விற்பணை முனைம அமைவு (Point of sale (POS) systems)ஒரு அறிமுகம்

ஆரம்பகாலத்தில் எளிய ரொக்க பட்டியலின் வாயிலாக பொருட்கள் விற்பணை செய்யப்பட்டன நாகரிக வளரச்சியினாலும் புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளினாலும் தற்போது விற்பணை முனைம அமைவாக வளர்ந்து அதிலும் விற்பணைக்கான பணபறிமாற்றம், சரக்குகளை கையாளுதல் , சந்தையிடுதலுக்கான கருவிகள் எனபல்வேறு செயல்களும் உள்ளடங்கிய ஒரு மாபெரும் அமைவாகஇது உயர்ந்துள்ளது சாதாரண சில்லறை வியாபாரிகள் கூட செல்லிடத்து பேசி சாதனத்தின் வாயிலாக தன்னுடைய வியாபாரநடவடிக்கைகளுக்கான ரொக்கஓட்ட அறிக்கை, பணியாளர்களின் செலவு அறிக்கை போன்ற அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் இந்த விற்பணை முனைம அமைவு (Point of sale (POS) systems) வாயிலாக பெற்று உடனுக்குடன் மிகச்சரியாக முடிவெடுக்கமுடியும் இந்த விற்பணை முனைம அமைவே தற்போதைய வியாபார உலகில் மிகவும் அத்தியாவசிய இரத்தஓட்டமாக அமைகின்றது அதாவது தற்போதைய சூழலில் மிகவும் கவணமாக முடிவெடுத்து செயல்படவேண்டிய நிலையில் இது எந்தவொரு சில்லறை வியாபாரிகளுக்கும் பேருதவியாக உள்ளது இதனை செயல்படுத்திடுவதற்காக ஏராளமான வாய்ப்புகளுடன் பல்வேறு தனியுடமை பயன்பாட்டு மென்பொருட்கள் உள்ளன அவைகளுக்கு இணையாக கட்டற்ற பயன்பாட்டு மென்பொருட்களும் உள்ளன அவைகளுள் நமக்கு பொருத்தமானதை தெரிவுசெய்து செயல்படுத்திகொள்வது பயனுள்ளதாக அமையும் என பரிந்துரைக்கப்படுகின்றது இவ்வாறான கட்டற்ற பயன்பாட்டு மென்பொருளை இந்த விற்பணை முனைம அமைவிற்காக ஏன் பயன்படுத்திடவேண்டும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழும் நிற்க அதற்கான காரணங்கள் பின்வருமாறு
1 நாம் விரும்பியவாறான நெகிழ்வுதன்மையுடையது அதாவது நெகிழ்வு-தன்மையுடன் இது இருப்பதால் சாதாரண சில்லறைவியாபாரி இந்த விற்பணை முனைம அமைவை பயன்படுத்தி தன்னுடைய வியாபரா நடவடிக்கைகளில் செயல்பட்டுவருகின்றபோது அவருடைய வியாபாரமானது மேலும்மேலும் வளர்ச்சியடைவதற்கேற்ப தன்னுடைய அனைத்து நடவடிக்கைகளையும் இதன்வாயிலாக ஒருங்கிணைத்து மேம்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும்
2 மிகவிரைவான மேம்படுத்திடும் வசதி ஒரு சில்லறைவியாபாரி தன்னுடைய வியாபார நடவடிக்கை-கள் அனைத்தையும் இதன்கீழ் கொண்டுவருவதற்காக உடனடியாக இதனை மேம்படுத்தி கொள்ளமுடியும்
3 செலவே இல்லாதது இந்த விற்பணை முனைம அமைவை செயல்படுத்திடுவதற்காக எந்தவொரு சில்லறை வியாபாரியும் செலவேதும் செய்யத்தேவையில்லை அதாவது கட்டணமில்லாமல் இந்த பயன்பாட்டுமென்பொருள் கிடைக்கின்றது
4 மிகவும் பாதுகாப்பானது இந்த கட்டற்ற மென்பொருளை பயன்படுத்திடும்போது உருவாகும் எந்தவொரு பாதுகாப்பு சிக்கல்களையும் தீர்வுசெய்வதற்காக ஏராளமான தன்னார்வாளர்கள் அல்லும்பகலும் அயராது உதவதயாராக இருக்கின்றனர்
இவ்வாறான விற்பணை முனைம அமைவிற்காக Chromis ,Drupal POS , Floreant , Odoo ,Open Source Point of Sale , Unicenta ஆகிய கட்டற்ற பயன்பாட்டு மென்பொருட்கள் உள்ளன அவைகளுள் நமக்கு பொருத்தமானதை மட்டும் அதற்கான இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ்-5.2 தொடர்-11-வரைகலை பொருட்களை வடிவமைத்தல்தொடர்ச்சி

Area எனும் உரையாடல் பெட்டியின் படித்தரம்(Gradients) எனும் தாவிபொத்தானின் திரையில் நடப்பில் உள்ள படித்தரத்தை(Gradients) திருத்தம் செய்யலாம் அல்லது நாம் விரும்பும் நம்முடைய சொந்த படித்தரத்தை(Gradients) உருவாக்கலாம் லிபர் ஆஃபிஸில் ஏராளமான அளவில் இவைகள் முன்கூட்டியே கட்டமைக்கப்பட்டுள்ளன இவைகளுள் வாடிக்கையாளர் விரும்பியவாறு உருவாக்கிடவும் அல்லது மாறுதல்கள் செய்திடவும் Properties என்பதன் அருகில் உள்ள Type என்பதன் Linear, Axial, Radial, Ellipsoid, அல்லதுSquareஆகிய வாய்ப்புகளுடன் கூடிய கீழிறங்கு பட்டியலை விரியச்செய்க அல்லது தேவையான படித்தர(Gradient) வகையை முன்காட்சி பெட்டியில் தோன்றச்செய்க பின் இவற்றுள் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து கொண்டு Add எனும் பொத்தானை சொடுக்குக தொடர்ந்து New Gradient என்பதில் Okஎனும் பொத்தானை சொடுக்குதல் செய்து சேமித்து கொள்க அதனை தொடர்ந்துArea எனும் உரையாடல்பெட்டியில் Okஎனும் பொத்தானை சொடுக்குதல் செய்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவெளியேறுக

