ஓப்பன் ஆஃபிஸ் கால்க்-32. தரவுகளை உள்ளீடுசெய்தலும் கையாளுதலும்

 ஓப்பன் ஆபிஸ் கால்க்கில் விசைபலகைவழியாகவும், இடம்சுட்டியால் பிடித்து இழுத்து சென்றுவிடுவதன் (drag and drop)மூலமும், நிரப்புதல் கருவிகள்(Fill Tools)  வழியாகவும், பட்டியல்களை தெரிவுசெய்வதன் (Select lists)வாயிலாகவும் தரவுகளை உள்ளீடு செய்யமுடியும்.
  மேலும் ஒரே ஆவணத்திலுள்ள பல்வேறு தாட்களில் தகவல்களை ஒரே நேரத்தில் உள்ளீடு செய்ய ஓப்பன் ஆபிஸ் கால்க் அனுமதிக்கின்றது
 எண்களை உள்ளீடு செய்யும்போது கழித்தல் குறி(-)1234யுடன்  அல்லது பிறை அடைப்பிற்குள் (1234) எண்களை உள்ளீடுசெய்தால் அவற்றை எதிர்மறை எண்ணாக -1234திரையில் காண்பிக்கும்
 ஒற்றை மேற்கோள்(‘) 1234குறியிட்டு எண்களை உள்ளீடுசெய்தால் அவற்றை  எழுத்தாக பாவித்து கணக்கீட்டிற்கு எடுத்துகொள்ளாது ஆனால் எண்களை மட்டும் 1234 திரையில் காண்பிக்கும் 
 நாளினை குறிப்பிட சாய்வுக்கோடு (slash (/)) அல்லது இடைக்கோடு (hyphen ())  என்றவாறு இதில் ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுள்ள வடிவைப்பில்  தேவையான ஒன்றை தெரிவுசெய்துகொள்க நேரத்தை முக்காற்புள்ளி(colon (:) ) யிட்டு குறிப்பிடுக.
  சிறப்புவகை குறியீடு தேவையெனில் Insert => Special Character=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பின்னர் தோன்றிடும் Special Characters என்ற  உரை யாடல் பெட்டியில்( படம்-32-1) தேவையான எழுத்துரு வகையை தெரிவு செய்த வுடன் விரியும் தொடர்புடைய சிறப்புவகை குறியீடுகளில் தேவையானதை மட்டும் தெரிவு செய்து okஎன்ற பொத்தானை சொடுக்குக.
 படம்-32-1
 ஓப்பன் ஆபிஸ் கால்க்கில் தரவுகளை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தியவுடன்  தொடர்புடைய கணக்கீடுகளை  தானாகவே செய்துகொள்ளும் அச்செயலை நீக்கம்செய்திட Ctrl+Z. என்றவாறு  விசைகளை அழுத்துக.
 ஓப்பன் ஆபிஸ் கால்க்கில் தொடர்ந்து தரவுகளை  உள்ளீடு செய்யும்போது ஒரு எழுத்தினை தட்டச்சு செய்தவுடன் இதே நெடுவரிசையில் இதேஎழுத்தில் ஆரம்பிக்கும் மிகுதி தரவுகளை திரையில் காண்பிக்கும  இதன்மூலம் திரும்திரும்ப உள்ளீடு செய்யப் படும் தரவுகளை தானாகவே பூர்த்தி செய்து விரைவான தரவுகளின் உள்ளீட்டிற்கு ஓப்பன் ஆபிஸ் கால்க் வழிவகுக்கின்றது. இதனைTool => Cell Content =>Auto Input.=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்து வதன்மூலம் செயலு்க்கு கொண்டு வரமுடியும்.
 வாரத்தின் நாட்கள் ,மாதத்தின் பெயர்கள் போன்ற தொடர்ச்சியான தரவுகளை Fill Series என்ற வசதிமூலம் விரைவாக உள்ளீடுசெய்யமுடியும் இதற்காக முதலில் உள்ளீடு செய்து நிரப்பவிரும்பம் கலங்களை(cells) தெரிவுசெய்து கொண்டு Edit=> Fill => Series=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றும் Fill  Series என்ற உரையாடல் பெட்டியில்( படம்-32-2) start value என்பதில் முன்கூட்டியே உருவாக் கப்பட்டு தயார்நிலையிலுள்ள தொடர்ச்சியான தரவுகளில் ஆரம்பத்தை மட்டும்  தெரிவுசெய்துகொண்டு  ok என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.உடன் மிகுதி தரவுகள் நாம் தெரிவுசெய்த கலங்களில்(Cells) தானாகவே பூர்த்தியாகிவிடும்.
 படம்-32-2
 இவ்வாறேநாம்விரும்பும் தொடர்ச்சியான தரவுகளைகூட நாமே உருவாக்கி பயன்படுத்தி கொள்ளமுடியும்.அதற்காகTools => Options =>Open Office.org Calc => Sort Lists => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றும் உரையாடல் பெட்டியில்( படம்-32-3)முன்கூட்டியே உருவாக்கப்பட்டு தயார்நிலையிலுள்ள தொடர்ச்சி யான தரவுகளின் பட்டியல் இடதுபுறம் Listsஎன்ற பெட்டியிலும் தொடர்புடைய பெயர் களின் பட்டியல் வலதுபுறம் Entries என்ற பெட்டியிலும் இருக்கும். நாம் புதிய பட்டி யலை உருவாக்கிட விரும்புவதால்Newஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Entries என்ற பெட்டியில் தேவையான தொடர்ச்சியான தரவுகளை உள்ளீடு செய்து கொண்டு Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-32-3
 நிறுவனத்தின் பெயர் போன்ற தகவல்கள் அனைத்து தாட்களிலும் அதே எண்ணுள்ள கலத்தில்(cell) பிரதிபலிக்கவேண்டுமெனில் அவ்வாறான தகவல்களை உள்ளீடு செய்துகொண்டு அனைத்து தாட்களையும் தெரிவுசெய்துகொள்க. பின்னர் Edit => Sheet => Select=> என்றவாறு கட்டளைசெயற்படுத்துக உடன் தோன்றிடும்  Select sheets என்ற உரையாடல் பெட்டியில் ( படம்-32-4) okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 படம்-32-4
 தரவுகளை உள்ளீடு செய்யும்போது அவை ஏற்புடையதாக இருக்கின்றதா வென சரிபார்த்து ஏற்றுக்கொள்ளுமாறுசெய்யமுடியும் அதற்காக Data => Validity =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
 படம்-32-5
 உடன் தோன்றிடும்  Validity என்ற உரையாடல் பெட்டியில்( படம்-32-5)criteria என்ற தாவியின் திரையில் தேவையான நிபந்தனைகளை உள்ளீடு செய்து தவறாக இருந்தால் சரிசெய்வதற்காக Invalid data—try again என்றவாறு செய்தியை காண்பிக்கும்படி input help என்றதாவியின் திரையில் அமைத்தும்  தவறினை சுட்டிகாட்டுவதற்காக error alert என்ற தாவியின் திரையில் தேவையானவாறு அமைத்தும் okஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக 
 பணித்தாளில் தரவுகளை உள்ளீடு செய்யும்போது தவறான தரவுகளை  Backspace என்ற விசையை அழுத்தி நீக்கம் செய்யமுடியும். மேலும்அந்த கலத்தின் வடிவமைப் பையும் சேர்த்துநீ்க்கம் செய்திட Edit => Delete Contents=>என்றவாறு கட்டளைகளை செயற் படுத்துக.உடன் தோன்றிடும்  Delete Contents என்ற உரையாடல் பெட்டியில்Delete all என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொண்டு  okஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக 
 ஒருகலத்தில் உள்ள தரவுகளை மாறுதல் செய்திட அந்த கலத்தினை தெரிவு செய்து கொண்டு F2 என்ற செயலிவிசையை அழுத்துக உடன் இடம்சுட்டியானது கலத்தின் தரவிற்குள் சென்றுநிற்கும் பின்னர் அம்புக்குறியை தேவையான இடத்திற்கு நகர்த்தி தரவகளை உள்ளீடுசெய்து உள்ளீட்டு விசையை(enter key) அழுத்துக.
  படம்-32-6
  ஒருகலத்தில் (cell) உள்ள தரவுகளை  வடிவமைப்பு செய்திடFormat =>cells=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் format cells என்ற உரையாடல் பெட்டியில் ( படம்-32-6)ஏராளமான வாய்ப்புகள்  தரவுகளை  வடிவமைப்பு செய் வதற்காக உள்ளன அவைகளுக்கான தாவியின்திரைக்குசென்று  தேவையானதை  தெரிவு செய்துokஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக 

