பயாஸை பற்றிய சில உண்மைகள்

பயாஸை பற்றிய சில உண்மைகள்

       பயாஸ் (BIOS)என்றால் என்ன?

        Basic input output System என்பதையே சுருக்கமாக பயாஸ்(BIOS) என அழைக்கின்றனர். பொதுவாக ஒவ்வொரு கணினியும்  இயங்கஆரம்பிக்கும்போது முதலில் அதனுடைய அனைத்து உள்உறுப்புகளின் திறன் அதன் தற்போதைய நிலை போன்றவற்றை தனக்குதானே சரிபார்த்துக் கொள்ளும்.இச்செயலை Power on Self & Test என்றும் சுருக்கமாக Post என அழைப்பர். பின்னர் கணினியில்  கருமையான திரை ஒன்று தோன்றி கணினியின் பாகங்களான தாய்ப்பலகை (Mother board),நினைவகம்(Memory)    ஆகியவற்றை பற்றிய  மிகமுக்கிய அத்தியாவசியமான தகவல்களை  திரையில் காண்பிக்கும்.   இந்த சமயத்தில் விசைப்பலகையில் Del அல்லது F2 விசையை தட்டினால் பயாஸ் அமைப்பு நீலவண்ணத்திரையாக மாற்றி காண்பிக்கும், இந்த பயாஸ்(BIOS)தான் கணினி இயக்கத்தின் போது  வன்பொருளை (hardware) மென் பொருளுடன் (Software) ஒத்தியங்குகிறதா என ஒப்பிட்டுபார்த்து  சரியாக இருந்தால் மட்டும் இயக்கமுறைமையை(Operating System)  இயக்க அனுமதிக்கும்.இதனை மேம்படுத்தி நிகழ் நிலைப்படுத்தும் (upgradable) மென் பொருட்களை இதில்  முன் கூட்டியே அதன் உற்பத்தியாளர்களால் நிறுவப்பட்டுள்ளன.

        ஒரு கணிப் பொறி இயங்குவதற்கு முன்பு இந்த பயாஸ் ஆனதுஅதில் ஒரு இயக்க முறைமையை (Operating System (OS)) இயங்குவதற்கு வேண்டிய ஒரு சில அடிப்படை செயல்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்கிறது.  இந்த ஆரம்ப பணிகளை இயக்கமுறைமையானது(Operating System (OS)) தானாக செய்து கொள்ளாது Post செயல்,சவுன்கார்டு, USB வழித்தடம், நுழைவாயில் (Ports) ,கட்டுப்பாடுகள் (Control), தரவுகளை தேக்கும்சாதணங்கள் (Storage Device) போன்றவைகள் ஒரு கணினியில் சரியான நிலையில் இருக்கிறதா என பயாஸானது முதலில் பரிசோதிக்கிறது. இந்த அடிப்படை பணிமுடிந்து இவைகளனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே இயக்கமுறைமையை(Operating System (OS)) இயங்க பயாஸ்அனுமதிக்கிறது

1.     காத்திருமுறைமை (Standby mode)

  நம்முடைய கணினி இயக்கத்தின் காத்திருமுறைமையை மூன்று நிலைகளில் பராமரிக்கலாம் S0 என்பது செயல்படும் சாளர குழல் ஆகும் S1 மற்றும் S3 ஆகியவை மின்சேமிப்பு நிலையாகும், இயல்பு நிலையில் பயாஸ் ஆனதுS1 நிலையில் இருக்கும்படி அமைத்திருப்பார்கள் இந்த நிலையில் கணினி  செயல்படும் வேகம் S3 யை விட அதிகமாகும் ஆனால் S3யை விட 50% மின்சாரம் அதிகமாக பயன்படுத்திக் கொள்ளும்.

  இந்த S3  நிலையில் செயல்படவேண்டிய முக்கிய  பதிவேடுகளின் இயக்கத்தை தற்காலிமாக நிறுத்திவைக்கிறது அதனால் குறைந்த அளவு மின்சாரமே உபயோகபடுதப்படுகிறது.

   ஆனால் இந்த S3 நிலைக்கு உங்கள் கணினியை மாற்றுவதற்கு விரும்பினால் அதற்கு முன்பு உங்கள் தாய்ப்பலகை (Mother board) இந்த நிலையை கையாளும் தன்மையுடையதாக இருக்கிறதாவென பரிசோதித்து பார்க்கவும் அவ்வாறு இல்லையெனில் S1 நிலையையே தொடர்ந்து  பராமரிக்கவும்.

2.     வேகமான தொடக்க இயக்கம் (Faster Booting)

      கணினியின் தொடக்கஇயக்கத்தின்போது உள்ளுறுப்புகளை, இயக்ககங்களை((Drives) பரிசோதித்து நினைவகத்தில் ஏற்றும் செயல்களை தாண்டிசெல்லும் (  By Pass) அமைப்பை இயலும் (Enabled) என அமைப்பதன் மூலம்  காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

3.     வளங்களை திறனுடன் பயன்படுத்துதல் (Effective usage of Resources)

        தாய்ப்பலகையுடன் (Mother board) கூடுதலான இயக்கக கட்டுப்பாடுகளை (Drive controller) அமைப்பதன் மூலம் S-ATA, P-ATA போன்ற நுழைவு வாய்ப்புகள் அமைக்கப்பட்டு கூடுதலான பயன் கிடைக்கும்படி செய்யப்படுகிறது,

        இந்த கூடுதல் வசதி தேவையில்லையெனில் இதனை பயன்படுத்தவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு.இவைகளின் இணைப்பை துண்டிக்கச் செய்வது நல்லது அதனால் தொடக்க காத்திருப்பு நேரம் குறைவதற்கு வாய்ப்புள்ளது. 

4.     கணினியை தானாக தொடங்க செய்வது (Starting PC Automatically)

  ஒரு கடிகாரத்தில் அலாரம் அடிப்பதற்கான நேரத்தை அமைத்து விடியற்காலையில் நாம் கண்விழித்தெழுவதை போன்று கணினியும் மீண்டும் எப்போது இயங்கத் தொடங்க வேண்டும் என நேரம் அமைத்துவிட்டால் தானாகவே கணினியானது குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்கத் தொடங்கும் இது Stand by mode லிருந்து தொடங்குவது அன்று கணினி இயக்கத்தை நிறுத்திய பிறகும் தானாகவே இயங்கத் தொடங்குவதுஆகும் என்பதை மனதில்கொள்ளுங்கள்,

5.     வளாக இணைப்பு பரிசோதிப்பை இயங்காதிருக்க செய்தல் (Deactivating  LAN Check)

  சில கணினிகள் இணைய இணைப்பு மற்றும் வளாக இணைப்புடன் இருக்கும் அந்த நிலையில் கணினி இயங்க தொடங்குபோது இணைய இணைப்பு வளாக இணைப்பு ஆகியவற்றின் சாதனங்கள் அதற்கான வாயில்களுடன் மிகச்சரியாக பொறுத்தப்பட்டுள்ளதா என பரிசோதிக்கும் சரியாக இல்லையெனில் அடுத்த செயலுக்கான கட்டளை வரும்வரை அப்படியே இயங்காமல் காத்திருக்கும் இந்த இணைப்புகள் இல்லாத நிலையில் இதற்கான சாதனங்களை பரிசோதிக்கும் செயலை இயங்காதிருக்க(Deactive) செய்வது நல்லது.

