ஆங்கிலத்தில் எழுதும் திறனை வளர்த்துகொள்ள

  இன்று தமிழகத்தில் மிகக் குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் கொழிக்கும் தொழிலாக கல்வி வியாபாரம் உள்ளது. அதிலும் ஆங்கிலம் நமக்கு அந்நிய மொழி என்பதால் அதற்கான வியாபாரம் கொடி கட்டி பறக்கின்றது இந்நிலையில் மக்கள் குறைந்த செலவில் தத்தமது ஆங்கில மொழியின் வளத்தை கணினிமூலம் வளர்த்துகொள்வதற்கான வழிமுறையை பற்றி இப்போது காண்போம்

பயனாளர்கள் தத்தமது சாதாரண கடிதம் வியாபார கடிதம் போன்றவை களை தயார்செய்திடும்போது ஏற்படும் பிழைகளை தவிர்க்கும் பொருட்டு பயன்படுத்தி கொள்வதற்காக மைக்ரோ சாப்ட் என்ற நிறுவனம் வேர்டு 2003 என்ற பயன்பாட்டு மென்பொருளில் அதனுடன் உள்ளிணைந்த ஆங்கில அகராதி என்ற மேற்கோள் கருவியை வழங்கியுள்ளது

ஆனாலும் முழுமையான ஆங்கிலமொழியின் திறனை இதன்மூலம் நம்மால் பெறமுடியாது .இந்த குறையை போக்கிடும் வகையில் ஏராளமான பயன்பாட்டு நிரல்தொடர்கள் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன

 படம்-1

அவ்வாறான ஒன்றினை (படம்1)பெறுவதற்குhttp://wordweb.info.free/ என்ற வலைதளத்திற்கு சென்று wordweb6.75 என்ற பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்துகொள்க.இதனை பதிவிறக்கம் செய்துகொள்ள 56கேபிஎஸ் டயல்அப் இணைப்பு எனில் சுமார் 15 நிமிடங்கள் ஆகும்.இது wordweb6.exe என்ற இயக்கக கோப்பாக நம்முடைய கணினியில் பதிவிறக்கம் ஆகி பாதுகாக்க பட்டிருக்கும்

இந்த பயன்பாட்டினை செயல்படுத்துவதற்காக முதலில் இந்த கோப்பினை இடம் சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்-2-ல் உள்ளவாறு இந்த பயன்பாட்டினை நிறுவுவதற்கான word web installation என்ற உரையாடல் பெட்டியொன்று அதற்கான வழிமுறைகளை காண்பிப்பதற்கான வழி காட்டி யாக திரையில் தோன்றிடும்.அதில் accept என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

 படம்-2

பின்னர் தோன்றிடும் word web setup என்ற உரையாடல் பெட்டியில் இதனை நிறுவுவதற்கான கோப்பகத்தின் பெயரை இயல்புநிலையில் படம்-2-ல் உள்ளவாறு காண்பிக்கும் அதனை நாம் ஆமோதித்தால் nextஎன்ற என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

உடன் படம் -3ல் உள்ளவாறு நம்முடைய ஆங்கிலம் எந்த பகுதியை சார்ந்தது your English locale என்ற திரை word web setupஎன்ற உரையாடல் பெட்டியில் தோன்றிடும் அதில் Asiaஎன்பதை தெரிவுசெய்து கொண்டு Install என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

அதன்பின்னர் படம்-3-ல் உள்ளவாறு installation completeஎன்றசெய்தியுடன் word web setupஎன்ற உரையாடல் பெட்டி தோன்றிடும் அதில்okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

அதன்பிறகு செயல்பலகத்தில்அல்லது தொடக்கத்திரையில் உள்ள இதன் உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவது அல்லது விசைப் பலகையில் Ctrl+Alt+W ஆகிய மூன்று விசைகளை சேர்த்து அழுத்துவதன் மூலம் இந்த பயன்பாட்டினை செயல்படுமாறு செய்யலாம்

இதன்பின்னர் ஏதேனுமொரு கடிதத்தை அதற்கான பயன்பாட்டில் தட்டச்சு செய்து வரும்போது குறிப்பிட்ட சொல் எடுப்பாக பிரதி பலிப்பதுடன் அச்சொல் பற்றிய முழுவிவரமும் படம் -4-ல் உள்ளவாறு காட்சியளிக்கும்

அவ்வாறில்லாமல் வேறு ஏதேனுமொரு செல்லை vlookup என்ற உள்ளீட்டு பெட்டியில் படம்-4-ல் உள்ளவாறு தட்டச்சு செய்தவுடன் அந்த சொல் என்ன வகையை சார்ந்தது இதன் பொருள் என்ன? இதனை எவ்வாறு உச்சரிப்பது? இதற்கு இணையான சொற்கள் யாவை? ஒரு பகுதி மட்டுமா ?முழுமைக்குமா? என்பன போன்ற அனைத்து விவரங்களுடன் திரையில் காட்சியளிக்கும்

அதுமட்டுமல்லாது குறிப்பிட்ட சொல் பெயர்ச்சொல்லை(noun) சார்ந்ததா வினைச் சொல்லை(veb) சார்ந்ததா என தெரிந்துகொண்டு நம்முடைய தேவைக்கேற்ப அதனை நம்மால் பயன்படுத்தி கொள்ளமுடியும்

அவ்வாறே ஒரு சொல்லிற்கு இணையான சொற்கள் தெரிய வேண்டு மெனில் இதிலுள்ள synonyms என்பதை தெரிவுசெய்தால் போதும் உடன் இந்த பயன்பாட்டில் உள்ளிணைந்த thesaurus ஐ பயன்படுத்தி பட்டியலாக காண்பிக்கும் அவைகளுள் தேவையானதை நகலெடுத்து தேவையான இடத்தில் ஒட்டிக்கொள்ளலாம். அல்லது பதிலீடு(replace) செய்துகொள்ளவும் முடியும் பொதுவாக தேவையானதைcopy செய்து தேவையான இடத்தில்paste செய்துகொள்வதே நல்லது

ஏதேனுமொரு சொல்லிற்கு உச்சரிப்பு தெரியவேண்மடுமெனில் இந்த பயன்பாட்டு திரையின் மேல்பகுதியில்உள்ள கட்டளை பட்டியில்option=>show=> pronouncation=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கினால் போதும் உடன் அந்த சொல்லை எவ்வாறு உச்சரிப்பது என்று காட்சியளிக்கும்

படம்-5

அதுமட்டுமல்லாது இந்த பயன்பாட்டு திரையின் மேல்பகுதியில் உள்ள கட்டளை பட்டியில் xRef =>web dictionary =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் நம்முடைய கணினி இணையத்துடன் தொடர்புகொண்டு இந்த அகராதியில் சமீபத்தில் சேர்க்கபட்ட சொற்களின் பட்டியலை காண்பிக்கும்

என்ன நீங்களும் இந்த Word web6.75 என்ற பயன்பாட்டு நிரல்தொடரை உங்களுடைய கணினியில் நிறுவி உங்களுடைய ஆங்கில மொழிவளத்தை வளர்த்து கொள்ள தயாராகிவிட்டீர்களா?

 

 

 

விண்டோ எக்ஸ்பியை இளமைத்துடிப்புடன் வைத்து பராமரிப்பதற்காக

இப்போது கணினியை பயன்படுத்தும் எவரும் விண்டோ7, விண்டோ 7 என்றே முனுமுனுக்கின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் புதிய இயக்க அமைவான இந்த விண்டோ 7ஐ அவ்வளவு பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டுமா? இப்போது தேவையா? என்றவாறு கேட்கின்றனர், அவர்களுக்காக புதிய வசதிகள் பல இந்த விண்டோ7-ல் இருந்தாலும் பணம் மேலும் செலவிடாமல் தற்போது இருக்கின்ற விண்டோ எக்ஸ்பி என்ற இயக்கமுறையை(Operating System ) இளமைத்துடிப்புடன் எவ்வாறு வைத்து கொள்வது என இப்போது காண்போம்.

