அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003- தொடர் பகுதி-43-அக்சஸ்-2007ல் உள்ள கூடுதல் வசதி வாய்ப்புகள்

அக்சஸானது புதிய வசதிகளுடன் இருக்கிற நிலையிலேயே அடுத்த பதிப்பை வெளியிடுமா? அல்லது அக்சஸ் மாற்றப்பட்டு SQL serverன் புதிய பதிப்பாக வெளியிடப்படுமா என்ற பயனாளரின் எதிர்பார்ப்பிற்கு இடையே நீண்ட இடைவெளிக்கு பிறகு அக்சஸ் 2007 என்பதை மைக்ரோ சாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால் இதுவரை வந்த தொடரில் நாம் அக்சஸ் 2003 பற்றிய விவரங்களைத்தான் அறிந்து வந்தோம்.

அதனால் இந்த பகுதியில் அக்சஸ் 2007ல் கூடுதலாக என்னென்ன வசதிகள் உள்ளன என இப்போது காண்போம்.

படம் – 1

ஒரே சமயத்தில் பயனாளர் ஒருவர் டஜன் கணக்கில் மிதக்கும் சாளரத்தை சந்திக்க வேண்டியிருந்தது. இது வலைக்குள் வலை என்பது போன்று தெரிவு செய்யும் பட்டியலுக்குள் மற்றொரு பட்டியல் அதற்குள் மற்றொரு பட்டியல் என்று தினத்தந்தியின் கன்னித்தீவு போன்று நீண்டு கொண்டே செல்வதை தடுத்து அனைத்தும் ஒரே பார்வையில் படும்படியாக பட்டிகை (Ribbon) என்ற கருத்தமைவு (படம்1) அக்சஸ் 2007ல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சுலபமாக்கப்பட்டிருந்தாலும் கோப்பு பட்டியல் (File menu) எங்கிருக்கிறது எனத் தேடுவதுதான் மிக கடினமான பணியாக உள்ளது. அதற்காக கவலைப்படாதீர்கள் சாளரத்தின் தலைப்பில் இடதுபுற ஓரத்தில் மைக்ரோ சாப்ட் நிறுவன முத்திரையுடன் உள்ள வட்ட வடிவ உருவத்திற்குள் அலுவலக பட்டியல் (office menu) என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு பொதிந்து(படம்1) வைக்கப்பட்டுள்ளது.

இதில் கூடுதலாக காப்பு நகல், ஒப்பீடு, வசதி வாய்ப்புகள் போன்ற பல பொது தரவு தள பயன்களும் வாய்ப்புகளும் உள்ளன.

தேவைப்படும் பொழுதெல்லாம் தேவைப்படுவதை பெறுவதற்கேற்றவாறு இந்த பட்டிகை(Ribbon) அமைவு சூழ்நிலை பட்டியலாக உருவாகுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக எழுத்துரு (Font), ஆவணங்கள் (Document), அடுக்குதல் (Sort), வடிகட்டுதல் (Filter) ஆகியவைகள் தனித்தனி குழுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பட்டிகையின் கீழ்பகுதியில் வாடிக்கையாளர் வெளிச்சூழலான XMLல் குறிமுறை உருவாக்குமாறும், VBA வழிமுறையை பயன்படுத்தி தானாகவே மீள அழைப்பதற்கான (Call back) குறிமுறை வரிகளை உருவாகும்படியாக செய்யப்பட்டுள்ளது.

சிக்கலான வலைக்குள் வலையாக இருந்ததை பொருட்களின் பட்டியிலிருந்த அட்டவணையை உருவாக்குகினோம், பாதுகாத்தோம், மீண்டும் வினாவை உருவாக்கினோம் என்றவாறு செயலை எளிமையாக்குவதற்காக இந்த பட்டிகை(Ribbon)உருவாக்கப்பட்டுள்ளது.

படம் – 2

ஒவ்வொன்றிற்கும் தனித்தனி செயல்பட்டை (task bar), தனித்தனி பட்டியல் (menu)ஆகியவற்றை செயற்படுத்துவதற்காக பொருட்களின் பட்டியலுக்கு ஒவ்வொரு முறையும் சென்று தேவையானதை தெரிவு செய்து பணிபுரிவதற்கு பதிலாக இவைகள் அனைத்தும் மிதக்கும் சாளரத்தில் (Floating window) உள்ள தாவி அமைவிற்குள் (tab system) (படம்-2) தயார் நிலையில் உள்ளடங்கியிருக்குமாறு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் தேவையானதை மட்டும் பிடித்து சொடுக்கினால் போதும்.உடன் தொடர்புடைய செயல் நடைமுறைக்கு வரும்.

அதற்காக முந்தைய பதிப்புகளில் பணிபுரிந்தவர்களை நட்டாற்றில் கைவிடவில்லை நிழல் படிந்ததை போன்று புதைந்து மறைந்துள்ள அமைப்புகளை சொடுக்கினால் அட்டவணை (table), வினா (query) போன்ற பொருட்கள் (object) காட்சியாக திரையில் பிரதிபலிக்கும். அதைபோன்றே முந்தைய பதிப்புகளில் உருவாக்கப்பட்ட ஆவணங்களையும் கையாளும் தன்மையுடன் அக்சஸ் 2007 அமைக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி வழிகாட்டு பலகம் (Navigator pane) கூட மாறுதல் செய்யப்பட்டு பணிபுரிய விரும்புவதை தெரிவு செய்வதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பொருட்கள் உருவாக்கப்பட்ட நாள், மாறுதல் செய்த நாள், வாடிக்கையாளரின் குழு ஆகிய விவரங்கள் உள்ளடங்கியுள்ளன. இந்த பலகம் சாளரத்தின் இடதுபுற ஓரத்தில் இணைக்கப்பட்டுள்ளதால் இடம் அடைத்து கொள்ளுமே என கவலைப்படத் தேவையில்லை.

அதன் வலப்புற மேல்பகுதியில் உள்ள இடது புறத்தை பார்த்திருக்கும் அம்புக்குறியை இடம்சுட்டியால் பிடித்து சொடுக்கினால் இந்த பலகம் மறைந்து நாம் பணிபுரிவதற்கேற்றவாறு போதுமான இடம் திரையில் கிடைக்கும்.

அட்டவனை (Table) இது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் இப்போது செல்வந்தர் உரை வடிவமைவமைப்பு (rich text formatting) என்ற கருத்தமைவு் memo புலங்களை ஆதரிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. எக்செல்லிருந்து ஏதேனும் ஒரு அட்டவணையை அக்சஸிற்குள் கொண்டு வந்தவுடன் தானாகவே அதற்கேற்றவாறு பல மதிப்பு புலங்களாக (Multivalue field) வடிவமைக்கும் வசதி நிறைந்துள்ளது. உதாரணமாக எக்செல்லின் நாள் புலத்தை (date field) ஒரு புதிய அட்டவணைக்குள் கொண்டுவந்த உடன் அதனை ஏற்று அப்படியே நாள் புலமாக தானாகவே ஆதரித்து வடிவமைத்து கொள்கிறது.

இது சாதாரணமாக தெரிந்தாலும் (புதிய) வடிவமைப்பாளருக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும். இறுதி பயனாளர் மிகச்சுலபமாக படித்தறிவதற்கேற்றவாறு அடுத்தடுத்த நெடுவரிசைகளை அல்லது கிடைவரிசைகளை வெவ்வேறு நிறங்களில் பிரதிபலிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை ஆவனங்களையும் வெளி கோப்புகளையும் தரவு தளம் இல்லாமலேயே உங்கள் பயன்பாடுகளில் இணைப்பு தரவு வகை (attachment data type) என்ற கருத்தமைவில் உள்ளிணைக்கும்படி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது படம், ஆவணங்கள் தொடர்புடைய பதிவேடுகளுடன் கோப்பு முழுவதையும் தரவு தளத்தில் உள் பொதிந்து உருவாக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே புலத்தில் பல வகையான கோப்புகளை இவ்வாறான உள்ளிணைப்பு தரவு வகை கருத்தமைவில் கையாளும்படி செய்யப்பட்டுள்ளது.

தரவு தாள் காட்சி (Data sheet view)

படம் – 3

தரவுகளை ஆய்வு செய்தல், மாறுதல் செய்தல், சரிபார்த்தல் போன்ற செயல்களுக்கு மிகச்சிறந்த கருவியாக இந்த தரவுத்தாள் காட்சி (படம்-3) உள்ளது. இது சூழ்நிலை பட்டியலில் புதிய புள்ளி மற்றும் சொடுக்கி அடுக்குக (new point -and- click sort) போன்ற வாய்ப்புகளுடன் வடிகட்டுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதே பட்டியலானது உரை,தரவுகள். எண்கள் ஆகியவற்றை வடிகட்ட பயன்படுகிறது.

இதில் குறிப்பிட்ட புலத்தை பிடித்து கொடுக்கியவுடன் அதற்கேற்றவாறு தோன்றும் கூடுதலான அடுக்குதல் sort , வடிகட்டும் filter ஆகிய புதிய வசதி வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இது மட்டுமல்லாமல் நெடுவரிசை மதிப்புகளின் மொத்தம் எவ்வளவு என்ற விவரத்தையும் கொடுக்கின்றது. மொத்த கிடைவரிசை எவ்வளவு என்ற விவரங்கள் கீழ்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய புலத்தை உள்ளிணைத்து புலபடிம பலகத்திலிருந்து (field template pane) தெரிவு செய்து பெயர், தரவு வகை முன் கூட்டியே கட்டப்பட்ட பண்பியல்புகளுடன் இணைத்து கொள்ள முடியும். இது மட்டுமா நம்முடைய எந்த வடிவமைப்பிலும் புதிய புலத்தை உருவாக்கி இணைத்து கொள்ளவும் முடியும்.

படிவங்கள் (Forms)

மற்ற அட்டவணைகளில் இல்லாதிருக்கும் விரிவுபடுத்தப்பட்ட புல பட்டியலில் செயல் பலகத்தின் உதவியால் Record setன் பகுதியாக புலங்களை இதன் மூலம் இணைக்க முடியும், இந்த படிவங்களுக்கு இடையே இவ்வாறு இணைக்கப்பட்ட புலங்களுக்கு இடையில் உள்ள உறவை தானாகவே உருவாக்கி கொள்கிறது. ஒரே படிவத்தில் படிவ காட்சி, தரவு காட்சி ஆகிய இரண்டாக பிரிப்பதற்கு ஏற்றவாறு இதில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரிப்பு உத்தி படிவத்தின் கீழ், மேல் , இடது, வலதுபுறம் என எந்த பகுதியிலும் தரவு காட்சியை வைத்திட முடியும். இதில் layout என்ற புதிய கருத்தமைவு படிவங்களை உருவாக்கும் செயலை எளிமையாக்கி யுள்ளது. இதன் உதவியால் பொதுவான பதிப்பு(edit) செயல்களை தரவுகளை பார்வையிடும்போதே படிவத்தில் செய்ய முடியும்.

