நம்முடைய தேவைக்குTelegramஎனும் சமூக செய்தியாளர் பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்க

Telegramஎன்பது மிகவிரைவாகவும், பாதுகாப்பாகவும், மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான தகவல் தொடர்பிற்கான கட்டணமற்ற, விளம்பரங்களற்ற, சமூக செய்தியாளர் சேவையாகும்.. இது செல்லிடத்து பேசி, மடிக்கணினி, கைக்கணினி, மேஜைக்கணினி போன்ற அனைத்து வகையான சாதனங்களிலும் செயல்படும் திறன்கொண்டது. இந்த செய்தியாளர் சேவையின் வாயிலாக உரைச்செய்திகள், உருவப்படங்கள், கானொளிக்காட்சிகள் ஆகியவற்றின் doc, zip, mp3போன்ற எந்தவொருவகையான கோப்பாக இருந்தாலும் ,அனுப்பவும் பெறவும் முடியும். .மேலும், தனிநபர் முதல் குழுவான நபர்கள்வரை மட்டுமல்லாது வரையறையற்ற வகையில் எத்தனை நபர்கள் வேண்டுமானலும் குழுவாக ஒன்றுசேர்ந்து தங்களுக்குள் செய்திகளை இந்த Telegram வாயிலாக பரிமாறிகொள்ளமுடியும் . மேலும் ,அவ்வாறான நம்முடைய தொடர்பு நபர்களை அவர்களின் பயனாளர்களின் பெயர்களின் வாயிலாக தொகுக்கமுடியும். அதனைதொடர்ந்து இந்த Telegram எனும் வசதியானது குறுஞ்செய்தியும் மின்னஞ்சலும் இணைந்ததொரு புதிய தனிப்பட்ட அல்லது வியாபார தகவல் தொடர்பாளராக உருவாகிவிடுகின்றது .

இந்த Telegram ஆனது மேககணினிஅடிப்படையில் செயல்படும் செய்தியாளர் சேவையாகும்அதனால் செல்லிடத்து பேசி, மடிக்கணினி, கைக்கணினி, மேஜைக்கணினி போன்ற அனைத்து சாதனங்களிலும் இதனை செயல்படுத்தி பயன்பெறமுடியும்.. இந்த செய்தியாளர் சேவையின் வாயிலாக உரைச்செய்திகள், உருவப்படங்கள் ,கானொளிகாட்சிகள் ஆகியவற்றின் doc, zip, mp3போன்ற எந்தவொருவகையான கோப்பாகஇருந்தாலும் 1.5 ஜிபிவரை கையாளமுடியும்.. இது ஒரு கட்டணமற்ற, விளம்பரங்களற்ற ,வாடிக்கையாளர் பயன்படுத்திடுவதற்கான கட்டணமெதுவும் செலுத்ததேவையற்ற செய்தியாளர்சேவைதளமாகும். . மேலும்,நம்முடைய தேவைக்கேற்ப இந்த தளத்தின் பயன்பாட்டினை நாமே உருவாக்கிவளர்த்து கொள்ளும் கட்டற்றமென்பொருள் வசதியையும் இது அளிக்கின்றது. மேலேகூறிய இதிலுள்ள வசதிவாய்ப்புகளினால் வாட்ஸ்அப்பைவிட இது மிகசிறந்ததாக மிளிருகின்றது.

குறிப்பிட்ட சாதனங்களில் மட்டும்தான் இதுசெயல்படும் என்றவரையறை எதுவுமில்லாமல் ஐஃபோன் சாதனங்களிலும்iOS(6உம் அதற்குபிந்தையபதிப்பிலும் ), ஐபேடு சாதனங்களிலும், ஆண்ட்ராய்டு சாதனங்களிலும்Android(2.2 உம் அதற்குபிந்தையபதிப்பிலும் ), விண்டோஃபோனிலும் இணைய பதிப்பாகவும், விண்டோ ,லினக்ஸ் போன்ற இயக்கமுறைமைகளில் செயல்படும் மேஜைக்கணினி பதிப்பாகவும் , இதனை செயல்படுத்தி பயன்பெறமுடியும்ஆயினும், எந்த இடத்திலும் நம்முடைய செல்லிடத்து பேசியின் எண்ணை மட்டுமே அடிப்படை தொடர்பாளராக பயன்படுத்தி கொள்ளவேண்டும். இது தனிப்பட்ட நபர்களின் விவரங்களை தகவல்களை மூன்றாம் நபருக்கு பகிர்ந்து கொள்ளாது. அதனால் மற்ற சமூகபயன்பாடுகளை போன்று தொல்லைதரும் விளம்பரங்கள் எதுவும் இதில் இல்லை. அதுமட்டுமல்லாது இதுவியாபார நோக்கமற்ற மக்களுக்கிடையே தகவல்தொடர்பை எளிதாகவும் விரைவாகவும் அமைத்திடும் ஒருசமூகசேவைதளாகவும் இது விளங்குகின்றது என்ற செய்தியை மனதில் கொண்டு அனைவரும் வாருங்கள் இந்த சேவையை வந்த பயன்படுத்தி பயன்பெறு

