பயன்படுத்தி கொள்கQ4 எனும் புதிய இயக்கமுறைமையை

Q4 என்பது சமீபத்திய தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட மிகவும் சக்திவாய்ந்தஅதிக உற்பத்தி திறன் கொண்ட மேஜைக்கணினி சூழலை வழங்கும் மிகவும் விரைவாகசெயல்படும் ஒரு இயக்க முறைமை யாகும் . சரிபார்க்கப்பட்ட புதிய வசதிவாய்ப்புகளின் பழைய செயல்களின் ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு, நம்பகத்தன்மை, நீண்டகால நிலைத்தன்மை ஆகியவையே இதன் அடிப்படை நோக்கங்களாகும் . இந்த இயக்கமுறைமையை செயல்படுத்திடுவதால் கணினிசெயல்படும் வேகமும் மிகக் குறைந்த வன்பொருள் தேவைகளும் வழக்கமான மற்ற இயக்கமுறைமை செயல்படும் கணினிகளிலிருந்து வேறுபடுகிறது, அதாவது இது மற்ற இயக்கமுறைமைகளைவிட புத்தம் புதிய கணினிகளிலும் மரபு கணினிகளிலும் வேறுபாடு எதுவுமில்லாமல் அனைத்திலும் மிகச்சிறப்பாக செயல்படுகின்றது. மிகமுக்கியமாக மெய்நிகர் கணினி ,மேககணினி ஆகியவற்றிற்கும் இது மிகவும் பொருத்தமாக அமைகின்றது.
இந்த இயக்கமுறைமைக்கு பின்புலத்தில்உள்ள குழுவானது வணிகத்திற்கான தொழில்முறை ஆதரவை வழங்குகின்றது core level API நிரலாக்கம் பயனர் இடைமுக மாற்றங்கள் உள்ளிட்ட எந்த வகையான கணினி தனிப்பயனாக்கத்தையும் வழங்க தயாராக உள்ளது. மேலும் நாம் விரும்பினால் தொழில்முறை பயன்பாட்டிற்கான சரியான இயக்க முறைமையை மேம்படுத்தி இதனுடைய வளர்ச்சியை விரைவுபடுத்த முடியும் மேலும் Q4OS பற்றிய விவரங்களை அறிந்துகொள்ளவும் பயன்படுத்தி கொள்ளவும் https://www.q4os.org/எனும் இணையதளமுகவரிக்கு செல்க

இசையை கையாளஉதவிடும் NanoHost எனும் பயன்பாடு

NanoHost என்பது ஒரு சிந்தசைசர் அன்று. ஆயினும் இது விண்டோ இயக்கமுறைமையில் செயல்படும் கட்டணமற்ற, குறைந்தபட்ச நிறுவுகைசெய்துகொள்ளும் பயன்பாடாகும், .அத்தியாவசியமான, சிறிய இந்த கருவியானது நேரடி-செயல்திறன், ஒலி-வடிவமைப்பு, ஜாம்-அமர்வுகள் , சோதனை ஆகியவற்றுடன் மிகச்சிறப்பாக செயல்படுகிறது.
இதனை கொண்டு ஒருVST-synth எனும் பயன்பாட்டினை ஒரு முழுமையான பயன்பாடாக மாற்றியமைத்திட முடியும் இதற்காக நாம் plugin.dll எனும் பெயருடைய கோப்பினை NanoHost.exe எனும் மறுபெயரிட்டு அதை அதே கோப்பகத்தில் நகலெடுக்க வேண்டும் . அதனை தொடர்ந்த plugin.exe ஐத் தொடங்கும்போது, VST-synth தானாக மூடப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுசெயல்படத்துவங்கிடும் இது பயன்படுத்திட எளிதானது இது செயல்படுவதற்காக மிககுறைந்த நினைவகமே போதுமானதாகும் அதாவது நம்முடைய கணினியில் இதனை நிறுவுகை செய்துதான் பயன்படுத்திட வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை நாம் விரும்பினால் USB-stick அல்லது CD இருந்து இந்த கருவியை பயன்படுத்தி கொள்ளலாம் .வழக்கமான ஹோஸ்ட்களைப் போலன்றி, சொருகிடும் அட்டை அமைப்புகளை ஒவ்வொரு சொருகி தனித்தனியாக கட்டமைக்க முடியும். இது விஎஸ்டிகளுக்கு சிறந்த செயல்திறனை அடைய அனுமதிக்கிறது.
Plugin இன் வெளியீடானது மிகமேம்பட்ட தரமுடைய wav கோப்பாக பதிவுசெய்து கொள்ளமுடியும் இது மிகவும் பழைய 32-bit கணினிகளிலும் செயல்படும் திறன்மிக்கது இது விண்டோ லினக்ஸ் மேக் ஆகிய அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படும் வல்லமைகொண்டது இது VST 2.xஎனும் செருகுநிலை வடிவமைப்பை கொண்டது இது 44.1 kHz, 48 kHz, 88 kHz, 96 kHz, 176 kHz, 192 kHzஆகியவற்றைஆதரிக்கின்றது இதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென பதிவு எதுவும் செய்து கொள்ளத்தேவையில்லை எளிதாக நண்பர்களுடன் இதனை பகிர்ந்து கொள்ளமுடியும்
இதனை இப்போது கட்டணமில்லாமல் https://www.tone2.com/update/Tone2_NanoHost.zip எனும் இணையதளபக்கத்திலிருந்து பதிவிறக்கிகொள்க! மேலும் இதனை பயன்படுத்தி கொள்வதற்காகன இதற்கான கையேட்டைப் படித்து செயல்படுத்தி பயன்பெறுக