11.1
இவ்வாறு நம்மால் உருவாக்கப்பட்ட படித்தரத்தை(Gradients) மற்ற படவில்லைகளுக்கும் கொண்டுசெல்லவேண்டுமெனில் திரையின் மேலே கருவிகளின் பட்டையிலுள்ள Save Gradients Listஎனும் உருவப்பொத்தானை சொடுக்குதல் செய்தபின் தோன்றிடும் Save as எனும் உரையாடல் பெட்டியில் தேவையானவாறு அமைத்து சேமித்துகொள்க நாம் ஏற்கனவே மேலே கூறியவாறு சேமித்த படித்தரத்தை(Gradients) திரையில் கொண்டுவருவதற்காக திரையின் மேலே கருவிகளின் பட்டையிலுள்ள Load Gradients Listஎனும் உருவப்பொத்தானை சொடுக்குக உடன் விரியும் உரையாடல் பெட்டியில் தேவையான படித்தரத்தை(Gradient) மட்டும் தெரிவுசெய்துகொண்டு Openஎனும் பொத்தானை சொடுக்குக

11.2
அதுமட்டுமல்லாமல் மேம்பட்ட படித்தர(Gradients) கட்டுப்பாடுகளை கொண்டுவந்து செயல்படுத்திடு-வதற்காக முதலில் தேவையான வரைகலை பொருளை தெரிவுசெய்து கொள்க பின்னர் திரையின் மேலே கட்டளை பட்டையில் View => Toolbars => Mode =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Mode எனும் கருவிப்பட்டை திரையில் தோன்றிடும் மேலும் Area எனும் உரையாடல் பெட்டியின் படித்தரம்(Gradients) எனும் தாவிபொத்தானின் திரையை தோன்றிட செய்திடுக அதனை தொடர்ந்து Mode எனும் கருவிப்பட்டையில் படித்தர(Gradient) உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த வரைகலைபொருளில் எந்த வண்ணத்திலிருந்து எந்த வண்ணத்தை மாற்றவிருக்கின்றோம் என From and Toஎன்றவாறுபடித்தரம்(Gradients) எனும் தாவிபொத்தானின் திரையில் பண்பியல்புகள்(Properties) என்பதில் காண்பிக்கும் அதன்பின்னர் இதிலுள்ள Linear gradients,Axial gradients,Radial gradients, Ellipsoid gradients,Square gradientsஆகிய இந்த படித்தர(Gradient) வகைக்கேற்ப சரிசெய்து கொள்க பின் இவ்வாறான அமைவில் திருப்தியுற்றால் வரைகலை பொருளிற்கு வெளியே இடம்சுட்டியை வைத்து சொடுக்குக

11.3

தொடர்ந்து இதே Area எனும் உரையாடல் பெட்டியின் வரிவேய்தல் (Hatching) எனும் தாவிப்பொத்தானின் திரையில் நடப்பில் உள்ள வரிவேய்தலில் (Hatching) திருத்தம் செய்யலாம் அல்லது நாம் விரும்பும் நம்முடைய சொந்த வரிவேய்தலை(Hatching)உருவாக்கலாம் இதற்காக முன்கூட்டியே கட்டமைக்கப்பட்டு பயன்படுத்த தயார்நிலையில் உள்ள தேவையான படித்தர(Gradient) வகையை முன்காட்சி பெட்டியில் தோன்றச்செய்க பின் அதிலுள்ள கோடுகளின் அமைவுகளில் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து கொண்டு Add எனும் பொத்தானை சொடுக்குக தொடர்ந்து New Hatching என்பதில் Okஎனும் பொத்தானை சொடுக்குதல் செய்து சேமித்து கொள்க பின்னர்Area எனும் உரையாடல்பெட்டியில் Okஎனும் பொத்தானை சொடுக்குதல் செய்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவெளியேறுக

11.4

இவ்வாறு நம்மால் உருவாக்கப்பட்ட வரிவேய்தலை(Hatching) மற்ற படவில்லைகளுக்கும் கொண்டுசெல்லவேண்டுமெனில் திரையின் மேலே கருவிகளின் பட்டையிலுள்ள Save Hatches Listஎனும் உருவப்பொத்தானை சொடுக்குதல் செய்கபின்னர் தோன்றிடும் Save asஎனும் உரையாடல் பெட்டியில் தேவையானவாறு அமைத்துசேமித்துகொள்க நாம் ஏற்கனவே மேலே கூறியவாறு சேமித்த வரிவேய்தலை(Hatching) திரையில் கொண்டுவருவதற்காக திரையின் மேலே கருவிகளின் பட்டையிலுள்ள Load Hatches Listஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் உரையாடல் பெட்டியில் தேவையான வரிவேய்தலை(Hatching) மட்டும்தெரிவுசெய்துகொண்டு Openஎனும் பொத்தானை சொடுக்குக

