இணையத்தின் மூலம் கணினியின் விளையாட்டுகளை உருவாக்கிடஉதவிடும் HTML5 எனும் திறமூல மென்பொருள் கருவி

கடந்த பத்தாண்டுகளாக கணினியில் இணையத்தின்மூலமான நேரடிவிளையாட்டு என்பது பல்லாயிரகணக்கான மக்களின் பேராதரவுடன்  அகல்கற்றையின் வளர்ச்சியினால் வளர்ந்து வருகின்றது.  தற்போது ஏராளமானவர்கள் இந்த கணினியின்  விளையாட்டுகளில்  தங்களின் ஓய்வு நேரத்தை செலவிடுகின்றனர்.அதிலும் இணையத்தின்மூலம் நேரடியாக விளையாட்டு என்பது மிகமுக்கிய இடத்தினை வகிக்கின்றது ஏனெனில் இணையத்தின்மூலம் நேரடியானகணினியின் விளையாட்டிற்காக குறிப்பிட்ட இடத்தில்தான் அல்லது இயக்கமுறைமையில்தான் செயல்படும் என்ற நிபந்தனையெதுவுமின்றி இதனை பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் இதற்காக தனியான முதலீடோ ,வன்பொருட்களோ அல்லது மென்பொருட்களோ தேவையில்லை. முன்பெல்லாம் கணினியில் விளையாட்டு மென்பொருளை உருவாக்குவதற்காக  இதற்கென தனியான தொழில்நுட்ப வல்லுனர்கள் குழுவாக அமர்ந்து அதிக நேரம் உழைத்து  அதிக பொருட்செலவில் உருவாக்கவேண்டிய நிலை இருந்துவந்தது. தற்போது தனியொரு நபரே மிக்குறைந்த நேரத்தில் செலவேஇல்லாமல் மிகஎளிதாக இந்த கணினியின் விளையாட்டை உருவாக்கமுடியும் என்ற நிலைக்கு வளர்ந்துவிட்டது.

சமுதாய இணையபக்கங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்,இசை , ஒலிஒளிபடங்கள், விரைவான அசைவூட்டங்கள் என மிக முன்னேறிய நிலையில் இந்த கணினியின் இணையத்தின்மூலமான நேரடிவிளையாட்டுகளில் உள்ளன. இந்த கணினியின் இணையத்தின்மூலமான நேரடிவிளையாட்டுகளை மேம்படுத்துதலும் சந்தைபடுத்துதலும் மிகஎளிதான செயலாகிவிட்டது மேலும் இதற்கென தனியான வன்பொருள் எதுவும் தேவையில்லாததாகிவிட்டது.

அதுமட்டுமின்றி பல்வேறுகருவிகள்,தொழில்நுட்பங்கள்,தளங்கள்,போன்றவை இந்த இணையத்தின்மூலமான நேரடி கணினியின் விளையாட்டுகளை உருவாக்குவதற்காக தேவைப்படுகின்றன. ஆயினும் இவையனைத்தும் பின்புலத்தில் இருந்துகொண்டு ஒரு பாமரன்கூட மிகஎளிதாக இதனை உருவாக்கிடுவதற்கு அனுமதிக்கின்றது

மேலும் புதியபுதிய தளங்கள் ,கருவிகள் அவ்வப்போது அறிமுகமாகிக்கொண்டே உள்ளன. தனியானதொரு மென்பொருளில் உருவாக்கிடும் இந்த இணையத்தின்மூலமான நேரடி கணினியின் விளையாட்டுகளானது அனைத்து பயன்பாட்டுமென்பொருட்களுடனும ஒத்தியங்கிடுமாறு செய்திடவேண்டும்  இணையத்தின்மூலமான நேரடி கணினியின் விளையாட்டுகளை உருவாக்குவதற்காகன செலவானது மிகஅதிகமாகும் ஆனால் இதனை சந்தைபடுத்திடும்போது அதனுடைய விற்பனைவிலையானது மிக்குறைவாக இருந்திடவேண்டும்  இணையத்தின்மூலமான நேரடி கணினியின் விளையாட்டுகளை உருவாக்கும் வழிமுறைகளும் அவ்வப்போது மாறிகொண்டே இருக்கின்றன. அனைத்து பயன்பாடுகளுடனும் மென்பொருட்களுடனும் ஒத்தியங்கசெய்தல் இணையபக்கத்தில் இதனைமேலேற்றிடும் நேரஅளவை மிக்குறைவாக இருக்குமாறு செய்தல் என்பனபோன்ற ஏராளமான காரணிகள் இந்த இணையத்தின்மூலமான நேரடி கணினியின் விளையாட்டுகளை உருவாக்குவதை தீர்மாணிக்கின்றன.

