WriteFreely எனும் கட்டற்ற பயன்பாடு ஒரு அறிமுகம்

WriteFreely எனும் கட்டற்ற பயன்பாட்டினை கொண்டு நம்முடைய சொந்த வாசகர்குழுவிற்கான அல்லது விவாத குழுவிற்கான கட்டமைவை நாமே உருவாக்கி கொள்ளமுடியும்
இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் இந்த உலகில் வாழும் நாமனைவரும் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதற்கும் ,நம்முடைய அன்றாட பணிகள் அனைத்தையும் முடிப்பதற்கும் இணையத்தை சார்ந்தே வாழவேண்டிய இக்கட்டான நிலையில் தான் நாமனைவரும் வாழ்ந்துவருகின்றோம் . தற்போதைய சூழலில் இவ்வாறு தொடர்பு கொள்வதற்கான தளங்கள் ஒவ்வொன்றும்ஒரு குறிப்பிட்ட கொள்கையை பின்பற்றிடுமாறு அதாவது குறிப்பிட்ட தளத்தினை பயன்படுத்தி கொள்வதற்காகவென தனியாக கணக்கு ஒன்றினை துவக்கவேண்டும் என்றோ அல்லது வேறு ஏதாவதுஒருகணக்கினை இணைக்கவேண்டும் என்றோ நம்மை கட்டாயபடுத்தி நாம் விரும்பும் குறிப்பிட்ட இணையச்சேவையை பயன்படுத்தி கொள்ளச் செய்கின்றன. அதனை தொடர்ந்து நாமும் இணையம் இல்லையென்றால் நம்முடைய வாழ்வே இல்லையென்ற அச்சத்தினால் அவைகளுக்கு அடிமையாக வாழத்தலைபட்டுவிட்டோம் .
இவ்வாறான நிலையிருந்தபோதிலும், கடந்த சில ஆண்டுகளில், சிறிய, நெருக்கமான பின்னணியில் உள்ள சமூகங்களின் மறுமலர்ச்சியின் பயனாக சுதந்திரமாக செயல்படுவதற்காக ActivityPub போன்ற ஒருங்கிணைந்த சமூக வலைபின்னல்களை உருவாக்குவதற்கான புதிய நெறிமுறைகள், Mastodon. போன்ற கட்டற்ற தளங்கள் பிரபலமடைந்துவருகின்றன
இதன்வாயிலாக பொது. மக்கள் இதற்காகவென தனியாக கணக்கு எதையும் துவங்கிடாமல் தங்களைப் போன்ற கருத்துடையவர்களுடன் கலந்துரையாடுவதற்காகவும் விவாதிப்பதற்காகவும் குழுக்களை உருவாக்கி , அதற்காகவென பெரிய, மையப்படுத்தப்பட்ட சேவைகளை பயன்படுத்துகின்றனர், அதனடிப்படையில் பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை வலைபூக்களின் வாயிலாக தங்களுடைய குழுவான நண்பர்களிடைய வெளியிடுவதற்காக Tumblr போன்ற தளங்கள் பிரபலமாகி வருகின்றன
இவைகளில் இருக்கின்ற வசதிகளைமட்டும் தங்களுக்கு தேவையானவாறு குழுக்களை உருவாக்கி கருத்துகளை பரிமாறிகொள்வதற்காக பயன்படுத்தி கொள்ளலாமேயொழிய பயனாளர்கள் தங்களுக்கு தேவையானவாறான வசதிவாய்ப்புகளை இவைகளில் கட்டமைவு செய்து கொள்ளமுடியாது ஏனெனில் இவை கட்டற்ற தளங்கள் அன்று இவ்வாறான நிலையில் கைகொடுக்க வருவதுதான் WriteFreely எனும் பயன்பாடாகும் . இதனை கொண்டு நம்முடைய குழுவிற்கான கட்டமைவுகளை நாமே சுதந்திரமாக உருவாக்கி நடத்தலாம் மேலும் நம்முடைய தேவைகளுக்கு ஏற்றபடி அதை மாற்றியமைத்திடலாம் மற்றவர்களுடனான குழுக்களை உருவாக்குவதுமட்டுமல்லாமல் இதுபோன்ற பிறகுழுக்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் சிறிய சமூக அளவிலான குழுமுதல் பெரியவலைபின்னல் குழுக்கள்வரை உருவாக்கி கொள்ளலாம் அதிலும் நமக்கென்ற தனிப்பட்ட தொனிகளையும் அதற்கேற்ற தொடர்புகொள்வதற்கான விதிமுறைகளையும் நாமே உருவாக்கி பராமரித்து கொள்ளலாம் அதாவது தற்போதுள்ள ஃபேஸ்புக் போன்றவைகளுக்கு பதிலாக இதில் நமக்கென்றே தனியான சமூக குழுக்களை நாமே கட்டமைவுசெய்து பயன்படுத்தி கொள்ளலாம் நம்முடைய கருத்துகளை கொண்ட வலைப்பதிவுகளை பரந்த உலகத்துடன் இணைக்கவிரும்பாத நிலையில் முழுமையான தனிப்பட்ட சூழல்களுடனான குறிப்பிட்ட குழுவிற்குள் மட்டும் அமைத்து கொள்வதற்கு இதுமிகப்பயனுள்ளதாக இருக்கும்..அதாவது நம்முடைய குடும்ப உறுப்பினர்களுக்குள் அல்லது குறிப்பிட்ட கருத்துகளை கொண்ட நம்முடைய நண்பர்களுக்குள் அல்லது நம்முடைய நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்குள் அல்லது நம்முடைய குறிப்பிட்ட துறையில் இருப்பவர்களுக்குள் தனியாக குழுக்களுக்கான கட்டமைவுகளை நாமே உருவாக்கி அதற்காகவென தனியானதொரு ஒரு மெய்நிகர் தனிப்பட்ட சேவையகம் (VPS), ஓரிரு கட்டளை வரியுடன் கட்டமைவுசெய்து பயன்படுத்தி கொள்ளலாம்
இந்த WriteFreely என்பது ஒரு எளிய வலைபூக்களின் வாயிலாக நம்முடைய கருத்துகளை குறிப்பிட்ட குழுக்களுடன் பகிர்ந்து கொள்ளஉதவும் ஒரு கட்டற்ற பயன்பாடாகும் இதனை கொண்டு நம்முடைய கருத்துகளை கூறுவதற்காக நம்முடைய கவணத்தை எழுதுவதில் மட்டும் செலுத்தினால் போதும் கட்டமைவு செய்வது வடிவமைப்பு செய்வது வெளியிடுவது அதன் கொள்ளளவு ஆகியவற்றை பற்றி நாம் கவலைப்படத்தேவையில்லை மேலும் பார்வையாளர்கள் நம்முடைய வலைபூவை பார்வையிடும்போது மேல்மீட்பு பட்டிகளுடன் குறுக்கிடுவதோ அல்லது உள்நுழைவு செய்வதற்கான வழிமுறைகளை பின்பற்றவேண்டுமென தொந்திரவுசெய்வதோ அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவென நெருக்குதல் செய்வதோ இதில் கண்டிப்பாக ஏற்படாது சுதந்திரமாக நாம் கூறவிழையும் கருத்துகளை பயனாளர்கள் படித்து பயன்பெறலாம் இது AGPL. எனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடபட்டுள்ளது இதன் குறிமுறைவரிகள் கோ எனும் கணினிமொழியில் உருவாக்கப்பட்டதாகும் முகப்பு பக்கத்திற்கு மட்டும் ஜாவாஸ்கிரிப்ட் பயன்படுத்தி கொள்கின்றது பின்புல த்தில் MySQL அல்லது SQLite தரவுதளத்தினை பயன்படுத்தி கொள்கின்றது இது Write.asஎன்ற பெயரில்2014 இல் வெளியிடப்பட்டது பின்னர் 2016 இல் Write.as appsஎனும்பயன்பாடாக கட்டளை வரிவாயிலாக வும் இணையஉலாவியின் விரிவாக்கமாகவும் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்,லினக்ஸ் விண்டோ ஆகியவற்றில் செயல்படுமாறு வெளியிடப்பட்டது தற்போது ActivityPub எனும் ஒழுங்கமைவுமுறையுடன் பயன்படுத்தி கொள்வதற்கேற்ப கட்டற்ற பயன்பாடாக வெளியிடப்பட்டுள்ளது இதனை பயன்படுத்தி கொள்வதற்கு விரும்பினால் முதலில் Getting Started guide எனும் விளக்ககுறிப்பை படித்தறிந்து கொள்க இதனுடைய வசதிகள் ஒவ்வொன்றும் ஒற்றையான கட்டளைவரியால் செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது வெளிப்புற அல்லது மூன்றாவது பயன்பாடு எதையும் இது சாராமல்சுயமாக செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது இதில் நம்முடைய தனிப்பட்ட வலைபூவைமட்டும் வெளியிட விரும்பினால் இதனுடைய Write.as எனும் வசதியை பயன்படுத்தி கொள்க அதற்குபதிலாக குழுவாக கருத்துகளை பரிமாறி கொள்ளவிரும்பினால் WriteFreely.host எனும் வசதியை பயன்படுத்தி கொள்கஇவ்விரண்டு வசதிகளும் WriteFreely என்பதன்கீழ் செயல்படுகின்றது இதில் ஆயிரகணக்கான வலைபூக்களும் நூற்றுகணக்கானகுழுக்களும் உருவாக்கி தற்போது பயன்படுத்தி வருகின்றனர் இதனை பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்வதற்காக https://writefreely.org/ எனும் இணையமுகவரிக்கு செல்க

