அறிந்து கொள்வோம் அக்சஸ் 2003-தொடர்-பகுதி-6 வினா எழுப்பினால் விடை கிடைக்க…

அறிந்து கொள்வோம் அக்சஸ் 2003-தொடர்-பகுதி-6 வினா எழுப்பினால் விடை கிடைக்க…
நமக்குப் பயன்படும் விவரங்களை அட்டவணையாக தொகுத்து, அக்சஸ் மூலம் கணினியின் நினைவகத்தில் பதிவு செய்துவிட்டோம்.  இப்போது நமக்கு குறிப்பிட்ட விவரம் மட்டும் தேவையெனில், அதற்கான வினா(query)  எழுப்பினால், அக்சஸ் உடனடியாக இந்த விவரங்களை நாம் கேட்டவாறு திரையில் பிரதிபலிக்கச் செய்யும்.  அக்சஸில் உள்ள இந்த வினா வகைகளைப் பற்றி இப்போது காண்போம்.

வினா வகை

1 . தெரிவு செய்வினா (select query ) இது குறிப்பிட்ட விவரங்களை மட்டும் தேவையானவாறு காண்பிக்க உதவுகின்றது.

2. மொத்த தெரிவு செய்வினா ( total query) இது மொத்தமாக தெரிவு செய்யப்பட்ட விவரங்களை காண்பிக்க உதவுகின்றது.

3.  செயல்வினா  (action query ) இது புதிய அட்டவணையை உருவாக்க உதவுகின்றது

4. குறுக்குத்தாவி வினா(Cross tab query)-இது விடைதாள் போன்று நிரல் நிரையுடன் பிரதி பலிக்கச் செய்ய உதவுகின்றது.

5.  வடிவமைக்கப்பட்ட வினவுமொழி ( SQL) இது சிறப்புக் கட்டளைகளை உருவாக்க உதவுகின்றது

6.முதல் (n)இடங்களை தெரிவு செய்வினா (Top(n) )  மற்ற ஐந்து வினா மூலம் இது உருவாக்கப்படுகிறது.

வினாவின் ஆற்றல் 

இந்த வினாவானது அட்டவணைகளில் சேமித்து வைத்துள்ள தரவுகளை நாம் விரும்புகின்றவாறு  வித்தியாசமாக மெய்நிகராக பார்வையிடும் (பிரதிபலிக்கும்) வசதியை நமக்கு வழங்குகிறது.  மேலும் இது தொடர்ச்சியாக இவ்வாறு பார்வையிடு வதற்கான நெகிழ்வுத்தன்மையுடையதான சக்தி வாய்ந்த கருவியாகவும் பயன் படுகிறது.

இதன் மூலம் அட்டவணையை தெரிவு செய்து அதிலிருக்கும் தகவல்களைப் பெறலாம்.  மேலும் அட்டவணையில் உள்ள புலங்களை தெரிவு செய்து அதில் உள்ள விரவங்களையும் மெய் நிகராக திரையில் பிரதிபலிக்கச் செய்யலாம். அதுமட்டுமன்று நாம் தெரிவு செய்யும் ஆவணங்களை வரிசைப்படுத்தி பார்வையிடலாம்.  சராசரி, கூடுதல் போன்ற கணக்கீடுகளை மிகத்துல்லியமாக கணக்கிட்டு பார்வையிடலாம்.  இதன்மூலம் தேவை யெனில் புதிய அட்டவணையை உருவாக்க முடியும்.  வினாவின் அடிப்படையில் படிவங்கள், அறிக்கைகள் ஆகியவற்றை உருவாக்கலாம். தேவையான துணை வினாவினை எழுப்பி விடைபெறலாம்.  இயக்க நேர அட்டவணையில்  தேவையெனில், மாற்றம் செய்தும் பார்வையிடலாம்.

இது போன்ற பல்வேறு வகையான திறன் வினாவிற்கு உண்டு என்பது இதன் மூலம் நம்மால் தெரிந்து கொள்ளமுடிகிறது.

  படம் 1

படம் 1 ல்  உள்ளவாறு வினா வடிவமைப்பு கருவி பட்டையில் உள்ள பொத்தானின்  அமைப்பை பற்றி இப்போது காண்போம்.

1.காட்சி  (view ) – முதல் பொத்தான்

2.சேமித்து பாதுகாத்தல் (save)- இரண்டாவது பொத்தான்

3.வினாவகை (query type)-  இருபதாவது பொத்தான்

4.இயக்குதல் (run) – பதின்மூன்றாவது பொத்தான்

5.அட்டவணையை காட்டுதல் (show table)- பதினான்காவது பொத்தான்

6.பண்பியல்புகள் (properties ) பதினேழாவது பொத்தான்

வினாவை உருவாக்குதல்

1 . தரவுதள மேலாண்மை சாளரத்தில் பிரதிபலிக்கும் வினாவிற்கான பொருள் (object) என்ற பொத்தானை சொடுக்குக.

2 . பின்னர் புதிய பொத்தானை (new button)  (இடது புறத்தில் இருந்து மூன்றாவதாக  உள்ளதை)  தெரிவு செய்து சொடுக்குக.

படம் 2

உடன் படம் 2 ல் உள்ளவாறு புதிய வினா (New Query) எனும் உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும் இந்த உரையாடல் பெட்டியில் ஐந்துவகையான வாய்ப்புகள் நமக்கு கிடைக்கின்றன அவை,

1 .  வடிவமைப்பு காட்சி ( Design view )

2 . சாதாரண வினா வித்தகர் ( query wizard )

3.  குறுக்குத்தாவி வித்தகர் ( Cross tab qury wizard )

4 . நகல் வினா வித்தகரை கண்டு பிடித்தல்(Find duplicates query wizard )

5 . ஒப்புமையில்லா வினா வித்தகரை கண்டுபிடித்தல்(Find unmatched query wizard)

முதலாவது வாய்ப்பான வடிவமைப்பு காட்சி என்பதை தெரிவு செய்து ok என்ற பொத்தானை சொடுக்குக.

    படம் 3

    உடன் படம் 3 ல் உள்ளவாறு query1 .select.Query என்ற ஒன்றும் அதனுள் Show Table என்ற உரையாடல் பெட்டியும் உள்ள இரண்டு சாளரங்கள் தோன்றும்.

Show Table என்ற உரையாடல் பெட்டியில் உள்ள அட்டவணையில் நமக்குத் தேவையான அட்டவணையை மட்டும் தெரிவு செய்து Add என்பதை தெரிவு செய்க. பின்னர் Close என்பதை தெரிவு செய்க.

    படம் 3 ல் உள்ளவாறு தெரிவு செய்யப்பட்ட அட்டவணைகளுடன் Query1Select.Query என்ற சாளரம் தரையில் தோன்றும் இது இரண்டு பாகங்களை உடையது.  மேற்பகுதி வினா உள்ளீடு செய்யும் பகுதியாகும் . கீழ்பகுதி தெரிவு செய்யப்பட்ட அட்டவணை யின் புலங்களுடன் பிரதிபலிக்கும் பகுதியாகும் .  கீழ்பகுதியில் புலத்தின் பெயர் (field Name), அட்டவணையின் பெயர் (Table Name ), வரிசைப்படுத்துதல் (Index), வரன்முறை (criteria), காண்பித்தல் (show)  போன்ற விவரங்கள் அடங்கியுள்ளன.  இரண்டிற்கும் இடையிலுள்ள தடித்த கோடு இரண்டு சாளரங்களின் அளவை மாற்றுவதற்கு பயன்படுவது .

தேவையான பாகங்களில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குவதன் மூலம் அல்லது இயக்கு விசை6 (F6) ஐ தட்டுவதன் மூலம் சாளரத்தின் மேல் புறத்திற்கோ , கீழ் புறத்திற்கோ மாற முடியும் .

1 . உள்ளீட்டு சாளரத்தில் உள்ள அட்டவணையில் ஒவ்வொரு புலமாக தெரிவு செய்து தேவையான புலங்களை இடம் சுட்டியால் தெரிவுசெய்து பிடித்துக் கொண்டு , அப்படியே இழுத்து வந்து கீழே உள்ள வடிவமைப்பு பாகத்தில் தேவையான இடத்தில்  விடுக.  இவ்வாறு இழுத்து வரும் போது சிறிய செவ்வக வடிவ பெட்டி ஒன்று தோன்றும் .

2 . வடிவமைப்பு பாகத்தில் உள்ள காலியாக உள்ள் புலத்தில் இடம் சுட்டியை வைத்து மேல் பாகத்திலுள்ள அட்டவணையின் புலத்தின் பெயரை தட்டுக.

3 . மற்றொரு வகையில் தேவையான காலியாக உள்ள இடத்தில் இடம் சுட்டியை வைத்து Dropdownlist என்ற பொத்தானை சொடுக்குக.  உடன் படம் 6 ல் உள்ளவாறு விரியும் புலங்களின் பெயரில் தேவையான புலத்தினை தெரிவு செய்க.

அடுத்தடுத்து உள்ள புலங்களை தெரிவு செய்தல்

1 .  கட்டளை சட்டத்தில் உள்ள பதிப்பித்தல்  (Edit) என்பதை தெரிவு செய்க. உடன் படம் 5ல்  உள்ளவாறு விரியும் பதிப்பிக்க (Edit)என்னும் பட்டியில் Delet என்பதை தெரிவு செய்க.  உடன் புலத்தின் பெயர் நீக்கப்பட்டு விடும்.

2 .  பின்னர் அட்டவணையை உள்ளீடு செய்யும் சாளரத்தின் அட்டவணை யிலுள்ள புலங்களின் பெயரை தெரிவு செய்க.  பின்னர் Shift என்ற விசையை பிடித்துக் கொண்டு கடைசி புலத்தினை  தெரிவு செய்க.

3 .  அதன்பின்னர் இடம் சுட்டியால் இடையிலுள்ள அனைத்து புலங்களையும் தெரிவு செய்து பொத்தானை அப்படியே பிடித்துக் கொள்க.

4 .  பின்னர் கீழே இழுத்து வந்து தேவையான காலியாக உள்ள  புலத்தில் வைத்து பொத்தானை விடுக.

தொடர்ச்சியற்ற இடங்களில் உள்ள புலங்களை தெரிவு செய்தல்

தேவையான முதல் புலத்தினை தெரிவு செய்து Ctrl என்ற விசையை பிடித்துக்கொள்க.  பின்னர் தேவையான ஒவ்வொரு புலத்தினையும் தெரிவு செய்க. பின்னர் இதனை இடம் சுட்டியால் பிடித்து அப்படியே இழுத்து வரவும். தேவையான காலியாக உள்ள புலத்தில் வைத்து பொத்தானை விடுக.

   அட்டவணையில் உள்ள மொத்த புலத்தினையும் தெரிவு செய்தல்

1 . அட்டவணையின் தலைப்பினை இடம்சுட்டியை வைத்து இருமுறை சொடுக்கிய பின்னர் அனைத்து புலங்களையும்  தெரிவு செய்க.  அப்படியே பிடித்து இழுத்து வந்து தேவையான காலியாக உள்ள புலத்தில் விடுக . இந்த வழிமுறைப்படி நெடுவரிசை அனைத்தும் தானாகவே இழுத்துவரும் புலங்களின் பெயரில் பொருத்த மானவை மட்டும் வரிசைப்படி நிரப்பப்படும்.

2 .  அட்டவணை தலைப்புக்குக் கீழ் முதலில் உள்ள (-) உடுக்குறியை சொடுக்குக. பின்னர்  தேவையான அனைத்து புலங்களையும் தெரிவு செய்க அதன்பின்னர் அப்படியே பிடித்து இழுத்துவந்து தேவையான இடத்தில் விடுக.

இயக்க நேர காட்சியை பிரதிபலித்தல்

இவ்வாறு  தெரிவு செய்யப்பட்ட புலங்களால் சேர்ந்த வினாவின் கட்டமைப்பில் உள்ளவாறு இயக்க நேர மதிப்பு காண்பதற்கு கட்டளை சட்டத்தில் உள்ள View  என்பதை  தெரிவு செய்க.

படம் 4

 உடன் படம் 4ல் உள்ளவாறு விரியும் பட்டியலில் Data sheet view என்பதை  தெரிவு செய்தவுடன் இயக்க நேர மதிப்பு பிரதிபலிக்கும்.  இவ்வாறான இயக்குநேர தரவுதாளில் புதிதாக தரவுகளை சேர்க்கவோ,  மாறுதல் செய்ய வோ முடியும் மேலும் பிரதிபலிக்கும் புலங்களின் வரிசையை நமக்குத் தேவையானவாறு  மாற்றம் செய்யவும் முடியும்.

