விண்டோ 7 உதவிக்குறிப்புகள்

1. கணினியை சிறிது நேரம் பயன்படுத்தாதிருந்து மீண்டும் பயன்படுத்துவதற்கு எப்போது துவங்கிடும்போதும் உங்களுடைய கணினியில் விண்டோ7 பயன்படுத்தி கொண்டிருந்தால் உடன் கடவுச்சொற்களை உள்ளீடுசெய்யும்படி கோரி தொல்லைகொடுக்கும். இவ்வாறான தொல்லையிருந்து விடுபடுவதற்கு.

1 .நாம் வழக்கமாக பயன்பாடுகளை  இயக்குவதற்கு செயல்படும் வழிமுறைகளின்படி சாளரத்தின்(window) கீழ்பகுதியிலிருக்கும் செயல் பட்டையில் (Taskbar) உள்ள Startஎன்ற பொத்தானைசொடுக்குக.உடன் விரியும் Start என்ற பகுதியிலுள்ள Control panel என்பதை தெரிவுசெய்து சொடுக்குக

2.பின்னர் விரியும் Control panel இன் கட்டளைபட்டியலில்  Power options என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

3.உடன் திரையில் தோன்றிடும் power options  என்ற உரையாடல் பெட்டியின் இடதுபுறபலகத்திலுள்ள  Require a password on wakeup என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

4. அதன்பின்னர் விரியும்திரையில்password  protection on wakeup என்பதன் கீழுள்ள Don’t require  a password  என்ற வானொலிபொத்தானை தெரிவுசெய்து save changesஎன்ற பெத்தானை  தெரிவுசெய்து சொடுக்கி செய்தமாற்றத்தை சேமித்துகொள்க.

இதன்பின்னர்  கணினியை சிறிது நேரம் பயன்படுத்தாதிருந்து மீண்டும் பயன்படுத்துவதற்கு துவங்கிடும்போது உங்களுடைய கணினியில் விண்டோ7 பயன்படுத்தி கொண்டிருந்தால் உடன் கடவுச்சொற்களை உள்ளீடுசெய்யும்படி கோரும் தொல்லைஎதுவும் உங்களுக்கிருக்காது.

2.விண்டோ 7 ஓஎஸ்ஸில் ஏராளமான சாளரத்தை ஒரேசமயத்தில் நம்முடைய பயன்பாட்டிற்காக திறந்து வைத்திருப்போம் அந்நிலையில் taskbarஇல் இவைகளின் பணிக்குறிகள்(Icons) இடநெருக்கியில் உட்காருவதற்கு இடமில்லாமல் தவித்துகொணடிருக்கும்.

அதுபோன்ற சமயத்தில் taskbarஇல் இடம்சுட்டியை(Cursor) வைத்து சுட்டியின்(Mouse) வலதுபுற பொத்தானை சொடுக்குக.உடன் விரியும் சூழ்நிலை பட்டியிருந்து(Context menu)  properties என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக .உடன் Taskbar and start menu properties என்ற உரையாடல்பெட்டியொன்று திரையில் தோன்றும். அதில் Taskbar என்ற தாவியின் திரையை தோன்றசெய்க (

பின்னர் Taskbar button என்பதற்கருகிலுள்ள கீழிறங்கு பட்டியலில் (Dropdownmenu) Always combine,hide labels என்பதை தெரிவுசெய்தால எப்போதும் குழுவாக உருவாக்கிவிடும்.   Combine when taskbar is full என்பதை தெரிவுசெய்தால் taskbar முழுவதுமாக  நிறைந்தால்மட்டும் குழுவாக உருவாக்கிவிடும்.  Never combine என்பதை தெரிவுசெய்தால் எப்போதும் குழுவாக உருவாக்காது. அவற்றில் தேவையானதை மட்டும் தெரிவுசெய்துapply ,ok  ஆகிய பொத்தான்களை சொடுக்குக.

இணையஉலாவியை தோன்றும் பிழைச்செய்தியை எவ்வாறு தவிர்ப்பது

மைக்ரோசாப்ட்நிறுவனத்தின் இணையஉலாவியை பயன்படுத்தி இணையத் தில் உலாவரும்போது அவ்வப்போது பிழைச் செய்தியொன்று திரையில் காண்பிக்கும். இவ்வாறான தொல்லையை எவ்வாறு சரிசெய்வது என இப்போது காண்போம்.

இந்த இணைய உலாவித்திரையின் மேல் பகுதியிலி ருக்கும் கட்டளைபட்டியிலுள்ள Tools -> Internet Options என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் Internet Options என்ற உரையாடல் பெட்டியில் Browsing history என்பதன்கீழுள்ள  Delete என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

பின்னர்  Start -> Control Panel -> System என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் தோன்றும் System Properties என்ற உரையாடல் பெட்டியில் System Restore என்றதாவியை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் System Restore என்ற தாவியின் திரையில் Turn off System Restore என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொண்டு Apply ,okஆகிய பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குக.