ஒரே மாதிரியான படிவத்தினை பயனாளர் பார்த்து பார்த்து சோர்வடைந்து விடாமல் இருப்பதற்கேற்ப வாடிக்கையாளர் விரும்பியவாறு எந்த நிறத்தையும் தெரிவு செய்யும்படியான வண்ணத்தட்டு (color palettes) ஒன்று இதில் உள்ளது.

மிக முக்கியமாக பெருமநிரல் (macro)-களை உங்கள் படிவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளிணைத்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு உள்ளிணைந்த பெருமநிரல் வசதி புதிய பாதுகாப்பு வசதியுடன் அக்சஸில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தைவிட ஏராளமான அளவு பெரும நிரலை உள்ளிணைப்பதற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது.

இதில் காலண்டர்என்ற நாள்/நேரம் தெரிவு செயவதற்கான வடிவமைப்பு வசதி கூடுதலாக உள்ளது.

அறிவிக்கைகள் (Reports)

படிவத்தின் விரிவாக்கமே அறிவிக்கையாகும். ஆனால் கூடுதல் குழுவாக அடுக்குதல், துனைக்கூடுதல் காணுதல், மொத்தம் காணுதல் போன்ற வாய்ப்புகளுடன் இப்போது இருக்கின்றன. இதனால் அடுக்குதல், வடிகட்டுதல் ஆகிய செயலை தானாகவே அறிக்கை காட்சியில் நடைமுறைப்படுத்த முடியும். மேலும் துணை கூடுதல், மொத்த கூடுதல் போன்ற புதிய வசதிகள் உள்ளிணைக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட புலத்தை அல்லது பகுதியை sum field வாய்ப்பை பயன்படுத்தி தெரிவு செய்ய முடியும் (படம்-4). அதற்காக கணக்கீடு கட்டுப்பாட்டை உருவாக்க தேவையில்லை.

படம் – 4

பெரும நிரல் (Macro)

படிவங்களையும், அறிவிக்கைகளையும் திறத்தல், மூடுதல் போன்ற செயல்களுக்கான பெரும நிரல்களின் பாதுகாப்பில் மாறுதல் ஏதும் இல்லாமலேயே செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெரும நிரலை படிவங்கள், அறிவிக்கைகள், கட்டுப்பாடுகளில் உள்ளிணைக்க முடியும். இதுமட்டுமல்லாமல் பிழைகளை கையாள்வது, பிழை பிடித்தல், மாறிகளுக்கு ஏற்ற மதிப்பை ஒதுக்கீடு செய்தல் போன்ற செயல்களையும் இந்த பெரும நிரல் மிக சுலபமாக்கியுள்ளது.

அறிவிக்கைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்தல், உருவாக்குதல் ஆகிய செயல்கள் outlook வழியாக தானாகவே நடைபெறுவதற்கான பெருமநிரல்களும் உள்ளிணைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு (Security)

அக்சஸின் முந்தைய பதிப்புகளில் விபி குறிமுறைகள் அல்லது பெரும நிரல் (Macro) இணைக்கும் போது பாதுகாப்பு வளையம் மிக இறுக்கமாக அமைக்கப்பட்டிருந்ததை எளிமைப்படுத்தி குறிப்பிட்ட பயனாளரின் அளவிற்கேற்ப பாதுகாப்பு வாய்ப்பு நீக்கப்பட்டு செயல் அளவில் பாதுகாப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது சாளரத்தின் மேல் பகுதியில் உள்ளது.

பகிர்வுபுள்ளி(Share point)

கோப்பு உருவாகிய வரலாற்றை மாற்றுதல், அமைப்பு அனுமதி, நீக்கப்பட்ட ஆவணத்தை மீளப்பெறுதல் போன்ற செயல்களுக்காக share point என்ற கருத்தமைவு புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. தூரத்திலிருக்கும் தரவுகளையும் புதிய வசதி ஏதும் தேவையில்லாமல் வலைப்பின்னலின் இணைப்பில் மட்டும் பெறுவதற்கேற்ப இந்த பகிர்வு புள்ளி(share point) வசதிஉள்ளது.

தூரத்தில் (Distance) உள்ள தரவுகளை மிகச்சுலபமாக கையாளத்தக்க வசதிகூட இந்த அக்சஸ் 2007-ல் உள்ளது. பொதுவாக அக்சஸின் சவாலாக இருந்த பல செயல்கள் இப்போது சுலபமாக்கப்பட்டுள்ளது.

ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா-69-பிட்மேப்பை கையாளுதல்

நாம் இதுவரையிலும் ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவில் நம்முடைய கைகளால் வரையப்படும் வெக்டர் வரைகலையை பற்றி பார்த்து வந்தோம் தற்போது பிட்மேப் எனப்படும் நிழற்படங்களை அல்லது வருடபட்ட படங்களை பதிவேற்றம் செய்தல், பதிவிறக்கம் செய்தல் , ஒரு வடிமைப்பிலிருந்து மற்றொரு வடிவமைப்பிற்கு மாறுதல் செய்தல் என்பன போன்ற எண்ணற்ற செயல்களை  இந்த ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா வில் எவ்வாறு கையாளுவதுஎன இப்போது காண்போம்

இந்த பிட்மேப்படங்களை Adobe  Photoshop , The Gimp போன்ற பயன் பாடுகளில் கையாளுவதை போன்று இந்த ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவிலும் கையாளமுடியும்.

பதிவிறக்கம்(import)செய்தல்

ஒரு சேமிக்கபட்ட வரை கலை கோப்பினை பதிவிறக்கம் செய்திட ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா திரையின்  மேலே கட்டளை பட்டையிலுள்ள பட்டியில் Insert => Picture =>File=>என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக அல்லது இதனுடைய உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் Insert pictureஎன்ற உரையாடல் பெட்டியின் திரையில் *.svg என்ற செந்தர பின்னொட்டெனில் openஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் எளிதாக பதிவிறக்கம் ஆகும்

  படம்-69-1

   இல்லையெனில் இதேInsert pictureஎன்ற உரையாடல் பெட்டியிலுள்ள கோப்பின் வகைக்கான கீழிறங்கு பட்டியலை திறந்து தேவையான வடிவமைப்பை தெரிவுசெய்து கொண்டு openஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

இவ்வாறு பதிவிறக்கம் செய்வதற்கான கோப்பினை தேடிடும்போது  நாம் தெரிவுசெய்தது மிகச்சரியான கோப்புதானா என சரிபார்ப்பதற்கு  இதே Insert pictureஎன்ற உரையாடல் பெட்டியிலுள்ள Preview என்ற  (படம்-69-1) தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து கொள்க உடன் அந்த படம் இதே உரையாடல் பெட்டியின் வலதுபுற பலகத்தில் முன்காட்சி யாக தோன்றிடும்

இவ்வாறு வரைபட கோப்பினை பதிவிறக்கம் செய்தால் அவை தற்போதைய கோப்பில் உட்பொதியபட்டு இந்த படம்PNG என்ற வடிவமைப்பிற்கு உருமாறிவிடும் இதனை நம்முடைய விருப்பபடி கையாளமுடியும் இதற்கு பதிலாக இதே உரையாடல் பெட்டியில் உள்ள Linksஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்தால் நடப்பு கோப்புடன் இணைப்பு ஏற்படுத்தபட்டு Edit Links  என்ற உரையாடல் பெட்டியின்மூலம் வேறுஏதேனும் நாம் மாறுதல் செய்வதற்காக திரையில் காண்பிக்கும் இந்த வசதியினால் நடப்பு கோப்பின் அளவு மாறாது இணைக்கபட்ட கோப்பும்அதே இடத்தில் இருக்கும்

இவ்வாறு ஏற்படுத்தபட்ட இணைப்பினை நீக்கம் செய்வதற்காக மேலே கட்டளை பட்டையிலுள்ள பட்டியில் Edit => Links => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் Edit Links என்ற உரையாடல் பெட்டியில் இணைப்பை நீக்கம் செய்யவிரும்பும் கோப்பினை தெரிவுசெய்து கொண்டு  Break Linkஎன்ற(படம்-69-2) பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-69-2

வருடுதல்(Scanning)

பெரும்பாலான வருடிகளை கொண்டுவருடபட்ட படங்களை  நேரடியாக நம்முடைய கோப்பில் உள்ளிணைக்கமுடியும்  அதற்காக மேலே கட்டளை பட்டையிலுள்ள பட்டியில் Insert => Picture => Scan =>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Scan என்ற கட்டளையின் துனைபட்டியில் select Source அல்லது select Request ஆகிய இரு கட்டளை வாய்ப்புகளில் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குக

இந்த Scan என்ற துனைபட்டியில்  முதல் வாய்ப்பான select Source  என்ற  வாய்ப்பினை தெரிவுசெய்தவுடன் விரியும் திரையில் Scanner என்ற உரையாடல் பெட்டியில்  Create Previewஎன்ற (படம்-69-3)பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்  preview  என்ற முன்காட்சி பெட்டியில் வருடபட்ட படம் முன்காட்சியாக தோன்றிடும் சரியாக இருக்கின்றது என திருப்தியுற்றால்  OK  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  அல்லது மேலே கட்டளை பட்டையிலுள்ள பட்டியில் Insert => Picture => Scan =>  Request=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி இதனை நேரடியாக உள்ளிணைத்து கொள்க உடன் இந்த வருடபட்டபடம்  தற்போதைய கோப்பில் PNG என்ற வடிவமைப்பிற்கு உருமாற்றபட்டு உட்பொதியபட்டுவிடும்.