இயக்குநேர தரவுதாளின் வரிசையை மாற்றம் வழிமுறைகள்

வடிவமைப்பு சாளரத்திலுள்ள  தேவையான புலத்தினை  தெரிவு செய்து  இடம் சுட்டியை வைத்து பிடித்துக் கொள்க.  அப்படியே இழுத்து வந்து மாறுதல் செய்ய வேண்டிய தேவையான இடத்தில் வைத்து பொத்தானை விடுக.

புலத்தினை நீக்குதல்

வடிவமைப்பு சாளரத்தில் உள்ள தேவையான புலத்தினை  தெரிவு செய்து Delete என்ற பொத்தானை தட்டுக.

புலத்தினை சேர்த்தல்

வினா உள்ளீடு செய்யும் சாளரத்தில் உள்ள அட்டவணையில் தேவையான புலத்தினை தெரிவு செய்து அப்படியே பிடித்து இழுத்து வந்த வடிவமைப்பு சாளரத்தில்  தேவையான இடத்தில் வைத்து பொத்தானை விடுக.

பிரதிபலிக்கும் புலத்தின் பெயரை மாற்றுதல்

வடிவமைப்பு சாளரத்தில் உள்ள பெயர் மாற்றம் செய்ய வேண்டிய புலத்தின் தலைப்பை  தெரிவு செய்து இயக்க விசை-2(F2) வை இழுத்து வந்து வடிவமைப்பு சாளரத்தில் தேவையான இடத்தில் வைத்து பொத்தானை விடுக.

அட்டவணையின் பெயரை பிரதிபலிக் செய்தல் / மறையச்செய்தல்

வடிவமைப்பு சாளரத்திலுள்ள புலங்களானது எந்த அட்டவணையிலிருந்து வந்தது என்ற பெயருடன் பிரதிபலிக்கும். இதற்காக கட்டளை சட்டத்தில் காட்சி view என்பதை தெரிவு செய்க.

உடன் படம் 4ல் உள்ளவாறு விரியும் காட்சி(view) என்ற உரையாடல் பெட்டியில் Table Name  என்பதை  தெரிவு செய்க.  இப்போது புலத்தில் அட்டவணையின் பெயர் மறைந்து விடும் .  மீண்டும் இதே வழிமுறைகளை பின்பற்றினால் அட்டவணையின் பெயர் பிரதிபலிக்கும்.

குறிப்பிட்ட புலத்தை மட்டும் காணும்படி செய்தல்

இயக்க நேரத்தில் பிரதிபலிக்கும் புலங்களில் குறிப்பிட்ட புலம் மட்டும் பிரதிபலித்தால் போதுமானது என நாம் எண்ணிடுவோம்.

அப்போது புதிய வினா (New Query) என்பதை தெரிவு செய்க.  தற்போதுள்ள இயக்க நேர அட்டவணையில் நமக்கு தேவையான புலத்தினை தவிர மற்றவைகளை நீக்கம் Delete செய்க. இப்போது நாம் விரும்பியவாறு குறிப்பிட்ட புலம் மட்டும் பிரதிபலிக்கும் .

புலங்களை வரிசையாக அடுக்குதல்

Memo,OLEobject புலங்களை தவிர மற்ற புலங்களை வரிசையாக அடுக்கலாம் (sort). அக்சஸ் ஆனது இடது ஓரத்திலுள்ள புலத்தின் தரவுகளுக்குக் கேற்ப வரிசையாக அடுக்கியிருக்கும்.  மற்ற புலங்களில் உள்ள தரவுகளுக்கேற்ப வரிசையாக அடுக்கிட வேண்டுமெனில், தேவையான புலத்தினை தெரிவு செய்க. பின்னர் sort என்பதை  தெரிவு செய்க.  அதன்பின்னர் கீழ்நோக்கு அம்புக் குறியை தெரிவு செய்க.  இறுதியாக ஏறுவரிசை(Ascending order) என்பதை தெரிவு செய்க.

எழுத்துவகை சாதாரண வரன்முறைகளை உள்ளீடு செய்தல்

தேவையான அட்டவணையை தெரிவு செய்க. பின்னர் அட்டவணையில் உள்ள தேவையான புலத்தினை  தெரிவு செய்க.  அதன்பின்னர் இதனை வடிவமைப்பு பலகத்தில் சேர்க்கவும்.

குறிப்பிட்ட புலத்தில் உள்ள வரன்முறையை (criteria) தெரிவு  செய்க.  தேவையான வகையை உள்ளீடு செய்க.

வரன் முறைகளை நீக்குதல்

தரவுத்தாள் பொத்தானை சொடுக்குக.  உடன் நாம் வரன் முறையில்  செய்தவாறு மெய்நிகர் அட்டவணை திரையில் பிரதிபலிக்கும் .  வினா வடிவமைப்பு செய்வதற்கு கட்டளை சட்டத்தில் உள்ள  Edit என்பதை தெரிவு செய்க.

படம் 5

 உடன்  படம் 5ல் உள்ளவாறு விரியும் பட்டியலில் Delete என்பதை தெரிவு செய்தால் உருவாக்கிய வரன் முறை நீக்கப்பட்டுவிடும்.

மற்ற சாதாரண வரன்முறை உள்ளீடு செய்தல்

வினா அமைப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட வரன்முறையை சேர்க்க முடியும் முதலில் தேவையான அட்டவணையில் புதிய வினாவை தயார் செய்க.  மேலும் தேவையான புலத்தையும் தெரிவு  செய்து சேர்க்கவும்.இதன் பின்னர்  Criteria  என்பதை  தெரிவு செய்க.  Both  என்பதை உள்ளீடு செய்க.  criteria  என்பதை மீண்டும்   தெரிவு செய்க . தேவையான விவரங்களை உள்ளீடு செய்க.  இறுதியாக தரவுத்தாள் பொத்தானை சொடுக்குக.

இயக்குநேர அட்டவணையை அச்சிடுதல்

வினா மூலம் உருவாக்கிய தரவுத்தாளை தெரிவு  செய்க.  தரவுத்தாள் காட்சியளிக்கவில்லையெனில், View என்பதை தெரிவு செய்தபின் விரியும் பட்டியலில்  Data  Sheet என்பதை தெரிவு செய்க.  பின்னர் Print  என்பதை தெரிவு  செய்க.  அதன் பின்னர் விரியும் பட்டியலில் Print என்பதை தெரிவு செய்க. உடன் தோன்றும் Print  என்ற உரையாடல் பெட்டியில் தேவையான விவரங்களை உள்ளீடு செய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நமக்குத தேவையான வினா வகை இயக்க நேர தரவுத்தாளில் அச்சாகி கிடைக்கும்.

வினாவை சேமித்தல்

தயார் செய்யப்பட்ட வினா வடிவமைப்பை சேமித்து வைக்க விரும்பினால் ,  வினா வடிவமைப்பு மட்டும்தான் சேமிக்க முடியும்.  இயக்க நேர தரவுத்தாளில் உள்ள விவரங்களை சேமிக்க முடியாது.  File என்பதை  தெரிவு செய்க விரியும் பட்டியலில்  Save என்பதை தெரிவு செய்க. உடன் எந்த பெயரில் இந்த கோப்பினை சேமிப்பது என்று கேட்கும், நாம் விரும்பிய பெயரை உள்ளீடு செய்து ok என்றபொத்தானை  தெரிவு செய்து சொடுக்குக.

வினாவகை சாளரத்தை மூடும் வழிகள்

1 . கட்டளை சட்டத்தில் உள்ளகோப்பு என்பதை தெரிவு செய்தவுடன் விரியும் பட்டியலில் தெரியும் Close  என்பதை தெரிவு  செய்வதன் மூலம் இந்த சாளரத்தை மூடலாம்.

2 .  கட்டுப்பாட்டு பெட்டியிலுள்  Close என்பதை தெரிவு செய்தும் மூடலாம்.

3 .  Ctrl உடன் F4 என்ற விசையை சேர்த்து தட்டுவதன் மூலமும் மூடலாம். இந்த மூன்று வழிகளில் வினா வகை சாளரத்தை மூடலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட அட்டவணையில் இருந்து எவ்வாறு வினா உருவாக்குவது எனக் காண்போம் .  தரவுத்தள மேலாண்மை சாளரத்திலுள்ள  வினா என்னும் பணிக்குறி உள்ள பொருளை (Query object) தெரிவு  செய்க.

புதிய வினா (New query) என்பதை கருவிப் பட்டியலில் தெரிவு   செய்க.  உடன் தோன்றும் உரையாடல் பெட்டியில் வடிவமைப்பு காட்சி (Design view) என்பதை தெரிவு  செய்க.

பின்னர் தோன்றும் Show table என்ற உரையாடல் பெட்டியில் தேவையான அட்டவணைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக தெரிவு செய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

அதன் பின்னர்    Close என்ற பொத்தானை தெரிவு  செய்து,  Showtable என்ற உரையாடல் பெட்டியை மூடி விடுக.

நம்மால் தெரிவு செய்யப்பட்ட அட்டவணைகளுக்கு இடையே ஒன்றுக்கொன்று தொடர்பு இருந்தால் உறவுக்கோடு ஒன்று பிரதிபலிகும்.  வினா உள்ளீட்டு பலகத்திற்கு கீழ்பகுதியில் உள்ள தடிமனாக இருக்கும் கோட்டினைப் பிடித்து இழுத்து சென்று தேவையானவாறு சாளரத்தின் அளவை மாற்றிக் கொள்ளுங்கள்.

அட்டவணைகள்  இருக்கும் வரிசையை முன்பின் தேவையானவாறு அதனை பிடித்து இழுத்து சென்று தேவையான இடத்தில் நிறுத்தி வைத்து மாற்றலாம்.

தேவையில்லாத அட்டவணை ஏதேனும் பிரதிபலித்தால் அதனை தெரிவு செய்க.   Edit  என்பதை தெரிவு செய்க. விரியும் கட்டளை பட்டியலில் delete என்பதை  தெரிவு செய்தால் தேவையில்லாத அட்டவணை நீக்கப்பட்டுவிடும்.

தவறுதலாக ஏதேனும் அட்டவணை நீக்கப்பட்டு இருந்தால் அல்லது மேலும் அட்டவணையில் வினா உள்ளீட்டு பலகத்தில் அதனுடன் ஏதேனும் சேர்க்க வேண்டி இருந்தால் வலதுபுறம் இடம் சுட்டியை சொடுக்குக.  உடன் தோன்றும் குறுக்கு வழி கட்டளை பட்டியில்  Show table என்பதை தெரிவு  செய்க.  பின்னர் தோன்றிடும்   Show table  என்ற உரையாடல்பெட்டியில் பிரதிபலிக்கும் அட்டவணை பெயர்களில் சேர்க்க வேண்டிய பெயரினை  தெரிவு செய்து Add என்ற பொத்தானை சொடுக்குக.  பின்னர் Close என்ற பொத்தானை சொடுக்கி மூடிவிடுக.

வினா உள்ளீட்டு பலகத்தில் உள்ள அட்டவணையில் முன்பு கூறியவாறு தேவையான புலப் பெயிரின்மீது இடம்சுட்டியை வைத்து இருமுறை சொடுக்குக.  அப்படியே பிடித்து இழுத்து வந்து காலியாக உள்ள புலத்தில் வைத்து பொத்தானை விடுக.

 படம் 6

 படம் 6ல் உள்ளவாறு விரியும் கீழிறங்கு பட்டியலின் மூலம் தேவையான புலத்தினை தெரிவு செய்க.  இவ்வாறு கொண்டுவந்து சேர்த்த புலத்தில் தொடர்புடைய அட்டவணையின் பெயரை  பிரதிபலிக்க செய்ய காட்சி View    என்பதை  தெரிவு செய்க. உடன்  விரியும் கட்டளை பட்டியில் table name  என்பதை  தெரிவு செய்க.

ஒரே சமயத்தில் பல புலங்களை சேர்த்தல்

ஒவ்வொரு அட்டவணையிலும் தொடர்ச்சியான புலங்கள் தேவைப்படும் எனில், முதல் புலத்தில் இடம் சுட்டியை வைத்து தெரிவு  செய்து Shift  என்ற விசையை அழுத்தியாவாறு தேவையான இறுதி புலம் வரை தெரிவு செய்து அப்படியே பிடித்து இழுத்து வந்து காலியாக உள்ள புலத்தில் வைத்துவிடுக.  இவ்வாறே மற்ற அட்டவணைகளிலும் செய்க.

