செல்லிடத்து பேசி மூலம் வலைபூவிற்கு செல்லாமலேயே வெளியிடமுடியும்

நம்முடைய செல்லிடத்து பேசி போன்ற சாதனங்களிலிருந்து கூட மின்னஞ்சல் அனுப்பவதன்மூலம் நம்முடைய கட்டுரை போன்ற தகவல்களை  நம்முடைய வலைபூவிற்கு குறிப்பிட்ட வலைதளத்தின் பக்கத்திற்கு செல்லாமலேயே பின்வரும் வழிமுறையை பின்பற்றி வெளியிடமுடியும்

7.1

முதலில் நம்முடை வலைபூவின் முகப்பு பக்கத்திற்கு செல்க பின் Dashboard => My Blogs=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக

7.2

பின்னர் தோன்றிடும் திரையில் New Post என்பதன் கீழுள்ள Screen options என்பதன் அம்புக்குறியை சொடுக்கி விரியசெய்க அதிலுள்ள Post by e mail என்றவாய்ப்பிற்கு நம்முடைய வலைபூவின் முகவரியை தேடிபிடித்து அதற்குரியEnable என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

7.3

இதற்கான சிறப்பு மின்னஞ்சல் முகவரியை வீகார்டின்மூலம் பதிவிறக்கம் செய்து கொள்க அல்லது புதியதாக regenerateஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி உருவாக்கி கொண்டு நம்முடைய மின்னஞ்சல் முகவரியில் பதிவுசெய்து சேர்த்து கொள்க

இதன்பின் நம்முடைய மின்னஞ்சலின் புதியமின்னஞ்சல் பக்கத்தை திறந்து அதில் To என்பதற்கருகிலுள்ள உரைபெட்டியில்  வலைபூவில் கட்டுரைகளை வெளியிடுவதற்காக சேமி்த்து வைத்த முகவரியை தேடிபிடித்து தெரிவுசெய்து கொள்க

பின்னர்subject என்ற பகுதியில் நம்முடைய வலைபூவின் தலைப்பை உள்ளீடு செய்து மின்னஞ்சல் உள்ளடக்கமாக நம்முடைய வலைபூ கட்டரையின் உள்ளடக்கத்தை உள்ளீடு செய்து என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்முடைய மின்னஞ்சல் சென்று சேர்ந்து  வலைபூவில் வெளியிடபட்டு அந்த விவரங்களை அறிவிக்கும் மின்னஞ்சல் ஒன்று நம்முடைய மின்னஞ்சல் பெட்டிக்கு வந்து சேரும்

ஜிமெயில் ஹாட்மெயில் போன்ற மின்னஞ்சல் சேவையாளர்கள்கூட இந்த வசதியை ஆதரிக்கின்றன மேலும் இதற்காக நம்முடைய மின்னஞ்சல் உள்ளீடு செய்யும்போது rich text or formatted ஆகிய நிலையில் வைத்து கொள்வது நல்லது

இணைப்பு படங்களையும் பிடிஎஃப் போன்ற ஆவனங்களையும் இணைப்பாக வலைபூவில் வைத்திடமுடியும்

பிழைகளை பரிசோதிப்பதற்கான தானியங்கி கருவிகள்

திறமூல மென்பொருளாக இருந்தாலும் நிறுவன மென்பொருளாக இருந்தாலும்  அதன் திறனானது அதிலுள்ள பிழைகளை பரிசோதித்து சரிசெய்யபடும் செயலைபொறுத்தே அமைகின்றது. ஆயினும் இந்த பிழைகளை பரிசோதித்து சரிசெய்யபடும் செயலானது அதிக காலத்தையும் மனிதஉழைப்பையும் ஏற்படுத்துகூடியதாக உள்ளது அதனால் அதனை தவிர்ப்பதற்காக இந்த  பிழைகளை பரிசோதித்து சரிசெய்யபடும் செயலானது தானியங்கியாக செயல்படுமாறு செய்யபடுகின்றது இவ்வாறு தானியங்கியாக செயல்படுவதற்காக ஸ்டேட்டிக் அனாலிஸிஸ், டைனமிக் அனாலிஸிஸ் ஆகிய கருவிகள் பயன்படுகின்றன

இந்த ஸ்டேட்டிக் அனாலிஸிஸ் கருவியானது உருவாக்கபடும் மென்பொருளானது உண்மையாக இயக்கி பிழைஏற்படுகின்றதாவென பார்ப்பதற்குமுன்னதாக பரிசோதித்து பார்த்திட உதவுகின்றது

பொதுவாக ஒரு மென்பொருள் நிரல் தொடரை  உருவாக்கியபின் அதிலுள்ள பிழைகளை பரிசோதித்து சரிசெய்வதற்கு ஸ்டேட்டிக் அனாலிஸிஸ் கருவியை பயன்படுத்திட வேண்டுமென கூறியவுடனேயே பெரும்பாலான நிரல்தொடர் எழுத்தாளர்களின் நினைவில் வருவது லின்ட் என்பது மட்டுமே இது இன்றுகூட பயன்பாட்டில் இருந்தாலும் ஸ்டேட்டிக் அனாலிஸிஸ் கருவியானது மிகசிறந்த அனைத்து வகையிலும் பயன்படக்கூடியதாக உள்ளது இந்த ஸ்டேட்டிக் அனாலிஸிஸ் கருவியை ஒரு மென்பொருள் நிரல்தொடர் உருவாக்கிடும் போது எந்தவொரு நிலையிலும் அந்நிலையில் ஏற்பட்டுள்ள பிழைகளை ஆய்வுசெய்து அவைகளை களைந்திட மிக ஏதுவாக உள்ளது  ஆயினும் அடிப்படையில் ஸ்பெஸிபிகேஷன்,.யூஎம்எல், டையகிராம் போன்ற மூலக்குறிமுறைகள் இந்த ஆய்விற்கு தேவையாகும்

ஆனால் இந்த டைனமிக் அனாலிஸிஸ் கருவியானது ஒரு மென்பொருள் நிரல் தொடரை  உருவாக்கிமுடித்த பின் இறுதியாக செயல்படுத்தி பார்க்கும் போதுமட்டுமே அதில்ஏற்படும் பிழைகளை பரிசோதித்து சரிசெய்யமுடியும்  நாம்குறிப்பிட்ட குறிமுறைகளின் வழிமுறையில்  குறிப்பிடபட்ட மதிப்பு வந்துள்ளதாவென மட்டுமே சரிபார்க்கும் அதில் ஏற்படும் தருக்க பிழைகளை இது சரிபாக்காது இது தேவையின் அடிப்படையில் மட்டுமே ஆய்வுசெய்ய பயன்படுகின்றது

மேலும் இது குறிப்பிட்ட மென்பொருள் எதனால் இயங்காமல் நின்றுவிடுகின்றது என சரியான பிழையை அறிந்து கொள்ள பயன்படுகின்றது  அதுமட்டுமின்றி பிழைகள் எங்கு ஏற்படுகின்றது என கண்டுபிடித்திடவும் அதன்பின் அவைகளை சரிசெய்திடவும் பயன்படுகின்றது

இவ்வாறு பிழைகளை பரிசோதித்து சரிசெய்யபடும் பணியின்போது பின்வரும் சொற்றொடர்கள் அடிக்கடி பயன்படுத்தபடுகின்றன

1ஃபால்ஸ் பாஸிட்டிவ் மென்பொருளின் நிரல்தொடரில் உண்மையில் பிழைஏதும் இருக்காதுஆனாலும் பிழைஉள்ளது என ஆய்வில் காண்பிப்பதை இந்த சொற்றொடர்கொண்டு  குறிப்பிடுவர்

2 ஃபால்ஸ் நெகட்டிவ் மென்பொருளின் நிரல்தொடரில் உண்மையில் பிழைஇருந்தும் ஏதும்இல்லை என தவறுதலாகஆய்வில் பிழைவிடுபட்டதை  இந்த சொற்றொடர்கொண்டு  குறிப்பிடுவர்