6.     தொடக்க வரிசைகிரமத்தை போதுமானதாக செய்க (Boot Sequence optimization)

        பயாஸ் ஆனது வன்தட்டு (Hard Disc)நெகிழ்வடடு Floby Disc குறுவட்டு CD or DVD அல்லது வலை இணைப்பு Net work போன்ற எந்த இயக்ககத்திலிருந்து வேணடுமானாலும் தொடங்கும்படியான வாய்ப்பை அறவே நீக்கிவிடுக, அதற்குபதிலாக Hard Disc முதலிலும் அதன்பிறகு CD or DVD யும் அதன்பிறகே Net work லும் என்றவாறான  வரிசைகிரமத்தில் இயங்க தொடங்க வேண்டும் என அமைத்து  கால விரையத்தை தவிர்த்திடுங்கள்

7.     வன்தட்டு இயக்ககததை அமைவு செய்தல் (Configuare S-ATA hard drives)

புதிய தாய்ப்பலகை (Mother board)கள் ஒரு S-ATA வை ஆதரித்தால் மட்டும S-ATA வன்தட்டு இயக்கக அமைவை பயன்படுத்தலாம். இதில் மூன்று வகையான இயக்க முறைகள் உள்ளன,

1.     IDE யின் நிலை (இது முந்தைய P-ATA வுக்கானது).

2.     உயர்திறன் AHC1 நிலை (இது இரண்டாவது தலைமுறை S-ATA வுக்கானது.)

3.     மிக வேகமான பாதுகாப்பான RAID தொழில்நுட்ப நிலை.

        பொதுவாக புதிய கணினிகளில் உள்ள இயல்புநிலை IDE யை இதனுடைய திறன் ஒரு பொருட்டாக இல்லையெனினும் அப்படியே விட்டுவிடுவது நல்லது. ஆயினும் இரண்டு வன்தட்டுகளை (Hard Drive) பயன்படுத்துவதால் RAID 0 தொழிலநுட்ப நிலை.யை பயன்படுத்துவது நல்லது. தரவுகள் இரண்டுஇடங்களில் பராமரிக்கவேண்டுமெனில் RAID 1 ஐ பயன்படுத்துங்கள். ஆயினும் சாளரத்தை நிறுவுமுன் உற்பத்தியாளரால் வழங்கப்பட்ட தாய்ப்பலகை (Mother board)இயக்ககத்தை நிறுவுக.

8.     ஆபத்து நிலையில் பயாஸிற்கு புகலிடம். (Resort to BIOS for rescue)

        கணினியில்உள்ள வன்பொருளின் உறுப்புகளில் அதிகப்படியான மாறுதல் ஏதேனும் செய்திருந்தால் பயாஸ் ஆனது கணினியின் தொடக்கத்தை மறுத்து (தடுத்து) நிறுத்திவிடும். இவ்வாறான நேரத்தில் உடனடியாக கணினிக்கு வரும் மின் தொடர்பை துண்டித்துவிடுங்கள். பின்னர் மின்தொடர்பிற்கு உதவும் மின்கம்பியை பொருத்துவாயிலிருந்து கழட்டிவிடுங்கள். தட்டையான வட்டவடிவமான  மையசெயலகத்தின் மின்கலண்களை (CPU Cell) கழட்டி 60 செகண்டு கழித்து மீண்டும் பொறுத்துக. இவ்வாறு செய்வதால் பயாஸ் அமைவை இயல்பு நிலைக்கு கொண்டு சேர்த்துவிடும்.

 9.    மையசெயலகத்தின் சுழற்சி இயக்கத்தை தானாகவே ஒழுங்குபடுத்துதல்(Automatic Regulation of the CPU Cycle)

Intel and AMD ஆல் உருவாக்கப்பட்ட தாய்ப்பலகையின்((motherboard)  கடிகார வேகத்தை மையசெயலகம் ஆனது  சும்மா இருக்கும் நிலையில் குறைத்து அமைப்பது மையசெயலகத்தின்  மின்நுகர்வும், வெப்ப உற்பத்தியும் குறைத்துவிடும். அதனால் குறைந்த அளவு மின்சாரத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளும்,, இதற்காக AMD தாய்ப்பலகை (Mother board)எனில் Auto என்றும் Intel தாய்ப்பலகை (Mother board)எனில்  enabled என்றும் அமைத்திடுக்.

10.   மையசெயலகத்தின் (CPU) இயக்கத்தை நாமே அமைக்கலாம்,

        மையசெயலகத்தின் (CPU) கடிகார வேகத்தின் பெருக்குதல் காரணியை 9லிருந்து 6 ஆக குறைத்தால் (உதாரணமாக இண்டல் கோர் 2Duo & 4300 ஆனது 200Mzhs x 9 =1800 Mzhs என இருப்பதை 6 ஆக குறைப்பது) வேகத்தை பத்து சதவிகிதம் மட்டும் கூடுதலாக செய்து. பெருக்குதல் காரணியான FSB யை கூடுதலாக்காமலேயே குறைந்த கடிகார வேகத்தில் இயங்கும்படியும் குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தும்படியும் மாற்றியமைக்க முடியும். ஆயினும் தானியங்கு அமைப்பை அப்படியே விட்டுவிடுவது மிகப்பாதுகாப்பானது.

11.   மின்விசிறியை தானாக இயங்குமாறு அமைத்தல்(Automatic Regulated Fans)

        மையசெயலகத்தில் (CPU) ஏற்படும் வெப்பத்தை தணிப்பதற்கான மினிவிசிறியை Enable அல்லது Auto என தக்கவாறு அமைப்பது நல்லது. சில மையசெயலகத்துடன் (CPU) இருக்கும் மினிவிசிறிகளின் இயங்கு திறனை (Performance ) 1முழுதிறனுடன் (full Performance ) அதிக வேகத்துடன் இயங்குவது, 2 போதுமான அளவிற்கு மட்டும் இயங்குவது(Optimization)  3 குறைந்த அளவு மட்டும் இயங்குவது (Silent) என மூன்று வாய்ப்புகளில் வைத்திருப்பார்கள். நாம் விரும்பியவாறு மையசெயலகத்தினுடையCPU  விசிறியின் வேகத்தை மாற்றி அமைக்கலாம். எச்சரிக்கை நாம் எந்த வாய்ப்பை தோர்ந்தெடுக்கின்றோமோ அதற்கேற்றவாறு மின் நுகர்வும் இருக்கும்.

12.   நினைவகத்தை அதிவேகமாக்குதல்(Memory Over Clocking)

        RAM நினைவகத்தை போதுமான அளவு நினைவக கட்டுப்பாடு பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக சில உள்ளுறை சுனக்க மதிப்பை (Latency value) பராமரிக்க வேண்டும். இவைகள் சாதாரணமாக நெடுவரிசையின் முகவரிநேர சமிக்சையை (Column Address Stroke  சுருக்கமாக CAS) கடிகார இயக்க சுழற்சியில் குறிப்பிடுவார்கள். இந்த சமயத்தில் உண்மையில RAM Latency யை தாய்ப்பலகையானது (Mother board) பயன்படுத்திகொள்ளாது. உதாரணமாக RAM on Latency WWW-12 என்பது 555-15 என இயல்பு நிலையில் தாய்ப்பலகை (Mother board) ஆதரிக்கும்.

        இதனை நாமே நினைவக கடிகார வேகத்தை உண்மை நிலையைவிட குறைவாக அமைப்பது RAM ன் திறனை உயர்த்த உதவுகிறது. அதிகபட்சமாக ஒவ்வொன்றும் ஒரு கடிகார சுற்று அளவிற்கு  குறையாமல்இருந்தால் நல்லது. இதனை ஒரு தாய்ப்பலகை (Mother board) ஏற்றுக்கொண்டால் கணினி இயங்க ஆரம்பிக்கும். இல்லையெனில் BIOS-ல் இதனை மறு அமைவு செய்ய வேண்டும். சாளரத்தில் (Window) இதன் மதிப்பை பரிசோதிக்க CPU-3 என்ற  கருவியை பயன்படுத்தி கொள்ளவும்.

