லிபர் ஆஃபிஸ் 4. ரைட்டர்-தொடர்-16

 லிபர் ஆஃபிஸ் ரைட்டரின் விளிம்புகோடுகளை பக்கவரைகோல்(page ruler) (மிகவிரைவாக சுலபமாக அமைக்கமுடியும் ஆனால் தெளிவற்றது) , பக்கபாணி(Page Style) ( இரண்டு தசம புள்ளி வரை விளிம்புகோடுகளை அமைக்கமுடியும் )உரையாடல் பெட்டி ஆகிய,இரு வழிகளில் மாற்றியமைக்கமுடியும்

குறிப்பு பக்கவரைகோல்(page ruler)வழிமுறையில் பக்கவிளிம்பு கோட்டினை மாற்றியமைத்திட்டால் மாற்றியமைக்கபட்ட புதிய விளிம்பு கோடானது பக்கபாணியை பாதிக்கும் அதனால் அடுத்தமுறை விளிம்புகோட்டினை மாறுதல் செய்வதற்காக இந்த கோப்பினை திறந்தால் தானாகவே இரண்டாவது வழிமுறையான   பக்கபாணி(Page Style) எனும் உரையாடல்பெட்டியானது நாம் இந்த வழிமுறையை தெரிவுசெய்யவில்லை என்றாலும் மாறுதல்கள் செய்வதற்கேதுவாக இது தோன்றிவிடும்

பக்கவரைகோலை(page ruler) பயன்படுத்தி விளிம்புகோட்டினை மாற்றியமைத்தல்

வரைகோலில் நிழல் பகுதியே விளிம்புகோடாகும் அதனால் இடம்சுட்டியை சாம்பல் நிறபகுதிக்கும் வெள்ளைநிற பகுதிக்கும் இடையில் வைத்திடுக உடன் இடம்சுட்டியின் தோற்றமானது இருபுற அம்புக்குறிபோன்று படம்-16-1 மாறியமையும்

அதனை பிடித்துகொண்டு இடதுபுற சுட்டியின் பொத்தானை பிடித்து அப்படியே தேவையான அளவுவரை இழுத்துசென்று பிடித்திருப்பதை விட்டிடுக.

16.1
படம் 16-1

ஆலோசனை வரைகோலின் சிறிய அம்புக்குறிகளையே பத்திகளில் உள்தள்ளலுக்கு பயன்படுத்தி கொள்ளபடுகின்றது மேலும் விளிம்புகோடுகளிலேயே இவைகளும் உள்ளன. அதனால் விளிம்புகோட்டின் குறியை மட்டுமே நகர்த்தவேண்டும் அம்புக்குறியை அன்று இடம்சுட்டியை அம்புக்குறிகளுக்கிடையே வைத்திட்டால் உடன் இருதலை அம்புக்குறியாக மாறியமையும் அதனை பிடித்து இழுத்து சென்று மாற்றியமைக்கலாம் கூடவே பத்திஉள்தள்ளலும் நகர்ந்து மாறியமையும்

பக்கபாணி(Page Style) உரையாடல் பெட்டி (படம்-15-9 கடந்த தொடரில் இந்த படம்உள்ளது)வழிமுறையை பின்பற்றி விளிம்புகோட்டினை மாற்றியமைத்தல்

லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் இடம்சுட்டியானது எங்கிருந்தாலும் சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் page எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் பக்கபாணி(Page Style) எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் page எனும் தாவியின் பக்கத்தை தோன்றசெய்க அதில் உள்ள விளிம்புகோடுகளின் உரைபெட்டியில் (Margins boxes)தேவையான அளவை தட்டச்சு செய்திடுக

லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் ஒரு பக்கத்தின் நெடுவரிசைகளை வரையறுத்தல்

நம்முடைய ஆவணத்தின் பயன்படுத்தி கொள்வதற்காக பொதுவான பெரும்பாலான இடஅமைவுடன் இயல்புநிலையில் இருக்கும். இதில் நம்முடைய அடிப்படை பக்கபாணியையும்   அதாவது இரட்டைநெடுவரிசையாக அல்லது ஒற்றை நெடுவரிசையாக வரையறுத்து கொள்வது நல்லது. அதனை தொடர்ந்து மிகுதி அதே பக்கத்தில் அல்லது வேறு பக்கங்களில் ஒற்றை நெடுவரிசை அல்லது ஒன்றுக்குமேலான பல்வேறு நெடுவரிசைகளாக கூடுதலான பக்கபாணி அல்லது பகுதி எனும் வாய்ப்பை தெரிவுசெய்து நம்மால் வரையறுத்திடமுடியும்