 Auto Upgrade ஐ தவிர்ப்பதற்காக: எந்த ஒரு பயன்பாட்டு மென் பொருளையும் தொடர்ந்து அவ்வப்போது தானாகவே நிகழ்நிலைபடுத்தி (upgrage latest version ) கொள்ளும்படி வைத்திடுமாறு நமக்கு கூறுவார்கள் இவ்வாறு மென்பொருள் மட்டும் நிகழ்நிலைபடுத்தி(upgrade) கொண்டே இருந்து வன்பொருளை அப்படியே மாறாமல் வைத்து கொண்டு இருந்தால் இரண்டும் ஒன்றுக்கொன்று ஒத்தியியங்காமல் ஒரு நிலையில் மாற்றப்படாமல் உள்ள வன்பொருட்கள் இயங்காமல் முடக்கடி செய்துவிடும். இதனை தவிர்ப்பதற்காக மென்பொருட்கள் தானாகவே அவ்வபோது நிகழ்நிலை படுத்துதலை உடனடியாக முடக்கம் (disable) செய்யுங்கள். உதாரணமாக Adobe reader என்பதை தானாக update செய்வதை முடக்கம் செய்ய இதனுடைய சாளரத்தின் கட்டளைப்பட்டியில் உள்ள Edit என்ற கட்டளையை தெரிவு செய்க. உடன் தோன்றும் பட்டியில் preference என்பதையும் பின்னர் தோன்றும் சிறு பட்டியில் upadte என்பதையும் தெரிவு செய்க. உடன் விரியும் பட்டியில் check for critical update என்பதன் கீழுள்ள don’t download or install automatically update என்பதை தெரிவு செய்க

  நாம் இந்த பயன்பாடுகளை பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது குறிப்பிட்ட பிரச்சனை ஏதாவது எதிர்கொண்டால் மட்டும் இவைகளை upgrade செய்தால் போதும். அல்லது நமக்கு தேவையான போது மட்டும் இந்த பயன்பாட்டில் உள்ளபுதிய வசதிகளை upgrade செய்தால் போதும். இவ்வாறான முடிவற்ற upgrade ஐ முடக்குவதற்காக start up control panel என்ற இலவச கருவிகள் பயன்படுகின்றன. (www.mlin.net/StartupCPL.shtml )

Swap செய்வதற்காக : சாளர இயக்க அமைவானது வன்தட்டில் ஒரு பகுதி நினைவகத்தை மெய்நிகர் நினைவகமாக (virtual memory) ( இந்த பகுதியை swap file அல்லது page file என அழைப்பர்) அதாவது ரேமி(RAM) ன் மற்றொரு துணை நினைவகம்போன்று பயன்படுத்தி கொள்கிறது.ஆனால் இயக்கமுறைமையா(OS)னது ஏற்கனவே மெய்நிகர் நினைவகத்தை அனைத்து செயல்களுக்கான ரேமாக பயன்படுத்தி கொண்டிருந்தாலும் இதனை கூடுதலான துணை ரேம் போன்று ஒதுக்கீடு செய்துகொள்கிறது.

இதனால் வன்தட்டை அணுகும் பணி மெதுவாகிறது. விண்டோவிற்கு இவ்வாறான page file ஐ தேவையில்லாதபோது பயன்படுத்த வேண்டாம் என இந்த மெய்நிகர் நினைவகத்தின் அளவை சரி செய்து குறைக்க வேண்டும். குறைந்த பட்சம் 1ஜிபி அளவிற்கு இந்த ரேம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். இந்த நினைவக அளவை பதிவேட்டில் (Registery) தான் சரி செய்ய முடியும். அதற்கு முன்பு இந்த பதிவேட்டினை (Registery)காப்பு நகல் செய்து கொள்ள வேண்டும்.அதற்காக Start => run=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றும் கட்டளை வரியில் regedit என தட்டச்சு செய்து உள்ளீட்டு(Enter)) விசையை தட்டுக. பின்னர் இடதுபுறம் தோன்றும் மரம்போன்ற பலகத்தில் (Treepane) HKEY_LOCAL_MACHINE\ SYSTEM\ Currentcontrolset\ control\sessionmanager\ memory management, என்பதை தெரிவு செய்க. உடன் தோன்றும் சாளரத்தில் உள்ள Disable paging executive என்ற உருவ பொத்தானை (icon) இருமுறை சொடுக்குக. உடன்தோன்றும் தரவு பெட்டியில் 0 விற்கு பதிலாக 1 என மாற்றியமைத்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் மீண்டும் உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள்.

NTFS ஆக மாறுதல் செய்தல் : வன்தட்டின் வடிவமைப்பை FAT32க்கு பதிலாக NTFS க்கு மாறுதல் செய்யுங்கள். அதனால் encryption, folder, disk compression என்பன போன்ற பல சிறப்பு பணிகளை வேகமாகவும் பாதுகாப்புடனும் செய்ய முடிகிறது. இந்த FAT32 வடிவமைப்பு DOS, Win98 ஆகிய இயக்க அமைவு வரைதான் ஆதரிக்கிறது. மேலும் இது விண்டோ 7 ஐ கண்டிப்பாக ஆதரிக்காது. இதற்காக நம்மிடம் FAT32 தான் உள்ளதே என்று கவலைப்படாதீர்கள். உங்கள் வன்தட்டை மறு வடிவமைப்பு செய்யாமலேயே NTFS ஆக மாற்ற முடியும்.அதற்காக Start => Run=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கிய பின்னர் தோன்றும் கட்டளை வரியில் cmd.exe என தட்டச்சு செய்து உள்ளீட்டு(Enter) விசையை தட்டுக. உடன் தோன்றும் கட்டளை வரியில் convert என தட்டச்சு செய்து சிறிது இடவெளி விட்டு இயக்கக எழுத்தான c என தட்டச்சு செய்த பின்னர் : என்ற முக்கால் புள்ளி இட்டு /FS:ntfs என தட்டச்சு செய்க. ( convert NTFS)

அமைவு மீட்டாக்க புள்ளி( System restore point) : இதற்காக எப்போதும் கணினியின் வன்தட்டில் சிறிது இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதற்காக my computer என்ற உருவ பொத்தானை (icon) தெரிவுசெய்து சொடுக்குக.உடன் தோன்றும் பட்டியில் properties என்பதை தெரிவு செய்க. பின்னர்தோன்றும் பெட்டியில் System restore என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக . பின்னர் எந்த இயக்ககத்தின்(drive) இவ்வாறு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவு செய்து கொண்டு Setting என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் இதிலுள்ள Slides ஐ தேவையான அளவு இழுத்து சரி செய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக.

அமைவு மிட்டாக்க புள்ளியை இடமாற்றுதல் (Relocate system shuffle): இதர பல கோப்புகள், வன்தட்டுகள், பிரிப்பகங்கள் ஆகியவை விண்டோ இயக்கத்தின் கீழ் ஒன்றாக இணைக்கப்பட்டு தேக்கப்பட்டிருக்கும். இவ்வாறு ஒரே இயக்ககத்தில் அனைத்து அமைவு கோப்புகளையும் வைத்திருக்காமல் வெவ்வேறு இடங்களில் வைத்து விண்டோ இயங்குவதற்கு தாராளமான இடவசதி செய்து கொடுப்பது நல்லது.

