நச்சுநிரல் & உளவாளிகளை அடையாளம் காண்பதெவ்வாறு

எந்தவொரு கணினியிலும் நம்முடைய பார்வையில் காணுமாறும் காணமுடியாத அதன் பின்புலத்திலும் ஏராளமான பயன்பாடுகள் இயங்குகின்றன. அவைகளில் ஒருசில மறைத்து வைக்கப்பட்ட கோப்பாகவும் வேறுசில விண்டோ அமைவு கோப்பாகவும் இன்னும் சில நச்சுநிரல் & உளவாளி யாகவும் நம்முடைய கண்ணில் மண்ணைத்தூவி மறைந்தும் மறையாதவாறும் செயல்படுகின்றன

இவ்வாறு நம்முடைய கண்ணிற்குபுலப்பாடாது கணினியில்பின்புலத்தில் இயங்கிகொண்டிருக்கும் Exe. கோப்புகளை டாஸ்க் மேனேஜர் மூலம் திரையில்  பார்வையிடலாம். ஆயினும் இவைகளில் எவையெவை பாதுகாப்பானவை  பாதுகாப்பற்றவை எவையென அடையாளம் காணமுடியாதவாறு இவைகள் உள்ளன. இந்த நச்சுநிரல் & உளவாளி  கோப்புகள் தந்திரமாக நம்முடைய கணினிக்குள் வந்து மற்ற பயன்பாட்டின் இயக்க(Exe.) கோப்பிற்குள் அமர்ந்துகொண்டு பல்கிபெருகி நம்முடைய கணினியின் இயக்கத்தையே முடக்கம் செய்துவிடுகின்றன. இவ்வாறான நிலையில் இவைகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதுதான்  மிகசிக்கலான பணியாகும். இதற்காகவே http://www.exedb.com என்ற வலைதளத்தில் EXEDB என்ற கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது கணினியில் இயங்கி கொண்டிருக்கும் அனைத்து இயக்க EXE கோப்புகளையும் பட்டியலாக காண்பிப்பதுடன் அல்லாமல் இவைகள் பாதுகாப்பானவைகளா என சரிபார்த்து அடையாளம் காண்பிக்கின்றது மேலும் இது அனைத்து இயக்க EXE கோப்புகளை பற்றிய விவரங்களுடன் விண்டோவின் பின்புலத்தில் இயங்கு பவைகளையும் சேர்த்து அவைகளின் பாதுகாப்புதன்மையையும் அறிவிக்கின்றது.. அவ்விரங்களிலிருந்து தேவையற்றவைகளை நீக்கம் செய்து நம்முடைய கணினியை பாதுகாப்பானதாக ஆக்கிகொள்ளாம்

உங்களது கணினி திரையின் எழுத்துருவையும்,ஸ்க்ரீன் resolution ஐயும் அழகுபடுத்த ஒரு எளிய வழி

உங்களுடைய கணினியின் Desktop திரையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக. உடன் படத்திலுள்ளவாறு விரியும் குறுக்குவழி பட்டியிலுள்ள Properties என்பதனை தெரிவுசெய்து கிளிக்செய்க.

பிறகு,தோன்றும் Display properties என்ற உரையாடல் பெட்டியில் Appearance தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் Appearance தாவியின்  திரையில் Effects என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

24.2

பிறகு,தோன்றிடும் Effects என்ற உரையாடல் பெட்டியில் Use the following method to smooth edges of screen fonts என்ற வாய்ப்பிற்கு standard type லிருந்து Clear Type ஆகமாற்றி தெரிவு செய்துவிட்டு apply  ok என்ற பட்டனையும் பின்னர் Display properties என்ற உரையாடல் பெட்டியில் apply  ,ok  ஆகிய பொத்தான்களை சொடுக்குக  உங்களுடைய டெஸ்க்டாப்பின் திரையின் துல்லியத்தைresolution ஐ இப்போது பாருங்கள்.வித்தியாசம் கண்டிப்பாக தெரியும்.

24.3

எம்எஸ் ஆஃபிஸ் எக்செல்2010-ல் ஸ்பார்க்லைன் டேட்டா

எம்எஸ் ஆஃபிஸ் எக்செல்-2010-இன் தாளில் அட்டவணையாக இருக்கும் தரவுகளை வரைபடங்களாக உருவாக்கினால் நாம் கூறவரும் செய்தி பார்வையாளர்களை எளிதில் சென்ற டையும்.ஆனால் இந்த  தரவுகளை கொண்டு சிறந்த வரை படங்களை உருவாக்குவதுதான் மிகசிக்கலானதும் அதிக சிரமமான துமான  செயலாகும் . ஆனால் ஆஃபிஸ் -2010 இல் இந்த தரவுகளை கொண்டு சிறு(miniature)வரை படங்களை உருவாக்கு வதற்கான sparklines என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான வரைபடத்தை உருவாக்கிட விரும்பும் கிடைவரிசை தரவுகளை முதலில் தெரிவுசெய்துகொள்க. பின்னர் insertஎன்ற தாவியை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும்  insertஎன்ற தாவி பட்டியின் திரையில் sparklines என்ற குழுவின் கீழ் உள்ள வகைகளில் column என்றவாறு வகையை தெரிவுசெய்து சொடுக்குக.

