கானொலி காட்சிபடத்தினை காண  findie எனும் இணைய தளத்தினை பயன்படுத்திகொள்க

உலகெங்கும் உள்ள  மிகமேம்பட்டத்தரமான கானொலி காட்சிப்படங்களை இந்த findie எனும் இணையதளம் நமக்கு வழங்குகின்றது  இந்த இணைய பக்கத்திற்கு வந்துசேர்ந்தவுடன் Magazine எனும் இதனுடைய  முதன்மைபக்கத்தில்  Explore More எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தல்போதும் உடன் இந்த தளத்தின் கானொலி காட்சிப்படங்களாலான கடலிற்குள் மூழ்கிவிடுவீர்கள். Recommended, Watch Later, Favorites ஆகிய வாய்ப்புகள் இதன்  Magazine என்றமுதன்மைபக்கத்தில் உள்ளன அவற்றுள் நமக்கு தேவையான வாயப்புகளை தெரிவுசெய்துகொள்ளலாம் திரையின் கீழே நகர்ந்து சென்றால் ஏராளமான வகையில் கண்கொள்ளாக்காட்சியாக கானொலி காட்சிப்படங்கள் இந்த இணைய பக்கத்தில் இயங்கிகொண்டே உள்ளதை காணலாம். திரையின் கீழே இடதுபுறமூலையில்  இந்த கானொலி காட்சிப்படங்களுக்கான ஒவ்வொன்றிற்குமான தலைப்பு பெயர்  அவைகளை பற்றிய சிறு சுருக்ககுறிப்புகள் இருப்பதை காணலாம்   இவைகளை பயன்படுத்தி கொள்ளவிரும்புவோர் முதலில் இந்த தளத்தில் உங்களுக்கு என இலவசமான கணக்கு ஒன்றினை பதிவுசெய்து துவங்கிடுக இதற்காக Google, or Yahoo ஆகியவற்றிலுள்ள நம்முடைய மின்னஞ்சல் கணக்கு அல்லது Facebook, Twitter ஆகிய சமூக வலைதள கணக்கினை இதனுடன் இணைத்திடுக இன்றே https://www.findie.me/எனும் இந்த தளத்திற்கு சென்று இந்த வசதியை பயன்படுத்தி கொள்க

10

விண்டோ10 எனும் இயக்கமுறைமையிலுள்ள கார்ட்டனா எனும் மெய்நிகர் உதவியாளரை பயன்படுத்தி பயன்பெறுக

கார்ட்டனா என்பது விண்டோ10 இயக்கமுறைமையில் நம்முடைய உதவிக்கு வரும் மெய்நிகர் உதவியாளராகும் இந்த உதவியாளரை நம்முடைய கணினியில் பயன்படுத்திகொள்வதற்காக நாம் கணினியுடன் பேசுவதற்கான சிறு பேசி (microphones)என்ற சாதனமும் பெரும்பாலான மடிக்கணினி இந்த சிறுபேசி சாதனங்களுடனே வருகின்றன வழக்கமான மேஜைக்கணினிஎனில் தனியாக சிறுபேசிசாதனம்(microphones) அல்லது சிறு பேசி (microphones)காதி்ல் சேர்த்து வைத்திடும் பேசி சாதனத்தினை(headphones) விலைக்கு வாங்கி கணினியுடன் இணைத்து கொள்வது நல்லது இதனை நம்முடைய கணினியில் செயலிற்கு கொண்டுவருவதற்காக கணினியின் திரையில் கீழே இடதுபுறமூலையில் தேடிடும் உருவபொத்தானில் தேடுவதற்கான கேள்விக்குறியை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக அல்லது நம்முடைய சிறுபேசி(microphones)உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர்Settings=>HeyCortana=> on=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்து அமைத்தபின்னர் தோன்றிடும் இந்த மெய்நிகர் உதவியாளரிடம் கட்டளையிட துவங்குக

  விண்டோ 10 இயக்கமுறைமையில் உள்ள கார்ட்டனா என்பது மிகபுத்திசாலியான உதவியாளர் ஆவார் கணினியில் நாம் விரும்புவதை தேடிபிடித்து கொண்டுவருவதற்காகவும் நம்முடைய நாட்காட்டியி்ன் படி நம்முடைய பணியை பராமரித்திடவும் நாம் பயன்படுத்திட விரும்பும் நம்முடைய கோப்பினை தேடிபிடித்திடவும், நம்முடன் சிறுவிவாதம் செய்திடவும் நல்ல சிரிப்புகளை கூறவும் பயன்படுகின்றது

