அறிந்து கொள்வோம் அக்சஸ் 2003-தொடர்-பகுதி-17 கூட்ட அட்டவணையை உருவாக்குதல்(Creating meeting table)

அறிந்து கொள்வோம் அக்சஸ் 2003-தொடர்-பகுதி-17 கூட்ட அட்டவணையை உருவாக்குதல்(Creating meeting table)

பல்வேறு வகையான தரவுகளை அட்டவணையாக தொகுத்து சேமித்து அவற்றின் விவரங்களிலிருந்து நமக்கு தேவையான நாம் விரும்பியவாறான அறிக்கையாக தயாரிக்க அக்சஸ் உதவுகின்றது  ஆட்களின் அல்லது நிறுவனங்களின் முகவரிகளை இவ்வாறான அறிக்கைகளின் மூலம் எவ்வாறு தயார்செய்வது என இப்போது காண்போம்.  அக்சஸில் புதியவர்கள் எவரும் வித்தகர் எனும் வழிகாட்டியை பயன்படுத்தி இவ்வாறான பணியை முடித்து கொள்வதுதான் மிகச்சுலபமான வழியாகும்

1.அக்சஸ் சாளரத்தின் இடதுபுறமுள்ள பொருட்களின்(Object) பொத்தான்களில் அறிக்கை (Report) என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

2.பின்னர் கருவிபட்டியில் புதியது (New )என்பத தெரிவுசெய்து சொடுக்குக.

3. உடன் படம்-1-ல்உள்ளவாறு தோன்றிடும் New Report என்ற திரையில் label wizardஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

படம்-1

 4.பின்னர் அட்டவணை  அல்லது வினா (table or query )என்றகீழிறங்குபட்டி( dropdown box)யில் tblcontact என்ற அட்டவணையை தெரிசெய்துகொண்டு ok என்ற பொத்தானை சொடுக்குக

படம்-2

உடன் படம்-2-ல் உள்ளவாறு label wizard என்ற வழிகாட்டி உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும்.அதில் முகவரி அறிக்கையின அளவை தெரிவுசெய்துகொள்க. Product Number என்பதன் கீழ் கொடுக்கபட்டுள்ள முகவரிபட்டியலின் மாதிரி எண்களுள் C2160 என்றவாறு ஒன்றினை தெரிவுசெய்து கொள்க

அவ்வாறே இந்த முகவரி அறிக்கையின் நீளஅகலமானது எவ்வளவு இருக்கவேண்டும் என்பதற்காக Dimensions என்பதன் கீழ் கொடுக்கபட்டுள்ள வற்றுள் ஒன்றினை தெரிவுசெய்து கொள்க. மேலும் ஒரு கிடைவரிசையில் எத்தனை முகவரி பட்டி இருக்க வேண்டும் என்பதற்காக Number acrossஎன்பதன் கீழ் கொடுக்கபட்டுள்ளவற்றுள் ஒன்றினை 3என்றவாறு தெரிவுசெய்து கொண்டு Nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

படம்-3

உடன் படம்-3-ல் உள்ளவாறு தோன்றிடும் வழிகாட்டி உரையாடல் பெட்டியில் எழுத்துருவின் பெயர்(Font name) Arial என்றவாறும் எழுத்துருவின் அளவு(font size)  8 என்றவாறும் தடிமன்அளவு (font weight) light என்றவாறும் சாய்வாகவா(Italic) கீழ்கோடுடனா(underline) ஆகியவற்றில் தேவையானதையும் தெரிவுசெய்துகொண்டு உரையின் வண்ணம்(Text color)   என்பதற்கருகிலுள்ள builder என்ற முப்புள்ளியை தெரிவு செய்து சொடுக்கியவுடன்  தோன்றிடும் color என்ற சிறுபலகத்தில் basic color என்பதன் கீழுள்ள வாய்ப்புகளில் ஒன்றினை தெரிவுசெய்து கொண்டு ok என்ற பொத்தானையும் பின்னர் வழிகாட்டி உரையாடல் பெட்டியில் next என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக

படம்-4

உடன் படம்-4-ல் உள்ளவாறு தோன்றிடும் வழிகாட்டி உரையாடல் பெட்டியில்  இடதுபுற முள்ள Available fields என்பதன் கீழுள்ளவைகளில் தேவையான புலங்களை   ஒவ்வொன்றாக தெரிவுசெய்து >என்ற ஒற்றைக்குறியை தெரிவுசெய்துசொடுக்குக உடன் அவ்வாறு தெரிவுசெய்யபட்ட புலங்கள் வலதுபுறமுள்ள proto type label என்பதன் கீழ் போய்சேந்திருக்கும் பின்னர் nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

                             படம்-5

உடன் படம்-5-ல் உள்ளவாறு தோன்றிடும் வழிகாட்டி உரையாடல் பெட்டியில் இடதுபுறம் நாம் தெரிவுசெய்திருந்த Available fields என்பவைகளில் தேவையான புலங்களை   ஒவ்வொன்றாக தெரிவுசெய்து >என்ற ஒற்றைக்குறியையும் அனைத்தையுமெனில் >> என்ற குறிகளையும்  தெரிவுசெய்து சொடுக்குக உடன் அவ்வாறு தெரிவுசெய்யபட்ட புலங்கள் வலதுபுறமுள்ள sort by என்பதன் கீழ் நாம் தெரிவுசெய்த வரிசையில் புலங்கள் அடுக்கப்பட்டிருக்கும் பின்னர் nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

                                                 படம்-6

பிறகு தோன்றிடும் திரையில் நாம் தயார்செய்த ஆவனத்திற்கு ஒரு பெயரினை உள்ளீடு செய்த பின்னர் Finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்-7-ல் உள்ளவாறுமுகவரிகளடங்கிய தொகுப்பு ஆவணம் ஒன்று திரையில் தோன்றும்

படம்-7

பாம்பு வடிவ நெடுவரிசை அறிக்கையொன்றை உருவாக்குதல்(Creating snaked column report)இதுவரையில் நாம் தெரிந்து கொண்ட அறிக்கையானது படிவத்தை அடிப்படை யாகவோ அல்லது ஒற்றை நெடுவரிசை பட்டியல் போன்றோ இருக்கும் இவ்வாறாக சமர்ப்பிக்கபடும் அறிக்கையின் தோற்றம் நன்றாக அமையாது இதனை நிவர்த்தி செய்வதற்காக பாம்பு வடிவ நெடுவரிசை அறிக்கை பயன்படுகின்றது.இது ஒரு பக்கத்தின் முதல் பாதி இடத்தை விவர பகுதியில் உள்ள தரவுகளின் துனையுடன் நிரப்பிகொண்டுவிடும் .பின்னர் பக்கமுடிவு வந்தவுடன் மீண்டும் அதே பக்கத்தில் மறுபாதிஇடத்தின் தலைப்பிலிருது தரவுகளை நிரப்பி கொண்டே வந்து அந்த பக்கத்தை முடிக்கும் .இவ்வாறு ஒரே பக்கத்தில் இரண்டுமுறை மேலிருந்து ஆரம்பித்து கீழேபக்கமுடிவிற்குவளைந்து வளைந்து வரும்போது இரண்டாவது முறை பக்கம் முடிவுபெறும்போது அடுத்தபக்கத்திற்கு சென்று முன்புபோலவே மேலிருந்து ஆரம்பிக்கும் இவ்வாறான அறிக்கைகள் தொலைபேசி முகவரிபுத்தகம் செய்திதாட்கள் காலமுறை இதழ்கள் போன்றவற்றில் பயன்படுத்த படுகின்றது  முகவரிஅறிக்கைக்கும் பாம்பு வடிவ அறிக்கைக்கும் உள்ள முக்கியவேறுபாடு விவரபகுதிமட்டுமே பாம்பு வடிவஅறிக்கையில் விவரப்பகுதி மிகச்சிறியதாக கொடுக்கபடும் சாதாரணஅறிக்கையில் நாம்காண்பதற்கேற்றவாறு முழுவிவரங்களும் மிகவிரிவாக இருக்கும்

படம்-8

படம்-8-ல் உள்ளவாறு நிறுமபெயர் தேதி  ஆகியவை தலைப்புபகுதியிலும் அடுத்து தடிமனான கருப்பநிறகோடும்அதற்கடுத்து விவரப்பகுதி மிக்குறுகிய அளவாக 13/4 அகலம் இருக்கும். அதில் நிறுமபெயர்,முகவரி,தொலைபேசிஎண்,மின்னஞ்சல் முகவரி, இதர விவரங்கள் இருக்கும் கீழ்பகுதியில்   மற்றொரு தடிமனான கோடு இருக்கும் .பிறகு கருவி பட்டியிலுள்ள Sorting and Grouping என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .உடன் படம்-8-ல் உள்ளவாறு Sorting and Grouping என்ற உரையாடல் பெட்டியொன்றுதோன்றிடும் அதில் State, Customerஆகியவற்றை வரிசைபடுத்தி அடுக்கியபின் இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக.பின்னர் மேலே கட்டளைபட்டியிலுள்ள கோப்பு (file)என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக விரியும்  பட்டியில் page setup என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-9

உடன் படம்-9-ல் உள்ளவாறுpagesetup என்ற உரையாடல் பெட்டியொன்று தோன்றிடும் அதில் margins என்ற தாவியை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் margins என்ற தாவியின் திரையில் இடதுபுறமும்(left) வலதுபுறமும்(Right) கீழ்புறம்(bottom) மேல்புறமும்(top) 0.5 என உள்ளீடு செய்துகொண்டு என்ற தாவியின் திரையில் இயல்புநிலையில் இருப்பதை அப்படியே ஆமோதித்து column என்ற தாவியைதெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் column என்ற தாவியின் திரையில்Grid setting என்றகுழுவின் கீழுள்ள number of column என்பதற்கு 3 என்றும் மற்ற இரண்டிற்கும் 0.0 என்றும் உள்ளீடு செய்துகொள்க அவ்வாறே Columnsize என்ற குழுவின்கீழுள்ளwidth என்பதற்கு 2.75என்றும்  heightஎன்பதற்கு 2.05 என்றும் உள்ளீடு செய்துகொள்க. மேலும் column lay out என்ற குழுவின்கீழுள்ள downThe across என்ற வானொலி பெத்தானை தெரிவுசெய்துகொண்டு  ok என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக.