அட்டவணைகளுக்கு இடையே வினா மூலம் உறவை உருவாக்குதல்

அட்டவணையை வடிவமைப்பு செய்யும்போதே உறவை ஏற்படுத்தி இருந்தால், அட்டவணைகளை Show table மூலம் தெரிவு  செய்து கொண்டுவரும் போது உறவுகோடு இல்லையெனில், அட்டவணையில் உள்ள நாம் விரும்பும் புலத்தினை தெரிவு செய்து இடம் சுட்டியை வைத்து பிடித்து அப்படியே இழுத்து வந்து இணைப்பு ஏற்படுத்த வேண்டிய அட்டவணையில் விடவும்.  உடன் இந்த இரு அட்டவணைகளுக்கு இடையே தொடர்பு கோடு தானாகவே படம் 7ல் உள்ளவாறு ஏற்படுத்தப்படும் .

படம் 7

இந்த இணைப்புக் கோட்டில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலப்புற பொத்தானை சொடுக்குக.  அல்லது கட்டளை சட்டத்தில் உள்ள view என்பதை  தெரிவு செய்க. உடன் விரியும் பட்டியலில் join properties என்பதை தெரிவு செய்க.

உடன் join properties என்ற உரையாடல் பெட்டி படம் 8ல் உள்ளவாறு தோன்றும். இதில் உள்ள இரண்டாவது உள்ள விருப்பத்தை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.

இரண்டு அட்டவணைகளுக்கு இடையே இணைப்பு தேவையில்லை யெனில், இணைப்பு கோட்டின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலப்புற பொத்தானை  இருமுறை சொடுக்குக.  உடன்விரியும் குறுவழி கட்டளை பட்டியலில் delete என்பதை தெரிவு  செய்க.  உடன் இணைப்புக்கோடு நீக்கப்படும்.

இந்த வினா வகை மூலம் ஏற்படும் இணைப்பானது நான்கு வகைப்படும்.  அவை உள்ளிணைப்பு அல்லது சம இணைப்பு(inner Joint or Equal Joint), வெளி இணைப்பு (Outer Joint), தனக்குள் இணைப்பு (self Joint), குறுக்கு இணைப்பு அல்லது கார்டீசன் இணைப்பு (Cross product joint or Cartesian joint)

சம இணைப்பு( Equal Joint)  இரண்டு அட்டவணைகளுக்கு இடையே உள்ள அனைத்து புலங்களும் ஒன்றுக்கொன்று சம மதிப்புடன் உள்ள இணைப்பாகும்.

வலதுபுற வெளி இணைப்பு(Right Outer Joint )  முதல் அட்டவணையில் அனைத்து புலங்களும்  இரண்டாவது அட்டவணையின் குறிப்பிட்ட புலங்கள் மட்டும் இணைக்கப்பட்டிருப்பது வலது புற வெளி இணைப்பு எனப்படும்.

இடதுபுற வெளி இணைப்பு( Left Outer Joint )  இரண்டாவது அட்டவணையின் அனைத்து புலங்களும் முதல் அட்டவணையில் உள்ள குறிப்பிட்ட புலங்களோடு மட்டும் ஏற்படும் இணைப்பிற்கு இடதுபுற  வெளி இணைப்பு எனப்படும்.

இரு அட்டவணைகளுக்கு இடையே உள்ள தொடர்பு கோட்டில் இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக அல்லது கட்டளை சட்டத்தில் உள்ள View என்பதை தெரிவு செய்க. உடன் விரியும் பட்டியில் joint Properties என்பதை  தெரிவு செய்க.

  படம் 8   

  படம் 8ல் உள்ளவாறு  தோன்றும் joint Properties என்ற உரையாடல் பெட்டியில் முதல் வாய்ப்பைத் தெரிவு செய்தால் சம இணைப்பு (Equal Joint  ) கிடைக்கும்.

இரண்டாவது வாய்ப்பினை தெரிவு செய்தால் வலதுபுற வெளி இணைப்பு கிடைக்கும்.

மூன்றாவது வாய்ப்பை தெரிவு  செய்தால் இடதுபுறம் இணைப்பு கிடைக்கும்.

குறுக்கு இணைப்பு அல்லது கார்டீசன் இணைப்பு (Cross product joint or Cartesian joint) இரண்டு அட்டவணைகளுக்கு இடையே உள்ள புலங்களின் பெயர், மதிப்பு, எதுவும் சமமாக இல்லை.  ஆனால், இணைப்பை ஏற்படுத்தி இருக்கின்றோம் எனில் முதல் அட்டவணையில் உள்ள ஒவ்வொரு புலத்திற்கும் இரண்டாவது அட்டவணையில் அனைத்து புலங்களும் மீண்டும் மீண்டும்ஒன்றுக் கொன்று இணைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும் .

சான்றாக, முதல் அட்டவணையில் ஆறு புலங்கள் இருக்கின்றன.  இரண்டாவது அட்டவணையில் எட்டு புலங்கள் இருக்கின்றன எனில் மொத்தம் 6X8=48 வகையில் இணைப்பு ஏற்படுத்துவது கார்டீசன் இணைப்பு எனப்படும்.

அறிந்து கொள்வோம் அக்சஸ் 2003-தொடர்-பகுதி-4 அட்டவணையில் தரவுகளை உள்ளீடு செய்தல்

அறிந்து கொள்வோம் அக்சஸ் 2003-தொடர்-பகுதி-4 அட்டவணையில் தரவுகளை உள்ளீடு செய்தல் 

தரவுகள் நெடுவரிசையிலும் கிடைவரிசையிலும் பிரதிபலிப்பதால் ந்த தரவு தாளானது ஒரு அட்டவணை ல்லது விரிதாள் போன்றே தோன்றும்.

ருள்பட்டையை கீழாகவோ, மேலாகவோ யக்குவதன் மூலம் திரையில் காணாத பதிவேடுகளை(Records) கிடைவரிசையில் காண முடியும். வ்வாறே வலதுபுறம் ல்லது டதுபுறம் ருள்பட்டையை யக்கி காணாத புலங்களை (Fields) நெடுவரிசையில் காண முடியும்.

ந்த தரவு தாளில் சுட்டிநகர்வதற்கான விசைப்பலகையின் யக்கத்தைப்பற்றி இப்போது காண்போம்.

.எண்

தேவையான பகுதி keystroke
1. அடுத்த புலம் (next field) Tab
2. முந்தையபுலம் (previous field)  Shift+Tab
3. இப்போதைய பதிவேட்டின் முதல் புலம்  (First field of current record) Home
4. இப்போதைய பதிவேட்டின் கடைசி புலம் (Last field of current record) End
5. அடுத்த பதிவேடு (next record) Down arrow ↓
6. முந்தைய பதிவேடு (Previous record)  Up arrow ↑
7. முதல் பதிவேட்டின் முதல் புலம் (first field of first record)  Ctrl + Home
8. கடைசி பதிவேட்டின் கடைசி புலம்  (Lat field of last record) Ctrl + End
9. ஓரு பக்கம் மேலே செல்ல (Scroll up one page) PgUp
10. ஓரு பக்கம் கீழே செல்ல (scroll down one page) PgDn
11. குறிப்பிட்ட பதிவேட்டிற்கு செல்ல  (go to required record number)  F5

மேலும் வழி நடத்தும் பொத்தானை (Navigation Button)பற்றி ப்போது பார்ப்போம். தரவுதாளின் டிப்புறத்தில் ள்ள பட்டிக்கு நிலைமைப் பட்டி(Status bar) ன்பர். தில் று யக்கு விசைகள்ள்ளன. படம் 1ல் ள்ளவாறு தோன்றும். யக்குவரிசையில் டப்புறம் ள்ள ரண்டு பொத்தான்களும், முதல் பதிவேடு, முந்தைய பதிவேட்டிற்கு செல்வதற்கு தவுவதாகும்.

வலப்புறம் ள்ள மூன்று பொத்தான்களும் டுத்த பதிவேடு, கடைசி பதிவேடு, புதிய பதிவேடுஆகியவற்றிற்கு செல்லதவுவதாகும்.

பதிவேட்டின்ண்(Record number) குறிப்பிடப்படும் பகுதியில் பதிவேட்டின் ண்ணை குறிப்பிட்டு உள்ளீட்டு விசையை (Enter key) அழுத்தியவுடன் ந்த குறிப்பிட்ட பதிவேட்டினை திரையில் காண முடியும்.

படம் – 1

தரவுத்தாளினை திறக்கும் வழி

கீழ்க்கண்ட படிநிலைகளை பின்பற்றுவதன்மூலம் ஓரு தரவுத்தாளை திறக்கு முடியும். க்சஸ் 2000 அல்லதுஅக்சஸ் 2003 ன்ற சாளரத்தை திறந்து கொள்க. டன் விரியும் Getting Started ன்ற சாளரத்தில் தெரியும் open ன்பதை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றும் கோப்பில் நமக்கு தேவையான கோப்பினை தெரிவு செய்க. பின்னர் தோன்றும் ட்டவணையை தெரிவு செய்து ok என்ற பொத்தானை சொடுக்குக

தரவுகளைள்ளீடுசெய்தல்

வ்வாறு திறக்கப்பட்ட தரவுதாளில் முன்பே பதிவுகள் ருப்பின் னைத்து பதிவேடுகளையும் நம்மால் பார்க்க முடியும். முதல் பதிவேட்டில் டம் சுட்டி பிரதிபலிக்கும். னால் புதியதாக ருவாக்கப்பட்ட ட்டவணைகளில் மைப்பு மட்டுமே தோன்றும்.

நாம் ள்ளீடு செய்ய விரும்பும் தகவல்களை முதல் புலத்தில் ள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை (Enter key) தட்டியவுடன் டுத்த புலத்திற்கு செல்லும். திலும் தற்கான தகவல்களை ள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை (Enter key) தட்டுக. வ்வாறே நமக்கு தேவையான னைத்து பதிவேடுகளின் தரவுகளையும் ள்ளீடு செய்.

பதிவேடுகளை திருத்தம் செய்தல்

தாவது தவறாக தகவல்களை ள்ளீடு செய்திருப்பது தெரியவந்தால் டன் டம் சுட்டியை மேல்புறம் ல்லது கீழ்புறம், வலப்புறம் ல்லது டப்புறம் நகரும் விசையை தட்டி மாற்றம் செய்ய வேண்டிய புலத்தில் நிறுத்தி தகவல்களை மாற்றம் செய்க.

புதிய பதிவேடுகளை சேர்த்தல்

கட்டளை சட்டத்தில் ள்ள சேர்க்க (Insert) ன்பதை தெரிவு செய்தவுடன் படம்-2-ல் ள்ளவாறு விரியும் பட்டியில் புதிய பதிவேடு(new record) ன்பதை சொடுக்கியவுடன் புதிய பதிவேடு திரையில் தோன்றும்.

படம் – 2

கட்டளை சட்டத்தில் ள்ள பதிப்பிக்க (Edit) ன்பதை தெரிவு செய்யவும். டன் படம்-3-ல் ள்ளவாறு விரியும் பட்டியில் Goto ன்பதை தெரிவு செய்க உடன் விரியும் பட்டியில் புதிய பதிவேடு(new record) ன்பதை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் புதிய பதிவேடு திரையில் தோன்றும்.

படம் – 3

கடைசி பதிவேட்டில் இடம்சுட்டியை நிறுத்தி கொண்டு கீழ்நோக்கும் ம்புக்குறி விசையை தட்டுவதன் மூலம் புதிய பதிவேட்டிற்கு செல்லலாம்.

படம் – 4

சில நேரங்களில் ப்போது தோன்றும் பதிவேட்டில் மேலும் தகவல்களை ள்ளீடு செய்வதற்கான டம் பற்றாத நிலையிலும் நிறைய பதிவேடுகள் ள்ளீடு செய்ய வேண்டியிருக்கும் போதும் கட்டளை சட்டத்தில் பதிவேடு(Record) ன்பதை தெரிவு செய்க. டன் படம்-4-ல் ள்ளவாறு விரியும் பட்டியில் Data Entry ன்பதை தெரிவு செய்க.

பதிவேடுகளை நீக்குதல்

நீக்கம் செய்ய வேண்டிய பதிவேடுகளை தெரிவு செய்து Delete னும் விசையை தட்டுக. ல்லது டம் சுட்டியை பதிவேட்டில் வைத்து கட்டளை சட்டத்தில் ள்ள பதிப்பிக்க (Edit) ன்பதை தெரிவு செய்க உடன் படம்-3-ல் ள்ளவாறு விரியும் பட்டியில் Delete Record ன்பதை தெரிவு செய்க.

படம் – 5

வ்வாறு செய்யும்போது சிறு ரையாடல் பெட்டியொன்று படம் -5ல் ள்ளவாறு தோன்றும். தில் தெரிவு செய்த பதிவேட்டினை நீக்கம் செய்ய வேண்டுமா ன கேட்கும். Yes / No ன்பதில் ன்றை தெரிவு செய்க.

