யாகூ மின்னஞ்சலை வடிகட்டி பிரித்திடலாம்

நம்மில் பெரும்பாலானோர் யாகூமெயில் எனும் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தி வருவகின்றோம் இந்த மின்னஞ்சலின் உள்வருகை பெட்டியை திறந்தால் கணக்கற்ற மின்னஞ்சல்கள் சேர்ந்திருந்துகுவிந்து இருப்பதை காணலாம் அவைகளுள் மிகமுக்கியமான மின்னஞ்சலை தேடிபிடிப்பது என்பது வைக்கோற்போரில் தொலைந்த ஊசியை தேடுவதற்கு ஒப்பான செயலாகிவிடுகின்றது இவ்வாறான இக்கட்டான நிலையை தவிர்த்திட இவைகளுக்கு என தனித்தனியான கோப்பகங்களை உருவாக்கி வடிகட்டிவாயிலாக பிரித்து அமைத்துவிட்டால் நாம் விரும்பும் கோப்பினை எளிதாக தேடிபிடித்தலாம் அதற்காக இந்த மின்னஞ்சலின்  உள்வருகை பெட்டியின் திரையில் இடதுபுறம் சிறிய உருவபொத்தானாக இருக்கும் கோப்பகத்தை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சிறு உரைப்பெட்டியில் இந்த கோப்பக்ததிற்கான பெயரை உள்ளீடு செய்து  வெளியேறுக

9.1

அதன்பின்னர்  சுலபமான வழிமுறையாக தேவையான மின்னஞ்சலை தெரிவுசெய்துகொள்க பின்னர் மின்னஞ்சல் உள்வருகை பெட்டியின் மேலேமுதலில் More link என்பதையும் பின்னர் விரியும் பட்டியில் Filter Emails என்பதையும்  தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Add Filter எனும் சாளரம் தோன்றிடும்  அதில்  ஏராளமான சிறுசிறு பெட்டிகள்  விரிந்திருக்கும்  அவைகளில் தேவையற்றவைகளை நீக்கம் செய்துகொண்டு தேவையானதற்குமட்டும் நாம் விரும்பும் பெயரை உள்ளீடு செய்துகொள்க பின்னர் அதில் From box எனும் பெட்டியில் உள்வருகை மின்னஞ்சல் முகவரியையும் subject என்பதி்ல் News update என்றவாறு தொடர்புடைய பெயரையும்   உள்ளீடு செய்து கொண்டு Save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சேமித்துகொள்க இதே திரையின் மேலே இடதுபுற மூலையில் உள்ள பற்சக்கரம் போன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் விரியும் பட்டியில்   settings என்பதன்வாயிலாக மின்னஞ்சல் வடிகட்டியை உருவாக்கலாம் மாறுதல்கள் செய்யலாம் தேவையற்றவைகளை நீக்கம் செய்திடலாம்

9.2

நாம் மற்றவர்களுக்கு அனுப்பிடும் மின்னஞ்சல்களில் நம்முடைய கையெழுத்துடன் அனுப்பிடலாம்

