இணைய இணைப்பில்லாமலேயே செல்லிடத்து பேசிமூலம் முகநூல் (Facebook)என்ற வலைதளத்தை தொடர்பு கொள்ளமுடியும்

நம்மிடம் நேக்கியா1100 என்ற பழைய செல்லிடத்து பேசிதான்உள்ளது  அதில் தூரத்திலுள்ளவர்களுடன் மட்டும் பேசமுடியுமே தவிர இணையஉலாவி போன்று பயன்படுத்திட முடியாது நாம் இருக்கும் இடம் GPRS/3G என்பன போன்ற எந்தவொரு இணைப்பு வசதியும் எட்டிபார்க்காத மிகச்சிறிய குக்கிராம் என எத்தனை குறைபாடுகள் இருந்தாலும் கவலையே படவேண்டாம் *325# அல்லது*fbk# என்று நம்முடைய செல்லிடத்து பேசியில் தொடர்புகொண்டால் போதும் முகநூல்(facebook)எனும் சமூகவலைதளத்துடன்  இந்தியாவில் மட்டும் நம்முடைய செல்லிடத்து பேசிமூலம் தொடர்புகொள்ளமுடியும்

இதற்காக முதலில் நம்முடைய செல்லிடத்து பேசியில் *325# அல்லது*fbk# என்றவாறு தெரிவுசெய்து   அழுத்தியவுடன்  தோன்றிடும் திரையில் நம்முடைய பயனாளரின் பெயர் கடவுச்  சொற்களை உள்ளீடு செய்க. அதன்பின்னர்  முகநூலின் எண்களை அடிப்படையாக கொண்ட கட்டளைகளை செயற்படுத்தி கொள்ளமுடியும் மேலும் நம்முடைய நண்பர்களுடன் அரட்டை அடிக்கமுடியும் புதியநண்பர்களை நம்முடைய நண்பர்களின் பட்டியலில் சேர்த்துகொள்ளமுடியும்

இந்தியாவில் எர்டெல், ஏர்செல், ஐடியா, டோகோமோ ஆகிய நிறுவனத்தின் சேவையை பயன்படுத்திடும்  எவரும் இந்த வசதியை பெறமுடியும்  இந்த இணைய இணைப்பில்லாத முகநூல் தொடர்பு சேவையானது  நாளொன்றிற்கு ரூபாய் 1.00 என்ற கட்டணத்தில் அளிக்கபடுகின்றது  மேலும் விவரம் அறிந்துகொள்ள http://www.labnol.org/india/search-google-on-mobile-via-sms/5459/   என்ற இணையதளத்திற்கு செல்க

வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம்

முதலில் இணையதளம் (website) என்பது என்னவென தெரிந்துகொள்வோம் இணையதளம் என்பது பல்வேறு தகவல்களை கொண்ட தகவல் களம் ஆகும் . இதில் பொதுவான தகவல்களோ, உதவிகுறிப்புகளோ, சமையல் குறிப்புகளோ, தயார்செய்யப்படும் பொருட்களின் சந்தையாகவோ அல்லது நம்முடைய கருத்துகளோ ஆகிய எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

தகவல் பரிமாற்றம்தான் இந்த இணையதளத்தின் அடிப்படை பயனாகும் இந்த தகவல் பரிமாற்றம் என்பது அறிவு பரிமாற்றம் ஆகும். மேற்கண்ட எல்லா வகைதகவல்களிலும் இந்த அறிவு பரிமாற்றம்தான் அடிப்படையாக இருக்கின்றது.

களப்பெயர்(domain name),இணைய சேவையாளர்(Web server), கற்றையின் அளவு (bandwidth),html ஆகியவையே இணைய தளத்தின் அதன் அடிப்படையாகும்

நம்மூரில் சாலையோரங்களிலும்  ஒரு வடம் (cable) போன்று அதாவது கண்ணாடி இழையினான கம்பியை(optical fibre cable(OFC)) பதிக்கிறார்களே அந்த வட(cable)இணைப்பு தொலைத்தொடர்பு துறையின்முதுகெலும்பாகும். இந்த வடஇணைப்புகளின் மூலம் தொலைத்தொடர்பு துறையானது இந்தியா முழுதும் உள்ள அனைத்து நகரங்களையும் இணைத்து. அதனடிப்படையில் இந்திய தொலைதொடர்புதுறை இயங்கிவருகிறது. இவ்வாறே இந்தியாவில் இருந்து ஒவ்வொரு வெளிநாட்டிற்கும் ஒரு கடல் வழி வடம் உண்டு.

இந்த தொலைதொடர்பு வடங்களை அடிப்படையாக  கொண்டுதான் நாம் தற்போது பயன்படுத்திடும் இணையம் இயங்குகிறது..

இந்தியாவில் உள்ள ஒரு நகரத்தில் உள்ளவர்கள் பிஎஸ்என்எல்வழியாக அகல்கற்றை இணைய இணைப்பு பெற்றிருக்கின்றார்கள் அவ்வாறே அமெரிக்காவில் உள்ள ஒரு நகரத்தில் உள்ளவர்களும் At &T வழியாக அகல்கற்றை இணைய இணைப்பு பெற்றிருக்கின்றார்கள் . இவ்வாறே ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் தொலைதொடர்பு சேவை நிறுவனம் வழியாக அகல்கற்றை இணையஇணைப்பு பெற்று ஒருநாட்டு மக்கள் மற்றொருநாட்டவருடன் இணையத்தின் வாயிலாக தமக்குள் தொடர்பு கொள்ள அனுமதிக்கபடுகின்றார்கள்.

நாம் microsoft என்று நம்முடைய இணைய உலாவியில் தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தியவுடன் http://www.microsoft.com என்ற  அக்குறிப்பிட்ட இணைய பக்கத்தை நம்முடைய கணினியினுடைய திரையில் பிரதிபலிக்க செய்கின்றது

இந்த தகவலை நம்முடைய உலாவியில் வழங்குவதற்காக ஈருடல் ஓருயிர் போல ஒருவர் இல்லை என்றால் மற்றொருவர் இல்லை என்றநிலையில் செயல்படும். இணைய வழங்கி, டிஎன்எஸ் வழங்கி ஆகிய இருஅமைப்பு நமக்கு பயன்படுகின்றன..