அறிதுயில் (Hybernation) என்ற வசதியை கைவிடுவது: பொதுவாக புதிய இயக்கமுறைமையா(OS)னது விண்டோவை அறிதுயில்(hybernation) செய்வதற்காக தேவையான அனைத்துவிவரங்களையும் RAM hiberfile.sys என்ற ஒற்றையான மறைக்கப்பட்ட கோப்பாக வன்தட்டில் உருவாக்கி வைத்து காத்திருக்கிறது. இந்தகோப்பு வன்தட்டில 512 எம்பி அளவு நினைவகத்தை எடுத்து கொள்கிறது. அமைவு மீட்டாக்க புள்ளி(System restore point)க்கான கோப்பினை வைத்துள்ள அதே இயக்ககத்தில்(drive) அறிதுயிலிற்(hibernation)கான கோப்பையும் வைத்திருப்பதால் அதிகஅளவு நினைவகம் இவைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பெற்று விண்டோ இயக்கமுறைமையின் செயல் மெதுவாகிறது. இதனை தவிர்க்க Start => Run=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்கிய பின்னர் powerfg.cpl என தட்டச்சு செய்து உள்ளீட்டு(Enter) விசையை தட்டுக. உடன் தோன்றும் சாளரத்தில் hibernate என்னும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. Enable hibernation என்று தேர்வு செய்திருந்தால் அதனை நீக்கி விடுக. பின்னர் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

Clutterஐ குறைப்பதற்காக விண்டோஸ் Disk cleanup என்ற கருவியை பயன்படுத்தி இணையத்தில் உலாவும்போது உருவாகும் கோப்புகளையும் மற்றும் தேவையற்ற கோப்புகளையும் நீக்கம்செய்வதற்கான பணியின்போது தவறுதலாக முக்கிய கோப்புகள் ஏதேனும் நீக்கம் செய்யாமல் இருப்பதற்கு ஒரு batch கோப்பை உருவாக்கி பயன்படுத்துங்கள். இதற்காக Notepad அல்லது வேறு ஏதேனமொருtext editor ஐ பயன்படுத்தி “del/s/q”C:\Documents and settings\username\local settings\Temp\*.*” என தட்டச்சு செய்யுங்கள். இங்கு username என்பதற்கு ஏற்கனவே கணினிக்குள்நுழைவு செய்வதற்கு என்ன பெயர் நாம் கொடுத்துள்ளோமோ அதனை உள்ளீடு செய்ய வேண்டும். இந்த batch கோப்பிற்கு deltemp.bat என்றவாறு பெயரிட்டு சேமித்திடுக. கண்டிப்பாக புள்ளிக்கு பிறகு . bat என்ற மூன்று எழுத்து வர வேண்டும். சுலபமாக அணுகுகின்ற பகுதியில் இதனை தேக்கி வைத்து Startup மடிப்பகத்தில் இதனை கொண்டு சேர்க்க வேண்டும். இதற்காக Start=> all program => startup=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக. மேலும் இந்த clean up என்ற கருவி மேம்பட்ட வாய்ப்பாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். அதற்காக more option என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்தோன்றும் திரையில் System restore என்பதில் cleanup என தெரிவு செய்க. பின்னர் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

  இயக்கமுறைமையின்(OS)இயக்கத்தை வேகப்படுத்த: சில சமயத்தில் ஒரு சில பயன்பாடுகள் நிறைய தேவையற்ற பயன்பாட்டு மென்பொருட்களின் குவியலில் சிக்கிக்கொண்டு இயங்குவதற்கு போதிய இடவசதி இல்லாமல் நத்தை போன்று மிக மெதுவாக ஊர்ந்து நகருகின்றன. அதனால் முக்கியமான பயன்பாடுகளை முதன்மைபடுத்த வேண்டும். இதற்காக காலியான Task bar ல் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக.உடன் தோன்றும் சூழ்நிலை பட்டியலில் task manager என்பதை தெரிவு செய்க. பின்னர் தோன்றும் task manager என்ற சாளரத்தில் processes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் திரையில் பட்டியலிடப்பட்டிருக்கும் செயலில் முதன்மைபடுத்த விரும்பும் கோப்பினை இடம்சுட்டியை வைத்து தெரிவு செய்துகொண்டு சுட்டியின்வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் தோன்றும் பட்டியில் Set priority என்பதை சொடுக்குக. உடன் தோன்றும் சிறு பெட்டியில் முதன்மை அளவை above normal அல்லது high ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் தெரிவு செய்து சொடுக்குக. உடன் தோன்றும்எச்சரிக்கை செய்திபெட்டியில் yes என்பதைதெரிவுசெய்து சொடுக்குக. இவ்வாறு மாறுதல் செய்வதால் மற்ற இயக்கம் பின்தங்கி விடும்.

எச்சரிக்கை,இந்த வாய்ப்பில் real time என்பதை தெரிவு செய்தால் மிக முதன்மை இடத்தில் நம்மால் தெரிவுசெய்யபட்ட பயன்பாடு மட்டும் தெரிவு செய்யபட்டு மற்றவைகளை மிகவும் பின்னுக்கு தள்ளிவிடும் .

ஒவ்வொரு இயக்ககத்திலும் உள்ள கோப்பிற்கும் சென்று முதன்மை இடத்தை மாற்றுவதற்கு பதிலாக task manager ல் உள்ள கட்டளை பட்டியின் view என்ற கட்டளையை தெரிவு செய்க.உடன் தோன்றும் பட்டியில் column என்பதை தெரிவு செய்க.பின்னர்தோன்றும் சிறுபெட்டியில் base priority என்பதை தெரிவு செய்க. பின்னர் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

பயன்படுத்தாத உருவபொத்தானை (Icon)ஐ நீக்குவதற்காக:சில சமயங்களில் நீண்ட நாட்களாக பயன்படுத்தாத உருவபொத்தான்கள் திரையில் இருப்பதாக மேல்மீட்பு செய்திபெட்டி அடிக்கடி திரையில் தோன்றி எச்சரிக்கை செய்யும் இவ்வாறு நீண்ட நாட்களாக பயன்படுத்தாத பயன்பாடுகள் வேறு எப்போதாவது தேவைப்படும் அதனால் அவைகளை வேறு இடத்தில் கொண்டு சென்று விடுவதுநல்லது. நமக்கு எப்போதுமே தேவையில்லை எனில் அவற்றின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்கியபின் தோன்றம் குறுக்கு வழிபட்டியில் delete என்ற கட்டளையை தெரிவு செய்து நீக்கி விடுக. அல்லது திரையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக. உடன் தோன்றும் குறுக்கு வழிபட்டியில் properties என்பதை தெரிவு செய்க. பின்னர் தோன்றும் திரையில் desktop என்பதை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் தோன்றும் உரையாடல் பெட்டியின் அடிப்பகுதியில் run desktop cleanup wizard every 60 day என்பது தெரிவு செய்யபட்டிருந்தால் அதனை நீக்கி விட்டு. ok என்ற பொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக.

Musical duplicate ஐ தவிர்ப்பதற்காக: நமக்கு விருப்பமான பாடல்களை கணினியில் சேமித்திடுவதற்காக Advance audio coding வடிவமைப்பாக உருமாற்றம் செய்யும்போது duplicate கோப்புகள் தானகவே உருவாகி வன்தட்டின் இடத்தை ஆக்கிரமித்து கொள்ளும். இதனை தவிர்க்க window media player என்ற சாளரத்தில் Tools=> option=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்கியபின் தோன்றும் பெட்டியில் Rip Music என்ற தாவி (Tab) யின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் Format என்ற கீழிறங்கு பட்டியலில் தேவையானதை தெரிவு செய்க. பிறகு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

இவ்வாறு மேலேஇது வரை கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் உங்களுடைய விண்டோ இயக்கமுறைமைய (OS) ஐ இளமைத்துடிப்புடன் இயங்கி கொண்டிருக்கசெய்யமுடியும்

லினக்ஸ் சான்றிதழ் கல்வி

மைக்ரோ சாப்டிற்கு மாற்றாக செலவில்லாத ஒப்பன்சோர்ஸ் புரோகிரமாக லினக்ஸ் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே வருகின்றது. அதற்கு ஈடுகட்ட கூடிய அளவிற்கு இந்த ஒப்பன்சோர்ஸ் புரோகிராம்களை எழுதி இயக்க கூடிய அளவிற்கு தொழில் நுட்ப வல்லுநர்களின் தேவையும் வளர்ந்து கொண்டே வருகின்றது இந்த தளங்களின் பணிபுரியக்கூடிய தொழில் நுட்ப வல்லுநர்கள் ஆக வளர்வதற்கு பின்வரும் கல்வியியல் சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும்,

இன்றைய நடைமுறையில் பல்வேறுவகையான லினக்ஸ் சான்றிதழ் படிப்பு கிடைக்கின்றன.  பொதுவாக இந்த லினக்ஸ் சார்ந்த படிப்பை ஆரம்பநிலை, இடைநிலை,உயர்நிலை என மூன்றுவகையாக பிரிக்கலாம்,

சாதாரனமாக  லினக்ஸ் பற்றி ஒன்றுமே தெரியாத பயிற்சி ஏதும் இல்லாதவர்கள் கூட லினக்ஸ் பற்றிய அடிப்படையான அறிவை மட்டும் வளர்த்து கொண்டு இதன் ஆரம்ப நிலை சான்றிதழை பெறமுடியும்.

