புதியவர்களுக்கு ஆண்ட்ராய்டு பயிற்சிகையேடு பகுதி-30-எக்ஸ்எம்எல் கோப்பின் புறவடிவமைப்பை பயன்படுத்தி உரையாற்றுதல் (INSTANTIATE USING LAYOUT XML FILE)

நம்முடைய முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட பொருட்களில் உரையாற்றிட செய்வதற்கு எக்ஸ்எம்எல் கோப்பின் புறவடிவமைப்பை நாம் பயன்படுத்திகொள்வது வழக்கமாகும் அதே கருத்தமைவை நம்முடைய வாடிக்கையாளர் பொருட்களுக்கும் கீழே விவரித்துள்ளவாறு எக்ஸ்எம்எல்கோப்பின் புறவடிவமைப்ப பயன்படுத்தி நம்முடைய வாடிக்கையாளர் உறுப்புகளுக்கும் உரையாற்றிடசெய்வதற்கும் பயன்படுத்தி கொள்க இங்கு com.example.dateviewdemo என்பது ஒரு குறிமுறைவரிகளின் தொகுப்பாகும் இதில் DateView எனும் இனம் தொடர்பான அனைத்து குறிமுறைவரிகளுக்காகவும் வைத்திடுக மேலும் DateViewஎன்பது ஒரு ஜாவா இனத்தின் பெயராகும் இதில் நம்முடைய வாடிக்கையாளர் உறுப்புகளின்முழுவதுமானதருக்கத்தினை வைத்திடுக
நாம் தற்போது மாறுதல்கள் எதுவுமில்லாத வாடிக்கையாளரின் உறுப்புகளுடன் அனைத்து TextView எனும் பண்புக்கூறுகளை பயன்படுத்தி கொள்கின்றோம் என்ற செய்தியை மிகமுக்கியமாக மனதில் குறித்து கொள்க அதேபோன்று DateView எனும் வாடிக்கையாளரின் உறுப்புகளுடன் அனைத்து நிகழ்வுகளையும் வழிமுறைகளையும் பயன்படுத்தி கொள்ளமுடியும்
ஒரு ஆண்ட்ராய்டின்அடிப்படையான வாடிக்கையாளரின் உறுப்புகள் உரையாற்றுதலை எக்ஸ்எம்எல்கோப்பின் புறவடிவமைப்பை பயன்படுத்திஒரு ஆண்ட்ராய்டின் அடிப்படை வாடிக்கையாளரின் உறுப்புகளில்உரையாற்றுவது எவ்வாறு என புரிந்து கொள்வதற்கு பின்வரும் எடுத்து காட்டினை சரிபார்த்து கொள்க
ஒரு எக்ஸ்எம்எல்கோப்பின் புறவடிவமைப்பை பயன்படுத்திஒரு ஆண்ட்ராய்டின் வாடிக்கையாளரின்அடிப்படை உறுப்புகளுடன் உரையாற்றுவது
பின்வரும் எடுத்துகாட்டு ஒரு ஆண்ட்ராய்டின் எளிய வாடிக்கையாளர் உறுப்புகளை வரையறுக்கின்றது பின்னர்புறவடிவமைப்பு கோப்பினை பயன்படுத்திடாமல்குறிமுறை வரிகளின்செயல்களுக்குள் அது எவ்வாறு உரையாற்றிடமுடியும் என காண்பிக்கின்றது

பின்வருவதுsrc/com.example.dateviewdemo/DateView.java எனும் புதிய கோப்பின் உள்ளடக்கமாகும் இது நடப்பு நாளினை காண்பிப்பதற்கு கூடுதலான செயலியாகவும் விளங்குகின்றது
package com.example.dateviewdemo;
import java.text.SimpleDateFormat;
import java.util.Calendar;
import android.content.Context;
import android.util.AttributeSet;
import android.widget.TextView;
public class DateView extends TextView {
public DateView(Context context) {
super(context);
setDate();
}
public DateView(Context context, AttributeSet attrs) {
super(context, attrs);
setDate();
}
public DateView(Context context, AttributeSet attrs, int defStyle) {
super(context, attrs, defStyle);
setDate();
}
private void setDate() {
SimpleDateFormat dateFormat = new SimpleDateFormat(“yyyy/MM/dd”);
String today = dateFormat.format(Calendar.getInstance().getTime());
setText(today); // self = DateView is a subclass of TextView
}
}
பின்வருவது src/com.example.dateviewdemo/MainActivity.java எனும் கோப்பின் உள்ளடக்கங்களில் மாறுதல்கள் செய்யப்பட்ட முதன்மையான செயலியாகும் இந்த கோப்பில் அடிப்படையான வாழ்க்கை சுழற்சி முறைகளை உள்ளிணைந்ததாக ஆக்கமுடியும்
package com.example.dateviewdemo;
import android.os.Bundle;
import android.app.Activity;
import android.view.Menu;
public class MainActivity extends Activity {
@Override
protected void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main);
}
@Override
public boolean onCreateOptionsMenu(Menu menu) {
// Inflate the menu; this adds items to the
// action bar if it is present. getMenuInflater().inflate(R.menu.main, menu);
return true;
}
}
பின்வருவது res/layout/activity_main.xml எனும் கோப்பின் உள்ளடக்கமாகும்