எம்எஸ் அக்சஸ் தரவுதளகோப்பினை ஓப்பன் ஆஃபிஸிலும் ஓப்பன் ஆஃபிஸன் தரவுதளத்தை எம்எஸ் அக்சஸிலும் கையாளமுடியுமா.


ஆம் முடியும் பொதுவாக ஓப்பன் ஆஃபிஸானது எந்த வகையான தரவுதளத்தையும் கையாளக்கூடிய தன்மையுடையதாகும். ஆனால் எம்எஸ்அக்சஸானது ODBC வகையை மட்டுமே ஆதரிக்ககூடியதாக உள்ளது அதனால் இவ்விரண்டையும் எவ்வாறு இணைத்து பயன்படுத்துவதுஎன பின்வரும் படிமுறைகளில் காண்போம்.

1.முதலில்எம்எஸ் விண்டோவில் Start => Settings => Control Panel => Administrative tools => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. உடன் விரியும்  Administrative tools என்ற திரையில் ODBC Data Sources என்பதன் குறு்ம்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக.

2.பின்னர் தோன்றும் ODBC Data Sources Administrative tools என்ற உரையாடல் பெட்டியில் Add என்ற பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக.

3.அதன்பின்னர் Create New Data Source என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றும் அதில் Driver do Microsoft Access (.mdb) என்பதை தெரிவுசெய்துகொண்டு Finishஎன்ற பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக.

படம்-1

4.பின்னர் ODBC Microsoft Access Setupஎன்ற என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றும் அதில் உள்ளData sources  name என்பதற்கு example என்றவாறு ஒரு  பெயரினை இட்டும்  Description என்பதற்கு an example of using ODBC என்றவாறு இதன் விவரத்தை உள்ளீடுசெய்தும் Selectஎன்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக. இதன்மூலம் எம்எஸ்அக்சஸின் கோப்பின் வகையை  Microsoft Access (*.mdb) என்றவாறு தெரிவுசெய்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.

படம்-2

5.தற்போது நாம் உருவாக்கிய ODBC Data Source என்பது பட்டியலாக ODBC Data Sources Administrative tools என்ற உரையாடல் பெட்டியில் தோன்றும் பின்னர்  இந்த உரையாடல் பெட்டியில்  உள்ளok என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.

6.அதன் பின்னர் ஓப்பன் ஆஃபிஸில் Tools=-> Data Sources=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.  உடன்திரையில் தோன்றிடும் Data Sources Administration என்ற உரையாடல் பெட்டியில்  Bibliography. என்பதை விட்டிடுக. New Data Sourceஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.

