அருகலை(Wi-Fi) சமிக்ஞைகளை எவ்வாறு அதிகரிப்பது

அருகலை சமிக்ஞையின் வலிமையை எவ்வாறு அதிகரிப்பது என கவலைப்பட வேண்டாம்; அதற்கான  தீர்வுகள் நிறைய உள்ளன. பொதுவாக நாம் அனைவரும் 2G / 3G இலிருந்து Wi-Fi எனும் அருகலைக்கு மேம்படுத்தத் தொடங்கியதிலிருந்து இந்த பிரச்சினையும் உடன்துவங்கிவிட்டது. .தனிப்பட்ட கைபேசியில் 2 ஜி / 3 ஜி இணைப்பைக் காட்டிலும் அருகலை அதிக செலவு குறைந்ததாக இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒரேயொருஅருகலை இணக்கி(Modem)யில் 32 சாதனங்கள்வரை நாம் இணைத்து பயன்டுத்திகொள்ள முடியும், அவ்வாறு இணைத்த பின்னரும் ஒரே ஒரு இணைப்பின் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானதாகும். என்ன ஒரு ஆச்சரியம் இந்த திறன்பேசிகளின் சகாப்தத்தில், மின்னல் வேகமான இணைய இணைப்புகளை நாம் விரும்புகிறோம், இதன்மூலம் இணையத்தில் உலாவரலாம், கானொளிகளை இணையத்தில் ஓடச் செய்யலாம், இணையத்தில் திரைப்படங்களை ப் பார்க்கலாம், அதிசயமான வரைகலை மூலம் உயர் அளவிலான விளையாட்டுகளைப் பதிவிறக்கலாம், இணையத்தில் பல்லூடகவிளையாட்டுகளை விளையாடலாம்எப்போதும் சமூக ஊடகங்களில் நேரடியாக இணைந்திருக்க முடியும். ஆகிய இவ்வாறான பணிகள் அனைத்தும் அருகலையின் வாயிலாக எந்தவித தயக்கமும் இல்லாமல் நிறைவேற்ற முடியும், மேலும் இது கைபேசிகளில் 2 ஜி / 3 ஜி இணைப்பைவிட மலிவானது . ஆனாலும் அருகலை இணக்கி(Modem)களும் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. அதாவது ஒரு சில நேரங்களில் அவை குறைந்த சமிக்ஞையை வழங்குகின்றன. இதனால் நம்முடைய சாதனங்களில் மெதுவான இணைய வேகத்தை எதிர்கொள்கிறோம். இது நிகழ்வதற்கான காரணங்களும் அருகலை சமிக்ஞையின் வலிமையை எவ்வாறு அதிகரிப்பது என்பதற்கான தீர்வுகளும் பின்வருமாறு.

 காரணம் 1: – அருகலைஇணக்கி(Modem) அதிக வெப்பமாதல். அருகலைஇணக்கி(Modem)கள் இணைய சமிக்ஞைகளை கம்பியில்லா சமிக்ஞை களில் மாற்றி அவற்றை நம்முடைய வீட்டில் பரப்பும் பொருள் மட்டுமேயாகும். ஒருசில நேரங்களில் நாம் பல நாட்கள் தொடர்ந்து அருகலை வழிசெலுத்திகளைபயன்பாட்டில் வைத்திருக்கும்போது, அளவிற்கு அதிகமாக பயன்படுத்திகொண்டேயிருப்பதால் அவை வெப்பமடைகின்றன, இதனால் அருகலை சமிக்ஞை களை பரப்புவதற்கான அவற்றின் செயல்திறன் குறைகிறது.
தீர்வு 1: – இதற்காக கவலைப்பட வேண்டாம். இதற்கு ஒரு நேரடியான எளிய தீர்வு உள்ளது. நமக்கு அருகலை தேவையில்லை என்று நினைக்கும் போதெல்லாம் அருகலை இணக்கி(Modem)யின் செயலை நிறுத்தி வைத்திடுக. அதாவது நாம் இரவில் தூங்கச் செல்லும்போதும், நாம் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போதும், (அப்போது வீட்டில் யாரும் இருக்கப் போவதில்லை), மோடத்தின் செயலை நிறுத்தி வைத்திடுக.. இந்த செயலானது அதன் செயல்திறனை அதிகரிக்கும், மேலும் நாம் வருங்காலத்தில்இந்த சிக்கலை எதிர்கொள்ள மாட்டோம்.

 காரணம் 2: – அருகலை இணக்கி(Modem)யை தவறான இடத்தில் வைப்பது. பெரும்பாலான நேரங்களில், பொதுமக்கள் தங்களின் பயன்பாட்டிற்கான இணக்கி(Modem)களை மெதுவாக தளவாடங்கள், சுவர்கள் அல்லது பிற பொருட்களால் சூழப்பட்ட இடத்திற்குள் வைக்கிறார்கள் அல்லது அவர்கள் திசைவியை வீட்டின் ஏதேனும் ஒரு மூலையில் வைப்பதால் அருகலை(Wi-Fi) சமிக்ஞை வலிமை குறைகிறது, இதனால் இணைய வேகம் குறைகிறது.
தீர்வு 2: – நம்முடைய வீட்டின் மையப் பகுதியில் அருகலை திசைவியை வைக்க வேண்டும், அதன்வாயிலாக இது வீடுமுழு வதும் சமஅளவிலான அருகலை சமிக்ஞையை வழங்க உதவுகிறது. எந்த வொரு தளவாடங்கள், சுவர்கள் அல்லது அதைச் சுற்றியுள்ள வேறு எந்த பொருட்களாலும் சூழப்பட்ட இடத்திற்குள்ளும் திசைவியை வைப்பதைத் தவிர்த்திடுக. மின்கம்பிகள், கணினி கம்பிகள், மைக்ரோவேவ், பேபி மானிட்டர்கள் , ஆலோசன் விளக்குகள் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்குமாறு வைத்திடுக. இந்த கம்பிகள் மற்றும் அலைகள் வானொலி வரவேற்பில் தலையிடக்கூடும். அருகலைWi-Fi சமிக்ஞை வலிமையை அதிகரிக்க இந்த முறை பெரும்பாலான நேரங்களில் உதவும்.

காரணம் 3: – அருகலைஇணைப்பு வானலைவாங்கியின்ன் நிலை. நம்முடைய வீட்டில் இரட்டை வானலைவாங்கி அருகலை திசைவி வைத்திருந்தால், இந்த தீர்வு கண்டிப்பாக நமக்கானதாகும். நம்முடைய சாதனத்தை அருகலை வானலைவாங்கிநம்முடைய திசைவி உமிழும் சமிக்ஞைல்களைப் பிடிக்க முடியாத வகையில் வைத்திருக்கும்போது. பின்வரும் தீர்வைப் பின்பற்றிடுக
தீர்வு 3: – இதற்கு ஒரு எளிய தீர்வு உள்ளது, இது வும் நம்முடைய இணைய வேகத்தை பாதிக்கும் ஒரு காரணிஎன நாம் ஒருபோதும் யூகிப்பதில்லை. பரவாயில்லை நம்முடைய வீட்டில் இரட்டை வானலை வாங்கி அருகலை திசைவி வைத்திருந்தால் திசைவியின் ஒரு வானலைவாங்கியை செங்குத்தாகவும், மற்றொன்றைகிடைமட்டமாகவும் மாற்றிஅமைத்திடுக, இதனால் நம்முடைய சாதனம் எந்த நிலையிலும் சமிக்ஞைகளைப் பிடிக்க முடியும். இதனை தொடர்ந்த அருகலை சமிக்ஞை வலிமை அதிகரிப்பதை நாம் காணலாம்

காரணம் 4: – பாதுகாப்பு மீறல். வழிசெலுத்திகள் மூலம் இணைய அணுகலுக்கான கடவுச்சொற்களை அமைக்க முடியும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். திசைவியின் பாதுகாப்பு தொகுப்பினைத் தேர்ந்தெடுப்பதில் பாதுகாப்பு தேர்வு உள்ளது. அது WEP WPA WPA2 WPA / WPA2 ஆக இருக்கலாம், வேறொருவர் நமக்குதெரியாமல் நம்முடைய அருகலையைப்(Wi-Fi ) பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கலாம், இதன் விளைவாகவும் இணைய வேகம் குறைகிறது.
தீர்வு 4: – WEP / WPA2 ஐ விட WEP மிகவும் குறைவான பாதுகாப்பாக இருப்பதால் நாம் WEP இலிருந்து WPA / WPA2 ஆக மாற வேண்டும். நாம் பாதுகாப்பு தொகுப்பினை மாற்றும்போது, எல்லா பயனாளர்களும் கடவுச்சொல்லை மீண்டும் பெற வேண்டும் என்பதை உறுதிப்படுத்த நம்முடைய கடவுச்சொல்லை அவ்வப்போது மாற்றியமைத்துகொள்க. இந்த வழிமுறையில் அருகலை சமிக்ஞையின் வலிமையை அதிகரிக்க உதவும் என்பதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்பு உள்ளது.