பின்வருவது புதிய இரு மாறிலிகளை வறையறுப்பதற்கான res/values/strings.xml எனும் கோப்பின் உள்ளடக்கமாகும்

DateViewDemo
Settings
Hello world!

பின்வருவது AndroidManifest.xml: என்பதன் இயல்புநிலை உள்ளடக்கமாகும்

சற்றுமுன் நம்மால் மாறுதல்கள் செய்யப்பட்ட “DateViewDemo “எனும் பயன்பாட்டினை இயக்க முயற்சி செய்வோம்! சூழல் அமைவை செயற்படுத்திடும் போதே நாம் நம்முடைய AVDஐ உருவாக்கிவிட்டதாக கருதி(எடுத்து)கொள்க எக்லிப்ஸிலிருந்து இந்த பயன்பாட்டினை இயக்குவதற்கு நம்முடைய செயல்திட்டங்களின் கோப்புகளில் ஒன்றாக திறந்து கொள்க தொடர்ந்து கருவிப் பட்டையிலிருந்து Run எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் எக்லிப்ஸானது இந்த பயன்பாட்டினை நம்முடைய AVD இல்நிறுவுகை செய்யத்துவங்கிடும் அதனைதொடர்ந்து நம்முடைய பயன்பாட்டிலும் கட்டமைவிலும் உள்ள அனைத்தும் மிகச்சரியாக இருக்கின்றது எனில் அது பின்வரும் முன்மாதிரி சாளரத்தினை திரையில் காண்பிக்கும்

தமிழ் மொழியிலேயே மின்னஞ்சல் முகவரிகளை கையாளமுடியும்

தற்போது நாமெல்லோரும் ஆங்கிலமொழி யில் மட்டுமே நம்முடைய மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்தி வருகின்றோம் அதற்கு பதிலாக தமிழ் மொழியிலும் நம்முடைய மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கி பயன்படுத்திகொள்ளும் வசதியை மைக்ரோசாப்ட்நிறுவனம் அனுமதி அளிக்கின்றது இந்த புதிய வசதியை மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் ஆஃபிஸ்365, அவுட்லுக்2016 போன்ற பயன்பாடுகளும் ஆதரிக்கின்றன ஆண்ட்ராய்டு ,ஐஓஎஸ்ஆகியவற்றில் செயல்படும் அவுட்லுக் பயன்பாடுகளிலும் இந்த வசதி செயல்படுமாறு செய்யப்பட்டுள்ளது தமிழ் மொழியில்பயன்படுத்திடும் மின்னஞ்சல் முகவரிகளை உலகமயமாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிஅமைவும் (Email Address Internationalisation (EAI))ஆதரிக்குமாறு செய்யப்பட்டுள்ளது இவ்வாறான தமிழ் மொழியில் உருவாக்கப்படும் மின்னஞ்சல் முகவரிகளானது உலகளாவிய செந்தர குறிமுறை-வரிகளான ஒருங்கு குறியீடுகளில் (Unicode) அமைந்திருக்கவேண்டும் என்பதேஅடிப்படை நிபந்தனையாகும் மைக்ரோசாப்ட் நிறுவனமானது வருங்காலத்தில் தாங்ள் உருவாக்கப்போகும் அனைத்து மென்பொருட்களையும் இந்த தமிழ் மொழியின் மின்னஞ்சல் முகவரிகளை ஆதரிக்கூடியதாகவே மேம்படுத்தப்பட்டு வெளியிட படவுள்ளன என்ற செய்தியையும் மனதில் கொள்க
வாருங்கள் இனி நம்முடைய மின்னஞ்சல் முகவரிகளை தமிழிலேயேஉருவாக்கி பகிர்ந்து கொண்டு பயன்படுத்தி கொள்ளலாம்

smartphoneஎனும் திறன்பேசிகளில் ஏற்படும் பிரச்சினைகளை TestMஎனும் பயன்பாட்டினை கொண்டு ஆய்வுசெய்து சரிசெய்து கொள்க