  16.2
படம் 16-2

ஒருபக்கத்தில் எத்தனை நெடுவரிசையென வரையறுத்தல்

லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள Format =>Columns =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் Columns எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அல்லது திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள Format => page=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் Page Style எனும் உரையாடல் பெட்டியானது page எனும் தாவியின் பக்கத்துடன் திரையில் தோன்றிடும் இதிலுள்ள   Settings என்பதன் கீழ் எத்தனை நெடுவரிசை என்பதையும் நெடுவரிசைக்கிடையேயான இடைவெளி எவ்வளவு என்பதையும் நெடுவரிசை பிரிப்பு கோடு இடையில் தோன்றவேண்டுமா என்பதையும் குறிப்பிடுக இதற்காக முன்கூட்டியே நம்மால் வரையறுக்கபட்ட நெடுவரிசை இடஅமைவை பயன்படுத்தி கொள்ளமுடியும் அல்லது நாம்விரும்பியவாறு நெடுவரிசை இடஅமைவை மாற்றியமைத்து கொள்ளமுடியும்   இந்த Settings எனும்பகுதியின் முன்காட்சி பகுதியில் நாம் மாற்றியமைத்த நெடுவரிசை தோற்றம் எவ்வாறு இருக்கும் என காணலாம் இதே உரையாடல் பெட்டியின் வலதுபுற பகுதியில்     Apply to எனும்பெட்டியில்   Default page style என்றவாறு தெரிவுசெய்துகொண்டு   OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நாம் செய்தமாறுதல்களை சேமித்துகொள்க

இதே உரையாடல் பெட்டியின் Columns எனும் பெட்டியில் தேவையான நெடுவரிசைகளின் எண்ணிக்கையை குறிப்பிடுகஅல்லது column layout உருவபொத்தானில் எத்தனை தேவையோ அவைகளை தெரிவு செய்து கொள்க.

Width and spacing எனும் பகுதியில் AutoWidth எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து இயல்பநிலையில் நெடுவரிசைகள் சமஅளவு இருக்குமாறு செய்து கொள்க அல்லது வாடிக்கையாளர் விரும்பியவாறு அமைத்திட Width and spacing எனும் பகுதியில் AutoWidth எனும் வாய்ப்பினை தெரிவுசெய்ததை விட்டிடுக பிறகு நெடுவரிசை அகலதேர்வுசெய் பெட்டிகளில்   (Width selection boxes) தேவையான அளவை ஒவ்வொரு நெடுவரிசைக்கும் தெரிவுசெய்து கொள்க. மூன்றிற்கு மேற்பட்ட நெடுவரிசைகள் எனில் அந்தந்த நெடுவரிசைகளுக்கான பெட்டிகளின் அம்புக்குறிகளை நகர்த்தி தேர்வுசெய்து கொள்க

நெடுவரிசைகளுக்கிடையே தனியானதொரு கோட்டினை உருவாக்கு வதற்காக separator line எனும் பகுதியில் Style என்பதன் கீழிறங்கு பெட்டியை பயன்படுத்தி தயாராக இருக்கும் மூன்றுவகை பாணிகளில் எந்தவகை பாணிஎன்பதையும் Width என்பதில் 0.25pt முதல் 9.0pt.வரை உள்ளவைகளில் தேவையான அளவையும்   அவ்வாறே Height என்பதில் 25% முதல் 100% வரை என்பதில் 100% என்பதையும் அதற்கு குறைவாக அமைத்தால் இதனோடு   Position என்பதில்   Top,Centered, or Bottom. ஆகிய மூன்று வாய்ப்பு களில் ஒன்றினையும் இந்த பிரிப்பு கோட்டின் வண்ணத்தை Color என்பதிலிருந்தும் தெரிவுசெய்து அமைத்து கொள்க. Page Up or Page Down என்பதை தெரிவுசெய்து இதனை விரைவாக அமைத்து கொள்க.   ஒன்றிற்கு மேற்பட்ட நெடுவரிசைகளை ஒற்றை நெடுவரிசை இடஅமைவு பக்கபாணியாக மாற்றியமைத்திட   இதே உரையாடல் பெட்டியின் Columns எனும் பெட்டியில் தேவையான நெடுவரிசை எண்ணிக்கையை 1 என குறிப்பிடுகஅல்லது column layout உருவபொத்தானில் ஒன்றை மட்டும் தெரிவு செய்து கொள்க.

இதுவரை பார்த்துவந்தது புதிய பக்கத்திற்கு நெடுவரிசைகளை அமைத்தல் செயலாகும் ஏற்கனவே உரையுடன் உள்ள பக்கத்தில் எவ்வாறு நாம்விரும்பியவாறு நெடுவரிசைகளை மாற்றியமைப்பது என இப்போது காண்போம் ஏற்கனவே உரையுள்ள ஒருபக்கத்தில் ஒற்றையான நெடுவரிசையையும் வேறொரு பக்கத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட நெடுவரிசைகளை அமைத்திட தேவையான பகுதியில் இருக்கும் உரையை தேர்வுசெய்துகொண்டு அதன்பிறகு லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள Format =>Columns =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் Columns எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அல்லது திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள Format => page=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் Page Style எனும் உரையாடல் பெட்டியானது page எனும் தாவியின் பக்கத்துடன் திரையில் தோன்றிடும் அதில் வழக்கம்போன்று எத்தனை நெடுவரிசைஎன்பதையும் இதர வாய்ப்புகளையும் தெரிவுசெய்துகொள்க Apply to எனும் பெட்டியில் Selection என்பது மேம்படுத்தி காண்பிக்கும் அதனோடு Evenly distribute contents to all columns என்ற வாய்ப்பு தேர்வு செய்யபட்டிருக்கும்

