அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் பயன்பாடுகள்

1 Ascii எனும் பயன்பாட்டில் உருவாக்கபட்ட படத்தை ditaa எனும் வரைகலையாக எளிதாக மாற்றம் செய்திடமுடியும்  இந்த ditaa ஆனது சிறிய கட்டளைவழியாக செயல்படும் பயன்பாடாகும் இது Ascii ஆல் உருவாக்கபட்ட படத்தை எளிதாக பிட்மேப் வரைகலையாக உருமாற்றம் செய்திடஉதவுகின்றது. இதனை http://www.ditaa.sourceforge.net  எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க.

2  LESS என்பது  CSSஎன்ற இயக்கநேர stylesheet மொழியாக விரிவாக்கம் செய்துஇயக்கநேர மாறிகளாகவும் , செயல்களாகவும் ,செயலிகளாகவும் பின்பற்றி செயல்படசெய்திடமுடியும். மேலும் இந்த LESS ஆனது வாடிக்கையாளர் சேவையாளர் ஆகிய எந்தவொரு கணினியாகவும் செயல்படுத்திடமுடியும் அல்லது சாதாரன  CSS ஆக கூட மொழிமாற்றி யமைத்திடமுடியும். இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்டது இதுபயனாளர் ஒருவர் தான்விரும்பும் இணையபயன்பாடுகளை உருவாக்க உதவுகின்றது  இதனை http://www.lesscss.org  எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க.

ls

   3 SimpleInvoices  எனும் பயன்பாடு  சிறிய நிறுவனங்கள், சுயதொழில் செய்பவர்கள் போன்றவர்கள் தங்களுடைய உற்பத்தி பொருளை சேவையை விற்பனை செய்வதற்கான பட்டியலை மிகஎளிதாக நேரடியாக மிகவிரைவாக இணையத்தின் வாயிலாக உருவாக்கிடுவதற்கு பயன்படுகின்றது . நாம் பயன்படுத்திட விழையும் கணினி,இணைய இணைப்பு, விற்பனைபட்டியலை அச்சிடுவதற்கான அச்சுகருவி  ஆகியவை மட்டும் இதனை செயல்படுத்திடு வதற்காக  நம்மிடம் இருக்கவேண்டும்  இதனை பயன்படுத்தி முன்பு நம்மால் உருவாக்கபட்ட பட்டியல்களனைத்தையும் ஒருங்கிணைத்து ப்பிடிஎஃப் கோப்பாக உருமாற்றம் செய்து பிற்காலத்திற்கு பயன்படுத்தி கொள்ளமுடியும்.  இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும்திறன்கொண்டது இதனை http://www.simpleinvoices.org  எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க. அல்லது  இதே போன்றே http://www.BambooInvoice.org  எனும் தளத்திலிருந்து BambooInvoice என்பதை பதிவிறக்கம் செய்து இதேசெயலிற்காக பயன்படுத்தி கொள்க.

si

 4 பல்வேறு நிறுவனங்களின் தரவுகளை நிருவகிக்கும் தரவுமையங்களை முழுமையாக நிருவகிப்பதற்கு RackTables  எனும் பயன்பாடு உதவுகின்றது. இது சேவையாளர் கணினி, பணியிடகணினி,வழிசெலுத்தி, இடமாற்றி போன்ற வன்பொருட்களையும் , வளாக பினையம் அல்லது இணையத்தில் இணைந்துள்ள கணினிகளின் முகவரி , வளாக பினையம் இணையம் ஆகிவற்றை கட்டமைவுசெய்வது  போன்ற மென்பொருள்செயல்களையும்  கையாளும் திறன் கொண்டது  இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும்திறன் கொண்டது இது ஜிப்பிஎல் எனும் அனுமதியுடன் வெளியிடபட்டுள்ளது. இதனை http://www.racktables.org  எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க.

rt

லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர்-தொடர்-41-முதன்மை ஆவணத்தில் பணிபுரிதல்-தொடர்ச்சி

 பொதுவாக அச்சிட்ட புத்தகங்களில் அட்டைப்பகுதியில் பக்கஎண்கள் இருக்காது, ஆனால் அதற்கடுத்ததாக புத்தகத்தை பற்றிய அறிமுக பக்கங்களில் சிறிய ரோமன் எழுத்தில் I என்று தொடங்கி தொடர்ச்சியாக இருக்கும். அதனை தொடர்ந்து மற்ற உள்பகுதியில் அராபிய எண் 1 என்று தொடங்கி தொடர்ச்சியாக இருக்கும். புத்தகத்தின் மிகுதி பகுதிகளின் பக்கங்களானது தொடர்ச்சியான மிகுதி அராபிய எண்ணாகவே இருக்கும். இவ்வாறான பக்கஎண்களுடன்கூடிய முதன்மை ஆவணத்தை அமைவு செய்திட வெவ்வேறு பத்திகளின் பாவணைகளை முதல் பகுதியின் தலைப்பிற்காக இரு சிறப்பு எழுத்துருக்களையும் சேர்த்து ஒதுக்கீடு செய்திடவேண்டும்.