காரணம் 5: – இணைக்கக்கூடிய சாதனங்களின் எண்ணிக்கை அதிகரித்தல். பல்வேறு இணக்கி (Modem) கள் ஒரே நேரத்தில் 32 சாதனங்கள் வரை ஆதரிக்கின்றன. அவ்வாறு அதிகபடியான சாதனங்கள் ஒரேயொரு மோடத்துடன் இணைப்பதால் அவை இணையஇணைப்பிற்காக கிடைக்கும் அலைவரிசையை பிரிக்கின்றன.
தீர்வு 5: – அவ்வாறு பிரிப்பது இல்லை. தேவையான சாதனங்களை இணைப்பது ஒரு திசைவியுடன்மட்டுமே அதனால் அவ்வாறு நமக்கு தேவைப்பட்டால் திசைவியின் அமைப்புகளில் தேவையானஅளவிற்கு இணைப்புகளின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரித்து கொள்க.

காரணம் 6: – சமிக்ஞைகளின் குறுக்கீடு. நம்முடைய வீட்டின் இதர பணிகளில் உள்ள சாதனங்களின் அதிர்வெண் குழுவில் உள்ள பல சாதனங்களிலும் அதே அதிர்வெண் உள்ளன , எ.கா. புளூடூத்தலையிலணியும்அமைப்புகள், கம்பியில்லா தொலைபேசிகள், குழந்தைகளின் கணினிதிரைகள், மீச்சிறுகற்றை போன்றவை. அவை அனைத்தும் அருகலை திசைவியின் சமிக்ஞைகளில் தலையிடுகின்றன. இதனால் இந்தஅலைவரிசையினுடைய செயல்வேகம் குறைகிறது. இந்த சிக்கலுக்கான தீர்வு அதிர்வெண் இசைக்குழு வேறுபாட்டிற்குக் கீழே உள்ளது
தீர்வு 6: – நம்முடைய திசைவி அதன் அமைப்புகளிலிருந்து இயங்கும் சேனலை மாற்ற வேண்டும். புதிய மாதிரி வழிசெலுத்திகள் 5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்திலும் இயங்க முடியும். அருகலை சமிக்ஞை வலிமையை அதிகரிக்க இந்த முறை நிச்சயமாக நமக்கு உதவும்

காரணம் 7: – குறைந்த அலைவரம்பு. திசைவிகள் பழையதாக ஆக, அவை சமிக்ஞைகளை வெளியிடுவதில் அவற்றின் செயல்திறன் குறைகின்றது. இது சாதாரணமான வழக்கமான நிகழ்வுதான்
தீர்வு 7: – திசைவியை(Router) புதியதாக மாற்றியமைத்திடுவதற்காகள் ISP இடம் கோரலாம், அல்லது ஒரு அருகலை சமிக்ஞை பெருக்கியை வாங்கி நம்முடைய வீட்டில்இணைத்து அமைத்திடலாம், இது தவிர்க்க முடியாமல் நம்முடையஅருகலை திசைவியின் சமிக்ஞைகளின் வலிமையை அதிகரிக்கும்.

காரணம் 8: – பயன்பாடுகள் ஏராளமானஅளவிலான அலைவரிசையை உட்கொள்கின்றன. நம்முடைய சாதனத்தில் நமக்கு தெரியாமல் ஏராளமான பயன்பாடுகள் இருக்கலாம், அவை பின்னணியில் இயங்கினாலும் நம்முடைய சாதனங்களின் அலைவரிசையை உட்கொண்டிருக்கலாம், இதன் விளைவாக இணைய வேகம் குறைகின்றது.
தீர்வு 8: – நம்முடயை சாதனங்களில் அவ்வாறான பயன்பாடுகளைத் தேடி, அவற்றை அறவே நீக்கம் செய்திடுக அல்லது அவைகளின் அமைப்புகளை மாற்றியைமத்திடுக. , எடுத்துக்காட்டாக. பயன்பாடுகள் தானாகவே புதுப்பிப்பைத் தேடுவதை நிறுத்துக.

BlissRoms எனும் கட்டற்ற இயக்கமுறைமை ஒரு அறிமுகம்

BlissRoms என்பது ஆண்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்டதொரு கட்டற்ற இயக்கமுறைமையாகும் , இது அப்பாச்சி உரிமம் V2.0, குனு பொது உரிமம் 3.0 (GPLv3) ஆகிய உரிமங்களின் அடிப்படையில் பொதுமக்களின்பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது இது பல தனிப்பயனாக்குதலுக்கான விருப்பங்களையும் கூடுதல் பாதுகாப்பு வசதிகளையும் உள்ளடக்கியது. நம்முடைய எல்லா சாதனங்களிலும் இயங்கக்கூடிய தரமான ROM/OS வழங்குவதிலும், எல்லா தளங்களிலும் ஒத்திசைவாக செயல்படுவதன் மூலம் தனிப் பயனாக்கங்களையும் விருப்பங்களையும் பாதுகாப்பதிலும் இது முக்கிய கவணம் செலுத்துகின்றது. எந்தவொரு சூழ்நிலையிலும் நாம் கற்பனை செய்யக்கூடிய அனைத்து வசதிகளையும் வழங்கஇது முயற்சிக்கின்றது. நம்முடைய பாரம்பரிய சாதனமான Bliss ROM கட்டமைப்பின் மேல், இதனுடையGSI/Treble உருவாக்கங்கள் மிகவும் மும்முரமாக இணக்கமான சாதனங்களில் (Android Pie +) செயல்படுகின்ற திறன்கொண்டது.
இதனுடைய வசதி வாய்ப்புகள்: 1. இது வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்துகின்றது, 2. தனிப்பயனாக்கப் பட்ட அமைப்புகளை கொண்டுள்ளது, .3. இது மிகுந்த செயல்திறன் கொண்டது, 4. இது குறைந்த மின்நுகர்வுடன் மின்கலணுடன் நட்புறவாக செயல்படுகின்றது, 5. கூடுலாக சேர்க்கப்பட்ட பாதுகாப்பினை கொண்டுள்ளது, 6. அருமையான இணக்கத்தன்மை கொண்டது
சுயநல இலக்குகளில் ஒரு பேரரசை உருவாக்குவதை விட நேர்மறையான செல்வாக்கின் மூலம்நல்ல சமூகத்தை உருவாக்குவது இதனுடைய குறிக்கோளாகும்என குறிப்பிடப்பட்டுள்ளது இதனை சமூக வளர்ச்சி , மேம்பாட்டு நோக்கங்களுக்காக பல்வேறு இயக்க முறைமைகள் , மென்பொருள் திட்டங்களை உருவாக்கி பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள U.S.A. Federal 501c3 எனும் இலாப நோக்கற்ற அமைப்பானது பராமரித்து வருகின்றது
குழு பயிற்சி, மேம்பாட்டு வாய்ப்புகள், சேவையகங்களை உருவாக்குதல், சேவையகங்களைப் பதிவிறக்குதல், மென்பொருள்மேம்பாட்டு வடிவமைப்பு வாய்ப்புகளை வழங்குவதை உள்ளடக்கியது. ஆண்ட்ராய்டு மேம்பாடு தொடர்பான அனைத்து துறைகளிலும் தொழில் வல்லுநர்களை, வழிகாட்டிகளை உள்ளடக்கியது. , சேவைகளும் மூலக் குறிமுறைவரிகளும் பொதுமக்களுக்குத் திறந்திருக்கின்றது அவைகளை தேவைப்படுபவர்களுக்க எந்த கட்டணமும் இல்லாமல் வழங்கப்படுகின்ற பணிச்சூழலையும், அவ்வாறு செய்ய அனுமதிக்கும் கருவிகளையும் இது வழங்குகின்றது. பயனாளர்கள் தங்களின் திறன்களை எவ்வாறு பணமாக்குவது என்பதை அறிவதற்கான கருவிகளையும் இது பயனாளர்களுக்கு வழங்க தயாராக இருக்கின்றது. மேலும்விவரங்களுக்கு https://blissroms.com/ எனும் இணையதள முகவரிக்கு செல்க