   இதனோடு உரையாடுவதற்காக உனக்கு எத்தனை வயாதாகின்றது? நான் சிரித்து மகிழ சிரிப்பு ஒன்றினை கூறுக! வேகவைக்கப்பட்ட சாதத்தில் எவ்வளவு கலோரிஇருக்கின்றது ? என்னுடைய மின்னஞ்சல் பெட்டிக்கு சென்று முக்கியமான மின்னஞ்சலிற்கு பதில் மின்னஞ்சல் அனுப்புக! இந்த வார முடிவில் என்னுடைய பணி என்னவெனதிட்டமிடபட்டுள்ளது?” என்பன போன்ற கேள்விகளை இந்த மெய்நிகர் உதவியாளரிடம் கோரி உதவிபெறமுடியும்

 ஒரு கூட்டத்திற்கு செல்வதற்காக மதியம் மூன்றுமணிக்கு எனக்கு நினைவூட்டுதல் செய் எனக்கூறினால் மிகச்சரியாக மதியம்மூன்றுமணிக்கு நமக்கு நினைவூட்டுதல் செய்துவிடும் அதற்கு பதிலாக நம்முடைய சிறுபேசியானது(microphones) வழக்கமான செல்லிடத்துபேசி போன்று குறிப்பிட்ட நேரத்தில் அழைக்கஆரம்பித்துவிடும் 9.

வழக்கமான அச்சிடும் நூல்களைவிட மின்னூல்கள் பிரபலமாக விளங்குவதேன்

பொதுவாக இந்த மின்னூல்கள் எந்த நேரத்திலும் எந்தஇடத்திலும் இணையத்திலிருந்து ஒரிரு சொடுக்குதலின் மூலம் உடனடியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் பின்னர் அவைகளை மற்றவர்களுக்கு அனுப்பிவைத்திடலாம் மேலும் இதனை வடிவமைப்பது மிகஎளிதான செலவில்லாது பணியாகும் ஆனால் வழக்கமான அச்சிட்டநூல் எனில் அச்சுக்கோற்பதுமுதல் சரிபார்த்தல் கட்டாக தைத்தல் வெட்டுதல் ஒட்டுதல் விற்பணைநிலையத்திற்கு அனுப்பிவைத்தல் என செலவுமிக்கதும் அதிக காலத்தை எடுத்துகொள்வதுமான செயலாக இருக்கின்றது இவையனைத்தையும் மின்னூலாக்க செயல் தவிர்க்கின்றது அதுமட்டுமல்லாது பிரபலமான நிறுவனம் வெளியிட்ட நூல்கள் எனில் அச்சிட்டநூல்கள் அனைத்தும் உடனுக்குடன் விற்பணையாகிவிடும் பிரபலமில்லாத நிலையில் விற்பணையாகும் வரை அச்சிட்டநூல்களை பாதுகாத்து பராமரிப்பது கூடுதலானசெலவாகும் மேலும் மின்னூல்களில் நமக்கு எவ்வளவு தேவையோ அந்தளவு மட்டும் அவ்வப்போது உருவாக்கி அனுப்பிவைத்திடலாம் இந்த வழிமுறையில் விற்பணையாகாமல் அப்படியே கிடங்குகளில் வைத்து பராமரிக்கும் செலவேதும் இல்லை. மிகமுக்கியமாக எந்தவொரு சாதனத்திலிருந்தும் எந்தநேரத்திலும் மின்னூல்கள் தேவையென அனுகி தேவையான அளவிற்கு நகல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அவ்வாறே மிககுறுகிய நேரத்திலேயே அதாவது ஓரிரு நிமிடங்களிலேயே நமக்குத்தேவையான நகல்களை பதிவிறக்கம் செய்திடுமுடியும் மேலும் இந்த மின்னூல்களை தேவையெனில் கிண்டில்நூல்கள் தவிர்த்து மற்றவைகளை அச்சிட்டுகொள்ளமுடியும் ஆகிய காரணங்களினால் தற்போது அச்சிட்ட நூல்களைவிட மின்னூல்கள் மிகபிரபலமாக விளங்குகின்றன.