ஒரு டெக்ஸ்டாப்பை அல்லது வொர்க்ஸ்டேஷன் ஒன்றை எவ்வாறு அமைவு செய்வது அல்லது அதில் உள்ள தவறுகளை எவ்வாறு களைவது என்பன போன்ற அறிவு பெற்றிருந்தால் இடை நிலை கல்வி சான்றுபெறமுடியும்.

சேவையாளர் (Server)கணிப்பொறியை எவ்வாறு அமைவு செய்வது அதனுடைய குறைகளை எவ்வாறு களைவது, சிறப்பு சேவையாளர்களை மற்றும் பயன்பாடுகளை எவ்வாறு நிருவகிப்பது எந்த பிரச்சிணை களையும் எவ்வாறு சமாளிப்பது என்ற மிகத்திறன் வாய்ந்த நிலையை உருவாக்க உதவுவது உயர்நிலை  சான்றிதழாகும்,.

உலகளாவிய அளவில் பல லினக்ஸில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் படிப்பு உள்ளன அவைகளை நன்கு கற்றுதேர்வு எழுதிவெற்றிபெற்றால் ஒவ்வொரு இளைஞரின் எதிர்காலமும் கண்டிப்பாக மிக பிராகாசமாக அமையும்  எந்பது திண்ணம்

இந்த சான்றிதழ்கள் கல்வி பற்றி ஒவ்வொன்றாக இப்போது காண்போம்

Iஆரம்பநிலை சான்றிதழ் கல்வி தேர்வுகள்,. 

1. நாவல் CLP (Certified Linex Professional) இது லினக்ஸின் ஆரம்பநிலை  சான்றிதழ் தேர்வாகும், லினக்ஸ் கல்வியில் உங்கள் வாழ்க்கை பாதையை துவங்க இது உதவுகிறது.  ஆயினும் இது CLE(Certfied linex Engineer)யின்ஆரம்பதேர்வன்று.

  2,RHCT(Red Hat Certified Technician)  இது ரெட்ஹேட் தளத்தினை பயன்படுத்த உதவும் தொடக்கநிலை  தேர்வாகும், இதை தெரிவு செய்யும் பயிற்சியாளர்களுக்கு கட்டளை வரிகளைபற்றி முன் கூட்டியே தெரிந்திருக்கவேண்டிய  அவசியம் இல்லை, அடிப்படை நெட்வொர்க்கிங், பைல்சிஸ்டம், ரெட்ஹேட் பற்றியும், கணிப்பொறியின் ஹார்டுவேர் பற்றிய அடிப்படை அறிவு இருந்தால் மட்டும்போதும், பொதுவாக லினக்ஸை பற்றிய ஆரம்ப அறிவை பெற இந்த சான்றிதழ் வழங்குகிறது.

3,லினக்ஸ் புரோபஷனல் இன்ஸ்டிடியூட்டின் LPIC1,இதிலும் முன்கூடடியே லினக்ஸ் பற்றியும்,கட்டளை வரிகளை எவ்வாறு பயன்படுத்துவதுஎன்பது பற்றியும் எதுவும்தெரியதேவையில்லை,, இந்ததேர்வு பெரிய ஸிஸ்டத்தை எவ்வாறு கையாளுவது, சாதாரனமான பராமரிப்பை எவ்வாறு செய்வது. காப்பு நகல் (Back Up) எவ்வாறு செய்வது,கோப்புகளை மீளஎவ்வாறுஅழைப்பது,வளாக இணைப்பை(LAN) எவ்வாறு ஏற்படுத்துவது .OS ஐ எவ்வாறு நிறுவுவதுஎன்பன  போன்ற அடிப்படை செயல்களை தெரிந்து கொள்ள செய்கிறது.

II.இடைநிலை சான்றிதழ் கல்வி தேர்கள்,. 

1,comp TVAலினக்ஸ் : ஓபன் சோர்ஸ் தொழில் நுட்பத்தை பற்றிய ஆரம்ப அறிவை தெரிந்து கொள்ளவும்,.  எவ்வாறு இதனை நிறுவுவது,அமைவுசெய்வது, நெட்வொர்க்கை நிர்வகிப்பது, அதில் ஏற்படும் தவறுகளை எவ்வாறு களைவது என்பனபோன்ற செயல்களை லினக்ஸ் அடிப்படையிலான சேவையாளர் டெக்ஸ்டாப்பில் செயல்படுத்துவதற்கான அறிவை வளர்த்து கொள்ள இந்த இடைநிலை தேர்வு உதவுகிறது.

2,LPIC2, LPIC1தேர்வை முடிப்பவர்களை மட்டும் இதனை எழுத அனுமதிக்கப்படுகிறது. இதில் OS ஐ பராமரிப்பது, குறைகளை களைவது,சிறிதான மற்றும் இடைநிலை அளவு லினக்ஸ் அல்லது மைக்ரோ சாப்டின் வின்டோ OS களை எவ்வாறு நிருவகிப்பது  எனத் தெளிந்த அறிவை வளர்த்து கொள்ள இந்த தேர்வு உதவுகிறது.

III.உயர்நிலை சான்றிதழ் கல்விதேர்வுகள்.

1, நாவல் CLE (Certified Linex Engineer) இது நாவல் லினக்ஸில் மிக அனுபவம் வாய்ந்தவர்களுக்கான தேர்வாகும்,இந்தேர்வு லினக்ஸ் OS ஐ நிறுவுதல், அமைவு செய்தல், பழுதுபார்த்தல், நாவல் தொடர்பான பிரச்சினைகளை சமாளித்து தீர்வுசெய்தல், லினக்ஸை மிக சிறப்பாகவும்  தனித்தன்மையுடனும் இயங்க செய்தல் ஆகியவை பற்றி மிகத்தௌ்ளத் தெளிவாக அறிந்துகொள்ள உதுவுகிறது, இந்ததேர்வின்  சான்று பெற்றஒருவர் மிக உயர்நிலையில் வினக்ஸ் சிஸ்டத்தை நிருவகிக்கும்திறனை பெற்றவர்ஆவார்.

2,RHCE(Read hot certificted Engineer) இதில் பொதுவாக நெட்வொர்க் சேவையை உருவாக்குதல்,பராமரிப்பு செய்தல் அதன் பாதுகாப்பை வளப்படுத்துதல், ஆய்வுசெய்தல், பிரச்சினை ஏதுமிருந்தால் சரிசெய்து பழுது பார்த்தல் போன்றஅறிவை வளப்படுத்தி மேம்படுத்தும் திறனை இதுவழங்குகிறது

2,LPIC3: இது முது நிலை சான்றிதழ் தேர்வாகும், சுதந்திரமான லினக்ஸ் அடிப்படையிலான உயர்நிலை அறிவை பெற உதவுகிறது.  மிகப்பெரிய நிறுவனத்தில் லினக்ஸ் சார்ந்த தளத்தை நிருவகிக்கும் திறனை இதுவழங்குகிறது,

இதுவரை பார்த்தவைகளில் ரெட் ஹேட்டை அடிப்படையாக கொண்ட RHCTமற்றும் RHCE ஆகிய இரண்டும் ஏட்டு கல்வியுடன் செய்முறை பயிற்சியையும்  பரிசோதிக்கும் தேர்வாக கட்டமைக்கபட்டுள்ளது.  இந்த தேர்வு  5 மணி நேரம் கொண்டதாகும்,இது பொதுவாக செக்சன் 1   செக்சன் 2   என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. செக்சன் 1 தேர்வில் 2 1./2 மணிநேரம் அனுமதிக்கப்படுகிறது.

