தனியாள் இசைக்கான கணினியில் Musical InstrumentDigital Interface (MIDI) எனும் செந்தரத்தை செயல்படுத்திடலாம்

  ஒருமின்னனு இசைக்கருவியும் கணினிக்குமான இடைமுகத்தின்நெறிமுறையையே இந்த MIDI எனும் சிறந்த செந்தரம் விவரிக்கின்றது அதாவது மிகப்பெரிய இசைக்குழுவினால் இசைக்கபடும் இசையைகூட சாதாரணமாக ஒரு தனியாள் கணினியால் மெய்நிகர் இசைக்கருவிகளை கொண்டு மிகஎளிதாக ஒருசில நிமிடங்களில் உருவாக்கி இசைத்திடமுடியும் என்பதிலிருந்து இதனுடைய எளிமையை தெரிந்து கொள்ளமுடியும் நாம் பயன்படுத்திடும் செல்லிடத்து பேசிஅழைப்பு ஒலிகள் இணையதளங்களில் இசைக்கபடும் இசை ஆகியவை இந்த MIDI இசைகோப்பின் வடிவமைப்பிலேயே உள்ளன என்ற கூடுதலானதகவலையும் தெரிந்துகொள்க இந்த MIDI இசைகோப்பின் வடிவமைப்பானது ஒலி தொகுப்பு கோப்பு போன்று முன்கூட்டியே இசைக்கபட்டு பதிவுசெய்யபட்டது என்ற அடிப்படை தகவலையும் மனதில் கொள்க நாம் வரிவ எழுத்துகளை படிப்பதற்கு எழுதுவதற்கும் உதவிடும் எழுத்துருக்களை(fonts) போன்று இசைகளை உருவாக்கிடவும் இசைத்திடும் இசைக்குறிகள் அல்லது இசையுருக்கள்(sound fonts) ஆனது ஒவ்வொரு இசைக்கருவிக்கும் அதனதன் வெவ்வேறு இசை நிகழ்விற்கு ஏற்ப உருவாக்கபட்டு தனியானதொருகோப்பாக பராமரிக்கபடுகின்றது அவற்றிலிருந்து நாம் உருவாக்கவிழைவேதற்கேற்ற இசையானது கணினியின் கட்டளைவரிதொடர் அல்லது கட்டநிரல்தொடர்மூலம் தொகுக்கபட்டு இசைக்கபடுகின்றது பொதுவாகMusicscore எனும் நிரலிபோன்றவை இந்த MIDI இசைகோப்பினை கொண்டு நாம் விரும்பும் சிறந்த இசைத்தொகுப்பினை உருவாக்கிட உதவிடுகின்றது ஆயினும் பெரும்பாலானவர்களால்   இந்த MIDI இசைகோப்பினை திறந்து செயல்படுத்திட முடியாது மேலும் ஒரு சில இசைப்பான்கள் இந்த MIDI இசைகோப்பின் வடிவமைப்பினையே ஆதரிக்காது உதாராணமாக VLCஇசைப்பானால்FluidSynth எனும் இணைப்பு இல்லாமல் இந்த MIDI இசைகோப்பினை படிக்கஇயலாது இவ்வாறான பிரச்சினையை ஸிந்தெடிக் பேக்கேஸ் மேனேஜரை கொண்டு சரிசெய்து கொள்ளலாம் இவற்றுள் TiMidity++என்பது   இசையுருக்கள்(sound fonts) கொண்ட கோப்பாகும் இது ஒவ்வொரு இசைக்கருவிக்குமென தனித்தனி இசைக்குறிகள் அல்லது இசையுருக்கள்(sound fonts) தன்னகத்தே தனியாக வைத்துள்ளது இந்த   இசையுருக்கள்(sound fonts) கொண்ட கோப்பானது என்ற கோப்பானது .sf2என்ற பின்னொட்டுடன் இருக்கும் அதனை நம்முடைய கணினியில் நிறுவிகொள்க fluid-Soundfonf-gm,fluid-soundfont-gs,musescore-soundfont-gm போன்றவை இசைக்கான இசைக்குறிகள் அல்லது இசையுருக்கள்(sound fonts) கொண்ட மிகப்பிரபலமான கோப்புகட்டுகளாகும் இவைகளையும் தேவையெனில் நிறுவி வடிவமைப்பு செய்து பயன்படுத்தி கொள்க

நம்முடைய தேவைக்கேற்ற வலைபின்னலை நிருவகிக்கும் சிறந்த திறமூல கருவிஎது?