அதன் பின்னர்  கணினியானது ஏதேனும் நச்சுநிரல்களால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் சரிசெய்வதற்கு AdAware SEஎன்பதை நீக்கம்செய்திட என்ற  http://www.lavasoftusa.com/single/trialpay.php வலைதளத்தி லிருந்தும் SpyBot Search and Destroy என்பதை நீக்கம்செய்திட என்ற http://www.safer-networking.org/en/mirrors/index.html வலைதளத் திலிருந்தும் CCleaner என்பதை நீக்கம்செய்திட என்ற http://www.ccleaner.com/ வலை தளத்திலிருந்தும் தேவையான எதிர்நச்சுநிரல் மென்பொருள்களை  பதிவிறக்கம்செய்து நிறுவி இயக்கிகொள்க

பின்னர்  கணினியின் இயக்கத்தை நிறுத்தி safe mode இல் மீண்டும் இயக்கி  perform a System Scan என்ற கருவியை  பயன்படுத்தி கணினியை சரிபார்க்கவும்.

அவ்வாறே  System File Checker என்பதை பயன்படுத்தி விண்டோவால் பாதுகாக்கப்பட்ட கோப்புகளில் திருத்தங்கள் அல்லது மாறுதல்கள் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதாவென சரிபார்த்துகொள்க. ஏதேனும் கோப்புகள் மேலெழுதப்பட்டும் அல்லது நீக்கம் செய்யப்பட்டும் இருந்தால்   அவைகளை உடனடியாக இந்த SFC என்பது பழையநிலையில் மீட்டெடுத்துவிடும் இதனை செயற்படுத்திடுவதற்காக Start => Run => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. உடன் தோன்றும் Run என்ற பகுதியில் CMD என்று தட்டச்சு செய்து உள்ளீட்டுவிசையை தட்டுக. பின்னர்தோன்றும் சாளரத்தில்  sfc /scan now என்ற கட்டளைவரியை தட்டச்சு செய்து உள்ளீட்டுவிசையை தட்டுக.

பின்னர் இணைய உலாவியின் கோப்புகளை மறுபதிவு செய்திட வேண்டும் அதற்காக Start => Run => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. உடன் தோன்றும் Run என்ற பகுதியில் CMD என்று தட்டச்சு செய்து உள்ளீட்டுவிசையை தட்டுக. பின்னர்தோன்றும் கட்டளை சாளரத்தில்

regsvr32 softpub.dll
regsvr32 wintrust.dll
regsvr32 initpki.dll
regsvr32 dssenh.dll
regsvr32 rsaenh.dll
regsvr32 gpkcsp.dll
regsvr32 sccbase.dll
regsvr32 slbcsp.dll
regsvr32 cryptdlg.dll

ஆகிய கட்டளைவரிகளை ஒவ்வொரு வரியாக தட்டச்சு செய்து ஒவ்வொரு முறையும் உள்ளீட்டுவிசையை தட்டுக.

பின்னர் இந்த மைக்ரோசாப்ட் இணைய உலாவியில் வேறு நிறுவனத்தால் வழங்கப்பட்ட கூடுதல்வசதி ஏதேனுமிருந்தால்  அவைகளின் இயக்கத்தை முடக்கம்(Disable)செய்துவிடுக.

அதற்காக Start=> Control Panel=> Internet Options, என்றவாறு கட்டளைவரிகளை செயற்படுத்துக.உடன் தோன்றும் Internet Options என்ற திரையில் Advanced என்றதாவியைதெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் Advanced என்றதாவியின் திரையில் Enable third party browser extensions என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொண்டு Apply ,okஆகிய பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குக.

இதன்பின்னர் மைக்ரோசாப்ட்நிறுவனத்தின் இணையஉலாவியை பயன்படுத்தி இணையத் தில் உலாவரும்போது பிழைச் செய்தியெதுவும் அவ்வப்போது தோன்றி நமக்குதொல்லை கொடுக்காது

கணினியின் மடிப்பகத்தை மற்றவர்கள் பார்வையிலிருந்து மறைத்திடலாம்

நம்முடைய கணினியில் நம்மால் உருவாக்கப்படும்மிகமுக்கியமான கோப்புகளை folder lockers, encryption utilities என்பனபோன்ற பயன்பாட்டு மென்பொருளை உபயோகபடுத்தி மற்றவர்கள் எளிதில் இந்த கோப்புகளை அனுகிடமுடியாதவாறு பாதுகாத்து வைத்திருப்போம் ஆனால் இந்த வழிமுறைகள் அதிக செலவாகக் கூடியதாகும் செலவாகாத சிறுதந்திரசெயல்களின்மூலம் மற்றவர்கள் எளிதில் இந்த கோப்புகளை அனுகிடமுடியாதவாறு பாதுகாத்திடலாம். அதற்கான படிமுறை பின்வருமாறு