இவற்றுள் டிஎன்எஸ் வழங்கிதான் மிகப்பெரிய பணியை செய்கின்றது. அதாவது நாம் தொலைதொடர்பு துறை வழியாக இணையதளத்தினை தொடர்புகொள்ளும்போது தொலைதொடர்பு துறையின் DNS அமைப்பு வழியானது இணைய வழங்கி இருக்குமிடத்தை கண்டறிந்து நம்மை மிகச்சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்கின்றது

இந்த DNS என்பது Domain Name System என்ற பெயரின் சுருக்கு பெயராகும் இது இணையம் அல்லது ஒரு தனியார் வலையமைப்பில் இணைக்கபட்டிருக்கும் கணினிகள், சேவைகள், போன்ற அனைத்து இணைய அமைப்பிற்கும் வரிசைக்கிரமமாய் பெயரிடும் முறைமையாகும். இதில் பங்கேற்கும்  ஒவ்வொரு கண்னிக்கும் ஒதுக்கப்படும் களப்பெயர்களுடன் (Domain) இது பல்வேறு தகவல்களை தொடர்புபடுத்துகிறது. அதுமட்டுமின்றி கணினியின் வன்பொருட்களையும், பெயர்களையும் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தால் அவற்றை தொடர்புகொள்வது பெரிய சிரமமாகும் அதனை தவிர்த்து குழப்பம் எதுவுமில்லாமல் ஒரேமாதிரியான ஒழுங்குமுறையுடன் இந்த பெயர்கள் இருந்தால் தொடர்புகொள்வதற்கு எளிதாக இருக்கும் உதாரணமாக பெயரின் பின்னொட்டு ஆனது..com என இருந்தால் வியாரதொடர்புடையன .edu என இருந்தால் கல்வி தொடர்புடையன என சுலபமாக அறிந்து கொள்ள ஏதுவாகின்றது.

அதனடிப்படையில் நமக்கு பொருள்புரிவதாக இருக்கும் இந்த களப் பெயர்களை,இணைய உலாவியில் உலகளாவிய வகையில் அடையாளம் காணும் வலையமைப்பு சாதனங்களுக்கு புரிகிற எண் அடையாளங்க ளாக மொழிபெயர்க்கபடுகின்றது. மனிதருக்கு எளிதான கணினி வன்பொருகளை இணைய முகவரிகளாக மொழிபெயர்ப்ப்பது இதன் பணி. எ.கா http://www.tamilcomputer.com என்பது 75.126.38.186 என்கிற எண்ணாக மொழிபெயர்க்கப்படுகிறது.

இணையத்தினை பயன்படுத்தும் அனைவரும் பேண்ட்வித் என்ற சொல்லை பற்றி கேள்விபட்டிருக்கலாம் அல்லது அறிந்திருக்கலாம்.

நம்மால் பயன்படுத்தபடும் இணையத்தளங்கள் அனைத்திற்கும் இந்த பேண்ட்வித் தான் அடிப்படை தேவையாகும்.

நம்மூரில் வசிப்பவர் ஒருவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அகல்கற்றை சேவைஇணைப்பை பெற்றிருந்தார். ஒருசில மாதம் கழித்து வந்த கட்டண அறிக்கையை பார்த்தபோது அவருக்கு தீவிர நெஞ்சுவலி வரும்படி ஆகிவிட்டது சாதாரணமாக வரவேண்டிய கட்டணத்தினை விட திடீரென 5 மடங்கு அதிகமாக வந்துவிட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று வினவியபோது ’’நீங்கள் வழக்கமாக செலுத்திய கட்டணத்திற்காக எங்களால் அளிக்கபடும் சேவையை விட அதிகமாக நீங்கள் இணையத்தினை பயன்படுத்துவிட்டீர்கள் ’’ அதனால்தான் இந்த கட்டணம் அதிகமாக வந்தது என்று கூறினார்கள். அதிகமாக பயன்படுத்தியதை பற்றி தமக்கு புரியுமாறு விளக்கிகூறும்படி கோட்டுகொண்டார்

அதாவது நீங்கள் பயன்படுத்திய பேண்ட்வித்தை உறுதியளித்த வரையறையைவிட தாண்டி நீங்கள் பயன்படுத்தியதால் அதற்கேற்றார்ப்போல் கட்டணம் வந்துள்ளது என்றார்கள்..

பேண்ட்வித் என்பது நாம் செலவழித்த இணையம். அதாவது ஒரு இணையதளத்தினை துவங்கும்போது அந்த இணைய தளத்தில் உள்ள படங்கள், காணொளிகள், உரைகள் என அனைத்தும் நம்முடைய கணினியில் தோன்றுவதற்காக அவையனைத்தும் நம்முடைய கணினிக்கு தரவிறக்கம் செய்யப்படும். அந்த தரவிறக்கம் செய்யப்படும் அளவே பேண்ட்வித் ஆகும் .

உதாரணமாக ஒரு செய்திதாள் நிறுவனத்தின் இணையதளத்திலுள்ள ஒரு படம் 1 எம்பி இருக்கிறதெனில்,. அதை நம்முடைய கணினியில் ஒரு முறை பார்த்தால் 1 எம்பி பேண்ட்வித் செலவாகிறது என்ற பொருளாகும். இதே படத்தினை 100 முறை பார்த்தால் 100 எம்பி பேண்ட்வித் செலவாகின்றது. ஒரு மாதத்திற்கு 30 X 100 X1 எம்பி = 3000 எம்பி அதாவது 3 ஜிபி ஆகின்றது. மாதம் ஒன்றிற்கு 2 ஜிபி அளவு பயன்படுத்துவதற்கு  ரூபாய்99 என்ற இணையக்கட்டணம் திட்டத்தில் அனுமதி பெற்றிருந்தால் மீதமுள்ள 1 ஜிபிக்கு நாம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பணம் செலுத்தவேண்டும்.

