இணைய பயன்பாடுகள் தரமாக செயல்படுகின்றதாவென பரிசோதிக்க பயன்படும் கருவிகள்

இன்றைய போட்டிமிகுந்த சூழலில் இணையம் நம்முடைய வாழ்வின் ஒருங்கிணைந்த ஒரு உறுப்பாக மாறிவிட்டது அதாவது நம்மில் பெரும்பாலானோர் எந்தவொருமுடிவையும் தெரிவுசெய்வதற்குமுன் அதற்கு தேவையான தகவல்களையும் விவரங்களையும் இணையத்தின் உலாவி அதன்வாயிலாக தேவையான தகவல்களை தேடிபிடித்து படித்தறிந்து தெளிவடைந்தபின்னரே முடிவு எடுத்திடுகின்றனர் என்பதே எதார்த்தமான உண்மை நிலவரமாகும் அதனால் அனைத்து வியாபார நிறுவனங்களும் தமக்கென தனியானதொரு இணைய பயன்பாட்டினை கண்டிப்பாக வைத்து பராமரிக்க வேண்டிய நிலைஏற்படுகின்றது .
அதனோடுகூடவே தற்போதைய நவீணகாலதேவையானது ஒவ்வொரு வியாபார நிறுவனமும் தனக்கென தனியானதொரு இணையபக்கத்தையோ அல்லது இணையபயன்பாட்டினையோ கண்டிப்பாக வைத்து பராமரிக்கவேண்டிய நிலைக்கு கொண்டுவந்துள்ளது . இதனை பயன்படுத்திகொள்ளும் வாடிக்கையாளர்களை அந்நிறுவனமானது எவ்வாறு கருதுகிறது என்பதிலும்,அதன் தயாரிப்புகளில் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கின்றது என்பதிலும் இணையதளத்தின் அல்லது இணையதள பயன்பாட்டின் தரமானது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
இங்கு இணையபயன்பாடு என்பது அடிப்படையில் ஒரு கணினி பயன்பாடாகும் அந்த கணினிபயன்பாட்டினை தொலை தூரத்திலுள்ளசேவையாளர்கணினியில் வைத்து கொண்டு உலகில் எங்கிருந்தும் எந்தநேரத்திலும் அதனை பயனாளர் ஒருவர் தன்னுடைய இணையஉலாவியின் வாயிலாக அனுகி இடைமுகம் செய்து செயல்படுத்தி பயன்பெறமுடியும் என்பதால் இது இணையபயன்பாடு என அழைக்கப்படுகின்றது . இணையபக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைபற்றிய அனைத்து தகவல்களும் உரையாகவோ உருவப்படமாகவோ கானொளிகாட்சியாகவோ அல்லது இவை யனைத்தும் சேர்ந்து உருவாக்கப்பட்ட கட்டமைவை வாடிக்கையாளர் ஒருவர் மிகஎளிதாக உலகில் எங்கிருந்தும் எந்தநேரத்திலும் தன்னுடைய இணையஉலாவியின் வாயிலாக அனுகி இடைமுகம் செய்து தேவையான விவரங்களை பெறமுடிகின்ற கட்டமைப்பாகும்
இவ்விரண்டும் நல்ல தரமாக அமைந்திருந்தால்தான் வாடிக்கையாளரின் மனம் திருப்தியுற்று மீண்டும் இவைகளை அனுகி தங்களின் தேவைகளை நிறைவுசெய்து கொள்வார்கள் அதனால் இவைகளை நல்ல திறனுடன் உள்ளதாவென பரிசோதித்து பார்த்திடவேண்டுமல்லவா ?அதற்காக உதவவருவதுதான 1.செயல்பரிசோதனை (functional testing) ஆகும். இதன்கீழ் உரைப்பெட்டிகளின் உள்ளீடுகளை சரிபார்த்தல், உடைந்த இணைப்புகளை சரிபார்த்தல், குக்கீ தொடர்பான செயல்பாடுகளைச் சரிபார்த்தல் என்பன போன்ற பல்வேறு பரிசோதனைகள் ஆரம்பகாலகட்டத்தில் நம்முடைய கைகளாலேயே மேற்கொள்ளப்பட்டது தற்போது QTP, Selenium, UFT போன்ற கருவிகளின் வாயிலாக தானாகவே சரிபார்த்து பரிசோதித்து அறியுமாறான வசதியாக மேம்பட்டுவிட்டது
2.அதற்கடுத்ததாக பயன்பாட்டு பரிசோதனை (Usability testing) ஆகும் இதன்கீழ் போட்டியாளர்களின் பயன்பாடுகளின்அனைத்து வசதிவாய்ப்புகளும் நம்முடைய இணைய பயன்பாட்டிலும் வாடிக்கையாளர்கள் அனவருக்கும் கிடைக்கின்றதா இலக்கணப்பிழை போன்றவை தானாகவே சரிசெய்து கொள்ளப்படுகின்றதா உதவி உள்ளடக்கஇணைப்பு சரியாக செயல்படுகின்றதா ஆகியவற்றை சரிபார்ப்பதற்காக Chalkmark, Clicktale, Clixpy, Feedback Army, Aplitools Eyes என்பன போன்ற கருவிகள் பேருதவியாய் விளங்குகின்றன
3.மூன்றாவதாக இடைமுகபரிசோதனை(Interface testing) இதன்கீழ் பயன்பாடுகளுக்கிடையேயான இடைமுகத்தினை சரிபார்த்திடுவதற்காக Application testing:எனும் பரிசோதனையும் பயன்பாட்டிற்கும் சேவையாளர் கணினிக்கும் இடையேயான இடைமுகத்தினை சரிபார்த்திடுவதற்காக Web server testing:எனும் பரிசோதனையும் தரவுதளத்துடன் பயன்பாடு இடைமுகத்தினை சரிபார்த்திடுவதற்காக Database server testingஎனும் பரிசோதனையும் செய்யப்படவேண்டும் இதற்காக AlertFox, Ranorex, SoapUI, Postman, Fiddler என்பன போன்ற கருவிகள் முக்கிய பங்காற்றுகின்றன
4.நான்காவதாக ஒத்திசைவு பரிசோதனை(Compatibility testing) இதன்கீழ் இணையபயன்பாடானது அனைத்து இணையஉலாவிகளுடனும் ஒத்திசைவாக செயல்படுகின்றதாவென Browsera, Browser Sandbox, Browsershots போன்ற கருவிகளை கொண்டு பரிசோதித்து சரிபார்த்திடலாம் மேலும் விண்டோ லினக்ஸ் போன்ற அனைத்து இயக்கமுறைமைகளுடனும் ஒத்திசைவாக செயல்படுகின்றதாவென Seleniumஎனும் கருவியை கொண்டு பரிசோதித்து சரிபார்த்திடலாம் அதுமட்டுமல்லாது iOS , Androidபோன்ற அனைத்து கைபேசி இயக்கமுறைமைகளுடனும் ஒத்திசைவாக செயல்படுகின்றதாவென Appium, Selendroid போன்ற கருவிகளை கொண்டு பரிசோதித்து சரிபார்த்திடலாம்.
5.ஐந்தாவதாக திறன்பரிசோதனை(Performance testing) மேலேற்றும் திறன், முறிவுபுள்ளி ஆகியவற்றை சரிபார்த்து பரிசோதி்த்திடவேண்டும் இதில்மிகமுக்கியமாக இணையபயன்பாடானது தொடர்ந்து இயங்கி கொண்டே யிருக்கும்போது இடையில் எந்தநேரத்தில் இடைமுறிவு ஏற்பட்டு தொங்கலாக நின்றுவிடும் என சரிபார்ப்பதற்கான Stress testing எனும் பரிசோதனையை Load Runner, Jmeter போன்ற கருவிகளை கொண்டு பரிசோதித்து சரிபார்த்திடலாம்
6.ஆறாவதாக மிகமுக்கியமான பாதுகாப்பு பரிசோதனையாகும்(Security testing) அனுமதியற்றவர்கள் பயன்படுத்தாமலிருக்குமாறும் மற்ற தீங்கு விளைவிக்கநினைப்போர் நம்முடைய பயன்பாட்டினை முடக்கிவிடாமல் காத்திடுவதற்கும் Babel Enterprise, Wapiti, Zed Attack Proxy, Vega, skipfish, Ratproxy , Arachniஎன்பனபோன்ற கருவிகளை கொண்டு பாதுகாப்பாக இருக்கின்றதாவென பரிசோதித்து சரிபார்த்து கொள்ளலாம்