telegram-2

கட்டற்ற கோ எனும் நிரல்தொடர்மொழியை அறிந்துகொள்க

Go என்பது கணினியின்அமைவு செயல்முறையை மனதில்கொண்டு பொதுபயன்பாட்டிற்காக உருவாக்கபட்டஒரு நிரல்தொடர்மொழியாகும் . இந்த கோஎனும் மெழியானது கூகுள் நிறுவனத்தின் Robert Griesemer, Rob Pike, Ken Thompson. ஆகியோரால் சேர்ந்து 2007இல் உருவாக்கபட்டு பொதுபயன்பாட்டிற்காக 2009 இல் வெளியிடபட்டது. இது மென்பொருள் உருவாக்குபவருக்கு ஒருவலுவான நிலையானவகையில் குப்பையான கட்டளைகள் அனைத்தையும் சேகரித்து ஒதுக்குவதற்கான உள்ளக கட்டமைப்பை வழங்குகின்றது. இது கட்டளைகள் அனைத்தும் ஒன்றுசேரும் புள்ளியை சார்ந்துள்ளதை திறனுடன் நிருவகிப்பதற்கான செயல்முறையை ஆதரிக்கின்றது என்ற அடிப்படையை பயன்படுத்தி இந்த நிரல்தொடர் மொழியானது கட்டமைப்பட்டுள்ளது. இந்த கோ எனும் நிரல்தொடர்மொழியானது கட்டளைவரிகளை இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்தல், இணைப்பு வழங்குதல் ஆகிய பழையவழக்கமாக நாம் பயன்படுத்திவரும் வழி முறைகளை பயன்படுத்தி செயலிகளின்குறிமுறைகளை உருவாக்குகின்றது.

1

இது இயக்கநேர மொழிகள்போன்று தற்போது உள்ள சூழலைஏற்றிடும் வகையை ஆதரித்திடுமாறும், , குறிமுறைவரிகளை இயந்திரமொழிக்கு விரைவாக மொழிமாற்றம் செய்திடுமாறும் ,இடைமுகத்தையும் ,உள்பொதிதல் வகையையும் ஆதரித்திடுமாறும், மற்றபயன்பாடுகளை சார்ந்திராமல் சுயமாக நிலையான இணைப்பை கொண்டுஇயங்கிடுமாறும், அனுகுவதற்கு எளியதாக இருந்திடுமாறும் , பாதுகாப்பானதாகவும் , கட்டளைகள் அனைத்தும் ஒன்றுசேரும் புள்ளியின் உள்ளககட்டமைப்பை ஆதரித்திடுமாறும் வடிவமைக்கபட்டுள்ளது .

மிகமுக்கியமாக இது மரபுரிமைவகையை யும், வழிமுறை அல்லது இயக்குபவரின் அதிகபளுவையும் ,கட்டுகளுக்கிடையே சுற்றுமறையை சார்ந்திருப்பதையும்,

சுட்டிடும் கணக்கீட்டையும், மதிப்பீ்ட்டை உண்மையாக்கும் உறுதிபடுத்துதலையும் .

பொதுவான நிரல்தொடரையும் ஆதரிக்காதுஎன்ற செய்தியை மனதில் கொள்க.

இந்த கோ நிரல்தொடரானது குறைந்தது மூன்றுவரிக்கட்டளைகள் முதல் மில்லியன் கணக்கான கட்டளைவரிகளை கொண்டு ஒன்றிற்கு மேற்பட்ட தனித்தனி உரைகோப்புகளாக “vi”, “vim”போன்ற எந்தவொரு உரைபதிப்பானிலும் .goஎனும் பின்னொட்டுடன் உருவாக்கமுடியும்.

அதுமட்டுமல்லாது நம்முடைய கணினியில் இதற்காக தனியானதொரு மென்பொருளை நிறுவுகை செய்திடாமலேயே நேரடியாக இணையத்தின் வாயிலாக கூட நாம்விரும்பும் நமக்கு தேவையான நிரல்தொடர்களை உருவாக்கி மொழிமாற்றம் செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்.

இதனை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து செயற்படுத்திடுவதற்காக (1) Text Editor , (2) The Go Compilerஆகிய இரண்டு மென்பொருட்களும் அடிப்படைத்தேவையாகும்.

இந்த மென்பொருள் இயங்குவதற்காக நம்முடைய கணினியின் இயக்கமுறைமைக் கேற்ற நாம் வழக்கமாக பயன்படுத்திடும் உரைபதிப்பானானவிண்டோவின் நோட்பேடு,பிரீஃப், எப்ஸிலான் எமாக்ஸ் விம்,விஆகியவற்றுள் ஒன்று நம்முடைய கணனியில் இருந்தால் போதுமானதாகும். இந்த உரைபதிப்பானில் நாம் உருவாக்க போகும் கோப்பானது .goஎனும் பின்னொட்டுடன் உருவாக்கிடவேண்டும் என்ற செய்தியை மட்டும் மனதில்கொள்க.

இந்த கோ எனும் மொழியை பயன்படுத்திடவிழைபவர் கணினியின் நிரல்தொடர் குறிமுறைவரிகளை எழுதுவதிலும் அதனை இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்வதிலும் ஓரளவாவது அனுபவம் பெற்றவராக இருக்கவேண்டும்..