7.பின்னர் Data Source URL என்பதிலுள்ள […] என்ற முப்புள்ளியை தெரிவு செய்து சொடுக்குக.

8.அதன்பின்னர் தோன்றிடும் திரையில்  நாம் உருவாக்கிய example Microsoft Access (*.mdb) என்பதை தெரிவுசெய்து Apply என்ற பொத்தானையும் ok என்ற பொத்தானையும் தெரிவு செய்து சொடுக்கிData Sources Administration என்ற உரையாடல் பெட்டியை மூடிவிடுக.

படம்-3

9.பின்னர் View => Data Sources =>(அல்லது F4 விசையைஅழுத்துவது )என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி திரையில் பார்வையிட்டுகொள்க .

10.இதன் பின்னர் எம்எஸ் அக்சஸ் தரவுதளகோப்பினை ஓப்பன் ஆஃபிஸிலும் ஓப்பன் ஆஃபிஸன் தரவுதளத்தை எம்எஸ் அக்சஸிலும் கையாளமுடியும்.

 

கருவிகள்_time_stoper

இன்று இணையத்தில்  கிடைக்கும் பயன்பாட்டு நிரலிதொடர்கள் அனைத்தும் அல்லது பெரும்பாலானவை  Trail (Evaluation) கத்தான இருக்கின்றன அதனால் அவைகளை  தொடர்ந்து நம்மால் இயக்கி பயன்படுத்திட முடியாத நிலை ஏற்படுகின்றது .
ஆயினும் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினால் வழக்கமான பயன்பாட்டினை போன்று அவைகளை நம்முடைய கணி்னியில் தொடர்ந்து இயக்கி பயன்படுத்தி கொள்ளமுடியும்

முதலில் நம்முடைய கணினியில்ஏதேனுமொரு trial Program ஐ நிறுவுகை செய்க.
பின்னர் பின்வரும் இணையபக்கத்திற்குசென்று time_stoper  என்பதனை பதிவிறக்கம் செய்க
http://hotfile.com/dl/83077575/7d0e707/time_stoper_for_trial_applications.zip.html Or

http://rapidshare.com/#!download|820l34|431338867|time_stoper_for_trial_applications.zip|919

அதன்பின்னர் இதனை (time_stoper ) நம்முடைய கணினியில் நிறுவுகை செய்க

பின்னர் திரையில் உள்ள இந்த பயன்பாட்டின் குறும்படத்தை(Icon) தெரிவுசெய்து சொடுக்குக.
அதன்பின்பு trial software ஐ நிறுவுகைசெய்த கோப்பகத்திற்கு (c:/Program Files/……)சென்று அதனுடைய இயக்கexeகோப்பினை தெரிவுசெய்க
பின்னர் நமக்கு வேண்டிய நாளை date தெரிவுசெய்து அதனை இந்த trial program க் கான குறுக்குவழி பெயராக கொடுத்து create desktop shotcut ஐ சொடுக்குக அவ்வளவுதான் இனி நாம் கொடுத்த பெயரில் உள்ள குறுக்குவழி குறும்படத்தை உபயோகித்து இந்த trail Program ஐ தொடர்ந்து இயக்கமுடியும்

தேவையான இணையபக்கத்தை நம்முடைய கணினியில் சேமித்துகொள்ளமுடியும்

 

நாம் இணையத்தில் உலாவரும்போது ஏதேனும் தகவல் இருந்தால் அந்த பக்கத்தை நம்முடைய கணினியில் சேமிக்க விரும்புவோம் அதற்காக அந்த இணைய பக்கத்தினை தெரிவுசெய்து ctrl + c என்றவாறு விசைப்பலகையிலுள்ள விசைகளை அழுத்தி நகல் எடுத்துகொள்வோம் பின்னர் நம்முடைய கணினியில் காலியானதொரு ஒரு நோட்-பேட் அல்லது மைக்ரோசாப்ட் வோர்டை திறந்து அதில் Ctrl +v என்றவாறு விசைப் பலகையிலுள்ள விசைகளை அழுத்தி ஒட்டி சேமித்துகொள்வோம் இதற்கு பதிலாக பதிவிறக்கம் செய்வதைபோன்று சுலபமாக தேவையான இணையபக்கத்தை நம்முடைய கணினியில் சேமித்துகொள்ளமுடியும்  இதற்காக நம்முடைய கணினியில்  நாம் இணையத்தில் உலாவரும் தேடுபொறியானது மோசில்லா ஃபயர் ஃபாக்ஸ் ஆக இருக்கின்றதாவென உறுதி படுத்திகொள்க.

பின்னர் இதனுடய பின்வரும் இணையபக்கத்திற்குசெல்க.

https://addons.mozilla.org/en-US/firefox/search/?q=quick+notes&cat=all&lver=any&pid=1&sort=&pp=20&lup=&advanced=

அதில் இரண்டாவதாக உள்ள search result Quick Noteஎன்பதில் Add To Firefox என்பதை தெரிவுசெய்து சொடுக்குகபின்னர் தோன்றிடும் திரையில் allow என்ற பொத்தானை சொடுக்குக .உடன் Software installation என்ற உரையாடல்பெட்டி திரையில் தோன்றும்

இதில் Install now என்ற பொத்தானை சொடுக்குக இந்தAdd ons ஆனது பதிவிறக்கம் ஆகி Add onsஎன்ற உரையாடல்பெட்டி மூலம் இது நிறுவப்படும  அதுவரை காத்திருக்கவும் பின்னர் restart-firefox என்ற பொத்தானை சொடுக்குக

இதன்பின்னர் மறுபடியும் மோசில்லா ஃபயர் ஃபாக்ஸ் தேடுபொறியாநது தானாகவே திறந்து செயலுக்கு வரும் பின்னர் இணையத்தில் உலாவரும்போது நமக்கு வேண்டிய தகவலை தெரிவுசெய்து செய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக உடன் தோன்றிடும் பட்டியில் send to quick note என்பதைதெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் அதை  முறைபடுத்தி வேறு கோப்பில் சேமிக்கலாம்.

