வேர்டுபிஸ்(wordpress)எனும் இணையபக்கத்தை கட்டமைப்பதற்கான திறமூலகருவி

 

வேர்டுபிஸ்(wordpress) என்பது இலவசமான திறமூல பிஹெச்பி ,மைஎஸ்கியூஎல், உள்ளடக்கமேலாண்மை ஆகியவை உள்ளடக்கிய வலைபூக்களை உருவாக்கி பராமரித்திட உதவுகின்றது இதனுடைய பல்வேறு திறன்மிகுந்த வசதிகளாலும் வாய்ப்புகளாலும் ஒரு மிகபிரபலமான வலைபூக்களின் பூங்காவாக திகழ்கின்றது. இது வேர்டுபிரஸ் ஆர்ஜ் என்றும் வேர்டுபிரஸ் காம் என்றும் இருதளங்களாக பொதுமக்களுக்கான சேவையை வழங்குகின்றது. இதனை நம்முடைய கணினியில் எவ்வாறு நிறுவி பயன்படுத்துவது என பயனாளர் ஒருவர் கவலைபடாமல் பயன்படுத்தி கொள்ளமுடியும் இதனை பற்றி மேலும் அறிந்துகொள்ள http://www.wordpress.com/   அல்லது http://www.wordpress.org/   ஆகிய இணைய பக்கங்களுக்கு செல்க

1.2.3

ஆல்ஃப்ரஸ்கோ (alfresco)எனும் இணையபக்கத்தை கட்டமைப்பதற்கான திறமூலகருவி

ஆல்ஃப்ரஸ்கோ (alfresco) என்பது பல்வேறு வசதிகளைகொண்டதொரு உள்ளடக்கமேலாண்மையாக மிக முக்கியமாக மேம்பட்ட நிறுவன உள்ளடக்க மேலாண்மையாக எந்த நிலையையும் தாங்கி செயல்படக்கூடியதாகவும் மேககணினி வழங்குநரை நிருவகிக்க வல்லதாகவும் விளங்குகின்றது. ஆவணத்தை நிருவகிப்பதிலும் இணைய உள்ளடக்க மேலாண்மை செய்வதிலும், தொகுபதிவுநிலை பதிப்பாகவும், ஆவணங்களை மேலாண்மை செய்வதாகவும், உருவப்படங்களை மேலாண்மை செய்வதிலும், அமைவு நிருவகிப்பதை அறிந்துகொள்வதாகவும் இது அமைந்துள்ளது இது திறமூல நிறுவன உள்ளடக்க மேலாண்மையாக 2005 ஆம் ஆண்டு முதல் விளங்குகின்றது. உள்ளடக்கமேலாண்மையின் இடைச்செருகலாகவும் மிகமுக்கியமாக மற்ற உள்ளடக்க மேலாண்மை மென்பொருளிற்கான இடைச்செருகலாகவும் இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் விண்டோ, லினக்ஸ், மேக்ஸ் என அனைத்து இயக்கமுறைமைகளிலும் இயங்குவதாகவும் ஆரக்கிள் மைக்ரோசாப்ட் எஸ்கியூஎல் மைஎஸ்கியூஎல் போன்ற பல்வேறு தரவுதளங்களை ஆதரிப்பதாகவும் அஜாக்கின் எக்ஸ்ஃபார்மை ஆதரிப்பதாகவும் கூகுள், குரோம் ,ஃபயர்ஃபாக்ஸ் என்பன போன்ற இணைய உலாவியை ஆதரிப்பதாகவும் ஒப்பன் ஆஃபிஸ், மைக்ரோசாப்ட் ஆஃபிஸ் ,லிபர் ஆஃபிஸ் ஆகியவற்றை ஆதரிக்கும் திறன்கொண்டதாகும் இது விளங்குகின்றது இதனை பற்றி மேலும் அறிந்துகொள்ள http://www.alfresco.com/     என்ற இணைய பக்கத்திற்கு செல்க

1.2.2

 

 

 

லைஃப்ரே (liferay) எனும் இணையபக்கத்தை கட்டமைப்பதற்கான திறமூலகருவி

ஒரு பயன்பாடு அல்லது பயன்பாட்டு தொகுதியானது இணைய பக்கங்களின் உள்ளடக்கங்களை நிருவகிக்க பயன்படுவதையே உள்ளடக்க மேலாண்மை அல்லது இணைய பக்கங்களின் மேலாண்மையாகும் திறமையை வெளிபடுத்திட தேவையான தொழில்நுட்பம் நிறைந்த இணைய தளங்களை போதிய அனுபவம் இல்லாதவர்கள் கூட நிருவகிக்கவும் ஒத்திசைவு செய்திடவும் உள்ளடக்கங்களை நிருவகிக்கவும் இது உதவுகின்றது. இது இணையத்தை அடிப்படையாக கொண்ட வரைகலை,வரிசை படுத்துதலும் தேடுதலும்,சுழற்சி அடிப்படையிலான அனுகுதல், வரைகலை பணித்தொடர்,எண்ம நிலை மேலாண்மை,எங்கேயிருந்தும் அனுகுதல்,விரிவாக்கம், உள்ளடக்கங்களை மறு பயன்பாடு செய்தல்,பயனாளர் குறிப்பிடும் வகையில் சந்தைபடுத்துதல் என்பன போன்ற பல்வேறு பணிகளை உள்ளடக்கியதாகும் . திட்டஆவணங்களையும் சமீபத்திய தொழில்நுட்பங்களையும் மீட்டாக்கம் செய்தல், ஆவணங்களை திறனுடன் தேக்கிவைத்தல் ஆகிய தொகுதியானபதிவையும் சேவைக்கான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்காக பயன்படுத்திகொள்கின்றது. நிறுவனத்தின் உள்ளடக்க மேலாண்மை, இணையஉள்ளடக்கமேலாண்மை,வலைவாசல் உள்ளடக்க மேலாண்மை ஆவண மேலாண்மை எண்ம மேலாண்மை ஆகியன இந்த உள்ளடக்க மேலாண்மைக்கு சிறந்த எடுத்துகாட்டுகளாகும்.

லைஃப்ரே (liferay) என்பது இணைய பக்கங்களை உருவாக்குவதிலும் ஜிஎன்யூலெஸ்ஸர் அனுமதி, வியாபார அனுமதி ஆகியவற்றின் அடிப்படையில் ஜாவா மொழியில் இணைய பயன்பாடுகளை உருவாக்குவதிலும் சிறந்த நிறுவன வலைவாசலாக திகழ்கின்றது . வலைவாசலுக்கு தேவையான உறுப்புகளை ஒருங்கிணைத்து கட்டுவதிலும் இணைய பக்கங்களை மேம்படுத்துவதிலும் தேவையானபொதுவான வசதிகளை உள்ளடக்கங்களாக கொண்டதொரு இணைய தளமாகவும் இது விளங்குகின்றது இதனை பயன்படுத்துபவர்களுக்கு நிருவாகியாகவோ வழக்கமான பயனாளாராகவோ எளிதாக தரவுதள மேலாண்மை செய்வதற்கான திறனை வழங்குகின்றது. ஒரு கல்லூரியின் இணைய பக்கங்களில் அதன் நிருவாகி, பேராசாரியர்கள் ,மாணவர்கள் என அவரவர்கள் தத்தமது தேவைக்காக வெவ்வேறு பகுதியை ஒரே இணைய பக்கத்தை அனுகி இடைமுகம் செய்து செயல்படுத்தி கொள்வதை இதற்கு உதாரணமாக கொள்ளலாம். சுயசேவை வலைவாசலாகவும் இயக்கநேரஇணையபக்கமாகவும் மைக்ரோசாப்ட் அலுவலக பயன்பாட்டுடன் ஒத்தியங்கும் உள்ளடக்க ஆவணமேலாண்மையாகவும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு செய்துகொள்வதாகவும், சுட்டிகாட்டுதல் அனுகுதல் மேலாண்மை செய்வதற்கும் ,சமூக வலைதள பயன்பாடாகவும் பயன்பாடுகளின் ஒருங்கிணைப்பாளராகவும் ஒரேமாதிரியான ஆவணங்களின் தொகுதியாகவும் வாடிக்கையாளர்களின் இணையபக்கங்களின் பணிஇடத்தை உருவாக்குவதற்கான எந்தவொரு தரவுகளையும் பிரதிபலித்தலுக்கும் கையாளுவதற்குமான வெளியீடாகவும் உள்ளூர் வலைபின்னலாகவும் ஒத்திசைவுசெய்துகொள்ளும் இணைய தளமாகவும் குழுவான இணையபக்கங்களாகவும் இது விளங்குகின்றது இது உரை பதிப்பானாகவும்,இணைய பக்கங்களை உருவாக்குவதற்கான மறுபயன்பாட்டு மாதிரி பலகமாகவும் பயனாளரின் பணித்தொகுதியை இயக்குவதற்கும் ஒப்புதல் வழங்கிடவும் நேரடியாக இணைய பக்கங்களை பதிப்பித்தல் செய்வதற்கான திட்டமிடவும் ஆவணங்களை உருமாற்றம் செய்திடவும் பலஇணைய தளங்களை தேடிடுதல் பலமொழிகளில்தேடிடுதல் ஆகியவைகளை ஆதரிப்பதிலும் இயக்கநேர குறிச்சொற்களை நிருவகிப்பதிலும் சிறந்து விளங்குகின்றது இதனை பற்றி மேலும் அறிந்துகொள்ள http://www.liferay.com/ என்ற இணைய பக்கத்திற்கு செல்க