முதலில் விண்டோஎக்ஸ்பி ஓஎஸ் எனில் E:\, F:\ என்பதுபோன்ற கூடுதலாக ஒருட்ரைவை partition வழிமுறையில் உருவாக்கி  வடிவமைத்துகொள்க விண்டோவிஸ்டா அல்லது விண்டோ 7 ஓஎஸ் எனில் நிணைவகத்தை பாகப்பிரிவினை செய்யாமலேயேDisk management utility  இல் உள்ள shrink space option என்பதை பயன்படுத்தி தேவையான  ஒருட்ரைவை . . உருவாக்கி  வடிவமைத்துகொள்க

பின்னர் நாம் உருவாக்கியது F:\ என்ற  ஒருட்ரைவ் எனகொள்வோம் இதில் பாதுகாப்பாக வைத்திடும் கோப்புகளை கொண்டுவந்து சேர்த்திடுக.

அதன்பின்னர் Start=>Run=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக. உடன் தோன்றிடும்திரையில் Run என்ற பகுதியில் Gpedit msc என தட்டச்சுசெய்து உள்ளீட்டு(Enter)விசையை அழுத்துக

பின்னர் விரியும்திரையின் இடதுபுற பலகத்தில் userConfiguration => administrative Templates=> windows Components => Window Explorer என்றவாறு தெரிவு செய்து கொள்க. வலது புறபலகத்தில் உள்ள Hide these specified drives in my computerஎன்பதை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக.இதன்பின்னர்இதன் கீழுள்ள  Enabled என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்துகொண்டு, options என்பதன் கீழிறங்கு பட்டியலிலிருந்து  F:\ என்ற ட்ரைவை செரிவுசெய்து Apply, okஆகியபொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குக

.  இதன்பின்னர் நாம் மட்டும் இந்த ட்ரைவிற்கு செல்வதற்கு Start=>Run=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக. உடன் தோன்றிடும்திரையில் Run என்ற பகுதியில் F:\  என தட்டச்சுசெய்து உள்ளீட்டு(Enter)விசையை அழுத்துக

கையடக்க பூட்டபிள் பென்ட்ரைவை நாமே உருவாக்கலாம்

நம்முடைய கணினியை அவ்ப்போது இயக்கமுடியாது தொங்கலாக நின்றிடும்போது வெளிப்புறத்திலிருந்து கணினியை இயக்க பூட்டபிள் சிடி/டிவிடியை நம்கைவசம் உள்ளதா வென தேடத்தொடங்கிடுவோம்.இதற்காக கையடக்க பூட்டபிள் பென் ட்ரைவையே உருவாக்கி வைத்துகொண்டால் பயனுள்ளதாக இருக்குமே அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு.

இதற்காக சிடி/டிவிடிஇயக்கத்தைகொண்ட ஒரு கணினி,விண்டோ ஓஎஸ்ஸின் லிவ்சிடி/டிவிடி ஒன்று, விண்டோஎக்ஸ்பி பூட்டபிள்யூஎஸ்பி எனில் 2ஜிபி பென்ட்ரைவ் விண்டோ விஸ்டா அல்லது விண்டோ7 பூட்டபிள்யூஎஸ்பி எனில் 4 ஜிபி பென்ட்ரைவ் , winToFlash என்ற மென்பொருள் ஆகியவை மட்டும் போதுமானவையாகும்.

இந்த winToFlash மென்பொருளை இதனுடைய வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துஉங்களுடைய கணினியில் நிறுவிக்கொள்க.

பின்னர் இந்த கோப்பினை தெரிவுசெய்து செயற்படுத்திடுக. உடன் தோன்றிடும் Windows Setup transfer wizard என்ற வித்தகரின் திரையில் next என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக.

அதன்பின்னர் தோன்றிடும்திரையில் Windows file path என்பதற்கு விண்டோநிறுவுகை லிவ்சிடி/டிவிடி இருக்குமிடம் (CD/DVD optical Drive) , பூட்டபிள் பென்ட்ரைவ் உருவாக்கப் போகுமிடம்(USB Drive) ஆகியஇரண்டு இடங்களுக்கான மிகச்சரியான வழியை Select என்ற பொத்தானை சொடுக்குவதன்வாயிலாக குறிப்பிட்டு தெரிவுசெய்துகொள்க.

பின்னர் தோன்றிடும் திரையில் Windows License Agreement என்பதை ஏற்றுக்கொண்டு Continue என்ற பொத்தானை சொடுக்குக.

அதன்பின்னர் Warning என்ற எச்சரிக்கை செய்திபெட்டியொன்று திரையில்தோன்றி பென்ட்ரைவை வடிவமைப்புசெய்யப்போவதாக கூறிடும் உடன் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி நம்முடையசெயலைதுரிதபடுத்துக.ஏதேனும் தவறாக இருந்தால் cancel என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சரிசெய்துகொள்க.

உடன் விண்டோ ஓஎஸ்ஸின் பூட்டபிள் பென்ட்ரைவ் உங்கள்விருப்படி உருவாக்கப்பட்டு தயாராகிவிடும்.