மேற்கூறிய அனைத்து காரணங்கள் ,காரணிகள் ஆகியவற்றை வெற்றிகொண்டு     இணையத்தின் மூலம் கணினியின் விளையாட்டுகளை உருவாக்கிடும்  மிகச்சிறந்த திறமூல மென்பொருள் கருவியாக  HTML5 என்பது விளங்குகின்றது. இது தனியுடமை மென்பொருளைவிட மிகசிறந்ததாக  விளங்குகின்றது. இது java scrips ,CSS3 Scripts ஆகிய இணையஉலாவியினுடைய மென்பொருட்களின் அடிப்படையில் உருவாக்கபட்டுள்ளது அதிக செயல்திறனும் செயலியையும் கொண்டதாகவும் வெளியிலிருந்து வேறு மென்பொருட்கள்எதையும் சாராமலும்,Flash,Silverlight,Flex போன்றபயன்பாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறும் இந்த  HTML5 என்பது உள்ளது. இது எந்த தளத்திலும் செயல்படும் திறன்பெற்றது, அதிகஇடைமுகமும் மிகஎளிதாக பயன்படுத்த தக்கவகையிலும் உள்ளது. மூன்றாவது நபரின் மென்பொருள் எதனையும் இது சாராமல் செயல்படும் திறன்கொண்டது கையடக்கமானது, இருபரிமான முப்பரிமான வரைகலையுடன் செயல்படும்திறன் மிக்கது. குறைந்த அலைகற்றையை கொண்டு மிகக்குறைந்த காலஅவகாசத்தில் இணையபக்கத்தில் மேலேற்றிடும் திறனுள்ளது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும்வல்லமை கொண்டது. இயக்கநேரத்தில் நேரடியாக தொடர்புகொள்ள அனுமதிக்கின்றது இதனை பற்றி மேலும் அறிந்த கொள்ள www.mtic.cgmanifext.com/   என்ற இணையதள பக்கத்திற்கு செல்க

 

வின்எஸ்,ஸி,பி (WinSCP ) என்ற திறமூலபயன்பாட்டினை எவ்வாறு பயன்படுத்துவது

  இன்று நாம் அனைவரும் அவரவர் விரும்பும் இயக்கமுறைமையை தத்தமது கணினியில் நிறுவி அவரவர்களின் அன்றாட பணிகளை செய்துவருகின்றோம்.இந்நிலையில் ஒருவர் தாம் பயன்படுத்திடும் கோப்பினை மற்றொரு நண்பருக்கு வழங்கவிரும்பினால் இருவரும் வெவ்வேறு வகையான இயக்கமுறைமையை பயன்படுத்தி  கொண்டிருக்கும்போது அவ்விருவருடைய கோப்பு அமைப்புகளும் இருவேறுவிதமாக இருக்கும் அந்நிலையில் எவ்வாறு அவ்விருவரும் பாதுகாப்பாக தங்களுக்குள் கோப்பினை   பரிமாறிகொள்வது என்ற சிக்கல் எழுகின்றது இந்த சிக்கலை தீர்வுசெய்ய  வின்எஸ்,ஸி,பி (WinSCP )எனும் பாதுகாப்பான திறமூல கோப்பு பரிமாற்ற பயன்பாடு உதவுகின்றது. விண்டோவில் பாதுகாப்பாக கோப்புகளை நகலெடுத்து ஒட்டுதல்(Windows Secure CoPy)  என்பதையே ஆங்கிலத்தில் சுருக்கமாக வின்எஸ்,ஸி,பி (WinSCP )என அழைக்கின்றனர். இருவேறு கணினிகளுக்கிடையே கோப்புகளை பாதுகாப்பாக பரிமாறிகொள்ள உதவுவதுதான் இதன்முக்கிய பணியாகும்  இந்த பயன்பாடு 2000ஆவது ஆண்டில் உருவாக்கபட்டாலும் 2003 இலிருந்துதான் பொதுஅனுமதிபெற்ற பயன்பாடாக www.SourceForge.net  என்ற தளத்தின் மூலம் அனைவருக்கும கிடைக்குமாறு வெளியிடபட்டது