ஆலோசனைகுறிப்பு இரட்டை நெடுவரிசை உரையை தெரிவுசெய்து ஒற்றை நெடுவரிசையாக மாற்றியமைத்திடமுடியாது அதனால் முதலில் ஒற்றை நெடுவரிசையை வரையறுத்தபின் இரட்டை நெடுவரிசை உரையை தெரிவுசெய்து கொள்க

16.3
படம் 16-3

ஒற்றை நெடுவரிசை உரையுள்ள பக்கத்தை ஒன்றிற்குமேற்பட்ட நெடுவரிசைகளாக பிரிக்கும்போது அதிலுள்ள உரையோட்டத்தினை Evenly, Newspaper-style ஆகிய இருவழிகளில் அமைத்திடமுடியும்   Evenly எனும் வழியில் நெடுவரிசையின் அகலம் எவ்வளவு உயரம் எவ்வளவு என அவைகளை அமைத்து அதற்கேற்றவாறு உரைகளை சேர்த்தல் அல்லது நீக்கம் செய்தல் ஆகியசெயல்களின் வாயிலாக சரிசெய்து அமைத்து கொள்ளலாம் இரண்டாவது வழியான   Newspaper-style என்பதில் உரையோட்டமானது முதல் நெடுவரிசையில் மேலிருந்தும் கீழும் பிறகு அடுத்த நெடுவரிசையில் மேலிருந்து கீழும் பாம்பு போன்று மேலும் கீழும் வளைந்து நெளிந்து வளைந்து அமைந்திருக்கும் முதல் வகைக்கு இயல்புநிலையில் Evenly distribute contents to all columns என்பது தெரிவுசெய்யபட்டிருப்பதை அப்படியே ஏற்றுகொள்க இரண்டாவது வகையில் இந்த வாய்ப்பினை தெரிவுசெய்தை கைவிட்டிடுக

லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள View=> Nonprinting Characters => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக அல்லது விசைப்பலகையிலுள்ள Ctrl+F10 ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் உரையோட்டமானது பத்தியின் முடிவில் உரையில்லாத காலியான பகுதியில் (¶) எனும் அச்சிடப்படாத குறியுடன் காட்சியளிக்கும்

16.4

யூஎஸ்பி போன்ற வாயில் வழியாக ஒன்றிற்கு மேற்பட்ட இயக்கமுறைமைகளை செயல்படுத்திடமுடியும்

1.1

பொதுவாக பணிமேடை கணினியிலேயே நாம் பல்வேறு இயக்கமுறைகளை நிறுவுகை செய்து செயல்படுத்திடுவோம் இவ்வாறான பணிமேடை கணினி பழுதாகிவிட்டால் நெகிழ்வட்டு அல்லது குறுவட்டில் பதியபட்டுள்ள இயக்கமுறைவாயிலாக அதனை சரிசெய்திடுவோம். இதற்காக ஒவ்வொரு இயக்கமுறைமைக்கும் ஒவ்வொரு குறுவட்டு அல்லது நெகிழ்வட்டு என தனித்தனியாக பராமரித்திடவேண்டியுள்ளது அதற்குபதிலாக யூஎஸ்பி போன்ற வாயில் வழியாக ஒன்றிற்கு மேற்பட்ட இயக்கமுறைமைகளை செயல்படுத்திடமுடியுமாஎன தவிப்பவர்கள் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி இந்த பணியை எளிதாக செயல்படுத்திடமுடியும் என்பதை நினைவில் கொள்க. நடைமுறையில் இணைய இணைப்பை வழங்குநர் பல்வேறு வழிகளில்   யூஎஸ்பி வாயிலை தொடக்கயூஎஸ்பி வாயிலாக உருமாற்றம் செய்கின்றனர். ஆயினும் தற்போது நேரடியாக ஒரேயொரு இயக்கமுறைமைக்கான   தொடக்கயூஎஸ்பி வாயில் மட்டும் புழக்கத்தில் உள்ளது இதில் வேறொரு இயக்கமுறைமையை கொண்டுவர வேண்டுமெனில் இந்த யூஎஸ்பி வாயிலை அழித்து புதியதாகவடிவமைப்பு செய்தால்மட்டுமே நாம் விரும்பும் வேறொரு இயக்கமுறைமையை தொடக்கயூஎஸ்பி வாயிலாக மாற்றியமைத்திடமுடியும் என்றநிலை தற்போது உள்ளது அதனால் ஒவ்வொரு முறை யூஎஸ்பிவாயிலை வெவ்வேறு இயக்கமுறைமையுடன் கூடிய தொடக்கயூஎஸ்பி வாயிலாக மாற்றியமைப்பதற்காக புதியதாக வடிவமைப்பு செய்யாமலேயே ஒன்றிற்கு மேற்பட்ட இயக்கமுறைமைகளை ஒரேயொரு யூஎஸ்பி வாயிலை தொடக்கயூஎஸ்பி வாயிலாக மாற்றியமைப்பதற்கு Easy2Boot எனும் திறமூல பயன்பாட்டு மென்பொருள் பயன்படுகின்றது இதற்காக முதலில் நம்முடைய கணினியை இணையத்துடன் இணைத்திடுக பின்னர் discபயன்பாடு அல்லது gparted கருவியை செயல்படசெய்துFat32(0x0c)கோப்பு அமைவாக வடிவமைப்பு செய்திடுக   இதற்காக ext2 அல்லதுext3 கோப்பு அமைவாக மாற்றிகூட பயன்படுத்திடலாம் ஆனால் இவை ஒருசில இயக்கமுறைமையை செயல்படுத்தாது . அதனால்   Fat32(0x0c)கோப்பு அமைவாக மட்டும் வடிவமைப்பு செய்துகொள்க. பின்னர் https://code.google.com/p/grub4dos-chenall/downloads/liist/ எனும் தளத்திலிருந்து grub4dos-0.4.5c என்ற கோப்பினை (grub4dos-0.4.6a என்ற கோப்பன்று) பதிவிறக்கம் செய்து அவற்றின் கட்டுகளை பிரித்தெடுத்திடுக

