பிளாக்செயின் தொழில்நுட்ப வழிகாட்டி-16-மீப்பேரேடு உருவாக்கம்(Hyper ledger Fabric)

மீப்பேரேடுஉருவாக்கம்( Hyperledger Fabric) என்பது ஆரம்பத்தில் Digital Asset மற்றும் ஐபிஎம் ஆகியோரால் உருவாக்கப்பட்டது மேலும் தற்போது இது மீப்பேரேடுசெயல் திட்டத்தின் கீழ் லினக்ஸ் அறக்கட்டளையால் வழங்கப்படுகிறது. Fabric ஆனது 2016 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அடைகாக்கும் மீப்பேரேடுசெயல் திட்டத்தில் சேர்ந்தது, மேலும் ஒரு ஆண்டு அடைகாத்த பிறகு, இது ‘செயல்படும்’ நிலைக்கு வந்த முதல் திட்டமாகும். ஜூலை 11, 2017 அன்று, மீப்பேரேடு தொழில்நுட்ப வழிநடத்தல் குழு அவர்களின் முதல் உற்பத்தி-தயார்நிலை விநியோகிக்கப்பட்ட பேரேடு குறிமுறையை அடிப்படையிலான, Hyperledger Fabric V1.0.எனும்பதிப்பை அறிவித்தது.
உருவாக்க ( Fabric) இயங்குதளமானது சங்கிலிதொகுப்பின் பயன்பாடுகளை, தயாரிப்புகளை அல்லது தீர்வுகளை உருவாக்குவதற்கான ஒரு அடித்தளமாக கருதப்படுகிறது. உருவாக்க ( Fabric) மானது ஒரு தனியார் மற்றும் அனுமதிக்கப்பட்ட அமைப்பாகும், இது அதிக அளவு இரகசியத்தன்மை, பின்னடைவு, நெகிழ்வுத்தன்மை , அளவிடுதல் ஆகியவற்றை வழங்குகிறது. இது ஒரு modular கட்டமைப்பை ஏற்றுக்கொண்டது மேலும் ஒருமித்த கருத்து, உறுப்பினர் சேவைகள் போன்ற பல்வேறு கூறுகளின் சொருகக்கூடிய கருவிகளை ஆதரிக்கிறது. மற்ற சங்கிலிதொகுப்பின் தொழில்நுட்பங்களைப் போன்றே, உருவாக்க ( Fabric)த்திலும் ஒரு பேரேடு மற்றும் திறனுடைய ஒப்பந்தங்கள் உள்ளன. உருவாக்க ( Fabric)த்தில் உள்ள திறனுடைய ஒப்பந்தம் சங்கிலிகுறிமுறை என்று அழைக்கப்படுகிறது, மேலும் இதனுடைய வணிக தர்க்கமானது உட்பொதிக்கப்பட்ட சங்கிலியில் உள்ளது. பின்வரும் வசதிகள் உருவாக்க ( Fabric) கட்டமைப்பிற்கு அதிக அளவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை வழங்குகின்றன.
வலையொளிகள்(Channels): உருவாக்க ( Fabric)நெறிமுறையில் கட்டப்பட்ட தனியார் சங்கிலிதொகுப்புகள். ஒவ்வொரு வலையொளியும் அங்கீகரிக்கப்பட்ட கூட்டாளிகளை மட்டுமே கொண்டுள்ளது
தெரிவுநிலை அமைப்புகள்: தெரிவுநிலை அமைப்புகளைப் பயன்படுத்தி உள்ளீட்டுத் தரவை யார்யார் காணலாம் என்பதைக் கட்டுப்படுத்திட முடியும்
தரவு குறியாக்கம்: சங்கிலிகுறிமுறையை அழைப்பதற்கு முன்பு தரவை Hashed அல்லது குறியாக்கம் செய்யலாம்
தரவு அணுகல் கட்டுப்பாடு: அணுகல் கட்டுப்பாடுகளை சங்கிலி குறிமுறை தர்க்கத்தில் உட்பொதிப்பதன் மூலம், நிறுவனத்தில் சில பாத்திரங்களுக்கு தரவு அணுகலை கட்டுப்படுத்த முடியும்.
கோப்பு குறியாக்கம்: மீதமுள்ள பேரேட்டு தரவை கோப்பு முறைமை குறியாக்கத்தைப் பயன்படுத்தி குறியாக்கம் செய்யலாம், மேலும் TLSநெறிமுறையைப் பயன்படுத்தி தரவு-போக்குவரத்துக்கு குறியாக்கம் செய்யப்படலாம்.
உருவாக்க ம்( Fabric) , Ethereum ஆகிய இரண்டிற்குஇடையேயானவேறு பாடு இவ்விரண்டும் இன்று கிடைக்கக்கூடிய இரண்டு சங்கிலிதொகுப்பு தொழில்நுட்பங்கள் ஆகும். ஆனால் கட்டமைப்பு, செயல்பாட்டு முறை மற்றும் இரண்டு தொழில்நுட்பங்களின் பிற வசதிகள் ஆகியவ பலவற்றில் இவ்விரண்டிற்கும் இடையே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது மிகவும் நல்லது.
ஆளுகை: முன்னர் விவாதித்தபடி, உருவாக்க ம்( Fabric) ஆனது லினக்ஸ் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது , எத்தேரியம் ஆனது எத்தேரியம் மேம்டுத்தநர்களின் சமூகத்தால் நிர்வகிக்கப்படுகிறது
நடைமேடை: Ethereum என்பது எந்தவொரு பயன்பாட்டிற்கும் பொதுவான சங்கிலிதொகுப்பின் தளமாகும், அதேசமயம் உருவாக்க ம்( Fabric) என்பது ஒரு modular சங்கிலிதொகுப்பின் தளமாகும், இது முக்கியமாக வெவ்வேறு வணிக களத்தை ஆதரிப்பதற்காக தனிப்பயனாக்கப்பட்டுள்ளது
இலக்கு கூட்டம்: Ethereum இயற்கையில் விநியோகிக்கப்படும் பயன்பாடுகளை இலக்காகக் கொண்டுள்ளது, மறுபுறம், உருவாக்க ம்( Fabric)என்பது வங்கி, சுகாதாரம், பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட வணிக களங்களுக்கானது.
பிணைய அமைப்பு: Ethereum இல், பிணைய பகிர்வு சாத்தியமில்லை. எனவே, பரிமாற்றங்கள் போட்டியாளர்கள் உட்பட பிணையத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். வெளிப்படையாக, அது வணிகச் சூழலுக்கு ஏற்றதன்று. உருவாக்க ம்( Fabric)ஆனது சேனல்கள்(channels.) எனப்படும் ஒரு தனியார் வலைபின்னல்களை உருவாக்கிடும் ஏற்பாட்டை வழங்குகிறது ஒவ்வொரு சேனலும் அங்கீகரிக்கப்பட்ட கூட்டாளிகளை மட்டுமே கொண்டுள்ளது. அதோடு, ஒரு பரிமாற்றங்களுக்கு ஒப்புதல் அளிக்க நியமிக்கப்பட்ட ‘ஒப்புதல் முனைமம்’ உள்ளது.
செயல்படும் விதம்
Ethereum என்பது அனுமதி இல்லாத அமைப்பு, அதாவது எந்தவொரு முனைமும் பிணையத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது. மறுபுறம், உருவாக்க ம்( Fabric)ஆனதுஒரு தனியார் மற்றும் அனுமதிக்கப்பட்ட அமைப்பாக இருப்பதால், MSPஎனசுருக்கமாக அழைக்கப்படும் உறுப்பினர்களின் சேவை வழங்குநர் (Membership Service Provider)மூலம் பதிவுசெய்யப்பட்ட ஒரு பிணையத்தில் மட்டுமே பங்கேற்க முடியும்
ஒருமித்த கருத்து:
Ethereum இல் ஒருமித்த கருத்து என்னவெனில் பணிச்சான்று (Proof of Work(PoW)) எனும் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அனைத்து பங்கேற்பாளர்களும் ஒரு பொதுவான பேரேட்டினை ஒப்புக் கொள்ள வேண்டும் மற்றும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் இதுவரை பதிவுசெய்யப்பட்ட அனைத்து உள்ளீடுகளுக்கும் அணுகல் உள்ளது. இது பரிமாற்ற செயலாக்கத்தை பாதிக்கலாம்
பிணையம் வளர்ந்துவரும்போது. உருவாக்க ம்( Fabric)ல், ஒருமித்த கருத்தை வெவ்வேறு வழிகளில் அடைய முடியும். ஒப்புதல் வழங்கும் செயல்முறை ஒப்புதல் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. முனைமங்கள் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை ஒப்படைப்பவர் Endorsing Peers (endorser), என்று அழைக்கலாம், அவை பொறுப்பு ஒப்படைத்தல் கொள்கையின் அடிப்படையில் பரிமாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்தலாகும். இவை அனைத்தும் சிறந்த செயல்திறன் மற்றும் பாதுகாப்பை விளைவிக்கும்.
திறனுடைய ஒப்பந்தங்கள்:
Ethereum இல், வணிக தர்க்கம் Solidity எனும்மொழியில் எழுதப்பட்ட திறனுடைய ஒப்பந்தங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. உருவாக்க ம்( Fabric)ல், திறனுடைய ஒப்பந்தம் சங்கிலி குறிமுறையைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படுகிறது, மேலும் இதனை கோ, பைதான் போன்ற கணினி மொழிகளில் உருவாக்கலாம்.
நாணயம்:
Ethereum இல், ஈதர் எனப்படும் உள்ளமைக்கப்பட்ட மறையாக்கப்பட்ட நாணயம் உள்ளது. தனிப்பயன் பயன்பாட்டு வழக்குக்கான இலக்க வில்லைகளையும் ஈதரின் மேல் உருவாக்கலாம். உருவாக்கத்தி( Fabric)ல், சுரங்கத்தின் மூலம் ஒருமித்த கருத்து எட்டப்படாததால், உள்ளமைக்கப்பட்ட மறையாக்க நாணயம் தேவையில்லை. இருப்பினும், குறிப்பிட்ட பயன்பாட்டு வழக்குக்கு நாணயம் அல்லது இலக்க வில்லைகளை உருவாக்க முடியும்.
உருவாக்க ம்( Fabric)ல் ஒரு முழுமையான பயன்பாட்டு மேம்பாட்டு செயல்முறை இன்னும் நடைபெற வில்லை என்றாலும், ஆரம்ப முடிவுகள் மற்றும் அது வழங்கும் வசதிகள் எதிர்கால நிறுவன நிலை பயன்பாட்டிற்கான உருவாக்க ம்( Fabric) ஒரு நம்பிக்கைக்குரிய தொழில்நுட்பமாகும் என்பதைக் குறிக்கிறது.
ஈரோஹாஎனும் மேம்பட்டபேரேட்டு
மேம்பட்டபேரேடு திட்டம் பல துறைகளுக்கு ஏற்ற சங்கிலிதொகுப்பு கட்டமைப்பை இணையாக உருவாக்க பல பன்னாட்டுநிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேம்பட்டபேரேடு திட்டத்தின் கீழ், இதுவரை 5 கட்டமைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன, அவற்றில் ஈரோஹாவும் ஒன்றாகும். மேம்பட்டபேரேடு உருவாக்க ம்( Fabric) ஆல் ஈர்க்கப்பட்ட சங்கிலிதொகுப்பு இயங்குதள செயல்பாட்டில் இதுவும் ஒன்றாகும். இது ஆரம்பத்தில் ஜப்பானிய தொடக்க Soramitsu, Hitachi, NTT Data மற்றும் இஸ்ரேலிய தொடக்க கோலு ஆகியோரால் உருவாக்கப்பட்டது, இப்போது இதை லினக்ஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது.
ஈரோஹா அக்டோபர் 2016 இல் மேம்பட்டபேரேட்டு திட்டத்தில் இணைந்தது மேலும் மேம்பட்டபேரேட்டு குடையின் கீழ் 3 வது திட்டமாக மாறியது. மே 2017 இல், மேம்ப்டடபேரேட்டு தொழில்நுட்ப வழிநடத்தல் குழு ஈரோஹா நிலையை ‘அடைகாக்கும்’ என்பதிலிருந்து ‘செயல்படுவதாக’ மாற்றியது.
ஈரோஹா ஆனது சி ++, இணையம், கைபேசி ஆகிய பயன்பாடுகளின் மேம்படுத்துநர்களுக்கான மேம்பாட்டு சூழலை வழங்குகிறது, இதனால் மேம்படுத்துநர்கள் ஈரோஹாவுக்கு மட்டுமல்ல, முழு மேம்பட்டபேரேட்டு திட்டத்திற்கும் பங்களிக்க முடியும். இது சி ++ இல் உள்ள கூறுகள் மற்றும் கோ போன்ற பிற கணினி மொழிகளிலிருந்தும் அழைக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தக்கூடிய தொகுப்பை உருவாக்க மேம்படுத்துநர்களை அனுமதிக்கிறது.. ஈரோஹா அதன் புதிய கட்டமைப்பில் புதிய நாணயங்களைப் பயன்படுத்துதல், செய்திகளை அனுப்புதல் போன்ற ஒரு சில பொதுவான பயன்பாட்டு நிகழ்வுகளை உள்ளடக்கியது.
ஈரோஹாவில் ஒருமித்த வழிமுறைகளில் ஒன்று Sumeragi ஆகும் இது ஒரு புதிய சங்கிலி அடிப்படையிலான Byzantine Fault Tolerant ஒருமித்த தர்க்கமாகும் Sumeragi என்பது வேகமாக இயங்கும் ஒருமித்த தர்க்கமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
.ஈரோஹாவால் வழங்கிய மறுபயன்பாட்டு கூறுகளின் வலுவான நூலகங்கள் தனிப்பயன் திட்ட வளர்ச்சியில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவற்றில் சில.
Sumeragi ஒருமித்த நூலகம்
Ed25519 இலக்க கையொப்ப நூலகம்
SHA-3 hashing நூலகம்
ஈரோஹா பரிமாற்றங்களின் வரிசைப்படுத்தல் நூலகம்
P2P ஒளிபரப்பு நூலகம்
API சேவையக நூலகம்
iOS நூலகம்
Android நூலகம்
ஜாவாஸ்கிரிப்ட் நூலகம்
சங்கிலிதொகுப்பு இணைஉலாவி / தரவு காட்சிப்படுத்தல் தொகுப்பு
ஈரோஹாவின் உள்ளடக்கங்கள்
ஈரோஹா பின்வருவனவற்றைக் கொண்டது:
• ஈரோஹா கோர்
• ஈரோஹா சொந்த iOS நூலகம்
• ஈரோஹா ஜாவாஸ்கிரிப்ட் நூலகம்
• ஈரோஹா சொந்த ஆண்ட்ராய்டு நூலகம்
ஈரோஹா கோர் விநியோகிக்கப்பட்ட பேரேட்டு உள்கட்டமைப்பு, தரவு உறுப்பினர் ஆகியவற்றை உள்ளடக்கியது
சேவைகள், ஒருமித்த வழிமுறை, peer-to-peer வலைபின்னல் போக்குவரத்து, தரவு
சரிபார்ப்பு, சங்கிலிகுறிமுறை உள்கட்டமைப்பு போன்றவை.
ஈரோஹாவின் வசதிகள்
எளிய கட்டுமானம்
• நவீன, இயக்கப்படும் சி ++ வடிவமைப்பு
கைபேசி பயன்பாட்டு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம்
இது Android, iOS மற்றும் JavaScript க்கான நூலகங்களை உள்ளடக்கியது
தனிப்பயன் சிக்கலான சொத்துக்களை உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல்
பயனர் கணக்கு மேலாண்மை