3ட்ரூ பாஸிட்டிவ் மென்பொருளின் நிரல்தொடரில் உண்மையில் பிழைஉள்ளது என ஆய்வில் காண்பிப்பதை இந்த சொற்றொடர்கொண்டு  குறிப்பிடுவர்

4 ட்ரூ நெக்ட்டிவ்  மென்பொருளின் நிரல்தொடரில் உண்மையில்  பிழை எதுவும் இல்லை ஆய்விலும் காண்பிக்கவில்லை எனில் இந்த சொற்றொடர்கொண்டு  குறிப்பிடுவர்

மூன்றாவது சொற்றொடர் நம்மை மிகச்சரியாக இந்த ஆய்வு வழிகாட்டு செல்கின்றது என நம்பகமாக அந்த பிழையை சரிசெய்து ஒருமென்பொருளை வாடிக்கையாளர் விரும்பியவாறு செயல் படஉதவுகின்றது

நான்காவது சொற்றொடரானது நாம் உருவாக்கிய மென்பொருளானது பிழைஏதும் ஏற்படாமல் வாடிக்கையாளர் விரும்பியவாறு செயல் படஉதவுகின்றது

முதல்வகை சொற்றொடர் பிழையே இல்லாமல் நிரல்தொடர் உருவாக்குபவரை அலைகழிப்பதை அல்லலுறுவதை குறிக்கின்றது

இரண்டாவது வகை அதிபயங்கரமானது நம்முடைய ஆய்வில் தப்பிய பிழையானது வாடிக்கையாளர் இயக்கும்போது பிழைஏற்பட்டு நம்மை அதிக தொல்லை கொடுப்பதை குறிப்பிடுகின்றது

இந்த ஸ்டேட்டிக் அனாலிஸிஸ் கருவியை கொண்டு பிஸி-லின்ட்(சி,சி++), ப்பிஎம்டி(ஜாவா),ஃபாக்ஸ்கேப் (சி#) ஆகியவற்றில் எழுதபடும் மில்லியன் கணக்கான நிரல்தொடர்வரிகளில் ஃபால்ஸ் பாஸிட்டிவ் என்ற பிழைச்செய்தி வருமானால் அத்தனை வரிகளையும் உண்மையில் பிழையே இல்லாமல் பிழைஇருப்பதாக அதனை சரிசெய்வதற்காக பரிசோதிக்கும் செயலானது கடற்கரை மணலில குண்டூசி தொலைந்ததை தேடுவதற்கு ஒப்பான செயலாகும்

இந்த ஸ்டேட்டிக் அனாலிஸிஸில் ஷெல்லோவ் அனாலிஸிஸ்,பேட்டர்ன் மேட்ச்சர்ஸ்,நெவர்த்தலஸ் ஆகிய மூன்றுமிகமுக்கிய கருவிகள் பயன்படுகின்றன இதில் பேட்டர்ன் மேட்ச்சர்ஸ் மிகச்சிறந்ததாகும் அதைவிட டீப் ஆனாலிஸிஸர் என்ற பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தும்  கருவி மிகபயனுள்ளதாக உள்ளது

ஒரு மென்பொருள் நிரல் தொடரை  உருவாக்கிமுடித்த பின் மேலே கூறிய பிழைகளை தேடிபிடித்து சரிசெய்யஉதவிடும் கருவிகளை கொண்டு இம்மென்பொருளில் ஏற்பட்டுள்ள பிழைகளை பரிசோதித்து சரிசெய்தபின் இறுதியாக செயல்படுத்தி பார்க்கும்போதும் மிகச்சரியாக வாடிக்கையாளர் விரும்பியவாறு இருக்கும் என நூறு சதவிகிதம் உத்திரவாதம் தரமுடியாது

 

ஆண்ட்ராய்டு இயக்கமுறையில்பயன்படுத்தபடும் சிறந்த அறிவியல் பயன்பாடுகள்

1Alchemy இந்த பூவலகில் உள்ள அத்தனை பொருட்களும் பூமி தண்ணீர் காற்று தீ  ஆகிய நான்கு அடிப்படபொருட்களின் கலந்த கலவையாகும்   இவைகளில் 300 க்குமேலான பொருட்கள்  எவையெவை சேர்ந்த கலவையாலானது என அறிந்து கொள்ள பயன்படுகின்றது

2Elements 2.0 ஒவ்வொரு பொருளின் அடிப்படை மூலக்கூறின் இயற்பியல் வேதியல் வெப்பவியல் அணுவியல் ஆகிய பண்பியல்புகளை இதிலுள்ள காலவாரியான அட்டவணையை கொண்டு (periodic table)  அறிந்து கொள்ள பயன்படுகின்றது

3Instant Heart rate செல்லிடத்து பேசியின் கேமரா லென்ஸ்மீது நம்முடைய விரல் நுணியை வைத்தால் போதும் இந்த பயன்பாடானது நம்முடைய இதயதுடிப்பின் வேகம் இரத்த ஒட்டத்தின் தன்மை இதனை தொடர்ந்து நம்முடைய தோலின் நிறம் இதனால் எவ்வாறு பாதிப்படையும் என்பன போன்ற தகவலைஅறிந்து கொள்ள பயன்படுகின்றது

4Wifi Analyzer அருகில் பயன்படுத்துவோரின் வொய்ஃபையின் சைகை திறன் அளவு நம்முடைய வீட்டில் எந்தெந்த இடத்தில் வொய்ஃபை சைகை கிடைக்காது  நம்முடைய வொய்ஃபையும்  அருகில் பயன்படுத்துவோரின் வொய்ஃபையும் சந்தித்து கொள்ளும் இடம் எது என்பனபோன்ற தகவல்களை அறிந்து கொள்ள பயன்படுகின்றது

5 Skeptical Science உலகம் வெப்பம் அதிகமாவதால் உலக வானிலையில் என்னென்ன பாதிப்பு ஏற்படும் மிகமுக்கியமாக துருவ பகுதிகளில் பனிக்கட்டி உருகுவதால் நமக்கு என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பனபோன்ற தகவலை அறிந்து கொள்ள பயன்படுகின்றது

6Mother TED என்பது Technology Entrepreneur design என்ற சொற்களின் சுருக்கு பெயராகும்  இதன்மூலம் தொழில்நுட்பம் வடிவமைப்பு போன்ற செய்திகளை வீடியோ படங்களாக கண்டு அறிந்து கொள்ள முடியும்

7 Google Sky Map இதன்மூலம் வானத்தில் குறிப்பிட்ட பகுதியிலுள்ள நட்சத்திரங்கள் கோள்கள் போன்ற விவரங்களை கண்ணால் கண்டு அறிந்து கொள்ள முடியும்

8 Taber’s Medical Dictionary மருத்துவத்தில் பயன்படும் 60000 க்கு அதிமான மருந்து பொருட்களின் பெயர்கள்  மருத்துவ பெயர்கள் அவைகளின் உச்சரிப்பு போன்றவைகளை  அறிந்து கொள்ள பயன்படுகின்றது

அதிகமாக செலுத்திய வருமானவரி தொகை திரும்ப பெறுவதற்கான தற்போதைய நிலை என்னவென அறிந்துகொள்ள

நம்மில் ஏராளமானவர்கள் வருமானவரியை தவறுதலாக கணக்கிட்டு அதிகமாக செலுத்தியபின் அவ்வாறு அதிகமாக செலுத்திய தொகை திரும்ப பெறுவதற்கான தற்போதைய நிலை என்னவென அறிந்துகொள்ள வழிதெரியாமல் தவித்து வருகின்றனர்  இவர்களுக்கு உதவுவதற்காக இந்திய அரசின் வருமானவரித்துறையானது Refund Banker Scheme  என்ற திட்டத்தை ஜனவரி 2007 முதல் அறிமுகபடுத்தியுள்ளனர் இதன்மூலம்  இணையபக்கத்தில் நம்முடைய வருமான வரி எண்ணையும் (PAN), வரிசெலுத்திய ஆண்டையும்  உள்ளீடு செய்து ஒருசில எளிய படிமுறையில் அதிகமாக செலுத்திய தொகை திரும்ப பெறுவதற்கான தற்போதைய நிலை என்னவென அறிந்துகொள்ளமுடியும்  இந்த இணையதள முகவரி https://tin.tin.nsdl.com/oltas/refundstatuslogin.html ஆகும்