13.   கடிகார சுற்று பொது(Clock Gen)

இதனை இயலுமை (Enable) செய்வதால் பயனாளர் மையசெயலகத்தின் (CPU) கடிகார வேகத்தை PLLControl வாய்ப்பிலிருந்து FSB மற்றும் RAM துணையுடன் மாற்றி அமைக்க முடியும். ஆனால் இது சிறிது ஆபத்தானது எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

லினக்ஸ் இயக்கமுறைமையில் அகல் கற்றையை பயன்படுத்தி இணைய இணைப்பை பெற முடியும் :

லினக்ஸ் இயக்கமுறைமையில் அகல் கற்றையை பயன்படுத்தி  இணைய இணைப்பை பெற முடியும் :

    இன்றைக்கு பெரும்பாலானவாகள் லினக்ஸ் இயக்கமுறைமைக்கு மாறிவிட்டனர்.  ஆயினும் இந்த இயக்கமுறைமையின்வாயிலாக இணைய இணைப்பினை பெறமுடியுமா என சந்தேகபடுவார்கள் இதன்மூலம் அகல்கற்றை இணைய இணைப்பினைகூட மிகஎளிதாக பெறமுடியும்என்பதே எவரும் மறுக்கமுடியாத உண்மையாகும். தற்போது நம்முடைய நாட்டில் நம்பந்தகுந்த தொழில் நுட்பத்தின் மூலம்  பல்வேறு வழிகளில்  பல்வேறு சேவையாளர்களின் அகல்கற்றை இணைப்பை எவரும் எப்போதும் பெறுகின்ற வாய்ப்புள்ளது. ஒரு குறிப்பிட்ட  சேவையாளர் மூலம் மட்டுமே இணையஇணைப்பைபெற நாம் அனுகமுடியும் என்ற வரையறை எதுவும் தற்போது நடைமுறையில் இல்லை .

   இதற்காக இப்போதெல்லாம் Data Card ஐ பயன்படுத்தி நேரடி இணைப்பை  வெகு சுலபமாக பெறமுடியும்.  இது அதிகவேகமானது அன்று ஆனால் நெகிழ்வு தன்மையுடையது,  USB Dongle இல் இதனை இணைப்பதின் மூலம் ஒருசில நிமிடங்களில் இணைய இணைப்பை பெறமுடியும்.  வினக்ஸின் வாயிலாக இணைப்பு செய்வதற்கு முன்பு பின்வரும் வழிமுறைகளை  செயற்படுத்திட வேண்டும். 

   முதலில் நம்முடைய லினக்ஸானது இந்த Data Card இருப்பதை கண்டுபிடிக்க செய்யவேண்டும்.  அதனால் USB Data Card ஐ முதலில் பொருத்துக பின்னர் முதன்மை கணக்கில் உள்நுழைவு(Login) செய்ய வேண்டும்.  அதற்காக  Cat/ Proc/Bus/Usb/Devices என்றவாறு தட்டச்சுசெய்க.  உடன் கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களின் பட்டியில் திரையில் பிரதிபலிக்கும் இந்த பட்டியலில் Data Card பெயரும் பிரதிபலிப்பதை காணலாம். இந்த சாதனத்தின் பட்டியலில் Vendor’sஆல் குறிப்பிடப்பட்டுள்ள அவர்களின் பெயர்  Vendor’s —- மற்றும் சுட்டியை Product ID—- என்றவாறு இருப்பதை அதற்கான பகுதியில் காணலாம். இதன்பிறகு Mod Probeஐ இயக்கவேண்டும். மேலே குறிப்பிட்டுள்ளவாறான சாதனங்களின் பட்டியிலில் கண்ட தகவலை

   Mode Probe USB Seriel Vendor’s = — ,Product ID=— என்றவாறு உள்ள காலியிடத்தில் தட்டச்சுசெய்தபின்னர் Dmesg என தட்டச்சுசெய்க.

பின்னர் Vi போன்ற உரைபதிப்பாளரை பயன்படுத்தி etc/Wvdial,Conf என்றவாறு மாறுதல்கள் செய்துகொள்க.  உடன் Dialar Cdma என்ற புதிய இணைப்பு ஏற்படுவதை காணலாம்.  அதில் தேவையான தகவல்களை உள்ளீடு செய்து.இதனை ஒரு கோப்பாக  சேமிக்கவும் இறுதியாக Wvdial Cdma என தட்டச்சுசெய்து இணைய இணைப்பைபெறவும்

Sudo Wvdial Conf,என்றவாறு இணைப்பை அமைவு செய்க இவ்வாறு இணைப்பு அமைக்கப் பட்டவுடன் உங்களுடைய இணைப்பு லினக்ஸின்  உபுண்டுவில் பயன்படுகிறதா  என Administration/ Net Work என்பதன் கீழ் சரிபார்க்கவும்.

   PPPOE என்பது அடுத்ததாக மிக முக்கியமான இணையத்துடன் இணைக்கும் வழியாகும். இது அதிகப்படியாக ISP யில் பயன்படுத்தப்படுகின்றது.  இதில் கம்பியுள்ள இணைப்பு மற்றும் கம்பியுடன் கூடிய மோடத்துடன் பயன்படுகிறது.  லினக்ஸில் PPPOE.Conf  என்ற நிரல்தொடரை Console லிருந்து முதன்மை கணக்கினை முதலில் இயக்க வேண்டும். இது கணினியில் Net Work Card நிறுவப்பட்டுள்ளதா என்றும் LAN Cable சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்றும் சரிபார்க்கின்றது.  பின்னர் இந்த நிரல்தொடரை இயக்கியவுடன் ISP யில் PPPOE சேவையாளராக வருடிடும் பணியை(Scan) செய்கின்றது.  இதன்பிறகு இந்த இணைப்பை இணைய இணைப்பாக மாற்ற வேண்டுமா என கேட்கின்றது. ஆம் என்றால் உடன் User Name PassWord ஆகியவற்றை கோரும் அவற்றை மிகச்சரியாக உள்ளீடு செய்து மிகுதி அமைப்பை ஒன்றும் செய்ய வேண்டாம்.  வழக்கமாக ISP யினாது DNS சேவையாளரின் பெயர் மற்றும் தேவையான தகவல்களை தொலைபேசிதொடர்பு செய்யும்போது தானாகவே வழங்குகின்றது.  அதனால்  சேவையாளரின் பெயரை உள்ளீடு செய்யத் தேவையில்லை முடிவாக தொலைபேசிதொடர்பு  செய்த இணைப்பை தெரிவு செய்ய Pon என்ற கட்டளையை பயன்படுத்தி இணைப்பை நிகழ்(on)நிலையிலும்  Poff கட்டளையை பயன்படுத்தி இணைப்பை விடுப்பு(off) நிலையிலும் பராமரிக்கலாம்.

  PPPOE மிக எளிமையானதாக இருந்தாலும் அதிக நெகிழ்வு தன்மையுடன் ISP  இணைப்பு வழியை வழங்குகிறது .  பல ISP கள் தங்களுடைய இணைய இடைமுகத்தினை பயன்படுத்தி உள்நுழைவு(Login) செய்யும்படி கோருகின்றது.