தொடரும்

கணினி நிரலாக்கதுறையில் புதியதாக பணியில் சேருபவருக்கும் ஏற்கனவே அனுபவம் வாய்ந்தவருக்கும் இடையே நடைபெறும் உரையாடல்

கணினியின் புதியநிரலாளர் – வணக்கம் ஐயா! கணினியில் தீர்வுசெய்யவேண்டிய பல்வேறு சிக்கல்கள் ஏராளமாக உள்ளன.ஐயா !.
அனுபவசாலியான நிரலாளர் – வணக்கம்! ஆயினும் கணினியில் ஒன்றைத் தவிர ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உள்ளது தம்பி!.
புதியவர் – (மிக உற்சாகமாக) மிக்க மகிழ்ச்சி ஐயா! அப்படியாயின் … அந்த ஒன்று என்ன பிரச்சினை ஐயா?
அனுபவசாலியான நிரலாளர் – அந்த ஒன்றைத் தவிர ஒவ்வொரு பிரச்சனைக்கும் மற்றொரு சுருக்க அடுக்கைச் சேர்ப்பதன் மூலம் தீர்வுசெய்திட முடியும்.
புதியவர் – (இதை ஒரு கணம் யோசித்து பின்னர் புன்னகைக்கிறார்) நீங்கள் சொல்வது சரிதான்ஐயா!. என்னுடைய கணினியில் உள்ள ஒவ்வொரு பிரச்சனைக்கும் மற்றொரு நிலையான சுருக்கத்தை சேர்ப்பதன் மூலம் தீர்வுசெய்ய முடிகின்றது ஐயா!.
புதியவர் – (பின்னர் சிறிது நேர இடைநிறுத்தம்செய்து) ஆனாலும் இவைகளுக்கு விதிவிலக்கு இருக்குமல்லவாஐயா ? ஆயினும் இதுவரை நான் எந்த விதிவிலக்குகளையும் காணவில்லை ஐயா!, ஒவ்வொரு சிக்கலுக்கும் மற்றொரு சுருக்க அடுக்கு எவ்வாறு ஒரு நேர்த்தியான தீர்வை உருவாக்குகிறது என்பதை மட்டுமே என்னால் காணமுடிகின்றதுஐயா !
அனுபவசாலியான நிரலாளரர் – அதிகப்படியான சுருக்கம் கொண்ட சிக்கலைத் தவிர, ஒவ்வொரு சுருக்கத்திலும் மற்றொரு சுருக்க அடுக்கைச் சேர்ப்பதன் மூலம் தீர்வுசெய்திட முடியும் தம்பி!.
புதியவர்- அப்படியாஐயா ! இவ்வாறு சுருக்கத்திற்குள் மற்றொரு சுருக்கஅடுக்குகளை சேர்ப்பது என்பது குழப்பத்திற்கு மேல் குழப்பமாக ஒன்று சேர்ந்து தெளிவாக நல்ல மனதுடன்நிம்மதி யாக பணிசெய்யவிடாது அதனால் எனக்கு கணினி நிரலாக்க பணியே தேவையில்லை ஐயா! அதனால் நான் ஏற்கனவே செய்துவந்து தொழிலே போதும் வணக்கம் நான் விடைபெறுகிறேன்ஐயா!

என க்கூறி விடைபெற்றுக்கொண்டு அந்த கணினி நிரலாளர் பணியிலிருந்து புதியவர் வெளியேறுகிறார்.

எக்செல்லில் இரண்டு நெடுவரிசைகளை எளிதாகவும் விரைவாகவும் இணைப்பது எவ்வாறு?

