இரத்த அழுத்தம் காணஉதவும் புதிய பயன்பாடு

மிக்சிகன் மாநில பல்கலைகழக ஆய்வுக்குழுவானது எந்தவொரு சிறப்பு கருவி-களையும் இணைக்காமலேயே நம்முடைய ஐஃபோனின் வாயிலாக நம்முடைய உடலின் இரத்த அழுத்தம் காணுவதற்கான கணினி பயன்பாட்டினை உருவாக்கி-யுள்ளனர் தற்போது துவக்கத்தில் கண்ணாடியும் அழுத்த உணர்விகளையும் கூடுதல் இணைப்பாக செய்து இந்த பயன்பாட்டின் வாயிலாக மனித உடலின் இரத்த அழுத்தத்தை காணுமாறும் அதன்பின்னர் நம்முடைய திறன்பேசியை மேம்படுத்தி கூடுதல் இணைப்பு இல்லாமலேயே மனித உடலின்இரத்தஅழுத்தம் காணும் நிலைக்கு மேம்படுத்தி கொள்ளுமாறும் கட்டமைக்கப்பட்டுள்ளது இதில் Peek and pop எனும் இரத்த அழுத்தம் காணும் பயன்பாடானது வழக்கமான பயன்பாடுபோன்று எந்தவொரு பயனாளரும் தங்களுடைய விரல்களால் அழுத்துவதன்மூலம் இந்த பயன்பாட்டினை செயல்படச்செய்து குறிப்பிட்ட நேரத்தில் தன்னுடைய இரத்தஅழுத்த அளவை திரையில் காணமுடியும் ஐஃபோன் மட்டுமல்லாது ஆண்ட்ராய்டு ஃபோன்களிலும் இந்த வசதி வரவிருக்கின்றது.
இவ்வாறு வரவிருக்கும்மனித உடலின் இரத்த அழுத்த கண்காணிப்பு பயன்பாடானது இதற்கென தனியாக ஆய்வகங்களுக்கு செல்லாமல்பயனாளரே தன்னுடைய உடலின் உயர் இரத்த அழுத்தஅளவை அறிந்து விழிப்புணர்வு பெற்று உடனடியாக அதனை குறைப்பதற்கான நடவடிக்கை எடுத்து இதய நோய் ஏற்படுவதை தவிர்த்திடவும் முடியும்.
தற்போதைய நவீண வாழ்க்கைசூழலில் உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலான-வர்களுக்குஉள்ளது அதனை கவணிக்காமல்விட்டிட்டு மற்ற அன்றாட பணிகளை செய்து கொண்டிருப்பதால் அதனால் ஏற்படும் இதயநோய் போன்றவைகளை தவிர்த்து துவக்கநிலையிலேயே மருந்து மாத்திரைகளால் கட்டுபடுத்திடுவதற்கான அடிப்படையாக இந்த பயன்பாடு விளங்கிடும் என்பது திண்ணம் இந்த பயன்பாடு வருகின்ற 2019 இல் வெளியிட படவுள்ளது என்ற செய்தியை மனதில் கொள்க.