நெடுவரிசையை சேர்த்தல், மாற்றுதல், நீக்குதல்

நெடுவரிசையை புதியதாக சேர்ப்பது ,மாறுதல் செய்வது ,நீக்குவது போன்ற செயல்களினால் ஓரு ட்டவணையில் வடிவமைப்பே மாறுகிறது. தனால் ந்த ட்டவணையில் தொடர்புடைய வினா, படிவம், றிக்கை கியவை பாதிக்க துவாகும். தனால் நாம் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

1. கட்டளை சட்டத்தில் பதிப்பிக்க (Edit) ன்பதை தெரிவு செய்து நீக்கம் செய்ய வேண்டிய நெடுவரிசையை தெரிவு செய்க.உடன் படம்-3-ல் ள்ளவாறு விரியும் பட்டியில் Delete Column ன்பதை சொடுக்குக.

2. கட்டளை சட்டத்தில் சேர்க்க(Insert) ன்பதை தெரிவு செய்க டன் படம்-2-ல் ள்ளவாறு விரியும் பட்டியில் Column ன்பதை தெரிவு செய்து சொடுக்குக.

3. நெடுவரிசையின் தலைப்பை பிடிக்கவும் வலதுபுறம் உள்ளீட்டு விசையை சொடுக்குக. டன் படம்-6-ல் ள்ளவாறு விரியும் பட்டியில் தோன்றும் குறுக்குவழி கட்டளைச் சட்டத்தில் Delete Column ன்பதை தெரிவு செய்க.

வ்வாறு செய்யும்போது சிறு ரையாடல் பெட்டியொன்று படம் -5ல் ள்ளவாறு தோன்றும். தில் தெரிவு செய்த நெடுவரிசையை நீக்கம் செய்ய வேண்டுமா ன கேட்கும். Yes / No ன்பதில் ன்றை தெரிவு செய்க.

படம் – 6

பதிவேடுகளை பாதுகாத்தல்

ஓரு பதிவேட்டின் னைத்து பதிவுகளையும் பதிவு செய்தவுடன் கடைசி புலத்தில் ருந்து உள்ளீட்டு விசையை தட்டியவுடன் புதிய பதிவேடு திறக்கும் ப்போது பதிவு செய்த னைத்து பதிவுகளிலும்ள்ள விவரங்கள் னைத்தும் சரியாக ருப்பின் பதிவுகள் பாதுகாக்கப்பட்டிருக்கும், ல்லையெனில் Error என்ற செய்தி திரையில் பிரதிபலிக்கும்.

தரவுகளின் வகைக்கேற்ப தானாகவே ற்புடையதாக்குதல்

தரவுதளமானது தானாகவே ஓரு சில வகையான புலங்களில் தரவுகளை ள்ளீடு செய்தவுடன் ற்கதகுந்ததா, ல்லையா சரிபார்த்து ற்றுக்கொள்ளும். வ்வாறான தரவுகளின் வகைகள் பின்வருமாறு

1. ண்கள்

2. நாள்/நேரம்

3. ம்/ல்லை (Yes / No)கியனவாகும்.

ந்த மூன்று வகையான புலங்களில் வேறு வகையான தரவுகள் ள்ளீடு செய்தவுடன் ரையாடல் பெட்டியொன்று படம்-7-ல் ள்ளவாறு தோன்றும் தில் ந்த தரவுகள் ந்த புலத்திற்கு ற்புடைத்து ன்று (Invalid) ன்ற செய்தியை கூறும்.

படம் – 7

பதிவேடுகளில் குறிப்பிட்ட பதிவை கண்டுபிடித்தல்

1) கட்டளை சட்டத்தில் ள்ள பதிப்பிக்க(Edit) ன்பதை தெரிவு செய்தவுடன் படம்-3-ல் ள்ளவாறு தோன்றும் ரையாடல் பெட்டியில் கண்டுபிடி (Find) ன்பதை தெரிவு செய்து கண்டுப்பிடிக்கலாம்.

2) கட்டளை கருவிகளின் சட்டத்தில் படம்-8-ல் ள்ளவாறு தோன்றும் பைனாகுலர்போன்ற படத்தின் மீது டம் சுட்டியை வைத்து சொடுக்குவதன் மூலம் கண்டுப்பிடிக்கலாம்.

3) Ctrl + F ஆகிய விசைகளை சேர்த்து தட்டுதல் மூலமும் பதிவேடுகளின் குறிப்பிட்ட பதிவினை காண முடியும்

வ்வாறு செய்தவுடன் தோன்றும் ரையாடல் பெட்டியில் டுத்ததை கண்டுபிடிக்க (Find Next) ன்பதை தெரிவு செய்தால் மீண்டும் கண்டுபிடிக்க வேண்டியதை கண்டுபிடித்துவிடும்.

4) Cancel ன்பதை தெரிவு செய்தால் படிவத்தை மூடிவிடும்

ஏற்கனவே இருக்கின்ற பதிவை பதிலீடு செய்தல்

பதிலீடு செய்ய வேண்டிய புலத்தில் டம் சுட்டியை வைத்து F2 என்ற செயலி விசையை தட்டுக. டன் தோன்றும் பதிவை தேவையானவாறு மாறுதல் செய்க.

படம் – 8

மதிப்பினை பதிலீடு செய்ய :

படம் 3ல் ள்ளவாறு Edit ன்பதை தெரிவு செய்தபின் தோன்றும் ரையாடல் பெட்டியில் கண்டுபிடி (Find) ன்பதை தெரிவு செய்க டன்படம்-8-ல் ள்ளவாறு தோன்றும் Find and Replace ன்ற சிறு உரையாடல் பெட்டியில் பதிலீடு செய்க Replace ன்பதை தெரிவு செய்க.

பின்னர் Find What ன்பதற்கு கண்டுபிடித்து மாற்றம் செய்ய வேண்டியதை ள்ளீடு செய்க. Look in ன்பதற்கு ட்டவணையின் பெயரை தெரிவுசெய்து சொடுக்குக. Match என்பதற்கு முழு புலத்தையுமால்லது குறிப்பிட்ட பகுதியை மட்டுமா னக் குறிப்பிடுக. Search ன்பதற்கு Allன்பதை குறிப்பிடுக.

குறிப்பிட்ட புலத்தில் ள்ள மதிப்பை ன்னவாக மாற்றம் செய்ய விரும்புகிறோமோ வ்வாறு மாற்றுவதற்கு Replace with ன்பதில் ள்ளீடு செய்து Replace என்ற பொத்தானை சொடுக்குக உடன் மதிப்பை ன்னவாக மாற்றம் செய்ய விரும்பினோமோ வ்வாறே மாறிவிடும்.

பின்னர் படம் -9-ல் ள்ளவாறு தோன்றும் சிறு பெட்டி Do you want to continue? ன கேட்கும். ம் (Yes) னில் தொடரும் ல்லை (No) ன்றவுடன் தேடும் பணி முடிந்து விடும்.

Replace All ன்பதை தெரிவு செய்தால் மாறுதல் செய்ய வேண்டிய னைத்து புலங்களையும் கண்டுபிடித்து பதிலீடு செய்துவிடும்.

படம் – 9

வ்வாறு தேடும்போது கிடைக்கவில்லையெனில்படம்-10-ல் ள்ளவாறு நீங்கள் தேடியது கிடைக்கவில்லை ன்ற செய்தியுடன் தோன்றும் பெட்டியில் Ok என்ற பொத்தானை சொடுக்கு.

படம் – 10

பதிப்பிக்கும் தொழில்நுட்பங்கள்(Edit technique)

.எண்

பதிப்பிக்கும் செயல்கள்(Edit technique)

தேவையானவிசையை தட்டுதல்

1.

சேர்க்கும் புள்ளியை புலத்திற்குள் இடம் மாற்றுதல்

வலதுஅம்புகுறி

டதும்புக்குறி

2.

புதிய மதிப்பை சேர்க்க

சேர்க்க வேண்டிய டத்தை தெரிவு செய்து ள்ளீடு செய்க

3.

முழுபுலத்தையும் தெரிவு செய்ய

சார்பு விசையைF2 () டம்சுட்டியை ருமுறை சொடுக்குதல்

4.

ருக்கின்ற மதிப்பை புதிய மதிப்பாக பதிலீடு செய்ய

தேவையான புலத்தினை தெரிவு செய்து புதிய தரவுகளை ள்ளீடு செய்க.

5.

முந்தைய பதிவேட்டில் ள்ளபதிவுகளை பதிலீடு செய்தல்

Ctrl + ’ (ஓரு மேற்கோள் குறி)சேர்த்து அழுத்துக

6.

ப்போதைய மதிப்பை யல்பான மதிப்பாக பதிலீடு செய்ய

Ctrl + Alt + Space Bar ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக

7.

Text Or Memo, Field புலத்தில் கோட்டினை சேர்க்க

Ctrl + Enter ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக

8.

ப்போதைய பதிவேட்டினை பாதுகாக்க

Shift + Enter ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக அல்லதுஅடுத்த பதிவேட்டிற்கு நகருக

9.

பதிவேட்டில் இப்போதைய நாளினை சேர்க்க

Ctrl + ;(அரைப்புள்ளி) சேர்த்து ழுத்துக

10.

பதிவேட்டில்இப்போதைய நேரத்தை சேர்க்க

Ctrl + : (முக்கால் புள்ளி) சேர்த்து

ழுத்துக

11.

புதிய பதிவை சேர்க்க

Ctrl + + (கூடுதல் குறி)சேர்த்து

ழுத்துக

12.

தற்போதைய பதிவை நீக்க

Ctrl + – (கழித்தல் குறி)சேர்த்து ழுத்துக

13.

ருநிலை மாற்றி மதிப்பு பொத்தான் சரிபார்க்கும் பட்டி

Space Bar

14.

மாறுதல் செய்தததை நீக்க

Escஅல்லது Undo பொத்தானை

தெரிவு செய்து சொடுக்குக

கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு புலத்தினை மாறுதல் செய்ய முடியாது :

1) தானியங்கி ண் ள்ள புலத்தினை (Auto Number Field ) படம் 11ல் ள்ளவாறு மாறுதல் செய்ய முடியாது

படம் – 11

2) கணக்கீடு செய்யும் புலத்தினை( Calculated Field)மாறுதல் செய்ய முடியாது

3) பூட்டிய (அல்லது) முடக்கம் செய்யபட்டபுலத்தினை (Locked or Disabled)மாறுதல் செய்ய முடியாது

4) பல செயல்களில் பயன்படுத்தப்பட்ட பதிவேட்டின் புலத்தினை மாறுதல் செய்ய முடியாது

முன் செயல் நீக்கும் செயலை பயன்படுத்துதல் :

1) படம் 2ல் ள்ளவாறு விரியும் பட்டியில் ள்ள பதிப்பிக்க (Edit) ன்பதை தெரிவு செய்க. உடன் விரியும் பட்டியில் முன் செயலை நீக்கம் செய்ய முடியாது (Can’t Undo) ன்பதை தெரிவு செய்க தனால் முன்பு செய்த செயலை நீக்கும் வழி தயாராக ருக்காது

2) Undo Typing ன்பதை தெரிவு செய்தால் கடைசியாக ள்ளீடு செய்த பதிவுகள் நீக்கப்பட்டிருக்கும்.

3) Edit -> Undo saved documents என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்தால் Current Field/Record கடைசியாக பதிவு செய்த ப்போதைய புலத்தின் மதிப்பு ல்லது பதிவேட்டின் மதிப்புகள் நீக்கப்பட்டுவிடும்.

4) Edit -> Undo என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்தால் கடைசியாக பாதுகாக்கப்பட்ட பிறகு மாறுதல் செய்யப்பட்ட பதிவுகள் னைத்தும் நீக்கபட்டுவிடும்

புலங்களின்வரிசையை மாறுதல் செய்தல் :

ட்டவணை வடிவமைப்பில் வ்வாறு புலங்களை வரிசை படுத்தினோமோ வ்வாறே வ்வொரு தரவுதாளும்திரையில் தோன்றும். தனை மாறுதல் செய்ய விரும்பினால்

1) ந்த நெடுவரிசையை மாற்றம் செய்ய வேண்டுமோ தனை தெரிவு செய்க

2) தன் வரிசையில் டம் சுட்டியை வைக்கவும் ப்படியே இடம்சுட்டியின் பொத்தானை பிடித்து சொடுக்குக. உடன் முழு நெடுவரிசையும் தெரிவு செய்யப்பட்டிருக்கும்

3) மீண்டும் டம் சுட்டியின்வலப்புறபொத்தானை சொடுக்குக. டன் ரு சிறு பெட்டி ம்புக்குறியுடன் திரையின் கீழ்பகுதியில் தோன்றும்

4) தனை ப்படியே ழுத்து வந்து தேவையான டத்தில் வைத்து பொத்தானை விடுவித்திடுக.தேவையான டத்தில் ப்போது நெடுவரிசை செருகப்பட்டிருக்கும்.

