Gpg4win கட்டற்ற பயன்பாடு ஒருஅறிமுகம்

மின்னனு கையொப்பம் ,மறையாக்கம் ஆகிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் மின்னஞ்சல்களையும் கோப்புகளையும் பாதுகாப்பாக கொண்டுசெல்ல உதவுவதுதான் Gpg4win எனும் கட்டற்ற கட்டணமற்றபயன் பாடாகும் இதில்மறையாக்க தொழில்நுட்பமானது தேவையற்றவர்களை குறிப்பிட்ட ஆவணத்தை படித்தறிய முடியாமல் தடுக்கின்றது அவ்வாறே மின்னனு கையொப்பதொழில்நுட்பமானது வேறுயாரும் குறிப்பிட்ட ஆவணத்தினை திருத்தம் செய்யமுடியாதவாறு தடுக்கின்றது இதன்பின்புலத்தில் GnuPG எனும் கருவி மறையாக்கம் செய்திடும் செயலை செயல்படுத்திடுகின்றது ,மைக்ரோ சாப்ட் அவுட்லுக்கின் கூடுதல் இணைப்புகருவியாக GpgOLஎன்பதும் விண்டோ எக்ஸ்புளோரரின் கூடுதல் இணைப்புகருவியாக GpgEXஎன்பதும் மேலும் உரையாடல்பெட்டியான Kleopatra என்பதற்கு மாற்றாக GPAஎன்பதும் இதன் பின்புலத்தில் செயல்படுகின்ற உள்ளுறுப்பகளாகும் GpgOLஎனும் கூடுதல் இணைப்பு கருவியானது மைக்ரோ சாப்ட்அவுட்லுக்கின்2010, 2013, 2016 , 2019 ஆகிய பதிப்புகளின்32 பிட் .64பிட்ஆகிய இரண்டு வகை கணினிகளிலும் செயல்படும் திறன்மிக்கது மின்னஞ்சல்களை கொண்டு செல்லSMTP/IMAP, MS Exchange சேவையாளர் 2010 மற்றும் அதற்கு பிந்தையபதிப்பு ஆகியவற்றை பயன்படுத்தி கொள்கின்றது இது விண்டோ மட்டுமல்லாது லினக்ஸ் ,மேக் ஆகிய இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன் கொண்டது இதுOpenPGP , S/MIME (X.509) ஆகியவற்றை ஆதரிக்கின்றது நாம் விரும்பினால் இந்த Gpg4win ஐ இதனை நம்முடைய மொழியில் செயல்படுமாறு கூடமாற்றியமைத்து கொள்ளமுடியும்மேலும் விவரங்களுக்கு https://www.gpg4win.org/எனும் இணையதளபக்கத்திற்கு செல்க

ஃபயர்பேஸ்-தொடர்-28-ஃபயர் பேஸை பயன்படுத்தி ஆண்ட்ராய்டின்நிகழ்வுநேர குழுவிவாத பயன்பாட்டை உருவாக்குதல்- தொடர்ச்சி

