Libre Officeஇல் விருப்ப வடிவமைப்பு பயிற்சி – தொடர்-1. அறிமுகம்

ஆவண மூலக் கோப்பில் உறுப்பு என எழுதப்பட்ட அந்த வடிவங்களுக்கான இந்த பயிற்சியில் தனிப்பயன் வடிவமைப்பு என்ற சொல் குடைபோன்ற காத்திடுகின்ற சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. LibreOffice ஆனது பல முன்கூட்டியே வரையறுக்கப் பட்ட தனிப்பயன் வடிவமைப்புகளை வழங்குகிறது. அவை ‘அடிப்படை வடிவமைப்புகள்’, ‘தடுப்பு அம்புகள்’, ‘சின்ன வடிவமைப்புகள்’, ‘நட்சத்திரங்கள் , பதாகைகள்’, ‘செயல்பாடுகள்’ தொடரோட்டபடம்(Flowchart)’ ஆகிய தொகுப்புகளுக்குள் தொகுக்கப் பட்டுள்ளன. மேலும் ‘எழுத்துரு பணித்தொகுப்பு’ இலிருந்து அனைத்து வடிவமைப்புகளும் தனிப்பயன் வடிவமைப்புகள். பிற வடிவமைப்புகளிலிருந்து தனிப்பயன் வடிவமைப்பினை வேறுபடுத்த, வடிவமைப்பினைத் தேர்ந்தெடுத்திடுவதற்காக, ‘Toggle Extrusion’ எனும்கருவியைப் பார்வையிடுக. வடிவமைப்பு தனிப்பயன் வடிவமைப்பாக இருந்தால் மட்டுமே இது இயக்கப்படும். Libre Officeஆனது நம்முடைய சொந்த விருப்ப வடிவமைப்புகளை உருவாக்கிடுவதற்காகவென தனியாக எந்த கருவிகளையும் வழங்கவில்லை. ஆயினும் இந்தபயிற்சி தொடரின் வாயிலாக மூலக் கோப்பில் நேரடியாக வரையறுப்பதன் மூலம் சொந்த தனிப்பயன் வடிவமைப்புகளை எவ்வாறு உருவாக்கு வது என்பதைக் காணமுடியும். அவை வரையறுக்கப்பட்டவுடன், மூலக் கோப்பை மீண்டும் கையாளாமல் மற்ற ஆவணங்களில் அவற்றைப் பயன்படுத்தலாம்.
எச்சரிக்கை: LibreOffice, OpenDocument வடிவமைப்பில் இணைந்திருந்தால், சுயமாக உருவாக்கப்பட்ட தனிப்பயன் வடிவமைப்புகள் முக்கியமாக பயனுள்ளதாக இருக்கும். சுயமாக உருவாக்கப்பட்ட தனிப்பயன் வடிவமைப்புகளை OOXML வடிவமைப்பிற்கு மாற்றுவது எல்லா சந்தர்ப்பங்களிலும் செயல்படாது. மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் தற்போது திறந்த ஆவண(OpenDocument) வடிவமைப்பில் அனைத்து வகையான தனிப்பயன் வடிவமைப்புகளையும் படிக்க முடியாது. XML markup வாயிலாக மூலக் கோப்பில் நேரடியாகப் பணிபுரிவதால், நமக்கு சில கருவிகள் தேவை. விக்கியில் ODF_Markup1 பக்கத்தில் மூலக் கோப்பைத் திருத்துவது பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம். கருவிகளில் நமக்கு உதவி தேவைப்பட்டால், தொடர்புடைய “Discussion” எனும் பக்கத்தில் கோரலாம், இதனால் நாம் விரும்பியவாறு பக்கத்தை மேம்படுத்தலாம் அல்லது documentation@ global.libreoffice.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். வரைதலிற்கான வழிகாட்டியில்(Draw Guide)விவரிக்கப்பட்டுள்ளபடி வடிவமைப்புகளின் பொதுவான கையாளுதல் நமக்கு ஏற்கனவேத் தெரியும் என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது. பயிற்சித்தொடரின் ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் தீர்வுகளை காண்பதற்கான வழிகாட்டியைக் காணலாம். பயிற்சி தொடரில் தீர்வுக்கான இணைப்பைக் கொண்டுள்ளது. தீர்வு உள்ள பயிற்சி எண் பயிற்சியின் உரைக்கு மீண்டும் ஒரு இணைப்பு உள்ளது. பயிற்சியில் வடிவமைப்புகளின் படங்கள் உள்ளன. விவாதிக்கப்பட்ட வடிவமைப்புகள் “தனிப்பயன் வடிவமைப்பு பயிறிசியில் இருந்து வடிவமைப்புகள்” என்ற தனி ஆவணத்தில் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பயிற்சியின் அச்சிடப்பட்ட அல்லது PDF பதிப்பைப் பயன்படுத்தவேண்டுமென்றாலும் கிடைக்கின்றது.
தொடரும்

துவக்க நிலையாளர்களுக்கான இராஸ்பெர்ரி பை வழிகாட்டி- தொடர் -4 – Raspberry Pi உடன் தொடங்குதல் -2

வலைபின்னல் கம்பியை இணைத்தல் (விரும்பினால்)
இராஸ்பெர்ரி பையை கம்பியுடனான வலைபின்னலுடன் இணைக்க, கணினியின் உள்ளக(Ethernet)கம்பி எனப்படும் வலைபின்னல் கம்பியை எடுத்து, அதை ராஸ்பெர்ரி பையின் கணினியின் உள்ளக(Ethernet) அட்டையில் வைத்து, கீழ்நோக்கி இருக்கும்பிளாஸ்டிக் கௌவியை கிளிக் எனும் ஒலி கேட்கும் வரை அழுத்திடுக . கம்பியை அகற்ற வேண்டும் என்றால், பிளாஸ்டிக் கௌவியை செருகியை நோக்கி உள்நோக்கி அழுத்தி, கம்பியை மீண்டும் மெதுவாக நகர்த்திடுக.


4.1.
வலைபின்னல் கம்பியின் மறுமுனையானது வலைபின்னல்மையத்தில், நிலைமாற்றியில் அல்லது வழிசெலுத்தியில் உள்ள எந்தவொரு கட்டணமற்ற வாயிலுடனும் அதே வழியில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மின்சார விநியோககம்பியை இணைத்தல்
இராஸ்பெர்ரி பையை மின்இணைப்புடன் இணைப்பது வன்பொருள் அமைவுச் செயல்பாட்டின் கடைசிப் படியாகும், மேலும் அதன் மென்பொருளை அமைக்கத் தயாராக இருக்கும்போது மட்டுமே நாம் செய்ய வேண்டிய ஒன்றாகும்: இராஸ்பெர்ரி பையில் மின்இணைப்புமாற்றி இல்லை, விரைவில் அது இயக்கப்படும். இது ஒரு நேரடி மின்சார விநியோகத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. முதலில், மின்னிணைப்பு கம்பியின்USB Type-C முனையை இராஸ்பெர்ரி பையில் உள்ள USB Type-C மின்வழங்கல் இணைப்பானுடன் இணைத்திடுகம். இது எந்தவொரு வழியிலும் செல்லலாம் மெதுவாக முகப்பு பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.மின்விநியோகத்தில் பிரிக்கக்கூடிய கம்பி இருந்தால், மறுமுனை மின்சார விநியோகத்தின் பகுதியில் செருகப்பட்டிருப்பதை உறுதிசெய்திடுக.


4.2.
இறுதியாக, மின்சார விநியோககம்பியை ஒரு முதன்மை கொள்குழியுடன் இணைத்து, கொள்குழியை இயக்கிடுக; இராஸ்பெர்ரி பை ஆனது உடனடியாக இயங்கத் தொடங்கும்.
வாழ்த்துக்கள்: இராஸ்பெர்ரி பையை ஒன்றாக இணைத்துவிட்டோம்!


4.3.
கருப்புத் திரையின் மேல் இடதுபுறத்தில் நான்கு ராஸ்பெர்ரி பை வணிக சின்னங்களை சுருக்கமாக காணலாம், மேலும் மீச்சிறு SD அட்டை முழுவதுமாகப் பயன்படுத்த மென்பொருள் தன்னைத்தானே மாற்றியமைக்கும் போது நீலத் திரை தோன்றுவதைக் காணலாம்.ள் கருப்புத் திரையைக் கண்டால், சில நிமிடங்கள் காத்திருக்கவும்; முதன்முறையாக இராஸ்பெர்ரி பை துவங்கும் போது, பின்னணியில் சில முகப்பு பராமரிப்புகளை செய்ய வேண்டும். சிறிது நேரத்திற்குப் பிறகு, படம் 4.4 இல் உள்ளதைப் போல, Raspberry Pi OS மேசைக் கணினி அதன் அமைவு வழிகாட்டியை திரையில் காணலாம். நம்முடைய இயக்கமுறைமையானதுதற்போது கட்டமைக்கத் தயாராக உள்ளது, அதை இராஸ்பெர்ரி பையைப் பயன்படுத்தி பின்பகுதியில் கற்றுக் கொள்ளலாம்.


4.4.Raspberry Pi OSஇன் மேசைககணினி அமைவு வழிகாட்டி
இராஸ்பெர்ரி பை 400 ஐ அமைத்தல்
Raspberry Pi 4 போன்றில்லாமல், Raspberry Pi 400 ஆனது உள்ளமைக்கப்பட்ட விசைப்பலகை ஏற்கனவே நிறுவுகைசெய்யப்பட்ட microSD அட்டையுடன் வருகிறது. இதனை செயல்படுத்திட தொடங்குவதற்கு இன்னும் சில கம்பிகளை இணைக்கவேண்டும்,ஆனால் அதற்கு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும்


4.5.
ஒரு சுட்டியை இணைத்தல்
Raspberry Pi 400 இல் விசைப்பலகை ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது, அதனால் இதநுடைய சுட்டியை மட்டுமே இணைக்கவேண்டியுள்ளது. சுட்டியின் முனையிலுள்ள USB கம்பி எடுத்து, Raspberry Pi 400ன் பின்புறத்தில் உள்ள மூன்று USB வாயில்களில் (2.0 அல்லது 3.0) ஏதேனும் ஒன்றில் செருகிடுக. இரண்டு அதிவேக USB 3.0 வாயில்கள் மற்ற பாகங்களுக்குச் தேவையென விரும்பினால், வெள்ளை வாயிலைப் பயன்படுத்திடுக.


4.6.
USB இணைப்பு அதிக அழுத்தம் இல்லாமல்முகப்பிற்கு சரியாக அமைய வேண்டும்; இணைப்பியை கட்டாயப்படுத்தி செருக வேண்டும் எனில்,ஏதோ தவறு உள்ளதுUSBஇணைப்பான் சரியானதுதானா என்பதைச் சரிபார்த்திடுக!
ஒரு காட்சியை(display) இணைத்தல்
micro-HDMIஇன் கம்பியை எடுத்து, இராஸ்பெர்ரி பை 400 இல் உள்ள microSD அட்டையின் பொருத்துவாயிற்கு அருகில் உள்ள micro-HDMI வாயிலுடன் சிறிய முனையையும், மறுமுனையை காட்சியுடனும் இணைத்திடுக. காட்சி ஒன்றுக்கு மேற்பட்ட HDMI வாயில்களைக் கொண்டிருந்தால், இணைப்பிற்கு அடுத்ததாக ஒரு வாயிலின் எண்ணைத் தேடிடுக; இராஸ்பெர்ரி பையின் காட்சியைப் பார்க்க, தொலைகாட்சியை இந்த உள்ளீட்டிற்கு மாற்ற வேண்டும். வாயில் எண்ணை காண முடியாவிட்டாலும், கவலைப்பட வேண்டாம்: இராஸ் பெர்ரி பையைக் கண்டுபிடிக்கும் வரை ஒவ்வொரு உள்ளீட்டையும் மாற்றலாம்.


4.7.
வலைபின்னல்(network) கம்பியை இணைத்தல் (விரும்பினால்)
இராஸ்பெர்ரி பை 400ஐ கம்பியுடனான வலைபின்னலுடன் இணைக்க, கணினி உள்ளக கம்பி எனப்படும் வலைபின்னலின் கம்பியை எடுத்து, அதை இராஸ்பெர்ரி பை 400 இன் கணினி உள்ளக வாயிலில், ஒரு கிளிக் எனும் சத்தம் கேட்கும் வரை மேல்நோக்கி இருக்கும் பிளாஸ்டிக் கௌவியை தள்ளுக. கம்பியை அகற்ற வேண்டும் என்றால், பிளாஸ்டிக் கௌவியை செருகியை நோக்கி உள்நோக்கி அழுத்தி, கம்பியை மீண்டும் மெதுவாக நகர்த்திடுக.