 முகவரி உள்ளிணைப்பு அறிக்கை(Mail merge report) பொதுவாகஒரு அறிக்கைக்கு தேவையான தரவுகளை ஏதேனுமொரு அட்டவணையிலிருந்தோ அல்லது வினாவிலிருந்தோ எடுத்து பயன்படுத்திடுவோம் இதனை அவ்வறிக்கையிலுள்ள இயக்குவிசையின் மூலம் குறிப்பிட்ட அட்டவணையிலிருந்த அல்லது வினாவிலிருந்து இந்த விவரம் தருவிக்கபட்டது என அறிந்துகொள்ளமுடியும்

                         படம்-10

படம்-10-ல் ஒரு அறிக்கை தயாரிக்க தேவையான விவரங்கள் அடங்கியுள்ளன.இதில் wildcard மட்டும் மிகசிறப்பாக tbl sales ,tbl contact ஆகிய அட்டவணைகளின் புலங்களிலிருந்து மொத்தவிவரங்களும் தருவிக்கும்படி அமைக்கபட்டுள்ளது.

முதலில் தேவையான தரவுகளை சேகரித்துகொண்டு பின்னர் மற்றஅறிக்கை தயாரிப்பதைபோன்று இதனை உருவாக்கலாம். மிக முக்கியமாக இவ்வாறான அறிக்கையில் தலைப்பும் விவரபகுதி ஆகிய இரண்டுமட்டுமேகடித உள்ளிணைப்பு அறிக்கையில் இருக்கும் .இந்த கடித உள்ளிணைப்பு அறிக்கையை வித்தகர் எனும் வழிகாட்டிமூலம் உருவாக்குவது நன்றாக இருக்காது  இதனுடைய பக்கத்தலைப்பு பகுதியில் இடதுபுறம் கட்டற்ற படம் கொண்டுவரப்படுகின்றது

அதற்கடுத்த்தாக நிறுமத்தின்பெயர்,முகவரி,தெலைபேசி எண் போன்ற விவரங்களை=dlookup “, Value, tbl company setup”, “(option name) = ‘(Company name”) என்றவாறு செயலியை உள்ளீடு செய்வதன் வாயிலாக தரவுகள் கொண்டுவரப்படுகின்றது.

பின்னர் Format ( ), Date ( ) என்ற செயலிகளை இந்த கடிதத்தின் நாளினை குறிப்பிடபயன்படுகின்றது.அதன்பின்னர் இதுஇந்த தேதியை மாதத்தின் முழுப்பெயர், நாள், காற்புள்ளி, இடைவெளி,நான்கு இலக்கஎண்களுடன் வருடம் என்றவாறு திரையில் பிரதிபலிக்கசெய்கின்றது.இதனை = foramt (Date( ) “mmmm,dd,yyyy”) என்று உள்ளீடு செய்தால் தானாகவே =format (Date( ) “mmmm,dd”,”yyyy”) என்றவாறு மாற்றி அமைத்துகொள்கின்றது.

பின்னர் கடிதத்தின் விளிச் (அழைப்பு) சொல்லை =dear “ & (chr first name)என்றவாறு பயன்படுத்தி கடிதத்தின் செய்திபகுதியை ஆரம்பிக்கவேண்டும். பின்னர் நாம் எழுதவேண்டிய செய்திகளை பத்தி பத்தியாக பிரித்து இதிலுள்ள உரைபெட்டியின் கட்டத்திலுள்ள “ ”என்ற மேற்கோள் குறிக்குள் உள்ளீடு செய்க. ஒவ்வொர பத்திக்கும் தனித்தனி உரைபெட்டியை பயன்படுத்துக. இடையிடையே கணக்கீடுகள்,தேதி, தொகை ஆகியவிவரங்களை குறிப்பிடவேண்டுமெனில்என்றவாறு  & Format (invoice subtotal)“#;##000’)& உள்ளீடு செய்க. கடிதத்தின் முடிவுப்பகுதியில் கையொப்பத்தை கொண்டுவருவதற்கு அதனை மின்வருடி  (scan)செய்தபின்னர் கட்டற்ற இயக்குவிசை மூலம் படமாக இந்த கடிதத்தின் உள்ளே கொண்டு வருக.விவரபகுதி உள்ளீடு செய்துவரும்போது பக்கம் முடிகின்றதெனில் புதியபக்கம்என்ற பண்பியல்பை உள்ளீடு செய்க.இவ்வாறு ஒரு உள்ளிணைப்பு கடிதம் தயார்செய்து முடித்தபின்னர் அச்சுக்குமுன் காட்சியாக படம்-11-ல் உள்ளவாறு அதன் தோற்றம்மஅமைந்திருக்கும்.

படம்-11

மைக்ரோசாப்ட் வேர்டில் உள்ள உள்ளிணைப்பு வழிகாட்டியை பயன்படுத்தி அறிக்கையொன்றை தயாரித்தல் 

1அக்சஸ் சாளரத்தின் இடதுபுறத்திலுள்ள பொருட்பகுதியில்(object) அட்டவணை (table) அல்லது வினா (query)ஆகியவற்றிலொன்றை தெரிவுசெய்து கொண்டு அதற்கான கோப்பு ஒன்றினையும்தெரிவுசெய்து கொள்க.

2.பின்னர் மேலே கருவிபட்டியிலுள்ள அலுவலகஇணைப்புகள் (official links) என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

3. உடன் படம்-12-ல் உள்ளவாறு  கீழிறங்கு பட்டியில் மூன்றுவாய்ப்புகள்  விரிகின்றன. அதில் merge it with Microsoft office word என்ற வாய்ப்பை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக

படம்-12

4.உடன் படம்-12-ல் உள்ளவாறு Microsoft word mail merge wizardஎன்ற வழிகாட்டி திரையில் தோன்றிடும்

5.இந்த வழிகாட்டி உரையாடல் பெட்டியில் ஏற்கனவே இருப்பிலுள்ள கோப்புடனஅ இணைப்பை ஏற்படுத்திடவேண்டுமா அல்லது புதியதாக இணைப்பை ஏற்படுத்திடவேண்டுமா என கேட்டு காத்திருக்கும் அதிலொன்றை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

6. உடன்படம்-13-ல் உள்ளவாறு Document1 Microsoft Word என்ற திரை தோன்றிடும் அதில் வலப்புறமுள்ள செயல்பலகத்தின் letters, email, envelope, label, Telephone number ஆகிய வாய்ப்புகள் நாம் தெரிவுசெய்வதற்கு ஏற்றவாறு தயாராக காத்திருக்ன்றன

படம்-13

  நாம் இப்போது கடிதம் எழுதிட விரும்புவதால் letter என்ற வானொலி பொத்தானின் வாய்ப்பை தெரிவுசெய்து கொள்க.உடன்தோன்றிடும் Select tableஎன்ற சிறுஉரையாடல் பெட்டியில் table என்பதன்  கீழுள்ள tblContacts என்ற வாய்ப்பை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Step1of6என்ற வலதுபுற பலகத்தில் உள்ள Click next to continue என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-14

 உடன் படம்-14-ல் உள்ளவாறு  Step2of6என்ற பலகம் தோன்றிடும் இதில் 1.Use Current Document 2.Start from template 3.Start from existing document.ஆகிய மூன்று வாய்ப்புகள் உள்ளன முதல் வாய்ப்பை மட்டும் தெரிவுசெய்து  next to continueஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

படம்-15

  உடன் படம்-15-ல் உள்ளவாறு  Step3of6என்ற பலகம் தோன்றிடும் இதிலுள்ள select recipients என்பதில் 1. use an existing list 2.select from outlook contacts 3.type a new listஆகிய மூன்று வாய்ப்புகள் உள்ளன முதல் வாய்ப்பை மட்டும் தெரிவுசெய்து  next to continueஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.இதில் tble contactஎன்ற வாய்ப்பை தெரிவுசெய்ய தேவையில்லை

 படம்-16

பின்னர்  படம்-16-ல் உள்ளவாறு  Step4of6என்ற பலகம் தோன்றிடும் இதில் முகவரி(Address book) அழைப்புஅல்லது விளித்தல்வரி(greetings line) மின்னஞ்சல்(Electronics postage) அஞ்சல் பட்டைகுறியீடு (Postal bar code)ஆகியவற்றை அதனதன் இடத்தில் இடம்சுட்டியைவைத்து சொடுக்கி உள்ளீடு செய்துகொண்டு மேலும் ஏதேனும் சேர்க்க வேண்டியிருந்தால் more itemsஎன்ற பொத்தானை சொடுக்கி சேர்த்துகொண்டு next to continueஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-17

 உடன் படம்-17-ல் உள்ளவாறு  Step5of6என்ற பலகம் தோன்றிடும் இதில் மாறுதல் ஏதேனும் செய்யவேண்டியிருப்பின் அம்மாறுதல்களை செய்து next : complete the mergeஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-18

  உடன் படம்-18-ல் உள்ளவாறு இறுதியாக Step6of6என்ற பலகம் தோன்றிடும் இதில் அனைத்தும் சரியாக இருக்கின்றதுஎனில் அதில் mergeஎன்பதன் கீழுள்ள Edit individual letter என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் படம்-18-ல் உள்ளவாறு Merge to New Document என்ற  சிறுஉரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் மேலும் விவரம் தேவையெனில் உள்ளீடு செய்து OK என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக. உடன் நாம் விரும்பியவாறு முகவரிஇணைக்கபட்ட கடிதம் படம் -19-ல் உள்ளவாறு கிடைக்கும் தேவையெனில் இதனை அச்சிட்டு கொள்ளலாம்