எக்செல்லை பயன்படுத்திடும்போது தனித்தனியான இரு நெடுவரிசைகளிலுள்ள தருவகளை ஒன்றிணைக்க விரும்பும்போது இந்த செயலை கைமுறையாக செய்ய தேவையில்லை. அதற்கு பதிலாக, நெடுவரிசைகளை விரைவாக இணைக்க எளிய சூத்திரத்தைப் பயன்படுத்தலாம்.
எக்செல் இல் இரு நெடுவரிசைகளை ஒன்றிணைக்க &எனும் சின்னம், CONCATசெயலிஆகிய இரண்டு வழிமுறைகள் உள்ளன: . பல சந்தர்ப்பங்களில், &எனும் சின்னமுறையைப் பயன்படுத்துவது CONCATசெயலியை விட விரைவாகவும் எளிதாகவும் இருக்கும். நம்முடைய வசதிகேற்ப இவ்விரண்டில் ஏதாவதொன்றை பயன்படுத்திகொள்க. இந்த கட்டுரையில் & எனும் சின்னம் அல்லது CONCAT செயலியைப் பயன்படுத்தி எக்செல் இல் நெடுவரிசைகளை எவ்வாறு இணைப்பது என்பதை காண்போம். தரவை எவ்வாறு வடிவமைப்பது என்பதற்கான ஒருசில உதவிக்குறிப்புகளையும் அதனோடு காணலாம்,
எக்செல் இல் நெடுவரிசைகளை எவ்வாறு இணைப்பது
1. நெடுவரிசைகளை &எனும் சின்னத்தின் துனையுடன் இணைத்தல்
1. முதலில் ஒருங்கிணைக்கப்பட்ட தரவு செல்ல விரும்பும் கலணை தெரிவுசெய்து சொடுக்குக.
2. பின்னர் =எனும் சமக்குறியை தட்டச்சு செய்திடுக
3. தொடர்ந்து இணைக்க விரும்பும் முதல் கலணை தெரிவுசெய்து சொடுக்குக.
4. அதன்பின்னர் &எனும் சின்னத்தை தட்டச்சு செய்திடுக
5. பிறகு இணைக்க விரும்பும் இரண்டாவது கலணை தெரிவுசெய்து சொடுக்குக
6. இறுதியாக Enter எனும்உள்ளீட்டு விசையை அழுத்துக .
எடுத்துக்காட்டாக, கலண்எண் A2 ,கலண்எண் B2 ஆகிய இரண்டையும் ஒன்றிணைக்க விரும்பினால், அதற்கான சூத்திரம்: = A2 & B2 ஆகும்
2. நெடுவரிசைகளை CONCAT செயலியின் துனையுடன் இணைத்தல்
1. முதலில் ஒருங்கிணைக்கப்பட்ட தரவு செல்ல விரும்பும் கலணை தெரிவுசெய்து சொடுக்குக.
2. பின்னர் = CONCAT ( என்றவாறு தட்டச்சு செய்திடுக
3. தொடர்ந்து இணைக்க விரும்பும் முதல் கலணை தெரிவுசெய்து சொடுக்குக
4. அதன்பின்னர் , எனும் கால்புள்ளி குறியீட்டை தட்டச்சு செய்திடுக
5.பிறகு இணைக்க விரும்பும் இரண்டாவது கலணை தெரிவுசெய்து சொடுக்குக.
6. மேலும் ) எனும் முடிவு பிறையடைப்பை தட்டச்சு செய்திடுக
7. இறுதியாக Enter எனும்உள்ளீட்டு விசையை அழுத்துக
எடுத்துக்காட்டாக, கலண்எண் A2 ,கலண்எண் B2 ஆகிய இரண்டையும் இணைக்க விரும்பினால், அதற்கான சூத்திரம் : = CONCAT (A2, B2) ஆகும்
தற்போது இந்த CONCAT எனும் சூத்திரத்தை விட CONCATENATE எனும் சூத்திரம் இதே செயலிற்காக பயன்படுத்தப்படுகிறது. முந்தையது இன்னும் பயன்பாட்டில் இருந்தாளும், நாளுக்குநாள் மறைந்துகொண்டே வருகின்றது, மேலும் எக்செல்லில் தற்போதைய மற்றும் எதிர்கால பதிப்புகளுடன் பொருந்தக்கூடிய தன்மையை உறுதிப்படுத்த பிந்தையதைப் பயன்படுத்துவது நல்லது என பரிந்துரைக்கப் படுகின்றது

இரண்டு கலண்களுக்கு மேல் ஒன்றிணைக்கவிரும்பிடும்போது இவ்விரண்டில் ஒரு முறையைப் பயன்படுத்தி விரும்பும் பல கலண்களை இணைக்கலாம். இதுபோன்ற சூத்திரத்தை ஒவ்வொரு கலணிற்கும் பின்வருமாறு மீண்டும் மீண்டும் செய்யவேண்டும்:
• = A2 & B2 & C2 & D2… போன்றவை.
• = CONCAT (A2, B2, C2, D2)… போன்றவை.
இந்த சூத்திரத்தினை பயன்படுத்தி முழு நெடுவரிசையையும் இணைத்திடுவதற்காக ஒரு கலணில் மேலேகூறியவாறு சூத்திரத்தை தட்டச்சு செய்த பின்னர் இணைக்க விரும்பும் ஒவ்வொரு கலணிலும் கைமுறையாக தட்டச்சு செய்ய தேவையில்லை அதற்கு பதிலாக , மீதமுள்ள நெடுவரிசையை தானாக விரிவுபடுத்த பின்வரும் செயல்முறையை பயன்படுத்தலாம்.
இதைச் செய்ய, சூத்திரத்தால் நிரப்பப்பட்ட கலணின் கீழே வலதுபுற மூலையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியை இருமுறை சொடுக்குக. மாற்றாக, இடது புறபொத்தானை சொடுக்குதல் செய்து நிரப்பப்பட்ட கலணின் கீழ் வலதுபுற மூலையை நெடுவரிசையின் கீழே இழுத்துசெல்க.
ஒருங்கிணைந்த நெடுவரிசைகளை எவ்வாறு வடிவமைப்பது என்பதற்கான உதவிக்குறிப்புகள்
ஒருங்கிணைந்த எக்செல் நெடுவரிசைகளில் உரை, எண்கள், தேதிகள் மேலும் பல்வேறு வகையிலன தரவுகளைக் கொண்டிருக்கலாம். எனவே, அவற்றை வடிவமைக்காமல் கலண்களை ஒன்றிணைப்பது எப்போதும் பொருத்தமானதன்று. ஒருங்கிணைந்த கலண்களை எவ்வாறு வடிவமைப்பது என்பதற்கான பல்வேறு குறிப்புகள் இங்கே. எடுத்துக்காட்டுகளில், ஆம்பர்சண்ட் முறையைக் குறிப்பிடபட்டுள்ளது, இருந்தபோதிலும் CONCAT சூத்திரத்திற்கும் இது பொருந்தும்.
1. ஒருங்கிணைந்த கலண்களுக்கு இடையில் ஒரு காலிஇடைவெளியை விடுவது
“முதல் பெயர்” ஒரு நெடுவரிசையாகவும் “கடைசி பெயர்” மற்றொரு நெடுவரிசையாகவும் இருந்தால், இரண்டு கலண்களுக்கு இடையில் ஒரு காலிஇடைவெளி விடவேண்டும்.
இதைச் செய்வதற்கான, சூத்திரம்: = A2 & ” “ & B2
இந்த சூத்திரம் A2 இன் உள்ளடக்கங்களைச் சேர்த்திடுமாறும், பின்னர் ஒருகாலி இடைவெளியைச் சேர்த்திடுமாறும், பின்னர் B2 இன் உள்ளடக்கங்களைச் சேர்த்திடுமாறும் கூறுகிறது.
இது ஒருகாலி இடைவெளியாக மட்டும் இருக்க வேண்டியதில்லை. அதற்குபதிலாக காற்புள்ளி, கோடு அல்லது வேறு எந்தவொரு சின்னம் அல்லது உரை போன்ற வற்றை இவ்விரண்டிற்கும் இடையில் எதை வேண்டுமானாலும் வைத்திடலாம்.
2. ஒருங்கிணைந்த கலண்களுக்குள் கூடுதல் உரையை சேர்ப்பது
ஒருங்கிணைந்த கலண்கள் அவற்றின் அசல் உரையை மட்டும் கொண்டிருக்க வேண்டியதில்லை. நாம் விரும்பும் கூடுதல் தகவல்களை அதில் சேர்த்திடலாம்.
கலண் எண் A2 இல் ஒருவரின் பெயரைக் கொண்டுள்ளது (எ.கா.சகுப்பன்) ,கலண்எண் B2 இல்அவரின் வயதைக் கொண்டுள்ளது (எ.கா. 60). “.சகுப்பன் என்பவரின் வயது60 ஆகும் ” என்று எழுதப்பட்ட ஒரு சொற்றொடராக கூட இதை நாம் உருவாக்கலாம்.

