரம் ஆகும் அதனால் http://mirrors.ustc.edu.on/sagemath/devel/sage-6.8.rc1.tar.gz-c/ எனும் தளத்திலிருந்து இந்த பயன்பாட்டின் சுருக்கி கட்டப்பட்ட கோப்பினை பதிவிறக்கம் செய்து கொண்டபின்னர் பதவிறக்கும் செய்யப்பட்ட சுறங்கிய கோப்பினை விரித்து பயன்படுத்தி கொள்க இந்த கட்டற்ற பயன்பாடு ஆய்வாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மட்டுமல்லாது மாணவர்களுக்கும் இதனுடைய செயல்முறை காட்சி பேருதவியாக இருக்கின்றது கணிதத்தில் ஆர்வுமுள்ளவர்கள் கல்லூரியில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து பயிலும் கல்லூரிமாணவர்கள் ஆய்வாளர்கள் ஆகிய அனைவரும் இந்த SageMath எனும் கட்டற்ற கட்டணமற்ற கணித பயன்பாட்டு மென்பொருளை பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கபபடுகின்றது

Profanityஎனும் கட்டற்ற கட்டளைவரிஇடைமுக பயன்பாடு ஒரு அறிமுகம்

5
Profanityஎன்பது வரைகலை பயனாளர் இடைமுகத்திற்கு (Graphicla User Interface (GUI)) பதிலாக கட்டளைவரிஇடைமுகத்தின் (Command Line Interface (CLI))வாயிலாக விரிவாக்க செய்திகளின் ஒழுங்குமுறை (Extesible Messageing Presence Protocol (XMPP)) என்பதன் அடிப்படையில் விவாதம் செய்திடஉதவும் ஒரு பயன்பாடாகும்
தற்போது கணினிமுதல் செல்லிடத்து பேசிவரை எல்லாமே வரைகலைபயனாளர் இடைமுகமாக மாறிவி்ட்ட நிலையில் இந்த கட்டளைவரி விவாத பயன்பாடு தேவையா எனும் கேள்வி நம் அனைவருடைய மனதிலும் கண்டிப்பாக எழும்
நிற்க முதலில் இந்த பயன்பாட்டினுடைய வசதிகளையும் வாய்ப்புகளையும் பற்றி நாம் அறிந்து கொண்டால் அதன்பின்னர் இதற்கான விடை தானாகவே கிடைக்கும்
இந்த CLI செயல்படுத்திட விசைப்பலகை மட்டும் போதும் என்பதால் இது மிகவிரைவாக செயல்படுகின்ற திறன்மிக்கதாக விளங்குகின்றது
இது செயல்படுவதற்கு கணினியில் குறைந்த வசதிகளே போதுமானதாகும்
இது செயல்படுவதற்கு GUI போன்று பல்வேறு செயல்களும் ஒன்றிணைந்ததால் மட்டுமே இதனை செயல்படுத்தமுடியும் என்ற நிலை தற்போது இல்லை
அவ்வாறே இதனை GUI விட அதிக கட்டுபாட்டுடன் செயல்படுத்திடமுடியம்
என்பனபோன்ற பல்வேறு வசதிகளை அல்லது பயன்களை அல்லது திறன்களை இது கொண்டுள்ளது
மேலும் இதன்மூலம் பரிமாறிகொள்ளப்படும் செய்திகள் encryptionசெய்யப்படுவதால் செய்திகளை யாரும் இடைமறித்து அல்லது குறுக்கிட்டு அபகரித்து பெறமுடியாது
அதுமட்டுமல்லாது இதில் பரிமாறி கொள்ளப்படும் செய்திகளை மற்ற நபர்களால் யாராலும் திருடி கொள்ளவும் முடியாது
கூடுதலாக இதுquestion and answer , Shared secret , Finger print ஆகிய மூன்று வழிகளில் குறிப்பிட்ட நபர்களுக்கிடையே மட்டும் செய்திகளை பரிமாறிகொள்ள அனுமதிக்கின்றது அதனால் இந்த கட்டளைவரி குழுவிவாதம் மிகவும் பாதுகாப்பானது
இது லினக்ஸ் மேக் விண்டோ ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது
இதில் சாளரங்களுக்கிடைய மாறிகொள்வதற்காக Alt-1 to Alt-0 அல்லதுF1 to F10 அல்லது
Alt-left, Alt-right என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக மேலும் விவரங்களுக்கும் இதனை முழுவதுமாக அறிந்து தெரிந்து பயன்படுத்தி கொள்ளவும் http://www.profanity.im/userguide.html எனும் இணைய முகவரிக்கு செல்க இதனை http://www.profanity.im/ எனும் இதனுடைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து உங்களுடைய கணினியில் நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்க

அறிவியல் பயிலும் மாணவர்களுக்கு உதவிட தயாராக இருக்கும் OLabsஎனும் இணைய மெய்நிகர் ஆய்வுக்கூடம்