24.4

உடன் create sparklines என்ற சிறுஉரையாடல் பெட்டியொன்று தோன்றும் அதில் data range என்பதில் ஏற்கனவேதெரிவுசெய்யபட்டுள்ள தரவுகள் உள்ள வீச்சு எல்லை பிரிதிபலிக்கும் மேலும் வேண்டுமெனில் வேறு புதியதாக தெரிவுசெய்துகொள்க.  location rangeஎன்பதில்  இந்த வரைபடம் எங்கு அமையவேண்டுமென குறிப்பிட்டு  ok என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் சிறுபொறி sparklines வரைபடம் நாம்தெரிவுசெய்த பகுதியில் தோன்றிடும்

24.5

இதனுடனேயே  வரைபடத்தை மேலும் வடிவமைப்பு செய்வதற்கு உதவிடும் பல்வேறு கருவிகளடங்கிய  Sparkline Tools Design என்ற தாவியின் பட்டி திரையில் தோன்றிடும் இதில் type என்ற குழுவின் கீழுள்ள  கருவிகள்  இந்த வரைபடத்தின் வகையை(Type) மாற்றி யமைத்து கெள்ளவும் style  என்ற கருவி வரைபடத்தின் பாணியை(Style)  மாற்றியமைத்திட உதவும் கருவியையும் கொண்டுள்ளன. இதிலுள்ள Edit data  என்ற கீழிறங்கு பட்டியலின் பொத்தானை சொடுக்குக.  உடன்  Edit sparklines  என்ற சிறு உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் data range என்பதில் தேவையெனில் தரவு இருக்கும் வேறு ஒரு இடத்தை  மாற்றி தெரிவுசெய்து கொள்க. அவ்வாறே வரைபடம் அமைந்திருக்கும் இடத்தையும் மாற்றியமைத்திட location  range என்பதில் தெரிவு செய்துகொண்டு ok என்ற பொத்தானை சொடுக்குக.

24.6

உடன் நாம் தெரிவுசெய்த வேறு இடத்திலுள்ள தரவுகளுக்கான புதிய வரைபடம் ஆனது  புதிய இடத்தில் உருவாகிவீற்றிருக்கும்.

பாட்நெட்ஸ் என்றால் என்ன

உங்கள் கணினியின் இணைய இணைப்பு ஆமை வேகத்தில் உள்ளதா?, தேடு பொறி விசித்திரமாக செயல்படுகிறதா?, சாதாரணமாக உங்கள் தேடுபொறியினுடைய முகப்புப் பக்கம் அடிக்கடி மாறுகிறதா? நிறைய புதிய விண்டோக்கள் தானாகவே திறக்கிறதா? உங்கள் கணினியின் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதா?  கணினியின் இயக்கம்  தானாகவே நின்று இயங்குகின்றதா?

இவ்வாறான அறிகுறி இருந்தால் பாட்நெட்ஸ் கண்டிப்பாக உங்கள் கணினியில் உட்கார்ந்துள்ளது என அறிந்து கொள்க. அடுத்த கட்ட தொழில்நுட்ப ஆபத்து நம் அருகில் தயாராக இருக்கிறது. என்றும் அறிந்து கொள்க.

பாட்நெட்ஸ் என்றால் என்ன ? என தெரிந்துகொள்வதற்கு முன்பு தேடல்தளம், பாட்ஸ், ரோபாட்ஸ் என்பன போன்ற ஒருசில அடிப்படை தகவல்களை தெரிந்துகொள்வோம்.

தேடல் தளம். கூகிள் தேடல் இயந்திரமும் ஒரு தேடல்தளம் ஆகும்.
தேடல்தளத்தில்  பொதுவான தேடல், துறை தேடல், தேடல்களுக் கெல்லாம் தேடல் என்று பல வகைகள் உள்ளன. இதைபற்றி பின்னர் பார்ப்போம்

இந்த தேடல்தளங்கள் நாம் தேடியவுடன் எப்படி தகவல்களை தேடித் தருகின்றன.அதுவும் வெவ்வேறு இணையதளங்களிலிருக்கும் தகவல் களையும்  இது எவ்வாறு உடனுக்குடன் திரட்டி தருகின்றன. என்பதுதான் மிக ஆச்சரியமான செய்தியாகும். இந்நிலையில்   அங்கே உதவுவதுதான் பாட்ஸ் என்பதாகும்.

பாட்ஸ் இது இன்று பரவலாக பயன்படுத்தப்படும் /இணையத்தின் மதிப்பு மிக்க சொத்து எனலாம். ஏனெனில் நமது வலைத்தளமோ அல்லது இணைய தளமோ தேடல் தளங்களில் தேடியவுடன் நாம் தேடுவதை நமக்கு வழங்குவதற்கு ஆவண செய்வது இந்த பாட்ஸ்தான்.
நமது தளத்தில் உள்ள தகவல்களை தேடல்தளங்களின் டேட்டா பேஸ்களுக்கு மிகச்சிதமாக கொண்டுபோய் சேர்ப்பதுதான் இதன் முக்கிய பணியாகும்.

இது நமது தளத்தில் உள்ள தகவல்களை தேடல் தளத்திற்கு இவ்வாறு கொண்டு போய் சேர்க்கின்றனவே அவ்வாறெனில் நமது தளம் பாதுகாப்பானதா என்ற கேள்வி உடனே இந்நிலையில் உங்களுக்கு கண்டிப்பாக எழும் இவ்விடத்தில் நமக்கு இந்த சந்தேகத்தை நிவர்த்திசெய்ய உதவுவதுதான் ரோபாட்ஸ் ஆகும்.