இதைச் செய்வதற்கான, சூத்திரம் பின்வருமாறு: = & A2 & ”என்பவரின் வயது“ & B2 & ”ஆகும்”
கூடுதல் உரை மேற்கோள்குறிகளால் மூடப்பட்டிருக்கும், அதைத் தொடர்ந்து & என்று குறியுடன் இணைக்கவிரும்பும் கலண்களைக் குறிப்பிடும்போது, இவற்றுக்கு மேற்கோள்குறிகள் தேவையில்லை. இடைவெளிகள் எங்கு இருக்க வேண்டும் என்பதையும் எங்கு சேர்க்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்க
3. ஒருங்கிணைந்த கலண்களில் எண்களை சரியாகக் காண்பிப்பது
அசல் கலண்களில் தேதிகள் அல்லது நாணயம் போன்ற வடிவமைக்கப்பட்ட எண்கள் இருந்தால், ஒருங்கிணைந்த கலணில் அவ்வாறான வடிவமைப்பு இல்லாதிருப்பதை காணலாம்.
தை தீர்வுசெய்திடுவதற்காக TEXT எனும் செயலி கைகொடுக்கின்றது, மேலும் இதனை நமக்கு தேவையான வடிவமைப்பை வரையறுப்பதற்குகூட பயன்படுத்திகொள்ளலாம்.
கலண்எண் A2 இல் ஒருவரின் பெயரைக் கொண்டுள்ளது (எ.கா.சகுப்பன்) ,கலண்எண் B2 இல்அவரின் பிறந்த தேதியைக் கொண்டுள்ளது (எ.கா. 01/06/1960).
இவ்விரண்டையும் இணைக்க, = A2 & ”என்பவர்“ & B2 ”என்ற தேதியில் பிறந்தார்“என்றவாறான சூத்திரத்தைப் பயன்படுத்த பயன்படுத்தலாம்
இருப்பினும், இந்த சூத்திரத்திற்கான வெளியீடு: சகுப்பன் என்பவர் 29252 என்றதேதியில் பிறந்தார்.என்றவாறு இருக்கும் ஏனென்றால் எக்செல்லானது தேதியை வெற்று எண்ணாக மாற்றுகிறது. இந்நிலையில்
TEXT எனும் செயலியைப் பயன்படுத்துவதன் மூலம், இணைக்கப்பட்ட கலணை = A2 & ”என்பவர் “ & TEXT (B2, ”dd / mm / yyyy” ,”என்ற தேதியில் பிறந்தார்“) என்றவாறு வடிவமைத்திடலாம் இதனுடைய வெளியீடு சகுப்பன் என்பவர் 01/06/1960என்ற தேதியில் பிறந்தார் என்றவாறு மிகச்சரியாக இருக்கும்
எண்களுக்கும் எந்த வடிவமைப்பை வேண்டுமானாலும்மாற்றலாம். எடுத்துக்காட்டாக, $ #, ## 0.00 ஆயிரக்கணக்கான பிரிப்பானுடனும் இரண்டு தசமங்களுடனும் நாணயத்தைமதிப்பைக் காண்பிக்கும், #? /? ஒரு தசமத்தை ஒரு பகுதியாக மாற்றும், H: MM AM / PM என்றவாறுநேரத்தைக் காண்பிக்கும்,
ஒருங்கிணைந்த நெடுவரிசைகளிலிருந்து சூத்திரத்தினைஅகற்றுவது
ஒருங்கிணைந்த நெடுவரிசையில் உள்ள கலணை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தால், அது (எ.கா. ச.குப்பன்) எனும் வெற்று உரையை விட (=A2&” “&B2) எனும் சூத்திரத்தை இன்னும் கொண்டிருப்பதை காணலாம்.
இது ஒரு மோசமான செயல்அன்று. அசல் கலண்கள் (எ.கா. A2 மற்றும் B2) புதுப்பிக்கப்படும் போதெல்லாம், அந்த மாற்றங்களை பிரதிபலிக்க ஒருங்கிணைந்த கலண் தானாகவே புதுப்பிக்கப்படும்.
இருப்பினும், அசல் கலண்கள் அல்லது நெடுவரிசைகளை நீக்கினால், அது ஒருங்கிணைந்த கலண்களிலும் நிகழ்நிலைபடுத்தப்படும் என்று அர்த்தமாகும். எனவே, ஒருங்கிணைந்த நெடுவரிசையிலிருந்து சூத்திரத்தை அகற்றி அதை எளிய உரையாக மாற்ற விரும்பலாம்.
இதைச் செய்ய, ஒருங்கிணைந்த நெடுவரிசையின் தலைப்பில் இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அதை முன்னிலைப்படுத்திடுக, பின்னர் Copy. எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக.
அடுத்து, ஒருங்கிணைந்த நெடுவரிசையின் தலைப்பை மீண்டும் இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க. உடன்விரியும் சூழ்நிலைபட்டியில், Paste Options,என்பவைகளில் Values , என்பதைத் தேர்ந்தெடுத்திடுக. இப்போது சூத்திரம் போய்விட்டது, நேரடியாக திருத்தக்கூடிய எளிய உரை கலண்கள் மட்டும்உள்ளன.
எக்செல் இல் நெடுவரிசைகளை எவ்வாறு இணைப்பது
நெடுவரிசைகளை இணைப்பதற்கு பதிலாக, அவற்றை ஒன்றிணைக்கலாம். இது பல கலண்களை ஒரு கலணாக மாற்றும். கலண்களை இணைப்பது மேலே-இடது கலணிலிருந்து மதிப்புகளை மட்டுமே வைத்திருக்கிறது மேலும் மீதமுள்ளவற்றை நிராகரிக்கிறது.
இதைச் செய்ய, ஒன்றிணைக்க விரும்பும் கலண்கள் அல்லது நெடுவரிசைகளைத் தேர்ந்தெடுத்திடுக. திரையின் வேலே Ribbon இன், Home எனும் தாவலில், Merge & Center எனும்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கு (அல்லது அதற்கு அடுத்த கீழ்தோன்றும் அம்புக்குறியைப் பயன்படுத்திடுக).

கைபேசி உலகவரைபடம் உருவாக்கி(Mobile Atlas Creator)

கைபேசிஉலகவரைபடஉருவாக்கி(Mobile Atlas Creator) என்பது (இதற்கு முன்னர் Trek Buddy உலகவரைபட உருவாக்கி என்று அழைக்கப்பட்டது) ஒரு திறமூல (GPL) பயன்பாடாகும், இது TrekBuddy, AndNav , WindowsCE ,பிற ஆண்ட்ராய்டு, ஆகியவற்றின் அடிப்படையிலான பயன் பாடுகள் போன்று GPS கையடக்கங்களுக்கும் கைபேசி பயன்பாடுகளுக்குமான இணைய இணைப் பில்லாத போதும் உலகவரைபடத்தை உருவாக்குகிறது. கூடுதலாக, OziExplorer க்கான அளவுத்திருத்த MAP கோப்புடன் ஒரு பெரிய PNG படமாக தனிப்பட்ட வரைபடங்களை பதிவேற்றும் செய்யலாம். இதன்வாயிலாக OpenStreetMap , பிற இணைய வரைபட வழங்குநர்கள் போன்ற பல்வேறு இணைய வரைபடங்களைப் பயன்படுத்தலாம்.
தற்போதைய நிலையில் பழைய காப்பக மன்றத்தில் இடுகையிடுவது இனி சாத்தியமில்லை.
குறிப்பாக MOBAC இன் பழைய பதிப்புகளுடன் ஒப்பிடும்போது வரைபட மூலங்களின் பட்டியல் மிக நீளமாக இல்லை என்பதை காணலாம் – . ஏனெனில், ஏப்ரல் 2011 இல் ஏராளமான வரைபட ஆதாரங்களை அகற்ற வேண்டியிருந்தது (MOBAC 1.9 பீட்டா 2).
இதன் முக்கிய வசதிவாய்ப்புகள்
அதிக எண்ணிக்கையிலான வெவ்வேறு (கைபேசி) பயன்பாடுகள் மற்றும் ஜி.பி.எஸ் கையடக்கங்களுக்கு இணையஇணைப்பில்லாதபோதும் உலகவரைபடத்தை உருவாக்கிடமுடியும்:
பல அடுக்குகள், வெவ்வேறு வரைபட மூலங்கள் வரைபடத் தீர்மானங்களை (தோற்ற நிலைகள்) கொண்ட உலகவரைபடங்களை உருவாக்கலாம்
நமக்கு பிடித்த உலகவரைபட தொகுப்பை சுயவிவரமாக / கோப்பில் இருந்து சேமித்து பதிவேற்றம் செய்திடலாம்
இழுத்தல் சென்று விடுதல் எனும் வசதியை பயன்படுத்தி வெவ்வேறு அடுக்குகளை ஒன்றிணைக்கலாம்
தனிப்பயன் அளவு , பட வடிவமைப்பைப் பயன்படுத்தி வரைபடகாட்சிவில்லைகளை உருவாக்கலாம் (PNG / JPG)
ஒரே நேரத்தில் பல்வேறுதிரிகளால் செய்யப்பட்ட பதிவிறக்கத்தைப் பயன்படுத்தி வரைபட காட்சி வில்லைகளை( tiles) வேகமாக பதிவிறக்குதல் (கட்டமைக்கக்கூடிய நூல்களின் எண்ணிக்கை)செய்திடலாம்
பதிவிறக்கம் செய்யப்பட்ட காட்சிவில்லைகள் வளாகத்தில் தற்காலிகமாக சேமிக்கப்படுகின்றன – ஒரே வரைபட காட்சிவில்லைகளின் பல பதிவிறக்கங்களைத் தவிர்க்கிறது
புதுப்பிக்கப்பட்ட காட்சிவில்லைகளை மட்டும் பதிவிறக்கிடுக – இல்லையெனில் வளாகத்தில் தற்காலிக சேமிப்பு காட்சிவில்லைகளைப் பயன்படுத்திடுக
HTTP பதிலாள் வழியாக பிணைய இணைப்புகளுக்கான முழு ஆதரவுவழங்குகின்றது
இது செயல்படுவதற்கான கணினியின் தேவைகள்
இது ஜாவாவில் எழுதப்பட்டுள்ளது, எனவே அதிக எண்ணிக்கையிலான தளங்களில் இயங்குகிறது: விண்டோ, லினக்ஸ், மேக் , ஆகிய இயக்கமுறைமைகளில் இது செயல்படும் திறன்மிக்கது .இது ஜாவா நிரலாக இருப்பதால் இது செயல்படுவதற்காக ஜாவா இயக்க நேர சூழல் பதிப்பு 8 அல்லது அதற்கு மேற்பட்டவை நம்முடைய கணினியில் நிறுவப்பட வேண்டும். கூடுதலாக, இது இயங்கும் வரை அதிவேக இணைய இணைப்பு தேவைப்படுகிறது.
இயல்பாக இது 512 ரேம் வரை பயன்படுத்திகொள்கிறது. இது செயல்படுவதற்காக கூடுதலான காலிநினைவகம் தேவையாகும்: பதிவிறக்கம் செய்யப்பட்ட காட்சிவில்லைகள் கணினி தற்காலிக கோப்பகத்தில் தற்காலிகமாக சேமிக்கப்படுகின்றன, மேலும் காட்சிவில்லைகள் கடைசியில் (உள்ளூர் தரவுத்தளம்) தற்காலிகமாக சேமிக்கப்படும்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட காட்சிவில்லைகளின் வண்ண த்தை குறைக்க, “ஜாவா மேம்பட்ட உருவப்படம்” (JAI) இன் நூலகக் கோப்புகள் முறையே Mobile_Atlas_Creator.jar போன்ற கோப்பகத்தில் கணினியில் இருக்க வேண்டும். ஜாவா மேம்பட்ட பதிப்பு 1.1.3 இன் இருமஎண் உருவாக்கத்தைப் பயன்படுத்த தயாராக உள்ளதைப் பதிவிறக்குவது எளிதான வழியாகும்.
மேலும்விவரங்களுக்கு https://mobac.sourceforge.io/ எனும் இணையதளமுகவரிக்குசெல்க