விண்டோ இயக்கமுறைமை எனில் 32-bit (386) அல்லது 64-bit(amd64) x86 ஆகிய செயலிகளை கொண்ட கட்டமைவுடன் லினக்ஸ்,மேக்ஒஎக்ஸ் ஆகிய எந்தவொரு இயக்கமுறைமையிலும் இது செயல்படும்திறன் கொண்டதாகும்.. ஆனால், அந்தந்த இயக்கமுறைமக்கேற்ற இதனுடைய மென்பொருள் கோப்பினை https://golang.org/dl/ எனும் இணையபக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்க.. நாம்படித்தறியும் வகையில் இருக்கின்ற இதனுடைய நிரல்தொடர் குறிமுறைவரிகளான மூலக்குறிமுறைவரிகளை இந்த மென்பொருளானது அதனை இயந்திரங்கள் படித்தறியும் கட்டளைவரிகளாக மொழிமாற்றம் செய்து நாம் செயல்படுத்தி செயல்படுத்துவதற்கேற்றவாறு செய்கின்றது.

இதற்காக இந்த கோ எனும் மொழியின் மென்பொருள் கட்டுகளை இதனுடைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்தபின் நம்முடைய கணினியில் நிறுவுகை செய்துகொள்க

இதன் பின்னர் இந்த மென்பொருளை பயன்படுத்தி நம்முடைய முதன்முதலான எளிய நிரல்தொடர்கட்டளைவரிகளை உருவாக்கவிருக்கிருக்கின்றோம் அந்த கட்டளை வரித்தொடரானது பின்வருமாறு இருக்கும்

package m ain

im port “fm t”

func m ain() {

/* This is m y first sam ple program . * /

fm t.Println(வருக! வருக! வணக்கம்!”)

}

இந்த கோ எனும் மொழியினுடைய கட்டளைவரிகளின் முதல்வரியானது நிரல் தொடரின் பெயருடன்கூறிய package main எனும் முதன்மை அறிவிப்பு வரியாகும்.

அதற்கடுத்ததாக இருப்பது முன்செயலி கட்டளைவரியாகும். இந்த வரியானது fm t எனும் கட்டுகளில் இந்த நிரல்தொடர்குறிமுறைவரிகள் இருக்கும் என கோமொழியின் மொழிமாற்றிக்கு அறிவிப்பு செய்கின்றது.

மூன்றாவது வரியானது நிரல்தொடர்குறி முறைவரிகளின் கட்டளைகள் துவங்கும் func main()எனும் முதன்மை செயலி வரியாகும் .

அதற்கடுத்த நான்காவது வரியானது இந்தகுறிமுறை வரிகள் எதற்காக எழுதபட்டது என்ற தகவலை நமக்கு அளிக்கும் வரியாகும். இந்த வரியானது /*…*/ எனும் குறியீட்டிற்குள் இருப்பதால் அதனை மொழிமாற்றியானது விட்டுவிடும்.

ஐந்தாவது வரியானது நாம் கூறும் செய்தியை fmt.Printlnஎனும் கட்டளைவரியின் வாயிலாக செய்திகளை திரையில் பிரதிபலிக்கசெய்வதற்கான கட்டளைவரியாகும். இந்த குறிமுறை வரியில் உள்ள Printlnஎன்பதன்முதல் எழுத்தான Pஎன்பது பெரிய எழுத்தாக இருக்கின்றது. இந்த கோஎனும் மொழியில் கட்டளைபெயரின் முதல் எழுத்து பெரியஎழுத்தாக இருக்குவேண்டும் என்ற செய்தியைமட்டும் மனதில்கொள்க.

இந்த கோஎனும் நிரல்தொடர்குறிமுறைவரிகளில் நாம் எழுதும் அனைத்து கட்டளைவரிகுறிமுறைவரிகளும் func main()எனும் முதன்மை செயலிக்கு அடுத்ததாக “{“ எனும் குறியீட்டுடன் தொடங்கி இறுதியாக “}” எனும் குறியீட்டுடன் முடிவடையவேண்டும் என்ற செய்தியையும் மனதில் கொள்க

இந்த குறிமுறைவரி தொடர்களை எவ்வாறு செயல்படுத்துவதுஎன இப்போது காண்போம்

ஏதேனும் உரைபதிப்பானை திறந்து மேலேகூறிய நிரல்தொடர் குறிமுறை வரிகளை உருவாக்கிகொள்க. பின்னர் இந்த கோப்பினை வருகவணக்கம்..go” என்ற கோப்பாக சேமித்து கொள்க அதன்பின்னர் கணினியின் கட்டளைவரிகளை செயல்படுத்திடும் command promptஎனும் கருப்பு வெள்ளை திரையில் வருகவணக்கம்..go” என்ற கோப்பினை நம்மால் சேமிக்கபட்ட இடத்திற்கு செல்க. பின்னர் அங்கு go run வருகவணக்கம்..go என்றவாறு கட்டளைகளை உள்ளீடு செய்து உள்ளீட்டு (enter)விசையை அழுத்துக. உடன் நம்முடைய நிரல்தொடர்குறிமுறைவரிகளில் பிழைகள் எதுவும் இல்லையெனில் வருக! வருக! வணக்கம்! என்ற செய்தி திரையில் பிரதிபலிக்கும் .