 இதற்காக  குரோம், ஃபயரஃபாக்ஸ், இன்டெர்நெட் எக்ஸ்ப்ளேரர் ஆகியவற்றுள் நாம் விரும்பும் இணைய உலாவியை   திரையில் தோன்றசெய்திடுக பின்னர் அதனுடைய முகவரி பட்டையில் www.mail.yahoo.comஎன்றவாறு  மின்னஞ்சல் சேவையாளர் முகவரியை உள்ளீடு செய்து மின்னஞ்சல் சேவையாளரின்முகப்பு திரைக்கு செல்க அல்லது முகவரி பட்டையில்wwwyahoo.comஎன்றவாறு  முகவரியை உள்ளீடு செய்து யாகூவின் முகப்பு திரைக்குசென்று அங்குள்ள மின்னஞ்சலிற்கான உருவபொத்தானை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து மின்னஞ்சல் சேவையாளரின்முகப்பு திரைக்கு செல்க  அங்கு பயனாளரின் பெயர் கடவுச்சொற்கள். ஆகியவற்றை தவறில்லாமல் உள்ளீடுசெய்து நம்முடைய உள்வருகை பெட்டித்திரைக்கு செல்க அந்த திரையின் இடதுபுற மூலையில் உள்ள பற்சக்கரம் போன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் விரியும் பட்டியில்   settings என்பதை தெரிவுசெய்து சொடுக்கக பின்னர்விரியும்   settings எனும் பட்டியலில் இடதுபுறம் நம்முடைய மின்னஞ்சல் முகவரி கணக்கினை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் திரையில் Append an email signature to the emails you send என்பதன் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொள்க அதன்பின்னர் கீழ்பகுதியிலுள்ள உரைபெட்டியில்  “என்றும் தங்கள் அன்புள்ள  சகுப்பன்” என்றவாறு தட்டச்சு செய்து இவைகளை தெரிவுசெய்து கொண்டு  இந்த உரைபெட்டியின் மேலேஉள்ள   வாய்ப்புகளில் தேவையானவைகளை தெரிவுசெய்து தோற்றத்தை மாற்றியமைத்து கொள்க  இறுதியாக save எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்சய்து சேமித்துகொள்க  இதன்பின்னர் மின்னஞ்சல் அனுப்புவதற்காக composeஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் புதிய மின்னஞ்சல் உருவாக்கிடும் பகுதியின்முடிவில் நம்முடைய “என்றும் தங்கள் அன்புள்ள  சகுப்பன்” எனும் பகுதியும் சேர்ந்திருப்பதை காணலாம்

ZFileSystem(ZFS)எனும் கோப்பு அமைவை பற்றி அறிந்துகொள்க

இது பொதுமேம்பாட்டுவழங்கும்அனுமதி (Public Developement Distributed Licence)என்பதன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஒருகட்டற்ற கோப்பு அமைவு பயன்பாடாகும்

இது(ZFS) ஒருங்கிணைந்த தரவு அமைப்பை கொண்டது இதில்தரவுகளை Checksumஎன்பதுடன் சேர்த்து உருவாக்கிடும்போது Checksum ஆனது கணக்கிட்டு அதனையும் சேர்த்து எழுதிகொள்கின்றது பின்னர் இந்த தரவை படித்திடும்போது மீண்டும் இந்த Checksum ஆனது கணக்கிட்டு ஒப்பீடு செய்து சரிபார்க்கின்றது சரியாக இல்லையெனில் பிழைஎன காட்டி அதனைதானாகவே சரிசெய்து கொள்கின்றது

இதுகுவியலான தேக்கும்இடவசதிகொண்டது அதாவது கணினியில் அவ்வப்போது தேக்கிடும் சாதனங்களை கூடுதலாக இணைத்திடும்போது அதனையும் சேர்த்து தரவுகளை தேக்கிவைத்திடும் இடவசதியை பகிர்ந்துகொள்கின்றது

இதுவிரிவாக்கமும் திறன்மிக்கதுமாக விளங்குகின்றது இதுஒரு 128பிட் கோப்பமைவை கொண்டதாக இருப்பதால் ஜீட்டா பைட் அதாவது ஒருபில்லியன்டெராபைட்அளவு நினைவக கொள்ளளவை கையாளும் திறன்மிக்கதாகும் இது பல்லடுக்கு redundant array of independent disk(RAID)என்பதை ஆதரிக்கும் தன்மைகொண்டது

பொதுவாக தற்போது நாமானவரும் பயன்படுத்திடும் கோப்பமைவானது ஒரு வட்டில் ஒரு கோப்பமைவை மட்டுமே உருவாக்கி கையாளும் தன்மையுடையதாகும் இரண்டு வட்டுகள் எனில் இரண்டு தனித்தனி கோப்பமைவாக உருவாக்கி கையாளும் தன்மையில் உள்ளன அதற்கு பதிலாக இது ஒன்றுற்கு மேற்பட்டு வட்டுகளில் ஒரேசமயத்தில் தனித்தனி கோப்பமைவாக இல்லாமல் ஒரேமாதிரியான கோப்பமைவை உருவாக்கி கட்டமைத்து கையாளும் திறன்கொண்டது