உதாரணமாக புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியையும் Paragraph Style எனும் உரையாடல் பெட்டியில் Text Flowஎன்ற தாவிபொத்தானின் திரையில்Heading 1 paragraph என்றும் Page number 0எனவும் அமைத்திடுக உடன் மிகுதி பக்கஎண்கள் தானாகவே தொடரச்சியாக உருவாகிவிடும்.41.1

1

பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே உள்ள கட்டளை பட்டையில்Tools => Outline Numbering=> என்றவாறு கட்டளையை செயற்படுத்தி அமைக்கபட்ட புறஅமைப்பு நிலையானது Outline Level 1.என்றவாறு ஒதுக்கீடு செய்யபட்டிருக்கும். இதனை Outline & Numberingஎன்ற தாவிபொத்தானின் திரையில் உறுதிபடுத்திகொள்க.

41.2

2

அதன்பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே உள்ள கட்டளை பட்டையில் Tools=> Outline Numbering=> என்றவாறு கட்டளையை செயற்படுத்தி Outline Level 1 என்ற ஒரு நிலையை மட்டுமே பத்தியின் பாவணையில் ஒதுக்கீடு செய்திடமுடியும் .மேலும் தேவையான அளவு கூடுதலான நிலையை Paragraph Style எனும் உரையாடல் பெட்டியின் Outline & Numberingஎன்ற தாவிபொத்தானின் திரையில் ஒதுக்கீடு செய்து கொள்ள முடியும்.

41.3

3

இந்நிலையில் இதே Paragraph Style எனும் உரையாடல் பெட்டியின் Outline & Numberingஎன்ற தாவிப் பொத்தானின் திரையில் பக்கஎண்களை அமைத்திட முடியும். அதேபோன்று Text Flowஎன்ற தாவிபொத்தானின் திரையிலும் பக்க எண்களை அமைத்திடமுடியும் என்றவாறு இருவேறு இடங்களில் பக்க எண்களை அமைத்திடும்போது இரண்டிற்குமிடையே என்ன வேறுபாடு என்றவொரு சந்தேகம் அனைவருக்கும் கண்டிப்பாக எழும்.

Outline & Numberingஎன்ற தாவிப்பொத்தானின் திரையில் பக்கஎண்களை அமைத்திட்டால் தலைப்பு உரையானது உள்ளடக்க அட்டவணையிலும் மற்ற பகுதியின்தலைப்புகளிலும் தோன்றிடும். Text Flowஎன்ற தாவிபொத்தானின் திரையில் பக்கஎண்களை அமைத்திடும் போது தலைப்பு உரையானது அவ்வாறு இரு இடங்களிலும் அமையாது.

41.4

4

அதனால் Outline & Numberingஎன்ற தாவிபொத்தானின் திரையில் பகுதி1 முதன்மை பத்திக்கு புதிய பாவணையை ஒதுக்கீடுசெய்து கொள்க.

இவ்வாறு முதன்மை ஆவணத்தை உருவாக்கிய பின்னர் அதனை நாம் விரும்பியவாறு திருத்தம் செய்து அதன் தோற்றத்தை மாற்றியமைக்கமுடியும். இதற்காக மாதிரிபலகத்தில் தேவையானவாறு மாறுதல்கள் செய்துகொண்டபின்னர் முதன்மை ஆவணத்தை திரையில் தோன்ற செய்திடுக. உடன் if you want to update all linksஎன்றும் if you want to apply the changed stylesஎன்றும் இரு செய்திகள் திரையில் தோன்றிடும். அவ்விரண்டிற்கும் Yesஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து ஆமோதித்திடுக.

