திறமூல மேககணிகளின் வளங்கள்(மூன்று)

1ஓப்பன்ஸ்டேக்(opestack)

90.5.1

90.5.1

இது தனியாள், பொது மேக்கணியை நிருவகிக்க்கூடிய ஆற்றல்உடைய ஒரு திறமூல மென்பொருளாகும்  உலகளாவிய சுசிலினக்ஸ்,ஐபிஎம் ,ஹெச்பி போன்ற நிறுவனங்கள் ஒருங்கிணைந்து இந்த செயல்திட்டத்தை நடைமுறைபடுத்துகின்றன  இதில்  இணையத்தின் மூலம் தேவையான வளங்களையும் பயன்பாடுகளையும் வழங்குகின்றது.  இது பயனாளர்களின் தற்போதைய தகவல்களை கையாளும் Presentation Layer,  சிக்கலான செயல்கள் கணக்கீடுகளை கையாளும் Logical Layer, இணைய வளங்களை கையாளும் Resources Layer  என்றவாறு மூன்றுவகை பணிகளை செய்கின்றது

ஹடூப் (Hadoop) இது ஜாவாவை அடிப்படையாக கொண்ட பேரளவு தரவுகளை கையாளும்  திறன்கொண்டு மேக்கணினி மென்பொருள் ஆகும் இது  ட்விட்டர் ,ஃபேஸ்புக் என்பன போன்ற சமூக வலைதளங்களும் கூகுள் ,பிங்க்,யாகூ என்பன போன்ற தேடுபொறி நிறுவனங்களும்  தங்களின் பேரளவு தரவுகளை கையாளும் தேவைக்கு இந்த மென்பொருளை பயன்படுத்தி கொள்கின்றன

90.5.2

90.5.2

ஜினாஸ்(Zenoss) இது ஒரு திறமூல மேக்கணினி பயன்பாடாகும். இது பயன்பாடுகளையும், சேவையாளர்களையும் வலைபின்னல்களையும நிருவகிக்கும் திறன் கொண்டதாகும் இது பொது அனுமதிபெற்ற மென்பொருளாகும்  தட்பவெப்ப நிலையை போன்ற அத்தியாவசியமான தரவுகளை கையாளும் திறன்கொண்டதாகும்

90.5.3

90.5.3

இதுபோன்று ஏராளமான அளவில் திறமூல மேககணினி மென்பொருட்கள் தற்போதைய தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு இணையத்தில் கிடைக்கின்றன அவைகளுள் நம்முடைய தேவைக்கேற்றதை தேடிபிடித்து பயன்படுத்தி கொள்க

LVM என அழைக்கபடும் Logical Volume Management என்றகருதுகோள்

பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு 2 ஜிபி கொள்ளளவு கொண்ட தேக்கிவைக்கும் சாதனமான வன்தட்டு எனில் அதையே மிகப்பெரிய  கொள்ளளவாக எண்ணினோம் அதற்குமேல் சேமிப்பதற்கு அல்லது  கூடுதலான பயன்பாடுகளை நிறுவுவதற்கு  காலிஇடம் தேவையெனில் வெளிப்புறத்தில் மற்றொரு 2 ஜிபி கொள்ளளவு கொண்ட  வன்தட்டை இணைத்து பயன்படுத்த வேண்டிய நிலையாகும்   ஆனால் இந்த இரு வன்தட்டுகளையம் ஒன்றாக இணைத்து பயன்படுத்திட மிகச்சிரமமாக இருந்தது. இதற்கு தீர்வாக இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட வன்தட்டுகளின் நினைவகத்தை  நிருவகிக்க உதவுவதுதான் LVM என அழைக்கபடும் Logical Volume Management  என்றகருதுகோள்ஆகும்