இந்த வருமான வரியானது நேரடியாக RTGS / NECS ஆகிய வழிமுறையில் நம்முடைய வங்கிகணக்கிற்கு வந்து சேரும்  நம்முடைய வங்கிகணக்கு எண்ணையும் நாம் பயன்படுத்தும் வங்கி கிளையின் MICR/ IFSC ஆகிய குறிஎண்ணையும்  மிகச்சரியான நம்முடைய முகவரியையும் குறிப்பிட்டால் மட்டும் போதும்   இவ்வாறான விவரம் வழங்கவில்லையெனில் வங்கி காசோலைமூலம் நம்முடைய முகவரிக்கு அனுப்பிவைக்கின்றனர்

மேலே கூறிய வருமானவரிதுறையின் இணைதளபக்கத்திற்கு சென்று நம்முடையவருமான வரி எண்ணையும் (PAN), வரிசெலுத்திய ஆண்டையும்  உள்ளீடு செய்து submit என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக  உடன் இதுதொடர்பான தற்போதைய நிலை திரையில் தோன்றிடும்

அதற்கு பதிலாக பாரத ஸ்டேட் வங்கியின் கட்டணமற்ற 18004259760 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு உதவிகோரலாம்அல்லது ñ itro@sbi.co.inor refunds@incometaxindia.gov.in. ஆகிய முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி தற்போதைய நிலைஎன்னவென தெரிந்துகொள்ளலாம்

தம்முடைய முகவரி மாற்றத்தைகூட இதன்மூலம் அறிவிக்கமுடியும் மேலும் வழங்கபட்ட வங்கிவரைவேலை பணமாக்கபட்ட நிலையை தெரிந்து கொள்ளலாம் இதன்பின் மேல்முறையீடு செய்து இதனை தீர்வுசெய்யமுடியும்

மேலே கூறிய விவரங்களை அறிந்துகொள்ள முதலில் https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Registration/RegistrationHome.html என்ற தளத்திற்கு சென்று முதலில் நம்மை பற்றிய விவரங்களுடன் பதிவுசெய்து கொள்ளவேண்டும்

இதற்காக இந்த தளத்திற்குள்நுழைவு செய்து இதனுடைய முகப்பு பக்கத்தில்  Register Yourself என்ற இணைப்பை தெரிவுசெய்து  சொடுக்குக

பின்னர் விரியும் திரையில் Individual அல்லதுHUF  ஆகிய இரண்டில் நமக்கு தேவையான ஒன்றினை தெரிவுசெய்து கொள்க

அதன்பின் வருமானவரிபதிவுஎண் மின்னஞ்சல் முகவரி செல்லிடத்து பேசிஎண் பாதுகாப்பு வினாவிற்கான விடை ஆகிய விவரங்களை உள்ளீடுசெய்து Continue என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் தோன்றிடும் திரையில் தொடர்பு முகவரி விவரங்கள் கடவுச்சொற்கள் போன்றவற்றை உள்ளீடு செய்து அனைத்தும் சரியாக உள்ளது மற்றவர்களால் எளிதாக யூகிக்கமுடியாத வலுவான கடவுச்சொற்களை  உள்ளீடுசெய்துள்ளோம் என திருப்தியுற்றால் Submit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக   இதன் நம்முடைய மின்னஞ்சல் முகவரிக்கு வரும் மின்னஞ்சலின் இணைப்பை தெரிவுசெய்து சொடுக்கி இதனை செயல்படுத்தி கொள்க இதன்பின் இந்த தளத்திற்கு சென்று நம்முடைய வருமானவரிஎண் கடவுச்சொற்கள் பிறந்ததேதி ஆகியவற்றை உள்ளீடுசெய்து நம்முடைய வருமான வரிவிவரங்களை அறிந்து கொள்க

விண்டோ 8 இன் பின்னோக்கு ஒத்தியங்கும் தன்மை

பொதுவாக புதிய இயக்கமுறைமை அல்லது மென்பொருளின் பதிப்பு வெளியிடபடுமாயின் அதற்குமுந்தைய பதிப்பை புதிய பதிப்பிற்கு மேம்படுத்தி கொள்வதே வழக்கிமான நடை முறையாகும் ஆனால் தற்போது வெளியிடபட்டுள்ள விண்டோ 8 ப்ரோ என்ற இயக்க முறைமையானது பயனாளர் விரும்பினால் தம்முடைய இயக்கமுறைமையை விண்டோ7 ப்ரொபஸனல் அல்லது விண்டோ விஸ்டா பிஸ்னெஸ் ஆகிய முந்தைய பதிப்பிற்கு பின்னோக்கி மாறிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது

ஏன் இவ்வாறு மைக்ரோ சாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது என ஆய்வுசெய்தால் இந்நிறுவனம் தண்முடைய விண்டோஎக்ஸ்பி ப்ரொபஸனல் இயக்கமுறைமைக்கான ஆதரவை 2014 அக்டோபர் இற்கு பிறகு விளக்கி கொள்ள போகின்றது அதனால் மிகநீண்ட காலத்திற்கு பயன்பாட்டில் உள்ள

விண்டோ எக்ஸ்பி பயனாளர்களை புதிய பதிப்பிற்கு மாறவேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படுத்துவதற்காகவே இந்த நாடகத்தை செயல்படுத்துகின்றது

தற்போது வெளியிடவிருக்கும் ஆஃபிஸ் 2013 என்ற பயன்பாட்டு மென்பொருளானது இந்த விண்டோ எக்ஸ்பியில் இயங்காது என்ற நிலையை மைக்ரோ சாப்ட் நிறுவனம் உருவாக்கவிருக்கின்றது   கணினி உற்பத்தியாளரோ மென்பொருள் நிறுவுகைசெய்பவரோ மைக்ரோசாப்ட் நிறவனமோ விண்டோ இயக்கமுறைமையின் முந்தைய பதிப்புகளை வழங்க மாட்டார்கள் அதனை பயனாளர்களே தம்முடைய சொந்த பொறுப்பில் பணம் கொடுத்து பெற்றுகொள்ளவேண்டும் என இந்த விண்டோ 8 ப்ரோ இயக்கமுறைமையினுடைய அனுமதிஒப்பந்த வரிகள் “Neither the manufacturer or installer, nor Microsoft, is obligated to supply earlier versions to you,”  “You must obtain the earlier version separately.”என்றவாறு கூறுகின்றன

கணினி உற்பத்தியாளர்கள் தாம் விற்பனை செய்யும் கணினியில் விண்டோ7 ஐ நிறுவுகைசெய்து அக்டோபர் 2014 வரை வெளியிடலாம் அதன்பின் விண்டோ 8 ஐ மட்டுமே நிறுவுகை செய்து வெளியிடவேண்டும் என இந்தஒப்பந்த வரிகள் மறைமுகமாக நமக்கு அறிவுறுத்து கின்றன

 

வருங்காலத்தில் தரவுகளை சேமித்திட டிஎன்ஏ மூலக்கூறை பயன்படுத்தவுள்ளனர்

நாம் வாழும் வீட்டின் அறைஅளவிற்கு மிகப்பெரியதாக இருந்த கணினியானது படிப்படியாக குறைந்து கொண்டே வந்து மேஜைக் கணினியாக மாறியபின் மடிக்கணினியாக அதன் தோற்றஅளவு சுருங்கி தற்போது இருவிரல்கடை அளவிலான கைக்கணினியாக உருமாறியுள்ளது ஆயினும் அதன் தரவுகளை தேக்கும் திறன் ஆனது இதற்கு மறுதலையாக   மெகாபைட் ஆனது கிகாபைட்டாகவும்  பின்னர் டெராபைட்டாகவும் தரவுகளை தேக்கிடும் திறன் உயர்ந்துகொண்டே வந்து தற்போது ஒற்றையான சிறு வன்தட்டில் டிரில்லியன் பைட்டாக வளர்ந்துள்ளது