முதன்மை ஆவணத்திலிருந்துகொண்டு துனை ஆவணங்களை திருத்தம் செய்திட முடியாது. அதனால் முதன்மை ஆவணத்தின் வழிகாட்டிதிரையில் உள்ள துனை ஆவணைத்தை தெரிவுசெய்து கொண்டுசுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக. அல்லது முதன்மை ஆவணத்தை விட்டு வெளியில் வந்தபின் தனியாக துனைஆவணத்தை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் திரையில் விரியும் துனைஆவணத்தை வழக்கமான ஆவணத்தை போன்று திருத்தம் செய்திடமுடியும் . இவ்வாறான துனை ஆவணத்தின் திருத்தங்களை முதன்மைஆவணத்தின் உள்ளடக்க அட்டவணைகளிலும் நூலகபட்டிகளிலும்(bibliography) வரிசையடுக்குகளிலும்(index) நாமே அவ்வப்போதைய திருத்தத்தை நிகழ்நிலை படுத்திகொள்ளவேண்டும்.

அதன்பின்னர் முதன்மை ஆவணத்தின் வழிகாட்டித்திரையில் உள்ள துனை ஆவணைத்தை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக.. உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் Deleteஎனும் வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து நீக்கம் செய்துகொள்க. .துனை ஆவணத்திற்கு புதியபெயரிட்டு திருத்தம் செய்திருந்தால் முதன்மை ஆவணத்தின் வழிகாட்டிதிரையில் உள்ள பழைபெயரிலுள்ள ஆவணத்தை நீக்கம் செய்தபின் புதிய பெயரிட்ட துனைஆவணத்தை முதன்மை ஆவணத்தின் வழிகாட்டித்திரையில் சேர்த்துகொள்க.

துனை ஆவணங்களுக்கிடையே மேற்கோள்காட்டுதலை புலங்களுக்கு பெயரிட்டபின் bookmarks அல்லது set referencesஆகிய இருவழிகளில் ஒன்றை பயன்படுத்தி உருவாக்கிடமுடியும்.

முதல்வழிமுறையான bookmarks என்பது வழிகாட்டிதிரையில் பட்டியலாக காண்பிக்கும். அவைகளுள் நமக்கு தேவையானதை மட்டும் தெரிவுசெய்து ஒற்றை சொடுக்குதல் வாயிலாக அடையமுடியும்.

முதல்வழிமுறையான இந்த bookmarksஇன் வாயிலாக உள்ளிணைப்பு செய்திடுவதற்காக முதலில் bookmarks செய்திடவிரும்பும் உரையை தெரிவுசெய்து கொண்ட பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே கட்டளைப்பட்டையில் Insert => Bookmark=>என்றவாறு கட்டளையை செயற்படுத்திடுக. உடன் விரியும் Insert Bookmark. எனும் உரையாடல் பெட்டியில் புதிய பெயரை உள்ளீடு செய்துகொண்டபின் OK.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. 

41.5

5

இரண்டாவது வழிமுறையான set references என்பதன்வாயிலாக உள்ளிணைத்திடுவதற்காக. முதலில் மேற்கோள்காட்டிட விரும்பும் ஆவணத்தை திறந்துகொள்க பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேகட்டளைபட்டையில் Insert => Cross-reference=>என்றவாறு கட்டளையை செயற்படுத்திடுக. உடன் திரையில் விரியும் Fieldsஎனும் உரையாடல் பெட்டியின் Cross-reference.எனும் தாவிபெட்டியின் திரையில் Typeஎனும் பகுதியின் கீழ் Set Reference எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக. பின்னர் மேற்கோள்காட்டவிரும்பும் ஆவணத்தையும் அதன் தலைப்பையும் தெரிவுசெய்து சொடுக்குக. இதன்பின்னர் Fieldsஎனும் உரையாடல் பெட்டியில் Name எனும் பெட்டியில் இந்த மேற்கோளிற்கு ஒரு பெயரிட்டு Insert எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த பெயரானது Selectionஎனும் பகுதியில் பட்டியலாக காண்பிக்கும். மேலும் இதேபோன்ற நடைமுறையை பின்பற்றி கூடுதலான மேற்கோள்களை உருவாக்கி கொள்க இறுதியாக இதனை சேமித்து இந்த உரையாடல் பெட்டியிலிருந்து வெளியேறிடுக.