மைக்ரோசாப்ட்டின் NTFS எனும் கட்டற்ற கருவி ஒரு அறிமுகம்

ஒரேகணினியில் விண்டோ லினக்ஸ் ஆகிய இரு இயக்கமுறைமைகளையும் நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ள விழையும்போது கணினியின் நினைவகமானது இவ்விரண்டு இயக்கமுறைமைகளுக்கும் தேவையானஅளவு பாகப்பிரிவினை செய்யப்பட்டு இரண்டு இயக்கமுறைமைகளின் கோப்புகளும் தனித்தனிபகுதியில் சேமிக்கப்படுமாறு செய்து பயன்படுத்தி கொள்வார்கள் இந்நிலையில் விண்டோ இயக்கமுறைமையை செயல்படுத்திடும்போது லினக்ஸ் இயக்கமுறைமை பகுதியில் உள்ள பயன்பாடுகளையோ கோப்புகளையோ நேரடியாக அனுகமுடியாதவாறு தடுக்கப்பட்டிருக்கும் அதனை தீர்வுசெய்வதற்காகவே இந்த NTFS எனும் கட்டற்ற கருவியை அறிமுகபடுத்தியுள்ளனர் மைக்ரோசாப்ட்டின் NTFS என்பது கோப்பஅமைவு இணைப்பு இயக்கக (File System Link (FSL) driver )தொழில்நுட்பத்தின் ஒருபகுதியாக விளங்குகின்றது இது லினக்ஸ் சூழலில் இருந்து அணுகக்கூடிய NTFS , HFS + ஆகிய கோப்பு முறைமைகளுக்கான ஒரு தனிப்பட்ட கலவையான இயக்ககமாகும். நாம் விரும்பினால் மிகஎளிதாக install.sh என்ற கட்டளைவரிவாயிலாக இந்த கருவியை நிறுவுகை செய்து கொள்ளவும் இதனுடைய பயன்முடிந்தபின்னர் தேவையில்லை யெனில் uninstall.sh என்ற கட்டளைவரிவாயிலாக நாம் ஏற்கனவே நிறுவுகை செய்த இந்த கருவியைநீக்கம் செய்து கொள்ளவும் முடியும் லினக்ஸிற்காக பாகப்பிரிவினை செய்த நினைவகபகுதியில் உள்ள கோப்புகளுடனும் பயன்பாடுகளுடனும் நேரடியாக எளியமுறையில் அனுகுவதற்காக இந்த கருவி பேருதவியாய் விளங்குகின்றது இது லினக்ஸ் கெர்னல் பதிப்புஎண் 4.20.x வரை ஆதரிப்பதோடு DKMS எனும் நூலகத்தின் உதவியுடன் தானாகவே தேவையான இயக்ககங்களை கட்டமைத்து கொள்கின்றது சுருக்கி கட்டிடும் வழிமுறையில் Windows 10/Server 2016/Server 2019 ஆகிய விண்டோ இயக்கமுறைமை/யை ஆதரிக்கின்றது மேலும் mk*fs ,chk*fs ஆகிய வசதிகளுக்கு பதிலாக ufsd எனும் ஒற்றையான வசதியை பயன்படுத்தி கொள்கின்றது மிக முக்கியமாக இது அவ்வப்போது நிகழ்நிலைபடுத்தி இயக்கமுறைமையின் பதிப்புகளுக்குஏற்ப அறிந்தேற்பு செய்துகொள்கின்றது.