நன்றி: கணியம் மின்னிதழ்

எழுத்தாளர்களாக உருவாகுவதற்காக எழுதக்கற்றுதரும் இணையதளம்

முந்தைய காலத்தில் எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் எனில் இவர்களை விரல்விட்டு எண்ணிவிடும் அளவிற்கு மட்டுமே மிககுறைந்த எண்ணிக்கையில் இருந்தனர். ஏனெனில்  எவ்வளவு தான் எழுதினாலும் பத்திரிகைகளும் நாளிதழ்களும் அவை விருப்பபட்டால் மட்டுமே வெளியிடும் என்றநிலை இருந்துவந்தது.  அதனைதொடர்ந்து இன்றைய அறிவியல் வளரச்சியினால் தற்போது இணைய வசதி வந்தபின்னர் ஏராளமான நபர்கள் வலைபூக்கள் என்றும் இணைய பக்கங்கள் என்றும் எழுதி தள்ளுகின்றனர். ஆயினும்  நாம் எழுதுவது பிழையாகிவிடுமோ என்ற தயக்கத்தில் பெரும்பாலானவர்கள் எழுதாமல் தயக்கமாகவும் மயக்கமாகவும் உள்ளனர்.  அவ்வாறு தயங்கிடும் அல்லது மயங்கிடும் எழுத்தாளர்களை ஊக்கவித்து எழுத செய்வதற்கென்றே ஏராளமான கருவிகள்  தற்போது இணையத்தில் கிடைக்கின்றன  அவைகளைபற்றிய பொதுவான தகவலை இந்த கட்டுரையில் காணலாம் நாம் முதலில் எழுதத் துவங்கியவுடன் அவ்வாறு எழுதும் ஒருசில பத்திகளை மட்டும்  http://iwl.me/ எனும் தளத்தில் உள்ள காலி இடத்தில் கொண்டுவந்து ஒட்டுதல் செய்தால் நாம் எந்தவகையான எழுத்தாளர் என இந்த தளமானது வகைபடுத்தி காண்பிக்கும் . அதிலும்  (http://www.richardclegg.org/previous/write) எனும் தளமானது மிகவித்தியாசமாக நம்மைபற்றிய விவரத்தை காண்பிக்கின்றது.

1

அதற்கடுத்ததாக  http://www.hemingwayapp.com/ எனும் தளமானத மிக்கசரியாக நேரடியாக செய்தியை எப்படி பயனாளர்களுக்கு கூறுவது என வழிகாட்டுகின்றது அதிலும்  நம்முடைய சொற்றொடர்களின் தவறுகளை blue, purple, orange, green , cyan  ஆகிய பல்வேறு வணணங்களாக பிரித்து காண்பித்து நம்மை மிகச்சரியாக திருத்தம் செய்து வெளியிடுமாறு வழிகாட்டுகின்றது .

அதற்கடுத்ததாக https://readability-score.com/ எனும் தளமானது எளிய சொற்றொடர்களின் வாயிலாக பயனாளர்களை எவ்வாறு படித்திடுமாறு செய்வது என ஏழுநிலைகளில் பயிற்சி அளிக்கின்றது  மேலும்  நாம் உருவாக்விருக்கும் உரையின்ஒரு பத்தியில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கை சொற்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களையும் இந்த தளம் வழங்குகின்றது.

2

பொதுவாக சிறுகதைகள் நாவல்கள் எழுதுபவர்கள் புனைபெயரில் எழுதுவார்கள் அவ்வாறானவர்களுக்கும உதவவருவதுதான் http://www.fakenamegenerator.com/gen-male-ar-sw.php எனும் தளமாகும்.

ஆழ்நிலைதியானம் போன்ற அறிவுரைகளை எழுதவிழைபவர்கள் http://750words.com/ எனும் தளத்திற்கு செல்க  இதை போன்று புதிய எழுத்தாளர்களாக உருவாகி வளர்த்து கொள்ள ஏராளமான கருவிகள் எண்ணற்றவகையில் இணையத்தில் உள்ளன .அவைகளை அந்தந்த இணைய பக்கத்திபற்கு சென்று அறிந்துகொண்டு நாமும் சிறந்த எழுத்தாளராக வளரமுடியும்.

 இரு நிகழ்வுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை அறிந்துகொள்க

1.

நாம் எப்போதும் நாம் கண்ணால் காண்பதற்கும் அதற்கு மறுதலையாக உள்ள காட்சி ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அறி்ந்துகொள்ளவிழைவோம் அவ்வாறு இரு நிகழ்வுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை அறிந்துகொள்ள உதவுவதுதான் http://www.differencebetween.net/எனும்  தளமாகும் இந்த தளத்தில் உள்நுழைவு செய்தவுடன் இடதுபுற பலகத்தில் ஏராளமான வலைபூக்களின் செய்திகள் இணையத்தில் உள்ள இதர செய்திகட்டுரைகளை போன்றவற்றுள் நமக்கு தேவையானதை மட்டும் தேடிபிடித்து படித்துகொள்ளமுடியும் மிகமுக்கியமாக இதிலுள்ள வியாபாரம்(business), உடல்நலன்(health), இணையம்(internet), மொழியறிவு(language), இயற்கைநிகழ்வுகள்(nature), பொருட்கள்(objects), அறிவியல் (science),  தொழில்நுட்பம்(technology).இதரவகைகள் (miscellaneous) ஆகியவற்றில் எந்தவொரு நிகழ்விற்கும் அதன்மறுதலைக்கும் இடையேயான வேறுபாடுகளை அறிந்துகொள்ளலாம் குறிப்பிட்ட செய்தியை பற்றியும் அதன்மறுதலையை பற்றியும் அறிந்துகொள்ள இந்த தளத்தின்முகப்பு பக்கத்தில்    difference between என்பதற்கருகிலுள்ள காலி பெட்டியில் தேவையான சொற்களை தட்டச்சு  செய்து Search  எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் போதும் தொடர்புடைய செய்திக்கட்டுரைகளை திரையில் காண்பிக்கும்

