FlightGear எனும் கட்டற்ற பயன்பாட்டினை கொண்டு மெய்நிகர் விமாண ஓட்டியாக செயல்படமுடியும்

முற்காலத்தில் அதாவது நம்முடையசமுதாயத்தை அரசர்கள் ஆண்டுவந்த காலகட்டத்தில் யானை ஏற்றம் குதிரை ஏற்றம் அரசர்களின் தேர்ஓட்டுதல் ஆகியபணிகள் வீரதீரமிக்கத்தாக அனைவராலும் வியப்புடன் பார்க்கப்பட்டது அதனடுத்த படிநிலையாக இருசக்கரவாகணம் நான்கு சக்கர வாகண ஓட்டுவது என்பது வீரதீரமிக்கத்தாக அனைவராலும் வியப்புடன் பார்க்கப்பட்டநிலையானது மிகச்சர்வசாதாரணமாக கடந்த 20 ஆம் நூற்றாண்டில் ஆகிவிட்டது தற்போது அதனை தாண்டி விமாணஓட்டிகளாக வலம்வருவது எனும் தற்போதைய நவீணகால சூழ்நிலைக்கு முன்னேறிவிட்டோம் இருந்தாலும் நம்முடைய வாழ்நாளில் ஒருநாளாவது சுயமாக விமாணத்தை ஓட்டமுடியுமா என்ற கனவு நம்மில் பெரும்பாலானவர்களின் அடிமனதில் தற்போது இருந்துகொண்டே உ்ள்ளது இவ்வாறானவர்களுக்கு கைகொடுக்கவருவதுதான் FlightGear எனும் கட்டற்ற பயன்பாடு இதனை கொண்டு மெய்நிகரான விமானத்தினை நாமே ஓட்டி பழகி நம்முடைய கனவினை மெய்ப்பிக்கலாம் வாருங்கள்
வணிக விமான ஓட்டும்உருவகபடுத்துதல் பயன்பாடுகளுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 1996 ஆம் ஆண்டில் FlightGear எனும்செயல் திட்டம் தொடங்கப்பட்டது, அவை திறனற்றவை அன்று., விமானஓட்டிக்கான பயிற்சியை, அல்லது ஒரு விமானஓடுகின்ற உருவகபடுத்துதல் காட்சியை பயன்படுத்தி கொள்ள விரும்பும் எவருக்கும் ஒரு சிக்கலான, வலுவான, நீட்டிக்கக்கூடிய மற்றும் கட்டற்ற உருவகபடுத்துதல் கட்டமைப்பை உருவாக்குவதே இதன் அடிப்படை நோக்கமாகும் ஆகும்.
இதனை பயன்படுத்தி கொள்வதற்கு Fedora ,Ubuntu ஆகியவற்றில் ஏதேனுமொரு லினக்ஸ் இயக்கமுறைமையுள்ள i5 செயலி யுடனும் 4GB ரேமும் உடைய கணினிஅதனோடு OpenGLஅனுமதியில் வெளியிடப்பட்ட துரிதப்படுத்தப்பட்ட 3D வீடியோ அட்டை உள்ளிட்ட, மிகவும் எளிமையான வன்பொருட்களே இந்த FlightGear இன் தேவைகளாகும் இந்த கட்டமைவுகளுடனான கணினியை கொண்டு இப்போது நாம் ஒரு மெய்நிகரான விமானம் ஓட்டிடும் பயிற்சியை துவங்கிடுவோமா முதலில்
$ sudo add-apt-repository ppa:saiarcot895/flightgear
$ sudo apt-get updates
$ sudo apt-get install flightgear
ஆகிய கட்டளை வரிகளுடன் இந்த பயன்பாட்டினை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து கொள்க தொடர்ந்து இதனை வரைகலை இடைமுகப்பு முனைமமாக செயல்படுவதற்காக
$ fgfs
எனும் கட்டளை வரியை செயல்படுத்திடுக

தொடர்ந்து படத்தில் உள்ளவாறு தோன்றிடும் திரையின் இடதுபுறபகுதியில் உள்ளவைகள் கட்டமைவு செய்திட உதவும் செயலிகளாகும் அவற்றுள் Summary என்பது எந்தவொருபணியையும் செய்து முடிந்தபின்னர் துவக்கநிலை திரைக்கு வந்தசேரஉதவிடுகின்றது Aicarrftsஎன்பது நாம் Piper J-3 Cub, Bombardier CRJ-700,ஆகியவற்றுள் என்னவகையான விமாணத்தில் பறப்பதற்கான பயிற்சிக்காக நம்முடைய கணினியில் நிறுவுகை செய்துள்ளோம் என காண்பிக்கும் ஆயினும் இந்த பயன்பாட்டில் இயல்புநிலையில் Cessna 150L எனும் விமாணம் மட்டுமே பயனாளர்களின் பயிற்சிக்காக நிறுவுகை செய்யப்பட்டிருக்கும் Environment என்பது நாம் பறக்கவிரும்பும் கால சூழலையும் தட்பவெப்ப நிலையையும் மாற்றியமைத்திட உதவுகின்றது மேலும் உருவகப்படுத்துதலுடன் மேம்பட்ட வானிலை மாதிரிகள், தற்போதைய வானிலை ஆகியவற்றை NOAA இலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளும் திறன் கொண்டதாகும் . Settings என்பது இயல்புநிலையில் இடைநிறுத்தப்பட்ட முறையில் உருவகப்படுத்துதலைத் தொடங்குவதற்கான, விருப்பங்களை வழங்குகிறது. மேலும் நாம் இதனை பல பயனாளர்களுடன் இணைந்து கூட்டாக பயன் படுத்திகொள்ளமுடியும், இது பல பயனாளர்களை அனுமதிக்கும் சேவையகங்களின் விமான சேவையின் உலக வலைபின்னலில் உள்ள மற்ற பயனாளர்களுடன் இணைந்து “பறக்க” அனுமதிக்கிறது. ஆயினும் இந்த செயல்திறனை ஆதரிக்க நம்மிடம் ஒரு அதிவேகமான இணைய இணைப்பு இருக்க வேண்டும் Add-ons என்பது மேலும் கூடுதலான வித்தியாசமான சூழ்நிலைகளை காட்சிகளை இணைத்து பயிற்சி பெற உதவுகின்றது இறுதியாக உள்ள fly என்பது இவையனைத்தும் சரியாக இருக்கின்றது எனில் நம்முடைய விமானத்தை மெய்நிகராக பறக்கும் பயிற்சியை செயல்படுத்திடுகின்றது திரையின் மேலே File என்பது நம்முடைய விமானத்தில் பறக்கும் பயிற்சியை ஒரு கோப்பாக சேமித்துகொண்டு மீண்டும் மேலேகூறியவாறு துவக்கத்திலிருந்து ஒவ்வொன்றாக கட்டமைவுசெய்துகொண்டிருக்காமல் பறப்பதற்கான பயிற்சியை அடுத்தமுறை விரிவாக பயன்படுத்தி கொள்ளஉதவுகின்றது

ஓஃப்பன் ஆபிஸ்-30-ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் வரைபடங்களை இணைத்தலும் விரிவாக்கம் செய்தலும்

  நாம் ஒரு ஆவணத்தை தயார்செய்திடும்போது நம்முடைய கருத்தினை தெளிவாக புரிந்து கொள்ள செய்வதற்காக  இடையிடையே படம், வரைபடம் போன்றவைகளை இணைத்து  அளித்திட விரும்புவோம்
   இவ்வாறான படங்கள் கேமராவின்மூலம் எடுக்கப்பட்டநிழற்படம், படம் வரையும் மென்பொருளால் வரைந்த படம், விரிதாள் எனப்படும் எக்செல்லில் உருவாக்கப்படும் வரைபடம் ஆகிய மூன்று அடிப்படை வகையை சார்ந்ததாகும். இவ்வாறான படங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு  GIF, JPEG or JPG, PNG,  BMP ஆகிய ஏதேனும் ஒரு வகையில் சேமிக்கப் பட்ட கோப்புகளாக இருப்பதை எளிதாக பதிவிறக்கம் செய்து இணைத்து கொள்ளலாம்.
  அதற்காக ஒரு ஆவணத்தின்படத்தினை இணைத்திட விரும்பும் இடத்தில் இடம் சுட்டியை வைத்துகொண்டு  மேலே கட்டளை பட்டையில் Insert => Picture= > From File=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக உடன் Insert Picture என்ற உரையாடல் பெட்டி யொன்று திரையில் தோன்றிடும்(படம்-30.1) அதில் நாம் இணைத்திட விரும்பும் படம் இருக்கும் இடத்தை தேடிபிடித்துதெரிவுசெய்து கொள்க.பின்னர் Preview என்ற தேர்வுசெய் (Check box)   வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க உடன் நாம் தெரிவு செய்த படமானது முன் காட்சியாக இதே உரையாடல்பெட்டியில் தோன்றிடும்
  படம் சரியானதுதான்எனில்Link என்ற தேர்வுசெய் வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க அல்லது இந்த Link என்ற தொடுப்பினை  தெரிவுசெய்யாமல் Open என்ற பொத்தானை சொடுக்குக. உடன் நாம் தெரிவுசெய்தபடமானது ஆவணத்தில் உள்ளிணைந்துவிடும்
  இங்கு Link என்ற வாய்ப்பினை தெரிவுசெய்திருந்தால் படக்கோப்பு தனியாகவும் ஆவண கோப்பு தனியாகவும் இருக்கும் அதனால் நினைவகத்தில் ஆவணத்தின் அளவு அதிகரிக்காது, இந்த ஆவணத்தை திறக்காமலேயே படத்தை தேவையானவாறு மாற்றி யமைத்து கொள்ளலாம். ஆயினும் இந்த ஆவணத்தினை பிறருக்கு அனுப்பி வைக்கும் போது கூடவே படம் இருக்கும் கோப்பினையும் சேர்த்து அனுப்பி வைக்க வேண்டும் என்பதுதான் இந்த Link என்ற வாய்ப்பின் மிகப்பெரிய குறையாகும்..
  ஒரே படத்தைஒரு ஆவணத்தில் ஒன்றுக்குமேற்பட்ட இடத்தில் சேர்த்து இணைப்பதற்கு Link என்ற வசதி சிறந்ததாகும் இவ்வாறு Link என்ற தொடுப்பு வசதி மூலம் இணைக்கப்பட்ட படங் களை பின்னர் நிரந்தரமாக உள்பொதிந்து(Embedded) வைத்துகொள்ளமுடியும் அதற்காக  மேலே கட்டளை பட்டையில் Edit => Links=>  என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து செயற் படுத்துக உடன் Edit Link என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும்(படம்-30.2) அதில் நாம்  உள்பொதிய விரும்பும் படத்தின் கோப்பினை தெரிவுசெய்து Break Link என்ற பொத்தானை சொடுக்குக.உடன் இதனை உறுதி செய்வதற்கான சிறு பெட்டியொன்று தோன்றிடும் அதில் Yesஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின்னர்Close என்ற பொத்தானை சொடுக்கி இந்த உரையாடல் பெட்டியினை மூடிவிட்டு இந்த ஆவணத்தை சேமித்திடுக.
  ஒப்பன ஆபிஸின் Gallery என்றபகுதியில் ஏற்கனவே தேக்கி வைத்துள்ள படங்களை ஒரு ஆவணத்தில் உள்ளிணைத்திடுவதற்காக மேலே கட்டளை பட்டையில் Tools => Gallery=>. என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து செயற்படுத்துக உடன் ஏற்கனவே படங்களை தேக்கி வைத்துள்ள Gallery என்றபகுதி திரையில் தோன்றிடும் அதில் தேவையான படத்தை இடம் சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியை பிடித்து இழுத்துசென்று தேவையான இடத்தில் விடுக. அல்லது தேவையான படத்தை  தெரிவுசெய்து மேலே கட்டளை பட்டையில் Insert => Copy=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து செயற்படுத்துக உடன் நாம் தெரிவு செய்த வாறான படம்ஆவணத்தில் (படம்-30.3)இணைந்துவிடும்
 படமானது Paint ,Gimp என்பனபோன்ற படம் வரையும் மென்பொருளின்மூலம திரையில் வரையப்பட்டு தயார்நிலையிலுள்ளது எனில் அந்த படத்தில் தேவையான பகுதியை தெரிவு செய்து கொண்டு Ctrl + C என்றவாறு விசைகளை  அழுத்தி கட்டளைகளை செயற்படுத்துக        பின்னர் ஆவணத்திற்குள் படத்தினை இணைக்கவேண்டிய இடத்தில் இடம்சுட்டியை வைத்து Ctrl + V என்றவாறு விசைகளை  அழுத்தி  கட்டளைகளை செயற்படுத்துக உடன் நாம் தெரிவு செய்தவாறான படம்ஆவணத்தில்(படம்-30.4) இணைந்துவிடும்
 இவ்வாறான படக்கோப்பெல்லாம் என்னிடமில்லை படம்ஒருதாளில் உள்ளது அதனை இந்த ஆவணத்தில் இணைக்கவேண்டும் என விரும்பனாலும் கவலையே படவேண்டாம் வருடி (Scanner) மட்டும் இருந்தால்போதும் அதில் தாளில் இருக்கும் படத்தை வைத்து மேலே கட்டளை பட்டையில் Insert= > Picture => Scan => Select Source=>. என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து செயற்படுத்துக உடன் வருடி (Scanner) மூலம் தாளில் உள்ள படம் நம்முடைய ஆவணத்தில் உள்ளிணைந்துவிடும்
   இவ்வாறு படத்தை உள்ளிணைத்தபிறகு அதில்குறிப்பிட்ட பகுதிமட்டும் நம்முடைய ஆவணத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்எனஎண்ணிடுவோம் இந்த படத்தை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Picture என்றஉரையாடல்பெட்டியொன்று(படம்-30.5) திரையிலதோன்றும் அதில் Crop என்றதாவிபொத்தானின் திரையை தோன்றசெய்து தேவையானவாறு படத்தை வெட்டிசரிசெய்துகொண்டுசரியாக இருக்கின்றதுஎனில் Ok என்ற பொத்தானைசொடுக்குக.
  பத்திரிகைகளிலும் புத்தகஙகளிலும் உள்ளவாறு நம்முடைய ஆவணத்திலும்  படத்தை சுற்றி ஆவணத்தின் எழுத்துகளை அமைத்திட விரும்புவோம் அதற்காக முன்பு கூறியவாறு இந்த படத்தை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது படத்தின்மீது இடம் சுட்டியை வைத்துகொண்டு  மேலே கட்டளை பட்டையில் Format = > Wrap= > என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து செயற்படுத்துக உடன் Picture என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில தோன்றும்(படம்-30.6) அதில் Wrap என்றதாவி பொத்தானின் திரையை தோன்றசெய்து விருப்பமான வகையையும் ,அமைவையும் தெரிவுசெய்து கொண்டபின் தேவையானவாறு படத்தை சுற்றி உரையானது சரியாக அமர்ந்திருக்கின்றதுஎனில் Ok என்ற பொத்தானைசொடுக்குக.
 மேலும் கூடுதலான வசதி இந்த ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் தேவையெனும்போது
http://extensions.services.openoffice.org/.என்றவலைதளத்திற்கு சென்று தேவையான விரிவாக்க வசதியை கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்க பின்னர் கட்டளை பட்டையில் Tools > Extension Manager என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக உடன் தோன்றிடும் Extension Manager என்ற உரையாடல் (படம்-30.7)பெட்டியில் தேவையானவிரிவாக்க வசதியை தெரிவுசெய்து Add என்றபொத்தானை சொடுக்குக.
  இவ்வாறு இந்த வலைதளத்திற்கு நாம் நேரடியாக சென்று பதிவிறக்கம்செய்து இணைப் பதற்கு பதிலாக Extension Manager என்ற உரையால் பெட்டியில் உள்ள Get more extesions online … என்ற தொடுப்பினை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் இந்த வலைபக்கத்தின் இணைய இணைப்பு கணினியில் தோன்றிடும் பின்னர் தேவையானவற்றை பதிவிறக்கம்செய்து சேர்த்துகொள்க
  மேலும் ஓப்பன்ஆஃபிஸ் ரைட்டரை பற்றி  முழுவதுமாக ஆங்கிலத்தில் தெரிந்து கொள்வதற்கு  OpenOffice.org 3 Writer Guide என்ற இலவச பிடிஎஃப் கோப்பினை http://stores.lulu.com/opendocument. என்ற வலைதளத்திளிருந்தும் தேவையெனில் மாறுதல் செய்துகொள்ள  http://oooauthors.org/en/authors/userguide3/published/ என்ற வலைதளத்திளிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க
  தமிழில் தேவையெனில் www.skopenoffice.blogspot.com என்ற தளமுகவரியில் ஓப்பன் ஆபிஸ் அறிமுகம் என்ற  என்னுடைய வலைபூவிற்கு சென்று பர்வையிட்டு அறிந்துகொள்க ஓப்பன்ஆஃபிஸ் கால்க் எனும் விரிதாள் பற்றிய விவரங்களை  அடுத்த இதழிலிருந்து பார்ப்போம்