வருமானவரிதகராறுகளையும் பிரச்சினைகளையும் தீர்வுசெய்வதற்கானRiverus எனும் பகுப்பாய்வு கருவி ஒரு அறிமுகம்

இது ஒரு வருமான வரிச்சட்டஆய்வு, பகுப்பாய்வு கருவியாகும் .நம்முடைய வருமானவரி ஆய்வு அனுபவத்தை விரைவாகவும் செயல்திறன்மிக்கதாகவும் மாற்றுவதற்கு இயந்திர கற்றல் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது மிகமுக்கியமாக வருமானவரி பிரச்சினையில் ஒரு வினைமுறைத்திறனை உருவாக்கிடவும் அபாயங்களைத் தணித்திடவும் தேவையான உத்திகளை இதனுடைய பகுப்பாய்வை பயன்படுத்தி கண்டுபிடித்திடமுடியும் இந்த கருவியின் வாயிலாக நான்கு இலட்சத்திற்கும் அதிகமான நீதிமன்றத்தினாலும் தீர்ப்பாயங்களாலும் வெளியிடப்பட்டதும் வெளியிடபடாததுமான தீர்ப்புகளிலிருந்தும் உத்திரவுகளிலிருந்தும் தேவையான தகவல்களையும் உத்திகளையும் வகுப்பதற்கான வழிமுறைகளை வருமானவரி தொழில்முறையாளர்களுக்கு காண வழிகாட்டிடுகின்றது தற்போது மேலை நாடுகளில் பணிபுரியும் கணக்காய்வாளர்களும் வழக்குரைஞர்களும் இயந்திர கற்றலின் திறனுடன் கூடிய பகுப்பாய்வு கருவிகளை தங்களின் பணிகளுக்காக பயன்படுத்திகொள்கின்றனர் இவ்வாறான கருவிகள் அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்கி தங்களின் தொழிலில் வெற்றிகரமாக செயல்படஉதவுகின்றது அதன்வாயிலாக தங்களுடைய வாடிக்கையாளரிடம நல்லதொரு பெயரை தக்கவைத்துகொள்ள பேருதவியாய் விளங்குகின்றது .தங்களுடைய பணியில் காலவிரையத்தை தவிர்த்து விரைவாகவும் திறமையாகவும் தங்களுடைய பணியை ஆற்றிடமிகப்பேருதவியாக விளங்குகின்றன. அவ்வாறான பணிகளுக்கு தற்போது இந்தியாவிலும் கணக்காய்வாளர்களும் வழக்குரைஞர்களும் தங்களுடைய பணியை விரைவாகவும் சிறப்பாகவும் செயல்படுத்திட இந்த Riverus எனும் பகுப்பாய்வு கருவிஉதவ தயாராக இருக்கின்றது இதனை பயன்படுத்தி அதிக அளவிலான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் திருப்தியையும் பெற்று தங்களுடைய தொழில்திறனை உயர்த்தி கொள்ளமுடியும் இது காலவிரையம் ஆவதையும் அதிகசெலவாவதையும் தவிர்க்கின்றது
வருமானவரி கணக்கீட்டில் குறிப்பிட்ட பிரச்சினைதொடர்பான முந்தைய தீர்ப்புகள் யாவை தொடர்ந்து அதனடிப்படையில் தற்போதுஇந்த பிரச்சினையை எவ்வாறு தீர்வுசெய்திடமுடியும் என மிகவிரிவான பகுப்பாய்வு செய்து மிகச்சரியான முடிவுகளை ஒருசில நிமிடங்களில் தெரிவுசெய்து செயல்படமுடியும் சிறிதளவேயான தகவல்களில் நமக்கு போதுமான அனுபவமில்லை எனவிட்டிடும்போது அந்த சிறிதளவேயான தகவல்களினால் பெரிய பாதிப்புஉருவாகி நம்முடையதொழிலின் வெற்றியையே பாதிக்கும் அபாயம் உருவாகிவிடுமல்லவா அவ்வாறான எந்தவொரு சிறிய தகவலைகூட விட்டிடாமல் கணக்கில் கொண்டால்தான் நம்முடைய பிரச்சினைக்கான சரியான தீர்வினை காணமுடியும் என்பதன்அடிப்படையில் இந்த கருவியானதுநிறுவனங்களில் ஏற்படும் வருமான வரிதொடர்பான பிரச்சினைகளை 360 கோணஅளவில்முழுவதுமாக ஆய்வுசெய்துமிகச்சரியான தெளிவான முடிவினை எடுத்திடஉதவுகின்றது மேலும் விவரங்களுக்கு https://www.riverus.in எனும்முகவரியில் செயல்படும் இணையதளத்திற்கு செல்க