நம்முடைய உடலில் ஓடும் இரத்த அழுத்தத்தை அறி்ந்துகொள்ளஉதவும் iHealth MyVitals எனும் பயன்பாடு

நம்முடைய செல்லிடத்து பேசியிலேயே iHealth MyVitals எனும் பயன்பாட்டின் வாயிலாக sleeved monitor shell எனும் சாதனத்தை கொண்டு நம்முடைய உடலின் ஓடும் இரத்த அழுத்தஅதிகபட்ச அளவையும் குறைந்தபட்ச அளவையும் அறிந்துகொள்ளமுடியும்

பொதுவாக இந்த சாதனங்களடங்கிய பெட்டிக்குள்   wireless blood pressure monitor, owner’s manual, quick start guide, charging cable,  sturdy, soft, neoprene travel bag with zipper ஆகியவை உள்ளன .இதனை கொண்டு நமக்கு மட்டுமன்று நம்முடைய குடும்ப உறுப்பினர் அனைவருடைய இரத்த அழுத்தத்தையும் அறிந்துகொள்ளமுடியு.ம்  இதனை செயல்படுத்தி பயன்பெறுவதற்காக முதலில் நம்முடைய செல்லிடத்து பேசியில் இந்த iHealth MyVitals எனும் பயன்பாட்டினை நிறுவுகை செய்திடுக. அதன்பின்னர் நம்முடைய கையி ல்  wireless blood pressure monitor ஐ சுற்றி கட்டியபின்னர் நம்முடைய செல்லிடத்து பேசியில் நம்முடைய உடலின் ஓடும் இரத்த அழுத்தஅளவு காண்பிக்கும் இது ஐபோன் ,ஐபேடு ஆகிய சாதனங்களில் செயல்படும் திறன்கொண்டதாகும்.

அனைத்து செய்முறைகளையும் அறிந்துகொள்ள உதவும் Man Made DIY எனும் இணையதளம்

ஒரு இருசக்கர வாகணத்தை எவ்வாறு வடிவமைப்பு செய்து உருவாக்குவது அதனை எவ்வாறு இயக்கி பயனம் செய்வது அவ்வாறே ஒரு நான்கு சக்கரவாகணத்தை எவ்வாறு வடிவமைப்பு செய்து உருவாக்குவது அதனை எவ்வாறு இயக்கி பயனம் செய்வது மேலும் நாம் உண்ணும் உணவை எவ்வாறு பக்குவமாக தயார்செய்வது அதன்பின்னர் உண்ணுவது அதுமட்டுமல்லாது ஒரு சாதாரண உலோகத்தை எவ்வாறு வடிவமைப்பு செய்து சிறந்த கருவியாக உருவாக்கி மெருகேற்றி பயன்படுத்துவது பின்னர் அதனை எவ்வாறு ஒன்றிற்கு உதவாத கழிவுபொருளாக உருமாற்றம் செய்வது என்பன போன்ற அனைத்து செயல்களையும் Man Made DIY எனும் இணையதளம் நாம் அறிந்து கொள்ள உதவுகின்றது மேலும் விவரங்களுக்கு http://www.manmadediy.com/ எனும் தளமுகவரிக்கு செல்க

39.6

லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர்-தொடர்- 39-நூல்களின் விவரபெயர்பட்டியலை உருவாக்குவது

ஆவணமுழுவதுமான மேற்கோள் செய்திடும் தலைப்புகளை கொண்ட பட்டியலை விவர பெயர் பட்டியல்(bibliography) என அழைப்பர் இந்த மேற்கோள்செய்திடும் செயலை தனியான தரவாகவோஅல்லது இந்தரைட்டர் ஆவணத்திற்குள்ளேயோ சேமித்து வைக்கபடும்

இவ்வாறான விவரபெயர் பட்டியலை உருவாக்குவதற்காக முதலில் லிபர்ஆஃபிஸ்ரைட்டர் ஆவணத்தின் திரையின் மேலேஉள்ள கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளுள் Tools=> Bibliography Database => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்து செயற்படுத்துக உடன் Bibliography Databaseஎனும் சாளரம் படம்39-1 இல்உள்ளவாறு திரையில் தோன்றிடும் greatmaba@gmail.com

39.1

படம்39-1

இதனுடைய மேல்பகுதியில் ஒரு எம்ஆஃபிஸின் விரிதாளின் அட்டவணைபோன்றே அனைத்து ஆவணங்களின் பட்டியலாக காண்பிக்கின்றது கீழ்பகுதியில் நாம் தெரிவுசெய்த ஆவணத்தின் புலங்கள் அனைத்தையும் காண்பிக்கின்றது