நம்முடைய இருசக்கர வாகணம் அல்லது நான்கு சக்கர வாகணம் போன்றே நாம் நம்முடைய வாழ்க்கையின அத்தியாவசிய பொருளாக பயன்படுத்திவரும் நம்முடைய திறன்பேசியும் அவ்வப்போது இயக்கம் நின்று போதல் அல்லது மெதுவாக இயங்குதல் என்பன போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு நமக்கு அளவற்ற எரிச்சலையும் வெறுப்பையும் உருவாக்கிடும் அவ்வாறான நிலையில்இந்த TestMஎனும் பயன்பாட்டினை கொண்டு திறன்பேசியின் உள்ளுறுப்புகளை தனித்தனியாக கழற்றிஎந்தபகுதியினால் பிரச்சினை ஏற்படுகின்றது என பார்த்திடாமல் அல்லது சிறப்பு கருவிகளை கொண்டு ஆய்வுசெய்திடாமல் திறன்பேசிமுழுவதுமாக ஆய்வுசெய்து என்ன பிரச்சினை எங்குஉருவானது என கண்டுபிடித்து சரிசெய்து கொள்ளமுடியும்

இந்த பயன்பாடு ஆண்ட்ராய்டு ,ஐஓஎஸ் இயக்கமுறைமை பயன்படும் 6500 வகைகளின் திறன்பேசிகளிலும் செயல்படும் திறன்மிக்கது இந்த பயன்பாட்டினை நம்முடைய திறன்பேசியில் பதிவிறக்கம்செய்து நிறுவுகை செய்து செயல்படுத்திடும்போது quick test ,full test ஆகிய இரண்டு வாய்ப்புகளில் முதல் வாய்ப்பினை தெரிவுசெய்தால் திறன்பேசியில்உள்ள கேமரா ,ஸ்பீக்கர் போன்ற முக்கிய உறுப்புகளைமட்டும் விரைவாக பரிசோதித்து பார்த்து அவைகளின் நிலையை காண்பிக்கும் இரண்டாவது வாய்ப்பானது அவைமட்டுமல்லாது திறன்பேசியில் உள்ள அனைத்து வசதி வாய்ப்புகளையும் முழுவதுமாக அலசி ஆராய்ந்து எந்தப்பகுதியில் பிரச்சினை உள்ளது என கூறும் நம்முடைய கையிலிருந்து தவறி கீழே விழுந்த நம்முடைய திறன்பேசி யின் உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட பாதிப்பை அந்த திறன் பேசியை கழற்றி பார்க்காமலேயே அல்லது சிறப்பு கருவிகளை கொண்டு ஆய்வுசெய்திடாமலேயே இந்த TestMஎனும் பயன்பாட்டினை கொண்டு திறன்பேசி முழுவதுமாக ஆய்வுசெய்து என்ன பிரச்சினை எங்குஉருவானது என இதனுடையஆய்வின் முடிவில் உருவாகும் ஆய்வறிக்கையின் வாயிலாக கண்டுபிடித்திடமுடியும் மேலும இந்த ஆய்வறிக்கையை இந்த பயன்பாடானது நாம் விரும்பும் மொழிகளில்வழங்கும் திறன்மிக்கது இந்த TestMஎனும் பயன்பாட்டினுடைய ஆய்வறிக்கையின் வாயிலாக நம்முடைய திறன்பேசியின் எந்தபகுதியில் என்ன பிரச்சினை ஏற்பட்டுள்ளது எனஅறிந்து கொண்டு அந்த பகுதியைமட்டும் பிரித்து சரிசெய்து கொள்ள இந்த பயன்பாடு பேருதவியாக விளங்குகின்றது