முந்தைய இதழின் தொடர்ச்சியாக தொடர்ந்து Chat activity என்பதை துவங்குவதற்காகChat.java: எனும் பெயரில் ஒரு இனத்தை உருவாக்கிடுக.அதற்கான குறிமுறைவரிகள் பின்வருமாறு
Chat.java
package com.androidchatapp;
import android.support.v7.app.AppCompatActivity;
import android.os.Bundle;
import android.view.Gravity;
import android.view.View;
import android.view.ViewGroup;
import android.widget.EditText;
import android.widget.ImageView;
import android.widget.LinearLayout;
import android.widget.RelativeLayout;
import android.widget.ScrollView;
import android.widget.TextView;
import com.firebase.client.ChildEventListener;
import com.firebase.client.DataSnapshot;
import com.firebase.client.Firebase;
import com.firebase.client.FirebaseError;
import java.util.HashMap;
import java.util.Map;
public class Chat extends AppCompatActivity {
LinearLayout layout;
RelativeLayout layout_2;
ImageView sendButton;
EditText messageArea;
ScrollView scrollView;
Firebase reference1, reference2;
@Override
protected void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_chat);
layout = (LinearLayout) findViewById(R.id.layout1);
layout_2 = (RelativeLayout)findViewById(R.id.layout2);
sendButton = (ImageView)findViewById(R.id.sendButton);
messageArea = (EditText)findViewById(R.id.messageArea);
scrollView = (ScrollView)findViewById(R.id.scrollView);
Firebase.setAndroidContext(this);
reference1 = new Firebase(“https://androidchatapp-76776.firebaseio.com/messages/” +
UserDetails.username + “_” + UserDetails.chatWith);
reference2 = new Firebase(“https://androidchatapp-76776.firebaseio.com/messages/” +
UserDetails.chatWith + “_” + UserDetails.username);
sendButton.setOnClickListener(new View.OnClickListener() {
@Override
public void onClick(View v) {
String messageText = messageArea.getText().toString();
if(!messageText.equals(“”)){
Map map = new HashMap();
map.put(“message”, messageText);
map.put(“user”, UserDetails.username);
reference1.push().setValue(map);
reference2.push().setValue(map);
messageArea.setText(“”);
}
}
});
reference1.addChildEventListener(new ChildEventListener() {
@Override
public void onChildAdded(DataSnapshot dataSnapshot, String s) {
Map map = dataSnapshot.getValue(Map.class);
String message = map.get(“message”).toString();
இதில் reference1 , reference2 ஆகிய இரு கையாளுபவர்கள் உருவாக்கப்படுகின்றனர். பயனாளர் ஒருவர் sendButton எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் sendButton.setOnClickListener எனும் செயல் நடைமுறைபடுத்தப்பட்டு தேவையான செய்தியும் உருவாக்கப்பட்டு reference1 reference2 ஆகியவற்றிற்கு தள்ளப்படுமாறு செய்யப்பட்டு தானாகவே ஃபயர்பேஸ் தரவுதளமானது நிகழ்நிலைபடுத்தி கொள்கின்றது கொடுக்கப்பட்ட DatabaseReference ref.என்பதில் child locationsஎனும் பகுதியில் addChildEventListenerisஎன்பது நிகழ்வை பெறுமாறு செய்கின்றது அதனால் தேவையான செய்தி reference1 இற்கு தள்ளப்படுவதால் அது onChildAddedஎன்பதை அழைக்கின்றது தொடர்ந்து onChildAddedஆனது addMessageBox() எனும் செயலியை அழைக்கின்றது இங்கு addMessageBox()எனும் வழிமுறையானது ListView பகுதியில்புதிய பெயரை பதிவுசெய்து உள்ளிணைத்திடுகின்றது அதனை தொடர்ந்து அது ஒரு chat messagesஆக திரையில் காண்பிக்கின்றது addMessageBoxஅழைத்திடும் ஒவ்வொருமுறையும் 9-patch image என்பதன் பின்புலத்தில் புதிய காட்சியானது தோன்றிடுகின்றது chat message layout ஆனது செயல்படத்துவங்கிடுவதால் layout.addView(textView) வாயிலாக தேவையான காட்சி Layoutஇல் சேர்த்திடுகின்றது இறுதியாக Register.javaஎனும் புதிய கோப்பினை உருவாக்கிடுக அதற்கான குறிமுறைவரிகள் பின்வருமாறு