Pixelorama எனும் புள்ளிகளால் ஆன ஓவியக்கலை பயன்பாடு

Pixelorama என்பது ஒரு கட்டற்றகட்டணமற்ற புள்ளிகளாலான ஓவியக்கலையின் sprite editor என்பதற்கு ஏற்றதாகும். இதில் சமீபத்திய கூடுதலான வசதிவாய்ப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன இதில் பென்சில் , அழிப்பான் , நிரப்பும் வாளி, ஒளிருமாறும் இருளடர்ந்தவாறும் செய்வதற்கான கருவி , வண்ணங்கள் ,செவ்வக வடிவம் ஆகிய ஆறு கருவிகள் உள்ளன அவற்றுள் தேவையானதை தேவையான போது தெரிவுசெய்து கொள்க பல்வேறு வகையிலான அளவிலான வண்ணங்களிலான தூரிகைகள் இதில் உள்ளன மிகமுக்கியமாக “From files” , “per project” ஆகிய இருவகை தூரிகைகளை இது ஆதரிக்கின்றது நாம் இவற்றுள் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து கொள்ள “Brushes”எனும் கோப்பகத்திற்கு சென்று தெரிவுசெய்து கொள்க நாம் எந்த அளவு ஓவியம் வரைய விரும்புகின்றோம் அதற்கேற்ப புதிய canvas ஐ தெரிவுசெய்து கொள்க அசைவூட்டு படங்கள் உருவாக்கவேண்டுமெனில் இந்த Pixelorama இல் எளிதாக உருவாக்கி கொள்ளமுடியும் இதில்.pxo எனும் வடிவமைப்பில் கோப்பு உருவாக்கப்படும் தேவையெனில் உருவாக்கப்பட்ட கோப்புகளை PNG எனும் வடிவமைப்பில் பதிவேற்றம் செய்துசேமித்து கொள்ளமுடியும் இது Undo/Redo ஆகிய செயல்களை ஆதரிக்கின்றது கிடைமட்ட,செங்குத்து கண்ணாடி பிரதிபலிப்பு வகையில் ஓவியங்களை வரையலாம் இது Gimp, Inkscape, Krita, Blender ஆகியவற்றின் வடிவமைப்பையும் இதற்கு மாற்றான கட்டணமுடைய பயன்பாடுகளின் வடிவமைப்புகளையும் ஆதரிக்கின்றது மேலும் விவரங்களுக்கு https://orama-interactive.itch.io/pixelorama எனும் இணையதளமுகவரிக்கு செல்க