 பெரும்பாலானவர்கள் மேம்படுத்துதலுக்கும் அல்லது வலைபின்னலின் நிருவாகிக்கும் தேவையான பயன்பாட்டு சேவையாளரை நிருவகிப்பதில் எந்த கருவியை தெரிவுசெய்வது என குழப்பத்துடன் தவித்திடுவார்கள் பொதுவாக ஒரு வலைபின்னலின் சாதாரணமான நிருவாக நெறிமுறை SNMP(Simple Network Management Protocol) என்பதன் அடிப்படையிலேயே நிருவாகியானவர்   வலைபின்னலை நிருவகிக்கின்றார் அவ்வாறான செயலிற்காக தற்போது ஏராளமான கருவிகள் இருந்தாலும் இங்கு Nagios,Zabbix,Zenossஆகிய சிறந்த மூன்ற கருவிகளை மட்டும்பார்ப்போம்

Nagios என்ற கருவி முதன்முதல்1999இல் லின்க்ஸிற்காக உருவாக்கபட்டாலும் தற்போது யுனிக்ஸிலும் செயல்படும் திறன்கொண்டதாக வளர்ந்துவிட்டது இது ஒரு திறமூல மென்பொருளாகும் இதனை PHP,Python,Ruby,C++,Perl ஆகிய எந்த மொழியில் வேண்டுமானாலும் நமக்கு தேவையானவாறு கட்டளைகளை சேர்த்து வளர்த்து வளப்படுத்தி கொள்ளலாம் நடப்பிலுள்ள வலைபின்னலின் நிலை, அதனைபற்றிய அறிவிப்ப,உள்நுழைவு கோப்பு போன்ற எந்த தகவல்களையும் இணையத்தின் மூலம் இடைமுகம் செய்து அறிந்து கொள்ளலாம். வலைபின்னலின் வாயிலாக மைக்ரோசாப்ட் விண்டோ போன்ற எந்தவொரு இயக்கமுறைமையையும் இதன்மூலம் நிருவகிக்கமுடியும்

Zabbix இது PHP,C,java ஆகிய மொழிகளால் உருவாக்கபட்டது இது ஆயிரகணக்கான சாதனங்களை மிகஎளிதாக மிகஅதிக திறனுடன் கையாளும் திறன்கொண்டது. அனுமதிக்கபட்ட பயனாளர் ,நெகிழ்வுதன்மையுடனான அனுமதி ஆகிவற்றின் அடிப்படையில் இணைய இடைமுகம் செய்ய இது அனுமதிக்கின்றது இது MySQL,SQLite Oracle ஆகிய தரவுதளங்களில் சேகரிக்கபடும் தரவுகளை தேக்கிவைத்து பராமரிக்கின்றது லின்க்ஸ் விண்டோ ஆகிய இயக்கமுறைமைகளை செயல்படும் திறன்மிகுந்தது. கைவசம் குறைந்த அளவே காலி நினைவகம் உள்ளது என்ற எச்சரிக்கை செய்தியை நமக்கு குறுஞ்செய்தி சேவைவழியாக எச்சரிக்கும் திறன்கொண்டது

Zenoss இது Zope application server என்பதன் அடிப்படையில் செயல்படும் சேவையாளரையும் வலைபின்னலை நிருவகிக்கும் தளமாகவும் செயல்படும் ஒரு திறமூலபயன்பாட்டு மென்பொருளாகும் இது பயனாளருக்கு எளிதாக புரிந்துகொள்ளும் வண்ணம் எளிதான இணைய இடைமுகம் கொண்டதாகும் இது கூகுள்மேப்ஸ் வாயிலாக உலகமெலாம் பயன்படும் திறன்கொண்ட சேவையாளராக விளங்குகின்றது. SNMP,SSH ,WMI(Windows Management Instrumentation) ஆகிய வற்றில் இது நன்கு செயல்படக்கூடியது.   மிகமுக்கிய.மாகஇதுNagios என்ற கருவியையும் உள்ளிணைத்து செயல்படும் திறன்கொண்டது. மேலும் இதுதொடர்ச்சியான நிகழ்வுகளையும் சாதனங்களையும் நிருவகிக்கும் திறன்கொண்டது.