பின்னர் நாம் தெரிவுசெய்தஆவணத்தை இந்த விவர பெயர் பட்டியலின்(bibliography) தரவுதளத்திற்குள்(database) வடிகட்டுவதற்காக லிபர்ஆஃபிஸ்ரைட்டர் ஆவணத்தின் திரையின் மேலேஉள்ள கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளுள் Tools => Filter=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக உடன் Standard Filterஎனும் உரையாடல் பெட்டி படம்39-2 இல்உள்ளவாறு திரையில் தோன்றிடும் இதில் வடிகட்டுவதற்கான அடிப்படையாக புலத்தின் பெயரையும் Field name, நிபந்தனையையும் Condition மதிப்பையும் Value அதனதன் கீழிறங்கு பட்டியலிலிருந்து தெரிவுசெய்துகொண்டு OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக

39.2

படம்39-2

இந்த bibliography database இற்குள்நெடுவரிசையை மாற்றியமைத்திடுவதற்காகலிபர்ஆஃபிஸ்ரைட்டர் ஆவணத்தின் திரையின் மேலேஉள்ள கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளுள் Edit => Column Arrangement => என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக அல்லது படம்39-1 இல்குறிப்பிட்டுள்ளவாறு bibliography database எனும் சாளரத்தின் மேல் பகுதியிலுள்ள Column Arrangementஎன்றபொத்தானை தெரிவசெய்து சொடுக்குதல்செய்திடுக உடன்Column Layout for Table biblio எனும் உரையாடல் பெட்டி படம்39-3 இல்உள்ளவாறு தோன்றிடும்

39.3

படம்39-3

இதில் எந்தெந்த புலங்களை எந்தெந்த நெடுவரிசைக்கு ஒதுக்கீடு செய்வதுஎன அனுமதிக்கின்றது உதாரணமாகShort name எனும் நெடுவரிசையில் Identifier எனும் தரவை அதனுடைய கீழிறங்கு பட்டியலிலிருந்து தெரிவுசெய்துகொண்டு OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக

நாம் பயன்படுத்திடும் தரவுவளங்களை வேறு நோக்கத்திற்காக மாற்றியமைத்திடுவதற்காக லிபர்ஆஃபிஸ்ரைட்டர் ஆவணத்தின் திரையின் மேலேஉள்ள கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளுள் Edit => Choose Data Source=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக அல்லது படம்39-1 இல் குறிப்பிட்டுள்ளவாறு bibliography database எனும் சாளரத்தின் மேல் பகுதியிலுள்ள Data Sourceஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்திடுக உடன்Data Sourceஉரையாடல் பெட்டி படம்39-4இல்உள்ளவாறு தோன்றிடும்

39.4

படம்39-4

அதில் தேவையானவாறு மாறுதல்கள் செய்துகொண்டு OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக

பின்வரும் வழிமுறைகளின்படி புலங்களின் விவரங்களை bibliography databaseஇல் மாறுதல்கள் செய்துகொள்ளமுடியும் படம்39-1இல் உள்ளவாறு முதன்மை bibliography database சாளரம் திரையில் தோன்றிடசெய்துபின்னர் லிபர்ஆஃபிஸ்ரைட்டர் ஆவணத்தின் திரையின் மேலேஉள்ள கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளுள் View => Data Sources=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக அல்லது F4 விசைப்பலகையில் எனும் விசையை அழுத்துக உடன்Data Sources இன் சாளரமானது படம்39-5இல் உள்ளவாறு தோன்றிடும்

39.5

படம்39-5

இந்நிலையில் Bibliography databaseஇல் மிகச்சரியான தரவுதளம் தெரிவுசெய்யபட்டுள்ளது என்பதை உறுதிபடுத்தி கொள்க தேவையெனில் மிகச்சரியானது வரையில் குறிப்பிட்ட நிலை வரை விரிவு படுத்திகொள்க அட்டவணையின் உள்ளீட்டில் biblioஎன்பதில் சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Edit Database File என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்திடுக உடன் படம் 39-6 இல்உள்ளவாறு இதுவே லிபர் ஆஃபிஸ்பேஸின் முதன்மை பட்டியலாகும்

39.6

படம்39-6

இதில் Databaseஎன்றபகுதியில் அட்டவணைகள்Tables என்பதை தெரிவுசெய்துகொள்க இங்கு Tables எனும் பகுதியிலுள்ள biblioஎன்பதில் சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில்Editஎன்ற கட்டளையை தெரிவுசெய்துசொடுக்குதல்செய்திடுக உடன் படம் 39-7 இல்உள்ளவாறு Table Designஎனும் சாளரம் தோன்றிடும்

39.7

படம் 39-7

அதில் தேவையான புலத்தின் பெயரை Field Nameஎன்ற பகுதியின் கீழும் தொடர்புடைய புலத்தின் வகையை Field Typeஎன்பதின் கீழும் தெரிவுசெய்துகொண்டு அவைகளின் விவரங்களை Descriptionஎன்றபகுதியில் தட்டச்சு செய்துகொண்டு இறுதியாக நாம் செய்த மாறுதல்களை சேமித்துகொள்க