இணையமும் YouTube, Facebook, Instagram, Twitter, LinkedIn and the zillions போன்ற இணைய பக்கங்களின் வளர்ச்சியும்  தரவுகளின் தேக்கிடும் திறன் தேவையானது பெருக்குதொடர் வரிசையில் வளர்ந்து கொண்டே போகின்றன

இணையத்தின் பயன்பாடும் அதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருப்பதால் தரவுகளை தேக்கும் திறனும் அதற்கேற்ப அதனை ஈடுசெய்யும் விதமாக உயர்ந்து கொண்டே செல்லவேண்டிய தேவை ஏற்படுகின்றது இவ்வாறு தரவுகளை தேக்கும் திறனானது ஒவ்வொரு இரண்டாண்டிற்கும் ஒப்பீடுசெய்தால் இருமடங்கு பெருக்கு தொடர்வரிசையில் உயர்ந்துகொண்டே போகும் என மூர்விதி கூறுகின்றது

ஆம் மேலே கூறிய வரிகளின் தகவல்கள் அதனை உண்மைதான் எனவும் நிரூபிக்கின்றன

இன்று தரவுகளை தேக்கிவைக்கும் வன்தட்டின் அளவு சுருங்கி கொண்டே வந்துள்ளது அனைவரும் அறிந்த செய்தியாகும் இதற்கு அடுத்த நிலையில் 1.5 மில்லிகிராம் அளவேயுள்ள டிஎன்ஏ மூலக்கூறில்

ஒருபீட்டாபைட் அளவுள்ள தரவுகளை இரசாயன செயல்களின் மூலம் தேக்கிவைக்கும் திறன் உயரபோகின்றது என Future of Data: Encoded in DNA  என்ற அறிவியல் ஆய்வு பத்திரிகை கணித்துள்ளது

இதன்மூலம் இணையத்தில் உள்ள அனைத்து தகவல்களும் ஏன் உலகத்தில்உள்ள  ஒட்டுமொத்த தகவல்களும் ஒருசிறுகையடக்க அளவேயுள்ள டிஎன்ஏ மூலக்கூறு பகுதியில் தேக்கி வைத்து விடமுடியும் என்ற நிலை வரவிருக்கின்றது

பொதுவாக தற்போது அனைத்து வகையிலும் சேமித்து வைக்கும் தரவுகளானது குறிப்பிட்ட காலம் வரைமட்டுமே இருக்கும் அதாவது முன்பு நாடாக்களில் பதிந்துவைத்த தரவுகளானது அதிலுள்ள காந்ததன்மை இழந்துபோனால் ஆதில் சேமித்து வைத்துள்ள தரவுகளும் மறைந்து போகும் என்ற நிலைக்கு பதிலாக  இவ்வாறு டிஎன்ஏ மூலக்கூறில்இரசாயன செயல்களின் மூலம் தேக்கிவைக்கும் தரவுகளானது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் அப்படியே மிகபாதுகாப்பாக இருக்கும் என உறுதிசெய்யபடுகின்றது

இதனுடைய திறனானது 70  பில்லியன் புத்தகநகல்களின் தரவுகள் ஒருசிறு டிஎன்ஏ மூலக்கூறில் தேக்கிவைக்கமுடியும் எனக்கூறுகின்ரது  மேலும் 1.8 ஜீட்டாபைட் அளவுள்ள உலகின் அனைத்து ஒட்டுமொத்த தகவல்களையும் நான்கே கிராம் அளவுள்ள டிஎன்ஏ மூலக்கூறில் சேமித்து பல்லாயிரகணக்கான ஆண்டிற்கு பாதுகாப்பாக வைக்கமுடியும்  என  இந்த டிஎன்ஏ மூலக்கூறில் தகவல்களை சேமித்து வைபபதற்கான ஆய்வு அறிக்கை கூறுகின்றது

அதுமட்டுமின்றி ஒருசதுர மில்லிமீட்டர் டிஎன்ஏ மூலக்கூறில் 5.5 பீட்டாபைட் தரவுகளை தேக்கிவைக்கமுடியும் என அறுதியிட்டு கூறுகின்றது  அதாவது ஒரு சிறுபுள்ளியிலிருந்து இந்த உலகம் சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் ஆகிய அனைத்தும் உருவாகியுள்ளன என்ற தற்போதைய  கூற்றிற்கேற்ப இறுதியாக அத்தனை தகவல்களும் ஒருசிறுபுள்ளியில் கொண்டு சென்று குவித்து வைத்திடமுடியும் என்றநிலை நம்முடைய ஆய்வும் உறுதிபடுத்துகின்றன

போலியான மின்னஞ்சல் முகவரியிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எவ்வாறு?

எந்தவொரு மின்னஞ்சல் சேவையாளருடைய இணையபக்கத்திலும் நம்முடைய மின்னஞ்சல் பெட்டியை திறந்து பார்க்கும்போது அதில்

Enjoy!

The yahoo mail/ Gmail Team

Verification code: 7123d339-d94ca508-a65da63ee1

If you didn’t create this yahoo mail/ Gmail address and don’t recognize this email,
please visit: https://accounts.google.com/AccountDisavow?adt=AOX8kirn_7fUKnJHrtdbaJMo0885CdpxkAxsreuYkMq9MAIn_yDAWZzbQsR_NiW8MQ என்றவாறு போலியான மின்னஞ்சலை நம்முடைய பார்வைக்கு வந்திருந்தால்   உடன் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றது ஏனெனில்

ஒருவேளை இந்த முகவரியைபற்றிய விவரங்களை அறியாமல் இதுவும் வழக்கமானதொரு மின்னஞ்சல்தானே என இதனை தெரிவுசெய்து சொடுக்கியவுடன்

ñ No, I did not create this ID.  Disconnect this account from the main account.

Yes. I created this ID.

என்றவாறான இருவாய்ப்புகள் திரையில் தோன்றிடும்

முதல் வாய்ப்பை தெரிவுசெய்தால் இதில் போலியாக துனை கணக்கு ஒன்று உருவாக்க படவுள்ள வாய்ப்ப துண்டிக்கபட்டு நம்முடைய மின்னஞ்சல் கணக்கு பாதுகாப்பாக இருக்கும்

தவறுதலாக தெரியாமல் இதிலுள்ள இரண்டாவது வாய்ப்பை தெரிவுசெய்துவிட்டால்  நமக்கு வரும் அனைத்து மின்னஞ்சல்கள், அவ்வாறு நாம் பிறருக்கு அனுப்பிடும் அனைத்து மின்னஞ்சல்கள்,இணைய உரையாடல்கள் ஆகியவற்றின் நகல் இந்த போலியான துனைமின்னஞ்சல் கணக்கிற்கு சென்ற சேர்ந்துவிடும் இதன்மூலம் நம்முடைய வங்கி தொடர்புடைய தகவல்கள் நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் ஆகிய அனைத்தும் அபகரித்து செல்லவாய்ப்புள்ளது

அதனால் தவறுதலாக நம்மை அழைத்துசெல்லும் இந்த இணைப்பு இணையபக்கத்தின் முதல்வாய்ப்பை மட்டும் தெரிவுசெய்து இதனை முடிவுக்கு கொண்டுவரும்படி பரிந்துரைக்கபடுகின்றது