இதில் தேர்வு எழுதுபவரிடம் கணிப்பொறி உதிரிபாகங்களை வழங்கி குறிப்பிட்ட நேரத்திற்குள் கணிப்பொறியை மிகச்சரியாக பொறுத்தி அமைத்துவிட வேண்டும என கோரப்படுகிறது,

செக்சன் II இது மூன்று மனிநேர தேர்வாகும் இதில் செக்சன் I ல் பொறுத்தபட்ட  வெற்று கணிப்பொறியை தேர்வாளரிடம் வழங்கி குறிப்பிட்ட நேரத்திற்குள் பயாஸ் மற்றும் சீமாஸ் செட்டிங்கை அமைத்து OS களை நிறுவி அமைவுசெய்து இதை இயக்கி காண்பிக்கவேண்டும், மேலும் எவ்வாறு நம்முடைய நிகழ்கால வாழ்க்கை சூழலில் இந்த OS கள் இணைந்து செயல்படுகிறது என்ற ஆழ்ந்த அறிவை பரிசோதிக்கிறது.  நிகழ்காலத்தை பற்றி அறிந்து கொள்ள வில்லையெனில் இந்த தேர்வில் வெற்றி பெற இயலாது.

இந்த RHCE யானது RH033, RH133 ஆகிய இரண்டு மாடூல்களை கொண்டது. இவையிரன்டையும் முடித்தால் மட்டுமே RHCT ரெட் ஹேட் தொழில் நுட்ப வல்லுனர் என்ற சான்றிதழ் பெறமுடியும். இதற்கு ரூபாய்10000/.= கோர்ஸ்பீஸாகவும, ரூபாய்7500/= தேர்வு கட்டணமாகவும் செலவாகும்,

இதன்பிறகு RH 253 என்றமாடூல்ஸை முடித்தால் RHCEஎன்ற தேர்வை முடித்ததாக சான்றிதழ் பெற முடியும்.

ஒவ்வொரு மாடூல்ஸையும் எழுதுவதற்கு. ரூபாய் 6000/= மற்றும் ரூபாய்7500/=தேர்வு கட்டணமாகவும் செலவாகும்.  இந்த ரெட் ஹேட் RHCTசான்றிதழ் பெற்று  ஓரிரு வருட அனுபவம் உடையவர்கள் ஆண்டிற்கு  ரூபாய் ஐந்துஇலட்சம் வரை வருமானம் ஈட்டமுடியும்.  RHCE சான்றிதழ் பெற்றவர்கள்  ஆண்டிற்கு  ரூபாய் எட்டு இலட்சம் வரை பொருளீட்ட முடியும்.  இந்த ரெட்ஹேட் பயற்சி மையம் எங்கெங்கு உள்ளது.எவ்வாறு இதில் பதிவு செய்து பயற்சிபெறுவது போன்றவிவரங்களை http://www.redhat.in/training/location.php3    என்ற வலை தளத்திற்கு சென்று தெரிந்து கொண்டு செயல்படுங்கள்.

Novel linex Certification

உலகாளவிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வியாக நாவல் லினக்ஸ் சான்றிதழ் உள்ளன.  இவையனைத்தும் SUSE லினக்ஸ் அடிப்படையாக கொண்டவையாகும.

ஆனால் இதன் அடிப்படை தியரியானது அனைத்து லினக்ஸிற்கும பொதுவானதுஆகும் செய்முறை பயிற்சி மட்டும் SUSE லினக்ஸ் பற்றியதாகும்

இதில் CCE,CLP ஆகிய இரண்டையும் ஒரே சமயத்தில் முடிக்க வேண்டும் இந்த தேர்வில்  இரண்டு மணிநேரம் மட்டுமேஅனுமதிக்கப் படுகிறது, இதுவும்ரெட் ஹேட்  போன்று,OS சிஸ்டத்தை நிறுவுதல், அமைவு செய்தல்,பிரிண்டரை அமைவுசெய்தல், நெட்மெயிலை நிறுவுதல், போன்ற செயல்களை செய்யுமாறும்  குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கும்படியும் தேர்வாளர் கேட்டுக் கொள்ளப்படுவார்.

ஆயினும் இந்தியாவில் CLP மட்டுமே செயல் படுத்தபடுகிறது. CLP ஆனது இரண்டுமாடூல்கள் பல்வேறு லினக்ஸ் பதிப்பின் அடிப்படையில் உள்ளது.  முக்கியமான நகரங்களில் மட்டும் இரண்டுமாத்திற்கு ஒருமுறை மட்டும் இதனுடைய பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன.

Comp TIA’s லினக்ஸ் இது அடிப்படை கருத்துகள் மற்றும் செய்முறை பயிற்சி சேர்ந்த தொழில் சார்ந்த படிப்பாகும்.  இது பல்வாய்ப்பு  வினா விடை அமைப்பை கொண்டது இவைகளை 94 நிமிடங்களில்  முடிக்கவேண்டும். இதில் குறைந்தது ஆறுமாத பயிற்சியாவது பெற்றிருக்க வேண்டும்  இது ஒரு லினக்ஸின் ஆரம்பநிலை தேர்வாகும் லினக்ஸை நிறுவுதல், பாராமரித்தல்,அமைவு செய்தல்,குறைகளை களைதல் போன்றவற்றில் அடிப்படை அறிவை பரிசோதிப்பதாகும், செய்முறைபயிற்சி ஏதும் இதில் இருக்காது,.

Linex Professional Institue LPI

இந்த லினக்ஸ் கல்வி நிறுவனம் ஜூனியர், இடைநிலை,சீனியர் ஆகிய  மூன்று நிலைகளில் தேர்வுகளை நடத்துகிறது,  இவை கடினமான தேர்வுகளல்ல, ஆயினும் லினக்ஸ் தளத்தை பற்றிய முழுமையான அறிவை இவை பரிசோதிக்கின்றன.  LPI தேர்வுகள் ஜூனியர்  முதல் சீனியர்வரை அனைத்து நிலைகளிலும் படிப்படியாகக் ஒரு தேர்வாளர் எவ்வாறு லினக்ஸை பற்றிய தெளிவான அறிவை பெற்றுள்ளார் என பரிசோதிக்கிறது.

LPICI இது ஒரு ஜூனியர் அளவு தேர்வுஆகும்,இது 101,102 என இரண்டு மாடூல்களைகொண்டது.  இது பல்வாய்ப்பு கேள்வி பதில் கொண்டது.  லினக்ஸின் பணிபுரிந்த  முந்தைய அனுபவம் எதுவும் இதற்கு தேவையில்லை ஆயினும் கணிப்பொறியை பற்றிய அடிப்படை அறிவை பெற்றிருந்தால் மட்டும் போதும்.

LPIC2 இதில் 201,202ஆகியஇரண்டு மாடூல்களால்  தேர்வு நடத்தப்படுகிறது.  இது ஒரு இடைநிலை அளவு தேர்வாகும்

LPIC3 இதில் 301,302 ஆகிய இரண்டு மாடூல்களில் தேர்வு நடத்தப்படுகின்றன இது சீனியர் நிலை தேர்வாகும் .