  ISP கள் cURL நிரல்தொடரை பயன்படுத்தாதவரை  தானாகவே அனைத்து செயல்களையும் செய்யாது. cURL என்பது லினக்ஸிற்காக உள்ளது . இதனை hitp;//curl.haxx.Se என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .  இது User name மற்றும் Pass Word ஐ பயன்படுத்தி இணையதளங்களை அனுகுவதற்கும்  ISP இன் உள்நுழைவு(Login) பக்கத்தில் User name, Password உள்ளீடு செய்யவும் பயன்படுகிறது .

    அதற்காக இந்த URLஐபொருத்தமான மடிப்பகத்தில் விரித்துகொள்க .  பின்னர் கட்டளை சாளரத்தை திறந்து கொள்க. அதன்பின்னர் இது இருக்குமிடத்தை தேடிபிடிக்கவும் . இதற்காக நோட்பேடில் கட்டளையை குழு (BAT) கோப்பில்   “curl -d UserName = — & Password —“  என்றவாறு முதல்வரியிலும்.  hltp: //< Url- for- login> .என்றவாறு இரண்டாவது வரியிலும் தட்டச்சுசெய்து இந்த கோப்பினை SK என்றவாறு பெயரிட்டு சேமித்து வெளியேறுக. இதில்URL முகவரிUser name மற்றும் Pass word  ஆகியவை இருக்கும்படி பார்த்து கொள்க .இந்த குழு (BAT) கோப்பின் பெயரை தட்டச்சுசெய்துஅல்லது Start Up பகுதியில் இதனை இணைத்து இயக்குக    உடன் லினக்ஸ் இயக்கமுறைமையில் இயங்கிடும் உங்களுடைய கணினியுடன் அகல்கற்றை இணைய இணைப்பை பெறமுடியும் .

எக்செல்லில் வாடிக்கையாளர் விரும்பும் தானாகவே பூர்த்தி செய்யும் ( Custom Auto fill) வசதி பெறுவதற்காக

எக்செல்லில் வாடிக்கையாளர் விரும்பும் தானாகவே பூர்த்தி செய்யும் ( Custom Auto fill) வசதி பெறுவதற்காக

 எக்செல்லில் ஓரு பட்டியலை தொடர்ந்து தட்டச்சு செய்யும்போது Auto fill என்ற வசதியை பயன்படுத்தி மிகுதியை தானாகவே பூர்த்தி செய்வதை பார்த்திருப்போம். உதாரணமாக Jan, Feb, Mar போன்ற மாதத்தின் பெயர்கள், Sunday, Monday, Tuesday போன்ற வாரத்தின் நாட்களை தானாகவே பூர்த்தி (Auto fill) செய்யும் வசதி மூலம் பயன்பெற்றிருப்போம். அவ்வாறே நாம் விரும்பும் மற்ற பட்டியல்களையும் எக்சலில் பெற முடியுமா? 

     உதாரணமாக ஒரு நிறுவனத்தின் விற்பனையை கோட்ட வாரியாக தயார் செய்ய கோட்டங்களின் பெயர் இந்த தானாக பூர்த்தி செய்யும் Auto fill வசதி மூலம் எவ்வாறு முடியும் என்பதை இப்போது காண்போம்.

    படம்1ல் உள்ளவாறு எக்சலின் கட்டளை பட்டியலில் (Menu bar)   உள்ள Tools என்பதை சொடுக்குக. உடன் திரையில் தோன்றும் பட்டியலிருந்து option என்பதை தெரிவு செய்க.

     பின்னர் திரையில் தோன்றும் உரையாடல் பெட்டியில் Custom lists என்ற பொத்தானை சொடுக்குக. அதன்பின்னர் திரையில் விரியும் Custom lists என்பதில் new list என்பதை தெரிவு செய்து வலதுபுறம் உள்ள list entries  என்ற பகுதியில் நாம் விரும்பும் பட்டியலின் பெயரை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக  கால்புள்ளியிட்டு தட்டச்சு செய்க. அல்லது இந்த பட்டியில் வேறு எங்காவது இருந்தால் import வசதி மூலம் உள்ளே கொண்டு வருக.

   பின்னர் add  பொத்தானை சொடுக்குக.உடன் இவ்வாறு உள்ளீடு செய்த பட்டியல் Custom Listல் தானாகவே சேர்ந்துவிடும்.

     பின்னர் Ok என்ற பொத்தானை சொடுக்குக. இப்போது நீங்கள் உருவாக்கிய பட்டியல் Auto fill வசதி மூலம் எக்சல் விரிதாளில் கொண்டு வர முடியும்.

படம்1

எம்எஸ்வேர்டு ஆவணத்தை பிடிஎஃப் ஆக உருமாற்றம் செய்தல்

எம்எஸ்வேர்டு ஆவணத்தை பிடிஎஃப் ஆக உருமாற்றம் செய்தல்

கடிதம் கட்டுரை போன்றவற்றை எம்எஸ்வேர்டில் உருவாக்கி நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பிடும்போது அவர்களிடம் இதே பயன்பாடு இருந்தால் மட்டுமே இதனை திறந்து இதில் இருக்கும் செய்திகளை படித்தறியமுடியும் என்ற நிலையுள்ளது,ஆனால் நாம் உருவாக்கபயன்படுத்திய பயன்பாடு நண்பர்களிடம் இல்லாத நிலையிலும் இந்த ஆவணங்களை படிக்க உதவுவதே பிடிஎஃப் (portable document format )ஆகும்,இது எந்த தளத்திலும் எந்த இயக்கமுறைமையிலும் இயங்ககூடியதும் பயன்படுத்தக்கூடியதும் ஆகும் இதன்பயனால் பெறுபவரிடம் நாம் உருவாக்கிய பயன்பாடு இருக்கவேண்டிய அவசியமில்லை,ஆனால் இதனை படிப்பதற்கான adobe acrobate reader என்ற மென்பொருள் மட்டும் இருந்தால் போதும் இந்த பயன்பாட்டு மென்பொருளை) இலசமாக இதன் http://www.adobe.com <http://www.adobe.com/&gt; என்ற வளைதளத்திலிருந்து பதிவிறக்கம்செய்து நிறுவிக்கொள்ளலாம்

ஆயினும் ஒரு எம்எஸ்வேர்டு ஆவணத்தை எவ்வாறு ஒருபிடிஎஃப் ஆக உருமாற்றம் செய்வது? இதனை பற்றி இப்போது காண்போம்,இதனை செயல்படுத்த primo pdf என்ற இலவச கருவி பயன்படுகின்றது,இதனை http://www.primopdf.com <http://www.primopdf.com/&gt; என்ற வலைதளத்திற்கு சென்று இலவசமாக 9.7Mb அளவுள்ள இதனுடைய கோப்பினைபதிவிறக்கம்செய்து நிறுவிக்கொள்ளலாம்

இதற்காக இந்த வலைதளத்திற்கு சென்று download now என்பதை சொடுக்கு,

இந்த சமயத்தில் உரையைஉருவாக்கிடும் பயன்பாட்டு மென்பொருள் ஏதேனும் இயங்கிகொண்டிருந்தால் மூடிவிடுகஅல்லது அதன் இயக்கத்தை நிறுத்திவிடுக,பின்னர் free primo setup என்பதை இருமுறை சொடுக்குக, அதன்பின்னர் திரையில் தோன்றும் அறிவுரைக்கேற்ப செயல்படுக,

ஒரு இயக்கமுறைமையின் அச்சுப்பொறியாகஆக செயல்படுமாறு உருமாற்றுவதுதான் இந்த pdf இன் அடிப்படை தத்துவமாகும்(இரகசியமாகும் primopdfஆனது இதனைத்தான் செய்கின்றது,.இதுஒரு எம்எஸ்வேர்டு ஆவணத்துடன் pdf printer ஐ நிறுவி இந்த ஆவணம் எந்த தளத்தில் இயங்கினாலும் செயல்படும் வசதியைசெய்கின்றது,