இணைய உலாவலுக்கு உதவிடும் Braveஎனும் கட்டற்ற பயன்பாடு

தனிப்பட்டமுறையில் திறமூல இணைய உலாவல் அனுபவத்தை பெறுவதற்கு Braveஎனும் கட்டற்ற இணைய உலாவி பயன்பாடு பேருதவியாய் விளங்குகின்றது இது விண்டோ, மேக் லினக்ஸ், ஆண்ட்ராய்டு, iOS ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது
கூகிளின் திறமூல குரோம் செயல்திட்டத்தின் மேல் கட்டமைக்கப்பட்ட, Bweb உலாவி என்பது வலைத்தள கண்காணிப்பாளர்களை தானாக முடக்குவதன் மூலமும், தொல்லைதரும் விளம்பரங்களைத் தடுப்பதன் மூலமும் நம்முடைய இணைய உலாவல் செயல்பாட்டை தனிப்பட்டதாக வைத்திருக்குமாறு இது வடிவமைக்கப் பட்டுள்ளது. அதைவிட மேலும் பாதுகாப்பான உலாவலுக்காக, இது ஒரு உள்ளமைக்கப்பட்ட Tor எனும் கட்டற்ற இணையஉலாவியின் செயல்பாட்டையும் கொண்டுள்ளது. இந்த Braveஎனும்கட்டற்றஇணையஉலாவியை ப் பயன்படுத்துவதன் பெரிய நன்மை என்னவென்றால், நாம் கூகுளின்குரோமில் ஆயிரக்கணக்கான விரிவாக்கங்களை(Extension) இதன் வாயிலாக அணுகலாம், ஆனால் சாதாரண குரோமுடன் நாம் பெறுவதை விட மிகவேகமான உலாவல் அனுபவத்தை இதில் பெற முடியும். ஏனென்றால், கூகிளின் வழக்கமான குரோமின் தொகுப்பை விட இதில் வளங்கள் குறைவாக இருப்பதால், பக்கங்களை ஏற்றும்போது விரைவான இதன் செயல்திறன் நமக்கு செயலூக்கத்தை அளிக்கின்றது. இந்த உலாவியைப் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான தகவல், Brave Rewards என்று அழைக்கப் படுகின்ற வசதியை கொண்டது. அதாவது இந்த இணைய உலாவியில், ஒரு சில விளம்பரங்களைக் காணலாம் நமக்கு அவை தேவையில்லை யெனில் அதற்கு பதிலாக ஒரு சிறிய அடிப்படையான மறையாக்க நாணய டோக்கனை பெற்றுகொள்ளலாம். இறுதியில், இந்த புதிய வழிமுறையானது இந்த இணையஉலாவியின் பின்புலத்தில் உள்ள மேம்படுத்துநர்கள் இது இணையத்தில் விளம்பரம் செயல்படும் முறையை மாற்றும் என்று நம்புகிறார்கள்.
இதனுடைய வசதி வாய்ப்புகள் :
இது இணைய பக்கங்களை 3x முதல் 6x வரையிலான வேகத்தில் திரையில் மேலேற்றுகின்றது: அதாவது இதனை தனியாக நிறுவுகைசெய்திடவோ இதனை இயக்குவதற்காக கற்றுக்கொள்ளவோ நிர்வகிக்கவோ செய்திடாமல் Chrome Firefox ஆகிய இணையஉலாவியை விடமூன்று மடங்கு வேகத்துடன் இணைய பக்கங்களை திரையில்ஏற்றுகின்றது
நிறுத்திய இடத்திலிருந்துபதிவிறக்கும் பணியை தொடரலாம்: நாம் எங்காவது அயற்பணியாக வெளியில் செல்லும்போது செல்லும் இடத்தில் நாம் விரும்பியதை இணையத்தில் பதிவிறக்கம் செய்திடும்போது ஏதேனும் காரணத்தால் அரைகுறையாக பதிவிறக்கம் பணிநின்றுவிட்டதென்றாலும் பரவாயில்லை இதன் வாயிலாக நமக்கு வசதி படும்போது விடுபட்ட பகுதியிலிருந்து தொடர்ந்து பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும் இதில் பல்வேறு வெகுமதிகளுடன் நமக்கு பிடித்த தளங்களை இணையஉலாவருவதை இதுஆதரிக்கின்றது இணையற்ற தனியுரிமையும் பாதுகாப்பையும் அனுபவிக்கலாம். : இது தீம்பொருளை எதிர்த்துப் போராடுகிறது மேலும் நம்முடைய இணையஉலாவலை வேறுயாரும்கண்காணிப்பதைத் தடுக்கிறது, நம்முடைய தனிப்பட்ட தகவலைப் மிகபாதுகாப்பாக வைத்திருப்பதற்கே இது முன்னுரிமை அளிக்கின்றது.
இது நம்முடைய தனிப்பட்ட தகவல் தரவுகளை வணிகநோக்கத்தில் பயன்படுத்தாது: இதனுடைய சேவையகங்கள் நம்முடைய இணையஉலாவல்செய்திடும் தரவுகளைப் பார்க்கவோ சேமிக்கவோ செய்யாது - நாம் அதை நீக்கும் வரை இது நம்முடைய சாதனங்களில் தனிப்பட்டதாக இருக்கும். அதாவது நம்முடைய தனிப்பட்ட தரவுகளை மூன்றாம் தரப்பினர் யாருக்கும் இது விற்பணைசெய்யாது.
கேடயம்போன்று அமைப்புகளைத் தனிப்பயனாக்குதல்: நம்முடைய அமைப்புகளை ஒரு தளத்திற்கு அல்லது உலாவி அளவிலான அடிப்படையில் தேர்வு செய்ய அனுமதிக்கின்றது. புதிய தாவல் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் எத்தனை விளம்பரங்களை பின்தொடர்பாளர்களை இது தடுக்கின்றது என்பதைப் காணலாம். பாதுகாப்பு எளிமையை பூர்த்தி செய்கிறது: பல்வேறு விரிவாக்கங்களை, பதிவிறக்கவும் நிறுவுகைசெய்திடவும் விரும்பினால், இணையஉலாவி ,விரிவாக்கங்கள் ஆகிய இரண்டிலும் அமைப்புகளை கவனமாக உள்ளமைத்து சரியாக பராமரிக்க, இதில் நமக்காகவென ஒருசில தனியுரிமையையும் பாதுகாப்பையும் பொருத்தலாம் மேலும்விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://brave.com/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

gretl எனும் திற மூலபயன்பாடு ஒருஅறிமுகம்

gretlஎன சுருக்கமாக அழைக்கப்படும் குனு பின்னடைவு, பொருளாதார அளவியல் கால-தொடர்களின் நூலகம் (Gnu Regression, Econometrics and Time-series Library)என்பது சி நிரலாக்க மொழியில் எழுதப்பட்ட பொருளாதார அளவீட்டு பகுப்பாய்விற்கான ஒரு குறுக்கு-தள பயன்பாட்டு மென்பொருள் தொகுப்பு ஆகும். இது இலவச மென்பொருள் அறக்கட்டளையால் வெளியிடப்பட்ட தொரு இலவச, திற மூல பயன்பாட்டு மென்பொருளாகும் . இது குனு பொது மக்களின்பொது உரிமத்தின் (GPL) அனுமதி விதிமுறைகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ளதால் நாம் அதை மறுபகிர்வு செய்யலாம் அல்லது நமக்குத்தேவையானவாறு மாற்றி பயன் படுத்தலாம்.

இதனுடைய வசதிவாய்ப்புகள்பின்வருமாறு . இது எளிதான உள்ளுணர்வு இடைமுகம் கொண்டது , least squares , அதிகபட்ச வாய்ப்பு, GMM; ஒற்றை சமன்பாடும் அமைவு முறைகளும் என்பனபோன்ற பல்வேறு வகையான மதிப்பீட்டாளர்களை கொண்டது . ARIMA, பலவகையான ஒரே மாதிரியான வரைபட வகை மாதிரிகள், VAR களும் VECM களும் (கட்டமைப்பு VAR கள் உட்பட), அலகு-மூலங்களும் நாணய ஒருங்கிணைப்பு சோதனைகளும் , Kalman வடிகட்டி போன்ற கால வரிசை முறைகளின் கணக்கீட்டினை கொண்டது . logit, probit, tobit, மாதிரி தேர்வு, இடைவெளி பின்னடைவு, எண்ணிக்கையும் கால தரவுகளுக்கான மாதிரிகளும் போன்ற வரையறுக்கப்பட்ட சார்பு மாறிகளை கொண்டது ,கருவி மாறிகள் உள்ளிட்ட, probit GMM- அடிப்படையிலான இயக்கநேர பலக மாதிரிகள் குழு-தரவு மதிப்பீட்டாளர்கள் ஆகிய கணக்கீடுகளை கொண்டது இதில்வெளியீட்டு மாதிரிகள் LaTeX கோப்புகளாக, அட்டவணை அல்லது சமன்பாடு வடிவத்தில் இருக்கும் .இது பரந்த அளவிலான நிரலாக்க கருவிகளையும் கணித செயலிகளுடனும் கூடிய ஒருங்கிணைந்த சக்திவாய்ந்த ஸ்கிரிப்டிங் மொழி (ஹான்ஸ்ல் என அழைக்கப்படுகிறது) ஆகும், இது நல்ல தரமான Gnuplot எனும் வரைபடங்களுக்கான வரைகலை பயனாளர் இடைமுகம்(GUI) கட்டுப்படுத்தியை கொண்டுள்ளது .இதனுடைய தரவுகளையும் முடிவுகளையும் GNU R, GNU Octave, Python, Julia, Ox , Stataஆகியவைகளுடன் எளிதாக பரிமாறிக்கொள்ளும் வசதிகளை கொண்டது . MPI வழியாக இணையாக செயல்படுத்தல் செய்கின்றது .இதுகலப்பு நேர-தொடர் அதிர்வெண்களுக்கான ஆதரவு (MIDAS) அளிக்கின்றது. LIBSVM வழியாக இயந்திர கற்றலுக்கான ஆதரவினை அளிக்கின்றது இதனுடைய முக்கிய செயல்பாட்டைத் தவிர, பல துணை நிரல்களும் ஏராளமான பங்களிப்பு செயல்பாடு தொகுப்புகளுடனும் கிடைக்கின்றன. . இதுசொந்த எக்ஸ்எம்எல் தரவுக் கோப்புகள்; காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட மதிப்புகள்; எக்செல், குனுமெரிக் , திறந்த ஆவண பணித்தாள்; Stata .dta கோப்புகள்; SPSS .sav கோப்புகள்; Eviews பணிக்கோப்புகள்; JMulTi தரவு கோப்புகள்; சொந்த வடிவமைப்பு பைனரி தரவுத்தளங்கள் (கலப்பு தரவு அதிர்வெண்கள் , தொடர் நீளங்களை அனுமதிக்கிறது), RATS 4 தரவுத்தளங்கள் ஆகிய தரவுவடிவங்களை இதுஆதரிக்கின்றது மேலும் விவரங்களுக்கு http://gretl.sourceforge.net/எனும் இணையதள முகவரிக்கு செல்க