படம்-19

Web மற்றும் FTP சேவையாளரை நம்முடைய வீட்டிற்குள்ளேயே பராமரிக்கலாம்

வெப் மற்றும் எஃப்.ட்டி.ப்பி சேவையாளர் போன்று நம்முடைய வீடுகளில் உள்ள தனியாள் கணினியை(PC)பயன்படுத்தமுடியும் இதன்மூலம்நம்முடைய நண்பர்களுடன் நம்முடைய தனிப்பட்ட இணையபக்கங்களையும் ,1கோப்புகளையும் பகிர்ந்துகொள்ளமுடியும் மேலும் இந்த வசதியை செலவேதும் இல்லாமலேயே பெறமுடியும் இதனுடைய தனிச்சிறப்பாகும்
இதற்காக இலவசமான வெப் மற்றும் FTPசேவையாளரை உருவாக்குவதற்கான மென்பொருளும் நடப்பு ஐபி முகவரியுடன் அகல்கற்றை இணைய இணைப்பும் இருந்தால் போதுமானதாகும்
இணையப்க்கம் அல்லது FTPசேவைக்காக உண்மையில் DNSஒன்றும் தேவையில்லை DNS என்பது நம்முடைய இணைய பக்கத்திற்கு பொருத்தமான நடப்பு ஐபி முகவரிக்கான ஒரு சேவையாகும் மற்றவர்கள் நம்முடைய இணையபக்கத்தை அனுகுவதற்காக இந்த ஐபி முகவரியை ஞாபகப்படுத்திட தேவையில்லை பெயர் மட்டும் ஞாபகத்தில் இருந்தால் போதுமானதாகும்,இதற்காக அதிகஅளவிற்கு சேவைக்கட்டணமாக பணத்தை செலவழிக்க வேண்டிய தேவையுமில்லை அதுபோன்ற தலைவலியும் இல்லை நம்முடைய சொந்த இணையசேவையாளரை நம்முடைய வீடுகளில் பயன்படுத்திடும் தனியால கணினியான மேஜைத்திரை கணினியே போதுமானதாகும் இதற்காக ஒருசில இலவச மென் பொருட்களை மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம் இவவாறு உருவாக்கிய நம்முடைய இணையபக்கத்தை பற்றிய செய்தியை மட்டும் மின்னஞ்சல் அல்லது விவாத சேவைக்காக நம்முடைய நன்பர்களின் வட்டத்தில் பரவச்செய்தால் போதும்
நம்முடைய இணைய பக்கத்தின் பெயரை நம்முடைய நண்பர்கள் தத்தமது இணையஉலாவியில் ஐபி முகவரியாக XXX.XXX.XXX.XXX என்றவாறு தட்டச்சு செய்தால் போதும் இதனை எப்போது வேண்டுமானாலும் அனுகலாம் FTP சேவையாளர் பயன்படுத்திடும் அதே வழிமுறையே இதில் பின்பற்றப்படுகின்றது,
இந்த நடப்பு ஐபி முகவரிக்காக MTNLநிறுவனம்ஆண்டொன்றிற்கு ரூபாய் 1000. மட்டுமே கட்டணமாக பெற்று இந்த சேவையை வழங்குகின்றது,மற்ற சேவையாளர்களான Hathway Sify Reliance போன்றவர்களும் ஏறத்தாழ இதே போன்று கட்டணத்துடன் இந்த சேவையை வழங்குகின்றன,
அதனால் இந்த வசதி வாய்ப்புகளை பயன்படுத்தி நம்முடைய சொந்த இணையபக்கங்களை நம்முடைய வீடுகளில் உங்ளள தனியாள்கணினியை பயன்படுத்தி உருவாக்கி பராமரித்திடுக
ஆனால் இந்த செயலிற்காக நம்முடைய கணினியை 24 மணிநேரமும் இயக்க நிலையில் வைத்திருக்கவேண்டும் என்பதுதான் இதன் மிகப்பொரிய குறைபாடாகும் இதற்கு பின்வருமாறான ஏற்பாடுகள் தேவைப்படும்
1,அகல்கற்றை இணைய இணைப்பு High speed broad band connection நடப்பு ஐபி முகவரியுடன்
2, பழைய பயன்படுத்தாத தனியாள் கணினி யொன்று
3, விண்டோ எக்ஸ்பி அல்லது விண்டோ 98 இவைஎதுவுமில்லையெனில் லினக்ஸ் இயக்கமுறைம
4,ஒரு HTTP server பயன்பாடு Abyss web server X1 (2.5பதிப்பு)
என்பது போன்றும் ஒரு FTP Server பயன்பாடும் Xlight FTP server (2.835பதிப்பு என்பது போன்று இணையசேவையாளர் (web server) http://www.aprelium.com/abyssws/download.php http://www.aprelium.com/abyssws/download.php என்ற இணாய முகவரியில் இருந்து இலவசமாக Abyss web server X1 ஐ பதிவிறக்கம்செய்துகொள்க இந்த மென்பொருளை நிறுவி எப்போது இது இயங்கவேண்டும் எனத் தீர்மானித்து கொள்க,இது விண்டோ இயக்கமுறைமை மட்டும் அல்லாது MacX Os,லினக்ஸ் , Free BSDஆகியவற்றில் கூட இயங்ககூடியது ஆகும்,
அதன்பிறகு இதனை இணையஉலாவியில் அமைவு செய்வதற்கான வழிமுறையில்எந்த மொழியை தேர்ந்தெடுக்கின்றீர்கள் எனக் கேட்கும் அதற்கு English என தெரிவுசெய்க
உடன் தோன்றும் அடுத்த திரையில் நிருவாகியின் கணக்கை ஆரம்பிக்கத் தேவையான பயனாளரின் பெயர் (username) கடவுச்சொற்கள் (password)ஆகியவற்றை உள்ளீடுசெய்க,இந்த கடவுச்சொற்கள்தான் பின்னர் இணைய சேவையாளரில் தேவையான மாறுதல்களை செய்வதற்கு தேவைப்படும்,
உடன் அமைவுசெய்வதற்கான செயல் ஆரம்பித்து சேவையாளரின் பின்புலமாக இயங்க ஆரம்பிக்கும் இதனை அனுகுவதற்காக இணையஉலாவியை நினைவகத்தில் மேலேற்றி அதில் இணைய முகவரியை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக ,இங்கு இணையமுகவரி என்பது நம்முடைய கணினியின் முகவரியாகும்,உடன் Abyss webserver இன் இயல்புநிலை இணாய பக்கம் திரையில் பிரிதிபலிக்கும் இதில் நம்முடைய சொந்த இணைய பக்கமாக Adobe dream weaver என்ற கட்டணத்துடன் கூடிய அல்லது weborama, ASPmaker ,Hapeditபோன்ற இலவசமான பயன்பாடுகளை உபயோகப்படுத்தி உருவாக்குக,
பின்னர் இந்த கோப்பினை நகலெடுத்து C:/Abyss webserver \htdocsஎன்ற மடிப்பகத்தில் ஒட்டிகொள்க,இதுவே இந்த இணையசேவையாளரை அனுகிடும் சுலபமான வழியாகும் நம்முடைய ஆரம்ப இணைய பக்கத்தின் பெயராக index.htm,index.htmlஅல்லது இயல்புநிலை .aspx ஆக பெயர் இருக்குமாறு பார்த்துகொள்க,index files-இன் கீழ் அமைவு செய்யும்போது இதன் வரிசைமுறையை தேவையானால் மாற்றியமைத்துகொள்க இதேஅமைவு கோப்பை மற்றவர்கள் தாம் உருவாக்கும் கோப்புகளுக்கு பயன்படுத்தி கொள்ளமுடியும் இவ்வாறு அமைத்து முடித்தவுடன் நம்முடைய சொந்த இணையபக்கத்தை இணையத்தில் வெளியிடுவதற்கு தயாராக இருக்கின்றது எனப்பொருள்படும்
சிஸ்டம் டிஸ்பிளே பகுதியில் உள்ள Abysswebserver என்ற குறும்படத்தை இடம்சுட்டி வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக, உடன் விரியும் பட்டியில் show consoleஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக,நாம் நிறுவிடும்போது உள்ளீடுசெய்த பயனாளரின் பெயர் கடவுச்சொற்கள் ஆகியவற்றை தட்ச்சுசெய்க,உடன் நம்மை இயல்புநிலை அமைவு பக்கத்திற்கு அழைத்து செல்லும், நம்முடைய இணைய இணைப்பிற்கு ஒருபெயரை அமைத்திடுக அதன்பின்னர் இதே இணைய பக்கம் இருக்கின்ற , அடைவில் directory அல்லது இயக்கத்தில் driveஐ வெகுதூரத்தில் இருப்பவர்கள்கூட அனுகி பதிவிறக்கம் செய்வதற்கும் திறந்து பார்ப்பதற்கும் ஏதுவாக D:\software என்றவாறு உள்ளீடுசெய்க, http:// XXX.XXX.XXX.XXX/download என்றவாறு இணைய முகவரியை குறிப்பிடுக, aliasesசேர்த்து மெய்நிகர் மற்றும் உண்மையான பகுதிபெயரையும் பயன்படுத்தி இதனை செயல் படுத்தும்படி அமைக்கவேண்டும் மற்ற வாய்ப்புகள், users and groups. Index files, Directory listings ,logging, URL Rewrittings போன்றவையாகும் இவை ஒவ்வொன்றை பற்றியும் தெரிந்த கொள்வதற்கு மேலே வலதுபுறத்தில் உள்ள அமைவு பக்கத்தில் Helplink என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,அவ்வாறே நம்முடைய இணையபக்கத்தை எத்தனை பேர் பார்வையிட்டார்கள் என்று அறிந்து கொள்வதற்கு error என்பதையும் பதிவிறக்கம் செய்தவர்கள் எத்தனை பேர் எனக் காண்பதற்கு statics என்பதையும் தெரிவுசெய்துபிடித்து சொடுக்கினால் போதும்,
நம்முடைய நன்பர்கள் இந்த இணையபக்கத்தை அனுகுவதற்காக XXX.XXX.XXX.XXX http://www.abcdxyz.com என்றும் host கோப்பின் முடிவில் C;window \system32\drivers \etc என்ற மடிப்பகத்தையும் நோட்பேடில் திறந்து தட்டச்சு செய்து கொள்க,அடுத்த முறை அனுகும்போது http://www.abcdxyx.com என தட்டச்சு செய்தால் போதும் நம்முடைய இணையபக்கம் தோன்ற ஆரம்பிக்கும் எப்போது இந்த முகவரியை தட்ச்சு செய்தாலும் உடன் இந்த கோப்பினை தேடிப்பார்க்கின்றதுஅதில் உள்ள நம்முடைய கணினியின் ஐபி முகவரியை படித்தறிகின்றது,பின்னர் அதனுடைய இணைய சேவையாளரில் கொண்டுவந்து செயல்படுத்திட ஆரம்பிக்கின்றது,இவ்வாறு ஒவ்வொரு தனித்தனி கணினியும் ஒரு சிறிய DNS சேவையாளர் போன்று செயல்படுகின்றது,
FTP Server
426 KB அளவுள்ள Xlight FTP Server2.835என்ற பயன்பாட்டினை என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம்செய்து நம்முடைய கணினியில் நிறுவாமலேயே இயக்குக, இதனை நினைவகத்தில் ஏற்றிடும்போது மட்டும் சிஸ்டம் டிரேவில் இருந்து கொண்டு இயங்க ஆரம்பிக்கும் அதனால் முதலில் இதனை நிறுவுகை செய்யாமலேயே இயக்குக
உடன் தோன்றும் திரையில் new virtual server என்ற சாளரத்தின் இடதுபுறமூலையில் இருக்கும் குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக, பின்னர் FTPசேவையாளராக பணிசெய்யவிரும்பும் network களின் ஐபி முகவரியை தெரிவுசெய்க, நுழைவுவாயில் எண்களை 21 என அமைத்து Okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,பின்னர் நாம் உருவாக்கிய சேவையாளரில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக,உடன் தோன்றும் பட்டியில் start serverஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக,உடன் இந்த சேவையாளர் இயங்கதொடங்கி இணைய இணைப்பிற்காக காத்திருக்கும் ஆனால் எந்த கோப்பினை நம்முடைய நன்பர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிடவேண்டும் அதற்காக பயனாளரின் பெயர் கடவுச்சொற்கள் பதிவிறக்கம் செய்வதற்கான கோப்பு இருக்கும் இடத்தை அனுகுவதற்கான வழிஆகியவற்றை குறிப்பிடவேண்டும்
user list என்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றும் மேல்மீட்பு பட்டியலில் add userஎன்பதை தெரிவுசெய்க,உடன் தோன்றும் திரையில் user name pass word ஆகியவற்றை உள்ளீடுசெய்க,FTPசேவையாளரை அனுகுவதற்காக அல்லது anonymousஎன்று பயனாளரின் பெயரையும் கடவுச்சொற்கள் இல்லாமலும் தெரிவுசெய்து எவரும் நம்முடைய FTPசேவையாளரை அனுகுமாறு செய்யமுடியும் ,அதன் பின்னர் Homepath என்பதை தெரிவுசெய்க,இதுவே பயனாளர்கள் கோப்புகளை பதிவிறக்கம் செய்வதற்கான கோப்பு வைத்திருக்கும் இடமாகும்,ஒவ்வொரு பயனாளருக்கும் தனித்தனி மடிப்பகத்தையும் கோப்புகளையும் உருவாக்கிட முடியும் இவ்வாறு செய்தவுடன் நம்முடைய சேவையாளர் பயன்படுவதற்கு தயாராக இருக்கும் இதே தத்துவத்தின் அடிப்படையில் ஒரு இணாய சேவையாளரானது FTPசேவையாளரை இணையத்திலிருந்து அனுகமுடியும்
FTp:/XXX.XXX.XXX.XXX21 என்றவாறு உலாவியை அல்லது ஒரு FTPசேவையாளரின் சாளரத்தின் வழியாக அனுகமுடியும்
FTPசேவையாளருடைய சாளரத்தின் வழியாக pause stop அல்லது view ஆகிய செயல்களை control என்ற குறும்படத்திலிருந்து செய்யமுடியும் அமைப்பு பக்கத்திலிருந்து server message என்பதை தெரிவுசெய்க,
FTPசேவையாளரை அனுகுவதற்குஅனுமதித்தல் அல்லது மறுத்தல் ஆகிய செயல்களை செய்வதற்காக ஐபி முகவரியை தெரிவுசெய்க ஒவ்வொரு டிஸ்க்கையும் எனேபிள்செய்க
FTPசேவையாளரிடமிருந்து ஒவ்வொரு பயனாளரும் பதிவிறக்குவதற்கான வேக அளவையும் பதிவிறக்கம்செய்வதற்கான அனுமதியையும் அமைத்து கட்டுபடுத்திட முடியும்
இவ்வாறு நம்முடைய சொந்த இணையச்சேவையாளரானFTP server @home ஐ நம்முடைய கணினியில் நிறுவி செயல்படுத்தி பயன்படுத்திகொள்க.