எம்எஸ்வேர்டில் “file=>printer “ என்றவாறு தெரிவுசெய்து கொள்க,உடன் தோன்றும் Print என்ற உரையாடல்பெட்டியில் primo pdf என்பதை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்கு,உடன் createpdf என்ற சாளரம் திரையில் தோன்றும் அதில் நாம் உருமாற்றப்போகும் கோப்பிற்கான ஒருபெயரை உள்ளீடுசெய்து இதனை எங்கு சேமித்து வைக்கவேண்டும் எனக் குறிப்பிடுக,

பின்னர் இந்த பிடிஎஃப் கோப்பானது அச்சுப்பொறிக்கு ,அச்சிற்குமுன்காட்சியாக திரையில் ,மின்னூலாக ஆகிய மூன்று வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்க, உடன் அதற்கேற்றவாறு இந்த பயன்பாடு சரிசெய்து கொள்ளும் ok என்ற பொத்தானை சொடுக்கு,உடன் இவ்வாறு உருமாற்றம் செய்யப்பட்ட ஆவணத்தை அடோப் அக்ரோபேட் ரீடர் தானாகவே திறந்து திரையில் தோன்றச்செய்யும்,

இந்த primo pdf பயன்பாட்டில் உள்ள மேலும் பல வசதிகளை நாம் பின்வருமாறு பயன்படுத்திகொள்ளலாம், எந்த அளவிற்கு பாதுகாப்பை தளர்வுசெய்வது என்பதனடிப்படையில் பயனாளிகள் ஆவணத்தை உபயோகிப்பதை கட்டுபடுத்தலாம் இதற்காக security என்ற பொத்தானை சொடுக்குக உடன் document security என்ற உரையாடல்பெட்டியொன்று திரையில் தோன்றும் இதில் கடவுச்சொல்லை உள்ளீடு செய்துஆவணத்திற்குள் நுழைபவரை கட்டுபடுத்திடலாம், பின்னர் encription என்பதில் 40bit அல்லது 128bit ஆகியவற்றில் ஒன்றை தெரிவுசெய்க,பொதவாக 128bitஎன்பதே பரிந்துரைக்கப்படுகின்றது

ஆவணத்தின் பண்பியல்புகளை மாற்றுதல் கோப்பின் பெயர் உருவாக்கியவரின் பெயர் நாள் போன்ற விவரங்கள் பிடிஎஃப் கோப்புடன் இனைப்பதற்காக document properties என்பதை சொடுக்குக உடன் திரையில் தோன்றிடும் document properties என்ற உரையாடல்பெட்டியின் தலைப்பு பகுதியில் கோப்பின் பெயரும் author என்ற பகுதியில் உருவாக்கியவரின் பெயரும் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது என்பதனை குறிப்பிட sub என்ற பகுதியிலும் தேவையெனில் தேடுவதற்கு ஏதுவாக ஏதேனும்சொற்களை keyword என்ற பகுதியிலும் உள்ளீடுசெய்து Ok என்ற பொத்தானை சொடுக்கு,மேலும் வாய்ப்புகள் தேவையெனில் program என்ற வாய்ப்பில் ஒன்றை தெரிவுசெய்க,உடன் அடோப் அக்ரோபேட்ரீடர் சாளரம் திரையில் திறந்து காட்சியளிக்கும் பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்துவது இரண்டாவது வாய்ப்பாகும் ஒரு ஆவணத்தின் தளங்களை மாற்றியமைத்திட pdf ஐ பயன்படுத்திட முடியாது,உடன் ok என்ற பொத்தானை சொடுக்கி இந்த பிடிஎஃப் கோப்பினை எவரும் படிக்கமட்டும் அனுமதிக்கின்றது பெறுபவரிடம் நாம் உருவாககு¢கின்ற புரோகிராம் இல்லையென்றாலும் இந்த ஆவணம் பிடிஎஃப் வடிவில் இருப்பதால் மிகசுலபமாக திறந்து படிக்கமுடிகின்றது, ஆனால் திருத்தம் ஏதும் செய்யமுடியாது இதற்காக அடோப் அக்ரோபேட் ரீடர் 7,02 வை பயன்படுத்திகொள்ளுங்கள்

இயங்காமல் நின்றுபோனவன்தட்டிலிருந்து தரவுகளை மீட்டெடுத்தல்

இயங்காமல் நின்றுபோனவன்தட்டிலிருந்து தரவுகளை மீட்டெடுத்தல் 

 வன்தட்டானது திடீரென வேலைநிறத்தம் செய்துஇயங்காமல் நின்றுவிடும் சமயத்தில் இதுவரை பயன்படுத்திய தரவுகளை இழப்பேதுமில்லாமல் எவ்வாறு மீட்டெடுப்பது என்பதுதான் மிகப்பெரும்தலைவலியாகும்,

இவ்வாறான இக்கட்டான நிலையில் மாட்டிக்கொண்டு நிம்மதிஇழந்து தவிக்கும் நேரத்தில் pc install என்ற இலவச கருவி உங்கள் உதவிக்கு வந்து உங்களுக்கு மன நிம்மதியை வழங்குகிறது,

சி இயக்ககம் தவிர மற்றவை எனில் இந்த கருவியை விண்டோவில் நிறுவியும், வன்தட்டு முழுவதும் எனில் வேறு கணினியில் இந்த கருவியை நிறுவி இயங்காமல் நின்றுபோன கணினியை இரண்டாவது இயக்ககமாக இணைத்துகொண்டு பின்வரும் படிமுறைகளின் படி செயல்படுத்துங்கள்

படிமுறை1: இந்த pc install file recovery என்ற கருவியை நிறுவுகை செய்வதற்காக இதனுடைய இயக்க கோப்பினை செயல்படுத்துங்கள் தோன்றிடும் திரையில் English என்பதை இதன்மொழியாக தேர்வுசெய்யுங்கள்என்னவகையான தரவை மீளப்பெறவேண்டும் என்பதற்கான இதன் இடதுபுறத்தில் உள்ள மூன்றுபொத்தான்களில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக

தரவுகளைமட்டும் மீட்டாக்கம் செய்வதுஎனில் படிமுறை 6-க்கு நேரடியாக செல்க,இயக்ககங்களை மீட்டாக்கம் செய்வது எனில் படிமுறை 8-ற்கு நேரடியாக செல்க, அழித்த தரவுகளெனில் சாளரத்தின் மேலே இடதுபுறமுள்ள உருவத்தை சொடுக்குக

படிமுறை2: எந்த இயக்ககத்தை மீட்டாக்கம் செய்யப்போகின்றோம் என்பதை தெரிவுசெய்க,உடன் இந்த கருவியானது வன்தட்டின் பாகப்பிரிவினையை வருடி இதன் உள்ளடக்கத்தை பட்டியலாக திரையில் பிரிதிபலிக்கச் செய்கின்றது ,பெரும்பாலும் தருக்க இயக்ககத்திலிருந்தே தேவையான இயக்கத்தை தெரிவுசெய்க அதனால் உடன் வன்தட்டின் உள்ளடக்கங்கள் இருமுறை பட்டியலிடப்படும் c ,d, e,f,போன்று இயக்ககங்களின் பெயரை வரிசையாக தெரிவு செய்து இவற்றின் உள்ளடக்கத்தை வருடி பட்டியலிடச் செய்க,முன்காட்சி  பொத்தானை சொடுக்கி இதனை திரையில் சரிபார்க்கவும்,பின்னர் அடுத்த படிமுறைக்குசெல்வதற்கான next என்ற பொத்தானை சொடுக்குக,