4.8.
வலைைபின்னல் கம்பியின் மறுமுனையானது வலைபின்னல்மையம், நிலைமாற்றியில் அல்லது வழிசெலுத்தியில் உள்ள எந்தவொரு கட்டணமற்ற வாயிலுடனும் அதே வழியில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மின்சார விநியோககம்பியை இணைத்தல்
இராஸ்பெர்ரி பை400ஐ மின்இணைப்புடன் இணைப்பது வன்பொருள் அமைவுச் செயல்பாட்டின் கடைசிப் படியாகும், மேலும் அதன் மென்பொருளை அமைக்கத் தயாராக இருக்கும்போது மட்டுமே நாம் செய்ய வேண்டிய ஒன்றாகும்: இராஸ்பெர்ரி பை400இல் மின்இணைப்புமாற்றி இல்லை, விரைவில் அது இயக்கப்படும். இது ஒரு நேரடி மின்சார விநியோகத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. முதலில், மின்னிணைப்பு கம்பியின்USB Type-C முனையை இராஸ்பெர்ரி பையில் உள்ள USB Type-C மின்வழங்கல் இணைப்பானுடன் இணைத்திடுகம். இது எந்தவொரு வழியிலும் செல்லலாம் மெதுவாக முகப்பு பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.மின்விநியோகத்தில் பிரிக்கக்கூடிய கம்பி இருந்தால், மறுமுனை மின்சார விநியோகத்தின் பகுதியில் செருகப்பட்டிருப்பதை உறுதிசெய்திடுக.


4.9.
இறுதியாக, மின்சார விநியோகத்தை ஒரு முதன்மை கொள்குழியுடன் இணைத்து, கொள்குழியை இயக்கிடுக; Raspberry Pi 400 உடனடியாக இயங்கத் தொடங்கும். வாழ்த்துக்கள்: Raspberry Pi 400ஐ ஒன்றாக இணைத்துவிட்டோம்!
கருப்புத் திரையின் மேல் இடதுபுறத்தில் நான்கு ராஸ்பெர்ரி பை வணிக சின்னங்களை சுருக்கமாக காணலாம், மேலும் மீச்சிறு SD அட்டை முழுவதுமாகப் பயன்படுத்த மென்பொருள் தன்னைத்தானே மாற்றியமைக்கும் போது நீலத் திரை தோன்றுவதைக் காணலாம்.ள் கருப்புத் திரையைக் கண்டால், சில நிமிடங்கள் காத்திருக்கவும்; முதன்முறையாக இராஸ்பெர்ரி பை துவங்கும் போது, பின்னணியில் சில முகப்பு பராமரிப்புகளை செய்ய வேண்டும். சிறிது நேரத்திற்குப் பிறகு, படம் 4.4 இல் உள்ளதைப் போல, Raspberry Pi OS மேசைக் கணினி அதன் அமைவு வழிகாட்டியை திரையில் காணலாம். நம்முடைய இயக்கமுறைமையானதுதற்போது கட்டமைக்கத் தயாராக உள்ளது, அதை இராஸ்பெர்ரி பையைப் பயன்படுத்தி பின்பகுதியில் கற்றுக் கொள்ளலாம்.


4.10.Raspberry Pi OS மேசைக்கணினி அமைவு வழிகாட்டி

தொடரும்

ஜாவா உரைநிரல் பயிற்சிவழிகாட்டி தொடர்-10. செயலிகள்-3.

தருமதிப்புகளின் பொருளைப் பயன்படுத்துதல்

ஒரு செயலியின் தரும திப்புகள் கோவை போன்ற பொருளில் பராமரிக்கப்படுகின்றன. ஒரு செய லிக்குள், அதற்கு அனுப்பப்பட்ட தருமதிப்புகளை பின்வருமாறு குறிப்பிடலாம்: arguments[i]
இதில் i என்பது தருமதிப்புவரிசைஎண்ணின் பெயராகும் இது , 0 இல் தொடங்கு கிறது. எனவே, ஒரு சார்புக்கு அனுப்பப்படும் முதல்தருமதிப்பானது தருமதிப்பு கள்[0] ஆகும். தருமதிப்புகளின் மொத்த எண்ணிக்கை arguments.length. என்பதன் மூலம் குறிக்கப்படுகிறது.
தருமதிப்புகளின் பொருளைப் பயன்படுத்தி, ஏற்றுக்கொள்வதற்கு முறையாக அறிவிக்கப்பட்டதை விட அதிகமான தருமதிப்புகளைக் கொண்ட செயலியை அழைக்கலாம். செயலிக்கு எத்தனை தருமதிப்புகள் அனுப்பப்படும் என்பது நமக்கு முன்கூட்டியே தெரியாவிட்டால் இது பெரும்பாலும் பயனுள்ளதாக இருக்கும். செயலிக்கு உண்மையில் அனுப்பப்பட்ட தருமதிப்புகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க arguments.length என்பதைப் பயன்படுத்தலாம், பின்னர் தருமதிப்புகளி்ன் பொருளைப் பயன்படுத்தி ஒவ்வொரு தருமதிப்பையும் அணுகலாம்.
எடுத்துக்காட்டாக, பல சரங்களை இணைக்கும் செயலியைக் கவனித்திடுக. செயலிக்கான ஒரே முறையான தருமதிப்பும் ஒரு சரம் ஆகும், இது பொருட்களை இணைப்பதற்காக அதனைப் பிரிக்கும் எழுத்துக்களைக் குறிப்பிடுகிறது. செயலியானது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது

function myConcat(separator) {
var result = ”; // initialize list
var i;
// தருமதிப்புகள் மூலம் மீண்டும் சொல்க
for (i = 1; i < arguments.length; i++) {
result += arguments[i] + separator;
}
return result;
}
இந்த செயலிக்கு எத்தனை தருமதிப்புகளையும் அனுப்பலாம், மேலும் இது ஒவ்வொரு தருமதிப்பையும் “list” எனும் ஒரு சரமாக இணைக்கிறது :
// “‘red’, ‘orange’, ‘blue’ ” என்பவற்றை திருப்புகிறது
myConcat(‘, ‘, ‘red’, ‘orange’, ‘blue’);

// “elephant’, ‘giraffe’, ‘lion’, ‘cheetah’;” என்பவற்றை திருப்புகிறது
myConcat(‘; ‘, ‘elephant’, ‘giraffe’, ‘lion’, ‘cheetah’);
//’sage’, ‘basil’, ‘oregano’, ‘pepper’, ‘parsley’ என்பவற்றை திருப்புகின்றது
myConcat(‘. ‘, ‘sage’, ‘basil’, ‘oregano’, ‘pepper’, ‘parsley’);

குறிப்பு: தருமதிப்புகளின் மாறியானது “array- போன்றது”, ஆனால் ஒரு கோவையன்று. இது கோவை போன்றது, அதில் எண்ணிடப்பட்ட குறியீடும் நீளத்திற்கான பண்பும் உள்ளது. இருப்பினும், இது அனைத்து கோவையை-கையாளுதல் வழிமுறைகளையும் கொண்டிருக்கவில்லை.
செயலியின் அளவுருக்கள்
ECMAScript 2015 இல் தொடங்கி, இயல்புநிலை அளவுருக்கள் , மிகுதி அளவுருக்கள். ஆகிய இரண்டு புதிய வகையான அளவுருக்களை கொண்டுள்ளது
இயல்புநிலை அளவுருக்கள்(default parameters): ஜாவாஉரைநிரலில், செயலிகளின் அளவுருக்கள் இயல்புநிலையாக வரையறுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சில சூழ்நிலைகளில் வேறு இயல்புநிலை மதிப்பை அமைப்பது பயனுள்ளதாக இருக்கும். இயல்புநிலை அளவுருக்கள் இதைத்தான் செய்கின்றன. இயல்புநிலை அளவுருக்கள் இல்லாமல் ( ECMAScript 2015இற்கு முன்) கடந்த காலத்தில், செயலியின் உள்புகுதியில் உள்ள அளவுரு மதிப்புகளைச் சோதித்து, அவை வரையறுக்கப்படாவிட்டால் மதிப்பை ஒதுக்குவது இயல்புநிலைகளை அமைப்பதற்கான பொதுவான உத்தியாக இருந்தது. பின்வரும் எடுத்துக்காட்டில், b க்கு எந்த மதிப்பும் வழங்கப்படவில்லை எனில், a*b ஐ மதிப்பிடும்போது அதன் மதிப்பு வரையறுக்கப்படாமல் இருக்கும், மேலும் ஒரு அழைப்பை பெருக்குவது பொதுவாக NaN ஐ வழங்கியிருக்கும். இருப்பினும், இந்த எடுத்துக்காட்டில் உள்ள இரண்டாவது கட்டளைவரியால் இது தடுக்கப்படுகிறது:
function multiply(a, b) {
b = typeof b !== ‘undefined’ ? b : 1;

return a * b;
}

multiply(5); // 5
இயல்புநிலை அளவுருக்கள் (ECMAScript 2015 இற்கு பிந்தையவை)
இயல்புநிலை அளவுருக்களுடன், செயலியில் கைமுறையாக சரிபார்ப்பு இனி தேவையில்லை. செயலியின் தலைப்பில் b க்கான இயல்புநிலை மதிப்பாக 1 ஐ வைக்கலாம்:
function multiply(a, b = 1) {
return a * b;
}

multiply(5); // 5
மிகுதிஅளவுருக்கள் (rest parameters )
மிகுதி அளவுருக்குளின் தொடரியலில் காலவரையற்ற எண்ணிக்கையிலான தருமதிப்புகளை ஒரு கோவையாகக் குறிப்பிட அனுமதிக்கிறது. பின்வரும் எடுத்துக்காட்டில், செயலியானது பெருக்கலின்போது Restஇன் அளவுருக்கள் இரண்டாவது ஒன்றிலிருந்து இறுதி வரை தருமதிப்புகளைச் சேகரிக்கின்றன. செயலியானது பின்னர் இவற்றை முதல் தருமதிப்பால் பெருக்குகிறது.
function multiply(multiplier, …theArgs) {
return theArgs.map(x => multiplier * x);
}

var arr = multiply(2, 1, 2, 3);
console.log(arr); // [2, 4, 6]
அம்புக்குறி செயலிகள்
ஒரு குறுகிய செயலியின் வெளிப்பாடு (முன்பு, இப்போது தவறாக fat arrow செயலி என அழைக்கப்படுகிறது) செயலியானது வெளிப்பாடுகளுடன் ஒப்பிடும்போது ஒரு குறுகிய தொடரியல் உள்ளது அதன் சொந்த தருமதி்ப்புகள், super, அல்லது new.target ஆகியவற்றில் இல்லை. அம்புக்குறி செயலிகள் எப்போதும் அநாமதேயமாக இருக்கும். அம்புக்குறி செயலிகளின் அறிமுகத்தை குறுகிய செயலிகள்(shorter functions) ,பிணைக்காதவை(non-binding) ஆகிய இரண்டு காரணிகள் பாதித்தன:.
குறுகிய செயலிகள் (shorter functions)
சில செயலி வடிவங்களில், குறுகிய செயலிகள் வரவேற்கப்படுகின்றன. ஒப்பீடு:

var a = [
‘Hydrogen’,
‘Helium’,
‘Lithium’,
‘Beryllium’
];

var a2 = a.map(function(s) { return s.length; });

console.log(a2); // logs [8, 6, 7, 9]

var a3 = a.map(s => s.length);

console.log(a3); // logs [8, 6, 7, 9]
தனியே இல்லாதது (this)
அம்புக்குறி செயலி வரை, ஒவ்வொரு புதிய செயலி.யும் அதன் சொந்த மதிப்பை வரையறுத்தது (கட்டமைப்பாளரின் செய்தியில் ஒரு புதிய பொருள், வரையறுக்கப்படாத கட்டுப்பாடு முறை செயலியின் அழைப்புகள், செயலி “object method” என அழைக்கப்பட்டால் அடிப்படை பொருள் போன்றவை). இது ஒரு பொருள் சார்ந்த நிரலாக்க பாணியின் சிறந்ததை விட குறைவானதாக நிரூபிக்கப்பட்டது.

function Person() {
// Person() எனும் கட்டமைப்பாளர், this என்பதை தானே வரையறுக்கிறார்.
this.age = 0;

setInterval(function growUp() {
// கட்டுப்பாடற்ற பயன்முறையில்,growUp() செயலிthisஐவரையறுக்கிறது

//உலகளாவிய பொருளாக,this` என்பதிலிருந்து வேறுபட்டது
//Person() எனும்கட்டமைப்பாளரால் வரையறுக்கப்பட்டது.
this.age++;
}, 1000);
}

var p = new Person();
ECMA Script 2015 இல், இந்தச் சிக்கலின் மதிப்பை ஒரு மாறிக்கு ஒதுக்குவதன் மூலம் சரி செய்யப்பட்டது.