1.2.1

லிபர் ஆஃபிஸ் 4. தொடர்-2

லிபர் ஆஃபிஸினுடைய கருவிபட்டையின் பணிக்குறிகளில் வலதுபுறம் சிறு முக்கோண உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கினால் அதனுடன் இணைக்கபட்டுள்ள துனைபட்டியானது விரியும் அத்துனை பட்டியானது மேலும் ஏராளமான கருவிகளடங்கிய பணிக்குறிகளுடனான கருவிகளின் தட்டாக(tool palette) திரையில்(படம்2.1) விரிந்து மிதக்கும் இதனை மிதக்கும் கருவிபட்டையாகவும் (Floating toolbar) அல்லது நகரும் கருவிபட்டையாகவும்(moving toolbar) இணைக்கப்பட்டக் கருவிப்பட்டையாகவும்(docked toolbar) மாற்றியமைத்து கொள்ளமுடியும்

2.1

படம்-2.1

ஒரு கட்டபட்ட கருவிபட்டையின் இடதுபுறமாக படம்-2.2-ல் மேம்படுத்தி காட்டபட்டுள்ள சிறிய நெடுவரிசை பட்டையாகஇருக்கும் இக்கருவிபட்டையின் கைப்பிடியில் இடம்சுட்டியை நகர்த்தி சென்று அப்படியே சுட்டியின் இடதுபுற பொத்தானை அழுத்தி பிடித்து இக்கருவிபட்டியை இழுத்து கொண்டுசென்று புதிய இடத்தில் விட்டிடுக அதனோடு அழுத்திபிடித்திருந்த சுட்டியின் பொத்தானையும் விட்டிடுக அல்லது மிதக்கும் கருவிபட்டையின் தலைப்பு பட்டையை இடம்சுட்டியால் சொடுக்கி பிடித்து இழுத்து சென்று புதிய இடத்தில் விட்டிடுக. பின்னர்ctrlஎனும் பொத்தானை அழுத்தி பிடித்துகொண்டு இதே மிதக்கும் கருவிபட்டையின் தலைப்பு பட்டையை இடம்சுட்டியால் சொடுக்குக உடன் மிதக்கும் கருவிபட்டையானது கட்டபட்ட கருவிபட்டையாகிவிடும்

2.2

படம்-2.2

லிபர் ஆஃபிஸில் இதேபோன்று ஏராளமான வகையில் நம்முடைய தேவையை நிறைவுசெய்வதற்காக கூடுதலான கருவிபட்டைகள் நம்முடைய இடம்சுட்டியின் இடஅமைவிற்கேற்ப அல்லது நாம் தெரிவுசெய்த பணிகளுக்கு ஏற்ப திரையில் தோன்றிடும் அவைகளை தேவையெனில் திரையில் மேல்பகுதியில் அல்லது கீழ்பகுதியில் நிரந்தரமாக திரையில் இருந்திடுமாறு கட்டபட்டதாக வைத்துகொள்ளலாம். உதாரணமாக அட்டவணை(Table ) எனும் கருவியின் மீது இடம்சுட்டி மேலூர்தல் செய்தால் அதற்கான Tabletoolbarஎனும்கருவிபட்டையும் அதுமட்டுமல்லாது எண்ணிடல் அல்லது வரிசைபடுத்துதல் (numbered or bullet list)என்பதன்மீது இடம்சுட்டி மேலூர்தல் செய்தால் அதற்கான Bullets and Numberingtoolbarஎனும்கருவிபட்டையும்திரையில் தோன்றிடும்

இந்த கருவிகளின் பட்டையை வாடிக்கையாளர் விரும்பியவாறு எந்தெந்த உருவ பொத்தான்கள் இந்த கருவிபட்டையில் இருக்கவேண்டும் என புதியதை சேர்த்து கொள்ளுதல்அல்லதுபுதிய கருவிபட்டையையே சேர்த்தல் அல்லது நாம் விரும்பும் இடத்தில் இக்கருவிபட்டையை கட்டபட்டதாக செய்தல் என்றவாறு ஏராளமான வழிகளில் மாற்றியமைத்து கொள்ளலாம் இவ்வாறு வாடிக்கையாளர் விரும்பியவாறு மாற்றியமைத்திடுவதற்காக இடம்சுட்டியை ஏதேனும் இரு கருவிகளுக்கிடையே வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Visible Buttonsஎனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் பட்டியலில் தேவையானவைகளை தெரிவுசெய்து அல்லது தேவையற்றதை தெரிவுசெய்யாது விட்டிடுக. இதே சூழ்நிலை பட்டியில் Customise Toolbarஎனும்(படம்-2.3) கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Customise எனும் உரையாடல்பெட்டியில் நாம் விரும்பியவாறு மாறுதல்கள் செய்து கொள்க அவ்வாறே மற்ற வாய்ப்புகளையும் தெரிவுசெய்து நாம்விரும்பியவாறு கருவிபட்டையை மாற்றி அமைத்து கொள்ளமுடியும்
2.3

படம்-2.3

மேலே கூறியவாறு திறக்கும் உரையாடல் பெட்டியானது பொதுவாக திரையில் மிதந்து கொண்டிருக்கும் அதனை காலியான இடத்தில் வைத்துகொண்டு ctrlஎனும் பொத்தானை அழுத்தி பிடித்துகொண்டு இதே மிதக்கும் உரையாடல் பெட்டியின் தலைப்பு பட்டையை இடம்சுட்டியால் சொடுக்குக உடன் மிதக்கும் உரையாடல் பெட்டியானது கட்டபட்ட உரையாடல் பெட்டியாகிவிடும் அதன்பின் அதன் அளவையும் இடஅமைவையும் சரிசெய்து அமைத்துகொள்ளலாம் ctrlஎனும் பொத்தானை அழுத்தி பிடித்துகொண்டு இதேகட்டபட்ட உரையாடல் பெட்டியின் தலைப்பு பட்டையை இடம்சுட்டியால் சொடுக்குக உடன் இது மிதக்கும் உரையாடல் பெட்டியாக மாறிவிடும்
2.4

படம்-2.4

இந்த லிபர் ஆஃபிஸ் திரையின் கீழ்பகுதியில் நிலைபட்டை தோன்றிடும் இவ்வாறான லிபர் ஆஃபிஸ் ரைட்டரின் நிலைபட்டையானது படம்-2.4 -ல் உள்ளவாறு இருக்கும் .

புதிய ஆவணத்தை துவங்கசெய்தல் லிபர் ஆஃபிஸின் பணிக்குறியை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் ரைட்டர்,கால்க்,இம்ப்பிரஸ் போன்ற லிபர் ஆஃபிஸின் பல்வேறு பயன்பாடுகளின் பணிக்குறிகளின் தொகுதியான துவக்கமையம் திரையில் தோன்றிடும் அவற்றுள் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து சொடுக்கி புதிய ஆவணத்தை திறக்கமுடியும் மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளுள் File => New=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் கட்டளை பட்டியலில் தேவையான வகையை தெரிவுசெய்வது அல்லது விசைப்பலகையில் உள்ள விசைகளுள் Ctrl+Nஎன்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துவது   அல்லது மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளுள் File => Wizards=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் கட்டளை பட்டியலில் தேவையான வகையை தெரிவுசெய்வது அல்லது செந்தர கருவிபட்டையில் உள்ள Newஎன்ற பணிக்குறி கருவியை தெரிவுசெய்வது ஆகிய பல்வேறு வழிகளில் புதிய காலியான ஆவணத்தை இந்த லிபர் ஆஃபிஸில் துவங்கசெய்து பணிபுரியமுடியும்