QGIS எனும் கட்டற்ற பயன்பாட்டு கருவி ஒரு அறிமுகம்

முதலில் GIS இன் வரையறைபற்றி தெரிந்து கொள்வோம் GIS என சுருக்கமாக அழைக்கப்படும் புவியியல் தகவல் அமைவுகள் (Geographic Information Systems)என்பது ஒரு கணினி அடிப்படையிலான கருவியாகும், இதுபுவியியல் தொடர்பான தகவல்களை தரவுகளை பகுப்பாய்வு,செய்து வரைபடமாக பார்வையாளர்களுக்கு காண்பிப்பது சேமித்து வைத்திடுவது ஆகிய பணிகளை கையாளுகின்ற ஒரு அமைவாகும் . அதாவது புவியியல் தகவல்களை உருவாக்கி நிருவகித்து பகுப்பாய்வு செய்து அதனை வரைபடமாக திரையில் காண்பிக்கச்செய்து இறுதியாக சேமித்து வைத்திடபயன்படுகின்றது பொதுவாக தற்போதைய சூழலில் பொருட்களுக்கான அல்லது சேவைகளுக்கான புதிய சந்தையை கண்டுபிடித்தல் .. காலநிலை மாற்றத்தை கணித்தல் … மின்வழங்கல்களை வரைமுறைபடுத்துதல் … குற்றம் சார்ந்த தொடர்புகளை ஆய்வு செய்தல் என்பனபோன்ற எண்ணற்ற புவியியல் சார்ந்த ஆய்விற்கு அத்தியாவசிய தேவையாக இருக்கின்றது .
இவ்வாறான புவியியல் தகவல் அமைவுகளை ஆய்வுசெய்து கையாளுவதற்காக நமக்கு கைகொடுக்க வருவதுதான் QGIS ஆகும் இது ஒரு பயனாளரின் உற்ற நண்பனை போன்று பயன்படக்கூடிய GNU எனும் பொதுஅனுமதியின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளதொரு கட்டற்ற பயன்பாட்டு கருவியாகும் இது விண்டோ ,லினக்ஸ், ஆண்ட்ராய்டு ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளியும் செயல்படும் திறன்மிக்கது இது வெக்டார், ராஸ்ட்டார் தரவுதளஅமைப்புகள் செயலிகள் ஆகியவற்றை ஆதரிப்பது மட்டு மல்லாமல் புவியியல் தரவுகளின்ஆய்வின் முடிவுகளை வரைபடமாக இணையத்தின் வாயிலாக வெளியிடவும் தொகுப்பாக சேமித்திடவும் பயன்படுகின்றது இதனுடைய சமீபத்திய பதிப்பு QGIS 3.6ஆகும்