இவைகளில் உங்கள் பெருளாதார நிலைக்கு ஏற்ற அளவு தேர்வினை எழுதி வெற்றி பெறுங்கள். இந்த வாய்ப்பினை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி  தகுதிக்கேற்றபணியினைபெற்று வாழ்வில்  கணிசமான பொருளை ஈட்டுங்கள்,

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003-தொடர் -பகுதி-36-சாதாரண XML ஆவணத்தை உருவாக்குதல்

தரவுகளை அணுகுதலின் பக்கங்கள் (DATA ACCESS PAGES): ஒருஅக்சஸிற்கு வெளியிலிருந்து பாதுகாக்கப்பட்ட தகவல்களே இணையப்பக்கம் ஆகும். இது தரவுதளத்துடன் இணைப்பாக இருப்பதால் இதனை இணைய உலாவியின் மூலம் திறக்கவோ அல்லது நிகழ்நிலைப்படுத்தவோ முடியும். அக்சஸின் படிவங்களும் அறிக்கைகளும் XMLன் அடிப்படையாக கொண்ட Report XML கோப்பாக (பாதுகாக்க) தேக்கப்படுகிறது. இதுவே தரவுகளையும் தரவுகளின் மாதிரிகளையும் வைத்து ஒரு DAPயை உருவாக்க உதவுகிறது.

பொதுவாக இணையப்பக்கங்களை நிலையானது(Static) , இயக்க நிலையானது (Dynamic) ஆகிய இருவகையாக பிரிக்கலாம். நாம் முதன் முதலில் உருவாக்கிய இணைய பக்கம் மாறாமல் எப்போதும் அப்படியே  இருப்பது நிலையான  (static) பக்கம் ஆகும். பின்னர் ஏதேனும் மாறுதல் செய்திருந்தால் அவ்வாறு மாற்றப்பட்டவாறு பிரதிபலிக்காது.

அதன் மறுதலையாக எவ்வப்போது மாறுதல் செய்கின்றோமோ அந்த மாறுதலுடன்  தோன்றுவது  இயக்கநிலை(Dynamic) பக்கமாகும். நடப்பு தரவுகள் இதில் பிரதிபலிக்கும்.

உண்மையில் DAP ஆனது ஒரு இயக்க நிலை பக்கமாகும் அதனால் இதில்  உலாவுதல், தேடுதல், வடிகட்டுதல், மாறுதல் செய்தல், சேர்த்தல், நீக்குதல் போன்ற பல்வேறு பணிகளை செய்ய முடியும்.

ஒரு DAP யை உருவாக்குமுன் கீழ்காணும் பொதுவான கருத்துகளை கவனத்தில் கொள்ளவும்.

1.ஒரு DAPயை உருவாக்கியவுடன் இதனை எவரும் இணையத்தில் தேடிபார்த்திட முடியும் என்ற தவறான கருத்தினை கொள்ள வேண்டாம். முறையான படிமுறையில் இணையத்தில் இதனை  வெளியீடு செய்தால் மட்டுமே மற்றவர் களால் இணைய தளத்தில் இதனை  தேடி காண முடியும்.

2.ஒரே நிறுவனத்தில் இருப்பவர்கள்  LAN இணைப்பிருந்தால் மட்டும்Internet explorer மூலம் இயக்க நிலை பக்கமாக இதனை காண முடியும்.

3.இந்த DAP ஆனது அக்சஸை விட்டு வன்தட்டின் வேறு பகுதியில் சேமிக்கப் படுவதால் இதனை Delet என்ற கட்டளை மூலம் நீக்கம் செய்யும்போது அக்ஸஸ் தொடர்பையும்(Link) நீக்கம் செய்திடவா   என கேட்டு நிற்கும். அதனால் நீக்கம் செய்யும் போது கவனமாக செய்யவும்.

4.மற்ற வகை வழிமுறையில்  ஒரு DAPயை உருவாக்குவதை விட தரவு தளத்தில் உள்ள Object ஐ உருமாற்றம் செய்வதன் மூலம் DAPயாக ஆக்குவது நல்லது. இதற்காக VBA குறிமுறைகள் ஏதும் திரையில் காண முடியாது.

5.இயக்க நிலை HTML ஆக இது இருப்பதால் வாடிக்கையாளர்,சேவையாளர் சூழலில் இதனை அணுகுவது மிகத்திறன் வாய்ந்த செயலாகும்.

இந்த DAPயை எவ்வாறு உருவாக்குவது என அக்ஸஸ-2003 தொடர்-பகுதி-19 இல் கண்டோம்.

XML மற்றும் இணையதளத்தில் பயன்படும் ஒரு சில வார்த்தைகளை பற்றி இப்போது காண்போம்.

 1) அடுக்கி வைத்த அழகுத்தாள்கள் (Cascading Style Sheet) (CSS):.

இது ஒரு வலைப்பக்கத்தில் உரை விவரங்கள் இடம்பெறும் விதம்,அதன்எழுத்துரு, உருவ அளவு, வண்ணம் போன்றவை வரைமுறைக்குள் நிர்ணயிக்கப்  பட்டு பிரதிபலிக்க செய்யப்படும் அடுக்கி வைக்கப்பட்ட HTML  ஆவண பக்கங்கள் ஆகும்.

 2) ஆவண வகை வரையறை (Document Type Defuilt) (DTP)

உறுப்புகளின் பெயர் மற்றும் பண்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் என முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட வரையறைக்குள் எந்த வரிசையில் இவைகள் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு  பயன்படுத்துவதற்கு உதவுகிறது.

 3) உறுப்புகள் (Element): இது XML ஆவணத்தில் உறுப்புகளை வரையறுக்கும் போது ஆரம்பத்தையும் முடிவையும் சுட்டிகாட்டும் அடையாளக் குறி (tag)யாகும்.

4) XSLT: இது ஒரு XML ஆவணத்தின் கட்டமைவை பல்வேறு கோணங்களில் காண்பதற்கு ஏற்றவாறு  மாறுதல் செய்ய பயன்படுகிறது.

5) XML அமைப்பு முறைகள் (schema):  இது தரவுத்தளத்தின் கட்டமைப்பை வரையறுப்பதற்குகான மொழியாகும்.

 6) XSD: ஒரு XML கோப்பில் schema  தகவல்கள் அடங்கியதாகும்.

7) XSL: இது XML ஆவணத்துடன் இணைப்பாக உருவாக்கப்படும் அழகிய அடுக்கு தாள்களாகும,.

ஒரு சாதாரண XML ஆவணத்தை உருவாக்கும் படிமுறை

1)அட்டவணை (table), நூலக அமைப்பு (Library system), பொருள் இருப்பு அமைப்பு  (inventory system) போன்றவற்றில் ஒன்றை உருவாக்குவதாக முடிவு செய்து கொள்க..

2)அதற்கு ஏதேனுமொரு பெயரை சூட்டுக.

3)ஒவ்வொரு ஆவணத்திற்கும் என்னென்ன புலங்கள் எத்தனை உருவாக்குவது எனவும் முடிவு செய்து கொள்க.

4)பொதுவான வகை (படிமுறை 1), அட்டவணையின் பெயர் (படிமுறை 2), புலங்களின் பெயர் (படிமுறை 3) ஆகியவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு நிலையிலும் அடையாளக் குறியை (tag)  பயன்படுத்துக.

5)XML ஆவணத்தில் புலங்களில் உள்ள பக்கம் என்னவாக இருக்க வேண்டும்   எனவும் குறிப்பிடுக.

6)XML வகையாக அறிவிப்பு செய்யும் வரியுடன் XML  ஆவணஙகளை  < ?XML version “1.1”?> என்றவாறு உருவாக்க  ஆரம்பிக்கவும்.

7)ஆரம்ப அடையாளக்குறி  (start tag),  முடிவு அடையாளக்குறி (end tag),  XML  ஆவணத்தின் மற்ற உள்ளடக்கங்களை படம்-1 உள்ளவாறு உள்ளீடு செய்க.

8)இந்த XML ஆவணத்திற்கு ஒரு பெயரிட்டு  சேமித்திடுக.