நடப்பிலுள்ள ஆவணத்தை திறக்க செய்தல் லிபர் ஆஃபிஸின் பல்வேறு பயன்பாடுகளின் பணிக்குறிகளின் தொகுதியான துவக்கமையம் திரையில் உள்ள Open என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்வது அல்லது மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளுள் File => Open=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்வது அல்லது விசைப்பலகையில் உள்ள விசைகளுள் Ctrl+Oஎன்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துவது   அல்லது   செந்தர கருவிபட்டையில் உள்ள Openஎன்ற பணிக்குறி கருவியை தெரிவுசெய்வது ஆகிய பல்வேறு வழிகளில் ஏற்கனவே நடப்பில் இருக்கும் ஆவணத்தை இந்த லிபர் ஆஃபிஸில் திறப்பதற்கு முயற்சி செய்திடும்போது Openஎனும் உரையாடல் பெட்டி திரையில் மிதக்கும் அதில் Writerஎனில் .odt, .doc, .txtஎன்றவாறான பின்னொட்டுடனும்,Spreadsheets எனில் ods, .xls என்றவாறான பின்னொட்டுடனும் உள்ளவைகளில் தேவையான ஆவணத்தின் வகையையும் பிறகு அதற்கான பெயரையும் தெரிவுசெய்துகொண்டு Openஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் நாம் தெரிவுசெய்த ஆவணம் திரையில் திறந்துகொள்ளும்

பயன்படுத்தி கொண்டிருக்கும் ஆவணத்தை சேமித்தல் மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளுள் File => save=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்வது அல்லது விசைப்பலகையில் உள்ள விசைகளுள் Ctrl+sஎன்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துவது   அல்லது   செந்தர கருவிபட்டையில் உள்ள saveஎன்ற பணிக்குறி கருவியை தெரிவுசெய்வது ஆகியபல்வேறு வழிகளில் நடப்பில் பயன் படுத்திகொண்டிருக்கும் ஆவணத்தை சேமிக்கமுடியும்

ஒரு ஆவணத்தினை புதிய பெயரில் அல்லது வகையில் சேமித்திட மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளுள் File => save as =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்வதுஅல்லது விசைப்பலகையில் உள்ள விசைகளுள் Ctrl+shift+sஎன்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துவது ஆகியவழிகளில் ஒரு ஆவணத்தை சேமித்திட முயற்சி செய்திடும்போது save asஎனும் உரையாடல் பெட்டி திரையில் மிதக்கும் அதில் file name என்பதற்கருகில் இதற்கு பொருத்தமானதொரு பெயரை தட்டச்சு செய்துகொண்டு save as type என்பதற்கருகில்Writer எனில் .odt, .doc, .txt என்றவாறான பின்னொட்டுடனும் ,Spreadsheets எனில் ods, .xls என்றவாறான பின்னொட்டுடனும் உள்ளவைகளில் தேவையான ஆவணத்தின் வகையையும் தெரிவுசெய்துகொண்டு saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் நாம் தெரிவுசெய்தவாறு ஆவணமானது சேமிக்கபடும்

இதே save asஎனும் உரையாடல் பெட்டியில் Save with password என்ற வாய்ப்பை தெரிவுசெய்து கொண்டு saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன்set password என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் enter password to open என்ற உரைபெட்டியில் நல்ல வலுவான கடவுச்சொற்களையும் confirm passwordஎன்ற உரைபெட்டியில் அதே கடவுச்சொற்களையும் மீண்டும் உள்ளீடு செய்து கொள்க நாம் கடவுச்சொற்களை கொண்டு இவ்வாறு சேமித்திடும் ஆவணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள more option என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் மேலும் விரியும் இதே உரையாடல் பெட்டியில் தேவையெனில் மற்றவர்கள் படிக்கமட்டும் என்பதற்கு open file read onlyஎன்ற வாய்ப்பையும் அதற்கான கடவுச்சொற்களையும் மேலே கூறியவாறு உள்ளீடு செய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

2.5

படம்-2.5

மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளுள்File => Properties => General=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றிடும் Properties என்ற உரையாடல் பெட்டியில் change password என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் reset password என்ற உரையாடல் பெட்டியில்   தேவையானவாறு கடவுச்சொற்களை மாற்றி உள்ளீடு செய்துகொண்டுok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி மாற்றியமைத்துகொள்க

மேலே கூறியவாறு ஆவணத்தினை பணிமுடிந்தபின் சேமித்துகொள்ளலாம் என மெய்மறந்து பணிபுரிந்துகொண்டிருக்கும்போது திடீரென இடையில் மின்சாரம் தடைபெற்றால் நாம் இதுவரை செய்தபணிவீணாகி இதுவரையில் செய்த பணியையேமீண்டும் செய்யவேண்டிய சூழல் வராமல் காத்திட குறிப்பிட்ட காலஇடைவெளியில் இந்த லிபர் ஆஃபிஸானது தானாகவே சேமித்து கொள்ளுமாறு அமைத்துகொள்ளமுடியும் அதற்காக மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளுள்Tools => Options => Load/Save => General=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றிடும் Options_Load/Save_General என்ற உரையாடல் பெட்டியில்Save AutoRecovery information every என்ற வாய்ப்பை தெரிவுசெய்துகொண்டு அதற்கான கால அவகாசத்தை எவ்வளவுஎன அமைத்துகொண்டுok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி அமைத்துகொள்க

2.6

படம்-2.6

மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளுள் View => Navigator =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்வது அல்லது விசைப்பலகையில் உள்ள விசைகளுள் F5என்ற விசையைஅழுத்துவது   அல்லது   செந்தர கருவிபட்டையில் உள்ள Navigatorஎன்ற பணிக்குறி கருவியை தெரிவுசெய்வதுஆகிய பல்வேறு வழிகளில் நடப்பில் பயன்படுத்திகொண்டிருக்கும் ஆவணத்தில் மிகமுக்கியமாக கால்க்கில் நாம் விரும்பும் இடத்திற்கு செல்வதற்காக முயற்சிக்கும்போது Navigatorஎன்ற (படம்-2.7)உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் தேவையானசரியான இடத்தின் முகவரியை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தி நாம் விரும்பும் இடத்திற்கு செல்லமுடியும்

2.7

 படம்-2.7

ஏதேனுமொரு ஆவணத்தில் நாம் தவறுதலாக செய்த செயலை மேலே கருவிகளின் பட்டையிலுள்ள இடதுபுற அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்குவது அல்லது Edit => Undo=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவது அல்லது விசைப்பலகையில் Ctrl+Zஆகிய விசைகளை சேர்த்து அழுத்துவது ஆகிய பல்வேறு வழிகளில் நீக்கம் செய்திடலாம் அவ்வாறு நீக்கம் செய்திடும்போது சரியானதை தெரியாமல் தவறானது என நீக்கம் செய்ததை   மேலே கருவிகளின் பட்டையிலுள்ள வலதுபுற அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்குவது அல்லது Edit =>Redo=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவது அல்லது விசைப்பலகையில் Ctrl+Yஆகிய விசைகளை சேர்தது அழுத்துவது ஆகிய பல்வேறு செயல்களின்மூலம் மீண்டும் கொண்டுவரமுடியும்

மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளுள் File =>Close=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்வது அல்லது தலைப்பு பட்டையிலுள்ள Xஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்வது ஆகிய செயலை செய்தவுடன் இந்த ஆவணத்தை சேமிக்கவேண்டுமா என கோரி உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் ஆம் எனில் சேமிப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றி சேமித்தவுடன் ஆவணம் திரையில் மூடபட்டுவிடும்

மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளுள் File => Exit => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்வதன் வாயிலாக அல்லது விசைப்பலகையில் உள்ள விசைகளுள் Ctrl+Q என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துவது ஆகியவழிகளில் முயற்சி செய்திடும்போது உடன் save asஎனும் உரையாடல் பெட்டி திரையில் மிதக்கும் அதில் file name என்பதற்கருகில் இதற்கு பொருத்தமானதொரு பெயரை தட்டச்சு செய்துகொண்டு save as type என்பதற்கருகில்Writer எனில் .odt, .doc, .txt என்றவாறான பின்னொட்டுடனும் ,Spreadsheets எனில் ods, .xls என்றவாறான பின்னொட்டுடனும் உள்ளவைகளில் தேவையான ஆவணத்தின் வகையையும் தெரிவுசெய்துகொண்டு saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் நாம் தெரிவுசெய்தவாறு ஆவணமானது சேமிக்கபட்டு மூடப்டடுவிடும்

அக்சஸ்-2007- 32 எஸ்கியூஎல் சேவையாளருடன் இணைப்பை ஏற்படுத்தி பயன்படுத்திகொள்ளுதல்

முந்தைய அக்சஸ் 2007-31 இல் எஸ்கியூஎல் சேவையாளரை பேரளவில் செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும் என அறிந்துகொண்டோம். இந்த எஸ்கியூஎல் சேவையாளர் அக்சஸ் 2007 ஐ தோழமையுடன் பாவிப்பதால் அக்சஸ் 2007 ஐ கூட இதனுடைய துணையடன் நம்மால் பேரளவில் பயன்படுத்திகொள்ளமுடியும்.. அதற்காக http://msdn.microsoft.com/vstudio/express/sql என்ற வலைதளத்திற்கு சென்று SQL Server 2005 Express Edition என்ற இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்களுடைய கணினியில் நிறுவிகொள்க.