1.2

அதன்பிறகு sudo -/Desktop/grub4dos-0.4.5c/bootlace.com – – time-out =0 / dev/sdb   எனும் கட்டளைகளின் வாயிலாக grub4dos என்பதை கணினியில் நிறுவுகை செய்திடுக   பின்னர் (.mnu) எனும் பட்டியல் கோப்புகள் ,தொடக்க இயக்கம் தொடர்பான கோப்புகள் ஆகியவைகளை Easy2Boot இன் இணைய பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்க. அதன்பின்னர் நமமுடைய கையடக்க இயக்ககத்தில் இவைகளை கொண்டுவந்து சேர்த்திடுக இவை வெவ்வேறு இயக்கமுறைமைக்கு தேவையானவாறு வெவ்வேறு கோப்பகமாக பிரித்து நம்முடைய கையடக்க இயக்ககத்தில் பதிவாகிஇருப்பதை காணலாம். பின்னர் லினக்ஸ் தொடர்பான .ISOகோப்பகளையும் லினக்ஸ் பிற்காப்புநகல் தொடர்பான கோப்பகளும் இதிலுள்ள லினக்ஸிற்கென தனியான கோப்பகத்தில் நகலெடுத்து கொள்க இவ்வாறே மற்ற இயக்கமுறைமைகளையும் அவை தொடர்பான கோப்புகளையும் தனித்தனியாக அதனதன் கோப்பகத்தில் நகலெடுத்து பதித்து கொள்க. இவ்வாறு ஏராளமான கோப்புகளை பதியும்போது இவை தாறுமாறாக நினைவகத்தை ஆக்கிரமித்திருக்கும் அதனால் http://defragfs.sourceforge.net/download.html/ என்ற தளத்திலிருந்து defragfs-1.1.1.gz எனும் கோப்பினை பதிவிறக்கம் செய்து செயல்படுத்தி கோப்பகளை ஒழுங்குபடுத்தி அமர்ந்திடுமாறு செய்திடுக அதன்பின்னர் sudo umount/dev/sdb1எனும் கட்டளையை வரிவாயிலாக எனும் கோப்புகளுக்கான பாகப்பிரிவினையையும்

sudo mkdr `/Desktop/usb && sudo mount /dev/sdb1 `/Desktop/usb

sudo per1 `/Desktop/defragfs `/Desktop/usb -f எனும் கட்டளை வரிகளை செயல்படுத்தி அவைகளில் கோப்புகளை ஒழுங்குபடுத்தி அமர்ந்திடுமாறும் செய்திடுக இவ்வாறு ஒவ்வொரு புதிய .ISOகோப்பகளை பதியும்போதும் மாறுதல் செய்திடும்போதும் defragfs-1.1.1.gz எனும் கோப்பினை செயல்படுத்தி கோப்பகளை ஒழுங்குபடுத்தி அமர்ந்திடுமாறு செய்திடுக Virtual box அல்லது Vmware ஆகிய கருவிகளை பயன்படுத்தி இந்த இயக்கமுறைமைகளுக்கான .ISOகோப்பகள் எவ்வாறு தொடக்க இயக்கத்தை செயல்படுத்துகின்றன என சரிபார்த்திடலாம் அல்லது அதற்கு பதிலாக   gemu எனும் கருவியை பயன்படுத்தி சரிபார்த்திடலாம் இந்த வழிமுறை சுலபமானது ஆனால் மெதுவாக செயல்படும் sudo gemu -m 512m /dev/sdb எனும் கட்டளைவரிவாயிலாக gemu எனும் கருவியை பயன்படுத்தி நம்முடைய கையடக்க இயக்ககத்தில் பதிவாகி உள்ள இயக்கமுறைமைகளுக்கான .ISOகோப்பகள் எவ்வாறு தொடக்க இயக்கத்தை செயல்படுத்துகின்றன என சர்பார்த்திடுக மேலும்.mnu என்பது தொடர்பான விவரம் வேண்டுவோர் http://www.rmprepusb.com/tutorials/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க.