தெரிந்துகொள்வோம் மானிட் எனும் வலைபின்னலை நிருவகிக்கும் திறமூல கருவியை

 பொதுவாக வலைபின்னலை பற்றி தெரிந்து கொள்ள விழைபவர்கள் அதன்தொடக்கநிலையில் வலைபின்னலின் சாதாரணமான நிருவாக நெறிமுறையில் SNMP(Simple Network Management Protocol) சேவையாளரை, நிருவகிப்பது இணைப்பு சாதணங்களை நிருவகிப்பது ஆகிய இரண்டுமட்டுமே அடிப்படை செயல்களாகும் என தெரிந்துகொள்க.   இந்த வலைபின்னலில் இணைக்கபட்டுள்ள சாதனங்களை நிருவகிப்பதால் கிடைக்கும் தகவல்களும் அதனை அட்டவணையாக தேக்கி வைத்திடும் செயலும் சேவையாளர் நிருவகிக்கும் செயலை சார்ந்துள்ளது. ஆயினும் இவ்வாறான தரவுகள் மிகச்சரியாக பயன்படுத்தபடவில்லையெனில் இவ்வாறு தரவுகளை வலைபின்னலின் வாயிலாக இவ்வுலகில் எங்கோ ஒருஇடத்திலுள்ள சாதனங்களில் தேக்கிவைப்பதால் பயன்ஏதும் இல்லை.இந்நிலையில் இந்த வலைபின்னலில் தேக்கிவைக்கபடும் தரவுகளை மிகச்சரியாக பயன்படுத்தி கொள்ள உதவுவதுதான் வலைபின்னலை நிருவகிக்கும் கருவியாகும் அதாவது வலைபின்னலை பற்றி ஒன்றும் தெரியாது அல்லது அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என தெரியாது என தடுமாறும் புதியவர்ளுக்கு கைகொடுப்பதுதான் இந்த மானி்ட் எனும் திறமூல கருவியாகும்

Apache,MySQL,Sendmail போன்ற daemon செயல்களை நிருவகித்திட அல்லது கட்டுபடுத்திட இந்த மானி்ட் எனும் திறமூல கருவி பயன்படுகின்றது

இது MD5 SHA1ஆகிய கோப்புகளை சரிபார்ப்பதன் வாயிலாக கோப்புகளையும் கோப்பகங்களையும் உள்ளூர் இணைப்பு தளங்களில் நிருவகித்திடுகின்றது அல்லது கட்டுபடுத்துகின்றது ஏதனும் வித்தியாசமாக இருந்தால் உடன் நமக்கு எச்சரிக்கை செய்கின்றது

இணைய வலைபின்னலுடன் இணைக்கபட்டுள்ள சேவையாளரானவர்   உள்ளூர் தளசேவையாளரா அல்லது தூரத்து சேவையாளரா என அச்சேவையாளரை பரிசோதித்து சரிபார்த்து நமக்கு அறிவிப்பு செய்கின்றது

இது சிபியூ பயன்பாடு, நினைவகத்தின் பயன்பாடு ஆகிய   உள்ளூர் தளத்தின் வளங்களை சரிபார்த்து நிருவகிக்கின்றது ஏதனும் தவறு ஏற்பட்டவுடன் இந்த மானிட் எனும் கருவியானது உடன் தானியங்கியாக அதனை சரிசெய்து இணைய வலைபின்னலை மிகச்சரியாக செயல்படும்படி பராமரிக்கின்றது

ட்விட்டர்(twitter) ஸ்கிரைப்டு(scribd) ஆகிய இணைய தளங்கள் இந்த மானிட் எனும்கருவியே நிருவகிக்கின்றது என்ற கூடுதல் தகவல்களை.யும் மனதில் கொள்க

Ruby, Mongrel ஆகிய சேவையாளர்கள் மட்டுமல்லாது ,SSH nginx என்பன போன்ற ஏராளமான சேவையாளர்களையும்இது நிருவகித்து கட்டுபடுத்திடுகின்றது வலைபின்னல் செயல்படும்போது எந்தநிலையில் தவறு ஏற்பட்டாலும் உடன் அதனை சரிசெய்து அடுத்தநிலைக்கு கொண்டுசெல்வது மட்டுமல்லாது அதனைபற்றிய எச்சரிக்கை செய்தியையும் நமக்கு வழங்குகின்றது என்பதே இதன் சிறப்பு தன்மையாகும் இதனை பற்றி மேலும் அறி்ந்து கொள்ளhttp://mmonit.com/monit/ என்ற இணைய தளத்திற்கு செல்க.