ரோபாட்ஸ் என்பது நமது தளத்தில் ரோபாடிக்ஸ் என்ற பெயரில் ஒரு ஆவணமாக இருக்கும்.  இதனுள் நமது தளத்தில் அந்த பாட்ஸ்கள் எங்கெல்லாம் சென்று தகவல்களை திரட்ட அனுமதிப்பது  என்ற அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த பாட்ஸ் ஆனது எந்த தளத்தில் தகவல்களை சேகரிக்க சென்றாலும் முதலில் இந்த ரோபாடிக்ஸ் ஆவணத்தை முதலில் படிக்கும். பின்னர் அதனுள் எங்கெல்லாம் தகவல்களை திரட்டலாம் என்ற நம்முடைய  அனுமதி  செய்தியை படித்தரிந்து அவ்வாறு அனுமதித்த இடத்தில் மட்டும் இந்த பாட் ஆனது தகவல்களை திரட்ட ஆரம்பிக்கும்.
பாட்நெட்ஸ் என்பது ஒரு கூட்டுக்களவாணிகளின் மோசடி துறையாகும் அதாவது இணையத்தில் மோசடி வேலைகள் பலவற்றைச் செய்வதற்கென்றே சைபர் கிரிமினல் கும்பல் ஒன்று தங்கள் வசம் வைத்திருக்கும் கணினிகளின் தொகுதியே பாட்நெட்ஸ் என்பதாகும். இதன் வழியாக நம்மை அறியாமலேயே நமது கணினிகளை இந்த பாட்நெட்ஸ் களவாணிகள் அவர்கள் வேலைக்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.

இதனை சாத்தியமாக்க  பயன்படுத்துவதுதான்  பாட்ஸ் ஆகும்..பொதுவாக இவ்வாறன  ஹேக்கர்கள் அவர்களுக்கென ஒரு தனி பாட்ஸ் மென்பொருட்களை உருவாக்கி பயன்படுத்திவருகிறார்கள். இந்த பாட்ஸ் என்பது நமது தளத்தில் உள்ள தகவல்களை திரட்டும் ஒரு அமைப்பாகும். ஆனால் இந்த பாட்ஸ் ஆனது ரோபாட்டிக்ஸ் ஃபைல்களில் அனுமதிக்க பட்டதை தாண்டியும் சைபர் கிரிமினல்கள் கட்டளையிட்டவாறு தேடும். அவ்வாறு தேடி அவர்கள் பயன்படுத்துவதற்காகவென்று  நம்மையறி யாமலேயே நமது தகவல்கள் அவர்களுக்கு அனுப்பிவிடும். அதேபோல் நாம்  ஒரு தேடு பொறியை பயன்படுத்தி தேடிடும்போது இந்த பாட்ஸ் ஆனது உங்கள் கணினிகளில் நீங்கள் அறியாமலேயே நிறுவப்பட்டுவிடும்.

பின் இந்த பாட்கள் வழியாக உங்கள் கணினியை அந்த கிரிமினல் கும்பல் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து விடும். அதாவது சி&சி சேவையாளர் என்று அழைக்கப்படும் கமாண்ட் அண்ட் கன்ட்ரோல் செர்வர் மூலம் உங்களுடைய கணினியை  இந்த திருட்டு களவாணி கும்பல் கட்டுப்படுத்தத் துவங்கும்.

இதனால் அடையாள திருட்டு, போலி வணிக மின்னஞ்சல்கள், மாபெரும் மோசடி சமாச்சாரங்கள், இன்னபிறவற்றை உங்கள் கணினி மூலம் நடத்தி தங்கள் பைகளை பெருமளவு பணத்தால் நிரப்பி கொள்ளும் இந்த கும்பல் தற்போது அனைத்து விதமான தொழில்நுட்ப வசதிகளையும் பெற்றிருக்கிறது. சமீபத்தில் பூமியை பற்றிய அறியும் சோதனை நடைபெறும் குழும நெட்வொர்க்கில் உள்ள இணைய வழங்கியை ஹேக் செய்திருக்கிறார்கள்.

சென்ற வருடம் மத்தியில் கான்பிலிக்கர் என்ற வைரஸ் பெரிய அளவில் தாக்கக்கூடும் என்று கணினி வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்..ஆனால் உண்மையில் அந்த கான்பிலிக்கர் வைரசில்  கிட்டத்தட்ட 10,000,000+ (இதன் பின் தொடர்ச்சியாக ஒன்பது பூச்சியங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.) பாட்ஸ்களை அவர்களால் உருவாக்கப் பட்டிருக்கின்றன இதன் வழியாக ஒரு நாளைக்கு 10பில்லியன் கணினிகள் மீது தாக்குதல்களை  நடத்தலாம். இதன் தொடர்ச்சியாக தாக்குதல் களுக்கு ஆளான வலுவான கணினிகளும் மெதுவாக இயங்கும். வலுவிழந்த கணினிகளின்  நிலைமை அதோகதிதான்.

பெரும்பாலும் தேடுபொறி மூலமாகவே இந்த பாட்நெட்ஸ் ஒரு கணினிகளுக்குள் ஊடுருவுகிறது. இதுமட்டுமே கணினியில் வைரஸ் உள்ளிட்ட பிற கிரிமினல் நடவடிக்கை சக்திகள் ஊடுருவ 60 சதவீத வழியாக உள்ளது. மின்னஞ்சலினுடைய இணைப்பின் மூலம் 13 சதவீதமும், இயக்கமுறைமை மூலம் 11 சதவீதமும், பதிவிறக்கம்   செய்யப் பட்ட இணைய கோப்புகளின் மூலம் 9 சதவீதமும் பாட்னெட்ஸ்  கணினிகளுக்குள் ஊடுருவுவதாக தகவலொன்று கூறுகின்றது.