1.3

பொதுபயன்பாட்டு உள்வெளியீடு (General Purpose Inpt/Output(GPIO))இயக்கியின் பயன்

2

பொதுபயன்பாட்டு உள்வெளியீடு (General Purpose Inpt/Output(GPIO))இயக்கியானது எந்தவொரு கணியுடனும் இணைந்துள்ள வன்பொருட்களை அல்லது சாதனங்களை அதனுடைய இயக்கமுறைமை வாயிலாக செயல்படுத்துவதற்கான ஒரு இடைநிலை தொடர்பாளராக செயல்படுகின்றது . இது எவ்வாறு செயல்படுகின்றது என தெரிந்துகொள்வதற்கு சிமொழி, Rashperi Pi பலகை,BCM2835-ARM சாதனங்களின் தரவுதாள், Jumber, SD அட்டை ஆகியன தேவையானவையாகும்

ஏதேனும் ஒரு இயக்கியை insmode நிலையில் உள்ளிணைத்திடும்போது இயக்கமுறைமையுடன் இது ஒரு இயக்கியின் தளமாக பதிவுசெய்யபடுகின்றது. சாதனத்தின் தளமும் இதே இயக்கியில் பதிவுசெய்யபடுகின்றது

பின்னர் இந்த இயக்கியின் probeஎன்பது செயல்படுவதற்காக அழைக்கபடுகின்றது முதலில் இந்த பதிவுசெய்யபட்ட சாதனத்தின் பெயரும் நம்முடைய இயக்கியின் தளபெயரும்(bcm-gpio) பொருத்தமாக உள்ளதாவென சரிபார்க்கின்றது இதனை செயல்படுத்திடும் பயன்பாட்டிற்கும் இந்த இயக்கிக்கும் இடையே தொடர்பு பாளமாக (ioct) என்பது செயல்படுகின்றது. நம்முடைய பயன்பாடு இந்த சாதனத்திற்கான கட்டளையை செயல்படுமாறு (ioct) ஐ அழைத்திடும்போதும் குறிப்பிட்ட சாதனத்திற்கு அந்த கட்டளையை அனுப்பி வைக்கின்றது. உடன் குறிப்பிட்ட செயல் நடைபெறுகின்றது வெளியீட்டு செயல் மட்டும் நம்முடைய கண்ணிற்கு புலப்படும் மற்ற செயல்கள் நம்முடைய கண்ணிற்கு புலப்படாமல் செயல்படுத்துகின்றது   BCM2835-ARM எனும் தரவுதாளானது இந்த இயக்கியில் கட்டளைகளை பெறுவது சாதனத்தில் செயல்படுத்துவது ஆகிய இரட்டை செயலை செயல்படுத்துகின்றது. இந்த சாதனத்தின் virtual addressing, physical addressing ,system bu addressing ஆகிய மூன்றுவகை நிலையில் நம்முடைய கணினியின் இயக்கமுறைமைக்குள் பதிவுசெய்யபடுகின்றது . இந்த தரவுதாளின் பக்கம் 6 இல் இவைபற்றிய முழுவிரங்களை அறிந்துகொள்ளலாம்.

probeஎனும் செயலியில் செயல்படுத்தபடும் macro_io_address என்பதை பற்றிய விவரங்களை தரவுதாளின் பக்கம் 5 இற்கு செல்க   ஒரு GPIO கட்டுபாட்டு பயன்பாடானது கூடுதலாக ioct அழைப்புடன் கூடிய சாதாரண சி மொழியல் எழுதபட்ட கட்டளை வரியாகும் . இந்த அழைப்பு பயன்பாட்டு அடுக்கிலிருந்து இயக்கியின் அடுக்கிற்கு குறிபபிட்ட கட்டளை வாயிலாக தரவுகள் கடத்துகின்றது   இதுபற்றிய மேலும் விவரம் அறிய இதே தரவுதாளின் பக்கம் 69 இற்கு செல்க . Cross compilation ,Local compilation ஆகிய இருவழிகளில்   GPIO சாதனங்களின் இயக்கி இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்படுகின்றது. இதற்கான படிமுறைகளை

http://stackoverflow.com/questions/20167411/how-to-compile-a-kernel-module-for-rashpberry-pi/ என்ற இணைய பக்கத்திற்கு சென்று அறிந்துகொள்க