function Person() {
var self = this; // சிலர் Selfஎன்பதற்குப் பதிலாக Thisஐ தேர்வு செய்கிறார்கள் .
// ஏதேனும் ஒன்றைத் சீராக தேர்ந்தெடுத்திடுக.
self.age = 0;

setInterval(function growUp() {
// மீளழைப்பு self எனும் மாறியைக் குறிக்கிறது, இதன் மதிப்பு

//எதிர்பார்க்கப்படும் பொருளாகும்.

self.age++;

}, 1000);
}
மாற்றாக, ஒரு பிணைக்கப்பட்ட செயலியானது உருவாக்கப்படலாம், இதன் மூலம் சரியான இந்த மதிப்பு growUp() எனும் செயலிக்கு அனுப்பப்படும். ஒரு அம்புக்குறி செயலியானது அதன் this என்பதற்கு சொந்தமானது அன்று; இணைக்கப்பட்ட செயல்படுத்துதல் சூழலின் இந்த மதிப்பு பயன்படுத்தப்படுகிறது. எனவே, பின்வரும் குறிமுறைவரிகளில், இடைவேளியை அமைக்க அனுப்பப்படும் செயலிக்குள் உள்ள this, என்பது இணைக்கும் செயலியில் உள்ள அதே மதிப்பைக் கொண்டுள்ளது:
function Person() {
this.age = 0;

setInterval(() => {
this.age++; // |this| properly refers to the person object
}, 1000);
}

var p = new Person();
முன் வரையறுக்கப்பட்ட செயலிகள் ஜாவாஉரைநிரலின் பல உயர்மட்ட, உள்ளமைக்கப்பட்ட செயலிகளைக் கொண்டுள்ளது:
eval()
இந்த eval()எனும் வழிமுறையானது ஜாவாஉரைநிரலின் குறிமுறைவரிகளை ஒரு சரமாகக் குறிப்பிடுகிறது.
uneval()
இந்த uneval() வழிமுறையானது ஒரு பொருளின் மூலக் குறிமுறைவரிகளின் சரத்தின் பிரதிநிதித்துவத்தை உருவாக்குகிறது.
IsFinite()
உலகளாவிய isFinite() எனும் செயலியானது அனுப்பப்பட்ட மதிப்பு வரையறுக்கப் பட்ட எண்ணா என்பதை தீர்மானிக்கிறது. தேவைப்பட்டால், அளவுருவானது முதலில் எண்ணாக மாற்றப்படும்.
isNaN()
இந்தisNaN()எனும் செயலியானது NaN அல்லது NaN இல்லையா என்பதை தீர்மானிக்கிறது.
குறிப்பு:ECMA உரைநிரல்2015 இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி NaN எனும் செயலிக்குள் வற்புறுத்துதல் மிகசுவாரஸ்யமான விதிகளைக் கொண்டுள்ளது; , மாற்றாக Number.isNaN() என்பதைப் பயன்படுத்தலாம் அல்லது Not-A-Number என்பதைத் தீர்மானித்திடும் வகையைப் பயன்படுத்தலாம்.
parseFloat()
இந்தparseFloat() எனும் செயலியானது ஒரு சரத்தின் தருமதிப்பினை பாகுபடுத்தி மிதக்கும் புள்ளிக்கான எண்ணை வழங்குகிறது.
parseInt()
இந்தparseInt() எனும் செயலியானது ஒரு சரத்தின் தருமதிப்பை பாகுபடுத்துகிறது குறிப்பிட்ட அடிப்படையிலான முழு எண்ணை வழங்குகிறது (கணித எண் அமைப்புகளில் அடிப்படையானது).
decodeURI()
இந்தdecodeURI()எனும் செயலியானது URI குறியாக்கம் அல்லது இதேபோன்ற வழக்கமான முறையால் முன்பே உருவாக்கப்பட்ட ஒரு சீரான வள அடையாளங்காட்டியை (URI) குறியாக்கம் செய்கிறது.
DecodeURIComponent()
இந்த decodeURIComponent() வழிமுறையானது ஒரேசீரானவளஅடையாளங் காட்டியின் (URI) கூறுகளை குறியீடாக்க URI கருவியால் அல்லது இதேபோன்ற வழக்கமான முறையால் குறியாக்கம் செய்கிறது.
EncodeURI()
encodeURI()எனும் வழிமுறையானது, குறிப்பிட்ட எழுத்துகளின் ஒவ்வொரு நிகழ்வையும் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு ஆகிய தப்பிக்கும் வரிசைகளால் மாற்றுவதன் மூலம் ஒரு சீரான வள அடையாளங்காட்டியை (URI) குறியாக்கம் செய்கிறது. இதுஇரண்டு “surrogate” எழுத்துக்களால் ஆனது).
encodeURIComponent()
encodeURIComponent() எனும் வழிமுறையானது, குறிப்பிட்ட எழுத்துகளின் ஒவ்வொரு நிகழ்வையும் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு தப்பிக்கும் வரிசைகளால் மாற்றுவதன் மூலம் ஒரு சீரான வள அடையாளங்காட்டி (URI) கூறுகளை குறியாக்கம்செய்கிறது. இரண்டு “surrogate” எழுத்துக்களால் ஆன எழுத்துக்களுக்கு).
escape()
தடுக்கப்பட்ட escape() எனும் வழிமுறையானது ஒரு புதிய சரத்தை கணக்கிடுகிறது, இதில் குறிப்பிட்ட எழுத்துக்கள் ஹெக்ஸா தசம தப்பிக்கும் வரிசையால் மாற்றப்பட்டுள்ளன. encodeURI பயன்படுத்திடுக அல்லது அதற்குப் பதிலாக URI கூறுகளை குறியாக்கம் செய்திடுக.
unescape()
தடுக்கப்பட்ட unescape() வழிமுறையானது ஒரு புதிய சரத்தை கணக்கிடுகிறது, இதில் ஹெக்ஸா தசம தப்பிக்கும் வரிசைகள் அது பிரதிபலிக்கும் எழுத்துடன் மாற்றப்படு கின்றன. escape() போன்ற செயலியின் மூலம் தப்பிக்கும் வரிசைகள் அறிமுகப் படுத்தப்படலாம். unescape() என்பதன் வாயிலாக நிறுத்தப்பட்டதால், அதற்குப் பதிலாக URI()குறியீடு அல்லது URI கூறுகளை குறியாக்கம் செய்க.
தொடரும்

எக்செல்லில் காரணிய பேரெண்ணை (factorial) கணக்கிடு தெவ்வாறு -எக்செல்தொடர்

எக்செல் பயன்படுத்திடுகின்ற எவரும் காரணியபேரெண்ணை (factorial) கணக்கிட வேண்டிய சூழ்நிலை எழுந்தால் அதற்காக கண்டிப்பாக பேனாவையும், எழுதுவதற்கான தாளையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை – இதனை எக்செல்லின் ஒரு எளிய சூத்திரம்(fact எனும் செயலி)அதற்கான விடையை வழங்கிவிடும். இந்நிலையில் காரணியபேரெண்(factorial) என்றால் என்ன? என்ற கேள்வி நம்மனதில் எழும் நிற்க.
இந்த காரணியபேரெண் (factorial) என்பது குறித்து ஏற்கனவே அறிந்திருந்தால், அதனை எக்செல்லில் எவ்வாறு கணக்கிடுவது என்பதை அறிய அடுத்த பகுதிக்குச் செல்க. கணிதத்தில், ஒருகாரணிய பேரெண் என்பது, அதே எண்ணை அதன் பின் வரும் அனைத்து முழு எண்களுடன் 1 வரை பெருக்கும்போது கிடைக்கும் விடையாகும். எடுத்துக்காட்டாக, 5 இன் காரணிய பேரெண் ஆனது 120 ஆக இருக்கும் (54321). ஒரு காரணிய பேரெண் ஆனது அந்தஎண்ணும் அதனுடன் அந்த எண்ணிற்குப் பிறகு ஒரு ஆச்சரியக்குறியுடனும் சேர்த்து எழுதப்படுகிறது. எனவே 5 இன் காரணிய பேரெண் ஆனது 5! என எழுதப்படும்(மேலும் இதன் மதிப்பு 120 ஆக இருக்கும்).

எக்செல்லில் FACT எனும் செயலியைப் பயன்படுத்தி காரணிய பேரெண்ணின் மதிப்பை கணக்கிடுதல்

எக்செல்லில்இந்த காரணிய பேரெண்ணின் மதிப்பை FACT எனும் செயலியைப் பயன்படுத்தி கணக்கிடலாம் எக்செல் ஆனது உள்ளமைக்கப்பட்ட FACT எனும் செயலியைக் கொண்டுள்ளது,இது எந்தவொரு எண்ணின் காரணியபேரெண்ணின் மதிப்பையும் கணக்கிட பயன்படுகிறது.இந்த சூத்திரம் பின்வருமாறு
=FACT(number)
இதில் FACT எனும் செயலியானது ஒரு தருமதிப்பினை மட்டுமே கணக்கில் எடுத்துகொள்ளும், 5 எனும் எண்ணிற்கு காரணிய பேரெண்ணின் மதிப்பை பெற விரும்புவதாக கொள்க எக்செல்லில் அதற்கானசூத்திரம் பின்வருமாறு
. =FACT(5)
இந்த FACT எனும் செயலியில் உள்ள தருமதிப்பானது முழு எண்ணாக மட்டுமே இருக்க வேண்டும். ஒருதருமதி்ப்பில் முழு எண்ணையும் அதன் தசம எண்ணையும் கலந்து உள்ளீடு செய்தால், எக்செல்லின் இந்த செயலியானது முழு எண் பகுதியை மட்டுமே கருத்தில் கொள்ளும். எடுத்துக்காட்டாக, =FACT(5) , =FACT(5.6) ஆகியவற்றின் முடிவு ஒரே மாதிரியாக இருக்கும். மேலும், FACT செயலிக்குள் எதிர்மறை எண்ணை தருமதிப்பாகப் பயன்படுத்த முடியாது. அவ்வாறு எதிர்மறையான தருமதிப்பினை உள்ளீடு செய்தால்,உடன் இந்த சூத்திரமானது #NUMஎனும் பிழைச்செய்தியை திரையில் காண்பிக்கும்! FACT எனும் செயலியுடனான சூத்திரத்தில் தருமதிப்பாக 0 என உள்ளீடு செய்தால் உடன் எக்செல்லானது 1 எனும் மதிப்பை அதற்கான விடையாக திரையில் காண்பிக்கும்.
FACT எனும்செயலியைப் பயன்படுத்தி காரணிய பேரெண்ணின் மதிப்பை கணக்கிடுவதற்கான எடுத்துக்காட்டுகளை இப்போது காண்போம் (எனது பள்ளிக் கணிதப் பாடப்புத்தகத்திலிருந்து) என்னுடன் 5 வெவ்வேறு வண்ணப் பந்துகள் உள்ளன என்று வைத்துக்கொள்க மேலும் நான் எத்தனை ஜோடி வெவ்வேறு வண்ணப் பந்துகளை உருவாக்க முடியும் என்பதைக் கண்டுபிடிக்க விரும்புவதாக கொள்க (இங்கு வண்ணங்களின் வரிசை முக்கியமானது, சிவப்பும் பச்சையும் ஆனவை, பச்சையும் சிவப்பும் வண்ணத்தை விட சிறிதுவித்தியாசமாக இருக்கும்). இதைச் செய்வதற்கான கணித சூத்திரம் =5! / 2!
எக்செல்லில் இதற்கான விடையைகாண , பின்வரும் சூத்திரத்தைப் பயன்படுத்தலாம்:
=FACT(5)/FACT(2)
இதற்கான விடை 60 ஆகும்
எக்செல்லில் தனித்துவமான சேர்க்கைகளை கணக்கிட விரும்பினால்,COMBIN எனும் சூத்திரத்தைகூடப் பயன்படுத்தலாம்.
தொடரும்