ஓப்பன் ஆஃபிஸ்-29.ஓப்பன் ஆஃபிஸின் புதுப்பொலிவும் வாடிக்கையாளர் விரும்பும் கட்டளைபட்டி, கருவிபட்டிகளை உருவாக்குதலும்

   கடந்த பத்தாண்டுகளாக வியாபார பொருளாக உள்ள எம்எஸ்ஆஃபிஸ் பயன்பாட்டிற்கு மாற்றாகவும் திறவூற்று மென்பொருளாகவும் கோலோச்சிவரும் ஒப்பன் ஆஃபிஸை வெளியிடும் உரிமையானது சமீபத்தில் சன்மைக்ரோ சிஸ்டத்திடமிருந்து ஆரக்கிள் நிறுவனம்  கையகபடுத்தியதை தொடர்ந்து இதன் லோகோவும் இதனை அடையாளம் காணக்கூடிய குறியீடும்  மாற்றப்பட்டுள்ளது.
 மேலும் இந்த பயன்பாட்டை இயக்கத்துவங்கியவுடன்  தோன்றிடும் திரையின் தோற்றம் கூட படம்-29-1-ல் உள்ளவாறு திருத்தியமைக்கப்பட்டுள்ளது
 அதுமட்டுமல்லாது இதன் தொடக்க மையத்திரையின் தோற்றமும் படம்-29-2-ல் உள்ள வாறு ORACLE  நிறுவனத்தின் பெயருடன்அமையமாறு மாற்றியமைக்கப் பட்டுள்ளது
 இந்த தொடர் ஆரம்பித்தபோது இதன் பதிப்பு 3 என்றிருந்தது பின்னர்மேம்படுத்தபட்டு .பதிப்பு 3.1 என்றும்,பதிப்பு 3.2 என்றும் படிப்படியாக வெளியிடப்பட்டன தற்போது 3.3 இன் பீட்டா பதிப்புகூட வெளியிடபட்டுள்ளது 
   இந்த ஓப்பன் ஆஃபிஸின் முந்தைய பதிப்புகளில் தொடக்கஇயக்கம் மட்டும் சிறிது கூடுதலான கால அவகாசம் எடுத்துகொள்வதை தவிர்த்து பதிப்பு 3.2 –ல் 46%  குறைத்து  தொடக்க இயக்கம் (படம்-29-3) விரைவாக அமையுமாறு செய்யதுள்ளனர்
  மற்ற எந்தவொரு அலுவலக பயன்பாட்டின் கோப்புகளையும் மிக எளிதாக திறந்து பணிபுரியுமாறும் பணிமுடிந்துபின் சேமிக்கும்போது நாம்விரும்பும்  வகை கோப்பாக சேமித்து கொள்வதற்கான வசதியும் இதன் பதிப்பு-3.2-ல் உள்ளது.
  ஒரு ஆவணத்தில் வடிவமைத்தல் அச்சிடுதல் PDFஆக ஏற்றுமதிசெய்தல் திரையில் பிரதிபலிக்க செய்தல் என்பன போன்ற பல்வேறு பணிகளுக்கு பயன்படும் வகையில் இந்த3.2-ல் சிறப்புவாய்ந்த திறந்த வகை எழுத்துருக்கள் (Open Type Fonts)உபயோக படுத்தபட்டுள்ளன.
  ஒற்றையான செல்மட்டுமல்லாது தெரிவுசெய்யப்படும் ஒன்றுக்குமேற்பட்ட செல்களை சுற்றியும் எல்லைக்கோட்டினை(border) எளிதாக அமைக்க இந்த பதிப்பு 3.2 –ல் அனுமதிக்க பட்டுள்ளது.
  ஒன்றிணைக்கப்பட்ட (merged) செல்களுடன் நகலெடுத்தல், வெட்டுதல், ஒட்டுதல், நீக்குதல்  என்பன போன்ற பணிகளை விரைவாக செய்திட அனுமதிக்குமாறும் இதன் பதிப்பு 3.2-ல் வெளியிடப்பட்டுள்ளது.
  தொடர்ச்சியற்ற செல்களின் தரவுகளையும மிக எளிதாக நகலெடுத்தல், வெட்டுதல், ஒட்டுதல் என்பன போன்ற பணிகளை செய்திட அனுமதிக்குமாறு இதில் செய்யப் பட்டுள்ளது.
 அதுமட்டுமல்லாது இதனுடைய வரைபடத்தில்  bubble chart என்ற புதிய வகையை (படம்-29-4)இதன் பதிப்பு 3.2-ல்  அறிமுகபடுத்தியுள்ளனர்
கட்டளை பட்டியை உருவாக்குதல்
 தொடர்ந்து இந்த ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் நாமே புதியதாக கட்டளை பட்டியை உருவாக்கமுடியும். அதற்காக இதன் மேல்பகுதியிலுள்ள கட்டளை பட்டியில் Tools=> Customize=>என்றவாறு கட்டளையை தெரிவு செய்து செயற்படுத்துக.
  உடன் படம்-29-5-ல் உள்ளவாறு Customizeஎன்ற உரையாடல் பெட்டியொன்று Menu என்ற தாவியின் திரையுடன் தோன்றும் முதலில் நாம் உருவாக்கபோகும் புதிய அமைப்பு இந்த ஆவணத்தில் மட்டுமா அனைத்திலுமா என முடிவுசெய்து அதற்கேற்ப save in என்பதிலுள்ள கீழிறங்கு பட்டியல்மூலம் தெரிவு செய்துகொண்டு இந்த உரையாடல் பெட்டியிலுள்ள New என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக.
  உடன்  new menu என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் (படம்-29-6தோன்றிடும் அதில் menu name என்பதற்கு புதிய பெயரை உள்ளீடு செய்து ok என்ற பொத்தானை சொடுக்குக
 அதன்பின்னர்  Customizeஎன்ற உரையாடல் (படம்-29-5)பெட்டியின் Menu என்ற தாவியின் திரையிலுள்ள Add என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக.
 உடன்  Add Commands என்ற உரையாடல் பெட்டியொன்று (படம்-29-6)திரையில் தோன்றிடும் அதில் தேவையான கட்டளைகளை தெரிவுசெய்து Add என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக.

   இவ்வாறு தேவையான கட்டளைகளை சேர்த்தபின்னர் Closeஎன்ற பொத்தானை சொடுக்கி  இந்த Add Commands என்ற உரையாடல் பெட்டியை மூடிவிடுக.

   நாம் உருவாக்கிய அல்லது ஏற்கனவே இருக்கும் கட்டளைகளை மாறுதல் செய்வதற்கு Customizeஎன்ற உரையாடல் பெட்டியில்(படம்-29-5) தேவையான கட்டளை யை தெரிவுசெய்து கொண்டு  modify என்ற பொத்தானை  சொடுக்கினால் கீழிறங்கு பட்டியலொன்று விரியும் அதில்  இந்த கட்டளையை நீக்க விரும்பினால் Delete என்பதையும் பெயர்மாற்றம் செய்யவிரும்பினால் Rename என்பதையும் புதிய குழு உருவாக்க விரும்பினால் begin a group என்பதையும்  துனை பட்டியல்களை உருவாக் கிட விரும்பினால் Add sub menu என்பதையும் தெரிவுசெய்து  ok என்ற பொத்தானை சொடுக்குக.
கருவிபட்டியை உருவாக்குதல்
 இந்த ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் நாமே புதியதாக கருவி பட்டியை கூட உருவாக்க முடியும். அதற்காக படம்-29-5-ல் உள்ளவாறு Customizeஎன்ற உரையாடல் பெட்டியில் Tools என்ற தாவியை சொடுக்குக பின்னர் விரியும் Tools என்ற தாவியின் திரையில் நாம் உருவாக்கபோகும் புதிய அமைப்பு இந்த ஆவணத்தில் மட்டுமா அனைத்தி லுமா என முடிவுசெய்து அதற்கேற்ப save in என்பதிலுள்ள கீழிறங்கு பட்டியல் மூலம் open ofiice.org writer என்றவாறு தெரிவுசெய்துகொண்டு இந்த உரையாடல் பெட்டியிள்ள New என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக.
  உடன்  new  என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் (படம்-29-7)தோன்றிடும் அதில் toolbar name என்பதற்கு புதிய பெயரை உள்ளீடு செய்து ok என்ற பொத்தானை சொடுக்குக
  பின்னர்  Customizeஎன்ற உரையாடல் (படம்-29-5)பெட்டியின் Too bar என்ற தாவியின் திரையிலுள்ள Add என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக.
 உடன்  Add Commands என்ற உரையாடல் பெட்டியொன்று (படம்-29-6)திரையில் தோன்றிடும் அதில் தேவையான கட்டளைகளை தெரிவுசெய்து Add என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக.
 இவ்வாறு தேவையான கட்டளைகளை சேர்த்தபின்னர் Closeஎன்ற பொத்தானை சொடுக்கி  இந்த Add Commands என்ற உரையாடல் பெட்டியை மூடிவிடுக.
   நாம் உருவாக்கிய அல்லது ஏற்கனவே இருக்கும் கருவிகளை மாறுதல் செய்வதற்கு Customizeஎன்ற உரையாடல் பெட்டியில்(படம்-29-5) தேவையான கருவியை தெரிவுசெய்து கொண்டு  modify என்ற பொத்தானை  சொடுக்கினால் கீழிறங்கு பட்டியலொன்று விரியும் அதில்  இந்த கருவியை நீக்க விரும்பினால் Delete என்பதையும் பெயர்மாற்றம் செய்யவிரும்பினால் Rename என்பதையும் தெரிவுசெய்துகொள்க. கருவிபட்டியில் கட்டளைகளானது பணிக்குறி(icon)களாகத்தான் இருக்கும் அதனால் இந்த புதிய கருவிபட்டியில் நம்மால் சேர்க்கப்பட்ட கட்டளையை தெரிவுசெய்துகொண்டு  இதே modify என்ற பொத்தானின் கீழிறங்கு பட்டியலுள்ள change icon என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

உடன் விரியும் change icon என்ற உரையாடல் பெட்டியில் தேவையான குறும்படத்தை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக
  இவ்வாறு  அனைத்து பணியும் முடிந்தது எனில் Customizeஎன்ற உரையாடல் பெட்டியில் ok என்ற பொத்தானை சொடுக்குக.