இந்த பயன்பாட்டு கருவியானது புவியியல் தகவல்களை உருவாக்கி பகுப்பாய்வுசெய்து வரைபடமாக வெளியிடுவதற்காக QGIS Desktop என்றும் நம்முடைய புவியியல் தரவுகளையும் மீப்பெரும் தரவுகளையும் தேடிபிடித்து காட்சியாக காணவும் ஒரு தொகுப்பிலிருந்து மற்றொரு தொகுப்பிற்கு இழுத்து சென்று விடுவதற்காகவும் QGIS Browser , புவியியல் தகவல்களை தொகுத்து சேமித்து வைத்திடுவதற்காகவும் பல்வேறு பயனாளர்கள் நேரடியாக அவைகளை கையாளவும் உதவுவதற்காக QGIS Server , இவ்வாறான பல்வேறு தொகுப்பான புவியியல் தகவல்களை பல்வேறு பயனாளிகளும் இணையத்தின் வாயிலாக கையாளுவதற்கு உதவுவதற்காக QGIS Web Client , அதிலும் பயனாளிகள் கணினிக்கு பதிலாக நம்முடைய கைபேசி அல்லது திறன்பேசி வாயிலாகவே புவியியல் தகவல்களை கையாளுவதற்கு உதவுவதற்காக QGIS on Android (beta!) ஆகிய நான்கு வகைகளுள் நம்முடைய தேவைக்கேற்ற பொருத்தமானதை தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்வதற்காக கட்டற்றபயன்பாட்டு கருவியாக இது கிடைக்கின்றது
இதனை பயன்படுத்தி கொள்ள விழைந்தால் முதலில் https://qgis.org/en/site/forusers/index.html#download எனும் இணையபக்கத்திலிருந்து நாம் விரும்பிய வகையினை பதிவிறக்கம் செய்து கொள்க தொடர்ந்து https://qgis.org/en/site/forusers/index.html#trainingmaterial எனும் இணையபக்கத்திற்கு சென்று இந்த பயன்பாட்டு கருவியை எவ்வாறு நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்வது என ஐயம்திரிபற அறிந்து கொள்க அதனை தொடர்ந்து நம்முடைய வியாபார நிறுவனத்தில் எவ்வாறு பயன்படுத்தி பயன்பெறுவது என்பதற்காக https://qgis.org/en/site/forusers/commercial_support.html எனும் இணையபக்கத்திலுள்ள Boundless,dms,GBD போன்ற பட்டியலான வியாபார நிறுவன நண்பர்களை தொடர்பு கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது மேலும் கூடுதல் வசதி வாய்ப்புகள் இதில் சேர்த்து பயன்படுத்தி கொள்வதற்காக http://plugins.qgis.org/plugins/ எனும் இணையமுகவரிக்கு செல்க

TiddlyWiki ஒரு அறிமுகம்

TiddlyWiki என்பது ஒரு பயன்பாடு அன்று ஆயினும் HTML . JavaScript ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட பெரியஅளவிலான 2எம்பி கொள்ளளவுகொண்டதொரு இணையபக்கமாகும் நாம் நம்முடைய இணையஉலாவியை கொண்டு இதில் திருத்தம் செய்து கொண்டு தனியானதொரு கோப்பாக மறுபெயரிட்டு சேமித்து கொள்ளமுடியும் இதனை கொண்டு குறிப்பெடுத்திடலாம் ,செயல்திட்டத்தை உருவாக்கிகொள்ளலாம் இணைய இதழ்களை வெளியிடலாம் நாம் விரும்பும் இணையபக்கத்தை bookmarkசெய்து சேமித்து கொள்ளலாம் நம்முடைய புதிய இணையபக்கத்தை வெளியிடலாம் நம்முடைய வலைபூவை வெளியிடலாம் என்றவாறான பல்வேறு பணிகளை இதில் செயல்படுத்தி பயன்பெறமுடியும் இது கையடக்கமானது சிறிய Nextcloud எனும் கோப்பகமாக வைத்து கொள்ளலாம் கணினிகளுக்கிடையேயும் கைபேசி சாதனங்களுக்கிடையேயும் பகிர்ந்து கொள்ளலாம்அல்லது யூஎஸ்பி ட்ரைவில் சேமித்து எடுத்து செல்லலாம்
இதனை பயன்படுத்தி கொள்வதற்காக http://www.tiddlywiki.com/ எனும் இணையபக்கத்திற்கு சென்று empty.html எனும் பெயரிலுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து கொள்க பின்னர் அந்த கோப்பிற்கு நாம் விரும்பிய பெயரினை இட்டுகொள்க அதன்பிறகு நம்முடைய இணையஉலாவியில் புதிய பெயருடைய இந்த கோப்பினை திறந்து கொள்க இதனுடைய திரையின் மேலே வலதுபுறமூலையிலுள்ள pencil போன்றுள்ள உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து தேவையானவாறு விவரங்களை உள்ளீடுசெய்து கொள்க checkmark போன்றுள்ள உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்துTiddlyWikiஐ சேமித்து கொள்க இவ்வாறு சேமித்திடும்போது நாம் விரும்பும் இடத்தில் சேமித்திடுவதற்காக நாம் குரோம் எனும் இணைய உலாவியைபயன்படுத்தி கொண்டிருந்தால் Settings,என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Settings,எனும் பக்கத்தில் Show advanced settings என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் Ask where to save each file before downloading எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக நாம் ஃபயர்ஃபாக்ஸ் எனும் இணைய உலாவியைபயன்படுத்தி கொண்டிருந்தால் திரையின் மேலே வலதுபுறமூலையிலுள்ள Options எனும் முப்புள்ளியை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பட்டியில் Downloads எனும் வாய்ப்பையும் பின்னர் Always ask you where to save filesஎனும் வாய்ப்பினையும் தெரிவுசெய்து சொடுக்குக
குறிப்பெடுப்பதற்காக இந்த TiddlyWiki இல் + எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் புதிய tiddlerஎனும் திரை நாம் குறிப்பெடுப்பதற்காக தோன்றிடும் அதில்Notes for netbooks essay.என்றவாறு பெயரிட்டு குறிச்சொல்லை Tag nameஎனும் புலத்தில் உள்ளீடுசெய்து கொண்டு குறிப்புகளை உள்ளீடுசெய்திடலாம் வடிவமைப்பு செய்வதற்கு TiddlyWiki’s markup அல்லது formatting toolbarஐயும்சேமிப்பதற்காக checkmark எனும் உருவப்பொத்தானையும் பயன்படுத்தி கொள்க
புதிய இணைய இதழ்களை வெளியிடுவதற்காக Tools எனும் தாவிபொத்தானின் திரையில் New journalஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் கருவிகளின் பட்டியில் Create a new journal tiddler எனும் கருவியை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக தொடர்ந்து நம்முடைய இதழ்களை உருவாக்கிடும் பணியை செயல்படுத்திடுக மேலும் வசதிகளை பெறுவதற்காக இதனுடைய கூடுதல்விரிவாக்கம் (plugins) என்பதை பயன்படுத்தி கொள்க குறிப்புகள் செயல்திட்டங்கள் இணையஇதழ்கள் ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து தொகுப்பான TiddlyWikiஎனும் கோப்புகளாக பயன்படுத்தி கொள்ளலாம மேலும் ஒன்றுக்குமேற்பட்ட TiddlyWikiகோப்புகளை கையாள desktop version ஐபயன்படுத்தி கொள்வது நல்லது என பரிந்துரைக்கப்படுகின்றது