படம்-69-3

clipboardஎனும் ஒட்டும் பெட்டிமூலம் படங்களை உள்ளிணைத்தல்

இந்த  clipboard எனும் ஒட்டும் பெட்டி  ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவில் வேறொரு வழியில் படங்களை உள்ளிணைத்திட பயன்படுகின்றது இந்த செயல் படங்களின் வடிவமைப்பு , இயக்கமுறைமை ஆகிய வற்றிற்கேற்ப  மாறு பட்டு அமைகின்றது    இதனை பயன்படுத்திட  மேலே கட்டளை பட்டையிலுள்ள பட்டியில் Edit => Paste Special => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து  சொடுக்கி செயல்படுத்துக அல்லது மேலே கட்டளை பட்டையிலுள்ள  Paste என்ற உருவ பொத்தானின் கீழிறங்கு பட்டியலை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் paste special என்ற (படம்-69-4) சிறு உரையாடல்பெட்டி தோன்றிடும் அதில் selectionஎன்பதன்  கீழுளள்ளவைகளில் தேவையான படவடி வமைப்பை மட்டும் தெரிவுசெய்துகொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 படம்-69-4

 இழுத்து சென்று விடுதல் (Dragginganddropping)

படங்களை சேகரித்து வைத்துள்ள Gallery என்ற பகுதியிலிருந்து தேவையான படங்களை இடம்சுட்டியால் தெரிவுசெய்து பிடித்து  அப்படியே இழுத்துசென்று நடப்பு கோப்பில் சுட்டியை வைத்து பிடித்திருந்த இடம்சுட்டியை விடுக

கோப்பிலிருந்துஇணைத்தல்

இந்த வழிமுறையில் வேறு கோப்பிலிருக்கும்Draw அல்லது Impress படங்கள், Rich Text  (RTF), HTMLஅல்லது plain text உரைகள் ஆகிய வடிவமைப்பிலிருக்கும் கோப்பினை உள்ளிணைக்க முடியும் இதனை செயற்படுத்திட  மேலே கட்டளை பட்டையிலுள்ள பட்டியில் Insert= > File=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து  சொடுக்குக உடன் விரியும் insert slides/objects என்ற (படம்-69-5)உரையாடல் பெட்டியில்   உள்ளிணைக்க விரும்புவது Draw அல்லது Impress  கோப்பு எனில் special import என்ற உரையாடல் பெட்டிதோன்றிடும் அதில்  +அல்லது முக்கோன வடிவத்தை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் படங்களில்  தேவையான படத்தை தெரிவுசெய்க இந்நிலையில் சுட்டி நாம் விரும்பும் படத்தின்மீது இருக்கும்போது  இடம்சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Renameஎன்ற கட்டளை தெரிவுசெய்து சொடுக்கி பெயரை மாற்றியமைத்துகொள்க  அதன்பின்okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-69-5

படத்தைமட்டும்பதிவேற்றம்செய்தல் 

பொதுவாக  வரைபடத்திற்கான *.odg என்ற பின்னொட்டுடன் கூடிய ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா வடிவமைப்பு கோப்பினை மற்ற பயன்பாடுகளின் மூலம்  கையாளமுடியாது அதனால் நாம் ஒப்பன் ஆஃபிஸ் ட்ராவில் உருவாக்கும் கோப்புகளை  நாம் விரும்பும் வடிவமைப்பில் சேமிக்க முடியும்  அதற்காக  மேலே கட்டளை பட்டையிலுள்ள File => Export => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Export  என்ற (படம்-69-6)உரையாடல் பெட்டியில் கீழிறங்கு பட்டியல் மூலம் தேவையான வடிவைப்பின் பின்னொட்டினை தெரிவுசெய்து  okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-69-6

 கோப்புமுழுவதையும்பதிவேற்றம்செய்தல்

இதற்காக  Export  என்ற உரையாடல் பெட்டியில் மேல்பகுதியின் கோப்பு வகை பெட்டியில்  PDF,Flash,  HTML ஆகியவற்றில் நாம் விரும்புவதையும்   கீழ்பகுதியிலிருக்கும்  Metafle வடிவமைப்பின் JPEG, PNG, TIFF, BMP ஆகியவற்றில் நாம் விரும்புவதையும்   தெரிவுசெய்து  okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

ஒரு வரைபடத்தை மட்டும் பதிவேற்றம் செய்திட

குறிப்பிட்ட வரைபடத்தை மட்டும் தெரிவுசெய்து Export  என்ற உரையாடல் பெட்டியின் மூலம் பதிவேற்றம் செய்து கொள்க ஒன்றுக்கு மேற்பட்ட  வரைபடம் எனில்  இதே Export  என்ற உரையாடல் பெட்டியில் Selection என்ற வாய்ப்பை பயன்படுத்தி பதிவேற்றம் செய்து கொள்க.

வெக்டார் வரைபடம் எனில் DXF என்ற வடிவமைப்பில் உள்ள Autocad  மற்றும் SVG வடிவமைப்பில் உள்ளவைகளை  பதிவேற்றம் செய்ய இயலாது ஆனால்  2D வரைபடத்தை பதிவேற்றம் செய்யலாம் 3D வரைபடம் எனில் முன்காட்சிமட்டும்  இயலும்

raster graphic-இன்  பதிவேற்றம் செய்யும் படத்தினுடைய  Metafle கோப்பின்  image,compression, color , version ஆகியவற்றிற்கு தகுந்த வடிவமைப்பிற்கேற்ப  அமையுமாறு வாய்ப்புகளை  அமைத்திடமுடியும  இதனால் பதிவிறக்கம் ஆகும் கோப்பின் வடிவமைப்பிற்கு ஏற்ப வரைபடத்தின் தன்மையும் மாறு பட்டு அமையும்

Export என்ற உரையாடல் பெட்டிமூலம் படத்தின் துல்லியத்தை அமைத்தால் அச்செயல் raster points  இன் அளவை பாதிக்காது  ஆனால் படத்தை மற்ற  பயன்பாடுகளின் மூலம் திரையில் பிரதிபலிப்பு செய்வதற்கான புறஅமைப்பை இந்த raster points கட்டுபடுத்துகின்றது

மேலே கட்டளை பட்டையிலுள்ள Tools= > Options => OpenOfce.org Draw => General=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் வாயிலாக  pixels அளவை குறிப்பிட்டு அதன்மூலம் படத்தின் துல்லியத்தை கட்டுபடுத்தலாம்

raster graphics  அல்லது objects  ஆகியவற்றை  ஒரு கோப்பில் உள்பொதிந்த பின்  சூழ்நிலை பட்டியை தோன்றசெய்துஅதில் Convert => To Bitmap / To Metafle என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி   bitmap அல்லது  Metafle ஆக உருமாற்றம் செய்யலாம் அதன்பின்   அதே சூழ்நிலை பட்டியின்மூலம் Save as Picture என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக படமாக  text elements, borders,  shadows ஆகிய உறுப்புகள் இல்லாமல் சேமித்திடலாம்

இதில் உருவாக்கும் வரைபடத்தை  மிகஎளிதாக  ஓப்பன் ஆஃபிஸின் ரைட்டர் ,கால்க் ,இம்ப்பிரஸ்  ஆகிய பயன்பாடுகளில்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்  நம்மால் அடிக்கடி பயன்படுத்திகொள்ளும் வரைபடங்களை   Gallery அல்லது clipboard வசதிமூலம்  பதிவிறக்கம் செய்து கொள்க. இதில் OLE வாயிலாகவும் இணைப்பு ஏற்படுத்திடலாம்

வரைபடத்தினை   Format  அல்லது context பட்டிமூலம் வடிவமைப்பை மாறுதல் செய்து கொள்ளலாம்  அவ்வாறே ஒருவரைபடத்தின்  Lines, Areas , Shadows ஆகிய பண்பியல்புகளை  Picture toolbar என்பதை பயன் படுத்தி   சரிசெய்து அமைத்து கொள்ளலாம்  இந்த Picture toolbar ஐ  திரையில் பிரதிபலிக்க செய்வதற்காக மேலே கட்டளை பட்டையிலுள்ள View => Toolbars =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த   Picture toolbar  ஆனது திரையில் தோன்றிடும் அதற்கு பதிலாக தேவையான படத்தை தெரிவுசெய்தவுடன் தானகவே இந்த கருவிபட்டி  formatting toolbar இருக்கும் இடத்தில் அதற்கு பதிலாக அல்லது தனியானதொரு floating toolbar ஆக திரையில்  தோன்றிடும்

ஒரு படத்தில் தேவையற்றவைகளை வெட்டி கத்தரித்து சரிசெய்து அழகுபடுத்துவதற்கு Crop என்ற கருவி பயன்படுகின்றது   இதனை crop என்றவொரு உரையாடல் பெட்டிமூலம் செயற்படுத்துவதற்கு மேலே கருவிபட்டியிலுள்ள Format => Crop Picture=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கு  உடன் தோன்றிடும் Cropஎன்ற(படம்-69-7) உரையாடல் பெட்டியில் தேவையானவாறு வாய்ப்புகளை அமைத்து படத்தை நன்கு அழகுபடுத்திகொள்க

படம்-69-7

அறிந்துகொள்வோம் அக்சஸ்-2003 தொடர்-பகுதி-42-வழிகாட்டியை பயன்படுத்தி பாதுகாப்பை உருவாக்குதல்

முதலில் சிறிது குறைந்த பாதுகாப்புடைய மாற்ற வழிமுறையை தெரிந்து கொள்வோம், மேலே கட்டளை பட்டையில் (menu bar) Tools=> start up =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்தவுடன் படம்-1 ல் உள்ளவாறு தோன்றும் start up என்றஉரையாடல் பெட்டியில் தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளீடுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக,

படம்-1

1.   பின்னர் அக்சஸை ஆரம்பித்து ஏதேனுமொரு தரவுதள கோப்பினை திறக்க முயற்சி செய்க. உடன் logon எனும்உரையாடல் பெட்டி ஒன்று திரையில் தோன்றும்.

2.   அதில் நாம் உருவாக்கிய VASANTH எனும் அனுமதிச் சொல்லை  உள்ளீடு செய்து Ok என்ற பொத்தானை தெரிவு செய்துசொடுக்குக. இப்போது நாம் விரும்பும் தரவு தள கோப்பு நடப்பில் திறந்திருக்கும்.

3.   பிறகு மேலே கட்டளை சட்டத்தில் உள்ள Tools என்பதை தெரிவு செய்துசொடுக்கிய உடன் விரியும் பட்டியில் Security என்பதையும் உடன் விரியும் சிறு பட்டியில் user level security wizard என்பதையும் தெரிவு செய்துசொடுக்குக.

4.   உடன் படம்-2ல் உள்ளவாறு வழிகாட்டி தோன்றி ஏற்கனவே நடப்பில் இருக்கும் பணிக் குழுவின் தகவல் கோப்பினை பயன்படுத்தி கொள்ளப்போகிறோமோ அல்லது புதியதை உருவாக்க வேண்டுமோ (do you want to create a new workgroup information or modify the current one?) என கேட்டு நிற்கும். அதில் create a new workgroup information file என்பதின் வானொலி பொத்தானை தெரிவு செய்துகொணடு next என்ற பொத்தானை சொடுக்குக,

படம்-2

5.   அதன் பின்னர்தோன்றும் படம்-3 சாளரத்தில்புதிய கோப்பின் பெயரையும் Workgroup IDயும் உள்ளீடு செய்க அல்லது தேடுபொறி (browse) மூலம் கொண்டு வந்து சேர்த்திடுக. Your name மற்றும் Company ஆகிய இரண்டுவிவரத்தையும் விருப்பப்பட்டால் உள்ளீடு செய்க. பின்னர்கீழே உள்ள இரண்டு வாய்ப்புகளில் Create a shortcut to open my security என்பதை தெரிவு செய்து கொண்டு  next என்ற பொத்தானை தெரிவு செய்துசொடுக்குக.