 

ஓப்பன் ஆஃபிஸ்-28-சுட்டுவரிசையையும் ,நூல்விவரத்தொகுதியையும் உருவாக்குதல்

 ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் ஆவணத்தில் சுட்டுவரிசை(Index/0 என்பதுஒரு ஆவணத்தில் பயன்படுத்தபட்டுள்ள திறவுசொற்கள் அல்லது சொற்தொடர்களின் பட்டியலாகும்
  குறிப்பிட்ட சொல்லானது அவ்வா வணத்தில் எங்கெங்கு வந்துள்ளதுஎன இதன் மூலம் மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். பொதுவாக இந்த சுட்டுவரிசையின் பட்டியலானது ஆவணத்தின் இறுதியில் திறவு சொற்கள் அல்லது சொற்தொடர்கள் ஆகியவற்றின் அகரமுதலி பட்டியலாக பக்க எண்களுடன் சேர்ந்தே இருக்கும்.
  சுட்டுவரிசையில் திறவுசொற்கள் அல்லது சொற்தொடர்களை சேர்த்தல்
  1.திறவுசொல் அல்லது சொற்தொடரை மேம்படுத்தி தூக்கலாக காண்பிக்க செய்வது அல்லது இடம்சுட்டியை அச்சொல்லின் முன்புறத்தில் நிறுத்துவது ஆகிய ஏதேனு மொன்றின் வாயிலாக சுட்டுவரிசையின் பட்டியலில் சேர்ப்பதற்கான உள்ளீட்டை உருவாக்கவேண்டும்.
2.பின்னர் Insert > Indexes and Tables > Entry என்றவாறு கட்டளைகளைதெரிவுசெய்து அல்லது Insert என்ற கருவிபட்டையிலுள்ள Entry என்ற உருவை (படம்-28-1)தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக  செயற்படுத்துக.

                            படம்-28-1
 அதன் பின்னர் தோன்றிடும் Insert Index Entry என்ற (படம்-28-2) உரையாடல் பெட்டியில் உள்ள Entry என்ற உரைபெட்டியில் காண்பிக்கும் திறவுசொல் அல்லது சொற்தொடரை ஏற்றுகொள்க அல்லது மாறுதல் செய்வதாயின் Entry என்ற உரைபெட்டியை சொடுக்கி   வேறு சொல்லை  இந்த பெட்டிக்குள் உள்ளிணைத்து கொள்க
                              படம்-28-2
3.பின்னர் Insert என்ற பொத்தானை சொடுக்கி இதனை சுட்டுவரிசை பட்டியலில் சேர்த்து கொள்க
4. இந்த உரையாடல் பெட்டியை மூடாமல் அப்படியே வைத்துகொண்டுமேலேகூறிய படிமுறைகளின்படி ஒன்றுக்கு மேற்பட்ட திறவுசொற்கள் அல்லது சொற்தொடர்களை இந்த சுட்டு வரிசையில் சேர்த்திடலாம் அதற்காக ஒவ்வொரு திறவுசொல் அல்லது சொற்தொடரையும் அவை இவ்வாவணத்தில் இருக்கும் பக்கத்திற்கு  ஒவ்வொரு முறையும் சென்று அவைகளை ஒவ்வொன்றாக தெரிவு செய்து சொடுக்கியபின்னர் இந்த உரையாடல் பெட்டியை சொடுக்குக அதன்பின்னர் Insert என்ற பொத்தானை சொடுக்கி இதனை சுட்டுவரிசையின் பட்டியலில் சேர்த்து கொள்க
5. அனைத்து திறவுசொற்கள் அல்லது சொற்தொடர்களையும் இந்த சுட்டுவரிசைக்குள் உள்ளீடு செய்து சேர்க்கப்பட்டுவிட்டது எனில் close என்றபொத்தானை சொடுக்கி இந்த உரையாடல்பெட்டியை மூடிவிடுக.
 பின்னர்Tools > Options >OpenOffice.org > Appearance > Text Document > Field shadings  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் இந்த சுட்டுவரிசையில் சேர்க்கபட்ட திறவு சொற்கள் அல்லது சொற்தொடர்கள் சாம்பல் பின்புலத்தில்  வேறுபடுத்தி காண்பிக்கும்
சுட்டுவரிசையை விரைவாக உருவாக்குதல்
 சுட்டுவரிசை உருவாக்கவிரும்பும் திறவுசொல் அல்லது சொற்தொடரின் முன்புறம் இடம்சுட்டியை வைத்து Insert > Indexes and Tables > Indexes and Tables. என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக
2.பின்னர் தோன்றிடும் Insert Index/Table என்றஉரையாடல்(படம்-28-3)பெட்டியில் Index/Table என்ற தாவியின் பக்கத்தில் Typeஎன்றஉரைபெட்டியலுள்ள Alphabetical Index.என்பதை  தெரிவுசெய்க. .
3.அதன்பின்னர் options என்பதன் கீழுள்ள Case sensitive.என்ற தேர்வுசெய்பெட்டி தெரிவுசெய்திருப்பதை தெரிவுசெய்யாது விட்டிட்டு ok என்ற பொத்தானை சொடுக்குக
                            படம்-28-3
நடப்பிலுள்ள சுட்டுவரிசைஉள்ளீட்டை மாறுதல் செய்தல்
 நடப்பில் சாம்பல் பின்புலத்தில்  வேறுபடுத்தி காண்பித்து செயலில் இருக்கும் இந்த சுட்டுவரிசையில் சேர்க்கபட்ட திறவுசொற்கள் அல்லது சொற்தொடர்களின் இடதுபுறத்தில் இடம்சுட்டியை வைத்துசுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக
 உடன் தோன்றிடும் மேல்மீட்பு பட்டியலில் Index Entry. என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Edit > Index Entry. என்றவாறு கட்டளையை தெரிவுசெய்து செயற்படுத்துக.
  பின்னர் தோன்றிடும் Edit index Entry என்ற(படம்-28-4) உரையாடல் பெட்டியில் forward arrow அல்லது back arrow ஆகிய பொத்தான்களில் ஒன்றை  சொடுக்குவதன்வாயிலாக சுட்டுவரிசையிலுள்ள அனைத்து சொற்களும் இருக்கும் இடத்திற்கு செல்லமுடியும்
                             படம்-28-4
 அவ்வாறு சென்று தேவையான மாறுதல்களை இதில் செய்து முடித்தபின்னர் ok என்ற பொத்தானை சொடுக்குக
அகரவரிசை தவிர்த்தவேறுவகைசுட்டுவரிசையை உருவாக்குதல்
 சுட்டுவரிசை உருவாக்கவேண்டிய பகுதியில் இடம்சுட்டியை வைத்துகொண்டு ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்து Insert > Indexes and tables > Indexes and tables என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக.
 பின்னர் தோன்றிடும் Insert Index/Table என்ற  உரையாடல் பெட்டியில் Type என்பதிலுள்ள கீழிறங்கு பட்டியலிலிருந்து தேவையான வகையை தெரிவுசெய்து கொள்க.
  அதன் பின்னர் முந்தைய படிமுறைகளில் கூறியவாறு மற்ற அனைத்து செயல்களையும் செய்தபின்  ok என்ற பொத்தானை சொடுக்குக
நூல்தொகுப்பு பட்டியல் (Bibliographies)
  ஒரு ஆவணத்திலுள்ள குறிப்பிட்ட சொல்லானது எந்த புத்தகத்திலிருந்து எடுத்தாள பட்டது என்ற விவரத்தை குறிப்பிட இந்தநூல்தொகுப்பு பட்டியல் பயன்படுகின்றது.இந்த நூல்தொகுப்பு பட்டியலை அதே ஆவணத்திலோ அல்லது தனியாக தரவுதள அட்டவணை கோப்பாகவோ பராமரிக்கமுடியும்.
தரவுதள நூல்தொகுப்பு பட்டியலை (Bibliographies)உருவாக்குதல்
 ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்துTools > Bibliography Database.என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்தோன்றிடும்(படம்-28-5) என்ற சாளரத்தின் மேலே கட்டளை பட்டையிலிருந்துTools > Filter என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
                                 படம்-28-5
  உடன்தோன்றிடும் Standard Filter என்ற உரையாடல் பெட்டியில் (படம்-28-6) வடிகட்ட விரும்பும் சொற்களை தெரிவு செய்து  ok என்ற பொத்தானை சொடுக்குக
                                 படம்-28-6
   இதே சாளரத்தின் மேல்பகுதியிலுள்ள Column Arrangement  என்ற பொத்தானை சொடுக்குக.உடன் விரியும் column layout Table biblio   என்ற உரையாடல் பெட்டியில்(படம்-28-7) தேவையானவாறு நெடுவரிசையின் அமைப்பை தெரிவுசெய்து அமைத்துகொள்க

                             படம்-28-7
 இதே சாளரத்தின் மேல்பகுதியிலுள்ள Data Source ன்ற பொத்தானை சொடுக்குக.உடன் விரியும் Data Source என்ற உரையாடல் பெட்டியில் (படம்–28-8) தேவையான Data Source தெரிவுசெய்து அமைத்துகொண்டு ok என்ற பொத்தானை சொடுக்குக
                              படம்-28-8
 மிகுதியாக இருக்கும் இந்த சாளரத்தின் மையபகுதியே விவரங்களை அட்டவணையாக பிரதிபலிக்கசெய்யும் இடமாகும்
  இந்த சாளரத்தின் கீழ்பகுதியானது அட்டவணையில் தெரிவுசெய்யபட்டஆவணத்தின் முழுவிவர உள்ளடக்கத்தை பிரதிபலிக்கசெய்கின்றது
  இந்த தரவுதளத்தின் கீழ்பகுதியை பயன்படுத்தி நேரடியாக ஆவணங்களை சேர்த்திடலாம் அவ்வாறான பணியின்போது புலங்களுக்கிடைய இடம்சுட்டி நகருவதற்கு தாவி(tab) விசையை பயன்படுத்தி கொள்க இறுதியாக கடைசிபுலத்தில் இடம்சுட்டி இருக்கும்போது மீண்டுமொருமுறை தாவி விசையை  அழுத்துக   
 பட்டியலுள்ள சொற்களுடன் ஆவணத்திலுள்ள சொற்களையும் தொடர்புபடுத்தி மேற்கோளாக (citations)காண்பிப்பதற்கு ஒப்பன்ஆஃபிஸ் ரைட்டர் ஆனது 1.நூலாசிரியரின் பெயர் 2. சொற்களுக்கு  வரிசைஎண்ணிடுவது ஆகிய இரண்டு வழிகளை பயன்படுத்தி கொள்கின்றது
 இவ்வாறான நூல்தொகுப்பு பட்டியலை உருவாக்க விரும்பும் சொல்லிற்குமுன்புறம் இடம்சுட்டியை வைத்துகொண்டு  ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்துInsert > Indexes and tables > Bibliographic entry.என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்தோன்றிடும் Insert Bibliographic Entry என்ற உரையாடல் (படம்-28-9)பெட்டியிலுள்ள From bibliography database என்ற வானொலி பெட்டியை தெரிவு செய்துகொண்டு short name என்பதன் கீழ் இருக்கும் கீழிறங்கு
பட்டியல் மூலம் மேற்கோள்பெயரைதெரிவுசெய்து inseert என்ற பொத்தானை சொடுக்குக..