இதற்காக பயாஸ் அமைப்பில் மட்டும் Removable disk என்பதை முதன்மை தொடக்க விருப்பத் தேர்வாக(boot priority)  அமைத்துகொள்ளவேண்டும்

விண்டோஸ் 7-ன் சிறப்பம்சம் என்னென்ன ஒரு பார்வை

மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் வெளியீடுகளுக்கு எப்போதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உண்டு. அதுவும் சில நேரங்களில் பல்வேறு சாப்ட்வேர்களை உருவாக்கும் நிறுவனங் களுக்கு வயிற்றில் புளியை கரைத்துவிடும். ஏனெனில் அந்த நிறுவனத்தின் பயன்பாடு களுக்கு ஏற்றவாறு அவர்களே ஒரு ப்ராடக்ட்டை  உருவாக்கிவிடுவார்கள்.உதாரணம் விண்டோஸ் விர்ச்சுவல் பிசி, விர்ச்சுவல் சர்வர் – விஎம்வேர் சாப்ட்வேர்களுக்கு பதிலாக   விண்டோஸ் சிஸ்டம் சென்டர்  என்பதாகும்

இதற்கு முந்தைய பதிப்பான விஸ்டாவிற்கும் இந்த விண்டோ7இற்கும் அதிகப்பட்ச வேறுபாடு யாதெனில் இது கணினியில் மிக குறைவான மெமரியை பயன்படுத்துவதுதான்.
சரி இன்னமும் வேறு என்னென்ன சிறப்பம்சங்கள் இந்த விண்டோஸ் 7-ல் உள்ளன.
புதிய சக்தி:- விண்டோஸ் 7  ஓஎஸ் வெளியீட்டின் தாரகமந்திரம் புதிய சக்தி என்பதுதான். அதாவது ஆரம்ப கால குண்டுபல்புகள் அதிக மின்சாரத்தை எடுத்தன. ஆனால் இப்போதுள்ள சிஎல்அப் லைட்டுகள் மிக குறைவான மின்சாரத்தையே பயன்படுத்துகின்றன   அதுபோன்று பழைய ஓஎஸ்களை விட இந்த விண்டோஸ் 7 ஆனது  மிக அதிகமான வேகத்தில் குறைந்த மின்சார செலவுடன் பணியை எளிதில் முடித்து விடும் தன்மை கொண்டதாகும்.
பின்:-நாம் விரும்பிய அல்லது அடிக்கடி நம்மால் பயன்படுத்தப்படும் பயன்பாடுகளை உடனடியாக இயக்குவதற்கு வசதியாக அதனை டாஸ்க் பாரில்  ஐகான்களாக ஸ்டார்ட் பட்டனிற்கருகில் இணைத்து வைத்து நம்விருப்பபடி வரிசைபடுத்தி கொள்ளும் வசதி இதில்உள்ளது  இந்த பின் என்ற முறையின் வழியே பயன்பாடுகளை வரிசையாக டாஸ்க்பாரில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை காணலாம்.

ஜம்ப் லிஸ்ட்:-நம்மால் தினமும் அடிக்கடி பயன்படுத்தபடும் ஃபைல்கள் ஃபோல்டர்கள், வெப்சைட்கள் ஆகியவற்றிற்கு நாம் நேரடியாக செல்வ தற்கான வசதி அதாவது டாஸ்க் பாரில் ஸ்டார்ட் பட்டனிற்கருகில் இருக்கும்  குறிப்பிட்ட ஐகானின்மீது கர்சரை வைத்து மவுஸில் ரைட்கிளிக் செய்க உடன் சமீபத்தில் நம்மால் பயன்படுத்தப் பட்டவைகளின் பட்டியல் திரையில் காட்சியளிக்கும்.அவற்றுள் தேவையானதை தெரிவுசெய்து சொடுக்கினால் போதும்.


ஸ்நாப்:- திறந்திருக்கும் எந்தவொரு விண்டோவின் ஓரப்பகுதியையும்  கிடைமட்ட மாகவோ அல்லது நெடுக்கிலோ பிடித்து இழுத்துசென்ற விடுவதன் வாயிலாக  நாம் விரும்பியவாறு  அவ்விண்டோவினுடைய உருவத்தை மாற்றியமைக் கலாம்  இந்த வசதி மூலம் இரண்டு விண்டோவை அருகருகே திறந்துகொண்டு ஒப்பீடு செய்யலாம்