Sublime Text எனும்உரைதிருத்திபயன்பாடு

Sublime Text என்பது code, html ,markup prose போன்ற எந்தவகையான உரைகளையும் கையாளுவதற்கான அதிநவீன உரைதிருத்திபயன்பாடாகும்
மென்மையான பயனாளர் இடைமுகம் , அசாதாரண வசதி வாய்ப்புகளை விரும்புவோர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் . கம்பீரமான உரையுடன்கூடிய இதனை கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து மதிப்பீடு செய்யப் பயன்படுத்தி கொள்ளலாம், ஆயினும் தொடர்ந்து பயன்படுத்த அதற்கான உரிமம் மட்டும் வாங்கப்பட வேண்டும். இது உரை கோப்பினை பல்வேறு கோணத்திலும் சரிசெய்து கொள்ளும் வசதிகொண்டது பயனாளர் விரும்பியவாறான எளிய JSON வகை கோப்பாககூட கையாளமுடியும் பைதானின் APIகொண்டு அதனுடைய வசதி வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்கின்றது உரைகளை கையாளும்போது செயல்களை கட்டுபடுத்திடுவதற்காக Ctrl+Shift+P. ஆகியமூன்று விசைகளை அழுத்துவதன் வாயிலாக Command Palette என்பதை திரைக்கு கொண்டுவந்து தேவையான கட்டளைகளை செயல்படுத்தி கொள்ளலாம் உரையில் ஒன்றுக்கு மேற்பட்டவகையில் தெரிவுசெய்து கொண்டு ஒரு சமயத்தில் பத்துக்குமேற்பட்ட மாறு தல்களை செயற்படுத்தலாம் ஒரு மாறுதலை Ctrl+P ஆகிய ஒரு சில விசைகளை அழுத்துவதன் வாயிலாக Goto Anything எனும் செயலியை பயன்படுத்தி கொள்க அவ்வாறே Goto Definitionஎன்பதை பயன்படுத்தி உரைகளை திருத்தம் செய்திடலாம் இது விண்டோ லினக்ஸ் மேக் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது
மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும்http://www.sublimetext.com/ எனும் இணையதள பக்கத்திற்கு செல்க

சீரற்ற கடவுச்சொற்களை Bash script மூலம் உருவாக்கமுடியும்

அவ்வப்போது, குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய கடவுச்சொற்களைக் கொண்டு வர வேண்டியுள்ளது, அவற்றில் சில மற்றவர்களை விட பாதுகாப்பாக இருக்க வேண்டும்என நம்முடைய பாதுகாப்பு உணர்வினை தக்கவைக்கவேண்டியுள்ளது. இணையத்தில் ஏதேனும் ஒரு புதிய உள்நுழைவை உருவாக்க வேண்டியிருக்கும் போது நம்முடைய மனம் பெரும்பாலும் வெறுமையாக இருக்கும் என்று தோன்றுகிறது, மேலும் இந்த குறுகிய பாஷ் ஸ்கிரிப்ட் டானதுஅவ்வாறான வெற்றிடத்தை நிரப்புகிறது. இந்த ஸ்கிரிப்ட்டின் பெரும்பகுதி எங்காவது இடுகையிடப்பட்டிருப்பதைக் கண்டு அதில் ஒரு சிறிய மாற்றத்தைமட்டும் செய்தால் போதும்.
#!/usr/bin/env sh
echo ‘Generating 12-character passwords’
for ((n=0;n /dev/null | uuencode -m – | sed -ne 2p | cut -c-12
done
இது எவ்வாறு இயங்குகிறது என்பதற்கான அனைத்து விவரங்களும் நமக்குத் தெரியாது, ஆனால் நாம் கொஞ்சம் ஆராய்ச்சி யும் பரிசோதனைகளையும் செய்தால் . ஸ்கிரிப்டின் do dd உடன் தொடங்கும் வரிசையில் உள்ளது. Dd இலிருந்து வரும் பின்னூட்டச் செய்திகள் அகற்றப்பட்டு, பின்னர் எழுத்துக்கள் uuencode க்கு அனுப்பப்படுகின்றன, இதன் எழுத்துக்கள் அனைத்தும் அச்சிடக்கூடியதாக இருக்கும் (அதாவது, கட்டுப்பாட்டு எழுத்துக்கள் இல்லை).
sharutils இல்தொகுப்பை நிறுவுவதன் மூலம் uuencode கட்டளையைப் பெறலாம்.
sed ஆனது இன்னும் சில மாற்றங்களாகத் தோன்றசெய்கின்றது, இதனால் எழுத்துக்கள் சிறிய எழுத்தாகவும் பெரிய எழுத்தாகவும கலக்கப்படுகின்றன. இறுதியாக, cut என்பது 12 எழுத்துகள் கொண்ட கடவுச்சொல்லாக முடிக்கின்றது .forஎனும் கன்னியானது 12 முறை இயங்குகிறது, எனவே 12 கடவுச்சொற்களைப் பெறுமுடியும்.
இந்த எடுத்துக்காட்டு வெளியீட்டு எழுத்துகளின் நல்ல குழப்பத்தைக் காட்டுகிறது. கவனிக்க வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால், எண்ணும் எழுத்து கலந்திடாத எழுத்துக்கள் மட்டுமே / அல்லது +. குறியீடுகளுடன் வருகின்றன
ஒரு புதிய கடவுச்சொல் தேவைப்படும்போது, இந்த வெளியீட்டை “appeals” ஒன்றைப் பார்த்தால் போதும். இது ஒரு கடவுச்சொல் என்றால் அடிக்கடி பயன்படுத்திடலாம், அது இறுதியில் நினைவில் கொள்ள முடியும் .
இவற்றைப் போலவே அவற்றைப் பயன்படுத்த எந்த காரணமும் இல்லை; நாம் விரும்பியபடி எழுத்துக்களைச் சேர்க்கலாம் அல்லது மாற்றலாம். பெரும்பாலும் எட்டு எழுத்து கடவுச்சொற்களைப் பயன்படுத்துவது நல்லது என பரிந்துரைக்கப்படுகின்றது. ஒரு சில இடங்களில் குறைந்தது ஒரு சிறிய எழுத்து, ஒரு பெரிய எழுத்து, ஒரு எண் ஒரு குறியீடு போன்ற குறிப்பிட்ட கூறுகளை கடவுச்சொல் கொண்டிருக்க வேண்டும்.
கடவுச்சொற்கள் எதுவும் நமக்கு பிடிக்கவில்லை என்றால், இன்னொரு 12 கடவுச்சொற்களை உருவாக்க ஸ்கிரிப்டை மீண்டும் இயக்குக. dev/urandom உடன் இது போலியான-சீரற்ற எண்களை மட்டுமே உருவாக்குகின்றது என்று ஒருவர் கருத்து தெரிவிக்கலாம், ஆனால் இந்த ஸ்கிரிப்ட் நிச்சயமாக நாம் செய்யக்கூடியதை விட மிகச் சிறப்பாக சொந்த பணியை செய்கின்றது என்பது திண்ணம்.