பின்னர் தேவையானால் இந்த quick noteஐயே browser இல ஒரு அங்கமாக ஆக்கலாம்

 

இதற்காக tools =>quick note => sidebar=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக

ஜிமெயில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த மின்னஞ்சலை படிக்கமுடியும்

தற்போது பெரும்பாலானவர்கள் ஜிமெயிலை பயன்படுத்துகின்றனர் ஆயினும் இந்த ஜிமெயில் உள்வருகை பெட்டியில்(inbox) உள்ள மின்னஞ்சலை திறந்து படித்து முடிந்தபின்னர் அதனை மூடிவிட்டு மீண்டும் உள்வருகை பெட்டிக்கு சென்று வேறுமின்னஞ்சலை தெரிவுசெய்து சொடுக்கி திறக்கவேண்டியுள்ளது நம்முடைய ஜிமெயிலின் மின்னஞ்சலை படிப்பது இவ்வாறான அதிக சிரம்மான  பனியாக உள்ளது  இதனை தவிர்த்து தொடர்ச்சியாக அடுத்தடுத்த மின்னஞ்சலையும் அல்லது இதற்கு முந்தைய மின்னஞ்சலை படிக்குமாறு அமைக்க முடியுமா என வினவினால் ஆம் முடியும் பின்வரும்படிமுறைகளை பின்பற்றினால்

1.. முதலில் நம்முடைய ஜிமெயில்கணக்கிற்குள் நுழைக

2. பின்னர் ஜிமெயில்கணக்கின் திரையின் மேலே வலதுபுறமூலையிலுள்ள SETTINGS என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

3. அதன் பின்னர் விரியும் திரையின் இந்த SETTINGS  -ன் துனை கட்டளைகளின் பட்டியலில் இருந்து LABS என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

படம்-2

4.பின்னர் தோன்றிடும் திரையில் MOUSE GESTURES என்ற வாய்ப்பின் ENABLE என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொள்க.

படம்-3

5. அதன்பின்னர் திரையின் அடிப்பகுதியின் இடதுபுறமூலையிலுள்ள SAVE CHANGES என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

படம்-4

. இப்போது ஜிமெயில் உள்வருகை பெட்டியில் உள்ள மின்னஞ்சலில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த மின்னஞ்சலையும் இதற்கு முந்தைய மின்னஞ்சலை படிக்கமுடியும்.

எண்ணற்ற converter கள் லினக்சிலும் உள்ளன

தற்போதைய நவீன காலத்தில் செல்லிடத்து பேசி  இல்லாத இடமே இல்லை அதிலும் கேமரா செல்லிடத்து பேசிகளுக்கும் பஞ்சமே இல்லை இந்த செல்லிடத்து பேசியில் புதிய புதிய பாடல்களையும்  வீடியோவையும் அவ்வப்போது பதிவிறக்கம் செய்ய நேரிடும் பின்னர் அதனைசெல்லிடத்து பேசிக்கு ஏற்றவாறு format க்கு மாற்ற சவுண்ட் converter ஐ தவிர வேறு மென்பொருள் எதுவும் இல்லை என்று நாம் நினைத்திருப்போம் சவுண்ட் converter ஐ தவிர ஏராளமான சிறந்த மென்பொருள்கள் இணையத்தில் உள்ளன ஆனால் அவைகள் விண்டோஸ்  ஓஎஸ் சூழலில் மட்டுமே செயல்படுமாறு அமைக்கபட்டிருக்கும் லினக்ஸ் பயனாளராக இருந்தால் இதற்காக விண்டோஸ் wine ஐ நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படும் அந்த சமயத்தில் என்னடா லினக்ஸில் இதுபோன்ற பயன்பாடுகளை கையாளுவதற்கான வசதி ஒன்றும் இல்லையே என்ற மனத்தளர்ச்சி ஏற்பட்டு பழையபடி விண்டோவிற்கே மாறிகொள்வோமா என்று மனம் தடுமாறும்
கவலைபடவேண்டாம் எப்போதும் லினக்ஸில் இல்லாதது எந்த ஒரு இயக்க முறைமையிலும் இல்லை என்ற செய்தியை மனதில் கொள்க. லினக்ஸ் இல் ஒரு எந்த ஒரு பணியை செய்தாலும் அதில் தெளிவும்  சிறப்பும் இருக்கும், இது வரை என்னென்ன ஆடியோ , வீடியோ format கள் வந்துள்ளதோ அதற்கு தகுந்த Gnormalize(படம்-1), SoundKonverter,O ggConvert என்பன போன்ற எண்ணற்ற converter கள் லினக்சிலும்  உள்ளன.தேவைக்கேற்ப பயன்படுத்திகொள்க

படம்-1

உபுண்டுவில் ஏற்படும் Flash ன் தொந்தரவை தீர்வுசெய்யமுடியும்.