இது தரவுகளை இணைத்திடும் பொறியாக செயல்படுகின்றது. எஸ்கியூஎல் சேவையாளர் பொருட்கள் எதுவும் அக்சஸ்2007 இல் accdb என்ற பின்னொட்டுடன் கூடிய கோப்பு வடிவமைப்பில் இல்லை .ஆயினும் ODBC என்பதை பயன்படுத்தி அக்சஸ் 2007 இன் கோப்புகளை எஸ்கியூஎல் சேவையாளருடன் இணைப்பு ஏற்படுத்திட முடியும்.

அக்சஸ்2007 இல் ADP என்ற வடிவமைப்பை பயன்படுத்தி எஸ்கியூஎல் சேவையாளரை திறந்து கொண்டு அனைத்து பணிகளையும் செய்யமுடியும். அக்சஸ் 2007 இல் ADP என்ற கோப்பு வடிவமைப்பில் File=> New => Browse => ADP =>என்றவாறு தெரிவுசெய்து அக்சஸ் 2007 இன் வடிவமைப்பில் பணிபுரியமுடியும்.ஆனால் இந்த வடிவமைப்பில் பணிபுரியும்பொது அக்சஸ் 2007 இன் வசதிகள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்காது என்பதை மனதில் கொள்க.

பயனாளரின் பெயர்கடவுச்சொல் ஆகியவற்றை பயன்படுத்தி எஸ்கியூஎல் சேவையாளர் முன்புற கருவிகள் வழியாக மிக எளிதில் நேரடியாக எந்த ஒரு தரவுதளத்துடனும் இணைப்புஏற்படுத்திடமுடியும்.

பொதுவாக தரவுதளஇயந்திரமானது செய்திகளை பெறுவது பின்னர்தாம் பெற்ற செய்திகளை திரும்ப வழங்குவது ஆகிய செயல்களுக்காக செய்தி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Traffic controller)என அறியப்படும் கவணிப்பாளரிடம்(istener) இந்த பணியினை ஒப்படைத்துவிடுகின்றது.

இந்த கவணிப்பாளர் ஒரு இணைய (ஐபி) முகவரியிலிருந்து வரும் செய்தியில் முதலில் தன்னிடமுள்ள இணைய (ஐபி) முகவரியுடன் ஒப்பிட்டு சரிபார்க்கின்றது. சரியாக இருந்தால் மட்டும் தரவுதளத்துடன் இணைப்பை எற்படுத்திட கோரும் செய்தியை சேவையாளரிடம் வழங்குகின்றது.உடன் சேவையாளர் தரவுதளத்து!டன் இணைப்பை ஏற்படுத்திட அனுமதிக்கும்போது   இதற்கான இணைப்பை தரவுதள சேவையாளருடன் ஏற்படுத்துகின்றது. பின்னர்சேவையாளருடன் இணைப்பு ஏற்படுத்திய செய்தியை தரவுதளத்திற்கு அனுப்புகின்றது.

உடன் கவணிப்பாளர்இந்த செய்தியை பெற்று தரவுதளத்திற்குற்கு அனுப்புவதுடன் இல்லாமல் தொடர்ந்து இணைப்பை பராமரிக்கும் செயலையும் செய்கின்றது.. இவ்வாறு கவணிப்பாளர்தரவுதளத்திற்கும் தரவுதளசேவையாளருக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்துவது அதற்கு தேவையான செய்திகளை வழங்கி இடைமுகமாக செயல்படுகின்றது.

தரவுதளத்துடன் தொடர்புகொள்ள பயன்படும் இணைப்பு சரத்தினை (Connecting string)என அழைப்பார்கள் இந்த இணைப்புசரமானது பின்வரும் உறுப்புகளால் ஆனதாகும்

 1. Hostname – தரவுதளசேவையாளர் இருக்குமிடத்தை இவ்வாறு அiழைக்கப்படும்.
 2. Database name -குறிப்பிட்ட தரவுதளத்திற்குன் பெயராகும். ஏனெனில் எஸ்கியூஎல் சேவையாளர் பல்லடுக்கு தரவுதளமானதுஓரேகணினியில் ஒற்றையான பல்லடுக்குகளை நிறுவுகைசெய்வதற்கு இது அனுமதிக்கின்றது. ஒவ்வொரு தரவுதளசேவையாளரும் ஒற்றையான தரவுதளஎஸ்கியூஎல் சேவையாளரை பயன்படுத்திகொள்கின்றது.
 3. Authentication-பயனாளரின் பெயர் கடவுச்சொற்கள் ஆகியவற்றை தெரிந்துவைத்திருப்பவர்கள் மட்டுமே தரவுதளத்தினை அனுகி பயன்படுத்தி கொள்ளமுடியும் என்றவாறு இது பாதுகாப்பு வளையம் அமைந்த பகுதியாகும்.

தரவுதளத்தில் பின்வரும் கட்டளைகள் எஸ்கியூஎல் சேவையாளரை நிறுவுகை செய்யும்

sql cmd -s my computer

பின்வரும் கட்டளை வரி குறிப்பிட்ட தரவுதளத்தினை இணைப்பதற்கும் எஸ்கியூஎல் சேவையாளரை நிறுவுகை செய்வதற்கும் பயன்படுகின்றது

sql cmd -s my computer -d mydatabase

சாதாரண தரவுதளத்துடன் இணைப்பை ஏற்படுத்துவதைவிட சிறித கூடுதலான படிமுறைகளை இதில் பின்பற்றவேண்டும் இதற்காக ODBC என்ற இயக்குபவர் அக்சஸ்மட்டுமல்லாது எக்செல்லுடன் கூட எஸ்கியூஎல் சேவையாளரை இணைப்பதற்கு பயன்படுகின்றது.

1 .முதலில் Start => settings => control panel => என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து செயற்படுத்தி கொள்க..

2 பின்னர்தோன்றிடும் control panel என்ற சாளரத்தின் Administrative Tools என்ற வாய்ப்பை தெரிவுசெய்து இருமுறைசொடுக்குக. உடன் விரியும் பட்டியலில் ODBC என்ற தரவு மூலத்தை தெரிவுசெய்க. இதில் மூன்று வகையான வடிவமைப்பு வாய்ப்புகள் உள்ளன.

1) User DSN என்பது வாடிக்கையாளரின் கணினியில் மட்டும் உருவாக்குவதற்கு பயன்படுகின்றது

2) System DSN வாடிக்கையாளர்கணினியுடன் இணையத்தையும் இணைப்பு ஏற்படுத்துவதற்கு பயன்படுகின்றது

3) File DSNவாடிக்கையாளர்கணினியுடன் தரவுதளத்தின்கோப்புகளை இணைப்பதற்காக பயன்படுகின்றது

இவற்றுள் File DSNஎன்பதையே பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி கொள்கின்றனர் .இதனை தெரிவுசெய்து செயற்படுத்தி அமைத்தபின்னர் கட்டுப்பாட்டு பலகத்தை மூடிவிடுக. பின்னர்

 1. அக்சஸ்2007ஐ செயற்படுத்துக.அதன்பின்னர்தோன்றிடும் திரையில் External Data என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்விரியும் External Data என்ற தாவிபட்டியில் Import என்ற குழுவில் ; Xml file என்பதற்கடுத்து கீழ்பகுதியில் உள்ள more என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் பட்டியலிலிருந்து ODBCData base என்பதை (படம்-32-1) தெரிவுசெய்க.

 

32.1

படம்-32-1

 

 1. பின்னர்விரியும் Get External Data – ODBC Data Base என்ற உரையாடல் பெட்டியிலிருந்து Link to the data source by connecting a linked table என்பதை தெரிவுசெய்து கொண்டு ok என்ற பொத்தானை(படம்-32-2) தெரிவுசெய்து சொடுக்குக.

32.2

படம்-32-2

 1. உடன் Select Data Source என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் இதில் DSN name என்பதில்   Local SQL serverஎன உள்ளீடுசெய்து Newஎன்ற பொத்தானை (படம்-32-3) தெரிவுசெய்து சொடுக்குக.

