பேரளவு தரவுகளைகொண்டு அனைத்து செயல்களையும் செய்திட உதவும் Polyglot persistence எனும தளம்

ஆவணங்களுக்கான தரவுதளமாக MongoDBஎன்பது இருக்கின்றது  சிறிய அளவில் வினா எழுப்புதல் போன்றவகையில் இது நன்கு செயல்படுகின்றது ஆனால் அட்டவணைகளை முழுமையான ஆவணங்களை இணைப்பதில் இது சிக்கல் ஏற்படுத்துகின்றது

வரைபடங்களுக்கான தரவுதளமாக Neo4jஎன்பது இருக்கின்றது  தரவுகளை விரைவாக அனுகுவதற்கான தற்காலிக தரவுதளமாக Redisஎன்பது விளங்குகின்றது  தேடுதலுக்கான தரவுதளமாக Elastic searchஎன்பது இருக்கின்றது கிடைமட்டதகவலாக வைத்திடுவதற்கு Cassandraஎன்பது உள்ளது

தற்போதைய பேரளவு தரவுகளைகொண்டு மேலேகூறிய அனைத்து செயல்களையும் ஒரே தளத்தில் கிடைப்பதற்கு Polyglot persistence என்பது விளங்குகின்றது  இதுமிகவிரைவாகவும் தானியங்கியாக செயல்படும் திறன்மிக்கதாகவும் அனைத்து வகையான தரவுதளங்களின் பண்புகளும் ஒருங்கிணைந்ததாகவும் விளங்குகின்றது இதனை தற்போதைய நம்முடைய பேரளவு தரவுதள தேவைக்காக பயன்படுத்தி கொள்க

37.5

சேவையாளர் கணினியை கட்டுபடுத்தி நெறிபடுத்திவழிநடத்திடுவதற்கு Monitorix எனும் கட்டற்ற கருவியை பயன்படுத்தி கொள்க

37.4

Cacti,Munin,Nagios Monitorixஎன்பன போன்ற பல்வேறு எண்ணற்ற சேவையாளர் கணினியை கட்டுபடுத்திடும் கருவிகள் நடப்பில் இருந்தாலும் Monitorixஎன்பது ஒரு கட்டற்ற எளிய சேவையாளர் கணினியை கட்டுபடுத்தி வழிநடத்திடும் ஒரு சிறந்த கருவியாகும் இது கணினியின் பணிச்சுமை, சேவை ஆகியவற்றின் தேவை நினைவக வெப்பநிலையை கட்டுபடுத்துதல் கணினியின் வெப்பநிலையை கட்டுபடுத்துதல் வலைபின்னல் வாயில்களின் போக்குவரத்தை கட்டுபடுத்துதல் அவற்றிற்கான புள்ளிவிவரங்களை வழங்குதல் இணைய சேவையாளரின் புள்ளிவிவரங்களை வழங்குதல் மைஎஸ்கியூஎல் இன்செயல்பாடுகளை கட்டுபடுத்துதல் அவற்றிற்றகான புள்ளிவிவரங்களை வழங்குதல் மின்னஞ்சல் பயன்பாட்டிற்கான புள்ளிவிரங்களை வழங்குதல் தூரத்திலிருக்கும் சேவையாளரையும் கட்டுபடுத்துதல் புள்ளிவரங்களை தினமும் வாரம் ஒருமுறை மாதம்ஒருமுறை வருடமொரமுறை வழங்குதல்என்பனபோன்ற ஏராளமான செயல்களை பயன்களை இந்தMonitorixஎனும் கருவியின்வாயிலாக சேவையாளர் கணினியில் பெறமுடியும் இதனை பற்றி மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கும் செய்துகொள்ளவும் http://www.monitorix.org/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க