மிகமுக்கியமாக தற்போதுள்ள கோப்பமைவானது கூடுதலான வட்டினை இணைத்தவுடன் அதனையும் ஒருங்கிணைந்து வளர்ந்து விரிவாக்கம் செய்து ஒரே தேக்கும் அமைவாக இந்த ZFS மேம்படுத்தி கொள்கின்றது மேலும் விவரங்களுக்கு https://www.freebsd.org/doc/handbook/zfs.html என்ற இணைய தளத்திற்கு செல்க

துவக்கநிலையாளர்களுக்கான லினக்ஸ் இயக்கமுறைமை ஒரு அறிமுகம்

நம்மி்ல் பெரும்பாலோர் தனியுடமையான அதிக செலவுமிக்க விண்டோ இயக்கமுறைமையை மட்டுமே பயன்படுத்தி வருகின்றோம் ஆயினும் செலவில்லாத கட்டற்ற லினக்ஸ் இயக்கமுறைமையை பயன்படுத்திட பயந்து தயங்கிமயங்கி வருகின்றோம்   இந்த இயக்கமுறைமையானது முதன்முதல் 1991 இல் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதியின் அடிப்படையில் வெளியிடபட்டுள்ளதொரு கட்டற்ற இயக்க முறைமையாகும் இதனை12000 -இக்கும் அதிகமான வல்லுனர்கள் அல்லும் பகலும்  அயராது அரும்பாடுபட்டு மேம்படுத்தி  வருகின்றனர் இதில் ஒரே சமயத்தில் ஒன்றிற்கு மேற்பட்டோர் உள்நுழைவுசெய்து தங்களுடைய பணிகளை மேற்கொள்ளமுடியும் மேலும்இதில்  ஒரேநேரத்தில் பல்வேறு பயன்பாடுகளை செயல்படுத்திடமுடியும் அதுமட்டுமல்லாது இது வரைகலை பயனாளர் இடைமுகப்பு வசதியை அனுமதிக்கின்றது   சாதனத்தினையும் வன்பொருளையும் கணினியுடன் இணைத்தவுடன் அதனை செயல்படுத்துவதற்கான கட்டளைகள் இதில் முன்கூட்டியே நிறுவுகை செய்யபட்டுள்ளதால் எளிதாக உடனடியாக அவைகளை கணினியின் வாயிலாக கையாளமுடியும் அனைத்து பயன்பாட்டு மென்பொருள்களையும் ஆதரிக்கும் ஒருங்கினைந்து செயல்படும் திறன்மிக்கது நாம் விரும்பியவாறு மாற்றியமைத்து கணினியையும் இணைத்து சாதனங்களையும் சுதந்திரமாக பயன்படுத்தி கொள்ளலாம்  பல்வேறு வகையான பயன்பாட்டு மென்பொருட்களையும் நிறுவுகை செய்து அல்லது நாம்விரும்பியவாறு குறிமுறைவரிகளை மாற்றியமைத்து நாம் விரும்பியவாறு கணினியை பயன்படுத்திகொள்ளலாம் . இதனை வழக்கமான  விண்டோ இயக்கமுறையுடன் கூடுதலானமற்றொரு இயக்கமுறைமையாக கூடபயன்படுத்தி திருப்தியுற்றபின்னர் தனியான இயக்கமுறைமையாக நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளலாம் இந்த லினக்ஸ் இயக்கமுறைமைபல்வேறு பெயர்களுடன் பல்வேறு நிறுவனங்கள் நபர்கள் வெளியீடு செய்துகொண்டும் அவ்வப்போது அதனை மேம்படுத்தி மேம்பட்ட பதிப்பாகவும் வெளியிட்டுகொண்டே யுள்ளனர் அவற்றுள் நமக்கு பொருத்தமானதை தெரிவுசெய்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்க