          படம்-3

6.   உடன் படம்-4ல் உள்ளவாறு தேவையான பொருட்களை (object) பாதுகாப்பு செய்ய தெரிவு செய்யும்படி கோரி நிற்கும். இயல்பு நிலையில் அனைத்து பொருட்களும் (object) தெரிவு செய்யப் பட்டே இருக்கும். எச்சரிக்கை ஏதாவது ஒன்றை பாதுகாப்பிற்கு தெரிவு செய்யாது விட்டுவிட்டால் அந்த வகையான மற்ற கோப்புகள் பாதுகாப்பாக ஏற்றுமதி ஆகாது. இதனை தவிர்க்க அனைத்தையும் தெரிவு செய்து பாதுகாப்பு அனுமதியை மட்டும் குறிப்பிட்ட வரையறைக்குள் வழங்கவும்.

படம்-4

7.   அதன் பின்னர் next என்ற பொத்தானை தெரிவு செய்துசொடுக்குக. உடன் படம்-5ல் உள்ளவாறு தோன்றும் வழிகாட்டியில் அனைத்து பாதுகாப்பு குழு வாய்ப்புகளும் பிரதிபலிக்க செய்யப்பட்டுள்ளதா என சரி பார்த்து அனைத்தையும் தெரிவு செய்துசொடுக்குக. பின்னர் next என்ற பொத்தானை சொடுக்குக

படம்-5

8.   உடன் படம்-6ல் உள்ளவாறு பயனாளர் குழுவிற்கான அனுமதி அளிக்கவேண்டுமா (would like to grant the users group some permissions) என்பதில் இயல்பு நிலையில் yes என்பது தெரிவு செய்யப்பட்டிருக்கும் தேவையானால் no என்பதை தெரிவு செய்க, பின்னர் next என்ற பொத்தானை சொடுக்குக

படம்-6

9.   உடன் படம்-7ல் உள்ளவாறு பயனாளர் குழுவில் விவர கோப்புகள் சேர்த்து கொள்ளப் போகிறோமோ என்பதற்கேற்ப அதற்கான விவரத்தைஉள்ளீடு செய்க,அல்லது add a new user என்பதை சொடுக்குக. புதியதற்கான விவரத்தை உள்ளீடு செய்க,பின்னர் next என்ற பொத்தானை சொடுக்குக,உடன் தோன்றும் பெட்டியில் உள்ள  list எனும் பொத்தானை சொடுக்குக, தேவையற்ற பயனாளரை நீக்க விரும்பினால் delete செய்துகொண்டு next என்ற பொத்தானை சொடுக்குக,

படம்-7

10.  உடன் படம்-8 ல் தோன்றும் பயனாளர் ஒதுக்கீட்டு வாய்ப்பில் select a user and assign the user to group என்ற வானொலி பொத்தானை தேவையானவாறு தெரிவு செய்துகொண்டு next  என்ற பொத்தானை சொடுக்குக

படம்-8

11.  உடன்படம்-9ல் வழிகாட்டி பழைய மற்றும் புதிய தகவல் தளத்திற்கான பெயரை வழங்கும்படி கேட்பார். இயல்பு நிலையில் நடப்பு கோப்பின் பெயரே .bak என்ற பின்னொட்டுடன் இருக்கும். தேவையெனில் வேறு பெயரை உள்ளீடு செய்து முடிவாக  finish என்ற பொத்தானை தெரிவு செய்துசொடுக்குக.

படம்-9

12.  தொழில்நுட்ப அடிப்படையில் பார்க்கும்போது இந்த வழிகாட்டி ஏதும் புதியதாக செய்யவில்லை சாதாரணமாக ஏற்கனவே இருக்கும் கோப்பினை நகலெடுத்து .bak என்ற பின்னொட்டுடன் பாதுகாப்பாக இருக்கிறது என பிரதிபலிக்க செய்கிறார். கடைசியாக one step security wizard report எனும் அறிக்கை படம்-10ல் உள்ளவாறு கிடைக்கும் இதில் அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும்.

படம்-10

தரவு தளத்தை உருமாற்றம் (மறையாக்கம்) செய்தல்

தரவுகளை மேலும் பாதுகாப்பாக இருக்க செய்வதற்கு உதவுவதே மறையாக்கம் (Encrypt) என்பதாகும். இதனை கையாள  அதிக தொழில்நுட்ப திறன் வேண்டும் என்பதால் சாதாரணமானவர்களால் இவ்வாறு Encrypt செய்த தரவை ஒன்றும் செய்ய முடியாது. ஆயினும் சில கில்லாடி பேர்வழிகள் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு நாம் encrypt செய்த தரவுகளை decrypt செய்து முழுமையான original தரவாக மாற்றி அபகரித்து விடுவார்கள்.

இவ்வாறு மறையாக்கம் செய்வதற்கு அக்சஸை மட்டும் திறந்து கொள்ளவும். தரவு தளத்தை அன்று. கட்டளை சட்டத்தில் உள்ள Tools என்பதை தெரிவு செய்துசொடுக்குக. உடன் விரியும் பட்டியில் security என்பதையும் பின்னர் விரியும் சிறு பட்டியில் encrypt/decrypt என்பதையும் தெரிவு செய்துசொடுக்குக.

உடன் தோன்றும் உரையாடல் பெட்டியில் பாதுகாக்க (மறையாக்கம்) செய்ய விரும்பும் தரவை தெரிவு செய்துசொடுக்குக. அதற்கு புதிய பெயர் ஒன்றை உள்ளீடு செய்க. நாம் மாற்ற விரும்பும் தரவை அக்சஸ் ஒன்றும் செய்யாது ஆனால் அதே போன்று போலி ஒன்றை உருவாக்கி  அதனை மறையாக்கம் செய்துவிடும்.

இவ்வாறு மறையாக்கம் செய்யும்பொழுது ஒரு சில தீய விளைவுகள் சந்திக்க நேரிடும். 1) இந்த தரவை யாராவது சுருக்க முடியாது. 2) 15 சதவிகித அளவிற்கு தரவுகள் original திறன் இழக்க வாய்ப்புள்ளது.

எல்லாம் சரி மறையாக்கம் செய்யப்பட்டதை எவ்வாறு மீண்டும் வெளிக்கொணருவது

1.   முன்பு போலவே தரவுதளம் இல்லாமல் அக்சஸை மட்டும் திறந்து கொள்ளுங்கள். பிறகு மேலே கட்டளை சட்டத்தில் உள்ள Tools =>security=>encrypt / decrypt=> என்றவாறு தெரிவு செய்துசொடுக்குக.

2.   உடன் தோன்றும் உரையாடல் பெட்டியில் Decrypt செய்ய விரும்பும் தரவை தெரிவு செய்துசொடுக்குக. அதற்கு புதியதாக ஒரு பெயரிடுக.

VBA வில் உருவாக்கப்படும் செயல்திட்டத்தை பாதுகாத்தல்

  1. நாம் விரும்பும் தரவுதள VBA கோப்பினை தெரிவு செய்துசொடுக்குக. உடன் பிரதிபலிக்கும் VBE சாளரத்தின் மேலே கட்டளை பட்டையில் Tools=> என்றவாறு தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் திரையில் கோப்பின் பெயரைதெரிவுசெய்து அதனுடைய Properties என்பதை தெரிவுசெய்க,
  2. உடன் கோப்பின் பெயருடள் செயல்திட்ட பண்பியல்பு உரையாடல் பெட்டி படம்-11ல் உள்ளவாறு தோன்றுமஅதில் உள்ள protection என்ற tab ஐ தெரிவு செய்துசொடுக்குக. பின்Lock project என்பதில் உள்ள Lock projectfor viewing என்பதை தெரிவு செய்துசொடுக்குக. Password பகுதியில் தேவையான அனுமதி சொல்லை உள்ளீடு செய்க. Confirm password என்பதில் மீண்டும் அதையே தவறில்லாமல் உள்ளீடு செய்க.அதன் பின்னர் ok என்ற பொத்தானை தெரிவு செய்துசொடுக்குக. இந்த அனுமதி சொல் இருந்தால் மட்டுமே நம்முடைய VBE project மீண்டும் யாராலும் திறக்க முடியும்.

 படம்-11

நிலைபெட்டி(Sand box)

1.   அக்சஸை திறந்து கொள்க. மேலேகட்டளை பட்டையில் உள்ள Tools => macro => security => என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்துசொடுக்குக.

2.   உடன் தோன்றும் Security என்னும் உரையாடல் பெட்டியில் high அல்லது medium ஆகிய இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தெரிவு செய்துசொடுக்குக.

3.   ok என்ற பொத்தானை சொடுக்குக

4.   மீண்டும் அக்சஸை ஆரம்பிக்கவும்.

இலக்கசான்று பெறுதல் (Digital certificate)

1.   இந்தDigitally sign இற்கான அக்சஸ் தரவு தளத்தை திறந்து கொள்க. மேலே கட்டளை சட்டத்தில் Tools => macro => VBE =>என்றவாறு தெரிவு செய்துசொடுக்குக.

2.   உடன் தோன்றும் VBE சாளரத்தில் உள்ள கட்டளை பட்டியில் Tools=>Digital signature என்பதை தெரிவு செய்துசொடுக்குக.

3.   உடன் Digital signature  எனும் உரையாடல் பெட்டி (dialogue box) படம்-12ல் உள்ளவாறு தோன்றும்.

4.   அதில் Choose என்பதை தெரிவு செய்துசொடுக்குக. உடன் படம்-12ல் உள்ளவாறு Select certificate எனும்  உரையாடல் பெட்டி தோன்றும்.

5.   தேவையான சான்றிதழை தெரிவு செய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் தோன்றும் உரையாடல் பெட்டியில் ok என்ற பொத்தானை சொடுக்கி மூடிவிடுக.

 படம்-12

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003- தொடர் -பகுதி-41-அக்சஸில் பாதுகாப்பு அரணை உருவாக்குதல்

அக்சஸில் உருவாக்கப்பட்டு சேமிக்கப்படும் தரவுகளை பாதுகாப்பதற்காக Jet Security என்பது பயன்படுகிறது. இது குழு பாதுகாப்பாக செயல்படுகிறது.    இதில் இருக்கும் கீழ்காணும் உறுப்புகளை பற்றி முதலில் தெரிந்து கொள்வது  நல்லது.

பணிக்குழுக்கள்            –     Work Groups

குழுக்கள்                 –     Groups

பயனாளா¢கள்             –     Users

பொருள் சொந்தக்காரர்கள்  –     Object Owners

பொருள் அனுமதிகள்      –     Object Permissions

இது கீழ்காணும் இரண்டு முக்கிய காரணங்களுக்காக பயனாளர் அளவில் பாதுகாப்பை செயல்படுத்துகிறது.