AngularJSஎன்பது திறமூல இணைய பயன்பாடு

3

AngularJSஎன்பது திறமூல இணைய பயன்பாட்டின் கட்டமைவை HTML உடன் கூடிய இயக்க ஜாவாஸ்கிரிப்ட்டை செயல்படுத்திடும் எளிய மொழியாகும்     பொதுவாக HTML , ஜாவாஸ்கிரிப்ட் ஆகிய இரண்டையும் ஐயம் திரிபற அறிந்தவர்கள் ஒரே நிமிடத்தில் இந்தAngularJS வாயிலாக helloworldஎனும் முதன்முதல் நிரல் தொடரை எழுதிவிட முடியும். மேலும் நாம்எழுதிய நிரல் தொடர் சரியாக செயல்படுகின்றதாவென இதில் மிகவும் எளிதாக சரிபார்த்திடமுடியும் அதுமட்டுமன்று பேரளவு பயன்பாட்டினை உருவாக்குவதற்கு இந்த எளிமையான சரிபார்த்திடும் செயலானது பேருதவியாக இருக்கின்றது   அதனால் இந்தAngularJS ஐ பற்றி தெரிந்து கொள்ள விழையுமுன் templates .models ஆகிய இரண்டை பற்றிய முழுவிவரங்களையும் முதலில் நன்கு அறிந்து கொள்க.   HTML,directives,filters,model variable, CSS ஆகியவை இந்த Templates இல் உள்ளன இதில் கட்டுபடுத்துவதற்காக $scope.disp() Controller என்பதும் காட்சியாக காணவும் (view) வழிசெலுத்தியாகவும் (router) $http. $location,$window ஆகிய சேவைகளை வழங்குபவராகவும் E2E என்பதன் வாயிலாக பரிசோதிப்பாளராகவும்(Test) செயல்படுகின்றது இதனை Google,Sony,Virgin America,Nike,msnbc ஆகிய பெரிய நிறுவனங்கள் தங்களுடைய அன்றாட பணிகளுக்காக பயன்படுத்தி கொள்கின்றன மேலும் விவரம் அறிந்துகொள்வதற்கு   https://www.buildwith.angularjs.org/ என்ற தளத்திற்கு செல்க

மொஸில்லாவின் ஆவண பொருள் மாதிரி. பற்றி அறிந்துகொள்வோம்

4

ஆவண பொருள் மாதிரி (Document Object Model (DOM)) என்பது HTML, XML ஆகிய இரு ஆவணங்களுடன் இடைமுகம் செய்வதற்கான ஒரு நிரல்தொடராகும். பொதுவாக இது ஒரு ஆவணத்தை அனுகி அதனுடைய பாணியையும் உள்ளடக்கத்தையும் மாற்றியமைப்பதற்கான கட்டமைப்பு பிரதிநிதியை வரையறுக்கின்றது மேலும் குழுவான முனைமங்களின் பொருட்களின் பண்பியல்களையும் வழிமுறைகளையும் அவ்வாவணத்தின் பிரிதியாக செயல்படுமாறான வசதியையும் இந்த DOM வழங்குகின்றது அதற்காக ஒரு இணையபக்கத்தை நிரல்தொடர் அல்லது கட்டளைதொடர் மொழியுடன் இணைப்பை ஏற்படுத்துகின்றது. பொதுவாக ஒரு இணைய பக்கம் என்பது இணையஉலாவி சாளரத்தில் ஆவணத்தினை காட்சிபடுத்துதல் அல்லது அதேஆவணத்தின் HTMLமூலங்களை காட்சிபடுத்துதல் ஆகிய செயல்களை செய்கின்றது அதற்கு மாற்றாக DOM என்பது அதே ஆவணத்தை பிரிதிநிதி படுத்துதல் தேக்கி வைத்தல் மாறுதல் செய்தல் ஆகிய பணிகளை செய்கின்றது. மிகஎளிமையாக கூறவேண்டுமெனில் இந்த DOM ஆனது ஒரு இணைய பக்கத்தின் முழுமையான பொருள்நோக்கு பிரதிநியாக செயல்பட்டு எந்தவொரு நிரல்தொடர்மொழியாலும் அந்த ஆவணத்தினை திருத்தி மாறுதல்செய்திட அனுமதிக்கின்றது மேலும் தற்போதைய நவீண இணையஉலாவிகள் W3C DOM எனும் செந்தரத்தினை DOM இற்கு அடிப்படையாக பின்பற்றுகினறன. ஒருசில உலாவிகள் இந்த W3C செந்தரத்திற்கு மேலான வசதிகளை விரிவாக்க வசதிமூலம் வழங்குகின்றன. அனைத்து பணிபியல்புகளும் வழிமுறைகளும் நிகழ்வுகளும் ஒரு இணைய பக்கத்தினை உருவாக்குதல் மாறுதல் செய்தல் ஆகிய செயல்கள் அனைத்தும் பொருள்நோக்காகமட்டுமே இதில் கையாளபடுகின்றன. அதாவது ஆவணத்தின் பொருளானது அந்த ஆவணத்திற்குள்ளும் அட்டவணை பொருளானது HTMLTabelElement என்பதன் மூலமும் செயல்படுத்தபடுகின்றது. இணைய பக்க ஆவணத்தின் பொருட்கள் அசைவூட்டம் செய்வதற்கு HTML,StyleSheet,Scripts ஆகிய மூன்றும் சேர்ந்து பயன்படுத்துபடுகின்றன இதனை Dynamic HTML(DHTML) என அழைப்பர். வெவ்வேறு இணைய உலாவிகள் வேவ்வேறு நிலையிலும் படிகளிலும் W3C DOM செந்தரத்தில் வேவ்வேறு நிரல் தொடர்களும் அனுகிடுமாறு செயல்படுகின்றன நேரடியாக ஒருநிரல்தொடரை உருவாக்கினால் அல்லது நிரல்தொடரை மேலேற்றும் கட்டளை மூலம் இணையபக்கத்திற்குள் உள்ளிணைத்தல் செய்தால் அந்த ஆவணத்தின் அல்லது சாளரத்தின் அடிப்படை பொருட்களுடன் உடனடியாக API ஐ இயக்கதொடங்கிடவேண்டும் .