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-60- அச்சிடுதல், ஏற்றுமதி செய்தல், மின்னஞ்சல் செய்தல்

முந்தைய தொடர்களில் கூறப்பட்டவாறு உருவாக்கிய ஒரு ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்பினை மேலே கருவிபட்டையிலுள்ள அச்சிடுவதற்கான குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம் அச்சிடுமாறு செய்யமுடியும் . ஆனால் இந்த ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்பினை அச்சிடும்போது பின்புலவண்ணம் போன்றவைகளையும் கணக்கில் கொண்டு அச்சிட்டால் மட்டுமே அச்சிட பட்ட ஆவணங்களிலும் நாம் எதிர்பார்த்தவாறு  தோற்றம் இருக்கும்  அதனால்  மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் Tools => Options => Open Office.org  => Print=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-60-1 
உடன்  படம்-60-1-ல்   உள்ளவாறு தோன்றிடும் Open Office.org-Print என்ற உரையாடல் பெட்டியில் தேவையான வாய்ப்புகளை தெரிவு செய்து கொள்க. மேலும் கூடுதலாக Convert colors to grayscaleஎன்ற தேர்வுசெய் பெட்டியையும் தெரிவுசெய்துகொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த மாறுதல்களை சேமித்துகொள்க
பிரௌவ்ச்சராக அச்சிடுதல்
பிறகு  மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் File => Print=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Printஎன்ற உரையாடல் பெட்டியில்Properties என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக   அதன் பின்னர் தோன்றிடும் Properties என்ற திரையில் படுக்கைவசமாகவா கிடைவசமாகவா(portrait or landscape) என மிகச்சரியாக தெரிவுசெய்துகொள்க
 பின்னர் Printஎன்ற உரையாடல் பெட்டியில் Optionsஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
பிறகு தோன்றிடும் Optionsஎன்ற திரையின் pages என்ற பகுதியில் Brochure , Right page, Left page ஆகிய வாய்ப்புகளை தெரிவு செய்து கொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
  பிடிஎஃப் கோப்பாக உருமாற்றுதல்
  ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்புதிரையில் மேலே கருவிபட்டையிலுள்ள பிடிஎஃப் கோப்பாக உருமாற்றுவதற்கான குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் பிடிஎஃப் கோப்பாக உருமாற்றம் செய்யமுடியும் அதற்கு பதிலாக மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் File =>Export as PDF => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் PDF option என்ற படம்-60-2ல்உரையாடல் பெட்டியில் உள்ள ஐந்துவகை தாவியின் பொத்தான்களின் வாய்ப்புகளில் தேவையான தாவியின் பக்கத்திற்குசென்று அதில் தேவையான வாய்ப்புகளை தெரிவுசெய்து கொண்டு இறுதியாக Exportஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக 

 
 படம்-60-2
மிகமுக்கியமாக securityஎன்ற தாவியின் பக்கத்தில் உள்ள set open password ,set permissions password ஆகிய  பொத்தான்கள்  அனுமதிபெற்றவர்கள்மட்டுமே திறந்து பயன்படுத்திடமுடியும் என்ற பாதுகாப்புசெய்வதற்காக  மிக முக்கிய பங்காற்று கின்றன  இந்த பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்கியதும் தோன்றும்   set open password என்ற சிறு உரையாடல் பெட்டியில் தேவையான கடவு சொற்களை இரண்டுமுறை உள்ளீடுசெய்து OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. மேலும் இதேsecurityஎன்ற தாவியின் பக்கத்தில் உள்ள மற்ற வாய்ப்புகளை தேவையானவாறு  தெரிவு செய்து கொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
ப்ளாஷ் கோப்பாக ஏற்றுமதிசெய்தல்
இம்ப்பிரஸின் முக்கியபயனே அதன்உள்ளடக்கங்கள் அசைவூட்டம் செய்வதில்தான் உள்ளது நாம் மேலேகூறியவகையில் இம்ப்பிரஸின் கோப்பினை ஏற்றுமதிசெய்தால் மற்றஅலுவலக கோப்புபோன்று இதுவும் இருக்குமே தவிர அதில் அசைவூட்டம் ஏதும் இருக்காது.(தேவையெனில் இதனை திரையில் காண்பதற்கு அடோப் ப்ளாஷ் பிளேயரை  http://www.adobe.com/products/flashplayer/  என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிகொள்க ) 
    பார்வையாளர்கள் அசைவூட்டத்துடன் இந்த இம்ப்பிரஸின் கோப்பினை காணவும் பயன்படுத்திடவும்   மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் File => Export=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பின்னர் தோன்றிடும் திரையில் File Formatஎன்பதன்கீழ் Macromedia Flash (SWF) (.swf)என்ற வாய்ப்பினை அதன்கீழிறங்கு பட்டியலை திறப்பதன்மூலம் தெரிவு செய்து கொண்டு save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி கோப்பினை சேமித்துகொள்க 
இணையபக்கமாக உருமாற்றுதல்  
.பார்வையாளர்கள் இதே கோப்பினை இணையபக்கமாக பயன்படுத்திட மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் File => Export=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் திரையில் file type என்பதன்கீழ் HTML Documentஎன்ற வாய்ப்பினை அதன்கீழிறங்கு பட்டியலை திறப்பதன்மூலம் தெரிவுசெய்துகொண்டபின் தோன்றிடும் திரையில் தேவையான வாய்ப்புகளை தெரிவுசெய்துகொண்டு Create என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி கோப்பினை சேமித்துகொள்க
மின்னஞ்சல்செய்தல்
நாம் உருவாக்கிய ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்பினை நண்பர்களுடன் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துகொள்வதற்காக  மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் File => Send =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக


படம்-60-3
 உடன் படம்-60-3-ல் உள்ளவாறு விரியும் சிறுபட்டியில் முதல்வாய்ப்பு எந்த அலுவலகபயன்பாட்டினை பயன்படுத்திகொண்டிருக்கின்றோமோ அதே கோப்பாக மின்னஞ்சல் அனுப்புவதற்கான  பொதுவான  கட்டளையாகும்
   இரண்டாவதாக உள்ள  E-mail as OpenDocument Presentationஎன்ற வாய்ப்பு கட்டளையானது பெறுபவர் இம்ப்பிரஸ் கோப்பாகவே பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கின்றது 
 E-mail as Microsoft PowerPointஎன்ற மூன்றாவது வாய்ப்பு பெறுபவர் மைக்கரோசாப்ட் அலுவலக பயன்பாட்டினை பயன்படுத்துவர்எனில் நாம் அனுப்பும் இம்ப்பிரஸ் கோப்பானது .PPTஎன்ற பின்னொட்டுடன் உருவாக்கி அனுப்படும் நமக்கும் இந்த கோப்பினை கையாளுவதற்கு சிரமமில்லாமல்   இருக்கும் 
  மூன்றாவதாக உள்ள E-mail as PDF,என்ற வாய்ப்புிற்கான கட்டளையானது எந்தவொரு பயனாளரும் சுலபமாக திறந்து பார்ப்பதற்கான கோப்பாக உருவாக்கி அனுப்பிடுவதற்கான வாய்ப்பாகும்
 நிற்க இந்த மின்னஞ்சலிற்காக உருவாக்கபடும் *.OTP,*.PPT ஆகிய வகை கோப்புகள் கணினி நினைவக்ததில் சேமிக்காது மின்னஞ்சல் அனுப்புவதற்காக மட்டும் தற்காலிகமாக உருவாக்கி அனுப்பபடும்  என்ற செய்தியை கவனத்தில் கொள்க 
  ஓப்பன்ஆஃபிஸ் இம்ப்பிரஸில் உருவாக்கிய கோப்பினை மைக்ரோசாப்ட் பவர்பாயின்ட்டில் திறந்து கையாளுவதற்காக மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் File => Save As=>ன்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Save As என்ற திரையில் File Type என்பதன்கீழ் Microsoft PowerPoint 97/2000/XP (.ppt). என்ற வாய்ப்பினை அதன்கீழிறங்கு பட்டியலை திறப்பதன்மூலம் தெரிவுசெய்துகொண்டு save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-60-4
உடன் படம்-60-4-ல் உள்ளவாறு எச்சிரிக்கை செய்வதற்காக தோன்றிடும்   openoffice.org3.0 என்ற சிறுஉரையாடல்பெட்டியில்keep current format  என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குவதன்மூலம்  சேமித்துகொள்க .

புதியவர்களுக்கு வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகள் (TCP/ IP )

வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகள் (Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP)) என்பது வலைத்தளம் (Internet) தொடர்புடையதாகும். இந்த வலைத்தளமானது கணினியுடன் தொடர்புடையதாகும்  கணினியினுடைய செயலானது  பைனரி எனப்படும் இருமஎண்களின் அடிப்படையில் இயங்ககூடியதாகும்   இந்த பைனரி எனப்படும் இருமஎண்களானது மின்னோட்டம் உள்ள (on)நிலை  மின்னோட்டம் இல்லா( Off  நிலை ஆகிய இருமின்னோட்டநிலைகளை அடிப்படையாக கொண்டே செயல்படுகின்றது  நம்முடைய இரண்டு கைகளிலும் சேர்த்து பத்து விரல்கள் உள்ளதால் தான் நாம் பத்தை அடிப்படையாக கொண்ட தசம எண்முறையை (Decimal)கையாளுகின்றோம்.
அவ்வாறே மின்னோட்டத்திலும் I,(on)O (off) என இரண்டு நிலைகள் உள்ளதால் இரண்டை அடிப்படையாகக் கொண்ட பைனரி முறையை கணினியானது கையாளுகின்றது. இந்த இரண்டே எண்களை வைத்து எவ்வளவு பெரிய எண்களையும் எளிதாகவும் விரைவாகவும் எழுத முடிகிறது.எண்கள், எழுத்துக்கள், படங்கள் ஆகிய அனைத்தும் இந்த இரும எண்களின் அடிப்படையில் அதனைகொணடு  கணக்கிட ,எழுத, வாசிக்க, வரைய, பத்திரப் படுத்த என்பனபோன்ற செயல்கள் கணினியால் பயன் படுத்தப் படுகிறது. இந்த இரும(binary) எண்களைத்தான் டிஜிட்டல் என்கிறோம். தகவல் பரிமாற்றத்திற்கும் இந்த டிஜிட்டல் சிக்னல் தான் அடிப்படையாக பயன் படுகிறது. இந்த டிஜிட்டல் சிக்னலானது  கம்பி அல்லது கம்பி இல்லாத முறையில் உலகின் பல இடங்களுக்கும் அலைபரப்பப் படுகிறது. இந்த தகவல் பரிமாற்ற முறையை ஒழுங்கு படுத்துவதுதான் வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகள் (Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP))
தகவல் பரிமாற்றத்தின் ஆரம்ப நிலையில் மார்க்கோனியின் ரேடியோ தந்தியின் மூலம் மோர்ஸின் குறியீட்டு முறையை பயன் படுத்தி தகவல்கள் அனுப்ப பட்டு வந்தது. அதிலும் குறுகிய ஒலி, நீள ஒலி ஆகிய இரண்டு ஒலி நிலைகளை பயன் படுத்தி செய்திகளை வெகுதொலைவுகளுக்கு அனுப்பிவைத்தனர்.
அவ்வாறு அனுப்பும் போது ஒரு சொல் அனுப்பி முடித்தபின் பெற்றுக் கொண்டவர் Roger என்ற சொல்லின் முதலெழுத்தாகிய “R ”என்ற ஆங்கில எழுத்தை அனுப்புவார்கள்.அதாவது. அந்த “Roger” சொல்லின் விளக்கம் “I have received all of the last transmission” என்ற தகவல்ஆகும் அதாவது”நீங்கள் அனுப்பிய கடைசிச் செய்தியை முழுவதுமாக பெற்றுக் கொண்டேன் ” என்று பொருளாகும். பெறுபவரிடமிருந்து இந்த “R ”என்ற குறியீடு கிடைத்தபின் தான் அடுத்த சொல்லை அனுப்பவர் அனுப்புவார். இல்லாவிட்டால் ஏற்கனவே அனுப்பியதையே மீண்டும் அனுப்புவார். இதனால் தகவல் பரிமாற்றம் முழு உத்திரவாதத்துடன் நடைபெற்றது.
இதே போன்ற ஒருமுறைதான் இன்றைய இணைய தகவல் பரிமாற்றத்திற்கும் பயன் படுகிறது. நமக்கு வேண்டிய தகவல் எங்கோ ஒரு மூலையில் இருந்தும், பல சேயாளர் கணினிகளில் இருந்தும், பல தளங்களை கடந்து நம்முடைய கணினிக்கு வருவதற்குள் தகவல் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏராளமான அளவில் உள்ளன.அதிலும் இந்த பைனரி எண்களுக்கான சிக்னல்கள் எளிதில் தொலைந்து போக வாய்ப்புள்ளதால் அனுப்பிய தகவல் இலக்கு நோக்கி சரியாக சென்றடைந்ததா என உறுதி செய்வதற்கான ஏற்பாடுதான் இந்த வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகள் Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP). ஆகும் இதன் மூலம் தகவல் கண்டிப்பாக அதற்கான இலக்கிற்கு சென்ற சேரும் என்ற நம்மபகத்தண்மை இணையத்தினை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படுகின்றது
நமக்கு வரவேண்டிய தகவல்கள் எழுத்து, எண்கள், படம் ,ஆகியவை இரும எண்களாக மாற்றப் பட்டு தொடர்ச்சியாக நமக்கு அனுப்பப் படுகிறது. அவ்வாறு அனுப்பப்படு முன் இந்த எண்கள் முதலில் சிறு சிறு பொட்டலங்களாக மாற்றி அனுப்பப் படுகிறது.குறிப்பிட்ட சிறு கால (மைக்ரோ செகண்டுகளில்) இடைவெளியிலுள்ள பைனரிகளை சேர்த்து சிறு பொட்டலங்களாகவும் அந்த பொட்டலங்களில் உள்ள மொத்த எண்களின் கூட்டுத்தொகையும் கடைசியில் அந்த பொட்டலங்களுடன் அனுப்படுகிறது.
உதாரணமாக Tamil என்ற வார்த்தை அனுப்பப் படுவதாகக் கொள்வோம் .இந்த எழுத்துக்களின் பைனரி வடிவம் முறையே 84,97,109,105,108. ஆகவே 84,97,109,105,108,என்ற எண்கள் அனுப்பப் பட்டு , இவைகளின் கூட்டுத்தொகையான 503 என்ற எண்ணும் அதனுடன் சேர்த்து அனுப்பப் படுகிறது.  அந்த தகவலை பெறும் இடத்தில் அந்த பொட்டலங்களில் உள்ள எண்கள் ஒவ்வொன்றும் சரிபார்க்கப் பட்டு பின்னர் அவற்றின் கூட்டுத்தோகையும் கணக்கிடப் பட்டு அந்த பொட்டலங்களுடன் வந்த கூட்டுத்தொகை எண்ணுடன் ஒப்பிடப் பட்டு சரிபார்க்கப் படுகிறது. இவ்வாறு சரிபார்த்தவுடன் ஒப்புதல் சிக்னல் அனுப்பப் பட்டு அடுத்த தகவல் பெறத் தயாராகுகிறது.  இதில் எந்த இடத்தில் தவறு ஏற்பட்டாலும் தவறு என்ற செய்தி வந்துவிடும் நம்பகமான முழுமையான தகவல் பரிமாற்றத்திற்கு உத்திரவாதம் தான் இந்த வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகள் Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP).ஆகும்

Keyloggers என்ற பாது காப்பு கவசம்

நம்முடைய கணினி இணைய இணைப்பில் இருந்திடும்போது Keyloggers என்பதை நாம் பயன்படுத்தி கொண்டிருந்தால் நம்முடைய கணினிக்கு அதிக தீங்கிழைக்கும் நச்சுநிரலை நாமே விலை கொடுத்து வாங்கியதை போன்று ஆகிவிடும்  அதன்மூலம் பாதுகாப்பு எண், கடன்அட்டை எண், இணையம் தொடர்பான மின்னஞ்சலுக்கான பயனாளர் பெயர் ,கடவுச்சொற்கள் போன்ற விவரங்களை மிகச்சுலபமாக திருடிக்கொள்ள ஏதுவாகிவிடும்  இவைகளை நமக்கு தெரியாமலேயே நம்முடைய கணினியில் இவ்விவரங்களை அந்தந்த இணையபக்கங்களில் உள்நுழைவு செய்யும்போது உள்ளீடு செய்கின்ற விசைப்பலகையில் விசைகளின் அழுத்துதல்களை நகலெடுத்து அபகரித்து கொள்ள இந்த Keyloggers என்பது எதிராளிகளுக்க உதவுகின்றது  அதனால் அதனை எவ்வாறு நம்முடைய கணினியில் தவிர்ப்பது என இப்போது காண்போம்