கண்களை பாதுகாத்திட உதவிடும்Redshift 1.10 எனும் கட்டற்றமென்பொருள்

 37.2

புதியபுதிய கண்டுபிடிப்புகள் நாகரிக வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் தற்போதைய காலகட்டத்தில்  நாம் அனைவரும்  எல்லா செயலிற்கும் கணினியே கதியாக 24மணிநேரமும் பயன்படுத்தி வருகின்றோம் அதனை தொடர்ந்து நம்முடைய கண்ணிற்கு நம்மை அறியாமலேயே  பல்வேறுவகையில் பாதிப்பு வர ஏராளமான வாய்ப்புகள் உள்ளன  அவ்வாறான பாதிப்புகளிலிருந்து நம்முடைய கண்களை பாதுகாத்திட Redshift எனும்பயன்பாடு உதவியாக உள்ளது இது f.lux எனும் இதனுடைய கருவியின் வாயிலாக கணினித்திரையின் வெப்பஅளவு ,வண்ணங்கள், ஒளிரும்அளவு போன்றவைகளை நாம் வாழும் இடஅமைவிற்கும் சூழலிற்கும் ஏற்றவாறு மாற்றி சரிசெய்து அமைத்துகொள்கின்றது அதன்வாயிலாக நம்முடைய கண்களின் பார்வைதிறனிற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் காத்திடுகின்றது இந்த Redshift எனும் பயன்பாடு GPLv3எனும் அனுமதியின் அடிப்படையில் http://http://jonls.dk/redshift// எனும்தளத்தில் கிடைக்கின்றது இது லினக்ஸ் இயக்கமுறைமையில் செயல்படுமாறு உருவாக்கபட்டிருந்தாலும் விண்டோ இயக்கமுறைமை சூழலிலும் செயல்படுமாறு செய்யபட்டுள்ளது வாருங்கள் இந்த Redshift 1.10 எனும் இதனுடைய பதிப்பை நம்முடைய கணினியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி நம்முடைய கண்களை பாதுகாத்திடுக

எச்சரிக்கை இந்த பயன்பாடானது கட்டளைவரிவாயிலாகமட்டுமே செயல்படுமாறு செய்யபட்டுள்ளதால்  அவ்வாறே செயல்படுத்தி பயன்பெறுக

ஓவியங்களை வரைய உதவும்curiator எனும் தளம்

curiatorஎனும் தளமானதுஒவியத்தில்அதிக ஈடுபாடுஉள்ளவர்களுக்குபெரிதும் உதவும் தளமாக விளங்குகின்றது இந்த தளத்திற்கு சென்றவுடன் திரையின் மேலேஉள்ள play button எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்திடுக உடன் இந்த தளத்தினை பற்றியவிவரத்தினை படகாட்சியாக காண்பிக்கின்றது இந்த படக்காட்சி முடிந்தவுடன் திரையின்மேலே வலதுபுறமூலையில் உள்ள Xஎனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல்செய்து இந்த திரையை மூடிவிடுக அதன்பிறகு இதில் ஏராளமான அளவில் தொகுத்து வைக்கபட்டுள்ள உருவபடங்களையும் படங்களையும் காட்சியாக கண்டு திருப்தியுற்ற பின்னர் Sign Up எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து முகநூல், கூகுள், நம்முடைய மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றின் வாயிலாக ஒருபயனாளராக இந்த தளத்தில் பதிவுசெய்துகொண்டு உள்நுழைவு செய்து படங்களை எவ்வாறு உருவாக்குவது பதிவேற்றம் செய்வது அல்லது நேரடியாக எவ்வாறு உருவாக்குவது என கூறும் முழுமையான செயல்விளக்கங்களை அறிந்துகொண்டு நம்முடைய படம்வரையும் பணியை துவங்குக பிறகு வரையபட்ட நம்முடைய படங்களை தொகுப்பாக இந்த தளத்தில் சேமித்துகொண்டு அவற்றை நம்முடைய நண்பர்களுடன் பகிர்ந்துகொள்க மேலும் விவரங்களுக்கும http://curiator.com/ எனும் இந்த தளத்திற்கு சென்று விரங்களை அறிந்து பயன்படுத்தி கொள்க

37.2

மென்பொருள்வரையறுக்கும் சேமிப்பகத்திற்கும் (SDS) மெய்நிகர் சேமிப்பகத்திற்கும் (storage virtualization) உள்ள வித்தியாசம் யாது