11.5

மேலும் இதே Area எனும் உரையாடல் பெட்டியின் துன்மிபடம் (Bitmap) எனும் தாவிபொத்தானின் திரையில் துன்மிபட(Bitmap) வகையை Blankஎன தெரிவுசெய்து கொள்க பின்னர் Properties என்பதற்கும் கீழ் Pattern Editorஎன்பதற்கும் கீழுள்ள காலியான சதுரங்களாலான புள்ளிகளை (squares (pixels)) தெரிவு செய்து கொண்டு Foreground color: Background Color: ஆகியவற்றின் கீழிறங்கு பட்டியிலிருந்து இந்த துன்மிபடத்திற்கான பின்புல வண்ணம் முன்புலவண்ணம் ஆகியவற்றை தேவையானவாறு தெரிவுசெய்து கொண்டு முன் காட்சி திரையில் இவைகளை கண்டு திருப்தியுற்றால் Add எனும் பொத்தானை சொடுக்குக தொடர்ந்து Open எனும் உரையாடல் பெட்டியில் நம்முடைய துன்மிபடத்திற்கு ஏற்கனவே இயல்புநிலையில் உள்ள Bitmap 1, Bitmap 2போன்றவாறான பெயர்களை தவிர்த்து நல்ல பெயரினை உள்ளீடு செய்து கொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக இவ்வாறு நம்மால் உருவாக்கப்பட்ட துன்மி படத்தை மேலும் நாம் விரும்பியவாறு மாறுதல்கள் செய்துகொள்ளமுடியும் அதற்காக இதே Area எனும் உரையாடல் பெட்டியின் துன்மிபடம் (Bitmap) எனும் தாவிபொத்தானின் திரையில் துன்மிபட(Bitmap) வகையில் தேவையானதை மட்டும் தெரிவு செய்து கொண்டு Modifyஎனும் பொத்தானை சொடுக்குக பின்னர் தேவையானவாறு மாறுதல்கள் செய்து கொண்டு Open எனும் உரையாடல் பெட்டியில் நம்முடைய துன்மிபடத்திற்கு வேறொரு நல்ல பெயரினை உள்ளீடு செய்து கொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக அதுமட்டுமல்லாது வேறு கோப்புகளில் உள்ள துன்மிபடத்தையும் உள்ளே கொண்டுவரமுடியும் இதற்காக இதே Area எனும் உரையாடல் பெட்டியின் துன்மிபடம் (Bitmap) எனும் தாவிபொத்தானின் திரையில் importஎனும் பொத்தானை சொடுக்குக உடன் விரியும் Open எனும் உரையாடல் பெட்டியில் தேவையான துன்மிபடத்தை தேடிபிடித்து தெரிவுசெய்துகொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக
இவ்வாறு நம்மால் உருவாக்கப்பட்ட துன்மிபடத்தை(Bitmap) மற்ற படவில்லைகளுக்கும் கொண்டுசெல்லவேண்டுமெனில் திரையின் மேலே கருவிகளின் பட்டையிலுள்ள Save Bitmap Listஎனும் உருவப்பொத்தானை சொடுக்குதல் செய்கபின்னர் தோன்றிடும் Save asஎனும் உரையாடல் பெட்டியில் தேவையானவாறு அமைத்துசேமித்துகொள்க நாம் ஏற்கனவே மேலே கூறியவாறு சேமித்த துன்மிபடத்தை(Bitmap) திரையில் கொண்டுவருவதற்காக திரையின் மேலே கருவிகளின் பட்டையிலுள்ள Load Bitmap Listஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் உரையாடல் பெட்டியில் தேவையான துன்மிபடத்தை(Bitmap) தெரிவுசெய்துகொண்டு Openஎனும் பொத்தானை சொடுக்குக
அதனைதொடர்ந்து படவில்லையிலுள்ள வரைகலை பொருளை தெரிவுசெய்துகொண்டு Line and Filling எனும் கருவிப்பட்டையில் நிழலுரு(Shadow) எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இயல்புநிலையிலுள்ள நிழலுரு(Shadow) உருவாகிவிடும் மேலும் நாம் விரும்பியவாறு இதே Area எனும் உரையாடல் பெட்டியின் நிழலுரு(Shadow) எனும் தாவிபொத்தானின் திரையில் உருவாக்கி கொள்ளலாம் அதற்காக படவில்லையிலுள்ள வரைகலை பொருட்களில் தேவையானதை தெரிவுசெய்துகொண்டு திரையின் மேலே கட்டளைபட்டையில் Format=> Area=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது அந்த பொருளின் மீது இடம்சுட்டியை வைத்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Area எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Area உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் நிழலுரு(Shadow) எனும் தாவிபொத்தானின் திரையை தோன்றிட செய்திடுக பின்னர் Properties என்பதற்கு கீழுள்ள Use shadowஎனும் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து கொண்டுPosition, Distance ,Color, Transparency ஆகியவைகளை தேவையானவாறு அமைத்துகொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக

11.6
அதுமட்டுமல்லாது படவில்லையிலுள்ள வரைகலை பொருட்களில் தேவையானதை தெரிவுசெய்துகொண்டு திரையின் மேலே கட்டளைபட்டையில் Format=> Area=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது அந்த பொருளின் மீது இடம்சுட்டியை வைத்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Area எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Area எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் ஒளியூடுருவுதல்(Transparency) எனும் தாவிப்பொத்தானின் திரையை தோன்றிட செய்திடுக பின்னர் அதில் Transparency modeஎன்பதன் கீழுள்ள Transparency எனும் தேர்வுசெய்பெட்டியைதெரிவுசெய்துகொண்டு அதனருகிலுள்ள கீழிறங்கு பட்டியில் அதன் அளவை தெரிவுசெய்துகொள்க மேலும் இதற்கு கீழுள்ள கீழுள்ள gradientஎனும் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து கொண்டு அதனுடைய பல்வேறு வாய்ப்புகளை தேவையானவாறு தெரிவுசெய்துகொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக

11.7
மேலும் படவில்லையிலுள்ள வரைகலை பொருட்களின் உரையை வடிவமைத்திட அவ்வாறானதை தெரிவுசெய்துகொண்டு திரையின் மேலே கட்டளைபட்டையில் Format => Text=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது அந்த பொருளின் மீது இடம் சுட்டியை வைத்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் உரை(Text) எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் உரை(Text) எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் உரை(Text) எனும் தாவிபொத்தானின் திரையை தோன்றிட செய்திடுக இதில் Text என்பதன் கீழுள்ள Fit width to text, Word wrap text in shape, Fit to frameபோன்றவைகளின் தேர்வுசெய்பெட்டிகளில் தேவையானவைகளை தெரிவுசெய்துகொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக

11.8

இந்த உரையை அசைவூட்டம் செய்திடமுடியும் அதற்காக இதே உரை(Text) எனும் உரையாடல் பெட்டியில் Text Animationஎனும் தாவிபொத்தானின் திரையை தோன்றிடசெய்திடுக இந்த திரையில் Effects என்பதனருகிலுள்ள கீழிறங்கு பட்டியிலின் Blink,Scroll inபோன்றவற்றில் தேவையான அசைவூட்டத்தை மட்டும் தெரிவுசெய்துகொண்டு எந்த திசையில் அசைவூட்டம் செயல்படவேண்டும் என்பதற்காக Directionஎன்பதற்கு அருகிலுள்ள நான்கு திசைகளில் ஒன்றினை தெரிவுசெய்து கொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக

11.9

இருவரைகலை பொருளை ஒன்றுடன் மற்றொன்றை இணைப்பதற்காக இணைப்பான்(Connector) என்பது பயன்படுகின்றது இதனை செயற்படுத்துவதற்காக தேவையான வரைகலை பொருட்களை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில்இணைப்பான்(Connector)எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக உடன் விரியும் இணைப்பான்(Connector) எனும் உரையாடல் பெட்டியில் என்தன் கீழிறங்கு பட்டியலில் தேவையான இணைப்பின் வகையை தெரிவுசெய்துகொண்டபின் Line skew, Line spacingஆகியவற்றின் கீழுள்ளவைகளில் தேவையானவற்றை தெரிவுசெய்துகொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக

11.10

உருவப்படத்தின் பாணிகளை அமைத்திடுவதற்காக முதலில் தேவையான வரைகலை பொருளை தெரிவுசெய்துகொள்க பின்னர் திரையின் மேலே கட்டளைபட்டையில் Format => Styles and Formatting=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்துசொடுக்குக அல்லது வரைகளை பொருளின் மீது இடம்சுட்டியை வைத்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Styles and Formatting எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் F11 எனும் செயலி விசையை அழுத்துக உடன் Styles and Formatting எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் New Style என்பதை தெரிவுசெய்து சொடுக்குக

11.11

அதற்கு பதிலாக இந்த உரையாடல் பெட்டியின் தலைப்பட்டையில் Image Stylesஎனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது வரைகலை பொருளின் மீது இடம் சுட்டியை வைத்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் New எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Image Stylesஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் இதில் Organizerஎனும் தாவிப்பொத்தானின் திரையை தோன்றசெய்து அதில் Style என்பதன் கீழ் name.என்பதில் இதற்கொரு சரியான பெயரையும் Linked withஎன்பதன் கீழிறங்கு பட்டியலிலிருந்து தேவையான இணைப்பையும் Categoryஎன்பதில் தேவையான வகையையும் தெரிவுசெய்து அமைத்து கொள்க மேலும் Font, Font Effects, Indents & Spacing, Alignment, Tabs, Asian Typography,Dimensioning,Text, Text Animation, Connector, Line, Area, Shadowing, Transparencyஆகிய தாவிப்பொத்தான்களின் திரைகளில் தேவையானவாறு கட்டமைவுசெய்துகொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக

11.12
ஏற்கனவே இவ்வாறு புதிய பாணியை கட்டமைத்த வரைகலை பொருளை தெரிவுசெய்து அதில் தேவையானவாறு அதன் தோற்றத்தை மாற்றியமைத்துகொள்க பின்னர் Styles and Formatting எனும் உரையாடல் பெட்டியை திரையில் தோன்றசெய்திடுக அதில் New Style from Selection எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன் Create Style எனும் உரையாடல் பெட்டி தோன்றிடும் அதில் Style Name என்பதில் இதற்கு புதிய பெயரை உள்ளீடு செய்துகொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக

11.13

வரைகலை பொருளின் பாணியை மாற்றியமைத்திடுவதற்காக Styles and Formatting எனும் உரையாடல் பெட்டியை திரையில் தோன்றசெய்திடுக அதில் மாற்றியமைத்திடவிரும்பும் பாணியை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Modifyஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக பின்னர் அந்த பாணியில் தேவையான மாறுதல்கள் செய்து கொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக
இவ்வாறு மாறுதல்கள் செய்தவை நம்முடைய வரைகலை பொருளில் நிகழ்நிலை படுத்திடுவதற்காக தேவையான வரைகலை பொருளை தெரிவுசெய்துகொண்டு Styles and Formatting எனும் உரையாடல் பெட்டியை திரையில் தோன்றசெய்திடுக அதில் நிகழ்நிலை படத்திடவிரும்பும் பாணியை தெரிவுசெய்து கொண்டு Update Styleஎனும் உருவப் பொத்தானை சொடுக்குக
இந்த பாணியை வரைகலைபொருளில் செயல்படுத்திடுவதற்காக Styles and Formatting எனும் உரையாடல் பெட்டியை திரையில் தோன்றசெய்திடுக அதில் Image Stylesஎனும் உருவப் பொத்தானை சொடுக்குக பின்னர் தேவையான வரைகலை பொருளை தெரிவுசெய்துகொண்டு நாம் விரும்பும் mage Styles எனும் பெயரை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் பொத்தான இருமுறை சொடுக்குக அல்லது Fill Format Modeஎனும் உருவப் பொத்தானை சொடுக்குக உடன் இடம்சுட்டியானது சிறிய வண்ணம் கொட்டும் வாளிபோன்ற உருவில் மாறிவிடும் அதனை தேவையானபொருளில் கொண்டுசென்று வைத்து சுட்டியை சொடுக்குக முடிந்தபின்னர் இதே Fill Format Modeஎனும் உருவப் பொத்தானை சொடுக்குக
நாம் உருவாக்கிய பாணியை நீக்கம் செய்துகொள்வதற்காகStyles and Formatting எனும் உரையாடல் பெட்டியை திரையில் தோன்றசெய்திடுக அதில் நீக்கம்செய்திடவிரும்பும் பாணியை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Deleteஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக உடன் நாம் நீக்கம் செய்திட விரும்பும் செயலை ஆமோதிக்கின்றோமா என் பதற்கான உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் Yesஎனும் பொத்தானை சொடுக்குக.ஆனால் முன்கூட்டியே கட்டமைக்கப்பட்டுள்ள பாணியெதையும் இவ்வாறு நீக்கம் செய்திடமுடியாது