புலத்தின் கலத்தை மாற்றுதல் :

) நெடுவரிசையின் கலத்தை மாற்றுவதற்கு :

1) மாறுதல் செய்ய வேண்டிய நெடுவரிசைக்கும் மற்ற நெடுவரிசைக்கும் டையில் டம் சுட்டியை வைத்துப்பிடிக்கவும். அப்போது சரியான டத்தில் வைத்ததும் வெற்றிட கோடு ஒன்று தோன்றும்.

2) கலத்தை குறைக்க வேண்டுமெனில் டப்புறமும் திகரிக்க வேண்டுமெனில் வலப்புறமும் அப்படியே இழுத்து சென்று விடவும்.

(ல்லது)

கட்டளை சட்டத்தில் ள்ள ருவமைத்தல் (Format ) ன்பதை தெரிவு செய்க டன் படம் 12-ல் ள்ளவாறு விரியும் பட்டியில் Coloumn width ன்பதை தெரிவு செய்க

படம் – 12

டன் சிறிய பெட்டி படம் 13ல் ள்ளவாறு தோன்றும். வ்வளவு ளவு தேவையோ தை Column width ன்பதில் ள்ளீடு செய்து Ok என்ற பொத்தானை சொடுக்குக.

படம் – 13

) பதிவேட்டின் (கிடைவரிசை) யரத்தை மாற்றுதல் :

1) கிடைவரிசையின் முகப்பில் மாறுதல் செய்ய வேண்டிய வரிசைக்கும் டுத்த வரிசைக்கும் டையில் டம் சுட்டியை வைத்தபின் தோன்றும் சிறிய கோட்டினை தெரிவு செய்து சொடுக்குக.

2) யரத்தை குறைக்க வேண்டுமெனில் மேல்பக்கமும் திகரிக்க வேண்டுமெனில் கீழ்ப்பக்கமும் அப்படியே இழுத்து சென்று விடவும். ப்போது தேவையான யரம் நமக்கு கிடைக்கும்.

(ல்லது) தேவையான கிடைவரிசையை தெரிவு செய்து அதன் தலைப்பில் இடம்சுட்டியை வைத்து டப்புறம் சொடுக்குக. டன் படம் 12ல் ள்ளவாறு விரியும் பட்டியில்(Row Hight ) ன்பதை தெரிவு செய்க.

டன் படம் 14ல் ள்ளவாறு தோன்றும் பெட்டியில் தேவையான ளவை(Row Hight ) ன்பதில் ள்ளீடு செய்து Ok என்றபொத்தானை சொடுக்குக

படம் – 14

குறுக்கு கோடுகளை பிரதியிடுதல் :

கட்டளை சட்டத்தில் ள்ள Formatன்பதை தெரிவு செய்க. டன் படம் -12-ல் ள்ளவாறு விரியும் பட்டியில் Data sheet ன்பதை தெரிவு செய்க.

டன் படம் -15-ல் ள்ளவாறு தோன்றும்Data sheet Formattingன்ற சிறு பட்டியில் எந்த மாதிரியான குறுக்கு கோடுகள் ந்த டத்தில் வேண்டுமோ அவ்வாறே தெரிவு செய்து Ok என்றபொத்தானை சொடுக்குக.

Cell Effectன்பதில் பட்டையாகவா? யர்ந்தா? மறைந்தா ஆகியவற்றில் ஒன்றை தெரிவு செய்க. Gridlines Shown ன்பதில் நெடுவரிசையாகவா? கிடைவரிசையாகவா ன்பதில் ன்றை தெரிவு செய்க.

குறுக்குக் கோடுகளில் தேவையான நிறத்தை தெரிவு செய்க.Border and Line Stylesன்பதில் தேவையானதை தெரிவு செய்க. Directionன்பதில் டமிருந்து வலமா? வலமிருந்து டமா ன தெரிவு செய்துகொள்க.

படம் – 15

ழுத்து வகையை மாற்றுதல் :

கட்டளை சட்டத்தில் ள்ள Formatன்பதை தெரிவு செய்க. உடன் படம் 12ல் ள்ளவாறு தோன்றும் பட்டியில் Fontன்பதை தெரிவு செய்க.

1) டன் Fontஏன்ற ரையாடல் பெட்டி படம் 16-ல் ள்ளவாறு தோன்றும் தில் ள்ள Fontன்பதில் தேவையான ழுத்து வகையை தெரிவு செய்க

2) Font Style ன்பதில் Boldன்பதை தெரிவு செய்க

3) Size ன்பதில் 12 ன்பதை தெரிவு செய்க

4) Ok என்றபொத்தானை சொடுக்குக.

படம் – 16

நெடுவரிசையை மறையசெய்தல் மீண்டும் தோன்ற செய்தல் :

மறைய தேவையான நெடுவரிசையை தெரிவு செய்க. பின்னர் கட்டளைச் சட்டத்தில் ள்ளஉருவமைப்பு Formatன்பதை தெரிவு செய்க டன் படம் 12ல் ள்ளவாறு விரியும் பட்டியில் Hide Coloumnன்பதை தெரிவு செய்க. டன் நெடுவரிசை மறைந்துவிடும். வ்வாறே Unhide Coloumn ன்பதை தெரிவு செய்தால் மீண்டும் தோன்றும்.

நிலையாக நெடுவரிசையை தோன்றும்படி தெரிய செய்தல் :

ஓரு சில புலங்கள் நமக்கு தொடர்ந்து தெரிந்து கொண்டே ருக்க வேண்டும். என எண்ணுவோம் உதாரணமாக புலத்தின் தலைப்பு நிலையாக தெரிந்து கொண்டு ருக்க வேண்டுமெனில் தனை தெரிவு செய்து கட்டளை சட்டத்தில் ள்ள உருவமைப்பு (Format)ன்பதை தெரிவு செய்க. டன் படம் 12-ல் ள்ளவாறு தோன்றும் பட்டியில் Freeze Column ன்பதை தெரிவு செய்க. மாற்ற வேண்டுமெனில் Unfreeze Column ன்பதை தெரிவு செய்க.

பதிவேட்டினை வரிசைப்படி வடிகட்டுதல் :

வரிசைப்படுத்துதல் :

கருவிகளின் பெட்டியில் தோன்றும் வரிசை படுத்துதல் ன்ற குறும்படத்தில் தோன்றும் கருவியை றுமுகமாகவால்லது றங்குமுகமாகவாஆகியஇரண்டில் ஒன்றை தெரிவு செய்து தேவையான (நெடுவரிசையை தெரிவு செய்து) சொடுக்குக. டன் பதிவேடுகள் நாம்தெரிவுசெய்தவாறு வரிசை படுத்தப்பட்டிருக்கும்.

பல்வேறு நெடுவரிசைகளை சேர்த்து வரிசை படுத்த வேண்டுமெனில் தேவையான நெடுவரிசைகளை தெரிவு செய்து கருவிகளின் கட்டளை சட்டத்தில் ள்ள றுமுக வரிசை ல்லது றங்குமுக வரிசை படுத்துதல் ஆகியஇரண்டில் ஒன்றை தெரிவு செய்க. உடன்அனைத்து பதிவேடுகளும் நாம் தெரிவுசெய்தவாறுவரிசை படுத்தப்பட்டிருக்கும்.

படம் – 17

கட்டளைச் சட்டத்தில் ள்ள Recordன்பதை தெரிவு செய்க. உடன் படம் 17-ல் ள்ளவாறு விரியும் பட்டியில் Sort ன்பதை தெரிவு செய்க. தில் விரியும் Sort Ascending Order or Sort Descending Orderஆகியஇரண்டில் ஓன்றை தெரிவு செய்க.

படம் – 18

பதிவேட்டினை வடிகட்டுதல்:

கட்டளைச் சட்டத்தில் ள்ள Records ன்பதை தெரிவு செய்க டன் படம் 18-ல் ள்ளவாறு தோன்றும் பட்டியில் Filterன்பதை தெரிவு செய்க உடன் விரியும் பட்டியில் Filter By Selectionன்பதை தெரிவு செய்தால் நாம் தெரிவு செய்கின்ற விவரம் ள்ள பதிவேடுகள் திரையில் பிரதிபலிக்கும். Filter Excluding Selectionன்பதை தெரிவு செய்தால் நாம் தெரிவு செய்த விவரம் தவிர மற்றவை தெரியும். Filter By Form ன்பதை தெரிவு செய்க.உடன் படம் 19-ல் ள்ளவாறு Filter By Form ன்ற படிவம் திரையில் தோன்றும் முன்பு கூறியது போலவே தேவையான விவரம் ள்ள பதிவேடுகள் மட்டும் திரையில் பிரதிபலிக்கும்.

படம் -19

பதிவேட்டினை ச்சிடுதல் :

அச்சிடவேண்டிய பதிவேட்டினை தெரிவு செய்க பின்னர் கட்டளைச் சட்டத்தில் ள்ள Fileன்பதை தெரிவு செய்க. டன் படம்-20-ல் ள்ளவாறு விரியும் பட்டியில் ச்சுக்கு முன்பு பக்கங்களை சரிசெய்வதற்காக Page setupன்பதை தெரிவு செய்க.

படம் – 20

டன் படம் 21ல் ள்ளவாறு விரியும் Page setupன்ற உரையாடல் பெட்டியில் Marginsன்பதை தெரிவு செய்க. ஓரு பக்கத்தில் மேல்புறம் (top), , கீழ்ப்புறம் (Bottom), டப்புறம் (Left), வலப்புறம்(Right) , வ்வளவு டம் விட வேண்டும் ன்பதை தெரிவு செய்து தலைப்பு (Print Headings) ன்பதை தெரிவு செய்து Ok என்ற பொத்தானை சொடுக்குக..

படம் – 21

ச்சிடுவதற்கு முன்காட்சி :

படம் 20ல் ள்ளவாறு தோன்றும் பட்டியில் Print Preview ன்பதை தெரிவு செய்க. டன் படம் 22ல் ள்ளவாறு தரவுதாளை ச்சுக்குமுன் தன் மைப்பு ப்படி ச்சிடும் ன்பதை தன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

தில் Select File Print Preview ன்பதை தெரிவு செய்தால் ரு பக்கம் மட்டும் தோன்றும் பல பக்கங்கள் தோன்ற வேண்டுமெனில் Select Multiple Pages ன்பதை தெரிவு செய்க.

படம் – 22

படம்-22-ல் தோன்றும் ச்சுக்கு முன் காட்சியில் தேவையான பக்கங்களில் கீழ், மேல், வலம், டப்புறங்களில் நாம் விரும்பியவாறு ருக்கும் காலி டத்தை சரி செய்து சரியாக இருக்கின்றது என தெரிந்தவுடன் Closeஎன்பதை தெரிவு செய்யவும். பின்பு தேவையான பக்கங்களை அச்சிடவும்.

மீண்டும் படம்20-ல் உள்ளவாறு தோன்றும் பட்டியில் printஎன்பதை தெரிவு செய்க. உடன் படம்23-ல் உள்ளவாறு printஎன்றவாறு தோன்றும் பெட்டியில் printer என்பதில் என்னவகை printerஎன்பதை உள்ளீடு செய்க. .print rangeஎன்பதில் முழுவதும் தேவையா அல்லது பகுதி மட்டுமா என தெரிவு செய்க Copiesஎன்பதில் எத்தனை நகல்கள் வேண்டும் என தெரிவு செய்து Ok என்ற பொத்தானை சொடுக்குக. இவ்வாறுசெய்தவுடன் நாம் தெரிவு செய்தவாறு விவரங்களை அச்சுப்பொறி மூலம் அச்சிடபடும்.

படம் – 23

அறிந்து கொள்வோம் அக்சஸ் 2003-தொடர்-பகுதி-5 அட்டவணைகளுக்கிடையேயான உறவு

 அறிந்து கொள்வோம் அக்சஸ் 2003-தொடர்-பகுதி-5 அட்டவணைகளுக்கிடையேயான உறவு

 படம்-2ல் Show table என்ற பெட்டியில் உள்ள பட்டியலின் பதினொறு அட்டவணையில் ஆறு முதன்மை அட்டவணைகளும், ஐந்து பார்வை (க என்ற எழூத்துடன் இருப்பவை) அட்டவணைகளும் ஆகும்.