Aegis Authenticatorஎனும் பாதுகாப்பான , கட்டணமற்ற, கட்டற்ற பயன்பாடு

இது நம்முடைய இணைய சேவைகளுக்கான இருபடிமுறை சரிபார்ப்பு நுழைவு சீட்டுகளை நிர்வகிக்க, Androidக்கான கட்டணமற்ற, பாதுகாப்பான , கட்டற்ற பயன்பாடாகும். Aegis என்பது Google Authenticator , Authy போன்ற இரண்டு காரணி அங்கீகார தனியுரிமை பயன்பாடுகளுக்கு மாற்றாகும். , பாதுகாப்புசெய்வதும் , காப்புப்பிரதிகள் செய்வதும் இதன் மிக முக்கியமான வசதிகளாகும். நம்முடைய அனைத்து ஒருமுறை மட்டுமான கடவுச் சொற்களும்(OTP) இதனுடையபெட்டகத்தில் சேமிக்கப்படுகின்றன. மிகவும் பரிந்துரைக்கப்படுகின்ற கடவுச்சொல்லை அமைப்பதற்காக தேர்வு செய்தால், AES-256 ஐப் பயன்படுத்தி பெட்டக குறியாக்கம் செய்யப்படு கின்றது. தீங்கிழைக்கும் நோக்கத்துடன் யாரேனும் பாதுகாப்பு கோப்பைப் தெரிவுசெய்தால், கடவுச்சொல் தெரியாமல் அவர்களால் உள்ளடக்கங்களை அபகரிப்பது சாத்தியமில்லாத செயலாகிவிடும்.
கைரேகை திறத்தல்: ஒரு முறைமட்டுமான கடவுச்சொல்லை அணுக வேண்டிய ஒவ்வொரு முறையும் நம்முடைய கடவுச்சொல்லை உள்ளிடுவது சிரமமாக இருக்கும். அதிர்ஷ்டவசமாக, நம்முடைய சாதனத்தில் கைரேகை வருடி (biometrics sensor) இருந்தால், கைரேகை வாயிலாக பயன்பாட்டினை செயல்படுமாறு செய்யலாம்.
இணக்கத்தன்மை: இதுHOTP , TOTP ஆகிய தருக்கபடிமுறைகளை ஆதரிக்கிறது. இந்த இரண்டு தருக்கபடிமுறைகளும் தொழில்துறையின் தரமானவை , பரவலாக ஆதரிக்கப்படுபவைகளாகும், அதனால் இது பல்லாயிரக்கணக்கான சேவைகளுடன் இணக்கமாக உள்ளது. Google, GitHub, Dropbox, Facebook Instagram. ஆகியவை அதற்கான சில எடுத்துக் காட்டுகளாகும். இது Google Authenticator உடன் இணக்கமானது. Google Authenticatorக்கான QR குறியீட்டைக் காட்டும் எந்த இணையதளமும் Aegis உடன் செயல்படுகிறது.
குழுக்கள்:நம்மிடம் ஏராளமானஅளவில் ஒரு முறைமட்டுமான கடவுச் சொற்கள் உள்ளதா?கவலையே படவேண்டாம் எளிதாக அணுக, தனிப்பயன் குழுக்களில் அவைகளைச் சேர்த்திடுக . தனிப்பட்ட, பணி, சமூகம் ஆகியவை ஒவ்வொன்றும் இதில்தங்கள் சொந்த குழுவைப் பெறலாம்.
காப்புப்பிரதிகள்: நம்முடைய இணையதள கணக்குகளுக்கான அணுகலை ஒருபோதும் இழக்க மாட்டோம் என்பதை உறுதிப்படுத்த இதற்கென தனியான அங்கீகார வசதி கொண்டுள்ளது
இது நம்முடை கடவுச்சொல்லின் பெட்டகத்தை பதிவேற்றம் செய்வதை ஆதரிக்கிறது, அதை ஒரு புதிய சாதனத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இது Authenticator,AndOTP,FreeOTP ஆகிய தரவுத்தளங்களை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது, எனவே Aegis க்கு மாறுவது நமக்கு எளிதாக இருக்கும். காலப்போக்கில், நம்முடைய பெட்டகத்தில் பல்லாயிரக்கணக்கான உள்ளீடுகளை குவித்திடலாம்.
Aegis Authenticator ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நமக்குத் தேவையானதை எளிதாகக் கண்டறிய பல நிறுவன வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. முதலில் ஒரு நுழைவை எளிதாகக் கண்டறிய அதற்கானதனிப்பயன் உருவப் பொத்தானை அமைத்திடுக. பின்னர் கணக்கின் பெயர் அல்லது சேவையின் பெயர் மூலம் தேடிடுக.
இந்த பயன்பாடு GPL v3எனும் உரிமத்தின் அடிப்படையில பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://getaegis.app/எனும் இணையதளமுகவரிக்கு செல்க.

லிபர் ஆபிஸின் 7.3எனும் புதிய பதிப்பின் வசதிவாய்ப்புகள்

தற்போது வெளியிடப்பட்டுள்ள லிபர் ஆபிஸ் 7.3 எனும் புதிய பதிப்பில் மூன்று வெவ்வேறு வகையான இயங்குநிலை மேம்பாடுகள் உள்ளன: • மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் ஆவணங்களுடனான இயங்குதன்மையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற அட்டவணைகளில் கண்காணிப்பு மாற்றம் , உரையை நகர்த்துதல் புதிய வசதிகளைக் கையாளுதல் போன்ற புதிய வசதிகளைகொண்டுள்ளது. பெரிய DOCX , XLSX/XLSM ஆகிய கோப்புகளைத் திறக்கும் போது செயல்திறன் மேம்பாடுகள், சில சிக்கலான ஆவணங்களின் மேம்பட்ட பதிலை விரைவாக கொடுத்தல் , LibreOffice 7.1 உடன் அறிமுகப்படுத்தப்பட்ட Skia பின்-இறுதியைப் பயன்படுத்தும் போது புதியதாக பதிலை விரைவாக கொடுத்தலின் மேம்பாடுகள். பதிவிறக்கம்/ பதிவேற்றம் வடிகட்டிகளின் மேம்பாடுகள்: DOC (மிகவும் மேம்படுத்தப்பட்ட பட்டியல்களின்/எண்களின் பதிவிறக்கம்); DOCX (மிகப்பெரிய மேம்படுத்தப் பட்ட பட்டியல்களின்/எண்களின் பதிவிறக்கம்; வடிவமைப்புகளுடன் இணைக்கப்பட்ட மீயிணைப்புகள் இப்போது பதிவிறக்கம்/பதிவேற்றம் செய்யப்படுகின்றன; திருத்துவதற்கான அனுமதியை சரிசெய்தல்; பத்தியின் நடையை மாற்றுதல்); XLSX (XLSX கோப்புகளுக்கான உரையின் வரிகளின் உயரம் குறைக்கப்பட்டுள்ளது; ஒவ்வொரு சேமிப்பிலும் கலண் உள்தள்ளல் அதிகரிக்காது; திருத்துவதற்கான அனுமதியை சரிசெய்தல்; XLSX விளக்கப்படங்களின் சிறந்த ஆதரவு); PPTX (படவில்லைகளில் நிலையான தொடர்புகளின் மீயிணைப்பகள்; PPTX படவில்லை அடிக்குறிப்புகளின் தவறான பதிவிறக்கத்தினை/பதிவேற்றத்தினை சரிசெய்தல்; படங்களிலும் வடிவமைப்புகளிலும் மீயிணைப்புகளை சரிசெய்தல்; அட்டவணை களுக்கான வெளிப்படையான நிழல்). கூடுதலாக, LibreOffice இன் உதவியானது அனைத்து பயனாளர்களையும் ஆதரிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது, மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸிலிருந்து மாறு பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கவனத்துடன் வசதிகள் மேம்படுத்தப் பட்டுள்ளது: தேடல் முடிவுகள் இப்போது அட்டவணைப்படுத்துவதற்கு Fuzzysort க்குப் பதிலாக FlexSearch ஐப் பயன்படுத்துகின்றன – அவை பயனாளரின் தற்போதைய தொகுப்பில் கவனம் செலுத்துகின்றன. Calc செயல்பாடுகள் துல்லியமும் முழுமைக்கா கவும் மதிப்பாய்வு செய்யப்பட்டு Calc Function அனைத்தும் விக்கி பக்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ScriptForge படவில்லை நூலகத்திற்கான உதவிப் பக்கங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேக்ரோக்களை உருவாக்குவதை எளிதாக்குகின்ற ScriptForge நூலகங்களும் பல்வேறு வசதிகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளன: கால்க்கின் தாட்களில் சேமிக்கப் பட்டுள்ள விளக்கப்படங்களை வரையறுக்க, ஒரு புதிய வரைபட சேவையைச் சேர்த்தல்; ஒரு புதிய மேல்மீட்பு பட்டியின் சேவை, சுட்டியின் நிகழ்வுக்குப் பிறகு காட்டப்படும் பட்டியலை விவரிக்க; எழுத்துருக்களின் அச்சுப்பொறிகளின் பட்டியலுடன், அச்சிடும்பொறி மேலாண்மைக்கான விரிவான வாய்ப்பு; , PDF வாயப்புகளின் முழு நிர்வாகத்துடன் ஆவணங்களை PDF க்கு பதிவேற்றம் செய்வதற்கான வசதி. பைதான், பேசிக் ஆகியவற்றிற்கான ஒரே மாதிரியான தொடரியல் , நடத்தையுடன் முழு சேவைகளும் கிடைக்கின்றன. LibreOffice சந்தை பிரிவில், OpenDocument Format (ODF)க்கான சொந்த ஆதரவுடன் தொடங்கி – பாதுகாப்பு , வலிமையான பகுதிகளில் தனியுரிமை வடிவமைப்புகளை முறியடித்து – DOCX, XLSX , PPTX ஆகிய கோப்புகளுக்கான சிறந்த ஆதரவை வழங்கு கின்றது. கூடுதலாக, LibreOffice ஆனது ஏராளமான மரபு ஆவண வடிவமைப்புகளுக்கான வடிவமைப்பான்களை வழங்குகிறது, இது பயனாளர்களுக்கு உரிமையையும் கட்டுப்பாட்டையும் திருப்பித் தருகிறது. மைக்ரோசாஃப்ட் கோப்புகள் இன்னும் 2008 இல் ISO ஆல் நீக்கப்பட்ட தனியுரிமை வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டவை, மேலும் ISO அங்கீகரிக்கப்பட்ட தரநிலையில் இல்லை, எனவே அவை அதிக அளவு செயற்கையான சிக்கலை மறைக்கின்றன. இவ்வாறான .சிக்கல்களை LibreOffice ஆனது எளிதாக கையாள்கிறது, இது ஒரு உண்மையான திறந்த நிலையான வடிவமைப்பிற்கு (OpenDocument Format) இயல்புநிலையாகும். LibreOffice 7.3 ஆனது Apple Silicon க்கு சொந்தமாக கிடைக்கிறது, இது Apple ஆல் வடிவமைக்கப்பட்ட , ARM கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட செயலிகளின் தொடர் ஆகும். பதிவிறக்கப் பக்கத்தில் இருக்கும் இயல்புநிலையில் வாய்ப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. LibreOffice 7.3 சமூகத்தில் உள்ள புதிய வசதிகளைச் சுருக்கமாகக் கூறும் கானொளிகாட்சி
https://www.youtube.com/watch?v=Raw0LIxyoRU , https://peertube.opencloud.lu/w/iTavJYSS9YYvnW43anFLeC/ ஆகிய இணைய முகவரிகளில் கிடைக்கின்றது .அனைத்து புதிய வசதிகளின் விளக்கமும் https://www.libreoffice.org/download எனும் முகவரியில் கிடைக்கிறது

துவக்க நிலையாளர்களுக்கான இராஸ்பெர்ரி பை வழிகாட்டி- தொடர் -3 — இராஸ்பெர்ரி பையை துவக்குதல்-1

இராஸ்பெர்ரி பைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கண்டறியவும் அவற்றை எவ்வாறு அமைத்து இணைத்து செயல்படுத்திடுவது என்பது குறித்தும் இந்த பகுதியில் காணலாம்
இராஸ்பெர்ரி பை ஆனது விரைவாகவும் எளிதாகவும் இணைத்து அமைத்து செயல்படுத்தி பயன்படுத்திகொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் – எந்தவொரு கணினியைப் போன்றே – இதுவும் பல்வேறு வெளிப்புற பொருள் கூறுகளான புறநிலை கருவிகளையே நம்பியுள்ளது. இதனுடைய காலியான வெற்று மின்சுற்று அட்டையைப் பார்ப்பது எளிதானது – இது நாம் வழக்கமாக பழகிவருகின்ற மூடப்பட்ட, மூடிய கணினிகளிலிருந்து கணிசமாக வித்தியாசமாகத் தோனறுகின்றது – மேலும்இவைகளை இணைத்து செயல்படுத்த முனையும் போது ஏதேனும் செயல்கள் சிக்கலாகிவிடப் போகின்றன என கவலைப்படவேண்டாம். இந்த வழிகாட்டியில் உள்ள படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் பத்தே நிமிடங்களுக்குள் இராஸ்பெர்ரி பையை கட்டமைத்து இயக்கத்துவங்கலாம். இராஸ்பெர்ரி பையின் மேசைக்கணினி கருவிகள் அல்லது ராஸ்பெர்ரி பை 400 மூலம் இந்தப் வழிகாட்டியைப் பெற்றிருந்தால், இதை கட்டமைத்து இயக்க துவங்குவதற்குத் தேவையான அனைத்தும் ஏற்கனவே இருக்கும்: நாம் இணைப்பினை வழங்க வேண்டியது யாதெனில் கணினி திரை அல்லது HDMI இணைப்புடன் கூடிய தொலைகாட்சி திரை ஆகியவை மட்டுமே – அதே மேல்நிலைபெட்டிகள், நீலகற்றை இயக்கிகள்,விளையாட்டு முகப்புதிரைகள் பயன்படுத்தும்இணைப்பு வகை ஆகியவற்றுடன்- இராஸ்பெர்ரி பை எவ்வாறு செயல்படுகிறது என்பதை காணலாம்.
இராஸ்பெர்ரி பையை முககியபாகங்கள் இல்லாமல் கொளுதல் செய்தால், பின்வருபவைகளும் நமக்கு தேவைப்படும்:
விரலி(USB)மின்வழங்கல் – 3 ஆம்ப்ஸ் (3 A)அளவில் C வகை விரலி (USB Type-C) இணைப்பானுடனான ஒரு 5 V மின் விநியோகம். அதிகாரப்பூர்வ இராஸ்பெர்ரி பை மின்வழங்குதல் பரிந்துரைக்கப்பட்ட தேர்வாகும், ஏனெனில் இது இராஸ்பெர்ரி பையின் விரைவாக மாறும் மின் தேவைகளை சமாளிக்கும் திறன்கொண்டது.