புதியவர்களுக்கு ஆண்ட்ராய்டு-பயிற்சி கையேடுபகுதி-8 சேவைகள்

ஒரு பயனாளருடன் இடைமுகம் செய்வதற்கு தேவையில்லாமலேயே பின்புலத்தில் நீண்டு இயங்கும் செயல்களை செய்வதற்காக இயங்கிடும் ஒரு ஆக்கக்கூறே ஒரு சேவையாகும். உதாரணமாக, பயனாளர் ஒருவர் பல்வேறு பயன்பாட்டினை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது, ஒரு சேவையானது பின்னணி இசையை இயக்கிடவேண்டும் அல்லது ஒரு செயல்பாட்டுடன் பயனாளர் இடைமுகத்தினை தடுத்திடாமல் இணையத்தில் தரவுகளை இந்த சேவையின் மூலம் எடுத்திடமுடியும் ஒரு சேவையானது அடிப்படையில் பின்வரும் இரண்டு நிலைகளில் இருக்க முடியும்
1.1
ஒரு சேவையானது lifecycle() callbackஎனும் வழிமுறையை கொண்டுள்ளது இதனை கொண்டு சேவையின் நிலையில் மாறுதல்களை கண்காணித்திட செயல்-படுத்திடலாம் தொடர்ந்து அதற்கு பொருத்தமான நிலையின் பணியை செயற்-படுத்திட முடியும் பின்வரும் விளக்கப்படத்தின் இடதுபுறம் startService () என்பதுடன்இந்த சேவையை உருவாக்கிடும்போதான வாழ்க்கை சுழற்சியை காட்டுகிறது: இவ்விளக்கப்படத்தின் வலதுபுறம் bindService ()என்பதுடன்இந்த சேவையை உருவாக்கிடும்போதான வாழ்க்கை சுழற்சியை காட்டுகிறது

படம்-1.2
ஒரு சேவையை உருவாக்குவதற்கு சேவை அடிப்படையான இனம் அல்லது நடப்பில் இருக்கும் துனை இனங்களை விரிக்கம் செய்கின்ற ஒரு ஜாவா இனத்தினை உருவாக்கவேண்டும். இந்த சேவையை அடிப்படையாக கொண்ட இனமானது பல்வேறு callback எனும் வழிமுறைகளை வரையறுக்கிந்றது அதனை தொடர்ந்து அவைகளுள் மிக முக்கியமானவைகள் கீழே தரப்பட்டுள்ளன. நாம் இந்த அனைத்து callback எனும் வழிமுறைகளை செயல்படுத்த தேவையில்லை. எனினும், நாம் அவை ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதைபற்றி புரிந்து கொள்ள வேண்டும் அதன்வாயிலாக நம்முடைய பயன்பாட்டினை பயனாளர்கள் எதிர்-பார்த்திடும் வழியை பின்பற்றுவதை உறுதிபடுத்திடும் செயல்தான் முக்கிய-மாகும்.
1.3
பின்வரும் சேவையின் தொகுப்பானது ஒவ்வொரு lifecycle() வழிமுறையின் விளக்கங்களாக அமைந்துள்ளது
package com.tutorials point;
import android.app.Service;
import android.os.Ibinder;
import android.content.Intent;
import android.os.Bundle;
public class HelloService extends Service {
/** indicates how to behave if the service is killed */
int mStartMode;
/** interface for clients that bind */
IBinder mBinder;
/** indicates whether onRebind should be used */
boolean mAllowRebind;
/** Called when the service is being created. */
@Override
public void onCreate() {
}
/** The service is starting, due to a call to startService() */
@Override
public int onStartCommand(Intent intent, int flags, int startId) {
return mStartMode;
}
/** A client is binding to the service with bindService() */
@Override
public IBinder onBind(Intent intent) {
return mBinder;
}
/** Called when all clients have unbound with unbindService() */
@Override
public boolean onUnbind(Intent intent) {
return mAllowRebind;
}
/** Called when a client is binding to the service with bindService()*/
@Override
public void onRebind(Intent intent) {
}
/** Called when The service is no longer used and is being destroyed */
@Override
public void onDestroy() {
}
இந்த உதாரணமானது நம்மை எவ்வாறு நம்முடைய சொந்த ஆண்ட்ராய்டு சேவையை உருவாக்குவதற்கு என காண்பிப்பதற்கு ஆன எளிய படிமுறைகளின் வாயிலாக நம்மை அழைத்து செல்கின்றது . நம்முடைய “அனைவருக்கும் வணக்கம்” எனும் பயிற்சிகையேட்டு பகுதியில் நாம் உருவாக்கிய ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் மாறுதல்கள் செய்வதற்கு பின்வரும் படிமுறைகளை பின்பற்றிடுக