32.3

படம்-32-3

 1. பின்னர்விரியும இயக்கிகளின் பெயர்பட்டியலிலிருந்த SQL Driver என்பதை தேடிப்பிடித்து தெரிவுசெய்து கொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 2. அடுத்து தோன்றிடும் திரையில் இந்த DSN கோப்புகளை எங்கு சேமித்து வைக்கவிரும்புகின்றோம்   என்பதற்கு Browser என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின்னர்விரியும் உரையாடல் பெட்டியில் உள்ள File name என்ற பகுதியில் Local SQL server என்று உள்ளீடுசெய்து save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர்next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

32.4

படம்-32-4

 1. உடன் create new data source என்ற திரை தோன்றிடும். அதில் finish என்ற(படம்-32-4) பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 2. அடுத்துதோன்றிடும் திரையில் Description என்ற பகுதியில் Local test database என்றவாறும் server என்பதில் SQL SERVER NAME என்றும் உள்ளீடு செய்து கொண்டு next என்ற பொத்தானை(படம்-32-5) தெரிவுசெய்து சொடுக்குக.

32.5

படம்-32-5

 1. பின்னர்தோன்றிடும் திரையில்   இயல்புநிலையில் கணினியின் இயக்க முறைமையினுடைய பயனாளரின் பெயரும் கடவுச்சொற்களையும் எடுத்துகொள்ளும். தேவையானால் மாற்றி யமைத்து கொண்டு next என்ற (படம்-32-6) பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 2. அதன் பின்னர்தோன்றிடும் திரையில் தரவுதளத்திற்குன் பெயராக test என இருக்கும் தேவையானால் மாற்றியமைத்து கொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

32.6

படம்-32-6

 1. பின்னர்தோன்றிடும் திரையில் உள்ளடக்க செயலை பற்றி கவலைப் படத்தேவையில்லை இறுதியாக finish என்ற பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக.
 2. இயல்புநிலையில் தேவையானால் server என்ற பகுதியில் local என உள்ளீடுசெய்துகொள்க உடன் தோன்றிடும் இருதிரைகளில் முதல் திரையில் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர்இரண்டாவது திரையிலும் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 3. ஓரு User DSN ஒரு System DSN அல்லது இவையிரண்டையும் உருவாக்க விரும்பினால் அவ்வாறு பிணையத்தில் தெரிவுசெய்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 4. பின்னர்தோன்றிடும் Link table என்ற உரையாடல் பெட்டியில் தேவையான அட்டவணைகளை தெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 5. அதன் பின்னர்தோன்றிடும் திரையில் குறிப்பிட்ட அட்டவணையின் எந்தெந்த புலங்கள் கோப்பில் தெரிவுசெய்யவெண்டுமோ அவற்றை தெரிவுசெய்து கொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

உடன் அக்சஸ்2007 ஆனது எஸ்கியூஎல் உடன் இணைப்பை ஏற்படுத்தி கொண்டுவிடும்.

பயனாளரின் பெயரையும் கடவுசொற்களையும் எஸ்கியூஎல் சேவையாளருடன் தொடர்புகொள்ளும்போது ஆரக்கிள் தரவுதளத்திற்குள் அனுமதிப்பதை போன்று இதிலும் அனுகுவதற்கு அனுமதிக்கின்றது. இதுமட்டுமில்லாது கூடுதலாக வளாக பிணையத்திலும் அனுகிடுவதற்கு அனுமதிக்கின்றது.

அக்சஸில் பயனாளர்அனுகிடும்போது குறைந்த அளவிற்கான வசதிகளை மட்டும் அனுமதிக்கின்றது.

எஸ்கியூஎல் இல் இருப்பதை போன்று அக்சஸ் 2007 ஐ தொடர்புகொள்வதற்கு அக்சஸில் டிடிஎல் கட்டளைகள் பயன்படுகின்றன. ஆனாலும் அக்சஸ்2007 இல் இதனை செயற்படுத்திட முடியாது.

CREATE USER <user> <password> […   .]

ADD USER <user> […   .]

ALTER DATABASE PASSWORD <new> <old>

CREATE GROUP <group> <pid> [… .]

INSERT, SELECT,DELETE,UPDATE

 

என்பன போன்ற SQLserver கட்டளைவரிகளைக்கொண்டு அக்சஸிலிருந்து பணிபுரியலாம்.

 1. Import table (with data) from SQL Server as a copy of the SQL Server table என்ற கட்டளை மூலம் எஸ்கியூஎல் அட்டவணையை பதிவிறக்கம் செய்து அக்சஸில் பணிபுரியலாம் ஆனால் SQL Server இல் செய்திடும் இதன் மாறுதல்கள்   அக்சஸில் உள்ள அட்டவணையில் பிரிதிபலிக்காது. அவ்வாறு .மாறுதல் செய்திருந்தால் அவ்வப்போது பதிவிறக்கம் செய்துகொண்டு புத்தாக்கம் செய்துகொள்ளவெண்டும்.
 2. Link to tables that remain within SQL server என்ற கட்டளை வரிமூலம் எஸ்கியூஎல் அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொண்டு அக்சஸில் பணிபுரியலாம் இந்த வழிமுறையில் அனைத்து மாறுதல்களும் உடனுக்குடன் அக்சஸில் பிரிதிபலிக்கும் இங்கு தரவுதளமானது ஒரு இனத்தின் மூலஅமைவை பராமரிக்கின்றது.

தேக்கப்பட்ட வழிமுறையை (Stored procedure)அக்சஸில் செயல்படுத்து வதற்கான படிமுறை பின்வருமாறு

 1. ஒரு .accdஎன்ற பின்னொட்டுடன் உள்ள தரவுதளகோப்பினை அக்சஸ்2007 இல் திறந்துகொள்க.
 2. பின்னர்create என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் create என்ற பட்டியின் other என்ற குழுவில் உள்ள Query Design என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 3. உடன் show table என்ற உரையாடல் பெட்டி ஒன்று திரையில் தோன்றிடும் அதில் close என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக. ஏனெனில் நாம் இப்போது SQL இனுடைய கட்டளையை பயன்படுத்திட போகின்றோம்

32.7

படம்-32-7

 1. பின்னர்மேலே இடதுபுறம் உள்ள SQL View என்ற உருவ பொத்தானை(படம்-32-7) தெரிவுசெய்து சொடுக்குக. உடன் query text editor என்ற திரைதோன்றிடும் அதில் SELECT * FROM REGION; என்றகட்டளை வரியை செயற்படுத்துக.
 2. அதன் பின்னர்பட்டியின் Resultsஎன்ற குழுவில் உள்ள Runஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 3. பின்னர்மேலே இடதுபுறத்தில் உள்ள view என்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் வாய்ப்புகளின் பட்டியலில் sqlview என்ற வாய்ப்பை தெரிவுசெய்துகொள்க.
 4. பின்னர் தரவுதளத்தின் பதிதப்பித்தல் திரைக்கு திரும்பி வந்து பின்வரும் கட்டளைகளை தவறில்லாமல் உள்ளீடுசெய்து செயற்படுத்துக..

CREATE PROCEDURE Jumbled Country

SELECT r.region.c.country

FROM region r join country C

ON( c.region_id=r.region_id);

லிபர் ஆஃபிஸ் 4. தொடர்-1

வணக்கம். வாசகர் அனைவரையும் இந்த லிபர் ஆஃபிஸ் .4 என்ற தொடரின் மூலம் தொடர்பு கொள்வதில் பெருமகிழ்வு கொள்கின்றேன்.   தற்போது கட்டணத்துடன் கூடிய விண்டோ எனும் இயக்கமுறைமைக்கு மாற்றாக லினக்ஸின் ஏராளாமான வகையின் வெளியீடுகள் மக்கள் மத்தியில் மிகபிரபலமாக விளங்குகின்றன .அவ்வாறே கட்டணத்துடன் கூடிய எம்எஸ் ஆஃபிஸ் எனும் பயன்பாட்டிற்கு மாற்றாக ஓப்பன் ஆஃபிஸ் என்றும் லிபர் ஆஃபிஸ் என்றும் பயன்பாடுகள் வெளியிடபட்டு அவைகளின் மேம்படுத்தபட்ட பதிப்புகள் அவ்வப்போது வெளியிடபட்டுகொண்டே இருந்தாலும் இன்னமும் மக்கள்மத்தியில் அவர்களின் அன்றாட பயன்பாட்டிற்காக இந்த திறமூல அலுவலக பயன்பாடுகளை உபயோகபடுத்தி கொள்வதற்கான தேவையை உருவாக்குவதற்காக இதனை பற்றிய செய்தி முழுவதுமாக சென்று சேரவில்லை அதனால் கடந்த பதிவுகளின் வாயிலாக ஓப்பன் ஆஃபிஸ் தொடரின் மூலம் அதனை பற்றிய பயன்களை கூறியதைபோன்று தற்போது இதே வலைபூவின் வாயிலாக லிபர் ஆஃபிஸ் 4. எனும் தொடரின் மூலம் இதன் பயன்பாடுகளை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் அதனால் பெரியோர்களே! தாய்மார்களே! தகப்பன்மார்களே ! சகோதர, சகோதரிகளே! அனைவரும் வாருங்கள். இதன் பயன்களைகண்டு தத்தமது தேவைக்கு ஏற்ப கட்டணம் ஏதுமில்லாத இதனை பயன்படுத்திகொள்ளுங்கள் என மிகபணிவுடன் கேட்டுகொண்டு இந்த தொடரை தொடங்குகின்றேன்.