எனவே இதை தடுக்கும் விதமாக முதலில் உங்களது கணினிகளில் முறையாக அனுமதி பெற்ற இயக்கமுறைமையை  மட்டுமே பயன்படுத்துங்கள்.
பிறகு ஆண்டிவைரஸ் மற்றும் பயர்வால் போன்ற மென்பொருட்களை அவ்வப்போது நிறுவுதல் செய்து செயற்படுத்திகொள்ளுங்கள்.

குறிப்பிட்டநேரம்கழித்து தானாகவே கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்தல்

இணையத்திலிருந்து ஏதேனும் பதிவிறக்கம் செய்தல் அல்லது வேறு ஏதேனும் பணியை கணினியானது பின்புலத்தில் செய்து கொண்டிருக்கும் போது கணினியின் முன்வெட்டியாக நம்மால் அமர்ந்திருக்கமுடியாது சரி வேறு ஏதேனும் வேலையை பார்ப்போம் என வேறு இடத்திற்கு சென்றால் அங்கு நமக்கு இருக்கும் பணிச் சுமையினால் கணினி செயலில் இருப்பதே மறந்துவிடும் ஆனால் கணினியானது தமக்கிட்ட பணியை முடித்துவிட்டு வெட்டியாக இயங்கிகொண்டிருக்கும்.இவ்வாறான நிலையில் குறிப்பிட்ட பணினி முடிந்தவுடன் அல்லது குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகுகணினியானது  தனினுடைய இயக்கத்தை தானாகவே நிறுத்திகொள்ளுமாறு செய்தால் நன்றாக இருக்கும் என எண்ணிடுவோம்.ஆயினும் இதற்கென தனியான மென்பொருளோ பயன்பாடோ தேவையில்லை

1.முதலில் எவ்வளவு நேரம் கழித்து கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்யப்படவேண்டும் என முடிவுசெய்துஅதனை நொடியாக மாற்றிகொள்க உதாரணமாக 2 மணிநேரம் எனில்  2 X 60 X 60 = 7200 நொடிகள்ஆகும்.

2.பின்னர் காலியான கணினித் திரையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலது புற பொத்தானை சொடுக்குக. உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் New என்பதையும் பின்னர் விரியும் New என்றபட்டியில் Shortcut என்பதையும் தெரிவுசெய்து சொடுக்குக.

26.1

3.உடன் தோன்றிடும் Create shortcut என்ற உரையாடல் பெட்டியில் type the location of the item என்ற உரைபெட்டியில் shutdown.exe -s -t 7200 என்றவாறு தவறில்லாமல் தட்டச்சு செய்து next என்ற பெத்தானை சொடுக்குக.இங்கு 7200 என்பதற்கு பதிலாக நாம் விரும்பும் நேரத்தை நொடிகளில் உள்ளீடு செய்துகொள்க.

4.பின்னர் தோன்றிடும் திரையில் type a name for this shortcut என்ற உரை பெட்டியில் Schedule shutdown என்றவாறு இதற்கொரு பெயரை உள்ளீடு செய்து Finish என்ற பெத்தானை சொடுக்குக.

26.2

5.இதன்பின்னர் இந்த குறுக்கவழிநிறுத்தம் செய்வதற்கான ஐகானை தெரிவுசெய்து சொடுக்குக.  பிறகு கணினியானது 2 மணிநேரம் கழித்து தானாகவே தன்னுடைய இயக்கத்தை நிறுத்திகொள்ளும்

இவ்வாறு கணினியானது 2 மணிநேரம் கழித்து தானாகவே தன்னுடைய இயக்கத்தை நிறுத்திகொள்ளுமாறு அமைத்து வேறுஇடத்திற்கு சென்று நம்முடைய பணியை விரைவில் முடித்து திரும்பியபின் இந்த நிறுத்தம் செய்வதற்கான கட்டளையை நீக்கம் செய்து கணினியை தொடர்ந்து இயங்குமாறு செய்தால் நல்லது என எண்ணிடுவோம் அந்நிலையில்

1. காலியான கணினித் திரையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக. உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் New என்பதையும் பின்னர்விரியும் New என்றபட்டியலில் Shortcut என்பதையும் தெரிவுசெய்து சொடுக்குக.

2.உடன் தோன்றிடும் Create shortcut என்ற உரையாடல் பெட்டியில் type the location of the item என்ற உரைபெட்டியில் shutdown.exe -a என்றவாறு தவறில்லாமல் தட்டச்சு செய்து next என்ற பெத்தானை சொடுக்குக

3.பின்னர் தோன்றிடும் திரையில் type a name for this shortcut என்ற உரைபெட்டியில் Abort scheduled shutdown என்றவாறு இதற்கொரு பெயரை உள்ளீடு செய்து Finish என்ற பெத்தானை சொடுக்குக.