ராஸ்பெர்ரி பைக்கான (Raspberry Pi ) ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழல்கள் (IDEs)

இது ஒருமென்பொருட்களின் தொகுப்பாகும், இது புதியமென்பொருளை எழுதவும் பரிசோதித்து பார்க்கவும் தேவையான அடிப்படை கருவிகளை வழங்குகின்றது. மென்பொருளை உருவாக்குவதற்கு தேவையான குறிமுறைவரிகளை எழுதவும் பரிசோதிக்க உதவும் கருவிகள் மேம்படுத்துநர்களுக்கு தேவை,யாகும் மேலும் இவை பெரும்பாலும் பல்வேறு நூலகங்களையும் குறிமுறைவரிகளின் பதிப்பாளர்களை உள்ளடக்குகின்றன.
ராஸ்பெர்ரி பை என்பது ஒரு சிறிய கணினி ஆகும், இது பள்ளிகளில் குழந்தைகள் கணினி அறிவியலைக் கற்கும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அனைத்து மென்பொருள் உருவாக்குநர்களுக்கும் மாபெரும் உதவியாளராக விளங்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது, இப்போது இயந்திரமனிதன் அமைப்பிலும் இது பயன்படுத்தப் படுகிறது. ராஸ்பெர்ரி பைஆனது கிரெடிட் கார்டின் அளவிற்கு மிகவும் சிறியது – – மேலும் இதனை ஒரு நிலையான கணினி விசைப்பலகை அல்லது தொலைக்காட்சி பெட்டியில் செருகி பயன்படுத்திகொள்ளலாம். இது உட்பொதிக்கப்பட்ட செயல் திட்டங்களுக்கு ஏற்றது மேலும் மிகவும் மலிவானது
குழந்தைகளுக்கான மிக அடிப்படையான பொருட்களிலிருந்து தொடங்கி சிக்கலான பணிகள் வரை பல்வேறு செயல்திட்டங்களுக்கு ராஸ்பெர்ரிபை யானது வெற்றிகரமாக பலரால் பயன்படுத்தப்படுகிறது. மேலும், மேம்பட்ட திறன்களைக் கொண்டவர்கள் அதை மேஜைக்கணினியாக மாற்றி பயன்படுத்தி கொள்ளலாம், இது வழக்கமான கணினியை போன்று விரிதாள்களை இயக்குகின்றது, ஆவணங்களை எழுதஉதவுகின்து மேலும் பொதுவாக கணினியிலிருந்து எதிர்பார்க்கப்படும் அனைத்து பணிகளையும் இது செய்கின்றது. மிக முக்கியமாக உயர்தர கானொளி காட்சிகளை இயக்கி காட்சி படங்களை காண்பதற்கு இந்த Raspberry Pi பயன்படுத்திகொள்ளலாம்.

பொதுவாக நிரலாக்கத்துடன் துவங்கிடும்போது செய்ய வேண்டிய முதல் செயலானது, ஒரு ஒருங்கிணைந்த வளர்ச்சி சூழலை(IDE ) பெறுவதுதான். ராஸ்பெர்ரி பையில் நாம் விரும்பும் பணிகளைச் செய்ய, நாம் ஒரு சில குறிமுறைவரிகளை எழுத வேண்டும் மேலும் ஒரு IDEஎனும் நிரலாக்கத்திற்கான ஒருங்கிணந்தை சூழலில் நிரலாக்கத்தை செயல்படுத்துவதற்கு முன்பு வெவ்வேறு குறிமுறைவரிகளை எழுத, பரிசோதிக்க செயல்படுத்த உதவுகின்றது. ராஸ்பெர்ரி பைஆனது பல்வேறு கணினி மொழிகளுடன் இணக்கமாக செயல்படுகின்றது, அவை குறிமுறைவரிகளை எழுத பயன்படும்.
முதல் ஐந்து ராஸ்பெர்ரி பை IDE கள் பின்வருமாறு.
1.Geany IDE :இது GUI எனும் வரைகலை பயனாளர் இடைமுக அடிப்படையிலானது மேலும் மிகவும் இலகுரகமானது என்றும் கருதப்படுகிறது. இது அடிப்படையில் ஒரு உரை திருத்தியாகும், இது IDE ஆதரவுடன் GTK+ ஐயும் Scintilla வையும் பயன்படுத்துகின்றது. இது சுதந்திரமாக செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் இது செயல்படுவதற்கு குறைந்த தொகுப்புகள்மட்டுமே தேவை.யாகும் அதாவாது GTK2 இயக்க நேர நூலகம் மட்டுமே இதனை செயல்படுத்தப்படுவதற்குத் தேவையாகும். இது எளிய வழி செலுத்துதலும் குறிமுறைவரிகளின் மிகுதி கட்டளைவரிகளை தானாக நிறைவு செய்யும் வசதியுடனும் அமைந்துள்ளது . இது சி ++, சி, ஜாவா, பைதான் போன்ற பல்வேறு நிரலாக்க மொழிகளை ஆதரிக்கிறது. இது தொடரியல் சிறப்பு வதியுடனும் மிகவும் தனிப்பயனாக்கவும் பட்டுள்ளது. இதில் நம்முடைய விருப்பப்படி, விருப்பங்களையும், சாளரங்களையும் பட்டைகளையும் சேர்க்கலாம் அல்லது அகற்றலாம். இது எளிதாகக் கிடைக்கக்கூடிய பல்வேறு இலவச-பதிவிறக்க செருகுநிரல்களுடன் கிடைக்கின்றது. மேலும் விவரங்களுக்கு https://www.geany.org/எனும் இணையதள முகவரிக்கு செல்க

2.Lazarus IDE : இது ஒரு குறுக்கு-தள வரைகலை பயனாளர் இடைமுக அடிப்படையிலான IDE என அழைக்கப்படுகிறது, இதனை விரைவான பயன்பாட்டு மேம்பாட்டிற்காக பயன்படுத்திகொள்ளலாம். இது மிகவிரைவாக செயல்படுத்திடும் வேகம், தொகுப்பு வேகம் குறுக்கு தொகுப்பு ஆகிய மூன்று முதன்மை வசதி வாய்ப்புகளுடன் கிடைக்கின்றது – . இது விண்டோஸ் முதல் லினக்ஸ் மேக் போன்ற அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது.இந்த குறிப்பிட்ட IDE ஆனது Lazarus செயல் கூறு நூலகத்துடன் அமைந்துள்ளது மட்டுமல்லாமல் மேம்படுத்துநர்களுக்கு சில தளம் சார்ந்த பல்வேறு வசதி வாய்ப்புகளை வழங்குகிறது, இது மிகவும் விரைவாக செயல்படுகின்றது மிக வேகமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் பயன்படுத்த எளிதாகவும் அமைந்துள்ளது. இது ஆண்ட்ராய்டு பயன்பாட்டு மேம்பாட்டிற்கு ஏற்றது மேலும் பல்வேறு புதிய வசதிகளுடன் கூடிய இலவச Pascal பயன்படுத்தி கொள்கின்றது. மேலும் விவரங்களுக்கு https://wiki.freepascal.org/Lazarus_on_Raspberry_Pi எனும் இணையதள முகவரிக்கு செல்க

3.Greenfoot IDE : இது ஜாவா அடிப்படையிலான குறுக்கு-தள IDE ஆகும், இது உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரியில் இளங்கலை பயிலும் மாணவர்களுக்காக வும் உருவாக்கப்பட்டது. இது GUI எனும் வரைகலை பயனாளர் இடைமுகத்தை எளிதில் புரிந்துகொள்வதோடு, தானியங்கியாக மிகுதிகுறிமுறைவரிகளை நிறைவுசெய்கின்றது, திட்ட மேலாண்மை வசதிகளுடனும் தொடரியல் சிறப்புவசதிகளுடனும் அமைந்துள்ளது.
குறிப்பாக இது புதியவர்களுக்கும் துவக்கநிலை நிரலாளர்களுக்கும் ஏற்றது. ஜாவா குறிமுறைவரிகளை இயக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது KDE, X11 GNOME வரைகலை சூழலை ஆதரிக்கிறது. இது உண்மையில் இருக்கும் பொருளைக் குறிப்பதற்கான நடிகர் என்றும் முக்கிய செயல்படுத்திடும் வகுப்பை உலகம் என்றும் இரண்டு முக்கிய வகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு https://www.greenfoot.org/ எனும் இணையதள முகவரிக்கு செல்க