மேலும் இதனை பற்றி கானொளி காட்சியின் வாயிலாக தெரிந்து கொள்வதற்காக https://www.youtube.com/channel/UCCYN_nzlUKKMiTj5rerv2lQ/videos என்ற இணையபக்கத்திற்கு செல்க ஐந்தே படிமுறையில் கற்று செயல்படுத்தி பயன்பெறுவதற்காக http://www.richshumaker.com/tw5/FiveStepsToTiddlyWiki5.htm என்ற இணையபக்கத்திற்கு செல்க

shell script எனும் குறிமுறைவரிகளின் உதவியுடன் ஒருஇணையபக்கத்தை நன்றாக படித்தறிந்து கொள்வதற்கேற்ப தெளிவுதிறனை மாற்றியமைத்திடலாம்

நமக்கென ஒரு இணையபக்கத்தை உருவாக்கிவிட்டால் போதும் உடன் பார்வையாளர்கள் அனைவரும் நம்முடைய இணைய பக்கத்திற்கு வந்துவிடுவார்கள் என நம்மில் பலர் தவறாக எண்ணிவிடுகின்றோம் பொதுவாக வழக்கமான சாம்பல வண்ண எழுத்துருக்களை வெள்ளை நிற பின்புலத்தில் நம்முடைய இணையபக்கத்தை உருவாக்கி வெளியிட்டிருந்தால் நம்முடைய இணையபக்கத்திற்கு வரும் பார்வையாளர்கள் நாம் கூற விழையும் கருத்துகளை படிக்காமல் தாண்டி சென்றிடுவார்கள் அதனால் பார்வையாளர்களனைவரும் நம்முடைய இணையதளபக்கத்தை தெளிவாக படித்து நாம் கூறவிழை.யும் கருத்துகளை அறிந்து கொள்வதற்காக நாம் பயன்படுத்திடும் எழுத்துருவிலும் நம்முடைய இணையபக்கத்தின் பின்புல தோற்றத்திலும் கவணம் செலுத்தி சரியான தெளிவுதிறன் விகிதத்தை பராமரித்தால் மட்டுமே ஏராளமான பார்வையாளர்கள் நம்முடைய இணையபக்கத்திற்கு வருகை செய்து நாம் கூறவிழையும் கருத்துகளை படித்தறிந்து கொள்வார்கள் மிகச்சரியான எழுத்துருக்களை கொண்ட உரைவடிவம் ,பின்புல வடிவமைப்ப ஆகியவைகளுக்கிடையேயான விகிதத்தையே தெளிவுதிறன்விகிதம் (contrast ratio) என அழைக்கப்படுகின்றது இந்த தெளிவுதிறன் விகிதமானது வெள்ளை எழுத்துரு வெள்ளை பின்புலவண்ணம்1:1 என்பது முதல் கருப்பு எழுத்துரு வெள்ளை பின்புலவண்ணம் 21:1 வரை பராமரிக்கப்படுகின்றது இந்த தெளிவுதிறனைவரையறுக்கும் பக்கத்தின் தலைப்பானது 4.5:1 என்ற விகிதத்திலும் உரையின் உள்ளடக்கமானது 3:1 என்றவிகிதத்திலும் குறைந்தபட்சம் இருக்கவேண்டும் என்றும் ஆயினும் பக்கத்தின் தலைப்பானது 7:1 என்ற விகிதத்திலும் உரையின் உள்ளடக்கமானது 4.5:1 என்றவிகிதத்திலும் குறைந்தபட்சம் இருப்பது நல்லது என்றும் W3C யானது பரிந்துரைக்கின்றது
இணையபக்கத்தின் தெளிவுதிறன் விகிதத்தைகணக்கிடுவதற்காக முதலில் உரையிலான எழுத்துருவினுடைய வண்ணத்தின்மதிப்பையும் பின்புலவண்ணத்தின் மதிப்பையும் அறிந்து கொள்க அதன்பின்னர் அவைகளின் ஒளிர்வின் அளவை அறிந்து கொள்க இறுதியாக அந்த இணையபக்கத்தின் தெளிவுதிறன் விகிதத்தைகணக்கிடுக
அதாவது முதலில் வண்ணத்தின்மதிப்பைஅறிந்து கொள்வதற்காக Zenity எனும் கருவி பயன்படுகின்றது இது வண்ணத்தின் மதிப்பினை “rgb(R,G,B)”என்றவடிவமைப்பில் கிடைக்கச்செய்கின்றது
color=$( zenity –title ‘Set text color’ –color-selection –color=’black’ )
எனும் கட்டளைவரியின்வாயிலாக வண்ணத்தின் மதிப்பை எளிதாக பெறலாம்
இந்நிலையில் பயனாளர் கைதவறுதலாக Cancel எனும் பொத்தானை அழுத்தியிருந்தால் பின்வருமாறு எடுத்து கொள்ளும்
if [ $? -ne 0 ] ; then