4.இதன்பின்னர் இந்த குறுக்கவழி ஐகானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் கணினியானது 2 மணிநேரம் கழித்து தானாகவே  நிறுத்தம் செய்துகொள்ளும் செயலை நீக்கம்செய்துவிட்டு தொடர்ந்து கணினி இயங்கிகொண்டிருக்கும்

வீட்டிலிருந்தே வீடியோவை பதிப்பித்தல் செய்யலாம்

Camceorders,digital  போன்ற கேமராக்களை வைத்து பெரும்பாலானவர்கள் வீடியோ படப்பிடிப்பு செய்வார்கள் ஆனால் பின்னர் இதனை திரையிட்டு பார்த்திடும்போது  படமானது தெளிவற்று மாசியதைபோன்று அரைகுறையாக காட்சியானது தோன்றும் சேச்சே தொழில்முறை படப்பிடிப்புகாரர்களுக்குதான் இதனை சரியாக எடுக்கமுடியும் நம்மால் எல்லாம் முடியாது என மனம் வெறுத்தவர்கள் எண்ணற்றோர் இருக்கின்றனர் இந்நிலையில் vreveal என்ற பயன்பாடு இருக்கும்போது உங்களுக்குஅந்த கவலையே வேண்டாம் தொழில்முறை படப்பிடிப்புகாரர்களைவிட சிறந்ததான வீடியோபடமாக பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி உருமாற்றி கொள்ளமுடியும்

1.1..முதலில் www.vreveal.com என்ற தளத்திலிருந்து இதனை பதிவிறக்கம் செய்து உங்களுடைய கணினியில் நிறுவிகொள்க.

.பின்னர் கேமராவிலிருந்து வீடியோபடத்தை கணினிக்குள் நகலெடுத்துகொள்க

.1.2.அதன்பின்னர் இந்த vreveal என்ற பயன்பாட்டை இயக்கி தோன்றும் இதனுடைய திரையில் .importஎன்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோபடம் இருக்கும் இடத்தைதெரிவுசெய்து திறந்துகொள்க.

.1.3. உடன் இந்த வீடியோபடமானது இந்த திரையின் இடதுபுற பலகத்தில் Gallery என்பதன் கீழ் தம்ப்நெயிலாக தோன்றும் இதனை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக உடன் இந்த வீடியோபடமானது தானாகவே  Enhance நிலைக்கு சென்றிருக்கும்.

2.1 பின்னர் கீழ்பகுதியிலிருக்கும் seek bar-ல் எந்த அளவிற்கு படம் வேண்டுமோ அந்தஅளவிற்கு சுட்டியின் மூலம் தெரிவுசெய்துகொள்க

2.2.தேவையானால் rotate என்பதை பயன்படுத்தி படத்தை சுழற்றியமைத்து கொள்க.

3.1.இந்த படத்தின் தரத்தை உயர்த்திட வேண்டும் அதற்காக இடதுபுற பலகத்திலிருக்கும் பல்வேறு Enhancement  ஐகான்களை பயன்படுத்தி முன்காட்சி யாக எவ்வாறு இருக்கும் என பார்த்து சரிசெய்துகொள்க.

3.2.இவ்வாறு பார்த்து வரும்போது எது நன்றாக உள்ளதோ அதனை தெரிவுசெய்து one click fix  என்ற பொத்தானை சொடுக்குவதன் வாயிலாக இதையே தொடர்ச்சியான அனைத்து காட்சிகளுக்கும் செயற்படுத்திகொள்ளுமாறு அமைத்துகொள்க.

3.3. stabilize என்ற பொத்தான் ஆனது படப்பிடிப்பின்போது தவறுதலாக கைஅசைத்ததால் ஏற்பட்ட வேறுபாட்டை சரிசெய்துவிடும்.

3.4.auto contrast என்பது படத்தின்  தெளிவை சரிசெய்து அமைத்துகொள்கின்றது .3.5.auto  white balance என்பது படத்தின் வண்ணத்தை மெருகூட்டுகின்றது.

3.6.sharpen என்பது படத்தின் துல்லியத்தை உறுதிசெய்கின்றது.

3.7.cleanஎன்பது குறைந்த வெளிச்சத்தில் எடுக்கபட்ட மாசிய தன்மையை சரிசெய்கின்றது.

3.8.deinterlace என்பது படத்தின் தொடர்ச்சியை உறுதிசெய்கின்றது.

3.9.fill lightஎன்பதின் நகர்வியை(Slider) பயன்படுத்தி படத்தின் ஒளிறும் அளவை கட்டுபடுத்திகொள்க.

3.10.பின்னர் இறுதியாகcompare original  vs enhanced என்ற பொத்தானை அழுத்தி ஒப்பீடுசெய்து பார்த்திடுக.

3.11. இவ்வாறே மாறுதல் செய்தபிறகுஇந்த படம் எவ்வாற இருக்கும் என playback என்ற பொத்தானை அழுத்தி முன்காட்சியாக காண்க.

4.1.மேற்கூறிய முன்கூட்டியே கட்டமைக்கபட்ட மதிப்புகள் எதுவும் நமக்கு பிடித்தமானதாகஇல்லையெனும்போது கவலையே படவேண்டாம் fine tune  என்ற பொத்தானை சொடுக்கி மேற்கண்டவைகளின் மதிப்பை நாம்விரும்பியவாறு அவைகளிலுள்ள நகர்வியை(Slider) பயன்படுத்தி பொருத்தமாக அமைத்து கொள்ளலாம்

4.2.மேலும் Focus ,color saturation, Glow ஆகிய கூடுதல் வாய்ப்புகளையும் படத்தை மெருகூட்டிகொள்ளலாம்.