Dஎனும் கணினி மொழி

தற்போது நாமெல்லோரும் வாழ்க்கை எனும் விரைவான ஓட்டபந்தயத்தில் வாழ்ந்துவருகின்றோம் ஆயினும் நம்முடைய தற்போதைய வசதியை தியாகம் செய்யாமல் இயற்கையான ஓட்டத்தைக் கொண்ட மறுபயன்பாட்டு குறிமுறைவரிகளை உருவாக்கும் சக்தியை UFCS என்பது நமக்கு வழங்குகிறது
, உலகளாவிய செயல்பாட்டு அழைப்பு தொடரியல் ((
Universal Function Call Syntax )UFCS). என்பது D இல் உள்ள ஒரு தொடரியல் சர்க்கரைபோன்ற இனிமையானதாகும், இது அந்த வகையின் உறுப்பினர் செயல்பாடு போன்ற ஒரு வகையான (சரம், எண், பூலியன் போன்றவை) எந்தவொரு வழக்கமான செயல்பாட்டையும் இணைக்க உதவுகிறது. இந்நிலையில் நமக்கு Dஎன்றால் என்னஎனும் கேள்வி நம்முன் எழும் நிற்க D என்பது நிலையான தட்டச்சுசெய்வது, அமைப்புகள்-நிலை அணுகல் , சி போன்ற தொடரியல் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பொது-நோக்கு கணினி மொழியாகும். இந்தD எனும் கணினிமொழியின் துனையுடன், குறிமுறைவரிகளை மிகவேகமாக எழுதலாம், விரைவாகப் படிக்கவும், வேகமாக இயக்கவும் முடியும்.
நாம் ஏற்கனவே நம்முடைய கணினியில் இந்த D எனும் கணினி மொழியை நிறுவுகைசெய்யவவில்லை எனில், இந்த Dஇன் இயந்திர மொழிமாற்றியை நிறுவுகைசெய்திடுக, இதன் மூலம் இந்த Dஇன் குறிமுறைவரிகளை நாமே நேரடியாக இயக்கமுடியும்.
இதற்காக பின்வரும் எடுத்துக்காட்டில் உள்ள குறிமுறைவரிகளை கவனித்திடுக:
// file: ufcs_demo.d

module ufcs_demo;

import std.stdio : writeln;

int[] evenNumbers(int[] numbers)

{
    import std.array : array;

    import std.algorithm : filter;

    return numbers.filter!(n => n % 2 == 0).array;

}

void main()
{
    writeln(evenNumbers([1, 2, 3, 4]));
}

நாம் விரும்பும் Dஇன் இயந்திர மொழிமாற்றியுடன் இதை தொகுத்து இந்த எளிய எடுத்துக்காட்டின் பயன்பாடு என்ன செய்கிறது என்பதைக் காண்க :
$ dmd ufcs_demo.d
$ ./ufcs_demo
[2, 4]
ஆனால்
D இன் உள்ளமைக்கப்பட்ட வசதியாக UFCSஇன் மூலம், நம்முடைய குறிமுறைவரிகளை இயற்கையான வழிமுறையிலும் எழுதலாம்:

writeln([1, 2, 3, 4].evenNumbers());

அல்லது இப்போது தேவையற்ற அடைப்புக்குறியை முழுவதுமாக அகற்றிடுக, அது கூட எண்களின் ஒரு சொத்தாக உணரலாம்:

writeln([1, 2, 3, 4].evenNumbers); // prints 2, 4


எனவே முழுமையான குறிமுறைவரிகள் இப்போது பின்வருமாறு ஆகின்றன:
// file: ufcs_demo.d

module ufcs_demo;

import std.stdio : writeln;

int[] evenNumbers(int[] numbers)

{

import std.array : array;

import std.algorithm : filter;

return numbers.filter!(n => n % 2 == 0).array;

}

void main()

{

writeln([1, 2, 3, 4].evenNumbers);

}
நாம் விரும்பும்
D இன் இயந்திரமொழிமாற்றியுடன் அதைத் தொகுத்து செயற்படுத்திட முயற்சித்திடுக. எதிர்பார்த்தபடி, இது அதே வெளியீட்டை உருவாக்குகிறது:
$ dmd ufcs_demo.d
$ ./ufcs_demo
[2, 4]
இந்த தொகுப்பின் போது, தொகுப்பி தானாகவே வரிசைக்கு செயல்பாட்டின் முதல் வாதமாக வைக்கிறது. இது ஒரு வழக்கமான வடிவமாகும், இது
D போன்ற வெளியீட்டினை பயன்படுத்திகொள்கின்றது, எனவே நம்முடைய குறிமுறைவரிகளைப் பற்றி நாம் இயல்பாகவே எண்ணுவதைப் போலவே இதுவும் உணருகின்றது. இதன் விளைவாக இது ஒரு செயல்பாட்டு பாணி நிரலாக்கமாகும்என அறிந்து கொள்ளலாம்.
இது அச்சிடுவதை நாம் யூகிக்கலாம்:
//file: cool.d

import std.stdio : writeln;

import std.uni : asLowerCase, asCapitalized;

void main()

{

string mySentence = “D IS COOL”;

writeln(mySentence.asLowerCase.asCapitalized);

}
ஆனால் இதனை உறுதிப்படுத்த:
$ dmd cool.d
$ ./cool
D is cool
மற்ற Dஇன் வசதிகளுடன் இணைந்து, UFCS மீண்டும் பயன்படுத்தக்கூடிய குறிமுறைவரிகளை இயற்றுவதற்கான சக்தியை வழங்குகிறது, இது இயற்கையான ஓட்டத்தைக் கொண்டுள்ளது.
இப்போது D எனும் கணினிமொழியை முயற்சிக்கலாம்
முன்பு எழுதியது போல, D என்பது பயன்பாடுகளின் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த கணினிமொழியாகும். இதனை பதிவிறக்கப் பக்கத்திலிருந்து நிறுவுகைசெய்வது எளிதானது, எனவே Dஇன் இயந்திர மொழிமாற்றியைப் பதிவிறக்கம்செய்திடுக, எடுத்துக்காட்டுகளைப் பார்த்திடுக, D இன் செயல்படும் அனுபவத்தை பெற்றிடுக.மேலும்விவரங்களுக்கு https://dlang.org/எனும் இணையதளமுகவரிக்கு செல்க

VoIP எனும் கட்டுப் பாட்டாளர்(monitor)ஒரு அறிமுகம்

இது லினக்ஸில் இயங்கும் SIP SKINNY MGCP RTP , RTCP VoIP ஆகிய நெறிமுறைகளுக்கான வணிக முன்பக்கத்துடன் திறமூல வலைபின்னல்களின் தொகுப்பு sniffer ஆகும். வலைபின்னல்களின் அளவுருக்களின் அடிப்படையில் VoIP அழைப்பின் தரத்தை பகுப்பாய்வு செய்ய இந்த VoIP கட்டுபாட்டாளர்(monitor) வடிவமைக்கப்பட்டுள்ளது – ITU-T G.107 E- மாதிரியின் படி தாமத மாறுபாடு மற்றும் தொகுப்பு இழப்பு, MOS அளவில் தரத்தை முன்னறிவிக்கிறது. அனைத்து தொடர்புடைய புள்ளி விவரங்களுடனான அழைப்புகள் MySQL அல்லது ODBC தரவுத்தளத்தில் சேமிக்கப்படுகின்றது. விருப்பமாக ஒவ்வொரு அழைப்பையும் SIP / SKINNY நெறிமுறை அல்லது SIP / RTP / RTCP / T.38 / udptl நெறிமுறைகளுடன் மட்டுமே pcap கோப்பில் சேமிக்க முடியும். VoIPmonitor ஒலியையும் மறையாக்கம் செய்யலாம்.
இதனுடைய வசதிவாய்ப்புகள்
SIP, SKINNY, MGCP VoIP அழைப்புகளை தரவுத்தளம் அல்லது pcap கோப்புகளில் சேமிக்கிறது. இதனைகொண்டு G.711 / G.722 / G.729 / G.723 / GSM / iLBC / Speex / Silk / iSac இலிருந்து WAV ஐ உருவாக்க முடியும்
தொகுப்பு இழப்பு மற்றும் தாமத மாறுபாடுகளை பகுப்பாய்வு செய்கிறது மேலும் ITU-T G.107 E- மாதிரியின் படி MOS மதிப்பெண்ணைக் கணக்கிடுகிறது
நிகழ்வுநேர அழைப்புகளை நிகழ்வுநேரத்தில் கேட்கமுடியும்
CDRஐ வடிகட்டுவதற்கான மேம்பட்ட வலை பயன்பாடு மற்றும் MOS / இழப்பு / மறைநிலைகளின் மோசமான அழைப்புகளைக் கண்டறிய உதவுகின்றது
வசதிகளை மறுபரிசீலனை செய்திடவும் எச்சரிக்கை செய்திடவும் செய்கின்றது
ஒற்றை சேவையகத்தில் ஒரே நேரத்தில் 20 000 வரை அழைப்புகளை கையாளுகின்றது.
இது கொத்தான (Cluster)சாத்தியங்களை கொண்டது
குனு GPLv3 உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இது வெளியிடப்பட்டுள்ளது
அனைத்து தொடர்புடைய புள்ளிவிவரங்களுடனான அழைப்புகள் MySQL தரவுத்தளத்தில் சேமிக்கப்படுகின்றது. விரும்பினால் ஒவ்வொரு அழைப்பையும் pIP கோப்பில் SIP நெறிமுறை அல்லது SIP / RTP / RTCP / T.38 / udptl நெறிமுறைகளுடன் மட்டுமே சேமிக்க முடியும். இது உரையை மறையாக்கம் செய்து வணிகரீதியான WEB GUI இல் இயக்கலாம் அல்லது வன்தட்டில் WAV ஆக சேமிக்கலாம். ஆதரிக்கப்படும் கோடெக்குகள் G.711 alaw / ulaw மற்றும் வணிக செருகுநிரல்கள் G.722 G.729a G.723 iLBC Speex GSM Silk iSAC OPUS ஐ ஆதரிக்கின்றது. இதனைகொண்டு T.38 FAX ஐ PDF கோப்பாக மாற்றவும் முடியும்.
மோசடி அழைப்புகளைத் தடுக்க மோசடி எதிர்ப்பு / கண்காணிப்பு விதிகளை கொண்டுள்ளது
இது அழைப்பு மையங்களை கண்காணித்திட உதவுகின்றது
இதனுடைய தனித்துவமான கட்டமைப்பபானது ஒரே நேரத்தில் 100 000 க்கும் மேற்பட்ட அழைப்பு களையும் (ஒரு வாயிலில் 10 Gbit வீதம்) வினாடிக்கு 30 000 க்கும் மேற்பட்ட அழைப்புகளையும் பகுப்பாய்வு செய்ய அனுமதிக்கிறது
தனித்த IO கட்டமைப்பு வரிசைப்படுத்தப்பட்ட எழுதும் வரிசையுடன் வட்டுக்கான ஒவ்வொரு அழைப்புக்கும் pcap கோப்பை சேமிக்கவும் அனுமதிக்கிறது ( ஒரே நேரத்தில் 100 000 க்கும் மேற்பட்டஅழைப்புகளுடன்)
சேவையக கட்டமைப்பு கிடைமட்ட அளவை அனுமதிக்கிறது (கூடுதல் சேவையகங்களைச் சேர்ப்பதன்வாயிலாக)
இது சிறிய டெல்கோ நிறுவனங்களுக்கு bit செய்வதற்கான தொழில் முன்னணி தீர்வாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது கார்ட்னர் ஆய்வில் பிரதிநிதி விற்பனையாளர் – ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு கண்காணிப்புக்கான சந்தை வழிகாட்டியாக அமைந்துள்ளது
மேலும்விவரங்களுக்கு. .http: //www.voipmonitor.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