echo ‘** color canceled .. assume black’
color=’rgb(0,0,0)’
fi
அடுத்து வண்ணங்களின் தொடர்புடைய ஒளிர்வு தன்மையை அறிந்து கொள்ள W3C ஆனது
L = 0.2126 * R + 0.7152 * G + 0.0722 * B எனும்அல்காரிதம்களை வழங்கியுள்ளது இதில்
if RsRGB <= 0.03928 then R = RsRGB/12.92
else R = ((RsRGB+0.055)/1.055) ^ 2.4
if GsRGB <= 0.03928 then G = GsRGB/12.92
else G = ((GsRGB+0.055)/1.055) ^ 2.4
if BsRGB <= 0.03928 then B = BsRGB/12.92
else B = ((BsRGB+0.055)/1.055) ^ 2.4
and RsRGB, GsRGB, and BsRGB are defined as:
RsRGB = R8bit/255
GsRGB = G8bit/255
BsRGB = B8bit/255
என்றவாறு R, G , B ஆகியவற்றை வரையறுக்கின்றது இதனை தொடர்ந்து Zenity எனும் கருவி யானது வண்ணத்தின் மதிப்பினை
R=$( echo $color | awk -F, '{print substr($1,5)}' )
G=$( echo $color | awk -F, '{print $2}' )
B=$( echo $color | awk -F, '{n=length($3); print substr($3,1,n-1)}' )
என்றவாறு "rgb(R,G,B)"என்றவடிவமைப்பில் கிடைக்கசெய்கின்றது
அதனை தொர்ந்து
echo "scale=4
rsrgb=$R/255
gsrgb=$G/255
bsrgb=$B/255
if ( rsrgb <= 0.03928 ) r = rsrgb/12.92 else r = e( 2.4 * l((rsrgb+0.055)/1.055) )
if ( gsrgb <= 0.03928 ) g = gsrgb/12.92 else g = e( 2.4 * l((gsrgb+0.055)/1.055) )
if ( bsrgb $r2 ) { l1=$r1; l2=$r2 } else { l1=$r2; l2=$r1 }
(l1 + 0.05) / (l2 + 0.05)” | bc
இம்மூன்றும் இணைந்த இறுதியான குறிமுறைவரிகள் பின்வருமாறு

#!/bin/sh
# வண்ணங்களின் தெளிவுதிறன் விகிதத்தினை கணக்கிடுவதற்கான குறிமுறைவரிகள்
# வண்ணத்தையும் பின்புல வண்ணத்தையும் படித்திடுக:
# zenity ஆனது மதிப்புகளை ‘rgb(255,140,0)’ , ‘rgb(255,255,255)’ என்றவாறு வெளியீடுசெய்திடும்
color=$( zenity –title ‘Set text color’ –color-selection –color=’black’ )
if [ $? -ne 0 ] ; then
echo ‘** color canceled .. assume black’
color=’rgb(0,0,0)’
fi
background=$( zenity –title ‘Set background color’ –color-selection –color=’white’ )
if [ $? -ne 0 ] ; then
echo ‘** background canceled .. assume white’
background=’rgb(255,255,255)’
fi
# தொடர்புடைய ஒளிர்வுதன்மையை கணக்கிடுக:
function luminance()
{
R=$( echo $1 | awk -F, ‘{print substr($1,5)}’ )
G=$( echo $1 | awk -F, ‘{print $2}’ )
B=$( echo $1 | awk -F, ‘{n=length($3); print substr($3,1,n-1)}’ )
echo “scale=4
rsrgb=$R/255
gsrgb=$G/255
bsrgb=$B/255
if ( rsrgb <= 0.03928 ) r = rsrgb/12.92 else r = e( 2.4 * l((rsrgb+0.055)/1.055) )
if ( gsrgb <= 0.03928 ) g = gsrgb/12.92 else g = e( 2.4 * l((gsrgb+0.055)/1.055) )
if ( bsrgb $2 ) { l1=$1; l2=$2 } else { l1=$2; l2=$1 }
(l1 + 0.05) / (l2 + 0.05)” | bc
}
rel=$( contrast $lum1 $lum2 )
# வரும் முடிவுகளை அச்சிடுக
( cat<<EOF
இங்கு வண்ணமானது $color எனவும் பின்புல வண்ணம் $backgroundஎனவும் குறிக்கப்பெறும்
தெளிவு (Contrast)விகிதம் ஆனது $rel ஆகும்
தெளிவுவிகிதமானது 1 முதல் 21 வரை (பொதுவாக 1:1 முதல் 21:1 வரை என குறிப்பிடப்படும்).
EOF
if [ ${rel%.*} -ge 4 ] ; then
echo "Ok for body text"
else
echo "Not good for body text"
fi
if [ ${rel%.*} -ge 3 ] ; then
echo "Ok for title text"
else
echo "Not good for title text"
fi
cat<<EOF
இதனை தொடர்ந்து Zenity எனும் கருவி யானது இணையபக்கத்தின் தெளிவுதிறன் விகிதத்தினை திரையில்பிரதிபலிக்கசெய்திடும் அதனடிப்படையில் நம்முடைய இணையபக்கத்தின் தெளிவுதிறன் விகிதத்தினை அறிந்து கொண்டு பார்வையாளர்களால் படித்தறிவதற்கேற்ற பொருத்தமான தெளிவுதிறனை அமைத்துகொள்க மேலும் பொதுவாக நம்முடைய நிறுவனத்தின் லோகோவை இணையபக்கங்களில்
EOF
) | zenity –text-info –title='Relative Luminance' –width=800 –height=600
என்றவாறு அமைத்து கொள்வது நல்லதுஎன பரிந்துரைக்கப்படுகின்றது