இதில் Secure Shell என்ற நெறிமுறையை PuTTY என்பதிலிருந்தும் FTP என்ற நெறிமுறையை FileZillaஎன்பதிலிருந்தும் நடைமுறைபடுத்தபடுகின்றது  இந்த பயன்பாடானது மறைகுறியீடாக்குதல் (cryptographical )என்ற வழிமுறையில்  செயல்படுத்தபடுகின்றது .கடவுச்சொற்களை அபகரித்திடாமலும் தீயநச்சுநிரலில் இருந்து கோப்பு பரிமாற்றத்தை பாதுகாத்தல் செய்வதுமே இதன் அடிப்படை பணியாகும்

முதலில்இதனை http://winscp.net/eng/download.php என்ற இணைய முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்க.

பின்னர் இதனை நிறுவுவதற்காக செயல்படுத்திடும்போது Setup WindSCPஎன்ற திரையில்  Norton-Commander interface , Windows Explorer-like interface.ஆகிய இருவாய்ப்புகள் தோன்றிடும்

2.1

2.1

அவற்றுள் முதல்வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக   பின்னர் நாம் இந்த பயன்பாட்டினை நிறுவிடும் கணினியானது SiteGround client ஆக உள்ளதாவென உறுதிபடுத்திகொள்க  அதன்பின்னர் தோன்றிடும் திரைகளில் next,next என்றபொத்தானை மட்டும் பலமுறை தெரிவுசெய்து சொடுக்கினால் போதும் இந்த பயன்பாடானது தானாகவே நம்முடைய கணினியில் நிறுவபட்டுவிடும்

பின்னர் WinSCP client என்பதை இயக்கி WinSCP Login என்ற திரைமூலம் உள்நுழைவுசெய்து Session என்ற பகுதியை தேடிபிடித்திடுக

2.2

2.2

அதில் Host namePort number  ஆகியவற்றில் தேவையான விவரங்களை மிகச்சரியாக  உள்ளீடுசெய்திடுக. நம்முடைய கணினியானது SiteGround client ஆக இருப்பதால் User Name , Password ஆகியபகுதிகளை காலியாக விட்டிடுக  File protocol என்பதிலுள்ள கீழிறங்கு பட்டியிலிருந்து SFTP (Secure FTP), SCP (Secure Copy) , FTP. ஆகிய வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்துகொள்க

இணைப்பு ஏற்படுத்திடும்போது  ssh keys pair என்பது உருவாகும் அப்போது கேட்கப்படும் விரங்களை உள்ளீடு செய்து கொள்க   இந்த இணைப்பு விவர தகவல்களை  Stored Sessions என்ற துனைப்பகுதியில் சேமித்துவைத்திடுக  இந்த திரையில் நடப்பு அமர்வுநேரசெயல்(Session), புதியஅமர்வுநேர செயல் ,அமர்வுநேர பெயர் மாற்றம் செய்தல் ,அமர்வுநேரத்தைமாற்றியமைத்தல் ஆகிய அமர்வுநேர செயல்களை இந்த திரையில்  New,Rename,Editஆகிய பொத்தான்களை அழுத்துவதன் மூலம் செய்யமுடியும்

2.3

2.3

Shell icon என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கு வதன்வாயிலாக கணினியின் திரையில்  இந்த அமர்வுநேரசெயலிற்காக குறுக்கவழி உருவ பொத்தானை உருவாக்கி கொள்க

Tools என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக  Putty SSH client இலிருந்து  தேவையான அமர்வுநேரசெயல்களை பதிவிறக்கம் செய்து கொள்க