1.    விரைவில் மறைந்து அழியக்கூடிய தரவுகளை தரவு தளத்தில் பாதுகாப்பதற்காக

2.    தரவுகளை பயன்படுத்தி கொண்டிருக்கும்போது தவறுதலாக ஒரு பொருளை (Table) மற்றொன்றாக (Queries) மாற்றி விடுவதை தவிர்ப்பதற்காக

பணிக்குழுக்களில் கோப்புகள்

இந்த Jet security ஆனது இயல்பு நிலையில் SYSTEM.MDW என்ற பெயரில் பணிக்குழுவின் தகவல் கோப்புகளை தேக்கி வைக்கின்றது.

அக்சஸ் ஆனது தரவுகைள அணுகும்போது முதலில் இந்த பணிக்குழுக்களின் தகவல் கோப்புகளை அனுமதித்து எந்த அளவிற்கு பயன்படுத்தி கொள்ளலாம்என்ற அனுமதி பெற்ற பின்னரே கோப்புகளை பயன்படுத்த தொடங்குகிறது.

அனுமதி என்றால் என்ன?

ஒரு தொழிற்சாலையை அல்லது அலுவலகத்தை புதிய நபரொருவர் அணுகுமபோது முதலில் அஙகுள்ள பாதுகாப்பு பிரிவை அணுகி யாரை? எதற்காக பார்க்கப் போகிறோம்? எவ்வளவு நேரம் ஆகும்? என்பது போன்ற விவரங்களை கூறியவுடன் பாதுகாப்பு பிரிவினர் நிறுவனத்தின் பொறுப்பாளரிடம் இதனை அறிவித்து உள்ளே செல்ல அனுமதிப்பார்கள். அவ்வாறே ஒவ்வொரு தரவுதளத்தில் உள்ள அட்டவணையையும் பயனாளர் வடிவமைப்பில் படிப்பதற்கு மட்டும்அல்லது வடிவமைப்பில் மாறுதல் செய்வதற்கு மட்டும் அல்லது தரவுகளை நிகழ்நிலைபடுத்த மட்டும் அல்லது தரவுகளை நீக்குவதற்கு மட்டும் என்பன போன்றவாறு அனுமதி அளித்து அந்த குறிப்பிட்ட செயலை மட்டும் செய்ய அனுமதிக்கிறது.

பாதுகாப்பு வரன்முறைகள்

நம்முடைய தரவுகளுக்குத்தான் Job security எனும் பாதுகாப்பு இருக்கிறதே என இருமாந்து இருந்துவிடாதீர்கள். இந்த பாதுகாப்பு குறிப்பிட வகை செயல்களுக்கு மட்டும்தான் என்பதை மனதில் கொள்ளுங்கள். எங்காவது பாதுகாப்பில் ஓட்டை இருந்தால் அதனை உங்களின் சொந்த கட்டளை வரிகளால் நிரப்பி பாதுகாப்பை பலப்படுத்துங்கள்.

தரவுதள அனுமதி சொல்

பாதுகாப்பு அரணிற்குள் உள்ள தரவுகளை  அணுகுவதற்கு உதவுவதுதான் இந்த அனுமதி சொல் ஆகும்.

1.    பாதுகாக்கப்பட வேண்டிய கோப்பினை  File => Open =>என்றவாறு மேலேகட்டளை  சட்டத்தில் தெரிவு செய்க. உடன் விரியும் உரையாடல் பெட்டியில் தேவைப்படும் கோப்பினை தெரிவு செய்து கீழே உள்ள Open என்பதில் கீழிறங்குபட்டியை சொடுக்குக. உடன் விரியும் கீழிறங்கு பட்டியில் (Pull down menu) உள்ள open exclusive என்பதை (படம் -1)தெரிவு செய்க.

படம் – 1

2.    பிறகு கட்டளை சட்டத்தில் உள்ள tools என்பதை தெரிவு செய்க. உடன் விரியும் tools என்ற பட்டியில் உள்ள security என்பதை தெரிவு செய்க. பின்னர் விரியும் சிறு பட்டியில் (படம் -2) set data base password என்பதை தெரிவு செய்க.

படம் – 2

3.    உடன் set data base password என்ற சிறிய உரையாடல் பெட்டி ஒன்று(படம் 3) தோன்றும் அதில் password எனும் பகுதியில் Skvasanth என்பது போன்ற உங்களுக்கு விருப்பமான நினைவில் கொள்ளத்தக்க எழுத்துக்களை அல்லது குறியீடுகளை உள்ளீடு செய்க. பின்னர் Verify என்ற பகுதியில் அதையே மீண்டும் உள்ளீடு செய்க. நாம் உள்ளீடு செய்யும் எழுத்துக்கள் X போன்ற குறியாகத்தான் தோன்றும் பின்னர் Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

அனுமதி சொல்லை நீக்குவதற்கு

1.    மேலேகட்டளை சட்டத்தில் Tools => Security => Unset Database password=> என்றவா று தெரிவு செய்க, புதியதாக உருவாக்க வேண்டுமெனில் தானாகவே set என்றும் ஏற்கனவே உருவாக்கிய கோப்பு எனில் unset என்றும் கட்டளை பட்டியில் தோன்றும்.

படம் – 3

2.    உடன் தோன்றும் unset database password என்னும் சிறு உரையாடல் பெட்டியில் (படம் -3) நாம் ஏற்கனவே வைத்திருந்த அனுமதி சொல்லின் எழுத்தை உள்ளீடு செய்து Ok என்ற பொத்தானை சொடுக்குக.

VBAவை பயன்படுத்தி அனுமதி சொல்லை அமைத்தல் 

கீழ்காணும் குறிமுறைகள் நடப்பில் திறந்திருக்கும் தரவு தள கோப்புகளில் அனுமதி சொல்லை அமைப்பதற்கு பயன்படுகிறது

இதில் ஏற்கனவே அனுமதி சொல் இருந்தால் அதை நீக்கி Szoldpassword = “ “ என்றும் புதிய அனுமதி சொல்லிற்கு Sznewpassword = “SKVASANTH” என்றும் உள்ளீடு செய்க. புதியதாக உருவாக்க வேண்டுமெனில் old என்பதற்கு நேராக அனுமதி சொல்லின் எழுத்துகளை உள்ளீடு செய்து new என்பதற்கு நேராக ஒன்றும் இல்லாமல் அமைக்க வேண்டும்.

Programme 41-1

Public Sub change data base password()

On Error Go To Change Data base password Err

Dim str Old password As String, str New password As String

Dim db As DAO.data base

Set db = current Db

str Old password = ” ”

str New password = “KVASANTHAN”

db.New password str Old password, str New password

Exit Sub

change pass word err

MsgBox Err & “:” & Err.Description

Exit Sub

End Sub

பணிக்குழுக்கள் Working Group

புதிய பணிக்குழுவை உருவாக்குதல்(Create working group)

1.    தரவு தளத்துடன் அல்லது தரவு தளம் இல்லாமலும் Accessஐ ஆரம்பிக்கவும். பின்னர் மேலே கட்டளை சட்டத்தில் உள்ள Tools = > Security = > Work group administrator = >என்றவாறு தெரிவு செய்து கொள்க. இந்த வசதி Access 2007ல் இப்போது இல்லை. Access 2007 இல் வழிகாட்டி (wizard) மூலம் உருவாக்கும் வசதி மட்டுமே  உள்ளது.

  1. உடன் work group administrator என்ற சிறு உரையாடல் பெட்டி (படம் -4) தோன்றும், அதில் create என்ற பொத்தானை சொடுக்குக.

படம் – 4

3.    உடன் work group owner information என்ற உரையாடல் பெட்டி (படம் -4) தோன்றும் அதில் name, organization, work group ID போன்றவைகளில் தகுந்த விவரங்களை மிகச் சரியாக உள்ளீடு செய்து Ok என்ற பொத்தானை சொடுக்குக

4.    உடன் work group information file என்ற சிறு உரையாடல் பெட்டி(படம் -5) தோன்றும் அதில் work group என்ற பகுதியில் அதற்கான கோப்பின் பெயரை உள்ளீடு செய்து ok என்ற பொத்தானை சொடுக்குக.

5.    உடன் confirmation work group information என்ற உரையாடல் பெட்டி(படம் -5) தோன்றும். அனைத்தும் சரியாக இல்லையெனில் change என்பதை சொடுக்கி மீண்டும் சரியாக உள்ளீடு செய்து சரி செய்து கொள்ளவும். சரியாக இருக்கிறது எனில் ok என்ற பொத்தானை சொடுக்குக. உடன் you have successfully created the work group என்ற ஒரு செய்தி பெட்டி (படம் -5) திரையில் பிரதிபலிக்கும்.

படம் – 5

ஏற்கனவே இருக்கும் பணிக்குழுவில் சேர்த்துகொள்ளுதல்(Join in work group)

புதியதாக பணிக்குழு உருவாக்க விரும்பவில்லை ஆனால் ஏற்கனவே நடப்பில் உள்ள பணிக்குழுவுடன் சேர்த்து கொள்ள விரும்பினால்

1.  மேலே கட்டளைப்பட்டையில் Tools => Security => work group administrator=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்கியவுடன் படம் 4ல் உள்ளவாறு தோன்றும் workgroup administrator எனும் உரையாடல் பெட்டியில் join எனும் பொத்தானை சொடுக்குக. உடன் படம் 5ல் உள்ளவாறு தோன்றும் உரையாடல் பெட்டியில் work groupன் பெயர் தெரியவில்லை எனில் browse என்பதை தெரிவு செய்க, உடன் தோன்றும் உரையாடல் பெட்டியில் உங்களின் தரவுதள கோப்பு உள்ள இடத்தை சரியாக தெரிவு செய்க. சரியாக இருக்கிறது எனில் ok பொத்தானை சொடுக்குக. உடன் படம் 5ல் உள்ளவாறு தோன்றும் உரையாடல் பெட்டியில் சரியாக இருந்தால் ok என்ற  பொத்தானையும் தவறாக இருந்தால் change என்ற பொத்தானையும் சொடுக்கி சரி செய்து மீண்டும் ok என்ற பொத்தானை சொடுக்குக.

பயனாளர் கணக்கை உருவாக்குதல்(Create users account)

1.    புதியதாக பயனாளரை உருவாக்கிட : மேலே கட்டளைபட்டையில் Tools => Security => user and group=> என்றவாறு தெரிவு செய்து சொடுக்குக.