1.4
பின்வருபவை src/com.example.அனைவருக்கும் வணக்கம்/MainActivity.java எனும் முதன்மை செயல்பாட்டு கோப்பில் உள்ளடக்கங்களின் செய்யப்பட்ட மாறுதல்கள் ஆகும் . இந்தக் கோப்பில் அடிப்படை வாழ்க்கை சுழற்சி முறைகள் ஒவ்வொன்றையும் உள்ளடக்கமாகசேர்க்க முடியும். நாம் சேவைகளை தொடங்கவும் சேவைகளை நிறுத்தம் செய்திடவும் startService () stopService () ஆகிய இரு வழிமுறைகள் நாம் இதில் சேர்க்க வேண்டும்
package com.example.அனைவருக்கும் வணக்கம்;
import android.os.Bundle;
import android.app.Activity;
import android.view.Menu;
import android.content.Intent;
import android.view.View;
public class MainActivity extends Activity {
@Override
public void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main);
}
@Override
public boolean onCreateOptionsMenu(Menu menu) {
getMenuInflater().inflate(R.menu.activity_main, menu);
return true;
}
// Method to start the service
public void startService(View view) {
startService(new Intent(getBaseContext(), MyService.class));
} //
Method to stop the service
public void stopService(View view) {
stopService(new Intent(getBaseContext(), MyService.class));
}
.பின்வருபவை src/ com.example.அனைவருக்கும் வணக்கம் / MyService.java என்பதன் உள்ளடக்கங்களாகும். இந்தக் கோப்பினை தேவைகளின் அடிப்படையான சேவையுடன் தொடர்புடைய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழிமுறைகள் செயல்படுத்திட முடியும். தற்போது நாம் onStartCommand () , onDestroy (): ஆகிய இரண்டு வழிமுகளை மட்டுமே செயல்படுத்திடவிருக்கின்றோம்

package com.example.அனைவருக்கும் வணக்கம்;
import android.app.Service;
import android.content.Intent;
import android.os.Ibinder;
import android.widget.Toast;
public class MyService extends Service {
@Override
public IBinder onBind(Intent arg0) {
return null;
}
@Override
public int onStartCommand(Intent intent, int flags, int startId) {
// Let it continue running until it is stopped.
Toast.makeText(this, “Service Started”, Toast.LENGTH_LONG).show();
return START_STICKY;
}
@Override
public void onDestroy() {
super.onDestroy();
Toast.makeText(this, “Service Destroyed”, Toast.LENGTH_LONG).show();
}
}
பின்வருவது AndroidManifest.xml எனும் உள்ளடக்கங்கள் மாறுதல் செய்த கோப்பாகும். இங்கே நாம் எனும் குறிச்சொல்லை உள்ளடக்கமாக நம்முடைய சேவையில் சேர்க்க வேண்டும்

பின்வருவதில் res /layout/ activity_main.xml எனும் கோப்பில் இரண்டு பொத்தான்கள் உள்ளடங்கி இருப்பதற்கான உள்ளடக்கங்களாக கொண்டிருக்கும்

பின்வருவது res/values/ strings.xml எனும் கோப்பில் புதிய இரு மாறிலிகளை வரையறுப்பதற்கான உள்ளடக்கங்களாககொண்டிருக்கும்

அனைவருக்கும் வணக்கம்
அனைவருக்கும் வணக்கம்!
Settings
MainActivity
Start Service
Stop Service

நாம் சற்றுமுன்பு நம்மால் நம்முடைய மாறுதல்கள் செய்யப்பட்ட “அனைருக்கும் வணக்கம்” எனும் பயன்பாட்டினை இயக்குவதற்கு முயற்சி செய்வோம். இதனுடைய சூழல் அமைவை அமைவு செய்திடும்போது நம்முடைய AVD ஐ உருவாக்கிவிட்டோம் என கருதிகொள்க இந்தஎக்லிப்ஸில் இருந்து பயன்பாட்டை இயக்குவதற்கு நம்முடைய செயல்திட்டத்தின் செயல்பாட்டு கோப்புகளில் ஒன்றினை திறந்து கொள்க அதனை தொடர்ந்து கருவிகளின் பட்டையிலிருந்து Runஎனும் உருவப்பொத்தானை சொடுக்குக உடன் எக்லிப்ஸானது நம்முடைய AVD இல் நம்முடைய பயன்பாட்டை நிறுவுகை செய்திட துவங்கிடும் அதனை தொடர்ந்து நம்முடைய கட்டமைப்பு, பயன்பாடு ஆகிய அனைத்தும் நன்றாக உள்ளன என்றால், அது பின்வரும் முன்மாதிரி சாளரத்தினை திரையில் காண்பிக்கும்:

1.5
தற்போது நம்முடைய சேவையை துவங்கிடுவதற்கு இந்த முன்மாதிர சாளரத்திரையில் Start Service எனும் பொத்தானை சொடுக்குக உடன் onStartCommand() எனும் வழிமுறையின் நிரல்தொடரில்குறிப்பி்ட்டவாறு இந்த சேவையானது செயல்படத்துவங்கிடும் இந்த முன்மாதிரி சாளரத்திரையில் இந்த சேவை தொடங்கப்பட்டது என்ற செய்திபெட்டியொன்று திரையில் தோன்றி நமக்கு அறிவிப்பு செய்திடும்


1.6

இந்த சேவையை நிறுத்தம் செய்திட Stop Serviceஎனும் பொத்தானை சொடுக்குதல் செய்து நிறுத்தம் செய்திடுக