மேற்கோளை உள்ளிணைத்தல் முதன்மை ஆவணத்தை திறந்துகொண்டு அதன்வழிகாட்டிதிரையில் ஏதேனுமொரு துனைஆவணத்தை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக. உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Editஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த துனை ஆவணமானது திருத்தம் செய்திடுவதற்கு ஏதுவாக தயார் நிலையில் திரையில் தோன்றிடும். பின்னர் மேற்கோள் காட்டவிழையும் உரையில் இடம்சுட்டியை வைத்துகொண்டு லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேகட்டளைபட்டையில் உள்ள Insert => Cross-reference=>என்றவாறு கட்டளையை செயற்படுத்திடுக. உடன் திரையில் விரியும் Fieldsஎனும் உரையாடல் பெட்டியின் Cross-reference.எனும் தாவிப்பொத்தானின் திரையில் Typeஎனும் பகுதியின் கீழ் Set Reference எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக. பின்னர் மேற்கோள்காட்டவிரும்பும் உரைதலைப்பை தெரிவுசெய்து சொடுக்குக. இதன்பின்னர் Fieldsஎனும் உரையாடல் பெட்டியில் Name எனும் பெட்டியில் இந்த மேற்கோளிற்கு ஒரு பெயரிட்டு Insert எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த பெயரானது Selectionஎனும் பகுதியில் பட்டியலாக காண்பிக்கும். மேலும் இதேபோன்ற நடைமுறையை பின்பற்றி கூடுதலான மேற்கோள்களை உருவாக்கி கொள்க. இறுதியாக இதனை சேமித்து இந்த உரையாடல் பெட்டியிலிருந்து வெளியேறிடுக.

41.6

6

இதன்பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேகட்டளைபட்டையில் உள்ள Tools => Update => Links=>என்றவாறு கட்டளையை செயற்படுத்திடுக. அல்லது முதன்மை ஆவணத்தின் வழிகாட்டியின் திரையில் Updateஎன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து பிடித்து கொண்டு Linksஎனும் பகுதிக்கு இடம்சுட்டியை கொண்டுசென்று அழுத்திபிடித்தருந்த பொத்தானின் பிடியை விட்டிடுக. தற்போது மேற்கோள் உரையானது நாம் உள்ளிணைத்த பகுதியில் தோன்றிடும். இதனை மூடிவிட்டுமீண்டும் திறந்தால் இணப்பானது நிகழ்நிலைபடுத்தபட்டுவிடும்.

முதன்மைஆவணமும் துனை ஆவணமும் சேர்ந்த ஆவணங்களில் Navigatorஎனும் வழிகாட்டியானது மிகச்சிறந்த கருவியாக நமக்கு ஆவணத்தின் குறிப்பிட்ட பகுதிக்கு செல்வது உள்ளடக்கங்களை மறுஅமைவுசெய்வது ஆகியவற்றில் மிகமுக்கிய பங்காற்றுகின்றது. உதாரணமாக புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனி துனைஆவணங்களாக இருக்கின்றன. இந்நிலையில் முதன்மை ஆவணத்தின் செய்யபடும் குறிப்பிட்ட பகுதிகளின் பெயர்களுக்குபதிலாக மறுபெயரிடுதல் வரிசையை மாற்றிடுதல் போன்ற செயல்கள் அனைத்தும் துனை ஆவணங்களிலும் தானாகவே நிகழ்நிலை படுத்தபடும். லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் இந்த வழிகாட்டியானது முதலாவதாக வழக்கமான உரைஆவணங்களாகவும் ,இரண்டாவதாக துனை ஆவணங்களாகவும் இருக்கின்றன.

முதலாவதான வழக்கமான உரைஆவணங்களில் வரைபடங்கள் அட்டவணைகள் இணைப்புகள் மேற்கோள்கள் மற்றவைகள் சேர்ந்ததாக இருக்கும். இதிலுள்ள கூட்டல்குறி அல்லது முக்கோணக்குறியை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் உடன் தொடர்புடையபட்டியல் விரியும் அவைகளுள் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தவுடன் ஆவணத்தின் அந்த பகுதிக்கு இடம்சுட்டியானது உடன் தாவிச்சென்றுநிற்கும்.

வழிகாட்டியின்(navigator) திரையின் முதன்மை ஆவணபடிவத்தில் மேலே இடதுபுறத்தில் உள்ள Toggleஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து முதன்மை ஆவணம் அல்லது வழக்கமான ஆவணம் ஆகியஇரண்டிற்கும் இடையே மாறிகொள்ளமுடியும். முதன்மை ஆவணகாட்சியில் துனைஆவணங்களும் உரைகளும் சேர்ந்த பட்டியலை திரையில் காண்பிக்கும்.