பொதுவாக ஒரு கல்விநிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் அதனைவிட்டு வெளியேறும்போது எந்தவொரு நிகழ்வையும் ஏன்நிகழ்ந்தது எவ்வாறு நிகழ்ந்தது எதற்காக நிகழ்ந்து என ஆழ்ந்து சிந்திக்கும் மனப்பான்மை எந்தவொரு மாணவனுக்கும் கண்டிப்பாக உருவாகவேண்டும் அப்போதுதான் தரமான கல்வியை அந்த நிறுவனம் வழங்கியுள்ளது என அறிந்து கொள்ளலாம் பொதுவாக இவ்வாறான ஆய்வு மனப்பான்மையை அனைத்து வகையான கல்வியும் வழங்கவேண்டும் .அதிலும் அறிவியல் தொடர்பான கல்வி இவ்வாறான ஆய்வு மனப்பான்மைய கண்டிப்பாக வழங்கவேண்டும் .அதைவிட அறிவியில் கல்விஎனும்போது மடடும் அந்நிறுவனங்களில் கூடுதலாக போதுமான அளவு ஆய்வுக்கூடவசதிகள் இருக்கவேண்டும் ஆனால் இந்தியாவின் கல்வி நிறுவனங்களில் பல நிறுவனங்கள் தம்மிடம் பயிலும் மாணவர்கள் ஆய்வுக்கூடங்களுக்கு செல்லாமலேயே அவர்களுக்கான அறிவியல் பட்டம் வழங்கும் நிலையில் உள்ளன ஏனெனில் ஆய்வுக்-கூடங்களை நிறுவியபின்னர் அதில் போதுமான தளவாடங்கள் கருவிகள் வேதியியல் பொருட்கள் போன்றவைகளை இவை கொள்முதல் செய்து பராமரிப்பதே இல்லை இதனால் பெரும்பாலான மாணவர்கள் கல்வி கற்கும்போது இடையில் பாதியிலேயே விட்டுவிட்டு செல்லும் நிலை ஏற்படுகின்றது நிற்க.
4
இன்று எந்தவொரு நிகழ்விற்கும் கணினி இல்லையென்றால் எதுவுமே இல்லை என்ற வளர்ந்துள்ள நிலையில் இந்த அறிவியல் ஆய்வுக்கூடங்களும் மெய்நிகர் ஆய்வுக்கூடமாக உருவாக்கினால் பேருதவியாக இருக்குமே என அனைவரும் ஏங்கும் நிலை உள்ளது
இவ்வாறான நிலையில் அறிவியல் பயிலும் மாணவர்கள் தங்களின் ஆய்வுகூட பயிற்சியை வளர்த்து கொள்வதற்காக சிடாக் என்ற நிறுவனமும் மின்னனுதகவல்தொழில்நுட்ப துறையும் சேர்ந்து OLabsஎனும் மெய்நிகர் ஆய்வுக்கூடத்தை இணையத்தின் வாயிலாக பயன்படுத்தி கொள்ளும் வண்ணம் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காகவே உருவாக்கி பராமரித்து வருகின்றன இதனுடைய இணையமுகவரி http://www.olabs.edu.in/ ஆகும் இந்த ஆய்வுக்கூடத்தை நம்முடைய கணினியில் பயன்படுத்திகொள்வதற்கு என தனியாக எந்தவொரு பயன்பாட்டு மென்பொருளையும் நிறுவுகை செய்யத்தேவையில்லை அதற்கு பதிலாக நம்மிடம் இணைய இணைப்புடைய கணினியும் அதில் தரமான இணையஉலாவி மட்டும் இருந்தால் போதும் இந்த ஆய்வுக்கூட வசதியை பயன்படுத்தி கொள்வதற்காக இந்த இணைய பக்கத்திற்குள் உள்நுழைவுசெய்தால் அதன் முகப்பு பக்கத்தில் அறிவியல் தேற்றங்கள் கருத்துகளை கொண்ட Theory எனும் தாவிப்பக்கம் , ஆய்வுகளை எவ்வாறு செயற்படுத்துவது எனும் Procedure எனும் தாவிப்பக்கம்,, அறிவியல் ஆய்வுகளை எவ்வாறு செயற்படுத்துவது என கண்களால் காண்பதற்கான கானொளி படங்களை கொண்ட video எனும் தாவிப்பக்கம் ,உண்மையில் ஆய்வு-செய்திடவிரும்புவோர் செயற்படுத்திட உதவும் actual labஎனும் தாவிப்பக்கம், மாணவர்கள் தாங்கள் கற்ற செயல்முறையை சரியானதா என சரிபார்த்து கொள்வதற்கான viva voce எனும் தாவிப்பக்கம் , மேலும் தம்முடைய அறிவை மேம்படுத்தி வளர்த்து கொள்வதற்கான கூடுதலான இணைப்புகள் மேற்கோள்கள் ஆகியவை கொண்ட reference எனும் தாவிப்பக்கம் ஆகிய பல்வேறு தாவிகளின் திரைகள் இதில் உள்ளன இதில் ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களுக்கு எவ்வாறு ஆய்வுசெய்வது என செயல்-முறைபடுத்தி காண்புிக்கவும் மாணவர்கள் சுயமாக ஆய்வுசெய்திடவும் கானொளி காட்சிகள் அசைவூட்டு படங்கள் செய்முறை பயிற்சிகள் என ஏராளமான வகையில் உதவ தயாராக உள்ளன மேலும் இயற்பியல் வேதியியல் உயிரியல் மட்டுமல்லாது கணிதம் ஆங்கிலம் தொடர்பான கல்விபயிற்சிக்காகவும் இந்த இணைய ஆய்வுகூடம் பெரிதும் பயன்படுகின்றது தம்முடைய பள்ளியானது இணைய இணைப்பு இல்லாத வெகுதூர குக்கிராமத்தில் உள்ளது என்றாலும் பரவாயில்லை இந்த மெய்நிகர் ஆய்வுக்கூட செயல்களை தனியான நெகழ்வட்டில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளும் வசதியும் அளிக்கின்றது இந்த மெய்நிகர் ஆய்வுக்கூடம் Git,GitLab,Eclipsஆகிய கட்டற்ற மென்பொருட்களால் உருவாக்கபட்டுள்ளது என்ற செய்தியையும் மனதில் கொள்க வாருங்கள் இந்த ஆய்வுக்கூடத்தை பயன்படுத்தி அறிவியல் ஆய்வுசெயலை மேம்படுத்தி கொள்ளுங்கள்