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-50 முதன்மை படவில்லைகளில் பணிபுரிதல்

செயல்பலகத்தின்(Tasks Pane) முதன்மை பக்கங்களின் பகுதியில்(Master Pages section) முன் கூட்டியே கட்டமைக்கபட்ட 28 முதன்மை படவில்லைகள்  உள்ளன என முந்தைய தொடரிலேயே தெரிந்துகொண்டோம். . இந்த பகுதியானது Used in This Presentation, Recently Used,  Available for Use என்றவாறு (படம்-50-1)மூன்று துனைப்பகுதிகளை கொண்டது.
               படம்-50-1  
 இந்த துனைப்பகுதிகளின் பெயருக்குஅருகிலுள்ள + என்ற குறியை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் இதில் மறைந்துள்ள படவில்லைகளின் குறுஞ்சின்னங்களை(thumbnails) திரையில் தோன்றுமாறு செய்யலாம் அவ்வாறே துனைப்பகுதிகளின் பெயருக்குஅருகிலுள்ள என்ற குறியை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் திரையில் இருக்கும்  படவில்லைகளின் குறுஞ்சின்னங்களின் காட்சியை மறையச்செய்யலாம்.
    Available for Use என்ற பகுதியில் தயார் நிலையிலுள்ள முதன்மைபடவில்லையின் படிமஅச்சுகளில்(templates) தேவையானதை அதே பெயரில் நாம் பயன் படுத்தி கொள்ளலாம் அல்லது நாமே நம்முடைய சொந்த முதன்மைபடவில்லையின்(slide master)  படிமஅச்சை உருவாக்கி இந்த பட்டியலில் சேர்த்துகொள்ளலாம்.
புதிய முதன்மைபடவில்லையை (slide master )உருவாக்குதல்
  முதன்மைபடவில்லையை மாறுதல் செய்வதன்மூலம் நம்முடைய புதிய படவில்லையை உருவாக்கலாம் அதற்காக மேலே கட்டளை பட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து View => Master => Slide Master=> என்றவாறு(படம்-50-2) கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Master View என்ற கருவிபட்டியில் New Master என்ற(படம்-50-2) குறும்படத்தை (icon)தெரிவுசெய்து சொடுக்குக உடன் இரண்டாவது முதன்மைபடவில்லை திரையில் தோன்றிடும் அதில் நம்முடைய விருப்பத்திற்கேற்ப மாறுதல்களை செய்துகொண்டு இதற்கு வேறொரு பெயரை சூட்டிடுக அதற்காக சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக உடன்விரியும் மேல்மீட்பு பட்டியில் Rename master என்ற கட்டளையை தெரிவுசெய்து இந்த படவில்லைக்கு வேறொரு பெயரை தட்டச்சு செய்திடுக. பின்னர் வழக்கமான படவில்லை பதிப்பித்தல் நிலைக்கு(edit mode) மாறிவிடுக.
  படம்-50-2
 முதன்மைபடவில்லைகளில் பாவணையை (master slides styles)உருவாக்குதல்
செயல்பலகத்தின்(Tasks Pane) முதன்மை பக்கங்களின் பகுதி(Master Pages section)யானது திரையில் தோன்றுகின்றதாவென உறுதி செய்துகொள்க.அதில் Available for Use என்ற துனைப்பகுதியின் பட்டியலில் ஒன்றை தெரிவுசெய்து  சொடுக்கியவுடன் அதனுடைய பாவணை (style)யானது நாம் புதியதாக உருவாக்கிய அனைத்து படவில்லைகளுக்கும் செயற்படுத்தபடும் .அவ்வாறு வேண்டாம் ஒவ்வொரு படவில்லைக்கும் தனித்தனி பாவணையாக இருந்தால் நில்லது எனஎண்ணிடும் நிலையில்  படவில்லை பலகத்தில் (Slide Pane) நாம் விரும்பும் படவில்லையை ஒவ்வொன்றாக தெரிவு செய்து கொள்க  பிறகு செயல்பலகத்தின்(Tasks Pane) முதன்மை பலகத்தின்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக பின்னர் விரியும் மேல்மீட்பு பட்டியில் Apply to Selected Slides என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.
கூடுதல் முதன்மைபடவில்லையை மேலேற்றுதல்
 படவில்லை தொகுதியில் ஒவ்வொன்றிற்கும் வித்தியாசமான வெவ்வேறு படிமஅச்சின் வடிவமைப்பை கொண்டுவருவதற்கு மேலே கட்டளை பட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து Format => Slide design=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது தேவையான படவில்லையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக  உடன் தோன்றிடும் slide design என்ற(படம்-50-3) உரையாடல் பெட்டியில் Load என்ற பொத்தானை சொடுக்குகபின்னர் விரியும் Load slide design என்ற (படம்-50-3)உரையாடல் பெட்டியில் தேவையான படிமஅச்சை தெரிவுசெய்துகொண்டு OK என்ற பொத்தானையும் ,slide design என்ற உரையாடல்பெட்டியில் OK என்ற பொத்தானையும் சொடுக்குக
       படம்-50-3
 முதன்மைபடவில்லையை மாறுதல்செய்தல்
1.மேலே கட்டளை பட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து View => Master=> Slide Master=> என்றவாறுவாறு கட்டளைகளை செயற்படுத்துக இவ்வாறான செயல் முதன்மை படவில்லை யின் பண்பியல்புகளை பதிப்பிக்க(edit) அனுமதிக்கும்
2.பிறகு செயல்பலகத்தின்(Tasks Pane) முதன்மை பக்கங்கள்(Master Pages section) என்பதை தெரிவுசெய்து சொடுக்குக .இவ்வாறான செயல் முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட முதன்மை படவில்லையை பதிப்பிக்க(edit) அனுமதிக்கும்
3.தயாராக இருக்கும் முதன்மைபடவில்லைகளின் பட்டியலில்  மாறுதல் செய்யவிரும்பும் முதன்மைபடவில்லையை தெரிவுசெய்து சொடுக்குக.
4.அதில் தேவையான மாறுதல்களை தெரிவுசெய்துகொண்டு Master View என்ற கருவிபட்டியில் Close Master View என்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக
5. மேலும் அடுத்த படிமுறைக்கு செல்வதற்குமுன்பு இந்த கோப்பிற்கு ஒரு பெயரிட்டு சேமித்துகொள்க
  படவில்லையில் இயல்புநிலையில் உள்ளதை நாம் பின்னர் இயல்புநிலை காட்சித்திரையில் செய்யும் மாறுதல்களை ஏற்றுகொள்வதற்கு  மேலே கட்டளை பட்டியிலுள்ள கட்டளைகளி லிருந்து Format => Default Formatting=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
 அனைத்து படவில்லைகளின் தலைப்பிலும் முடிவிலும்(header & footer)  உரையை சேர்த்தல்
  ஒருபடவில்லையில் உரையை சேர்ப்பதற்கு  மேலே கட்டளை பட்டியிலுள்ள கட்டளைகளி லிருந்து View => Master => Slide Master=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் திரையின் வரையும் கருவிபெட்டி (Drawing  toolbar) யிலிருந்து  Textஎன்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கி தேவையான உரைபெட்டியை வரைந்து கொள்க 
   பின்னர் அவ்வுரைபெட்டியில் உரையை தட்டச்சு செய்துகொண்டுமேலே கட்டளை பட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து  View => Normal=>ன்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  இதில் மேலும் புலங்களை சேர்ப்பதற்கு மேலே கட்டளை பட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து Insert => Fields=> என்றவாறும் அப்புலங்களை திருத்துவதற்கு Edit => Fields=>என்றவாறும்  கட்டளைகளை செயற்படுத்துக
படவில்லைகளின் உட்பகுதியில் உரையை சேர்த்தல்
இதற்காக உரைபெட்டி(Text box) பயன்படுகின்றது இந்த உரைபெட்டியை இரண்டுவழிகளில் உருவாக்க முடியும்