உபுண்டுவில் ஒவ்வொரு ஆறுமாதத்திற்கொருமுறை மேம்படுத்தும் போதும் பயன்பாடுகளிள் ஏதாவது ஒன்று நாம் சரியாக வழி முறைகளை பின்பற்றி செயல்படுத்தாததால் நமக்கு தொல்லை கொடுக்காமல் விடாது, அவ் வா€றே  சமீபத்திய உபுண்டு10.04 க்கு மேஜை கணினியை மேம்படுத்தியவுடன் எல்லாம் நன்றாக இருந்தது ஆனால் ஃபயர்பாக்ஸையும் சிஸ்டம்களையும் செயற்படுத்திடும்போது  சத்தம் எதுவும் கேட்கவில்லை.
என்னதான் காரணமென தேடு பொறியில் இரண்டு நாட்களாக தேடித்தேடி பலவற்றை படித்தாலும் அயற்சி ஏற்படுமாறு தண்ணி காட்டிக் கொண்டிருந்தது.தற்செயலாக alsamixer ஐ டெர்மினலில் கொடுத்து ஒரு பாடலை ஓடவிட்டுக்கொண்டு ஒவ்வொரு சேனலையும் மாற்றி மாற்றி முயற்சித்துக்கொண்டிருந்த போது ஏதோஒரு மாறுதல் செய்யும் போது சத்தம் வர ஆரம்பித்தது.

ஆயினும் ஃபயர்பாக்ஸ்  என்னனென்வோ செய்தும் அதிக தண்ணிகாட்டியது .பல்வேறு மாறுதல்களை  அவற்றை ஏன் செய்யவேண்டும் அதனால் என்ன பலன் என்ன என்பது கூட தெரியாமல் செய்தும் பலன் என்னவோ பூஜ்ஜியந்தான் இலவசமாக கிடைக்கின்றதே என்று ஏன் இதனோடு மல்லாடவேண்டும் என்ற வெறுப்பே அந்த சமயத்தில் ஏற்பட்டது
ஒருவழியாக இறுதியில் Firefox Address bar இல் about:plugins என்ற தட்டச்சு செய்து உளீட்டுவிசையை அழுத்தியவுடன் இதுவரை நாம் இணைத்துள்ள plugin களை பட்டியலாக திரையில் காண்பித்தது .இந்த plugin  ஆனது  firefox-ல் இரண்டு வித Shock Flash Player ஆக இருக்கின்றன. அதன் மேற்பகுதியில் அது எந்த இடத்தில் நிறுவப்பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது

.அதனடிப்படையில் பார்வையிடும்போது கணினியில் இதனுடைய வெர்சன் 9 & 10 ம் இருந்தன. வெர்சன் 9ஐ நீக்கிவிட்டால் சரியாகிவிடும் என்று எண்ணி  /.mozilla/plugins$sudo rm libflashplayer.9 என்ற கட்டளையை terminal -ல் தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தினேன் அவ்வளவு தான் ஒலி அட்டகாசமாக வர ஆரம்பித்துவிட்டது

ஓப்பன் ஆஃபிஸ் கால்க்.-31 -ஓப்பன் ஆஃபிஸின் கால்க் அறிமுகம்


  தரவுகளை உள்ளீடு செய்து கணக்கீடு செய்யும் எம் எஸ் ஆஃபிஸ் எக்செல் போன்ற தொரு ஓப்பன் ஆஃபிஸின் விரிதாள் தான் கால்க் ஆகும்.
இந்த ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கின் பயன் பின்வருமாறு
1.இதிலுள்ள செயலி(function) மூலம் தரவுகளின் சிக்கலான கணக்கீடுகளை செய்வதற்கான வாய்ப்பாட்டை உருவாக்கிட முடியும்
2.தரவுதளத்தின்  அடிப்படை செயல்களான தேக்கிவைத்தல் வடிகட்டுதல் பிரிதிபலிக்கசெய்தல் போன்றவைகளை இதில் செயல்படுத்திடமுடியும்
3.எம் எஸ் ஆஃபிஸ் எக்செல்லின் விரிதாளை ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில்  திறந்து பணிபுரிந்த பின்னர் நாம்விரும்பும் வகை கோப்பாக சேமிக்கமுடியும்.
4.பல்வேறுவகையான இயக்கநேர வரைபடங்களை மிக முக்கியமாக பப்பிள் சார்ட் ஃபில்டு நெட் சார்ட்டினை இதில் உருவாக்கிட முடியும்
5.நாம் பணிபுரிந்து வரும் இதனுடைய விரிதாளினை HTML, CSV, PDF,  Post Script என்பன போன்ற வகை கோப்பாக இதில் ஏற்றுமதி செய்யவும் பதிவிறக்கம் செய்யவும்  முடியும்
6.OpenOffice.org Basic, Python,Bean Shell,  JavaScript என்பன போன்ற உயர்நிலை மொழிகளை ஆதரிக்கின்ற  திரும்பதிரும்ப செய்யப்படும் செயல்களை தானாகவே செயற்படுத்துவதற்காக உருவாக்கப்படும் மேக்ரோக்களை இதில் எளிதாக உருவாக்கி செயற்படுத்தமுடியும்
     பொதுவாக ஒருவர் ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில் பணிபுரிவதற்காக விரிதாட்கள் பயன்படு கின்றன இவை தனித்தனியான பல்வேறு விரிதாள்களை கொண்டவையாகும் இந்த விரிதாள் ஒவ்வொன்றும் எண்ணற்ற  கலன்களை(Cells) ஏறத்தாழ சுமார் 67 மில்லியன் கலன்களை கொண்டதாகும் இந்த கலன்கள் 65536 கிடை வரிசையும்(Row)   1024நெடுவரிசையும் (Column)  கொண்டு கட்டமைக்க பட்டவையாகும் ஒரு கலனின் முகவரியானது நெடுவரிசையின் எழுத்தும் கிடை வரிசையின் எண்ணும் சேர்ந்து அவ்விரண்டும்  குறுக்காக வெட்டும் புள்ளியின் பெயராகும்  உதாரணமாக a12  என்றால் a நெடுவரிசையில் 12 ஆவது கிடைவரிசை  குறுக்கு வெட்டிடும் புள்ளி என இதற்கு அர்த்தமாகும்.