                             படம்-28-9
 இவ்வாறே மேலும் மேற்கோள்களை இந்த உரையாடல்பெட்டியை மூடாமல் தெரிவுசெய்துகொண்டு இறுதியாக close என்றபொத்தானை சொடுக்கி இந்த உரையாடல்பெட்டியை மூடிவிடுக
 இவ்வாறான நூல்தொகுப்பு பட்டியலை உருவாக்க விரும்பும் இடத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு  ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்துInsert > Indexes and tables >.என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்தோன்றிடும் Insert Indexes and tables என்ற (படம்-28-10)உரையாடல் பெட்டியின் Type என்பதிலுள்ள கீழிறங்கு பட்டியல்மூலம் Bibliography என்பதை தெரிவுசெய்து கொள்க

                                   படம்-28-10

 இதில் கைதவறுதலாக மாறுதலெதுவும்ஆகாமலிருப்பதற்கு Protected against manual changes என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொண்டு அவ்வாறே தேவையானால் Number entries என்ற தேர்வுசெய்பெட்டியையும் தெரிவுசெய்துகொள்க. மீகுதி இயல்பாக தெரிவுசெய்திருப்பதை ஏற்றுகொண்டு okஎன்ற பொத்தானை சொடுக்குக.
 நூல்தொகுப்பு பட்டியலை bibliography இடம்சுட்டிவைத்து தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக. பின்னர் தோன்றிடும் மேல்மீட்பு பட்டியலிலிருந்து Edit Index/Table அல்லது update Index/Table அல்லது  delete Index/Table என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் Insert Index/Table  என்ற உரையாடல் பெட்டியில்   Updating a table of contents” அல்லது “Deleting a table of contents ஆகிய வசதிகளின் வாயிலாக தேவையான மாறுதல்களை செய்து கொண்டு இந்த பட்டியலை சேமித்துகொள்க
ஓப்பன் ஆஃபிஸின் நூல்தொகுப்பு பட்டியல் வசதியானது சரியாக செயல்படவில்லை யெனில்  கவலையே படவேண்டாம்  இலவசமாக கிடைக்ககூடிய Bibus (http://bibus-biblio.sourceforge.net/wiki/index.php/Main_Pageஅல்லதுr Zotero (http://www.zotero.org/ஆகிய இரண்டில் ஒன்றினை இதற்காக பயன்படுத்திகொள்க.

ஓப்பன் ஆஃபிஸ்-27-உள்ளடக்க அட்டவணையை உருவாக்குதல்

 ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் நூற்றுகணக்கான பக்கங்களைகொண்ட ஒரு ஆவணத்தை உருவாக்கிடும்போது இந்த ஆவணத்தை வாசகர்கள் தொடர்ந்து படிக்கதூண்டும் வகையில் இதில் தலைப்புகள்  உபதலைப்புகள்  உட்தலைப்புகள் என்றுவாறு அமைத்திடுவார்கள்.
  இவ்வாறான  ஒரு ஆவணத்தின் உள்ள தலைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து  உள்ளடக்க அட்டவணை யொன்றை உருவாக்கிட ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில்  உள்ள table of content என்ற வசதியானது அனுமதிக் கின்றது
  இதற்குமுன்  முதல்படி முறையாக இவ்வாவணத்தின் தலைப்புகள்  உபதலைப்புகள்  உட்தலைப்புகள் ஆகியவை  ஒரே சீராண தலைப்பு பாவணையுடன்(Styles)  இருக்கின்றதா வென உறுதி செய்து கொள்க.
 இவ்வாறான ஒரு ஆவணத்திலுள்ள தலைப்புகளுக்கு இயல்புநிலை  பாவணையுடன் வாடிக்கையாளர் விரும்பியவாறும் மாற்றியமைத்து கொள்ளமுடியும்
ஒரு உள்ளடக்க அட்டவணையை விரைவாக உருவாக்குதல்
 ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் உள்ள ஒரு ஆவணத்தில்  உள்ளடக்க அட்டவணை யொன்றை உருவாக்கிடுவது மிக எளிதான செயலாகும் அதற்காக
1.ஆவணமொன்றை உருவாக்கிடும்போதே பகுதி உட்பகுதி ஆகியவற்றின் தலைப்புகள் Heading 1, Heading 2, and Heading 3. என்றவாறு இருக்கும்படி அமைத்து கொள்க. இவ்வாறு தலைப்புகளை மூன்றிற்கு மேற்பட்டநிலைகளிலும் உருவாக்கமுடியும் ஆயினும் இயல்புநிலையில் தலைப்புகளை மூன்று நிலைகளில் மட்டும் அமையுமாறு வைக்கப்பட்டுள்ளது.(படம்-27-1)
    படம் 27-1
2.பின்னர் இவ்வாறான உள்ளடக்க அட்டவணையொன்றை உருவாக்கிட விரும்பும் இடத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு மேலே கட்டளை பட்டியிலுள்ள  கட்டளை களிலிருந்து Insert => Indexes and Tables => Indexes and Tables=> என்றவாறு தெரிவுசெய்து செயற்படுத்துக.
படம் 27-2
3.பின்னர் தோன்றிடும் Insert Index/Table என்ற (படம் 27-2) உரையாடல்பெட்டியில் நாம்செய்ய வேண்டியது எதுவுமில்லை அதனால் இதிலுள்ள ok என்ற பொத்தானை மட்டும் சொடுக்குக. உடன் உள்ளடக்க அட்டவணையின் தோற்றம் படம் 27-3ல் உள்ளவாறு அமையும்.
படம் 27-3
 இவ்வாறு உருவாக்கப்பட்ட  உள்ளடக்க அட்டவணையில் நாம்அவ்வப்போது செய்கின்ற மாறுதல்களுக்ககேற்ப தானாக மாறியமைந்திடுவதற்காக
இந்த உள்ளடக்க அட்டவணைக்குள் இடம்சுட்டியை வைத்து கொண்டுசுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக உடன் தோன்றிடும் சூழ்நிலை பட்டியலிலிருந்து (படம்-27-4)Update Index/Table என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.
    படம்-27-4
 குறிப்பு இவ்வாறு கட்டளையை செயற்படுத்திடும்போது இடம்சுட்டியானது உள்ளடக்க அட்டவணைக்குள் இல்லாவிட்டால் Tools => Options => OpenOffice.org Writer => Formatting Aids=>  Enable => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.
விரும்பியவாறு உள்ளடக்க அட்டவணையை உருவாக்குதல்
மேலேகூறிய இயல்புநிலைக்கு பதிலாக நாம்விரும்பியவாறும் இந்த உள்ளடக்க அட்டவணையை உருவாக்கிஅமைத்துகொள்ளலாம். அதற்காக
1.உள்ளடக்க அட்டவணையை உருவாக்கிடவிரும்பும் இடத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு மேலே கட்டளைபட்டியிலுள்ள  கட்டளை களிலிருந்து Insert => Indexes and Tables => Indexes and Tables=> என்றவாறு தெரிவுசெய்து செயற்படுத்துக.
2.பின்னர் தோன்றிடும் Insert Index/Table என்ற (படம் 27-2) உரையாடல் பெட்டியில் ஐந்து தாவிகளின்  பக்கங்கள் உள்ளன.இவற்றுள் ஏதேனுமொன்றை அல்லது அனைத்தையும் பயன்படுத்தி நாம்விரும்பியவாறு அமைத்து கொள்ளலாம். இதில் உள்ள
  1.Index/Table என்ற தாவியினுடைய பக்கத்தின் துனையுடன் உள்ளடக்க அட்டவணையின் பண்புக்கூறுகளை(attributes) அமைத்து கொள்ளலாம்
  2.Entries and Styles என்றதாவியினுடைய  பக்கத்தின் துனையுடன் இந்த  அட்டவணையின் உள்ளடக்கங்களை  வடிவமைத்து கொள்ளலாம்
  3.Styles என்ற பக்கத்தின் துனையுடன் உள்ளடக்க அட்டவணையின் பாவணையை(style)  அமைத்து கொள்ளலாம்
  4.Columns page என்ற தாவியினுடைய பக்கத்தின் துனையுடன் உள்ளடக்க அட்டவணையை ஒன்றுக்கு மேற்பட்ட நெடுவரிசையில் அமைத்து கொள்ளலாம்
  5.Background என்ற தாவியினுடைய பக்கத்தின் துனையுடன் உள்ளடக்க அட்டவணையின் பின்புலவண்ணம் படம் போன்றவற்றை அமைத்து கொள்ளலாம்
 இவ்வாறு அமைத்திடும்போது இது எவ்வாறு இருக்கும் என முன்னோட்டமாக பார்த்திட அந்தந்த தாவியினுடைய பக்கத்தின் கீழே இடதுபுறத்தில் preview என்ற தேர்வுசெய் பொத்தானை தெரிவுசெய்து சரிபார்த்துகொள்ளாம். தேவையான அனைத்து மாறுதல்களையும் செய்த பிறகு இதிலுள்ள okஎன்ற பொத்தானை சொடுக்குக.
  Entries பக்கத்தினை பயன் படுத்துதல்
 Insert Index/Table என்ற உரையாடல்பெட்டியிலுள்ள Entries என்ற  தாவியின் பக்கமானது ஒரு உள்ளடக்க அட்டவணையின் உள்ளீடுகளை வரையறுத்து வடிவமைத்திட உதவுகின்றது அதனால் குறிப்பிட்ட நிலையின் எண்ணை தெரிவுசெய்து சொடுக்கி இந்த Insert Index/Table என்ற உரையாடல்பெட்டியின் Entries என்ற தாவியினுடைய (படம்-27-5)பக்கத்தை கொண்டு இதனுடைய கட்டமைப்பை வடிவமைத்து கொள்ளலாம். இதிலுள்ள(structure and formatingஎன்பதன்கீழ் structure என்பதற்கு அருகில்)
 1.E# என்ற பொத்தான் தலைப்பு (chapter)எண் துனைத்தலைப்புஎண் எவ்வாறு இருக்கவேண்டும் என அமைத்திட உதவுகின்றது
2.E என்ற பொத்தான் உள்ளடக்கத்தில் உரை எவ்வாறு இருக்கவேண்டும் என அமைத்திட உதவுகின்றது
3.T என்ற பொத்தான்  உள்ளடக்கத்தில்  tab stop எவ்வாறு இருக்கவேண்டும் என அமைத்திட உதவுகின்றது
4. #என்ற பொத்தான் உள்ளடக்கத்தில்   page number.எவ்வாறு இருக்கவேண்டும் என அமைத்திட உதவுகின்றது
இதன் வெண்மையான புலம் உள்ளடக்க அட்டவணையின் காலி இடத்தை குறிப்பிடுகின்றது
படம்-27-5
மீத்தொடுப்பை(hyperlink)உருவாக்குதல்
இவ்வாறு ஒரு ஆவணத்தில் உள்ளடக்க அட்டவணையொன்றை மட்டும் உருவாக்கினால் போதுமானதன்று குறிப்பிட்ட தலைப்பை தெரிவுசெய்து சொடுக்கினால் தொடர்புடைய ஆவணத்தின் பக்கத்திற்கு நம்மை அழைத்துசெல்லுமாறும் மீத்தொடுப்பை(hyperlink) அமைத்திடவேண்டும் அதற்காக
 இந்த Structure என்பதற்கு (படம்-27-6)அருகிலுள்ள காலியான புலத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு hyperlink என்ற பொத்தானை சொடுக்குக. உடன் LSஎன்ற மீத்தொடுப்பின் (hyperlink) ஆரம்ப பொத்தான் ஒன்று தோன்றும் பின்னர் இதற்கடுத்துள்ள காலிபுலத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு hyperlink என்ற பொத்தானை மீண்டும்  சொடுக்குக. உடன் LEஎன்ற மீத்தொடுப்பின்(hyperlink) முடிவு பொத்தான் ஒன்று தோன்றும் உடன் இந்த நிலையின் எண் இதன் உள்ளடக்கம் ஆகியவை மீத்தொடுப்பு(hyperlink) பெற்று அமைந்துவிடும்
படம்-27-6
உள்ளடக்க அட்டவணைக்குள் மாறுதல் செய்தல்
 இந்த உள்ளடக்க அட்டவணைக்குள் தேவையான உள்ளீட்டில் இடம்சுட்டியை வைத்து கொண்டுசுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக உடன் தோன்றிடும் சூழ்நிலை பட்டியலிலிருந்து (படம்-27-4)Edit Index/Table என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.
உள்ளடக்க அட்டவணைக்குள் உள்ளீட்டை நீக்கம் செய்தல்
 இந்த உள்ளடக்க அட்டவணைக்குள் தேவையான உள்ளீட்டில் இடம்சுட்டியை வைத்து கொண்டுசுட்டியின் வலதுபுற பொத்தாதனை இருமுறை சொடுக்குக உடன் தோன்றிடும் சூழ்நிலை பட்டியலிலிருந்து (படம்-27-4)Delete Index/Table என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