Lua எனும் கணினிமொழி

லுவா ஆனது மிகச்சிறிய கணினிமொழியாகும் அதாவது சி எனும் கணினிமொழியில் எழுதப்பட்ட இதனுடைய குறிமுறைவரிகள் வெறும் 24,000வரிகளைமட்டுமே கொண்டதாகும்
இந்நிலையில் இவ்வளவு சிறிய கணினிமொழியைகொண்டு உருப்படியாக எந்தவொரு பணியையும் செயற்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியுமா எனும் சந்தேகம் எழும் நிற்க , உண்மையில் லுவா ஆனது GUI எனும் வரைகலை பயனாளர் இடைமுகப்பு கருவி உட்பட மூன்றாம் தரப்பு நூலகங்களின் பரந்த தொகுப்பைக் கொண்டுள்ளது, இது கானொளி விளையாட்டுகள் ,முப்பரிமான திரைப்படத் தயாரிப்பில் விரிவாகப் பயன்படுத்தப்படுகிறது, இது கானொளி விளையாட்டு பொறிகளுக்கான பொதுவான ஸ்கிரிப்டிங் மொழியாகும்.
லுவா ஒரு நிரூபிக்கப்பட்ட, வலுவான கணினிமொழியாகும் இதுஒரு சக்திவாய்ந்த, திறமையான, இலகுரக, உட்பொதிக்கக்கூடிய ஸ்கிரிப்டிங் கணினிமொழியாகும். இது நடைமுறை நிரலாக்கம், பொருள் சார்ந்த நிரலாக்கம், செயல்பாட்டு நிரலாக்கம், தரவு உந்துதல் நிரலாக்கம் , தரவு விளக்க நிரலாக்கும் ஆகியவற்றை ஆதரிக்கின்றது. இது துணை வரிசைகள், விரிவாக்கக்கூடிய சொற்பொருள்களின் அடிப்படையில் சக்திவாய்ந்த தரவு விளக்கக் கட்டமைப்புகளுடன் எளிய நடைமுறை தொடரியலை ஒருங்கிணைக்-கின்றது. இது மாறும் வகையில் தட்டச்சு செய்யப்பட்டு, பதிவு அடிப்படையிலான மெய்நிகர் இயந்திரத்துடன் குறிமுறைவரிகளை விளக்குவதன் மூலம் இயங்குகின்றது, மேலும் அதிகரிக்கும் குப்பை சேகரிப்புடன் தானியங்கி நினைவக நிருவாகத்தைக் கொண்டுள்ளது, இது உள்ளமைவு, விரைவான முன்மாதிரிக்கு ஏற்றதாக அமைகின்றது. இது மிகவிரைவாக செயல்படும் திறன்கொண்டது.நன்றாக வடிவமைக்கப்பட்ட பெஞ்ச்மார்க் திட்டங்களில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் மிகவிரைவாக செயல்படும் திறன்கொண்டதாகும். இது விண்டோ லினக்ஸ் செயல்படும் கணினி மட்டுமல்லாது Android, iOS, BREW, Symbian, Windows Phone ஆகிய கைபேசிகளிலும் செயல்படும் கையடக்க கணினிமொழியாக திகழ்கின்றது இதனுடன் C , C++ மட்டுமல்லாது Java, C#, Smalltalk, Fortran, Ada, Erlang அதுமட்டுமல்லாது Perl , Ruby ஆகிய பிற கணினி மொழிகளிகளில் எழுதப்பட்ட எந்தவொரு நிரலாக்கத்துடனும் எளிதானதாக ஒருங்கிணைத்து பயன்படுத்தி கொள்ளமுடியும் இது கட்டணமற்றது கட்டற்றது மேலும்விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் http://www.lua.org/ எனும் இணையதளபக்கத்திற்கு செல்க