KeyScrambler Personal என்பது Internet Explorer, Firefox, என்பன போன்ற இணையஉலாவியில் கூடுதல் கருவியாக இணைத்து செயல்படுத்தி கொண்டு நம்முடைய விசைப் பலகையின் தட்டுதல்களை எதிராளியாரும் அபகரித்து கொள்ளாமல் தவிர்த்து கொள்ள முடியும் இணையஉலாவியில் ,மின்னஞ்சலில், கடன்அட்டை தளத்தில் ,பிடிஎஃப் படிவத்தில் உள்நுழைவு செய்திடும்போது உள்நுழைவு பெட்டியில் பயனாளர் பெயர் கடவுச்சொற்கள் போன்ற விவரங்களை விசைப்பலகையின்மூலம் தட்டச்சு செய்திடும்போது இந்தவிவரங்கள் keyboard driver மூலம் கணினியின் இயக்க முறைமைக்கு தகவல்அனுப்பபட்டு encrypts செய்யபட்டு குறிப்பிட்ட தளத்திற்கு தேவையான தகவல்கள் கடத்தபட்டு அதன்பின்னர் நாம்விரும்பும் செயல்நடை முறைக்கு வருகின்றது இந்நிலையில் நமக்கு தீங்கிழைக்க நினைக்கும் எதிராளிகள் keyboard driver மூலம் கணினியின் இயக்கமுறைமைக்கு தகவல்அனுப்பபட்டு encrypts செய்யபட்ட தகவல் விவரங்களை கடத்தாமல் இந்த KeyScrambler Personal என்ற உலாவியின் கூடுதல் கருவி தவிர்த்து நம்முடைய கணினியில் உள்ளீடு செய்யும் தகவல்களுக்கு தானாகவே போதிய பாதுகாப்பு வழங்குகின்றது இது Windows 2000, 2003, XP, Vista, Windows 7 (32-bit and 64-bit)ஆகிய அனைத்து விண்டோ இயக்கமுறைமைகளிலும்  இயங்ககூடியதாகும்

ஐபி காப்(IPCop2.0) எனும் வலைபின்னல் பாதுகாப்பு கவசம்

IPCop என்பது விண்டோ ஃபயர் வால் போன்ற வளாக பிணையம் மற்றும் இணைய வலைபின்னலுக்கான ஒரு பாதுகாப்பு கவசமாகும் மேலும் இது ஒரு பொது அனுமதிவழங்கும் அடிப்படையிலான மென்பொருளாகும்

அதனால் மேலும் கூடுதலான பாதுகாப்பு வேண்டுமெனில் அதற்கேற்றவாறு நாமே மாறுதல் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்

இதனைhttp://www.ipcop.org/2.0.0/en/admin/html/index.html  என்ற தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவி பயன்படுத்தி கொள்ளமுடியும்

இம்மென்பொருள் செயல்படுவதற்கு  386 அடிப்படையில் இயங்கும் தனியாள்கணினி ,2 ஈதர்நெட்அட்டைகள், 32 எம்பி ரேம்,300 எம்பி வன்தட்டு நினைவகம் ஆகியவையே போதுமான வன்பொருளாகும்

இது ISDN,PPPoe,static,PPTP,DHCP என்பனபோன்ற வலைபின்னல் இணைப்பு வாய்ப்புகளை இது ஆதரிக்கும் திறனுடையதாகும்

இதனுடைய அடிப்படை நிறுவுகை தன்மையைகொண்டே வளாக பிணையத்திற்கு போதுமான பாதுகாப்பினை பெற்றுகொள்ளமுடியும்

இதில் நாம்விரும்பியவாறான ஃபயர்வால் கூடுதல் பாதுகாப்பினை நீட்டித்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது

இதில் உள்ள IP அட்டவணைகளின் விதிகளை  பயன்படுத்தி கணினிக்குள் வரும் தகவல்பொட்டலங்களை பாதுகாப்பிற்காக நன்கு பரிசோதித்து வடிகட்டி கொள்ளமுடியும்

இது IDE, SATA, SCSI  CF ஆகிய இயக்கிகளை RAID. உதவியுடன் ஆதரிக்ககூடியது

  இதில் பச்சைவண்ணவாய்ப்பு வளாகபிணையத்திறகும்  கம்பியில்லா வலைபின்னல் இணைப்பை நீலவண்ணமும் ,ஆரஞ்சுவண்ணம் சேவையாளர் இணைய இணைப்பிற்கும்  ,சிவப்பு வண்ணம் இணையஇணைப்பிற்கும்  பாதுகாப்பிற்காக நம்முடைய தேவைக்கேற்ற பாதுகாப்பினை அமைத்து கொள்ளமுடியும்

அதனால் வளாக பிணையத்திலிருந்து இணையத்திற்கோஇணையத்திலிருந்து வளாக பிணையத்திற்கோ தகவல்களை கடத்தும்போது தகுந்த அனுமதி பெற்ற பினனரே தகவல்கள் கடந்து செல்லுமாறு பாதுகாப்பு பலப்படுத்தபட்டு அமைக்கபட்டுள்ளது

இது டயல் மோடம் ,கேபிள் மோடம்,வொயர்லெஸ் மோடம் என்பன போன்ற எந்த வகையிலும்  இணையஇணைப்பு பெற்றிருந்தாலும் பாதுகாக்ககூடியது

இதில் Virtual Private Network (VPN) வழியாக ஒற்றையான மிகப்பெரிய வலைபின்னலையும்  அல்லது வெகுதூரத்திலிருந்து எங்கிருந்தும் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ளமுடியும்

பல்வேறு மெழிகளையும் ஆதரிக்ககூடியது

எக்செல் தாளில் உரைக்கோப்பை சுலபமாக திறத்தல்

எக்செல் தாளில் உரைக்கோப்பை  திறப்பதற்காக முயலும் ஒவ்வொரு முறையும் Text import wizard என்பது தோன்றி உரைஅமைப்பை  அமைக்கும்படி வழிகாட்டி பின்னர் உரையை கொண்டுவந்து பிரதிபலிக்க செய்யும்  அதற்கு பதிலாக ஒருமுறை மட்டும் உரையை எவ்வாறு எக்செல் தாளிற்குள்கொண்டு வருவது என அமைத்த பின் எப்போது வேண்டுமானாலும் உரையை எக்செல் தாளிற்குள்  கொண்டுவரும் செயல் சுலபமாகிவிடும்  அதற்காக எக்செல் 2007 அல்லது 2010 பதிப்பு திரையில் data என்ற ரிப்பனின் திரையில் Get External data என்ற குழுவின்கீழுள்ள from text என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