ஓப்பன் ஆஃபிஸ்-26- ரைட்டரில் படிவங்களை பயன்படுத்துதல்

   பொதுவாக ஒரு செந்தர உரைஆவணமானது கடிதம்,கட்டுரை, சிற்றேடு, அறிக்கை போன்றவை களாகத்தான் இருக்கும்.இதனை ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் திறந்து பார்வையிடும்  பார்வையாளர் ஒருவரால் தம் விருப்பபடி திருத்தம் செய்யவோ அப்படியே படிக்க மட்டும் செய்யவோ முடியும் 
   பல்வேறு விவரங்களை கோரும் வினாத்தாட்கள் ,கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான விண்ணப்பங்கள், போன்றவைகளை  இவ்வாறான ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் ஆவணமாக அளித்திட்டால் பார்வையாளர் ஒருவர் அதற்கான விடையை  பூர்த்தி செய்திடும்போது வினாவையும் சேர்த்து திருத்தம் செய்திட வாய்ப்புள்ளது .இவ்வாறான நிலையில் பார்வையாளரால் விடையை மட்டும்  பூர்த்தி செய்திடுவதற்கு அனுமதிக்குமாறும் வினாவை திருத்தம் செய்ய முடியாது தடுத்திடுமாறும் அமைப்பதற்கு உதவுவதுதான் படிவமாகும்
  குறிப்பிட்ட நோக்கங்களுக்கான கணக்கெடுப்பு பணியின்போது அக்குறிப்பிட்ட குழுவான மக்களிடம் வினாத்தாட்களை வழங்கி அதற்கான விடையை மட்டும் பூர்த்திசெய்து பெறுவதற்கும் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான விண்ணப் பங்களிலும் இந்த படிவ வழிமுறை பயன்படுத்தப்படுகின்றது
  ஆனால் படிவம் தரவுதளத்தில்மட்டும் தானே பயன்படுத்திடமுடியம் ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் எவ்வாறு படிவத்தை உருவாக்கி பயன்படுத்துவது என்ற  சந்தேகம்   வாசகர் அனைவருக்கும்  இந்நிலையில் எழும்  ஆம் ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் கூட சாதாராண படிவம் ஒன்றை உருவாக்கி பயன்படுத்திட முடியும் அதுமட்டுமல்லாது ஓப்பன் ஆஃபிஸின் கால்க்,இம்ப்பிரஸ்,.ட்ரா போன்ற பயன்பாடுகளில்கூட இதுபோன்ற சாதாராண படிவத்தை பயன்படுத்தி கொள்ள முடியும்.
   ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் கருவி பெட்டியின் கருவிகளை கொண்டு தேர்வு செய் பெட்டிகள்(check boxes), வாய்ப்பு பொத்தான்கள்( option buttons),கீழ்இழு பட்டியல்கள் (pull-down lists) , சுழல்பெட்டிகள் (spinners)போன்ற பல்வேறு வழிகளில் இந்த படிவத்தை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பை  அமைத்திட முடியும். இவ்வாறான சாதாரண படிவம் ஒன்றை ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் எவ்வாறு உருவாக்குவது என இப்போது காண்போம்.
 சாதாரண படிவம் ஒன்றை உருவாக்குதல் 
 File > New > Text document.என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி காலியான  ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் ஆவணமொன்ற திறந்து கொள்க
  பின்னர்  படம்-26-1-இல் உள்ளவாறு கட்டுபாடுகள் (Controls) எதையும் இணைத் திடாமல் படிவத்தின் உள்ளடகத்தினை மட்டும் இதில் தட்டச்சு செய்துகொள்க.
படம்-26-1
 இதில் Name என்பது உரைபெட்டி(text box)யாகும் .Sex என்பது male அல்லது female ஆகிய இரண்டு வாய்ப்பிலொன்றை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு பொத்தான்கள் (option buttons) ஆகும்.  Favourite shape என்பது “Circle”; ”Triangle”; ”Square”;”Pentagon”. ஆகிய நான்கு வாய்ப்புகளுள்ள பட்டிபெட்டி(list box)யாகும். All shapes you like என்பது நாம் விரும்பியதை தெரிவுசெய்ய உதவிடும் தேர்வுசெய் பெட்டி(check boxes.)யாகும்.  இவ்வாறான நான்கு வகை கட்டுபாடுகளை(Controls) இதில் உருவாக்கவேண்டும் இதற்காக
   இந்த ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் சாளரத்தின் மேல்பகுதியிலுள்ள கட்டளை பட்டியிலிருந்து  View > Toolbars > Form Controls என்றும்  View > Toolbars > Form Design என்றும் கட்டளைகளை செயற்படுத்தி படிவமொன்றை உருவாக்கு வதற்கான திரையின் வெவ்வேறு இடத்தில் Form Controls, Form Design ஆகிய இரு கருவிபட்டைகளை(படம்-26-2) தோன்றச்செய்க.
   இந்த Form Controls கருவி பட்டியில் பொதுவாக அதிகஅளவில் பயன்படுத்தபடும் கட்டுபாட்டு வகைகளின் (types of Controls) பொத்தான்களை மட்டும் நம்முடைய பார்வைக்கு திரையில் காண்பிக்கும்  மேலும் தேவையெனில் moreஎன்ற பொத்தானை சொடுக்கினால் போதும் இதே கருவிபட்டியின் கூடுதலான பொத்தான்களை More Controls என்ற(படம்-26-2) திரையில் காண்பிக்கும்  Form Design இலிருந்து கூட இந்த Form Controls கருவி பட்டியை திறக்கமுடியும்  அதுமட்டுமல்லாது இந்த கருவி பட்டிகளை நாம் விரும்பும் இடத்தில் அப்படியே இருக்குமாறு இணைத்து நிலையாக நிற்குமாறு செய்ய முடியும் தேவை யில்லையெனில் இதனை எப்போதும் மிதந்து கொண்டே இருக்கு மாறும் விட்டிட முடியும்.
படம்-26-2
 ஒருபடிவத்தில் பல்வேறு கட்டுபாடுகளை உள்ளிணைத்து உருவாக்குவதற்காக Design Mode On/Off என்ற இரண்டிலொரு பொத்தானை சொடுக்குவதன் வாயிலாக இந்த Form Controls என்ற கருவிபட்டியை செயல்படும்(On)நிலைக்கு கொண்டுவரமுடியும்  இதே பொத்தானை மீண்டும் சொடுக்கினால் இந்த Form Controlsஎன்ற கருவிபட்டியை செயல்படா(Off)நிலைக்கு கொண்டுசெல்லமுடியும்
. 1.Form Controlsஎன்ற கருவிபட்டியிலுள்ள நாம் விரும்பும் கருவியை தெரிவு செய்து சொடுக்குக உடன் இடம்சுட்டியின் உருவம் உருமாறி இருக்கும்
2.பின்னர் இந்த ஆவணத்தில் இடம்சுட்டியை வைத்து சொடுக்கி சுட்டியின் இடதுபுற பொத்தானை பிடித்துகொண்டு கட்டுபாட்டை(Controls) வரைக தேவையானால் இதனை வேறுஇடத்திற்கு நகர்த்தி கொள்ளலாம்.. ஆயினும் Check Box அல்லது Option Button என்பன போன்றவைகளை வரைந்திடும் போது இயல்புநிலையில் இவைகள் நிலையான உருவமும் பெயரும் கொண்டவையாக இருக்கும் என்பதை மனதில் கொள்க.
 இதே கட்டுபாட்டினை (Controls) நமக்கு எத்தனை தேவையென்றாலும் உருவாக்கி கொள்ளலாம் ஏனெனில் இந்த கட்டுபாட்டு(Controls) பொத்தான் ஆனது தற்போது தொடர்ந்து செயல்படும் நிலையிலுள்ளது.
 Shift என்ற விசையை அழுத்தி பிடித்துகொண்டு இவ்வாறான கட்டுபாட்டை (Controls) உருவாக்கினால் இதன் உருவமானது சதுரமாக தோன்றிடும்
 group box, list box,combo box என்பன போன்ற கட்டுபாடுகளை(Controls) உருவாக்கிடும் போது  அடுத்தடுத்து என்ன செய்வது என திகைத்து நின்றிடாமல் தொடர்ந்து செயல்படுவதற்கு வித்தகர் (Wizard) ஒருவர் திரையில் தோன்றி நமக்கு வழிகாட்டிடுவார்  Form Controls என்ற கருவி பட்டியிலுள்ள Wizards On/Off என்ற பொத்தானை சொடுக்குவதன் வாயிலாக இதனை செயல்படா(Off)நிலைக்கு கொண்டுசெல்லவும் மீண்டும் சொடுக்குவதன் மூலம் பழையபடி  செயல்படும்(On) நிலைக்கு கொண்டு வரவும் முடியும்
  வேறு கட்டுபாட்டு(Controls)பொத்தான்களையும் இவ்வாறே தெரிவுசெய்து சொடுக்கி இதே ஆவணத்தில் உருவாக்கிகொள்க.
 பின்னர் On/Off என்ற பொத்தானை சொடுக்குவதன் வாயிலாக இந்த Form Controls என்ற கருவி பட்டியை செயல்படா(Off)நிலைக்கு கொண்டுசெல்க தற்போது இடம்சுட்டியானது பழைய உருவத்திற்கு மாறிவிடும்.
 இவ்வாறு உருவாக்கிய கட்டுபாட்டினை (Controls) அமைவு(Configure) செய்யவேண்டும் அதற்காக இந்த கட்டுபாட்டினை(Controls) தெரிவுசெய்து சுட்டியின் இடதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக அல்லது  சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக. உடன் விரியும் சூழ்நிலை பட்டி (Contextual menu)யிலிருந்து Properties என்பதை தெரிவு செய்து சொடுக்குக. உடன்  Properties : Combo box என்ற (படம்-26-3)  உரையாடல் பெட்டியொன்று இந்த கட்டுபாட்டிற்காக தோன்றும் இது General, Data, Events.ஆகிய மூன்று தாவிகளின் பக்கங்களை கொண்டதாகும் .ஒருசாதாரண படிவத்திற்கு General என்ற தாவியின் பக்கமே இயல்புநிலையில் திரையில் தோன்றிடும்.
  இதன் புலங்கள் கட்டுபாடுகளுக்கு(Controls) ஏற்றவாறு இருக்கும் உதாரணமாக Push Button ,Option Button ஆகியவற்றிற்கு இதன் பெயருடன் தோன்றவதற்காக visible labels என்ற புலம் இதில் இருக்கும் List Box போன்றவற்றில் தெரிவு செய்வதற்கான பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி அமைத்திடுமாறு இதுஇருக்கும்.இதன் வலதுபுற ஒரத்திலுள்ள scroll box என்பதை பிடித்து இழுத்து செல்வதன்வாயிலாக திரையில் தோன்றாத புலங்களையும்  கூடுதலாக தோன்றசெய்து  அமைவு செய்து கொள்ளலாம்
படம்-26-3
  ஒருபடிவத்தை பயனாளர் ஒருவர் பயன்படுத்துவதற்காக Design Mode On/Off என்ற பொத்தானை சொடுக்குவதன் வாயிலாக இந்த Form ஐ செயல்படா(Off) நிலைக்கு கொண்டுசெல்லமுடியும் இதே பொத்தானை மீண்டும் சொடுக்கி வடிவமைப்பாளர் இந்த படிவத்தை வடிவமைப்பதற்காக இந்த Form ஐ செயல்படும்(On)நிலைக்கு கொண்டு வரமுடியும் 
  இந்த ஆவணத்தின் படிவத்தில் கட்டுபாடுகளை(Controls)  சேர்த்திடுவதற்காக  முதலில் Form ControlsDesign Mode On/Off என்ற பொத்தானை சொடுக்குவதன் வாயிலாக செயல்படும்(On)நிலைக்கு கொண்டு வருக.
 பின்னர்  உரைபெட்டி பொத்தானை சொடுக்கி Name என்பதற்கருகில் இடம் சுட்டியை வைத்து சுட்டியின் இடதுபுற பொத்தானை பிடித்துகொண்டு போதுமான அளவிற்கு செவ்வக வடிவபெட்டிபோன்ற வரைந்து கொள்க. பின்னர்  Wizards On/Off என்ற பொத்தானை சொடுக்கி இதனை செயல்படு(On)நிலைக்கு கொண்டு வரப் பட்டுள்ளதாவென உறுதிசெய்து கொண்டு  More Controls என்ற பொத்தானை சொடுக்கி More Controls என்ற கருவி பெட்டியை திரையில் தோன்ற செய்து படிவத்தின் Sex என்பதில்  Group Box ஐ உருவாக்குவதற்காக . Group Box என்ற பொத்தானை சொடுக்குக.
  உடன் தோன்றிடும் Group Element Wizard-Data என்ற (படம்-26-4)வித்தகரின் திரையில் Options field என்பதன் கீழ் male என உள்ளீடு செய்து >>என்ற பொத்தானை சொடுக்குக. மீண்டும் female என உள்ளீடு செய்து >>என்ற பொத்தானை சொடுக்குக. பின்னர் next என உள்ளீடு செய்து >>என்ற பொத்தானை சொடுக்குக.
படம்-26-4
பின்னர் தோன்றிடும் Group Element Wizard-Default Field Selection என்ற (படம்-26-5) திரையில் No, one particular field is not going to be selected. என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து  Next>> என்ற பொத்தானை சொடுக்குக.
படம்-26-5
   அதன் பின்னர் தோன்றிடும் Group Element Wizard-Field value என்ற (படம்-26-6)திரையில் நாம் உள்ளீடு செய்யும் ஒவ்வொரு உறுப்பிற்கும் 1,2, என்றவாறு மதிப்பை which value do you want to assign to each option? என்பதன்கீழ் உள்ளீடுசெய்து Next>> என்ற பொத்தானை சொடுக்குக.
படம்-26-6
   பின்னர் தோன்றிடும் Group Element Wizard-create option group  என்ற (படம்-26-7) திரையில் which caption is to be given to your option group ?என்பதன்கீழ் இந்த Group Box.இற்கு ஒரு பெயரை  உள்ளீடு செய்து Finish என்ற பொத்தானை சொடுக்குக..