90.4.1

90.4.1

இது நம்முடைய  கணினியில் நிறுவபட்டுள்ள இயக்கமுறைமைக்கும் வன்தட்டுகளுக்கும் இடையே அமர்ந்துகொண்டு காலி நினைவகத்தை நிருவகிக்கின்றது இது நம்முடைய வன்தட்டுகளை ஒருங்கிணைத்து volume Groups(VGs) எனும் குழுவாக உருவாக்கி கொள்கின்றது அதிலிருந்து நாம் இதன் உதவியால்   Logical Volume உருவாக்கிட முடியும்  இந்நிலையில் இயக்க முறைமையானது இவைகளுக்கிடையேயுள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளாது  அதனால் வழக்கமாக செய்வதைபோன்று இதனை கருதிகொண்டு இயக்கநேரத்தில் கோப்புகளை இதன்மூலம் எழுதவும் சேர்க்கவும் செய்கின்றது .

90.4.2

90.4.2

இங்கு உபுண்டு 12.10 இயக்கமுறைமையை நிறுவுகை செய்வதன் மூலம் இந்த LVM ஐ எவ்வாறு அமைப்பது என காண்போம்  உபுண்டுவின் இயல்புநிலை நிறுவுகையானது இதனை ஆதரிக்காது ஆயினும் உபுண்டு மாற்றுவழி நிறுவுகையானது  இதனை ஆதரிப்பதால் அதன்வாயிலாக நிறுவுகை செய்வது நல்லது இந்த மாற்றுவழி நிறுவுகையின் வழிமுறையில் தோன்றிடும் முதல் திரையில் Erase disk and install Ubuntu என்ற வாய்ப்பை தெரிவுசெய்து கொண்டு Use LVM with the new Ubuntu Installation என்ற தேர்வுசெய் பெட்டியை  தெரிவுசெய்துகொண்டு  continue என்ற பொத்தானை தெரிவசெய்து சொடுக்குக . உடன்  இந்த LVM இற்கு தேவையானவாறு முதன்மை வன்தட்டு நினைவகத்தையும் பயாஸ் திரையானது இதனை படித்தறியுமாறும் முதலில் இந்த LVM  ஐ அமைவு செய்துகொண்டு அதன்பின் மற்ற வழக்கமானஉபுண்டுவின் நிறுவுகை பணியை செய்கின்றது .

புதியதாக இயக்கமுறைமையை நிறுவுகை செய்வதற்கு பதிலாக தற்போது நடப்பு பயன்பாட்டில் உள்ள  இயக்கமுறைமையில் எவ்வாறு இந்த LVM  அமைப்பது என இப்போது காண்போம்  இதற்கு இந்த LVMஐ கட்டமைவு செய்திடும் வழிமுறையை பின்பற்றிட வேண்டும்

sudo apt-get update

sudo apt-get install system-config-lvm

என்ற கட்டளைவரிமூலம் இந்த LVMஐ நிறுவுகை செய்து செயற்படுத்துக பின்னர் தோன்றிடும் திரையில் Uninitialised Entitiesஎன்றபகுதியாக தோன்றிடும்  Intialise Entity   என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நமக்கு எச்சரிக்கை செய்திகளை திரையில் வழங்கி நினைவகத்தை ஆரம்பநிலைக்கு கொண்டு சென்றுவிடும் காலி நினைவகம் முழுவதும் Unallocated Volumes என்ற பகுதிக்கு கொண்டு  சென்றுவிடும் உடன் Add to Existing Volume Group என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் காலிநினைவகம் முழுவதும்  Volume Group (VG) என்றவாறு குழுவாக ஆக்கிவிடும் பின்னர் Edit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி பயன்படுத்தாத மிகுதிகாலி நினைவகம் ஏதேனுமிருந்தால் அவைகளை Volume Group (VG) என்ற பகுதிக்கு இழுத்து கொண்டுவந்தபின் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  இதன்பின் இயக்கமுறைமையானது வழக்கமான  வன்தட்டினை கையாளும் பணிபோன்று இதனை கையாளதொடங்கிவிடும்