 

தற்போதைய நம்முடைய மேஜைக்கணினிக்கு(PC) மாற்றான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேடு ஒரு அறிமுகம்

6

தற்போதைய நம்முடைய மேஜைக்கணினிக்கு(PC) மாற்றான ஐபேடை ஆப்பிள் நிறுவனம் 600 டாலர் முதல் 900 டாலர் விலையில்  சந்தையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தற்போது வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் ப்ரோ என்பதற்கு கிடைத்த வரவேற்பை கண்டு அவ்வாறான வசதி வாய்ப்புகளை கொண்ட டேப்ளெட்டிற்கும் மேஜைக்கணினிக்கும் மாற்றான இந்த ஐபேடை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது இதில் ஒரே சமயத்தில் பல்வேறு ஸ்நாப் பயன்பாடுகளை செயல்படுத்திடமுடியும்  இதில் தரவுகளை உள்ளீடு செய்வதற்காக தேவையெனநாம் விரும்பினால் சிறிய விசைப் பலகையையும் ஆப்பிள்பென்சிலையும் வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம் . இதில் சிபியூவின் செயல்வேகமும் வரைகலை திறனும் வழக்கமான கணினியைபோன்று இருமடங்காகஉள்ளது  இதன் முன்பக்கத்தில் 12 எம்பி அளவுள்ள படப்பிடிப்பு கேமரா வசதி கொண்டது  இதுஐஓஎஸ்9 எனும் இயக்கமுறையுடன் அனைத்து செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளும் இயக்கும் வசதிகொண்டது இது பயன்படுத்த எளிதானது டேப்ளெட்டைவிட மேம்பட்ட வசதிகொண்டது இது மேஜைக்கணினிக்கு சமமான பணியை செய்திடும் திறன் மிக்கது

 கட்டற்ற தரவுதளநிருவாக  கருவிகள்

கடந்த சிலவருடங்களாக அதிலும் 2014, 2015 ஆண்டுகளில் தரவுகளை நிருவகிக்கும் தொழில்களில் கட்டற்றமென்பொருள் தரவுதளங்களின் வளர்ச்சியினால் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டு முன்னேற்ற பாதையில் வெற்றிநடை போடுகின்றன அவ்வாறான வெற்றிகளை உருவாக்குவதற்கு அடிப்படையாக விளங்கும் கட்டற்ற தரவுதளநிருவாக அமைவு  கருவிகளில்(opensource database management System(DBMS) Tools) பின்வருபவை மிகப் பிரபலமானவையாகும்

1MongoDB இதுஒரு கட்டற்ற தரவுதளநிருவாக கருவியாகும் இதனை சி++ மொழியில் உருவாக்கபட்டு 2009 ஆம் ஆண்டடிலிருந்து கட்டற்றதாக மாற்றபட்டு பயன்பாட்டில் இருந்துவருகின்றது  இதில் ஆவணங்களின் வடிவமைப்புகளிலேயே பதிவேடுகள் தேக்கிவைக்கபடுகின்றது. அனைத்து புலங்களும் முழுமையாக வரிசைபடுத்தி அடுக்கிடும் செயலை இது ஆதரிக்கின்றது  அனைத்து வலைபின்னல் இணைப்புகளிலும் படியாக்கம் செய்திடும் திறன்மிக்கது. தானியங்கி படியாக்கும் தன்மையினால் தனியிங்கி விரிவாக்க வசதிகொண்டது  இவைபோன்ற எண்ணற்ற வசதிவாய்ப்புகளையும் இது கொண்டுள்ளது

2.MYSQL  இதுஒரு கட்டற்ற தரவுதளநிருவாக கருவியாகும் இது   MYSQL சமுதாய பதிப்பு MYSQL நிறுவன பதிப்பு ஆகிய இரண்டுவகையில் கிடைக்கின்றது .இது ஒரு தொடர்பு தரவுதள அமைவாகும்  இது நெகிழ்வுதன்மையுடனும்  விரிவாக்க வசதியும்மிகமேம்பட்ட திறனும்கொண்டது எந்தவொரு எதிர்பாராத சூழலிலும் செயல்படும் திறன்மிக்கது