கணினி பயன்படுத்திடும் பலர் (SDS) என சுருக்கமாக அழைக்கபடும் மென்பொருள்வரையறுக்கும் சேமிப்பகம்(Software-defined storage ) மெய்நிகர் சேமிப்பகம் (storage virtualization) ஆகிய இரண்டிற்குமான வித்தியாசம் யாது என அறிந்துகொள்ளாமல் தமக்குள் குழப்பமடைவார்கள் நிற்க

1.1

மென்பொருள்வரையறுக்கும் சேமிப்பகம்(Software-defined storage ) ஆனது வன்பொருள் அடுக்கி்னை நகலெடுத்தல், நொடிப்பு சேமிப்புகள், படியாக்கம் செய்தல் ஆகியமென்பொருள் அடுக்கிற்கு மாற்றி யமைக்கின்றது அதன்மூலம் இந்த அடுக்கானது நடப்பு சேமிப்பக வளங்களுக்கு மேல்பகுதியில் இருந்திடுமாறும்மேம்பட்ட வசதிகளை இவை பெற்றிடுமாறும் செய்கின்றது அதன் தொடர்ச்சியாக நடப்பிலுள்ளஒட்டுமொத்த சேமிப்பகத்தினை பதிலீடு செய்திடாமலேயே முந்தைய அல்லது பழைய சேமிப்பகத்தை புதிய செயலிமூலம் செயல்படுமாறு செய்கின்றது இதன்மூலம் புதியவசதிகளை மீயினைப்பு அடுக்கிற்கு நக்ரத்தி செல்கின்றது அங்கு ஒருங்கிணைந்த ஆழ்ந்த நிலையில் சேமிப்பக வசதி கிடைக்கசெய்கின்றது அதன்பயனாக சேமிப்பக திறன் அளவு மிகைபடுத்துதல் ஆகியவை பயன்பாட்டு மென்பொருளை சார்ந்து உயர்த்தி கொள்ளபடுகின்றது

1.2

மெய்நிகர் சேமிப்பகம் (storage virtualization) என்பது பல்லடுக்கு தொகுப்பான சேமிப்பகத்தின் ஒன்றுசேர்த்து ஒன்று அல்லது ஒன்றிற்குமேற்பட்டதாங்கிகளாக உருவாகசெய்கின்றது அதன்மூலம் சேமிப்பகத்தின் அளவையும் திறனையும் உயர்த்துகின்றது மேலும் பல்லடுக்கு தொகுப்பான சேமிப்பகவளத்தினை எளிதான ஒருங்கிணைந்த மெய்நிகர் அளவாக உருமாற்றுகின்றது இந்தபல்லடுக்கு தொகுப்பான சேமிப்பகத்தினை மெய்நிகர்நிலையில் கட்டுபடுத்தபடுகின்றது

அதனால் இவையிரண்டும் வெவ்வேறு செயலிகளை கொண்டது என அறிந்துகொள்க

லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர்-தொடர்-37-உள்ளடக்கங்கள், வரிசைகள் நூலாசிரியர்களின் விவரங்களுக்கான அட்டவணைகள்

லிபர் ஆஃபிஸ்4.ரைட்டரில் இவற்றை உருவாக்குவதற்குமுன் முந்தைய தொடர்களில் விவரித்துள்ளவாறு லிபர் ஆஃபிஸ் ரைட்டரின் பாவணைகளில் (Styles) நன்கு பயிற்சி பெற்றுள்ளோமா என உறுதி படுத்திடுக இங்கு உள்ளடக்கங்களுக்கான அட்டவணைகளில் மிகமுக்கியமாக பொதுவாக பயன்படுத்துபடும் வழிமுறைகளைமட்டும் விவரிக்கபடுகின்றது இந்த உள்ளடக்கங்களின் அட்டவணையானது தலைப்பு 1 தலைப்பு 2 என்றவாறு அதிகபட்சம் 10 வகையான பாவணைகளில் லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் உருவாக்கி பராமரிக்கமுடியும் இந்த உள்ளடக்க அட்டவணையின் முதன்மையான பயன்யாது எனில் குறிப்பிட்ட தலைப்பில்இடம்சுட்டியை வைத்து சொடுக்குதல் செய்தவுடன் லிபர் ஆஃபிஸ் ரைட்டரானது தொடர்புடைய பகுதிக்கு நம்மை அழைத்து சென்றுவிடும் என்பதுதான். முதலில் இந்த உள்ளடக்கங்களுக்கான அட்டவணையை எவ்வாறு விரைவாக உருவாக்குவது என காண்போம் பொதுவாக மிகநீண்ட உரைதொகுப்பினை உருவாக்கிடும்போது தலைப்பு 1 தலைப்பு 2 என்றவாறு வெவ்வேறுவகையான தலைப்புகளில் அதிகபட்சம் 10 வகையான பாவணைகளில் உரையை உருவாக்கிடுக பின்னர் அட்டவணை அமையவிருக்கும் இடத்தில் இடம்சுட்டியை வைத்து லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேஉள்ள கட்டளை பட்டையில் Insert =>Indexes and Tables =>Indexes and Tables=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் விரியும் Insert Index/Tableஎனும் உரையாடல் பெட்டியில் OK.எனும் பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து ஒரு அட்டவணையை உள்ளிணைத்திடுக