90.4.3

90.4.3

இணையத்தின் மூலம் செலவில்லாமல் அல்லது குறைந்த செலவில் தொலைபேசிபோன்று பேசுவதற்கு

இணையத்தின் மூலம் செலவில்லாமல் அல்லது குறைந்தசெலவில் தொலைபேசிபோன்று பேசலாம்

90.3.1

90.3.1

இன்று சந்தையில் கிடைக்கின்ற கணினியில் வெப்கேம், மைக்ரோபோன் போன்ற துனைக்கருவிகளுடன் உள்ளன இதனுடன்  கம்பிமூலம் அல்லது கம்பிஇல்லாத அதிவேக இணைய சேவையின் இணைப்பு  ஸ்கைப் மென்பொருள் http://www.skype.com என்ற இந்த வலைதளத்தின் நமக்கென ஒரு கணக்குடன்

கணினிக்கும் மற்றொரு கணினிக்குமிடையே எனில் இலவசமாக தொலைபேசிபோன்று உரையாடல் செய்யலாம்  ஆயினும் இதற்காக இரு கணினிகளும் ஸ்கைப் என்ற மென்பொருளை நிறுவி அத்தளத்தில் தங்களுக்கென கணக்கு ஒன்று வைத்திருக்கவேண்டும்

அழைப்பவர் கணினிஇணைப்பும் பெறுபவர் தரைவழி தொலைபேசி இணைப்பு அலலது கம்பி இல்லாத செல்பேசி இணைப்பும்  பெற்றிருக்கவேண்டும் ஆனால் இந்த வகையில் அழைப்பவர் மட்டும் அழைப்பிற்கான கட்டணம் செலுத்தவேண்டும் ஆயினும்வழக்கமான தொலைபேசி கட்டணத்தைவிட மிக்குறைந்த கட்டணமே வசூலிக்கபடுகின்றது  அதற்காக ஸ்கைப் நிறுவனமே மாதாந்திரகட்டண சேவையை அறிமுகபடுத்தயுள்ளது

இந்த திட்டத்தின்மூலம் தொலைபேசிபோன்ற நம்முடைய கணினியை செயல்படுத்துவதற்கு முதலில்  http://www.skype.com என்ற தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்க அவ்வாறே இந்த தளத்தில் நமக்கென ஒரு கணக்கினை ஆரநம்பித்துகொள்க அதன்பின் நம்முடைய செல்லிடத்து பேசிபோன்று தொடர்பு கொண்டு பேசவிருப்ப படுவரின் செல்லிடத்து பேசிஎண் அல்லது தரைவழி தொலைபேசி இணைப்ப எண் அல்லது மின்னஞ்சல் முகவரி பேன்றவற்றை   Add to Contacts பகுதியில் சேர்த்து சேமித்துகொண்டு தேவையானபோது உரையாடி மகிழலாம்

YouTube என்ற இணைய தளத்தின் வாயிலாக நம்முடைய கணினிக்குஎளிதாக பதிவிறக்கம் செய்திட

.நாம் அனைவரும் YouTube  என்ற இணைய தளத்தின் வாயிலாக பல்வேறு வகையான ஒலிஒளி குறும் படங்களையும் நெடும்படங்களையும்  கண்டு மகிழ பெரிதும் விரும்புவோம் ஆனால் இவ்வாறான ஒலிஒளி படங்களை இந்த தளத்திலிருந்து நம்முடைய கணினிக்கு பதிவிறக்கம் செய்து அதனை செயற்படுத்தி கண்டு மகிழவிரும்பும் நிலையில் அதனதன் பயன்பாட்டு மென்பொருள்  நம்முடைய கணினியில் நிறுவபட்டு இருந்தால் மட்டுமே  நம்மை பதிவிறக்கம் செய்ய இந்த தளம் அனுமதிக்கும்