4.Code::Blocks IDE: இது சி ++ இல் ஒரு கருவித்தொகுப்பாக wxWidgets ஐப் பயன்படுத்தி எழுதப்பட்டது, இது ஒரு குறுக்கு-தள IDE ஆகும், இது Clang, Visual C++ , GCC உள்ளிட்ட பல்வேறு தொகுப்பாளர்களை ஆதரிக்கிறது.
இது மிகவும் புத்திசாலித்தனமானது மேலும் குறிமுறைவரிகளை நிறைவு செய்தல், தொடரியல் சிறப்புவசதிகளையும் குறிமுறைவரிகளின் மடிப்பு போன்ற பல்வேறு செயல்பாடுகளைச் இதன் வாயிலாக எளிதாக செய்ய முடியும். இது தனிப்பயனாக்கக்கூடிய பல்வேறு வெளிப்புற செருகுநிரல்களுடன் உள்ளது. இது விண்டோஸ், லினக்ஸ் மேக் ஆகியஅனைத்து இயக்கமுறைமைகலிளும் இயக்கலாம். இது GCC, போர்லேண்ட் சி ++, இன்டெல் சி ++ போன்ற பல்வேறு கணினி மொழிகளின் மொழிமாற்றிகளை ஆதரிக்கிறது. இது தகவல்களைச் சேமிக்க தனிப்பயன் கட்டமைக்கப்பட்ட அமைப்புகளையும் எக்ஸ்எம்எல் நீட்டிப்பு கோப்புகளையும் பயன்படுத்தி கொள்கின்றது.மேலும் விவரங்களுக்கு https://kb.mccdaq.com/KnowledgebaseArticle50788.aspx எனும் இணையதள முகவரிக்கு செல்க

5.Ninja IDE: இது மற்ற IDE:களிலிருந்து சற்று வித்தியாசமானது. இது பைத்தானில் எழுதப்பட்டுள்ளது மேலும் அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது. குறிப்பாக இது பைத்தானை அடிப்படையாகக் கொண்ட பயன்பாடுகளை உருவாக்குவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் இலகுவானது இதில் குறிமுறைவரிகள் நிலை , தாவல்கள், கோப்பு மேலாண்மை போன்ற செயல்பாடுகளைச் எளிதாக செய்ய முடியும்.இது பைதான் தவிர,மற்ற கணினி மொழிகளையும் ஆதரிக்கிறது. இதில்மிகுதி குறிமுறைவரிகளை நிறைவுசெய்தல் மறு நுழைவு போன்ற சிக்கலான செயல்பாடுகளைச் செய்ய முடியும் என்பதால், இது மிகவும் பயனுள்ள குறிமுறைவரிகளின் பதிப்பாளராகக் கருதப்படுகிறது. இது ஒரு கோப்பில் இருக்கும் நிலையான PEP8 பிழைகளைக் கண்டறிய உதவுகிறது.இது குறிமுறைவரிகளை உள்ளூராக்கல் செயல்பாட்டுடன் வருகிறது, இது எந்தக் கோப்பையும் நேரடியாகவும் விரைவாகவும் அணுக அனுமதிக்கிறது. இதில் பயனாளர்கள் ‘CTRL + K’ என்று தட்டச்சு செய்து அவர்கள் தேடுவதை எழுதினால் போதும், மேலும் IDE உரையை எளிதாக அடையாளம் காணும் திறன்மிக்கது. பெரும்பாலான IDE இக்களைப் போலவே, இது பயன்படுத்த மிகவும் எளிதானது. இது பல தனித்துவமான பயனுள்ள திட்ட மேலாண்மை வசதிகளுடன் கிடைக்கின்றது, மேலும் பயனுள்ள துணை நிரல்களுடன் IDE ஐ மிகவும் விரிவாக்கக்கூடியதாக ஆக்குகின்றது மேலும் விவரங்களுக்கு http://ninja-ide.org/எனும் இணையதள முகவரிக்கு செல்க

COVID-19எனும் கொரோனா நச்சுயிரை எதிர்த்து போராடும் திறமூல வன்பொருள் செயல் திட்டங்கள்


தற்போது உலகமுழுவதும் வாழும் மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கின்ற COVID-19எனும் கொரோனா நச்சுயிரை எதிர்த்து போராடுவதற்காக பின்வரும் திறமூல வன்பொருள்கூட உதவதயாராக இருக்கின்றன
Opentrons
இந்த திற மூல ஆய்வக தானியங்கிதளமானது திற மூல வன்பொருள், சரிபார்க்கப்பட்ட ஆய்வக உபகரணங்கள், நுகர்பொருட்கள், உதிரிபாகங்கள் பணிநிலையங்கள் ஆகியவற்றின் தொகுப்பைக் கொண்டுள்ளது. நாளொன்றிற்கு 2,400 பரிசோதனைகள் வரை தானியங்கியாக செயல்படுத்தக்கூடிய அமைப்புகளுடன் அதன் தயாரிப்புகள் வியத்தகு அளவில் COVID-19 பரிசோதனைக்கு உதவக்கூடியவகையில் இது அமைந்துள்ளது. வருகின்ற ஜூலை 2020 இற்குள் 1 மில்லியன் பரிசோதனை மாதிரிகள் வரை கொண்டுசெல்ல திட்டமிடப் பட்டுள்ளது . அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தின் கீழ் மருத்துவ நோயறிதலுக்கு அதன் அமைப்புகளைப் பயன்படுத்த முடியுமா என்பதைத் தீர்மானிக்க நிறுவனம் ஏற்கனவே கூட்டாட்சி , உள்ளூர் அரசாங்க நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இது அப்பாச்சி 2.0 எனும் உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கு https://opentrons.com/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

Chai Open qPCR
இந்த சாதனமானது நாம் அடிக்கடி பயன்படுத்திடும் கதவுகள் சன்னல்கள் ஆகியவற்றின் கைப்பிடிகள் மின்தூக்கியின் பொத்தான்கள் ஆகியவற்றின் மேற்பரப்புகளில் கொரோனா வைரஸ் ஆனது இருக்கிறதா என்பதைப் சரிபார்க்கவும், விரைவாகச் பரிசோதிக்கவும். பாலிமரேஸ் எதிர்வினை சங்கிலி யைப்(polymerase chain reaction (PCR)) பயன்படுத்திகொள்கின்றது. இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அப்பாச்சி 2.0 எனும் உரிமத்தின் கீழ் கிடைக்கின்றது இந்த திற மூல வன்பொருளானது செயல்படுவதற்காக பீகல்போன் (BeagleBone ) போன்ற குறைந்த சக்தி கொண்ட லினக்ஸ் கணினியைப் பயன்படுத்திகொள்கின்றது. வணிக நிறுவனங்களும் உள்ளூராட்சி தலைவர்களும் திலுள்ள தரவுகள கொண்டு பொது சுகாதாரம், குடிமை பணிதொடர்பான துப்புரவு, நோய்தணிப்பு, நோய்பரவிடும் வசதியை மூடல், ஒப்பந்தத் தடமறிதல் நோய்குறித்த பரிசோதனை போன்ற செயல்களை குறித்து முடிவுகளை எளிதாக எடுக்க முடியும். மேலும் விவரங்களுக்கு https://www.chaibio.com/openqpcr எனும் இணையதளமுகவரிக்கு செல்க

OpenPCR
ஓபன் பி.சி.ஆர் என்பது இது Chai Open qPCR இன் படைப்பாளர்களான ஜோஷ் பெர்பெட்டோ ஜெஸ்ஸி ஹோ ஆகியோர்களால் உருவாக்கப்ட்டதொரு பி.சி.ஆர் பரிசோதனை சாதன கருவியாகும், . இது அவர்களின் முந்தைய செயல்திட்டத்தை விட சிறந்ததொரு DIY திற மூல சாதனமாகும், ஆனால் இது அதே பயன்பாட்டு திறனை கொண்டுள்ளது: இது சுற்றுச்சூழல் பரிசோதனையைப் பயன்படுத்தி புலத்தில் உள்ள கொரோனா வைரஸை அடையாளம் காணஉதவுகின்றது. நோய்க்கிருமிகளைக் கண்டறியும் திறன் கொண்ட பாரம்பரிய நிகழ்வுநேர பி.சி.ஆர் இயந்திரங்கள் பொதுவாக 30,000 அமெரிக்க டாலர்களின் விலையில் கிடைக்கின்றன ஆயினும் அவை கள பயன்பாட்டிற்கு ஏற்றவை அல்ல. அதற்கு பதிலாக இந்த புதிய OpenPCR என்பது பயனாளர்களால் உருவாக்கப்பட்டு GPLv3.0 எனும் உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்ற ஒரு கருவியாக இருப்பதால், மூலக்கூறு கண்டறியும் அணுகலை ஜனநாயகமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.மேலும், எந்தவொரு நல்ல திற மூல செயல்திட்டத்தையும் போல, சுவிட்சர்லாந்தில் GPLv3.0 எனும் உரிமத்தின் கீழ் கிடைக்கின்ற WildOpenPCR என்பதிலிருந்து இது உருவாக்கப்பட்டதொரு வழித்தோன்றலாகும் மேலும் விவரங்களுக்குhttps://openpcr.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