41.7

7

முதன்மைஆவணமானது .odmஎனும் பின்னொட்டு கோப்பாகவும் துனைஆவணங்களானது .odtஎனும் பின்னொட்டு கோப்புகளாகவும் இருக்கின்றன. புத்தகங்கள் அறிக்கைகள் ஆகியவற்றை உருவாக்க இந்தஅமைவு பெரிதும் பயனுள்ளதாக இருக்கின்றன. ஆனாலும் சிலநரேங்களில் இவையிரண்டும் சேர்ந்த முதன்மை ஆவணத்தில் பாதிப்புஎதுவும் ஏற்படுத்தாத ஒரேயொரு நகல் கோப்பாக சேமித்து வைத்திடவிரும்புவோம். அந்நிலையில் முதலில் முதன்மை ஆவணத்தை திறந்துகொள்க. பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேகட்டளைபட்டையில் உள்ள File => Export=>என்றவாறு கட்டளையை செயற்படுத்திடுக. உடன் விரியும் Exportஎனும் உரையாடல் பெட்டியில் File name எனும் உரைபெட்டியில் இதற்கொரு பெயரிட்டுகொண்டு File format எனும் பகுதியில்ODF Text Document (.odt) என்றவாறு தெரிவுசெய்துகொண்டு Exportஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் முதன்மை ஆவணத்தை மூடிவிட்டுவெளியேறிடுக.பிறகு புதியதாக உருவாக்கிய .odtஎனும் பின்னொடுடன் கூடிய ஆவணத்தை திரையில் தோன்ற செய்து இணைப்பு அனைத்தையும் நிகழ்நிலை படுத்திகொள்க.

இந்த ஆவணத்தில் இணைப்புகளை நீக்கம் செய்திடுவதற்காக லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேகட்டளைபட்டையில் உள்ள Format => Sections=>என்றவாறு கட்டளையை செயற்படுத்திடுக. உடன்திரையில் விரியும் Section எனும் உரையாடல் பெட்டியின் Sectionஎனும் பகுதியில்இணைப்பை நீக்கம் செய்திடவிரும்புவதை தெரிவு செய்து கொண்டு Link எனும் பகுதியில் உள்ள Link என்பதையும் Write protection எனும் பகுதியில் உள்ள Protected என்பதையும் தெரிவசெய்யாதுவிட்டிட்டு OKஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. மேலும் இதைஒரு எளிமையான உரையாவணமாக மாற்றியமைத்திட தேவையான பகுதியை தெரிவுசெய்துகொண்டு Removeஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

முதன்மைஆவணத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்தல்

பொதுவாக துனைஆவணத்தில் உள்ள வரைகலையானது முதன்மைஆவணத்தின் பட்டியலில் தோன்றுவதில்லை. ஏனெனில் முதன்மைஆவணத்தில் பக்க உரையோட்டம் பக்கஎண்கள் மேற்கோள்கள் ஆகியவை மாற்றியமைத்திடும்போது துனை ஆவணங்களின் வரைகலைமட்டும் அதனுடைய anchor reference ஐ மேற்கோள்செய்யாது விடுபட்டுவிடும். இந்த பிரச்சினையை சரிசெய்திடுவதற்காக வரைபடத்தின்மீது இடம்சுட்டியை வைத்துசுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் Pictureஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக. பின்னர் விரியும் Pictureஎனும் உரையாடல் பெட்டியின் Typeஎனும் தாவிப்பொத்தானின் திரையில் anchorஎன்பதன்கீழுள்ள வாய்ப்புகளில் To character or To paragraph ஆகிய இருவாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து கொள்க. பின்னர்Positionஎன்பதன்கீழுள்ள வாய்ப்புகளில் Horizontal Vertical ஆகியஒவ்வொன்றிலும் center ,top ,bottom ஆகிய வாய்ப்புகளில் பொருத்தமான ஒன்றை் தெரிவுசெய்துகொள்க. இறுதியாகoKஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. 

41.8

8

எஸ்டி அட்டையில் உருவப்படங்களை எவ்வாறு சேமிப்பது?