இடதுபுறமுள்ள Environment என்ற பகுதியை தெரிவுசெய்தவுடன் விரியும் வலதுபுற  பலகத்தில்  server environment பகுதியில் தேவையானவாறு அமைவுசெய்திடுக

2.4

2.4

இதே Environment என்ற பகுதியின் Directory என்ற துனைப்பகுதியில்இயல்பு நிலையில் remote directory, local directory  ஆகியவற்றை அமைத்திட அனுமதிக்கின்றது

2.5

2.5

SSH  என்ற பகுதியில் தேவையானSSH protocol version  ஐ தெரிவுசெய்து அமைத்திடுக  அவ்வாறே encryption cypher selection policy ஐயும் அமைத்திடுக

2.6

2.6

இந்த SSH என்ற பகுதியின் Preferences  என்ற துனைபகுதியில் Norton Commander  , Explorer-like ஆகிய இரண்டு வாய்ப்புகளில் முதல் வாய்ப்பினை மட்டும் தெரிவு செய்து கொள்க. இரண்டாவது வாய்ப்பு  கோப்பினை இழுத்து சென்று விடுவதன் வாயிலாக பரிமாற்றம் செய்திடஉதவுகின்றது

2.7

2.7

 இந்த திரையில் preferences என்ற பொத்தானை அழுத்தியவுடன் தோன்றிடும் திரையின்மூலம் ஏராளமான confirmation வாய்ப்புகள்,  notificationsவாய்ப்புகள் , கோப்பினை மாறுதல் செய்வதற்கானpreferred editors , கோப்பினை பரிமாறிகொள்வதற்கான  transfer actions  போன்ற பல்வேறுசெயல்களை செய்துகொள்க. இந்த வாய்ப்புகளை தெரிவுசெய்து செயல்படுத்தி முடிந்தவுடன் அவ்வப்போது Saveஎன்ற பொத்தானை அழுத்தி சேமித்துகொள்க.பின்னர் இறுதியாக  ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர்  இருவேறு கணினிகளுக்கிடையே கோப்புகளை பாதுகாப்பாகவும் எளிதாகவும் பரிமாறிகொள்ளமுடியும்

ஒரேகணினியில் மெய்நிகர் கணினி (VMware) என்ற அடிப்படையில் விண்டோ 7 உம், லினக்ஸும் இயங்குவதாக கொள்வோம் அந்நிலையில்  மெய்நிகர் கணினியை (VMware) திரையில் தோன்றசெய்க. அதில் ஈதர்நெட் அமைவை customஎன்று அமைத்துகொண்டு VMnet8(NAT) என்பதை தெரிவுசெய்துகொள்க

  பின்னர் ஐ,பி முகவரியை 192.168.0.1என்றவாறு அமைத்துகொள்க

இப்போது விண்டோ7 இயக்கமுறைமை கணினிக்கு மாறிகொண்டு அதில் network and sharing center என்பதை திறந்து அந்த திரையில் change adaptor settings என்பதை தெரிவுசெய்துகொள்க உடன் விரியும் ஏராளமான adaptors களின் வகைகளில் Vmnet8 என்பதை தெரிவுசெய்து கொள்க இதுவளாக பிணைய இணைப்பாகும் (Local Area Connection 3) இதனை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக உடன்விரியும் குறுக்கு வழிபட்டியில்  properties என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் பண்பியல்பு உரையாடல் பெட்டியில் Internet Protocol version4 (TCP/Ipv4) என்பதை தெரிவுசெய்து கொண்டு மீண்டும் properties என்பதை  தெரிவுசெய்து தோன்றசெய்து நம்முடைய லினக்ஸ் மெய்நிகர்கணினியின் முகவரியை 192.168.0.2 என்றவாறு உள்ளீடு செய்திடுக . இந்த ஐபி முகவரியை பிங்க் வாயிலாக லினக்ஸ் கணினியில் ifconfigஎன்றகட்டளைமூலமும் விண்டோ கணினியில் ipconfigஎன்றகட்டளைமூலமும் இதனை உறுதிபடுத்தி கொள்க

பிறகு  WinSCP client என்பதை இயக்கி WinSCP Login என்றமுதல் திரைமூலம் host name,username,password ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து உள்நுழைவுசெய்க  உடன் இரு கணினிகளுக்கிடையே முதல்முறையாக இணைப்பு ஏற்படுவதால்  எச்சரிக்கை செய்திபெட்டி ஒன்று தோன்றிடும் அதில் yes  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின் இரு கணினிகளின் திரையும் அருகருகே இரு பலகம் போன்று இருவேறு  சாளரங்களில் தோன்றிடும் தேவையான கோப்பகளை இழுத்துசென்று விடுவதன் வாயிலாக பரிமாறிகொள்க .