                                    படம் 31.1
 இந்த படம் 31.1 ஆனது  ஒரு சாதாரண் ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கின் முகப்பு தோற்றமாகும்
 இதன் மேல்பகுதியின் தலைப்பில் இருப்பது தலைப்பு பட்டையாகும்(Title bar) அதாவது இதுதான் இந்த விரிதாளின் பெயராகும். புதியதாக ஒரு ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கினை உருவாக்கி திரையில் தோன்ற செய்யும்போது untitled  X என இது இருக்கும் இதிலுள்ள Xக்கு பதில் நாம்விரும்பும் பெயரை உள்ளீடு செய்து சேமித்து கொள்ளலாம்
 இரண்டாவதாக இருப்பது file, Edit, view ,insert, format, tools, data ,window, help ஆகிய கட்டளை கள் அடங்கிய மற்ற ஓப்பன் ஆஃபிஸின் பயன்பாட்டை போன்றுள்ள கட்டளை பட்டையாகும் (Menu bar).இதில் ஏதாவதொன்றை தெரிவுசெய்தால் தொடர்புடையு கட்டளைகளின் பட்டி திரையில் பிரதிபலிக்கும்
 இதற்கடுத்ததாக  இருப்பது செந்தர கருவிபட்டை (Standard toolbar)வடிவமைப்பு கருவி பட்டை(formatting Tool bar) வாய்ப்பாடு கருவிபட்டை(Formula tool bar) ஆகிய மூன்று கருவி பட்டைகள்(tool bars) உள்ளன.
 முதலிரண்டும் மற்ற ஓப்பன் ஆஃபிஸின் பயன்பாட்டை போன்றுள்ள கருவிபட்டைகள்(tool bars) ஆகும் .இதில் மூன்றாவதாக உள்ள வாய்ப்பாடு கருவிபட்டை யானது ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில் மட்டும் தரவுகளை கணக்கிட உதவும் வாய்ப்பாடுகளை உள்ளீடு செய்வதற்கு பயன்படுகின்றது இந்த கருவிபட்டைகளில் பல்வேறு கட்டளைகளின் குறும்படங்கள்(Icons) பயனாளர்கள் எளிதில் அடையாளம் கண்டு பயன்படுத்து வதற்கேதுவாக உள்ளன

                                படம்-31.2

  இந்த வாய்ப்பாடு கருவிபட்டையின் ((Formula Tools bar)(படம்-31.2)) இடதுபுறம் இருப்பது தற்போது  இடம் சுட்டி இருக்கும் கலனின் பெயரை சுட்டிகாட்டுகின்ற பெயர் பெட்டியாகும் (name box). வலதுபுற மையத்தில் இருப்பது செயலியை உருவாக்கிட உதவும் செயலிவழிகாட்டி (Function wizard),தரவுகளின் மொத்தத்தை காணஉதவும் கூடுதல்(sum), எந்தவொரு கலனிற்கும் தேவையான வாய்ப்பாடை உள்ளீடு செய்ய உதவிடும் சமக்குறி பொத்தான் (equal button ) ஆகிய மூன்று உள்ளன.
  வலதுபுறத்தில் இருப்பது நாம் உள்ளீடு செய்யும் தரவுகளை ,வாய்ப்பாடுகளை திரையில் காண்பிக்கும் உள்ளீட்டு வரி(input line) ஆகும்.
 எதேனும் தரவுகளை ஒருகலனிற்குள் உள்ளீடு செய்ய ஆரம்பித்தவுடன்   கூடுதல்(sum) சமக்குறி பொத்தான்(equal button ) ஆகிய இரண்டும்   தேவையில்லை எனில் நீக்குதல்(Cancel)செய்யவும்  சரியாக இருக்கின்றது எனில் ஏற்பு (accept) செய்யவும் உதவகூடிய இரு குறும்பட(Icon)பொத்தான்களாக உருமாறிவிடும்
  இந்த ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கின் மையத்தில் இருப்பதுதான் நாம்பணிபுரியவிருக்கும்  67 மில்லியன்  கலன்களை கொண்ட விரிதாளாகும் 
 ஒரு விரிதாளிலிருந்து மற்றொன்றிற்கு சென்றிட  கீழ்பகுதியிலுள்ள தாளின் தாவி (sheet tab)உதவுகின்றது
 இதற்கும் கீழே நாம் பணிபுரியும் ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கின்  தற்போதைய நிலையை காண உதவிடும் நிலைபட்டை(Status bar) இருக்கின்றது

                                   படம்-31.3

  ஒரு நிலை பட்டையின் இடதுபுறத்தில் (படம்-31.3)தாளின் எண்,அந்த பக்கத்தின் பாவணை,உள்ளீட்டு நிலை தெரிவுசெய்யும் நிலை,சேமிக்கபடாத மாறுதல்கள் ஆகியவை அடங்கியுள்ளன