நம்முடைய சொந்த webfonts எனும் இணையஎழுத்துருவை செயல்படுத்தி பயன்பெறலாம்

பெரும்பாலும் கணினி பயனர்கள் பலருக்கு கணினியின் எழுத்துருக்களானவை ஒரு மர்மமாகவே விளங்குகின்றன . உதாரணமாக, நாம் ஒரு ஆவணத்தினை கணினியிலுள்ள ஏதேனுமொரு பயன்பாட்டினை கொண்டு வடிவமைத்தபின்னர் அதனை வேறு இடத்திற்கு கொண்டுசென்ற அச்சிடமுயலும்போது அந்த அச்சுபொறியால் அறிந்தேற்ப செய்த Arial போன்ற எழுத்துருக்களை கொண்டு அச்சிடுவதை காணலாம் ஏனெனில் அந்த குறிப்பிட்ட அச்சுப்பொறியில் நம்முடைய பயன்பாட்டில் வடிவமைத்திருக்கும் எழுத்துரு இல்லை அதனால் அந்த அச்சுப்பொறியானது தனக்குதெரிந்த எழுத்துருவைகொண்டு செயல்படுகின்றது ? இதனைத் தடுக்க பல்வேறு வழிகள் உள்ளன: அதாவது சிறப்பு எழுத்துருக்களை வேர்டு பயன்பாட்டிலிருந்து அச்சுப்பொறிக்கு கொண்டுசெல்லும்போதும் , PDF போன்ற கையடக்கஆவணமாக உருமாற்றம் செய்திடும்போதும் அதனோடுகூடவே நாம் பயன்படுத்திய நம்முடைய சொந்த எழுத்துருக்களை கொண்டுசெல்லுமாறு வடிவமைத்திடுவது அவற்றுள் ஒரு வழிமுறையாகும் இணையத்தில் கூட ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு எழுத்துருவை அறிந்தேற்பு செய்து பயன்படுமாறு செய்திருப்பார்கள் ஆயினும் இவ்வாறான பிரச்சினையை சரிசெய்திடுவதற்காக நமக்கு CSS பற்றிய ஒரு அடிப்படை புரிதல் இருந்தால்போதும், பொதுவாக பின்வருமாறான அறிவிப்பை காண நேரலாம்: .
h1 { font-family: “Times New Roman”, Times, serif; }
இது Times New Roman எனும் ஒரு குறிப்பிட்ட எழுத்துருவை வரையறுக்கும் வடிவமைப்பாளரின் முயற்சியாகும் , குறிப்பிட்ட கணினியில் இந்த டைம்ஸ் நியூ ரோமன் எனும் எழுத்துரு நிறுவப்பட்டிருந்தால் இவ்வாறான அறிவிப்பை செய்யத் தேவையில்லை . இது உரைக்கு பதிலாக ஒரு வரைகலை குறியீட்டைப் பயன்படுத்துவதை விட சிறப்பாக இருக்கிறது, ஆனால் இது இன்னும் மோசமான, எழுத்துரு அல்லாத நிருவாகத்தின் முறையற்ற செயல்முறையாகும், இருப்பினும், இணையதளத்தினை பயன்படுத்த ஆரம்பித்த முந்தைய நாட்களில் இவ்வாறாகத்தான் தீர்வுசெய்யப்பட்டுவந்தது.
அதன்பின்னர் பின்னர் இணைய எழுத்துரு( webfonts) எனும் நடைமுறை செயல்பாட்டிற்கு வந்தது மேலும் இன்த எழுத்துருக்களை மேலாண்மை செய்திடும் பணியானது வாடிக்கையாளர் கணினியிலிருந்து சேவையகணினிக்கு இடம்பெயர்ந்துவிட்டது. அதாவது வலைத்தளங்களில் உள்ள எழுத்துருக்கள் அனைத்தும் சேவையககணினியால் வாடிக்கையாளர் கணினிக்கு வழங்கப்பட்டு எழுத்துருக்களின் பிரச்சினை தீர்வு செய்யப்பட்டன, பயனாளரின் கணினியில் குறிப்பிட்ட ஒரு எழுத்துரு இருந்தால் மட்டுமே பயனாளரால் இணையஉலாவலை எளிதாக மேற்கொள்ளமுடியும் எனும் பிரச்சினைக்கு தீர்வாக குறிப்பிட்ட எழுத்துருவைக் இணைய உலாவியானது தன்னுடைய இணைய உலாவலுக்காகத்தேடிக்கண்டுபிடிக்கத் தேவையில்லை. கூகுள் போன்ற வழங்குநர்கள் கூட கட்டற்ற உரிமம் பெற்ற எழுத்துருக்களை இணைய உலாவலுக்காக வழங்குகின்றனர், இவ்வாறான எழுத்துருக்களை இணைய வடிவமைப்பாளர்கள் தாம் கட்டமைத்திடும் இணையதளத்தில் கொண்டுவருவதற்காக ஒரு எளிய CSS விதியைமட்டும் தாங்கள் வடிவமைத்திடும் இணைய தளங்களில் சேர்த்தால் போதும்.
இந்த வசதியை கொண்டுவருவதற்காக செலவேதும் செய்யத் தேவையில்லை இது கட்டணமற்றதாகும் கூகுள் போன்ற முக்கிய தளங்கள்கூடஇவ்வாறான கட்டணமில்லாத இணைய எழுத்துருக்களை கொண்டுவர உதவுகின்றன இல்லையென்றாலும் பரவாயில்லை நாமே நம்முடைய சொந்த இணையஎழுத்துருவை உருவாக்கி பதிவேற்றம் செய்து கொள்ளமுடியும் .இது ஒரு எளிமையான CSS விதிமுறையைப் பயன்படுத்துவது போலவும் எளிது அதைவிட நம்முடைய எழுத்துருவை கொண்டு இணையதளத்தின் ஒவ்வொரு பக்கத்தினையும் மேலேற்றம் செய்திடும்போது அதனோடு இதற்கான எழுத்துருவை ஒவ்வொருமுறையும் தேடிபிடித்திட அதிகநேரம் செலவழிக்காமல் நம்முடைய சொந்த எழுத்துருவாக இருப்பதால் மிகவிரைவாக இணையபக்கத்தின் மேலேற்றம் செய்து நம்முடைய இணையதளமானது மிகவேகமாக இயங்குவதை காணமுடியும்
இதற்காக முதலில் கட்டற்ற உரிமம் பெற்ற எழுத்துருவாக இருக்கின்றதாவென சரிபார்த்திடவேண்டும் பொதுவாக தற்போது பயன்பாட்டிலுள்ள எல்லா எழுத்துருக்களும் இலவசமாக இருப்பதால் மென்பொருளின் கட்டற்ற உரிமங்களைப் பற்றி சிந்திக்கவோ அல்லது கவனிப்பதற்கோ நமக்கு நேரமும் காலமும் போதுமானதாகஇல்லை இவைகளுள் எவை கட்டற்றவை என எவ்வாறு நாமறிந்துகொள்வது என்ற குழப்பம் வேறு நம்முடைய மனதில் எப்போதும் அலைகழித்துகொண்டே இருக்கலாம். நிற்க பொதுவாக மைக்ரோசாப்ட், ஆப்பிள், போன்ற நிறுவனங்களிடமிருந்து நாம் கணினியை வாங்கிடும்போது Arial, Verdana, Calibri, Georgia, Impact, Lucida and Lucida Grande, Times and Times New Roman, Trebuchet, Geneva, போன்ற பல்வேறு எழுத்துருக்களையும் உட்பொதிந்தே வழங்கிடுவார்கள் இவைகளை நாம் பயன்படுத்தி கொள்ளலாம் ஆனால்மறுவிநியோகம் மட்டும் செய்திடமுடியாது என்ற செய்தியைமனதில் கொள்க அதனால் இவ்வாறான எழுத்துருக்களை நம்முடைய இணையதள பக்கத்திற்கான எழுத்துருவாக இணைய சேவையகத்திற்கு பதிவேற்ற அனுமதிக்கப்படவில்லை. ஆயினும் கட்டற்ற எழுத்துருக்களான Font Library, Omnibus Type போன்றவை மட்டுமல்லாது கூகுள் ,அடோப் போன்றவைகள்கூட இந்த தடைகளை தகர்த்தெறிந்து விட்டன .இவ்வாறு கட்டற்ற எழுத்துருவிற்காக TTF, OTF, WOFF, EOT போன்ற பல பொதுவான எழுத்துருக்களின் கோப்பு வடிவங்களைப் பயன்படுத்தமுடியும் Sorts Mill Goudy எனும் இணையஎழுத்துருவானது WOFF என சுருக்கமாக அழைக்கப்படும் இணைய திறந்த எழுத்துருவடிவமைப்பு(Web Open Font Format) மொஸில்லா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது) பதிப்பினை உள்ளடக்கியதை நம்முடைய சொந்த இணைய எழுத்துருவாக பதிவேற்றம் செய்தவதற்காக பயன்படுத்தி கொள்ளமுடியும் ஆயினும் மற்ற வடிவமைப்புகளுக்கும் இதே வழிமுறையை பின்பற்றி செயல்படுத்திடமுடியும் நாம் உருவாக்கி வடிவமைத்த நம்முடைய இணைய எழுத்துருவை
scp GoudyStM-webfont.woff seth@example.com:~/www/fonts/
எனும் கட்டளைவரிவாயிலாகநம்முடைய இணையச்சேவையாளர் பகுதிக்கு பதிவேற்றம் செய்திடுக இது cPanel எனும் வரைகலை மேலேற்றும் கருவி அல்லது இதேபோன்ற இணையகட்டுப்பாட்டு பலகத்தின் வாயிலாக மேலேற்றம் செய்கின்றது தொடர்ந்து
2. @font-face {
font-family: “skfont”;
src: url(“../fonts/GoudyStM-webfont.woff”);
} எனும் கட்டளைவரிகளின் வாயிலாக நம்முடையஇணையபக்கத்தின் CSSஇன் ஒரு @font-face விதியை சேர்த்திடுக தொடர்ந்துநம்மால் படித்து புரிந்துகொள்ளுமாறு இதற்கான பெயரை அமைத்துகொள்க அதன்பிறகு இதனை அழைத்து மேலேற்றுவதற்காக