Vim எனும் உரைபதிப்பு செயலி

1.1

Vim என்பது உரைபதிப்பு செயலில் Vi editor  ஐ அடிப்படையாக கொண்டு யுனிக்ஸ் செயல்படும் கணினியில் இயங்குவதால் இது மிகபிரபலமாக உள்ளது  இதனை தொடர்ந்து gVim என்பது வரைகலையை அடிப்படையாக கொண்டு செயல்படும் ஒரு பதிப்பாகும். இந்த gVim உரைபதிப்பு பயன்பாடானது விண்டோ7 இயக்கமுறைமையில்கூட  Git,Pathogen ஆகிய கூடுதல் இணைப்புடன் இணைந்து செயல்படும் திறன்வாய்ந்ததாக உள்ளது  இந்த  gVim ஐ எவ்வாறு  விண்டோ7 இயக்கமுறைமையில் நிறுவி செயல்படுத்துவது என இப்போது காண்போம். முதலில்  Vim என்பதை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிகொள்க.

1.2

பிறகு www.vim.org  என்ற தளத்திலிருந்து gvimஐ  பதிவிறக்கம் செய்து c:/Users/Admin/Vim/ என்றவாறான கோப்பகத்தில் நிறுவிகொள்க.இவ்வாறு நிறுவியபின் படம்-2-ல் உள்ளவாறு இதன்தோற்றம் அமைந்திருக்கும். இந்த கோப்பகத்திற்குள்vim74 என்ற உள்கோப்பகம் _vimrcஎன்ற கோப்பு vimfilesஎன்ற மற்றொரு உள்கோப்பகம்  உள்ளதாவென சரிபார்த்து கொள்க. vimfilesஎன்ற  உள்கோப்பகத்தில்  இந்த vimfilesஎன்ற  கோப்பகத்தை  தவிர அதனுள் உள்ள மற்ற கோப்புகள் அனைத்தையும் நீக்கம்செய்திடுக.  vim74 என்ற உள்கோப்பகத்திற்கு சென்று  அங்கு auto load என்ற மற்றொரு துனைகோப்பகம் இருக்கின்றதாவென சரிபார்த்து அதனை வெட்டி கொண்டுவந்து  vimfilesஎன்ற  உள்கோப்பகத்திற்குள் ஒட்டிவைத்துகொள்க. பின் bundle என்ற மற்றொரு துனைகோப்பகத்தினை இதே  vimfilesஎன்ற  உள்கோப்பகத்திற்குள் உருவாக்கி கொள்க.இதன்பின் gvimஐ செயல்படுத்தி கணினியின் திரையில் திறக்க செய்க ஏதேனும் பிழைச்செய்தி வந்தால் மேலேகூறியவாறு இந்த gvimஐ மறுபடியும் நிறுவி செயல்படுத்திடுக  பிறகு Git,Pathogen ஆகியவற்றை Vimஇனுடைய கூடுதல் இணைப்பாக (plugins) நிறுவிகொள்க._vimrc கோப்பில் கூடுதலான அமைவுகளை சேர்த்து கொள்க. அவ்வாறே வரைகலைக்கு தேவையான வண்ணத்திட்டத்தை(color scheme)  கூடுதல் இணைப்பாக (plugins)நிறுவிகொள்க   நிரல்தொடர் எழுதுபவர்கள் தங்களுக்கிடையே குறிமுறை கட்டளைவரிகளை பகிர்ந்து கொள்ள இந்த  Git கூடுதல் இணைப்பு (plugins) பயன்படுகின்றது. Pathogen கூடுதல் இணைப்பு (plugins)ஆனது Vim எனும் உரைபதிப்பு பயன்பாட்டினை உபயோகபடுத்துபவர்களுக்கு ஏராளமான வசதியை அளிக்கின்றது