படம்-26-7
  அதன் பின்னர்  Wizards On/Off என்ற பொத்தானை சொடுக்கிஇந்த Wizards ஐ செயல்படா(Off) நிலைக்கு கொண்டுசெல்க. பின்னர்  List Box பொத்தானை சொடுக்கி விருப்பமான உருவத்தை வரைந்துகொள்க.
  இறுதியாக  Check Box பொத்தானை சொடுக்கி அனைத்து உருவத்திற்குமான நான்கு தேர்வுசெய்பெட்டியை வரைந்துகொள்க.இப்போது இந்த படிவமானது (படம்-26-8) இல் உள்ளவாறு சற்றேறக்குறைய இருக்கும்.

படம்-26-8
  பின்னர் Name , Sexஆகிய கட்டுபாடுகள்(Controls) ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயரிட்டு தேவையானால் இதன்தோற்றத்தை மாற்றியமைத்துகொள்க
 அதன்பின்னர் list boxஇற்கு பட்டியலான வாய்ப்பை அமைவு(Configure)செய்க.  check boxes ஒவ்வொன்றிற்கும் check box1, check box2,என்றவாறு பெயரிட்டு பின்வரும் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு இவையிரண்டையும் அமைவு(Configure)செய்க
   design mode என்ற கருவிபெட்டியானது செயலில் இருப்பதை உறுதிசெய்து கொண்டு  list box Control தெரிவுசெய்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக உடன் விரியும்  Properties:list box என்ற உரையாடல் பெட்டியில்   General என்ற தாவி பொத்தானை சொடுக்கி General என்ற (படம்-26-9)தாவியின் திரையை தோன்றசெய்க.
 அதிலுள்ள  List Entries என்ற  பெட்டியில் “Circle”; ”Triangle”; ”Square”;”Pentagon”.  ஆகிய நான்கு பெயர்களையும்  ஒவ்வொரு பெயருக்குமிடையில் அரைப் புள்ளியிட்டு தட்டச்சு செய்து உள்ளீட்டு (Enter ) விசையை தட்டுக
படம்-26-9
 பின்னர் முதல்   Check Boxஐ தெரிவுசெய்துசுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக உடன் விரியும்   Properties :Check Box என்ற உரையாடல் பெட்டியில்   General என்ற தாவிபொத்தானை சொடுக்கி General என்ற (படம்-26-10)தாவியின் திரையை தோன்றசெய்க.
படம்-26-10
இதிலுள்ள Label  என்பதற்கு Circle என தட்டச்சு செய்து  உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் இதன் பெயர் circle என்றவாறு மாறியிருக்கும் அவ்வாறே மற்ற மூன்று  Check Box இன்Label  களுக்கும் Triangle, Square,  Pentagon என்றவாறு பெயரை தட்டச்சு செய்து மாற்றியமைத்து கொள்க
 அதன்பின்னர் இந்தProperties :Check Box என்ற உரையாடல் பெட்டியை மூடிவிடுக.  Design Mode On/Off என்ற  பொத்தானை சொடுக்குவதன் வாயிலாக இந்த இரண்டு Controls கருவிபட்டைகளையும் செயல்படா(Off)நிலைக்கு கொண்டுசென்று Form Controls, Form Design ஆகிய இரு கருவிபட்டைகளையும் மூடிவிடுக.  இப்போது நாம் உருவாக்கிய இந்த சாதாரண படிவமானது  (படம்-26-11) இல் உள்ளவாறு சற்றேறக்குறைய இருக்கும்.
படம்-26-11.
  பின்னர் இந்த படிவத்தை மற்றவர்களுக்கு அனுப்பிடுமுன் அதனை படிக்க மட்டும் என்றவாறு மாற்றி அமைத்திடவேண்டும் அப்போதுதான் காலி இடத்தை மட்டும் பார்வையாளர் பூர்த்தி செய்யுமாறு இருக்கும். அதற்காக Tools > Options > OpenOffice.org > Security > Open this document in read-only mode.என்வாறு தெரிவுசெய்து செயற்படுத்தி கொள்க.
வேறுவழியில் இவ்வாறான படிவத்தை ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் உருவாக்குதல்   
ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் சாளரத்தின் மேல்பகுதியிலுள்ள கட்டளை பட்டியில்  File => New => XML Form Document.=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
  உடன்  தோன்றிடும் காலியானஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் ஆவணத்திற்குள் open office.org XML Form Document என்ற படிவ வடிவமைப்பு சாளரம் ஒன்று திரையில் தோன்றும் 
  பின்னர் இந்த கட்டுபாட்டில் இடம்சுட்டியை வைத்து சுட்டியை சொடுக்குக. உடன் தோன்றும் இந்த கட்டுபாட்டிற்கான பண்பியல்பு பெட்டியில் இயல்புநிலை மாதிரியை தெரிவுசெய்துகொண்டு கட்டுபடுத்தும் கட்டளையை(binding statement) உள்ளீடு செய்க.
  இதற்கு(instance) ஒரு உறுப்பை (element) data navigator  வாயிலாக சேர்த்திடு வதற்காக. வலதுபுறமுள்ள  Form Navigator இல் Add elements என்பதை தெரிவு செய்து சொடுக்குக.உடன் Add elements என்ற (படம்-26-12)உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும் அதில் இதற்கொரு பெயரையும் இயல்புநிலை மதிப்பையும் தரவின் வகையையும் இதனை  செயல்படுத்த வேண்டுமா என்பது போன்ற அமைவுகளையும் தெரிவுசெய்து கொண்டு okஎன்ற பொத்தானை சொடுக்குக.
 பின்னர் ஒரு புதிய  instanceஐ  ஒருXMLகோப்பிலிருந்து  மேலேற்றுக. பின்னர் தொடர்புடைய XML elements அல்லது attributes  க்கு கட்டுபாட்டை  சேர்த்திடுக.
  இவ்வாறு வழக்கமாக படிவம் ஒன்றை உருவாக்கும் வழிமுறைகளில் உருவாக்கி கொண்டு இந்த வினாபடிவத்திற்கு ஒரு பெயரிட்டு சேமித்து மூடிவிடுக.
  பின்னர் ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் சாளரத்தின் மேல்பகுதியிலுள்ள கட்டளை பட்டியில்  File => Open  => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
  உடன் தோன்றிடும் Open  என்ற உரையாடல் பெட்டியில் நாம் உருவாக்கி சேமித்து வைத்திருந்த இதே (*.odt).என்ற பின்னொட்டுடன் உள்ள XForms  ஆவணத்தை தெரிவு செய்து திறந்து கொள்க. இதனை வடிவமைப்பு செய்வதற்கு Form Design toolbar, Form Controls toolbar,Data Navigator,Form Navigator ஆகிவற்றை பயன்படுத்தி கொள்க.
படம்-26-12

ஓப்பன் ஆஃபிஸ்-25- ஒரு ஆவணத்திலுள்ள உரையையும்(text) ,வரைகலையையும்(graphics)கருப்பு வெள்ளை வண்ணத்தில் அச்சிடுதல்

   எம் எஸ் ஆஃபிஸில் அச்சிடும் பணி அனைவருக்கும்  தெரிந்ததே. அதேபோன்று  ஓப்பன் ஆஃபிஸின்  பயன்பாடுகளின் மூலம் வழக்கமாக அச்சிடுவது மட்டுமல்லாது கூடுதலாக வண்ண அச்சுபொறியில்கூட  கருப்பு வெள்ளை வண்ணத்தில் அச்சிட்டு இந்த வண்ண மைக்கும் டோனருக்கும் ஆகும் அதிகபட்ச செலவை தவிர்க்க முடியும் என்ற செய்தி உங்களுக்கு தெரியுமா?ஆம் முடியும் அதற்கான படிமுறை பின்வருமாறு.

1.File => Print =>என்றவாறு கட்டளைகளை  தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக
2.பின்னர் தோன்றிடும்  (படம்-25-4) Print என்ற உரையாடல் பெட்டியில்   Properties என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
3. அதன்பின்னர் தோன்றிடும் (படம்-25-1) Cananon Lbp3100/LB3108/LBP3150 Properties என்ற உரையாடல் பெட்டியில் உள்ள ஒவ்வொரு அச்சுப்பொறிக்கும் ஏற்ப இந்த வாய்ப்பு மாறுபடும் ஆயினும் ) Color என்ற வாய்ப்பை பற்றி  அந்தந்த அச்சுப்பொறியின் பயனாளர் கையேடு அல்லது உதவிகுறிப்புகளை பார்வையிட்டுஅறிந்து கொள்க
   படம்-25-1
4.அதிலுள்ள Color என்ற வாய்ப்பில்  black and white or gray scaleஆகிய இரண்டில் ஒன்றினை (இங்கு Manual gray scale settings என்பதை)  தெரிவுசெய்து கொள்க. பொதுவாக  gray scale என்ற வாய்ப்பு வரைகலை (graphics ) நிலைக்கு பொருத்தமானதாகும்.
5பின்னர்.OK என்ற பொத்தானை சொடுக்குக
6.பிறகு Print என்ற உரையாடல் பெட்டியிலும் OK என்ற பொத்தானை சொடுக்குக
7.இதன் பின்னர் ஆவணங்களை வண்ண அச்சுப்பொறியிலிருந்து கருப்பு வெள்ளை வண்ணத்தில் மட்டும் அச்சிட்டு பெறமுடியும்.
ஓப்பன் ஆஃபிஸின் அனைத்து ஆவணங்களின் உரையையும்(text) , வரை கலையை யும் (graphics),சாம்பல் வண்ணத்தில் அச்சிடுதல்
 ரைட்டர், கால்க்,இம்ப்பிரஸ்,போன்ற அனைத்துஓப்பன் ஆஃபிஸின்   பயன்பாடுகளிலும்  வண்ண அச்சுபொறியிலிருந்து கருப்பு வெள்ளை வண்ணத்தில் அச்சிட்டு பெறமுடியும் இதற்காக
1.Tools => Options => OpenOffice.org => Print => என்றவாறு கட்டளை களை  தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக
2பின்னர் தோன்றிடும்(படம்-25-2)   Options-OpenOffice.org-Print என்ற உரையாடல் பெட்டியின் வலதுபுற பலகத்தில் உள்ள Convert colors to gray scale என்ற வாய்ப்பை தெரிவுசெய்க.
3.பிறகுOK என்ற பொத்தானை சொடுக்கி இந்த மாறுதலை சேமித்து வெளியேறுக.
(படம்-25-2)
ஓப்பன் ஆஃபிஸின் ரைட்டரில் உரையைகருப்பு வெள்ளை வண்ணத்தில்அச்சிடுதல்
 ஓப்பன் ஆஃபிஸின்  ரைட்டரில் மட்டும்  வண்ண அச்சுபொறியிலிருந்து  கருப்பு வெள்ளை வண்ணத்தில் அச்சிட்டு பெறமுடியும் இதற்காக
1.Tools => Options => Open Office writer => Print => என்றவாறு கட்டளை களை  தெரிவு செய்து சொடுக்கி செயற்படுத்துக
2பின்னர் தோன்றிடும் (படம்-25-3)  Options- Open Office.org Writer-Print என்ற உரையாடல் பெட்டியின் வலதுபுற பலகத்தில்  Contents என்பதன் கீழுள்ள print black  என்ற வாய்ப்பை தெரிவுசெய்க.
3.பிறகு OK என்ற பொத்தானை சொடுக்கி இந்த மாறுதலை சேமித்து வெளியேறுக.
(படம்-25-3)
 சிற்றேட்டை(brochure) அச்சிடுதல்
நாம் வழக்கமாக கணினி வழியாக அச்சிடும்போது ஒரு பக்கத்தில் மட்டுமேஅச்சிடு வோம். மற்றொரு பக்கம் வீனாக காலியாக விட்டிடுவோம் இதனால் ஏராளமான தொகை எழுது பொருள் அச்சிடுவதற்கென்றே செலவாகும்  அதற்கு பதிலாக ஒரு தாளின் இருபுறமும் அச்சிட்டால் இவ்வாறு அதிகமாக தாட்களை அச்சுபொறிக்கென்று வாங்கும்  செலவை  தவிர்க்கமுடியும்.அல்லவாஅதற்காக 
 1.முதலில் அச்சிடவேண்டிய தகவலிற்கான எழுத்துருவின் அளவு  பக்க வடிவமைப்பு என்பன போன்ற விவரங்களை முக்கியமாக orientationஎன்பதில் portrait அல்லது landscapeஎதை தெரிவு செய்யபடவேண்டுமென  திட்டமிட்டு கொள்க.
2. பின்னர்  File => Print => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக.
3.பிறகு தோன்றிடும்  (படம்-25-4)Print என்ற உரையாடல் பெட்டியில் Options என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
(படம்-25-4)
4.அதன் பின்னர் தோன்றிடும் (படம்-25-5)Printer Options என்ற உரையாடல் பெட்டியில் முதலில் pagesஎன்பதன் கீழுள்ள brochures ,right pages ஆகியவற்றின் தேர்வுசெய் பெட்டியை சரியாக தெரிவு செய்துகொண்டு  ok என்ற பொத்தானையும் பின்னர் Print என்ற உரையாடல் பெட்டியில் ok என்ற பொத்தானையும் சொடுக்குக
5.உடன் தாளின் நாம் தெரிவுசெய்தவாறு முன்பக்கம் மட்டும் அச்சிடப்படும்.
6. பிறகு  தாட்களை சரியாக முன்பின் திருப்பி அடுக்கி மீண்டும்அச்சு பொறிக்குள் வைத்து File => Print => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற் படுத்துக.
 (படம்-25-5)
7.பின்னர் தோன்றிடும்  (படம்-25-4)Print என்ற உரையாடல் பெட்டியில் Options என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
8.அதன் பின்னர் தோன்றிடும் (படம்-25-5)Printer Options என்ற உரையாடல் பெட்டியில் pagesஎன்பதன் கீழுள்ள brochures ,left pages ஆகியவற்றின் தேர்வுசெய் பெட்டியை சரியாக தெரிவு செய்து கொண்டு  ok என்ற பொத்தானையும் பின்னர் Printஎன்ற உரையாடல் பெட்டியில் ok என்ற பொத்தானையும் சொடுக்குக
9.உடன் தாட்களின் பின்புறமும்  அச்சிடப்பட்டு இருபுறமும் அச்சிடப்பட்ட முழுமையான சிற்றேடு தயாராகிவிடும்.
10.உங்களுடைய அச்சுபொறி ஒரே சமயத்தில் இருபுறமும் அச்சிடும் திறன் கொண்டதாக இருந்தால் இரண்டுமுறை மேற்கண்ட செயலை செயற்படுத்திடுவதற்கு பதிலாக
11. Printer Options என்ற உரையாடல் பெட்டியில் pagesஎன்பதன் கீழுள்ள brochures ,right pages ,left pages ஆகியவற்றின் தேர்வுசெய் பெட்டியை சரியாக தெரிவு செய்து கொண்டு  ok என்ற பொத்தானையும் பின்னர் Printஎன்ற உரையாடல் பெட்டியில் ok என்ற பொத்தானையும் சொடுக்கி  ஒரே சமயத்தில் தாட்களின் முன்புறமும் பின்புறமும் அச்சிட்டுகொள்க.