இந்த லிபர் ஆஃபிஸ் என்பது ஒரு கட்டணமற்ற எம்எஸ் ஆஃபிஸின் அனைத்து பயன்களும் தன்னகத்தே கொண்டதொரு அனைத்து இயக்கமுறைமைகளிலும் இயங்கும்திறன்கொண்ட எந்தவகையான வடிவமைப்பு கோப்பாக இருந்தாலும் திறந்து பணிபுரிந்தபின் நாம் விரும்பும் வடிவமைப்பில் மிகமுக்கியமாக ப்பிடிஎஃப் வடிவமைப்பில் கூட சேமிக்கும் திறன்வாய்ந்தது ஆகும்   இந்த லிபர் ஆஃபிஸில் பின்வரும் பயன்பாடுகள் உள்ளன .

ரைட்டர்(சொற்செயலி):இந்த லிபர் ஆஃபிஸில் உரைவடிவமைப்பிற்கு ரைட்டர் எனும் பயன்பாடு உள்ளது   இந்த லிபர் ஆஃபிஸ்ரைட்டரின் மூலம் கடிதங்கள்,அறிக்கைகள், செய்திகடிதங்கள், விளக்க கடிதங்கள், புத்தகங்கள் போன்றவைகளை உருவாக்கமுடியும் இந்த லிபர் ஆஃபிஸ்ரைட்டரில் உருவாக்கபடும் ஆவணத்தில் வரைபடங்களையும் உருவபடங்களையும் உள்ளிணைத்து கொள்ளமுடியும் மேலும் இதன் வெளியீடுகள்   HTML, XHTML, XML, PDF ஆகிய வடிவமைப்புகளிலும் மிகமுக்கியமாக எம்எஸ் ஆஃபிஸ் வேர்டின் அனைத்து வகை பதிப்பு வடிவமைப்பிலும் வெளியிட முடியும் அதுமட்டுமின்றி இதனுடைய ஆவணத்தினை நம்முடைய மின்னஞ்சல் வாடிக்கையாளருடன் இணைத்திடமுடியும் என்பதையும் கவணத்தில் கொள்க.

கால்க் (விரிதாள்):அனைத்து வகை மேம்பட்ட கணித ஆய்வு, வரைபடம் ,முக்கிய வியாபார பிரச்சினைகளை தீர்வுசெய்தல் ஆகிய விரிதாள் செயல்களை இதனுடைய கால்க் எனும் பயன்பாட்டின் மூலம் செயல்படுத்தி கொள்ளமுடியும் நிதியியல்,புள்ளியியல்,கணிதவியல் ஆகியவற்றின் கணக்கீடுகளுக்கான முன்னூறுக்குமேலான செயலிகள் இதில் உள்ளன. குறிப்பிட்ட நிகழ்வு ஏற்பட்டால் என்ன நடைபெறும் என்பதற்கான what if எனும் ஆய்வும் ,இருபரிமாண முப்பரிமாண வரைபடங்களும், இதில் ஒருங்கிணைந்துள்ளன. மைக்ரோ சாப்ட்டின் எக்செல் பணித்தாளை இந்த லிபர்ஆஃபிஸ் கால்க்கின் மூலம் திறந்து பணிபுரிந்தபின் அதே எம்எஸ் எக்செல் வடிவமைப்பில் சேமிக்கமுடியும் அதுமட்டுமல்லாது    CSV, PDF , HTML ஆகிய வடிவமைப்புகளிலும் சேமிக்கமுடியும்

இம்ப்பிரஸ் (நிகழ்த்துதல்): இம்ப்பிரஸானது சிறப்பு நிகழ்வு,அசைவூட்டம் வரைபடகருவி போன்ற அனைத்து பல்லூடக காட்சி கருவிகளையும் நிகழ்த்துதலுக்காக வழங்குகின்றது.   லிபர்ஆபிஸின் வரகலையும் கணிதமும் சேர்ந்த மிகமுன்னேறிய. வரைகலை திறனை இதுஒருங்கிணைந்து பெற்றுள்ளது. இதில் உள்ள படவில்லை காட்சியானது எழுத்துருவின் மிகமேம்பட்ட தன்மையையும் உரையின் சிறப்பு தோற்றத்தையும் ஒலி, ஒலிஒளி அமைப்பையும் கொண்டு பார்வையாளர்களை கவரும் வண்ணம் சிறப்பானதாக அமைந்துள்ளது. இது மைக்ரோ சாப்ட்டின் பவர்பாயின்ட் கோப்பு வடிவமைப்புடன் ஒத்திசைவுசெய்வது மட்டுமல்லாது எண்ணற்ற வரைகலை வடிவமைப்புகளிலும் மேக்ரோமீடியாவின் SWF என்ற வடிவமைப்புகளிலும் இதனுடைய கோப்பினை சேமித்து கொள்ளமுடியும்

வரைபடம்(வெக்டார்வரைகலை) :வரைபடம் என்பது எந்தவொரு கோட்டுபடம் அல்லது ஓட்டவரைபடமும்(flowchart) முப்பரிமான கலைப்பணியாக(artwork)உருமாற்றுகின்ற தொரு வெக்டார் வரைபட கருவியாகும். இதனுடைய அருமையான இணைப்பான்கள் நம்முடைய சொந்த இணைப்பு புள்ளிகளை வரையறுப்பதற்கும் அனுமதிக்கின்றது மற்ற லிபர்ஆஃபிஸ் அலுவலக பயன்பாடுகளுக்கான வரைபடத்தையும் இந்த வரைபடத்தினை பயன்படுத்தி உருவாக்கமுடியும். அதுமட்டுமல்லாது நம்முடைய சொந்த வரைபடங்களையும் உருவாக்கி வரைபடகாட்சிநூலகத்தில்(gallery) சேர்த்து கொள்ளமுடியும். இந்த வரைபடமானது பொதுவானபல்வேறு வரைபடவடிவமைப்புகளையும் பதிவிறக்கம் செய்து திறந்து பணிபுரியவும் பின்னர் PNG, HTML, PDF, Flash. என்பன போன்ற இருபது வகையான வடிவமைப்புகளில் சேமித்திடவும் முடியும்

பேஸ் (தரவுதளம்) :பேஸானது சாதாரண இடைமுகத்துடனான அன்றாட தரவுதள பணிகளை செய்வதற்கான கருவிகளை வழங்குகின்றது. இதில் படிவங்கள்,அறிக்கைகள் , வினாக்கள், அட்டவணைகள் ஆகியவற்றை உருவாக்கிடவும் ,திருத்தம் செய்திடவும் ,காட்சி படுத்திடவும் ,அவைகளுக்கிடையேயான உறவை உருவாக்கவும்   முடியும். அதனால் மற்ற பிரபலமான தரவுதள பயன்பாடுகளை போன்றே உறவு தரவுதள செயலை இதன்மூலம் நிருவகிக்கமுடியும். அதுமட்டுமல்லாது வரைகலை காட்சிகேற்ப உறவுகளை ஆய்வுசெய்திடவும் திருத்துதல் செய்திடவும் ஆன மேம்பட்ட செயல்களையும் செயற்படுத்திடமுடியும்   HSQLDB என்பது இதனுடைய இயல்புநிலை தரவுதள பொறியாகும் இது   மைக்ரோ சாப்ட் அக்சஸ்,dBASE, MySQL, Oracle, ODBC , JDBC ஆகிய அனைத்து வகை வடிவமைப்புகளையும் ஆதரிப்பதோடுமட்டுமல்லாது ANSI-92 SQL எனும் சிறப்பு வடிவமைப்பையும் இது ஆதரிக்கின்றது