 

 

 

 

அறிந்து கொள்வோம் Google Play Store பற்றி

நாம் விரும்பும் கட்டணமற்ற ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை எங்கிருந்து பெறுவது என தேடுபவர்கள் மடிக்கணினியின்(tablet) முகப்பு திரையில் அல்லது பயன்பாடுகளின் பகுதியில் உள்ள Play Store என்ற உருவ பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன் Google Play Storeஇனுடைய முகப்பு திரைக்கு நம்மை அழைத்து செல்லும்

அதில் விரியும் வெவ்வேறு வகையான பயன்பாடுகள் தயாராக இருப்பதை நாம் காணமுடியும் அவற்றுள் Business categoryஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் திரையில் விரியும் கட்டணத்துடன் பயன்படுத்தகூடியது கட்டணம் இல்லாதது ஆகியவற்றில் நாம் விரும்பியவை இல்லையெனில் see more என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் வகைகளின் திரையின் மேலுள்ள Top Chartsஎன்ற வாய்ப்பு பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது தேடிடும் பெட்டியில் விரும்பும் வகையின் பெயரை தட்டச்சு செய்து தேடிபிடித்து நம்முடைய சாதனத்திற்கு ஏற்ற பயன்பாட்டினை தெரிவுசெய்து சொடுக்கி பதிவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தி கொள்க

.6.6

அறிந்துகொள்வோம் இண்டெல் நிறுவனத்தின் புதிய ஹேஸ்வெல் எனும் சிப்பியூபற்றி

இண்டெல் நிறுவனத்தாரால் ஒரு சிப்பிற்குள் உருவாக்கி மேம்படுத்தபட்ட மிகநுன்மையான கட்டமைவையே ஹேஸ்வெல் என அழைக்கபடுகின்றது. 2013 கோடைகாலத்தில் சிப்பியூ வானது இந்த ஹேஸ்வெல் என்ற கட்டமைவால் மேம்படுத்தபட்டு வெளியிடபட்டுள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் குறைந்த மின்நுகர்வையே இந்த சிப்பியூ மேற்கொள்ளும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது இதனை தொடர்ந்து விண்டோ 8 இயக்கமுறைமை நிறுவபட்ட மடிக்கணினியின் மின்கலனானது சுமார் 18 மணிநேரம் வரை தொடர்ந்து மின்னேற்றம் செய்யாமலேயே இருப்பில் உள்ளமின்சாரத்தை பயன்படுத்தி மடிக்கணி நன்கு செயல்படும் திறனிற்கு உயர்ந்துள்ளது மேலும் இது மிகச்சிறந்த வரைகலை அனுபவத்தை வழங்கத்தயாராக இருக்கின்றது. அதனால் 4 கே அளவுள்ள ஒளிஒலி படங்களை எளிதாக இயக்கி கையாளும் திறன்வாய்ந்ததாக இது உள்ளது. கணினி இயங்கும்போது வெளியிடும் வெப்பஅளவும் மிக்குறைவான அளவேஉள்ளது இது முந்தைய ஐவிபிரிட்ஜைவிட மிகச்சிறந்ததாக விளங்குகின்றது

6.5

ஐபேடில் அலுவலக பயன்பாட்டினை கொண்டுவருவதற்காக

நாம் பயன்படுத்திடும் ஐபேடில் அலுவலக பயன்பாடுகள் இல்லையனில் என்னசெய்வது என தவிப்பவர்கள் hopToஎன்ற தனியாள் மேக்கணினியில் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு பரிந்துரைக்கபடுகின்றது ஒரு பயனாளர் எம்எஸ் ஆஃபிஸின் வேர்டு, எக்செல் , பவர்பாய்ன்ட் ஆகிய பயன்பாடுகளின் கோப்புகளை இந்த hopToஎன்ற தனியாள் மேக்கணினி மூலம் தத்தமது ஐபேடிலியே பயன்படுத்தி கொள்ளலாம். ஏன் நன்பர்களுடன் இந்த பயன்பாடுகளினுடைய கோப்புகளை பகிர்ந்து கொள்ளலாம். இந்த பயன்பாடுகளின் கோப்புகளைMicrosoft SkyDriveஎன்பதன் வாயிலாக அனுகுவதற்கு பதிலாக Dropbox அல்லது Google Drive ஆகியவற்றின் வாயிலாக எங்கிருந்தும் நம்முடைய சொந்த தனியாள் கணினியை அனுகுவதற்கு இது அனுமதிக்கின்றது

6.4

செல்லிடத்து பேசியிலும் முகநூலில்(Facebook) உள்நுழைவு செய்வது எவ்வாறு?