Money Manager Ex எனும் நிதி மேலாண்மை பயன்பா டு

நம்முடைய செலவினங்களுக்கு மாறாக வருமானமாகக் கருதப்படுபவை களிலிருந்து நாம் எவ்வளவு பணம் பெறுகிறோம் என்பது பற்றிய தெளிவான புரிதல் இல்லாதபோது நிதி மேலாண்மை சிக்கலாகிவிடும். இந்நிலையில் சிறந்த நிதி ஆரோக்கியத்தை நோக்கிய முதல் படியாக நல்ல நிதி பதிவுகளை பராமரிப்பதே இந்த பயன்பாட்டின் அடிப்படைய நோக்கமாகும்: நமது பணம் எங்கு செல்கிறது என்பது பற்றிய தெளிவான புரிதல் நமக்கு இருக்கும்போதுதான், நம்முடைய செலவுகளை எங்கு குறைப்பது என்பது பற்றிய தகவலை அறிந்த மிகச்சரியான முடிவை நிச்சயமாகஎடுக்க முடியும்., பணத்தை எவ்வாறு செலவிடுவது என்பதற்கு சரியான அல்லது தவறான பதில் எதுவும் நம்மிடம்இல்லை: தனிப்பட்ட நிதி மென்பொருள் எங்கிருந்து வருகிறது. என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய சிறந்த பார்வையை அளிக்க நிதித் தரவை வெட்ட / குறைக்க அவை உதவுகின்றன. மென்பொருளை செயலாக்க வேண்டிய தரவைப் போலவே சிறப்பாக இருக்க முடியும் என்பதை எப்போதும் நினைவில் கொள்க. ஆனால் நம்முடைய தனிப்பட்ட நிதி மென்பொருளைப் பயன்படுத்துவதைப் பற்றி யோசிக்கத் தொடங்கியிருந்தால், ஒவ்வொரு டாலர் எண்ணிக்கையையும் நாம் கண்டி்பாக பெறுவோம் இவ்வாறான நிலையில் கைகொடுக்கவருவதுதான் Money Manager Ex எனும்நிதி மேலாண்மை பயன்பாடாகும். இது ஒரு தனிப்பட்ட நிதி மேலாளராக செயல்படுகின்றது. நம்முடைய சொத்துகளின் நிகர மதிப்பு, வருமானம் செலவுகள் போன்றவற்றைக் கண்காணிக்க இதைப் பயன்படுத்திகொள்ளலாம். இது பயன்படுத்த எளிதானது,இது விண்டோ, லினக்ஸ் , மேக் ஆகிய இயக்கமுறைமைகளில் செயல்படும் திறன்மிக்கது.
இதனுடைய முக்கிய வசதி வாய்ப்புகள்
QIF / CSV / XML ஆகியவடிவமைப்பு கோப்புகளை எளிதாக இதில் பதிவிறக்கம் செய்யலாம்
இதனை கொண்டு அறிக்கைகள், வரைபடங்கள் எளிதாக தயார்செய்யலாம்
திட்டமிடப்பட்ட பரிமாற்றங்களை செயல்படுத்திடலாம்
நிதி கணக்கீடுகளை விரைவாக செயற்படுத்திடலாம்
நாணய மாற்று விகிதங்களின் வரலாற்றினை எளிதாக அறிந்து கொள்ளலாம்
நிதிதிட்டங்களை எளிதாக தயார்செய்யலாம்
தனிப்பட்டநபர்கள் தங்களுடைய சொந்த பயன்பாட்டிற்காக இதனை ஒரு நிதி மேலாளராக எளிதாகப் பயன்படுத்தி கொள்ளலாம்
இது குனு GPLv2 உரிமத்தின் கீழ்பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்லது
இது ஒரு இலவச, திற மூல, குறுக்கு-தள, பயன்படுத்த எளிதான தனிப்பட்ட நிதி மென்பொருளாகும். இது முதன்மையாக ஒருவரின் நிதிகளை ஒழுங்கமைக்க உதவுகிறது மேலும் தனிநபர் ஒருவரின் பணம் எங்கு, எப்போது, எப்படி செல்கிறது என்பதைக் கண்காணிக்கும்திறன்மிக்கது . நம்முடைய நிதி மதிப்பு குறித்த ஒரு பறவை பார்வையைப் பெற இது ஒரு சிறந்த கருவியாக திகழ்கின்றது.
தனிப்பட்ட நிதி பயன்பாட்டில் 90% பயனாளர்கள் பார்க்க விரும்பும் அனைத்து அடிப்படை வசதிகளையும் இந்த பண மேலாளர் உள்ளடக்கியுள்ளார்.இதனுடைய வடிவமைப்பு குறிக்கோள்கள் எளிமையானது மேலும் பயனாளர் நட்பில் கவனம் செலுத்துவதாகும் – ஒவ்வொரு நாளும் தனிநபர் ஒருவர் பயன்படுத்தக்கூடிய பயன்பாடாக இது அமைந்துள்ளது.
கடனட்டை, சேமிப்பு, பங்கு முதலீடு, சொத்து கணக்குகள் ஆகியவற்றை உள்ளுணர்வுடன், எளிதாக, விரைவாக, சுத்தமான சரிபார்ப்புடன் கையாளஉதவகின்றது
தொடர்ச்சியான பட்டியல்கள் , வைப்புகளுக்கான நினைவூட்டல்களை வழங்ககூடியது
நிதித்திட்டம் , பணப்புழக்க முன்கணிப்பு செயல்படுத்தகூடியது
வரைபடங்கள் , பை வரைபடங்கள்(PI Chart) ஆகியவற்றுடன் கூடிய அறிக்கையை எளிதாகஒரேயொரு சொடுக்குதலில் பெறமுடியும்
எந்தவகையான CSV வடிவமைப்பிலிருந்தும் தரவை இதில் பதிவிறக்கும் செய்யமுடியும், அதற்காகவென தனியாக QIFஐநிறுவுகைசெய்யத் தேவையில்லை: இந்த பயன்பாட்டினை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்திடாமலேயே USB யிலிருந்து இதனை இயக்கி பயன்பெறமுடியும்
இது AES குறியாக்கத்துடன் தனியுரிமை அல்லாத SQLite தரவுத்தளத்தை ஆதரிக்கின்றது
சர்வதேச மொழி ஆதரவாக 24 மொழிகளில் கிடைக்கின்றது
MoneyManagerEx இன் ஆண்ட்ராய்டு பதிப்பு ந ம்முடைய செலவினங்களை முழு இயக்கத்துடன் நிர்வகிக்கவும், நம்முடைய வங்கி கணக்குகள், கால கணக்குகள், பங்குகள் ஆகியவற்றின் இருப்பை சரிபார்க்கவும் நம்மைஅனுமதிக்கிறது.
புதிய பணம் செலுத்துபவர்கள், புதிய வகைகளைச் சேர்க்க பரிமாற்றங்களைச் சேர்க்க அல்லது மாற்ற இது நம்மை அனுமதிக்கிறது. மேசைக்கணினி பதிப்பில் வழங்கப்பட்ட ஒரு சில அறிக்கைகள் ஆண்ட்ராய்டு கைக்கணினி / திறன்பேசியிலும் கிடைக்கின்றன. ஆண்ட்ராய்டு பயன்பாடு தினசரி தாமதமாக பரிமாற்றங்கள் குறித்தும் திரும்ப திரும்ப நடைபெறும்பரிமாற்றங்கள் குறித்தும் நமக்கு அறிவிப்புசெய்து நினைவுட்டுகின்றது.
Dropbox உடன் ஒத்திசைவை ஆண்ட்ராய்டு பயன்பாடு இயல்பாகவே ஆதரிக்கிறது; இது நம்முடைய கணக்கு நிலைமையைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்கவும், பரிமாற்றங்களைச் சேர்க்க வும்/ புதுப்பிக்கவும் / மாற்றவும், வகைகளை நிர்வகிக்கவும், பணம் செலுத்துபவர்கள் மற்றும் மீண்டும் மீண்டும் பரிமாற்றங்கள் செய்யவும் … நம்முடைய கைபேசி சாதனத்திலிருந்து எப்போதும் எதையும் அனுமதிக்கிறது. தரவுத்தளத்தை நம்முடைய குடும்பத்தினரிடையே பகிர்ந்துகொள்ளலாம், அதன்பிறகு எல்லோரும் அதை புதிய செலவுகளுடன் புதுப்பிக்கலாம். Dropbox ஐப் பயன்படுத்தாத, ஆனால் Drive, Box.net மற்றும் பலவற்றில், இது இன்னும் இயங்குகிறது. கைபேசியில் தரவுத்தளத்தை சரியான பயன்பாட்டுடன் ஒத்திசைப்பதே நாம் செய்ய வேண்டிய ஒரே செயலாகும்!