5. பின்னர் Add effects என்ற தாவியின் திரையை தோன்றசெய்து இதிலுள்ள Black and White, Sepia, Vivid color, Glow, Grain ,Vintage ஆகிய ஆறு வாய்ப்புகளை பயன் படுத்தி வீடியோபடத்தை மேலும் மெருகூட்டிகொண்டு சேமித்து கொள்க. இதே வாய்ப்புகளை fine tune  என்ற பகுதியிலிருந்தும் பயன்படுத்தமுடியும்.

6.இதனை சேமித்திடும்போது 720p அல்லது 1080pஎன்றவாறு துல்லியமும்  WMV அல்லது DivXஎன்ற வடிவமைப்பிலும் தெரிவுசெய்து கொள்க

குறிப்பு:இந்த பயன்பாட்டினை இயக்குவதற்கு குறைந்தபட்சம் இன்டெல் அல்லது ஏஎம்டி நிறுவனங்களின் டியூயல் கோர் ப்ராஸஸரும்,2 ஜிபி அளவிற்கு ரேமும் விண்டோ எக்ஸ்பி ஓஎஸ்ஸும் தேவையாகும். என்விடியா வின் ஜிஈஃபோர்ஸ்8 இன் கிராபிக் கார்டு நிறுவியுள்ளதாவென உறுதிசெய்துகொள்க.

இரண்டு கணினிகளை வளாக பிணையம் போன்று இணைத்து பயன்படுத்தலாம்

switch/hub போன்ற உபகரணங்கள் இல்லாமலேயே இண்டு கணினிகளுக்கிடைய வலையமைப்பில் இணைத்து பயன்படுத்தலாம்.

26.3

இதற்காக குறுக்கிணைக்கப்பட்ட rj45 Jack  உடன் கூடிய CAT5 கம்பிவடம்  தேவைக்கேற்ற நீளத்திலும், நெட்வொர்க் கார்டுடன் கூடிய விண்டோ எக்ஸ்பி ஓஎஸ் நிறுவபட்ட இரண்டு கணினிகள் ஆகியவைமட்டுமே தேவையாகும்

26.4

1.முதல் கணினியில் start => control panel => network connections=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.

பின்னர் தோன்றிடும் திரையில் Local Area Connection என்பதில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின்  வலதுபுற பொத்தானை  சொடுக்குக,பின்னர் விரியும் சூழ்நிலை பட்டியில் properties என்பதை தேர்ந்தெடுக்கவும். அடுத்துத் தோன்றும் Local area connection propertiesஎன்ற உரையாடல் பெட்டியில் This Connection uses the following items என்பதன்கீழுள்ள ‘Internet Protocol (TCP/IP)’ என்பதை தேர்வு செய்து இதிலுள்ள ‘Properties’ என்ற பொத்தானை சொடுக்குக.

26.5

பின்னர் திரையில் தோன்றிடும் ‘Internet Protocol (TCP/IP) propertiesஎன்ற உரையாடல் பெட்டியில் IP Address : 192.168.1.2, என்றும் Subnet mask: 255.255.255.0, என்றும் Default Gateway : 192.168.1.1 என்றும் உள்ளீடுகளை செய்க. மேலும் விபரங்களுக்குப் படங்களை சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும்.

இதே செயல்களை அடுத்த கணினியிலும்  பிசகாமல் செய்யவும், கடைசியில் கொடுக்கும் உள்ளிடுகளைத் தவிர. இரண்டாவது கணினியில் IP Address :192.168.1.3 என்றும், Subnet mask: 255.255.255.0 என்றும், Default Gateway : 192.168.1.1 என்றும் உள்ளீடுகளை செய்க.

இதன் பின்னர் தயாராக இருக்கும் குறுக்கிணைக்கப்பட்ட rj45 Jack  உடன் கூடிய CAT5 கம்பிவடத்தை உபயோகித்து இரண்டு கணினிகளையும் ‘Network Card’ இன் மூலம் இணைக்கவும்.

இனி எந்த ஒரு கணினியிலும் தேவையான கோப்பகத்தின்(directory)  மீது  இடம்சுட்டியை வைத்து சுட்டியின்  வலதுபுற பொத்தானை  சொடுக்குக,பின்னர் விரியும் சூழ்நிலை பட்டியில் பகிர்ந்து அளிக்கும் வசதி (sharing)யைதெரிவுசெய்து சொடுக்குக இதனைப் பயன்படுத்தி கோப்புக்களைப் பறிமாற்றம் செய்து கொள்ளலாம்.

படத்தை சிற்றளவாக்கம்(Miniature) செய்தல்


ஒரு பெரிய படத்தை அதன்தன்மை குறையாமல் சிறியதாக்கிஅமைப்பதை சிற்றளவாக்கம்(Miniature)என்பர் இதனை டிஜிட்டல் கேமராவில் செய்ய வாய்ப்பில்லை ஆயினும் அடோப் போட்டோஷாப் (CS3,CS4,CS5ஆகிய பதிப்புகள் )மென்பொருளின் துனையுடன் அவ்வாறான பேரளவு படத்தையும் சிற்றளவாக்கம்(Miniature) செய்ய முடியும்.அதற்கான படிமுறை பின்வருமாறு

1.முதற்படிமுறையாக 450 கோணத்தில் படம் எடுக்கப்பட்டுள்ளதாவென உறுதி செய்துகொள்க. இவ்வாறான .காட்சியானது மேல்புறத்திலிருந்து காணும் தோற்றமாக இருக்குமாறு பார்த்து கொள்க. பக்கவாட்டு தோற்றத்தைவிட மேல்புறதோற்ற படத்தை சிற்றளவாக்கம்(Miniature) செய்வது தரமான காட்சியாக அமையும்.