மீப்பெரும் தரவுகள் ஒரு அறிமுகம்

நுண்ணறிவு, போக்குகள், தொடர்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தவும் குறிப்பாக மனித நடத்தையையும் அவர்களுடனான இடைமுகப்பு தொடர்பாகவும் இந்தமீப்பெரும் தரவுத் தொகுப்புகளின் வாயிலாக மிகஎளிதாக கணிப்பாய்வு செய்யலாம்,
தொழில்துறை ஆய்வாளரான Doug Laney என்பவர் Gartner என்பவருடன் சேர்ந்து தொகுதி(volume) , வேகம் (velocity) , வகைகள் (variety) ஆகிய மூன்று பெரிய Vs சேர்ந்ததே இன்றைய முக்கிய மீப்பெரும் தரவுகளின் வலிமையாகும் என்ற வரையறையை வெளிப்படுத்தியுள்ளார்.மேலும் இவை மாறிலியாகவும்(Variability), சிக்கலானதாகவும்(Complexity) இருக்கும்என்று கூறுகின்றார்
, ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களின் வாடிக்கையாளர் நடத்தை, முன்னுரிமை ,பொருள் உற்பத்திமீதான கருத்து ஆகியவற்றின் முன்னோடியில்லாத காட்சியை பெறுவதன் அடிப்படையில் நுகர்வோர் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் சில்லறை நிறுவனங்கள் கட்டுபடுத்தப்படும் .
உற்பத்தி நிறுவனங்கள் தங்களுடைய இயந்திரங்களை பராமரித்திடும்போது சரியாக முன்கணிப்பு செய்திடாமல் அடிக்கடி உதிரிபாகங்களை மாற்றுவதால் அதிக செலவாகும் அவ்வாறு அதிக செலவாகின்றதே என நீண்டகாலத்திற்கு மாற்றிமைத்திடாமல் இருந்தால் இயந்திரங்கள் பழுதடைந்து நின்று அதனால் பொருள் உற்பத்தி பாதிக்கப்பட்ட அதிக நட்டமேற்பட வாய்ப்பாகும் இதனை தவிர்க்கஇயந்திரங்களின் இயக்கஅதிர்வு சரியாக ஆய்வுசெய்வுசெய்து மிகச்சரியான நேரத்தில் மிகச்சரியான செலவில் உதிரிபாகங்களை மாற்றியமைப்பதற்கு இந்த மீப்பெரும்தரவு ஆய்வு அத்தியாவசிய தேவையாகும்
உற்பத்தியாளர்கள் சமுதாய இணையத்திலேயே மிகவித்தியாசமாக விற்பணைக்கு பிந்தைய சேவைக்கான ஆதரவுகுறித்து ம் உத்திரவாதம் குறித்தும் வாடிக்கையாளரின் தொடர்பை பராமரித்துவருவதற்காக இந்த மீப்பெரும்தரவு ஆய்வு அத்தியாவசிய தேவையாகும்
நிதிநிறுவனங்கள் பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வை அவர்களின் தேவைக்கேற்ப உதவதயாராக இருக்கும் திட்டங்களை அதனால் ஏற்படும் பயன்பாடுகளை சமூகபாதுகாப்புவிவரங்களை அறியச்செய்து அதன் வாயிலாக அவர்களை நிதிநிறுவனங்களிடமிருந்து நிதிஉதவி பெறுவதற்கான வாய்ப்புகளை தூண்டிவிடுவதற்கு இந்த மீப்பெரும் தரவு ஆய்வு அத்தியாவசிய தேவையாகும்
பொருட்களை சந்தைபடுத்திடும் விளம்பரபடுத்திடும் முகமைகள் சமுதாய இணையதளங்களில் மக்களின் இரசனையையும் போக்குகளையும் அறிந்து அவரவர்களுக்கு ஏற்ற வாறான விளம்பரங்களை அவர்கள் முன்கொண்டு சேர்த்திட இந்த மீப்பெரும் தரவு ஆய்வு அத்தியாவசிய தேவையாகும்
காப்பீட்டு நிறுவனங்களின் இந்த மீப்பெரும் தரவு ஆய்வின் அடிப்படையில் எந்தெந்த வீட்டு உபயோகப்பொருட்கள் எந்தெந்தவகையான காப்பீடு யார்யாருக்கு தேவையென தெரிந்து செயல்படுத்திட உதவுகின்றது