3.PostgreSQLஇது ஒரு பொருள்நோக்கு அடிப்படையில் செயல்படும் RDBMSஆகும்  இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் தன்மைகொண்டதாகும் இது SQLதரவு வகையை ஆதரிக்கின்றது  தொடர்ச்சியாக படியாக்கம் செய்திடும்திறன்கொண்டது  இது தயார்நிலையிலுள்ள தரவுகளின் சேவையாளராக செயல்படுகின்றது

4.Cassandraஇந்த கட்டற்ற கருவியானது வழக்கமாக தரவுகளை நெடுவரிசை கிடைவரிசைகளுடன் கூடிய அட்டவணை போன்று மட்டுமே பராமரிக்கமுடியும்என்ற பழைய பழக்கவழக்கங்களை விட்டொழித்து எவ்வாறு வேண்டுமானாலும்நாம் விரும்பியவாறு தரவுகளை இதில் பராமரிக்கமுடியும் என்ற புதிய பரட்சிகர பாதையை கொண்டுவந்துள்ளது இதில் தரவுகள் மையபடுத்தாமல் பரவலாக பிரித்து பராமரிக்கபடுவதால் ஏதேனுமொருமுனை பழுதடைந்தாலும் மிகுதி முனைகளிலிருந்து தரவுகளை தேவையானவாறு கையாளமுடியும் . இதுபல்லடுக்கு தரவுமைய படியாக்க தன்மைகொண்டது  இதுCQLஎனும்  SQL போன்ற அதற்கு மாற்றான வினாமொழியை தன்னகத்தே கொண்டது

5.MariaDB இது MYSQL எனும் தரவுதளநிருவாக கருவிக்குமாற்றாக அதைவிட மேம்பட்ட வசதிவாய்ப்புகளையும் அதனை ஆதரிக்கும் தன்மையுடனும் அதைவிட மிகவேகமாக செயல்படும் திறனும்மிக்கது இது GPLஎனும் பொதுஅனுமதியின் அடிப்படையில் வெளியிடபட்டுள்ளது இதுபயன்படுத்த எளிதானது

நம்முடைய ஆபத்திற்கு உதவும்  நண்பர்களான வெற்றுத்தன்மையுள்ள உலோக அமைவு பிற்காப்பு  மீ்ட்டெடுத்தல்(bare metal systembackup and restore) எனும் கட்டற்ற கருவிகள்