2.இவ்வாறு எடுக்கபட்டவற்றுள் சிற்றளவாக்கம்(Miniature) செய்யவிரும்பும் படத்தை தெரிவுசெய்துதிறந்துகொள்க. பின்னர் Select=>Edit in quick mask mode . என்றவாறு கட்டளைகளை செற்படுத்தி quick mask mode என்பது செயலில் இருக்குமாறு பார்த்து கொள்க. பின்னர் இடதுபுறத்தில் உள்ள பட்டியலிலிருந்து அல்லது விசைப் பலகை யிலுள்ள Gஎன்றவிசைய அழுத்துவதன் வாயிலாக Gradient என்ற கருவியை தெரிவு செய்துகொள்க அதன்பின்னர் விரியும் Gradient என்ற கருவியின் பல்வேறு வாய்ப்புகளி லிருந்து (இடதுபுறத்திலிருந்து நான்காவதாகஉள்ள குறும்படம்)  Reflected Gradient என்பதை தெரிவுசெய்துகொள்க.பின்னர் குறைக்கவேண்டிய அளவிற்கு நெடுக்கைவசகோடு ஒன்றினை வரைந்துகொண்டுஉடன் அமையும் சிவப்புஅடுக்கை சரிபார்த்துகொள்க.

3.பின்னர் விசைப்பலகையிலுள்ள q என்றவிசைய அழுத்துவதன் வாயிலாகஇந்த படத்தை தெரிவுசெய்துகொள்கஉடன் நாம் தெரிவுசெய்துபடத்தை சுற்றிஎறும்புகள் ஊர்ந்து செல்வதை போன்ற தேற்றத்துடன் மேம்படுத்தி தூக்கலாக காண்பிக்கும் அதன்பின்னர் Filter=>Blur=> Lens Blur=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பின்னர். இயல்புநிலை Radius அளவை ஏற்றுகொள்க அல்லது விரும்பி.யவாறு அமைத்துகொள்க.அதன்பின்னர் Ctrl + D என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துவதன் வாயிலாக  தெரிவுசெய்தபடத்தை சுற்றிஎறும்புகள் ஊர்ந்து செல்வதை நீக்கம் செய்க. தற்போது படத்தின் தோற்றம் சரியாக அமைந்துள்ளதாவென சரிபார்துகொள்க சரியாக அமையவில்லையெனில் முந்தைய படிமுறை2ஐ மீண்டும் செய்திடுக.

4.ஒரு படத்தினை சிற்றளவாக்கம்(Miniature) செய்திடும்போது உண்மை படத்தின் தோற்றம்  அப்படியே இருக்குமாற செய்வதற்காக போதுமான வண்ணங்களை கொண்டு மெருகூட்டவேண்டும் அதற்காக image=>Adjustment=>hue/saturtation=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து அல்லது விசைப்பலகையிலுள்ள Ctrl + U ஆகிய என்றவிசையை அழுத்துவதன் வாயிலாக செயற்படுத்துக. பின்னர் சரியானதோற்றத்தில் சிற்றளவாக்கம்(Miniature) செய்த படம் இருக்குமாறு சரிசெய்துகொள்க.அதன்பின்னர் படத்தின் ஓரத்திலுள்ள தேவையற்ற காட்சியை வெட்டி நீக்கம் செய்வதற்கு cropஎன்ற கருவி பயன்படுகின்றது. அதனை செயற்படுத்திடுவதற்காகcrop  என்ற கருவியை  அல்லது விசைப் பலகையிலுள்ள C என்றவிசையை அழுத்துவதன் வாயிலாக தெரிவுசெய்தகொண்டு தேவையற்ற பகுதியை வெட்டி நீக்கம் செய்துவிடுக. அல்லது நீக்கம்  செய்யவிரும்பும் பகுதியை தெரிவுசெய்துகொண்டு அவ்விடத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக. உடன் விரியும் சூழ்நில்பட்டியலிலிருந்துcrop என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.  பின்னர் File=> save as என்றவாறுகட்டளைகளை செயற்படுத்துக அதன்பின்னர் விரியும் save என்ற உரையாடல் பெட்டியில் கோப்பின்  அமைப்பானது JPEC என்றவாறு தெரிவுசெய்து save என்ற பொத்தானை சொடுக்குக  அடுத்து தோன்றும் மேல்மீட்பு சாளரத்தில்  progressivd என்பதை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக.

பிரச்சினையற்ற கணினியின் இயக்கத்திற்கான ஆலோசனைகள்


1. கணினியின் உள்ளுறுப்பு பாகங்களை கொள்முதல் செய்து பழுதுநீக்கம்செய்து பயன்படுத்துவதைவிட புதிய கணினியொன்றை கொள்முதல் செய்துகொள்வது செலவுகுறைந்த தரமான கணினியாகமாற்றிவிடும் செயலாகும் ஏனெனில்புதுபுது கண்டுபிடிப்புகளினால் கணினியின் உள்ளுறுப்பு பாகங்கள் இரண்டு மூன்றாண்டிற்கு பின்னர் பயனற்றைவையாக ஆகிவிடுகின்றன

2.கணினிக்குவரும் மின்சாரமானது எப்போதும் ஏற்ற இறக்கங்களுடன்தான்இருக்கும் அதனை சரிசெய்துஒரே சீரான மின்சாரம் கிடைக்கும்படி செய்வது கணினியின் உள்ளுறுப்பு பாகங்கள் விரைவில் பழுதாகாமல் காத்திடும் செயலாகும்.