நம்முடைய உரைத்தொகுப்பின் அனைத்து பத்திகளின் தலைப்பும் நாம் உருவாக்கிய உள்ளடக்கங்களுக்கான அட்டவணையில் தோன்றவில்லையெனில் இதே திரையின் மேலேயுள்ள கட்டளை பட்டையில் Tools =>Outline Numbering=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக இது தானாக உருவான இந்த உள்ளடக்கங்களுக்கான அட்டவணையெனில் வரிகளிலுள்ள எழுத்துகளானது வெளிர்நீலவண்ணத்தில் தோன்றிடும் அவற்றுள் ஏதேனுமொரு தலைப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் தொடர்புடைய தலைப்பு இருக்கும் பகுதிக்கு நம்மை லிபர் ஆஃபிஸ் ரைட்டரானது அழைத்து செல்லும் இந்த வரிகளின் எழுத்துகளை நாமாக முயன்று தட்டச்சு செய்து உருவாக்கமுடியாது இந்த உள்ளடக்கங்களுக்கான அட்டவணைகளில் உள்ள தலைப்புகளானது வெளிர்நீலவண்ணத்தில் இருக்கவேண்டாமென விரும்பினால் இதே திரையின் மேலேயுள்ள கட்டளை பட்டையில் Tools =>Options =>LibreOffice=>Appearance=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக பின்னர் விரியும் உரையாடல்பெட்டியின் Index and table shadingsஎன்பது தெரிவுசெய்யபட்டிருந்தால் அதனை நீக்கம் செய்திடுக இதன்வழியாக வரிகளில் உள்ள எழுத்துகளில் மட்டுமே வெளிர்நீலவண்ணத்தில் தோன்றாது ஆயினும் தலைப்பு வரிக்கும் குறிப்பிட்ட தலைப்பு உள்ள இடத்தை குறிப்பிடும் பக்கங்களின் எண்ணிற்கு இடைபட்ட பகுதியில் அதே வெளிர்நீலவண்ணத்தை காண்பிக்கும் அதையும் தேவையில்லையென நீக்கம் செய்திடவிரும்பினால் இதே திரையின் மேலேயுள்ள கட்டளை பட்டையில் Tools =>Options =>LibreOffice Writer =>Formatting Aids=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக பின்னர் விரியும் உரையாடல்பெட்டியின் tabsஎன்பது தெரிவுசெய்யபட்டிருந்தால் நீக்கம் செய்திடுக