PocketPCR
கௌடி ஆய்வகத்தின் இந்த பாக்கெட் பி.சி.ஆர் எனும் வெப்பசுழல் என்பது சிறிய சோதனைக் குழாய்களில் ஒரு திரவத்தின் வெப்பநிலையை உயர்த்துவதன் மூலமும் குறைப்பதன் மூலமும் உயிரியல் எதிர்வினைகளை செயல்படுத்தி அறிந்து கொள்ள பயன்படுகிறது. இதனை கணினி அல்லது திறன்பேசியில் தேவையில்லாத முன்னமைக்கப்பட்ட அளவுருக்களுடன், ஒரு எளிய யூ.எஸ்.பி மின்னேற்பான் மூலம் இயக்கலாம், இது ஏதனும் ஒருசாதனத்துடன் இணைக்கப்பட்டு இயங்குவது அல்லது சுயமாக இயங்கிடும் திறன்கொண்டது.
பிற பி.சி.ஆர் வாய்ப்புகளைப் போலவே, இந்தச் சாதனமும் கொரோனா வைரஸிற்கான சுற்றுச்சூழல் பரி சோதனைக்கு வழிவகுக்கும், இருப்பினும் அதன் செயல்திட்டப்பக்கமானது இதனைபற்றி வெளிப்படையாகக் கூறப்படவில்லை. இது ஜி.பி.எல்.வி 3.0 உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது. மேலும் விவரங்களுக்கு http://gaudi.ch/PocketPCR/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

OPEN LUNG ventilator
து ஒருவிரைவான-வரிசைப்படுத்தலிற்கான வென்டிலேட்டர் ஆகும், காற்றும் வெளிச்சமும் எளிதாக வந்து செல்வதற்கு வசதிஏற்படுத்துவதற்காக இது ஒருbag valve mask (BVM) என்பதை பயன்படுத்தி கொள்கின்றது, அம்பு-பை (Ambu-bag )என அழைக்கப்படும் இது ஒரு முக்கிய அங்கமாகதிகழ்கின்றது. இந்த அம்பு-பைகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு, சான்றளிக்கப்படுகின்றன , இவை சிறியவையாகவும், இயந்திரத்தனமாகவும் எளிமையானவையாகவும்உள்ளன, இவை ஆக்கிரமிப்பு குழாய் , முகமூடி ஆகிய இரண்டிற்கும் பொருந்தக்கூடியவை. மேலும் அரை தன்னாட்சி செயல்பாட்டை இயக்கும் குறிக்கோளுடன், கொண்ட இந்த OPEN LUNG ventilator ஆனது காற்று அழுத்தத்தையும் ஓட்டத்தையும் உணரவும் கட்டுப்படுத்தவும் மீச்சிறு மின்னனுக்களை பயன்படுத்திகொள்கின்றது.
இந்த ஆரம்ப கட்டத் செயல்திட்டமானது நூற்றுக்கணக்கான பங்களிப்பாளர்களைக் கொண்ட ஒரு பெரிய குழுவைக் கொண்டுள்ளது, இது GPLv3.0 எனும் உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது. மேலும் விவரங்களுக்கு https://gitlab.com/TrevorSmale/low-resource-ambu-bag-ventilor எனும் இணையதள முகவரிக்கு செல்க

Pandemic Ventilator
து ஒரு DIY வென்டிலேட்டர் முன்மாதிரி ஆகும். RepRap செயல்திட்டத்தைப் போலவே, இது அதன் வடிவமைப்பில் பொதுவாக கிடைக்கக்கூடிய வன்பொருள் கூறுகளைப் பயன்படுத்திகொள்கின்றது. இந்த செயல்திட்டம் 10 ஆண்டுகளுக்கு முன்பு பயனாளர் Panvent பயிற்றுவிப்பாளர்களுக்கு பதிவேற்றப்பட்டது, மேலும் அதை தயாரிக்க ஆறு முக்கிய படிமுறைகள் உள்ளன. இந்த செயலதிட்டமானது CC BY-NC-SA எனும் உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது. மேலும் விவரங்களுக்கு https://www.instructables.com/id/The-Pandemic-Ventilator/ எனும் இணையதள முகவரிக்கு செல்க

Folding at Home
புரத்தத்தின் இயக்கநேரத்தை உருவகப்படுத்துவதற்கான ஒரு விநியோகிக்கப்பட்ட கணிப்பு செயல் திட்டமே இந்த Folding at Home ஆகும் , இதில் புரத மடிப்பு செயல்முறை, பல்வேறு நோய்களில் சிக்கியுள்ள புரதங்களின் இயக்கங்கள் ஆகியவை அடங்கும். குடிமக்கள் ,விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் , தன்னார்வலர்கள் தங்களுடைய கணினிகளை வீட்டிலேயே பயன்படுத்திக் கொள்ளவும் செயல்முறையிலிருந்து அறவே நீக்கம் செய்யப்பட்ட
SETI@Home project என்பதை போன்றே, உருவகப்படுத்துதல்களை இயக்க வும் இது உதவுகிறது. மிகமுக்கியமாக நாம் திறமையான கணினி வன்பொருள் தொழில்நுட்ப வல்லுநராக இருந்தால், Folding at Home நமக்கானதாகும் என்ற செய்தியை மனதில் கொள்க .
இது புதிய சிகிச்சை வாய்ப்புகளைத் தேடுவதற்காக ஒரு புரதம் எடுக்கக்கூடிய வடிவங்கள் மற்றும் மடிப்பு பாதைகளை மாதிரியாக மாற்றுவதற்கு மார்கோவ் மாநில மாதிரிகளை பயன்படுத்திகொள்கின்றது. வாஷிங்டன் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளர் கிரெக் போமனின் இடுகையில் இது எவ்வாறு செயல்படுகிறது என்றும் இந்த செயல்திட்டத்தில் நாம் எவ்வாறு உதவலாம் என்பது பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.
இந்த செயல் திட்டத்தில் ஹாங்காங், ,குரோஷியா, சுவீடன் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கல்வி ஆய்வகங்கள், பங்களிப்பாளர்கள் வணிகநிறுவனபங்களிப்பார்களின் கூட்டமைப்பு பங்குகொண்டுள்ளனர் இது ஜிபிஎல் உரிமம், தனியுரிமம் ஆகியவற்றின் கலவையான உரிமங்களின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது இது விண்டோ, மேக் குனு / லினக்ஸ் ஆகிய இயக்கமுறைமைகளில் செயல்படும் திறன்மிக்கதாகும்.மேலும் விவரங்களுக்கு
https://foldingathome.org/எனும் இணையதள முகவரிக்கு செல்க