1.   செயல்பலகத்தின் (Tasks pane)இடஅமைவுபகுதியில் (Layouts section)முன்கூட்டியே திட்டமிடபட்டஇடஅமைவை(predefined layout) தெரிவுசெய்துகொள்க இதனால் உருவாகும் உரைபெட்டியானது தானியங்கி இடஅமைவுஉரைபெட்டி(Auto Layout text boxes) என்பர் இவ்வாறான படவில்லையின் சாதாரண காட்சிதிரையில்  Click to add text, Click to add an outline என்றவாறு சுட்டிகாட்டிடும் உரைபெட்டியை சொடுக்கி தேவையான உரையை தட்டச்சுசெய்து கொள்க
2.   சாதாரண காட்சிதிரையில்வரையும் கருவிபெட்டி (Drawing  toolbar)யிலிருந்து  Textஎன்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கி தேவையான உரைபெட்டியை வரைந்து உரையை தட்டச்சு செய்துகொள்க.
பொட்டும் எண்ணிடலும்(bullets and numbering)
    படவில்லை வாயிலாக நம்முடைய முக்கிய கருத்துகளையும் அதனுடைய சாராம்சங்களையும் பட்டியலாக இட்டு கூறுவதற்கு பொட்டும் எண்ணிடலும் (bullets and numbering) வழி மிக முக்கிய பங்காற்றுகின்றது. இதனை பின்வரும் இருவழிகளில் உருவாக்கிடமுடியும்.
 1.மேலே கூறிய முதல் வகையில் உரைப்பெட்டியில் உரையை ஒருவரியில் தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக
  2.இரண்டாவது வகையில் மேலேகட்டளைபெட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து  View => Toolbar => Formatting=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
  பின்னர் உரைவடிவமைப்பு கருவிபெட்டியி(text formatting toolbar) லிருந்துBullets On/Off என்ற பொத்தானை சொடுக்கி உரைபெட்டியில் உரையை ஒருவரியில் தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக மேலும் தேவையான முக்கிய கருத்துகளை இதேபோன்று பட்டியலாக தட்ச்சு செய்துகொள்க
 அதன்பின்னர் இவ்வாறு தயார்செய்த பட்டியல் முழுவதையும் தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளைபட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து  Format => Bullets and Numbering=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது மேலே கருவிபட்டியிலுள்ள Bullets and Numberingஎன்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக.
   படம்-50-4
 உடன் தோன்றிடும்Bullets and Numbering என்ற(படம்-50-4) உரையாடல்பெட்டியில் Bullets என்ற தாவியின் திரையில் தேவையான பொட்டுவகையை தெரிவுசெய்து கொள்க
 Numbering typeஎன்ற தாவியின் திரையில் தேவையான எண்களின் வகையை தெரிவு செய்து கொள்க.
 Graphicsஎன்ற தாவியின் திரையில் தேவையான வரைபடங்களின் வகையை தெரிவு செய்து கொள்க.
 Customizeஎன்ற தாவியின் திரையில் நாம்விரும்பும் புதிய வகையை தெரிவுசெய்துகொள்க.
    தானியங்கி இடஅமைவுஉரைபெட்டி(Auto Layout text boxes) வழியில் பட்டியலை உருவாக்கி யிருந்தால் முதலில்Outline styles என்ற மாற்றுவழியில் மாற்றியமைத்துகொண்டு அதன்பின்னர்  பட்டியலுக்கு பொட்டும் எண்ணிடலும் உருவாக்குக
அட்டவணையை உருவாக்குதல்
  நம்முடைய கருத்துகளை ஆதாரபூர்வமாக விளக்கமளிப்பதற்காக ஆங்காங்கே அட்டவணை யுடன் தகவல்களை அளிப்பது நல்லது  அவ்வட்டவணையை பின்வரும் வழிகளில் உருவாக்கிட முடியும்
1.மேலே கட்டளைபட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து  Insert  =>Table =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவது  அல்லது
2.மேலே கருவிபட்டியில் (toolbar)அட்டவணை (Table)என்ற பொத்தானை சொடுக்குவது அல்லது
3.அட்டவணையின் கருவிபட்டியி (table toolbar)லிருந்து Table Designஎன்ற பொத்தானை சொடுக்குவது அல்லது
4.செயல்பலகத்தில் (Tasks pane)அட்டவணைவடிவமைப்பு பகுதியில்(Table Design section) தேவையான வாய்ப்பை தெரிவுசெய்வது
  படம்-50-5
 உடன் Insert Tableஎன்ற (படம்-50-5)உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதிலுள்ள Number of columns என்பதில்  எத்தனை நெடுவரிசைஎன்றும் number of rows என்பதில் எத்தனை கிடைவரிசையென்றும் குறிப்பிட்டு okஎன்ற பொத்தானை சொடுக்குக.
 மேலே கட்டளை பட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து Insert Chart, அல்லது Insert => Spreadsheet=> என்றவாறுகட்டளைகளை செயற்படுத்துவதன்வாயிலாக ஒரு படவில்லையில் படங்களையும் விரிதாளையும்  உள்ளிணைத்து கொள்ளமுடியும்
படவில்லை காட்சியை அமைத்தல்
இவ்வாறு உருவாக்கபட்ட படவில்லைகளைகொண்டு படவில்லைகாட்சியை அமைத்திட வேண்டும் அதற்காக மேலேகட்டளைபட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து View => Slide Sorter=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.உடன் தோன்றிடும் திரையில்Slide Sorter என்ற தாவியின் திரையை   தோன்றசெய்க அதில் நாம்உருவாக்கிய அனைத்து படவில்லைகளும் குறுஞ்சின்னங்களின் பட்டியலாக காட்சியளித்திடும் இதில் இயல்புநிலையில் On mouse clickஎன்றவாறு ஒவ்வொரு படவில்லையும் சுட்டியை சொடுக்கினால் மட்டுமே அடுத்த படவில்லை காட்சித்திரையில் மாறிடுமாறு அமைக்கபட்டிருக்கும் தானாகவே மாறிட Automatically after என்பதை சொடுக்கியவுடன் தோன்றிடும் திரையில் தேவையான கால அவகாசஅளவை அமைத்து Apply to all slidesஎன்ற பொத்தானை சொடுக்குக
படவில்லை காட்சியை திரையில் தோன்றசெய்தல்
மேலேகூறியவாறு படவில்லைகளை உருவாக்கி காட்சியாக அமைத்தபின் அதனை திரையில் காட்சியாக காண பின்வரும் மூன்று வழிகளில் ஒன்றை பின்பற்றிடுக.
 1.மேலே கட்டளைபட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து Slide Show => Slide Show =>ன்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது
 2.மேலே கட்டளைபட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து view=>tools=>presentation=>ன்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி Presentationஎன்ற கருவிபட்டியை  திரையில் தோன்றிடச்செய்து அதில்Slide Showஎன்ற பொத்தானை  சொடுக்குக அல்லது
 3.விசைப்பலகையிலுள்ள F5 அல்லது F9ஆகிய ஏதேனுமொரு செயலிவிசையை  தெரிவுசெய்து சொடுக்குக

 உடன் படவில்லை காட்சி நாம் அமைத்திட்டவாறு திரையில் தோன்றும் இந்த படவில்லை காட்சி முடிவுற்றதும் விசைப்பலகையிலிருந்து Esc என்றவிசையை அழுத்தி வழக்கமான இம்ப்பிரஸ் திரைக்கு திரும்பிவிடுக

கூகிளின் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பு செய்யும் வசதி

தற்போது தமிழ் மொழி மட்டுமே தெரிந்துள்ள ஒருவர் உலகில் உள்ள எந்தவொரு  மொழியிலும் கடிதம் எழுதலாம். அவ்வாறே பிறமொழிகளில் உள்ள கடிதத்தை தமிழுக்கு மொழிமாற்றம் செய்து படிக்கலாம்.இவ்வாறான வசதியை தற்போது கூகுள் இணையதளம் வழங்குகின்றது .இந்த கூகுள் இணையதளம் வெறும் இணையதளங்களை தேடித்தரும் சேவையை மட்டும் செய்யாமல், உலகை மொழி பாகுபாடின்றி அனைவரையும் ஒன்றிணைக்கவும் முயற்சி செய்கின்றது.