2.    உடன் தோன்றும் user and group என்ற உரையாடல் பெட்டியில் (படம்-6) user மற்றும் group member ஆகிய இரண்டு பகுதிகளில் உள்ள புதிய பயனாளரின் பெயர் அனுமதி சொல்லை உருவாக்கி user என்றபகுதியிலும் இவ்வாறு உருவாக்கிய பயனாளர் எந்த குழுவுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற விபரம் group membership என்பதிலும் உள்ளன. User என்ற tab ஐ தெரிவு செய்க. உடன் விரியும்அதே user and group என்ற உரையாடல் பெட்டியில் new எனும் பொத்தானை சொடுக்குக

படம் – 6

 உடன் தோன்றும் new user/group என்னும் சிறு உரையாடல் பெட்டியில்(படம்-6) உள்ள name, personal ID ஆகிய விவரங்கள் உள்ளீடு செய்து ok என்ற பொத்தானை சொடுக்குக

இவ்வாறு சேர்க்கப்பட்டuserஐ நீக்குவதற்கு( delete)

மேலே கட்டளைபட்டையில் Tools => Security => user and group என்றவாறு தெரிவு செய்க. உடன் படம் 5ல் உள்ளவாறு தோன்றும் உரையாடல் பெட்டியில் Name என்பதில் நீக்க விரும்பும் பெயரை தெரிவு செய்து delete என்ற பொத்தானை சொடுக்குக.

பொருளுக்கான சொந்தகாரரை அமைத்தல்(Set object owner)

அக்சஸில் உருவாக்கப்படும் அட்டவணை, வினா, அறிக்கை போன்ற ஒவ்வொரு பொருளும் குறிப்பிட்ட நபரால் உருவாக்கப்பட்டு இதனை யார்யாரெல்லாம் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கலாம் என அவரால் முடிவு செய்யப்படும். இவை மற்றவர்களால் பயன்படுத்த முடியாதவாறு பூட்டப்பட்டிருக்கும் மிக முக்கியமாக இயக்க நேரத்தில் இவ்வாறு உருவாக்கப்படும் வினாவில் யார் இதற்கு சொந்தக்காரர் என ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இதற்காக ஒரு குறிப்பிட்ட பணிக்குழுவிற்கான அனுமதி சொல்லை முதலில் வரையறுத்துவிட்டால் பயனாளருக்கான இயக்க நேர அனுமதி தானாகவே அமைக்கப்பட்டுவிடும்.

பொருட்களின் சொந்தக்காரரை மாற்றுதல்(change object owner)

1.    இதற்காக மேலே கட்டளைபட்டையில் Tools => security => user and group permission என்றவாறு தெரிவு செய்தவுடன் user and group permission என்ற உரையாடல் பெட்டி ஒன்று தோன்றும்

2.    அதில் change owner என்ற tabயை தெரிவு செய்க. உடன் விரியும் அதே உரையாடல் பெட்டியில் object என்பதில் மாறுதல் செய்ய வேண்டியதை தெரிவு செய்க.

3.    object type என்பதில் தேவையானவற்றை தெரிவு செய்க. பின்னர் group அல்லது users என்பதில் ஒரு வானொலி பொத்தானை தெரிவு செய்க.

4.    பின்னர்change owner என்ற பொத்தானை(படம்-7) சொடுக்குக.

படம் – 7

பொருட்களுக்கான அனுமதி அமைத்தல்(Permission for Object)

இதில் வெளிப்படையான அனுமதி, மறைமுக அனுமதி என இரண்டு வகை உள்ளன.

முதல் வகை அனுமதி பயனாளருக்கும் இரண்டாவது வகை அனுமதி பணிக்குழுக்களுக்கும் வழங்கப்படும்.

அனுமதியை ஒதுக்கீடு செய்தல் மற்றும் திரும்ப பெறுதல்(permission Assigned and revoked)

1.    இதற்காக மேலே கட்டளைபட்டையில் Tools => security => user and group permission என்றவாறு தெரிவு செய்தவுடன் தோன்றும் user and group permission என்ற உரையாடல் பெட்டி(படம்-7) ஒன்று தோன்றும்

2.    அதில் permission என்ற tabஐ தெரிவு செய்க. உடன் இதே உரையாடல் பெட்டி படம்-7-ல் உள்ளவாறு தோன்றும்

3.    பின்னர் object type என்பதில் உள்ள கீழிறங்கு பட்டியில் திறந்து தேவையான பொருளை தெரிவு செய்க

4.    அதன் பின்னர் user/group name பட்டியில் ஒன்றை தெரிவு செய்க

5.    பின்னர் list என்பதில் உள்ள users அல்லது group ஆகிய இரண்டில் ஒரு வானொலி பொத்தானை மட்டும் தெரிவு செய்க.

6.    அதன் பின்னர் object name என்ற பட்டியலில் நாம் மாறுதல் செய்ய விரும்புவதை தெரிவு செய்க

7.    பிறகு Permission என்பதன் கீழ் உள்ள Read design,Modify design) போன்ற வாய்ப்புகளுள்ள  தேர்வு செய் பெட்டிகளை தெரிவு செய்க.

8.    கடைசியாக கீழயுள்ள apply என்ற பொத்தானை(படம்-8) சொடுக்குக

படம் – 8

 நாம் உருவாக்கும் தரவு தள கோப்புகளை மற்றவர்களுக்கு வழங்கும்போது பாதுகாப்பாக வழங்க வேண்டுமல்லவா அதற்காக

1.    முதலில் எந்த பணிக்குழுக்களுக்கு(work groups) உங்கள் தரவு தளத்தை பகிர்ந்தளிக்க(Distribute) விழைகிறீர்களோ அதனை உருவாக்குக

2.    பின்னர் Admin group என்பதில் உள்ள admin users என்பதை நீக்கி விடுக

3.    அதன்பின்னர் பயனாளர் குழுவிற்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்து அனுமதியையும் நீக்கி விடுக,

4.    பின்னர் தரவுதள பொருட்களில் உள்ள admin user என்பதற்கான வடிவமைப்பு அனுமதியையும் நீக்கி விடுக

5.    இறுதியாக Admin userக்கு எதுவும் அனுமதி சொல் வழங்க வேண்டாம்.

இவ்வாறு செய்தவுடன் உங்களால் உருவாக்கப்படும் தரவு தள பொருட்கள் உள்ள கோப்புகளை Admin user தவிர மற்றவர்களால்  வடிவமைப்பு செய்ய முடியாது.

ஓப்பன்ஆஃபிஸ் ட்ரா-68-வரைபொருட்களை குழுவாக சேரத்தல்(grouping) ஒன்றாக இணைத்தல்(combining)

ஒன்றுக்குமேற்பட்ட வரைபொருட்களை குழுவாக சேர்த்தல் (grouping) ஒன்றாக இணைத்தல்(combining) ஆகிய இருவழிகளில் ஒரே தொகுதியாக ஆக்கலாம் அல்லது புதிய வடிவத்திற்கு உருமாற்றலாம்

இந்த குழுவாக சேர்த்தல் (grouping) என்பது ஒரு கூடைக்குள் வரைபொருட்களை ஒன்றாக குவித்து வைப்பதற்கு ஒப்பாகும் அவைகளை ஒட்டுமொத்தமாகவும் அல்லது தனித்தனியாகவும் மாறுதல்கள் செய்யலாம் தேவையில்லையெனில் தனிப்பட்ட வரைபொருளை இந்த குழுவிலிருந்து பிரித்து எடுக்கலாம் இதில் ஒரு தனிப்பட்ட வரைபொருளின் line thickness, colors, area propertiesஆகிய தனித்தன்மை மாறாமல் அப்படியே இருக்கும்

ஆனால் ஒன்றாக இணைத்தல்(combining) என்பது ஒன்றுக்குமேற்பட்ட வரைபொருட்களை  ஒன்றுசேர்த்து புதிய நிலையான உருவத்தில் உருவாக்குவதாகும் இந்த வழிமுறையில் வரைபொருட்கள் ஒன்றாக இணைத்தபின் தனித்தனியாக பிரிக்கமுடியாது தனிப்பட்ட வரைபொருளின்line thickness, colors, area propertiesஆகிய தனித்தன்மையும் அதன்பின் இருக்காது

குழுவாக சேர்த்தல் (grouping):இவ்வாறு குழுவாக வரைபொருட்களை ஒன்று சேர்ப்பதற்கு முதலில்

1 shift விசையை அழுத்தி பிடித்துகொன்டு தேவையான வரைபொருட்களை  தெரிவு செய்து சொடுக்குக அல்லது  வரையும் கருவிபட்டையிலுள்ள selection என்பதை  தெரிவு செய்து சொடுக்கியபின் தேவையான வரைபொருளை உள்ளடக்கிய ஒரு செவ்வக உருவை வரைந்திடுக

2 அதன்பின்னர் அவைகளின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Group என்ற (படம்-1) கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக

 படம்-1

  அதற்கு பதிலாக மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் modify=> Group  =>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது Control+Shift+Gஆகிய மூன்று விசைகளை சேர்த்து அழுத்துக

இவ்வாறு உருவாக்கபட்ட குழுவை பிரிப்பதற்காக குழுவாக சேர்க்கபட்ட பொருட்களின் மீது  இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் unGroup என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக

அதற்கு பதிலாக மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் modify=> unGroup  =>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  அல்லது Control+Shift+Gஆகிய மூன்று விசைகளை சேர்த்து அழுத்துக

குழுவாக வரைபொருட்களை சேர்த்தபின் தேவையெனில் குழுவிலுள்ள இவைகளை தனித்தனியாக மாறுதல்கள் செய்யமுடியும்   அதற்காக  அக்குழுவின்மீது   இடம்ச சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் EnterGroup என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக  அல்லது சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக பின்னர் ஒவ்வொரு வரைபொருளாக தெரிவுசெய்து நாம்விரும்பியவாறு மாறுதல்கள் செய்து கொள்க

இவ்வாறு மாறுதல்கள் செய்தபின் வெளியேறுவதற்கு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில்  Exit groupஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது இந்த குழுவிற்கு வெளியே இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக வரை பொருட்களை ஒன்று சேர்த்து குழுவிற்குள் மற்றொறு குழு nested என்றவாறும் உருவாக்க முடியும்

ஒன்றாக இணைத்தல்(combining): மேலே குழுவாக சேர்ப்பதற்கான முதல்படிமுறையை அப்படியே பின்பற்றுக

அதன்பின்னர்  அவைகளின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில்  combine என்ற (படம்-1)கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-2

  அதற்கு பதிலாக மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் modify=>combining =>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  இவ்வாறு ஒருங்கிணைக்கும்போது அதன் உறுப்பு வரைபொருட்களாநது அவைகளுடைய தனித்தன்மை இழந்து புதிய உருவின் (படம்-2) தன்மையாக மாறிவிடும்  பின்னர்   மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளை களில் modify=>break =>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் புதிய திலிருந்து பிரிந்து செல்லுமேதவிர ஒன்றாக சேருவதற்குமுன் இருந்த line thickness, colors, area propertiesஆகிய தனித்தன்மை அப்படியே பிரிந்து செல்லாது

ஒன்றுக்குமேற்பட்ட வரைபொருட்களை தெரிவுசெய்து கொண்டு  Merging, subtracting, intersecting  ஆகிய மூன்று (படம்-3)வழிகளில்  ஒன்றிணைத்தல் செயலை செய்யமுடியும்