 1

தற்போது நம்மிடம் ஆண்ட்ராய்டு இயக்கமுறைமை செயல்படும் செல்லிடத்து பேசி இருப்பதாக கொள்வோம்  ஐஃபேனில் இந்த எஸ்டிஅட்டை செயல்படாது என்பதை கவணத்தில்கொள்க  ஆண்ட்ராய்டு இயக்கமுறைமை செயல்படும் செல்லிடத்துபேசியின் படப்பிடிப்பு பயன்பாட்டினை (camera app)  இயங்கசெய்க அந்த திரையில் பற்சக்கரம் போன்றுள்ள settings எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக   உடன்விரியும் settings எனும் திரையில்  முதலில் Storage என்ற வாய்ப்பையும் பின்னர் அதன்அருகிலுள்ள memory card எனும் வாய்ப்பையும் தெரிவுசெய்து சொடுக்குக இந்த வாய்ப்புகள் ஒவ்வொரு செல்லிடத்து பேசியிலும் ஒவ்வொருமாதிரி அமைவாக இருக்கும் அதனால் மிகச்சரியாக இந்த இருவாய்ப்புகளை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக மேலும் செல்லிடத்து பேசியிலுள்ள   file manager என்ற பகுதியிலிருந்தும்  memory card  இற்கு இடமாற்றம் செய்யமுடியும்

எச்சரிக்கை அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் நம்முடைய செல்லிடத்து பேசியிலுள்ள உருவப்படங்களை நம்முடைய கணினிக்கு அல்லது வேறு சேகரிக்கும் நினைவகத்திற்கு இடமாற்றம் செய்துகொள்க இவ்வாறு இடமாற்றம் செய்யவில்லையெனில் கடைசியாக படப்பிடிப்பு செய்த குறிப்பிட்ட அளவு படங்கள் மட்டுமே நம்முடைய செல்லிடத்து பேசியின் நினைவகத்தில் இருக்கும் என்ற செய்தியை கவணத்தில் கொள்க

தொலைகாட்சி பெட்டிகளில் இணையஇணைப்பு செய்து இணையத்தில் உலாவரலாம்

இதற்காக கம்பிஇணைப்புடன் அல்லதுகம்பிஇணைப்பு எதுவும் இல்லாமலும் செயல்படுத்தலாம்

1

இதனை செயல்படுத்திட நம்முடைய  விரைவூக்கதொலைகாட்சி (smart TV) அல்லது தொடரோட்ட பெட்டி (streaming box) அல்லது தொடரோட்டகுச்சி (streaming stick) போன்றவைகள் மட்டும் போதுமானவையாகும் இந்த சாதனங்களானது இணையத்துடன் இணைவதற்கு தேவையான பயன்பாடுகளை செயல்பட அனுமதிக்கின்றன உண்மையில் இது பயன்படுத்திடுவதற்கு கடினமானதும் விலைஅதிகமானதும் அன்று  முதலில் நம்முடைய தொலைகாட்சி பெட்டியின் கம்பிகளை இணைப்பதற்கான HDMI எனும் வாயிலில்ஒரு Chromecast அல்லது Amazon Fire TV stick  ஐ மிகச்சரியாக பொருத்துக  பின்னர் நாம் தொலைகாட்சிபெட்டிகளில் விளையாடுவதற்காக பயன்படுத்திடும்  ஒரு PlayStation அல்லது Xbox வாயிலாககூட இந்தசாதனங்களை தொலைகாட்சி பெட்டியுடன் இணைக்கமுடியம்

2

அதன்பிறகு அருகிலிருக்கும் நம்முடைய கணினியின்System Settingஎன்ற அமைவு திரையில் Project to second screen என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் Connect to a wireless display என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் நம்முடைய தொலைகாட்சிபெட்டியில்இணையஇணைப்பு உருவாகி நாம்பயன்படுத்த தயாராகிவிடும்

நம்முடைய செல்லிடத்துபேசியில் கூகுளின் கட்டளைகளை குரலொலிமூலம் செயல்படுத்தி நாம் விரும்பும் செயலை செய்திடமுடியும்

இதற்காக கூகுளின்திரையில் OK Google எனும் வாய்ப்பு செயலில் உள்ளதாவென உறுதிபடுத்தி கொள்க பின்னர் கூகுளின் பயன்பாட்டை Google App திரையில் திறந்துகொண்டு அதில்முதலில் Settings என்பதையும் பின்னர் Voiceஎன்பதையும் இறுதியாக OK Google detectionஎன்பதையும் தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து செயலிற்கு கொண்டுவருக இதன்பின்னர் நம்முடைய குரலொலிவாயிலாக“Okay, Google.” என்ற கட்டளையை இடுக உடன் நம்முடைய குரலொலிவாயிலான கட்டளையை செயல்படுத்த கூகுளானது தயாராகிவிடும்