      பார்வை அட்டவணை என்பது முதன்மை அட்டவணைகளில் உள்ள தகவல்களிலிருந்து பெறப்பட்டு உருவாக்கப்பட்ட அட்டவணைகளாகும்.

     உதாரணமாக Sales Person என்ற அட்டவணையானது விற்பனை பிரதிநிதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலாகும். தகவல்தள அமைப்பில் உண்மையான விற்பனை பிரதிநிதியின் பெயர் விற்பனை Salesஎன்ற அட்டவணையுடன் தொடர்பு படுத்தப்பட்டிருகின்றதா என இதன்மூலம் அறிந்து கொள்ள முடியும்.

    அட்டவணைகளுக்கிடையே ஒரே (வகையான, அளவான )தரவுகள் அடங்கிய ஒரே வகையான பெயர் உடைய புலங்கள் ஒன்றுக்கொன்று இணைப்பு ஏற்படுத்தியவுடன் தொடர்பு என்னவென்று அறிந்து கொள்ள முடிகின்றது. இவ்வாறு இணைப்பு ஏற்படுத்தும் புலங்களுக்கு Key Field என்றழைப்பர்.

     பொதுவாக தொடர்புகளை இந்த Key Field மூலம் அட்டவணைகளுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தும்போது தொடக்கத்திறவு கோளாக ஒரு அட்டவணையிலும் அயலர் திறவு கோலாக அடுத்த அட்டவணையிலும் இருக்கும்.

   ஒரே அட்டவணை இரண்டு வகையான திறவு கோளையும் கொண்டிருக்கும். அட்டவணையில் கட்டமைப்பை பார்வையிடும்போது எழுத்துரு தடித்த அளவில் இருப்பது தொடக்க திறவு கோள் (Primarykey ) என அறிந்து கொள்ளலாம். ஆனால் அயலர் திறவு கோளை(Foriegn Primarykey ) அவ்வாறு அறிந்து கொள்ள முடியாது.

திறவு கோளை பற்றி தெரிந்து கொள்ளல்

  Contact என்ற அட்டவணையில் ஒரே பெயரில் ஒரே பெற்றோர் பெயரின் முதல் எழுத்தில் ஒரே ஊரில் நிறைய பெயரிருக்கும்போது குழப்பம் ஏற்படும். அதனை தவிர்க்க ஒவ்வொரு பதிவேட்டிற்கும் ஓர் எண் கொடுத்து பதிவு செய்த பின்னர் பதிவேட்டின் எண் கொடுத்தால் உடன் நம்மால் ஒரு பெயரினை சுலபமாக தெரிவு செய்ய முடியும். அதற்காக உதவுவதே இந்த திறவு கோளாகும்.

முதன்மை திறவு கோள் எதுவென முடிவு செய்தல்

அட்டவணையின் அமைப்பினை உருவாக்கும்போது எந்தவொரு புலத்தையாவது நாம் முதன்மை திறவு கோள் என குறிப்பிட வேண்டும். அவ்வாறு நாம் செய்யவில்லை எனில் அக்சஸ் ஆனது தானாகவே Auto Number என்பதை முதன்மை திறவு கோளாக உருவாக்கி கொள்ளும்.

முதன்மை திறவு கோளின் பயன்

முதன்மை திறவு கோள்தான் ஒவ்வொரு அட்டவணையிலும் உள்ள தகவல்களை நாம் கேட்பது போன்று உடன் தேடி கொண்டு வந்து காண்பிப்பதற்கும் அல்லது அறிக்கையாக அளிக்கவும் உதவுகிறது. இந்த முதன்மை திறவு கோள் அட்டவணையை புதுப்பித்தல் செய்யும்போது குழப்பம் எதவுமில்லாமல் இருப்பதற்கும் உதவுகின்றது.

ஒவ்வொரு அட்டவணையிலும் பதிவேடுகள் மிகவும் துல்லியமாகவும் நம்பக்கத் தன்மையுடனும் இருக்க வேண்டுமெனில் முதலில் அந்த அட்டவணையில்ஒரு முதன்மை திறவு கோள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

அயலர் திறவு கோளை பற்றி புரிந்து கொள்ளல்

ஒரு அட்டவணையில் உள்ள பதிவேட்டின் குறிப்பிட்ட புலத்தை முதன்மை திறவு கோளாக முடிவு செய்து உருவாக்கியவுடன் இதே புலம் மற்றொரு அட்டவணையில் இருந்தால் இவ்விரு அட்டவணையும் இந்த திறவு கோள் மூலம் இணைத்து ஒப்பீடு செய்ய முடியும். தேவையான விவரங்களை வினா எழுப்பி பெற முடியும்.

அட்டவணைகளுக்கிடையேயான பொது இணைப்பு புலம் ஒரே மாதிரியான தரவுகள் இணைக்கப்பட்டிருக்கும் பொது இணைப்பு புலத்திற்கு அயலர் திறவு கோள் என்றழைப்பர்.

அட்டவணைகளின் உறவு வகைகள்

ஒன்றுக்கொன்று உறவு

ஒரு அட்டவணையில் குறிப்பிட்ட ஒரு புலம் மற்றொரு அட்டவணையில் உள்ள ஒரு புலத்துடன் உள்ள தொடர்பிற்கு ஒன்றுக்கொன்று மட்டும் தொடர்பு எனப்படும்.

(.) Customer Table – Billing Table

ஒன்றுக்கு பல உறவு

ஒரு அட்டவணையின் ஒரு பதிவேடானது மற்றொரு அட்டவணையின்பல பதிவேட்டுடன் தொடர்பு இருப்பது ஒன்றுக்கு பல உறவு எனப்படும்

(.) One Customer – Many Customer Contact

பலவற்றுக்கு ஒரு உறவு

ஒரு அட்டவணையில் பல பதிவேடுகள் மற்றொரு அட்டவணையின் ஒரு பதிவேட்டுடன் தொடர்வு ஏற்படுத்தப் பட்டிருப்பது ஆகும்.இதனை பார்வை அட்டவணையின் தொடர்பு என்றும் அழைப்பர். இவைகள் தொடக்க திறவு கோளின் அடிப்படையில் ஏற்படுத்துவதில்லை

பலவற்றுக்கு பல உறவு

ஒரு அட்டவணையில் பல பதிவேடுகள் மற்றொரு அட்டவணையின் பல பதிவேடுகளுடன் ஒரு பொது அட்டவணை ஒன்றுடன் இணைப்பது ஆகும். இது சற்று புரிந்து கொள்ள கடினமானதாகும்.

பார்வை ஒருங்கிணைப்பை (Referencial integrity ) புரிந்து கொள்ளுதல்

அட்டவணைகளுக்கு இடையேயான உறவை உருவாக்குமுன் அந்த அட்டவணைகளுக்கிடையே பார்வை ஒருங்கிணைப்பு Referencial integrity அல்லது அளவின் துல்லியம் (Degree of accuracy ) நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

பொருள் கொள்முதல் பட்டியலில் ஒரு பதிவேட்டினை நீக்கு முன்பு பொருள் பெறும் பட்டியலை சம்பந்தப்பட்ட பதிவேட்டை முதலில் நீக்கம் செய்த பிறகே நீக்க முடியும். இதனை பெரும் ஆபத்தான பிரச்சனை (Catastrophic ) என்றழைப்பர்.

தரவுத்தள அமைப்பானது அட்டவணைகளுக்கு இடையே ஒரு சில கட்டுப்பாட்டினை வரைமுறைகளை நிர்ணயித்துள்ளது.

அட்டவணைகளுக்கு இடையேயான தகவலை ஒருங்கமைப்பு செய்ய சில வரைமுறைகளை வைத்துள்ளது. இதனையே பார்வை ஒருங்கிணைப்பு Referencial integrity என்றழைப்பர்.

இது அட்டவணைக்கு இடையே ஆன உறவுவடிவமைப்பை தகவல் சேகரிப்பதற்கு தக்கவாறு பாதுகாக்கின்றது.

இது திறவுகோள் புலத்தின் அடிப்படையில் இயங்குவதற்கு உதவுகிறது. ஒவ்வொரு முறையும் குறிப்பு புலத்தினையும் (key field ), முதன்மை திறவு கோளையும் அயலர் திறவுகோளையும் ஏதேனும் மாறுதல் இருக்கின்றதா என சோதித்து பார்த்து மாறுதல் இருந்தால் ஏற்புடையதாக இல்லையெனில் தானாகவே சரிசெய்து பாதுகாக்கின்றது.

அட்டவணைகளுக்கிடையே தொடர்பை உருவாக்குதல்

அட்டவணைகளை இணைக்கும்போது ஒரு அட்டவணை பெற்றோர் அட்டவணை(Parents table ) என்றும் அதனுடன் தொடர்பு படுத்தப்பட்ட அட்டவணை பிள்ளைகள் அட்டவணை (Child table ) என்று அழைப்பர்.

பிள்ளைகள் அட்டவணை இல்லாமல் பெற்றோர் அட்டவணையை உருவாக்கலாம். ஆனால் பெற்றோர் அட்டவணை இல்லாமல் பிள்ளைகள் அட்டவணையை உருவாக்க முடியாது.

உறவு சாளரத்தின் மூலம் அட்டவணைகளுக்கிடையேஉறவுகளைஉருவாக்குவதற்கு முதலில் கட்டளை சட்டத்தில் உள்ள கருவிகள் (Tools) ) என்பதை தெரிவு செய்க. உடன் படம்-1 ல் உள்ளவாறு தோன்றும் கருவிகள் பட்டியில் Relationshipஎன்பதை தெரிவு செய்க.

படம் -1

1. உடன் படம்-2ல் உள்ளவாறு தோன்றும் Relationship என்ற சாளரத்தில் எங்காவது காலியாக உள்ள இடத்தில் இடம் சுட்டியை வைத்து வலப்புறம் சொடுக்குக. உடன் தோன்றும் சிறுபட்டியில் Show Table என்பதை தெரிவு செய்து சொடுக்குக. உடன் படம்-2ல் உள்ளவாறு Show Table என்ற உரையாடல் பெட்டியொன்று தோன்றும்.

படம்-2

3. அதில் தொடர்பு படுத்த வேண்டிய அட்டவணைகைளை தெரிவு செய்து Add என்பதை தெரிவு செய்க.

4. பின்னர் close என்பதை சொடுக்குக.

உடன் படம்-3ல் உள்ளவாறு அட்டவணைகளின் குறும்படம் காட்சியளிக்கும். அந்த அட்டவணைகளில் உறவு ஏற்படுத்த வேண்டிய ஒருபுலத்தினை தெரிவு செய்து இடம் சுட்டியை வைத்து சொடுக்கி பிடித்துகொண்டு அப்படியே இடம்சுட்டியை விடாமல் இழுத்து வந்து தேவையான அட்டவணையில் பொத்தானை விடுக இவ்வாறு இழுத்து வரும்போது ஒருசிறிய செவ்வக பெட்டி தோன்றும்.

படம்-3

உடன் படம்-3ல் உள்ளவாறு Edit Relationship என்ற உரையாடல் பெட்டியை காண்பிக்கும். அதில் புதியதை உருவாக்கு (Create new) என்ற பொத்தானை சொடுக்குக. உடன் அக்சஸ் ஆனது Relationshipஎன்ற பெட்டியை தானாகவே மூடிவிட்டு இரண்டு அட்டவணைக்கு இடையே உள்ள உறவினை கோடிட்டு காட்டும். இந்த உறவுகளில் மாறுதல் ஏதேனும் செய்ய வேண்டுமெனில் அட்டவணைக் கிடையேயான உறவுக்கோட்டில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குக

உடன் Edit Relationship என்ற உரையாடல் பெட்டி தோன்றும். இதன் மூலம் பெற்றோர் அட்டவணை எது, பிள்ளைகள் அட்டவணை எது பார்வை ஒருங்கிணைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்ன வகையான உறவு புதியதாக உருவாக்க வேண்டும் என்பனபோன்ற பல்வேறு விருப்பத் தேர்வுகள் இருக்கும் நமக்கு தேவையானவாறு பயன்படுத்தி அட்டவணைக்கு இடையே உறவினை மாறுதல் செய்யலாம்.

அட்டவணைகளுக்கு இடையே இன இணைப்பின் வகையை சோதித்தல்

Edit Relationship என்ற பெட்டியின் வலப்புறம் Ok, Cancel, Joint Type, Create New ஆகிய நான்கு பொத்தான்கள் இருக்கும்.

அதில் Joint Type என்பதை தெரிவு செய்க.