அறிந்துகொள்கஇணைய வலைபின்னலிற்கான பல்வேறு திறமூலகருவிகளை பற்றி

 

1.இணைய வலைபின்னலிற்கான அதனுடைய தகவல் போக்குவரத்தை கட்டுபடுத்தி கண்காணித்திடும் மிகச்சிறந்த கருவியாக Multi Router Traffic Grapher (MRTG) என்ற திறமூல மென்பொருள் உள்ளது

2.இணைய வலைபின்னலின் தகவல் போக்குவரத்தை கட்டளை வரிகளின் மூலம் கட்டுபடுத்தி கண்காணித்திடும்மிகச்சிறந்த கருவியாக TCPdump என்ற திறமூல மென்பொருள் உள்ளது இது தகவல்களை தனித்தனி பொட்டலங்களாக பிரித்து ஆய்வுசெய்து அனுமதிக்கின்றது

3.வாடிக்கையாளர் விரும்பும் படியான இணைய வலை பின்னலை கண்காணித்ததிட NetDirector என்ற திறமூல மென்பொருள் உள்ளது

4. இணைய வலைபின்னலில் Simple Mail Transfer Protocol (SMTP), Post Office Protocol 3 (POP3), Hypertext Transfer Protocol (HTTP), போன்றவைகளை கண்காணித்து கட்டுபடுத்திடுவதுமட்டுமல்லாமல் temperature, humidity, or barometric pressure போன்றவைகளுக்கேற்ப இணைய வலைபின்னல் செயல்படுமாறு செய்திட Nagios எனும் திறமூல மென்பொருள் பயன்படுகினறது

5. Nessus எனும் திறமூல மென்பொருளானது இணைய வலைபின்னலில் நம்முடைய பாதுகாப்பிற்காக தகவல்களை வருடுதல் செய்து பாதுகாப்பு குறைபாடு ஏதேனுமிருந்தால் நமக்கு அறிவிப்பு செய்கின்றது

6. OpenNMS defined (Open Network Management System) எனும் திறமூல கருவியானது அதனை இயக்குபவர் இல்லாமலேயே இணைய வலைபின்னலில் தானியங்கியாக செயல்பட்டு இணைய வலைபின்னலின் தகவல் போக்குவரத்தை கட்டுபடுத்துகின்றது

7. Nmap:எனும் திறமூல கருவியானது இணைய வலைபின்னலில் சிறந்த பாதுகாப்பு அரனாக விளங்கி வலைபின்னலிற்கான தகுந்த பாதுகாப்பினை வழங்குகின்றது

கணினியில் பணிபுரியும்போது கவணிக்கவேண்டிய குறிப்புகள்

 

1.தொடர்ச்சியாக கணினிமுன் அமர்ந்த பணிபுரிபவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அதாவது குறைந்த பட்சம் மணிக்கு ஒருமுறையாவது நாம் அமர்ந்திருக்கும் இருக்கையை விட்டெழுந்து காலாற அலுவலகத்தை சுற்றி நடந்து வந்தபின் தத்தமது பணியை தொடர்ந்து செய்திடுக

2.நாளொன்றிற்கு இரண்டு லிட்டர் அளவிற்கு குறையாமல் தண்ணீர் குடித்திடுக

3. தொடர்ந்து நாள்முழுவதும் பணிசெய்வதற்காக கணினியின் திரையை கண்களால் பார்த்து கொண்டே இருப்பதால் கண்ணிற்கு சோர்வும் கண்ணின் ஈரப்பசை காய்ந்தும் இருக்கும் அதனால் அரைமணிநேரத்திற்கு ஒருமுறை கண்களை பத்துமுறை சிமிட்டுதல் செய்து அதாவதுகண்களை பத்துமுறை மூடிதிறந்திடுக

4. நாம் பணிபுரியும் கணினியும் நாம் அமரும் நாற்காலியும் சரியான கோணஅமைவில் நம்முடைய உடல் அமர்ந்து பணிபுரிந்திடுமாறு பார்த்துகொள்க இல்லையெனில் முதுகுவலியும் கழுத்துவலியும் நமக்கு கணினியில் பணிபுரிவதால்இலவசமாக வந்துசேரும்

5. கணினியில் தொடர்ந்து பணிபுரிவதை தவிர்ப்பதற்காக அவ்வப்போது இடைவேளை விடுவதாக கூறிக்கொண்டு ஏராளமான எண்ணிக்கையில் காஃபி அருந்தவேண்டாம் காஃபியை அவ்வப்போது நாம் அருந்துவதால் நம்முடைய உடலிற்குள் காஃபின் அதிகஅளவு சேர்ந்து நம்முடைய உடல்நிலையை பாதிப்படைய செய்கின்றன

6. பணிஇடைவேளையில் சமோசா போன்றவைகளை உண்பதும் ,கோக்கோகோலா போன்றவைகளை அருந்துவதையும் தவிர்த்து பழங்களை உண்ணும் பழக்கத்தை பின்பற்றிடுக.