இந்நிலையில் இடம்சுட்டியை நகர்த்தி இந்த உள்ளடக்கங்களுக்கான அட்டவணை பகுதியின் மேல் கொண்டு சென்று மேலூர்தல் செய்திடும்போது இடம்சுட்டியானது திரையில் தோன்றவில்லை எனில் இதே திரையின் மேலேயுள்ள கட்டளை பட்டையில் Tools =>Options =>LibreOffice Writer =>Formatting Aids=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக பின்னர் விரியும் உரையாடல்பெட்டியின்Cursor in protected areas என்ற பகுதியில் Enable என்பதை தெரிவுசெய்திடுக இவ்வாறு ஒரு உரைத்தொகுப்பில் உள்ளடக்கங்களுக்கான அட்டவணையை உருவாக்கியபிறகு ஏதேனும் பத்தியை அதன் தலைப்புடன் நீக்கம் செய்தாலோ அல்லது புதிய பத்திகளை தலைப்புகளுடன் உருவாக்கினாலோ உடனுக்குடன் அதனை இந்த அட்டவணையில் கொண்டுவருவதற்காக இந்த உள்ளடக்கங்களுக்கான அட்டவணையுள்ள பகுதியில் இடம்சுட்டியை நிறுத்திவைத்துகொண்டு சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன்விரியும் சூழ்நிலை பெட்டியில் Update Index/Table என்றவாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நிகழ்நிலை படுத்திகொள்க ஒருசில நேரங்களில் நீக்கம்செய்யப்பட்ட தலைப்புகளும் அப்படியே தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் Edit =>Changes =>Show=>என்ற கட்டளைவரிகளின் வாயிலாக உரைகளில் மாறுதல் கள் செய்தபின் அந்த பணிமுடிவடைந்ததும் உடன் இந்த கட்டளையை முடக்கம் செய்திடுக

லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் இயல்புநிலையில் உள்ளடக்கங்களுக்கான அட்டவணையை உருவாக்குவதற்குபதிலாக நாம் விரும்பியவாறும் உருவாக்கிடுமுடியும் அதற்காக அட்டவணை அமையவிருக்கும் இடத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேஉள்ள கட்டளை பட்டையில் Insert =>Indexes and Tables =>Indexes and Tables=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன்விரியும் Insert Index/Table எனும் உரையாடல் பெட்டியில் OK.எனும் பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து புதியதொரு அட்டவணையை உள்ளிணைத்திடுக பின்னர் இந்த உள்ளடக்கங்களுக்கான அட்டவணையுள்ள பகுதியில் இடம்சுட்டியை நிறுத்திவைத்துகொண்டு சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்திடுக பின்னர் விரியும் சூழ்நிலை பெட்டியில் Edit Index/Table என்றவாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் Index/Table எனும் உரையாடல் பெட்டியில் உள்ள Index/Table எனும் தாவிபக்கத்தின் வாயிலாக உள்ளடக்கங்களுக்கான தன்மைகளையும் Entries and Styles எனும் தாவிபக்கத்தின் வாயிலாக உள்ளடக்கங்களுக்கான உள்ளீடுகளின் வடிவமைப்புகளையும் Columns எனும் தாவிபக்கத்தின் வாயிலாக உள்ளடக்கங்களுக்கான நெடுவரிசைகளின் எண்ணிக்கையையும் Backgroundஎனும் தாவிபக்கத்தின் வாயிலாக உள்ளடக்கங்களுக்கான உள்ளீடுகளின் உரைவரிகளில் பின்புல வண்ணங்களையும் வரைகலைகளையும் நாம் விரும்பியவாறு மாறுதல்கள் செய்துகொள்ளமுடியும் இவ்வாறு மாறுதல்கள் செய்தால் உள்ளடக்கங்களுக்கான அட்டவணையின் தோற்றம் எவ்வாறு மாறிஅமையும் எனInsert Index/Table எனும் உரையாடல் பெட்டியில் முன்காட்சியாக காணமுடியும் இதனை செயல்படுத்திட இதே உரையாடல் பெட்டியில் கீழே வலதுபுறமுள்ள Preview எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அதனை திரையில் தோன்றசெய்திடுக அதன்பின்னர் Columns , Backgroundஆகிய தாவிகளின் பக்கங்களில் each page in turnஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு Resetஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து மறுஅமைவை உறுதிசெய்துகொள்க Entries, Styles pages ஆகிய தாவிகளின் பக்கங்களிலும் Resetஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து மறுஅமைவை உறுதிசெய்துகொள்க இறுதியாக OK.எனும் பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நாம் செய்த மாறுதல்களை நிகழ்நிலைபடுத்திகொள்க இந்த உள்ளடக்கங்களுக்கான அட்டவணையில் இவ்வாறான மாறுதல்களை நம்மை தவிர வேறு நபர்கள் செய்திடாதவாறு பாதுகாத்திட இதே உரையாடல் பெட்டியின் Index/Table எனும் தாவிபக்கத்தின் Protected against manual changes எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துகொள்க