9

நம்முடைய உடலின் சரியான வளர்ச்சிக்குத்தேவையான உணவை தெரிவுசெய்திட EatThisMuch.comஎனும்இணையதளம் உதவுகின்றது

நம்மில் பலர்  உடல் பருமன் அதிகமாகிவிட்டோமே இதனை எவ்வாறு குறைப்பது  என தவிக்கின்றோம்  அதனால் பெரும்பாலானோர் ஜிம் எனும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று கடுமையான உடற்பயிற்சியை  மேற்கொண்டு நம்முடைய உடலை வறுத்தி கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்துவருகின்றோம்.  அதர்குபதிலாக நம்முடைய உடலிற்குத்தேவையான சத்தான சரிவிகித  உணவை மிகச்சரியாக  தெரிவுசெய்து உண்பதன் வாயிலாகவே நம்முடைய உடலை சரியாக கட்டுகோப்பாக வைத்திடலாம்   இதற்காக உதவவருகின்றது http://EatThisMuch.com/ என்ற இணையதளமாகும்  இதனை நம்முடை்ய ஸ்மார்ட் ஃபோன்களிலும் ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையிலும் பதிவிறக்கம் செய்து நிறுவுகைசெய்து பயன்படுத்திகொள்வதற்கான வசதி விரைவில் வரவிருக்கின்றது  இந்த தளமானது  என்னென்ன வகையான எவ்வளவு கலோரி அளவுள்ள உணவினை எவ்வெப்போது எவ்வளவு காலஇடைவெளியில் உண்பது என்ற நம்முடைய உணவுத்திட்டத்தினை  வகுத்து வழங்குகின்றது  நாளொன்றிற்கு நாம் செய்திடும் பணியை பொறுத்து நம்முடைய உடலிற்கு எவ்வளவு தேவையோ அதைவிட சிறிது குறைவாக உண்பது நல்லதுஎன பரிந்துரைக்கபடுகின்றது நம்முடைய உடலிற்கு நாம் செய்யும் பணிக்கு ஏற்ப எவ்வளவு கலோரி அளவுள்ள உணவுதேவையென்பதை இந்த தளம் கணக்கிட்டுவிடுகின்றது அதன்பின்னர் எவ்வளவு கால இடைவெளியில் இந்த உணவுகளை நாம் உண்ணவேண்டும்என அட்டவணையிடுகின்றது இந்த தளத்திற்கு வருக வந்த உங்களின் உடல் எடையை சரியாக  பராமரித்திடுக.

7

முகநூலில் எந்தெந்த வகையான தகவல்களை, பயன்பாடுகளை , அவற்றின் இணைய பக்கங்களை மட்டும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்

நம்மை பற்றிய தகவல்களை நம்முடைய நண்பர்கள் அவர்கள் பயன்படுத்திடும் இதர பயன்பாடுகளிலிருந்து அறிந்துகொள்ள scam எனும்இணையதளபக்கம் அல்லது அவற்றின் பயன்பாடுகளை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்தால் போதும் scammers என்பவர் நம்மைபற்றிய தகவலை நம்முடைய நண்பர்களுக்கு வழங்கிடுவார்  இதனை எவ்வாறு கட்டுபடுத்திடுவது என இப்போது காண்போம்  இதற்காக நம்முடைய முகநூலின் முகப்பு பக்கத்தில் உள்ள   Settings=>  apps=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் Apps Others use என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Apps Others use  எனும் திரையில் Edit.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன்  Apps Others use எனும் உரையாடல் பெட்டி மேல்மீட்பாக  தோன்றிடும்  அதில்  எந்தெந்த வகையான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என பிரதிபலிக்கும்  Post on my timeline, Family and relationships போன்றவைகளுள் எவ்வெவற்றை பகிர்ந்து கொள்ளலாம் என்பவைகளை மட்டும் தெரிவுசெய்துகொண்டு saveஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  Friends list, gender or public information போன்றவைகளை பகிர்ந்து கொள்ள விரும்ப- வில்லையெனில்  Apps, Websites and Plugins என்ற பக்கத்திற்கு சென்று அங்கு Edit.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து பதிப்பித்தல் நிலைக்கு கொண்டுசெல்க  பின்னர் அங்குள்ள  Disable Platform என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக  இதன்பின்னர் தேவையற்ற தகவல்கள் இணையபக்கங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது

7

சிறுவர்களுக்கான Flintoboxஎனும் கல்விபயன்பாடு

6.1

சிறுவர்களின் வயதிற்கு ஏற்ற அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுனையாகவும் வளர்க்கவும் இந்த Flintoboxஎனும் கல்விபயன்பாட்டு கருவி பெரிதும் நம்முடைய வீட்டின் வாயிலிலேயே வந்து உதவுகின்றது. இதிலுள்ள ஏராளமான பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டியும் தனித்தனியான சிறுவர்களுக்கான விளையாட்டின் அடிப்படையில் அவர்களின் திறனை மேம்படுத்திடவும புதியன கண்டுபிடித்தலையும் மேம்படுத்துதலையும் உருவாக்குகின்றது. இதனை சிறுவர்களின் உளவியலிற்கு ஏற்ப பன்னிரண்டு மேம்படுத்தும் பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளன இது மூன்று முதல் நான்கு வயதுவரையுள்ள குழந்தைகள் பள்ளிகூடம் செல்லும் முன்பு இவர்களின் அறிவாற்றலை மேம்படுத்திடுவதற்கு .தேவையான கற்றலை விளையாட்டாக வளர்க்கின்றது அதுமட்டுமல்லாது இது நாம் எங்கிருந்தாலும் நம்முடைய ஸ்மார்ட் ஃபோன்வாயிலாக நம்முடைய பிள்ளைகளின் கற்றல் திறனை ஆக்கபூர்வமாக உருவாக்குகின்றது வாருங்கள் http://www.Flintobox.com/ எனும் தளத்திற்கு வந்து உங்களுடைய பிள்ளைகளை எளிதாக கற்கும் திறனை மேம்படுத்திகொள்ளுங்கள்

நிறுவனங்களின் பேரளவு  தரவுகளை நிருவகிப்பதற்காக Spreadmart  எனும் கருவியை பயன்படுத்திகொள்க.

5.

ஏராளமான நிறுவனங்கள் தங்களின் வியாபார பயன்பாட்டிற்காக இருபத்தைந்து அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய மென்பொருட்களையே  பயன்படுத்தி கொண்டிருப்பார்கள்  ஆயினும் அதே நிலையும் கட்டுப்பாடும் தற்போது தொடரவில்லை என்பதே உண்மைநிலையாகும் அதிலும்  எம்எஸ் எக்செல் எனும் பயன்பாட்டினை எளிய  வரைபடங்கள், அறிக்கைகள், தரவுகளுக்கான வினாக்கள், திட்டங்கள், வருங்காலத்திற்காக எதிர்பார்க்கபடும் அறிக்கைகள், இயக்கஅறிக்கைகள் ஆகியவற்றை உருவாக்கி தனிநபர்கள்  முன்பு பயன்படுத்தி வந்தனர்  குறைந்த செலவு பயன்படுத்த எளிதானது என்ற இதனுடைய தன்மையால் ஏராளமான தனிநபர்கள் தங்களின் தேவைக்காக பயன்படுத்தி வந்தனர் ஆனால் இது ஏராளமான தனிநபர்கள் பலர் பணிபுரியும் பெரிய நிறுவனங்களுக்கு தவறான தகவல் அமைவாக இருக்கின்றது  இவ்வாறான பல்வேறு தனிநபர்களின் தகவல்களை ஒருங்கிணைத்து ஒற்றையான அறிக்கையாக தயாரிக்கும்போது அதன் நோக்கத்திலிருந்து விலகிசெல்லவாய்ப்பு அதிகமாக உள்ளது  ஏனெனில் பல்வேறு பரந்துபட்ட நபர்களின் அனைத்து தகவல்களையும் சேகரித்து ஒருங்கிணைத்து ஒற்றையான அறிக்கையை உருவாக்குவது என்பது மிகப்பெரிய தலைவலி பிடித்தபணியாகிவிடுகின்றது அதனால் பொதுவாக எந்தவொரு நிறுவனத்திலும் இந்த பணியானது தகவல்தொழில்நுட்ப பிரிவு  பணியாகும் என தட்டி கழித்துவிடும் நிலைக்கு தள்ளிவிடப்படுகின்றது மேலும் பலநிறுவனங்களும் இந்த விரிதாள் என்றால் காததூரம் ஓடிவிடும் நிலையில் உள்ளனர் அவ்வாறான பெரிய நிறுவனங்களுக்காகவே ஆபத்திற்கு கைகொடுப்பவனாக Spreadmart  எனும் கருவி உள்ளது    இந்தSpreadmart எனும் கருவியானது பார்வைக்கு விரிதாளினை போலிருந்தாலும்  இதன் செயல்பாடுகள் தரவுசந்தையாக (data mart)  அல்லது தரவு கிடங்காக (data warehouse) அமைந்துள்ளது அதாவதுஇது spreadsheet, data mart ஆகிய இரண்டும் சேர்ந்து உருவான பெயராகும். பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் பல்வேறு நபர்களால் அல்லது குழுவான பலநபர்களால்   பல்வேறு சூழலில் உருவாக்கபட்ட பல்வேறு விரிதாட்களில் உள்ள ஒழுங்கமைதியற்ற தரவுகளை ஒருங்கிணைத்து அந்நிறுவனத்தின் அறிக்கைகள் சிறப்பாக அமைந்திட இந்த Spreadmart எனும் கருவி உதவுகின்றது

Previous Older Entries