மேம்படுத்தப்பட்ட தேடல் :-உண்மையில் இந்த தேடல் நல்ல அருமையான வசதியாகும். முந்தைய பயன்பாடுகளில் தேடல் என்றால் குறிப்பிட்ட தேடல்களை மட்டும்தான் தேடும். ஆனால் இது அப்படியல்ல.. இணையத்தில் நாம் எப்படி தேடு வோமோ  அதுபோன்றது. அதாவது add hardware, add printer, change printer , இப்படி பல முறைகளில் தேடும் வசதி நன்றாகவே இருக்கின்றது. அதுமட்டுமல்லாது தேடிபிடித்த விடையை  உயர்த்தி காட்டப்பட்ட கீவேர்டு,அதன் வகை மற்றும் ஸ்லிப்டு ஆகியவற்றிற் கேற்ப குழுவாக பட்டியலிடும் வசதி இதில் உள்ளது
வீட்டுகுழுமம்:-நம்முடைய விட்டில் உள்ள விண்டோ7 ஓஎஸ் நிறுவப்பட்ட கணினிகளை ஒன்றாகசேர்த்து வீட்டுகுழுமமாக பயன் படுத்தலாம்  இதற்கு யூசர் நேம், பாஸ்வேர்டு போன்ற விபரங்கள் எதுவும் தரத்தேவையி்ல்லை. நாம் தேர்ந்தெடுத்த எந்த வகையான ஃபைல்களையும்  ஷேர் செய்தால்  மட்டும்போதும். அதனை தொடர்ந்து மற்றவர்கள் இதனை படிக்கமட்டும் செய்யலாம்.
அதோடு  தனித்தனி பிரிண்டர்கள்,ஒவ்வொரு கணினிக்கும் என்றில்லாமல் வீட்டு குழுமம் அனைத்திற்கும் ஒரேயொரு பிரிண்டரை மட்டும் நிறுவி அனைவரும் உபயோகித்து கொள்ளுமாறு அமைத்துவிடலாம் இதனால்  வீட்டு குழும கணினிகள் இதே பிரிண்டரை  தானாகவே தன்னியல்பாக தம்முடைய அச்சிடும் பணிக்காக எடுத்து கொள்ளும்

பொழுதுபோக்கு வசதி:- விருப்பட்ட திரைப்படபாடல்கள், போட்டோக் களை கூடுதல் முயற்சி எதுவுமில்லாமல் கேட்டல் பார்த்தல் தேக்கி வைத்தல் ஆகிய செயல்களை மிக எளிதாக இதில் செய்யலாம்.

இன்டெர்நெட் வழியாக டிவி நிகழ்ச்சிகளை இதற்கென தனியாக டிவிட்யூனர் எதுவுமில்லாமலேயே காண்பதற்கான  வசதி இதிலுள்ளது அதனுடன் அவ்வாறு நாம் தற்போது பார்த்து கொண்டிருக்கும் டிவி நிகழ்ச்சிகளை பதிவுசெய்து கொண்டு பின்னர் தேவைப்படும்போது இயக்கி மகிழலாம்.

ஆடியோ வீடியோ ஆகியவை எந்தவகையான வடிவமைப்பில் இருந்தாலும் விண்டோ7 இல் இயக்கமுடியும். போட்டோக்களைகொண்டு ஸ்லைடு ஷோக்களைகூட இதில் எளிதாக உருவாக்கலாம்.

கிராபிக்ஸ்:-விண்டோஸ் விஸ்டாவின் முழு பயனையும் அனுபவிக்க வேண்டு மென்றால் கணினிக்குள் கிராபிக்ஸ் பிராசசர்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் விண்டோஸ் 7-இல் அப்படியான நிபந்தனை எதுவும் இல்லை. இப்படி எல்லாமே வண்ணமயமாக விண்டோ7 இல் இருக்கின்றது.
ஸ்ட்ரீமிங் வீடியோ:-இது ஒரு படி மேல். அதாவது நமது நோட்புக் கணினியில் ஸ்பீக்கர் இல்லை எனும்போது வீட்டு உபயோக கணினியில் வீடியோ வை தரவிறக்காமல் நேரடியாக நோட்புக்கணினியில் இருந்து வீட்டு கணினியில் இயங்கும் வீடியோ ஸ்ட்ரீமிங் முறையை அறிமுகப்படுத்தி யிருக்கிறார்கள்.
திரைப்படங்களை உருவாக்குதல் பகிர்ந்துகொள்ளுதல்:-இந்நிறு வனத்தின் வெப் சைட்டிலிருந்து மைக்ரோசாப்ட் மூவிமேக்கரை பதிவிறக்கம் செய்து நாமே திரைப் படங்களை உருவாக்கி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்

லேன் வேன் இணைப்புகம்பியில்லாத, கம்பியுடைய, ப்ளூடூத் போன்று எந்தவகை இணைப்பையும் கணினிகள் மற்றும் மின்னணு சாதணங்கள் ஆகியவற்றின் இடையே மிகஎளிதாக விண்டோ7இல் ஏற்படுத்திடமுடியும்

மிகவேகமான ஸ்லீப் ரெஸூம் வசதி:- பயன்படுத்தாத போது உடனடியாக கணினியை தூங்க வைத்தல் அவ்வாறு கணினி தூங்கி கொண்டிருக்கும் நிலையில் தேவைப்படும்போது விரைவாக தட்டி எழுப்புதல் செய்து செயலிற்கு கொண்டுவருதல் நெட்வொர்க்இணைப்பை மிக விரைவாக்குதல் என்பன போன்றசெயல்கள் விண்டோ7 குறைந்த அளவே நிணைவ கத்தை எடுத்துகொள்வதால் கணினியானது மிகவும் விரைவாக செயல்படுகின்றது