Register.java
package com.androidchatapp;
import android.app.ProgressDialog;
import android.content.Intent;
import android.support.v7.app.AppCompatActivity;
import android.os.Bundle;
import android.view.View;
import android.widget.Button;
import android.widget.EditText;
import android.widget.TextView;
import android.widget.Toast;
import com.android.volley.Request;
import com.android.volley.RequestQueue;
import com.android.volley.Response;
import com.android.volley.VolleyError;
import com.android.volley.toolbox.StringRequest;
import com.android.volley.toolbox.Volley;
import com.firebase.client.Firebase;
import org.json.JSONException;
import org.json.JSONObject;
public class Register extends AppCompatActivity {
EditText username, password;
Button registerButton;
String user, pass;
TextView login;
@Override
protected void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_register);
username = (EditText)findViewById(R.id.username);
password = (EditText)findViewById(R.id.password);
registerButton = (Button)findViewById(R.id.registerButton);
login = (TextView)findViewById(R.id.login);
Firebase.setAndroidContext(this);
login.setOnClickListener(new View.OnClickListener() {
@Override
public void onClick(View v) {
startActivity(new Intent(Register.this, Login.class));
}
});
registerButton.setOnClickListener(new View.OnClickListener() {
@Override
public void onClick(View v) {
user = username.getText().toString();
pass = password.getText().toString();
if(user.equals(“”)){
username.setError(“can’t be blank”);
}
else if(pass.equals(“”)){
password.setError(“can’t be blank”);
}
else if(!user.matches(“[A-Za-z0-9]+”)){
username.setError(“only alphabet or number allowed”);
}
மேலே கொடுக்கப்பட்டுள்ள குறிமுறைவரிகளுக்கென தனியாக விளக்கம்எதுவும் தேவையில்லை அவைகளைபடித்தாலே குறிமுறைவரிகள் ஒவ்வொன்றும் எந்தெந்தசெயல்களுக்கான கட்டளைவரிகள் அவை என புரிந்து கொள்ளமுடியும் மேலும் இந்த தரவுகளைசேமித்து வைத்திடுவதற்காக பின்வரும் குறிமுறைவரிகளை கொண்டு UserDetails.javaஎனும் பெயரில்உருவாக்கிடுக
UserDetails.java
package com.androidchatapp;
public class UserDetails {
static String username = “”;
static String password = “”;
static String chatWith = “”;
தற்போது இந்த பயன்பாட்டினைஇயக்குக உடன் பயனாளர் உள்நுழைவு செய்வதற்கான Login திரையானது கணினியின் திரையில் தோன்றிடும் அதில் நம்முடைய பெயரை பயனாளர் பெயராக பதிவுசெய்து கொண்டு உள்நுழைவுசெய்திடுக அதனைதொடர்ந்து குழுவிவாத செய்யத்துவங்கிடுக இவ்வாறே WhatsApp, Facebook,Twitter போன்ற நமக்கென தனியானதொரு சமுதாய பயன்பாடுகளைகூட நாம் முயற்சி செய்தால் கண்டிப்பாக உருவாக்கிடமுடியும்என்ற செய்தியை மனதில்கொண்டு முயற்சி செய்துவற்றிபெற்றிடுக வாழ்த்துகளுடன்.