தனிநபர்களின்நிறுவனங்களின் பல்வேறுமுரண்பாடுகளுள்ள தரவுகளின் கோப்புகளை  பிற்காப்பு செய்தல் மீ்ட்டெடுத்தல் என்பதே மிகமுக்கிய செயலாகும்  அதாவது கணினியில் நம்முடைய அன்றாட பணியின்போது  ஏராளமான வழிகளில் பல்வேறு வகைகளான கோப்புகளை உருவாக்குதல் ஏற்கனவே இருக்கும் கோப்பகளை நிகழ்நிலை படுத்தல் ஆகிய செயல்களை செய்து கொண்டே இருக்கின்றநிலையில் திடீரென கணினியின் இயக்கம் செயல்படாது நின்றுபோதல் அல்லது ஏதேனும் பல்லூடகம் முடங்கிபோதல் ஆகிய காரணங்களினால் நாம் இதுவரை அரும்பாடுபட்டு உருவாக்கிய மேம்படுத்திய கோப்பகளின் அனைத்து தரவுகளையும் இழக்கநேரிடும் இவ்வாறான கையறுநிலையில் இவைகளை எவ்வாறு பழைய நிலைக்கு கொண்டுவருவது என்பதுதான் நம் அனைவரின் முன் எழும் மிகமுக்கிய இமாலாய பிரச்சினையாகும் மேலும் இதனால் நம்முடைய மற்ற அனைத்து இயக்கங்களும் நின்றுவிடும்  என்ற மிகஇக்கட்டான நிலையில் நாம் இவ்வாறான சிக்கலான பிரச்சினையிலிருந்து  எவ்வாறு மீண்டுவருவது என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாகும். தற்போது நடைமுறையில்  கணினியிலுள்ள தரவுகளின் கோப்புகளை  பிற்காப்பு செய்தல் மீ்ட்டெடுத்தல் ஆகிய பணிகளுக்காகமட்டுமே   ஏராளமான அளவில் பயன்பாடுகள்உள்ளன ஆனால் அவையனைத்தும் நம்முடைய கணினியின் இயக்கமுறைமையின் மீது அமர்ந்து செயல்படுபவையாகும் கணினியின் இயக்கமுறைமையே செயலற்ற நிலையில்   கணினியிலுள்ள தரவுகளின் கோப்புகளை  எவ்வாறு  மீ்ட்டெடுத்தல் என்பதுதான் நம்முன் உள்ள மிகப்பெரிய கேள்வியாகும்  அஞ்சற்க இவ்வாறான இக்கட்டான சிக்கலான நிலையிலும் நம்முடைய கணினியின் இயக்கமுறைமையை செயல்படுத்தாமலேயே நம்முடைய கணினியில்   தரவுகளின் கோப்புகளை  பிற்காப்பு செய்தல் மீ்ட்டெடுத்தல் ஆகிய பணிகளை எளிதாக செயல்படுத்தி நம்முடைய ஆபத்திற்கு உதவும் உற்ற நண்பனாக வெற்றுத்தன்மையுள்ள உலோகஅமைவு பிற்காப்பு  மீ்ட்டெடுத்தல்(bare metal systembackup and restore) பணிகளுக்கான கட்டற்ற கருவிகள் பல கைகொடுக்கின்றன இவைநம்முடைய கணினியின் இயக்கமுறைமையை செயல்படுத்தாமலேயே பயாஸ் நிலையிலேயே செயல்படும் திறன்மிக்கவையாகும்  இவைகளை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்துதான் இயக்கவேண்டும் என்ற நிர்பந்தம் எதுவும் இல்லாதவை இவைகள் செயல்படுவதற்கு மிககுறைந்த நினைவகம் அதாவது 250எம்பி அளவே போதுமானவையாகும் இவை நம்முடைய குறுவட்டு நெகிழ்வட்டு அல்லது யூஎஸ்பி சாதனங்களிலிருந்து  கணினியை இயக்காமலேயே ஒருசில நொடிகளில் பயாஸ்நிலையில் செயல்பட்டு நம்முடைய மிகமுக்கிய அத்தியாவசிய தரவுகளை மீட்டெடுத்திடும் திறன் மிக்கவையாகும் அனத்து இயக்கமுறைமகளிலும்  திறன்உள்ளவையாகும் அனைத்துவகையான வளாக பிணையம் இணையம் ஆகிய இணைப்புகளிலும் செயல்டும் தன்மை கொண்டவையாகும் .நாமே நம்மைஅறியாமல் நீக்கம் செய்த கோப்புகளையும் அல்லது மூன்றாவது நபர் வேண்டுமென்றே நம்முடைய தரவுகளை நீக்கம் செய்த கோப்பகளையும் மீட்டாக்கம் செய்துவிடுபவையாகும் இவை கட்டற்ற கட்டணமற்றவையாகும் மெய்நிகர் கணினியாக நாம் செயல்படுத்தி உருவாக்கிய கோப்பகளையும் இவைகளின் உதவியால் மீட்டெடுத்திடமுடியும்

Redo Backupand Recoveryஎனும் கட்டற்ற கருவியைhttp://redobackup.org/  எனும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

 FOGprojectஎனும் கட்டற்ற கருவியைhttp://forgproject.org/  எனும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

 Rear(Relax-and-Recovery  எனும் கட்டற்ற கருவியை http://relax-and-recovery.org/எனும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

Previous Older Entries