h1 { font-family: “skfont”, serif; }
என்றவாறு வழங்கப்பட்ட CSS இனத்தில் குறிப்பிட்டு அழைத்திடுக இதன்பிறகு நம்முடைய எழுத்துருவானது நம்முடைய இணையதளத்தினை மேலேற்றம் செய்திடும்போது தானாக விரைவாக மேலேற்றம் ஆவதை காணலாம்

IM எனசுருக்கமாக அழைக்கப்படும் உருவப்படத்தந்திரகாட்சி(ImageMagick)ஒரு அறிமுகம்

உருவப்படத்தந்திரகாட்சிஎன்பது உருவப்படங்களை தொகுப்பாக கையாளுவதற்கான ஒரு செயலி தொகுப்பாகும். இதுshell, DOS, Perl, PHP, என்பனபோன்ற ஸ்கிரிப்டிற்குள் உருவப்படங்களை கையாளுவதற்கான செயலியாகும் அல்லது ஒரு இணைய பயன்பாடு, கானொளிகாட்சியின் செயலிகருவி, panorama generator என்பன போன்ற கருவிகளின் துனைஅமைவாகும். ஆயினும் இது ஒரு வரைகலை பயனாளர் இடைமுகப்பு அன்று என்ற செய்தியை கவணத்தில்கொள்க. இது ஒரு வகை அமைப்பிலுள்ள உருவப்படத்தை மற்றொரு வகை அமைப்பு உருவப்படமாக உண்மை படத்தில் இருப்பதைபோன்றே மாற்ற பட்ட வகையிலும் இருக்குமாறு உருமாற்றும் திறன்கொண்டது. அதாவது எந்தவொரு உருவப்பட வடிவமைப்பிலிருந்தும் நாம் விரும்பும் வகையானவடிவமைப்பிற்கு உருவப்படத்தை உருமாற்றும் திறன்மிக்கது .இவ்வாறான செயலை shell/DOS ஆகிய கட்டளைவரிகளின் வாயிலாக கூட செயல்படுத்தி கொள்ளமுடியும் . அதைவிட C, C++, Perl, Ruby, PHP என்பன போன்ற கணினிமொழிகளின் வாயிலாக இதனுடைய துனைஅமைவி உருவாக்கி செயல்படச் செய்து நாம் உருவாக்கிடும் பயன்பாட்டில் நாம் விரும்பும் செயலை கொண்டுவரமுடியும். இந்த உருவப்படதந்திரகாட்சிஆனது உருவப்படங்களை ஒரு raster எனும் செவ்வகல புள்ளிகளின்அணிதொகுப்புாகஎடுத்துகொண்டு “vector உருவமாக Postscript அல்லது PDF ஆகிய வடிவமைப்பில் கையாளுகின்றது. இவ்வாறு செயல்படுத்திடும்போது இதனுடைய இயல்புநிலை வாய்ப்பிற்கு பதிலாக இதிலுள்ளவேறுபல வாய்ப்புகளுள் ஒன்றினை தெரிவுசெய்து இதனுடைய செயலினை விரைவுபடுத்திகொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது . ஒருசில இணையஉலாவிகள் முக்கியமாக மைக்ரேசாப்டின் இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரின்IE v6 எனும் இணையஉலாவியானது PNG போன்ற அரை ஊடுருவும் திறன்கொண்டதை சரியாக கையாளாது அதனால் இணையத்தின் பின்புலத்தில் இருப்பதை காணமுடியாது. அவ்வாறான சூழலில இந்த உருவப்படதந்திரகாட்சியானது நமக்கு உதவிக்கு வருகின்றது
composite -compose Dst_Over -tile pattern:checkerboard image.png x:
எனும் கட்டளைவரிவாயிலாக முழுவதுமாக அல்லது பகுதியாக உருவப்படம்பின்புலத்தில் இருப்பதை காணமுடியுமாறு செய்திடலாம்.
நம்முடைய கணினியில் இருக்கும் எழுத்துருவை பயன்படுத்தி கொள்வதற்காக
convert -list type # for IM older than v6.3.5-7
convert -list font # for newer versions
ஆகியகட்டளைவரிகளை பயன்படுத்தி கொள்க. இயல்புநிலைஎழுத்துருவை எடுத்து கொள்ளும் Google Image போன்ற உருவப்படங்களையம் நாம் விருமபும் உருவப்பட வடிவமைப்பிற்கு இதன்வாயிலாக உருமாற்றம் செய்து கொள்ளமுடியும் மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் https://www.imagemagick.org/Usage/ எனும் இணையதளபக்கத்திற்கு செல்க