   உடன்விரியும் import text file என்ற உரையாடல் பெட்டியில் தேவையான கோப்பினை தெரிவுசெய்துகொண்டு import என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

எக்செல் 2003 பதிப்புத்திரையில்   மேலே கட்டளைபட்டையில் Data=> Get External Data=> Import Data=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Select dat sourcesஎன்ற உரையாடல் பெட்டியில் தேவையான கோப்பினை தெரிவுசெய்துகொண்டு open  என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பிறகு தோன்றிடும் Text import wizard :step 1 of 3என்ற திரையில்  file origin    என்பதில் Windows (ANSI) என்ற வாய்ப்பு தெரிவுசெய்யபட்டிருப்பதால் Nextஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

  பின்னர் தோன்றிடும் Text import wizard :step 2 of 3என்ற திரையில் delemiters என்பதன்கீழ் commaஎன்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொண்டு  next என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

அதன் பின்னர் தோன்றிடும் Text import wizard :step 3 of 3என்ற திரையில் coloumnஎன்பதன் கீழுள்ள தேர்வுசெய்பெட்டியகளில் தேவையானவற்றை தெரிவுசெய்து கொள்க  பி்றகு Advancedஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 உடன்தோன்றிடும் Advanced Text Import settings உரையாடல் பெட்டியில் தேவையானவாறு வாய்ப்புகளை தெரிவுசெய்து கொண்டு  ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் வழிகாட்டி உரையாடல் பெட்டியில் finish  என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

  உடன் தோன்றிடும் import dataஎன்ற சிறுபெட்டியில் எந்த பணித்தாளில் சேமிக்கவேண்டும் என்பதற்கான வானொலிபொத்தானை தெரிவு செய்து கொணடு properties  என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் தோன்றிடும் External Data Range Properties என்ற உரையாடல் பெட்டியில்

Save Query Definition  ,Prompt for the file name on refresh ,Overwrite existing cells with new data, clear unused cells ,Fill down formulas in columns adjacent to data  ஆகிய தேர்வுசெய் பெட்டிகளை தெரிவுசெய்துகொண்டு ok என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

    அதன் பின்னர் import dataஎன்ற சிறுபெட்டியில் ok என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு  எந்த எக்செல் தாளின் எந்த செல்லிலும் சுலபமாக உரையை பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும்

சிலநேரங்களில் கணினியில் I have high CPU usage என்று தோன்றிடும் பிழைசெய்தியை எவ்வாறு தடுப்பது

 கணினியின் மத்திய செயலகம்(Central Processing Unit (CPU)) என்பது நம்முடைய மூளையை போன்று கணினிக்கு  அனைத்தை செயல்களையும் செயல்படுத்தி கட்டுபடுத்தகூடிய பகுதியாகும்  அதனால் அங்கு ஒரே நேரத்தில் எண்ணற்ற செயல் நடைபெறும்போது இம்மத்தியசெயலகத்தின் திறனைவிட அச்செயல்களுக்கு தேவையான திறன் அதிகமாயின் மேற்கண்ட பிழைச்செய்தி திரையில் தோன்றிடும் அல்லது கணினியின் செயல் தொங்கலாக நின்றுவிடும்

பொதுவாக ஏதாவது நச்சுநிரல் நம்முடைய கணினியில் தொற்றிகொண்டு செயல்படுவதே இதற்கான அடிப்படை காரணமாகும் இதனை தவிர்ப்பதற்கு நல்ல திறனுள்ள அவ்வப்போது மேம்படு்ததி கொண்டேயுள்ள நிறுவனத்தின் எதிர்நச்சுநிரல் மென்பொருளை நம்முடைய கணினியில் நிறுவிகெண்டு கணினியின் நினைவகம் முழுவதையும் ஆய்வுசெய்து தேவையற்ற நிரல்தொடர்களை நச்சுநிரல் மென்பொருட்களை நீக்கம் செய்து கொள்க

 அடுத்ததாக நம்முடைய கணினியில் நிறுவியுள்ள மென்பொருட்களை பற்றிய தகவல்கள் இணைய இணைப்பு பற்றிய தகவல்கள் கணினியுடன் இணைக்கபட்டுள்ள துனைக்கருவிகளை இயக்குவதற்கான இயக்கமென்பொருட்கள் பற்றிய தகவல்கள் ஆகிய அனைத்தும் கணினியின் பதிவேட்டில் பதிவுசெய்யபபபட்டிருக்கும் இதுவே ஒரு புத்தகத்தின் உள்ளடக்கவிவரங்களை கூறும் அட்டவணைபோன்ற கணினியில் நிறுவபட்டுள்ள அனைத்து மென்பொருட்டகளை பட்டிய தகவல் தொகுப்பு பகுதியாகும்  இந்த பதிவேட்டையும் அதற்கென உள்ள CCleaner  போன்ற சிறப்பு மென்பொருட்களை கொண்டு தேவையற்ற நிரல்தொடர்களை நச்சுநிரல் மென்பொருட்களை நீக்கம் செய்து கொள்க

 

சுயமான பயிற்சி பெறுவதற்கான தளங்கள்

Expert Village: இதன் இணையதளமுகவரி http://www.expertvillage.com/ என்பதாகும் இது எந்தவொரு செயலையும் மற்றவர்களின் துனையில்லாமல் நாமே  எவ்வாறு செய்வது என சுயமாக கற்றுக்கொள்வதற்கான மிகப்பெரிய இணையதளமாகும் இந்த தளத்தில் ஏராளமான தலைப்புகளில் ஆயிரக்கணக்கான ஒளிஒலிகாட்சியில் பயிற்சிகள் உள்ளன