1

  பின்னர் கூகுளின் ஏதேனுமொரு பயன்பாட்டை திறந்து செயல்படசெய்வதற்கு முதலில் குரலொலிவாயிலாக“Okay, Google.” என்ற கட்டளையை இடுக அதன்பின்னர் “Open OneNote” அல்லது “Open Angry Birds.”என்றவாறு குரலொலிவாயிலாக கட்டளையை இடுக உடன் நம்முடைய திரையை தொடாமலேயே இந்த குரலொலி கட்டளையினால் நாம் குறிப்பிட்ட பயன்பாடானது திரையில் தோன்றிடும்

இவ்வாறே ஏதேனுமொரு இணைய பக்கத்தை திறப்பதற்கு முதலில் குரலொலிவாயிலாக“Okay, Google.” என்ற கட்டளையை இடுகஅதன்பின்னர்“Open arugusarugublogspot dot com.” என்றவாறு குரலொலிவாயிலாக கட்டளையை இடுக உடன் நம்முடைய திரையை தொடாமலேயே இந்த குரலொலி கட்டளையினால் நாம் குறிப்பிட்ட இணைய பக்கமானது திரையில் தோன்றிடும்

2

இவ்வாறே நாம் காணும் காட்சிகளை நம்முடைய செல்லிடத்து பேசிவாயிலாக படப்பிடிப்பு செய்திடுவதற்காக முதலில் குரலொலிவாயிலாக“Okay, Google. take a photo” என்ற கட்டளையை இடுகஅதன்பின்னர் படப்பிடிப்பு செய்திட “Shoot.”என்றவாறு குரலொலிவாயிலாக கட்டளையை இடுக உடன் நம்முடைய திரையை தொடாமலேயே இந்த குரலொலி கட்டளையினால் நாம் காணும் காட்சியானது நம்முடைய செல்லிடத்து பேசியில் படபிடிப்பு செய்திடும் பணி துவங்கி விடும்

மேலும் ஒளிஒலி சேர்ந்த கானொளி காட்சிகளை படப்பிடிப்பு செய்திட குரலொலிவாயிலாக“Okay, Google.take a video.” என்ற கட்டளையை இடுக

அதுமட்டுமல்லாது நம்முடைய செல்லிடத்து பேசியில் உள்ள flashlight Wi-Fi ஆகிய செயல்களை செயலிற்கு கொண்டுவருவதற்காக கூட குரலொலிவாயிலாக“Okay, Google. turn flashlight (or Wi-Fi) on” என்ற கட்டளையை இடுக

மெதுவாக இயங்கும் கானொளிகாட்சிகளை(Slow-Motion Video) எவ்வாறு படபிடிப்பு செய்வது?

மெதுவாக இயங்கும் காட்சியானது ஒரு சிறந்த திரைக்காட்சி தொழில்நுட்பமாகும் இதில் காட்சிகள் முழுவதையும் மிகத்தெளிவாக பார்த்து விவரங்களை நன்கு அறிந்துகொள்ள இந்தமெதுவாக இயங்கும் கானொளிகாட்சிகள்(Slow-Motion Video) பெரிதும் பயன்படுகின்றன இந்த காட்சிகளை பெரும்பாலான நுகர்வோரின் படப்பிடிப்பு கருவிகளினால் படபிடிப்பு செய்யமுடியும்

1.3

இதற்கு அடிப்படையாக முதலில் நொடிஒன்றிற்கு 120 படக்காட்சிமுதல் frames per second (fps)300 படக்காட்சிகள் வரை படப்பிடிப்பு செய்திடவேண்டும் அதன்பின்னர் இதனை இயக்கி காட்சியாக காணும்போது நொடிக்கு24 படக்காட்சிமுதல் frames per second (fps)30 படக்காட்சிகள் வரைமட்டும் திரையில் காண்பிக்கப்படுகின்றது அதனால் படக்காட்சிகள் மிகமெதுவாக இயங்குமாறு செய்யபடுகின்றது

1.4

அதற்கடுத்ததாக இவ்வாறான படப்பிடிப்புகள் பகல் வெளிச்சத்தில் அல்லது அதிக வெளிச்சத்தில் படப்பிடிப்பு செய்தால் மட்டுமே இவ்வாறான மெதுவான கானொளிகாட்சிகள் தெளிவாக தெரியும்