குறிப்பு மேலும் விவரங்களுக்குலிபர் ஆஃபிஸ் பேஸிற்கான வழிகாட்டிஆவணத்தில் காண்க

தரவுதளத்தில் தரவுகளை உள்ளீடு செய்வதற்காக லிபர்ஆஃபிஸ்ரைட்டர் ஆவணத்தின் திரையின் மேலேஉள்ள கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளுள் Tools => Bibliography Database =>என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக பின்னர் படம்39-1இல் உள்ளவாறு விரியும் Bibliography Database எனும் சாளரத்தின் கீழ்பகுதியில் தேவையான ஆவணங்களை சேர்த்து உள்ளீடு செய்துகொள்ளமுடியும்

இந்த Bibliography Database எனும் சாளரம் திரையில் இருக்கும்போது திரையின் மேலே கட்டலை பட்டியில் Insert => Record=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக அல்லதுஇதே சாளரத்தின் கீழ்பகுதியின் இடதுபுறம் நகரும்பட்டையின் உள்ள Insert Recordஎனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுகShort Name எனும் பலத்தில் தேவையான ஆவணத்தின் பெயரையும் ஒருங்கிணைந்த பெயராக உள்ளீடு செய்துகொள்க மற்றபுலங்களுக்கு செல்வதற்கு தாவிபொத்தானை பயன்படுத்திகொள்க அவைகளிலும் தேவையான விவங்களை உள்ளீடு செய்துகொள்க அனைத்து விவரங்களையும் உள்ளீடுசெய்தபின் இறுதியாக முடிவுபுலத்தில் மீண்டும் இறுதியாக தாவிபொத்தானை அழுத்தி உள்ளீடு செயலை முடிவிற்கு கொண்டுவருக இந்த புலங்களின் விவரங்களை மாறுதல்கள்செய்துகொள்வதற்குலிபர்ஆஃபிஸ்ரைட்டர் ஆவணத்தின் திரையின் மேலேஉள்ள கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளுள் Tools => Bibliography Database =>என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக பின்னர் படம்39-1இல் உள்ளவாறு விரியும் Bibliography Database எனும் சாளரத்தின் கீழ்பகுதியில் தேவையான ஆவணங்களை திருத்தம் செய்துகொள்க

விசைப்பலகையிலிருந்து நேரடியாகவும் Bibliography Database என்பதிலிருந்தும் மேற்கோள்களை தரவுதளத்திற்கு அமைத்திடலாம்.

Bibliography Database என்பதிலிருந்து மேற்கோள்களை தரவுதளத்திற்கு அமைத்திடுவற்காக மேற்கோள்காண்பிக்கவிழையும் இடத்தில்இடம்சுட்டியை வைத்திடுகலிபர்ஆஃபிஸ்ரைட்டர் ஆவணத்தின் திரையின் மேலேஉள்ள கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளுள் Insert => Indexes and Tables =>Bibliographic Entry=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக பின்னர் விரியும் Insert Bibliographic Entryஎனும் உரையாடல் பெட்டியில்Entryஎன்பதன்கீழுள்ள From bibliography databaseஎனும் வாய்ப்பு பொத்தானை தெரிவுசெய்துகொள்க பின்னர் Short nameஎன்பதன்கீழிறங்குபட்டியலை விரியசெய்துதேவையான ஆவணத்தின் பெயரை தெரிவுசெய்தவுடன் நாம் மேற்கோள்காட்டவிரும்புவது சரியான ஆவணமா என சரிபார்த்துகொள்வதற்காக நாம்தெரிவுசெய்த ஆவணத்தின் Author , Titleஆகியஇருவிவரங்களும் இதே உரையாடல் பெட்டியின் மையத்தில் தோன்றிடும் இதன்பின்னர் இதே உரையாடல் பெட்டியில் உள்ள Insert எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து மேற்கோளை உள்ளிணைத்து கொள்க மேலும் மேற்கோள்செய்திடவிரும்பினால் இதே உரையாடல் பெட்டியைகொண்டு மேலேகூறிய வழிமுறைகளை பின்பற்றிடுக மாறுதல்கள் செய்திட இதே உரையாடல் பெட்டியிலுள்ள Edit எனும் பொத்தானை பயன்படுத்திடுக பணிமுடிந்தது எனில் Close எனும் பொத்தானை அழுத்தி இந்த உரையாடல் பெட்டியை மூடிவிட்டு வெளியேறிடுக.