படிமுறை 3: வருடச் செய்வதற்காக ஒருசிலநிமிடநேரம் எடுத்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட இயக்கத்தில் நீக்கம் செய்யப்பட்ட கோப்பகத்தின் உருவமானது மறுசுழற்சிகூடையின் உருவம் போன்று திரையில் பிரிதிபலிக்கும், இவற்றில்  இழக்கக்பபட்ட கோப்பினை தேடிப்பார்க்கவும் கோப்பின் பெயரே தெரியாத நிலையில் object=> find என்பதை தெரிவுசெய்க அதில் கோப்பின் வகையைமட்டும் குறிப்பிட்டு பச்சைவண்ண  குறியீட்டு பொத்தானை சொடுக்குக,

படிமுறை4: நாம் கொடுத்த நிபந்தனைகளுக்கு பொருத்தமான கோப்புகளின் பெயர் பட்டியலாக திரையில் ஒருசில நிமடநேரத்தில் காட்சியாக விரியும், அதிலிருந்து நாம்தேடிய கோப்பினை தேடிப்பிடிக்கவும் தேடியகோப்பு திரையில் பட்டியலிடப்படாத போது கோப்பின் அளவு, உருவாக்கிய அல்லது மாற்றம் செய்ததேதி போன்ற விவரங்களை கொடுத்து தேடும்படிக்கூறலாம் உடன் விரியும் பட்டியலின் மேல்பகுதியில் உள்ள நெடுவரிசைகளின் தலைப்பை தெரிவுசெய்து இருமுறை சொடுக்கி வரிசைக்கிரமமாக முதலில் அடுக்கிவைத்து கொள்க,

உடன் அடுக்கப்பட்டு பிரிதிபலிக்கும் பட்டியலிலிருந்து கோப்பின் பெயரை ஒவ்வொன்றாக ctrl விசையைஅழுத்தி பிடித்துகொண்டு தேவையானவற்றை  தெரிவுசெய்க  பின்னர் சட்டியின் வலதுபுறம் சொடுக்குக உடன் விரியும் குறுக்கவழிபட்டியலில் send to என்பதை தெரிவுசெய்க,பின்னர்இந்த மீட்டாக்கம் செய்யப்படும் கோப்புகள் எந்த இடத்தில் சேமித்து வைக்கவேண்டும் என்பதை குறிப்பிடுக,

படிமுறை5இவ்வாறு மீட்டாக்கம் செய்யப்பட்ட கோப்பு சரியானதுதானா என சரிபார்க்கவிரும்புவோம் அதற்காக இந்த கோப்பினை திறந்து பார்த்து சரியாக இருந்தால் மட்டும் இந்த கோப்பிற்கு வேறுஒருபெயரிட்டு சேமித்துவைத்திடுக, நாம் தேடியகோப்பாக இல்லாதிருந்தால் மீண்டும் pc install file recovery சென்று வேறுவகையான வழிமுறையில் முயற்சிசெய்க,

படிமுறை6:விரைவான வடிவமைப்பு ,முறைமை இயங்காமல் சண்டிமாடுபோன்று படுத்துவிடுவது அல்லது பயன்பாட்டுமென்பொருளே இயங்காது உறைந்துபோவது என்பதுபோன்ற சூழலில்தரவுகளின்இழப்புஎற்பட்டிருந்தால் pc install file recovery சாளரத்தின் திரையின் இடதுபுற மத்தியில்உள்ள lost data என்ற பொத்தானை சொடுக்குக உடன் நீக்கம்செய்யப்பட்ட கொப்பினை மீட்டாக்கம் செய்வதுபோன்று செயல்பட்டு தொகுதிஅளவெல்லை உரையாடல்பெட்டி(Cluster range dialog box) தோன்றும் அதில் தருக்க இயக்ககத்திலிருந்து நாம்தேடிய இயக்கத்தை தெரிவுசெய்க பச்சை வண்ண குறியீட்டு பொத்தானை சொடுக்குக,உடன் நாம் உள்ளடுசெய்த நிபந்தணைகளுக்கேற்ற கோப்புகளின் பெயரை திரையில் பட்டியலாக காண்பிக்கும் அந்த பட்டியலிருந்து நாம் விரும்பும் கோப்புகளை மீட்டாக்கம் செய்துகொள்க,

படிமுறை7: உடன் pc install file recovery யானது நூற்றுக்கணக்கான உடைத்தெரியப்பட்ட  கோப்புகளின் விவரங்களை திரையில் பட்டியலிடும் இவைகளை பார்வையிட்டு படிமுறை 3முதல் 5 வரை பின்பற்றி மீட்டாக்கம் செய்துகொள்க, கோப்புகளைஒருங்கிணைத்துகொள்க,

படிமுறை8: பாகப்பிரிவினை அட்டவணையில் இழப்புஏற்பட்டிருந்தால் தருக்க இயக்ககத்தின்பெயர் பட்டியலாக பிரிதிபலிக்காதுஅதனால் துடிக்கும் இடம்சுட்டியை நகர்த்தி எங்குள்ளது என தேடிப்பார்க்கவேண்டும் வன்தட்டினைதெரிவுசெய்து வழக்கமான முறையில் #1 என பெயரை அமைத்திடுக,find logical drive என்பதை சொடுக்குக,

படிமுறை9: இயக்ககம் முழுவதும் வருடி தேடும்படிசெய்க, அல்லது தொலைந்துபோன இயக்ககம் எங்கிருக்கும் என தோராயமாக தேடும் படிசெய்க,பின்னர் பச்சை வண்ண குறியீட்டு பொத்தானை சொடுக்கி சிறிது நேரம் காத்திருக்கவும் தேடும் பணி முடிவடைந்ததும் பெறுகின்ற இயக்கத்திலிருந்து இயக்ககத்தின் பெயர் மற்றும் கோப்பகத்தின் பெயரை தெரிவு செய்து படிமுயை 3 முதல் 5 வரை பின்பற்றுக,

கோப்பு அமைவை (File System)பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

 

கோப்பு அமைவை (File System)பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

வீடுகளில் உள்ள அறைகளில் வீட்டு உபயோகபொருட்கள், துணிமணிகள்,புத்தகங்கள் மற்றும் இதர பொருட்களை நினைத்த இடத்தில் குப்பை போன்று குவித்து வைத்திருந்தால் நமக்குதேவையான பொருட்களை இவைகளிலிருந்து தேடிஎடுப்பதிலும் தாரளமாக அறையில் புழங்குவதிலும் அதிகஅளவிற்கு சிரமம் ஏற்படும் இதனை தவிர்க்க இவைகளை ஒழுங்குபடுத்தி அழகாக அடுக்கிவைத்திட்டால் அறையின்தோற்றமும் நன்றாக இருக்கும் நமக்கு தேவையானவற்றை தேடிஎடுப்பதிலும் சிரமமிருக்காது