தற்போதைய 2018 ஆம் ஆண்டின் வளர்ச்சி போக்கு

வருகின்ற ஆண்டுகளில் கைபேசியின் தாக்கம்அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்க போகின்றது .அதன் முதல்கட்டமாக தற்போது நாம் பயன்படுத்தி வரும் 2ஜி 3ஜி தொழில்நுட்பங்களுக்கு பதிலாக 5ஜி தொழில்நுட்பத்திற்கு மாறவிருக்கின்றது அதற்குஏதுவாக ஒத்தியங்குவதற்காக ரிலையன்ஸ் நிறுவனமானதுஜியோ என்பதை அறிமுக படுத்தியுள்ளது அடுத்ததாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினை அறிமுக படுத்தவும்தயாராக உள்ளது அதேபோன்று நோக்கியா, ஏர்டெல் போன்ற நிறுவனங்களும் இந்த 5ஜி தொழில்நுட்பத்தில் தங்களை தகவமைத்து கொள்ள தயாராகி வருகின்றன நாம் பயன்படுத்திவரும் கைபேசிகளில் Xiaomi, Samsung, Vivo, Lenovo , Oppo ஆகியவை சேர்ந்துமொத்தத்தில் 43.8 சதவிகித சந்தையை பிடித்துள்ளன அதிலும் Samsung என்பது மட்டும் 24.2 சதவிகிதம் சந்தையை பிடித்துள்ளது Reliance Jioஎன்பதும் சந்தையில் தன்னுடைய இருப்பை தக்கவைத்து கொள்ள முயன்று வருகின்றது
அடுத்த வளர்ச்சி போக்காக IoTஎனும் பொருட்களுக்கான இணையம் என்பது முன்னனியில் உள்ளது இதில் டெலிகாம்நிறுவனங்கள் இந்த IoTஎனும் பொருட்களுக்கான இணையத்தில் மிகப்பெரிய அளவாக 139 மில்லியன் டாலர் எனும் அளவிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன அதற்கடுத்ததாக எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களும் மூன்றாவதாக ஆயில்நிறுவனங்களும் அதன்பயன்பாட்டு நிறுவனங்களும் இந்த IoTஎனும் பொருட்களுக்கான இணையத்தில் தங்களுடைய இருப்பை நிலைநிறுத்திடபோராடிவருகின்றன இந்தியாவில் வருகின்ற 2020 இல் ஏறத்தாழ 15 பில்லியன் டாலர் அளவிற்கு இந்த IoTஎனும் பொருட்களுக்கான இணையசந்தை வளரவிருக்கின்றது அவற்றுள் வீட்டு சாதனங்களும் நம்முடைய உடலில் அணிகின்ற சாதனங்களும் இந்த IoTஎனும் பொருட்களுக்கான இணையத்தில் 40 முதல் 45 சதவிகிதம் வரை பங்கு வகிக்கப்போகின்றன

கடவுச்சொற்களுக்கான 1Password எனும் பயன்பாடு

நல்ல கடவுச்சொற்களை கட்டமைப்பது என்பதுதான் நம்மெல்லோருக்கும் மிகச்-சிரமமானதும் மிகச்சிக்கலானதுமான பணியாகும் ஏனெனில் நாம் உருவாக்கிடும் கடவுச்சொற்கள் எளிதில் நினைவுக் கூறதக்கதாகவும் இருக்கவேண்டும் குறிப்பிட்ட குறியீடுகளெல்லாம் கலந்ததாக இருக்கவேண்டும் நம்மைத்தவிர மற்ற யாராலும் எளிதாக யூகித்து அபகரிக்க முடியாததாகவும் இருக்கவேண்டும் என்பன போன்ற கட்டுபாடுகளுடன் உருவாக்கிடவேண்டியுள்ளது தற்போது ஏறத்தாழ 500 மில்லியன் கடவுச்சொற்கள் நம்மனைவராலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன அவைகளுடன் ஒப்பிடபட்டு எளிதில்உடைத்தெறிய முடியாதவாறான கடவுச்சொற்களாக நாம் நம்முடைய கடவுச்சொற்களை கட்டமைக்க வேண்டியுள்ளதால் இவ்வாறான கடவுச்சொற்களை கையாளுவதற்கென்றே ஏராளமான பயன்பாடுகள் தற்போகு புழக்கத்தில் உள்ளன அவைகளுள் 1Password எனும் பயன்-பாடானது நாம் உருவாக்கவிருக்கும் கடவுச்சொற்களை பட்டியலாக உள்ள Pwned Password உடன் ஒப்பிட்டு சரிபார்த்து எந்த கடவுச்சொற்கள் பாதுகாப்பாக இருக்கும்என பரிந்துரைக்கின்றது இந்த 1Password எனும் பயன்பாட்டில் நமக்கென தனியாக கணக்கு ஒன்றினை துவக்கி அதில் ஒரு கடவுச்சொற்களை தெரிவுசெய்து கொண்டு Shift+Ctrl+Alt+C ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக அதனை தொடர்ந்து Check Password எனும் பொத்தானை அழுத்துக அதன்பின்னர் நாம் கட்டமைத்த குறிப்பிட்ட கடவுச்சொற்கள் பாதுகாப்பானது-தான் என திரையில் அறிவித்தால் அதனை தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்க