                                    படம்-31.4

  ஒரு நிலை பட்டையின் வலதுபுறத்தில்(படம்-31.4) இலக்கமுறை கையொப்பம்  தெரிவு செய்யபட்ட கலன்களின் கூடுதல் காட்சியின்அளவை கட்டுபடுத்த உதவும் நகரும் பட்டை காட்சியின் அளவு ஆகியவை அடங்கியுள்ளன
விரிதாளினை(Spread sheet) ஆரம்பித்தல்
 ஓப்பன் ஆஃபிஸின் ஆரம்ப மையத்திலுள்ள இதற்கான குறும்படத்தை(Icon) தெரிவு செய்து சொடுக்குதல், கட்டளைபட்டையிலுள்ள File => New=> Spread sheet=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துதல் விசை பலகையிலுள்ள Ctrl + N என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துதல் கருவிபட்டையில் உள்ள இதற்கான குறும்படத்தை(Icon) தெரிவுசெய்து சொடுக்குதல் ஆகியவற்றில் ஏதேனுமொரு வழியில்  புதிய காலியானதொரு விரிதாளினை(Spread sheet)  திரையில் பிரதிபலிக்க செய்யமுடியும்.
நடப்பிலுள்ள விரிதாளினை திறத்தல்
ஓப்பன் ஆஃபிஸின் ஆரம்ப மையத்திலுள்ள இதற்கான திற (open)எனும் குறும்படத்தை(Icon) தெரிவுசெய்து சொடுக்குதல், கட்டளைபட்டையிலுள்ள File => open => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துதல் விசை பலகையிலுள்ள Ctrl + o என்றவாறு  விசைகளை சேர்த்து அழுத்துதல் கருவிபட்டையில் உள்ள  திற (open)எனும் இதற்கான குறும் படத்தை(Icon) தெரிவுசெய்து சொடுக்குதல் ஆகியவற்றில் ஏதேனுமொரு வழியில் ஒரு விரிதாளினை(Spread sheet)  திரையில்  பிரதிபலிக்க செய்யமுடியும்.
  உரைகோப்பாக இருக்கும் தரவுகளின் கோப்பினை ஒப்பன் ஆஃபிஸின் விரிதாளில் திறக்கமுடியும்  அவ்வாறான உரைகோப்பினை கட்டளைபட்டையிலுள்ள File => open => என்றவாறு கட்டளைகளை செற்படுத்துவதன் வாயிலாக  திறக்கும்போது படம் 31.5 இல் உள்ளவாறு உரையாடல் பெட்டியொன்று தோன்றும் அதில் நெடுவரிசைகளை மிகசரியாக அமைத்து ok என்ற பொத்தானை சொடுக்குக.உடன் உரைகோப்பானது விரிதாளின் கட்டமைப்புடன் திறந்துவிடும் பின்னர் வழக்கமான விரிதாளில் பணிபுரிவதைபோன்று பணிபுரியமுடியும்.

      படம்-31.5
பணிபுரிந்த விரிதாளினை  சேமித்தல்

 கட்டளை பட்டையிலுள்ள File => save => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துதல் விசைபலகையிலுள்ள Ctrl + s என்றவாறு  விசைகளை சேர்த்து அழுத்துதல்,      கருவிபட்டையில் உள்ள சேமிக்க (save)எனும் இதற்கான குறும் படத்தை(Icon) தெரிவு செய்து சொடுக்குதல் ஆகியவற்றில் ஏதேனுமொரு வழியில் நாம் பணிபுரிந்த ஒரு விரிதாளினை(Spread sheet) சேமிக்க முடியும்.

  குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே கால்க்கின் ஒவ்வொரு விரிதாள் கோப்பினையும் சேமித்து கொள்ளும்படி அமைக்கமுடியும் அதற்காக மேலே கட்டளை பட்டையிலிருந்து Tools => Options => Load/Save => General => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும்  உரையாடல் பெட்டியில் Save Auto Recovery information every. என்ற தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்து இதில் இயல்புநிலையில் 15minutes  என்பதை ஏற்று ok என்ற பட்டனை சொடுக்குக
எம்எஸ் ஆஃபிஸின் எக்செல் கோப்பாக சேமித்தல்
 ஒரு சிலர் எம்எஸ் ஆஃபிஸில் ஓப்பன் ஆஃபிஸின் கட்டமைப்பிலுள்ள கோப்புகளை கையாளுவதற்கு தயங்குவார்கள்.அவ்வாறானவர்கள் இயல்புநிலையில் ஓப்பன் ஆஃபிஸ் கால்க் கோப்புகளை எம்எஸ் ஆஃபிஸின் எக்செல் கோப்பாக சேமிக்குமாறு அமைத்திடலாம் அதற்காக Tools=> Options => Load/Save => Microsoft office=> என்றவாறு  கட்டளைகளை  செயற்படுத்துக  உடன் விரியும்  உரையாடல் பெட்டியில்  Excel to open office.org calc /Open office calc to excel என்றதேர்வுசெய் பெட்டியை (படம்-31.6 ) தெரிவுசெய்து okஎன்ற பட்டனை சொடுக்குக

                                                         படம்-31.6

  நாம்விரும்பும் கலனிற்கு இடம்சுட்டியை கொண்டு செல்லுதல்
குறிப்பிட்ட கலனிற்கு இடம்சுட்டியை கொண்டு செல்வதற்காகஇடம்சுட்டியை அக்குறிப்பிட்ட கலனில் வைத்து சொடுக்குதல்  பெயர்பெட்டியில்(name box) குறிப்பிட்ட கலனின் பெயரை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துதல்.  F5 என்ற செயலிவிசையை அழுத்தியவுடன் தோன்றும் navigateஎன்ற பெட்டியில் கலனின் பெயரை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துதல்.ஆகியவற்றில் ஏதேனுமொரு வழியில் நாம்விரும்பும் கலனிற்கு செல்லமுடியும்  அம்புக்குறியை பயன்படுத்தியும் நாம் விரும்பும் கலனிற்கு செல்லமுடியும்
நாம் விரும்பும் விரிதாளிற்குஇடம்சுட்டியை கொண்டு செல்லுதல்
 குறிப்பிட்ட விரிதாளிற்கு இடம்சுட்டியை கொண்டு செல்வதற்கு Control+Page Down Control+Page upஆகிய விசைகளை சேர்த்து அழுத்துதல் இடம்சுட்டியை குறிப்பிட்ட தாளின் தாவியில் வைத்து சொடுக்குதல் அல்லது தேவையான தாவிபொத்தானை  சொடுக்குதல் (படம்-31.7) ஆகியவற்றின் வாயிலாக நாம்விரும்பும் விரிதாளிற்கு செல்லமுடியும்.