இவ்வாறே கணினியிலும் நாம் உருவாக்குகின்ற கோப்புகளை கன்னாபின்னாவென்று குவித்துவைத்திட்டால் இந்த ஒழுங்கற்ற குவியல்களிலிருந்து நமக்குதேவையானவைகளை தேடிஎடுப்பதில் அதிக சிரமமும் காலவிரையமும் ஏற்படும்,அதற்கு பதிலாக ஒரு ஒழுங்குமுறையில் இவைகளை அடுக்கி வைத்திருந்தால் நமக்குதேவையானவைகளை மிகவிரைவாகவும் எளிதாகவும் தேடிஎடுக்க ஏதுவாக இருக்கும், எந்தவொரு இயக்கமுறைமையும் (Operating System)தரவுகளை தேக்கிவைத்தல்,நிர்வகித்ல் பகுதிபகுதியாக பிரித்து அடுக்கிவைத்தல் போன்ற பணிகளை தருக்க தரவுகட்டமைப்பை (Logical data structure) பயன்படுத்தி செயல்படுத்துகின்றது, இதனையே கோப்பு அமைவு (File System) என அழைக்கின்றோம்,இதன்மூலம் நினைவக இடத்தை மிகத்திறனுடன் படித்தல்,எழுதுதல்,நகலெடுத்தல்,நீக்கம் செய்தல் போன்ற பல பணிகளை செய்வதற்காக பயன்படுத்திகொள்வதே கோப்பு அமைவின் (File System) அடிப்படைநோக்கமாகும், நீண்டதூரபயனத்திற்கு உதவும் தொடர்வண்டிகளில் அதன் பெட்டிகளை தனித்தனி பகுதியாக பிரித்து பயனிகள் அமரும்இடத்தை ஒழுங்கு செய்வதை போன்று கணினியின் நினைவகத்தை பிரித்து ஒழுங்கு செய்வதை பாகப்பிரிவினை (Partition) என்பர் கோப்பு அமைவா(File System)னது இந்த பாகப்பிரிவினை (Partition)க்குள் ஒவ்வொரு கோப்பும் எங்கு இருக்கவேண்டும் என தீர்மாணிக்கின்றது செயற்படுத்துகின்றது நிர்வகிக்கின்றது தருக்க கோப்பு அமைவா (Logical File System)னது முதலில் நினைவக பாகப்பிரிவினை (Partition)யில் கோப்புகள் ஏதும் இல்லாத ஆரம்பநிலைக்கு கொண்டுசெல்கின்றது அதன்பிறகே கோப்புகளை வரிசைகிரமமாக அடுக்குகின்றது,

வன்தட்டுகளை 512 பைட் கொண்ட வட்டக்கூறுகள் (Sector)என அழைக்கும் பல அலகுகளாக பிரிக்கின்றது, அதன்பிறகு இந்தவட்டக்கூறுகள் சுட்டுவரிசை/யின் (Index) துணையுடன் கொத்து(Cluster) எனப்படும் பல்வேறு குழுக்களாக வகைப்படுத்துகின்ற து இவ்வாறு கொத்தாக(Cluster) வகைப்படுத்தாதிருந்தால் தனித்தனி வட்டக்கூறுகளில் (Sector) இருக்கும் தரவுகளை படிக்கவும் எழுதவும் மிகுந்த சிரமும் காலவிரையமும் ஏற்படும் பின்னர் இந்த சுட்டுவரிசையானது (Index) வட்டக்கூறுகளின் (Sector) இயல்புநிலை அல்லது குறிப்பிட்ட வட்டக்கூறுகளை (Sector) அனுக உதவும் விரங்களை கொண்ட அட்டவணையை வைத்திருக்கின்றது,ஒவ்வொரு வன்தட்டும் இந்த சுட்டுவரிசை (Index) விவரங்களை அட்டவணையாக கொண்டிருக்கும் இந்த அட்டவணையை கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை(File Allocation Table(FAT)) என அழைப்பர் ,இதில்வட்டக்கூறுகளின்(Sector) முழுமுகவரி அடங்கியிருக்கும் அல்லது தேக்கிவைக்கப்பட்டிருக்கும் கோப்புகள் பற்றிய விவரங்களை கொண்டிருக்கும்,

வட்டை அடிப்படையாக கொண்டகோப்பமைவு வன்தட்டுஇயக்ககம் ,டிவிடிஆகியவை இந்த வகையாகும்,இவைகளில் ஒரே அளவுள்ள வட்டக்கூறுகளைில்(Sector) தொடர்ச்சியாக கோப்புகள் தேக்கிவைக்கப்படுகின்றன இவைகள் குறிப்பற்ற (Random) அமைப்பில் வட்டு முழுவதும் பிரிந்து பரவிகிடக்கும் ஒருசில வட்டு அடிப்படையின் கோப்பமைவானது குறிப்பேடு (journaling)பதிப்பேடு(versioning) கொண்டது, xfs போன்ற சில குறிப்பேடு(journaling) ஃபைல் அமைப்பில் சிறப்பு ஒதுக்கீட்டு பகுதியில் மாற்றங்களை மட்டும் முதலில் பதிவுசெய்யப்படும் அதன்பிறகு முக்கிய கோப்பு அமைவில்(File System) எழுதுவதற்கு முன்பாகவே குறிப்பேடு(journaling) செய்யப்படும் open ums போன்ற பதிப்பு கோப்பு அமைப்பு அதே கோப்பின் பல பதிப்புகளை நடப்பில் இருப்பதற்கு அனுமதிக்கின்றது, பின்னர் அவ்வப்போது இவைகளை பின்காப்பு(backup) செய்யப்படுகின்றது,

பின்வரும் கோப்புஅமைப்புகள் அனைவராலும் அறியப்பட்ட மிகவும் புகழ்வாய்ந்தவையாகும்,

எம் எஸ் விண்டோவில் புதிய தொழில்நுட்ப கோப்பு அமைப்பு (New Technology File System)என்பதை மிகசுருக்கமாக NTFS என்றும் ,கோப்பு ஒதுக்கீட்ட அட்டவணை(File Allocation Table) என்பதை மிகசுருக்கமாக FAT(FAT16 ,FAT32 என்றும் அழைக்கப்படுபவைகள்

லினக்ஸ் இயக்கமுறைமையின் ext,ext2,ext2fs,Nss,ReiserFs போன்றவை

மேக்ஸ் இயக்கமுறைமையின்(MAC os X)HFST,HFS,MFS,XSenபோன்றவை குறிப்பிட்ட வகை கோப்பு அமைப்புகளாகும்

Solid state media file system இவைகள் நாம் அதிகஅளவில் பயன்படுத்தும் சாதணங்களில் தேக்கி வைக்கப்பட்டவையாகும் இவைகள் Flash நினைவகத்தில் தேக்கிவைக்கப்படுகின்றன இவைகளை மிகவும் தனிக்கவனத்துடன் கையாளப்படவேண்டும் ஏனெனில் இயக்கங்களில் தரவுகள் மீண்டும் மீண்டும் மேலெழுதி வருவதால் அழிந்துவிட வாய்ப்புள்ளது அதுமட்டுமல்லாது ஏதேனும் தரவுகளை நினைவகத்தில் எழுதப்படவேண்டியநிலையில் ஏற்கனவே நினைவகத்தில் இருப்பவைகளை முதலில் அழித்துவிட்டுதான் எழுதும் அதனாலும் தரவுகளின் இழப்பு ஏற்படவாய்புபுள்ளது, Journaling flash file system(JFFS) Yet Another Flash file system(YFFS) போன்றவை இந்த வகையை சேர்ந்தவையாகும்

Record Oriented File System மெயின் பிரேம் மற்றும் மினி கணினிகளில் பயன்படுத்துவதற்குரியதும் முந்தைய இயக்கமுறைமையில் உருவாக்கப்பட் கோப்புகளுடன் ஒத்திசைவு செய்வதற்கேற்பவும் கோப்புகளை தேக்கிவைக்க இது பயன்படுகின்றது

Shared file system இதனை ஸேன் கோப்பு அமைவு(shane File System)அல்லது கொத்து கோப்பு அமைவு( Cluster File System) என அழைப்பர்,இது பிணையத்தின் வழியாக அதிக அளவில் தரவுகளை தேக்கிவைக்கப்பட்டு நேரடியாக அனுகுவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது

Network file system மற்றும் shared file system இது கோப்புகள் ,அச்சுப்பொறிகள் கணினியின் நினைவகங்கள் போன்ற வளங்களை பல பயனாளிகள் பகிர்ந்து பயன்படுத்த ஆதரிக்கின்றது, இதன்திறனை இதுபிணையத்தின் வழியாக எவ்வளவு தரவுகளை ஒருநொடியில் அனுப்புகின்றது என அளவிடப்படுகின்றது இது வாடிக்கையாளர் விரும்பும் வகையில் தரவுகளை வழங்கும் கோப்புசேவையாளராகவும் அண்மையக அனுகும் மரபொழுங்காகவும் செயல்படுகின்றது, network file system(nfs) ,server mangager(sm) ஆகியவை மிகவும் புகழ்வாய்ந்தவையாகும், இன்றைய காலகட்டத்தில் 9p,AFP,NCP,DFS,GFS போன்றவை இதன் வகைகளாகும்

கோப்பு அமைவு (File System) சரியான இயக்கமுறைமையுடன் பொருத்தமாக இணைந்து மிகச்சரியாக இயங்குமாறு செய்வதுதான் தரவுகளை கோப்புகளை தேக்கிவைத்தலின் மிக சிக்கலான பிரச்சினையாகும்

நான்குஉள்ளக மேஜைக்கணினிசெயலி

  நான்குஉள்ளக மேஜைக்கணினிசெயலி

இந்த 2008 ஆம் வருட ஆரம்பத்தில் இன்டெலின் 45 நேனோமீட்டர் பென்டிரின் குழுவின் மையசெலகம் வெளியிடப்பட்டுள்ளது,இது முதன்முறையாக உள்ளகம்2 வகையில் அனைத்து வசதிகளும் நிறைந்ததாக உள்ளது,

பென்டிரின் என்றால் என்ன?45nmதொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுகின்ற அனைத்து உள்ளக 2 குழுவின் செயலிகளை பென்டிரின் என்பார்கள், இரட்டை உள்ளகத்திற்கு yorkfield என்பதும் நான்குஉள்ளகத்திற்கு wolfdale என்பதும் குறிப்புபெயராகும் 45nm நான்கு உள்ளக ஷியானுக்கு Harpertown என்பது குறிப்புபெயராகும்

அச்சு(Die): 65nm அச்சுஆனது 143mm2 அச்சின் அளவில் 291 மில்லியன் மின்மபெருக்கியை (transistor) உள்ளடக்கியுள்ளது, ஆனால் இந்த பென்டிரினில் 107mm2 அச்சின் அளவில் 410 மில்லியன் மின்மபெருக்கியை (transistor) உள்ளடக்கியுள்ளது,அதாவது 40சதவீத கூடுதலான மின்மபெருக்கியை (transistor) 25சதவீத குறைந்த இடத்தில் கொண்டுள்ளது என்பதே இதன் பெருளாகும் இதனால்இன்டெல் நிறுவனம் ஒற்றையான சிலிக்கன் வெஃபரில் அதிகஅளவில் சிப்புகளை உருவாக்குமுடிகின்றது,அதனால் ஒருசில்லின் உற்பத்தி செலவு குறைகின்றது இதன் தொடர்ச்சியாக இதனுடைய விற்பனைவிலையும் குறைய வாய்ப்புள்ளது,

HI.K சிலிக்கான் தொழில்நுட்பம்ஆன் அல்லது ஆஃப் ஆகிய இருநிலைகளில் ஒன்றை செயலிக்கு வழங்குவதுதான் மின்மபெருக்கியின் (transistor) தலையாய பணியாகும், மின்மபெருக்கி(transistor) ஆன் நிலையில் இருந்தால் மின்னோட்டத்தை அனுமதிக்கும் ஆஃப் நிலையிலிருந்தால் மின்னோட்டத்தை தடுத்துவிடும் ஆயினும் மின்மபெருக்கியின்(transistor) ஆஃப் நிலையிலும் மின் கசிவு ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது அல்லது தவிர்ப்பது என்பதே மிகப்பெரிய தலைவலியாகும் மேலும் மிகக் குறைந்த வெப்பநிலையில் உடனடியாக இவ்வாறான மின்கசிவை எவ்வாறு தடுப்பது என்பதே மிகசிக்கலான செயலாகும் புதிய சில்லுகளின் வடிவமைப்பில் இந்த காரணியையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது, இப்போது 45nmதொழில்நுட்பத்திற்கு மாறிவிட்டதால் ஏறத்தாழ இந்த மின்கசிவு பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது, Hafiumஎன்றழைக்கப்படும் High-K என்பது மின்மபெருக்கியின் (transistor) சிலிக்கன்டைஆக்ஸைடு¢ கதவை மின்வாயிற்கு பதிலாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது அவ்வாறே பாலிசிலிக்கான் கதவிற்கு பதிலாக உலோக மின்வாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் மின்மபெருக்கியில் (transistor) போதுமான அளவிற்கு மின்சாரம் வடிந்துபோவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது, இதனால் மின்மபெருக்கியின் (transistor) இருநிலை மாற்றும் தன்மை 20 சதவீதம் கூடுதலாகின்றது, இதன்தொடர்ச்சியாக அதிக மிகைகடிகாரவேகம் (Over Clocking) மற்றும் குறைந்த மின்சாரசெலவும்ஏற்படுகின்றது,

Larger casheஒற்றை சில்லுக்குள் இருக்கும் மின்மபெருக்கியின் (transistor) எண்ணிக்கை அதிகமாவதால் லெவல் 2 கேஷின் திறன் 50 சதவீதம் கூடுதலாகின்றது அதாவது4எம்பி க்கு பதிலாக 6எம்பியளவிற் ஆகின்றது, அதுமட்டுமல்லாது16- way set associateக்கு பதிலாக 24- way set associate ஆக மாறுகின்றது இதனால்தரவுகளை அனுகும் வேகம் அதிகப்படுத்தப்பட்டு செயல்திறன் உயர்கின்றது,

SSE4 Instruction பல்லூடகசெயலிகள்,,மறைவாக்குதல்,,விளையாட்டு,,ஒளிப்படம் ஆகியவற்றிற்கு அதிக திறனை இது வழங்குகின்றது,Radiation16 எனும் புதியவகை பகுத்தி (Divider) கணக்கீடுகளின் வேகத்தை இருமடங்கு அதிகபடுத்துகின்றது இது ஒருமுறைக்கு 2உள்ளகத்திற்க பதிலாக4உள்ளக அளவிற்கு பணிபுரிகின்றது,

Yorkfield 12Mb cashe ஒற்றை மையசெயலகத்தில் இரட்டை வாயில்தாவி அச்சு கட்டப்பட்டிருப்பதால் அதிகஅளவிற்கு இதன்திறன் அளவு உயருகின்றது

இதனால் மிகைகடிகாரவேகம் (Over Clocking) 20 சதவீதம் அதிகபடுத்தப்பட்டுள்ளது,ஆயினும் குறைந்தஅளவே வெப்பம் வெளியிடுகின்றது மின்சார செலவும் குறைக்கப்பட்.டுள்ளது, அதிக துல்லியத்துடன் செயல்படுகின்றது,விலைமட்டும் விண்ணைமுட்டும் அளவிற்கு உள்ளது விரைவில் சாமானியர்களுக்கும் எளிதில் வாங்கும் வகையில் குறையும் அதுவரை காத்திருப்போம்,

Previous Older Entries