<body onload = “window.alert (‘welcome to my home page!’);”> என்பது alert()னும் செயலியை பயன்படுத்துவதற்கான   மிகஎளிய நிரல் தொடர்வரியாகும்

மேலும் விவரம் அறிந்துகொள்ள https://developer.mozilla.org/en-US/docs/API/Document_Object_Modle/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க

ஆஸ்ட்ரிஸ்க் எனும் திறமூல மென்பொருளை கொண்டு நம்முடைய சொந்த தொலைபேசி இயக்ககத்தை எளிதாகஅமைத்துகொள்ளமுடியும்

5

நம்முடைய வீடுகளிலும் அலுவலகங்களிலும் ஆளில்லா தொலைபேசி இயக்ககத்தை இந்த ஆஸ்ட்ரிஸ்க் எனும் திறமூல மென்பொருளை கொண்டு மிக எளிதாக அமைத்து பராமரித்திடமுடியும். இந்த மென்பொருளை ஆண்டு ஒன்றிற்கு 2 மில்லியன் நபர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர் தொலைபேசி உலகில் மிகபிரபலமாக இந்த ஆஸ்ட்ரிஸ்க் எனும் திறமூல மென்பொருள் விளங்குகின்றது . இதனை கொண்டு நம்முடைய வீடுகளில் அல்லது அலுவலகத்தில் தொலைபேசி இயக்ககத்தை அமைப்பதற்கு முதலில் செந்தரபணிமேடை கணினி அல்லது சேவையாளர் கணினி ஆனது பென்டியம்4 ,எக்ஸீயான் ஐ3, ஆகியவையுடன் 2 ஜிபி முதல் 8 ஜிபி வரையான ரேம் நினைவகம் 500ஜிபி அல்லது 1 ட்டிபி வன்தட்டு போன்ற வன்பொருட்களுடன் இருக்கவேண்டும் அடுத்த படிமுறையாக ஃபெடோரா, டெபியன்,சென்டோஸ் ,உபுண்டு ஆகிய லினக்ஸ் இய்க்கமுறைகளில் ஒன்று நம்முடைய கணினியில் இயங்குவதை உறுதிசெய்துகொள்க .அதற்கடுத்ததாக http://www.asterisk.org/downloads/ எனும் தளத்திலிருந்து இந்த ஆஸ்ட்ஸ்டிக் திறமூல மெனபொருளின் சமீபத்திய அல்லது நீண்டகாலபதிப்பை பதிவிறக்கம் செய்து இந்த மென்பொருளை நிறுவுகை செய்திடுக இந்நிறுவுகை செயலின்போது இதற்கான வழிகாட்டி கூறும் ஆலோசனைகளை பின்பற்றிடுக. பின்னர் இந்த மென்பொருளை வழக்கமான dial plan அல்லது Free PBX ஏற்றவாறு வடிவமைப்பு செய்திடுக   தொலை பேசி இயக்ககத்திற்கு தேவையான ஒரேயொரு வாயில் கொண்ட FXOஅட்டையும் இதனை பொருத்துவதற்கான சேவையாளர் ஸ்லாட்கள்   PCIஅல்லது PCIe ஆகியவை தேவையாகும் இவற்றை சரியாக பொருத்தி இணைப்பு செய்துகொள்க. அதற்கடுத்ததாக FXS gateway , LAN ஆகியவற்றையும் அமைத்து கொள்க இது தொலைபேசி இயக்ககத்திற்குள்வருகின்ற அனைத்து அழைப்புகளையும் அல்லது குறிப்பிட்ட அழைப்புகளைமட்டும் பதிவுசெய்து பின்னர் கேட்கும்போது இயங்கும் திறன்கொண்டது இதன் ஆஸ்ட்ரிஸ்க் ஐவிஆர் என்பது மிகவும் திறன்மிக்கது பலநிலைகளையும் தரவுதள மேலாண்மை ,தரவுகளை சேகரித்தல்,இணைய சேவையுடன் ஒருங்கிணைத்தல், பேச்சொலியை அங்கீகரித்தல் போன்ற பல்வேறு திறன்களை கொண்டது. வட்டாரம் தொழில் திறன் ஆகியவற்றின் அடிப்படையிலான உள்முகவர்களுடன் அல்லது ஒரே நிறுவனத்தின் பல்வேறு துறைகளுடன் தொடர்கொள்வதற்கான உள்கட்ட அழைப்புகளையும் வெளியிலிருக்கும் முகவர்களுடன் தொடர்புகொள்வதற்கான வெளியிட அழைப்புகளையும் கையாளும் திறன்கொண்ட தனிப்பட்ட அழைப்பு மையத்தை அமைப்பதற்கானVicidial என்னும் துனை பயன்பாடுகள் இந்த ஆஸ்ட்ரிஸ்க் அடிப்படையிலேயே உருவாக்கபட்டதாகும். சிஆர்எம் ,ஈஆர்பி போன்றவற்றுடனும் TelephoneyAPI உடனும் எளிதான URL உடனும் ஒருங்கிணைந்து செயல்படும் வல்லமை கொண்டதாக இது விளங்குகின்றது. மேலும் இந்த ஆஸ்ட்ரிக் ஐ பற்றி நன்கு ஐயம் திரிபற அறிந்துகொள்ள ‘Asteristc: The future of telephony’ எனும் புத்தகத்தை காண்க