மேலும் நம்முடைய மின்னஞ்சலிற்குள் செல்லும் கடவுச்சொற்களையும் சிறிய எழுத்து, பெறியஎழுத்து ,சிறப்புகுறியீடு ,எண்கள் ஆகியவற்றால் கலந்த மிகவலுவாக மற்றவர்களால் யூகிக்கமுடியாதவாறு இருக்குமாறு உருவாக்கி கொள்க தொடர்ந்து அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த கடவுச்சொற்களை மாற்றியமைத்துகொண்டே இருக்குமாறும் பரிந்துரைக்கபடுகின்றது

பிரபலமான லினக்ஸ் வெளியீடுகள்

இன்று ஸ்மார்ட் போன்கள் அனைத்தும் ஆண்ட்ராய்டு எனும்  இயக்கமுறைமையே பயன்படுத்தபடுகின்றது என்பது அனைவரும் அறிந்த செய்தியாகும். ஆயினும் இந்தஆண்ட்ராய்டு ஆனது லினக்ஸின் அடிப்படையில் இயங்கிடும்   இயக்கமுறைமையென்பது நம்மில் 99 சதவிகிதம் பேருக்கு தெரியாத செய்தியாகும் இன்று அவ்வாறான இந்த லினக்ஸின் அடிப்படையில் இயங்கிடும் இயக்கமுறைமைகளானது நமக்கு ஏராளமான அளவில் கிடைக்கின்றன அவைகளில் பிரபலமானவைகளை பற்றிய சுருக்கமான விவரங்களை இப்போது காண்போம்

1டெபியன்Debian:  இது மற்றஅனைத்து லினக்ஸ் வெளியீடுகளுக்கெல்லாம் அடிப்படையாக விளங்கும் ஒரு லினக்ஸ் இயக்கமுறைமையாகும் இதனை http://www.debian.org என்ற தளத்திலிருந்து பெற்று நம்முடைய கணினியில் நிறுவிகொள்ளமுடியும்

2 பெடோரா Fedora: இது ஜினோம்3.எக்ஸ் அடிப்படையில் உருவாக்கபடும் லினக்ஸ் இயக்கமுறைமையாகும் இதனை http://fedoraproject.org/ என்ற தளத்திலிருந்து பெற்று நம்முடைய கணினியில் நிறுவிகொள்ளமுடியும்

3 ரெட்ஹெட் redhat: இது மேலேகூறிய பெடோராவின் நகல்போன்று அனைத்துவசதிவாய்ப்புகளும் உடையது இதனை http://www.redhat.com/ என்ற தளத்திலிருந்து பெற்று நம்முடைய கணினியில் நிறுவிகொள்ளமுடியும்

4உபுண்டுUbuntu: இன்று 2012-ல் சுமார் 20 மில்லியனுக்கு அதிகமான புதிய கணினிகள் இந்த உபுண்டு இயக்கமுறைமை நிறுவபட்டே விற்கபட்டுள்ளன ஒவ்வொரு ஆறுமாத்திற்கும் இதனுடைய புதிய பதிப்பொன்று வெளியிடபட்டுவருகின்றது சமீபத்தில் உபுண்டு12.10 என்ற இதனுடைய புதிய பதிப்பு வெளியிடபட்டுள்ளது லினக்ஸ் இயக்கமுறைமையை பற்றி அறியாத ஏராளமான புதியவர்கள் இந்தஉபுண்டு இயக்கமுறைமை மிகசுலபமாக பயன்படுத்தி வருகின்றனர் இதனை http://www.ubuntu.com/ என்ற தளத்திலிருந்து பெற்று நம்முடைய கணினியில் நிறுவிகொள்ளமுடியும்

5 மேஜீயா Mageia:  இது KDE 4.8 என்பதன் அடிபபடையில் இயங்கிடும் லினக்ஸ் இயக்க முறைமையாகும் இதனை  http://www.mageia.org/  என்ற தளத்திலிருந்து பெற்று நம்முடைய கணினியில் நிறுவிகொள்ளமுடியும்

6மின்ட்லினக்ஸ்Mint Linux:  உபுண்டு போன்று இதுவும் மிகச்சிறந்த லினக்ஸ் வெளியீடாகும் இது ஜினோம்2.எக்ஸ் அடிப்படையில் உருவாக்கபடும் லினக்ஸ் இயக்கமுறைமையாகும் இதனை http://linuxmint.com/ என்ற தளத்திலிருந்து பெற்று நம்முடைய கணினியில் நிறுவிகொள்ளமுடியும்

ஓப்பன் ஆஃபிஸ் தொடர்-பகுதி-81-ஓப்பன் ஆஃபிஸ் பேஸில் ஒரு அட்டவணையை உருவாக்குதல்-தொடர்ச்சி

நடப்பு அட்டவணையை நகலெடுத்து ஒட்டுவதன்மூலம் ஒரு அட்டவணையை உருவாக்குதல்

நம்மிடம் பணியாளர்களின் செயல்கள் தொகுப்பாக இருப்பதாக கொள்வோம் அவற்றுள் ஒவ்வொரு வகை செயலிற்கும் ஆனதொரு அட்டவணையை உருவாக்குவதற்காக ஒவ்வொருமுறையும் முந்தைய தொடரில் கூறியவாறு ஒரு வழிகாட்டியின் உதவியால் உருவாக்குவதற்கு பதிலாக ஒரு அட்டவணையை மட்டும்  ஒரு வழிகாட்டியின் உதவியால் உருவாக்கியபிறகு மற்ற அட்டவணைகளை அதிலிருந்து பின்வரும் வழிமுறைகளின்படி நகலெடுத்து ஒட்டுவதன் வாயிலாக உருவாக்குவது எளிதான செயலாகும்

1 திரையில் தரவுதளபலகத்தில்  நாம் காணும் பொருட்களின் உருவப்படங்களில் அட்டவணையின் உருவபொத்தானை(table icon) மட்டும் இடம்சுட்டியால் தெரிவுசெய்து  சொடுக்குக

2 உடன் விரியும் அட்டவணைகளின் உருவப்படங்களில் Employee Tasks என்ற  அட்டவணையின் உருவபொத்தானை மட்டும் இடம்சுட்டியால் தெரிவுசெய்து  சொடுக்குக

3 பின்னர் இதே அட்டவணையின் கீழ்பகுதியில் காலியான இடத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக

4 அதன்பின்னர் விரியும் சூழ்நிலை பட்டியில் Pasteஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக

5 பின்னர் தோன்றும் Copy tableஎன்ற(படம்-1) சாளரத்தில் இந்த அட்டவணையின் பெயரை Employee Tasks 1 என்றவாறு மாற்றியபின் Next.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

81.1

6 அதன்பின்னர் தோன்றிடும் Assign column என்ற( படம்-2)திரையில் >> என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக

7.உடன்பழைய அட்டவணையின் புலங்கள் அனைத்தும் புதிய அட்டவணைக்கு போய்ச்சேரும் பின்னர்Next.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

8  இந்நிலையில் பழைய அட்டவணையின் புலங்களின் வடிவமைப்புகளும் புதிய அட்டவணைக்கு அப்படியே வந்து சேர்ந்திருப்பதை காணலாம் தேவையெனில் அவைகளை மாற்றி யமைத்திடுக அதன்பின்னர் Createஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் புதிய அட்டவணையொன்று நாம் மாற்றியமைத்தவாறு உருவாகிவிடும் இவ்வாறே தேவையான அட்டவணைகளை உருவாக்கிகொள்க

81.2

வடிவமைப்பு காட்சியின்மூலம் புதிய அட்டவணையொன்றை உருவாக்குதல்(Create Table in Design View )

புதிய அட்டவணையொன்றை இந்த வடிவமைப்பு காட்சியின்மூலம் உருவாக்குவது மிகசிறந்தமுன்னேறிய வழிமுறையாகும் இந்த வழிமுறையில் அட்டவணையின் குறிப்பிட்ட புலத்தின் வடிவமைப்பு விவரங்களை நேரடியாக  உள்ளீடு செய்யஅனுமதிக்கின்றது இந்த வழிமுறைமூலம் Fuelஎன்ற அட்டவணையொன்றையும் FuelID, Date,Fuel Cost, Fuel Quantity, Odometer, PaymentType ஆகிய அதனுடைய புலங்களையும் உருவாக்குவதாக கொள்வோம்