மேலும் விவரங்களுக்கு https://www.moneymanagerex.org/எனும் இணையதளமுகவரிக்கு செல்க

சந்தேகத்தை தீர்வுசெய்து சரியாக வழிகாட்டிடுக

வானத்தில் சூடான காற்று அடைக்கப்பட்ட பலூனில் பறந்து கொண்டிருந்த ஒரு மனிதன் திடீரென்று தான் செல்லுமிடத்திற்கான வழியை மறுந்துவிட்டதை உணர்ந்தார். அதனால் தற்போது தான் எந்த இடத்தில் பறந்து கொண்டிருக் கின்றோம் என அறிந்து கொள்ளவிரும்பினார் அதற்காக பலூனில் தான் பறக்கு உயரத்தைக் குறைத்து கீழே தாழ்வாக பறக்கும்போது, தரையில் ஒரு மனிதன்நடந்து சென்று கொண்டிருப்பதைக் கண்டார். பலூனில்தான் பறந்து செல்லும் உயரத்தை மேலும் குறைத்து, , “ஐயா! மன்னிக்கவும், நான் தற்போது எங்கே இருக்கிறேன் என்று சொல்ல முடியுமா?”என கீழே தரையில் நடந்து கொண்டிருப்பவருக்கு தன்னுடைய குரல் கேட்கவேண்டுமென மிக சத்தமாக வினா எழுப்பினார் .
அந்த கேள்விக்கு கீழே தரையில் நடந்து கொண்டிருந்தவர் : “மிக்க நன்றி ஐயா!. நீங்கள் ஒரு சூடான காற்றடைத்த பலூனில் பறந்து கொண்டிருக்கின்றீர், நீங்கள் பறந்து செல்லும் பலூனானது தரையிலிருந்து 30 மீட்டர் உயரத்தில் உள்ளது. ” என பதில் கூறினார் .
அதனைதொடர்ந்துபலூனில் பறந்து கொண்டிருந்தவர் “மிகவும் சரிதான் ஐயா !ஆனால், நீங்கள் தகவல் தொழில்நுட்பத்தில்துறையில் பணியாற்றுகின்றீர்கள் போலும் அதனால் தான் என்னுடைய கேள்விக்கு மிகச்சரியான பதிலை கூறுகின்றீர் சரிதானே !” என்று ஏற்புகை செய்தார்.
பின்னர் “உண்மைதான் ஐயா! நீங்கள் கூறுவது மிகவும் சரிதான் நான் தகவல் தொழில்நுட்பத்துறையில் தான் பணியாற்றுகின்றேன்.” என்று அதனை ஆமோதித்தார் .
மேலும் . “ஆனால் ஐயா !நான் தகவல் தொழில்நுட்பத்தில்துறையில்தான் பணியாற்றுகின்றேன் என்பது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?”என பலூனில் பறப்பவரிடம் தரையில் நடந்து கொண்டிருந்தவர் சந்தேகம் கேட்டார்.
பலூனில் பறந்து கொண்டிருந்தவர் , “ நான் கேட்ட கேள்விக்கான பதிலாக நீங்கள் என்னிடம் கூறியது எல்லாம் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சரியானதுதான், ஆனால் அந்த பதிலால் யாருக்கும் எந்தவொரு பயனுமில்லை. அவ்வாறான யாருக்கும் பயன்தராத ஆனால் மிகவும் சரியான பதிலை தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிபவர் மட்டுமே கூறிடுவார்கள் அதனடிப்படையில் நான் உங்களுடைய பணியை கணித்து கூறினேன்” என பதிலளித்தார் .
அதன்பின்னர் கீழே தரையில் உள்ளவர் பலூனில் பறந்து கொண்டிருப்பவரை பார்த்து , “நீங்கள் நிர்வாகத்துறையில் பணியாற்றி கொண்டிருக்கின்றீர் சரிதானே.” என்று சந்தேகம்கேட்டார்.
பிறகு பலூனில் பறந்து கொண்டிருப்பவர் “ஆம் ஐயா !நான் நிருவாகத்துறையில்தான் பணிபுரிகின்றேன்,” என்று பதிலளித்தார், “ஆனால் ஐயா !நான் நிருவாகத்துறையில் பணியாற்றி கொண்டிருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?” என சந்தேக கேள்விஎழுப்பினார்.
அதனை தொடர்ந்து தரையில் நடந்து கொண்டிருந்த மனிதர், “நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் அல்லது எங்கு செல்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது, ஆனால் நான் உதவ முடியும் என்று மட்டும் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். இவ்வாறு நிருவாகத்துறையில் இருப்பவர்கள் மட்டுமே செயல்படுவார்கள் அதனால் மிகச்சரியாக கூறினேன் ” என பதில் கூறினார் .அதனோடு ” நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த அதே நிலையில்தான் தற்போதும் நீங்கள் இருக்கிறீர்கள், உங்களுக்காக நான் வெட்டியாக நின்று பதில் வேறு கூறிகொண்டிருப்பது என்னுடைய தவறுதான் போய் வாருங்கள் நீங்கள் வேறுயாரையாவது இதே கேள்வியை கேட்டு வழிகண்டுபிடித்து செல்லுங்கள் . ” என கூறிவேகமாக நடக்கதுவங்கினார் .
என்ன வாசகரே நீங்களாவது அந்த பலூனில் பயனம் செய்பவருக்கு உதவிசெய்யுங்களேன் .

கையடக்க DSpeech (உரையை-பேச்சாக மாற்றி) எனும் பயன்பாடு

DSpeech Portable 1.73.218 எனும் உரையை-பேச்சாக மாற்றி யின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு உரையை-பேச்சாகமாற்றிடும் (Text-To-Speech (TTS)) பயன்பாடாகும், இது கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் Speech API (SAPI) எனும் குரல்களை ஏதேனும் ஒரு உரையை உரக்கப் படிக்க அல்லது ஒலி கோப்பில் சேமிக்கப் பயன்படுத்தி கொள்கின்றது. இது ஒரு கையடக்க பயன்பாடாக தொகுக்கப்பட்டுள்ளது, எனவேஇதனை நம்முடைய பயணத்தின்போது கூடபயன்படுத்தி கொள்ளமுடியும், இது தனிப்பட்ட மற்றும் வணிக பயன்பாட்டிற்கான கட்டணமற்ற மென்பொருளாக வெளியிடப்பட்டுள்ளது.
இதனுடைய வெளியீட்டாளரின் அனுமதியுடன் சிறிய பயன்பாட்டிற்காக இதுதொகுக்கப்பட்டுள்ளது.
இது தானியங்கி பேச்சு அங்கீகாரம்(Automatic Speech Recognition (ASR)) என்பதுடன் ஒருங்கிணைந்த செயல்பாட்டுடன் கூடிய உரைக்கு பேச்சாக மாற்றிடும் செயல்திட்டமாகும். இது எழுதப்பட்ட உரையை உரக்கப் படிக்கவும் பயனாளருடைய பதில்களை கூறும் குரல்ஒலியின் அடிப்படையில் உச்சரிக்கப்பட வேண்டிய வாக்கியங்களைத் தேர்வுசெய்யவும் முடியும். இந்த வகையான நிரலால் கோரப்படும் செயல்பாடுகளையும் மேம்பட்ட நடைமுறை பயன்களையும் விரைவாகவும் நேரடியாகவும் வழங்க இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இதற்கிடையில், மற்றபயன்பாடுகளின் ஆக்கிரமிப்பு , வள நுகர்வு ஆகியவை இதில் குறைவாக உள்ளது. இதனுடையஒரு சில குறிப்பிடத்தக்க வசதிவாய்ப்புகள்:

1. இது வெளியீட்டை .WAV, .MP3 அல்லது OGG கோப்பாக சேமிக்க நம்மை அனுமதிக்கிறது;

2. இது வெவ்வேறு குரல்களுக்கு இடையில் உரையாடல்களை உருவாக்குவதற்காக வெவ்வேறு குரல்களை விரைவாகத் தேர்ந்தெடுக்க, அவற்றை ஒன்றிணைக்க அல்லது அவற்றை மாற்றியமைக்க நம்மை அனுமதிக்கிறது;

3. இது ஒரு குரல் அங்கீகார முறையை ஒருங்கிணைக்கிறது, இது ஒரு எளிய உரைநிரல் மொழியின் மூலம், பயனாளருடன் ஊடாடும் உரையாடல்களை உருவாக்க நம்மை அனுமதிக்கிறது;

4. இது குரல்களை சுதந்திரமான முறையில் கட்டமைக்க நம்மை அனுமதிக்கிறது;

5. பொருத்தமான TAG களுக்கு மீண்டும்இயக்கும் போது (வேகம், தொகுதி மற்றும் அதிர்வெண்) குரல்களின் வசதிகளை மாற்றிடும் வகையில் மாற்றவும், இடைநிறுத்தங்களைச் செருகவும், குறிப்பிட்ட சொற்களை வலியுறுத்தவும் அல்லது அவற்றை உச்சரிக்கவும் இது நம்மை அனுமதிக்கிறது;

6. இது இடைநிலைபலகையின் உள்ளடக்கத்தைப் பிடிக்கவும் இனப்பெருக்கம் செய்யவும் நம்மை அனுமதிக்கிறது;

7.இது அனைத்து குரல் இயந்திரங்களுடனும் இணக்கமானது (SAPI 4-5 உடன்இணக்கம்);

8. செயற்கைநினைவக (AI) உரையாடல் அமைப்பு. உண்மையில் பயனுள்ளதாக இல்லை, ஆனால் வேடிக்கையானது. இது ஒவ்வொரு மொழியிலும் இயங்காது.