90.2.1

90.2.1

1முதல் வழிமுறையாக நம்முடைய தேடுபொறியின்  முகவரிபட்டையைதிரையில் தோன்றசெய்க அதில் நாம் பதிவிறக்கம் செய்யவிரும்பும் யூட்யூப் படத்தின் இணைய முகவரியை படத்தில் காட்டியுள்ளவாறு  pwn என்ற எழுத்தை தட்டச்சு செய்து அதன்பின் உள்ளீடுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக  உடன் தொடர்புடைய படத்தின் இணைப்பு கிடைக்கபெற்று பதிவிறக்கும் ஆகும்

2இரண்டாவது வழிமுறையாக நம்முடைய தேடுபொறியின்  முகவரிபட்டையைதிரையில் தோன்றசெய்க அதில் en.savefrom.net/ என்றவாறு தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

பின்னர் நாம்விரும்பும் யூட்யூப் படத்தின் இணைய பக்கத்தை  உதாரணமாக http://www.youtube.com/user/TheBBCNews  என்றவாறு திறந்துகொள்க பின்னர் இதனை நகலெடுத்து  en.savefrom.net என்று நாம் முகவரியிட்டு உள்ளீடுசெய்த முகவரியின் உரைபெட்டியில் ஒட்டி உள்ளீட்டு விசையை அழுத்துக  பின்னர் தோன்றிடும் திரையில்  FLV 240p, FLV 360p, FLV 480p, MP4 360p, MP4 720p, WebM 360p, WebM 480p, WebM 720p, 3GP 144p,  3GP 240p போன்ற பல்லவேறு வடிவமைப்புகளில்  MP4 360pஎன்றவாறு ஒருவடிவமைப்பை தெரிவசெய்து சொடுக்குக உடன் நாம் விரும்பும் ஒலிஒளிபடம் பதிவிறக்கம் ஆகிவிடும்

கணினியில் கட்டளை தொடர் குறிமுறைவரிகளை எழுதி புதிய பயன்பாடுகளை உருவாக்கிடும் திறமைசாலியாக மாறிட

நாம் எந்தத்துறையில் இருந்தாலும் கணினியில் கட்டளை தொடர் குறிமுறைவரிகளை எழுதி புதிய பயன்பாடுகளை உருவாக்கிடும்  திறமைசாலியாக  மாற : http://www.programr.com என்ற ஒரு தளம் நமக்கு உதவுகின்றது .

தற்போது கணினி மேல் கொண்ட கட்டற்ற காதலால் ஏராளமான கணினி வல்லுனர்கள் கட்டற்ற பல்வேறு மென்பொருட்களை இலவசமாக இணையத்தின் வாயிலாக நமக்கு வழங்கி கொண்டே இருக்கின்றனர். அதுபோன்று நாமும் நம்மால் முடிந்த அளவிற்கு கட்டற்ற மென்பொருட்களை புதியதாக உருவாக்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடலாமே என விருப்பபடும் ஒருவர்  ஏதேனுமொரு  புதிய கணினி மொழியை  கற்க விரும்பும்நிலையில் அவர் முதலில் http://www.programr.com என்ற இதனுடைய இணைய முகவரிக்கு சென்று நாம் கணினியின் எந்த மொழியில் திறமையானவராக மாற வேண்டும் என விரும்புகின்றோமோ அந்த மொழியை தேர்ந்தெடுக்க வேண்டியது மட்டும் தான் நம்முடைய வேலையாகும்