DjVuLibreஎனும் கட்டற்ற பயன்பாடு ஒருஅறிமுகம்

இதனை டிஜாவியு என உச்சரிக்கவேண்டும் டிஜாவியு என்பது இணைய ஆவணங்கள் இருமஆவணங்கள் வருடப்பட்ட ஆவணங்கள் அதிக தெளிவுதிறன் கொண்ட உருவப்படங்கள் ஆகியவற்றை கொண்ட ஒரு கோப்பிலுள்ள தகவல்களை நெருக்கி அழுத்தி தொகுத்து வைத்துகொண்டு தேவைப்படும்போது விரித்து காட்சியாக காணும் தொழில்நுட்பத்துடன் செயல்படும் ஒரு மென்பொருள் தளமாகும். இது விண்டோ லினக்ஸ் மேக் ஆகிய அனைத்து இயக்க-முறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது. அதுமட்டுமல்லாது Mozilla, Firefox, Konqueror, Netscape, Galeon, Opera ஆகிய அனைத்து இணைையஉலாவிகளிலும் கூடுதல் இணைப்பாக அமைத்து செயலபடும்வல்லமை கொண்டது. அதைவிட decoders, encoders, utilities ஆகிய கட்டளைவரி கருவியாக இது செயல்படும் திறன்மிக்கது. தற்போது 3.5.27 எனும் பதிப்பெண்ணுடனும் GNU GPL எனும் அனுமதியுடனும் நம்முடைய பயன்பாட்டிற்காக தயாராக இருக்கின்றது. அதனோடு djview4 எனும் கையடக்க பதிப்பாக கூட இது கிடைக்கின்றது. இதுவிண்டோ இயக்க முறைமை மட்டுமல்லாது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது.
இது இரும ஆவணங்களின் ,வருடபட்ட ஆவணங்களின் பக்கமொன்றிற்கு 300dpi ஆகவும், கோப்பின் கொள்ளளவு 5 முதல் 30KBவரையிலும் , PDF அல்லது TIFF ஆகியவற்றைவிட 3 முதல் 10 மடங்குவரை மிகச்சிறியதாகவும்இதனுடைய கோப்பின் அளவு இருக்குமாறு செய்திடலாம்.
வண்ணவருடபட்டஆவணங்களின் பக்கமொன்றிற்கு 300dpi ஆகவும் கோப்பின் கொள்ளளவு 30 முதல் 100KBவரையிலும் , JPEGஐவிட 5 முதல் 10 மடங்குவரை மிகச்சிறியதாகவும் இதனுடைய கோப்பின் அளவு இருக்குமாறு செய்திடலாம்.
உருவப்படங்களை JPEGஐவிட 2 மடங்கு சிறியதாகவும் குறைந்தஅளவே நினைவகத்தேவையுடன் இது செயல்படுகின்றது.
மிதக்கும் உருவப்படங்கள் GIF ஐவிட 2 மடங்கு சிறியதாகவும் பெரும்பாலான உரைகோப்பெனில் 10 மடங்குசிறியதாகவும், வருடபடாத இரும ஆவணங்களின் PDF அல்லது gzipped PS ஆகியவற்றைவிட 1 முதல் 3 மடங்குவரை மிகச்சிறியதாகவும் இதனுடைய கோப்பின் அளவு இருக்குமாறு செய்திடலாம்.
இந்த பயன்பாட்டில் ஆவணங்கள் இவ்வாறு சுருக்கப்பட்டாலும் அதனை திரையில் மிகவிரைவாக விரித்து காண்பிக்கவும் அடுத்தடுத்த பக்கங்களை திரையில் காண்பிக்கவும் செய்கின்றது என்ற செய்தியை மனதில் கொள்க. இதனுடைய சுருக்கமான தொழில்நுட்ப விவரங்களை அறிந்து கொள்ள http://djvu.sourceforge.net/abstract.html எனும் இணையமுகவரிக்கு செல்க .மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கும் http://www.djvuzone.org/ எனும் இணையமுகவரிக்கு செல்க.

PWMஎனும் கட்டற்ற பயன்பாட்டினை பயன்படுத்தி தானியங்கியாக கடவுச்சொற்களை மறுஅமைவுசெய்து கொள்ளமுடியும்

எந்தவொருபயனாளருக்கும் தான்பயன்படுத்திடும் இணைய பயன்பாடுகளில் மறந்துவிட்ட கடவுச்சொற்களை மறுகட்டமைவுசெய்வது தொடர்ந்து தன்னுடைய பணியை செய்வதற்காக கட்டளைவரிகளை உருவாக்குவதுதான் மிகவும் சிக்கலான தலைவலியான பிரச்சினையாகும் இதற்காக மைக்ரோசாப்ட்நிறுவனத்தின் கடவுச்சொல்மறுகட்டமைவு சுயசேவை (Self Service Password Reset (SSPR))எனும் பயன்பாடு கைகொடுக்கின்றது என்றாலும் இது கட்டணத்துடன் பயன்படுத்த அனுமதிக்கும் தனியுடமை பயன்பாடாகும்