தலைப்பு 1 தலைப்பு 2 என்றவாறு வெவ்வேறுவகையான தலைப்புகளை அதிகபட்சம் 10 வகையான பாவணைகளில்உரையை உருவாக்கிடலிபர் ஆஃபிஸ் ரைட்டர் அனுமதிக்கின்றது என தொடரின் ஆரம்பத்திலே கூறப்பட்டது ஆயினும் நடைமுறையில் அதைவிட கூடுதலான எண்ணிக்கை தேவையெனில் இதே உரையாடல் பெட்டியின் Index/Table எனும் தாவிபக்கத்தின் Evaluate up to level எனும் வாய்ப்பு பெட்டியில் நாம் விரும்பிய அளவினை தெரிவுசெய்துகொள்க

இதன்வாயிலாக உள்ளடக்கங்களுக்கான அட்டவணை பகுதியில் கொண்டுவரபடும் சூழ்நிலை பட்டியலைகொண்டு ஆவணம் முழுவதும் உள்ள தலைப்புகளை இந்த அட்டவணைகளில் கொண்டுவருவதற்கு அல்லது குறிப்பிட்ட பகுதிகளின் தலைப்புகளை மட்டும் கொண்டுவருவதற்கு அனுமதிக்கின்றது அல்லது முதன்மை தலைப்புகளை மட்டும் அதாவது தலைப்பு 1 நிலைமட்டும் கொண்டுவர அனுமதிக்கின்றது

37.1

மேலும் சுற்றெல்லையை மட்டும் கொண்டு இந்த உள்ளடக்கங்களுக்கான அட்டவணையை உருவாக்கலாம் அதற்காக லிபர் ஆஃபிஸ் திரையின் மேலேஉள்ள கட்டளைபட்டையிலுள்ளTools =>Outline Numbering. => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக பின்னர் விரியும் திரையில் தலைப்பு 1 தலைப்பு 2 என்றவாறு வெவ்வேறுவகையான தலைப்புகளை அதிகபட்சம் 10 வகையான பாவணைகளில் அமைத்து இந்த சுற்றெல்லை வழிமுறையில் உருவாக்கிடமுடியும் இதற்குமுன் Index/Table எனும் உரையாடல் பெட்டியின் Index/Table எனும் தாவிபக்கத்தின் திரையில் outline levels எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துகொள்க

37.2

அதுமட்டுமல்லாது இதே Index/Table எனும் உரையாடல் பெட்டியின் Index/Table எனும் தாவிபக்கத்தின் திரையில் Additional Styles எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துகொள்வதின் வாயிலாக உள்ளடக்கங்களுக்கான அட்டவணையை உருவாக்கிடமுடியும்

மேலும் இதே Index/Table எனும் உரையாடல் பெட்டியின் Index/Table எனும் தாவிபக்கத்தின் திரையில் index marksஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்துகொள் க பின்னர் லிபர் ஆஃபிஸ் திரையின் மேலேஉள்ள கட்டளைபட்டையிலுள்ளInsert >Indexes and Tables =>Entry => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்வதன் வாயிலாக உள்ளடக்கங்களுக்கான அட்டவணையை உருவாக்கிடமுடியும்

இதே உரையாடல் பெட்டியின் உள்ளீடுகள் எனும் தாவிபக்கத்தின் உதவியுடன் உள்ளடக்கங்களுக்கான அட்டவணையைில் உள்ளீடு செய்யபடும் உரையை வரையறை செய்து வடிவமைப்பு செய்திடுமுடியும் அதன்பின்னர் அவ்வுரைகளின் ஒவ்வொரு உறுப்புகளின்பாவணைகளும் மற்றவற்றை சாராமல் தனித்தனியாக இருக்குமாறு செய்துகொள்ளமுடியும்

ERPஎன்றால் என்ன?