பைத்தான் கணினிமொழியின் உதவியுடன் கோப்புகளைதானாகவே பிற்காப்பு செய்திட முடியும்

நாம் ஏதாவது முக்கியமான கூட்டத்திற்கான படவில்லை காட்சியை தயார்செய்து முடிவுபெறும் நிலையில் ஆழ்ந்து ஈடுபாட்டுடன் பணிபுரிந்து கொண்டிருப்போம் அல்லது அந்த கூட்டத்திற்கான அறிக்கையை தயார்செய்து கொண்டிருப்பதில் ஆழ்ந்திருப்போம் இவ்வாறான நிலையில் திடீரெனகைதவறுதலாக அல்லது ஏதோவொரு காரணத்தினால் அவ்வாறு தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் கோப்பானது அழிந்து போய்விட்டது எனில் இவ்வளவுநேரம் கடினமாக உழைத்து தயார்செய்த கோப்பினை எவ்வாறு மீண்டும் உருவாக்குவது அல்லது மீட்டெடுப்பது ,அடுத்து என்ன செய்வது என நாம் திகைப்புற்று அப்படியே மலைத்து போய் உட்கார்ந்திடுவோம் அஞ்சற்க அவ்வாறான நிலையில் கைகொடுக்க வருவதுதான் பைத்தான் எனும் கணினிமொழியாகும் .இதன் மூலம் நாமே முயன்று பிற்காப்பு செய்திடுவதற்கான பைத்தான் நிரல்தொடரை உருவாக்கி பயன்படுத்தி கொள்ளலாம் இதற்காக நம்மிடம் விண்டோ இயக்கமுறைமையில் செயல்படும் பைத்தான் 2 அல்லது பைத்தான் 3 பதிப்புள்ள கணினிமொழி இருந்தால் போதும் இந்த பயன்பாட்டிற்கு sync.py என்றவாறு பெயரிட்டுகொள்க Sync1.ini: என்பது கட்டமைவு கோப்பாகும் Logger1.py: என்பது Logger ஆதரவிற்கான தொகுதியாகும் Sync.log என்பது sync.py ஆல் உருவாக்கப்பட்ட ஒருகோப்பாகும்
இதில் பயன்படுத்தி கொள்வதற்காக Import configparser.
Import time.
Import shutil.
Import hashlib.
From the distutils.dir_util import copy_tree.
From the collections, import OrderedDict.
Import the OS.
Import logger1 as log1.
எனும் கட்டளைவரிகளின் வாயிலாக தேவையான நூலகங்களை பதிவிறக்கம் செய்து கொள்க
அதனை தொடர்ந்து
def ConfRead():
config = configparser.ConfigParser()
config.read(“Sync1.ini”)
return (dict(config.items(“Para”)))
எனும் குறிமுறைவரிகளை செயற்படுத்திடுக இவை Sync1.ini எனும் கோப்பினை படித்தறிகின்றன
Sync.ini எனும் கோப்பிலிருந்து பின்வரும் குறிமுறைவரிகள் ஒருசில மாறிகள் பெறப்படுகின்றன
All_Config = ConfRead()
Freq = int(All_Config.get(“freq”))*60
Total_time = int(All_Config.get(“total_time”))*60
repeat = int(Total_time/Freq)
கோப்பின் புலத்தை கணக்கிட பின்வரும் md5எனும்செயலி பயன்படுத்தப்படுகிறது. நாம் ஒரு கோப்பினை மாற்றினால், அதனுடைய பெயர் ஒரே மாதிரியாகவே இருக்கும், ஆனால்அதனுடைய ஹாஷ் மட்டும் மாறியமையும்.
def md5(fname,size=4096):
hash_md5 = hashlib.md5()
with open(fname, “rb”) as f:
for chunk in iter(lambda: f.read(size), b””):
hash_md5.update(chunk)
return hash_md5.hexdigest()
பின்வரும் செயலி இடைப்பட்டிகளுடன் முழு அடைவையும் நகலெடுக்கின்றது:
def CopyDir(from1, to):
copy_tree(from1, to)
பின்வரும் செயலி தேவையான இடத்தில்ஒரு கோப்பினை நகல்மட்டும் எடுக்கின்றது
def CopyFiles(file, path_to_copy):
shutil.copy(file,path_to_copy)
பின்வரும் செயலியானது ஒரு அகராதியை உருவாக்குகிறது, இது கோப்புகளின் புலத்துடன் கோப்பு பெயர்களைக் கொண்டுள்ளது. இந்த செயலியானது மூல இருப்பிடத்தை எடுநகலெடுத்து தற்போதுகைவசமுள்ள எல்லா கோப்புகளின் அகராதியை உருவாக்குகின்றது:
def OriginalFiles():
drive = All_Config.get(“from”)
Files_Dict = OrderedDict()
print (drive)
for root, dir, files in os.walk(drive, topdown=True):
for file in files:
file = file.lower()
file_path = root+’\\’+file
try:
hash1 = md5(file_path,size=4096)
#modification_time = int(os.path.getmtime(file_path))
rel_path = file_path.strip(drive)
Files_Dict[(hash1,rel_path)]= file_path
except Exception as e :
log1.logger.error(‘Error Original files: {0}’.format(e))
return Files_Dict
பின்வரும் செயலி ஒரு hash உடன் கூடி கோப்புகளின் பெயர்களைக் கொண்ட அகராதிஒன்றினஐ உருவாக்குகிறது. மேலும் இந்த செயலியானது நகலெடுக்கவிரும்பும இலக்கு இடத்தில் அனைத்து தற்போதைய கோப்புகளுடன் ஒரு அகராதியை உருவாக்குகின்றது.மேலும் இவ்வாறான செயலின்போது மூல கோப்புறை இல்லையென்றால், அது CopyDir எனும் செயலியை அழைக்கின்றது.
def Destination():
Files_Dict = OrderedDict()
from1 = All_Config.get(“from”)
to= All_Config.get(“to”)
dir1= from1.rsplit(“\\”,1)[1]
drive = to+dir1
#print (drive)
try:
if os.path.isdir(drive):
for root, dir, files in os.walk(drive, topdown=True):
for file in files:
file = file.lower()
file_path = root+’\\’+file
try:
hash1 = md5(file_path,size=4096)
#modification_time = int(os.path.getmtime(file_path))
rel_path = file_path.strip(drive)
Files_Dict[(hash1,rel_path)]= file_path
except Exception as e :
log1.logger.error(‘Error Destination foor loop: {0}’.format(e))
return Files_Dict
else :
CopyDir(from1,drive)
log1.logger.info(‘Full folder: {0} copied’.format(from1))
return None
except Exception as e :
log1.logger.error(‘Error Destination: {0}’.format(e))
கோப்பகத்துடன் கோப்பினை உருவாக்க பின்வரும் படத்திலுள்ளவாறான செயலி வரையறுக்கின்றது