3.1
NOOBS உடன் மீச்சிறுSD அட்டை – மீச்சிறு SD அட்டையானது Raspberry Pi இன் நிரந்தர சேமிப்பகமாக செயல்படுகிறது; நாம் உருவாக்கப்போகும் அனைத்து கோப்புகளும், நாம் நிறுவுகைசெய்திடவிருக்கும் அனைத்து மென்பொருளும், இயக்க முறைமையுடன் இந்த அட்டையில்தான் சேமிக்கப்படும். 8 ஜிபி அட்டையுடன் நாம் துவங்குவதாக, இருப்பினும் 16 ஜிபி அட்டைவரை மேம்படுத்தி கொள்ளப்பட்டு அதிகநினைவக இடத்தை வழங்குகிறது. முன்பே நிறுவுகைசெய்யப்பட்ட NOOBS (புதிய பெட்டிக்கு வெளியிலான மென்பொருள்) கொண்ட அட்டையைப் பயன்படுத்துவது நேரத்தை மிச்சப்படுத்தும்; இல்லை யெனில் ஒரு வெற்று அட்டையில் இயங்குதளத்தை (OS) நிறுவுகை செய்வ தற்கான வழிமுறைகளுக்குஇந்த வழிகாட்டியின் பின்னிணைப்பு A ஐகாண்க

3.2
USB விசைப்பலகையும் சுட்டியும் – விசைப்பலகையும் சுட்டியும் இராஸ்பெர்ரி பையை கட்டுப்படுத்த நம்மை அனுமதிக்கிறது. விரலி(USB) இணைப்பானுடன் கூடிய கம்பிஇணைப்புடனான அல்லது கம்பிஇணப்பற்ற விசைப்பலகை சுட்டி ஆகியவை இராஸ்பெர்ரி பையுடன் செயல்படும், இருப்பினும் வண்ணமயமான விளக்குகளுடன் கூடிய சில ‘gaming’ பாணி விசைப்பலகைகள் நம்பகத் தன்மையுடன் பயன்படுத்த முடியாத அளவுக்கு அதிக சக்தியைப் பெறலாம்.

3.3.
மீச்சிறுHDMIகம்பி – இது ராஸ்பெர்ரி பையிலிருந்து ஒலியை ,கானொளியை நம்முடைய தொலைகாட்சி திரைக்கு அல்லது கணினிதிரைக்கு எடுத்துச் செல்லும். கம்பியின் ஒரு முனையில் இராஸ்பெர்ரி பைக்கான மீச்சிறு- HDMI இணைப்பு உள்ளது; மற்றொன்று, காட்சிக்கான முழு அளவிலான HDMI இணைப்பான். அல்லது, மீச்சிறு-HDMI முதல் HDMI ஏற்பானின் நிலையான, முழு அளவிலான HDMI கம்பிவரையில் பயன்படுத்தி கொள்ளலாம். HDMI இன் கொள்குழி இல்லாமல் திரையைப் பயன்படுத்தினால், மீச்சிறு-HDMI முதல் DVI-D, காட்சிவாயில் அல்லது VGA ஏற்பான்கள் வரை கொள்முதல் செய்யலாம். கூட்டான கானொளியைப் பயன்படுத்தும் அல்லது SCART கொள்குழி கொண்ட பழைய தொலைகாட்சி திரையுடன் இணைக்க, 3.5 மிமீ அளவுள்ள வளையவளையமானமுனையுடையஉறையின் (tip‑ring-ring-sleeve (TRRS)) ஒலி/கானொளி கம்பியைப் பயன்படுத்திகொள்க.

3.4
இராஸ்பெர்ரி பைஆனது எந்தவொருபெட்டியும் இல்லாமல் பயன்படுத்த பாதுகாப்பானது, அதை ஒரு உலோக மேற்பரப்பில் வைக்க வேண்டாம், இது மின்சாரத்தை கடத்துகின்ற , குறுகிய மின்சுற்றுக்கு வழிவகுக்கும். இருப்பினும், ஒரு வாய்ப்பு பெட்டி, கூடுதல் பாதுகாப்பை வழங்க முடியும்; மேசைக்கணினி கருவிதொகுப்பில் அதிகாரப்பூர்வ இராஸ்பெர்ரி பை பெட்டி உள்ளது, அதே நேரத்தில் மூன்றாம் தரப்பு பெட்டிகளை நல்ல மொத்த விற்பணை யாளர்களிடமிருந்தும் கிடைக்கும். கம்பியில்லா(வைஃபை) வலைபின்னலைக் காட்டிலும் கம்பியுடனான வலைபின்னலில் இராஸ்பெர்ரி பையைப் பயன்படுத்த விரும்பினால், நமக்கு வலைபின்னலிற்கான கம்பியும் தேவைப்படும். இது நம்முடைய வலைபின்னலின் நிலைமாற்றி அல்லது வழிசெலுத்தியுடன் ஒரு முனையில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இராஸ்பெர்ரி பையின் உள்ளமைக்கப்பட்ட கம்பியில்லா வானொலியைப் பயன்படுத்த திட்டமிட்டால், நமக்கு கம்பி தேவையில்லை; இருப்பினும், கம்பியில்லா வலைபின்னலின் பெயர் , விசை அல்லது கடவுச்சொற்றொடரை தெரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பு- இராஸ்பெர்ரி PI 400 அமைப்பு இராஸ்பெர்ரி பை 4 அல்லது இராஸ்பெர்ரி பை குடும்பத்தின் மற்றொரு வெற்று-அ்ட்டை உறுப்பினரை அமைப்பதற்கான வழிமுறைகள் உள்ளன. இராஸ்பெர்ரி PI 400 ஐ அமைப்பதற்கான வழிமுறைகளை பின்வரும் பகுதிகளில் காணலாம்.
வன்பொருட்களை அமைத்தல்

இராஸ்பெர்ரி பையை அதன் பெட்டியிலிருந்து அவிழ்ப்பதன் மூலம் துவங்கிடுக. இராஸ்பெர்ரி பை என்பது ஒரு வலுவான வன்பொருட்களின் தொகுப்பாகும், ஆனால் அது அழியாதது என்று அர்த்தமன்று: பலகையை அதன் தட்டையான பக்கங்களில் இல்லாமல் விளிம்புகளில் வைத்திருக்கும் பழக்கத்தைப் பெற முயற்சித்திடுக, மேலும் உயர்த்தப்பட்ட உலோக ஊசிகளைச் சுற்றி கவனமாக இருக்கவும். இந்த ஊசிகள் வளைந்திருந்தால், அது கூடுதல் இணைப்பிற்கான அட்டைகளையும் பிற கூடுதல் வன்பொருளையும் பயன்படுத்துவதை கடினமாக்கும், மேலும் மோசமான நிலையில்,இராஸ்பெர்ரி பையை சேதப்படுத்தும் குறுகிய மின்சுற்று ஏற்படலாம். ஏற்கனவே அவ்வாறு செய்யவில்லை எனில், இராஸ்பெர்ரி பையின்பல்வேறு வாயில்கள் சரியாக எங்கு உள்ளன, அவை என்ன செய்கின்றன என்பது பற்றிய விவரங்களை தெரிந்துகொள்வதற்காக, முந்தைய பகுதியை காண்க, .
பெட்டியை ஒருங்கிணைப்பு செய்தல் ஒரு பெட்டியில் Raspberry Pi ஐ நிறுவுகை செய்வதே, அதனுடைய முதல் படியாகும். அதிகாரப்பூர்வ இராஸ்பெர்ரி பை பெட்டியைப் பயன்படுத்திகொள்கின்றோம் எனில், அதை சிவப்பு அடித்தளம் ,வெள்ளை மூடி. ஆகிய இரண்டு தனித்தனி துண்டுகளாகப் பிரிப்பதன் மூலம் துவங்கிடுக:
1.அடித்தளத்தை எடுத்து, உயர்த்தப்பட்ட முனை இடதுபுறமாகவும், கீழ் முனை வலதுபுறமாகவும் இருக்கும்படி பிடித்துகொள்க.

3.5
2.Raspberry Pi ஐ (மீச்சிறு SD அட்டை செருகப்படாதது) அதன் USB கணினியின் உள்ளக இணப்பு வாயில்கள் மூலம் ஒரு சிறிய கோணத்தில் பிடித்து, அதன் இணைப்பிகளை (USB Type-C, 2 × micro-HDMI, 3.5 mm) பக்கவாட்டில் உள்ள அடித்தளத்தின் துளைகளுக்குள் செருகிடுக. , பின்னர் மெதுவாக மறுபக்கத்தை அது சமமாக தட்டையாக இருக்குமாறு கீழே இறக்கி வைத்திடுக .

3.6.
3.வெள்ளை மூடியை எடுத்து, மீச்சிறு SD அட்டையின் செருகுவாய்க்கு மேலே, அடித்தளத்தின் இடதுபுறத்தில் பொருந்தக்கூடிய துளைகளில் இடதுபுறத்தில் உள்ள இரண்டு பிடிப்பான்களை வைத்திடுக. அவைகளிலிருந்து கிளிக் எனும் ஒலி கேட்கும் வரை வலது பக்கத்தை (USB வாயில்களுக்கு மேலே) கீழே தள்ளி அமைத்திடுக.

3.7.
மீச்சிறு SD அட்டையைஇணைத்தல்
இராஸ்பெர்ரி பையின் சேமிப்பகமான மீச்சிறு SD அட்டையை நிறுவுகை செய்திட, இராஸ்பெர்ரி பையை (ஒன்றைப் பயன்படுத்தினால்) திருப்பி, இராஸ்பெர்ரி பையில் இருந்து விலகி முகவரிதாளுடன் அட்டையை மீச்சிறு SD அட்டையின் பொருத்துவாயில் நகர்த்திடுக. இது ஒரு வழியில் மட்டுமே செல்ல முடியும், மேலும் அதிக அழுத்தம் இல்லாமல் முகப்பில் சரி செய்திட வேண்டும்.

3.8
மீச்சிறு SD அட்டையின் இணைப்பியில் நகர்த்தி, சொடுக்குதல் செய்யாமல் நிலை நிறுத்திடுக.

3.9.
எதிர்காலத்தில் அதனை மீண்டும் அகற்ற விரும்பினால், அட்டையின் முனையைப் பிடித்து மெதுவாக வெளியே இழுத்திடுக. இராஸ்பெர்ரி பையின் பழைய மாதிரியைப் பயன்படுத்துகின்றோம் எனில், இந்தஅட்டையைத் திறக்க முதலில் மெதுவாக அழுத்த வேண்டும்; இராஸ்பெர்ரி பை 3 அல்லது 4 உடன் இவ்வாறு செய்யத் தேவையில்லை.
விசைப்பலகையையும் சுட்டியையும் இணைத்தல்
இராஸ்பெர்ரி பையில் உள்ள நான்கு விரலியின்(USB) வாயில்களில் (2.0 அல்லது 3.0) விசைப்பலகையின் USB கம்பியை இணைத்திடுக. அதிகாரப்பூர்வ இராஸ்பெர்ரி பையின் விசைப்பலகையைப் பயன்படுத்துகின்றோம் எனில், சுட்டிக்கு பின்புறத்தில் USB வாயில் உள்ளது; இல்லையெனில், சுட்டியின் USB கம்பியை சுட்டியிலிருந்து Raspberry Pi இல் உள்ள மற்றொரு USB வாயிலில் இணைத்திடுக.