13

நிறுவனத்தின் வளங்களை திட்டமிடுதலையே(Enterprise Resource Planning) சுருக்கமாக ERPஎனஅழைக்கின்றனர் தற்போது இந்த ERPஎன்பது ஏன்முக்கியத்துவம் பெறுகின்றதுஎனில் நம்முடைய இந்தியாவில் 1980 வரை அரசாங்கவேலையே பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியதாக இருந்தது அதிலும் கிராமபகுதியில் “கழுதை மேய்ப்பதாக இருந்தாலும் கவர்மென்ட் வேலையாக இருக்கவேண்டும்”என கூறுவார்கள் அதன்பின்னர் டாக்டர்களாகவும் இஞ்சினியர்களாகவும் ஆவதுதான் மதிப்புமிக்கதாக 1990 வாக்கில் இருந்தது தற்போது ஒருரூபாய் வருமானமாக இருந்தாலும் சுயதொழிலாக இருக்கவேண்டும் என்ற நிலைமைக்கு மாறியள்ளது குறிப்பாக நாம் மற்றவர்களிடம் கைகட்டி பணிசெய்வதைவிட நம்மிடம் நான்குபேர் கைகட்டி பணிசெய்திடவேண்டும் என்றநிலைஉருவாகியுள்ளது அதனால் தனிநபர்கள் கூட சுயமாக தொழில் நடத்தும் வசதிவாய்ப்புகள் உருவாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் ஒருநிறுவனத்தின் நிதிநிலைகளை கையாளுவது உற்பத்தி பொருட்களை கையாளுவது பணியாளர்களை கையாளுவது ஆகியபணிகளை சின்னஞ்சிறிய நிறுவனங்கள் கூட அவைகளுக்கு என தனித்தனியாக பணியாளர்களை நியமனம்செய்து கட்டுபடுத்துவதைவிட கணினிமயமான இன்றைய நாளில் ERP மிகமுக்கிய பங்காற்றுகின்றது தற்போது கணக்குபதிவியலிற்கு பயன்படும் டேலியில் கூட டேலிஈஆர்பி எனும் பதிப்பானது இவ்வாறான பணிகளுக்கு ஏற்ப தகவமைத்து வெளியிடபட்டுள்ளது அனைவரும்அறிந்ததே இந்நிலையில் கட்டணமற்ற கட்டற்ற மென்பொருட்கள் மதிப்புமிக்க நிறுவனத்தின் வளங்களை கட்டுபடுத்திடுவற்காக ஏதேனும் உள்ளதாவென ஆய்வுசெய்தால் கிடைப்பதுதான ERPNextஎனும் கட்டற்ற மென்பொருளாகும் இது திட்டமிடுதல், உற்பத்திசெய்தல்,சந்தைபடுத்துதல் ,விற்பணைசெய்தல் ,நிதிநிலைகளை கையாளுதல், பணியாளர்களுக்கான சம்பளபட்டியை கையாளுதல், பணியாளர்களை கையாளுதல் என நிறுவனத்தின் அனைத்து வளங்களையும் கையாளுவதற்கான மிகஅருமையான கட்டற்ற பயன்பாட்டு மென்பொருளாக இருக்கின்றது இதனை https://erpnext.com/download எனும் இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம்செய்துநம்முடைய கணினிகளில் நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்க பொதுவாக கணக்குபதிவியலில் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது முதற்குறிப்பேடாகும் இதனை இந்த பயன்பாட்டின் திரையில் கொண்டுவர Accounts=>Documents=>Journal entry=>new=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக நிறுவனத்தின் விற்பனை நடவடிக்கைகளை திரையில் கொண்டுவர Selling=>Document=Customer=>new=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை கையாளுவதற்காக Stock=> Documents=>material request=New=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

உற்பத்தி பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் சேமிப்பு கிடங்குகளை கையாளுவதற்காக stock => warehouse=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

மனிதவளங்களான பணியாளர்களின் விவரங்களை கையாளுவதற்காக human resources=> employee=>new=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

இறுதியாக நிறுவனத்தை பற்றிய அனைத்து தகவல்களையும் இணையத்தின் வாயிலாக வெளியிடுவதற்காக website=>weppage=>new=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.

Previous Older Entries