எழுத்தாளர்களுக்கு உதவிடும் ஆண்ட்ராய்டின் கட்டற்ற பயன்பாடுகள்

வலைபூக்களிலும் ,சமூதாய இணையதளங்களிலும் மின்புத்தகங்களிலும் தத்தமது கருத்துகளை எழுதி வெளியிடுவதற்கு எழுத்தாளர்கள் கணினிக்கு பதிலாக தங்களுடைய கைபேசி வாயிலாகவே எழுதவிரும்புகின்றனர் அவ்வாறு கைபேசி வாயிலாக எழுதுவதற்காக அதிலும் ஆண்ட்ராய்டு சாதனங்களின் வாயிலாக எழுதுவதற்கு உதவிடுவதற்காக பின்வரும் ஆண்ட்ராய்டின் கட்டற்ற பயன்பாடுகள் பேருதவியாய் இருக்கின்றன
1. Markor எனும் ஆண்ட்ராய்டின்கட்டற்ற பயன்பாடானது எளிய நெகிழ்வுதன்மையுடன் கூடிய உரைபதிப்பானாக விளங்குகின்றது இந்த பயன்பாட்டினை செயல்படுத்தியவுடன் தோன்றிடும் திரையில் new document எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்விரியும் புதிய உரைபதிப்பான் திரையில் நம்முடைய கருத்துகளை உள்ளீடு செய்திட துவங்கிடலாம் அதன்பின்னர் நாமே முயன்றும் அல்லது கருவிகளின் பட்டியில் உள்ள கருவிகளை சொடுக்குதல் செய்தும் உரைஆவணத்தினை வடிவமைப்பு செய்திடலாம் மேலும் நம்முடைய உரைஆவணமானது நம்முடைய கைபேசியில் அல்லது திறன்பேசியில் இவைகளின் கோப்பு வடிவமைப்பில் தானாகவே சேமித்து கொள்கின்றது இவ்வாறு ஆவணத்தினை சேமித்திடும்போது கைபேசியில் அதற்கான நினைவக வசதி பத்தாது என்ற நிலையில் நாம் விரும்பினால் Nextcloud எனும் பகுதியில்கூட சேமித்து கொள்ளமுடியும் நம்முடைய உரையை எழுதிமுடித்தபின்னர் அதனை முன்காட்சியாக காணும் வசதியும் இதில் உள்ளது அதுமட்டுமல்லாது நாம் செய்யவேண்டிய செயல்களை Todo.txt எனும் வசதியின் வாயிலாக பட்டியலாக செய்து கொள்ளமுடியும். ஆய்வாளர்கள் தங்களுடைய செயல்திட்டத்திற்கான மேற்கோள்குறிகளை எளிதாக இதில் செய்து கொள்ளமுடியும். மிகமுக்கியமாக நாம் உருவாக்கிய உரைவடிவிலான ஆவணத்தினை மற்றநண்பர்கள் எளிதாக படித்தறியும் வண்ணம் HTML அல்லது PDF வடிவமைப்புகளில் மேலேற்றம் செய்து கொள்ளமுடியும் மேலும் விவரங்களுக்கு https://gsantner.net/project/markor.html எனும் இணைய பக்கத்திற்கு செல்க
2. Orgzly எனும் ஆண்ட்ராய்டின்கட்டற்ற பயன்பாடானது மடிக்கணினியில் பயன்படுத்தப்படும் Emacs , Org modeஆகிய வடிவமைப்பினை போன்று கைபேசியில் பயன்படுத்தி கொள்ள பேருவியாக உள்ளது அதாவது Emacs இன் வடிவமைப்பை அதனுடைய குருவினிடம்தான் கற்றுகொண்டு பயன்படுத்தமுடியும் என்ற கட்டாயம் எதுவும் இல்லாமல் யார்வேண்டுமானாலும் இதில் new notebook எனும் புதிய உரைஆவணத்தினை துவங்கி இந்த Orgzly எனும் ஆண்ட்ராய்டின் கட்டற்ற பயன்பாட்டினை கொண்டு எளிதாக அதே வடிவமைப்பினை தங்களுடைய கைபேசியிலேயே கொண்டுவரலாம் அதனோடுகூடவே நாம் செய்யவேண்டிய செயல்களை task lists எனும் வசதியின் வாயிலாக பட்டியலாக செய்து கொள்ளமுடியும்.மேலும் விவரங்களுக்கு எனும் இணைய பக்கத்திற்கு செல்க
3 Carnet குறிப்புகள் எடுக்க விரும்புவோர் இந்த ஆண்ட்ராய்டின்கட்டற்ற பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்ளலாம் அவ்வாறு குறிப்புகள் எடுத்து முடித்த பின்னர் எழுத்துருக்களின் வண்ணம், அளவு ,இடவமைவு ஆகியவற்றை நாம் விரும்பியவாறு வடிவமைத்துகொள்ளமுடியும் மிகமுக்கியமாக குறிப்புகளுக்கு இடையில் தேவையானவாறு உருவப்படங்களை உள்ளிணைத்து கொள்ளமுடியும் அதனோடு கைபேசியில் நம்முடைய உரை ஆவணத்தினை சேமித்திட முயன்றிடும்போது போதுமான நினைவக வசதி இல்லை என்ற நிலையில் நாம் விரும்பினால் Markor போன்றுNext cloud எனும் பகுதியில்கூட சேமித்து கொள்ளமுடியும் மேலும் விவரங்களுக்கு https://f-droid.org/en/packages/com.spisoft.quicknote/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க
4 . Anysoft Keyboard கைபேசிகளில் அல்லது திறன்பேசிகளில் உரைஆவணத்தினை உருவாக்க விழைபவர்கள் கணினிபோன்று விசைப்பலகையில் உரையை உள்ளீடுசெய்வதற்காக புளூடூத் வாயிலாக செயல்படும் விசைப்பலகையை பயன்படுத்திடுவார்கள் அதற்கு பதிலாக Anysoft Keyboard எனும் ஆண்ட்ராய்டின் கட்டற்ற பயன்பாட்டின் வாயிலாக Dvorak, Colemak, Workman, Halmak ஆகிய வடிவமைப்பு விசைப்பலகைகளில் ஒன்றினை தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது அதைவிட ஆங்கிலம் தவிர்த்த தமிழ் போன்ற மொழியில் விசைப்பலகையை உள்ளீடு செய்திடஇது ஆதரிக்கின்றது என்ற செய்தியை மனதில் கொள்கமேலும் விவரங்களுக்கு https://anysoftkeyboard.github.io/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க