 

மாதிரி நிரல் தொடர்-36-1

< ? XML version = “1.0”? >

< Reading Programme >

< School Book >

< Book Title > introduction to access < / Book Title >

< Author > (KUPPAN.S) < / Author>

< Grade > < /Grade >

< Date read ( 2012-04-24) < /Date Read >

< / School Books >

< / Reading programme >

சொடுக்குதல் செய்யாமலேயே ஒரு இணைப்பு பாதுகாப்பானதாவென கூறமுடியுமா

ஏதேனுமொரு உரைத்தொகுப்பிற்கு இடையில் குறிப்பிட்ட போலியானதொரு இணைய தளத்தினை தொடர்பு கொள்வதற்கான இணைப்பினை வழங்கியிருப்பார்கள் நாமும் அது போலியானதா உண்மையானதா என சரிபார்க்காமல் அதன்மீது இடம் சுட்டியை வைத்து சுட்டியை சொடுக்கிடுவோம்  உடன் அவ்விணைப்பானது நம்மை போலியான இணையதளத்திற்கு  அழைத்து செல்லும் இவ்வாறு  அவ்விணைப்பை சொடுக்காமலே அது போலியானதா நம்பகமானதாஎன அறிந்துகொள்வதற்கு URLVoid , (இதற்கான முகவரி http://www.urlvoid.com/ ), MyWOT (இதற்கான முகவரி http://www.mywot.com/)  போன்ற Link Scanner பயன்பாட்டு கருவிகள் பயன்படுகின்றன

 

உரைத்தொகுப்பிற்கு இடையில் உள்ள ஒரு இணைப்பிணை தெரிவுசெய்து சொடுக்கு வதற்குமுன் அதன்மீது  இப்பயன்பாட்டு கருவிகளில் இணைப்பு முகவரியை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் அதனை வருடி குறிப்பிட்ட இணைப்பு பாதுகாப்பானதா அல்லது பிஷ்ஷிங் தளமாவென காண்பித்துவிடும்

 

 

 

பின்வரும் ஐந்து வழிகளில் பணியிடத்து மின்னஞ்சலை பாதுகாத்திடுக

நம்முடைய பணியிடத்தில் எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் மின்னஞ்சலை உருவாக்கி அதனுடன் தேவையான கோப்பினை இணைத்து அனுப்பிவிடலாம் என்ற வசதி இருந்தாலும்  அதனால் வைரஸ் தாக்குதல்  பிஷ்ஷுங் இணைப்பு ஏற்படுத்தி போலியான இணையதளத்திற்கு நம்மை அழைத்துசென்று நம்முடைய சொந்த தகவலை அபகரித்து கொள்ளுதல்  என்பன போன்ற ஏராளமான தீங்குகள் நமக்கு இந்த மின்னஞ்சல் வாயிலாக ஏற்பட வாய்ப்புள்ளது   இந்த பாதிப்புகளை தனிநபருக்கு ஏற்படாமல் தவிர்ப்பதற்காக Google , Facebook ஆகிய தளங்கள் DMARC என்ற செந்தரத்தை பராமரிக்கின்றன  இது எப்படி இருந்தாலும் பின்வரும் ஐந்து வழிமுறைகளில் நம்முடைய மின்னஞ்சல் பாதுகாப்பானதாக இருக்குமாறு பராமரிக்கமுடியும்  

2.1கடவுச்சொற்களால் பாதுகாத்தல் மடிக்கணினி அல்லது தனியாள் கணினி பயன்படுத்துவோர்  மின்னஞ்சல் தளத்திற்கு சென்று பார்வையிடுவதற்கு  பதிலாக Outlook ,Thunderbird என்பன  வசதிமூலம் கணினியை இயக்கியவுடன் தானாகவே நம்முடைய மின்னஞ்சல் பதிவிறக்கம் ஆகுமாறு செய்துவிடுவார்கள் இதன்மூலம் நம்முடைய மடிக்கணினியை அல்லது தனியாள் கணினியை யார்வேண்டுமாணாலும் இயக்க தொடங்கியவுடன் பதிவிறக்கம் ஆகி மின்னஞ்சலை பார்வையிடும் அபாயம் உள்ளது அவ்வாறே நம்முடைய கைபேசியிலும்நம்முடைய மின்னஞ்சலை பதிவிறக்கம் ஆகுமாறு செய்திருப்போம் யாரேனும் ஒருவர் நம்முடைய கைபேசியில் பதிவிறக்கம் ஆகும் மின்னஞ்சலை பார்வையிடும் அபாயம் உள்ளது   அதனால் நம்முடைய மின்னஞ்சலை  கடவுச்சொற்களின் மூலமாகமட்டுமே திறந்து பாரக்கமுடியும் என்றவாறு அமைத்திடுக

2.2 மிகவலுவான கடவுச்சொற்களால் பாதுகாத்தல்  மின்னஞ்சலை கடவுச்சொற்களால் பாதுகாப்பு செய்கின்றேன் என மிக சுலபமாக யூகிக்கத்தக்கதாகவோ அல்லது ஓரிரு எழுத்துகளிலோ இல்லாமல் குறைந்து எட்டு எழுத்துகள் வருமாறும் அவைகளுள் சிறிய எழுத்தும் ,பெரிய எழுத்தும் ,எண்களும், சிறப்பு குறியீடும் கலந்ததாக இருக்குமாறு அமைத்திடுக. .இந்த கடவுச்சொற்களை யூகித்து உடைத்தெரிவதற்காக சிறிய எழுத்துகளெனில் ஒருசிலநிமிடங்களிலும் சிறிய எழுத்துடன் பெரிய எழுத்தும்  கலந்தது எனில் ஒருசில நாட்களிலும் அதனுடன் எண்களும் கலந்ததுஎனில் ஒருசில வருடங்களிலும் அதனுடன் சிறப்பு குறியீடும் சேர்நததுஎனில் பல்லாயிரக்கணக்காண ஆண்டுகள்   ஆகும்   அதனால் கடவுச்சொற்களானது  சிறிய எழுத்துடன் பெரிய எழுத்தும்  .எண்களும் சிறப்பு குறியீடும் சேர்ந்த கலவையாக குறைந்தது எட்டு எழுத்துகளுடன் அமைத்திடுக அதுவே மிகவலுவான பாதுகாப்பாகும்

2.3  HTTPS என்ற வழிமுறையை பின்பற்றுதல்  இந்த HTTPS இணையதளத்தில் உள்ள  மின்னஞ்சலானது முதலில்  குறியீடுகளாக உருமாற்றும் (encrypts) செய்யபட்டு அதன் பின்னரே இம்மின்னஞ்சல் அனுப்பபடுகின்றது இதனால் நம்முடைய மின்னஞ்சலை யாரும் குறுக்கே புகுந்து அபகரித்து அதனை decrypts செய்யாமல்  படித்தறியமுடியாது

2.4 மின்னஞ்சலுடன் கோப்புகளை இணைப்பாக அனுப்புவதை தவிர்த்திடுக எந்தவொரு மின்னஞ்சலுடன் உள்ள இணைப்பு கோப்பை முதலில் அதனை  viruses , malware ஆகியவை சேராமல் பாதுகாப்பாக உள்ளதாவென வருடி ஆய்வுசெய்து அதன்பின்னரே அதனுடைய இணைப்பு கோப்பினை திறக்க முயற்சிக்கவும்  அதற்கு பதிலாக கோப்பினை  மற்றவர்களுக்கு Box.com or Dropbox, ஆகிய வசதிமூலம் அனுப்புவதே  மிகபாதுகாப்பான வழியாகும்

2.5 பிஷ்ஷிங்கிலுருந்து பாதுகாத்திட  நமக்குவரும் மின்னஞ்சலின் இணைப்பை தொடரும்போது  போலியான இணையதளத்திற்கு நம்மை அழைத்துசென்று  அங்கு  உள்நுழைவு செல்வதற்காக நம்முடைய சொந்த தகவலை கோரும்போது அது நம்பகமான தளமாஎன சரிபார்த்திட முடியாமல் நாம் அபாய புதைகுழி்க்குள் மூழ்கிடுவோம் இந்த பிஷ்ஷிங் தாக்குதலிலிருந்து தற்காத்திட இவ்வாறான போலியான இணைப்பு தளத்திற்கு செல்வதை தவிர்த்திடுமாறு அறிவுரை வழங்கபடுகின்றது அல்லது சமீபத்தில் மின்னஞ்சல் சேவையை வழங்கும் இணைய தளங்களுக்காக அறிமுகபடுத்திய  DMARC என்ற  செந்தரத்தை அவை பின்பற்றுகின்றனவாவென சரிபார்த்திடுக.