மிகமுக்கியமாக Google Translate என்ற இணைய பக்கத்திலுள்ள From என்பதில் மொழிமாற்றம் செய்யவேண்டிய மொழியை குறிப்பிட்டு இதனுடைய உரைபெட்டியில் “கணினியில் குப்பையை உள்ளீடு செய்தால் வெளியீடும் குப்பையாகத்தான் இருக்கும் “என்றஉரையை தட்டச்சு செய்க

பின்னர் அதற்கருகிலுள்ள TO என்பதில் மாற்ற வேண்டிய மொழியை தேர்வு செய்தபின் மொழிபெயர்(Translate) என்ற பொத்தானை சொடுக்குக உடன் அருகிலுள்ள மற்றொரு உரைபெட்டியில் இதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பாக the system input and output of trash is kuppaiyakathan “ என்று வருகின்றது

இதனுடன் இரண்டு மொழிகளிலும் இந்த உரையை எவ்வாறு உச்சரிப்பது என்ற பேசும் ஒலியையும் ஒலிபெருக்கியை கணினியில் இணைத்திருந்தால் அதன்மூலம் கேட்கமுடிகின்றது தமிழ் வளர்ச்சிக்காக இவ்வாறான வசதியை கூகிள் நிறுவனம் நமக்கு வழங்குகின்றது என்ற செய்தி மிக வியப்பாக உள்ளது  தற்போது இந்த வசதி ஆல்பா நிலையிலுள்ளது இதற்கான இணைய முகவரி http://translate.google.com/#ta/en /ஆகும்

கணி்னிமூலம் ஆண்கள் பேசும் குரலை பெண்கள் பேசுவது போல் மாற்றிட

இயல்பாக ஆண்கள் பேசும் குரலும் பெண்கள் பேசும் குரலும் தனித்தனியாக அதன்தொனியை வைத்தே நம்மால் கண்டுபிடித்தமுடியும். ஆனால் கைபேசிகளில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே பெண்கள் பேசுவது போன்று கேட்பதற்காக உருமாற்றம் செய்வதற்கு ஏற்கனவே  பல மென்பொருட்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால் கணிணியில் ஒரு ஆண் பேசும் குரலை  ஒரு பெண் பேசும் குரல் போன்றும், அவ்வாறே ஒரு பெண் பேசும்  குரலை  ஆண் பேசும் குரல் போன்றும் கேட்பதற்காக உருமாற்றம் செய்ய ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது.இதனை www.siruppiddy.net என்ற இணையதளத்திலிருந்து  தரவிறக்கம் செய்து நம்முடைய கணணியில் நிறுவிகொண்டு. இம்மென்பொருளை இயக்கி யாருடைய குரலில் கேட்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து நாம் பேசினால் போதும்.

உதாரணமாக ஒரு ஆண் பேசும் போது பெண் குரலை தேர்ந்தெடுத்து விட்டு பேச ஆரம்பித்தால் அது பெண் பேசுவது போல் இருக்கும். அவ்வாறே  ஒரு பெண் பேசும் போது ஆண் குரலை தேர்ந்தெடுத்து விட்டு பேச ஆரம்பித்தால் அது ஆண் பேசுவது போல் இருக்கும் இதில் Man, Tiny Folks, Woman என்ற மூன்று விதமான வாய்ப்பு பொத்தான்கள் உள்ளன Tiny Folks என்பது கேலிசித்திர கதாபாத்திரம் பேசுவது போன்றிருக்கும்.

பல சமயங்களில் இணையஅரட்டையில் நம்முடன் பேசுவது பெண் தான் என்று நினைத்திருப்போம். உண்மையிலே அவர் இது போன்று இருக்கும் மென்பொருளை பயன்படுத்தி தான் பேசிக் கொண்டிருப்பார். வேடிக்கைக்காக ஆண் குரலை பெண் குரலாகவும் பெண் குரலை ஆண் குரலாகவும்  மாற்ற விரும்பும் அனைவருக்கும் இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும்

 

ஆப்பிள் ஐபேட்களில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள்

உலகம் முழுக்கத் தமிழர்கள் பரவியிருந்தாலும் சில பயன்பாடுகளில் அல்லது செயல்களில் தமிழைப் பயன்படுத்த முடியாத நிலை இதுவரையில் இருந்துவருகின்றது . அதில் ஒன்று ஐபேட்.ஆகும் இதில் ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளைக்  பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது.
ஆயினும் தற்போது வெளியாகியுள்ள புதிய iOS 4.2.1 என்ற இயக்கமுறைமையின் மூலம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை ஆப்பிள் ஐபேடில் படிக்கவும் அதிலிருந்து  மின்னஞ்சல் அனுப்பவும் முடியும்.
தற்போதைய   இந்தியச் சந்தையின் மதிப்பை உணர்ந்த இந்த ஆப்பிள் நிறுவனம், அதை அங்கீகரிக்கும் வகையில் தனது ஐபேட்களில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளையும் இடம் பெற செய்துள்ளது .
.ஐபேடுகளில் தமிழ் சேவையைப் பெற வேண்டுமானால் புதிய iOS 4.2.1 என்ற இயக்கமுறைமைக்கு  நம்முடைய ஐபேடை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இதற்காக
.முதலில் சாதாரண முறையில் புதிய iOS 4.2.1 என்ற இயக்கமுறைமையை மேம்படுத்திட  முயலுக (முடியாவிட்டால் அடுத்த படிமுறைக்கு செல்க)
1. ஐடியூன், குயிக்டைம் என்பனபோன்ற ஆப்பிள் தொடர்பான அனைத்து பயன்பாட்டையும்  ஐபாடிலிருந்து நீக்கம் செய்திடுக.
2.பின்னர் மீண்டும் ஐடியூன்களின் புதிய பதிப்பை நிறுவுகை  செய்க.
3.அடுத்து ஃபயர்வால் நிறுவியிருந்தால் அதனையும்  ஐபாடிலிருந்து நீக்குக.
4.இப்போது மீண்டும் புதிய iOS 4.2.1 என்ற இயக்கமுறைமையை  மேம்படுத்துக.
இந்த இரண்டாவது முயற்சியில் வெற்றி பெறவில்லை எனில்  உங்களது இயக்கமுறைமை  பழையதாக இருக்கலாம். எனவே முதலில் அதனை மேம்படுத்துவதற்காக  ஐடியூன் 10.1ஐ ஐபாடில் நிறுவுகை செய்ய  வேண்டும். அதற்காக
1.உங்களது ஐபேடை ஒரு கணினியுடன் பொருத்துக.
2.பின்னர் ஐடியூனை இயக்குக, அதன்பின்னர் சாதனங்கள் (device) என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
3.அதன் பின்னர் இயக்கமுறைமையின் மேம்படுத்துதல்(upgrade operating system) என்பதை தெரிவுசெய்து சொடுக்குக

4.பின்னர் தோன்றிடும் திரையில் கூறப்படும் வழிமுறையை பின்பற்றுக.
இவ்வாறு இந்த இயக்கமுறைமையை ஐபேடில்  மேம்படுத்தபட்டபின்னர்,நம்முடைய தாய் மொழியில்  இணையத்தில் உலாவி மின்னஞ்சலை கையாள முடியும்.

இந்த புதிய iOS 4.2.1 என்ற இயக்கமுறைமையில்  புதிய அகராதி, விசைப்பலகை என்பனபேன்ற பல்வேறு வசதிகள் உள்ளன.  மேலும் இதில் தமிழ்,உள்ளிட்ட பெரும்பாலான இந்திய மொழிகளை நாம் பயன்படுத்த முடியும்.

வொண்டர்சேர்லிவ்பூட்2012(Wondershare LiveBoot 2012) என்ற தரவு மீட்பு மென்பொருள்

ஒருசிலநேரங்களில் கணினியானது எந்த விசையை அழுத்தினாலும் சொடுக்கினாலும் செயல்படாமல் தொக்கலாகநின்றுபோதல் ,நச்சுநிரலால்  பாதித்தல் ,தரவுகள் அழிந்தபோதல் என்பனபோன்ற பல்வேறு பாதிப்புகளினால்  என்ன செய்வதுஎன்ற கையறுநிலையில் நாம் தவிக்கும்போது   Wondershare LiveBoot 2012, என்ற கருவி நமக்கு உதவிக்கு வருகின்றது  இதன்பயன்பின்வருமாறு

1.இதன்மூலம் விண்டோவை எளிதாக நிறுவுகை செய்யலாம்

2.விண்டோவின் பயனாளர் ,நிருவாகி ஆகியோரின் நுழைவுச்சொல் மறந்துபோயிருந்தாளும் எளிதாக மறுஅமைப்பு செய்து கணினிக்குள் உள்நுழைவுசெய்யலாம்

2.இது சமீபத்திய WinPE என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் அனைத்து வன்பொருளுடனும் ஒத்திசைவு செய்கின்றது

3.இது கணினியின் தொடக்க இயக்கம் ,தொங்கலாக நிற்கும்  bluescreen ,blackscreen ஆகிய பிரச்சினைகளுக்கு  எளிதாக தீர்வாக அமைகின்றது

4.கணினியானது மிககடுமையாக பாதிக்கப்பட்டு photo, music, document, போன்ற கோப்புகளை வெளிப்புற தேக்கும் சாதனங்களுக்கு மாற்றம் செய்கின்றது

5.98/ME/2K/HOME/2003/XP/NT/Vista and Windows 7  ஆகிய விண்டோவின் கோப்புகளையும் வடிவமைக்கபட்டபோது இழந்தபோன கோப்புகளையும்  மீட்டெடுக்கின்றது

6.விண்டோவை மறுநிறுவுகை செய்வதற்கான புதியதொடக்க இயக்கத்தை வழங்குகின்றது

7.பழைய வன்தட்டை சுத்தபடுத்தி அதன்இயக்கத்தை வேகமாக ஆக்குகின்றது

8.நம்முடைய கணினியை மற்றவர்களுக்கு நன்கொடையாக வழங்கும்போது நம்முடைய தரவுகளையும் கோப்புகளையும் தரவுமீ்ட்டெடுக்கும் மென்பொருளால் மீட்டெடுப்பதை தவிர்க்கின்றது

9.boot sector virus போன்றவைகளால் பாதிக்கபட்ட கணியை எளிதாக சரிசெய்கின்றது

10.கோப்பு மடிப்பகம் பாகப்பிரிவினை வன்தட்டு ஆகியவற்றை எந்த நிலையிலும் எந்த நேர்ததிலும் பின்காப்பும் ,மறுதொடக்கமும் செய்யலாம்

11.USB, internal hard drive, CD, DVD, ZIP, FireWire, போன்ற பல்வேறு சாதனங்களிலும் கோபு்புகளை பின்காப்பு செய்யலாம்.

12. கணி்னியிலுள்ள ஏராளமான தரவுகளை ஒருசில நிமிடங்களிலேயேபின்காப்பு செய்யலாம்.