Diaஎனும் கட்டற்ற பயன்பாடு ஒரு அறிமுகம்

இதனுடைய பெயரிலிருந்தே இந்தகட்டற்ற பயன்பாடு எதற்கானது எனயூகித்து கொள்ளமுடியுமல்லவா .டையா என்பது மைக்ரோசாஃப்ட் விசியோவுடன் (Microsoft Visio )ஒப்பிடக்கூடிய ஒரு பல்துறை வரைபட பதிப்பாளராகும். இது சொந்த வடிவமைப்புகளைத் தவிர, எக்ஸ்எம்எல் கோப்பைத் திருத்துவதன் மூலம் மற்ற வடிவமைப்புகளையும் இதனுடன் மிக எளிதாக சேர்க்கலாம்.இதனை பகிர்வதற்கும் எளிதாக காட்சிப்படுத்துவதற்கும் , நம்மால் அறியப்பட்ட EPS, SVG, XFIG, WMF PNG போன்ற பல்வேறு வடிவமைப்புகளின் வரைபடங்களாகவும் ஏற்றுமதி செய்யலாம். பொறியியல் துறையின் வரைபடவரைவாளர்களுக்கு வரைபடம் வரைவதற்காக இது மிகப்பேருதவியாய் விளங்குகின்றது இது விண்டோ மேக் லினக்ஸ்ஆகிய இயக்க முறைமை களிலும் செயல்படும் திறன்மிக்கபயன்பாடாக திகழ்கின்றது மேலும் மைக்ரோசாப்டின் விசியோவிற்கு மாற்றாக அதிலுள்ள அனைத்து வசதி வாய்ப்புகளையும் இது நமக்கு வழங்குகின்றது இது GNU GPLv2எனும் பொதுஅனுமதியின் அடிப்படையில் பொதுமக்கள் அனைவரும் இதனை கட்டணமில்லாமல் பயன்படுத்திகொள்வதற்காக காத்திருக்கின்றது மேலும் விவரங்களுக்கு http://dia-installer.de/எனும் இணையதளமுகவரிக்கு செல்க

JPG வடிவஉருவப்படங்களை ஒரு படவில்லைகாட்சிபோன்று காண உதவிடும் ImageGlassஎனும் கட்டற்ற பயன்பாடு