9.இது முக்கிய மொழிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட குரலின் மொழிக்கும் இடையிலான வாக்கியங்களை மொழிபெயர்க்க அனுமதிக்கிறது.

10.இதன்வாயிலாக திரைப்படங்களின் பின்னனி குரலை எளிதாக பதிவுசெய்ய முடியும்; இந்த வசதியானது ஒரு திரைப்படத்தின் பின்னணியுடன் வாசிப்பு வசனங்களை (நிலையான SRT வடிவத்தில்) ஒத்திசைக்கிறது.
இது ஒரு PortableApps.com நிறுவியில் தொகுக்கப்பட்டுள்ளது, எனவே இது நம்முடைய இயக்ககத்தில் செருகப்பட்டிருக்கும் போது ஏற்கனவே இருக்கும் PortableApps.com நிறுவுகையை தானாகவே கண்டுபிடிக்கும். இது ஏற்கனவே உள்ள நகலின் மேல் நிறுவுவதன் மூலம் மேம்படுத்தல்களை ஆதரிக்கிறது, எல்லா அமைப்புகளையும் பாதுகாக்கிறது. இது பட்டியல், காப்பு பயன்பாடு உள்ளிட்ட PortableApps.com இயங்குதளத்துடன் தானாகவே ஒருங்கிணைந்து இயங்குகிறது.
இது எழுதப்பட்ட உரையை உரக்கப் படிக்கவும் பயனாளருடைய பதில்களின் குரல்ஒலிஅடிப்படையில் உச்சரிக்கப்பட வேண்டிய சொற்றொடர்களைத் தேர்வுசெய்யவும் முடியும். இந்த வகையான நிரலால் கோரப்படும் செயல்பாடுகளையும் மேம்பட்ட நடைமுறை பயன்களையும் விரைவாகவும் நேரடியாகவும் வழங்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் இலகுவானது, ஒரு நொடியில் தன்னுடைய செயலை துவங்குகிறது ஆயினும் பதிவேட்டில் எதையும் எழுதுவதில்லை
மேலும் விவரங்களுக்கு
http://dimio.altervista.org/eng/அல்லது https://portableapps.com/news/2019-07-02–dspeech-portable-1.73.81-released எனும் இணையதளமுகவரிக்கு செல்க

PortableApps.com இயங்குதளம் 17.0.1: எனும்புதிய தொகுப்பு

PortableApps.com Platform 17.எனும் வெளியீடு சமீபத்திய Delphi compiler மொழிமாற்றிக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்டுள்ளது, பகுதிவிண்டோ 2000 இன் ஆதரவைச் சேர்க்கிறது, சுட்டியின் நகரத்துதலையும், நிலைத்தன்மையையும் மேம்படுத்துகிறது, இது கையடக்கமாகனது, இணக்கமானது-பல்வேறு பிழைகளை சரிசெய்கிறது, மேலும் நிறுவுகையின் அளவை 30%அளவிற்கு குறைக்கிறது.,
அதாவது மேம்படுத்தப்பட்ட நிலைத்தன்மைக்கு சமீபத்திய டெல்பி 10.4 புதுப்பிப்பு 2 இன் தொகுப்பிற்கான புதுப்பிப்பாக இந்த வெளியீடுஅமைந்துள்ளது. மேலும் கூடுலாக பழைய கணினிகளின் பயனாளர்களுக்கு பகுதி விண்டோ 2000 இன் ஆதரவு இதில் சேர்க்கப்பட்டுள்ளது. பட்டியலின் சுட்டிசக்கர நகர்த்துதலை பெரிதும் மேம்படுத்தப்பட்டு, இப்போது கணினி சுட்டிசக்கர அமைப்புகளை மதிக்கும் தன்மையுடன் அமைந்துள்ளது . இயங்குதள நிறுவுகையின் அளவு 30% குறைந்து வெறும் 8.5MB ஆக குறைக்கப் பட்டுள்ளது. நமக்கு தேவையான தற்போதைய கணினியில் கூடுதல் விவரங்கள் அறிமுகம் பெட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன, இது கணினி 32-பிட் அல்லதுs 64-பிட் இயங்கும் போது அல்லது நாம் பயன்படுத்தும் விண்டோ 10 இன் கட்டமைப்பை எப்போது செயல்படுத்திடுவது என்பதை எளிதாக்குகிறது. இதில் தேடல் பெட்டியை அழிக்க Ctrl-Backspace சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இதில் மேஜைக்கணினி உருவப் பொத்தான்கள் மற்றும் கணினியின் வன் தட்டு சிக்கல்களை மறைப்பதற்கான திருத்தங்கள் செய்யப் பட்டுள்ளன. விரைவான 17.0.1 வெளியீடு இரண்டு சிறிய பிழைகளின் திருத்தங்களையும் சேர்க்கிறது. இதனுடைய முக்கிய வசதி வாய்ப்புகள்
எப்போதும் போல, இது தானியங்கி பயன்பாட்டு மூடுதல் (
Automatic App Closing)போன்ற சிறந்த வசதிகளுடன் நிரம்பியுள்ளது:
– இயங்குதளத்துடன் தானாகவே (பாதுகாப்பாக) மூடுவதும், பெறுவதும் முன்பை விட எளிதானது மேலும் நம்முடைய மேககணினி இயக்ககத்தை ஒத்திசைவாக முடிப்பதற்கு முன் மூடப்பட வேண்டியவைகளை நமக்குத் தெரியப்படுத்துகின்றது. இந்த வசதியை வழங்குவதில் உதவுவதற்காக
Luthfi Harahap தனது சில குறிமுறைவரிகளுக்கு மறு உரிமம் வழங்குவதற்கு போதுமானவையாகும்
இதனுடைய நவீன இயல்புநிலை கருப்பொருளானது விண்டோ 7, விண்டோ 8 / 8.1 விண்டோ 10 ஆகியவற்றுடன் நன்றாக பொருந்துகிறது மேலும் நமக்கு பிடித்த வகையிலான கருப்பொருள்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன.
கணினி வன்தட்டில் இடம்சுட்டியை வைத்துசுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குவதன் மூலம் நம்முடைய எல்லா பயன்பாடுகளுக்கும் விரைவான அணுகலைப் பெறமுடியும்
பயன்பாட்டுத் தேடல் பெட்டி எப்போதும் தெரிவுசெய்வதற்கேற்ப இயல்பாகவே தயாராக இருக்கின்றது, எனவே நாம் எந்தவொரு தளத்தையும் எளிதாகத் திறக்கலாம் – ஒருவேளை CTRL-ALT-SPACE ஆகியவிசைகளுடன் – நமக்கு பிடித்த பயன்பாட்டைத் துவங்க தட்டச்சு செய்யத் துவங்கிடுக. விருப்பங்களில் உள்ள பெட்டியைசெயல்படுவதன் மூலம் நாம் விரும்பினால் பயன்பாட்டு விளக்கங்களில் கூட தேடலாம்
விருப்பங்களில் உள்ள இணைப்புகள் தாவல் நம்முடைய இணைய பதிலாளுடன் பணி செய்ய தளத்தை தானாகவோ அல்லது கைமுறையாகவோ கட்டமைக்க நம்மை அனுமதிக்கிறது
இயங்குதள நிறுவி நம்முடைய சிறிய சாதனங்கள், ஒத்திசைக்கப்பட்ட மேககணினி கோப்பகங்கள், உள்ளூர் கணினி மற்றும் பலவற்றைக் கண்டறிந்து நிறுவுகைசெய்திடலாம்.
நம்மிடம் இருக்கும் பயன்பாடுகளுக்கான புதுப்பிப்புகளை விரைவாகச் சரிபார்த்து, பெயர், வகை, வெளியீட்டு தேதி மற்றும் பலவற்றின் அடிப்படையில் புதியவற்றைக் எளிதாக கண்டறியலாம்
வளாக பயனர்களுக்கு, வெளியேற்ற பொத்தானை தானாகவே பணிநிறுத்தம் / மறுதொடக்கம் / உள்நுழைவு பொத்தானை மாற்றி, நம்முடைய விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க விண்டோ வரிசையில் கொண்டு வரும். வெளியேற்ற அல்லது பணிநிறுத்தம் / மறுதொடக்கம் / வெளியேறுதல் ஆகியவற்றைக் காட்ட நாம் தேர்ந்தெடுக்க பொத்தானை வலதுபுறு சொடுக்குதல் செய்திடலாம்.
நம்முடைய எழுத்துருக்களை நம்முடன் எடுத்துச் சென்று அவற்றை நம்முடைய சிறிய பயன்பாடுகளில் கூட பயன்படுத்தமுடியும்
இதனுடைய இரண்டாவது பக்கத்தில் உள்ள வகைகளின் அடிப்படையில் எல்லா பயன்பாடுகளுடனும் விருப்பமானவை மற்றும் அதிகம் பயன்படுத்தப்பட்ட பயன்பாடுகளின் இயல்புநிலையைப் பயன்படுத்தவும் அல்லது இயல்புநிலையாக அகரவரிசை பயன்பாடுகள், பிரிவுகள் மற்றும் பிடித்தவைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அதை மாற்றியமைத்திடலாம்.
மேலும் விவரங்களுக்கு
https://portableapps.com/எனும் இணையதளமுகவரிக்கு செல்க

Previous Older Entries