7. வெப்பமிகுந்த அறைகளிலிருந்து ஈரப்பதம் அதிகமாகஉள்ள கணினிவைத்துள்ள அறைக்குள் அடிக்கடி சென்றிடும்போது சிறிதுநேரம் நம்முடைய உடல் அம்மாற்றங்களை ஏற்குமாறு நின்று நிதானித்து செல்க

8. நம்முடைய உடல்நிலை சரியில்லாதபோதும் அலுவலகம் வந்து கணினிமுன் அமர்ந்து பணிபுரிவதை தவிர்த்து ஓய்வுஎடுத்து உடல்நிலை சரியானபின் அலுவலகம் செல்க

9. கூடியவரை இயற்கையான சூரியஒளி காற்றோட்டம் போன்றவை அலுவலக அறைக்கு கிடைக்குமாறு அமைத்திடுக.

லிபர் ஆஃபிஸ் 4. தொடர்-3

  லிபர் ஆஃபிஸின் அனைத்து பயன்பாடுகளிலும் பொதுவாக Options.எனும் கட்டளை செயல்படுத்த படுகின்றது இதனை செயற்படுத்திட அனைத்து பயன்பாடுகளின் திரையின் மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளுள் Tools => Options=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக உடன் Options-LibreOffice-என்ற உரையாடல் பெட்டி இரு பலகங்களாக பிரிந்து திரையில் தோன்றிடும் அதன் இடதுபுற பலகத்தில் (+) என்ற குறிகளுடன் பல்வேறு கட்டளைகள் பட்டியலாக தோன்றிடும் அதில் ஏதேனும் ஒன்றினுடைய + என்ற குறியை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் (+) என்ற குறியானது (-) என்ற குறியாக மாறி அதனுடைய துனை கட்டளைகள் கீழிறங்கு பட்டியலாக விரியும் அதனுோடு கூடவே தொடர்புடைய பக்கத்தின் பல்வேறு வாய்ப்புகள் இதே பலகத்தின் வலதுபுறபலகத்தில் விரியும் இவ்வாறு கீழிறங்கு பட்டியலாக விரியும் துனை கட்டளைகள் ஒருசில பொதுவானவையாகவும் வேறுசில அந்தந்த பயன்பாடுகளுக்கேயுரியவையாகவும் இருக்கும்

3.1

3.1

   நாம் மற்ற நிறுவனங்களுக்கு கடிதங்களை அறிக்கைகளை அனுப்பிடும்போது நம்முடைய நிறுவனத்தின் படத்துடன்(Logo) அனுப்பினால் பெறுபவர் தன்னால் பெறப்பட்ட குறிப்பிட்ட கடிதம் அல்லது அறிக்கையானது குறிப்பிட்ட நிறுவனத்தினுடையது என பார்த்தவுடன் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் வகையில் மாதிரிபடிமம் (template)பயன்படுகின்றது இந்த மாதிரிபடிமத்தின் (template) உள்ளடக்கங்களாக ஒரு நிறுவனத்தின் படம் மட்டுமல்லாது(Logo) உரை, வரைபடம் ,பயனாளர் குறிப்பிடும் தகவல்கள், கருவிபட்டை பட்டியல் ,இயல்பு நிலையில் அச்சிடும் பொறியுடன் இணைப்பு என்பன போன்றவை இருக்கும். இந்த மாதிரி படிமத்தினை text, spreadsheet, drawing, presentation என்றவாறு அந்தந்த பயன்பாட்டின் வகைக்கு ஏற்றவாறு உருவாக்கி குறிப்பிட்ட பயன்பாடு இயங்க துவங்கிடும்போது திரையில் இயல்புநிலையில் தோன்றிடுமாறு அமைத்து கொள்ளலாம். அதற்காக இப்பயன்பாடுகளின் திரையின் மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளுள் File => Save As Template => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக அல்லது விசைப்பலகையிலுள்ளCtrl + S. ஆகிய விசைகளை அழுத்துவதன் மூலம் சேமித்து கொள்ளமுடியும். மேலும் இப்பயன்பாடுகளின் திரையின் மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளுள் File => Wizards=> [type of template required]=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக உடன் திரையில்தோன்றிடும் வழிகாட்டி கூறுகின்றவாறு பின்பற்றி புதிய மாதிரி படிமத்தினை உருவாக்கிகொள்ளமுடியும்