கோப்பினைமட்டும் உருவாக்க பின்வரும் படத்திலுள்ளவாறான செயலி வரையறுக்கின்றது

இருசெயலிகளிலும் பின்வரும்குறிமுறைவரிகள் உண்மையான கோப்பினையும் நகலெடுக்கப்பட்ட கோப்பினை ஒப்பிட்டு சரிபார்த்திடுகின்றது ஏதேனும் மாறுதல்கள் இருந்தால உண்மை கோப்பில் உள்ளவாறு நகல்கோப்பில் மாறுதல்கள் செய்திடுகின்றது
def LogicCompare():
from1 = All_Config.get(“from”)
to= All_Config.get(“to”)
Dest_dict = Destination()
if Dest_dict:
Source_dict = OriginalFiles()
remaining_files = set(Source_dict.keys())- set(Dest_dict.keys())
remaining_files= [Source_dict.get(k) for k in remaining_files]
for file_path in remaining_files:
try:
log1.logger.info(‘File: {0}’.format(file_path))
dir, file = file_path.rsplit(“\\”,1)
rel_dir = from1.rsplit(“\\”,1)[1]
rel_dir1 = dir.replace(from1,””)
dest_dir = to+rel_dir+”\\”+rel_dir1
if not os.path.isdir(dest_dir):
os.makedirs(dest_dir)
CopyFiles(file_path, dest_dir)
except Exception as e:
log1.logger.error(‘Error LogicCompare: {0}’.format(e))
பின்வரும் குறிமுறைவரிகள் அதே செயல்களை திரும்பு செய்து கொண்டே இருக்குமாறு செய்கின்றது
= 0
while True:
if i >= repeat:
break
LogicCompare()
time.sleep(Freq)
i = i +1
Let us see the content of file Sync1.ini
[Para]
From = K:\testing1
To = E:\
Freq = 1
Total_time = 5
அதைவிட பின்வரும் குறிமுறைவரி மிகஎளியதாக NFO modeஎனும் நிலையில் செயல்படுமாறு செய்யப்பட்டுள்ளது
import logging
logger = logging.getLogger(“Mohit”)
logger.setLevel(logging.INFO)
fh = logging.FileHandler(“Sync.log”)
formatter = logging.Formatter(‘%(asctime)s – %(levelname)s – %(message)s’)
fh.setFormatter(formatter)
logger.addHandler(fh)
இடைநிலையாளர்வாயிலாக இந்த குறிமுறைவரிகளை செயல்படுத்திடுவதற்கு பதிலாக exe கோப்பாக மாற்றி எளிதாக செயல்படுத்திகொள்ளலாம் அல்லவா அதற்காக pyinstaller.என்பது பயன்படுகின்றது இது ஏற்கனவேநிறுவுகை செய்யப்பட்டுள்ளது
பின்வரும் படத்திலுள்ளவாறான கட்டளைவரிகள் இதனை செயற்படுத்திடுகின்றது

இதன்பின்னர் dist எனும் கோப்பகத்தில இதற்கான exe கோப்பு நாம் பயன்படுத்திகொள்வதற்கு தயாராக இருக்கின்றது இதன்பிறகு இதனை செயல்படுத்தி கோப்புகளை பிற்காப்பு செய்திட பயன்படுத்தி கொள்க

சைபர் குற்றவாளிகளை எளிதாக கண்டறிய முடியுமா

சைபர் குற்றவாளிகள் தற்போது பல்வேறு வழிகளில் நம்முடைய சாதனங்களில் தங்களுடைய தீங்கிழைக்கும் தரவுகளை கொண்டுவந்து சேர்த்து தங்களுடைய கைவரிசைகளைநாம் எதிர்பார்த்திடாத பல்வேறு விளைவுகளை இக்கட்டான சூழ்நிலைகளை நமக்கு ஏற்படுத்திடுகின்றனர். இவ்வாறான நாம் கண்ணால் நேரடியாக காட்சியாக காணமுடியாதவாறு ஆவணங்களில் ,கானொளிகாட்சிகளில் ,உருவப்படங்களில் மால்வேர்களாக மறைத்து வைத்திடுவதையே Steganography என அழைப்பர் .அதனடிப்படையில்
Android/Twitoor என்பதுகுறுஞ்செய்திவாயிலாக அல்லது தீங்கிழைக்கும் இணைய முகவரிவாயிலாக தேவையற்ற செயலிகளைஅல்லது தந்திரங்களை நாமறியாமலேயேநம்முடைய கருவிகளில் இவை நிறுவுகை செய்துவிடுகின்றது
Cerber ransomware என்பது கோப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதன்வாயிலாக பரவச்செய்து குறிப்பிட்ட கோப்பினை திறந்து பயன்படுத்திடும்போது தானாகவே சாதனங்களில் நிறுவுகை செய்து கொள்ளும் திறன்மிக்கது
அவ்வாறே Stegano/Astrum exploit kit என்பது விளம்பர படங்களுக்கு பின்புலத்தில் தீங்கிழைக்கும் குறிமுறைவரிகள் நிறுவுகை செய்து பாதிப்பினை ஏற்படுத்திடுகின்றது
இவைகளைவிட தற்போதைய புதிய நவீண கால சூழலிற்கு ஏற்ப பொருட்களுக்கான இணையத்துடன்(Internet of Things (IoT)) இணைந்த பொருட்களிலும் தங்களுடைய கைவரிசைகளை காட்டமுனைந்துள்ளனர்
தற்போது இவ்வாறான தீங்கிழைக்கும் தகவல்களை மறைக்கும் தொழில்நுட்பங்கள் மெதுவாக “சாதாரண” மால்வேர்களுக்கான நடைமுறைத் தரமாக மாறி வருகின்றன.
இணையத்தின்மின் வணிக தளத்தில் Magento தொடர்பான பெரிய அளவிலான தாக்குதல்கள் கடனட்டை விவரங்களை மறைக்க image steganography பயன்படுத்துவதை வெளிப்படுத்தியது. அவ்வாறான தளங்கள் பாதிக்கப்பட்டவுடன், மால்வேரானது பண விவரங்களை சேகரித்து, பாதிக்கப்பட்ட மின்வணிக(e- commerce) தளத்தில் கிடைக்கும் உண்மையான தயாரிப்புகளின் படங்களை உள்ளே மறைத்து வைத்து விடுகின்றது.
இவ்வாறு கண்ணால் காணமுடியாத மறையாக்கத்தைகொண்டு மறைக்கப்பட்ட தரவுகளை கண்டுபிடிப்பது என்பது குவித்துவைக்கப்பட்ட வைக்கோல்போரில் குண்டூசியை தேடுவதற்கு ஒப்பான செயலாகும் அதனால் அனைவரும் எந்தவொரு சிறு செயலாக இருந்தாலும் மிகஎச்சரிக்கையுடன் செயல்படுத்தி கொள்க என எச்சரிக்கபபடுகின்றது

Previous Older Entries