3.கணினியை இயக்கி கையாளுபவர்களில் பெரும்பாலாணவர்கள் தாம் பயன்படுத்திடும் மென்பொருளை பற்றி 20 சதவிகிதம் அளவு மட்டுமே தெரிந்துகொண்டு செயற்படுத்து கின்றனர் அதனால் இவ்வாறானவர்களுக்கு அவ்வப்போது  கணினியின் மென்பொருளை கையாளுவதற்கான புத்தாக்க பயிற்சி அளிப்பது நல்லது.

4..நாம் பயனபடுத்தும்பெரும்பாலான கணினிகள் இணையத்துடன் தொடர்புகொண்டு செயற்படுகின்றது அதனால் நம்முடைய கணினிக்குள் எளிதாக புகுந்து தரவுகளை திருடுதல் முக்கியமான கோப்புகளை அழித்தல் என்பன போன்ற தீங்கு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் அதனால் இவைகளிலிருந்து நம்முடைய கணினியை பாதுகாத்திட போன்ற firewalls தடுப்புசுவரையும் அவ்வப்போது புதுப்பித்து மேம்படுத்தபட்ட பாதுகாப்புஅரண்களையும்( security) அமைத்துகொள்க

5. பலநாட்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய அத்தியவசிய தரவுகள் ஒருசில நொடிகளில் அழிந்துவிட வாய்ப்புள்ளது பின்னர் இந்த தரவுகளை மீட்டெடுப்பது மிக சிரமமான செயலாகும்அதனால் நம்முடைய இயல்புசுபாவமான எதற்கெடுத்தாலும் சோம்பேறித் தனம்படாமல் அவ்வப்போது நம்முடைய கணினியில் இருக்கும் தரவுகளை காப்புநகல் (back up) செய்துகொள்க.

6. நல்லதரமான எதிர்நச்சுநிரல்(Anti virus) குப்பைவடிகட்டி(Spam filter) உளவாளி எதிர்ப்புநிரல்(Anti – spyware)  போன்றவற்றை கொண்டு பிரச்சினையின்றி கணினியின் இயக்கம் இருக்குமாறு அமைத்துகொள்க.

சிறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் அவ்வப்போதுநம்முடைய கணினியை பராமரித்து பாதகாத்து வந்தால் பேரளவு இழப்பினை தடுக்கலாம்

மின்னஞ்சல் தயார்செய்திடும்போது கவணத்தில் கொள்ளவேண்டியவை


1.மின்னஞ்சலை திறக்காமலேயே நம்முடைய மின்னஞ்சலின் சாராம்சம் என்னவென்று  பார்த்தவுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்குமாறு subject என்ற பகுதியை ஒற்றைவரியில் அமைத்துகொள்க.

2.மின்னஞ்சலுடன் பேரளவுகோப்புகளை இணைத்து அனுப்பிடவேண்டாம் ஏனெனில் பெறுபவரிடம் அகல்கற்றை இணைப்பு இருக்குமென்ற உறுதிகூற முடியாது அதனால் அவ்வாறான கோப்புகளை Yousendit என்பனபோன்ற சேவையாளர் தளத்தில் மேலேற்றி அதன் இணைப்புவிவரத்தை மட்டும் பெறுபவருக்கு அனுப்பி பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு செய்திடுக

3.மின்னஞ்சலுடன் ஒன்றுக்குமேற்பட்ட கோப்புகளை இணைத்து அனுப்புவதாயின் முதலில் அவைகளை ஒரே கோப்பாக சுருக்கிகட்டியபின் இணைத்து அனுப்பினால் பெறுபவர் எதையும் தவறவிடாமல் அனைத்து கோப்புகளையும் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கு ஏதுவாக இருக்கும்
4. நல்லமனநிலையில் இருக்கும்போதுமட்டும் மின்னஞ்சல்தயார்செய்து அனுப்புக எப்போதும் நம்முடைய மனதில் இருப்பதே மின்னஞ்சலின் சொற்களில் பிரதிபலிக்கும்.என்பதை கவனத்தில் கொள்க
5.நமக்கு வந்த மின்னஞ்சலுக்கு உடனுக்குடன் பதில்மின்னஞ்சல் அனுப்பிடுக. நம்முடைய பதிலுக்காக நம்முடைய நண்பர் காத்திருக்க வாய்ப்புள்ளது.
6.சாதாரண கடிதம் போன்று பக்கம்பக்கமாக மின்னஞ்சலை த.யார்செய்து அனுப்பிடவேண்டாம் இரத்தினசுருக்கமாக ஓரிரு சொற்களில் நாம் கூறவிழையும் செய்திகள் அமையுமாறு பார்த்துகொள்க.
7.நாம்தயார்செய்த மின்னஞ்சலில் எழுத்தபிழை இலக்கணபிழை ஏதேனும் இருக்கின்றதாவென  அனுப்பிடுமுன் சரிபார்த்துகொள்க.
8.குழுவான உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிடும்போது நம்முடைய சொந்த தொலைபேசிஎண் அலைபேசிஎண் போன்றவற்றை  கண்டிப்பாக குறிப்பிட்டு அனுப்பிடவேண்டாம்..

Previous Older Entries