Great Cow Graphical BASIC எனும் நிரலாக்கங்களின் பதிப்பாளர் ஒருஅறிமுகம்

Great Cow Graphical BASIC என்பது உருவப்பொத்தான் அடிப்படையிலான ஒரு நிரலாக்கங்களின் பதிப்பாளராகும். மேலும் இது நிரலாக்கங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழல் (IDE) ஆகவும் திகழ்கின்றது இது பயனாளர்கள் கட்டளைவரிகள் எதையும் மனப்பாடம் செய்யாமலேயே நிரலாக்கங்களை உருவாக்க அனுமதிக்கின்றது. மிகமுக்கியமாக எந்தெந்த கட்டளைவரிகள் எங்கெங்கு வரவேண்டும் என்ற அடிப்படையை கூட மனப்பாடம் செய்திடாமல் அல்லது அறிமுகமே இல்லாதவர்களும் இதனை பயன்படுத்தி மிகத்திறனுள்ளநிரலாளராக வளரமுடியும் அதாவது இதற்கு முன்னர் எந்தவொரு நிரலாக்கத்தையும் செய்யாத புதியவர்களும் அல்லது துவக்க நிலையாளர்களும் கூட மிகஎளிதாக சிரமப்படாமல்நிரலாளராக வளருவதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், BASIC எனும் கணினி மொழி போலவே, இது முற்றிலும் இலவசமாகும்!
இது BASIC உடன் இறுக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது – இது ஒரே மாதிரியான சில்லுகள் அனைத்திலும் பணிபுரியும் தன்மைகொண்டது, மேலும் GCBASIC நிரல்களை நேரடியாக பதிவேற்றுகிறது, சேமிக்கிறது. இதனோடு எந்தவொரு உரை பதிப்பானையும் இணையாக வைத்துகொண்டு இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு பெரியநிரலாக்க குறிமுறைவரிகளை நகலெடுத்து ஒட்டி பரிமாறிகொள்ளலாம்!, மேலும் உருவப் பொத்தான்களை விட்டு வெளியேற வசதியாக இருக்கும்போது GCB நூலகங்களை பதிவே ற்றி கொள்கின்றது, இந்த நிரலாக்கங்களை வேறு எந்த பெரிய நிரலையும் போல திருத்தம் செய்திடலாம்.
தற்போது, இது விண்டோஇயக்கமுறைமையில் மட்டுமே செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது மேலும்இதுசெயல்படுவதற்காக NET Framework 1.1 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பு தேவைப்படுகின்றது.இது 8 பிட் Microchip PIC, Atmel AVR மீச்சிறு கட்டுபாட்டாளர் ஆகியவைகளுக்கான கட்டற்ற அடிப்படை தொகுப்பாகும் – இதை வேடிக்கையாகவும் எளிமையாகவும் செய்ய 1000 க்கும் மேற்பட்ட மீச்சிறு கட்டுபாட்டாளர்களை கருவிகளுடன் ஆதரிக்குமாறு செய்யப்பட்டுள்ளது.இது – மீண்டும் மீண்டும் பயன்படுத்திடும் assembly கட்டளைகளின் தேவையை நீக்குதல், திறமையான குறிமுறிவரிகளை உருவாக்குதல் ஒரு மீச்சிறு கட்டுபாட்டாளர் வகைக்கு எழுதப்பட்ட குறிமுறைவரிகளை எடுத்து மற்றொரு மீச்சிறு கட்டுபாட்டாளரில் இயக்குவதை எளிதாக்குதல் ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது . மிகமுக்கியமாக மீச்சிறு கட்டுபாட்டாளரைப் பயன்படுத்துவதற்கும் நிரல்படுத்துவதற்கும் உள்ள சிக்கலை அகற்றுவதே இந்த வடிவமைப்பின் அடிப்படை நோக்கமாகும். இது துவக்க நிலையாளர்களுக்கு ஏற்றது, assembly மொழியைக் கற்றுக்கொள்ள விரும்பாத அல்லது விரும்பாதவர்களுக்கும் அனுபவமிக்க மீச்சிறு கட்டுபாட்டாளர் நிரலாளர்களுக்கும் ஏற்றது. இது விண்டோ, ஆப்பிள் லினக்ஸ் ஆகிய இயக்கமுறைமைகளிலும் செயல்படுமாறுக் கிடைக்கின்றது. இதனுடைய வசதிவாய்ப்புகள் பின்வருமாறு:
இது பயன்படுத்த எளிமையான, பயனுள்ள மொழி,யாக விளங்குகின்றது இது ஒரு செந்தர அடிப்படை ஓட்டக் கட்டுப்பாட்டு (flow control) அறிக்கைகள் உருவாக்குவதற்கும் ஒன்றுசேர்ப்பதற்கும் ஒன்றிலிருந்து பிரித்து கழித்திடவும், பயன்படுகின்றது மிகமுக்கியமாக பூலியன் செயல்பாடுகள் ஒப்பீடுகளுக்கான ஆதரவு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறப்பு உத்தரவுகள் எதுவும் இல்லாமல், தரவு அட்டவணைகளை உருவாக்குதல், மிகசிக்கலான கணக்கீடுகளை எளிதாக செய்தல, மிகச்சிறிய, மீண்டும் பயன்படுத்தக்கூடிய குறிமுறைவரிகளை கொண்டது TinyAVRஇக்கான குறிமுறைவரிகளை எழுதி, அதை 18F-க்கு எளிதில் மாற்றியமைக்கலாம், சிப்பின் கடிகார வேகத்தைப் பொறுத்து அனைத்து தாமத கட்டளைகளையும் தானாகவே மீண்டும் கணக்கிடுகிறது

மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் http://gcbasic.sourceforge.net/Typesetter/index.php/Home எனும் இணையதள முகவரிக்கு செல்க

Gnuplot எனும் பயன்பாடு

இந்த Gnuplot என்பது லினக்ஸ், OS/2, விண்டோ, OSX, VMS, போன்ற பல்வேறு தளங்களுக்கான சிறிய கட்டளை-வரிகளால் இயக்கப்படுகின்ற ஒருவரைபட பயன்பாடாகும். இதனுடைய மூல குறிமுறைவரிகள் பதிப்புரிமை பெற்றது, ஆனால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டணமில்லாமல் கிடைக்கின்றது (அதாவது, இதனை பயன்படுத்துவதற்காகவென தனியாக நாம் கட்டணம் எதுவும் செலுத்ததேவையில்லை). அறிவியலறிஞர்கள், மாணவர்கள் ஆகியோர் தங்களுடைய கணித செயலிகளையும் தரவுகளையும் ஊடாடும் வகையில் காட்சிப்படுத்துவதை அனுமதிப் பதற்காக இது முதலில் உருவாக்கப்பட்டது, ஆனால்நாளடைவில் இணைய உரைநிரல் போன்ற பல ஊடாடாத பயன்பாடுகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில் வளர்ந்து வருகின்றது. Octave. போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகளால் இது தள இயந்திரமாக பயன்படுத்தப் படுகின்றது. இது1986 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு அவ்வப்போது மேம்படுத்தப்பட்டுகொண்டே வருகின்றது.இது பல்வேறு வகையானஇருபரிமான (2D )முப்பரிமான(3D) அடுக்குகளை ஆதரிக்கின்றது
இது ஒரு கட்டளைவரி-உந்துதல் தளசெயல் திட்டமாக அமைந்துள்ளது. இருபரிமாண, முப்பரிமாண அடுக்குகளில் பல்வேறுபட்ட பாணிகளிலும், பலவிதமான வெளியீட்டு வடிவங்களிலும் தள செயல்பாடுகளிலும் தரவு புள்ளிகளிலும் இது ஊடாடத்தக்க வகையில் பயன்படுத்திகொள்ளமுடியும். தலைமுறை அடுக்குகளை தானியக்க மாக்குவதற்கு உரைநிரல் மொழியாக இதனை பயன்படுத்தி கொள்ள முடியும். இது முதன்மையாக அறிவியல் தரவுகளின் காட்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடைய மூலக் குறிமுறைவரிகளை நாம் எப்போது விரும்பினாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும்
இந்த பயன்பாட்டின் வெளியீடுகளை postscript (including eps), pdf, png, gif, jpeg, LaTeX, metafont, emf, svg, HTML5, ஆகிய பல்வேறு வடிவமைப்புகளில் வெளியிடமுடியும்
விண்டோ, லினக்ஸ், யூனிக்ஸ் OSX உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பரவலான பயன்பாட்டில் உள்ள இது VMS, Ultrix, OS/2, and MS-DOS.ஆகிய பழைய கணினிஅமைப்புகளுக்கான தளங்களையும் ஆதரிக்கிறது. ஆயினும் இனிமேல்இது16-bit தளங்களை ஆதரிக்காது. எந்தவொரு நியாயமான தரமான (ANSI / ISO C, POSIX) சூழலிலும் இதனை நாம் தொகுக்க முடியும்.

இதனுடையவசதி வாய்ப்புகள்பின்வருமாறு
புள்ளிகள், கோடுகள், பிழைகள், நிரப்பப்பட்ட வடிவங்கள், பட்டிகள், அம்புகள் போன்ற பல வேறுபட்ட கூறுகளை இணைக்கும் இரு பரிமாண செயல்பாடுகள் , தரவுத் திட்டங்கள் ஆகியவற்றை வரைவதற்கு அனுமதிக்கின்றது

துருவ அச்சுகள், பதிவு-அளவிடப்பட்ட அச்சுகள், பொது நேரியல் அல்லாத அச்சு வரைபடங்கள், அளவுரு ஒருங்கிணைப்புகள் ஆகியவற்றை வரைவதற்கு அனுமதிக்கின்றது

தரவு புள்ளிகள், கோடுகள் , மேற்பரப்புகளின் முப்பரிமாண அடுக்கு பல வடிவங்களில் (விளிம்புதளம், கண்ணி) ஆகியவற்றை வரைவதற்கு அனுமதிக்கின்றது
முழு எண், பின்னஎண் அல்லது சிக்கலான எண்கணிதத்தைப் பயன்படுத்தி இயற்கணித கணக்கீடு ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளஅனுமதிக்கின்றது

மார்குவார்ட்-லெவன்பெர்க் குறைப்பைப் பயன்படுத்தி தரவு உந்துதல் மாதிரி பொருத்துதலை அனுமதிக்கின்றது

ஏராளமான இயக்க முறைமைகள், வரைகலை கோப்பு வடிவங்கள் , வெளியீட்டு சாதனங்களை ஆதரிக்கின்றது

TEX போன்ற உரை பட்டிகள், தலைப்புகள், அச்சுகள், தரவு புள்ளிகளுக்கான வடிவமைப்பு ஆகியவற்றை அனுமதிக்கின்றது விரிவான இணைய உதவிகொண்டுள்ளது

ஊடாடும் கட்டளை வரி பதிப்பித்தல , வரலாறு ஆகிய வசதிகளைகொண்டது

மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் http://www.gnuplot.info/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு கணினி நிரலாளர்களுக்கும் அதன் தலைவருக்கும் இடையே நடந்த உரையாடல் பின்வருமாறு
தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர்: அனைத்து பணியாளர்களின் விவரங்களையும் பதிவுசெய்திடவேண்டும் என அரசு உத்திரவிட்டுள்ளது அதனால் உன்னுடைய முகவரி என்ன வென்று கூறு

கணினி நிரலாளர் :என்னுடைய முகவரி 173.168.15.10 என்பதாகும்ஐயா
நிறுவனத்தின் தலைவர்:அந்த முகவரியை கேட்கவில்லை உன்னுடைய உள்ளூர் முகவரி என்ன?