நாம் கட்டற்ற கட்டணமற்ற அலுவலக பயன்பாட்டிற்கு ஏன் மாறவேண்டும்

நாமெல்லோரும் நம்முடைய அலுவலக பயன்பாட்டிற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தனியுடைமை பயன்பாட்டு மென்பொருட்களான எம்எஸ் ஆஃபிஸை கட்டணத்துடன் அல்லது அனுமதியில்லாமல் பயன்படுத்திவருவது நாம் அனைவரும் அறிந்த செய்தியே . ஆயினும் இவ்வாறான அலுவலக பயன்பாட்டிற்கு மாற்றாக அல்லதுஅதற்கு பதிலாக கட்டணமில்லாத லிபர் ஆஃபிஸ், ஓப்பன் ஆஃபிஸ், டபுள்யூ பி எஸ் ஆஃபிஸ், இணையத்தில் நேரடி அலுவலக பயன்பாடுகளான கூகுள் ட்ரைவ்,எம்எஸ் ஆஃபிஸ் ஆகிய திறமூல அல்லது கட்டற்ற பயன்பாடுகள் நமக்கு உதவ தயாராக உள்ளன இவையனைத்தும் கட்டணமற்றவையாகும் இவைகளுள் தனிநபர் பயன்படுத்திடும் மேஜைக்கணினி, கைபேசி ,டேப்ளெட், ஸ்மார்ட்போன் எனும் திறன்பேசி போன்றவைகளில் லிபர் ஆஃபிஸ் எனும் அலுவலக பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்க

1
ஒரே சமயத்தில் ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்திடும் நிலையில் அதாவது பள்ளிகள், கல்லூரிகள் ,நூலகங்கள் ,நாடுமுழுவதும் பரந்துபட்ட அளவில் கிளைகளை கொண்ட நிறுவனங்கள் போன்ற இடங்களில் தொடர்ச்சியாக அதிவேக இணைய இணைப்பு இருந்தால் மட்டும் இணையத்தின்நேரடி அலுவலக பயன்பாடுகளான கூகுள் ட்ரைவ்,எம்எஸ் ஆஃபிஸ் போன்றவற்றை பயன்படுத்தி கொள்க இணைய இணைப்பு மெதுவாக செயல்படுகின்றது இணைய இணைப்பு விட்டுவிட்டு கிடைக்கின்றது ஆகிய சூழ்நிலையில் லிபர்ஆஃபிஸை பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினிகளில் நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்க
கைபேசி ,டேப்ளெட், ஸ்மார்ட்போன்எனும் திறன்பேசி போன்றவைகளில் போதுமான நினைவகம் இல்லையெனில் இணையத்தின் நேரடி அலுவலக பயன்பாடுகளான கூகுள் ட்ரைவ்,எம்எஸ் ஆஃபிஸ் போன்றவற்றை பயன்படுத்தி கொள்க
மிகப்பெரிய கோப்புகளை கையாளும் நிலையிலும் நம்முடைய கணினிகளில் போதுமான நினைவகம் கைவசம் உள்ளன எனும் நிலையிலும் லிபர்ஆஃபிஸை பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினிகளில் நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்க
2

எச்சரிக்கை சிஐஏ எனும் அமெரிக்க உளவுநிறுவனமானது நம்முடைய சொந்த தகவல்கள் அனைத்தையும் அபகரித்து அலசி ஆராய்கின்றது

நம்முடைய ஆண்ட்ராய்டு திறன்பேசிகள்(ஸ்மார்ட் போன்) ,ஐபோன்கள் ஆகியவற்றில் செயல்படும் இயக்கமுறைமைகளில் இயங்கும் திறன்மிக்க மால்வேர் எனும் நச்சுநிரல்களை அனுப்பி அவைகளுடன் சேர்ந்து அமர்ந்துகொண்டு நம்முடைய அனைத்து நடவடிக்கைகளையும் தகவல்களையும் தரவுகளாக தமக்கு அனுப்பிவைத்திடுமாறு சிஐஏ எனும் அமெரிக்க உளவுநிறுவனத்தின் மின்வெளி ஆய்வுபிரிவானது செயற்படுத்தி வருகின்றது அதாவது நாம் நம்முடைய தகவல்களை Signal, Telegram, Confide, Cloakman ஆகியவற்றின் வாயிலாக மறைக்குறியீடாக உருமாற்றி அனுப்பிவப்பதாக எண்ணிக்கொண்டிருந்தாலும் இவைகளோடு மால்வேர் எனும் நச்சுநிரலானது சேர்ந்து அவ்வாறான தரவுகளை அமெரிக்க உளவுநிறுவனத்தின் மின்வெளி ஆய்வுபிரிவிற்கு அனுப்பி வைத்துவிடுகின்றது இவ்வாறான மால்வேர் எனும் நச்சுநிரலானது திறன்பேசியில் செயல்படும் ஆண்ட்ராய்டு இயக்கமுறைமை மட்டுமின்றி மைக்ரோசாப்ட், மேக், லினக்ஸ் ஆகிய இயக்கமுறைமைகளின் அனைத்து பதிப்புகளிலும் நமக்கு தெரியாமல் வந்தமர்ந்து கொண்டு நம்முடைய அத்தனை நடவடிக்கைகளையும் தரவுகளாக அமெரிக்க உளவுநிறுவனத்தின் மின்வெளி ஆய்வுபிரிவிற்கு அனுப்பி வைத்துவிடுகின்றது அதுமட்டுமா நாம் வீடுகளில் நம்முடைய குரலொலி வாயிலாக இயங்கசெய்திடும் ஸ்மார்ட் டிவிகளிலும் வந்தமர்ந்து கொண்டு நம்முடைய தொலைகாட்சி பெட்டியின் நிகழ்ச்சிகளை பார்த்தபின் நாம் நம்முடைய தொலைகாட்சி பெட்டியை இயங்காமல் நிறுத்தம் செய்தபிறகும் நம்முடைய வீடுகளில் வழக்கமாக நாம் பயன்படுத்திடும் நம்முடைய அனைத்து உரையாடல்களையும் அவற்றின் அத்தனை விவரங்களையும் இந்த மால்வேர் எனும் நச்சுநிரலானது தரவுகளாக அமெரிக்க உளவுநிறுவனத்தின் மின்வெளி ஆய்வுபிரிவிற்கு அனுப்பி வைத்துவிடுகின்றது இதுமட்டுமா தானியங்கியாக செயல்படும் சமீபத்திய நம்முடைய மகிழ்வுந்துகளில் கூட இந்த மால்வேர்எனும் நச்சுநிரல் வந்தமர்ந்து கொண்டு நாம் செல்லும் இடம் அனைத்தையும் கண்கானிப்பதற்கான தரவுகளை அமெரிக்க உளவுநிறுவனத்தின் மின்வெளி ஆய்வுபிரிவிற்கு அனுப்பி வைத்துவிடுகின்றது
இவ்வாறு சிஐஏ எனும் அமெரிக்காவின் மின்வெளி உளவாளிகள் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் நீக்கமற்ற வகையில் நம்மை கண்காணித்தபடியே நிரைந்துள்ளன என்ற தகவலை மனதில் கொண்டு செயல்படுக