தொடுதிரைவசதி:- விண்டோ7 ஆனது மவுஸின் உதவியில்லாமலேயே பயனாளர் கணினியை உபயோகபடுத்திகொள்வதற்கான டச்பேடு  போன்று இந்ததொடுதிரை வசதி பயன்படுகின்றது மிகமுக்கியமாக திரையில் திறந்திருக்கும் ஒரு விண்டோவின் அளவை இரண்டுவிரல்களை மட்டுமே பயன்படுத்தி திரையை தொட்டு நகர்த்துவதன் வாயிலாக அவ்விண்டோவை விரிவுபடுத்தவோ சுருக்கவோமுடியும்

கணினியுடன் இணைக்கப்பட்ட சாதணங்களை நிருவகித்தல்:- பிரிண்டர் கேமேரா மியூஸிக் ப்ளேயர் என்பனபோன்ற எண்ணற்ற சாதணங்களை  கணினியுடன் இணைத்து பயன்படுத்திட 1.டிவைஸ் ஸ்டேஜ் 2. டிவைஸும் பிரிண்டருக்கமான ஃபோல்டர் ஆகிய இரண்டு வழிமுறைகளில் விண்டோ7 இல் உள்ளது. 1.டிவைஸ் ஸ்டேஜ் இது ஹார்டுவேரின் முகப்புபக்கம் போன்று திரைதோற்றம் அமைந்துள்ளது ஏதேனும் சாதணங்களை கணினியுடன் இணைத்தவுடன் பொதுவாக ஏற்கனவே இருப்பதுடன் இதனையும் மெனுவாக காண்பிக்கும் உதாரணமாக மல்ட்டிஃபங்ஷன் பிரண்டர் ஆனது பிரிண்டர் ஃபோல்டரிலும் ஸ்கேனர் ஃபோல்டரிலும் மெனுவாக காண்பிக்கும்

பேக்கப் வசதி:-இதுவும் ஒரு நல்ல பயன்பாடு எப்படி? அதாவது நாம் குறிப்பிட்ட ஒரு ஆவணத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். திடீரென்று அது செயலிழந்துவிட்டது. பதறவே வேண்டாம். அந்த பைலின் மேல் கர்சரை வைத்து மவுஸில் வலதுபுற பட்டனை  கிளிக் செய்து ரெஸ்டோர் -ல் சென்று பார்த்தால் 5 நிமிடத்துக்கு முந்தைய கோப்பு, 10நிமிடத்துக்கு முந்தைய கோப்பு, அரை மணி நேரத்திற்கு முந்தைய கோப்பு என்று பல்வேறு வகைகளில் தரவுகளை தானாகவே பேக்கப் செய்து சேமித்து வைத்து இருக்கும். எனவே இவற்றிலிருந்து  எப்போது வேண்டு மானாலும் நமக்குதேவையானவற்றை எடுத்துக் கொள்ளலாம் இந்த வசதி குறிப்பிட்ட ஆவணத்திற்கு மட்டுமல்ல , கோப்புக்களுக்கும் உண்டு.
அதேபோல் கோஸ்ட் பேக்அப் போன்றுவிணடோ7லும்  பேக்அப்செய்யும்முறை உண்டு. இதில் சிஸ்டம் பைல்களை மட்டுமே இமேஜ் பேக் அப் எடுக்கலாம், அல்லது  தேவையான கோப்புகளையும் இங்கே கொடுத்துவிடலாம். இப்படி கொடுத்துவிட்டால் போதுமானது .பிரச்னையான நேரத்தின்போது நாமே சிஸ்டத்தை ரெஸ்டோர் செய்துகொள்ளலாம்.
பாதுகாப்புபிட்லாக்கர்:-மேலும் வன்பொருட்களுடன் இணைந்து தகவல் பாதுகாப்பிற்காக பிட்லாக்கர் எனும் மென்பொருளை உள்ளிணைத் திருக்கிறார்கள். இதை தகவல் பாது காப்பிற்காக பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தலாம்.
ஆப்ஸ்லாக்கர் : எந்தெந்த மென்பொருட்கள் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் இயங்கவேண்டும் என்று இந்த பயன்பாட்டில் கொடுத்துவிட்டால் போதுமானது. அந்த குறிப்பிட்ட மென்பொருட்கள் மட்டுமே இயங்கும்.
டாஸ்க்பார் லைவ் :-மேலும் கணினியில் இயங்க துவங்கியுள்ள பயன் பாடுகளை டாஸ்க்பார் லைவ் என்ற முறையின் வழியே சிறிய அளவி்ல் முன் பார்வை பார்க்கும் வசதியும் அளித்திருக்கிறார்கள்.