,புதியவர்களுக்கு கணினியில் ஆலோசனைகள்

 

1.1விசைப்பலகையை பயன்படுத்தி கணினியின் திரை இயக்கத்தை  நிறுத்தம் செய்ய முடியும்

இதற்காக dekisoft Monitor Off Utilityஎன்ற பயன்பாட்டு கருவி பயன்படுகின்றது. இந்த கருவியின் உதவியால் விசைப்பலகையில் ஏதேனுமொரு HotKey ஐ அமைப்பதன் மூலம் விசைப்பலகையை பயன்படுத்தி கணினியின் திரை இயக்கத்தைநிறுத்தம் செய்ய முடியும் அதுமட்டுமல்லாது  கணினியின் திரை இயக்கத்தை Standby ஆகவும் ,screen saver ஆகவும், பாதுகாப்பு கவசமாகவும் இதனை உபயோகபடுத்தி கொள்ளமுடியும் இதனால் நம்முடைய மின்சார பயன்பாட்டின் செலவு மிச்சபடுத்தபடுகின்றது   இதனை http://www.dekisoft.com/download.htm  என்ற இணையதளத்திலிருந்த பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளலாம்

1.2 கம்பியில்லா வலைபின்னலை   Wireless Network Watcher என்ற பயன்பாட்டின் மூலம் பாதுகாத்திடலாம்

 

நம்முடைய கம்பியில்லா வலைபின்னலில் யார்யாரெல்லாம் இணைந்துள்ளனர் எந்தெந்த சாதனங்களெல்லாம்  இதே கம்பியில்லா வலைபின்னலில் இணைக்க பட்டுள்ளன என அறிந்து கொள்வதற்கு Wireless Network Watcher என்ற பயன்பாட்டு கருவி பயன்படுகின்றது இது ஒரு கம்பியில்லா வலைபின்னலில்இணைந்துள்ள ஒவ்வொருவரின் IP முகவரி, ஒவ்வொரு சாதனத்தின் பெயர்  மற்றும் அவைகளின் இதர தகவல்களையும்  திரையில் பிரதிபலிக்க செய்கின்றது  அதுமட்டுமல்லாது கம்பியில்லா வலைபின்னலின் பின்புலத்தில் இணைப்பிலுள்ள அனைத்தையும் வருடி ஏதேனும் புதிய சாதனம் இணைக்கபட்டால் அல்லது புதியவர் இணைந்தால் உடன் அந்த தகவலை நம்முடைய கணினியின் திரையில் பிரதிபலிக்க செய்கின்றது  அதனால் நமக்கு தெரியாமல் எந்தவொரு சாதனமும் அல்லது எந்தவொரு நபரும் நம்முடைய கம்பியில்லா வலைபின்னலில் அத்துமீறி இணையமுடியாது அவ்வாறு இணைந்தால் அந்த தகவலை நமக்கு காட்டி கொடுத்துவிடும்      இதனை http://www.nirsoft.net/utils/wireless_network_watcher.html  என்ற இணையதளத்திலிருந்த பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளலாம்

1.3 கூகிள் என்றதேடுபொறியின் privacy policyஎன்பது வசதியாஅல்லது இது spy policy வசதியா

  கூகிள் என்ற தேடுபொறி நிறுவனமானது தம்முடைய தனித்தனியான 64   privacy policy வசதிகளை  நீக்கம் செய்துவிட்டு அதற்கு பதிலாக இவைகளை தம்முடைய மற்ற தரவுகளின் சேவையோடு சேர்த்து இணைத்துவிட்டு  இந்த privacy policy வசதிகள் தற்போது மிக பாதுகாப்பாக இருக்கின்றன என இந்நிறுவனம் கூறுகின்றது அதுமட்டு மல்லாது பயனாளருக்கு இதனால் புதிய அனுபவம் வளரும் என்ற பொய்யான தகவலையும் தருகின்றது மேலும் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை ஒட்டு மொத்தமாக சேகரித்து விளம்பர நிறுவனங்களுக்கு வழங்கி அதன்மூலம் தம்முடைய வருவாயை பெருக்கி கொள்வதில்தான் குறியாக உள்ளதேயொழிய தனிநபரின் சுதந்திரம் பறிபோவதைபற்றியோ அத்தகவல்களை கொண்டு விலை பேசுவதை பற்றியோ அந்நிறுவனத்திற்கு கவலையில்லை ஆனால் இவ்வாறான இந்நிறுவனத்தின் செயல் நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் மற்றவர்களால் காண்பதற்கான  இந்தprivacy policy  வசதியானது spy policy  வசதியாக போனதுதான் உண்மை நிலையாகும்

 

1.4       மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விஸ்டா (32-bit பதிப்பில்) என்ற இயக்க முறைமையில் GodMode என்ற மறைக்க பட்ட வசதியை இணைத்திருந்தது இதன்மூலம் பயனாளர் ஒருவர் ஒரு சாளரத்திற்குள் அனைத்து அமைவுகளையும் திரையில் காணவும் தமக்கேற்றவாறு அதனை சரிசெய்து அமைத்துகொள்ளவும் முடியும்  இதே மறைக்க பட்ட வசதி விண்டோ 7 -ல்(32-bit பதிப்பில்) கூட உள்ளது  இதனை செயல்படுத்துவதற்கான குறுக்குவழி செயலை பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி உருவாக்கி பயன்படுத்தி கொள்க.

கணினியில் எங்கு பணிபுரிந்து கொண்டிருந்தாலும் அங்கு புதிய மடிப்பகம் ஒன்றை உருவாக்குக பின்னர் GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C} என்ற உரையை  தவறில்லாமல் அந்த மடிப்பகத்திற்குள் உள்ளீடு செய்து ஒருகோப்பாக உருமாற்றி கொண்டு அந்த மடிப்பகத்திற்கு  புதியபெயரை அமைத்து கோப்பினை சேமித்திடுக உடன் இதற்கான குறுக்கு வழிவிசையும்  GodMode என்ற சாளரம் ஒன்றும்   திரையில் தோன்றிடும்

1.5 மால்வேர் தாக்குதலிலிருந்து கணினியை பாதுகாத்திட தற்போது உலகில் இலட்சகணக்கான கணினி இந்த மால்வேர் பாதிப்பால் செயலிழந்துள்ளன அதிலிருந்து நம்முடைய கணினியை பாதுகாத்து கொள்வதற்கு http://www.quickheal.com/chkdns.asp  என்ற  இணைப்பை சொடுக்கி நம்முடைய கணினி மால்வேரினால் பாதிக்காமல் பாதுகாப்பாக உள்ளதாவென  சரிபார்த்து கொள்க நானும் என்னுடைய கணினியை சரிபார்த்தேன் பாதுகாப்பாக உள்ளதாக காம்பித்தது

1.6 ஜிமெயில் சேவையில் வெளியில் செல்லும் மின்னஞ்சலில் Star  ,labels ஆகியவற்றை சேர்த்து இணைத்து அனுப்பும் வசதி புதியதாக அறிமுகபடுத்தபட்டுள்ளது இதன்மூலம் பிற்காலங்களில் அம்மின்னஞ்சல் சரியாக போய்சேர்ந்ததா அதற்கு பதிலேதும் கிடைக்கபட்டதா என்பனபோன்ற தகவலை சரிபார்த்திட முடியும்

Previous Older Entries