விண்டோ8 அல்லது விண்டோ இயக்கமுறைமையுடைய செல்லிடத்து பேசியிலும் முகநூல்(Facebook)எனும் சமூகஇணையதளத்திற்குள் உள்நுழைவுசெய்தும் நன்பர்களுடன் கருத்துகளை பரிமாறிகொள்ளுதல் ,நமக்கு பிடித்த விளையாட்டினை விளையாடுதல்,இசை ,ஒளிஒலிபடங்களை பகிர்ந்து கொள்ளுதல் விளையாட்டுகளை நாம்விரும்பியவாறு மாறுதல்களை செய்துகொள்ளுதல் ஆகிய செயல்களை செய்திடமுடியும் இதற்காக நமக்கான புதிய கணக்கு ஒன்றினை ஆரம்பித்து ஒருபுதிய பயன்பாட்டினை பயன்படுத்துவதைபோன்று மிகசுலபமாக செய்யமுடியும் இதற்காக சுட்டியின் பொத்தானை ஒரு ஒற்றையான சொடுக்குதல் செய்தல் அல்லது தாவியை சொடுக்குதல் செய்தலின்மூலம் முகநூல் இணைய பக்கத்திற்கு உள்நுழைவுசெய்திடுக

 6.3

அறிந்து கொள்வோம் Add-On, Add-In பற்றி

கணினியில் பயன்பாடுகளை பயன்படுத்தும்போது அனைவரும் Add-On , An Add-Inஎன்ற சொற்களை கூறுவதை கேட்டிருப்போம் அதற்கான விளக்கம் என்னவென இப்போதுதெரிந்து கொள்வோம். இணைய உலாவியிலும்,ஒலி அல்லது ஒளிஒலி இயக்கிபயன்பாடுகளிலும், கருவிபட்டையிலும் கூடுதல் பயன்பாடுகளை இணைத்து பயன்படுத்துவது Add-On ஆகும் அதாவது கூடுதலான பயன்பாட்டு மென்பொருட்களை சேர்த்து கொண்டு பயன்படுத்துவதை Add-On என அழைப்பார்கள். வரைகலை அட்டை ,கூடுதல் நினைவகம் போன்ற கூடுதலான வன்பொருட்களை நம்முடைய கணினியில் இணைத்து பயன்படுத்துவதைAdd-Inஆகும் அதாவது கணினியில் கூடுதலான வன்பொருட்களின் இணைப்பு செய்து கணினியில் பெறுகின்ற பயனை கூடுதலாக ஆக்கிகொள்வது Add-Inஆகும் ஒருசில் சமயத்தில் இதனைகூட Add-On என்றும் அழைப்பார்கள்

 6.2

அறிந்து கொள்க அவுட்லுக் மின்னஞ்சல் பயன்பாட்டின் கூடுதல் வசதியை

6.1

அவுட்லுக் மின்னஞ்சல் பயன்பாட்டில் தானாகவே எவ்வாறு மின்னஞ்சலை பெறுகின்றார் போன்று செய்வது என்பதற்காக முதலில் இந்த அவுட்லுக் மின்னஞ்சல் உள்வருகை பெட்டியில் Send/Receive என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .பின்னர் விரியும் Send/Receiveஎனும் திரையில் Send/Receive groupsஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக .

உடன் விரியும் வாய்ப்புகளில் All Accountsஎன்ற குழுவை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Send/Receive Groupஎன்ற சாளரம் திரையில் தோன்றிடும் அதில் schedule an automatic send/receive every என்பதற்கருகிலுள்ள கீழிறங்கு அல்லது மேலேறு பட்டியலில் எத்தனை நிமிடம் என தெரிவு செய்துகொள்க

குறிப்பு 1440 நிமிடங்கள் எனில் ஒரு நாள் ஆகும் மேலும் perform an automatic send/receive when existing என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டால் அவுட்லுக் மின்னஞ்சல் பயன்பாட்டினை விட்டு வெளியேறும்போது தானாகவேஇந்த பயன்பாடானது மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் செய்யும்

6.1.2

நம்முடைய சொந்த தனிப்பட்ட மேககணினிதளத்தினை EUCALYPTUS என்பதை கொண்டு உருவாக்கி பயன்படுத்தலாம்

  நடப்பிலுள்ள மெய்நிகர் கணினியின் சூழலில் உள்ள தரவுகளின் மையத்திலிருந்து EUCALYPTUS என்ற திறமூல மேககணினி தளத்தின் துனையுடன் நம்முடைய சொந்த தனிப்பட்ட மேக்கணினிதளத்தினை உருவாக்கிடமுடியும் இந்த EUCALYPTUS என்ற திறமூல மேககணினி தளமானது Cloud Controller(CLC),Walrus,ClusterController(CC),Storage Controller(SC) ,NodeController(NC) ஆகிய ஐந்து முக்கிய உறுப்புகளை கொண்டது இதிலுள்ள Cloud Controller(CLC) என்பது EUCALYPTUSஇற்கும் வெளியுலகத்திற்குமான இணையவழி தொடர்பாளராக பணியாற்றுகின்றது. மேலும் இது மேககணினியின் நிருவாகியாகவும் ஒருங்கிணைப்பாளராகவும், அனுமதியளிப்பவராகவும் செயல்படு கின்றது. அடுத்ததாகவுள்ள Walrusஎன்பது EUCALYPTUS என்ற மேககணினி தளத்திற்கு நிலையான தேக்கிவைக்கும் திறனை அளிக்கின்றது மூன்றாவதாகவுள்ள ClusterController(CC) ஆனது தொகுதியான NodeController(NC)ஐ கட்டுபடுத்திட செய்கின்றது. நான்காவதாகவுள்ள Storage Controller(SC)என்பது கோப்பமைவு, NFS,SAN, iSCSI ஆகியவைகொண்ட குறுமநிலை தேக்கிவைக்கும் திறனை வழங்குகின்றது இறுதியாகவுள்ள NodeController(NC)என்பது VMware ESXi hypervisor, VMware broker போன்ற மெய்நிகர் முனைமங்களாக EUCALYPTUS என்ற மேககணினி தளத்தினை செயல்பட அனுமதிக்கின்றது மேலும் இது இயக்கநேரத்திலும் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப தானியங்கி அளவையாளராக செயல்படுகின்றது அதுமட்டுமின்றி நீட்சி தன்மையை சரிசெய்து நிலையானதாக வைத்திருக்கின்றது கூடுதலாக மேககணினியின் சூழலில் உள்ள மெய்நிகர் கணினிகளின் செயல்களை கண்கானிக்கின்றது. மிகமுக்கியமாக மேக்கணினிகளின் வளங்களை மிகச்சரியாக ஒதுக்கீடு செய்து கட்டுபடுத்தி செயல்பட செய்கின்றது இந்தEUCALYPTUS என்ற மேககணினி தளத்தின் செயலை நிறுத்தம் செய்யாமலேயே இந்த தளத்தின் பராமரிப்பு பணியை இந்த பயன்பாடு பார்த்து கொள்கின்றது இதனை நடைமுறையில் செயல்படுத்தி பார்த்திட நம்மிடம் இரு கணினிகள் மட்டும் இருந்தால் போதும் ஒன்றை Cloud Controller(CLC), Walrus, Cluster Controller(CC), Storage Controller(SC) ஆகிய பணிகளுக்கான நிருவாக சேவையாளராகவும் மற்றொன்றை முனைம கட்டுபாட்டாளராகவும் செய்துகொள்ளமுடியும் இதனை பற்றி மேலும் அறிந்து கொள்ள http://eucalyptus.com/docs/eucalyptus/3.3/userguide/toc.html/ என்ற தளத்திற்கு செல்க.

105.2.1

Previous Older Entries