மேத் (ஃபார்முலா பதிப்பான்) :மேத் என்பது லிபர்ஆஃபிஸின் ஃபார்முலா அல்லது சமன்பாட்டு பதிப்பான்ஆகும். இதன்மூலம் குறியீடுகளையும் செந்தர எழுத்துருகளில் இல்லாத எழுத்துருக்களையும் கொண்ட மிகசிக்கலான சமன்பாடுகளை உருவாக்குவதற்காக இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும். மற்ற லிபர் ஆஃபிஸின் பயன்பாடுகளில் ஃபார்முலாக்களை உருவாக்குவதற்கான தனித்தன்மைவாய்ந்த கருவியாகவும் இது செயல்படுகின்றது இந்த ஃபார்முலாவை இணைய பக்கத்தில் அல்லது லிபர் ஆஃபிஸால் உருவாக்கபடாத மற்ற பயன்பாடுகளில் Mathematical Markup Language (MathML) வடிவமைப்பிலும் சேமித்திடமுடியும்

இந்த லிபர் ஆஃபிஸ் எனும் அலுவலக பயன்பாட்டின் வசதிகளும் வாய்ப்புகளும் பின்வருமாறு

இந்த லிபர் ஆஃபிஸ் எனும் அலுவலக பயன்பாட்டினை பயன்படுத்துவதற்காக தனியாக எதுவும் அனுமதிகட்டணம் செலுத்ததேவையில்லை அவ்வாறே இதனுடன் கூடுதல் பயன்பாட்டிற்காக இணைப்புகளையும் கட்டணமின்றி பயன்படுத்தி கொள்ளலாம்.

இது ஒரு திறமூலபயன்பாடாகும் இதன் குறிமுறைகளையோ அல்லது இந்த பயன்பாடுகளையோ யாரும் பூட்டிவைத்து குறிப்பிட்ட திறவுகோளின்மூலமாக மட்டுமே இதனை முதன்முதலாக பயன்படுத்தமுடியும் என்ற கட்டுபாடுஎதுவுமில்லை அதனால்இதனுடைய மூலக்குறிமுறையை நகலெடுத்து நாம் விரும்பியவாறு மாறுதல் செய்து நாமும் பயன்படுத்தி கொள்ளலாம் மற்றவர்களுக்கும் வழங்கலாம்

இது குறிப்பிட்ட இயக்கமுறைமையில்தான இயங்கமுடியும் என்ற கட்டுபாடின்றி விண்டோ, லினக்ஸ், மேக்ஸ் என எந்தவொரு இயக்கமுறைமையிலும் செயல்படும் திறன்வாய்ந்ததாகும்

எழுபதிற்குமேற்பட்ட மொழிகளின் எழுத்துபிழை இலக்கணப்பிழை அருஞ்சொற்பொருள் இணைச்சொல் எதிர்ச்சொல் போன்றவைகளை திருத்துவதற்கும் நாற்பதிற்குமேற்பட்ட மொழிகளில் இதனை இடைமுகம் செய்திடவும் மிகமுக்கியமாக மிகசிக்கலான உரைவடிவமைப்பையும் வலதுபுறத்திலிருந்து இடதுபுறமாக எழுதும் உருது அராபிக் ஹீப்ரு போன்ற மொழிகளையும் ஆதரிக்கின்றது

பார்ப்பதற்கு எளிமையானதோற்றத்துடன் பயனாளிகளின் இடைமுகம் ஒரேமாதிரியாக இருக்குமாறு பாவிக்கின்றது

மற்ற அலுவலக பயன்பாடுகளுடன் எளிதாக ஒத்திசைவு செய்கின்றது

இதனுடைய அனைத்து பயன்பாடுகளிலும் ஒரேமாதிரியான கருவிகளையே பயன்படுத்திகொள்ளுமாறு கட்டமைக்கபட்டுள்ளது அதாவது வரைபடபயன்பாட்டின் கருவிகளை ரைட்டரிலும் ,கால்க்கிலும் பயன்படுத்துமாறு அனுமதிக்கின்றது இதனுடைய பயன்பாடுகளுள் எந்த பயன்பாட்டிலிருந்தும் எந்தவொரு பயன்பாட்டினுடைய கோப்பினையும் திறக்கமுடியும் உதாரணமாக ரைட்டரில் இருந்துகொண்டு ட்ரா கோப்புகளை திறக்கமுடியும்

எந்தவொரு வடிவமைப்பு கோப்பினையும் திறக்கவும் அவ்வாறு திறந்தபின் இந்த லிபர்ஆஃபிஸில் பணிபுரியும் கோப்புகளை இறுதியாக PDF , Flash Microsoft Office, HTML, XML, WordPerfect, Lotus 1-2-3 போன்ற எந்தவொரு வடிவமைப்புகளிலும் சேமிக்கமுடியும்

நம்முடைய குரலை புரிந்துகொண்டு அதன்படி இந்த லிபர் ஆஃபிஸின் பயன்பாடுகள் செயல்படுமாறும் செயற்படுத்திடமுடியும் இதனை பற்றி மேலும் மூழுவதுமாக அறிந்தகொள்ள http://www.libreoffice.org/ , http://www.documentfoundation.org/. ஆகிய தளங்களுக்கு செல்க

இந்த லிபர்ஆஃபிஸ் 4.0 எனும் பதிப்பை நம்முடைய கணினியில் நிறுவி இயக்குவதற்காக பின்வருபவை மிககுறைந்த பட்ச அடிப்படை தேவையாகும்

மைக்ரோ சாப்ட்டின் விண்டோ எக்ஸ்பி,விஸ்டா,விண்டோ7,விண்டோ8 அல்லது ஜிஎன்யூ லினக்ல் கெர்னல் பதிப்பு 2.6.18 அதற்கு மேலும் அல்லது மேக்ஸ் பதிப்பு 10.4 அதற்குமேலும் உள்ள இயக்கமுறைமை தேவையாகும்

நிருவாகியின் உரிமை இதனை நிறுவுகை செய்திட தேவையாகும்

இதனுடைய தரவுதள பயனபாடு இயங்குவதற்கு Java Runtime Environment (JRE) எனும் சூழல் தேவையாகும்

மேலும் இந்த லிபர் ஆஃபிஸ் நிறுவுகை செய்திட அடிப்படையாக தேவையானவைகளை அறி்ந்துகொள்ள http://www.libreoffice.org/download/system-requirements/ என்ற தளத்திற்கு செல்க

இந்த லிபர் ஆஃபிஸ் எனும் பயன்பாட்டினை தரவிறக்கம் செய்துகொள்ளவிழைபவர்கள் http://www.libreoffice.org/ என்ற தளத்திற்கு செல்க

அதுமட்டுமல்லாது இதனை நிறுவுகை செய்திடவும் அல்லது வேறுஏதேனும் உதவிதேவையெனில் http://www.libreoffice.org/get-help/installation/. என்ற தளத்திற்கு செல்க

இந்த பயன்பாட்டினை விரிவாக்கம் செய்திடவும் கூடுதல் செயல்களை கருவிகளை இணைத்திடவும் http://extensions.libreoffice.org/. என்ற தளத்திற்கு செல்க

.

மேலே கூறிய இணைய முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்து அதன்வழிகாட்டி கூறும் அறிவுரைகளை பின்பற்றி நம்முடைய கணினியில் நிறுவுகை செய்தபின் முதன்முதல் இதனை திரையில் கொண்டு வருவதற்கு   விண்டோவில் Start எனும் பட்டியலை இயக்குக பின்னர் விரியும் Startஎனும் பட்டியலில் LibreOffice என்பதை தெரிவுசெய்து சொடுக்கு உடன் படம் 1.1 இல் உள்ளவாறு லிபர் ஆஃபிஸின் அனைத்து பயன்பாடுகளும் அடங்கிய தொகுதியான பெட்டிபோன்று ஒன்று திரையில் தோன்றிடும் அதில் தேவையான பயன்பாட்டினை தெரிவுசெய்து சொடுக்கி செயல்படச்செய்க

1.1

 

படம் 1.1

லிபர் ஆஃபிஸின் கோப்பு ஏற்கனவே சேமித்து வைத்திருந்தால் அதனைதெரிவுசெய்து சொடுக்குக உடன் தெடர்புடைய லிபர்ஆஃபிஸின் பயன்பாடு திரையில் திறக்கபடும் அல்லது எம்எஸ் வேர்டின் *.doc or *.docx ஆகிய வடிவமைப்பு கோப்புகளை தெரிவுசெய்து சொடுக்கினால் லிபர் ஆஃபிஸின் ரைட்டர் எனும் பயன்பாடும்,