இதுoriginal  இது Merg     இதுsubtract    இதுintersect  (படம்-3)ஆகும்

ஒரு நீள்வட்டத்தையும் செவ்வகத்தையும் ஒன்றின்மீது ஒன்றாக ஏறியவாறு வரைந்தபின் அவைஇரண்டையும தெரிவு செய்துகொணடு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் shapes என்ற கட்டளையையும் பின்னர் விரியும் சிறு பட்டியில்substract  என்பதையும் தெரிவுசெய்து சொடுக்குக   அதன்பிறகு இறுதி உருவம் படம்-4-ல் உள்ளவாறு அமையும்

படம்-4

 இவ்வாறு வரை பொருட்களை Combine அல்லது merge செய்யும்போது  அவ்வரை பொருட்கள் எது முன்பக்கம் உள்ளதோ அல்லது எது பின்பக்கம் உள்ளதோ அதற்கேற்றாற்போன்று (படம்-5) இறுதி உருவம் அமையும்

படம்-5

 அவைகளின் இருப்பிடத்தின் நிலையை முன்பின் மாற்றியமைப்பதற்கு வரை கருவிகளின் பட்டையில் இருக்கும் position என்ற(படம்-6) கருவிகளின் பட்டை பயன்படுகின்றது

படம்-6

வரைபொருட்களின் இருப்பிடத்தை சரிசெய்து அமைப்பதற்குவரைகருவிகளின் பட்டையில் இருக்கும் align என்ற(படம்-7) கருவிகளின் பட்டை பயன்படுகின்றது

 படம்-7

 இருவரைபொருட்களுக்கிடையேயான இடைவெளி எவ்வளவு இருக்கவேண்டும் எவ்வாறு இருக்கவேண்டும் என அமைப்பதற்கு Distribution என்ற கட்டலை பயன்படுகின்றது   இதனை செயல்படுத்துவதற்காக குழுவாக சேர்க்கபட்ட பொருட்களின் மீது  இடம்  சுட்டியை வைத்து சுட்டியன் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Distribution என்ற   தெரிவுசெய்து சொடுக்குக

அதற்கு பதிலாக மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் modify=> Distribution  =>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

உடன்  Distribution என்ற உரையாடல் பெட்டியொன்று (படம்-8)திரையில் தோன்றிடும் வரைபொருட்களுக்கிடையே இடைவெளி படுக்கைவசமாக தேவையெனில் அதிலுள்ள horizontal என்பதன்கீழுள்ள வாய்ப்புகளில் ஒன்றினையும் வரைபொருட்களுக்கிடையே இடைவெளி நெடுக்கைவசமாக தேவையெனில் அதிலுள்ள verticalஎன்பதன்கீழுள்ள வாய்ப்புகளில் ஒன்றினையும்  தெரிவுசெய்து கொண்டுok  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கு

 படம்-8

தரவுகளின் சேமிப்பிற்கான மாற்றுவழி

  பொதுவாக நம்முடைய மிகமுக்கியமான தரவுகளை மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பாக சேமித்து வைத்திட வன்தட்டிற்கு பதிலாக சிடி அல்லது டிவிடியை பயன்படுத்துவோம் ஆனால் இந்த தரவுகளின் அளவு 100 ஜிபி போன்று அதிகமாகும்போது இவ்வாறு சிடி அல்லது டிவிடியை பயன்படுத்த முடியாது அதற்கு பதிலாக வேறு மாற்று வழியாக பின்வரும் படிமுறைகளை பின்பற்றி பாதுகாத்திடுக

முதலில் நிருவாகியாக நம்முடைய கணினியில் உள்நுழைவு செய்க பின்னர் start=>Run=.> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக .அதன்பின்னர் தோன்றிடும் Run என்ற உரையாடல் பெட்டியின் openஎன்ற உரைபெட்டியில் cmd என தட்டச்சு செய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் தோன்றிடும் கருப்பு வெள்ளையான Command Prompt.திரையின் துடிக்கும் இடம்சுட்டி இருக்குமிடத்தில்diskpart என தட்டச்சு செய்து diskpart> என்று தோன்றும் வரை சிறிது காத்திருக்கவும்

அதில் list volume என தட்டச்சு செய்திடுக உடன் கணினியின் இயக்கக (system drives ) விவரங்களை திரையில் பட்டியலாக காண்பிக்கும்

அவற்றுள் எந்த இயக்ககத்தை மறைத்து வைக்க விரும்புகின்றோம் என தெரிவுசெய்க உதாரணமாக F என்ற இயக்ககத்தை எனில்(Drive) Volume 2 என்பதை தெரிவுசெய்து உள்ளீட்டு (Enter) விசையை(key) அழுத்துக

பிறகு இந்த இயக்ககம் நினைவகத்தில் மேலேற்றுதல் செய்தபின் தோன்றிடும் திரையில் remove letter Fஎன தட்டச்சு செய்திடுக

அதன்பின்னர்கருப்பு வெள்ளையான Command Prompt.திரையிலிருந்து வெளியேறி My Computer என்பதில் நாம் மறைத்து வைத்த F என்ற இயக்ககம் இருக்கின்றதா என சரிபார்த்து கொள்க

இவ்வாறு மறைத்ததை மீண்டும் தோன்றச்செய்வதற்காக இதே கருப்பு வெள்ளையான Command Prompt.திரையில் மேலே கூறிய படிமுறையினை பின்பற்றி கணினியின் இயக்கக (system drives) விவரங்களை திரையில் பட்டியலாக காண்பிக்கும் diskpartஎன்ற பகுதியில் assign drive Fஎன தட்டச்சு செய்துஉள்ளீட்டு விசையை அழுத்தியபின் கருப்பு வெள்ளையான Command Prompt.திரையிலிருந்து வெளியேறி My Computer என்பதில் நாம் மறைத்து வைத்த F என்ற இயக்ககம் இருக்கின்றதா என சரிபார்த்து கொள்க

எம்எஸ் அவுட்லுக் -2010

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக் 2010 என்ற மின்னஞ்சல்களை கையாளும் பயன்பாடானது POP3, IMAP Exchange accounts என்பன போன்ற இணையத்தில் மின்னஞ்சல் சேவை வழங்கும் அமைவுடன் ஒத்தியங்குமாறு செய்யபட்டுள்ளது இவற்றுள் Exchange என்பது மட்டும் அவுட்லுக்2010 –இன்மின்னஞ்சல் சேவையுடன் calendar ,contacts என்பன போன்ற சேவையை ஆதரிக்கின்றது ஆனால் POP3, IMAP ஆகியவை அவுட்லுக்2010-இன் அவ்வாறான சேவையை ஆதரிக்கவில்லை இதனை செயல்படுத்திட அவுட்லுக் 2010 உடன் ஹாட் மெயில் என்ற மின்னஞ்சல் சேவையை இணைத்து கையாளுவது நன்று இதற்காக பின்வரும் படிமுறையை பின்பற்றிடுக

முதலில் நாம் Hotmail என்ற மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தவில்லை என்பதை உறுதிசெய்து கொள்க அல்லது அந்த Hotmail சேவையினை மூடிவிட்டு வெளியேறுக பின்னர் அவுட்லுக் 2010 –இன் New Account Setup என்ற திரையில் ஹாட் மின்னஞ்சல் கணக்கு விவரங்களை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தியவுடன் Hotmail Connector என்பதை பதிவிறக்கம் செய்யும் பின்னர் அதனை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்க உடன் தோன்றிடும் Microsoft Outlook Hotmail Connector 32-bit setup என்றதிரையில் install என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இதனை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்திடுக

டம்-1

அவ்வாறே மைக்ரோசாப்ட் அவுட்லுக் 2010 என்ற பயன்பாட்டினையும் நிறுவுகை செய்து முதன்முதலில் இதனை இயக்கிய பின்னர் தோன்றிடும்(டம்-1) திரையில் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் தோன்றிடும் (டம்2)திரையில் yesஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

டம்2

அதன்பின்னர் தோன்றிடும் திரையில் file என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் திரையில் add account என்ற (டம்3)பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

டம்3

பின்னர் தோன்றிடும் திரையில் மின்னஞ்சல் கணக்கு விவரங்களை (டம்4)உள்ளீடு செய்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

டம்4

உடன் நம்முடைய கணக்கு அமைவுகளை சரிபார்த்து இதனை ஏற்கனவே நம்மால் நிறுவபட்ட Hotmail Connector உடன் இணைப்பை(டம்5) ஏற்படுத்தி கொள்ளும்

டம்5

இவ்வாறான இணைப்பிற்கான அனைத்து பணிகளும் முடிந்ததாக காண்பிக்கும் திரையில் finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

மெய்நிகர் கணினியில் விண்டோ8 ஐ நிறுவுகை செய்வது எவ்வாறு

ஏற்கனவே வேறு இயக்கமுறைமையை பயன்படுத்தி கொண்டுள்ள கணினியில் நினைவகத்தை பாகப்பிரிவினை செய்து இந்த விண்டோ 8 இயக்கமுறைமையை நிறுவுகை செய்வதற்கு பதிலாக மெய்நிகர் கணினிக்குள் விண்டோ8 என்ற இயக்கமுறைமையை நிறுவுகை செய்து இயக்கி பயன்படுத்திகொள்ளலாம்

இதற்காக நம்முடைய கணினியில் மற்ற பயன்பாடுகளை போன்று Oracle VirtualBoxஎன்பதையும் விண்டோ 8 இன் Consumer Preview சோதனை பதிப்பை 3.33GB ISOகோப்பாகவும் பதிவிறக்கம் செய்துகொள்க

முதலில் இந்த Oracle VirtualBoxஎன்பதை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்தபின் Start => All Programs => Oracle VM VirtualBox => Oracle VMVirtualBox=>என்ற வாறு கட்டளைகளை செயற்படுத்தி இதனை திரையில் தோன்றிடசெய்க

இந்த Virtual Box –இன் தொடக்கத்திரையில் new என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி new virtual machine ஐ உருவாக்கும் திரையை தோன்ற செய்க

பின்னர் தோன்றிடும் வழிகாட்டியின் திரையில் nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் தோன்றிடும் திரையில் இந்த புதிய விண்டோ -8 இயக்க முறைமையை நிறுவுபோகும் மெய்நிகர் கணினிக்கு ஒரு பெயரை nameஎன்ற பகுதியில் உள்ளீடு செய்து OS Typeஎன்ற பகுதியின் கீழுள்ள Operating System: என்பதற்குMicrosoft Windowsஎன்றும்Version: என்பதற்குOther Windowsஎன்றும் உள்ளீடு செய்து nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

அதன்பிறகு தோன்றிடும் திரையில் ரேம் நினைவகம் எவ்வளவு இந்த மெய்நிகர் கணினிக்கு ஒதுக்கவிருக்கின்றோம் என இதில் உள்ள நகர்வி பொத்தானை பிடித்து நகர்த்துவதன்மூலம் அமைத்து கொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