விண்டோ 10 இயக்கமுறைமை பயன்படுத்திடும் கணினியிந் கோப்பகத்தில் நாம் சேமித்துவைத்துள்ள JPG வடிவமைப்பிலுள்ள உருவப்படங்களை ஒன்றன்பின் ஒன்றாக படவில்லைகாட்சிபோன்ற காணவிரும்புவோர் Image Glass எனும் கட்டற்ற பயன்பாட்டினை கொண்டு மிகவிரைவாக காணமுடியும் இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக GPL 3.0 எனும்அனுமதியின் அடிப்படையில்வெளியிடப்பட்டுள்ளது இது JPG, GIF, PNG, WEBP, SVG, RAW ஆகிய உருவப்படங்களின் வடிவமைப்புகளை ஆதரிக்கின்றது பயனாளர் விரும்பினால் நாம் விரும்பும் உருவப்படங்களின் வடிவமைப்புகளை கூட இந்த பட்டியலில் சேர்த்து கொள்ளமுடியும் இதனை பயன்படுத்தி கொள்வதற்காக கணினியில் உருவப்படங்கள் உள்ள கோப்பகத்திற்குள் சென்று படவில்லை காட்சியாக காணவிரும்பும் உருவப்படங்களை தெரிவுசெய்து கொண்டு ஏதாவதொருஉருவப்படத்தினை முதலில் தெரியுமாறு செய்தபின்இந்த பயன்பாட்டினை செயல்படுத்துக உடன் விரியும் திரையில் Slide Show எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதனை தொடர்ந்து படவில்லை காட்சிபோன்று நாம் தெரிவுசெய்து உருவப்படங்கள் ஒவ்வொன்றாக திரையில் காட்சியாக விரியும்slow, medium, fast ஆகிய மூன்றுவாய்ப்புகளில் ஒன்றினை தெரிவுசெய்து இந்த படவில்லை காட்சிதிரையில் காண்பிக்கும்வேகத்தை நாம் விரும்பிய வேகத்தில் கட்டுபடுத்திடுக இது Picasa எனும் பயன்பாட்டின் அனைத்து வசதி வாய்ப்புகளையும் கொண்டுள்ளது இது ஒரு இலகுரகபல்துறை உருவப்படகாட்சியாளராக விளங்குகின்றது உருவப்படவில்லை காட்சிக்கு தேவையான அனைத்து அடிப்படை செயல்பாடுகளுடனும் நல்ல குறைந்தபட்ச நவீன பயனர் இடைமுகத்துடனும் நிரம்பிய எளிய பயன்பாடாக இது திகழ்கின்றது மேலும் விவரங்களுக்கு https://imageglass.org/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க

கூகிளின் ஒளியியல் எழுத்துகளின் அங்கீகாரம்(OCR) ஒரு அறிமுகம்

கூகிளின் ஒளியியல் எழுத்துகளின் அங்கீகாரம் (OCR) எனும் மென்பொருளானது இப்போது 248 க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் (அனைத்து முக்கிய தெற்காசிய மொழிகளையும் உள்ளடக்கியது) செயல்படுகிறது. இது மிகவும் எளிமையானது பயன்படுத்தவும் எளிதானது, மேலும் 90% க்கும் அதிகமான துல்லியத்துடன் பெரும்பாலான மொழிகளைக் கையாளுகின்றது ஆயினும் இது தமிழ் மொழியை100% துல்லியத்துடன் நன்கு புரிந்து கொள்கின்றது. இந்த தொழில்நுட்பமானது உருவப்படத்தின் எழுத்துருவை , அச்சிட்டஎழுத்துருக்களை ,கைகளால் எழுதபெறும் எழுத்துக்களைகூட படித்தறியும் திறன்கொண்டது அதாவது பழைய புத்தகங்கள் , கையெழுத்துநகல்கள் உருவப்படங்கள் ஆகியவற்றை படித்து அதிலிருந்து நாம் படித்தறியும் எழுத்துருவாக புரிந்து கொண்டு நாம் கோரும் வடிவமைப்பில் வழங்குகின்றது ஆயினும் இது ஆவணங்களில் உள்ள பட்டியல்கள் அட்டவணைகள் நெடுவரிசைகள் கீழ்குறிப்புகள் முடிவுகுறிப்புகள் போன்றவைகளை புரிந்து கொள்ளாதுஎன்ற செய்தியை மனதில் கொள்ளாது இது ஒரு கட்டணமற்ற மென்பொருளாகும் பழைய புத்தகங்களையும் கையெழுத்து ஆவணங்களையும் மின்னனு மயமாக்குவதற்காகஇதனை பயன்படுத்தி கொள்ளமுடியும்