எம்எஸ் எக்செல்லின் *.xls or *.xlsx ஆகிய வடிவமைப்பு கோப்பகளை தெரிவுசெய்து சொடுக்கினால் லிபர் ஆஃபிஸின் கால்க் எனும் பயன்பாடும்,

எம்எஸ் பவர்பாயின்ட்டின் *.ppt or *.pptx ஆகிய வடிவமைப்பு கோப்பகளை தெரிவுசெய்து சொடுக்கினால் லிபர் ஆஃபிஸின் இம்ப்பிரஸ் எனும் பயன்பாடும் திரையில் தோன்றிடும்

விண்டோ இயக்கமுறைமையில் Quickstarter என்பது நிறுவுகை செய்யபட்டிருந்தால் இந்த லிபர் ஆஃபிஸை செயல் படுத்துவதற்கான *.DLL எனும் நூலககோப்புகள் கணினியின் இயக்கம் தொடங்கும்போதே மேலேற்றுதல் செய்து விரைவாக லிபர் ஆஃபிஸ் பயன்பாடுகள் திரையில் தோன்றி இயங்கிடும்   அதற்காக இந்த Quickstarter எனும் உருவபொத்தானை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது   Quickstarter எனும் உருவபொத்தானை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக உடன் படம் 1.2 இல் உள்ளவாறுமேல்மீட்பு பட்டியல் திரையில் தோன்றிடும் அதிலிருந்து தேவையான லிபர் ஆஃபிஸ் பயன்பாட்டினை தெரிவுசெய்து சொடுக்கி திறந்து கொள்க

1.2

படம் 1.2

இந்தQuickstarter எனும் உருவபொத்தானை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது   Quickstarter எனும் உருவபொத்தானை இடம்சுட்டியால் தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக உடன் படம் 1.2 இல் உள்ளவாறுமேல்மீட்பு பட்டியல் திரையில் தோன்றிடும் அதிலிருந்து Exit Quickstarter எனும் வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க உடன் இந்த Quickstarter செயல்படுத்தபடாது இருந்துவிடும்

 

லிபர் ஆஃபிஸ் பயன்பாட்டின் திரையின் மேல்பகுதியில் உள்ள கட்டளை பட்டையிலிருந்து Tools => Options => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கு பின்னர் விரியும் Options எனும் உரையாடல் பெட்டியின் இடதுபுற பலகத்தில் LibreOffice => Memory=>. என்றவாறு வாய்ப்புகளை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் (படம் 1.3) வலதுபுற பலகத்தில்   libre office quickstrater என்பதன்கீழுள்ள load libre office quickstrater during system sart-up எனும் வாய்ப்பை தெரிவுசெய்துகொண்டு Ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Quickstarter எனும் உருவபொத்தான் நாம் பயன்படுத்துவதற்கு தயாராக வீற்றிருக்கும்

 1.3

படம் 1.3

பொதுவாக லிபர்ஆஃபிஸின் அனைத்து பயன்பாடுகளிலும் முக்கிய கட்டளைகளடங்கிய பட்டை (Main menu bar) திரையில் மேல் பகுதில் இருக்கும் அதில் கோப்பினை திறந்து பணிபுரிந்த பின் சேமிக்க பயன்படுத்துவதற்கான கட்டளைகளின் தொகுதிளடங்கிய File எனும் கட்டளையும்

 

கோப்புகளில் திருத்தம் செய்திடவும் தேடிபிடித்து மாற்றியமை்ததிடவும் வெட்டுதல் நகலெடுத்தல் ஒட்டுதல் ஆகிய செயல்களுக்கான Edit எனும் கட்டளையும்

கோப்புகளை திரையில் காட்சியாக காணுதல் அக்காட்சிகளை பெரியதாகவோ சிறியாதாக மாற்றியமைத்தல் சுற்றெல்லையை அமைத்தல் இணையபக்கதிரையமைப்பு   ஆகிய செயல்களுக்கான View எனும் கட்டளையும்

கோப்புகளில் தலைப்பையும் அடிப்பகுதியையும் படங்களையும் வேறு கோப்புகளையும் உள்ளிணைப்பு செய்வதற்கான Insert எனும் கட்டளையும்

கோப்புகளின் பாவணை தானியங்கியாக சரிசெய்தல் சுற்றெல்லையை வடிவமைப்பு செய்தல் ஆகிய செயல்களுக்கான Format எனும் கட்டளையும்

 

ஒரு உரை ஆவணத்தில் அட்டவணையை உருவாக்குதல் திருத்துதல் ஆகிய செயல்களுக்கான Table எனும் கட்டளையும்

 

கோப்பில் எழுத்துபிழை இலக்கணபிழை திருத்துதல் வாடிக்கையாளர் விரும்பியவாறு மாறுதல் செய்தல் அதற்கான வாய்ப்புகள் ஆகிய செயல்களுக்கான Tools எனும் கட்டளையும்

கோபேபுகளை திரையில் எவ்வாறு பிரதிபலிப்பு செய்வது என்பதற்கான கட்டளைகளங்கிய Window எனும் கட்டளையும்

எந்த நேரத்திலும் இடத்திலும் எந்தவொரு உதவியும் தேவையெனில் அதனை பெறுவதற்கான Help எனும் கட்டளையும் இந்த முக்கியகட்டளைகளடங்கிய பட்டை (Main menu bar) யில் உள்ளன.

1.4

படம் 1.4

 

திரையின் மேலே கட்டளைகளடங்கிய பட்டை (Main menu bar)க்கு கீழே(படம் 1.4) கருவிபட்டை உள்ளது   இது மிதக்கும் கருவிகளின் பட்டையாகவோ அல்லது   கட்டளைபட்டைக்குகீழே நிலையாகவோ இது பல்வேறு கருவிகளின் தொகுதியாக விளங்குகின்றது கட்டளைபட்டையில் View => Toolbars=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி தேவையெனில் தோன்றசெய்யலாம் அல்லது இயல்புநிலையில் மேலே கட்டளைபட்டைக்கும் கீழ்பகுதியில் நிலையாக இருக்குமாறு செய்யலாம் இந்த கருவி பட்டையின் இடதுபுற அல்லது வலதுபுற ஓரம் உள்ள X என்பதை தெரிவுசெய்து மறையசெய்யலாம்

அறிந்துகொள்கஇணைய வலைபின்னலிற்கான பல்வேறு கருவிகளை பற்றி

 7,1இணைய வலைபின்னலிற்கான அதனுடைய தகவல் போக்குவரத்தை கட்டுபடுத்தி கண்காணித்திடும் மிகச்சிறந்த கருவியாக Multi Router Traffic Grapher (MRTG) என்ற திறமூல மென்பொருள் உள்ளது

7,2இணைய வலைபின்னலின் தகவல் போக்குவரத்தை கட்டளை வரிகளின் மூலம் கட்டுபடுத்தி கண்காணித்திடும்மிகச்சிறந்த கருவியாக TCPdump என்ற திறமூல மென்பொருள் உள்ளது இது தகவல்களை தனித்தனி பொட்டலங்களாக பிரித்து ஆய்வுசெய்து அனுமதிக்கின்றது

7,3வாடிக்கையாளர் விரும்பும் படியான இணைய வலை பின்னலை கண்காணித்ததிட NetDirector என்ற திறமூல மென்பொருள் உள்ளது

7,4 இணைய வலைபின்னலில் Simple Mail Transfer Protocol (SMTP), Post Office Protocol 3 (POP3), Hypertext Transfer Protocol (HTTP), போன்றவைகளை கண்காணித்து கட்டுபடுத்திடுவதுமட்டுமல்லாமல் temperature, humidity, or barometric pressure போன்றவைகளுக்கேற்ப இணைய வலைபின்னல் செயல்படுமாறு செய்திட Nagios எனும் திறமூல மென்பொருள் பயன்படுகினறது

7,5 Nessus எனும் திறமூல மென்பொருளானது இணைய வலைபின்னலில் நம்முடைய பாதுகாப்பிற்காக தகவல்களை வருடுதல் செய்து பாதுகாப்பு குறைபாடு ஏதேனுமிருந்தால் நமக்கு அறிவிப்பு செய்கின்றது

7,6 OpenNMS defined (Open Network Management System) எனும் திறமூல கருவியானது அதனை இயக்குபவர் இல்லாமலேயே இணைய வலைபின்னலில் தானியங்கியாக செயல்பட்டு இணைய வலைபின்னலின் தகவல் போக்குவரத்தை கட்டுபடுத்துகின்றது

7,7 Nmap:எனும் திறமூல கருவியானது இணைய வலைபின்னலில் சிறந்த பாதுகாப்பு அரனாக விளங்கி வலைபின்னலிற்கான தகுந்த பாதுகாப்பினை வழங்குகின்றது

Previous Older Entries