                                       படம்-31.7

கலன்களை தேர்வு செய்தல்
தேவையான கலனில் இடம் சுட்டியை வைத்து சுட்டியின் இடதுபுற பொத்தானை அழுத்தி பிடித்து கொண்டு இதனுடன்தெரிவுசெய்ய விரும்பும் கலன்கள் தொடர்ச்சியானவை எனில் Shift விசையை அழுத்தி பிடித்து கொண்டு அம்புக்குறி விசையை அழுத்தி தெரிவுசெய்க
  தெரிவுசெய்ய விரும்பும் கலன்கள் தொடர்ச்சியற்றவை எனில் Ctrl  விசையை அழுத்தி பிடித்து கொண்டு தெரிவுசெய்ய விரும்பும் கலன் ஒவ்வொன்றாக இடம் சுட்டியை வைத்து தெரிவு செய்து  இறுதியாக   அழுத்தி பிடித்து வைத்திருந்த விசையை விட்டிடுக.
  இவ்வாறே நெடுவரிசையை அல்லது கிடைவரிசையும் அதன்தன் தலைப்பை பிடித்து தெரிவுசெய்வதன் வாயிலாக தெரிவுசெய்துகொள்ளமுடியும்.
  Ctrl + A  ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துதல் அல்லது விரிதாளின் ஆரம்ப முனை பகுதியை (படம்-31.8)தெரிவுசெய்து சொடுக்குதல் வாயிலாக விரிதாள் முழுவதும் தெரிவுசெய்யமுடியும்

                                                                     படம்-31.8

இவ்வாறே ஒன்றுக்கு மேற்பட்ட விரிதாள்களை sheet tab ஐ தெரிவுசெய்வதன்வாயிலாக தெரிவுசெய்துகொள்ளமுடியும்.
 தரவுகளை நகலெடுத்து ஒட்டுதல்
 இவ்வாறு தெரிவுசெய்தபின்னர்  Ctrl + C ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தியவுடன் தெரிவுசெய்யபட்ட கலன்களில் உள்ள தரவுகள் நகலெடுக்கபட்டுவிடும்.
 பின்னர் தேவையான இடத்தில் இடம்சுட்டியை வைத்து Ctrl + v ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தியவுடன் நகலெடுக்கபட்ட தரவுகள் புதிய இடத்திற்கு வந்து சேர்ந்துவிடும்.
கலன்களை(Cells) நெடுவரிசையை(Column) கிடை வரிசையை(Row) விரிதாளை(Sheet) சேர்த்தல்
 நாம் பணிபுரியும் இடத்தில் புதிய கலன்களை(Cells) நெடுவரிசையை(Column) கிடை வரிசையை(Row) விரிதாளை(Sheet) சேர்த்திட விரும்புவோம் அந்நிலையில்மேலே கட்டளை பட்டையிலுள்ள Insert என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக. உடன்விரியும் insert என்ற பட்டியில்Cells, Row, Column ,Sheet ஆகியகட்டளைகளில் தேவையான கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக. அல்லது தேவையான இடத்தில் இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக. உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்Insert என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் தோன்றும் (படம்-31-9) insert என்ற பெட்டியில் selection என்பதன் கீழுள்ள தேவையான தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து ok என்றபொத்தானை சொடுக்குக.

                              படம்-31-9

கலன்களை(Cells) நெடுவரிசையை(Column) கிடை வரிசையை(Row) விரிதாளை(Sheet) நீக்குதல்
 நாம் பணிபுரியும் கலன்களை(Cells) நெடுவரிசையை(Column) கிடை வரிசையை(Row)  நீக்கம் செய்திட விரும்புவோம் அந்நிலையில் மேலே கட்டளைபட்டையிலுள்ள Edit என்ற கட்டளையை செயற்படுத்துக உடன் விரியும் Edit  என்ற கட்டளை பட்டியில் Delete cells என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.அல்லது  தேவையான இடத்தில் இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக. உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்Delete என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.
 உடன் தோன்றும் Delete என்ற பெட்டியில் (படம்-31-10 )selection என்பதன் கீழுள்ள தேவையான தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்து ok என்றபொத்தானை சொடுக்குக.
                              படம்-31-10
விரிதாளை(Sheet) நீக்குதல்  மறுபெயரிடுதல் (Rename) சேர்த்தல் (insert)
  தேவையான விரிதாளின் sheet tab –ல்  இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக. உடன்விரியும் சூழ்நிலைபட்டியில்நீக்குதல்  செய்வதற்கு Delete sheet என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த நீக்குதல் செயலை உறுதிசெய்வதற்கான சிறுபெட்டியொன்று தோன்றும் ஏற்பதாயின் yes என்ற பொத்தானை சொடு்ககுக
  மறுபயரிடுவதற்கு rename sheet என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. sheet tab –ல் இடம்சுட்டி சென்று நிற்கும் தேவையான புதியபெயரை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக.
 விரிதாளினை சேர்த்திட(Insert) insert sheet  என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் insert sheet என்ற உரையாடல் பெட்டியொன்று (படம்-31.11) தோன்றும் அதில் position என்பதன் கீழுள்ள தேவையான தேர்வு செய்பெட்டியை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

                                              படம்-31.11