ஓப்பன் ஆஃபிஸ்-24- ரைட்டரின் பக்கவடிவமைப்பு

  ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரானது ஒரு பக்கத்தை வடிவமைத்திட Page styles , Columns,  Frames, Tables, Sections   என்பன போன்ற பல்வேறு வழிகளை    நமக்கு வழங்குகின்றது. இதில் எந்த வடிவமைப்பை நாம் எடுத்துகொள்வது என்பது  அந்த உரைப்பகுதியின் உள்ளடக்கம் நம்முடைய விருப்பம் ஆகிய வற்றை பொருத்து மாறும்.
    சாதாரண கடிதங்கள் ஒற்றையான நெடுவரிசையிலும் ,அறிவிப்பு தாட்கள் ஒன்றுக்குமேற்பட்ட நெடுவரிசையிலும், நாளிதழ்கள்  எட்டு அல்லது ஏழு  நெடுவரிசையிலும் இந்த உள்ளடக்க உரைப்பகுதி அமைக்கப் பட்டிருக்கும்.
    ஒன்றுக்கு மேற்பட்ட நெடுவரிசையினுடைய  உரையின் தொடர்ச்சியானது   முதல் நெடுரிசையில் மேலே வலதுபுறத்திலிருந்து இடதுபுறம் சென்று பின்னர் அடுத்தவரியும் அவ்வாறே அமைந்து கீழேநெடுவரிசையின் முடிவிற்கு வந்த பின்னர் அடுத்த நெடு வரிசையில் திரும்பவும் மேலிருந்து ஆரம்பித்து முன்புபோலவே கீழ்நோக்கி வளைந்து வளைந்து வருமாறு snaking columns போன்ற அமைப்பில் இருக்கும்  
  இவ்வாறு ஒரு உரையை உருவாக்கிய பின்னர் பலபக்கங்களாக பிரித்து அவைக ளுக்கு பக்கத்தலைப்பும் Header பக்கமுடிவும் Footer குறிப்பிட விரும்புவோம்.இதற்காக insert => Header => Default என்ற வாறு கட்டளைகளை செயற்படுத் தினால் இயல்பு நிலையிலுள்ள காலியான பக்கத்தலைப்பு ஒன்று உரையில் உள்ளினைக்கப் படும்
  இதற்காகinsert => Footer => Defaultஎன்ற வாறு கட்டளைகளை செயற்படுத் தினால் இயல்பு நிலையிலுள்ள காலியான பக்கமுடிவு உரையில் உள்ளினைக்கப்படும்
 பின்னர் File => Properties => Description என்றவாறு கட்டளைகளை செயற்படுத் தியவுடன் தோன்றிடும்(படம்-24-1) Properties  என்ற உரையாடல் பெட்டியில் title என்பதில் இந்த ஆவணத்தின் தலைப்பை உள்ளீடு செய்து ok என்ற பொத்தானை சொடுக்குக.
        படம்-24-1
  பின்னர் Header  பகுதியில்  இடம்சுட்டியை வைத்துகொண்டு Insert => Fields => Title என்றவாறு கட்டளைகளை செயற்படுத் தியவுடன் இந்த ஆவணத்திற்கான தலைப்பு உள்ளிணைந்து விடும்.
  இந்த தலைப்பை மாற்றியமைக்க வேண்டுமெனில் File => Properties => Description என்றவாறு கட்டளைகளை செயற்படுத் தியவுடன் தோன்றிடும் Properties  என்ற உரையாடல் பெட்டியில் title என்பதில் இந்த ஆவணத்திற்கு வேறு புதிய தலைப்பை உள்ளீடு செய்து ok என்ற பொத்தானை சொடுக்குக
  ஒவ்வொரு பக்கத்திற்கும் பக்கஎண்களை உள்ளீடு செய்ய விரும்புவோம் அதற்காக  footer பகுதியில் இடம்சுட்டியை வைத்துகொண்டு Insert => Fields => Page Number என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.உடன் இந்த ஆவணத்திற்கான தொடர்ச்சியான பக்கஎண்கள் உள்ளினைந்துவிடும்ஆயினும் இந்த ஆவணத்தில் மொத்தமுள்ள பக்கஎண்கள் எவ்வளவு அதில் இது எத்தனையாவது பக்கம் என அமைத்திடுவதற்கு   footer பகுதியில் இடம்சுட்டியை வைத்துகொண்டு  page என தட்டச்சுசெய்து இடைவெளி விசையை(Space bar) ஒருமுறை அழுத்திof என தட்டச்சு செய்து Insert => Fields => Page countஎன்றவாறு கட்டளைகளை செயற்படுத் தியவுடன் இந்த ஆவணத்திற்கான தொடர்ச்சியான பக்கஎண்கள் 1 of 10என்றவாறு உள்ளிணைந்துவிடும்.
   பக்கதலைப்புடன் அல்லது உள்ளடக்க தலைப்புடன் பக்கஎண்கள் வருவதற்கு அல்லது உள்ளடக்க தலைப்பு ரோமன் எண்களுடனும் பக்க எண்கள்  வழக்கமான எண்களுடனும் வருவதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன.
வழிமுறை1.
 1.புதியபக்கத்தின் முதல் பத்தியின் ஆரம்பத்தில் இடம்சுட்டியை வைத்து.
2.        Format => Paragraph என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக.
3.      பின்னர் தோன்றிடும் Text Flow  என்ற(படம்-24-2) தாவியின் Paragraph.என்ற உரையாடல் பெட்டியில் Breaks என்பதை தெரிவுசெய்க.
4.      பின்னர்  Insert என்பதையும் அதன்பின்னர் With Page Styleஎன்பதையும் தெரிவு செய்து எந்த வகையான நடையை ( page style ) என கீழிறங்கு பட்டியலிலிருந்து தெரிவு செய்துகொள்க
5.       எந்த எண்ணிலிருந்து பக்கஎண்கள் ஆரம்பிக்கவேண்டும் எனதெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக.
                              படம்-24-2
  குறிப்பு:இந்த வழிமுறை பெரிய புத்தகத்தை பகுதிபகுதியாக வெளியிடும்போது அடுத்தடுத்த பகுதி யின் தொடக்கத்தில் முந்தைய பகுதியின்  முடிவு எண்ணிலிருந்து ஆரம்பிக்குமாறு செய்வதற்கு வசதியானது அதனால் இந்த புத்தகத்தில் மொத்தம் எத்தனை பக்கம் என அறிந்து கொள்ளலாம்.
வழிமுறை-2
1.      நாம்விரும்பும் இடத்தில் Insert => Manual break. என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக.
2.      Page break ஆனது  Insert Break என்ற உரையாடல் (படம்-24-3)பெட்டியில் தெரிவு செய்யப் பட்டிருக்கும்.
3.      பின்னர் பக்கஎண்களின் நடையை(page style) தெரிவுசெய்க.
4.      Change page number என்பதை தெரிவுசெய்க.
5.      எந்த எண்ணிலிருந்து பக்கஎண்கள் ஆரம்பிக்கவேண்டும் எனதெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக.
                          படம்-24-3
  ஒருஆவணத்தின் விளிம்பை(margins) இருவழிகளில் மாற்றி யமைக்கலாம்
வழிமுறை1. ரூலரில் இடம்சுட்டியை கொண்டு சென்றவுடன் இருதலை அம்புக்குறியாக மாறும் உடன் அவ்வம்புக்குறியை பிடித்து தேவையான அளவிற்கு இழுத்துசென்ற விளிம்பின் அளவை மாற்றி யமைத்து கொள்ளலாம். ஆனால் இது நல்ல அமைவு அன்று
வழிமுறை2. ஒருபக்கத்தில் ஏதேனுமொரு இடத்தில் இடம்சுட்டியினை வைத்து கொண்டு சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக. உடன் விரியும் சூழ்நிலை பட்டியலிலிருந்து Page என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் தோன்றிடும் Page style default  என்ற (படம்-24-4)உரையாடல் பெட்டியில் page  என்ற தாவியின் திரையில்  Margins  என்பதன்கீழ் left ,right ,top, bottom ஆகியவற்றிற்கு  தேவையான  அளவுகளை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக.
                            படம்-24-4
    உரையிலிருக்கும் ஒருசில சொற்களுக்கான விளக்கத்தை அடிக்குறிப்பின் மூலம் கொடுக்க விரும்புவோம் அதற்காக. விளக்கம்அளித்திட தேவையான சொல்லின் அருகில் இடம்சுட்டியை  வைத்துகொண்டு Insert => Note என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது  Ctrl+Alt+N.என்றவாறு விசைகளை சேர்த்துஅழுத்துக உடன் சிறு சிறு புள்ளிகளான கோட்டின் தொடர்ச்சியாக ஒரு பலூன்போன்று(படம்-24-5) காலி இடம் அந்த பக்கத்தின் வலதுபுறம் தோன்றும் அதில் தேவையான விளக்க உரையை தட்டச்சு செய்திடுக. ஒன்றுக்கு மேற்பட்ட இவ்வாறான விளக்க குறிப்பு இருந்தால் அவைகளுக்கிடையே இடம்சுட்டியை  நகர்த்திசெல்வதற்கு F5 என்ற செயலி விசையை அழுத்தி navigatorஎன்ற சிறு உரையாடல் பெட்டியை தோன்றசெய்து பயன்படுத்திகொள்க அல்லது Ctrl+Alt+Page Down  என்ற வாறு விசைகளை சேர்த்து அழுத்தி அடுத்ததற்கு செல்லவும் Ctrl+Alt+Page Up என்ற வாறு விசைகளை சேர்த்து அழுத்தி முந்தையதற்கு செல்லவும்  பயன் படுத்திகொள்க.
                             படம்-24-5