OnlyKey எனும் கட்டற்ற பாதுகாப்புஅமைவு

நம்முடைய நடவடிக்கைகளுக்கான கணக்குகள் அனைத்தும் பாதுகாப்பான கணினியின் வன்பொருளில் பாதுகாக்கப்படுகின்றன. ஆயினும் அவ்வாறான நம்முடைய கணினியை ஹேக் செய்யப்பட்டிருந்தாலும் நம்முடைய கணக்குகளை அவர்களால் அபகரிக்கமுடியாமல் OnlyKey எனும் கட்டற்ற வன்பொருளை பாதுகாப்பினை கொண்டு பாதுகாக்க முடியும் அதைவிட நம்முடைய இணையகணக்குகளை கூட இதன் வாயிலாக பாதுகாத்திடமுடியும்
இது , பாதுகாப்பு விசை , கோப்பு குறியாக்க டோக்கன் ஆகிய இரண்டு காரணி களின் அடிப்படையில் ஒரு வன்பொருள் கடவுச்சொல் நிருவாகியாக செயல்படுகின்றது , கணினி அல்லது வலைத்தளம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு நம்முடைய கணக்குகளை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகின்றது . இது ஒரு திற மூல, சரிபார்க்கப்பட்ட , நம்பகமான பயன்பாட்டு மென்பொருளாகும்
Twitter, Facebook, GitHub, Google.ஆகிய அனைத்து தளங்களிலும் இது பாதுகாப்பினை வழங்குகின்றது இரண்டு காரணிகள் மட்டுமல்லாது FIDO2 / U2F, Yubikey OTP, TOTP, Challenge-response. ஆகியவற்றுடன் இணைந்து பாதுகாப்பினை வழங்குகின்றது
இது மிகவும் நீடித்த, நீர்ப்புகாத, தடுப்பு எதிர்ப்பு வடிவமைப்புடன் நாம் செல்லும் எல்லா இடங்களுக்கும் நம்முடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கின்றது
இதனை திறக்க, நமக்கான PIN குறியீட்டை இதிலுள்ள 6 பொத்தான் விசைப்பலகையில் தட்டச்சு செய்ய வேண்டும். ஏதாவது சூழலில் இந்த சாதனம் தவறி காணாமல் போய்விட்டால், கண்டெடுப்பவர்கள் 10 முறைமட்டும் உள்நுழைவு செய்வதற்கான முயற்சி செய்திட அனுமதிக்கின்றது அதற்குமேல் அனுகமுடியாதவாறு பூட்டப்பட்டு நம்முடைய அனைத்து தரவுகளும் பாதுகாப்பாக செய்துவிடுகின்றது.
நாம் ஒவ்வொரு தளத்திற்கும் ஒவ்வொரு கடவுச்சொல் என்றவாறு எண்ணற்ற கடவுச்சொற்களை நினைவில் வைத்திருப்பதற்கு பதிலாக இதனை மட்டும் கொண்டு அனைத்து தளங்களின் உள்நுழை செயல்களையும் செயல்படுத்தி பயன்பெறமுடியும் இது மேக் லினக்ஸ் விண்டோ ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது இது அனைத்து இணைய உலாவிகளிலும் செயல்படும் திறன்மிக்கது இது அனைத்து சாதனங்களிலும் அனைத்து இணையதளஉலாவிகளிலும் அனைத்து பயன்பாடுகளிலும் அனைத்து சமுதாயஇணையதளங்களிலும் நாம் பாதுகாப்பாக பயன்படுத்தி கொள்ளஉதவுகின்றது இது அதிகபட்சம்24 கணக்குகள் வரை கையாள உதவுகின்றது மேலும் விவரங்களக்கும் பயன்படுத்தி கொள்ளவும் https://onlykey.io/ எனும் இணையதளபக்க்ததிற்குசெல்க

Previous Older Entries