3.10.
விசைப்பலகை சுட்டி ஆகியவற்றிற்கான USB இணைப்பிகள் அதிக அழுத்தம் இல்லாமல் முகப்பிற்குச் செல்ல வேண்டும்; இணைப்பியை அழுத்தி கட்டாயப் படுத்த வேண்டியிருந்தால், ஏதோ தவறு உள்ளது எனகருத்தில்கொள்க.அதனால் அது USB இணைப்பானின் சரியான வாயில்தானா என்பதைச் சரிபார்த்திடுக!
குறிப்பு விசைப்பலகை & சுட்டி விசைப்பலகை சுட்டி ஆகியவை இராஸ்பெர்ரி பைக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதற்கான முக்கிய வழிமுறையாக செயல்படுகின்றன; கணினியில், இவை ஒரு வெளியீட்டு சாதனமாக இருக்கும் காட்சிக்கு மாறாக உள்ளீட்டு சாதனங்கள் என்று அழைக்கப்படுகின்றன,
ஒரு காட்சியை(display) இணைத்தல்
மீச்சிறு- HDMI கம்பியை எடுத்து, இராஸ்பெர்ரி பையில் உள்ள USB Type-C வாயிலிற்கு அருகில் உள்ள மீச்சிறு- HDMI இன் வாயிலுடன் சிறிய முனையையும், மறுமுனையை காட்சியுடனும் இணைத்திடுக. காட்சியானது ஒன்றுக்கு மேற்பட்ட HDMI வாயில்களைக் கொண்டிருந்தால், இணைப்பிற்கு அடுத்துள்ள வாயில் எண்ணைத் தேடிடுக; இராஸ்பெர்ரி பையின் காட்சியைப் பார்க்க,தொலைகாட்சிதிரையை இந்த உள்ளீட்டிற்கு மாற்ற வேண்டும். வாயில் எண்ணைப் காண முடியாவிட்டால், கவலைப்பட வேண்டாம்: இராஸ்பெர்ரி பையைக் கண்டுபிடிக்கும் வரை ஒவ்வொரு உள்ளீட்டையும் மாற்றலாம்.

3.11.
குறிப்பு தொலைகாட்சிதிரை இணைப்பு தொலைகாட்சித்திரையில் அல்லது கணினித்திரையில் HDMI கம்பிஇணைப்பு இல்லை எனில், Raspberry Pi ஐப் பயன்படுத்த முடியாது என்று அர்த்தமன்று. எந்த மின்னனு பொருட்களின் மொத்த விற்பணையா ளரிடமிருந்தும் கிடைக்கும் ஏற்பான் கம்பிகள், இராஸ்பெர்ரி பையில் உள்ள மீச்சிறு- HDMI வாயிலை DVI-D, காட்சிவாயில் அல்லது VGA ஆக மாற்றுவதற்கு நம்மை அனுமதிக்கும். இவை இராஸ்பெர்ரி பையின் மீச்சிறு- HDMI வாயிலுடன் இணைக்கப் பட்டுள்ளன, பின்னர் ஏற்பான் கம்பியை கணினித்திரையுடன் இணைக்கப் பயன்படும் பொருத்தமான கம்பி. தொலைகாட்சி திரையில் கலவையான கானொளிஅல்லது SCART உள்ளீடு மட்டுமே இருந்தால், 3.5 மிமீ அளவுள்ள வளைய வளையமான முனையுடைய உறையுடனான (tip‑ring-ring-sleeve (TRRS)) ஏற்பான் கம்பி 3.5 மிமீ AV jackஉடன் இணைக்கும் composite-to-SCART ஏற்பான்களை கொள்முதல் செய்திடலாம். தொடரும்

ஜாவா உரைநிரல் பயிற்சிவழிகாட்டி தொடர்-09. செயலிகள்-2

மறுநிகழ்வு(recursion)
ஒரு செயலி தன்னையே மேற்கோள் செய்திடலாம் அல்லதுஅழைக்கலாம். ஒரு செயலியானது தன்னையே மேற்கோள் செய்வதற்கு மூன்று வழிகள் உள்ளன: செயலியின் பெயர்
arguments.callee
செயலிதன்னையே மேற்கோள்செய்கின்ற in-scope எனும்மாறியாக அமைகின்றது எடுத்துக்காட்டாக, பின்வரும் செயலியின் வரையறையைக் கவனித்திடுக:
var foo = function bar() {
// கூற்றுகள் இங்கே செல்கின்றது
}
செயலியின் பகுதியில், பின்வருபவை அனைத்தும் சமமானவைகளாகும்:
bar()
arguments.callee()
foo()
தன்னையே அழைக்கும் ஒரு செயலியை cursive செயலி என்று அழைக்கப்படுகிறது. சில வழிகளில், மறுநிகழ்வு ஒரு சுழலிக்கு ஒப்பானது. இரண்டும் ஒரே குறிமுறைவரிகளை பலமுறை இயக்குகின்றன, மேலும் இரண்டுக்கும் ஒரு நிபந்தனை தேவைப்படுகிறது (முடிவிலா சுழற்சியைத் தவிர்க்க, அல்லது இந்த செயலியில் எல்லையற்ற மறுநிகழ்வைத் தவிர்க்க). எடுத்துக்காட்டாக, பின்வரும் சுழலியை காண்க…
var x = 0;
while (x < 10) { // “x < 10” is the loop condition //செயலைச்செய் x++; } … மறுநிகழ்வு செயலி அறிவிப்பாக மாற்றலாம், அதைத் தொடர்ந்து அந்தச் செயலிக்கான அழைப்பு: if (x >= 10) // “x >= 10” is the exit condition (equivalent to “!(x < 10)”)
return;
// செயலைச்செய்
loop(x + 1); // மறுநிகழ்வு அழைப்பு
}
loop(0);
இருப்பினும், சில தருக்கப்படிமுறைகள் எளிய மறுசுழற்சி சுழல்களாக இருக்க முடியாது. எடுத்துக்காட்டாக, மரக் கட்டமைப்பின் அனைத்து முனை மங்களையும் பெறுவது (DOM போன்றவை) மறுநிகழ்வு மூலம் எளிதானது:
function walkTree(node) {
if (node == null) //
return;
// முனைமத்தை கொண்டு ஏதேனும் செய்தல்
for (var i = 0; i < node.childNodes.length; i++) {
walkTree(node.childNodes[i]);
}
}
செயலியின் சுழற்சியுடன் ஒப்பிடும்போது, ஒவ்வொரு சுழல்நிலை அழைப்பும் இங்கு பல சுழல்நிலை அழைப்புகளை செய்கிறது. எந்தவொரு சுழல்நிலை தருமதிப்புபடிமுறையும் மறுசுழற்சி அல்லாத ஒன்றாக மாற்றுவது சாத்தியம், ஆனால் தருமதிப்பு பெரும்பாலும் மிகவும் சிக்கலானது, மேலும் அவ்வாறு செய்வதற்கு ஒரு அடுக்கைப் பயன்படுத்த வேண்டும். உண்மையில், மறுநிகழ்வு ஒரு அடுக்கைப் பயன்படுத்துகிறது:
செயலியின் அடுக்கு:அடுக்கு போன்ற நடத்தை பின்வரும் எடுத்துக்காட்டில் காணலாம்:
function foo(i) {
if (i < 0)
return;
console.log(‘begin: ‘ + i);
foo(i – 1);
console.log(‘end: ‘ + i);
}
foo(3);
// வெளியீடு:
// துவக்கம்: 3
// துவக்கம்: 2
// துவக்கம்: 1
// துவக்கம்: 0
// முடிவு: 0
// முடிவு: 1
// முடிவு: 2
// முடிவு: 3
உள்ளமை வு (nested) செயலிகளும் முடிந்த நிலைகளும்(closures )
ஒரு செயலியை மற்றொரு செயலிக்குள் சேர்க்கலாம். உள்ளமைக்கப் பட்ட உள்ளக (inner)செயலியானது அதனை கொண்டிருக்கும்வெளிப்புற (outer) செயலிக்கு தனிப்பட்டதாகும். இது ஒரு செயலியின் முடிவடைதலையும் உருவாக்குகிறது. முடிவடைதல் என்பது அந்த செயலியின் ஒரு வெளிப்பாடாகும் ), அந்த மாறிகளை பிணைக்கும் சூழலுடன் (வெளிப்பாட்டை “closed”) சுதந்திரமான மாறிகளைக் கொண்டிருக்கலாம். ஒரு உள்ளமைவு செயலியானது ஒரு முடிவடைந்த செயலி என்பதால், ஒரு உள்ளமைவு செயலியானது அது கொண்டிருக்கும் செயலியின் மதிப்புருக்களையும் மாறிகளையும் “பரம்பரையாக(inherit)” பெற முடியும். வேறு சொற்களில் கூறுவதெனில், உள்ளக செயலியானதுவெளிப்புற செயலியின் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
சுருக்கமாக: வெளிப்புற செயலியில் உள்ள கூற்றுகளிலிருந்து மட்டுமே உள்ளக செயலியை அணுக முடியும். உள்ளக செயலியானது ஒரு முடிவடைந்த நிலையை உருவாக்குகிறது: உள்ளக செயலியானது வெளிப்புற செயலியின் மதிப்புருக்களையும் மாறிகளையும் பயன்படுத்தலாம், அதே நேரத்தில் வெளிப்புற செயலியானது உள்ளக் செயலியின் மதிப்புருக்களையும் மாறிகளையும் பயன்படுத்த முடியாது. பின்வரும் எடுத்துக்காட்டு உள்ளமைவு செயலிகளைக் காண்பிக்கின்றது:
function addSquares(a, b) {
function square(x) {
return x * x;
}
return square(a) + square(b);
}
a = addSquares(2, 3); // வெளியீடு 13
b = addSquares(3, 4); // வெளியீடு 25
c = addSquares(4, 5); // வெளியீடு 41
உள்ளக செயலியானது ஒரு முடிவந்தநிலைய உருவாக்குவதால், வெளிப்புற செயலியை அழைக்கலாம் வெளிப்புற செயலி உள்ளக செயலி ஆகிய இரண்டிற்கும் மதிப்புருக்களைக் குறிப்பிடலாம்:
unction outside(x) {
function inside(y) {
return x + y;
}
return inside;
}
fn_inside = outside(3); // இதைப் போன்று சிந்தித்தித்திடுக: எதைக் கொடுத்தாலும்
// 3ஐச் சேர்க்கும் செயலியை கொடுத்திடுக
result = fn_inside(5); // 8ஐ திருப்புகின்றது
result1 = outside(3)(5); //8 ஐ திருப்புகின்றது
மாறிகளைப் பாதுகாத்தல்
xஆனது உள்ளே திரும்பும்போது எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதைக் கவனித்திடுக. ஒரு முடிந்தநிலையை அது குறிப்பிடும் அனைத்து நோக்கங்களிலும் மதிப்புருக்களையும் மாறிகளையும் பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு அழைப்பும் வெவ்வேறு மதிப்புருக்களை வழங்குவதால், ஒவ்வொரு அழைப்பிற்கும் வெளியே ஒரு புதிய முடிந்தநிலை உருவாக்கப்படுகிறது. திருப்பபடுதல் உள்பகுதியைஅணுக முடியாத போது மட்டுமே நினைவகத்தை விடுவிக்க முடியும். இது மற்ற பொருட்களில் குறிப்புகளை சேமிப்பதில் இருந்து வேறுபட்டது அன்று, ஆனால் பெரும்பாலும் குறைந்தஅளவிலான வெளிப்படையானது, ஏனெனில் ஒருவர் நேரடியாக குறிப்புகளை அமைக்க வில்லையெனில் அவற்றை ஆய்வு செய்ய முடியாது.
பல-உள்ளமைவு செயலிகள்
செயலிகளை பல-உள்ளமைவாக ஆக்க முடியும். எடுத்துகாட்டாக: (A)எனும் ஒரு செயலியானது (B) எனும் ஒரு செயலியை கொண்டுள்ளது, அந்த (B) எனும் ஒரு செயலியானது (C) எனும் ஒரு செயலியை கொண்டுள்ளது. B , C ஆகிய இரண்டு செயலிகளும் இங்கே முடிந்தநிலையாகிவிடும். எனவே,Bஎனும் செயலியானது Aஎனும் செயலியை அணுகலாம், C எனும் செயலியானது B எனும் செயலியை அணுகலாம். கூடுதலாக, Cஎனும் செயலியை அணுகக்கூடிய B எனும் செயலியை அணுக முடியும் என்பதால், C எனும் செயலியை அணுகலாம். இவ்வாறு, முடிந்த நிலைகள் பல நோக்கங்களைக் கொண்டி ருக்கலாம்; அவை மீண்டும் மீண்டும் அதைக் கொண்டிருக்கும் செயல்பாடுகளின் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன. இது சங்கலி நோக்கம் எனப்படும். (இது “சங்கிலி” என்று அழைக்கப்படுவதற்கான காரணம் பின்னர் விளக்கப்படும்.) பின்வரும் எடுத்துகாட்டினைக் கவனித்திடுக:
function A(x) {
function B(y) {
function C(z) {
console.log(x + y + z);
}
C(3);
}
B(2);
}
A(1); // logs 6 (1 + 2 + 3)
இந்த எடுத்துக்காட்டில், C எனும் செயலியானது B எனும் செயலியின் yஐயும் , A எனும் செயலியின் x ஐயும் அணுகுகிறது. இவ்வாறு C எனும் செயலியானது செயல்படமுடியும், ஏனெனில்: B எனும் செயலியானது A எனும் செயலி (அதாவது, Aஎனும் செயலியின் மதிப்புருக்களையும் மாறிகளையும் அணுக முடியும்) உட்பட ஒரு முடிந்தநிலையை உருவாக்குகிறது. C எனும் செயலியானது B எனும் செயலி உட்பட ஒரு முடிவடைந்தநிலையை உருவாக்கு கிறது. ஏனெனில் B எனும் செயலியின் முடிவடைந்தநிலை Aஎனும் செயலி,C எனும் செயலி ஆகியவற்றின் முடிவடைந்தநிலை Aஎனும் செயலி ,C எனும் செயலி ஆகியவற்றினை உள்ளடக்கியது B எனும் செயலி A எனும் செயலி ஆகியவற்றின் மதிப்புருக்கள் மாறிகள் ஆகிய இரண்டையும் அணுகலாம். வேறு சொற்களில் கூறுவதெனில், C எனும் செயலியானது B எனும் செயலி A எனும் செயலி ஆகியவற்றின் செயல் எல்லைகளை அந்த வரிசையில் இணைக்கிறது. இருப்பினும், இதற்கு எதிர்மறையான செயல் உண்மை அன்று. A ஆனது C ஐ அணுக முடியாது, ஏனெனில் A ஆனது B இன் எந்த மதிப்புருவையும் அல்லது மாறியையும் அணுக முடியாது, இது C எனும் ஒரு மாறியாகும்.எனவே,Cஆனது B க்கு மட்டுமே தனிப்பட்டதாக இருக்கின்றது.
பெயர் முரண்பாடுகள் முடிவடைந்த நிலையின் செயல்எல்லையில் இரண்டு மதிப்புருக்கள் அல்லது மாறிகள் ஒரே பெயரைக் கொண்டிருக்கும்போது, ஒரு பெயர் முரண்பாடு உள்ளது. மேலும் உள்ளமைவின் செயல்எல்லைகள் முன்னுரிமை பெறுகின்றன. எனவே, உள்ளக -மீப்பெரும் செயல்எல்லையானது மிக உயர்ந்த முன்னுரிமையைப் பெறுகிறது, அதே சமயம் வெளிப்புற-மீப்பெரும் செயல் எல்லையானது மிகக் குறைந்த முன்னுரிமையாக அமைகின்றது. இது செயல்எல்லையின் .சங்கிலியாகும் சங்கிலியில் முதன்மையானது உள்ளக- -மீப்பெரும் செயல்எல்லையாகும், கடைசியானது வெளிப்புற–மீப்பெரும் செயல்எல்லையாகும். பின்வருவனவற்றைக் கவனித்திடுக:
var x = 5;
function inside(x) {
return x * 2;
}
return inside;
}
outside()(10); //10 என்பதற்கு பதிலாக 20என்பதை திருப்புகின்றது
பெயர் முரண்பாடு கூற்று x * 2 என திருப்புதலில் நிகழ்கிறது உள்ளக அளவுரு x, வெளிப்பு மாறி x க்கு இடையில் உள்ளது. இங்கே செயல்எல்லை சங்கிலி {உள்ளக, வெளிப்புற, உலகளாவிய பொருள்}. எனவே, வெளிப்புறx ஐ விட உள்ளக x முன்னுரிமை பெறுகிறது, மேலும் 10 (வெளிப்புற x) க்கு பதிலாக 20 (உள்ளகத்தின் உள்ளக x) திருப்புகின்றது.
முடிவடைந்தநிலைகள் முடிவடைந்தநிலைகளானவை ஜாவாஉரைநிரலின் மிகவும் சக்திவாய்ந்த வசதிகளில் ஒன்றாகும். ஜாவாஉரைநிரல் செயலிகளின் கூட்டினை கட்டமைக்க அனுமதிக்கிறது வெளிப்புற செயலிக்குள் வரையறுக்கப்பட்ட அனைத்து மாறிகள் செயலிகளுக்கு முழு அணுகலை வழங்குகிறது ( வெளிப்புற செயலியை அணுகக்கூடிய அனைத்து பிற மாறிகள் செயலிகள்). இருப்பினும், வெளிப்புற செயலியானது உள்ளக செயலிக்குள் வரையறுக்கப்பட்ட மாறிகள் செயலிகளுக்கான அணுகலைக் கொண்டிருக்க வில்லை. இது உள்ளக செயலியின் மாறிகளுக்கு ஒரு வகையான இணைப்பினை வழங்குகிறது. மேலும், உள்ளக செயலியானது வெளிப்புற செயலியின் செயல்எல்லயை அனுகுவதால், வெளிப்புற செயலியில் வரையறுக்கப்பட்ட மாறிகளும் செயலிகளும் வெளிப்புற செயலியின் காலத்தை விட நீண்ட காலம் செயலில் இருக்கும், உள்ளக செயலியானது வெளிப்புற செயலியின் ஆயுளுக்கு அப்பால் உயிர்வாழ முடிந்தால். செயலியானது. வெளிப்புறச் செயலிக்கு வெளியே உள்ள எந்த செயல்எல்லைக்கும் உள்ளக செயலியானதுஎப்படியாவது கிடைக்கும்போது ஒரு முடிவடைந்தநிலையால் உருவாக்கப்படுகிறது.
var pet = function(name) { // வெளிப்புற செயலியானது “name” எனப்படும்
// மாறியை வரையறுக்கிறது
var getName = function() {
return name; // உள்ளக செயலியானது வெளிப்புற செயலியின் “name”
// எனும் மாறிக்கான அணுகலைக் கொண்டுள்ளது
}
return getName; //உள்ளக செயலியை திருப்பி,அதன் மூலம் அதை
//வெளிப்புற செயல்எல்லைகளுக்கு வெளிப்படுத்துகிறது
}
myPet = pet(‘Vivie’);
myPet(); // “Vivie” என்பதை திருப்புகின்றது
மேலே உள்ள குறிமுறைவரிகளை விட இது மிகவும் சிக்கலானதாக இருக்கலாம். வெளிப்புற செயலியின் உள்ளக மாறிகளைக் கையாளும் வழிமுறைகளைக் கொண்ட ஒரு பொருளைத் திரும்பப் பெறலாம்.
var createPet = function(name) {
var sex;
return {
setName: function(newName) {
name = newName;
},
getName: function() {
return name;
},
getSex: function() {
return sex;
},
setSex: function(newSex) {
if(typeof newSex === ‘string’ && (newSex.toLowerCase() === ‘male’ ||
newSex.toLowerCase() === ‘female’)) {
sex = newSex;
}
}
}
}
var pet = createPet(‘Vivie’);
pet.getName(); // Vivie
pet.setName(‘Oliver’);
pet.setSex(‘male’);
pet.getSex(); // male
pet.getName(); // Oliver
மேலே உள்ள குறிமுறைவரிகளில், வெளிப்புறச் செயலியின் பெயர்மாற்றமானது உள்ளக செயலிகளுக்கு அணுகக்கூடியது, மேலும் உள்ளக செயலிகளைத் தவிர உள்ளக மாறிகளை அணுக வேறு வழியில்லை. உள்ளக செயலிகளின் உள்ளக மாறிகள் வெளிப்புற மதிப்புருக்களும் மாறிகளுக்கும் பாதுகாப்பான சேமிப்பகங்களாக செயல்படுகின்றன. அவை உள்ளக செயலிகளுக்கு “தொடர்ச்சியான(persistent) ” , “இணைக்கப்பட்ட(encapsulated) ” தரவை வைத்திருக்கின்றன. செயலிகள் ஒரு மாறிக்கு ஒதுக்கப்பட வேண்டியதில்லை அல்லது ஒரு பெயரைக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
var getCode = (function() {
var apiCode = ‘0]Eal(eh&2’; // வெளியாட்கள் மாற்றுவதை விரும்பாத ஒரு
// குறிமுறைவரி…..
return function() {
return apiCode;
};
})();
getCode(); //apiCode என்பதை திருப்புகின்றது
குறிப்பு: முடிந்த நிலையைப்(closures ) பயன்படுத்தும் போது பல ஆபத்துகளை கவனிக்க வேண்டியுள்ளன
ஒரு முடிந்தநிலை செயலியானது, அதே பெயரில் உள்ள மாறியை வெளிப்புற செயல்எல்லையில் உள்ள மாறி என வரையறுத்தால், வெளிப்புற செயல் எல்லையில் உள்ள மாறியை மீண்டும் குறிப்பிட வழி இல்லை. (நிரலின் செயலானது உள்ளக செயல்எல்லையை விட்டு வெளியேறும் வரை, உள்ளக செயல்எல்லையை மாறி வெளிப்புறத்தை “மேலெழுதுகிறது(overrides) “.)
var createPet = function(name) { // வெளிப்புற செயலியானது “name”. எனப்படும்
// மாறியை வரையறுக்கிறது.
return {
setName: function(name) { // இணைக்கப்பட்ட செயலியானது “name”.
// எனப்படும் மாறியை வரையறுக்கிறது
name = name; // வெளிப்புற செயலியால் வரையறுக்கப்பட்ட “name”
// எவ்வாறு அனுகுவது?
}
}
}
தொடரும்