அடுத்து வரும் திரையில் புதிதாக மொழி கற்பவர்கள் என்னென்ன வகையான அடிப்படை  கட்டளைதொடரை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதை ஒவ்வொன்றாக சொடுக்கி பார்ப்பது மட்டுமல்லாமல் அதை இயக்கியும் ( RUN) பார்க்கலாம். ஏற்கனவே கட்டளைத்தொடர் எழுதியவரின் கட்டளைவரிகளை தேவையெனில்  பதிவிறக்கம் (Download) என்பதை தெரிவுசெய்து சொடுக்கி தரவிறக்கியும் நமக்கு தேவையெனில் அதில் ஒருசில மாற்றங்களை செய்து செயற்படுத்தியும்   பார்க்கலாம். பொதுவாக கணினியின் அனைத்து முக்கிய மொழிகளுக்குமான நேரடியான கட்டளைவரிதொடரின் குறிமுறைகளை எழுதும்  பயிற்சியை இந்த தளமானது நமக்கு  அளித்து  நம்மை குறிப்பிட்ட அந்த மொழிகளில் வல்லவர்களாக ஆக்கிவிடுகிறது. இதுமட்டுமின்றி  கட்டளைவரிதொடர்  எழுத தெரிந்தவர்களுக்கு மட்டும் என இந்த தளம் போட்டியைகூட நடத்துகின்றது , சவால் விடும் பல கட்டளைவரிதொடரின் குறிமுறைகளும் இத்தளத்தில் எளிதாக கிடைக்கின்றன, கட்டளைவரித்தொடர் எழுதுபவர்களுக்கும் புதியவர்களுக்கும் இத்தளம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கின்றது.

இந்த தளமானது கட்டளைவரித்தொடர்  எழுத தெரிந்தவர்களுக்கு  நேரடியாக  இணையத்தின் மூலம் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க புதுமையான நேர்மையான வழியை வழங்குகின்றது

அதுமட்டுமின்றி கட்டளைவரிதொடர் எழுததெரிந்தவர்கள் உலகில்  எங்கிருந்து வேண்டு மானாலும் இந்த தளத்தில் கட்டளைவரிதொடர்பான குறிமுறைகளை  எழுதிப்பழகவும் அனுமதிக்கின்றது

90.1.1

90.1.1

கூகுள் தேடுபொறியில் மிகவிரைவாகவும் துல்லியமாகவும் தேடிடுவதற்கான ஆலோசனைகளை

கூகுள் தேடுபொறியில் மிகவிரைவாகவும் துல்லியமாகவும் தேடிட பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றிடுக

தேடுபொறியில் குறிப்பிடும் அனைத்து சொற்களையும் தேடிடும் எனினும் குறிப்பிட்ட சொற்கள் அல்லது அடுத்த சொற்கள் எனில் அவைகளுக்குஇடையே OR என்ற செயலியை “கணினிதகவல்” OR “கணினிஆலோசனை” என்றவாறு பயன்படுத்துக

குறிப்பிட்ட சொற்களை ” என்ற மேற்கோள்குறிக்குள் “கணினிதகவல்”  என்றவாறு பயன்படுத்துக

தேடுபொறியில் நீண்ட வடிவில் சொற்களை உள்ளீடு செய்திருந்தால் தேடிடவேண்டிய சொல்லை மட்டும் மேற்கோள் குறிக்குள் “கணினிதகவல்”  கணினிஆலோசனை என்றவாறு குறிப்பிடுக

 தேடிடும் சொற்களை~ என்ற குறியீட்டுடன் குறிப்பிட்டால் இவ்வாறு முடியும் அனைத்து சொற்களையும் தேடிபிடித்திடும்  ~ கணினிதகவல்   என்றவாறு பயன்படுத்தினால்  எளிய தமிழில் கணினிதகவல் ,தமிழில் கணினிதகவல் என்றவாறு கிடைக்கும்

*.edu என்றவாறு நட்சத்திர குறியுடன் தேடிட்டால் அவ்வாறுமுடியும் அத்துனை சொற்களையும் தேடிக்கொண்டுவந்து திரையில் பட்டியிலிட்டுவிடும்

define என்ற இயக்கியை பயன்படுத்தினால் குறிப்பிட்ட சொல்லிற்கான விளக்கத்தினை  கொண்டு வந்து காண்பிக்கும்