கணினி நிரலாளர் :என்னுடைய உள்ளூர் முகவரி 127.0.01 என்பதாகும் ஐயா
நிறுவனத்தின் தலைவர்: அதையும் நான் கேட்கவில்லை உண்மையில்நீங்கள் வாழ்கின்ற உங்களுடைய முகவரியைத்தான்நான் கோருகின்றேன்

கணினி நிரலாளர் :என்னுடைய உள்ளூர் முகவரி 29:01:38:62:31:58என்பதாகும் ஐயா

WinCDEmu எனும் கட்டற்ற கருவி

WinCDEmu என்பது ஒரு கட்டற்ற குறுவட்டு / நெகிழ்வட்டு / BD இன் முன்மாதிரி கருவிஆகும் - இது விண்டோஸ் எக்ஸ்ப்ளோர் எனும் இணையஉலாவியில் சொடுக்குவதன் மூலம் வன்தட்டுகளில் imageஐ பதிவேற்றம் செய்திட அனுமதிக்கின்ற ஒரு கருவியாக திகழ்கின்றது. ஏதேனுமொரு ISO image ஐ பதிவிறக்கம் செய்து அதை காலியான வெற்று வட்டில் பதிவு செய்திடாமல்நேரடியாக பயன்படுத்த விரும்பினால், WinCDEmu ஆனது அவ்வாறான பணியை எளிதான வழியில் செய்வதற்காக நமக்கு கைகொடுக்கின்றது.
இதனுடைய பல்வேறு வசதிவாய்ப்புகள் பின்வருமாறு :
ISO, CUE, NRG, MDS/MDF, CCD, IMG ஆகியவற்றின் image களை ஒரேயொரு சொடுக்குதலின் வாயிலாக பதிவேற்றுகின்றது , இது வரம்பற்ற அளவிலான மெய்நிகர் இயக்கங்களை ஆதரிக்கின்றது.இது விண்டோ எக்ஸ்பி முதல் விண்டோஸ் 10 வரையிலான 32 பிட் , 64 பிட் பதிப்புகளின் இயக்கமுறைமைகளில் செயல்படும் திறன்மிக்கது. விண்டோ எக்ஸ்ப்ளோரரில் ஒரு சூழல் பட்டியின்வாயிலாக ISO image களை உருவாக்க அனுமதிக்கிறது. இது2MB க்கும் குறைவான அளவேயுள்ள சிறிய கோப்பினை கொண்டுள்ளது இதனை கணினியில் நிறுவுகை செய்தபின் கணினியின் இயக்கத்தை மறுதொடக்கம் செய்யத்தேவையில்லை. ஒரு சிறிய கையடக்க பதிப்பாக கூட இது கிடைக்கின்றது.இது 20 க்கும் மேற்பட்ட மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது நாம் பயன்படுத்தப்படாத போது இயக்கிகளை ஆக்கிரமிக்காது. இது தரவுகளையும் , நெகிழ்வட்டின் கானொளி காட்சிகளின் BD-கானொளி காட்சிகளின் இமேஜ்களையும் ஆதரிக்கின்றது. இது எந்தவொரு பயன்பாட்டிற்கும் கட்டணமில்லாமல் கிடைக்கின்றது - மேலும் இது LGPLஎனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது
விண்டோ எக்ஸ்ப்ளோரரில் ISO கோப்புகளையும் பிற ஆப்டிகல் டிஸ்க் இமேஜ்களையும் இருமுறை சொடுக்குவதன் வாயிலாக தடையின்றி பதிவேற்றம் செய்திட விரும்பினால், முதலில் இந்த WinCDEmu ஐ நம்முடைய கணினியில் நிறுவுகைசெய்திட வேண்டும். மாற்றாக, கணினியில் இதனை நிறுவுகை செய்திடாத கையடக்க பதிப்பை பயன்படுத்திகூட இந்த பணியை செய்து முடித்துகொள்ளலாம், இருப்பினும், இது விண்டோஸ் எக்ஸ்ப்ளோரருடன் தன்னை இணைத்துக் கொள்ளாது, மேலும் இமேஜ்களை பதிவேற்ற அல்லது பதிவிறக்கம் செய்வதற்கு கைமுறையாக பயன்பாட்டைத் தொடங்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கும் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும்
https://sysprogs.com/wincdemu/ எனும் இணையதள முகவரிக்கு செல்க

Bliss OS (x86)என்பது கைபேசியில் உள்ளதை போன்று கணினியிலும் ஆண்ட்ராய்டு இயக்க முறைமை

Bliss OS (x86)என்பது நாமெல்லோரும் பயன்படுத்தி கொண்டுவரும் நம்முடைய கைபேசியில் ஆண்ட்ராய்டு இயக்கமுறைமை செயல்படுவதை போன்று நம்முடைய கணினி ,மடிக்கணினி ஆகியவற்றிலும் செயல்படும் திறன்மிக்கபல தனிப்பயனாக்க விருப்பங்களையும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களையும் உள்ளடக்கிய ஆண்ட்ராய்டு அடிப்படையிலான கட்டற்ற இயக்கமுறைமையாகும் இதுகடந்த 4 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட எந்தவொரு Chromebook, Windows / Linux PC அல்லது மடிக்கணினியிலும் இது கிடைக்கிறது மேலும்இதன் திறன்ஆனது ஒவ்வொரு வாரமும் அதிகமான சாதனங்களை ஆதரிக்குமாறு மேம்படுத்தி கொண்டேவருகின்றது
நம்முடைய எல்லா சாதனங்களிலும் இயங்கக்கூடிய தரமான ROM/OS ஐவழங்குவதும், எல்லா தளங்களுடனும் ஒத்திசைவாக செயல்படுவதன் மூலம் தனிப்பயனாக்கங்களையும் விருப்பங்களையும் பாதுகாப்பதும் இந்த வெளியீட்டில் முக்கிய நோக்கமாக கவனத்தில் கொண்டு வெளியிடப்படுகின்றதுது. எந்தவொரு சூழ்நிலையிலும் நாம் கற்பனை செய்யக்கூடிய அனைத்து வசதிகளையும் இதில் கொண்டுவந்த சேர்க்க முயற்சிப்பதாக கூறப்படுகின்றது. இதனுடைய வசதிவாய்ப்புகள் பின்வருமாறு :
இந்த இயக்கமுறைமைமுழுவதும் தனிப்பயனாக்குதல் அவற்றிற்கான பல விருப்பங்களை உள்ளடக்குதல் ஆகியவற்றின் வாயிலாக இதனுடைய வடிவமைப்பில் அதிககவனம் செலுத்தபட்டுள்ளது
பெரிய திரைகள் , சிறிய திரைகள் ஆகியவற்றிற்கான பல தனிப்பயன் விருப்பங்களை இது வழங்குகின்றது, அவை நம்முடைய சாதனத்தை பல்வேறு பணிகளுக்கு ஏற்பஅமைக்க அனுமதிக்கின்றன.
மிகவும் தேவைப்படும் பயன்பாடுகளுக்கு உதவுவதற்காக மாற்றங்களுடன் விரைவான இயக்கத்தையும் நிரந்தத்தன்மையையும் மையமாகக் கொண்டு இந்த இயக்கமுறைமை அமைந்துள்ளது.
மின்கலனின் மின்சாரத்தை போதுமான அளவிற்கு மட்டும் நுகர்வு செய்திடுவதற்கு தேவையானசிறந்த நிலைகளுக்கு உதவ கூடுதல் விருப்பங்கள் வழங்கப்படுகின்றன
கூடுதல் பாதுகாப்பு விருப்பங்களும் வசதிகளும் இந்த இயக்க முறைமை முழுவதும் காணப்படுகின்றன.அதனோடு AOSP பாதுகாப்பு புதுப்பிப்புகள் தொடர்ந்து இணைக்கப்படுகின்றன.
நமக்குச் சொந்தமான எந்தவொரு சாதனத்தினையும் எளிதாக செயல்டுமாறு கட்டமைத்துள்ளது . கணினிக்கான உருவாக்கங்களில் ARM / ARM64 பயன்பாட்டு பொருந்தக்கூடிய கூடுதல் வசதிகளும் இதிலடங்கும் இதனுடைய துவக்கஇயக்கத்தின்போது மேஜைக்கணினி அல்லது மடிக்கணினி ஆகியவற்றிற்கு இடையே பயனாளர் எதனை விரும்புகின்றார்களோ அதன்அடிப்படையில் தேர்வு செய்யஇது அனுமதிக்கிறது. உண்மையிலேயே தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்திற்காக நாம் விரு்ம்பினால் இரண்டையும் கலந்துசெயல்படுமாறு அமைத்து பயன்படுத்தலாம் இதனுடைய AffiliTest – எனும் கண்காணிப்பு இணைப்பு சரிபார்ப்பு எனும் வசதியானது. எந்த வொரு GEO, அல்லது எந்தவொரு சாதனத்தின் சோதனையை எளிதாக்குகிறது. இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும்
https://www.blissos.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

Previous Older Entries