இதில் Fuel Cost என்ற புலத்திற்கு நாணய வடிவமைப்பும் இருதசமபுள்ளியும், Fuel Quantity என்ற புலத்திற்கு எண்வடிவமைப்பும் மூன்றுதசமபுள்ளியும், Odometer என்ற புலத்திற்கு எண் வடிவமைப்பும் ஒருதசமபுள்ளியும் ,PaymentType என்ற புலத்திற்கு உரைவடிவமைப்பில் இருக்குமாறும் நேரடியாக அந்தந்த புலத்தின் பெயரையும் அதனுடைய வடிவமைப்பையும் அமைத்திடவேண்டும்

1.இதற்காக தரவுதளபலகத்தில் table icon என்பது தெரிவுசெய்யபட்டு அதனுடைய தொடர்ச்சியாக வலதுபுறபலகத்தில் Tasks என்பதன்கீழ் காணும் பட்டியலில் Create Table in Design View என்ற  வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக

2உடன்விரியும் Table Design  என்ற திரையில் Field Name என்பதற்கு முதல் புலத்தின் பெயரான FuelID  என்பதையும்Field typeஎன்பதில் இதிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதிலிருந்து Integer [INTEGER]என்பதையும்  கீழ்பகுதிபலகத்திலுள்ளField properties என்பதன்Auto value என்பதை yes எனவும் மாற்றியமைத்திடுக

3 FuelID  என்பதன் இடதுபுறத்திலுள்ள பச்சைவண்ண முக்கோணத்தை தெரிவுசெய்து இடம்சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்கி சூழ்நிலை பட்டியை தோன்றச்செய்க

4 அதிலுள்ள ( படம்-3)கட்டளைகளிலிருந்து Primary key என்ற கட்டளையை தெரிவுசெய்து இந்த புலத்தினை தொடக்க திறவுகோளாக (Primary key) அமைத்தபின் Description  என்பதில் இந்த புலத்தைபற்றிய விவரங்களை உள்ளீடுசெய்திடுக

81.3

இவ்வாறே Field Name என்பதற்கு மற்ற புலங்களின் பெயர் ஒவ்வொன்றையும் உள்ளீடுசெய்திடுக

இரண்டாவது புலமான Date என்பதனுடைய Field typeஎன்பதில் இதிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதிலிருந்து Date[DATE]என்பதையும் PaymentTypeஎன்ற புலத்தின்Field typeஎன்பதில் இதிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதிலிருந்து Text [VARCHAR]என்பதையும் மற்ற புலங்களான Fuel Cost, Fuel Quantity, Odometer ஆகியமூன்றின் Field typeஎன்பதிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதிலிருந்து Number [NUMERIC]என்பதையும் தெரிவுசெய்து அமைத்துகொள்க

81.4

Fuel Cost என்ற புலத்தின் கீழ்பகுதியின் Field properties என்பதன் கீழ் LENGTH என்பதற்கருகில் ஐந்து என்றும் Decimal places என்பதற்கு இரண்டு என்றும் அமைத்திடுக இந்நிலையில்    format example என்பதற்கருகில் உள்ள Format example என்ற முப்புள்ளி பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்Field format என்ற உரையாடல்பெட்டியொன்று(படம்-4 )இயல்புநிலையில்format என்ற தாவியினுடைய பொத்தான்திரை திரையில் தோன்றிடும் அதில்category என்பதில் currency என்றும் format என்பதில் கீழிறங்கு பட்டியலிலிருந்துINR Tamil  என்றும்Language என்பதில் கீழிறங்கு பட்டியலிலிருந்துTamil என்றும் தெரிவுசெய்துகொண்டு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

அவ்வாறே Fuel Quantity என்ற புலத்தின் கீழ்பகுதியின் Field properties என்பதன் கீழ் LENGTH என்பதற்கருகில் ஆறு என்றும் Decimal places என்பதற்கு மூன்று என்றும் அமைத்து மேலே Fuel Cost என்ற புலத்திற்கு மேற்கூறிய படிமுறைகளை பின்பற்றி மற்றவடிவமைப்பு விரங்களையும் அமைத்திடுக

Odometer என்ற புலத்தின் கீழ்பகுதியின் Field properties என்பதன் கீழ் LENGTH என்பதற்கருகில் ஐந்து என்றும் Decimal places என்பதற்கு ஒன்று என்றும்  அமைத்து மேலே Fuel Cost என்ற புலத்திற்கு கூறிய படிமுறைகளை பின்பற்றி மற்றவடிவமைப்பு விரங்களை அமைத்திடுக  இறுதியாக இந்த அட்டவணைக்கு Fuel என்றவாறு ஒருபெயரிட்டு சேமித்தபின் இந்த  சாளரத்தினை File => Close=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கிமூடிவிடுக

பட்டிபெட்டி(Listbox)வழிமுறையில் அட்டவணையொன்றை உருவாக்குதல்

ஒரே தகவல் ஆனது வெவ்வேறு வகையில் ஒவ்வொரு புலத்திலும் குறிப்பிடப்பட்டு அட்டவணைகளை உருவாக்குவதற்காக ஒவ்வொரு அட்டவணையின் முதல்புலம்  தகவல்புலமாகவும்  ID  என்பது இரண்டாவது புலமாகவும் உருவாக்கவேண்டும்  இதற்காக முன்பு கூறிய Create Table in Design View என்ற வழிமுறையின்படி உருவாக்கிய அட்டவணையில் Type ,PaymentID ஆகிய இருபுலங்களில் மட்டும்  PaymentID என்ற புலத்தின் கீழ்பகுதி பலகத்திலுள்ளField properties என்பதன்Auto value என்பதை yesஎன மாற்றியமைத்தும்

இடது புறத்திலுள்ள பச்சைவண்ண முக்கோணத்தை தெரிவுசெய்து இடம்சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக.உடன் தோன்றிடும் சூழ்நிலை பட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து Primary key என்ற கட்டளையை தெரிவுசெய்து இந்த புலத்தினை தொடக்க திறவுகோளாக அமைத்தபின் மற்றபண்பியல்பு விவரங்களை தேவையானவாறு அமைத்துகொள்க.பின்னர் Description  என்பதில் இந்த புலத்தைபற்றிய விவரங்களை உள்ளீடுசெய்து இந்த அட்டவணைக்கு  PaymentType என்றவாறு (படம்-5) ஒருபெயரிட்டு சேமித்திடுக. இதன்பின்னர் இந்த  சாளரத்தினை File= > Close=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கிமூடிவிடுக

81.5

இவ்வாறு பட்டிபெட்டி வழிமுறையில் உருவாக்கிய அட்டவணைக்கு என தனியானதொரு படிவ வடிவமைப்புத்தேவையில்லை நேரடியாக குறிப்பிட்ட புலத்தில்  தரவுகளை உள்ளீடு செய்யமுடியும்

1இதற்காக   தரவுதள சாளரத்தின் திரையில் நாம் காணும் பொருட்களின் உருவப்படங்களில் அட்டவணையின் உருவபொத்தானை(table icon) மட்டும் இடம்சுட்டியால் தெரிவுசெய்து  சொடுக்குக

2 உடன் விரியும் அட்டவணைகளின் உருவப்படங்களில் PaymentType என்ற  அட்டவணையின் உருவபொத்தானை மட்டும் இடம்சுட்டியால் தெரிவுசெய்து  சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக

உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் openஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர்விரியும் திரையில் sk என முதல்புலத்தில் உள்ளீடுசெய்து tab என்றவிசையை விசைப்பலகையில் அழுத்துவதன் வாயிலாக இரண்டாவது புலத்திற்கு சென்று அங்கு kv என உள்ளீடுசெய்க

பின்னர் tab என்றவிசையை விசைப்பலகையில் அழுத்துவதன் வாயிலாக மூன்றாவது புலத்திற்கு சென்று அங்கு cash என உள்ளீடுசெய்து  இதனை சேமித்து இந்த அட்டவணைசாளரத்தினை மூடிவிடுக

திரைக்காட்சியை உருவாக்குதல்

திரைக்காட்சி என்பது ஒரு வினாமூலம் உருவாக்கபடுகின்றது இந்த திரைகாட்சி என்பது ஒரு அட்டவணையே ஆகும்  தரவுதளத்தில் நம்மால் உருவாக்கபட்ட அட்டவணைகளிலிருந்து நாம் எழுப்பும் வினாவிற்கேற்ற அட்டவணையாக இந்த திரைகாட்சியை (படம்-6 )திரையில் காட்சியளிக்கசெய்வதாகும்

81.6

அக்சஸ்-2007 -6-தரவுத்தாள்

தரவுத்தாள் காட்சியை பயன்படுத்தி அக்சஸில் வைத்திருக்கும் தரவுகளை திரையில் பிரதிபலிக்கச்செய்யலாம்(படம்-6-1).