குவைத(குவாண்டம்) கணினி என்றால் என்ன?

முதலில் நாம் கணினியின் அடிப்படைகருத்தமைவை புரிந்து கொண்டபின் இந்த குவைத கணினியின் அடிப்படையை பற்றி அறிந்து கொள்வோம்.இயல்புநிலையில் கணினிக்கு அடிப்படையாக இருப்பது மின்னோட்டம்இல்லாதிருப்பது 0 அல்லது மின்னோட்டம் இருப்பது 1ஆகிய இரண்டில் ஒருநிலையில் மட்டுமே இருக்கும் அதாவது ட்ரான்ஸிஸ்டரில் இவ்விரண்டில் ஒன்றினை கொண்டு உருவாக்கப்டட பிட்ஸ் எனும் இரும எண்களாகும் இந்த பிட்களின் பல்வேறு வகைகளின் கலவையாக சேர்ந்து சிக்கலான தகவலை குறிக்க பயன்படுகின்றது பல ட்ரான்ஸிஸ்டர்கள் ஒருங்கிணக்கப்பட்ட லாஜிக் கேட் எனப்படும் தருக்கவாயில்கள் உருவாக்கப்படுகின்றன அவை கூட்டல் அல்லது பெருக்கல் போன்ற அடிப்படை கணித செயல்பாடுகளைச் செயல்படுத்தக்கூடிய அர்த்தமுள்ள தொகுதிகளாக உருவாகின்றன இவ்வாறான பலதொகுதிகளும் புத்திசாலித்தனமான நிரலாக்கங்களும் ஒன்றாக இணைக்கப்-படும்போது தற்போதைய கணினியின் செயல்பாடுகள் கிடைக்கின்றன ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட மின்னோட்டம்இல்லாதிருப்பது 0 அல்லது மின்னோட்டம் இருப்பது 1ஆகிய இரண்டில் ஒருநிலையில் மட்டும் இருக்கும் இந்த பிட்ஸ் என்பதே அனைத்து கணினிகளுக்கும் அடிப்படையாகும்
இந்த பிட்ஸ் என்பதற்கு பதிலாக குவாண்டம் பிட்ஸ் அல்லது க்யூபிட்ஸ் என்பதே குவாண்டம் கணினிக்கு அடிப்படையாகும் அதாவது இந்த மின்னோட்டம்இல்லாதிருப்பது 0 அல்லது மின்னோட்டம் இருப்பது 1ஆகிய இரண்டு மதிப்பும் ஒரே நேரத்தில் சேர்ந்து இருப்பதே இந்த க்யூபிட்ஸ்களாகும் இதனடிப்படையில் இந்த Q- பிட்ஸ்கள் அல்லது qubits ஆனதுஒரே நேரத்தில் 16சாத்தியமான கட்டமைப்புகள் அனைத்தையும் கொண்டிருக்க முடியும். மேலும்வளர்ச்சியடைந்து பலமில்லியன் மதிப்புகளை இணையாக தேக்கிவைத்திடும் திறனை இவை பெறுகின்றன மேலும் தற்போதைய கணினியானது ஒவ்வொன்றாக செய்து முடித்திடும் பல்வேறு பணிகளனைத்தையும் ஒரேநேரத்தில் முடித்திடும் திறன்மிக்கதாக இந்த குவாண்டம் கணினி உயர்ந்து நிற்கின்றது அதாவது இந்த குவாண்டம் கணினியை தற்போது நாம் பயன்படுத்திவரும் கணினியுடன் ஒப்பிடுவது மிகவும் கடினமான செயலாகும், ஆயினும் நம்மால் பிரபஞ்சத்தில் அறியப்பட்ட அனைத்து அணுக்களின் எண்ணிக்கையை காட்டிலும் அதிக கணிப்பீடுகளை ஒருசிலநூறு குவாண்டம் பிட்ஸ்களால் செய்ய முடியும் என்பதே இதன் செயல்திறனின் மிகச்சிறிய அறிமுகமாகும் மிகமுக்கியமாக மருத்துவம் இயற்கை விஞ்ஞானம், தரவுத்தள பகுப்பாய்வு, போன்றவற்றின் ஆராய்ச்சிக்கான அடிப்படையாக இந்த குவாண்டம் கணினி பேுருதவியாக இருக்கும் பொதுவாக இ்நத குவாண்டம் கணினிகளானவை வழக்கமான எந்தவொரு சூப்பர் கணினியை காட்டிலும் அதிகபட்சமாக கணக்கிடுவதை உறுதிப்படுத்துகின்றன. அவை அணுக்கரு மட்டத்திற்குப் பொருளின் செயல்பாட்டைச் சித்தரிக்க உதவுவதன் மூலம். அல்லது வேறுவிதமான வெல்ல முடியாத குறியீடுகளை முறியடிப்பதன் மூலம் குறியாக்கத்தையும் பாதுகாப்பையும் அதிகரிக்க முடியும். இவை தரவுகளின் மூலம் செயல்திறனை மேம்படுத்துவதன்வாயிலாக செயற்கை நுண்ணறிவைகூட மேம்படுத்திட முடியும் என நம்பபடுகின்றது