ஆவணங்களிலிருந்து மேற்கோள்களை தரவுதளத்திற்கு அமைத்திடுவற்காக

ஆவணத்தின் மேற்கோள்காண்பிக்க விழையும் இடத்தை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்திடுக.லிபர்ஆஃபிஸ்ரைட்டர் ஆவணத்தின் திரையின் மேலேஉள்ள கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளுள் Insert =>Indexes and Tables => Bibliographic Entry =>என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக. பின்னர் விரியும் Insert Bibliographic Entryஎனும் உரையாடல் பெட்டியில்Entryஎன்பதன்கீழுள்ள From document contentஎனும் வாய்ப்பு பொத்தானை தெரிவுசெய்துகொள்க பின்னர் New.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக. அதன்பின்னர் விரியும் Define Bibliography Entryஎனும் உரையாடல் பெட்டியில் தேவையான அனைத்து விவரங்களையும் அதனதன் புலங்களில் உள்ளீடுசெய்துகொள்க.Short Name எனும் புலத்தில் தேவையான ஆவணத்தின் பெயரையும் ஒருங்கிணைந்த பெயராக உள்ளீடு செய்துகொள்க. Typeஎனும் உள்ளீட்டு பெட்டியின் வாயிலாக உள்ளீடு செய்துகொண்டுOkஎனும் பொத்தானை ஒவ்வொரு புலஉள்ளீட்டிற்கும் ஒவ்வொருமுறை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக .நாம் விரும்பியவாறு அனைத்து உள்ளீட்டு பணியும் முடிந்துவிட்டால் இறுதியாக Okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக. Insertஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்துShort nameஎனும் புலத்தில் ஆவணத்தில் சேர்த்திடுக .இதே பலமுறை திரும்ப திரும்ப செய்து அனைத்து ஆவணத்தையுமமேற்கோள்களாகசேர்த்துகொள்க இறுதியாக close எனும் பொத்தானை அழுத்தி இந்த உரையாடல் பெட்டியை மூடிவிட்டு வெளியேறிடுக.

இந்தமேற்கோள்களை மாறுதல்கள் செய்துகொள்வதற்காக நாம் உள்ளீடு செய்தவற்றுள் மாறுதல் செய்யவிரும்புவதை சுட்டியால் தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர் விரியும் சூழ்நிலை பட்டியலில் Bibliography Entryஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக.

39.8

படம்-39-8

பின்னர் விரியும் படம்-39-8இல்உள்ளவாறு Edit Bibliography Entryஎனும் உரையாடல் பெட்டியில்Short nameஎனும் புலத்தை மட்டுமே மாறுதல்கள் செய்துகொள்ளமுடியும். அதனுடைய உரைபெட்டிக்கு சென்று தேவையான மாறுதல்களைசெய்துகொண்டு modifyஎனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக. Edit எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து தேவையானால் மேலும் மற்ற ஆவணத்தை மாறுதல்கள் செய்துகொண்டு OKஎனும் பொத்தானை தெரிவசெய்துசொடுக்குக.

Bibliographyஐஉருவாக்குவதற்காக தேவையான இடத்தில் இடம்சுட்டியை வைத்துகொன்டு லிபர்ஆஃபிஸ்ரைட்டர் ஆவணத்தின் திரையின் மேலேஉள்ள கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளுள் Insert => Indexes and Tables => Indexes and Tables =>என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக .

39.9

படம்-39.9

உடன் Insert Indexes Tablesஎனும் உரையாடல் பெட்டிதிரையில் விரியும் அதில் Index Tableஎனும் தாவிபொத்தானின் திரையில் Titleஎனும் உரைபெட்டியில் Bibliographyஎன உள்ளீடு செய்துகொண்டு Protectedagainst manual changesஎன்ற தேர்வுசெய் வாய்ப்பினை தெரிவசெய்துகொள்க. Number entries என்ற வாய்ப்பினையும தெரிவுசெய்துகொள்க .தேவையான பிறையடைப்புகளை bracketsஎன்பதன் கீழிறங்கு பெட்டியிலிருந்து தெரிவுசெய்துகொள்க. எந்த வகையில் வரிசை படுத்துவதுஎன இயல்பு நிலையில் alphanumeric sorting என்ற வாய்ப்பு தெரிவசெய்யபட்டிருக்கும்.

இதேInsert Indexes Tablesஎனும் உரையாடல் பெட்டியின்Entriesஎனும் தாவிபொத்தானின் திரையில்structure என்பதில் Sh – Short name,Au – Author,Ti – Title,Ye – Year ஆகிய விவரங்களையும இதர விவரங்களையும் உள்ளீடு செய்துகொள்க .

39.10

படம் 39.10

Content.என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு Sort keysஎன்பவைகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தி அடுக்கிகொள்க. மற்ற தாவிப்பொத்தான்களின் திரைக்கு சென்று தேவையானவாறு விவரங்களை உள்ளீடு செய்துகொண்டு இறுதியாக OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் Bibliographyஆனது உருவாகிவிடும். Paragraph Styles Numbering style ஆகிய உரையாடல் பெட்டிகளின்வாயிலாக இந்த வரிசைபடுத்தபட்ட உரைகள் எவ்வாறு அமையவேண்டும்என சரிசெய்து அமைத்துகொள்க.

மேலும்Bibliography இன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்திடுக உடன்விரியும் சூழ்நிலை பட்டியின் Update Index/Table, Edit Index/Table,Delete Index/Tableஆகிய கட்டளைகளில் தேவையானவளற்றை தெரிவுசெய்து நிகழ்நிலைபடுத்துதல் மாறுதல்கள்செய்தல் நீக்கம் செய்தல் ஆகிய பணிகளை செய்துகொள்க.

லிபர் ஆஃபிஸின் இந்தBibliography என்பதன்மேலும் உள்ள பயன்களையும் இதரவிவரங்களையும் அறிந்து பயன்படுத்தி கொள்வதற்கு (http://bibus-biblio.sourceforge.net/ wiki/index.php/Main_Page) அல்லது (http://www.zotero.org/)ஆகிய தளங்களுக்கு செல்க.

Previous Older Entries