உடன் படம்-3-ல் உள்ளவாறு Joint Properties என்ற உரையாடல் பெட்டி தோன்றும்.அதில் இரண்டாவதுInclude All Records from table ‘contacts’ and only those records from table ‘contactlog’ where the joined field are equal என்பதை தெரிவு செய்து Ok என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

உடன் Joint Properties என்ற உரையாடல்பெட்டி மூடப்பட்டுவிடும். Edit Relationship என்ற உரையாடல் பெட்டியில் இப்போது Ok என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

இப்போது Relationship சாளரம் ஓர் அம்புக்குறியை (உறவுக்கோடு) Table contact log Table Contactவரை காட்டும்.

இணைப்பு கோட்டில் இடம் சுட்டியை சொடுக்குக.படம்-4ல் உள்ளவாறு மீண்டும் Edit Relationship என்ற பெட்டியை திறக்கவும். அதில் கீழ்பகுதியில் உள்ள மூன்றில் முதலாவதான Enforce Referential Inegrity என்பதை தெரிவு செய்க.

படம்-4

அவ்வாறு தெரிவு செய்யவில்லையெனில் கவலையில்லாமல் புதிய பதிவேட்டினை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு உள்ளீடு செய்யலாம், மாற்றலாம், நீக்கலாம்.

உடன் Cascade Update Related Field ,Cascade Delete Related Records ஆகிய இருவகையான விருப்பத் தேர்வுகள் பிரதிபலிக்கும். Cascade Update Related Field என்பதை தெரிவு செய்க. இதனை தெரிவு செய்வதால் ஏதேனும் தொடக்க திறவு கோலை மாறுதல் செய்தால் அக்சஸ் ஆனது பதிவேடுகளின் ஒருமுகத்தன்மையை தொடர்புடைய அனைத்து பதிவேடுகளுடன் அயலர் திறவு கோள் மூலம் சரி பார்த்து புதுப்பித்து கொள்ளும்.

மற்றொரு விருப்பத்தேர்வான Cascade Delete Related Records என்பதை தெரிவு செய்தால் பின்னர் ஏதேனும் பதிவேடுகளை அழிக்கும்போது இந்த பதிவேட்டின் பிள்ளைகள் பதிவேட்டை முதல் நீக்கிய பின் இந்த முதன்மை பதிவேடு நீக்கஅனுமதிக்கும்.

முதன்மைதிறவுகோளை உருவாக்குதல்(Creating primary Key)

ஒரு அட்டவணையில் ஒன்றுக்கு மேற்பட்ட புலத்தினை முதன்மை திறவுகோலாக உருவாக்கும்போது எந்த புலம் முதலில் இருக்கவேண்டும் எந்த புலம் அடுத்து இருக்க வேண்டும் என்ற முதுநிலை பட்டியல் மூலம் தெரிவு செய்வது மிக அவசியமாகும். அதனால் தேவையான அட்டவணையை முதலில் தெரிவு செய்க. பின்னர் வடிவமைப்பு என்பதை தெரிவு செய்து சொடுக்குக. உடன் படம்-5 ல் உள்ளவாறு Product table design view என்ற உரையாடல் பெட்டியொன்றுதோன்றும் கருவிகள் சட்டத்தில் உள்ள Indexஎன்பதை தெரிவு செய்து சொடுக்குக. உடன் படம்-5 ல் உள்ளவாறு Product tabledesign viewஎன்ற உரையாடல் பெட்டியுடன் Indexஎன்ற சிறுபெட்டிதோன்றும் பின்னர் உடன் படம்-6-ல் உள்ளவாறு தோன்றும் Indexஎன்ற பெட்டியில் தேவையானவாறு மாற்றியமைத்து சேமித்துகொள்க.

படம்-5

துணை தரவுதாள் அமைத்தல்

இதனைஅட்டவணையில் காட்சி வடிவமைத்தல்(Design view ) மூலம் உருவாக்க முடியும்.முதலில் கட்டளை சட்டத்திலுள்ள Viewஎன்ற கட்டளையை தெரிவு செய்க. உடன் படம் -6 ல் உள்ளவாறு விரியும்பட்டியில் propertiesஎன்பதை தெரிவுசெய்துசொடுக்குக.

படம் – 6

உடன் படம்-7ல் உள்ளவாறு Table Properties என்ற உரையாடல் பெட்டி தோன்றும்.

அதில் order by என்பதற்கு கீழ்உள்ளsub data sheet name என்பதை தெரிவு செய்க. உடன் விரியும் Insert sub data sheetஎன்ற உரையாடல் பெட்டி படம்-7ல் உள்ளவாறு தோன்றும். தேவையான அட்டவணையை தெரிவு செய்து உடன் இடம்சுட்டியை சரியான மதிப்பை தேவையானவாறு தெரிவு செய்து சேமிக்கவும்.

தரவு தளத்தின் அடிப்படையில் துணைத்தரவு தாளிற்கு தானாகவே பெயர் ஒன்றினை உருவாக்கிக் கொள்ளும். தரவிற்கு தகுந்தவாறு ஏற்படும் துணைத்தரவு தாளினை ஏற்படுத்திகொள்ளும்.

படம் – 7

படம்-8ல் உள்ளவாறுதோன்றும் அட்டவனையில்இடப்புறம் + குறி தோன்றும். அதனை சொடுக்கியவுடன்துனைத்தரவுத்தாட்களின்காட்சிவிரியும்.

துணை தரவு தாளை விரிவு படுத்துதல்

துணைத்தரவுத்தாள் உருவாக்கிய பின் பதிவேட்டின் புலத்தில் உள்ள + அடையாளத்தில் இடம் சுட்டியை வைத்து சொடுக்கியவுடன் துணைத்தரவுத்தாள் படம்-8 ல் உள்ளவாறு விரியும்.

படம் – 8

புதிய டிஎன்ஏ கணினி

இந்த கட்டுரையை படிக்கும் போது கணினியின் சில்லு உற்பத்தியாளர்கள் அடுத்ததலைமுறை மீச்சிறுசெயலி(microprocessor) உற்பத்திசெய்வதற்கு தயாராக இருப்பார்கள் .சிலிக்கன் மூலப்பொருளால் உற்பத்தி செய்யப்படும் இந்த மீச்சிறுசெயலியின்  வேகமும் சிற்றளவாக்கமும் (miniaturization). அதன் எல்லையை அடைந்துவிட்டது. மேலும் ஒவ்வொரு 18 மாதத்திற்கு பிறகு மீச்சிறுசெயலியின் கொள்ளவும் வேகமும் இருமடங்கு உயர்ந்து கொண்டேயிருக்கும் என்ற மூர்ஸ் விதி அதன் எல்லையை சென்றடைந்துவிட்டது.   அதனால் இந்த சிலிக்கன்சில்லைவிட வேகமான   புதியதொருபொருளை இதன் உற்பத்தியாளர்கள் தேடும்நிலை தற்போது  ஏற்பட்டுள்ளது

ஆனால் நம்முடைய உடலிற்குள் இயற்கையாக இலட்சகணக்கில் உள்ள டிஎன்ஏ மூலக்கூறுகள் நம்மால் உருவாக்கபடும் மீக்கணினியைவிட பலமடங்கு வேகத்திலும் கொள்ளளவிலும் அதிக திறன்வாய்ந்ததாகஉள்ளன என்ற செய்தியை நாம்  இதுவரையில் அறியாமலேயே உள்ளோம் . இவைகளை  ஒருங்கிணைத்து உயிர்சில்லு என்பது உருவாக்கபட்டு தற்போதைய கணினியைவிட பலமடங்கு வேகத்திலும் மிகச்சிறிய உருவிலும் வருங்காலத்தில் வெளியிடபடவுள்ளன அவ்வாறு உருவாக்கபடும் டிஎன்ஏ கணினியானது தற்போதைய சிலிக்கன் சில்லு கணினியைவிட பில்லியன் மடங்கு அதிக நினைவக கொள்ளளவுதிறனும் வேகமும் கொண்டதாக இருக்கும்

 

ரோசெஸ்டர் பல்கலைகழகத்தில் ஆடில்மேன்ஸ் தலையமையில் விஞ்ஞானிகள்குழு ஒன்று இந்த டிஎன்ஏ உயிர் மூலக்கூறை அடிப்படையாக கொண்ட  லாஜிக்கேட்டை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்  தற்போது சிலிக்கன் ட்ரான்ஸிஸ்டர் வாயிலாக லாஜிக்கேட்டில் வரும் மின்சைகைகள்  உருமாற்றபட்டு கணினியின் சிக்கலான கணக்கீடுகளுக்கும் செயல்களுக்கும் பயன்படுத்தபடுகின்றன  ஆனால் இந்த டிஎன்ஏஉயிர் மூலக்கூறை அடிப்படையாக கொண்ட  கணினியில்  ஜெனடிக்கேட் எனப்படும் அன்டுகேட் பயன்படுத்த படவுள்ளது இதில் உயிர்பொருளே உள்ளீடாகவும் டிஎன்ஏ உயிரமூலக்கூறில் ஏற்படுத்தபடும் வேதிமாற்றமே சைகைகளாகவும் கொள்ளபட்டு செயற்படுத்தபடுகின்றது

இந்த  டிஎன்ஏ உயிரமூலக்கூறு கணினியின் பயன் பின்வருமாறு

1.அதிகஅளவு  டிஎன்ஏ உயிரமூலக்கூறு இயற்கையில் கிடைப்பதால் கணினியின் உற்பத்தி விலை மிககுறைந்த அளவாகவே இருக்கும்

 2.இந்தடிஎன்ஏ உயிர்மூலக்கூறினால் உற்பத்திசெய்யபடும்கணினியால் சிலிக்கன் சில்லால் உற்பத்தி  செய்யபடும் கணினி போன்று சுற்றுசூழல் பாதிக்காது.

3.இந்த டிஎன்ஏ உயிர்மூலக்கூறினால் உற்பத்திசெய்யபடும் கணினியினாது தற்போதைய கணினியைவிட உருவஅளவில் மிகமிகசிறியதாக இருக்கும்

4.ஒருபவுன்டு டிஎன்ஏ உயிர்மூலக்கூறானது தற்போதைய மின்னோட்ட கணியைவிட பலமடங்கு கொள்ளளவு திறன்கொண்டதாகும்

5.டிஎன்ஏ உயிர்மூலக்கூறின் லாஜிக்கேட்டானது தற்போதைய மீவேக கணினியை (supercomputer)விட அதிக திறன்வாய்ந்ததாகும்

6.ஒருகனசென்டிமீட்டர் டிஎன்ஏ உயிரமூலக்கூறானது  10 டிரில்லியன் அதாவது 10 டெராபைட் கொள்ளளவு திறன்கொண்டதாகும்

7.தற்போதைய மின் கணினியானது ஒருசமயத்தில் ஏதேனுமொருபணியைமட்டும் செய்யகூடியதாகும் ஆனால் இந்த டிஎன்ஏ உயிரமூலக்கூறு கணியானது ஒரேசமயத்தில் பலசெயல்களை இணையாக செய்யகூடியது அதனால் மிக சிக்கலான கணக்கீடுகளை ஒரிருமணிததுளிகளில்இது செய்யும் செயலை தற்போதைய கணினியானது தீர்வுசெய்ய பலநூறுஆண்டுகளாகும்