 3.2

3.2

ஒரு ஆவணத்தின் குறிப்பிட்ட பக்கத்திலுள்ள உரை , அதன் வடிவமைப்பு ,ஒட்டுமொத்த தோற்றம் போன்றவை எவ்வாறு இருக்கவேண்டும் என அமைப்பதையே பாவணை(style) என குறிப்பிடுவர் இதில் பக்கங்களின் வடிவமைப்பிற்கு உதவிடPage styles என்பதையும், பத்திகளுக்காக Paragraph styles என்பதையும், சுற்றெல்லை வடிவமைப்பிற்காக Frame stylesஎன்பதையும், கருத்துருக்களின் வகைகளை குறிப்பிட Numbering styles என்பதையும், எழுத்துருவிற்காக Cell styles என்பதையும், வரைபடங்களுக்காகGraphics styles என்பதையும் , படவில்லை காட்சிகளுக்காக Presentation stylesஎன்பதையும் லிபர் ஆஃபிஸில் பாவணைகளாக ஆதரிக்கபடுகின்றது

இதனை செயற்படுத்திட இப்பயன்பாடுகளின் திரையின் மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளுள்Format =>Styles and Formatting=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக அல்லது விசைப்பலகையிலுள்ளF11. என்றவாறு விசையை அழுத்துக உடன் Styles and Formattingஎன்ற உரையாடல் பெட்டிதிரையில் தோன்றிடும் அதில் தேவையானவாறு வாய்ப்புகளை அல்லது கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்தி அமைத்து கொள்க.

3.3

3.3

எம்எஸ் எக்செல்லின் காலியான கலணில் 0 வராமல் தவிர்க்க ஆலோசனை

 எம்எஸ் எக்செல்லை பயன்படுத்தி ஒரு அட்டவணையிலுள்ள தரவுகளின் சாராம்சத்தை மற்றொரு பணித்தாளிற்கு கொண்டுசெல்லும்போது அவ்வட்டவணையில் காலியாக உள்ள கலணின் மதிப்பானது புதிய இடத்தில் 0 என காண்பிக்கும் புதிய இடத்திலும் அவ்வாறே தரவுகளை தவிர மற்றவை காலியாக இருந்தால் நல்லது என எண்ணிடுவோம் அந்நிலையில் =IF(ISBLANK(Report!B4),””,Report!B4) என்றவாறு வாய்ப்பாட்டினை பயன்படுத்தினால் தரவுஇருந்தால் மட்டும் தரவுகளை புதிய இடத்தில் காண்பிக்கும் இல்லையெனில் காலியாக மூல அட்டவணையில் உள்ளவாறு காலியாக காண்பிக்கும் இங்கு   Report!B4 என்பது மூல அட்டவணையின் கலணினி்ன்முகவரியாகும்

அதற்குபதிலாக வேறுவகையில் இதனை செயற்படுத்திட   திரையின் மேலே கட்டளைபட்டியிலுள்ள File எனும் பட்டியை திறக்க செய்க அதன் இடதுபுறத்தில் உள்ள கட்டளைகளுள் Options என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் Options என்ற உரையாடல்பெட்டியின் இடதுபுற பலகத்தில் Advanced என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் வலதுபுற பலகத்தில் Display options for this worksheet என்ற வாய்ப்பு தோன்றிடும் வரை சுட்டியால் அதற்கான நகரும் பொத்தானை பிடித்து நகர்த்தி சென்று விட்டிடுக அதன் பின்னர் இந்த Display options for this worksheet என்ற வாய்ப்பிற்கு கீழ் உள்ள Show a zero in cells that have zero values என்ற துனை வாய்ப்பு தெரிவுசெய்யபட்டிருந்தால் அதனை நீக்கம் செய்தவிட்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கு இதன்பின்னர் ஒரு அட்டவணையிலுள்ள தரவுகளின் சாராம்சத்தை மற்றொரு பணித்தாளிற்கு கொண்டுசெல்லும்போது தரவுஇருந்தால் மட்டும் தரவுகளை புதிய இடத்தில் காண்பிக்கும் இல்லையெனில் காலியாக மூல அட்டவணையில் உள்ளவாறு காலியாக காண்பிக்கும்

Previous Older Entries