 1 படம்-6-1

 அக்சஸின் தரவுத்தாள் என்பது எக்செல்லின் விரிதாளின் தோற்றம் போன்றதேயாகும். இதில் ஒவ்வொரு நெடுவரிசையும் (column ) ஒரு புலமாகும் ஒவ்வொரு கிடைவரிடையும் (Row)ஒரு ஆவணமாகும் ,

1, இதன் மேல் பகுதியில் இருப்பது மைக்ரோ சாப்ட் அக்சஸ்-2007 மற்றும் தரவுதளகோப்பின் பெயருடன் கூடிய தலைப்புபட்டையாகும்,

2,இதன் இடதுபுறம் இருப்பது மைக்ரோ சாப்ட் ஆபிஸ் பொத்தான் ஆகும்.

3,அதற்கடுத்தாக இருப்பது விரைவுஅனுகுதல்கருவிபட்டையாகும்,

4,தலைப்புபட்டையின் கீழ்பகுதியில்இயல்பு நிலையில் Home  எனும் தலைப்புடன் கூடிய தாவிபட்டியாகும்.

5,திரையின் மையத்தில் இடதுபுறம் இருப்பது வழிகாட்டிடும் பலகமாகும். இது ஆவணத்தை திறப்பதற்கான வழியைகாட்டுகின்றது.

6,மையத்தில் வலதுபுறம் இருப்பதே தரவுத்தாள் விண்டோவாகும்.

7,கீழ்பகுதியில் தரவுத்தாளை ஒட்டியவாறு இருப்பது வழிகாட்டிடும் பொத்தானும், தேடிடும் பெட்டியும்  சேர்ந்ததாகும்.இதன்மூலம் குறிப்பிட்ட ஆவணத்தை் பிரதிபலிக்க செய்யவும் குறிப்பிட்ட ஆவணத்தின் தரவுத்தாளை பார்வையிடவும் முடியும்.

8,இதற்கும் கீழ் பகுதியில் இருப்பது நிலைபட்டையாகும்.

9,இதன் வலதுபுறம் ஓரம் இருப்பது காட்சிக்கான குறுக்குவழி பொத்தானாகும்.

தரவு தாளின் வலதுபுறம் ஒரம் இருப்பது உருள்பட்டையாகும். இதிலுள்ள நகரும்பெட்டியை பிடித்து நகர்த்தி சென்று தரவுத்தாளில் நாம் விரும்பும் ஆவணம் இருக்கும் இடத்திற்கு சென்று பார்வையிடலாம்.

தரவுத்தாளில் வழிகாட்டுதல்

வ.எண் விவரம் தேவையான விசைகள்
அடுத்த புலத்தைகாண Tabஅல்லது
முந்தைய புலத்தைகாண Shift + Tab அல்லது
நடப்பு ஆவணத்தின் முதல் புலத்தைகாண Home
நடப்பு ஆவணத்தின் கடைசி புலத்தை காண End
முதல் ஆவணத்தின் முதல் புலத்தை காண Ctrl + Home
கடைசி ஆவணத்தின் கடைசி புலத்தை காண Ctrl + End
ஒருபக்கம் மேலே செல்ல Page up
ஒருபக்கம் கீழே செல்ல Page down

தரவுத்தாளில்  இயல்பு நிலையில் Home எனும் தாவியின் பட்டிதான் பிரதிபலிக்கும்.இதில் உள்ள கட்டளைகளின் குழுக்கள் பின்வருமாறு

1. View:  1.1இதன் கீழ் Data sheet view,Pivot table view, Pivot chart view, Design view ஆகிய நான்கு வகையான காட்சிகளை காணுவதற்கான பொத்தான்கள் உள்ளன. இந்த view என்ற பொத்தானில் உள்ள கீழ்நோக்கு அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்குக,உடன் விரியும் பட்டியில் தேவையான கட்டளையை தெரிவு செய்து கொள்க.

2. Clib board: இதன் கீழ் cut, copy மற்றும் paste ஆகிய கட்டளைகள் உள்ளன. இவைகள் எம்எஸ்வேர்டு ,எம்எஸ்எக்செல் ஆகியவற்றில் உள்ளவை போன்றதே, ஒட்டுக (Paste) எனும் கட்டளையில் மட்டும் கீழ் நோக்கு அம்புக்குறியை தெரிவு செய்தால் Paste ,Paste special,Paste append ஆகிய மூன்று வாய்ப்புகளுடன் சிறுபட்டியல் ஒன்று விரியும்.இதில் உள்ள Paste, Paste special ஆகிய இரண்டும் மற்ற பயன்பாடுகளில் உள்ள வாய்ப்புகளை போன்றதே.ஆனால் Paste append மட்டும் தரவு தாளின் இதே கட்டமைப்பில் புதிய ஆவணத்தை ஒட்டுகின்றது.

இதன் கீழ் பகுதியில் உள்ள விரைவானநிறுவி(quick launch) 1.2என்ற பொத்தான் ஆனது,இந்த கட்டளைகளை செயல்படுத்துவதற்கான உரையாடல் பெட்டியை திரையில் பிரதிபலிக்க செய்ய பயன்படுகின்றது.

3.Font:தரவுத்தாள் உள்ள எழுத்துருவின் அளவு, வகை, தோற்றம், வண்ணம் போன்றவைகளை மாறுதல் செய்ய அனுமதிக்கின்றது.இது இடதுபுறம், வலதுபுறம், மையம் ஆகியஇடங்களில் ஒன்றில் தரவுகளை அமைத்திடவும் உதவுகின்றது. மேலும் இது தரவுத்தாளில் கட்டங்கள் தோன்றவும் மறையவும் செய்ய அனுமதிக்கின்றது. அதுமட்டுமல்லாது ஒன்றுவிட்டு ஒருநெடுவரிசை அல்லது கிடைவரிசையில் இதனை செயல்படுத்தும்படி செய்யலாம்.

4.Rich Text: இது புலத்தை வடிவமைப்பு செய்து தரவுகளை உள்ளீடு செய்ய உதவுகின்றது. சுட்டும்வரிசை அல்லது வரிசை எண்களை உருவாக்கவும் பயன்படுகின்றது. குறிப்பிட்ட தரவுகளை தெரிவு செய்து. அவைகளை மட்டும் மாறுதல் செய்யவும் பயன்படுகின்றது.

5Record:இதுதரவுத்தாளில் புதிய ஆவணத்தை உருவாக்கவும், நீக்கவும் சேர்க்கவும் சேமிக்கவும் அனுமதிக்கின்றது. மேலும் இது மொத்த எண்ணிக்கையை காணவும், எழுத்து பிழையை சரி செய்யவும், நிலையாக நிறுத்தவும் மறைத்து வைக்கவும, உயரத்தையும் அகலத்தையும் மாற்றியமைக்கவும் பயன்படுகின்றது.