இவ்வாறான சூழலில் கடவுச்சொல்லை மறுஅமைவுசெய்திடுக (puts password resets (PWM)) எனும் GPLv2 அனுமதியின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள தொருகட்டற்ற பயன்பாடு நமக்கு கைகொடுக்க வருகின்றது. பயனாளரே கடவுச்சொற்களை மறுகட்டமைவுசெய்து கொள்ளுமாறு இது உதவிடுகின்றது .மைக்ரோ சாப்டின் SSPR எனும் தனியுடைமை பயன்பாடானது கட்டணத்துடன் மட்டுமே பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படுகின்றது. ஆனால் இந்த PWM கட்டணமில்லாமலேயே பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் SSPR எனும் பயன்பாடானது விண்டோ இயக்கமுறைமையில் மட்டுமே செயல்படும் திறன்கொண்டது. ஆனால் PWM எனும் பயன்பாடானது விண்டோ இயக்கமுறைமைமட்டுமல்லாது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது. இந்த PWM பயன்பாட்டினை மெய்நிகர் லினக்ஸ் இயக்கமுறைமையில் செயல்படச்செய்து அனைத்து வலைபின்னல் இணைப்பிலும் செயல்படும் தன்மைகொண்டது. இதனை LDAP சூழலில் Apache Tomcat இன்மீது இயங்கச்செய்து நம்முடைய இணையஉலாவியின் அடிப்படையிலான முகப்பு பக்கத்தின் வாயிலாக நிருவகிக்கமுடியும்.தேவையெனில் மறுகட்டமைவுசெய்திடும் கடவுச்சொல்லை மின்னஞ்சல் , குறுஞ்செய்தி ஆகியவற்றின் வாயிலாக சென்றடையுமாறு செயல்படுத்திடமுடியு.ம் மேலும் விவரங்களுக்கு https://github.com/pwm-project/pwm எனும் இணையமுகவரிக்கு செல்க

சி எனும் கணினிமொழியில் இயக்கிகளை(operators) பயன்படுத்தாமல் இரு எண்களின் கூடுதல்களை எளிதாக கணக்கிடமுடியும்

எந்தவொரு கணினிமொழியிலும் நாம் விரும்பும் எந்தவொருபயன்பாடுகளையும் உருவாக்குவதற்கு இயக்கிகளே அடிப்படையாகும் அவ்வாறான இயக்கிகள் இல்லாமல் இரண்டு எண்களின் கூடுதலை எவ்வாறு காண்பது என்பதுதான் நம்முன் உள்ள மிகப்பெரிய சிக்கலான கேள்விக்குறியாகும் நிற்க! சி எனும் கணினிமொழியில் அவ்வாறான இயக்கிகள் எதையும் பயன்படுத்தாமலேயே தந்திரமான வழியில் இரு எண்களின் கூடுதல் கணக்கிடமுடியும். அதற்கான முதல்படிமுறையாக நம்முடைய வழக்கமான “அனைவருக்கும் வணக்கம்!” எனும் நிரல்தொடரில் printf() எனும் கட்டளைக்கான குறைந்தபட்ச காலிஇடைவெளி விடுவதை பயன்படுத்தி கொள்ளவிருக்கின்றோம். உதாரணமாக x எண்ணிக்கையிலான காலி இடைவெளியை “அனைவருக்கும் வணக்கம்!” எனும் சொல்லிற்குமுன் printf() எனும் கட்டளையை பயன்படுத்தி விடுவதாக கொள்வோம் இதனைதொடர்ந்து printf() எனும் கட்டளையானது குறிப்பிட்ட காலி இடைவெளியை விடச்செய்து அதன்பின்னர் நாம் அச்சிடவிரும்பம் “அனைவருக்கும் வணக்கம்!” எனும் எழுத்துகளை அச்சிடுகின்றது அதற்கான நிரல்தொடர்பின்வருமாறு
#include
main() {
int x = 10;
printf(“%*cஅனைவருக்கும் வணக்கம்!, x, ‘ ‘);
}
இதனுடைய வெளியீடு
அனைவருக்கும் வணக்கம்!
இதே செயலியை பயன்படுத்தி x , y ஆகிய இருஎண்களின் கூடுதலான x + y என்பதை காணவிருக் கின்றோம். மேலே கூறியஅதே வழிமுறையில் xஎண்ணிக்கையிலான காலி இடைவெளி அதனைதொடர்ந்து y எண்ணிக்கையிலான காலி இடைவெளி இறுதியாக printf() எனும் கட்டளைவரியின் வாயிலாக நாம் காணவிழையும் கூடுதலை திரையில் பிரிதிபலிக்கசெய்யும் அதற்கான நிரல்தொடர் பின்வருமாறு
#include
int add(int x, int y) {
int len;
len = printf(“%*c%*c”, x, ‘ ‘, y, ‘ ‘);
return len;
}
main() {
int x = 10, y = 20;
int res = add(x, y);
printf(“\nஇந்தஇரு எண்களின் கூடுதல்: %d”, res);
}
வெளியீடு
இந்த இருஎண்களின் கூடுதல்: 30 என திரையில் காண்பிக்கசெய்கின்றது