வணிக வங்கிகளின் வாயிலாக வழங்கபெறும் பணநடவடிக்கைகள்

தற்போது ரொக்கபணமில்லாத பரிமாற்றநடவடிக்கைகளை இணையவங்கிகணக்கின் வாயிலாக பயன்படுத்தி கொள்கின்றோம் அவைகளில் பயன்படுத்தப்படும் பணபரிமாற்ற நடவடிக்கைகள் பின்வருமாறு
1. RTGS என சுருக்கமாக அழைக்கப்பெறும் நிகழ்வுநேரபரிமாற்ற தீர்வு(Real Time Gross Settlement) என்பது மின்னனு பணபரிமாற்றத்தில் மிகமுக்கிய பங்காற்றுகின்றது இந்த நடவடிக்கையை செயல்படுத்திடுவதற்கு குறைந்தபட்சம் ரூ.2 இலட்சங்களாகும் நிகழ்வு நேரத்தில் எந்தவொரு வங்கிகணக்கிலிருந்தும் வேறுஎந்தவொரு வங்கிகணக்கிற்கும் நாம் விரும்பும் தொகையை பரிமாறிகொள்ளமுடியும்
2. NEFTஎன சுருக்கமாக அழைக்கப்பெறும் தேசிய மின்னனு நிதிபரிமாற்றத்தின் (National Electronic Fund Transfer)துனையுடன் இந்த நடைமுறையை செயல்படுத்திடும் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் மின்னனு பணபரிமாற்றம் செய்து கொள்ளமுடியும் தனிநபர் கூட்டாண்மை நிறுவனம் , நிறுமம் ஆகியவை இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளமுடியும் இதில் ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் மட்டும் பரிமாற்றம் செய்து கொள்ளமுடியும்
3. IMPS என சுருக்கமாக அழைக்கப்பெறு உடனடிபட்டுவாடா சேவை(Immediate Payment Service) என்பது 24 மணிநேரமும் விடுமுறை நாளில் கூட பணபரிமாற்ற நடவடிக்கைக்காக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம் ஆனால் RTGS ,NEFT ஆகியஇரண்டும் வங்கி வேலைநாட்களில் மட்டும் அனுமதிக்கப்பட்ட காலஅளவிற்குள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் அதைவிட நம்முடைய கைபேசி மூலமாகவும் அல்லது ATMs இயந்திரமூலமாகவும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளமுடியும் எந்தவொரு தனிநபரும் நபரும் இந்த வசதிவாயிலாக பணபரிமாற்றம் செய்து கொள்ளமுடியும்
4 ECSஎன சுருக்கமாக அழைக்கப்பெறும் மின்னனு வழங்கல் அமைவு ( Electronic Clearing System)என்பது மின்கட்டணம், காப்பீட்டு கட்டணம் ,தொலைபேசி கட்டணம் போன்ற கட்டணங்களை செலுத்தவதற்காக மட்டும் இந்த வசதி அனுமதிககப்படுகின்றது
5.POSஎனசுருக்கமாக அழைக்கப்பெறும் விற்பணைமுனைம (Point of Sale)வசதி நம்முடைய மின்னனு கடணட்டை களை கொண்டு நமக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்து கொள்ளமுடியும்.
5. M-Wallets என்பதுமின்னனு பணப்பை போன்று விமாண பயனச்சீட்டு ,தொடர்வண்டி பயனச்சீட்டு ,பொருட்கள் கொள்முதல் செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு தேவையான தொகையை இந்த மின்னனு பணப்பைவாயிலாக வழங்கமுடியும்

Previous Older Entries