Calculator என்ற இயக்கியை பயன்படுத்தினால் எண்களின் கணக்கீடுகளை செய்து விடையை திரையில் காண்பிக்கும்

சிறந்தபுத்தகம் 2002..2007 என்ற இயக்கியை பயன்படுத்தினால் இந்த காலஇடைவெளியல் வெளியிடபட்ட சிறந்த புத்தகங்களின் பெயர்களை கொண்டு வந்து காண்பிக்கும்

link என்ற இயக்கியை பயன்படுத்தினால் முன்பு பயன்படுத்திய யூஆர்எல் முகவரியை பட்டியலாக காண்பிக்கும்

filetype என்ற இயக்கியை பயன்படுத்தினால் நாம் விரும்பும் வகை கோப்பினை  கொண்டு வந்து காண்பிக்கும்

cached என்ற இயக்கியை பயன்படுத்தினால் கூகுள் சேவையாளரில்  சேமித்துவைத்துள்ளவைகளை கொண்டு வந்து காண்பிக்கும்

விண்டோ 7 இயக்கமுறைமையில் எழும் பிரச்சினைகளை சரிசெய்வது எவ்வாறு

விண்டோ 7 இயக்கமுறைமையில் எப்போது பார்த்தாலும் ஏதாவது பிரச்சினை எழுந்துகொண்டே உள்ளது அதனை சரிசெய்து மிகச்சரியாக இயங்குவதற்காக இதற்கான கணினி பொறியாளரை அல்லது தொழில்நுட்ப வல்லுனரை அடிக்கடி அழைக்கவேண்டியுள்ளது என அலுத்துகொள்ளும் அப்பாவி  பயன்பாட்டாளர்கள் பயப்படவேண்டாம் என கேட்டுக்கொள்ளபடுகின்றது   விண்டோ 7 இயக்கமுறைமையில் ஏற்படும் எந்தவொரு பிரச்சினையையும் உடனடியாக தீர்வுசெய்வதற்கான கருவிகள் அதிலேயே உடனினைந்துள்ளன  அதனை செயல்படுத்திடுவதற்காக தொடக்க இயக்கத்தின் தேடும்பெட்டியில்(Start search box) Troubleshoot என உள்ளீடு செய்து  உள்ளீட்டு (Enter  )விசையை அழுத்துக. பின்னர் தோன்றிடும் பட்டியலில் Troubleshooting    என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Windows 7 Troubleshooter என்ற திரைக்கு நம்மை அழைத்து செல்லும் அங்கு இதைபோன்ற ஏராளமான பிரச்சினைகளுக்கான தீர்வு பட்டியலிடபட்டிருப்பவைகளில்   Program Compatibility என்றவாறு பிரச்சினையை தீர்வுசெய்வதற்கு விரும்புவதாக கொள்வோம் இதனை தெரிவுசெய்துகொண்டு next என்ற பொத்தானை   தெரிவுசெய்து சொடுக்குக உடன் ஒத்தியங்காத பயன்படாடுகளின் பெயர்களை திரையில் பட்டியலிடும் அவற்றுள் நமக்கு பிரச்சினை கொடுப்பதை தெரிவுசெய்துகொண்டு   next என்ற பொத்தானை   தெரிவுசெய்து சொடுக்குக அடுத்து தோன்றிடும் திரையில் உள்ள இருவாய்ப்புகளில்  Troubleshoot program என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு next என்ற பொத்தானை   தெரிவுசெய்து சொடுக்குக அடுத்து தோன்றிடும் திரையில் பிரச்சினை கொடுக்கும் பயன்பாட்டினை தெரிவுசெய்து next என்ற பொத்தானை   தெரிவுசெய்து சொடுக்குக    பிரச்சினைகளை தெரிவுசெய்து பயன் பாட்டினை மறுதொடக்கம்செய்திடுக

7.1

7.1

 

Previous Older Entries