இரவுநேரத்தில்வாகணஓட்டிகளை விழிப்புணர்வுடன் செயல்படஉதவிடும் கருவி

நான்கு சக்கரவாகணங்களை ஓட்டிடும் வாகணஓட்டிகளின் உடலுழைப்பானது ஒரேமாதிரியாக தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருப்பதால் அவர்களுடைய உடலும் உள்ளமும் சேர்ந்து ஒரேநேரத்தில் சோர்வடைகின்றன. அதிலும் இரவுநேரங்களில் வாகணங்களை ஓட்டிடும்போது தூக்க கலக்கம் அவர்களுடைய விழிப்புணர்வை ஒருசிலநேரங்களில் தடுமாறசெய்துவிடுகின்றன. இதனால் எதிர்பாராத விபத்துகள் இரவுநேரங்களில் அதிகஅளவுஏற்படுகின்றன. அவ்வாறான நிலையில் வாகண ஓட்டிகளை எச்சரித்து விழிப்புணர்வுடன் வாகணத்தை இயக்குவதற்கான திறன்பேசி பயன்பாடு ஒன்று தற்போதுவெளியிடப்பட்டுள்ளது. இந்த திறன்பேசி பயன்பாடானது ஓட்டுனர்களின் முகபாவணையிலிருந்து குறிப்பாக தூக்ககலக்கத்தில் இருக்கும் நிலையில் நம்முடைய கண்ணிமை மூடப்போவதையும் தலையின் இருப்பையும் அறிந்து உடனடியாக அவ்வோட்டுனரை எச்சரிக்கின்றது இதற்காக steering wheel இல் கேமராஒன்று அந்த ஒட்டுனரின் முகத்தினை நேரடியாக தெரியுமாறு பொருத்தப்படுகின்றது. அது தூக்ககலக்கத்தில் இருக்கும் நிலையில் வாகண ஓட்டுநருடைய கண்ணிமை மூடப்போவதையும் தலையின் இருப்பையும் அறிந்து உடனடியாக எச்சரிக்கை மணி ஒலிப்பதின் வாயிலாக அவ்வோட்டுனரை எச்சரிக்கின்றது. அதனைதொடர்ந்து அவ்வோட்டுநர் தன்னுடைய கைகளால் அந்த எச்சரிக்கைமணிஒலிப்பதை நிறுத்தம்செய்யும் வரை அது ஒலித்து கொண்டேயிருக்கும். இந்த எச்சரிக்கை கருவி வாகண ஓட்டுனர்களுக்கு மட்டுமல்லாது தொழிலகங்களில் இரவுபணிபுரியும் தொழிலாளர்கள் தொடர்ந்து விழிப்புடன் பணிபுரியும் வசதியையும் வழங்குகின்றது என்ற செய்தியை மனதில் கொள்க. அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் தற்போது அனைத்து வாகணங்களிலும் இந்த கருவியை பொருத்திடுமாறு வலியுறுத்துகின்றன என்ற கூடுதல்செய்தியையும் மனதில் கொள்க.

நம்முடைய பிள்ளைகளுக்கு விளையாட்டின் வாயிலாக கல்விகற்க உதவிடும் கட்டற்ற பயன்பாடுகள்

நம்முடைய பிள்ளைகளை எப்போதும் புத்தகத்தை படி புத்தகத்தைபடி என தொந்திரவுசெய்து எரிச்சல்படுத்திடாமல் எளியவிளையாட்டுகளின் வாயிலாககூட நம்முடைய பிள்ளைகளுக்குத் தேவையான கல்வியறிவை அவர்கள் பெறுமாறு செய்வதற்காக ஏராளமான கட்டற்ற கருவிகள் உள்ளனஅவற்றுள்ஒருசில பின்வருமாறு
1.Childsplay என்பது GPLv2 எனும் அனுமதியின் அடிப்படையில்வெளியிடப்பட்டதொரு டஜன்கணக்கான விளையாட்டுகளின் வாயிலாக பிள்ளைகள் கல்விகற்பதற்கான கட்டற்ற கருவியாகும் எழுத்துகளை அறிந்து கொள்ளவும் நினைவகத்திறனை மேம்படுத்திகொள்ளவும் இதனுடைய விளையாட்டுகள் பயன்படுகின்றன இதனை பயன்படுத்தி கொள்வதற்காக http://www.childsplay.mobi/ எனும் இணையதளத்திற்கு செல்க.
2.eduActiv8 என்பது பைத்தான் எனும் கணினிமொழியால் உருவாக்கப்பட்டGPLv3 எனும் அனுமதியின் அடிப்படையில்வெளியிடப்பட்டதொரு விளையாட்டுகளின் வாயிலாக பிள்ளைகள் கல்விகற்பதற்கான மற்றொரு கட்டற்ற கருவியாகும். இதன்வாயிலாக அடிப்படை கணிதம் ஆங்கில மொழியை கற்பதற்கான காலிஇடம்நிரப்புதல் பொருத்துதல் போன்ற விளையாட்டுகளின் வாயிலாக பிள்ளைகளின் கல்வியறிவை மேம்படுத்திட உதவுகின்றது. இதனை பயன்படுத்தி கொள்வதற்காக https://www.eduactiv8.org/ எனும் இணையதளத்திற்கு செல்க
3.Gcompris என்பது GPLv3 எனும் அனுமதியின் அடிப்படையில்வெளியிடப்பட்டதொரு விளையாட்டுகளின் வாயிலாக பிள்ளைகள் கல்விகற்பதற்கான பிரிதொரு கட்டற்ற கருவியாகும். பத்துவயதிற்குள் உள்ள பிள்ளைகள் எளிதாக இதிலுள்ள படம்வரைதல் பொருத்துதல் போன்ற 130 இற்குஅதிமான விளையாட்டுகளின் வாயிலாக கல்விகற்க முடியும்.இதனை பயன்படுத்தி கொள்வதற்காக https://gcompris.net/index-en.html எனும் இணையதளத்திற்கு செல்க.
4.Feed the Monster என்பதும் விளையாட்டுகளின் வாயிலாக பிள்ளைகள் கல்விகற்பதற்கான ஒரு கட்டற்ற கருவியாகும். இது 40 இற்கும் அதிகமான மொழிகளில் விளையாட்டின் வாயிலாக பி்ள்ளை கல்விகற்பதற்காக வழிகாட்டிடுகின்றது. இதனை பயன்படுத்தி கொள்வதற்காக https://www.curiouslearning.org/ எனும் இணையதளத்திற்கு செல்க.
5.Syntax Untanglerஎன்பது GPLv2 எனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடப் பட்டதொரு விளையாட்டுகளின் வாயிலாக பிள்ளைகள் கல்விகற்பதற்கான மேலுமொரு கட்டற்ற கருவியாகும். இதன் வாயிலாக வெளிநாட்டு மொழிகளைகூட விளையாட்டுகளின் வாயிலாக கற்றுகொள்ளமுடியும். மொழியறிவை மிகஎளிதாக அறிந்து கொள்ள இதுஉதவுகின்றது. இதனை பயன்படுத்தி கொள்வதற்காக https://courses.dcs.wisc.edu/untangler/ எனும் இணையதளத்திற்கு செல்க.

Previous Older Entries