ஓப்பன் ஆஃபிஸ்-23- மெயில் மெர்ஜ் விஸார்டை பயன்படுத்துதல்

 ஒரே செய்தியை பலருக்கு அச்சிட்டு அனுப்பிட விரும்புவோம் மிக முக்கியமாக ஒரு நிறுவணத்தின் பொதுப்பேரவை கூட்டத்திற்கான அழைப்பிதழை ஆயிரக் கணக்காண உறுப்பினர்களுக்கு அச்சிட்டு அனுப்பிடுவார்கள் இவ்வழைப் பிதழில் பெறுபவரின் முகவரிமட்டுமே மாறும் ஆயினும் மற்ற செய்தியனைத்தும் ஒன்றுதான்

   அதனால் இவ்வழைப்பிதழை எவ்வாறு ஒப்பன்ஆஃபிஸ் ரைட்டரில் அச்சிட்டு பெறுவது என்பதுதான் நம்முன் இருக்கும் சிக்கலாகும்.இதுபோன்ற நிலையில் உதவிட வருவதுதான் ஒப்பன்ஆஃபிஸ் ரைட்டரின் மெயில் மெர்ஜ் என்ற விஸார்டு  சரி இதனை பயன்படுத்தி எவ்வாறு அச்சிடுவதுஎன இப்போது காண்போம்.
 இதற்காக அழைப்பு கடிதங்களின் உள்ளடக்கத்தை தயார்செய்துகொண்டு Tools => Mail Merge Wizard.=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.உடன் படம் 23-1-ல் உள்ளவாறு  Mail Merge Wizard என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும்

                                   படம்-23-1

   இதில் select the document upon which to base the mail merge document என்பதன் கீழுள்ள வாய்ப்புகளில் use the current document என்பதை தெரிவு செய்து கொண்டு next என்ற பொத்தானை சொடுக்குக.
படம்-23-2
  பின்னர் விரியும்(படம்-23-2) இந்த வித்தகரின் உரையாடல் பெட்டியில் what type of document do you want to  create? என்பதற்கு Letterஎன்ற வாய்ப்பை தெரிவுசெய்து கொண்டு Next என்ற பொத்தானை சொடுக்குக. இந்நிலையில் பெறுபவர்களின் முகவரிகளை உள்ளிணைக்கவேண்டியுள்ளது அதற்காக இதன்பின்னர் தோன்றிடும்(படம்-23-5) Insert address block  என்ற வித்தகரின் திரையில்  select different address list என்ற பொத்தானை சொடுக்குக.
படம்-23-3
தயார் நிலையில் முகவரி பட்டியல் நம்மிடம் இல்லையெனில்  பின்னர் தோன்றிடும் (படம்-23-3) Select address list  என்ற உரையாடல் பெட்டியில் புதியதாக முகவரி பட்டியலை உருவாக்குவதற்கு  create என்ற பட்டனை சொடுக்குக.
படம்-23-4
  அதன்பின்னர் விரியும்(படம்-23-4)  newt address list  என்ற உரையாடல் பெட்டியில் புதியதாக முகவரி பட்டியலை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளீடுசெய்து  ok என்ற பட்டனை சொடுக்குக.
பின்னர் (படம்-23-3) Select address list  என்ற உரையாடல் பெட்டியில்நாம் உருவாக்கிய பட்டியலை உள்ளிணைப்பதற்காக Add என்ற பட்டனையும் அதன் பின்னர் .ok என்ற பட்டனையும் சொடுக்குக.
படம்-23-5
பின்னர் (படம்-23-5) Insert address block  என்ற வித்தகரின் திரையில்மேலும் முகவரிகளை சேர்ப்பதாயின் More  என்ற பொத்தானை சொடுக்கி  முகவரி பட்டியலின் கோப்பு வேறு ஏதேனுமிருந்தால் சேர்த்துகொண்டு next என்ற பொத்தானை சொடுக்குக.
படம்-23-6
பின்னர் (படம்-23-6) create a salutation  என்ற வித்தகரின் திரையில் கோரும் விவரங்களை உள்ளீடு செய்து கொண்டு next என்ற பொத்தானை சொடுக்குக.

படம்-23-7
பின்னர் (படம்-23-7) Adjust layout address block  and salutation  என்ற வித்தகரின் திரையில் தேவையானஅளவிற்கு சரிசெய்து கொண்டு next என்ற பொத்தானை சொடுக்குக.

படம்-23-8
பின்னர் (படம்-23-8) preview and edit document  என்ற வித்தகரின் திரையில் நாம் அனுப்பிடும் கடித்தில் வேறுமாறுதல் ஏதேனும் செய்யவிரும்பினால் edit document என்ற பொத்தானை சொடுக்கியபின் தோன்றிடும் உரையாடல் பெட்டியின் திரையில் தேவையான மாறுதல்களைசெய்துகொண்டு இந்த preview and edit document என்றவித்தகரின் திரையில் next என்ற பொத்தானை சொடுக்குக.
படம்-23-9

இறுதியாக  இவ்வாறு உருவாக்கிய ஆவணத்தை (படம்-23-9)சேமித்து வைத்துகொண்டு பின்னொரு நாளில் அச்சிட்டு கொள்ளபோகின்றோமா அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்பிடபோகின்றோமா அல்லது அச்சிடபோகின்றோமா  என்பதற்கேற்ப உள்ள 1.Save starting document 2. save merged document 3. print merged document t4.  send merged document as e-mail ஆகிய வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து கொண்டு Finish என்ற பொத்தானை சொடுக்குக.

ஓப்பன் ஆஃபிஸ்-22-ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் ஃபேக்ஸ் செய்தியை அனுப்புதல்

    ஓப்பன் ஆஃபிஸ் வாயிலாக நம்மிடம் ஃபேக்ஸ்  இயந்திரம் இல்லை என்றாலும் நம்முடைய ஆவணத்தை மற்றவர்களுக்கு நம்மால் ஃபேக்ஸ் ஆக அனுப்பிட முடியும் இதற்காக ஃபேக்ஸ் மோடம் ஒன்றும் ஃபேக்ஸ் ட்ரைவர் ஒன்றும்  மட்டுமே தேவையானவையாகும்
   முதலில் ஃபேக்ஸ் ஆக அனுப்பிடவிரும்பும் ஆவணத்தை திறந்து கொண்டு அதில்  File => Print=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் print என்ற உரையாடல் பெட்டியொன்று (படம்-22-1)திரையில் தோன்றும்.
                                                            படம்-22-1
   அதில் Name என்பதிலுள்ள பட்டிபெட்டியை(List box) விரியச்செய்து அதிலிருந்து  ஃபேக்ஸ் ட்ரைவரை தெரிவுசெய்து கொண்டு okஎன்ற பொத்தானை சொடுக்குகஉடன் Type என்பதற்கு Microsoft shared fax  driver என்றும்  Location என்பதற்கு SHRFAX என்றும் கணினியானது தானாகவே இயல்புநிலையலுள்ளதை எடுத்து கொண்டு    Printing என்ற (படம்-22-2) சிறுசெய்தி பெட்டியை திரையில் பிரதி பலிக்க செய்து  இந்த ஆவணத்தை ஃபேக்ஸ் ஆக அனுப்புவதற்கு தயார்செய்யும்
                                                                        படம்-22-2 
 பின்னர்  இந்த ஃபேக்ஸை அனுப்புவதற்கான விவரங்களை குறிப்பிடு வதற்காக உரையாடல் பெட்டியொன்று (படம்-22-3)திரையில் தோன்றிடும் அதில் To என்பதில் பெறுகின்ற தொலைபேசிஎண்ணை குறிப்பிடுக. Subject  என்ற பகுதியில் ஃபேக்ஸின் தலைப்பைும் cover page notes என்பதற்கு இந்த ஆவணத்தை பற்றிய சுருக்கமான விவரத்தையும் உள்ளீடு செய்கattach என்பதில் இயல்பாக நாம்அனுப்புகின்ற ஆவணத்தை இணைத்துகொள்ளும்
                                                                  படம்-22-3  
  மேலும் dialing rule என்ற பகுதியின் கீழிறங்கு பட்டியை(Drop down menu) விரியச்செய்து முதன் முதல் ஃபேக்ஸ் அனுப்புவதாயிள் new rule என்ற வாய்ப்பைதெரிவுசெய்து சொடுக்குக.   உடன் phone and modemஎன்ற உரையாடல் பெட்டியொன்று (படம்-22-4) திரையில் தோன்றிடும் அதில்  new என்ற பொத்தானை சொடுக்குக..பின்னர் விரியும் திரையில் location , area code ஆகிய விவரங்களை உள்ளீடுசெய்து  okஎன்ற பொத்தானை சொடுக்குக.
   ஏற்கனவே அனுப்பியிருந்து மாறுதல் ஏதேனும் செய்வதாக இருந்தால் இந்த dialing rule என்ற பகுதியின் கீழிறங்கு பட்டியில்  my location என்ற வாய்ப்பை தெரிவு செய்க  உடன் தோன்றிடும் phone and modemஎன்ற உரையாடல் பெட்டியின் (படம்-22-4)  திரையில் edit என்ற பொத்தானை சொடுக்குக.பின்னர் விரியும் திரையில் location , area code ஆகிய விவரங்களை மாறுதல்செய்து  okஎன்ற பொத்தானை சொடுக்குக.
                                                                     படம்-22-4
ஒன்றும் தேவையில்லையெனில் இந்த dialing rule என்ற பகுதியின் கீழிறங்கு பட்டியில் noneஎன்ற வாய்ப்பு இயல்புநிலையில் இருப்பதை ஏற்றுகொண்டு     ஃபேக்ஸை அனுப்புவதற்கான உரையாடல் பெட்டியில் Send  என்ற பொத்தானை சொடுக்குக. உடன் இந்த ஆவணமானது நாம் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணிற்கு ஃபேக்ஸ் ஆக அனுப்பிவிடும்.
   இவ்வாறு அதிக சிரமம் இல்லாமல் ஒற்றை சொடுக்குதலில் இந்த ஃபேக்ஸை எளிதாக அனுப்பிடுவதற்காக பின்வருமாறு அமைவு செய்துகொள்க. இந்த ஓப்பன்ஆஃபிஸ் ரைட்டரின் ஆவணத்தில் Tools=> Options =>  OpenOffice.orgWriter => Print => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. உடன் திரையில் தோன்றிடும் Open Office.org Writer print என்ற (படம்-22-5)உரையாடல் பெட்டியில் Faxஎன்பதிலுள்ள பட்டி பெட்டியிலிருந்து Fax driver ஐ தெரிவுசெய்து கொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து கிளிக்செய்க
                                                                படம்-22-5
  பின்னர் இந்த ஓப்பன்ஆஃபிஸ் ரைட்டரின் ஆவணத்தின் மேல்பகுதியிலுள்ள செந்தர கட்டளைபட்டியின் (Standard toolbar) முடிவிலிருக்கும் முக்கோண வடிவ கீழிறங்கு பட்டியை விரியச்செய்க(படம்-22-6). அதிலிருக்கும் Customize tool barஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.
                                                             படம்-22-6
 அல்லது Tools=> customize => என்றவாறு கட்டளையை செயற்படுத்துக..உடன் திரையில் விரியும் customize என்ற (படம்-22-7)உரையாடல் பெட்டியில் Toolbars என்ற தாவி திறந்து இருக்கும். அதில்Add Commands என்ற பொத்தானை  கிளிக் செய்க. .பின்னர்  விரியும் Add Commands என்ற(படம்-22-7)உரையாடல் பெட்டியில் category என்பதன் கீழ் Documents என்பதையும்  Commands என்பதன்கீழ்send default fax என்பதையும் தெரிவுசெய்து Add என்ற பொத்தானை சொடுக்குக.அதன்பின்னர் Closeஎன்ற பொத்தானை சொடுக்கி இந்த  Add Commands என்றஉரையாடல் பெட்டியை மூடிவிடுக.
 பின்னர்  Toolbars என்ற தாவி திறந்திருக்கும் customize என்ற (படம்-22-7)உரையாடல் பெட்டியில்.இந்த புதிய பணிக்குறி (Icon) எங்கு அமர்ந்திட வேண்டுமென கீழ்நோக்கு அம்புக்குறியை அழுத்தி சரிசெய்து கொண்டு okஎன்ற பெத்தானை சொடுக்குக 

படம்-22-7
 இப்போது ஒற்றை சொடுக்கில்  ஃபேக்ஸ்  அனுப்புவதற்கான இந்த பொத்தான்  (படம்-22-8)செந்தரகட்டளைபட்டியின்Standard toolbar இடதுபுறஓரமாக  அமர்ந்திருப்பதை காணலாம்.
படம்-22-8

Previous Older Entries