எக்செல்லில் #DIV/0 எனும் பிழையை தவிர்ப்பது எவ்வாறு

எக்செல்லில் சூத்திரங்களுடன் பணிபுரிந்திருந்தால், ஏதேனும் ஒருமுறையாவது #DIV/0 எனும் பிழையை கண்டிப்பாக சந்தித்திருப்போம் இந்த சிறிய பயிற்சியில், எக்செல்லில் சில எளிதான சூத்திரங்களைப் பயன்படுத்தி இவ்வாறான பிழையை எவ்வாறு தவிர்ப்பது என்பதை காண்போம் பணித்தாளில் அல்லது பணிப்புத்தகத்தில் .#DIV/0 எனும் பிழை உள்ள கலண்களை எவ்வாறுக் கண்டறியலாம் என்பதையும் காண்போம்.
எக்செல்லில் #DIV/0 எனும் பிழை எவ்வாறு உருவாகின்றது?
எக்செல்லில், வகுத்தலிற்கான சூத்திரத்தில் வகுக்கும் எண் 0 ஆக இருந்தால் அந்த சூத்திரம்இருக்கும் கலணில் #DIV/0 எனும் பிழையை கண்டிப்பாக பெறுவோம். எடுத்துக்காட்டாக, எக்செல்லில்ஒரு கலணில் =12/0 என உள்ளீடு செய்தால், உடன் திரையில் கண்டிப்பாக #DIV/0 எனும்பிழையைப் பெறுவோம்,

நாம் நம்முடைய வழக்கமான நடைமுறை வாழ்க்கையில் இதுபோன்ற சூத்திரத்தை கண்டிப்பாக பயன்படுத்த மாட்டோம், ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், எக்செல்லின் சூத்திரங்களில் கலணின் மேற்கோள்களைப் பயன்படுத்தும் பெரிய சூத்திரங்களின் விளைவாக இந்த #DIV/0 எனும்பிழை ஏற்படுகிறது, மேலும் சில மேற்கோள் செய்திடுகின்ற கலணின் மதிப்பு 0 அல்லது காலியாக இருக்கலாம். சில நேரங்களில், தரவுத்தளத்தி லிருந்து அல்லது இணையத்திலிருந்து பதிவிறக்கம்செய்திடுகின்ற தரவின் ஒரு பகுதியாக இந்தப் பிழையைப் பெறலாம்.