13.உருவாக்குதல் நீக்கம் செய்தல் மறுஅளவாக்குதல் உடைத்துபிரித்தல்.மாற்றியமைத்தல் வடிவமைத்தல் மறையச்செய்தல் என்பனபோன்ற பல்வேறு பாகப்பிரிவினை செயலை நிருவகிக்கலாம்

14.இழந்தபோன கணினியின் முதன்மைதொடக்க ஆவணத்தை மீட்டெடுத்தல் ,பாகப்பிரிவிணை அட்டவணையை மறுகட்டுமானம் செய்தல் இழந்த நிணைவகபகுதியை வருடி மீட்டெடுத்தல்  செய்யலாம்

15.வன்தட்டு முழுவதும் சுத்தபடுத்துதல் ஒருசொடுக்கில் நகலெடுத்தல் ஆகிய பணிகளை செய்கின்றது

16.உள் வெளிவன்தட்டுகளில்  பாகப்பிரிவினை  நகலெடுத்தல் ஆகியவற்றை மஇகஎளிதாக செயல்படுத்தலாம்

17.வன்தட்டின் நகல் இயக்ககத்தை தொடக்க இயக்கத்திற்கு (bootable) பயன்படுத்தி கொள்ளலாம்

18 இது விண்டோவின் அனைத்து பதிப்புகள்  IDE, SATA, SCSI, USB, FireWire, ஆகியவற்றில் செயல்படுகின்றது

இதன் தற்போதை விலை $59.95 ஆகும் ஆயினும் இந்த Wondershare என்பதை பின்வரும் இணைய முகவரியிள் குறிப்பிட்ட நாள்வரை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும்http://www.wondershare.com/boot-cd/

இப்போது கிடைக்கின்றதுC++0x என்ற புதிய நிரல்தொடர்எழுதும் மொழி

இது சி++ என்ற  மொழியின் அடுத்த படிமுறையாக வெளியிடப்படுகின்றது  தற்போது இதனுடைய இறுதிபெயர் சி++11 ஆக இருக்குமென தெரியவருகின்றது இதன் பயன்பின்வருமாறு 1.நிரல்தொடரின் ஆரம்பநிலையிலேயே ஒருமாறியின் வகையெதுவென மொழிமாற்றி நிர்ணயம்செய்துவிடுகின்றது உதாரணமாக

int x = 3;

auto y = x;

என்ற C++0x  மொழியின் குறிமுறையில்   autoஎன்ற திறவுச்சொல்லின் உதவியுடன்   y என்பது  intஎன தீர்மானித்துவிடுகின்றது

2.

vector<int> vec;

vec.push_back( 10 );

vec.push_back( 20 );

for (int &i : vec )

{

cout << i;

}

என்ற C++0x  மொழியின் குறிமுறையில் வீச்சை அடிப்படையாக கொண்ட for எனும் மடக்கியை (range-based for loops )இந்த C++0x  மொழி எளிதாக கையாளுகின்றது

3. nullptr  போன்ற மொழிவெளிப்பாடு(language expressiveness)மேம்படுத்தபட்டுள்ளது

3.இதில் புதிய செயலியின் இலக்கணம்(function syntax) பயன்படுத்தபட்டுள்ளது

4.இதில் Lambda என்ற செயலி் (function)பயன்படுத்தபட்டுள்ளது

5.பல்லிழையை(multithreading) ஆதரிக்கும் புதிய சி++நினைவக மாதிரி இதில் உள்ளது

6.இதில் .hashtables என்பன போன்ற செந்தர நூலகம் (standard library)மேம்படுத்தபட்டுள்ளது

7. Apache போன்ற பல்வேறு மொழிமாற்றிகளும்(cxompiler) இந்த மொழியை ஆதரி்க்கின்றது

மேலும் இதனைபற்றிய விவரம் அறிந்துகொள்ள http://en.wikipedia.org/wiki/C%2B%2B0x என்றஇணையதளத்திற்கு செல்க.

செர்ச்கோ (Searchko) எனும் தேடுதல் கருவியின் அரசன்

ஆங்கில இணைய தளங்களுக்கு இணையாக, தமிழிலும் தேடுதலுக்கு உதவிடும் வகையில் தேடுதல் கருவியின் அரசன் என்ற பொருள்படும் செர்ச்கோ (Searchko) என்ற பெயரில் புதிய இணையதளம் ஒன்றினை  அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகம்  உருவாக்கி  மக்களின் பயன்பாட்டிற்கு விட்டுள்ளது.  இதன் இணையதள முகவரி www.searchko.in ஆகும்.
பொதுவாக நாம் இதுவரையில் ஆங்கில மொழியில் உள்ள தேடுதல் இணைய தளங்களையே  பயன்படுத்தி வருகிறோம். ஆயினும் கூகுள் போன்ற ஒருசில இணையதளங்கள் தமிழ் உட்பட மற்ற இதரமொழிகளிலும் தேடிப் பெறும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து  தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்காக தமிழிலேயே தேடுவதற்கான சர்ச்கோ (Searchko) என்ற இந்த தேடல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் தேடுதல் செய்யவிரும்பும் ஒருவர் விசைப்பலகையில்  எந்தெந்தவிசைக்கு எந்தெந்த தமிழ் எழுத்துகள் உள்ளன என்று தெரியாத நிலையிலும் இவ்விசைப்பலகையிலுள்ள ஆங்கில எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி, ஒலியியல் அமைப்பில் தேவையான் விசைகளை  அழுத்தி அதற்கீடனா தமிழ் சொற்களை உருவாக்கித் தேடலாம். அல்லது இதில் தரப்பட்டுள்ள விசைப்பலகையை சொடுக்கி அதன் மூலம் தமிழ்சொற்களை தட்டச்சு செய்தும் தேடலாம். (ஆனால் இந்த விசைப்பலகையானது வழக்கமானதாக இல்லாமல் சற்று மாற்றி உள்ளது. பழகிவிட்டால் சரியாகிவிடும்)
இதில் மருத்துவம், இலக்கியம் எனப் பல்வேறு பிரிவுகளில் தேவையானத்  தகவல்களைப் தேடிப்பெறலாம். மேலும் இதில் தினமலர் தினத்தந்தி தினமனி ஆகிய  மூன்று தமிழ் தினசரி செய்தித் தாள்களின் செய்திகள் கிடைக்கின்றன.
அதுமட்டுமல்லாது இதில் இயற்கை மொழி ஆய்வில் பயன்படுத்தப்படும் பல்வேறு தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இணைய வெளியில் ஏறத்தாழ ஒரு கோடி தமிழ் ஆவணங்கள் உள்ளன. இவற்றை ஒருமுகப்படுத்தி, தேடலுக்கு உட்படுத்தி, தேடல் தேவைகளை நிறைவேற்றுவதே இந்த தளத்தின் நோக்கம் ஆக கூறப்படுகின்றது

ஆங்கிலம்–தமிழ் , தமிழ்–ஆங்கிலம் ஆகிய இரண்டுவகை அகராதிகள் தரப்பட்டுள்ளன. இந்த அகராதிகளில் ஏறத்தாழ 1.5 லட்சம் வேர்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி நாம் விரும்பும் சொற்களுக்கான சரியான பொருளை தேடிப் பெறமுடியும்.
இதிலுள்ள இலக்கியப் பிரிவில் தமிழ் இலக்கியங்கள் உள்ள இணைய தளங்களின் பட்டியலைப் பெற்று அவற்றைப் பயன்படுத்தலாம். இந்த தேடுதல் தளமானது தற்போது பீட்டா எனும் சோதனைப் பதிப்பு நிலையில் தான் உள்ளது.

இரண்டு இயக்கமுறைமைகளை ஒன்றன்மீது மற்றொன்றாக மெய்நிகர்சூழல் அடிப்படையில் இயக்கமுடியும்

கடந்த இரண்டுவிண்டோ இயக்கமுறைமைகள் மிக சிக்கலானதாகவும் அதிக திறனுள்ளதாகவும் இருக்கும்படி அமைத்து வெளியிடப்பட்டுள்ளன பயனாளர் புதிய மேம்படுத்தப்பட்ட பல பயன்பாடுகளை இவற்றில் இயக்குவதற்கு ஏதுவாக அனுமதிக்கும்படி இவை வடிவமைக்கப்பட்டுள்ளன ,

ஆயினும் என்னதான் பல்வேறு முற்போக்கு வசதிகளுடன் இவையிரண்டும் இருந்தாலும் முந்தைய பதிப்புகளில் உள்ள வசதி இதில் இல்லை அதனால் பழைய இயக்கமுறைமையையே தேவையான பயன்பாடுகளுக்காக இயக்கி உபயோகபடுத்திகொள்ளலாமே என்பதுதான் பலரின் விருப்பமாகும்

ஏனெனில் முந்தைய விண்டோ 98 தான் இதுவரையிலும் கோபால் மொழியில் உருவாக்கப்பட்ட பல பயன்பாடுகள் இயங்குவதை ஆதரிக்கின்றது,

சரிதான் அவர்களின் விருப்பத்தையும்  நிறைவேற்றி வைப்போமே என்பதற்காகவே புதிய இயக்கமுறைமையின் மீது பழைய இயக்கமுறைமையை மெய்நிகர் கணினியின் சூழலில் இயங்கும்படியான வசதி மைக்ரோ ஷாப்ட் வெர்ச்சுவல் பிஸி2007 இன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது

இது ஒவ்வொரு இயக்கமுறைமைக்குமென தனித்தனி இயக்ககம் இல்லாமலேயே  பழைய இயக்கமுறைமையை புதிய இயக்கமுறைமையின் மீது இயங்க செய்கின்றது

இதற்காக முதலில் நம்முடைய  கணினியில் இரண்டு இயக்கமுறைமைகள்  இயங்குவதற்கு தேவையான வன்பொருள்கள் உள்ளனவா என சரிபார்த்துகொள்க,

1,விண்டோ விஸ்டாவிற்கு RAM நினைவகம் 512MB :காலிநினைவகம் 15GB

2,விண்டோ எக்ஸ்பிக்கு RAM நினைவகம் 128MB :காலிநினைவகம் 2GB

3,விண்டோ 98க்கு RAM நினைவகம் 64MB :காலிநினைவகம் 500MB என்றவாறு இந்த இயக்கமுறைமைகள்  இயங்க தொடங்குவதற்கு தேவையான நினைவக கொள்ளளவாகும்,

இதனுடன் இந்த இயக்கமுறைமை தளத்தின் மீது நாம் இயக்கப்போகும் பயன்பாடுகளுக்கு தக்கவாறு தேவைப்படும் நினைவகத்தை ஒதுக்கீடுசெய்யப் பட்டுள்ளதா என்றும் உறுதிசெய்துகொள்க