  LearnThat.com: இதன் இணையதளமுகவரி http://www.learnthat.com/ என்பதாகும் இந்ததளமானது வியாபாரம், நிதி ,வீட்டு பராமரிப்பு, கணினி, இதர தெழில்நுட்பம் போன்றவைகளுக்கான பயிற்சியை பெறுவதற்கு உதவுகின்றது

Koonji: இதன் இணையதளமுகவரி http://www.koonji.com/ என்பதாகும் இந்ததளத்தின் மூலம் எதனையும் மிகசுலபமாக அறிந்துகொள்ளவும் தெரிந்தகொள்ளவும் முடியும்

 SuTree: இதன் இணையதளமுகவரி http://www.sutree.com/ என்பதாகும் இந்ததளத்தின் மூலம் நமக்குதெரியாததை தெரிந்துகொள்ளவும் நமக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்றுகொடுக்கவும் முடியும் .

 VideoJug: இதன் இணையதளமுகவரி http://www.videojug.com/ என்பதாகும் இந்ததளத்தின் மூலம் பின்னல்தொடர்பான அனைத்து வகை  பயிற்சிகளையும் காட்சியாக கண்ணால் கண்டு செயல்பயிற்சி பெறமுடியும்

 FindTutorials.com: இதன் இணையதளமுகவரி http://www.findtutorials.com/ என்பதாகும் இந்ததளமானது கல்வி, பொழுதுபோக்கு ,சிறுதிட்டங்களை உருவாக்குதல் என்பன போன்றஅனைத்துவகை பயிற்சிகளையும் பெறஉதவுகின்றது

 TrickLife: இதன் இணையதளமுகவரி என்பதாகும் இந்ததளத்தின் மூலம் நம்முடைய வாழ்க்கையை உடல்நலத்தை மனநலத்தை மேம்படுத்திகொள்ள முடியும்

  Instructables: இதன் இணையதளமுகவரி http://www.tricklife.com/ என்பதாகும் இந்ததளத்தின் மூலம் பயனாளர் விரும்பும் எந்த வகைபயிற்சியையும் இதில் உள்ள ஒலிஒளி காட்சி  மூலம் பெறமுடியும்

 MyTutorials: இதன் இணையதளமுகவரி http://www.mytutorials.com/ என்பதாகும் இந்ததளத்தின் மூலம்  நாம் விரும்பும் பயிற்சியை தேடி பெற்று கற்றுக்கொள்ள முடியும்

 Tutorial Ninjas:இதன் இணையதளமுகவரிhttp://tutorialninjas.net/  என்பதாகும் இந்ததளத்தின் மூலம்  சேமிப்பு தொடர்பான அனைத்து பயிற்சி படிப்புகளும்  பெறமுடியும்

 Hodder Education: இதன் இணையதளமுகவரி http://www.hoddereducation.co.uk/SelfLearning என்பதாகும் இந்ததளத்தின் மூலம் விளையாட்டு உடல்நலம் இசை போன்ற வகைகளில் சுயமாக கற்றுக்கொள்வதற்கான பயிற்சிகளை பெறமுடியும்

 Sofia: இதன் இணையதளமுகவரி http://sofia.fhda.edu/index.htm என்பதாகும் இந்ததளத்தின் மூலம் ஆழ்ந்த அறிவுபூர்வமான கருத்துபரிமாற்றங்கள் இலவசமாக  பெறமுடியும்  நிரல்தொடர் எழுதுவதற்கான பயிற்சி, அச்சுக்கோற்பு பயிற்சி,புவியியல் தொடர்பான படிப்புகள் இத்தளத்தில் அதிக அளவில்  கிடைக்கின்றன

 I Can Learn Anything:இதன் இணையதளமுகவரி http://icanlearnanything.com/ என்பதாகும் இதுஒரு கட்டண தளமாகும் ஆயினும் சமூகம் தொடர்பான ஏராளமான பயிற்சிக்கான ஒலிஒலி காட்சி சாதனங்கள்  இங்கு கிடைக்கின்றன

 Wikiversity: இதன் இணையதளமுகவரி http://en.wikiversity.org/wiki/Wikiversity:Main_Page  என்பதாகும் இந்ததளத்தில் 10,000  அதிகமான பயிற்சிக்கான ஒலிஒலி காட்சிகள் கட்டளைகள் இலவசமாக கிடைக்கின்றன

பிடிஎஃப் கோப்புகளிலுள்ள உரைவரிகளை நாம்விரும்பியவாறு மேலெடுப்பாக தோன்றிடுமாறு செய்யமுடியும்

பிடிஎஃப் கோப்புகளிலுள்ள உரைவரிகளை நாம்விரும்பியவாறு மேலெடுப்பாக தோன்றிடுமாறு செய்யமுடியும்

இதற்காக ஏதேனுமொரு பிடிஎஃப் உரைவடிவகோப்பினை அடோப்அக்ரோபேட் பயன்பாட்டின் மூலம் திறந்துகொண்டு தேவையான உரைவரிகளை தெரிவுசெய்துகொள்க

பி்ன்னர்  மேலே கட்டளைபட்டியிலிருந்து Tools=> highlighting text => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம்  தெரிவுசெய்திருந்த  உரையானது மஞ்சள் வண்ணத்தில் மேலெடுப்பாக தோன்றிடும் அதனை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

அதன் பின்னர் விரியும் குறுக்குவழிபட்டியில் properties என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு விரியும் Highlight propertiesஎன்ற  உரையாடல் பெட்டியில்  Appearance என்ற தாவியின் திரையில் தேவையான வண்ணத்தை தெரிவுசெய்து கொள்க

தேவையெனில் வேறு வாய்ப்புகளை general என்ற தாவியின் திரையில் தெரிவுசெய்து கொண்டு ok  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

Previous Older Entries