IFERROR எனும் செயலியைபயன்படுத்தி #DIV/0எனும் பிழையை அகற்றிடுதல்
எக்செல்லில் சூத்திரங்களுடன் பணிபுரிந்திடும்போது, #DIV/0 எனும் பிழையை தவிர்த்திட விரும்பினால்! IFERROR எனும் செயலியைப் பயன்படுத்தி கொள்ளலாம் இந்த IFERROR எனும் செயலியை பயன்படுத்தி கொள்வதற்கான சூத்திரம் பின்வருமாறு: =IFERROR(value, value_if_error)
இதில்: முதலில் இருக்கின்ற value – என்பது வகுத்தல் பிழையைக் கொடுக்கும் இரண்டாவதாக இருக்கின்ற value_if_error – என்பது அவ்வாறான பிழை ஏதேனும் ஏற்பட்டால் பெற வேண்டிய மதிப்பாகும் இதை ஒருஎடுத்துகாட்டுடன் காண்போம் நம்மிடம் தரவுத்தொகுப்பு ஒன்றுள்ளது எனக்கொள்க, அதில் C எனும் நெடுவரிசையில் வகுத்தலிற்கான சூத்திரம் உள்ளது. , வகுத்திடும்எண் 0 அல்லது நெடுவரிசை B இல் காலியாக இருக்கும் எல்லா நிகழ்வுகளிலும் #DIV/0 எனும் பிழைகளைப் பெறுவோம்.இந்நிலையில் #DIV/0 எனும் பிழையை நீக்க, பின்வரும் சூத்திரத்தைப் பயன்படுத்திடுக:
=IFERROR(A2/B2,””)


மேலே உள்ள சூத்திரம் அது பிழையாக இல்லாவிட்டால், வகுத்தலிற்குப் பிறகு பெறப்பட்ட மதிப்பை வழங்கும், மேலும் அது பிழையைக் கொடுத்தால், அது #DIV/0 எனும் பிழைக்கு பதிலாக கலணின் மதிப்பை காலியாக வைத்திடும். இதேபோன்று, #DIV/0 எனும் பிழையின் விடையை காலியாக விடுவதற்கு பதிலாக வேறு அர்த்தமுள்ள ஒன்றாக மாற்ற விரும்பினால், அதை இரண்டாவது தருமதிப்பாக குறிப்பிடலாம். வகுத்தல் பிழைக்குப் பதிலாக “Not Available” என்ற உரையை வழங்கும் சூத்திரம் பின்வருமாறு:
=IFERROR(A2/B2,”Not Available”)


IFERROR எனும் செயலியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான செய்திகள்:
IFERROR எனும் செயலியானது எக்செல் பதிப்பு2007 இல் அறிமுகப் படுத்தப் பட்டது. எனவே நாம் எக்செல் 2003 அல்லது முந்தைய பதிப்புகளைப் பயன் படுத்தி கொண்டிருந்தால், இந்த செயலியைப் பயன்படுத்த முடியாது (அவ்வாறான சூழலில் அடுத்து விவரிக்கும் வழிமுறையைப் பயன்படுத்திடுக) IFERROR எனும் செயலியானது N/A, #DIV/0!, #VALUE!, #REF!, #NAME, #NUM, ஆகிய அனைத்து பிழை மதிப்புகளிலும் அவற்றை தவிர்த்திடுமாறு செயல்படுகிறது. எக்செல்லில் நாம் பயன்படுத்திடும் சூத்திரம் வேறு ஏதேனும் பிழையை வழங்கும் பட்சத்தில், அதுவும் இதே வழிமுறையில் செயல்படுத்தப்படும்
ISERROR, IF ஆகியன இணைந்த செயலியை பயன்படுத்தி #DIV/0 எனும் பிழையை அகற்றுதல்
IFERROR எனும் செயலியை பயன்படுத்துவது #DIV/0 எனும் பிழையைக் கையாளுவதற்கான மிகச்சிறந்த வழியாகும் இருந்தபோதிலும் நாம் எக்செல்லின் பழையை பதிப்பை பயன்படுத்தி கொண்டிருக்கும்போது (அல்லது எக்செல்லின் பழைய பதிப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவருடன் நம்முடைய எக்செல் கோப்பைப் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தால்,),இந்த IFERROR எனும் செயலியானது செயல்படாத நிலையில் எக்செல்லின் பழைய பதிப்புடன் இணக்கத்தன்மை தேவைப்பட்டால் IF + ISERROR என்றவாறான வழிமுறையைப் பயன்படுத்தலாம். இது IFERROR எனும் செயலியைப் போன்றே செயல்படுகிறது, ஆனால் இன்னும் கூடுதலாக சில தருமதிப்புகள் உள்ளன. நம்மிடம்முந்தைய எடுத்துகாட்டில் கூறியாவாறான தரவுத்தொகுப்பு ஒன்றுள்ளது அதனை பயன்படுத்திடும்போது உருவாகிடும் #DIV/0எனும் பிழையை அகற்ற விரும்புவதாக கொள்க. இதைச் செய்ய, நாம் பின்வருமாறான சூத்திரத்தைப் பயன்படுத்திகொள்ளலாம்:
=IF(ISERROR(A2/B2),”Not Available”,A2/B2)


மேலே உள்ள சூத்திரமானது முதலில் ISERROR எனும் செயலியை பயன்படுத்தி பிழையைக் கொடுக்கிறதா இல்லையா என்பதைச் சரிபார்க்கிறது, அவ்வாறு செய்திடும்போது இரண்டாவது தருமதிப்பினை விடையாகக் கொடுக்கிறது, இல்லையெனில் அது மூன்றாவது தருமதிப்பினை விடையாகக் கொடுக்கிறது.

DIV/0எனும் பிழைஉருவாகிடும் அனைத்து கலண்களையும் கண்டறிதல்! . ஒரு சக ஊழியரிடமிருந்து எக்செல் கோப்பைப் பெறும்போது அல்லது இணையத்திலிருந்து எக்செல் கோப்பினை பதிவிறக்கம் செய்யும் போது இது பயனுள்ளதாக இருக்கும், ஆனாலும் . இந்த வழிமுறை #DIV/0எனும் பிழைகளை அகற்றாது என்றாலும், இந்தப் பிழைகளைக் கண்டறிந்து முன்னிலைப்படுத்த இது பயனுள்ளதாக இருக்கும், எனவே இவற்றை எவ்வாறு கையாள்வது என்பதை (அதை நீக்குவது அல்லது தரவைச் சரிபார்த்து திருத்துவது போன்றவைகளை) தீர்மானிக்கலாம். பணித்தாள்/பணிப்புத்தகத்தில் உள்ள அனைத்து#DIV/0எனும் பிழைகளையும் கண்டறிந்து அகற்றுவதற்கான படிமுறைகள் பின்வருமாறு:

1முதலில். அனைத்து கலண்களிலும் #DIV/0எனும்பிழையை நீக்க விரும்பும் கோப்பைத் திரையில் தோன்றிடுமாறு செய்க

பின்னர்Ctrl எனும் விசையை அழுத்தி பிடித்துகொண்டு F எனும் விசையை அழுத்திடுக . உடன் Find and Replace எனும் உரையாடல் பெட்டியைத் திரையில் தோன்றிடும்.

அதன்பின்னர் அதில் Options எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. இது நமக்கு சில கூடுதல் வாய்ப்புகளை திரையில் காண்பிக்கும்.

தொடர்ந்து இந்த உரையாடல் பெட்டியின் ‘Find what:’ எனும் புலத்தில், #DIV/0 ஐ உள்ளிடுக!

பிறகு ‘Within’ எனும் கீழிறங்கு பட்டியில் Sheet அல்லது Workbookஎன்பதை தேர்ந்தெடுத்திடுக (முழு கோப்பிலும் இந்த பிழைகளுள்ள கலண்களைக் கண்டறிய விரும்பினால், Workbookஎன்பதைத் தேர்ந்தெடுத்திடுக)

பின்னர் ‘Look in’ என்பதன் கீழிறங்கு பட்டியிலிருந்து, ‘Values’ என்பதைத் தேர்ந்தெடுத்திடுக

அதன்பின்னர் Find All எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. இது #DIV/0 எனும் பிழை உள்ள அனைத்து கலண்களையும் கண்டறிந்து, Find and Replace எனும் உரையாடல் பெட்டியின் கீழே உள்ள மேற்கோள்களைக் காண்பிக்கும்.

பிறகு Ctrl எனும் விசையை அழுத்தி பிடித்துகொண்டு A எனும் விசையை அழுத்திடுக . இது #DIV/0 எனும் பிழை உள்ள அனைத்து கலண்களையும் தேர்ந்தெடுக்கும்.

இறுதியாக அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டதும், Del எனும் விசையை அழுத்துவதன் மூலம் இந்த எல்லா கலண்களிலிருந்தும் #DIV/0 எனும் பிழையை நீக்கலாம் அல்லது கலண்களுக்கு தேவையான பின்னணி நிறத்தைக் கொடுப்பதன் மூலம் இவற்றை முன்னிலைப்படுத்தலாம்.
இவை எக்செல்லில் உள்ள DIV பிழைகளை (வகுத்தில் பிழையை) நீக்க பயன்படுத்தக்கூடிய சில வழிகளாகும். இவ்வாறான பிழை நம்முடைய சொந்த சூத்திரங்களின் விளைவாக இருந்தால், IFERROR எனும் செயலியைப் பயன்படுத்தலாம், மேலும் மரபுரிமையாகப் பெற்ற அல்லது பதிவிறக்கிய பணிப்புத்தகத்தில் இவை இருந்தால், Find and Replace எனும் உரையாடல் பெட்டியின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றிடுக.
தொடரும்

Bitsy மூலம் மாணவர்களும் நிரலாக்கத்தைக் கற்றுக்கொள்ளமுடியும்

இது(Bitsy)ஜாவாஸ்கிரிப்ட்டில் எழுதப்பட்ட HTML5 இன் விளையாட்டுகளை உருவாக்குவதன் வாயிலாக மாணவர்களும் எளிதாக நிரலாக்கங்களை கற்றுகொள்ள உதவுகின்ற ஒரு சிறந்த பயன்பாடாகும். . இது மிகச்சிறியது, இதனை கற்றுக்கொள்வதற்கு மிகஎளிதானது, இதுதனித்துவமான இரும(bit) வரைபடக் கலையின் பாணியைக் கொண்டுள்ளது, இதில் வேண்டுமென்றே வசதிகள் குறைவாக வைக்கப்பட்டுள்ளது, மேலும் இதன் வாயிலாக என்னென்ன செய்ய முடியும் என்பது மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.
இதில் இவ்வாறான பல்வேறுவரம்புகள் இருந்தபோதிலும் (அல்லது ஒருவேளை அதே காரணமாகவோ), இது(Bitsy)வெளியிடப்பட்டதிலிருந்து துடிப்பான பயனாளர் சமூகத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் பயனாளர்கள் வரம்புகளைத் தழுவி, எவ்வளவு தூரம் முன்னேறிச்செல்ல முடியும் மேலும் வரம்புகளுக்கு எதிராக அதைத் தாண்டி செல்ல எவ்வாறு முயற்சிக்க முடியும் ஆகிய பயனாளர்களின் இரண்டு முக்கிய அணுகுமுறைகளே இதற்கு காரணமாகும்.
படைப்பு வரம்புகள்
இதன் (Bitsy) வரம்புகளை ஏற்றுக்கொள்வதும் , வரம்புகளுக்குள் திருப்திகரமான விளையாட்டை உருவாக்குவதும் அதனோடு கண்டுபிடிப்பின் படைப்பாற்றலைக் கோருகின்ற சவாலாகவும் மாற்றுகின்றது. அதற்காகattheItch.io எனும் இணையதளத்தில் உருவாக்கப்பட்ட இதனுடைய சில வித்தியாசமான விளையாட்டுகளை காணலாம் அவற்றில் விளையாடலாம். அதே நேரத்தில், இதன்வாயிலாக பொதுமக்கள் hacks,, மாற்றங்களையும் ,நீட்டிப்புகளையும் சேர்த்து இதில் கொண்டு வந்துள்ளனர். இவை இதனுடைய சாரத்தை தியாகம் செய்யாமல் சில வரம்புகளுக்கு எதிராக செயல்படுமாறு நம்மைதள்ளுகின்றன.
மிகமுக்கியமாக இதனுடைய விளையாட்டுகளில் நடிகரைக் குறிக்கின்ற avatar, விளையாட்டுகளின் செயல்நடக்கின்ற அறைகள், உருவங்கள் ( தொடர்பு கொள்ளக் கூடிய நடிகர் அல்லாத கதாபாத்திரங்கள்) , பொருட்கள் ஆகியன இதனுடைய அடிப்படைக் கூறுகளாகும். இந்த உறுப்புகளை உருவாக்குவதற்கு ஒரு இருமவரைபட பதிப்பாளர் இதில் உள்ளது, மேலும் இது எளிய இரண்டு-வரைச்சட்ட அசைவூட்டுதல்களையும் அனுமதிக்கிறது.
இதற்குள்(Bitsy) பணிபுரிவது முழு அளவிலான உரைநிரலிற்குப் பதிலாக நிபந்தனை மாறிகளை நம்பியுள்ளது, இது குறிமுறைவரிகளுடைய வழிமுறையின் பின்னணி இல்லாதவர்களுக்கும் நிலாக்கங்களை கற்றுக்கொள்வதை எளிதாக்குகிறது ஆயினும் சில சமயங்களில் இந்த பயன்பாட்டில் அதிக நெகிழ்வுத்தன்மையை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.


இதனுடைய அடிப்படைகூறுகளை பார்க்க விரும்பினால், அதை நேரடியாக இணையத்தில் இதனுடைய படைப்பாளரின் இணையதளத்தில் செய்யலாம் அல்லது பதிவிறக்கம் செய்து நம்முடைய வளாககணினியில் இயக்கி பார்வையிடலாம் இதனுடைய முழுமையான செயல்முறையை .https://www.shimmerwitch.space/bitsyTutorial.html எனும் இணையதள முகவரிக்கு சென்று அறிந்து பயன்படுத்தி கொள்க.இதை GitHub அல்லது https://ledoux.itch.io/bitsyஎனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

Previous Older Entries