Stereogranimator எனும் இணைய கருவி

Stereogranimator என்பது இருபரிமான அல்லது முப்பரிமான உருவப்படங்களை அவைகளின் தொகுப்பிலிருந்து படமெடுத்திடஉதவிடும் ஒரு இணைய கருவியாகும் இதனை நியூயார்க் நகரின் பொதுநூலகம் பராமரித்துவருகின்றது இந்த இணைய தளபக்கத்திற்கு நாம் வந்தவுடன் நாமே படங்களை உருவாக்கி தயார்செய்வதற்காக ஏராளமானஎடுத்துகாட்டுகள் இதில் தயார்நிலையில் இருப்பதை காணலாம் அவைகளுள் சமீபத்திய அல்லது மிகப்பிரபலமான அல்லது ஏதாவது ஒன்றை தெரிவுசெய்து நாம் விரும்பியவாறு உருவப்படத்தை உருவாக்கமுடியும் அதற்காக முதலில் இந்த இணையபக்கத்திற்குள் உள்நுழைவு செய்தவுடன் அங்குள்ள Start Creating எனும் சிவப்பு வண்ண பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கவதன் வாயிலாக இந்த இணைய பக்க கருவியை மிகஎளிதாக செயல்படுத்த துவங்கலாம் அதனை தொடர்ந்து இதிலுள்ள தொகுப்பான உருவப்-படங்களிலிருந்து அல்லது Flickr என்பதன் மூலம் நம்முடைய சொந்த உருவப்பட தொகுப்பிலிருந்துகூட நாம் விரும்பும் படங்களை தெரிவுசெய்து கொள்ளலாம் அடுத்தபடிமுறையாக anaglyph அல்லது animated gif ஆகிய இரு வாய்ப்புகளில் ஒன்றினை தெரிவுசெய்து கொள்க அதன்பின்னர் நம்முடைய சுட்டியை கொண்டு நாம் தெரிவுசெய்த உருவப்படத்தை தேவையானஇடத்தில் நிலைநிறுத்தி தேவையானவாறு சரிசெய்து அமைத்துகொள்க மூன்றாவது படிமுறையாக இந்த உருவப்படத்தை நாம் விரும்பும் நம்முடைய நண்பர்களுடன் Twitter Facebook Tumblr Google+ Reddit ஆகிய சமூகவலைதளங்களின் வாயிலாக பகிர்ந்து கொள்க இன்றே http://stereo.nypl.org/எனும் இந்த இணைய பக்கத்திற்கு சென்று மேலும் விவரங்களை அறிந்து பயன்படுத்தி கொள்க

நம்முடைய திறன்பேசியில் (smartphone) நம்முடைய குரலை பதிவு செய்திடமுடியுமா

SAMSUNG S3 முதல் SAMSUNG S7 வரை யுள்ள smartphone எனும் திறன் பேசிகளில் நாம் காதால் கேட்கும் அனைத்து ஒலிகளையும் பதிவுசெய்த பின்னர் மீண்டும் கேட்கமுடியும் என்ற வசதிகொண்டதாக உள்ளன இதற்கான பயன்பாடுகள் நம்முடைய ஒருசில திறன்பேசிகளில் முன்கூட்டியே நிறுவுகை செய்யப்பட்டு வருவதில்லை அவ்வாறான நிலையில் நம்முடைய திறன்பேசிகளில் Google Play store எனும் இணைய பக்கத்திலிருந்து கட்டணமில்லாமல் ஒருசில நொடிகளில் இதற்கான பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்து நம்முடைய சாதனங்களில் நிறுவுகை செய்துகொள்க அல்லது இவ்வாறான பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்திடுவது நமக்கு சோம்பேறிதனமாக இருந்தாலும் பரவாயில்லை நம்முடைய திறன்பேசிகளில் Memo எனும் பயன்பாடு முன்கூட்டியே நிறுவுகை செய்யப்பட்டே உள்ளன இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் இதற்காக இந்த சாதனங்களின் முகப்புத்திரையிலுள்ள இந்த பயன்பாட்டின் +எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் record எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து கொண்டு நம்முடைய குரலை அல்லது நாம்விரும்பும் உரையாடலை அல்லது பாடலை பதிவுசெய்து கொள்க அதனை தொடர்ந்து இவ்வாறு பதிவுசெய்த கோப்பிற்கு ஒரு பெயரிட்டு சேமித்து கொள்க இதன்பின்னர் இவற்றினை நாம் எப்போது வேண்டுமாணாலும் இயங்கச்செய்து கேட்கமுடியும்

Previous Older Entries