தொழிலகபொருட்களுக்கான இணையத்தின் IIoT பயன்பாடு

தொழிலக பொருட்களுக்கான இணையம் (Industrial Internet of Things) என்பதை சுருக்கமாக IIoT என அழைப்பர் இந்த IIoT ஆனது தொழிலகங்களில் செயல்படுகின்ற பல்வேறு இயந்திரங்களையும் சாதனங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த உதவுகின்றது அதாவது பொருட்களின் போக்குவரத்து, மின்னாக்கம், தொழிற்துறை ஆகிய பல்வேறு துறைகளில் இயந்திரங்களையும் வாகனங்களுக்கான உபகரணங்களுக்கான இணைக்கப்பட்ட உணரிகளையும் பிற சாதனங்களையும் தானியங்கியாக செயல்படுவதை இந்த IIoT ஆனது உறுதி படுத்திடுகின்றத ஏற்கனவே நடைமுறையில் உள்ள பொருட்களுக்கான இணையம் (IoT) என்பதற்கும் இந்த IIoT என்பதற்கும் என்ன வேறுபாடு எனஅனைவரின் மனதில் கேள்வி எழும் நிற்க
இணையத்தோடு இணைக்கப்பட்ட பிரிட்ஜ்,ஒளிரும் விளக்குகள் போன்றவை IoT இன் அடிப்படையில்செயல்படுபவைகளாகும்
தொழிலகங்களின் உற்பத்தியை தானியங்கியாக செயல்படுவதற்கு இணையத்துடன் இணைக்கபடுவது இந்த IIoT ஆகும்
தொழிலகங்களின் சரக்கிருப்பகத்தை கட்டுப்படுத்துதல், பொருட்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்துதல், தொழிலகங்களில் செயல்படும் இயந்திரங்கள் பழுதடைந்து நின்று உற்பத்தி பாதிக்காமல் முன்கூட்டியேஅவைகளின் பராமரிப்பை உறுதிபடுத்துதல் , ஆற்றல் நுகர்வை போதுமான அளவிற்கு மட்டும் இருக்குமாறு கட்டுபடுத்துதல், சேமிப்பகங்களில் நாம் சேமித்து வைத்துள்ள பொருட்களின் தரத்தினை பாதுகாத்தல் , தொழிலகங்களில் பணிபுரியும் பணியாளர்களின் பாதுகாப்பினையும் உடல்நிலையும் பாதுகாத்தல் ,நாம் வாழும் இடத்தின் தட்ப வெப்பநிலை ,காற்றழுத்தம்,ஒசோன் போன்றவைகள கட்டுப்படுத்தல் போன்ற பதினைந்திற்கும் அதிகமான பணிகளைஇந்த IIoT இன் வாயிலாக கையாளமுடியும் என தொழிலக IoT ஒருங்கிணைப்பு குழு பட்டியல்படுத்தியுள்ளது

Previous Older Entries