கேட்ஜ்கட்கள் அமைவிடம்:-விண்டோவிஸ்டா போன்று கேட்ஜ்கட் களை சைடு பாரில்மட்டுமே வைக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவு மில்லாமல் எங்கு வேண்டு மானாலும் நாம்விரும்பிய இடத்தில் வைத்து கொள்ளலாம்
டிப்ளாய்மெண்ட் டூல் கிட் :-இதன்மூலம்ஒரே நேரத்தில் வெகு எளிதாக பல்வேறு கணினிகளில் விண்டோஸ் 7 ஐ நிறுவிடலாம்.
மின்சார நிர்வாகம் :-நோட்புக் கம்யூட்டர் போன்றவற்றில் உள்ள மின்கலன்களின் வாழ்நாளை அதிகரித்திட இயல்புநிலையில் உள்ள மின்நுகர்வு திட்டத்தை நாம் விரும்பியவாறு விண்டோ7 இல் மாற்றியமைக்கலாம்.

விண்டோ ரெடிபூஸ்ட்:- இது மல்ட்டிபிள் ஃப்ளாஷ் ட்ரைவை  ஆதரிப்பதால் ஒரு கணினியானது அதிகதிறனுடன் செயல்படுவதற்கு ஏதுவாக  துனை நினைவகத்தை  தேவைப்படும்  அளவிற்கு இணைத்து பயன்படுத்திகொள்ளலாம்.

சிங்க் மையம்:- செல்பேசியை ஒரு கணினியுடன் இணைத்து பயன்படுத்து வதற்கான வசதி இதில் உள்ளது

ஈஸி ட்ரான்ஸ்ஃபர் :-இந்த வசதிமூலம் பழைய கணினியிலிருந்து  அதிலிருக்கும் ஃபைல்களையும் செட்டிங்க்ஸையும் மிகஎளிதாக புதிய கணினிக்கு இடமாற்றம் செய்யலாம்.

உரையாடலை புரிந்துகொள்ளுதல் Speech Recognition :- மைக்ரோ ஃபோனின் வாயிலாக நம்முடைய பேச்சொலியை உரையாகவும் உரையாக இருப்பதை பேச்சொலி யாகவும் இந்த வசதிமூலம் மாற்றியமைக்கலாம்

இயல்புநிலை வெப் ப்ரௌஸர் விண்டோ7 இல் இயல்புநிலை வெப் ப்ரௌ ஸராக இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோர்ர் -8 சேர்ந்திருப்பதால் இணையத்தில் உலாவரு பவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக உள்ளது

பேக்ஸ்  வசதி:- ஃபேக்ஸ் கருவியில்லாமலேயே கணினி வாயிலாக ஏதேனும் ஆவணங்களை ஸ்கேன் செய்து தொலைதூரத்திற்கு ஃபேக்ஸ் அனுப்பலாம்.

சிஸ்டம் ரிப்பெயர் ரெக்கவரி சூழல்:-கணினி தொடக்க இயக்கத்தின் போது பிரச்சினைஏதேனும் எழுந்தால்  ஒரிஜினல் இன்ஸ்டாலேஸன் டிவிடி இல்லாமலேயே அந்த பிரச்சினையை சரிசெய்து கணினியை இயங்கசெய்துகொள்ளும் வசதி இதிலுள்ளது

VoxOxஎன்ற அனைத்தையும் கையாளும் கருவி

இந்த நவீன யுகத்தின் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளின் விளைவாக தயார்நிலை செய்தியாளர், மின்னஞ்சல், சமூகவலைதளங்கள்,குறுஞ்செய்தி, செல்லிடத்து பேசி என்பனபோன்ற ஏராளமாள கருவிகளின் வாயிலாக செய்தி தொடர்பு என்பது தனிப்பட்ட நபரொருவருக்கு மிகவும் சிக்கலான தொல்லைதரும் செயலாகஉள்ளது.ஏனெனில் இவை ஒவ்வொன்றும் கட்டமைப்பிலும் சாதணங்களை பயன்படுத்துவதிலும் வெவ்வேறுவகையில் மாறுபடுகின்றன. அதனால் இவைகளின் வழிமுறையை அறிந்துகொண்டு செயல் படுத்துவதில் அதிக சிரமமேற்படுகின்றது.மேலும் அதிக கால விரையமும் ஏற்படுகின்றது.

இதனை தவிர்த்திட VoxOx, என்ற இலவச ஒற்றையான மென்பொருளே  அனைத்து வகையான செய்திதொடர்பு கருவிகளின் வாயிலாக நம்முடைய செய்தியை அனுப்பிடும் வசதியுடன் வெளியிடபட்டுள்ளது.இது இதனுடைய போட்டி கருவிகளான  Digsby, Skype என்பன போன்றவற்றை விட மிகச்சிறந்ததாக உள்ளது.