மேலே பட்டியலில் இடப்பட்ட இயக்கமுறைமைகளுடன் இயக்கப்போகும் பயன்பாடுகளுக்குத் தேவையான குறைந்தபட்ச வன்பொருள்களின் அமைப்புகள் கணினியில் இருந்தால் மட்டுமே இந்த வெர்ச்சுவல் பிஸி2007 ஐ இயக்கமுடியும்

இவ்வாறான குறைந்தபட்ச அமைப்புகள் மற்றும் நினைவகம் இரண்டு இயக்கமுறைமைகள் ஆகியன இயங்குவதற்கு  போதுமானதாக கணினியில் காலி நினைவகம் உள்ளனவா என சரிபார்த்துகொள்க,    பின்னர் இந்த வெர்ச்சுவல் பிஸி2007 ஐ பின்வரும்  முகவரிதளத்திலிருந்து பதிவிறக்கம்செய்துகொள்க, www.microsoft.com/windows/downloads/virtualpc/default.mspx  http://www.microsoft.com/windows/downloads/virtualpc/default.mspx

அதன்பிறகு இதனுடைய அமைவு கோப்பினை திறந்து இயக்குக உடன் தோன்றும் திரையில்  கூறும் ஆலோசனைகளை /கட்டளைகளை பின்பற்றுக, தேவைப்படும் விவரங்களை அந்தந்த உரைபெட்டியில் உள்ளீடு செய்க,

இந்த மெய்நிகர கணினியை நிருவாகியின் கணக்கு மட்டும் அல்லது நிருவாகியால் அனுமதிக்கப்படும் பயனாளரால் மட்டுமே நிறுவமுடியும் பின்னர் next  என்ற பொத்தானை சொடுக்குக,

உடன் தோன்றும் நிறுவுகை வழிகாட்டி கூறும் ஆலோசனைகளை /கட்டளைகளை பின்பற்றி செய்ல்படுத்திகொண்டே வருக, இறுதியாக finishஎன்ற பொத்தானை சொடுக்கி வெர்ச்சுவல் பிஸி 2007 நிறுவிடும் பணியை முடிவுக்கு கொண்டுவருக,

பின்னர் Start =>program= => Microsoft virtual pc =>என்றவாறு தெரிவுசெய்து இதனை இயக்க ஆரம்பிக்கவும் முதன்முதலில் இதனை இயக்க ஆரம்பிப்பதாயின்  new virtual machine wizard என்றவாறு திரையில் தோன்றும் இதில் உள்ள முதல் வாய்ப்பபான  create a virtual machine என்பதை தெரிவுசெய்து nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

உடன் தோன்றும் திரையில் புதியமெய்நிகர்கணினியின் உரைபெட்டியில் இதற்கான பெயர் ஒன்றை vasanthanvpc என்றவாறு தட்டச்சுசெய்க,பின்னர் தேவைப்படும்போது இந்த பெயரை வைத்துதான் இதனை சுட்டிகாட்டி தேடிப்பிடிக்க இது உதவும் அதன்பின்னர் nextபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் தோன்றும் திரையில் மெய்நிகர் கணினியின்  RAM ற்கு தேவையான நினைவகத்தை ஒதுக்கீடு செய்வதற்காக தெரிவுசெய்க அல்லது இதில் உள்ள நகர்த்தியை இடம்சுட்டியல் பிடித்து தேவையான அளவிற்கு நகர்த்தி அமைத்திடுக, இந்த நினைவக அளவு மெய்நிகர் கணினியில் இயக்கப்போகும் இயக்கமுறைமைக்கு போதுமானதாக உள்ளதா வென சரிபார்த்துகொள்க, அல்லது அதற்கான பெட்டிகளில் தேவையான அளவை தட்டச்சு செய்து  next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

பின்னர் இந்த மெய்நிகர் இயந்திரத்தினுடைய வன்தட்டிற்கு ஒரு பொருத்தமான பெயரை vasanthanth disc என்றவாறு  எளிதில் ஞாபகத்தில் வைத்திருப்பதற்கு ஏதுவாக இருக்கும்படிசூட்டுக,

பின்னர்  A new virtual hard disc  என்பதை தெரிவுசெய்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,அதன் பின்னர் இந்த மெய்நிகர் வன்தட்டில் விண்டோ 98 இயக்கமுறைமையை நிறுவி இயக்க விரும்பினால் 10 முதல் 20 GBவரை காலிநினைவகம் போதுமானதாகும்  நாம் இந்த இயக்கமுறைமை தளத்தின் மீது இயக்கப்போகும் பயன்பாடுகளுக்கு தக்கவாறு இது மாறுபடும், உடன் மெய்நிகர் கணி்னியின் திரை ( Virtual pc console) கணினி திரையில் தோன்றும் அதில் மேலும் ஒன்றுக்குமேற்பட்ட மெய்நிகர் கணினி தேவையெனில் நிறுவுவதற்காக new என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

இதன் அமைப்பை மாற்றியமைக்க விருப்பினால் settings என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

இந்த மெய்நிகர் கணினி தேவையில்லை யெனில் Remove என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

இவ்வாறு நிறுவிய மெய்நிகர்கணினியை இயங்க தொடங்குவதற்காக startஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் நாம் நிறுவிய  இயக்கமுறைமையானது இயங்க துவங்கி இதன்   virtual pc console என்ற திரையை கணினிதிரைக்கு கொண்டுவரும் அதில் நாம் உருவாக்கிய கணினியில் உள்ள   start என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் நாம் நிறுவப்போகும் இயக்கமுறைமை உள்ள குறுவட்டை அதற்கான வாயிலில் செருகி வைத்திடுக, கைகளால் தொட்டுணரக்கூடிய கணினி போன்றே இந்த மெய்நிகர் கணினியும் இதனுடைய பயாஸுடன் தோன்றச் செய்யும் Del விசையை அழுத்தி இந்த பயாஸ் அமைவை திரையில் பிரிதிபலிக்கச்செய்க, அம்புக்குறியை பயன்படுத்தி Boot என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக தேவையெனில் மாறுதல்செய்து F10 என்ற செயலி விசையை அழுத்தி பயாஸில் செய்த மாறுதல்களை சேமித்து வெளியேறுக, மீண்டும் இதனை பயன்படுத்தி   CDROMவாய்ப்பை மேல்பகுதிக்கு கொண்டுவருக, உடன் மெய்நிகர் கணினி இயங்கதொடங்கி இயக்கமுறைமை அமைவு செய்வதற்காக CDROMஐ அனுகும்  அவ்வாறு அனுகவில்லை எனில்  E; என்ற அடைவில் இயக்கமுறைமையை  நிறுவிடும் குறுவட்டை  ‘CD=>use physical Drive E’ என்றவாறு தெரிவுசெய்து அனுகுக, பின்னர்  Action/Resetஎன்றவாறு தெரிவுசெய்க உடன் குறுவட்டு உள்ள அடைவிலிருந்து இதனை  படித்து இயக்க முறைமையை நிறுவ  ஆரம்பித்தவிடும் இதற்காக திரையில் தோன்றும் இயக்கமுறைமையை நிறுவுவதற்கான ஆலோசனைகளை /கட்டளைகளை பின்பற்றுக உடன் இப்போது மெய்நிகர் கண்னியில் நிறுவிய இயக்கமுறைமை ஆனது இயங்கதுவங்கி திரையில் பிரிதிபலிக்கும் இந்த மெய்நிகர் கணினியில் இயக்கமுறைமை இயங்குவதற்கான இடவசதி திரையில் போதுமானதாக இல்லையெனில் Action Full screen modeஎன்றவாறு தெரிவுசெய்க,

வழக்கமாக நம்முடைய பயன்பாடுகளில் அல்லது இயக்கமுறைமைகளில் பிரச்சினை எனில் உடன்   ctrl+ alt+ del ஆகிய மூன்று  விசைகளை சேர்த்து அழுத்தி இயக்கமுறைமையின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தம் செய்வோம்ஆனால் இந்த மெய்நிகர் கணினியில் இந்த கட்டளை செயல்படாது அதற்கு பதிலாக Action +ctrl +Alt+Delஎன்றவாறு தெரிவுசெய்து அழுத்தவேண்டும்

இந்நிலையில் இந்த மெய்நிகர் கணினிலிருந்து வழக்கமான கணினிக்கும் வழக்கமான கணினியிலிருந்து  மெய்நிகர் கணினிக்கும் எவ்வாறு மாறுவது என்ற பிரச்சினை எழும் இரு  பயன்பாடுகளுக்கிடையே மாறுவதற்காக இடம்சுட்டியால்  பிடித்து இழுத்து சென்று சொடுக்கி மாற்றிகொள்வதை போன்றே இந்த இரு கணினிகளுக்கிடையே மாறிக்கொள்ளலாம்,

எல்லாம்சரிதான்  இந்த மெய்நிகர் கணினி ஒரு பகுதி திரையாக தோன்றும் போது மட்டுமே இவ்வாறு செய்யமுடியும்   முழுத்திரையில் இருந்தால் எவ்வாறு மாறுவது  என்ற கேள்வி வரும் இந்நிலையில் வலதுபுற Alt+Enter என்றவாறு விசைகளை அல்லது  Alt+கீழ்நோக்கு அம்புக்குறி ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தினால் போதும் வழக்கமான மேஜைக்கணினியின் திரைக்கு மாறிவிடலாம்

அடுத்தாக இவ்விரு கணினிகளுக்கிடையில் எவ்வாறு தரவுகளை பரிமாற்றம் செய்துகொள்வது  என்ற சந்தேகம் எழும் வழக்கமாக நாம் பயன்படுத்தும்  copy,paste ஆகிய இரு கட்டளைகளே போதுமானதாகும்  தேவையான தரவுகளை முதலில் தெரிவுசெய்து copy என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்  தேவையான பகுதியில் இடம்சுட்டியைய வைத்து paste என்ற கட்டளையை சொடு்ககி  தரவுகளௌ பரிமாற்றம் செய்துகொள்ளலாம்  இரு  கணினிகளுக்கிடையே  தரவுகளை பரிமாற்றம் செய்து கொள்வதற்கு இந்த இரு கட்டளைகளும் பெரிதும் பயன்படுகின்றன,

Previous Older Entries