ஐ-பாடின் பயன்கள்

ஒரு ஐ-பாடின் மூலமாக நமக்குவரும் மின்னஞ்சலை கையாளலாம் தினசரி செய்திதாட்களை படிக்கலாம் இசையை அல்லது பாடல்களை  கேட்டு மகிழலாம் தற்போது பாமரனும் வாங்கி பயன்படுத்தி கொள்ளும் வகையில் பல்வேறு கொள்ளளவுகளுடன் இந்த ஐ–பாட்கள் கிடக்கின்றன. அலுவலகம் செல்ல அதிக நேரம் எடுத்துக் கொள்பவர்களும், கல்லூரியில் பயிலுபவர்களும் தற்போது ஐ–பாட் ஒன்றை கையிலும் அதன் ஹெட்செட்டை காதுகளிலும் வைத்துக் கொண்டு இசையை கேட்டு ரசிப்பதை காணலாம் இந்த ஐ–பாட்டின் இயக்கம் குறித்தும் அதனை எவ்வாறு கையாளுவது என்பது குறித்தும் ஒருசில ஆலோசனைகள் பின்வருமாறு.
1.தொடர்ச்சியாக இதில் பாடல்களைக் கேட்டு கொண்டேயிருந்தால் இதனுடைய பேட்டரியின் மின்சாரம் வழங்கும் திறன் குறைந்துவிடும். ஆழ்ந்து இசையை ரசிக்கும் நிலையில்  நம்மால் இதனை உணரமுடியாது . பொதுவாக ஐ–பாடை கணினியில் உள்ள யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துத்தான் மின்னேற்றம் செய்திட முடியும். ஒருமுறை முழுமையாகச் மின்னேற்றம் செய்தால் அதனை கொண்டு சுமார்  12 அல்லது 14 மணி நேரம் வரை இந்த ஐ-பாடை இயங்க செய்ய முடியும். இவ்வாறான மின்னேற்றம்  இல்லாது ஐ–பாட் இயங்காத நிலையை தவிர்த்திட.
ஐ–பாடினைப் பயன்படுத்தாத நேரத்தில் ஹோல்ட் பட்டனை லாக்டு நிலையில் வைக்கவும். ஏனெனில் நமக்குத் தெரியாமல் அந்த பொத்தான் அழுத்தபட்டு செயல்படும் சூழ்நிலையை இது தடுக்கும். அவ்வாறு பூட்டாத நிலையில் நம்மை அறியாமலேயே இந்த பொத்தான் அழுத்தபட்டு  ஐ–பாட் இயங்கத் தொடங்கி தானாக ஒவ்வொரு பாடலாகப் ஒலிபரப்பு செய்யும். ஹெட்செட் மாட்டாமல்  இருந்தால் இந்த செயல் நமக்கு தெரியாது. இதனால் பேட்டரியின் மின்சாரம் ஒட்டை கோனிப்பையில் வைத்திரு்ககும்  நெல்லானது ஓட்டை வழியே  சிந்துவது போல குறைந்து கொண்டே இருக்கும்.
2. ஐ–பாட் சாதனத்தை அலாரம் கடிகாரமாகப் பயன்படுத்தலாம்  அதற்காக ஐ–பாடின் மெயின் மெனு செல்லவும். அதில் Extras என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் Clock என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் வரும் பிரிவுகளில் Alarm Clock என்பதனை செலக்ட் செய்திடவும். பின் Alarm என்ற பிரிவு உங்களுக்குக் கிடைக்கும். இதனை ஆன் செய்து எந்த நேரத்தில் அலாரம்  அடிக்க வேண்டுமோ அந்த நேரத்தினை அமைத்திடலாம். இதில் உங்களுக்குப் பிடித்தமான இசை அல்லது நீங்கள் அடிக்கடி கேட்க விரும்பும் பாடல்களைகூட அமைத்திடலாம்.
3. ஐ–பாட் மூலம்  மின்னஞ்சல்களைப் பார்வையிடலாம்.இதற்கான புரோகிராமினை  http://kdeep.com/kpod.htm  என்னும் தளத்திலிருந்து கணினியில் பதிவிறக்கம்செய்து நிறுவிகொண்டு  ஐ–பாட் சாதனத்தை  மின்னஞ்சல் வாடிக்கையாளர் மென்பொருளுடன் ஒத்திசைவுசெய்த பின் kpod புரோகிராமினை இயக்கி  ஐ–பாடில் மின்னஞ்சல்களை பார்வையிடலாம்.
4.  On the Go என்னும் ஐ–பாடில் உள்ள வசதியினைப் பயன்படுத்தி. விரும்பும் பாடலைத் தேர்ந்தெடுத்து சிறிது நேரம் Select என்ற பொத்தானை  தேர்ந்தெடுத்த பாடல் ஐ–பாட் திரையில் மின்னத் தொடங்கும் வரை அழுத்த வேண்டும். இப்படியே விரும்பும் பாடல் அனைத்தையும் தேர்ந்தெடுத்து பாடல்களின் பட்டியிலை விரைவாகத் தயாரிக்கலாம்.இதற்காக தனியாக கணினியெதுவும் தேவையில்லை.
5.  தினமும் காலையில் தினசரி செய்தித்தாட்களை  ஐ–பாடில் பார்வையிட  ஐ–பாடில்  iPodulator என்னும் மென்பொருளை.இயக்கியவுடன்  தோன்றும் திரையில் தேவையான செய்திதாட்களின் தளமுகவரியினை உள்ளீடு செய்க உடன் இந்த தளம் தரும் தகவல்களைப் பெற்றவுடன் iPodulator ல் iPodinate என்ற பொத்தானை அழுத்தவும். உடன் தகவல்கள் அனைத்தும் ஒரு கோப்பாக சேமிக்கப்படும். பின் இந்த சேமித்த கோப்பினை ஐ–பாடிற்கு மாற்றிய பின்னர் தினசரி செய்தித்தாட்களை தேவைப்படும் போதெல்லாம்  படிக்கலாம்

லேப் டாப், நெட்புக் அல்லது ஸ்மார்ட் போன் எது சிறந்தது

தற்போது தனியாள்கணினியில் மடிக்கணினிமிக முக்கிய இடத்தை பிடித்துவரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது  இதே வகையில் நெட்புக் கணினியின் விற்பனையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இவை எல்லாவற்றைக் காட்டிலும்,ஸ்மார்ட் போன் மிகமுதன்மையான இடத்தை பிடித்து வருகின்றது. இவற்றின் இயக்கம் முற்றிலும் ஒரு கணினி போலவே இருப்பதால், கணி்னிக்குப் பதிலாக, ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதனாலேயே இதனை உற்பத்தி செய்யும்  நிறுவனங்கள் தற்போது  இதற்கான பல்வேறு பயன்பாட்டு மென் பொருட்களையும் உருவாக்கி வெளியிட்டு வருகின்றன.

இவற்றைப் பயன்படுத்துபவர்களும் பணம் செலவானாலும், நேரத்தின் அருமை கருதி, ஸ்மார்ட் போன்களைக் கணினிக்குபதிலாக  பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

கைகளில் எடுத்துச் சென்று, எந்த இடத்திலும்  கணினியின் பணிகளை இவற்றின் மூலம் நம்மால்  மேற்கொள்ள முடிகின்றதன்மையால் இவை மொபைல் சாதனங்கள் என்ற அடிப்படையில் வருகின்றன..

1. 1அலுவலக பணிகள்: நம்முடைய வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள அலுவலக பணிகளுக்கு உதவிடும் வேர்ட் டாகுமெண்ட், எக்ஸெல் ஒர்க் ஷீட், மல்ட்டிமீடியா காட்சித் தொகுப்புகள் ஆகியனவற்றை செயற்படுத்துவதற்கு ஒரு முழுமையான மடிக்கணினிதான் சிறந்த தேர்வாக அமையும். இதில் அதிக சக்தியுடன் கூடிய சி.பி.யு., ராம் மெமரி, எந்த சூழ்நிலையிலும் உறுதியாக இருந்து இடர்களைத் தாங்கும் சக்தி  உள்ளது. ஆனால் இதன்விலையானது மற்ற இரண்டு சாதனங்களின் விலையைக் காட்டிலும் இரு மடங்காக இருக்கும்.
நெட்புக் ஆனது இடவசதி குறைவான கீ போர்ட், திரை , திறன் குறைந்த சிபியு, ராம் மெமரி,ஆகியவை அலுவலகப் பயன்பாட்டிற்கு இதனைத் தேர்ந்தெடுக்கத் தடையாய் உள்ளன. அதனால் , நல்ல திறன் கொண்ட மடிக்கணினி ஒன்றையும், ஸ்மார்ட் போன் ஒன்றையும் இதற்கென வாங்கிக் கொள்ளலாம்.

2.  2.மாணவர்களுக்கு: குறிப்பெடுத்திட, இணையத்தில் உலாவிட, கருத்துகளின் காட்சிகளை அமைத்திட, கட்டுரைகளை எழுதிட எனப் பல்வேறு கல்வி சார்ந்த பணிகளைத் செல்லும் இடங்களிலெல்லாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மடிக்கணினி சற்று கனமான தாகவும், புத்தக பையுடன் தூக்கிச் செல்வதுச் சற்று சிரமமான செயலாகும் . எனவே மாணவர்கள் நெட்புக்கை  தேர்ந்தெடுக்கலாம். இதன் திரை, கீ போர்டு இவர்களின் வேலையை அவ்வளவாகப் பாதிக்காது. ஏனென்றால் இவர்களின் பணி சற்றுப் பொறுமையாக மேற்கொள்ளும் வகையில் அமையும்.

3. இணையத்தில் உலா வர:

வீட்டிற்கு வெளியே பயனம் செய்துகொண்டிருப்போம் திடீரென யாரேனும் நண்பர் ஒருவர்  கோப்பொன்றை மின்னஞ்சல் செய்துள்ளதாகவும் அதனை  உடன் பார்த்து  பதில் அனுப்புவைத்திடும்படியும் செல்பேசிவாயிலாக கோருவார் இந்நிலையில்  இணையத் தொடர்பை மேற்கொள்வதற்கு ஸ்மார்ட் போன்கள் பயனுள்ளதாகவும் , நெட்புக்கை காட்டிலும் கூடுதலான வசதிகளை தருபவையாகவும் உள்ளன. இவை எப்போதும் இணையத் தொடர்பினை மேற்கொள்ளத் தயாராய் இருக்கும். எனவே இதற்கு ஸ்மார்ட் போன் தான் சிறந்தது.

4.சமுதாயத் தளங்களுடன் தொடர்பு:

இணையத்தில்  சமுதாயத் தளங்களின் தொடர்புகளை மேற்கொள்வது, தற்போது பெரும்பாலோரால் செயற்படுத்தபடும் தொடர் நிகழ்வாக மாறிவிட்டது.

நண்பர்களுடனும், உறவினர்களுடனும் எப்போதும் தொடர்பில் இருந்து கொண்டு, நிகழ்வுகளை அவ்வப்போது மேம்படுத்த, இந்த சமுதாய தளங்கள் உதவுகின்றன.

இந்த வகையில் ட்விட்டர், பேஸ்புக் போன்ற தளங்கள் இயங்குகின்றன. இதற்கு மிகவும் உதவுவதும் பயன்படுவதும் ஸ்மார்ட் போன்களாகும்.

லேப்டாப்  நெட்புக் கணினி விரைவாக  இயங்குவதில்  பின்வாங்குகின்றன. ஆனால் போட்டோக்களை அனுப்ப, அவற்றை எடிட் செய்திட, அரட்டை பேசிட ஸ்மார்ட் போன்களைக் காட்டிலும் நெட்புக் கணினி கை கொடுக்கின்றது.

தேவையின் வகை பயன்படுத்த வேண்டிய காலஅளவு ஆகிய காரணிகளை  கணக்கிட்டு அதற்கான சாதனத்தை வாங்குவதே சிறந்தது.

தேவையற்ற பயன்பாட்டை பூட்டிவைத்திட உதவும் அப்லாக்கர் எனும் கருவி

நாம் நம்முடைய கணினியை மற்றவர்களுடன் பகிரந்துகொள்ளும்போதும்நாம்இல்லாதுபோது மற்றவர்கள் நம்முடைய கணினியில் பணிபுரியும்போதும் நாம் நம்முடைய கணினியில் நிறுவியுள்ள ஒருசில பயன்பாடுகளை மட்டும் பயன்படுத்துமாறு அனுமதியளித்திட்டால் நல்லது என எண்ணிடுவோம் அவ்வாறானவர்களுக்கு AppLockerஎன்ற இலவச பயன்பாடு ஒரு சிறந்த கருவியாகும். இது windows 2000, windowsXP, window wista,window7,ஆகியவற்றில் நன்குஇயங்ககூடியது இதனை http://www.computeronlinetips.com/Free-Dump/AppLockerV1102.zip    என்றதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிகொள்க பின்னர் இந்த பயன்பாட்டின் குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக உடன் தோன்றிடும் திரையில் கணினியில் நிறுவபட்டுள்ள Microsoft Word, Internet Explorer or Nero Burning Rom போன்ற பயன்பாடுகளை பட்டியலிடும் அவற்றில் பூட்டவேண்டியதை  மட்டும் தெரிவுசெய்து save என்றபொத்தானை சொடுக்குக   நிறுவபடாத பயன்பாடுகளை பூட்டிட இதே திரையிலிருக்கும் Configure என்ற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் திரையில்   caption  என்ற உரை பெட்டியில் பூட்டிவிரும் பயன்பாட்டின் பெயரையும் executable file name என்ற உரைபெட்டியில் அதற்கான இயக்க கோப்பின் பெயரையும் தட்டச்சு செய்தவுடன் Lock application list  என்ற பகுதியில் பட்டியலிடும் மேலும் தேவையெனில் Add என்ற பொத்தானையும் முடிவாக  ok என்ற பொத்தானையும்சொடுக்குக.

இதனை ஒற்றையான கணினிமட்டுமல்லாது வளாகபிணையத்தில்இணைக்கபட்டுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளிலும் செயற்படுத்தமுடியும்

 

Previous Older Entries