இந்த   VoxOx உதவியால் Facebook,Twitter, Google Talk,YahooIM ,என்பன போன்றவற்றின் வழியே  இணையும் நண்பர்களுடன் மிகஎளிதாக அரட்டை அடிக்கலாம் நாம்பேசவிரும்பிய  நபர்களுடன்   உரையாடிட ஒரு பிஸியிலிருந்து மற்றொரு பிஸிக்கு அல்லது  ஒரு பிஸியிலிருந்து  தரைவழி இணைப்பிற்கு அல்லது ஒரு பிஸியிலிருந்து செல்லிடத்து பேசிக்கு என எந்தவகையிலும் அழைப்பை அனுப்பி இணைப்பு பெற்று பேசலாம். இது இரண்டுமணிநேரம் கட்டணமின்றி பேசிடும்வசதியுடனும் வழக்கமான தொலைபேசிபோன்று போன் எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டும் கிடைக்கின்றது.  தொலைபேசி எண்களை மிகஎளிதாக டயல்செய்யும் வசதிஇதில் உள்ளது. ஆயினும் இதன்மூலம் பெறும் ஒலியின் தன்மையானது இணைய இணைப்பின் வேகத்தைபொருத்துஅமைகின்றது.  நம்முடைய ஆவணத்தை தொலைநகல் (Fax) ஆக இதன்மூலம் அனுப்பிவைக்கமுடியும். போட்டோ ஆல்பம் இசைஆல்பம் என்பனபோன்ற அதிக கணினி நிணைவகத்தை அபகரித்து கொள்ளும் கோப்புகளை  VoxOx பதிவிறக்க தொடுப்பின் வாயிலாக மிகச்சுலபமாக நண்பர்களுக்கு அனுப்பிவைக்கலாம். இவ்வாறு மின்னஞ்சல் அனுப்பிடும்போது பெறுபவருக்கு டெலிவரிசெய்யமுடியவில்லை என்ற திரும்பிவருவதோ பெறுபவரின் இன்பாக்ஸ் நிரம்பிவழிகின்றது அதனால் டெலிவரிசெய்யமுடியவில்லை என்ற திரும்பிவருவதோ  ஆகாது.ஒட்டுமொத்தத்தில்இது அனைத்து செய்திதொடர்பிற்குமான ஒரேதீர்வாக அமைந்துள்ளது. இதனை http://www.voxox.com/home.php என்ற வலைதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கி கொள்ளலாம்.

கணினியில்பின்புலத்தில் இயங்கிகொண்டிருக்கும் Exe. கோப்புகளை டாஸ்க் மேனேஜர் மூலம் திரையில் பார்வையிடலாம்

எந்தவொரு கணினியிலும் நம்முடைய பார்வையில் காணுமாறும் காணமுடியாத அதன் பின்புலத்திலும் ஏராளமான பயன்பாடுகள் இயங்குகின்றன. அவைகளில் ஒருசில மறைத்து வைக்கப்பட்ட கோப்பாகவும் வேறுசில விண்டோ அமைவு கோப்பாகவும் இன்னும் சில நச்சுநிரல் & உளவாளி யாகவும் நம்முடைய கண்ணில் மண்ணைத்தூவி மறைந்தும் மறையாதவாறும் செயல்படுகின்றன

இவ்வாறு நம்முடைய கண்ணிற்குபுலப்பாடாது கணினியில்பின்புலத்தில் இயங்கிகொண்டிருக்கும் Exe. கோப்புகளை டாஸ்க் மேனேஜர் மூலம் திரையில்  பார்வையிடலாம். ஆயினும் இவைகளில் எவையெவை பாதுகாப்பானவை  பாதுகாப்பற்றவை எவையென அடையாளம் காணமுடியாதவாறு இவைகள் உள்ளன. இந்த நச்சுநிரல் & உளவாளி  கோப்புகள் தந்திரமாக நம்முடைய கணினிக்குள் வந்து மற்ற பயன்பாட்டின் இயக்க(Exe.) கோப்பிற்குள் அமர்ந்துகொண்டு பல்கிபெருகி நம்முடைய கணினியின் இயக்கத்தையே முடக்கம் செய்துவிடுகின்றன. இவ்வாறான நிலையில் இவைகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதுதான்  மிகசிக்கலான பணியாகும். இதற்காகவே http://www.exedb.com என்ற வலைதளத்தில் EXEDB என்ற கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது கணினியில் இயங்கி கொண்டிருக்கும் அனைத்து இயக்க EXE கோப்புகளையும் பட்டியலாக காண்பிப்பதுடன் அல்லாமல் இவைகள் பாதுகாப்பானவைகளா என சரிபார்த்து அடையாளம் காண்பிக்கின்றது மேலும் இது அனைத்து இயக்க EXE கோப்புகளை பற்றிய விவரங்களுடன் விண்டோவின் பின்புலத்தில் இயங்கு பவைகளையும் சேர்த்து அவைகளின் பாதுகாப்புதன்மையையும் அறிவிக்கின்றது.. அவ்விரங்களிலிருந்து தேவையற்றவைகளை நீக்கம் செய்து நம்முடைய கணினியை பாதுகாப்பானதாக ஆக்கிகொள்ளாம்

Previous Older Entries