அறிமுகம் இல்லாத புதியவர்கள் கூட போகிமான்கோ எனும் விளையாட்டை விளையாடுவதற்கான ஆலோசனைகள்

3
முதலில் நம்முடைய செல்லிடத்து பேசி சாதனம் இந்த விளையாட்டினை விளையாடுவதற்கான கட்டமைவுடன் உள்ளதாவென்றும் போதுமான கூடுதல் மின்கலண் இணைக்கப்பட்டுள்ளதா என்றும் Mobile Data Plan உடன் உள்ளதாவென்றும் உறுதி படுத்தி கொள்க
அதற்கடுத்ததாக இந்த போகிமான் விளையாட்டு அமைவில் 18 வகையாக உள்ளதென முதலில் தெரிந்து கொண்ட பின்னர் இவை ஒவ்வொன்றின் சாதக பாதகங்களை பற்றி நன்கு அறிந்து கொள்க
மூன்றாவதாக அருகிலிருக்கும் அனைத்து போகிமானையும் capture செய்துகொள்க
நான்காவதாக போகிமானிற்கான வெவ்வேறு வகையான அதாவது 25 அல்லது 400 வகையான Candy தேவைகளை தெரிந்துகொள்க
ஐந்தாவதாக இந்த விளையாட்டில் நாம் எங்கிருந்து எங்குவரை பயனம் செல்வது என பார்வையிட்டு அறிந்து கொள்க
ஆறாவதாக ஏற்கனவே இந்த போகிமான விளையாட்டில் அனுபவபட்டவர்களுடன் Reddit, Twitter, Facebook , Pokemon Go Forumsஆகிய தளங்களின் வாயிலாக அவர்களுடன் தொடர்புகொண்டு அவர்களுடைய அனுபவங்களை அறிந்து கொள்க
ஏழாவதாக இந்த போகிமான் விளையாட்டின்போது Great Balls ,Ultra Balls ஆகியவை மிகத்திறன்மிக்கதாகும் அதனால் அவைகளை சேமித்துகொள்க
எட்டாவதாக இந்த போகிமான் விளையாட்டில் 60 அல்லது 70 cp நிலைகள் உள்ளன அதனால் இந்த cp இன் உயர்ந்த நிலையுடன் போகிமானை பராமரித்திடுக
ஒன்பதாவதாக இந்த cp இன் நிலையை உயர்த்திகொண்டே வந்து மிக உயர்ந்த சிறந்த திறனுடைய போகிமானை உருவாக்கிடுக
மேலும் விவரங்களுக்கும் விளக்க வழிகாட்டியை அறிந்துகொள்ளவும் http://www.pokemongodb.net/2016/04/10-best-pokemon-go-tips-for-beginners.html எனும் இணைய பக்கத்திற்கு செல்க
எச்சரிக்கை இந்த போகிமான் விளையாட்டினை மெய்மறந்து விளையாடுவதால் உங்களுடைய மற்ற அத்தியாவசி பணிகளை கவணிக்காது விட்டுவிடாதீர்கள்

Previous Older Entries