மூன்றாவதாக 120 (fps) என்ற அளவு பொதுவான வழக்கமானகாட்சிகளுக்கும் 300(fps) ஆனது நாம் நடந்துசெல்வதுபோன்ற காட்சிக்கும் 600(fps) ஆனது மனிதனின் நடமாட்டத்தை அறிந்துகொள்வும் 1000 (fps)முதல் 1200 (fps)வரை வழக்கமான மனிதர்கள் விலங்குகளின் இயக்கத்தை காண்பதற்கான மெதுவாக இயங்கும் காட்சிகளுக்கும் 5000(fps)முதல் 10000(fps)வரை பறக்கும் பறவை வேகமாக ஓடிடும் மிருகங்களை காட்சிகளாக காணவும் படக்காட்சிகள் அமைக்கபடுகின்றன

நான்காவதாக படப்பிடிப்பு செய்துவந்த கானொளிகாட்சிகளைநொடிக்கு 24 படக்காட்சிமுதல் frames per second (fps)30 படக்காட்சிகள் வரைமட்டும் திரையில் காண்பிக்குமாறு சரிசெய்திடவேண்டும் அதாவது படக்காட்சிகளின் இயங்கும் வேகத்தை 100 சதவிகிதத்திற்கு 25 சதவிகிதமாக குறைந்து இயங்குமாறு செய்திடவேண்டும்

 HTML  கோப்பினை JPG  கோப்பாக உருமாற்றம் செய்திடமுடியும்

ஒருவர் தான் அலுவலகத்தில் பணிபுரியாத நபர் என்றும் தனக்கு  உரைவடிவத்தில் உள்ள  ஒருகடிதத்தை .html எனும் பின்னொட்டுடன் கூடிய கோப்பாக ஏதோவொரு இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம்செய்ததாகவும் அதனை  வேறொரு தளத்தில் பதிவேற்றம் செய்திடும்போது  அந்த தளமானது இந்த .html எனும் பின்னொட்டுடன் கூடிய கோப்பினை ஏற்கவில்லை அதற்கு பதிலாக  .jpeg எனும் பின்னொட்டுடன் கூடிய கோப்பாக  மட்டும் பதிவேற்றம் செய்திடும்படி கோரியதாகவும் லிபர் ஆஃபிஸ் பயன்பாட்டில் கூடஇந்த  .html எனும் பின்னொட்டுடன் கூடிய கோப்பினை .jpeg எனும் பின்னொட்டுடன் கூடிய கோப்பாக   உருமாற்றம் செய்யமுடியவில்லையே என்ன செய்வது என தவித்துகொண்டிருந்தார்.  அதனால் முதலில் அவர் அந்த   .html எனும் பின்னொட்டுடன் கூடிய கோப்பினை  அச்சிட்டு அதன்பின்னர் அந்த அச்சிட்ட தாளை வருடசெய்து .jpeg எனும் பின்னொட்டுடன் கூடிய கோப்பாக உருமாற்றம்செய்து அந்த குறிப்பிட்ட தளத்தில் பதிவேற்றம் செய்ததாகவும் இதற்கான சுலபமானவழிமுறை ஏதேனுமுள்ளதாவென கோரினார்

1.1

வழிமுறை1.உரைகோப்பான ஒருகடிதத்தை .html எனும் பின்னொட்டுடன் கூடிய கோப்பாக குறிப்பிட்ட தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்திடாமல் அந்த கடிதத்தினை முதலில் இணைய உலாவியின் வாயிலாக  திரையில் தோன்றிடசெய்திடுக பின்னர்  அந்த பக்கத்தின்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Save Image As என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது

1.2

வழிமுறை2.இந்தவழிமுறையில் குறிப்பிட்ட பக்கமானது திரையில் தோன்றியிருக்கும்போது விசைப்பலகையிலுள்ள PrtScn எனும் விசையை அழுத்துக உடன் அந்த பக்கமானது JPG அல்லது PNG அல்லது Tiff ஆகியவற்றுள் ஒன்றான உருவபடமாக சேமிக்கபட்டுவிடும்  அதன்பின்னர் விண்டோவின் பெயின்ட் எனும் பயன்பாட்டின் வாயிலாக குறிப்பிட்ட கோப்பினை திறந்து   JPGஎனும் பின்னொட்டுடன் கூடிய கோப்பாக சேமித்துகொள்க

வழிமுறை3. இதற்காகநேரடியாக இணையத்தில் https://convetio.co/html-jpeg/   எனும் பக்கத்தில் தேவையான  .html எனும் பின்னொட்டுடன் கூடிய கோப்பினை பதிவேற்றம் செய்தபின் convertஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து .jpeg எனும் பின்னொட்டுடன் கூடிய கோப்பாக உருமாற்றம்செய்து  கொள்க

Previous Older Entries