 

 

திருப்பபட்ட மின்னஞ்சல்களை கையாளுவது எவ்வாறு

நாம் அனுப்பும் மின்னஞ்சல் முகவரியில் kupca@gmail.com என்பதற்கு பதிலாக kopca@gmail.com என்றவாறு ஏதேனும் எழுத்துபிழை இருந்தால் அல்லது தவறான முகவரியாக இருந்தால்மின்னஞ்சலானது திரும்ப வந்துவிடும் தனிப்பட்ட நபருடை மின்னஞ்சல் கணக்கெனில் ஒன்றிரண்டு மின்னஞ்சல்கள் இவ்வாறு திரும்ப நம்முடைய மின்னஞ்சல் உள்வருகை பெட்டிக்கு வந்தசேர்ந்துவிடும் பெரிய நிறுவனங்கள் நிமிடத்திற்கு குறைந்தது நூறு மின்னஞ்சல்கள் என்றாவாறு பேரளவு மின்னஞ்சல்களை அனுப்பிடும் நிலையில் ஏராளமான மின்னஞ்சல்கள் திரும்பிவந்து மின்னஞ்சல் உள்வருகை பெட்டி நிரம்பி வழியும் நிலை ஏற்படும் அதனால் வழக்கமான மின்னஞ்சல்கள் எவை இவ்வாறு திரும்பி வந்தவை என பிரித்தறிந்து கொள்ள மிகசிரமமான சூழல் உருவாகும் இவ்வாறு மின்னஞ்சல் திரும்ப வருவதை பொருத்தமில்லாத முகவரி சேவையாளரால் தடுக்கபட்ட முகவரி பொருத்தமற்ற களப்பெயர் போன்றவைகளால் உருவாகும் hard/permanent bounce ,இணைய இணைப்பு தொடர்பு அறுந்துபோதல் பெறுபவரின் உள்வருகை பெட்டி நிரம்பி வழிவது, பெறுபவர் வெளியில் எங்காவது செல்வதால் தானியங்கியாக பதில் அனுப்புமாறு செய்தல் போன்ற காரணங்களினால் உருவாகும் soft/temporary bounce ஆகிய இரண்டு வகையாக பிரிக்கலாம் தற்காலிக திரும்புதல் எனில் பரவாயில்லை மீண்டும் முயற்சிசெய்தால் மின்னஞ்சல் சென்று சேர்ந்துவிடும் நிரந்தர திரும்புதல் எனில் சிக்கல் அதிகமாகும் அதனால் இவ்வாறு திரும்புதல் நிரந்தர மானதா தற்காலிகமானதா என பின்வரும் நிரல் தொடரின் மூலம் அறிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படமுடியும்

/**

*Check if the bouce corresponds to a permanent failure

* can be added to the extraHeaders(function above

*/

Fuction isPermnentFailure($email) {

$lineBreaks = explode( “ \n”, $email);

Foreach ($lineBreaks as $lineBreak) {

If ( preg_match( “/^X-Failed-Recipients: (.*)/”,$lineBreak,

$permnentFailMatch )) {

$bounceHeader [ ‘x-failed-recipient’ ] =

$permenentFailMatch;

Return true;

}

}

 

 

 

Previous Older Entries