6.Sort & Filter: இது நாம் உள்ளீடு செய்யும் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப தரவுகளை அடுக்கி வைக்கவும் ,வடிகட்டி பட்டியலாக திரையில் காண்பிக்கவும் பயன்படுகின்றது.

7.Find: இது தரவுத்தாளில் நாம் குறிப்பிடும் தரவை தேடிகண்டுபிடிக்கவும் பின்னர் நாம்விரும்பியவாறு மாறுதல் செய்யவும் பயன்படுகின்றது.

தரவுத்தாளில் உள்ள மதிப்புகளை மாறுதல் செய்யும் தொழில் நுட்ப அட்டவணை-6-1

வ.எண்          தேவையான செயல் தேவையான விசைகள்
புலத்திற்குள் இடம்சுட்டி நகருவதற்கு , ← வலது மற்றும் இடது நோக்கு அம்புக்குறியை அழுத்துக
புலத்திற்குள் மதிப்பை உள்ளிணைக்க தேவையான புலத்தில் இடம் சுட்டியை வைத்து புதிய தரவை தட்டச்சு செய்க.
முழு புலத்தையும் தெரிவு செய்ய புலத்தின்மீது இடம்சுட்டியை வைத்து F2 விசையை அழுத்துக.
நடப்பு மதிப்பிற்கு பதிலாக புதிய மதிப்பினை உள்ளிணைக்க அல்லது மாற்றம் செய்ய வேண்டிய மதிப்பு முழுவதையும் முதலில் தெரிவுசெய்து கொண்டு புதிய மதிப்பினை தட்டச்சு செய்க,
புலத்திற்குள் முந்தைய புலத்தின் மதிப்பை மாற்றியமைத்திட Ctrl+ ’ ஒற்றை மேற்கோள்குறியை சேர்த்து அழுத்துக
நடப்பு மதிப்புடன் இயல்பு மதிப்பை உள்ளிணைக்க Ctrl+ Alt+ இடைவெளிபட்டை ஆகிய மூன்று விசைகளை சேர்த்து அழுத்துக,
உரை அல்லது பத்தி புலத்தில் வரியை உள்ளிணைக்க Ctrl+ Enter ஆகிய இரண்டு விசைகளை சேர்த்து அழுத்துக,
நடப்பு ஆவணத்தை சேமிக்க  shift+ Enter ஆகிய இரண்டு விசைகளை சேர்த்து அழுத்துக, அல்லது அடுத்த ஆவணத்திற்கு இடம்சுட்டியை நகர்த்துக,
நடப்பு தேதியை உள்ளிணைக்க Ctrl + ; (அரைப்புள்ளி) ஆகிய இரண்டு விசைகளை சேர்த்து அழுத்துக
நடப்பு நேரத்தை உள்ளிணைக்க Ctrl + : (முக்கால்புள்ளி) ஆகிய இரண்டு விசைகளை சேர்த்து அழுத்துக
நடப்பு ஆவணத்தை சேர்க்க Ctrl +  (கூட்டல் குறி) ஆகிய இரண்டு விசைகளை சேர்த்து அழுத்துக
நடப்பு ஆவணத்தை நீக்கிட Ctrl + – (கழித்தல் குறி)ஆகிய இரண்டு விசைகளை சேர்த்து அழுத்துக
தேர்வுசெய்பெட்டிஅல்லது வாய்ப்பு பொத்தானின் மதிப்பை இருநிலையாக மாற்றுவதற்கு இடைவெளி பட்டையை அழுத்துக
நடப்பு புலத்தில் முன் செய்ததை நீக்கிட Escஅல்லது Undo பொத்தானைஒருமுறை அழுத்துக
நடப்பு ஆவணத்தில் முன் செய்ததை நீக்கிட  Esc அல்லது Undo பொத்தானைஇருமுறை அழுத்துக

பின்வரும் புலத்திற்குள் இருக்கும் தரவுகளை மட்டும் மாற்றியமைத்திட முடியாது.

Auto field: அடுத்தடுத்தபுதிய ஆவணத்தைஉருவாக்கிடும் போது இது தானகவே உருவாகும் இந்த புலத்தின் எண்களை மாறுதல் செய்ய முடியாது.

Calculated field: படிவங்களிலும்  வினாக்களிலும் உருவாகின்ற கணக்கிடப்பட்ட மதிப்பை மாற்றம் செய்யமுடியாது. ஏனெனில் இந்த மதிப்பு அட்டவணையில் இருக்காது.

Locked or Disabled: குறிப்பிட்ட புலங்களில் மாற்றம் செய்வதை தவிர்த்திடுமாறு அமைத்திருந்தால் மாற்றம் செய்ய முடியாது .

Field in multiple locked records:வேறு பயனாளரால் பூட்டியிருக்கும் ஆவணங்களில் உள்ள தரவுகளை மாறுதல் செய்ய முடியாது.

புதிய ஆவணத்தைசேர்த்தல்:-

இதற்கென ஏராளமான வழிகள் இருந்தாலும் பின்வருபவை பொதுவான வழி முறைகள் ஆகும்.

1) தரவு தாளின்கடைசி வரிசையில் X என்றக் குறியுடன் இருக்குமிடத்தை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்வது.

2 வழிகாட்டிடும் பொத்தானில்  புதிய ஆவணம்(New record) என்பதை தெரிவுசெய்து சொடுக்குவது

3)home எனும் தாவியின் பட்டியின் ஆவணத்தின் குழுவில் உள்ள Newஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குவது.

4)home எனும் தாவியின் பட்டியின் find என்ற குழுவில் உள்ள goto=> New என்றவாறு  கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவது.

5) கடைசி ஆவணத்திற்கு இடம்சுட்டியை நகர்த்தி சென்று ↓கீழ்நோக்கு அம்புக்குறியை அழு்ததுவது,

6) Ctrl + +கூட்டல் ஆகியவற்றை  சேர்த்து அழுத்துவது,

ஆவணத்தில் உள்ள புலங்களின் வரிசையை மாற்றியமைத்தல்:

1) தரவு தாளின் ஒரு ஆவனத்தினுடைய நெடுவரிசையின் தலைப்பில் இடம்சுட்டியை வைத்து தெரிவு செய்து சொடுக்குக. உடன் இடம்சுட்டியானது கீழ்நோக்கு அம்புக்குறியாக மாறுதலாகி சொடுக்குதல் செய்யப்பட்ட நெடுவரிசைய முழுவதும் தெரிவு செய்யப்பட்டிருக்கும் .

2)இதனை அப்படியே பிடித்து இழுத்து சென்று தேவையான புலத்திற்கு முன்பக்கம் அல்லது பின்புறம் வைத்து சுட்டியின் பொத்தானைவிட்டு விடுக. உடன் நாம் தெரிவு செய்த நெடுவரிசையானது புதிய இடத்தில் சென்று அமர்ந்துவிடும்.

தரவு தாளின் நெடுவரிசையில் உள்ள தரவுகளை வடிகட்டி அடுக்கி வைத்திடுவதற்கு, தேவையான நெடுவரிசையின் தலைப்பை தெரிவு செய்து Sort & Filter என்ற குழுவின் கீழ் உள்ள AZ என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கினால் அகர வரிசைப்படி அல்லது ஏறுவரிசையிலும் ZA என்ற பொத்தானைதெரிவு செய்தால் இறங்குவரிசையிலும் அடுக்கி விடும் ஒன்றுக்குமேற்பட்ட காலத்தை shiftஎன்ற விசையை பிடித்து தெரிவு செய்து கொண்டு இதைப்போன்ற வடிகட்டும்செயலை செயல்படுத்தலாம்,

Selected .Advanced ஆகிய பொத்தன்களை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் தோன்றிடும் வாய்ப்புகளை தெரிவு செய்து நாம் விரும்பியவாறு தரவு தாளின்தரவுகளை வடிகட்டி அடுக்கி வைக்கமுடியும்.

Previous Older Entries