குறிப்பு தற்போது இருக்கும் ரேம் நினைவகத்தில் இதற்காக பாதிக்குமேல் ஒதுக்கீடு செய்யவேண்டாம் என பரிந்துரைக்கபடுகின்றது

பிறகு தோன்றிடும்Virtual Hard Diskஎன்ற திரையில் start up Disk என்பதன் கீழுள்ள Create new hard diskஎன்ற வாய்ப்பை தெரிவுசெய்து கொண்டு nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

அதன்பிறகு தோன்றிடும் திரையில் தேவையான அமைவுகளை அமைத்துகொண்டு வன்தட்டு நினைவகத்தின் அளவு அதில் விண்டோ 8 இற்கான நினைவக அளவு, இடஅமைவு போன்றவைகளை அமைத்துகொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

இந்த செயலின் முடிவாக தோன்றிடும் திரையில் Create என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

அதன்பிறகு தோன்றிடும் Oracle VM Virtual Manager என்ற திரையில் இடதுபுற பலகத்தில் Window 8 Consumer preview என்பது பட்டியலிடபட்டிருக்கும் அத்திரையின் மேலே உள்ள start என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

உடன் தோன்றிடும்Welcome to First Run Wizard என்ற வழிகாட்டி திரை நாம் ஏற்கனவே பதிவிறக்கம் செய்துவைத்துள்ள Windows8 ISO என்ற கோப்பிலிருந்து இயங்க தொடங்க விருக்கின்றது அதனால் nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பிறகு தோன்றிடும் Select Installation Media என்ற திரையில் Media source என்பதன்கீழ் Folderஎன்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் Host Drive D என்றவாறு கோப்பகத்தை தெரிவு செய்து கொள்க

பின்னர் தோன்றிடும் விண்டோ எக்ஸ்புளோரர் திரையில் Windows 8 Consumer Preview ISO என்ற கோப்பு இருக்குமிடத்தை தேடிபிடித்து தெரிவுசெய்து கொண்டு Openஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் வழிகாட்டி திரையில் nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

அதன்பின் இந்தவிண்டோ 8 இயக்கமுறைமையை நிறுவுகை செய்வதற்காக Start என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

இதன்பிறகு விண்டோ 8 இயக்கமுறைமை மெய்நிகர் கணினிக்குள் நிறுவிடும் செயல் துவங்கி நிறுவுகை பணி முடிவடையும்

 

விபிஎன் அடிப்படையில் வாடிக்கையாளர்/சேவையாளர் (client/server VPN) பயன்பாட்டினை நிறுவுகை செய்து பயன்படுத்துவது எவ்வாறு

குறிப்பு இந்த படிமுறை விண்டோ எக்ஸ்பி இயக்கமுறைமைக்கானது இருந்தாலும் இந்த அடிப்படையை தெரிந்துகொண்டால் மற்ற விண்டோ இயக்கமுறைமையில் எளிதாக செயல்படுத்தி கொள்ளமுடியும்

சேவையாளர் பகுதியில்(Server Side):

படிமுறை 1 Start => Control Panel => Network Connections=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயல்படுத்துக பின்னர் தோன்றிடும் திரையில் New Connection Wizard என்பதை தெரிவுசெய்து சொடுக்குக நம்முடைய கணினியின் இயக்கமுறைமை விண்டோ 7 ஆக இருந்தால் Control Panel=>Network and Internet=>Network and Sharing Center=> Change adapter settings =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயல்படுத்துக

படிமுறை 2 பின்னர் தோன்றிடும் வழிகாட்டியின் திரையில் Set up an advance connectionஎன்பதை தெரிவுசெய்து கொண்டு nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

அதன்பின்னர் தோன்றிடும் திரையில் Accept incoming connectionsஎன்பதை தெரிவுசெய்து கொண்டு nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் தோன்றிடும் திரையில் ஒன்றும் செய்யாமல் nextஎன்ற பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக

அதன்பின்னர் தோன்றிடும் திரையில் Allow virtual private connectionsஎன்பதையும் இதனை அனுகி பயன்படுத்துகொள்ள அனுமதிக்கும் பயனாளர்களை தெரிவுசெய்து கொண்டு Internet Protocol (TCP/IP)என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் தோன்றிடும் திரையில் TCP/IP முகவரியை குறிப்பிட்டு From என்ற புலத்தில் 192.168.2.100 என்றவாறும் Toஎன்ற புலத்தில்192.168.2.150என்றவாறும் உள்ளீடு செய்து Nextஎன்ற பொத்தானையும் இறுதியாக இந்த வழிகாட்டியின் செயலை முடிவிற்கு கொண்டு வருவதற்கு finish என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக

இதன்பிறகு இந்த விண்டோ ,வழிசெலுத்தி ஆகியவற்றின் இணைப்பிற்கான TCP: 1723 ,UDP: 500 என்றவாறான வாயிலை திறந்து கொள்க இதில் சிக்கல் ஏதேனும் தோன்றினால் 1701,50,51 என்றவாறு வாயில்களை திறக்க முயற்சிக்கவும்

வாடிக்கையாளர் பகுதியில்Client Side:

படிமுறை 1Start => Control Panel => Network Connections=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயல்படுத்துக பின்னர் தோன்றிடும் திரையில் New Connection Wizard என்பதை தெரிவுசெய்து சொடுக்குக நம்முடைய கணினியின் இயக்க முறைமை விண்டோ 7 ஆக இருந்தால் Control Panel=>Network and Internet=>Network and Sharing Center=> Change adapter settings=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயல்படுத்துக

படிமுறை 2 பின்னர் தோன்றிடும் வழிகாட்டியின் திரையில் Connect to the network at my workplaceஎன்பதை தெரிவுசெய்து கொண்டு nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

அதன்பின்னர் தோன்றிடும் திரையில் Virtual Private Networkஎன்பதை தெரிவுசெய்து கொண்டு nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் தோன்றிடும் திரையில் நம்முடைய நிறுவனத்தின் சேவையாளரின் பெயரை உள்ளீடு செய்து nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

அதன்பின்னர் தோன்றிடும் திரையில் நம்முடைய நிறுவனத்தின் சேவையாளரின் IP முகவரியை உள்ளீடு செய்து nextஎன்ற பொத்தானையும் இறுதியாக இந்த வழிகாட்டியின் செயலை முடிவிற்கு கொண்டுவருவதற்கு finish என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக

படிமுறை-3குறிப்பு: இந்த படிமுறை மிகமுக்கியமானதாகும் மீண்டும் Start => Control Panel => Network Connection=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயல்படுத்துக பின்னர் தோன்றிடும் திரையில் நாம் உருவாக்கியஇணைப்பின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் properties என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் properties என்ற உரையாடல் பெட்டியில் Networking என்ற தாவியின் திரையை தோன்றசெய்க அதில் Internet Protocol (TCP/IP) என்பதை தெரிவுசெய்து கொண்டு properties என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் advance என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Use default gateway on remote network என்ற வாய்ப்பு தெரிவுசெய்திருந்தால் அதனை நீக்கம் செய்துவிடுக

படிமுறை -4 இதன்பிறகு நாம் உருவாக்கிய இணைப்பை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் திரையில் பயனாளரின் பெயர் கடவுச்சொற்கள் ஆகியவற்றை உள்ளீடு செய்து இணைப்பை ஏற்படுத்தி கொள்க

விபிஎன் ஐ பயன்படுத்தி கொள்ளுதல்

மேலே கூறிய படிமுறைகளை பின்பற்றி விபிஎன் வாயிலாக இணைப்பு ஏற்படுத்தியபின் வாடிக்கையாளருக்கும் சேவையாளருக்கும் இடையே இணைய இணைப்பை ஏற்படுத்தி கொள்ள முடியும் இதற்காக மற்ற கணினியின் வளாகபிணைய ஐபி முகவரி மட்டும் தேவையானதாகும் இந்த இணைப்பை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்கவதன் வாயிலாக சேவையாளர், வாடிக்கையாளர் ஆகியோரின் இணைய இணைப்பு ஐபி முகவரியை 192.168.2.100 அல்லது 192.168.2.101என்றவாறு இருப்பதை தெரிந்து கொள்ளலாம் அதற்கு பதிலாக Start => Run => அல்லது Windows 7/Vista எனில் Start => Text box => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பின்னர் தோன்றிடும் திரையில் \\IP என தட்டச்சு செய்திடுக பின்னர் \\192.168.2.100என்றவாறு ஐபி முகவரியை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தியவுடன் நாம் ஏற்படுத்திய இணைப்பு கிடைக்கும்

Invert Selection என்ற கட்டளையின் பயன்

விண்டோ எக்ஸ்புளோரர் பயன்படுத்தி கோப்பகத்திலுள்ள கோப்புகளை நெகிழ்வட்டிற்கோ(floppy disk) அல்லது குறுவட்டிற்கோ(CD) பென்ட்ரைவிற்கோ நகலெடுத்து கொள்வோம் அவ்வாறு நகலெடுத்தலின்போது அந்த கோப்பகத்தில் உள்ள கோப்புகளில் ஒருசில தேவையில்லையென விட்டிட விரும்புவோம் அவ்வாறான சமயத்தில் Invert Selection என்ற கட்டளை மிகசிறந்த துனையாக அமைகின்றது இதனை செயற்படுத்துவதற்காக

முதலில் விண்டோ எக்ஸ்புளோரரை பயன்படுத்தி குறிப்பிட்ட கோப்பகத்திலுள்ள நாம் நகலெடுக்க விரும்பாத கோப்புகளை ctrl என்ற விசையை அழுத்தி பிடித்து கொண்டு தெரிவு செய்து கொள்க அதன்பின்னர் மேலே கட்டளைபட்டியிலுள்ள Edit என்ற கட்டளை தெரிவு செய்து சொடுக்குக பின்னர் விரியும் Edit என்ற பட்டியலில் Invert Selection என்பதை தெரிவு செய்து சொடுக்குக உடன் ஏற்கனவே நம்மால் தெரிவுசெய்திருந்த நாம் விரும்பாத கோப்பகளுக்கு பதிலாக நாம் விரும்பும் கோப்புகள் மட்டும் தெரிவு செய்ய பட்டுவிடும் உண்மையில் இது ஒரு மந்திர தந்திர செயல் போன்றதே

குறிப்பு நம்முடைய கணினியில் விண்டோ 7 இயக்கமுறைமை செயல்பட்டுவந்தால் விண்டோ எக்ஸ்புளோரர் திரையின் மேல்பகுதியில் இந்த கட்டளை பட்டி தோன்றாது அந்நிலையில் ALT என்ற விசையை அழுத்துக உடன் திரை.யின் மேல்பகுதியில் கட்டளை பட்டி தோன்றிடும்

Previous Older Entries